Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உயரும் புவி வெப்பம் : தாக்குப்பிடிக்குமா மனித இனம்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: VISHNU

23 JUL, 2023 | 06:10 PM
image
 

சுவிசிலிருந்து சண் தவராசா

புவியின் வெப்­ப­நிலை அண்மைக் கால­மாக அதி­க­ரித்துச் செல்­வது தொடர்­பான செய்­தி­க­ளையும் ஆய்­வு­க­ளையும் அடிக்­கடி ஊட­கங்­களில் பார்க்க முடி­கின்­றது. இவ்­வாறு உலகின் வெப்­ப­நிலை தொடர்ச்­சி­யாக அதி­க­ரித்துச் செல்­வதால் ஏற்­படக் கூடிய பார­தூ­ர­மான விளை­வுகள், பாதிப்­புகள் என்­பவை தொடர்­பான எச்­ச­ரிக்­கை­க­ளையும் அவற்­றிலே அவ­தா­னிக்க முடி­கின்­றது.

326851-01-02.jpg

ஒரு சாமா­னிய மனி­த­னாக இந்தச் செய்­திகள் எமக்குக் கவலை தரு­வ­தாக உள்ள போதிலும் இந்த நிலையை மாற்ற எம்மால் எதுவும் செய்ய முடி­யாத கையறு நிலை­யி­லேயே நாம் இருக்­கிறோம் என்ற யதார்த்தம் நெஞ்சைப் பிசை­கி­றது. 

புவி வெப்­ப­நிலை அதி­க­ரிப்­புக்குக் கார­ண­மான கரி­ய­மில வாயு அதி­க­ளவில் வளி மண்­ட­லத்தில் கலப்­ப­தற்குப் பங்­க­ளிக்கும் வல்­ல­ரசு நாடுகள் பெரு­மெ­டுப்பில் மாநா­டு­க­ளையும் கூட்­டங்­க­ளையும் நடத்தி இதனைப் பற்றிப் பேசி­விட்டுக் கலைந்து செல்­கின்­றன. ஆக்­க­பூர்­வ­மான எந்­த­வொரு செயற்­பாடும் உலகில் இல்­லாத நிலையில் புவியின் வெப்பம் தொடர்ச்­சி­யாக அதி­க­ரித்துக் கொண்டே செல்­கின்­றது.

இந்த வரு­டத்தின் இறு­தியில் கூட துபாயில் கால­நிலை தொடர்­பி­லான உல­க­ளா­விய மாநாடு நடை­பெற இருக்­கி­றது. கால­நி­லைக்கு அதிகம் பாதிப்பை விளை­விக்கும் பெற்­றோ­லியப் பொருட்­களை உற்­பத்தி செய்யும் ஒரு நாட்டில் கால­நிலை பாதிப்பைப் பற்றி ஆராயும் ஒரு மாநாட்டை நடத்­து­வது எவ்­வ­கையில் உசி­த­மா­னது என்­கின்ற கேள்­விகள் உலகின் பல பகு­தி­க­ளிலும் எழுப்­பப்­பட்டு வரு­கின்­றன.

இந்­நி­லையில் மாநாட்டை நடத்தும் நாடோ அன்றி மாநாட்டில் கலந்து கொள்ளும் நாடு­களோ உண்­மையில் கால­நி­லையைக் காக்கும் நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ளும் சிந்தை உள்­ள­னவா என்ற கேள்வி எழு­வது இயல்­பா­னதே.

புவியின் வெப்­ப­நி­லையை அள­விடும் உல­க­ளா­விய நடை­முறை 1979ஆம் ஆண்­டி­லேயே அறி­மு­க­மா­கி­யது. அதன் பின்­னான காலப்­ப­கு­தியில் 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உலகின் அதி­கூ­டிய வெப்­ப­நிலை நில­விய கால­மாகக் கணக்­கி­டப்­பட்­டுள்­ளது. அந்த மாதத்தில் புவியின் சரா­சரி வெப்­ப­நிலை 16.92 பாகை  செல்­சி­ய­ஸாக இருந்­தது.

அதன் பின்னர் நடப்­பாண்டின் ஜூலை மாதம் உலகின் அதி­கூ­டிய வெப்­ப­நிலை நில­விய மாத­மாக மாறி­யுள்­ளது. இந்த மாதம் முழு­மைக்­குமே இத்­த­கைய வெப்­ப­நிலை நீடிக்கும் என்­கின்ற அறி­விப்பு வேறு பீதியைக் கிளப்­பு­கி­றது. 

முன்னர் வெளி­யான தக­வலின் பிர­காரம் ஜூலை 3ஆம் திகதி நில­விய வெப்­ப­நிலை 17.1 பாகை செல்­சி­ய­ஸாக இருந்­தது. இது 2016இல் பதி­வான  சாத­னையை முறி­ய­டித்­தது. 

அந்தச் செய்தி தந்த அதிர்ச்சி மறை­வ­தற்­கி­டையில் ஜூலை 6ஆம் திகதி வெப்­ப­நிலை 17.23 பாகை­யாக உயர்ந்து 3 நாட்­க­ளுக்கு முந்­திய சாத­னையை முறி­ய­டித்­தது. அன்­று­முதல் இந்தக் கட்­டுரை எழு­தப்­படும் நாள்­வரை புவியின் சரா­சரி வெப்­ப­நிலை 16.94 பாகைக்குக் கீழ் இறங்­கவே இல்லை. திடீ­ரென ஜூலை 17ஆம் திகதி வெப்­ப­நிலை உயர்ந்து 17.11 பாகையை எட்டிப் பிடித்­தது. இந்­நி­லையில் புவியின் அதி கூடிய சரா­சரி வெப்­ப­நிலை நிலவும் மாத­மாக இந்த வரு­டத்தின் ஜூலை மாதமே விளங்கக் கூடும் என எதிர்வு கூறப்­பட்­டுள்­ளது.

இந்த வரு­டத்தின் அதி­க­ரித்த வெப்­ப­நிலை குறிப்­பாக அமெ­ரிக்கா, ஐரோப்­பிய நாடுகள் மற்றும் சீனா ஆகி­ய­வற்றை அதிகம் பாதிக்கும் என வல்­லு­நர்கள் தெரி­வித்­துள்­ளனர். ஐரோப்­பாவைப் பொறுத்­த­வரை இத்­தாலி, கிரேக்கம் ஆகிய நாடுகள் அதிக வெப்­ப ­நி­லையை எதிர்­கொண்­டுள்­ளன. 

இத்­தா­லியத் தலை­நகர் ரோமில் ஜூலை 18ஆம் திக­திய வெப்­ப­நிலை 41.8 பாகை செல்­சி­ய­ஸாகப் பதி­வாகி இருந்­தது. இதுவே அந்த நகரின் இது­வரை பதி­வான அதிக வெப்­ப­நி­லை­யாக உள்­ளது. கடந்த வரு­டத்தில் இதே மாதத்தில் இதனை விட ஒரு பாகை குறை­வான வெப்­ப­நி­லையே அதி­கூ­டிய வெப்­ப­நி­லை­யாகப் பதி­வாகி இருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.  

புவியின் வெப்­ப­நிலை அதி­க­ரிப்பு என்­பது வெறு­மனே கொழுத்தும் வெயில், அள­வுக்கு அதி­க­மான மழை­வீழ்ச்சி, காட்டுத் தீ என இயற்கை அனர்த்­தங்­க­ளோடு மாத்­திரம் முடிந்து போகின்ற விட­ய­மல்ல. அது மனித வாழ்வின் அனைத்து அம்­சங்­க­ளிலும் பாதிப்பை ஏற்­ப­டுத்­து­கி­றது.

மனித உயிர் இழப்­புக்­களை ஏற்­ப­டுத்தும் அதே­வேளை, உலக ஒழுங்கை மாற்­று­வ­துடன் பொரு­ளா­தா­ரத்­திலும் அதிக பாதிப்­பு­களை ஏற்­ப­டுத்­து­கி­றது.  ஐரோப்­பியக் கண்­டத்தில் மாத்­திரம் கடந்த வரு­டத்தில் அதி­க­ரித்த வெப்­ப ­நி­லை­யோடு தொடர்­பு­பட்ட கார­ணங்­களால் 62,000 பேர் வரை­யானோர் மர­ணத்தைத் தழு­வி­ய­தாகத் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

அமெ­ரிக்­காவைப் பொறுத்­த­வரை அங்கே ஆண்­டு­தோறும் 700 வரை­யானோர் மர­ணத்தைத் தழு­வு­வ­தாகப் புள்­ளி­வி­ப­ரங்கள் கூறு­கின்­றன. எனினும், இதே கார­ணங்­களால் அமெ­ரிக்­காவில் பல மடங்கு மக்கள் ஆண்­டு­தோறும் இறப்­ப­தாக சுயா­தீனத் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. இதற்கு ஆதா­ர­மாக அங்கு மர­ணங்கள் தொடர்­பான பதி­வு­களில் உள்ள தவ­று­களை அவர்கள் சுட்டிக் காட்­டு­கின்­றனர். 

இவை ஒரு­புறம் இருக்க இந்தப் பிராந்­தி­யங்­களில் ஏற்­பட்­டுள்ள காட்டுத் தீ உயிர்­க­ளுக்கும் சூழ­லுக்கும் பாரிய அச்­சு­றுத்­த­லாக உள்­ளது. கனடா, அமெ­ரிக்கா, கிரேக்கம், சீனா, ஜோர்தான் எனக் காட்டுத் தீ பல்­லா­யிரக் கணக்­கான ஹெக்டயர் காடு­களை எரித்துக் கொண்­டி­ருக்­கின்­றது. இந்தக் காட்டுத் தீயை அணைக்க வழி தெரி­யாது அந்­தந்த நாடுகள் தடு­மாறிக் கொண்­டி­ருக்­கின்­றன.

ஜூலை 17ஆம் திக­திய தக­வல்­களின் படி அன்­றைய நாளில் மாத்­திரம் கன­டாவில் 900 இடங்­களில் பெரு­ம­ள­வி­லான காட்டுத் தீ பர­வி­ய­தா­கவும் அவற்றுள் 599 இடங்­களில் தீயைக் கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­ வர முடி­யாமல் இருந்த­தா­கவும் செய்­திகள் வெளி­யாகி உள்­ளன. இந்தத் தீப் பர­வலில் 26 மில்­லியன் ஏக்கர் காடுகள் அழிந்து நாச­மாகி உள்­ள­தா­கவும் அந்தத் தக­வல்கள் மேலும் தெரி­விக்­கின்­றன. 

இதைப் போன்று உலகின் பல பாகங்­க­ளிலும் அதி­க­ரித்த வெப்­ப­நிலை, மோச­மான மழை­வீழ்ச்சி, புயல், வெள்ளம் எனச் செய்­திகள் வெளி­யாகிக் கொண்­டி­ருக்­கின்­றன. இவை என்ன கார­ணத்தால் உரு­வா­கின்­றன என்ற அறி­வியல் பூர்­வ­மான தக­வல்கள் ஒன்றும் இர­க­சி­ய­மா­னவை அல்ல.

கைத்­தொழில் புரட்சி என மனித இனத்தால் கொண்­டா­டப்­படும் நவீன கண்­டு­பி­டிப்­புகள், அதன் விளை­வான உற்­பத்­திகள், தொழில் வளர்ச்சி என்­ப­வற்றின் பக்க விளை­வு­களே மனித குலத்தை அச்­சு­றுத்தும் இன்­றைய நிலைக்குக் கார­ண­மாக உள்­ளது. தொழில் வளர்ச்சி, உற்­பத்தி போன்­றவை மனித வாழ்வின் தவிர்க்க முடி­யாத அம்­சங்கள் என்­பதில் மாற்றுக் கருத்து இருக்க முடி­யாது. ஆனால், எமது வாழி­டத்தைப் பணயம் வைத்து இவற்றை அடைய வேண்­டுமா என்­பதே கேள்வி.

வாக­னங்கள் மற்றும் தொழிற்­சா­லை­களில் இருந்து வெளி­யாகும் கரி­ய­மில வாயுவின் அளவைக் குறைப்­பது, பசுமைப் புரட்சி, காடு வளர்ப்பு எனப் பல திட்­டங்கள் முன்­மொ­ழி­யப்­பட்­டாலும் அவை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்தப் படு­கின்­ற­னவா என்­பதில் சந்­தேகம் நீடிக்­கவே செய்­கி­றது.

ஏனெனில் முத­லா­ளித்­துவ அர­சாங்­கங்கள் மக்கள் நலன் சார்ந்­த­வை­யாக இல்­லாமல் பெரு முத­லா­ளிகள் மென்­மேலும் சொத்துச் சேர்ப்­ப­தற்கு உதவும் நோக்­கி­லேயே செயற்­பட்டு வரு­வதைப் பார்க்க முடி­கின்­றது. சூழல் பாது­காப்பு தொடர்­பி­லான தொண்டு நிறு­வ­னங்­களும், ஆர்­வ­லர்­களும் தமது சக்திக்கு உட்பட்ட வகையில் என்னதான் முயற்சி செய்தாலும் பெரு நிறுவனங்களின் பொருளாதார வளத்துக்கும், ஆட் பலத்துக்கும் முன்னால் நின்றுபிடிக்க முடியாத நிலையே உள்ளது.

உலகின் சக்தி வாய்ந்த அரசாங்கங்கள் இது தொடர்பில் தமது நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்ளாதவரை மனித குலத்துக்கு எதிரான அச்சுறுத்தல் தொடரவே செய்யும்.

தமது பிள்ளைகளுக்கு ஒரு வளமான எதிர்காலத்தை அமைத்துக் கொடுப்பதே சிறந்த பெற்றோரின் கடமை. அதேபோல் எமது எதிர்காலச் சந்ததிக்காக ஒரு சிறந்த உலகை விட்டுச் செல்வதும் எம் ஒவ்வொருவரினதும் கடமையாகின்றது. போகிற போக்கைப் பார்த்தால் எமது வாழ்நாளிலேயே உலகம் அழிந்துவிடுமோ என்ற அச்சமே ஏற்படுவதைத் தடுக்க முடியவில்லை.

https://www.virakesari.lk/article/160726

  • கருத்துக்கள உறவுகள்

2050 இல் பரிசின் வெப்பநிலை 50 ஆக இருக்கும் என்று கணித்து இருக்கிறார்கள். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதீத வெப்பம், பெருமழை: ஒரே நேரத்தில் நம்மை வாட்டும் இரு பேரழிவுக்கும் பசிபிக் கடலுக்கும் என்ன தொடர்பு?

எல்நினோ, அதீத வெப்பம், பெருமழை

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஜார்ஜினா ரெனால்ட், இர்வின் ரிவால்ட், ஜீனா தொஷின்ஸ்கி
  • பதவி, பிபிசி காலநிலை செய்தியாளர் மற்றும் தரவு குழு
  • 26 ஜூலை 2023, 05:24 GMT
    புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

உலகில் இதுவரை அதிக வெப்பம் பதிவான நாளாக நடப்பு ஜூலையில் மூன்று நாட்கள் இடம்பெற்றுள்ளன. அதிகரித்துவரும் கடல் வெப்பம், அண்டார்டிகாவில் இதுவரை இல்லாத அளவில் பனிப்பாறைகள் உருகுவது போன்றவை குறித்து விஞ்ஞானிகளில் சிலர் கவலை தெரிவித்துள்ளனர். இதன் வேகமும் காலமும் கணிக்கமுடியாதபடி இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

ஐரோப்பாவை உலுக்கிவரும் ஆபத்தான வெப்ப அலைகள் வெப்ப நிலை தொடர்பாக புதிய உச்சத்தை தொடக்கூடும் என்று ஐக்கிய நாடுகள் சபை கூறுகிறது.

இந்தியாவின் பெரும் பகுதி இந்த ஆண்டு அதிக மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டின் 40 சதவீத மக்கள் கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டின் பெரும் பகுதியினர் இன்னும் மழைக்காக ஏங்குகின்றனர்.

தலைநகர் டெல்லி உட்பட பல பகுதிகளில் இந்த ஆண்டு பெய்த பருவமழை முந்தைய ஆண்டுகள் பதிவாகியிருந்த பலவற்றையும் முறியடித்துள்ளது.

காலநிலை மாற்றம் குறித்த நகர நிர்வாகத்தின் வரைவு செயல்திட்டத்தின்படி, 2050ஆம் ஆண்டுக்குள் காலநிலை மாற்றத்தால் டெல்லிக்கு ரூ.2.75 லட்சம் கோடி இழப்பு ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.

புவி வெப்பமடைதல்

பட மூலாதாரம்,REUTERS/ADANAN ABIDI

காலநிலை மாற்றம் காரணமா?

இந்த நிகழ்வுகளுக்கெல்லாம் காலநிலை மாற்றம் தான் காரணம் என்று உடனடியாக தொடர்புப்படுத்தி பேசுவது சரியாக இருக்காது. ஏனெனில் பூமியின் வானிலை மற்றும் கடல்கள் கணிப்பதற்கு மிகவும் சிக்கலானவை.

இந்த விவகாரம் தொடர்பாக ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன, ஆனால் பல மோசமான சூழ்நிலைகள் உலகின் முன் வருவதைப் பற்றி தாங்கள் அஞ்சுவதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்னாமிக்ஸின் சுற்றுச்சூழல் புவியியலாளர் டாக்டர் தாமஸ் ஸ்மித் பிபிசியிடம் பேசுகையில், "தற்போது உள்ளதைப் போன்று வேறு எந்த காலகட்டத்திலும் காலநிலை அமைப்பின் அனைத்து பகுதிகளும் இதுபோல் சாதனை அளவில் சில வகையான பேரழிவுகளை எதிர்கொண்டதா என்று தெரியவில்லை." என்றார்.

லண்டனின் இம்பீரியல் கல்லூரியில் காலநிலை அறிவியலைக் கற்பிக்கும் டாக்டர் பாலோ செப்பி, புதைபடிவ எரிபொருள்கள் மற்றும் எல் நினோ காரணமாக ஏற்பட்ட புவி வெப்பமடைதல் காரணமாக பூமி இப்போது "இதுவரை பார்க்காத நிலைக்குள் நுழைந்துள்ளது" என்று கூறுகிறார்.

இந்த கோடைகாலத்தில் இதுவரை வானிலையில் உச்சமாக இருந்த 4 விஷயங்கள் முறியடிக்கப்பட்டுள்ளன. உலகின் வெப்பமான நாள் இந்த ஆண்டு ஜூலையில் பதிவாகியுள்ளது. இதேபோல், உலகளவில் வெப்பமான மாதமாக நடப்பாண்டு ஜூன் பதிவாகியுள்ளது. சமுத்திரங்களில் தீவிரமான வெப்ப அலைகள் ஏற்பட்டது, அண்டார்டிகா கடல் பகுதியில் பனி இதுவரை இல்லாத அளவில் குறைந்துபோனது.

வானிலையில் ஏற்படும் இந்த மாற்றங்கள் நமக்கு எதனை உணர்த்துகிறது? பூமியையும் மனிதர்களையும் எதிர்காலத்தில் அவை எந்த அளவு பாதிக்கலாம்?

புவி வெப்பமடைதல்
 
படக்குறிப்பு,

உலகின் வெப்பம் மிகுந்த நாள் நடப்பு ஆண்டு ஜூலையில் பதிவாகியுள்ளது

இதுவரை இல்லாத அளவில் வெப்பம்

உலகின் வெப்பம் மிகுந்த நாள் நடப்பு ஆண்டு ஜூலையில் பதிவாகியுள்ளது. இதேபோல், கடந்த 2016ஆம் ஆண்டு அதிகபட்ச உலகளாவிய சராசரி வெப்பநிலை பதிவானது. அந்த சாதனையும் இந்த ஆண்டு முறியடிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய யூனியனின் காலநிலை கண்காணிப்பு நிறுவனமான கோபர்நிகஸ் கருத்துப்படி, இந்த ஆண்டு ஜூலை 6ஆம் தேதி, உலக சராசரி வெப்பநிலை 17.08 டிகிரி செல்சியஸை எட்டியது.

கச்சா எண்ணெய், நிலக்கரி மற்றும் எரிவாயு போன்ற புதைபடிவ எரிபொருட்களை எரிப்பதால் ஏற்படும் உமிழ்வுகளும் புவி வெப்பமடைதலுக்கான காரணங்களாக உள்ளன.

பசுமை இல்ல வாயுக்களால் பூமி வெப்பமடைவதைப் பற்றி இதுபோன்ற முன்னறிவிப்பு ஏற்கனவே செய்யப்பட்டுள்ளது என்று லண்டன் இம்பீரியல் கல்லூரியின் காலநிலை விஞ்ஞானி டாக்டர் ஃபிரெட்ரிக் ஓட்டோ கூறுகிறார்.

வெயில்

பட மூலாதாரம்,GETTY IMAGES

"தற்போது நிகழ்ந்து வரும் போக்கின் வளர்ச்சியின் பின்னணியில் மனிதனின் பங்கு நூறு சதவிகிதம் உள்ளது." என்றும் அவர் தெரிவித்தார்.

"பொதுவாக உலகளாவிய அளவில் எல்-நினோ செயல்முறையின் விளைவு அது தொடங்கி ஐந்து முதல் ஆறு மாதங்கள் வரை தெரிவதில்லை. ஆனால், இந்த முறை ஜூன் மாதத்திலேயே முந்தைய பல்வேறு சாதனைகள் முறியடிக்கப்பட்டுள்ளன. இது எனக்கு ஆச்சரித்தை அளிக்கிறது. " என்று தாமஸ் ஸ்மித் கூறுகிறார்.

எல் நினோ என்பது பசிபிக் பெருங்கடலில் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி வீசும் காற்றின் வேகம் மற்றும் திசையில் ஏற்படும் மாற்றமாகும். பசிபிக் பெருங்கடலில் பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள பகுதிகளில் அதிகமான வெப்பம் ஏற்பட்டால், அதனால் கடும் பாதிப்புகள் ஏற்படும்.

இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் உலக சராசரி வெப்பநிலை தொழில்துறை வளர்ச்சிக்கு முந்தைய காலத்தின் ஜூன் மாத வெப்பநிலையை விட 1.47 ° C அதிகமாக இருந்தது. தொழில்மயமாக்கல் 1800 இல் தொடங்கியது, அதன் பிறகு மனிதர்கள் தொடர்ந்து அதிக அளவு பசுமை இல்ல வாயுக்களை வளிமண்டலத்தில் வெளியிட்டு வருகின்றனர்.

புவி வெப்பமடைதல்

2023 கோடையில் என்ன நடந்தது என்பது பத்தாண்டுகளுக்கு முன்பே கணிக்கப்பட்டதா?

இந்தக் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக, "காலநிலையை முன்னறிவிப்பதற்குப் பயன்படுத்தப்படும் மாதிரிகள் நீண்ட காலத்திற்குப் போக்குகளை மதிப்பிடுவதில் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் 10 ஆண்டுகளில் நிகழும் மாற்றங்களைத் துல்லியமாக மதிப்பிட முடியாது" என்று டாக்டர் ஸ்மித் கூறுகிறார்.

"நாம் இன்று இருக்கும் இடத்தை 1990களின் மாடல்களின் படி ஒப்பிடும்போது மிக அதிகம் ஆகும். ஆனால் அடுத்த 10 ஆண்டுகளில் நிலைமை உண்மையில் எப்படி இருக்கும் என்பதை துல்லியமாக மதிப்பிடுவது மிகவும் கடினம்."என்றும் அவர் தெரிவித்தார்.

அதே நேரத்தில், "அதிகரிக்கும் வெப்பநிலை குறையத் தொடங்கும் என்று தெரியவில்லை." என்றும் அவர் நம்மிடம் தெரிவித்தார்

கடல் வெப்பமயமாதல்

மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் சராசரி உலகளாவிய கடல் வெப்பநிலை இதற்கு முன்பாக பதிவாகியிருந்த அனைத்து சாதனைகளையும் முறியடித்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டு கடலின் மேற்பரப்பில் அதிகபட்ச வெப்பநிலை பதிவானது. இந்த ஆண்டு அதனையும் தாண்டி பதிவாகியுள்ளது.

வடக்கு அட்லாண்டிக் கடலில் அதிக வெப்பம் காரணமாக, அதிகரித்து வரும் கடல் வெப்பநிலை விஞ்ஞானிகளுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

"அட்லாண்டிக் பெருங்கடலின் இந்தப் பகுதியில் நாம் இதற்கு முன்பு வெப்ப அலைகளைப் பார்த்ததில்லை" என்கிறார் பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தின் புவி அறிவியல் பேராசிரியர் டேனிலா ஷ்மிட்.

புவி வெப்பமடைதல்
 
படக்குறிப்பு,

கடந்த 2016ம் ஆண்டு கடலின் மேற்பரப்பில் அதிகபட்ச வெப்பநிலை பதிவானது. இந்த ஆண்டு அதனையும் தாண்டி பதிவாகியுள்ளது.

ஜூன் மாதத்தில், அயர்லாந்தின் மேற்கு கடற்கரையில் வெப்பநிலை சராசரியை விட 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை எட்டியது. அமெரிக்காவின் தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் அதை ஐந்தாம் வகை வெப்ப அலை என்று அழைத்தது. இதன் பொருள், "மிக அதிக" வெப்ப அலைகள் என்பதாகும்.

வெப்பநிலை உயரும் இந்த நிகழ்வை காலநிலை மாற்றத்துடன் இணைப்பது சிக்கலானது, அதேநேரத்தில் இது நடக்கிறது என்று நீங்கள் கூறலாம் என்கிறார் பேராசிரியர் டேனிலா ஷ்மிட்.

பூமி வெப்பமடைகிறது என்பதும், கடல்கள் வளிமண்டலத்தில் உள்ள சூடான காற்றை உறிஞ்சுகிறது என்பதும் தெளிவாகத் தெரிகிறது என்று அவர் விளக்குகிறார்.

உலகின் 50 சதவீத ஆக்ஸிஜன் கடலில் இருந்துதான் கிடைக்கிறது.

கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளில் காலநிலை மாற்றத்தின் தாக்கம் குறித்து டேனிலா ஷ்மிட் பேசும்போது, "வெப்ப அலைகளைப் பற்றி பேசும்போது, மக்கள் பெரும்பாலும் மரங்கள், புற்கள் காய்ந்துபோவதை பற்றி மட்டுமே நினைக்கிறார்கள்." என்றார்.

"அட்லாண்டிக் பெருங்கடலின் வெப்பநிலை இயல்பாக இருக்க வேண்டியதை விட 5 டிகிரி செல்சியஸ் அதிக வெப்பமாக உள்ளது. இதன் பொருள் உயிரினங்கள் சாதாரணமாக செயல்பட 50% கூடுதல் உணவு தேவைப்படுகிறது." என்கிறார் அவர்.

புவி வெப்பமடைதல்
 
படக்குறிப்பு,

ஜூலை மாதத்தில், அண்டார்டிகா கடலில் இருக்கும் பனிப் படலத்தில் வரலாறு காணாத குறைவு ஏற்பட்டுள்ளது

அண்டார்டிகாவில் குறைந்துவரும் பனி படலம்

ஜூலை மாதத்தில், அண்டார்டிகா கடலில் இருக்கும் பனிப் படலத்தில் வரலாறு காணாத குறைவு ஏற்பட்டுள்ளது. 1981 முதல் 2010 வரையிலான சராசரியுடன் ஒப்பிடும் போது, அண்டார்டிகாவில் இருந்து பிரிட்டனை விட 10 மடங்கு பரப்பளவிலான பனி உருகியுள்ளது.

இது ஒரு எச்சரிக்கை மணி என்று கூறும் விஞ்ஞானிகள், பனி உருகுதலுக்கும் காலநிலை மாற்றத்துக்கும் தொடர்பு இருக்கிறதா என்று ஆய்வு செய்து வருகின்றனர்.

பிரிட்டிஷ் அண்டார்டிகா சர்வேயின் மருத்துவர் கரோலின் ஹோம்ஸ் கூறுகையில், புவி வெப்பமயமாதல் காரணமாகக் கூட அண்டார்டிக் கடலின் பனி உருகலாம், ஆனால் தற்போதைய சூழ்நிலையைப் பார்த்தால், இது அப்பகுதியின் வானிலை மாற்றங்களால் கூட இருக்கலாம் அல்லது கடல் அலைகள் காரணமாகவும் இருக்கலாம் என்று தோன்றுகிறது என்கிறார்.

புவி வெப்பமடைதல்
 
படக்குறிப்பு,

1981 முதல் 2010 வரையிலான சராசரியுடன் ஒப்பிடும் போது, அண்டார்டிகாவில் இருந்து பிரிட்டனை விட 10 மடங்கு பரப்பளவிலான பனி உருகியுள்ளது

"இந்த ஜூலைக்கு முன்பு இதுபோன்ற ஒரு நிகழ்வை நாம் பார்த்ததில்லை. இதற்கு முன்பும் பனி படலம் குறைந்திருக்கிறது. ஆனால், இந்த முறை வழக்கமாக இருப்பதை விட 10 சதவீதத்துக்கும் குறைவாகவே பனி படலம் உள்ளது. மாற்றம் எவ்வளவு வேகமாக நடக்கிறது என்பதை நாம் உண்மையில் புரிந்து கொள்ளவில்லை என்பதற்கான அறிகுறி இது." என்று கரோலின் ஹோம்ஸ் விளக்குகிறார்.

புவி வெப்பமடைதல் ஒரு கட்டத்தில் அண்டார்டிகா பனியை பாதிக்கும் என்று விஞ்ஞானிகள் நம்பினர், ஆனால் 2015 வரை இது மற்ற பெருங்கடல்களில் உலகளாவிய போக்கைத் தடுத்தது.

"தற்போது நிகழ்ந்துவரும் மாற்றங்களின் வேகத்தின் காரணமாக இது நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது என்று நான் நினைக்கிறேன். இது நிச்சயமாக நாம் பார்க்கும் சிறந்த சூழ்நிலை அல்ல, இது மோசமான சூழ்நிலைக்கு நெருக்கமானது, ”என்று அவர் மேலும் கூறுகிறார்.

வருங்காலங்களில் இந்த நிலை மேலும் மோசமாகும் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

தற்போது நிகழ்ந்து வருவது அனைத்தும் வெப்பமயமாதலை கட்டுப்படுத்தாததால் ஏற்படுபவை என்று ஃப்ரீடெரிக் ஓட்டோ எச்சரிக்கிறார்.

"நாம் இப்போது ஒரு புதிய சகாப்தத்தில் இருக்கிறோம். அதே நேரம் பலருக்கும் வாழ தகுதியான எதிர்காலத்தை ஏற்படுத்துவதற்கு நமக்கு இன்னும் அவகாசம் இருக்கிறது" என்று அவர் தெரிவித்தார்.

கூடுதல் தகவல்கள்: மார்க் பாயின்டிங்ஸ் மற்றும் பெக்கி டே

https://www.bbc.com/tamil/articles/c4n3l359qk4o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலகெங்கும் தகிக்கும் வெப்பநிலையினால் தவிக்கும் மக்கள்

Published By: SETHU

27 JUL, 2023 | 05:40 PM
image
 

கடுமையான வெப்ப அலைகள் காரணமாக உலகின் 4 கண்டங்களைச் சேர்ந்த கோடிக் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடுமையான வெப்பம் மற்றும் காட்டுத் தீ போன்றவை காரணமாக பல நாடுகளில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதுடன் பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளிலிருந்து இடம்பெயர்ந்துள்ளனர்.

ஐரோப்பா, அமெரிக்கா, ஆபிரிக்கா, ஆசியா கண்டங்களிலுள்ள பல  நாடுகளிலுள்ள மக்கள் கடுமையான வெப்பத்தினால் தவித்துக்கொண்டிருக்கின்றனர்.

குறிப்பாக, மத்திய தரைக்கடலை சூழவுள்ள தெற்கு ஐரோப்பிய மற்றும் வடக்கு ஆபிரிக்க நாடுகளில் வெப்பத்தின் தாக்கம் மிகவும் கடுமையாகவுள்ளது. இதனால், பாரிய காட்டுத் தீப் பரவல்களும் இடம்பெற்றுள்ளன.

வட ஆபிரிக்க நாடான அல்ஜீரியாவில் காட்டுத்  தீயினால் குறைந்தபட்சம் 10 இராணுவ சிப்பாய்கள் உட்பட 34 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 25 சிப்பாய்கள் உட்பட 80 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் அந்நாட்டு அதிகாரிகள் நேற்றுமுன்தினம் தெரிவித்துள்ளனர்.

Heat-Wave-2023.jpg

கிறீஸின் றோட் தீவுகளில் காட்டுத்தீ பரவல் காரணமாக சுற்றுலா பயணிகள் உட்பட சுமார் 30,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இத்தாலியின் சிசிலி தீவில், சுமார் 3 இலட்சம் மக்கள் வசிக்கும் கெட்டேனியா நகரில், வீதிகளின் கீழாக செல்லும் மின்சாரக் கம்பிகள் உருகியதால், அந்நகரிலுள்ள மக்களுக்கு 48 மணித்தியாலங்ளாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன், நீர்விநியோகமும் துண்டிக்கப்பட்டது.

இத்தகைய வெப்ப அதிகரிப்பினால் காடுகள்  தீப்பற்றுவதுடன், குழந்தைகள், முதியவர்கள் போன்றோர் நோய்களுக்கு ஆளாக வாய்ப்புள்ளது. மக்களின் மனநிலையிலும் இதனால் மாற்றங்கள் ஏற்படக்கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

வெப்பத்தின் சாதனைகள்

இத்தாலியின் சிசிலி தீவில் 2021 ஆம் ஆண்டு 48.8 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியது. இது ஐரோப்பிய கண்டத்தின் வரலாற்றில் அதிகூடிய வெப்பநிலையாகும். அச்சாதனை இவ்வருடம் முறியடிக்கப்படக்கூடும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

அதேவேளை, ஐரோப்பிய நகரங்கள் உட்பட உலகின் பல நகரங்களில் இவ்வருடம் வெப்பநிலையில் ஏற்கெனவே பல புதிய சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.

இத்தாலியின் பலேர்மோ நகரில் நேற்றுமுன்தினம் 47 பாகை செல்சியஸ்,  (116 பாகை பரனைட்)  வெப்பநிலை பதிவாகியது. இது அந்நகரில் 1790 ஆம் ஆண்டின் பின்னலான அதிகூடிய வெப்பநிலையாகும். 

Heat-Wave-2023---AFP-2.jpg

சீனாவின் ஸின்ஜியாங் பிராந்தியத்திலுள்ள சன்பாவோ நகரில் கடந்த 16 ஆம்  திகதி 52.2 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியது. இது  சீனாவில் இதுவரை பதிவான ஆகக்கூடுதலான வெப்பநிலையாகும்.

ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் கடந்த ஜூன் மாதம் 34.7 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியது. இது அந்நகரின் கடந்த 120 வருடங்களில் பதிவான ஆகக்கூடுதலான வெப்பநிலையாகும். ரஷ்யாவின் யேகெத்தரின்பேர்க் நகரில் கடந்த 11 ஆம் திகதி 40 பாகை செல்சியஸுக்கும் அதிகமான வெப்பநிலை பதிவாகியது. இது கடந்த 187 வருடங்களில் அந்நகரில் பதிவான ஆகக்கூடுதலான வெப்பநிலையாகும்

அமெரிக்காவில், பல மாநிலங்களில் 40 பாகை செல்சியஸுக்கு அதிக வெப்பநிலை நிலவுகிறது.

அரிஸோனா மாநிலத்தின் பீனிக்ஸ் நகரில் தொடர்ச்சியாக 25 நாளாக  110 பாகை பரனைட்டுக்கு (43.3 பாகை செல்சியஸ்) அதிக வெப்பநிலை நிலவுகிறது. அந்நகரில் 1974 ஆம் ஆண்டு தொடர்ச்சியாக 18 நாட்களுக்கு இத்தகைய வெப்பநிலை நீடித்தமையே முந்தைய சாதனையாக இருந்தது.

கடலின் வெப்பநிலை அதிகரிப்பு

தரையில் மாத்திரமல்லாமல், கடற்பரப்பிலும் வெப்பநிலையும் அதிகரித்துள்ளது.

மத்திய தரைக்கடலின் கடல்மட்டத்தில் நாளாந்த இடைநிலை வெப்பநிலையானது 28.71 பாகை செல்சியஸாக கடந்த திங்கட்கிழமை அதிகரித்திருந்தது. இதில் புதிய சாதனை படைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதாக ஸ்பெய்னின் கடல் விஞ்ஞான நிறுவகம் தெரிவித்துள்ளது. இதற்கு முன் மத்திய தரைக்கடலில் அதிகபட்சமாக 28.5 பாகை செல்சியஸ் வெப்பநிலை 2003 ஆம் ஆண்டு பதிவாகியிருந்தது எனவும் அந்நிறுவகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தின்  புளோரிடா கீஸ் தீவுப் பகுதியில் கடந்த திங்கட்கிழமை அத்திலாந்திக் சமுத்திர கடல்மட்டத்தின் வெப்பநிலை 38.43 பாகை  செல்சியஸாக பதிவாகியிருந்தது. இது கடல் மட்டத்தின் வெப்பநிலையில் புதிய உலக சாதனையாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

சமுத்திரங்களில் இவ்வாறு வெப்பநிலை அதிகரிப்பது கடல்வாழ் உயிரினங்களுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

Heat-Wave-2023---AFP-5.jpg

2023 ஜுலை மாதமானது வெப்பநிலையில் மிக அதிக வெப்பநிலை நிலவிய மாதமாக, சிலவேளைகளில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் மிக அதிக வெப்பமான மாதமாக, பதிவாகக்கூடும் என நாசாவின் காலநிலையியல் நிபுணர் கெவின் ஷ்மித் தெரிவித்துள்ளார்.  

தரையிலும் கடலிலும் வெப்பநிலை அதிகரிப்பில் சாதனை படைக்கப்படுவதற்கு மனிதர்களுடன் தொடர்படுத்தப்படுத்தக்கூடிய காலநிலை மாற்றமே இதற்குக் காரணம் எனவும் அவர் கூறியுள்ளார். 

காலநிலை மாற்றம்

இந்த வெப்ப அலைகளுக்கு காலநிலை மாற்றமே காரணம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

பருவநிலையில் இயற்கையாகவே மாற்றங்கள் ஏற்படுகின்றன. எனினும் அண்மைக் காலத்தில்  பூமியின் வெப்பநிலை முன்னெப்போதுமில்லாத வகையில் வேகமாக உயர்ந்து வருவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். பசுமை இல்ல விளைவுடன் இது இணைத்து பார்க்கப்படுகிறது.

சுற்றாடல் பல்கலைக்கழகம்

காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் உலக நாடுகள் பலவும் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. சூழல்பாதுகாப்பு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வுட்டுவதன் முக்கியத்தும் வெகுவாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, காலநிலை மாற்றத்தை தடுப்பதற்குப் பதிலாக அதனை தாமதப்படுத்தல் மாத்திரமே இதுவரை நடந்துள்ளது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் சுட்டிக்காட்டியதுடன், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கு உலக நாடுகளுக்கு ஆதரவளிப்படும் எனத் தெரிவித்தார்.

உலகின் முதலாவது சர்வதேச சுற்றாடல் பல்கலைக்கழகம் இலங்கையில் ஸ்தாபிக்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (சேது)

https://www.virakesari.lk/article/161072

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாட்டும் வெப்பம், மக்கள் தவிப்பு: வரலாற்றில் பதியும் ஜூலை மாதம்

நிறைவடைய போகும் ஜூலை மாதம் வரலாற்றில் பதிவு செய்யப்படும் மாதமாக அமையப்போகிறது.

உலகெங்கிலும் உள்ள பல நாடுகளிலும் கோடை வெப்பம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மக்களை வாட்டி வருகின்றது.

இந்நிலையில் ஜேர்மனியின் லெய்ப்சிக் பல்கலைக்கழகத்தின் ஆய்வறிக்கை ஒன்று நேற்று வெளியிடப்பட்டது. அதில், “இதுவரை உலகில் பதிவான வெப்பநிலைகளிலேயே ஜூலை 2023 மாத வெப்பம்தான் அதிகமானதாக இருக்கும்” என தெரிகிறது.

தொழிற்துறை புரட்சி காலகட்டங்களுக்கு முந்தைய காலகட்டங்களில் இருந்த சராசரியை விட இம்மாத சராசரி உலக வெப்பநிலை, சுமார் 1.5 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் 174 ஆண்டுகளுக்கான வெப்ப பதிவுகளில் அதிகமானதாக ஜூலை 2019-ஐ பதிவாகியிருந்தது. 2023 ஜூலை மாத வெப்பநிலை அதையும் விட 0.2 செல்சியஸ் அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் உலக வானிலை அமைப்பு இக்கருத்துக்களை அமோதிக்கிறது.

ஜூலை மாதத்திற்கான உலகளாவிய சராசரி வெப்பநிலை வழக்கமாக 16 டிகிரி செல்சியஸ் எனும் அளவில்தான் இருக்கும். ஆனால் இந்த ஜூலையில் அது 17 டிகிரி செல்சியஸிற்கு அளவிற்கு உயர்ந்துள்ளது.

“நமது புவியில் இதே போன்ற அதிக வெப்ப பதிவுகளை ஆராய்ந்தால், ஆயிரக்கணக்கான ஆண்டுகள் அல்லது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பின்னோக்கிச் செல்ல வேண்டியிருக்கும் ” என லெய்ப்சிக் பல்கலைகழகத்தின் வானிலையியல் ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

பனிக்கட்டிகள் போன்றவற்றிலிருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் கிடைக்கும் பதிவுகளில் இருந்து 1,20,000 ஆண்டுகளில் பூமி இவ்வளவு சூடாக இருந்ததில்லை என தெரிகிறது.

கிரேக்கத் தீவான ரோட்ஸ், அமெரிக்காவின் தென்மேற்கு பகுதிகள், வடமேற்கு சீனா, கனடா, பிரான்ஸ், ஸ்பெயின், ஜேர்மனி மற்றும் போலந்து ஆகிய நாடுகளின் அதிக வெப்பம் சமீப காலங்களில் மிகவும் பேசுபொருளானது.

கடல் நீர் மட்டுமல்லாது உலகின் குளிர்ச்சியான அண்டார்டிகா பனி பிரதேசத்திலேயே வெப்பநிலை உயர்ந்துள்ளமை ஆராய்ச்சியாளர்களை வியக்க வைத்துள்ளது.

https://thinakkural.lk/article/265655

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பூகோளம் கொதிக்கும் நிலை வந்துவிட்டது - ஐநா செயலாளர் நாயகம்

Published By: SETHU

29 JUL, 2023 | 10:44 AM
image
 

பூகோள வெப்பமடைதல் என்ற நிலையிலிருந்து 'பூகோளம் கொதிக்கும் நிலை' என்ற கட்டத்துக்கு உலகம் மாறியுள்ளது என ஐநா செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டேரெஸ் கூறியுள்ளார்.

வரலாற்றில் இதுவரை பூமியின் சராசரி வெப்பநிலை மிக அதிகமாக பதிவான மாதமாக 2023 ஜூலை மாதம் விளங்கும் என புதிய ஆய்வொன்று தெரிவித்துளளது. இந்நிலையில் நியூயோர்க்கிலுள்ள  ஐநா தலைமையகத்தில் நேற்றுமுன்தினம்     உரையாற்றுகையில் ஐநா செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டேரெஸ்   இவ்வாறு கூறினார்.

"உலக வளிமண்டலவியல் ஸ்தாபனமும் ஐரோப்பிய ஆணைக்குழுவின் கொப்பர்னிக்கஸ்; காலநிலை மாற்ற சேவையும், புதிய தரவுகளை வெளியிடுகின்றன. மனிதகுல வரலாற்றில் 2023 ஜூலை மாதமானது பதிவான மிக அதிக வெப்பமான மாதமாக இத்தரவுகள் உறுதிப்படுத்துகின்றன"என அவர் கூறினார்.

"இம்மாதம் முடிவடையும் வரை இதற்கு நாம் காத்திருக்கத் தேவையில்லை. குறுகிய பனியுகமொன்று சில தினங்களில் ஏற்படும். 2023 ஜூலையில் பல சாதனைகள் தகர்க்கப்படும்.

அதிக வெப்பமான 3 வாரகாலம் இந்த ஜூலையில் பதிவாகியுள்ளது. வட அமெரிக்கா, ஆசியா, ஆபிரிக்கா, ஐரோப்பாவின் பெரும்பகுதியிலும் முழு கிரகத்திலும் இது கொடூரமான கோடைப் பருவமாகும். இது ஒரு பேரழிவு.

விஞ்ஞானிகளைப் பொருத்தவரை மனிதர்களே இதற்குக் காரணம்.  இவை அனைத்தும் எதிர்வுகூறல்களுக்கும், தொடர்ச்சியான எச்சரிக்கைகளுக்கும் இணக்கமாக உள்ளன. இந்த மாற்றத்தின் வேகம் மாத்திரமே வியப்பளிக்கிறது. காலநிலை மாற்றம் வந்துவிட்டது. இது திகிலூட்டுகிறது. இது இப்போதுதான் ஆரம்பிக்கிறது.

பூகோள வெப்பமடைதல் யுகம் முடிந்துவிட்டது. பூகோள கொதித்தல் யுகம் வந்துவிட்டது. வளியை  சுவாசிக்க முடியவில்லை. வெப்பம் சகித்துக் கொள்ளப்பட முடியாதுள்ளது" எனவும் ஐநா செயலாளர் நாயகம் குட்டேரெஸ் தெரிவித்துள்ளார்.  

இந்த ஜூலையின் 5, 6 மற்றும் 7 ஆம் திகதிகளில் பூமியின் சராசரி வெப்பநிலையில்  மிக அதிக வெப்பமான நாட்களாக பதிவாகியதாகவும், ஜூலை 6 ஆம் திகதி பூமியின் சரசரி வெப்பநிலை 17.23 பாகை செல்சியஸாக (40.1 பாகை பரனைட்)  பதிவாகியதாகவும் உலக வளிமண்டலவியல் ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.  இது  2016 ஆகஸ்ட் மாதத்தில் பதிவாகியிருந்த  16.9 பாகை செல்சியஸ்  சாதனையை முறியடித்துள்ளதாகவும்  அந்த ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.  

கடந்த 12,000 வருடங்களில் நிலவிய மிக அதிக வெப்பநிலையாக  இது இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. (சேது)

https://www.virakesari.lk/article/161189

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெயிலின் தாக்கம் அதிகரிப்பு- குளிரூட்டும் மையங்கள் திறப்பு

வெயிலின் தாக்கம் அதிகரிப்பு- அமெரிக்காவில் குளிரூட்டும் மையங்கள் திறப்பு

வெயிலின் தாக்கம் அதிகரிப்பு- அமெரிக்காவில் குளிரூட்டும் மையங்கள் திறப்பு
அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக வெயிலின் கொடுமை பொதுமக்களை வாட்டி வதைத்து வருகிறது.

தினமும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் குழந்தைகள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் வெப்ப அலையில் சிக்கி பாதிக்கப்பட்டு உள்ளனர்.

பலர் நோய் தாக்கத்தால் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று அமெரிக்காவில் 100 டிகிரிக்கு மேல் வெயிலின் தாக்கம் அதிகரித்து கடும் வெப்ப அலை வீசும் என்றும் இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

வெயில் கொடுமையால் பொதுமக்கள் வீடுகளில் ஏ.சி. அறையில் முடங்கி கிடக்கிறார்கள்.

இந்த வெயிலில் இருந்து தப்பிக்க சிகாகோ, நியூயோர்க் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பொதுமக்களுக்காக குளிரூட்டும் மையங்கள் திறக்கப்பட்டு உள்ளன.

https://thinakkural.lk/article/265919

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பூமி கொதித்துக் கொண்டிருக்கிறது: ஆபத்தில் இருப்பதாக எச்சரிக்கை - வருந்தும் அமெரிக்கா

புவி வெப்பமடைதல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், மாட் மெக்ராத் & மார்க் பாய்ண்டிங்
  • பதவி, பிபிசி நியூஸ் காலநிலை & அறிவியல்
  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

உலகளவில் வெப்பநிலை உயர்ந்து வரும் நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வியாழனன்று செய்தியாளர்களைச் சந்தித்த ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ், இது தொடர்பாக அழுத்தமான உரையை நிகழ்த்தினார்.

தற்போதைய சூழலை 'பூமி கொதித்துக்கொண்டிருக்கும் காலம்'(Era of global boiling) என்று குறிப்பிட்ட அவர், காலநிலை தொடர்பாக உடனடி நடவடிக்கை தேவை என்றும் வலியுறுத்தினார்.

"காற்றை சுவாசிக்க முடியவில்லை, வெப்பத்தை தாங்கிக்கொள்ள முடியவில்லை, கரிம எரிபொருள் மூலம் எட்டப்படும் லாபத்தையும் பருவநிலை தொடர்பாக எதுவும் செய்யாமல் இருப்பதையும் பொறுத்துக்கொள்ள முடியவில்லை," என்று அன்டோனியோ பேசினார்.

மேலும், "இதன் விளைவுகள் தெளிவானவை மட்டுமல்ல சோகமானவையும்கூட. பருவமழையால் குழந்தைகள் அடித்துச் செல்லப்படுகின்றனர். குடும்பங்கள் தீப்பிழம்புகளில் இருந்து தப்பி ஓடுகின்றன.

தொழிலாளர்கள் வெப்பத்தில் சரிகின்றனர். காலநிலை மாற்றத்தை நினைத்தால் பயமாக இருக்கிறது. இது வெறும் ஆரம்பம் மட்டுமே," என்று தனது வேதனையை அவர் வெளிப்படுத்தினார்.

புவி வெப்பமடைதல்

பட மூலாதாரம்,REUTERS

 
படக்குறிப்பு,

அன்டோனியோ குட்டரஸ்

நம்மிடம் இருக்கும் தரவுகளின்படி, இந்த ஜூலைதான் பூமியின் வெப்பமான மாதம் என்று உலக வானிலை நிறுவனம் கூறியதைத் தொடர்ந்து, அன்டோனியோ குட்டரஸ் இத்தகைய கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

நடப்பு ஆண்டின் ஜூலை மாதத்தில் இதுவரையிலான காலகட்டத்தில் மூன்று நாட்களில் இதுவரை இல்லாத அளவு வெப்பம் பதிவாகியுள்ளது.

இதுவரை நாம் பதிவு செய்துள்ளதிலேயே இந்த ஜூலையின் முதல் மூன்று வாரங்கள்தான் அதிக வெப்பமானது என்று கோப்பர்நிக்கஸ் காலநிலை மாற்ற சேவையின் இயக்குநர் கார்லோ பியூன்டெம்போ ஜெனிவாவில் நடைபெற்ற கூட்டத்தில் கூறியுள்ளார்.

காலநிலை - கூடுதல் நிதி தேவை

அன்டோனியோ குட்டரஸ் தனது உரையில் உலக தலைவர்களின் உணர்ச்சியைத் தொடுவதை நோக்கமாக கொண்டிருந்தார். அதே நேரத்தில் காலநிலை தொடர்பான பிரச்னையைச் சமாளிக்க கூடுதல் நிதி வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் வைத்தார்.

பாரிஸ் உடன்படிக்கையின் கீழ், காலநிலை மாற்றத்தைத் தணிக்க வளரும் நாடுகளுக்கு ஆண்டுக்கு 100 பில்லியன் டாலர்கள் வழங்க பணக்கார நாடுகள் உறுதியளித்தன. மாசு வெளியேற்றாத எரிபொருள்களுக்கும், தொழில்நுட்பங்களுக்கும் மாறுவதற்காகவும், மாறிவரும் காலநிலைக்கும் ஏற்ப மாற்றங்களை உருவாக்க உதவுவதற்கும் இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று கூறப்பட்டது. 2020க்குள் இதைச் சாத்தியமாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், இந்த இலக்கு எட்டப்படாமல் உள்ளது.

தற்போது வெப்பநிலை அதிகரித்து வரும் சூழலில், ஜி20 உறுப்பு நாடுகள் தங்கள் கார்பன் உமிழ்வைக் குறைப்பதற்கான புதிய இலக்குகளை நிர்ணயிக்க வேண்டும் என்று குட்டரஸ் கேட்டுக் கொண்டார்.

OECD நாடுகளுக்கு 2030க்குள் நிலக்கரியிலிருந்து வெளியேறவும், 2040ஆம் ஆண்டுக்குள் உலகின் பிற நாடுகள் நிலக்கரி பயன்பாட்டிலிருந்து வெளியேறவும் நம்பகமான திட்டங்கள் தேவை என்றும் அவர் வலியுறுத்தினார்.

கூடுதலாக, காலநிலை மாற்றத்தின் தாக்கத்திற்கு ஏற்ப வெள்ளத்திற்கு எதிரான தடுப்புகளை அமைத்தல், கடுமையான வெப்பத்தைச் சமாளிக்கும் நகரங்களை வடிவமைத்தல் போன்ற நடவடிக்கைகள் குறித்தும் அவர் பேசினார்.

புவி வெப்பமடைதல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அமெரிக்காவின் பதில் என்ன?

இந்த விவகாரம் தொடர்பாகப் பேசியுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், காலநிலை மாற்றத்தை அச்சுறுத்தல் என்று குறிப்பிட்டார்.

அதீத வெப்பம் காரணமாக அமெரிக்காவுக்கு ஆண்டு ஒன்றுக்கு ஒரு பில்லியன் டாலர் அளவுக்கு இழப்பு ஏற்படுகிறது என்றும், இதுவரை இல்லாத வெப்பநிலை காரணமாக 10 கோடி அமெரிக்கர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் பேசினார்.

"காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை இனி யாரும் மறுக்க முடியாது" என்று பைடன் தெரிவித்தார்.

இதுவரை இல்லாத வெப்பம்

கடந்த 1,20,000 ஆண்டுகளில் இந்த ஜூலைதான் மிகவும் வெப்பமான மாதமாக இருக்கும் என்று சில நிபுணர்கள் நம்புகின்றனர்.

உலகின் வெப்பம் மிகுந்த நாள் நடப்பு ஆண்டு ஜூலையில் பதிவாகியுள்ளது. இதேபோல், கடந்த 2016ஆம் ஆண்டு அதிகபட்ச உலகளாவிய சராசரி வெப்பநிலை பதிவானது. அந்த சாதனையும் இந்த ஆண்டு முறியடிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய யூனியனின் காலநிலை கண்காணிப்பு நிறுவனமான கோபர்நிகஸ் கருத்துப்படி, இந்த ஆண்டு ஜூலை 6ஆம் தேதி, உலக சராசரி வெப்பநிலை 17.08 டிகிரி செல்சியஸை எட்டியது. இது இதுவரை இல்லாத அளவாகும்.

புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டுடன் இந்த அதீத வெப்பநிலைக்கு தொடர்பு உள்ளது என்பதை விஞ்ஞானிகள் ஒப்புக்கொள்கிறார்கள்.

இந்த எரிபொருட்களால் உருவாகும் மாசு சூரிய ஒளியை தடுத்து பூமியைச் சுற்றி ஒரு பசுமை இல்லமாக செயல்படுவதோடு தீவிர வானிலை நிகழ்வுகளை வலுப்படுத்துகிறது.

புவி வெப்பமடைதல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

"ஜூலையில் பலகோடி மக்களைப் பாதித்த தீவிர வானிலை என்பது துரதிர்ஷ்டவசமாக, காலநிலை மாற்றத்தின் அப்பட்டமான உண்மை மட்டுமல்ல எதிர்காலம் குறித்த முன்னறிவிப்பும் கூட " என்று உலக வானிலை அமைப்பின் பொதுச் செயலாளர் பெட்டேரி தாலாஸ் தெரிவித்தார்.

"பசுமை இல்ல வாயு உமிழ்வை முன்னெப்போதும் இல்லாததவை விட அவசரமாக குறைக்க வேண்டிய அவசியம் உள்ளது. காலநிலை தொடர்பான நடவடிக்கை என்பது ஆடம்பரமானது அல்லது, இது ஒரு கடமை" என்றும் அவர் கூறுகிறார்.

புவி மெப்பமடைதல் ஒரு பக்கம் இருக்க, எல் நினோ காரணமாக கிழக்கு பசிபிக் சமுத்திரம் வெப்பமடைந்துள்ளது. இது வளிமண்டலத்தில் வெப்பத்தை வெளியிடுகிறது. இதனால், 2023 அல்லது 2024 மிகவும் வெப்பமான ஆண்டாக பதிவாக வாய்ப்பு உள்ளது.

"மோசமானதை நம்மால் தடுத்து நிறுத்த முடியும். அவ்வாறு செய்வதற்கு நாம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். காலநிலை தொடர்பான நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும்" என்று குட்டரஸ் வலியுறுத்துகிறார்.

https://www.bbc.com/tamil/articles/c72v10y69z8o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.