Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கொழும்பிலுள்ள வீட்டுக்கு முன்பாக பௌத்த குருமார் சிலர் போராட்டம் நடத்தியமை குறித்துப் பிரதான சிங்கள - அரசியல் கட்சிகள் கண்டனம் வெளியிட்டதாகத் தெரியவில்லை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கொழும்பிலுள்ள வீட்டுக்கு முன்பாக பௌத்த குருமார் சிலர் போராட்டம் நடத்தியமை குறித்துப் பிரதான சிங்கள - அரசியல் கட்சிகள் கண்டனம் வெளியிட்டதாகத் தெரியவில்லை.
கொழும்பில் உள்ள பிரதான சிங்கள - ஆங்கில நாளிதழ்கள், செய்தி இணையங்கள் பிரதான சிங்கள இலத்திரனியல் ஊடகங்கள் செய்தி வெளியிடவில்லை.
மாறாகப் பௌத்த சமயத்துக்கு வடக்குக் கிழக்கில் தமிழ்ப் பயங்கரவாதிகளும் தமிழ்த்தேசியக் கட்சிகளும் தடை விதிப்பதாக பௌத்த குருமார் கூறுகின்ற திரிபுபடுத்தப்பட்ட கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றன.
குறிப்பிட்ட சில சிங்கள - ஆங்கில மாற்று ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டாலும், அதன் சிங்கள வாசகர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகும்.
சில பிரதான சிங்கள ஊடகங்கள் வடக்குக் கிழக்கில் பௌத்த குருமாரின் ஆக்கிரமிப்புகள், பௌத்த மயமாக்கல் போன்ற செய்திகளைத் திரிபுபடுத்தி, பௌத்தர்கள் அங்கிருந்து வெளியேற்றப்படுகின்றனர் என்ற தொனியிலேயே செய்திகள், செய்திக் கட்டுரைகளை பிரசுரிக்கின்றன.
கொழும்பில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு முன்பாகப் போராட்டம் நடத்தப்படும் எனவும் முதற் கட்டமாக கஜேந்திரகுமாரின் வீட்டுக்கு முன்பாகப் போராட்டம் இடம்பெறும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பில சமீபத்தில் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இப் பின்புலத்திலேயே வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டிருக்கிறது.
போர் மற்றும் சமாதானப் பேச்சுக் காலங்களில் பிரதான சிங்கள - ஆங்கில ஊடகங்கள் திரிபுபடுத்தி வெளியிட்ட செய்திகள், செய்திக் கட்டுரைகள் ஏராளம்.
ஆகவே இலங்கைத்தீவில் எண்பது வருடங்களாகத் தொடரும் இன முரண்பாட்டுக்கு நிரந்தரத் தீர்வு ஏற்பட வேண்டுமானால் முதலில் சிங்கள - ஆங்கில ஊடகங்கள் மகாவம்ச மன நிலையில் இருந்து வெளிவர வேண்டும்.
சிங்கள - ஆங்கில ஊடகங்கள் போன்று முழுப் பூசனிக் காயைச் சோற்றில் மறைக்கும் ஊடகவியல் பண்பு பிரதான தமிழ் ஊடகப் பரப்பில் இல்லை.
முகவரியில்லாத, ஊடக ஒழுக்க விதிகள் புரியாத சில தமிழ்ச் செய்தி இணைங்கள் மற்றும் சமூகவலைத்தளத் தொலைக் காட்சிகள் (you Tube) பற்றி இங்கு ஒப்பிட்டுக்கூற விரும்பவில்லை. இவற்றில் ஒழுக்க விதிகளைப் பேணுகின்ற you Tube செய்தித் தளங்களும் இல்லாமலில்லை.
ஆனால் பிரதான தமிழ் நாளிதழ்கள் அந்த நாளிதழ்களின் செய்தி இணையங்கள், you Tube தளங்கள் மாத்திரமே குறிப்பிடத்தக்க பொறுப்புடன் செயற்படுகின்றன.
இருந்தாலும் இனப் பிரச்சினைத் தீர்வு விவகாரத்தில் ஆழமான செய்திகள், செய்திக் கட்டுரைகள். ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் புவிசார் அரசியல் - பொருளாதார ஆக்கங்கள் பிரதான தமிழ் நாளிதழ்களில் மிகக் குறைவு. இல்லையென்றே சொல்லலாம்.
உலக அரசியல் ஒழுங்கு பற்றிய புரிதல், அது குறித்த வாசிப்பு தமிழ்ப் பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்கள் சிலரிடம் இருப்பதாகவும் தெரியவில்லை.
அ.நிக்ஸன்-
பத்திரிகையாளர்
ஊடக விரிவுரையாளர்
கொழும்பு-06
  • கருத்துக்கள உறவுகள்

 

இது இன்று நடைபெற்ற அச்சுறுத்தல் நடவடிக்கை.

நன்றி-யூரூப்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கொழும்பிலுள்ள வீட்டுக்கு முன்பாக பௌத்த குருமார் சிலர் போராட்டம் நடத்தியமை குறித்துப் பிரதான சிங்கள - அரசியல் கட்சிகள் கண்டனம் வெளியிட்டதாகத் தெரியவில்லை.
கொழும்பில் உள்ள பிரதான சிங்கள - ஆங்கில நாளிதழ்கள், செய்தி இணையங்கள் பிரதான சிங்கள இலத்திரனியல் ஊடகங்கள் செய்தி வெளியிடவில்லை.

தமிழ் அரசியல்வாதிகள் இந்து கம்மன்பிலவுடைய அறிவிப்பு வந்தவுடன் நாடாளுமன்றிலேயே ஒரு கவனயீர்ப்பைக் குறைந்தது அனைத்துத் தமிழ்க்கட்சிகளும் இணைந்து செய்திருக்க வேண்டாமா? அப்டிச் செய்திருந்தால் குறைந்தப்பட்சம் தூதுவர்களது கண்ணிலாவதுபட்டிருக்கும். ஆனால் தமிழ்த்தேசியக் கட்சிகளே க.பொ. தானேயென்று கலைந்து சென்றுவிட்டன. இதில் எப்படிப் பௌத்த சிங்கள பேரினவாதக் கட்சிகள் மற்றும் ஊடகங்கள் பேசும். அவர்களது நோக்கமே மிச்சமிருக்கும் நியாயம் கேட்போரை இல்லாமற் செய்வதே.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மிகவும் நன்றாக அறியப்பட்ட, கடந்தகாலத்தில் தம்முடன் இணைந்து பணியாற்றிய, சரி தேர்தல் காலத்தில் தமக்கு எதிரெதிராக நின்றிருந்த ஒரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு சிறு பிரச்சனை வந்திருக்கு, என்னவிருந்தாலும் ஒரு ஊடக் அறிக்கையையாவது போலியான மனநிலையிலாவது வெளியிடவேண்டும் எனச் சக தமிழ் நாடாளுமன்ற அங்கத்தவர்களுக்கும் தமிழ்த்தேசியம்பற்றி வாய்கிழியப்பேசும் தமைழ்த் தலைமைகளுக்கும் எண்ணம் ஏற்படவில்லையே. விடையம் இப்படி இருக்கையில் நாடாளுமன்றத்தின் மற்றய கட்சியின் உறுப்பினர்கள் குரல் கொடுப்பார்கள் என எப்படி எதிர்பார்ப்பது?

நான் நினைக்கிறேன் சக தமிழ் அரசியல்வாதிகள் அவருக்ககக் கண்டனக் குரல் கொடுப்பதால் தமிழ் வாக்காளர்கள் மத்தியில் அவருக்கான செல்வாக்கு அதிகரித்துவிடும் எனும் பயமாகவேனும் இருக்கலாம்.

தவிர ஏற்கனவே சிங்களவர்கள் திட்டமிட்டே கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை எதிர்கிறார்கள் இதன் காரணமாக தமிழ்தேசியக் கூட்டமைப்பையும் பிற தமிழ் தேசியம் பேசும் கட்சிகளையும் நலிவடையச்செய்து பிரித்தாளும் தந்திரத்தை உபயோகிக்கிறார்கள் எனச்சொல்வதுண்டு.

என்ன இருந்தாலும் கஜேந்திர குமார் பொன்னர் இதை விரும்பவே செய்வார் எப்போதாவது வரப்போகும் தேர்தலில் ஒரு சீற்றும் ஒரு போணசும் மிஞ்சும் என நிம்மதியாக இருப்பார் என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
On 26/8/2023 at 14:00, Elugnajiru said:

ஒரு மிகவும் நன்றாக அறியப்பட்ட, கடந்தகாலத்தில் தம்முடன் இணைந்து பணியாற்றிய, சரி தேர்தல் காலத்தில் தமக்கு எதிரெதிராக நின்றிருந்த ஒரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு சிறு பிரச்சனை வந்திருக்கு, என்னவிருந்தாலும் ஒரு ஊடக் அறிக்கையையாவது போலியான மனநிலையிலாவது வெளியிடவேண்டும் எனச் சக தமிழ் நாடாளுமன்ற அங்கத்தவர்களுக்கும் தமிழ்த்தேசியம்பற்றி வாய்கிழியப்பேசும் தமைழ்த் தலைமைகளுக்கும் எண்ணம் ஏற்படவில்லையே. விடையம் இப்படி இருக்கையில் நாடாளுமன்றத்தின் மற்றய கட்சியின் உறுப்பினர்கள் குரல் கொடுப்பார்கள் என எப்படி எதிர்பார்ப்பது?

 

இது இவ்விடத்தில் தேவையில்லாத ஆணிதான்....சொல்ல வேண்டியதை சோலிமுடிக்கின்றேன்...அண்மையில் கனடாவில் நடந்த தெருத்திருவிழாவில்...கண்டதும் வேதனைப்பட்டதும்...மலையக மகள்.. எங்களவள்தான்...ஒரு பூத் வாடகைக்கு எடுத்து..உண்டியல் குலுக்கும் நம்மவர்...நாட்டிலே காணாமல் ஆக்கப்ப்ட்டு...அங்கம் இழந்த போராளிகளூக்கு ஒரு பூத் திறந்து உண்டியல் குலுக்கலாமே...போதாக்குறைக்கு இளம்சந்ததியை..சினிமாமோகத்தில் இழுத்த்விடும் நிலையும் ஏற்படுகிறார்கள்.. மனோகணேசனை அழித்து ஆரத்தி எடுத்து ஆலவட்டம் பிடிக்கிறார்கள்.....  மனோகணேசன் 2009 பிற்பாடு கதைத்த கதையும் ..நல்லாட்சியில் நம்மினத்தை நாய்க்கு சமனாக..படுத்தியபாடும் மறக்கமுடியுமா...இப்போ கனடாவில் எம்ஜிஆராக வலம்  வந்து திரிகிறார்..சேர்ந்து போட்டோ எடுக்காத நம்ம சனமே இல்லை...ப இவர் இங்கு வந்ததே ரணிலின் அம்பாக....அம்ம்பு தன் வேலையைகாட்டத்தொடங்கிவிட்டது...பாவம் இனி சி ரிசி....போதாக்குறைக்கு...முசுலிமூகள்   பூத்துவைத்து ..நாம் தமிழர்..( கனடாவில் மட்டும்தான்...இலங்கையில்  வேறுமுகம்)>.பூத்தை எட்டிப்பார்த்தபோது ..இந்த மூறை புலிப்படுகொலை புத்தகங்கள்  நேரடியாக இல்லை..ஆனால் சிறுகதகளில் செருகல்லகள்   நிறைய இருக்கு...இவைக்கு ஆதரவு நம்ம சம்பந்து அய்யாவின் வலதுகை உதவிபோல...அவருடைய புத்தகம் இலவசம்...இந்த மிகப்பெரும் சனத்தொகை விழாவை குழப்ப இரண்டுபக்கமும் முனைகினம்..வெற்றியும் அடைவினம்...இப்ப அவையின் நிலைப்படு..ஊடுருவி பதவிபெறுவதே...இதையெல்லம் நம்ம சனம் பெரிதாக எடுக்காது ...கொத்துரொட்டியும் அயிசுக்கிறீமும்  சாப்பிடுவதில் பிசியாக இருந்தால் காணும் ...இதுவும்  கஜேந்திரகுமாருக்கு நடப்பதுபோலத்தான் ..இங்கு கனடாவில் நம்ம இனத்துக்கு நடக்கும்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.