Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய அரிசி ஏற்றுமதிக்கு தடை, தவிக்கும் அமெரிக்கா; அச்சமூட்டும் காரணமும் எதிர்காலமும்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாஸ்மதி அல்லாத அரிசியை ஏற்றுமதி செய்வதற்கு இந்திய அரசு தடை விதித்துள்ளது. தாமதமாக வந்த பருவமழையாலும் தொடர்ந்து ஏற்படும் காலநிலை மாறுபாடுகளாலும் நெல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கடந்த 12 மாதங்களில் அரிசியின் சந்தை விலை 11.5% அதிகரித்துள்ளதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஒரு மாதத்தில் அரிசியின் விலை 3% அதிகரித்திருப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது.

அல்லாடும் அமெரிக்கா

முன்பு கம்யூனிஸ்ட்டுகளை கிண்டல் செய்ய ஒரு வாசகம் சொல்வார்கள், ‘மாஸ்கோவில் மழை பெய்தால், மதுரையில் அவர்கள் குடைபிடிப்பார்கள்,’ என்று.

உலகமயமாக்கலுக்கு பின்பு இதுவே நிதர்சனம் ஆகிவிட்டது. உலகமயமாக்கல் புதிய உலக ஒழுங்கை கட்டமைத்தது. இங்கு எதுவும் தனித்து இல்லை என்பதே அது. இந்த உலக வலையை இணைப்பது அந்தந்த நாடுகள் எடுக்கும் கொள்கை முடிவு எனும் கண்ணிகள். அதில் ஒரு கண்ணியில் ஏற்படும் தாக்கும் ஒட்டுமொத்த உலக இயங்கியலிலும் தாக்கம் செலுத்தும்.

 

கோவிட் காலங்களை நினைவு கூர முடிகிறதா? ஒரு பக்கம் மக்கள் கூட்டம் கூட்டமாக வீதியில் இறங்கி நடந்து போக, மத்திய தர வர்க்கம் தங்கள் உணவுக்காக கடைகளில் கூட்டம் கூட்டமாக நின்று மொத்த கொள்முதல் செய்தார்களே? அப்போது நமக்கு சில சொற்கள் அறிமுகம் ஆகின. அதில் ஒன்று Panic Buying. அதுதான் இப்போது அமெரிக்காவில் நடந்துக் கொண்டிருக்கிறது. வெளிநாடு வாழ் இந்தியர்கள் அரிசியை மொத்தமாக வாங்க கடைகளில் குவிகிறார்கள். 

ஓரளவு நிலைமை கட்டுக்குள் இருந்தாலும், இந்தியாவில் அரிசி ஏற்றுமதி தடை என்பதி பெரும் அச்சத்தை அங்கு விதைத்திருக்கிறது. அந்த அச்சத்தில் நியாயம் இல்லாமலும் இல்லை. ஏனெனில், சர்வதேச அளவில் இந்தியா மிகப்பெரிய அரிசி ஏற்றுமதியாளர்.

இதை உள்வாங்கினாலே, ஏன் அமெரிக்கர்கள் அச்சப்படுகிறார்கள் என்ற காரணம் புரியும். சரி. உலகின் மிகப்பெரிய அரிசி உற்பத்தியாளரான இந்தியா, அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்தது ஏன்?

உலக அரசியலை கடந்து, கொஞ்சம் சூழலியையும் தெரிந்து கொண்டால், இந்த காரணத்தை புரிந்து கொள்ளலாம்.

Paddy Field (Representational Image)
 
Paddy Field (Representational Image) Image by siva nagarjuna reddy pothireddy from Pixabay

இந்த முடிவுக்கு பின்னால் உள்ள பதற வைக்கும் காரணம்

எல்-நினோ தெற்கு அலைவின் (El-Nino Southern Oscillation) ஒரு அங்கமான எல்-நினோ காலகட்டத்தில் இப்போது இருக்கிறோம். எல்-நினோவின்போது பொதுவாக வெப்பநிலை அதிகமாகவும் மழைப்பொழிவு குறைவாகவும் காணப்படும். இதுபோன்ற பாதிப்புகள் ஏற்கனவே உலகின் பல நாடுகளில் வரத் தொடங்கிவிட்டன. உதாரணமாக தாய்லாந்தில் சென்ற ஆண்டைவிட 28% குறைவான மழையே பதிவாகியுள்ளது. 

இந்தியாவைப் பொறுத்தவரை இந்த ஆண்டின் தென்மேற்குப் பருவமழை தாமதமாகத் தொடங்கினாலும் தீவிரமாக இருக்கிறது. அது விவசாயத்தை பாதித்திருக்கிறது. வட இந்தியாவின் பல மாநிலங்களில் கடும் மழைப்பொழிவால் நெற்பயிர்கள் மூழ்கின. பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. பிற மாநிலங்களில் நடவுக்குக் காத்திருந்த வயல்கள் மழை இல்லாமல் காலியாகக் கிடக்கின்றன. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது சென்ற ஆண்டைவிட 6% குறைவான பரப்பளவிலேயெ நெல் பயிரிடப்பட்டிருக்கிறது. பருவமழையின் தொடக்கத்திலேயே இத்தனை பிரச்சனைகள் ஏற்பட்டிருப்பது கொஞ்சம் அச்சமூட்டுகிறது. இதற்கு முன்பாக 2015-ம் ஆண்டில் வந்த தீவிர எல் நினோவின்போது 15 மில்லியன் டன் அளவிலான பயிர்கள் சேதமானதையும் அரிசி விலை 16% உயர்ந்ததையும் இங்கு நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். இதனால் அந்த காலகட்டத்தில் 60 மில்லியன் மக்களின் உணவுப்பாதுகாப்பு கேள்விக்குறியானது. 

 

எல் நினோ தெற்கு அலைவு ஒரு இயற்கை சுழற்சிதான் என்றாலும் காலநிலை மாற்றத்தால் வெப்ப காலகட்டமான எல்-நினோ மற்றும் குளிர் காலகட்டமான லா-நினா ஆகிய இரண்டிலுமே தீவிரத்தன்மை அதிகரிக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஆகவே இந்த எல்-நினோ காலகட்டத்தின் பாதிப்புகளை நாம் காலநிலை மாற்றத்துடனும் பொருத்திப் பார்க்கலாம்.

சென்ற ஆண்டு 783 மில்லியன் மக்கள் பசிக்கொடுமையால் துன்பத்துக்கு உள்ளானதாக ஐ.நா சபை அறிக்கை தெரிவிக்கிறது. சென்ற ஆண்டு கோதுமையின் விலை 13 விழுக்காடும் சோளத்தின் விலை 9 விழுக்காடும் அதிகரித்துள்ளது. இந்த மாற்றங்களுக்கு மூன்று முக்கியக் காரணிகளை விஞ்ஞானிகள் முன்வைக்கிறார்கள்: போர், கோவிட் பெருந்தொற்று, காலநிலை மாற்றம். குறிப்பாக உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்பால் பல உணவுதானியங்களின் விலை கணிசமாக உயர்ந்திருக்கிறது. ஏற்கனவே உணவுப் பாதுகாப்பின்மையால் வாடிக்கொண்டிருக்கும் உலகில் இப்போது எல்-நினோவால் விவசாயத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல் கூடுதல் அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது. 

Rice bags purchased by NRI
 
Rice bags purchased by NRI Special Arrangment

இந்தியாவின் இந்த முடிவால் என்ன பாதிப்பு ஏற்படும்?

உலக அளவில் ஏற்றுமதியாகும் மொத்த அரிசியில் 40% இந்தியாவிலிருந்துதான் வருகிறது.இப்போது அரிசி உற்பத்திக்கு இந்தியா தடை விதித்திருப்பதால் உலக அளவில் அரிசி விலை நிலவரம் கடுமையாக பாதிக்கப்படும். ஏற்கனவே உற்பத்தியை முன்வைத்து கோதுமை ஏற்றுமதியையும் இந்தியா தடை செய்திருக்கிறது. சர்க்கரை ஏற்றுமதிக்கும் உச்சவரம்பு விதிக்கப்பட்டுள்ளது. 

 

இந்தியா விதித்துள்ள தடையின் எதிரொலியாக அமெரிக்கா போன்ற நாடுகளில் அரிசியின் விலை உயர்ந்துள்ளது. கோவிட் பெருந்தோற்று காலத்தில் அச்சம் காரணமாகப் பலரும் பொருட்களை வாங்கிக் குவித்தது (Panic buying) பலருக்கு நினைவிருக்கலாம். அமெரிக்காவில் பல கடைகளில் அதுதான் நடக்கிறது. சில கடைகளில் "ஒருவர் இத்தனை கிலோ அரிசியை மட்டுமே வாங்கலாம்" என்பதுபோன்ற உச்சவரம்புகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாயக் கூட்டமைப்பு அரிசியின் விலை ஏற்கனவே உச்சத்தில் இருப்பதாக அறிவித்திருந்தது. கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அரிசியின் விலை உயர்ந்திருப்பதாக இக்கூட்டமைப்பு தெரிவிக்கிறது. இந்த சூழலில் இந்தியாவின் அறிவிப்பு உலகெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது என்றே சொல்லவேண்டும். "இது உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், கட்டுப்பாடுகளை நீக்குமாறு இந்திய அரசிடம் கேட்க உள்ளோம்" என்று சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தலைமைப் பொருளாதார நிபுணர் பியர்-ஒலிவியா குஹாஷன் தெரிவித்திருக்கிறார்.

Paddy Field (Representational Image)
 
Paddy Field (Representational Image) Image by Bishnu Sarangi from Pixabay

காலநிலை மாற்றம் தீவிரமடையும்போது உணவுப்பாதுகாப்பில் இத்தகைய சிக்கல்கள் ஏற்படும் என்று வல்லுநர்கள் முன்பே கணித்திருக்கிறார்கள். அந்தந்த நாடுகளின் வளங்களில் தட்டுப்பாடு ஏற்படும்போது ஏற்றுமதி பாதிக்கப்பட்டு அதனால் உலக அளவில் பிரச்சனைகள் வரலாம் என்பதும் வல்லுநர்களின் யூகமாக இருந்தது. ஆனால் இது எங்கோ எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் நிகழ்வாக அல்லாமல் இப்போதே நிகழத் தொடங்கியிருப்பது பிரச்சனையின் தீவிரத்தைக் காட்டுகிறது. 

Vikatan Digital Exclusive - 01 March 2023 - இந்திய அரிசி ஏற்றுமதிக்கு தடை, தவிக்கும் அமெரிக்கா; அச்சமூட்டும் காரணமும் எதிர்காலமும்! | How climate change caused India's rice-export ban? - Vikatan

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவில் அரிசி முக்கிய உணவல்லவே? விகடனின் எண்ணம் என்னவென்று தெரியவில்லை😂 அமெரிக்காவின் சனத்தொகையில் 4% இற்கும் குறைவான இந்திய வம்சாவழி  மக்களில் பெரும்பகுதியினருக்கு அரிசி முக்கியம், ஏனையோருக்கு கோதுமை மா மட்டும் போதும்!

இலங்கை வம்சாவழியினருக்கு இருக்கவே இருக்கு பூனகரி மொட்டைக் கறுப்பன் அரிசி. 

20 minutes ago, Justin said:

அமெரிக்காவில் அரிசி முக்கிய உணவல்லவே? விகடனின் எண்ணம் என்னவென்று தெரியவில்லை😂 அமெரிக்காவின் சனத்தொகையில் 4% இற்கும் குறைவான இந்திய வம்சாவழி  மக்களில் பெரும்பகுதியினருக்கு அரிசி முக்கியம், ஏனையோருக்கு கோதுமை மா மட்டும் போதும்!

 

ஆனால், அங்கு வசிக்கும் இந்தியர்கள், விழுந்தடித்துக் கொண்டு அரிசியை மூட்டை மூட்டையாக வாங்கியமையால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. தங்களுக்குள் அடிபட்டுக் கொண்டு அரிசி வாங்கும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் காண முடிகின்றது.

இங்கும், இந்திய இலங்கை கடைகள் மட்டுமன்றி Costco போன்றவற்றிலும் பாஸ்மதி உட்பட பல அரிசி வகைக்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது இந்தியர்களின் panick buying இனால். Costco வில் ஆளுக்கு இரண்டு  10 LB bags / packs மட்டும் வாங்கலாம் என அறிவித்துள்ளனர்.

கிழமையில் இரண்டு நாட்கள் தான் சோறு என்பதால், என் குடும்பத்துக்கு இரண்டு, 10 lb  அரிசி, 5 மாதங்களுக்கு மேல் காணும். 

22 minutes ago, Justin said:

 

இலங்கை வம்சாவழியினருக்கு இருக்கவே இருக்கு பூனகரி மொட்டைக் கறுப்பன் அரிசி. 

முந்த நாளில் இருந்து Spiceland / Iqbal போன்ற greedy கடைகள் இவற்றை பதுக்கி வைத்து ஒரு pack இற்கு $5 வரை விலை அதிகரித்து விற்கின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, நிழலி said:

ஆனால், அங்கு வசிக்கும் இந்தியர்கள், விழுந்தடித்துக் கொண்டு அரிசியை மூட்டை மூட்டையாக வாங்கியமையால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. தங்களுக்குள் அடிபட்டுக் கொண்டு அரிசி வாங்கும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் காண முடிகின்றது.

இங்கும், இந்திய இலங்கை கடைகள் மட்டுமன்றி Costco போன்றவற்றிலும் பாஸ்மதி உட்பட பல அரிசி வகைக்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது இந்தியர்களின் panick buying இனால். Costco வில் ஆளுக்கு இரண்டு  10 LB bags / packs மட்டும் வாங்கலாம் என அறிவித்துள்ளனர்.

கிழமையில் இரண்டு நாட்கள் தான் சோறு என்பதால், என் குடும்பத்துக்கு இரண்டு, 10 lb  அரிசி, 5 மாதங்களுக்கு மேல் காணும். 

முந்த நாளில் இருந்து Spiceland / Iqbal போன்ற greedy கடைகள் இவற்றை பதுக்கி வைத்து ஒரு pack இற்கு $5 வரை விலை அதிகரித்து விற்கின்றனர்.

செய்தியைப் பார்க்காமல் கடந்த வெள்ளி இங்கேயிருக்கும் இந்தியக் கடைக்கு ஒரு சிறிய பொருள் வாங்கப் போய் அதிக நேரம் வீணாக்க வேண்டி வந்து விட்டது. வாகனத் தரிப்பிடம் நிரம்பி, நகர முடியாத சனம். உள்ளே சோனாமசூரி அரிசியை வண்டில் வண்டிலாக வாங்கிக் கொண்டிருந்தார்கள்.

மாநிலத்தில் இருக்கும் ஒரேயொரு இலங்கைக் கடையின் நிலையை இன்னும் போய்ப்பார்க்கவில்ல நான், அனேகமாக விலையை ஏற்றியிருப்பார்!😂

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.