August 8, 20232 yr கருத்துக்கள உறவுகள் குருந்தூர் மலையினை தமது புராதன மதஸ்த்தலம் என்று நிறுவும் பல்கலைக்கழகங்கள் இலங்கையின் ஐந்து பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள் இணைந்து குருந்தூர் மலை தொடர்பான பெளத்த சிங்கள வராலாற்று ஆராய்ச்சிகள் என்கிற பெயரில் உத்தியோகபூர்வ ஆவணம் ஒன்றை வெளியிட்டிருக்கின்றன. கொழும்பில் இடம்பெற்ற இந்த ஆவண வெளியீட்டு நிகழ்வில் அதி தீவிர சிங்கள பெளத்த இனவாதிகளும், முன்னணி இனவாதப் பிக்குவான எல்லே குணவன்ச போன்றோருடன் குருந்தூரை ஆக்கிரமித்து நிற்கும் பிக்குகள் குழுவும் முன்னாள் நல்லிணக்க அரசின் ஜனாதிபதி மைத்திரியும் கலந்துகொண்டிருந்தனர். Edited August 8, 20232 yr by ரஞ்சித்
August 8, 20232 yr கருத்துக்கள உறவுகள் இந்த படத்தில் உள்ள அநேகமானோர் சிங்கள பேராசிரியர்கள், மூத்த அரசியல் வாதிகள் , செல்வந்தர்கள் போன்றவர்களே. சில வேளைகளில் நாம் நினைப்பதுண்டு , படிக்காத சிங்கள மக்களைத்தான் இனவாதிகள் என்று. அனால் இப்போது நாட்டில் பிச்சை எடுத்துகொண்டுதிரிந்தாலும், மேல் மடத்தில் உள்ளவர்கள் முதல் கீழ் மடடம வரைக்கும் இனவாதத்தினால் நிறைந்து இருக்கிறார்கள். அதில் உள்ள கலாநிதி அமரசேகரா போன்றவர்கள் மரண தருவாயில் இருந்தாலும் இன்னும் அந்த இனவாதத்தின் உறுதியாக இருக்கிறார். சாது சாது.
August 8, 20232 yr கருத்துக்கள உறவுகள் 29 minutes ago, Cruso said: , படிக்காத சிங்கள மக்களைத்தான் இனவாதிகள் என்று இல்லை. படித்தவர்களும் அரசியல் வாதிகளும் பிக்குகளும் இனவாதம் பேசி ஏழை மக்களுக்கு புகுத்துகின்றனர், ஏனெனில் அவர்களுக்கு வரலாறு தெரியாததால்.
August 8, 20232 yr கருத்துக்கள உறவுகள் 2 hours ago, ரஞ்சித் said: குருந்தூர் மலையினை தமது புராதன மதஸ்த்தலம் என்று நிறுவும் பல்கலைக்கழகங்கள் புது மாத்தாளன் பகுதியில் சிறிய விகாரை கட்டி முடிக்கப்பட்டு விட்டது தெரிவிப்பது நாங்கள் தீர்மானிப்பது நீங்கள்
Archived
This topic is now archived and is closed to further replies.