Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

PET-scan.jpg

மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் PET ஸ்கேன் பரிசோதனைகள் இடைநிறுத்தப்பட்டு மூன்று மாதங்கள் கடந்துள்ளதாக அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

PET ஸ்கேன் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான மருந்தினை விநியோகிப்பதற்கு சுகாதார அதிகாரிகள் அசமந்தம் காட்டுவதாக சங்கத்தின் தலைவர் சானக தர்மவிக்ரம தெரிவித்துளார்.

அந்த மருந்தினை விநியோகிப்பதற்கு விலைமனு கோரல் மூலம் நிறுவனமொன்றுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள போதிலும், அந்நிறுவனம் மருந்தினை இதுவரை வழங்காதுள்ளது. தற்போது இலங்கையில் தேசிய வைத்தியசாலை மற்றும் மஹரகம புற்றுநோய் வைத்தியசாலை ஆகியவற்றில் மாத்திரமே PET ஸ்கேன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மஹரகம வைத்தியசாலையில் PET ஸ்கேன் சோதனைகள் முடங்கியுள்ளதால், தேசிய வைத்தியசாலையில் மாத்திரமே அந்த பரிசோதனை முன்னெடுக்கப்படுவதாகவும் இதன் காரணமாக பெட் ஸ்கேன் சோதனைகளை மேற்கொள்வதற்கு நோயாளர்கள் 06 மாதங்கள் காத்திருக்க வேண்டியேற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

https://thinakkural.lk/article/267906

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வடக்குக் கிழக்கில் கட்டிற புத்தகோவில்களுக்கு ஆகிற செலவுகளையும் வடக்குக் கிழக்கு தமிழர் பிரதேசங்களை ஆக்கிரமித்து நிற்க பயன்படும் சிங்கள பெளத்த பொலிஸ் படை மற்றும் முப்படைக்கு ஆகும் செலவினங்களையும்.. அப்பாவி ஏழை எழிய மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தப் பயன்படுத்தலாமே..??!

  • Like 1


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.