Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

Published By: VISHNU

05 SEP, 2023 | 07:53 PM
image
 

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

2023 கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சை தீர்மானிக்கப்பட்டதன் பிரகாரம் நவம்பர் 27ஆம் திகதி ஆரம்பிக்கப்படும். அதில் மாற்றம் செய்ய முடியாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (5) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (5) நிலையியற் கட்டளை 27இன் 2கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து பதிலளிக்கையில்,

இம்முறை கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையை எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதி முதல் டிசம்பர் 21ஆம் திகதி வரை நடத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதற்கிணங்க விடைத்தாள் திருத்தும் நடவடிக்கைகள் அடுத்த வாரத்திலேயே ஆரம்பிக்கப்படும்.

அதற்காக பாடசாலை விண்ணப்பதாரிகள் 268, 625 பேரும் தனிப்பட்ட விண்ணப்பதாரிகள் 55, 288 பேரும் விண்ணப்பித்துள்ளார்கள்.

அந்த வகையில் மொத்தமாக 3 லட்சத்து 23 ஆயிரத்து 913 பேர் விண்ணப்பித்துள்ளார்கள்.

கடந்த வருடத்தில் இந்த பரீட்சைக்காக 3 இலட்சத்து 31 ஆயிரம் பேர் தோற்றினார்கள். கடந்த வருடத்தை போன்று சமமான மாணவர்கள் இம்முறையும் விண்ணப்பித்துள்ளார்கள். அதனால் பரீட்சைக்கு மாணவர்கள் தயாராக இருக்கின்றார்கள் என்பதே இதன் மூலம் புரிந்துகொள்ள முடியும்.

அத்துடன் இம்முறை உயர்தர பரீட்சையை காலம் தாழ்த்தி ஜனவரி மாதத்தில் நடத்துமாறு சில தரப்பினர் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். 

எனினும் அவ்வாறு காலதாமதம் செய்தால் மேலும் ஒரு மாத காலத்திற்கு பாடசாலை விடுமுறை வழங்க வேண்டிவரும். நவம்பரில் பரீட்சையை நடத்துவதன் மூலம் டிசம்பர் மாத விடுமுறை அதில் அடங்குவதால் மேலதிகமாக பாடசாலைகள் விடுமுறை வழங்கவேண்டி ஏற்படுவதில்லை.

அத்துடன் சாதாரண பரீட்சை பெறுபேறு வெளியாகி உயர்தர கல்வியை தொடர்வதற்காக இந்த வருடம் 343 நாட்கள் பாடசாலை இடம்பெற்றிருக்கின்றன.

அந்த காலப்பகுதிக்குள் உயர்தர பாட திட்டத்தை முடித்துக்கொள்ள முடியும். அதனை கருத்திற்கொண்டே உயர் தர பரீட்சையை நவம்பர் மாதம் 27ஆம் திகதி ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்தோம். எனவே  நிர்ணயிக்கப்பட்ட திகதியில் உயர்தர பரீட்சையை நடத்துவதன் மூலம் மாணவர்களுக்கு எந்த அநீதியும் ஏற்படப்போவதில்லை என்றார்.

https://www.virakesari.lk/article/163914

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

உயர்தரப் பரீட்சை பிற்போடப்படுமா?

news-07.jpg

எதிர்வரும் நவம்பர் மாதம் 27 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள உயர் தரப் பரீட்சை தொடர்பில் தீர்மானம் மேற்கொள்வதற்கு பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்திற்கு அதிகாரம் உள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றில் இன்று தெரிவித்தார்.

2022ஆம் ஆண்டு உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் தாமதமாகி வெளியானதால், 2023 ஆம் ஆண்டு உயர் தரப்பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு அநீதி ஏற்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன சுட்டிக்காட்டினார்.

எனவே, இந்த வருடத்தில் நவம்பர் மாதம் 27 ஆம் திகதி திட்டமிட்டுள்ள உயர் தரப்பரீட்சையை அடுத்த வருடம் ஜனவரி மாதம் 22ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி வரையில் நடத்த முடியும் என அவர் யோசனை முன்வைத்தார்.

அதன்பின்னர் பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி முதல் பாடசாலைகளின் முதலாம் கட்ட கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடியும்.

குறித்த பரீட்சை பெறுபேறுகள் மூன்று மாத காலப்பகுதிக்குள் வெளியிடப்படுமானால், அடுத்த வருடம் ஒக்டோபர் மாதம் முதல் வழமையான வகையில் உயர் தரப்பரீட்சையை நடத்த முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த கல்வியமைச்சர் குறித்த யோசனை பரீட்சைகள் ஆணையாளருக்கு அனுப்பப்படுவதுடன், அவர் இது தொடர்பான இறுதி தீர்மானத்தை எடுப்பார் எனவும் குறிப்பிட்டார்.

https://thinakkural.lk/article/273691

  • கருத்துக்கள உறவுகள்
Posted

2023 ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை மீண்டும் ஒத்திவைப்பு !

21 SEP, 2023 | 10:28 AM
image
 

2023 ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த சபையில் அறிவித்தார்.

அதன் படி பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மாற்றுத் திகதிகளை அடுத்த வாரம் அறிவிப்பார் எனவும் கல்வி அமைச்சர் சுசில் மேலும் தெரிவித்தார்.

இந்த வருட இறுதியில் நடத்த திட்டமிட்டிருந்த க.பொ.த. உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு விடுக்கப்பட்டுள்ள முறைப்பாடுகளை கருத்தில் கொண்டு மீண்டும் பிற்போட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/165071

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒரு நாட்டின் இளைய தலைமுறையில் தலைவிதியை தீர்மானிக்கும் பரீட்சைக் கூட கிரமமாக நடத்த முடியாத நாடு.. எப்படி உருப்படும்..??!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சாதாரண தரப் பரீட்சைகளும் ஒத்திவைக்கப்படக் கூடும் ?

Published By: DIGITAL DESK 3

23 SEP, 2023 | 07:49 PM
image
 

(எம்.மனோசித்ரா)

கல்வி அமைச்சிடம் பல்வேறு தரப்பினராலும் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கமைய இவ்வாண்டுக்கான கல்விப்பொதுத் தராதர உயர்தர பரீட்சைகளை ஒத்தி வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக 2024 பெப்ரவரியில் நடத்த திட்டமிட்டிருந்த கல்விப்பொதுத்தராதர சாதாரணதர பரீட்சைகளும் ஒத்தி வைக்கப்பட கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகளை (2023 கல்வியாண்டுக்கான) எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதி முதல் டிசம்பர் 21ஆம் திகதி நடத்த தீர்மானித்துள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. 

எனினும், கடந்த 4ஆம் திகதி உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து பரீட்சையை ஒத்தி வைக்குமாறு பல்வேறு தரப்பினராலும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவிக்கையில்,

கடந்த ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியானதைத் தொடர்ந்து, இவ்வாண்டுக்கான உயர்தர பரீட்சைகளை குறுகிய காலம் ஒத்தி வைக்குமாறு பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. 

நகர பிரதேசங்களைப் போன்றல்லாமல், கிராமங்களிலுள்ள பாடசாலைகளில் பாத்திட்டங்கள் முழுமையாக நிறைவு செய்யப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது மாத்திரமின்றி பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதில் ஏற்பட்ட கால தாமதம் காரணமாக மீண்டும் பரீட்சைக்கு தோற்ற எதிர்பார்த்திருந்தவர்களுக்கு அதற்கு தயாராவதற்கு காலம் போதாது என்ற விடயமும் தெரிவிக்கப்பட்டது. பரீட்சையை ஒத்தி வைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டதே தவிர, திட்டமிட்ட படி பரீட்சைகளை நடத்துமாறு எவராலும் வலியுறுத்தப்படவில்லை.

பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டு சுமார் 3 மாதங்களின் பின்னரே அடுத்த பரீட்சையை நடத்த முடியும். இதனை அடிப்படையாகக் கொண்டு மீண்டும் பரீட்சைக்கு தோற்ற எதிர்பார்த்துள்ள 18 000க்கும் அதிகமான விண்ணப்பத்தாரர்களின் சார்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. நீண்ட காலம் ஒத்தி வைக்கப்படாமல், குறுகிய கால இடைவெளிக்குள் மீண்டும் பரீட்சைக்கான புதிய திகதிகள் அறிவிக்கப்படும். எது எவ்வாறிருப்பினும் அடுத்த வருடம் உரிய காலத்துக்குள் சகல பாடங்களையும் நிறைவு செய்வதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றார்.

https://www.virakesari.lk/article/165281

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

க.பொ.த. உயர்தர பரீட்சைக்கான புதிய திகதிகள் அறிவிப்பு

Published By: VISHNU

04 OCT, 2023 | 07:07 PM
image
 

(எம்.மனோசித்ரா)

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகளுக்கான (2023 கல்வியாண்டு) புதிய திகதிகள் புதன்கிழமை (4) இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய 2024 ஜனவரியில் பரீட்சைகள் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2024 ஜனவரி 4ஆம் திகதி பரீட்சைகள் ஆரம்பமாகி 31ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இந்த பரீட்சைகளில் தோற்றுவதற்கு எதிர்பார்த்துள்ள பரீட்ச்சார்த்திகள் வெள்ளிக்கிழமை முதல் (6) எதிர்வரும் 10ஆம் திகதி நள்ளிரவு வரை விண்ணப்பிக்க முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய இலங்கை பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk  அல்லது www.onlineexams.gov.lk/eic  என்ற இணைய தளங்களுக்குள் பிரவேசித்து விண்ணப்பிக்க முடியும். மேலதிக தகவல்களை 011 2786200 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு அழைத்து அறிந்து கொள்ள முடியும்.

இவ்வாண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகளை  நவம்பர் 27ஆம் திகதி முதல் டிசம்பர் 21ஆம் திகதி நடத்த ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும் அண்மையில் கடந்த ஆண்டுக்கான உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டதையடுத்து இந்த திகதிகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சரால் அறிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தற்போது புதிய திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்தோடு இவ்வாண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சைகளும் இதனால் தாமதமடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

https://www.virakesari.lk/article/166107



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.