Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை - பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முதலாவது டெஸ்டில் இலங்கையை 4 விக்கெட்களால் வெற்றிகொண்டது பாகிஸ்தான்

Published By: VISHNU

20 JUL, 2023 | 01:09 PM
image
 

(நெவில் அன்தனி)

இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 4 விக்கெட்களால் பாகிஸ்தான் வெற்றியீட்டியது.

இதன் மூலம் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் 2023 - 2025 சுழற்சிக்கான தனது முதலாவது வெற்றிப் புள்ளிகளைப் பாகிஸ்தான் பெற்றுக்கொண்டது.

இந்த டெஸ்ட் போட்டியின் மூலம் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரை சிறப்பாக ஆரம்பிப்போம் என இலங்கை அணித் தலைவர் திமுத் கருணாரட்ன போட்டிக்கு முன்னர் குறிப்பிட்டிருந்த போதிலும் இலங்கைக்கு ஏமாற்றமே கிடைத்தது.

அப் போட்டியில் 131 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் கடும் சவாலை எதிர்கொண்டு 6 விக்கெட்களை இழந்து 133 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

போட்டியின் நான்காம் நாளான புதன்கிழமை (19) கடைசிக் கட்ட ஆட்ட நேரத்தில் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த பாகிஸ்தான் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்களை இழந்து 48 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

போட்டியில் வெற்றிபெறுவதற்கு மேலும் 83 ஓட்டங்களைப் பெறவெண்டிய நிலையில் கடைசி நாள் ஆட்டத்தை இன்று காலை  தொடர்ந்த பாகிஸ்தான் மேலும் 3 விக்கெட்களை இழந்தது.

ப்ரபாத் ஜயசூரய திறமையாக பந்துவிசி பாகிஸ்தான் அணியினருக்கு பெரும் சோதனையைக் கொடுத்தார்.

எனினும் மறுபக்கத்தில் மிகவும் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய இமாம் உல் ஹக் அரைச் சதம் குவித்து பாகிஸ்தான் வெற்றிபெற உதவினார்.

பாகிஸ்தான் தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய போது பாபர் அஸாம் 24 ஓட்டங்கள் பெற்ற நிலையில் ஆட்டம் இழக்க, போட்டியில் இலங்கை திருப்பத்தை ஏற்படுத்தும் என்ற எண்ணம் எழுந்தது.

ஆனால், இமாம் உல் ஹக், முதலாவது இன்னிங்ஸில் இரட்டைச் சதம் குவித்த சவ்த் ஷக்கீல் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 43 ஓட்டங்களைப் பகிர்ந்து பாகிஸ்தான் வெற்றி இலக்கை அண்மிக்க உதவினர்.

ஷக்கீல் ஆட்டம் இழந்ததைத் தொடர்ந்து சவ்ராஸ் அஹ்மத் 6ஆவதாக ஆட்டம் இழந்தார். ஆனால், அடுத்து களம் புகுந்த மற்றொரு முதல் இன்னிங்ஸ் ஹீரோ அகா சல்மான்,  முதல் பந்திலேயே சிக்ஸ் விளாசி பாகிஸ்தானின் வெற்றியை உறுதிசெய்தார்.

எண்ணிக்கை சுருக்கம்

இலங்கை 1ஆவது இன்: 312 (தனஞ்சய டி சில்வா 122, ஏஞ்சலோ மெத்யூஸ் 64, சதீர சமரவிக்ரம 36.

அப்ரார் அஹ்மத் 68 - 3 விக்., ஷஹீன் ஷா அப்றிடி 86 - 3 விக்., நசீம் ஷா 90 - 3 விக்.)

பாகிஸ்தான் 1ஆவது இன்: 461 (சவ்த் ஷக்கீல் 208 ஆ.இ., அகா சல்மான் 83, ஷான் மசூத் 39.

ரமேஷ் மெண்டிஸ் 136 - 5 விக்., ப்ரபாத் ஜயசூரிய 145 - 3 விக்.)

இலங்கை 2ஆவது இன்: 279 (தனஞ்சய டி சில்வா 82, நிஷான் மதுஷ்க 52, ரமேஷ் மெண்டிஸ் 42, தினேஷ் சந்திமால் 28.

அப்ரார் அஹ்மத் 68 - 3 விக், நொமான் அலி 75 - 3 விக், அகா சல்மான் 39 - 2 விக்., ஷஹீன் ஷா அப்றிடி 64 - 2 விக்.)

பாகிஸ்தான் 2ஆவது இன்: (வெற்றி இலக்கு 131 ஓட்டங்கள்) 133 - 6 விக். (இமாம் உல் ஹக் 50 ஆ.இ, சவ்த் ஷக்கீல் 30, பாபர் அஸாம் 24.

ப்ரபாத் ஜயசூரிய 56 - 4 விக்.)

ஆட்டநாயகன்: சவ்த் ஷக்கீல்.

https://www.virakesari.lk/article/160474

  • கருத்துக்கள உறவுகள்

ம‌ழை பெய்த‌தால் ச‌ம‌ நிலையில் முடிய‌ அதிக‌ வாய்ப்பு இருந்த‌து...............இல‌ங்கை வீர‌ர்க‌ளின் சுத‌ப்ப‌ல் விளையாட்டால் பாக்கிஸ்தான் அணி வென்று விட்ட‌து.......................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மறைக்க வேண்டியதில்லை : இலங்கையின் களத்தடுப்பில் தீவிர முன்னேற்றம் தேவை - கிறிஸ் சில்வர்வூட்

24 JUL, 2023 | 09:52 AM
image
 

(நெவில் அன்தனி)

'மறைக்க வேண்டியதில்லை, இலங்கைக்கு குறிப்பாக களத்தடுப்பில் தீவிர முன்னேற்றம் தேவை. பாகிஸ்தானிடம் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தோல்வி அடைந்த இலங்கை, இரண்டாவது போட்டியில் திறமையை வெளிப்படுத்த உறுதிபூண்டுள்ளது' என இலங்கை கிரிக்கெட் அணி பயிற்றுநர் கிறிஸ் சில்வர்வூட் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் மூன்று துறைகளிலும் இலங்கை முன்னேற வேண்டும் எனவும் அவர் கூறினார்.

எஸ்.எஸ்.சி. மைதானத்தில் திங்கட்கிழமை (24) ஆரம்பமாகவுள்ள 2ஆவது டெஸ்ட் போட்டிக்கு ஒரு நாளைக்கு முன்னர் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதே வேளை, காலியில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் முன்வரிசை வீரர்கள் பிரகாசிக்கத் தவறியதை அணித் தலைவர் திமுத் கருணாரட்ன அண்மையில் சுட்டிக்காட்டியிருந்தார்.

முதல் இன்னிங்ஸில் 54 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை இழந்த இலங்கை இரண்டாவது இன்னிங்ஸில் 99 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை இழந்தது. இது இலங்கையின் தோல்விக்கு பிரதான காரணமாக அமைந்தது எனலாம்.

'சில அம்சங்களில் நாங்கள் முன்னேற வேண்டும். களத்தடுப்பும் அதில் ஒன்றாகும். இதனை மறைக்கத் தேவையில்லை. எமது களத்தடுப்பை முன்னேற்ற வேண்டும். நேர்மையாக கூறுவதென்றால், மூன்று துறைகளிலும் எமது அணியினர் திறமையைக் காட்ட எட்டவில்லை' என அவர் சுட்டிக்காட்டினார்.

பாகிஸ்தானுடனான முதலாவது டெஸ்டில் இலங்கை குறைந்தது 3 முக்கிய பிடிகளைத் தவறவிட்டது. இதுவும் இலங்கையின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.

புதிய ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் சுழற்சியின் ஆரம்பம் இலங்கைக்கு ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளபோதிலும் அடுத்த உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட வேண்டும் என்ற அவா இலங்கைக்கு நிறையவே இருக்கிறது.

'அதற்கான உந்துதல் இருக்கவே செய்கிறது. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் புள்ளிகளைப் பெறவேண்டியதன் அவசியத்தை வீரர்கள் அறிவார்கள். அதுவும் சொந்த நாட்டில் வெற்றி பெறவேண்டும் என்பதில் விரர்கள் குறியாக இருக்கின்றனர். அதற்கான உந்துதலை தொடர்ந்து பேணவேண்டும்' என கிறிஸ் சில்வர்வூட் தெரிவித்தார்.

இலங்கை தனது இன்னிங்ஸை சிறப்பாக ஆரம்பிப்பதாக இருந்தால் ஷஹீன் ஷா அப்றிடி, நசீம் ஷா ஆகிய வேகப்பந்து வீச்சாளர்களை இலங்கை துடுப்பாட்ட வீரர்கள் சிறப்பாக எதிர்கொள்ளவேண்டும் என்பதை சில்வர்வூட் வலியுறுத்தினார்.

இலங்கை அணியில் மீண்டும் அசித்த பெர்னாண்டோ

சுகவீனம் காரணமாக பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டிக்கான குழாத்தில் இடம்பெறாமல் இருந்த அசித்த பெர்னாண்டோ 2ஆவது போட்டிக்கான குழாத்தில் பெயரிடப்பட்டுள்ளார். அவர் 2ஆவது போட்டியில் விளையாடுவது உறுதியாகியுள்ளது. அவருடன் டில்ஷான் மதுஷன்க வேகப்பந்து வீச்சில் இடம்பெறுவார் என நம்பப்படுகிறது.

கடந்த 18 மாதங்களில் இலங்கை வேகப்பந்துவீச்சில் முக்கிய வீரராக இடம்பெற்ற  அசித்த   பெர்னாண்டோ 11 டெஸ்ட் போட்டிகளில் 32 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

இதேவேளை, இலங்கை துடுப்பாட்ட வரிசையில் மாற்றம் ஏற்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், அணி முகாமைத்துவம் திங்கட்கிழமை காலையிலேயே எதையும் தீர்மானிக்கும் எனக் கூறப்படுகிறது.

இலங்கை குழாம்

திமுத் கருணாரட்ன (தலைவர்), பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ், ஏஞ்சலோ மெத்யூஸ், தினேஷ் சந்திமால், தனஞ்சய டி சில்வா, நிஷான் மதுஷ்க, சதீர சமரவிக்ரம, கமிந்து மெண்டிஸ், அசித்த பெர்னாண்டோ, விஷ்வா பெர்னாண்டோ, டில்ஷான் மதுஷன்க, கசுன் ராஜித்த, ப்ரபாத் ஜயசூரிய, ரமேஷ் மெண்டிஸ், ப்ரவீன் ஜயவிக்ரம, லக்ஷித்த மனசிங்க.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஷபிக் 201, சல்மான் 132 ஆ.இ., பலமான நிலையில் பாகிஸ்தான்

Published By: NANTHINI

27 JUL, 2023 | 10:04 AM
image
 

(எஸ்.எஸ்.சி. அரங்கிலிருந்து நெவில் அன்தனி)

எஸ்.எஸ்.சி. விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் இலங்கைக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அப்துல்லா ஷபிக் குவித்த அற்புதமான இரட்டைச் சதத்தின் உதவியுடன் பாகிஸ்தான் பலமான நிலையில் இருக்கிறது. 

மூன்றாம் நாள் ஆட்டத்தில் 363 ஓட்டங்களைக் குவித்த பாகிஸ்தான் 3 விக்கெட்களை மட்டுமே இழந்தது. இலங்கை பந்துவீச்சாளர்கள் துல்லியமாக பந்துவிசாததுடன் பாகிஸ்தான் துடுப்பாட்ட வீரர்கள் மிகவும் இலகுவாக ஓட்டங்களை பெற்றவண்ணம் இருந்தனர்.

போட்டியின் 3ஆம் நாளான நேற்று (26) காலை தனது முதல் இன்னிங்ஸை 2 விக்கெட் இழப்புக்கு 178 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த பாகிஸ்தான், ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்களை இழந்து 563 ஓட்டங்களைக் குவித்திருந்தது.

இலங்கை முதல் இன்னிங்ஸில் 166 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

இதற்கமைய, இலங்கையை விட 397 ஓட்டங்களால் பாகிஸ்தான் முன்னிலையில் இருக்கிறது.

பாகிஸ்தான் அணி 4ஆம் நாளான வியாழக்கிழமை (27) காலை தொடர்ந்து துடுப்பெடுத்தாடி 600 ஓட்டங்களுக்கு மேல் குவித்து டிக்ளயார் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இலங்கைக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் பெற்றிருந்த மொத்த எண்ணிக்கையுடன் பாகிஸ்தான் டிக்ளயார் செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இப்போட்டியில் மேலும் 2 நாட்கள் மீதமிருப்பதால் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கை அணி 2 போட்டிகள் கொண்ட தொடரில் முழுமையான தோல்வியை தவிர்ப்பதற்கு பெரும் பிரயத்தனம் எடுக்கவேண்டிவரும். காலியில் நடைபெற்ற முதலாவது போட்டியில் பாகிஸ்தான் 4 விக்கெட்களால் வெற்றிபெற்றிருந்தது.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 520 நிமிடங்கள் ஆடுகளத்திலிருந்த அப்துல்லா ஷபிக் 326 பந்துகளை எதிர்கொண்டு 19 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 201 ஓட்டங்களைக் குவித்து ஆட்டம் இழந்தார். அத்துடன் மூன்று முக்கிய இணைப்பாட்டங்களில் அவர் பங்காற்றி பாகிஸ்தானை பலமான நிலையில் இட்டார்.

shafi.jpg

அப்துல்லா ஷபிக் 87 ஓட்டங்களிலிருந்தும் அணித் தலைவர் பாபர் அஸாம் 28 ஓட்டங்களிலிருந்தும் தங்களது துடுப்பாட்டங்களை தொடர்ந்தனர்.

new.jpg

அவர்கள் இருவரும் 3ஆவது விக்கெட்டில் 85 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கையை 210 ஓட்டங்களாக உயர்த்தியபோது பாபர் அஸாம் 36 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

தொடர்ந்து அப்துல்லாவுடன் ஜோடி சேர்ந்த முதல் டெஸ்ட் நாயகன் சவ்த் ஷக்கீல் 57 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.

w.jpg

இந்தப் போட்டியில் அரைச் சதம் குவித்த ஷக்கீல், டெஸ்ட் அறிமுகம் பெற்றதிலிருந்து விளையாடிய 7 டெஸ்ட் போட்டிகளிலும் அரைச் சதங்கள் பெற்ற முதலாவது வீரரானார்.

இங்கிலாந்துக்கு எதிராக ராவல்பிண்டியில் 2022 டிசம்பர் 1ஆம் திகதி ஆரம்பமான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான ஷக்கீல், பாகிஸ்தானின் அதிசிறந்த துடுப்பாட்ட வீரராக பிரகாசித்து வருகிறார்.

அறிமுக டெஸ்ட் போட்டியிலிருந்து இதுவரை விளையாடிய 7 டெஸ்ட் போட்டிகளிலும்   ஷக்கீல் அரைச் சதங்களை பூர்த்திசெய்துள்ளார்.

7 டெஸ்ட் போட்டிகளில் அவர் முறையே 37, 76; 63, 94; 23, 53; 22, 55 ஆ.இ.; 125 ஆ.இ., 32; 208 ஆ.இ., 30; 57 ஓட்டங்களைப் பெற்று மொத்தமாக 875 ஓட்டங்களைக் குவித்துள்ளார். 13 இன்னிங்ஸ்களில் அவரது துடுப்பாட்ட சராசரி 87.50 ஆகும்.

அப்துல்லா ஷபிக், சவ்த் ஷக்கீல் ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 109 ஓட்டங்களை பகிர்ந்தனர். 80 ஓவர்கள் நிறைவில் 2ஆவது பந்து எடுக்கப்பட்டு அசித்த பெர்னாண்டோ வீசிய 3ஆவது பந்தில் ஷக்கீல் ஆட்டம் இழந்தார்.

அடுத்து களம் புகுந்த விக்கெட் காப்பாளர் சர்பராஸ் அஹ்மத்  14 ஓட்டங்கள் பெற்ற நிலையில் அதிர்ச்சி காரணமாக ஓய்வு பெற்றார். அசித்த பெர்னாண்டோ மிக வேகமாக வீசிய பந்து அஹ்மதின் தலைக்கவசத்தைப் பதம்பார்த்தது. அவர் ஓய்வுபெற்றபோது பாகிஸ்தான் 4 விக்கெட்களை இழந்து 344 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. 

asitha.jpg

இந்நிலையில், களம் புகுந்த அகா சல்மான் மிகவும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி ஷபிக்குடன் 5ஆவது விக்கெட்டில் 124 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது ஷபிக் 201 ஓட்டங்களுடன் களம் விட்டகன்றார். 

அதிர்ச்சியினால் ஓய்வுபெற்ற அஹ்மத் தொடர்ந்து இந்த டெஸ்டில் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டதை அடுத்து  அவருக்குப் பதிலாக களம் புகுந்த மாற்று வீரர் மொஹமத் ரிஸ்வான் வேகமாக ஓட்டங்களைப் பெற்றவண்ணம் இருந்தார்.

mohamed_rizwan.jpg

மறுபக்கத்தில் திறமையாக துடுப்பெடுத்தாடிய அகா சல்மான் தனது 2ஆவது சதத்தைப் பூர்த்திசெய்தார்.

அவர்கள் இருவரும் பிரிக்கப்படாத 6ஆவது விக்கெட்டில் 95 ஓட்டங்களை பகிர்ந்துள்ளனர்.

அகா சல்மான் 203 நிமிடங்கள் துடுப்பெடுத்தாடி 148 பந்துகளை எதிர்கொண்டு 15 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 132 ஓட்டங்களுடனும் மொஹமத் ரிஸ்வான் 37 ஓட்டங்களுடனும் 3ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

agha_sal.jpg

https://www.virakesari.lk/article/161010

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

146 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் யாரும் படைத்திடாத புதிய சாதனை- பாகிஸ்தான் வீரர் அசத்தல்

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்டில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.

இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2 ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் தொடங்கியது. முதலில் ஆடிய இலங்கை அணி 166 ரன்னில் சுருண்டது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி முதல் நாளில் 28.3 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 145 ரன்கள் எடுத்திருந்தது. 2 ஆவது நாளில் தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி 38.3 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 178 ரன்கள் எடுத்து இருந்த போது பலத்த மழை பெய்ததால் அத்துடன் ஆட்டம் முடித்து கொள்ளப்பட்டது.

இதனை தொடர்ந்து 3 ஆவது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. முதல் டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்து அந்த அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்த சவுத் ஷக்கில் இரண்டாவது டெஸ்டில் 57 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்ததன் மூலம் 146 ஆண்டு கால கிரிக்கெட் வரலாற்றில் யாரும் படைத்திடாத புதிய சாதனையை அவர் படைத்துள்ளார். இதன்படி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் ஏழு டெஸ்ட் போட்டிகளில் 50 ரன்களுக்கு மேல் அடித்த வீரர் என பெருமையை அவர் பெற்றிருக்கிறார்.

முன்னதாக அவர் முதல் டெஸ்டில் 76 ரன்களும், இரண்டாவது டெஸ்டில் 63 மற்றும் 94 ரன்களும், மூன்றாவது டெஸ்டில் 53 ரன்களும், நான்காவது டெஸ்டில் 55 ரன்களும், ஐந்தாவது டெஸ்டில் 125 ரன்களும், ஆறாவது டெஸ்டில் 208 ரன்களும், ஏழாவது டெஸ்டில் 53 ரன்களும் எடுத்து புதிய சாதனையை அவர் படைத்துள்ளார்.

https://thinakkural.lk/article/265471

42-2.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நோமான் அலியின் 7 விக்கெட் குவியலுடன் தொடரை 2 - 0 என கைப்பற்றியது பாகிஸ்தான்; டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இலங்கைக்கு சொந்த மண்ணில் மிக மோசமான தோல்வி

28 JUL, 2023 | 09:23 AM
image
 

(எஸ்.எஸ்.சி. அரங்கிலிருந்து நெவில் அன்தனி)

இடதுகை சுழற்பந்து வீச்சாளர் நோமான் அலி, வியாழனன்று 7 விக்கெட்களை வீழ்த்தியதன் பலனாக இலங்கைக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஓர் இன்னிங்ஸ் மற்றும் 222 ஓட்டங்களால் பாகிஸ்தான் அமோக வெற்றியீட்டியது. 

எஸ்.எஸ்.சி. விளையாட்டரங்கில்  4 நாட்களுக்குள் நிறைவுபெற்ற 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸ் நிறைவில் பாகிஸ்தானை விட 410 ஓட்டங்கள் பின்னிலையில் இருந்த இலங்கை, நோமான் அலியின் சுழற்பந்துவீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் விக்கெட்களைத் தாரைவார்த்து தோல்வி அடைந்தது.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இலங்கை தனது சொந்த மண்ணில் அடைந்த மிக மோசமான தோல்வி இதுவாகும். தென் ஆபிரிக்காவிடம் 1993இல் ஓர் இன்னிங்ஸ் மற்றும் 203 ஓட்டங்களால் இதே மைதானத்தில் அடைந்த தோல்வியே இதற்கு முன்னர் சொந்த மண்ணில் இலங்கையின் மோசமான தோல்வியாக இருந்தது.

அதேவேளை, அந்நிய மண்ணில் பாகிஸ்தான் ஈட்டிய மிகப் பெரிய வெற்றியாக  இது   அமைந்தது.

காலியில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் 4 விக்கெட்களால் வெற்றிபெற்ற பாகிஸ்தான், இந்த வெற்றியுடன் 2 போட்டிகள் கொண்ட தொடரை 2 - 0 என முழுமையாக கைப்பற்றியது.

இதன் மூலம் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் 2023 - 25க்கான சுழற்சி  பருவ காலத்தை வெற்றியுடன் பாகிஸ்தான் ஆரம்பித்துள்ளது.

இரண்டு போட்டிகளிலும் வெற்றியீட்டிய பாகிஸ்தான் ஐசிசி உலக சம்பியன்ஷிப்புக்கான 24 புள்ளிகளையும் பெற்றுக்கொண்டது.

அப்துல்லா ஷபிக் குவித்த இரட்டைச் சதம், அகா கான் குவித்த ஆட்டமிழக்காத சதம், நோமான் அலியின் 7 விக்கெட் குவியல் என்பன பாகிஸ்தானின் வெற்றியை சுலபமாக்கியிருந்தன.

போட்டியின் நான்காம் நாளான வியாழக்கிழமை (27) காலை தனது முதலாவது இன்னிங்ஸை 5 விக்கெட் இழப்புக்கு 563 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த பாகிஸ்தான், மொஹமத் ரிஸ்வான் அரைச் சதம் குவித்ததும் முதல் இன்னிங்ஸை டிக்ளயார் செய்தது.

37 ஓட்டங்களிலிருந்து தனது துடுப்பாட்டத்தை தொடர்ந்த மொஹமத் ரிஸ்வான் நான்காம் நாளன்று காலை பாகிஸ்தான் சார்பாக பெறப்பட்ட 13 ஓட்டங்களையும் தனதாக்கி 8ஆவது அரைச் சதத்தைப் பூர்த்திசெய்தார்.

அவர் 50 ஓட்டங்களைப் பூர்த்திசெய்ததும் பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்ஸை 5 விக்கெட் இழப்புக்கு 576 ஓட்டங்களுடன் நிறுத்திக்கொண்டது.

மறுபக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய  அகா சல்மான்    132 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

முதல் இன்னங்ஸ் நிறைவில் 410 ஓட்டங்கள் பின்னிலையில் இருந்த இலங்கை, இரண்டாவது இன்னிங்ஸை பெரும் நெருக்கடிக்கு மத்தியில் ஆரம்பித்தது.

எவ்வாறாயினும் நிஷான் மதுஷ்க, அணித் தலைவர்  திமுத் கருணாரட்ன ஆகிய இருவரும் 18 ஓவர்கள் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 69 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறப்பான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

ஆனால், 19ஆவது ஓவரில் நான்காவது பந்துவீச்சாளராக பாகிஸ்தானினால் பயன்படுத்தப்பட்ட இடதுகை சுழல்பந்துவீச்சாளர் நோமான் அலி தனது முதல் பந்திலேயே நிஷான் மதுஷ்கவை ஆட்டம் இழக்கச் செய்து போட்டியில் திருப்பத்தை ஏற்படுத்தினார்.

நிஷான் மதுஷ்க 33 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்ததைத் தொடர்ந்து இலங்கை துடுப்பாட்ட வீரர்களின் ஆட்டம் இழப்புகள் சீரான இடைவெளியில் இடம்பெற்றன.

சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த திமுத் கருணாரட்ன (41), குசல் மெண்டிஸ் (14), தினேஷ் சந்திமால் (1), தனஞ்சய டி சில்வா (10), சதீர சமரவிக்ரம (5) ஆகியோரின் விக்கெட்களையும் நோமான் அலி வீழ்த்தினார். இதன் மூலம் இலங்கையின் 2ஆவது இன்னிங்ஸில் முதல் 7 விக்கெட்களையும் நோமான் அலி கைப்பற்றியமை விசேட அம்சமாகும்.

ப்ரபாத் ஜயசூரிய (0), அசித்த பெர்னாண்டோ (0), டில்ஷான் மதுஷன்க (0) ஆகிய கடைசி 3 வீரர்களின் விக்கெட்களை நசீம் ஷா கைப்பற்றினார்.

முன்னாள் அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ் மிகவும் பொறுப்புடன் துடுப்பெடுத்தாடி 7 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் அடங்கலாக 63 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் நோமான் அலி 8 ஓட்டமற்ற ஓவர்கள் உட்பட 70 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்களையும் நசீம் ஷா 5 ஓட்டமற்ற ஓவர்கள் உட்பட 17.4 ஓவர்களில் 44 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

எண்ணிக்கை சுருக்கம்

இலங்கை 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 166 (தனஞ்சய டி சில்வா 57, தினேஷ் சந்திமால் 34, ரமெஷ் மெண்டிஸ் 27, திமுத் கருணாரட்ன 17, அப்ரார் அலி 69 - 4 விக்., நசீம் ஷா 41 - 3 விக்.)

பாகிஸ்தான் 1ஆவது இன்: 576 - 5 விக். டிக்ளயார்ட் (அப்துல்லா ஷபிக் 201, அகா சல்மான் 132 ஆ.இ., சவ்த் ஷக்கீல் 57, ஷான் மசூத் 51, மொஹமத் ரிஸ்வான் 50 ஆ.இ., பாபர் அஸாம் 39, அசித்த பெர்னாண்டோ 133 - 3 விக்., ப்ரபாத் ஜயசூரிய 194 - 2 விக்.)

இலங்கை 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 188 (ஏஞ்சலோ மெத்யூஸ் 63 ஆ.இ., திமுத் கருணாரட்ன 41, நிஷான் மதுஷ்க 33, நோமான் அலி 70 - 7 விக், நசிம் ஷா 44 - 3 விக.)

ஆட்டநாயகன்: அப்துல்லா ஷபிக். தொடர்நாயகன்: அகா சல்மான்.

https://www.virakesari.lk/article/161086

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.