Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுழிபுரம் முருகன் கோவிலும் பௌத்த மயமாகும் அபாயம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, vanangaamudi said:

எமது தமிழ்த் தலைமைகள், தமிழ் அரசியல் கட்சிகள்  அனைத்தும் ஒன்றுபட்டு சிங்களவனின் எதிர்கால திட்டங்களை அரசியல் சாணக்கியத்துடன்  புரிந்துகொண்டு  இதயசுத்தியோடு உழைக்காதவரை எமது இனத்துக்கு விடிவில்லை.

இனத்தைப்பற்றியோ, மக்களைப்பற்றியோ அவர்களுக்கு அக்கறையில்லை. ஆளையாள் குற்றம் சொல்வதிலும், குழி பறிப்பதிலும்,போட்டுக்கொடுப்பதிலும், அவர்களின் போராட்ட்ங்களை, செயற்பாடுகளை கிண்டல் செய்வதிலும் காலத்தை கழிக்கிறார்கள். இத்தோடு தமது அரசியலும் அஸ்தமிக்கப்போகிறது என்பதை கூட கணக்கிலெடுக்கவில்லை., புலிகளை விமர்சித்தவர்கள், நாடு நாடாய் பறந்து, பூட்டிய அறைகளுக்குள் ரகசியமாய் பேசி எதை சாதித்தார்கள்? சாதித்தவைதான் மக்கள் சந்திக்கும் இந்த அவலங்கள்.

On 3/8/2023 at 20:39, ஏராளன் said:

இதன்போது சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்தில் உள்ள அரச மரத்தை சங்கமித்தை வந்து இறங்கிய பின்னர் அவருடன் தொடர்புபட்ட மரமாக சித்திரித்து வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டுள்ளது

ச ங்கமித்தையின் வருகைக்கும் சிங்கள பௌத்தத்துக்கும் உள்ள தொடர்பு என்ன? அந்தப்பெண்மணி பேசிய மொழியென்ன? அவர் வந்தது தமிழர் பிரதேசத்துக்கு,  வழங்கியது தமிழருக்கு, அவர்கள் அதை அப்போது கைக்கொண்டார்கள் காலப்போக்கில் கைவிட்டு தம் பாரம்பரிய மதத்தை தழுவினார்கள். அதை மறுத்து தாம் நினைத்ததை திணிக்க ஏன் இத்தனை நூற்றாண்டுகள் காத்திருந்தார்கள் இவர்கள்? சைவ மதத்துக்கும்இந்த ஆலமரத்துக்கும் உள்ள தொடர்பு என்ன?  சிர்த்தாத்தன் ஏன் ஆலமரத்தை தெரிந்தெடுத்தார் ஞானம் பெற? சைவனான அவருக்கு அந்த சூழலில் மத அடையாளமாக இருந்த மரத்தை தெரிந்தெடுத்திருக்கலாம்.... ஆகவே பௌத்தத்துக்கு முதல் இந்த வகை மரம் சைவத்தினாலே அநத மத அடையாளமாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கவேண்டும் என்பதை தெளிவுபடுத்தவேண்டும். மத குரோதத்தை வளர்த்துக்கொண்டு, மாற்று மத அடையாளங்களை சிதைத்து ஆக்கிரமித்துக்கொண்டு, மத நல்லிணக்கம் பேசும் போலிகளை அம்பலப்படுத்தி அவர்களின் நோக்கத்தையும் செயற்பாடுகளையும் வெளியுலகிற்கு வெளிப்படுத்தவேண்டும். தமிழர் ஆயுதம் தூக்க காரணம் என்ன? பிரச்சனையை திசை திருப்பி அவர்கள் பலத்தை அழித்தபின் நடைபெறுவது என்ன? பேசுவது என்ன? அதை அவர்கள் நிறைவேற்ற சர்வதேசம் எப்படி அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கி நம்மை ஒடுக்கியது  என்பதை விங்கப்படுத்த வேண்டும். முக்கியமாக சிங்கள மக்களுக்கும். இவர்களோடு நாங்கள் எப்படி சேர்ந்து வாழமுடியுமென்பதை எம்மை அழிக்க உதவியவர்கள் விளக்க வேண்டும்.

1 hour ago, ரஞ்சித் said:

இன்று ஒரு சிலரைத் தவிர ஏனையவர்கள் இதுகுறித்துக் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.

ரஞ்சித்! உங்களைப்போலவே ஆத்திரம், இயலாமை, வெறுப்பு, ஏதாவது செய்து எமது இருப்பை தக்கவைக்க மாட்டோமா என்கிற ஆதங்கம் பலருக்குண்டு. இப்போதைக்கு எந்த வழியும் தெரியவில்லை, இதற்கு எதிரி மட்டும் காரணமல்ல, போர் முடிந்த கையோடு இராணுவதை எங்கள் பிரதேசங்களில் இருந்து வெளியேற்ற போதிய நடவடிக்கை எடுக்கவில்லை, அவர்கள் சாவகாசமாக இருந்து தமது இருப்பை பலப்படுத்தவும், நிஞாயப்படுத்தவும், நமது தொழில் வளங்களையும் நிலங்களையும் ஆக்கிரமிக்கவும், சமுதாய சீர்கேடுகளை விதைக்கவும் இடம் அமைத்து கொடுத்து விட்டு, அவர்களோடு சல்லாபிப்பதிலும் வக்காலத்து வாங்குவதிலும் காலத்தை கழித்தோம். அவன் தான் நினைத்ததை சாதிக்க உள்ளூரில் உள்ள சமய தலைவர்கள், அரசியல் கிராம தலைவர்கள், அதிகாரிகளை பயன்படுத்திக்கொண்டான். நாளைக்கு தங்களுக்கும் இந்த நிலை ஏற்படலாமென நினைத்த கத்தோலிக்கர் போப்பாண்டவரின் தூதுவரை அழைத்து யதார்த்தத்தை அறிவிக்கிறார்களோ என எண்ணத்தோன்றுகிறது. இந்தியாவை நம்பிப் பயனில்லை. இதை நாம் முதலில் உணரவேண்டும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இனத்தை அழிக்க உதவியது, இப்போ மதத்தை குறிவைத்து செயற்படுகிறது. நமது வேண்டுகோள் எதையாவது காதில் வாங்கியிருக்கிறதா அது? அதனிடம் போகும்போது ஒவ்வொரு தடவையும் நமது சுயத்தை இழக்கிறோம். கத்தியை தீட்டுவதை விட, நிதானமாக புத்தியை தீட்டி அதன் மூலம் எதிரியை அறுத்தோமானால் அதை மாற்ற முடியாது. அதுவே எதிரிக்கு கொடுக்கும் பேரிடி. எம்மைப்போல அடிமைகளாக இருந்து விடுபட்டவர்களுடன் பேச வேண்டும், அவர்களின் அனுபவங்களை பெறவேண்டும், எமக்கு இந்த நிலை ஏற்பட காரணமாயிருந்த ஒவ்வொரு நாட்டையும் விசேடமாக பிரித்தானியாவை வற்புறுத்த வேண்டும் நமது இந்த அழிவு நிலைக்கு பொறுப்பேற்க.   

  • கருத்துக்கள உறவுகள்

சைவ தமிழர்கள் அதிகமாக வாழும், நூற்றுக்கு நூறு தமிழர்கள் வாழும் இடத்திலேயே இவர்கள் கை வைக்கிறார்கள் என்றால் , அதுவும் அதிவேகமாக எல்லா இடங்களிலும் பவுத்த மயமாக்க முயட்சிக்கிறார்கள் என்றால் அதன் அர்த்தம் என்ன?

அதாவது இலங்கை முழுவதும் சிங்கள பவுத்த மயமாக்கலின் திடத்தின் ஒரு பகுதியை கச்சிதமாக செய்கிறார்கள். இது ஒரு நாளில் செய்யமுடியாத வேலை என்றாலும், ஒரு நாள் வரும் அப்போது  அதன் பலனை அனுபவிக்கலாம் என்பதுதான் அவர்களது எண்ணம். இதனை யார் செய்கிறார்கள், எப்படி செய்கிறார்கள் என்பதெல்லாம் கேள்விக்கு அப்பாட்பட்ட்து.

வடக்கு கிழக்கை 50 % இக்கு மேலே தங்களுக்கு ஏற்றபடி மாற்றி விடடார்கள். இன்னுமொரு ஐம்பது வருடங்களில் அவர்களது திடடம் நிறைவேற்றலாம். சிங்கள தீவினிட்கோர் பாலம் அமைப்போம் என்ற பாடல்தான் நினைவுக்கு வருகின்றது. 

  • கருத்துக்கள உறவுகள்

Image

சுழிபுரம் மட்டுமல்ல, கீரிமலைக் கேணிகள், பருத்தித்துறை சுங்கக் கட்டடம் மற்றும் இளவாலை கத்தோலிக்கத் தேவாலயம் என்பனவும் தொல்பொருள் திணைக்களத்தால் அடையாளம் காணப்பட்டு அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர அரசு அனுமதி கொடுத்திருக்கிறது. 

கீரிமலையில் சங்கமித்தை குளித்ததாக சிங்களவர்கள் கூறுகிறார்கள் இப்போது. ஆகவே, கீரிமலை இனி பெளத்தர்களின் புனித பூமியாகப் போகிறது. இனிமேல் சங்கமித்தை ஒன்றுக்கு இரண்டிற்குப் போன பனைவடலியென்று பக்கத்தில இருக்கிற பனங்காடெல்லாவற்றையும் பெளத்த சின்னங்கள் என்று சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

பருத்தித்துறை சுங்கக் கட்டடம் தமது விகாரை மீது கட்டப்பட்டதாககக் கூறிக்கொண்டு வருவார்கள். அதைச்சுற்றியும் வேலிபோடப்பட்டு சிலநாட்களிலேயே விகாரை கட்டப்படும்.

இளவாலையில் இருக்கும் தேவாலயத்தின் அடியில் புத்தரின் மயிர் இருக்கிறதென்று இனி பிக்குகள் படையெடுக்க அருகில் முழு உருவத்தில் புத்தர் இனி எழுந்தருளுவார். 

ஏதாவது ஒரு இடத்திலாவது இதனை உடைத்தெறியவேண்டும். எவரென்று தெரியாமல் இரவோடிரவாக இந்தப் பொய்களை அழித்தால்த்தான் இது நிற்கும். 


 

  • கருத்துக்கள உறவுகள்

சைவ ஆலயங்கள், அரசமரம் உள்ள தனியார் காணிகள், அடுத்து கிறிஸ்தவ தேவாலயங்கள். தான் தான் அரசன் என்று விளையாட்டின் விதிமுறைகளை மறுத்து விளையாட வெளிக்கிட்டு கோமணமும் இல்லாமல் அலையப்போகுது இலங்கை. 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ரஞ்சித் said:

Image

இன்னும் சிறிது காலத்தின் பின்னர் அந்த இடங்களை சுற்றி ஆராய்ச்சி செய்யும்போது நிறைய பவுத்த சின்னங்கள் கண்டெடுக்கப்படும். அப்போது அங்குள்ள மக்களும் சிங்கள பவுத்தர்களாக மாறி சாது சாது சொல்ல வேண்டி ஏட்படலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, satan said:

சைவ ஆலயங்கள், அரசமரம் உள்ள தனியார் காணிகள், அடுத்து கிறிஸ்தவ தேவாலயங்கள். தான் தான் அரசன் என்று விளையாட்டின் விதிமுறைகளை மறுத்து விளையாட வெளிக்கிட்டு கோமணமும் இல்லாமல் அலையப்போகுது இலங்கை. 

எப்படி அவர்கள் இருப்பதையும் இழப்பார்கள் நண்பரே? இதுவரை அது நடந்ததா? 1956,1971,1977,1983 ‍- 2009 என்று இன்றுவரை எம்மீதான இனக்கொலைகள் நடந்துகொண்டுதானே இருக்கின்றன? அவர்கள் மேலும் மேலும் பலப்பட்டு எமது தாயகத்தையும் அல்லவா அபகரித்துக்கொண்டிருக்கிறார்கள்? 

நாம் எமது கரங்களில் எமது இருப்பை எடுத்துக்கொள்ளும்வரை எதுவுமே மாறப்போவதில்லை. முதலில் பெளத்த சின்னங்கள், எச்சங்கள், கொசுறுகள், ஒன்றுக்குப் போனவை, இரண்டிற்குப் போனவை என்று அவன் கூறும் பொய்களை அழிப்போம். அவன் நினைத்ததை செய்யமுடியாத நிலையினை உருவாக்குவோம். மீதியைப் பார்த்துக்கொள்ளலாம். 

சுழிபுரக் கோயிலின் சுவர்களின் மகிந்தவும், பசிலும் சிரித்துக்கொண்டிருப்பது எப்படிச் சாத்தியம்? இதை வரைந்தவர்கள் அவர்களை இக்கோயிலுக்கு அழைத்து விசேட பூஜை செய்த தமிழர்களே. அன்று இருந்த அல்பிரெட் துரையப்பாவைப்போல், இராஜதுரையைப் போல, தேவநாயகத்தைப் போல, குமாரசூரியரைப்போல இனத்தை விற்று வயிறு வளர்ப்பவர்கள் இன்னமும் இருக்கிறார்கள். இவர்களை யாரென்று அடையாளம் கண்டு சமூகத்தின்முன்னால் இவர்களின் முகத்திரையினைக் கிழித்துத் தொங்கவிடவேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

2021 இல் கீரிமலைப்பகுதியில் தமிழர்களுக்குச் சொந்தமான காணிகளில் கடற்படை முகாம் அமைப்பதற்கு வந்த காணி அளவையாளர் திணைக்கள அதிகாரிகளை அப்பகுதித் தமிழர்கள் போராட்டம் செய்து விரட்டியடித்தார்கள். அன்று செய்ய முடியாததை இன்று "தொல்பொருள் திணைக்களம்" எனும் சிங்களப் பெளத்த பேரினவாதப் பயங்கரவாதத்தின் முன்னணிக் கருவியைப் பாவித்துச் செய்ய‌ நினைக்கிறார்கள். இதில் பெளத்தமும் இல்லை, தொல்பொருளும் இல்லை, இருப்பதெல்லாம் முழு இலங்கையினையும் சிங்களமயமாக்கும் சதிதான். நாம் இதனை எதிர்த்துப் போராட வேண்டும். அவர்கள் இப்பகுதிக்கு வரமுன்னரே மக்கள் போராட்டங்களையும், நீதிமன்ற நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும். தடையுத்தரவுகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். 

ImageImage

அண்மையில் கீரிமலையின் பிரதம சைவக் குரு இறந்தபோது அவரின் இறுதி ஊர்வலத்திற்கு பொலீஸ் பாதுகாப்பும் மரியாதையும் அளிக்கப்பட்டது. எமது விடயங்களில் பேரினவாதிகளின் பங்களிப்பு ஏன்? இறந்தது எமது குரு, நடந்தது எமது தாயகத்தில், இங்கே எம்மை அழித்தவனுக்கு என்ன வேலை? 1990 இல் இதே கீரிமலை மீது புக்காரா குண்டு வீச்சு நடத்தியதை எல்லாரும் இலகுவாக மறந்துவிட்டார்கள் என்று நினைக்கிறேன்.
Image

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரஞ்சித் said:

1956,1971,1977,1983 ‍- 2009 என்று இன்றுவரை எம்மீதான இனக்கொலைகள் நடந்துகொண்டுதானே இருக்கின்றன? அவர்கள் மேலும் மேலும் பலப்பட்டு எமது தாயகத்தையும் அல்லவா அபகரித்துக்கொண்டிருக்கிறார்கள்? 

அன்று நம்மவர் விட்ட தவறே இன்றைக்கு இவ்வளவு வேர்விட காரணம்.

4 minutes ago, ரஞ்சித் said:

முதலில் பெளத்த சின்னங்கள், எச்சங்கள், கொசுறுகள், ஒன்றுக்குப் போனவை, இரண்டிற்குப் போனவை என்று அவன் கூறும் பொய்களை அழிப்போம். அவன் நினைத்ததை செய்யமுடியாத நிலையினை உருவாக்குவோம். மீதியைப் பார்த்துக்கொள்ளலாம். 

இதுதான் இப்போதைக்கு முக்கியம்! அவன் முதன்மைப்படுத்துவதை நமக்கு சாதகமாக மாற்ற வேண்டும். சைவ சமயத்துக்கும் அரச மரத்துக்குமுள்ள தொடர்பை விளக்க வேண்டும். அரச மரமில்லாத சைவ ஆலயங்களே இல்லை எனக்குத்தெரிந்து. அங்கே ஓர் உண்மை மறைந்திருக்கிறது அதை வெளியே கொண்டுவந்து இவர்களின் பொய்க்கதையை முறியடிக்க முறியடித்து முகத்தில் கரியை பூசவேண்டும். சங்கமித்தை இலங்கைக்கு வருமுன் வடக்கில் அரசமரம் இருக்கவில்லையா? தனியே அரசமரம் மட்டுந்தான் சைவ ஆலயங்களை சுற்றி நிற்கின்றனவா? மரங்களோடு மரங்களாக நிற்கும் அரசமரத்தை குறிவைப்பது அவர்களின் அதிகார போதையை காட்டுகிறது. 

9 minutes ago, ரஞ்சித் said:

இப்பகுதிக்கு வரமுன்னரே மக்கள் போராட்டங்களையும், நீதிமன்ற நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும். தடையுத்தரவுகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். 

இதெல்லாம் குருந்தூர் மலையில் செய்யாததா?

10 minutes ago, ரஞ்சித் said:

அண்மையில் கீரிமலையின் பிரதம சைவக் குரு இறந்தபோது அவரின் இறுதி ஊர்வலத்திற்கு பொலீஸ் பாதுகாப்பும் மரியாதையும் அளிக்கப்பட்டது. எமது விடயங்களில் பேரினவாதிகளின் பங்களிப்பு ஏன்? இறந்தது எமது குரு, நடந்தது எமது தாயகத்தில், இங்கே எம்மை அழித்தவனுக்கு என்ன வேலை?

 

59 minutes ago, satan said:

போர் முடிந்த கையோடு இராணுவதை எங்கள் பிரதேசங்களில் இருந்து வெளியேற்ற போதிய நடவடிக்கை எடுக்கவில்லை, அவர்கள் சாவகாசமாக இருந்து தமது இருப்பை பலப்படுத்தவும், நிஞாயப்படுத்தவும், நமது தொழில் வளங்களையும் நிலங்களையும் ஆக்கிரமிக்கவும், சமுதாய சீர்கேடுகளை விதைக்கவும் இடம் அமைத்து கொடுத்து விட்டு, அவர்களோடு சல்லாபிப்பதிலும் வக்காலத்து வாங்குவதிலும் காலத்தை கழித்தோம். அவன் தான் நினைத்ததை சாதிக்க உள்ளூரில் உள்ள சமய தலைவர்கள், அரசியல் கிராம தலைவர்கள், அதிகாரிகளை பயன்படுத்திக்கொண்டான்.

 

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் மண்ணில், எங்களை அழிக்க எதிரியாக நுழைந்தவன், புலிகளின் வீழ்ச்சிக்குப்பின் விருந்தினனாக எங்கள் வீட்டில் வரவழைக்கப்பட்டான், அரசியல்வாதிகள் தொடங்கி ஆலய பூசகர் வரை. குறைந்தவர்கள் கோயிலுக்குள் வரக்கூடாது, தேர் இழுக்கக்கூடாது என்று சட்டம் வைப்பவர்கள், இவர்களை அனுமதித்தது எப்படி? அங்கேதான் எதிரியின் வெற்றியின் ரகசியம் இருக்கு. எம்மக்களுக்கு மறுத்து, எதிரிக்கு விட்டுக்கொடுப்பது அதுவும் தாம்பாளத்தில் வைத்து அறுதியாக. 

  • கருத்துக்கள உறவுகள்

இன்று காலை சுழிபுரத்திலும் மாலை சங்கானையிலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது.

Edited by ஏராளன்
தகவல் பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்

 தலைவர் எவ்வளவு த் தீர்க்கதரிசி என்பதற்கு இன்னோர் உதாரணம்; உங்கள் வீடு தேடி வரும் எதிரியை படலை திறந்து வரவேற்று பாய் விரிக்காதீர்கள், அவன் அழிப்பான் உங்களை என்றார். அதையே இபோது அனுபவிக்கிறோம் நாம். 

  • கருத்துக்கள உறவுகள்

சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலய விவகாரம் : போராட்டம் முன்னெடுப்பு !

யாழ்ப்பாணம் சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்தில் உள்ள அரச மரத்தை சங்கமித்தை நாட்டிய மரம் என வெளியிடபட்ட அரச வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் இன்று சுழிபுரத்தில் எதிர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தை தொடர்ந்து சுழிபுரம் சந்தியில் இருந்து பறாளாய் முருகன் ஆலயத்தை நோக்கி பேரணி முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தின் போது தொல்லியல் திணைக்களத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டதுடன் பதாகைகளையும் போராட்டகாரர்கள் தாங்கியிருந்தனர்.

இப்போராட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள், மத குருமார்கள், சைவ அமைப்புக்கள், சிவில் அமைப்புகள், மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

1-6.jpg

2-6.jpg

3-3.jpg

4-2.jpg

https://thinakkural.lk/article/266955

  • கருத்துக்கள உறவுகள்

சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலய விவகாரம் : தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி போராட்டம்!

சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்திலுள்ள அரச மரத்தை பௌத்த சின்னமாக அடையாளப்படுத்தி வெளியிடப்பட்ட வர்த்தகமானி அறிவிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் இன்று போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

சங்கானை பேருந்து தரிப்பிடத்திற்கு முன்னாள் மாலை 3.30 மணியளவில் இடம்பெற்ற இப் போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் உட்பட கட்சி ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.

1-7.jpg

2-7.jpg

news-01-6.jpg

https://thinakkural.lk/article/267001

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

இயக்கங்களை பல கூறுகளாக பிரித்துவைத்து அடிபட வைத்து வேடிக்கை பாத்தபடியே இனத்தை அழித்த சிங்களம், இப்போ அரசியல் கட்சிகளுக்கு சலுகைகளை காட்டி ஒன்று சேராதபடி பிரித்து வைத்துக்கொண்டு, ஒரு சில கட்சிகள் தேர்தலை முன்னிறுத்தி வாக்குகளுக்காக போராடுகிறார்கள் என்பதும், மக்களை ஏமாற்றி கூத்தாடிகளுக்குப்பின்னால் சேர்த்துக்கொண்டு, மக்கள் போராடவில்லை அரசியல்வாதிகளே இனக்குரோதத்தை உருவாக்குகிறார்கள் என்பதும் ஏமாற்று வித்தையே. இதற்காகவே சில தமிழ்க் கூத்தாடிகளை தன் பக்கம் வைத்திருக்கிறது. தான் போடும் தாளத்திற்கு ஆமா தலையாட்ட . எல்லா தமிழ் அரசியல் தலைவர்களும் மக்களும் ஒன்று சேர்ந்து போராடாதவரை இது ஓயப்போவதில்லை. ஆனால் கூத்தாடிகளை தள்ளியே வைக்கவேண்டும். அதற்க்கான காரணத்தை வெளிப்படுத்த வேண்டும். கொலைகளுக்கு அவர்கள் எவ்வாறு முண்டு கொடுத்தார்கள், இப்போ பேச்சுவார்த்தையை குழப்பும் பகுதியினருக்கு எவ்வாறு முண்டு கொடுக்கிறார்கள், இவர்களால் எவ்வாறு நல்லிணக்கம் ஏற்படும் என்பதையும் விளக்க வேண்டும். அதுசரி .... கிரிக்கெட் விளையாடி, பொப்பி பூ குத்தி நல்லிணக்கம் ஏற்படுத்தப்போகிறம் என்று போனவையும், இவர்களுடன்   இவ்வாறு விளையாடித்தான் பேசி முடிவை அடைய முடியும் என்று விளக்கம் கொடுத்தவர்களையும் காணவில்லையே? எங்கே போனார்கள் அவர்கள்? சிறீதரனின் விளக்கத்தை கேட்டீர்களா? தமிழ்த்தேசியம் சார்ந்தவர்களை பங்குபற்றும்படி பல்கலைக்கழக மாணவர் அழைப்பு விடுத்தபடியால் பங்குபற்றினார்களாம். அப்போ.... இவர்களின் பங்கு இவ்வளவுதானா? இவர்களால் மக்களை ஒருஙகிணைக்க முடியவில்லையா? இவர்களா தமிழ்த்தேசியத்தை கட்டியெழுப்ப போகிறார்கள்? எதற்கு அந்தப்பெயரை இவர்கள் தங்கள் உரிமையாக கட்டி வைத்திருக்கிறார்கள்> கஜேந்திரகுமாருக்கு பயந்து சொன்னாரா? 

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் தமிழர்களின் பிரதேசங்களில் தொல்லியல் திணைக்கள செயற்பாடுகள் குறித்து டக்ளஸ் அமைச்சரவையில் எடுத்துரைப்பு

Published By: DIGITAL DESK 3

08 AUG, 2023 | 02:29 PM
image
 

தொல்லியல் திணைக்களத்தின் ஆய்வுகளும் அடையாளப்படுதல்களும் இந்த நாட்டில் வாழுகின்ற அனைத்து மக்களினதும் கலாசார தொன்மைகளையும் வரலாறுகளையும் பேணிப் பாதுகாப்பதாக அமைய வேண்டுமே தவிர, எரியும் நெருப்பிற்கு எண்ணை ஊற்றுவதாக அமையக் கூடாது என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் திங்கட்கிழமை (07) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்திலேயே கடற்றொழில் அமைச்சர், தன்னுடைய கருத்துக்களை பதிவு செய்துள்ளார்.

சுழிபுரம் பறாளை முருகன் ஆலயம் உட்பட யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசங்கள் 3 தொல்லியல் திணைக்களத்திற்கு உரிய பகுதியாக அண்மையில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளமையை சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த பகுதிகளை தொல்லியல் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தும் செயற்பாடானது உரிய வழிமுறைகளை பின்பற்றப்படாமல் மேற்கொள்ளப்பட்டிருப்பதை தன்னால் அறிந்து கொள்ளக் கூடியதாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டில், அனைத்து மக்களும் கௌரவமான உரிமைகளை பெற்று வாழும் சூழலை உறுதிப்படுத்துவதன் மூலம் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு தற்போதைய ஜனாதிபதியும் அரசாங்கமும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற சூழலில், குறுகிய நலன்களுக்காக  சிலரினால் முன்னெடுக்கப்படுகின்ற இவ்வாறான விடயங்கள் வேதனைக்குரியவை எனவும் சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தேசிய நல்லிணக்கத்தினை அடிப்படையாகக் கொண்ட இணக்க அரசியல் என்பது, இருப்பவற்றை பாதுகாத்து முன்னோக்கி நகர்வதாகவும் பிரச்சினைகளை இலகுவாக தீர்ப்பதற்கான பொறிமுறையாகவும்  இருக்க முடியுமே தவிர, தவறான நடவடிக்கைகளை கண்டுகொள்ளாமல் கடந்து செல்வதாக இருக்க முடியாது எனவும் வலியுறுத்தியுள்ளார்.

கடற்றொழில் அமைச்சரின் கருத்துக்களை அமைச்சரவை ஏற்றுக்கொண்ட நிலையில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, குறித்த விடயம் தொடர்பாக தொடர்ந்தும் அமைச்சரவைகளில் கலந்துரையாடி சரியான தீர்மானங்களை மேற்கொள்வதன் ஊடாக தவறுகள் இடம்பெற்று இருப்பின் திருத்திக் கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/161882

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.சுழிபுரம் முருகன் ஆலய வர்த்தமானி விவகாரம்! மௌனம் காத்த அமைச்சர் - ரணில் வழங்கிய உறுதிமொழி

5 மணி நேரம் முன்

 

யாழ்ப்பாணம், சுழிபுரம் - பறாளாய் முருகன் ஆலயத்திலுள்ள அரச மரத்தை தொல்பொருள் சின்னமாக அறிவித்து வெளியான வர்த்தமானி தொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தில் ஆராயப்பட்டது.

இதன் போது துறைசார் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க மௌனம் காத்ததுடன் இது தொடர்பில் கவனம் செலுத்துவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தெரிவிக்கையில்,

"வரலாற்றுப் பேராசிரியர்கள் உள்ளிட்ட பலருடனும் இது தொடர்பில் கலந்துரையாடினேன். அது சங்கமித்தையால் நடப்பட்டது என்பது தவறான தகவல் எனக் குறிப்பிட்டனர்" என்பதையும் அமைச்சர் டக்ளஸ் அமைச்சரவையில் சுட்டிக்காட்டினார்.

யாழ்.சுழிபுரம் முருகன் ஆலய வர்த்தமானி விவகாரம்! மௌனம் காத்த அமைச்சர் - ரணில் வழங்கிய உறுதிமொழி | Cabinet Regarding Murugan Temple Gazette

பாதிக்கப்படும் இன ஐக்கியம்

"நாட்டில் இன ஐக்கியம் தொடர்பில் பேசப்பட்டு வருகின்றது. ஆனால், தொல்பொருள் திணைக்களத்தின் இவ்வாறான செயற்பாடுகளால் இன ஐக்கியம் பாதிக்கப்படும் நிலைமை ஏற்படுகின்றது" என்றும் அமைச்சர் டக்ளஸ் குறிப்பிட்டார்.

அமைச்சர் டக்ளஸ் வர்த்தமானி தொடர்பில் பேசும்போது அமைச்சரவையில் கலந்துகொண்ட துறைசார் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க மௌனம் காத்தார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இது தொடர்பில் கவனம் செலுத்தி ஆராய்வதாகத் தெரிவித்தார்.

இதேவேளை, யாழ்ப்பாணம் - சுழிபுரம், பறாளாய் முருகன் ஆலயத்தில் உள்ள அரச மரத்தை சங்கமித்தை வந்து இறங்கிய பின் அவருடன் தொடர்புபட்ட மரமாக சித்திரித்து வர்த்தமானி வெளியிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் குறித்த அரச மரத்தை தொல்பொருள் சின்னமாக அறிவித்து வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதால், எதிர்காலத்தில் அரச மரத்தை தொல்பொருள் திணைக்களத்தினர் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம் என அப்பகுதி மக்களிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதே வேளை கடந்த வருடம் 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15ஆம் திகதி தேரர்கள் சிலர் ஆலயத்திற்கு வந்து சென்ற நிலையில், ஆலய அரச மரத்தின் கீழ் புத்தர் சிலையை வைத்து பிரித் ஓத முனைப்பு காட்டி இருந்த போது இதற்கு பக்தர்கள் மற்றும் ஊரவர்கள் எதிர்ப்புத் தெரிவித்திருந்ததால், தேரர்கள் அங்கிருந்து வெளியேறி இருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

https://tamilwin.com/article/cabinet-regarding-murugan-temple-gazette-1691525535

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.