Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத் தமிழர்கள் மீதான இலங்கை முஸ்லிம்களின் அட்டூழியங்கள் | ஆவணக்கட்டு

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

செய்திகள்

 

  • நாளேடு: ஈழநாதம்
  • திகதி: 28/06/1990
  • பக்கம்: 1

 

கல்முனையில்‌ தமிழர்‌ படுகொலை 75ஆக உயர்வு

(கல்முனை)

கல்முனையில்‌ ஜிகாத்‌ இயக்‌கத்தினரும்‌ சிறிலங்கா இராணுவத்தினரும்‌ சேர்ந்து படுகொலை செய்த தமிழரின்‌ எண்ணிக்கை எழுபத்‌தைந்தாக உயர்ந்துள்ளது.

இவர்கள்‌ நடுவீதியில்‌ நிறுத்திவைத்து சுட்டுக்‌ கொன்றுள்ளனர்‌. இச்சம்பவம்‌ கடந்த இருபத்‌திதான்காம்‌ திகதி நடைபெற்‌றதாக அங்கிருந்து கிடைத்துள்ள செய்திகள்‌ தெரிவிக்‌கின்றன.

(லோ)

*****

 

Edited by நன்னிச் சோழன்

  • Replies 168
  • Views 13.5k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    முன்னுரை     தமிழீழத்தின் சுதந்திரத்திற்கான விடுதலைப் போராட்டத்தில் சிங்கள அரசின் படைத்துறை இயந்திரத்தின் கைகளால் தென் தமிழீழ தமிழ் மக்கள் பட்ட துன்பங்களும் துயரங்களும் சொல்லொணாதவை. 

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    இலங்கை  முஸ்லீம்கள்… ஈழத்தமிழர் மீது கட்டவிழ்த்து விட்ட அட்டூழியங்களை ஆவணப் படுத்தும் உங்கள் செயலுக்கு மிக்க நன்றி  நன்னிச்சோழன். 🥰 👍🏽 🙏

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    நிகழ்படங்கள் படுகொலை சாட்சிகள்    முஸ்லிம்களாலும் சிங்களப் படையினராலும் வீரமுனையில் நடைபெற்ற படுகொலைகள் தொடர்பான கண்கண்ட மற்றும் பிற சாட்சிகளின் வாக்குமூலப் பதிவு: இதில் தோன்றி நல்லவர் வேடமிட்டு முஸ்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

செய்திகள்

 

  • நாளேடு: ஈழநாதம்
  • திகதி: 01/07/1990
  • பக்கம்: 1

 

100 தமிழர்கள் கைது

யாழ்ப்பாணம், சூலை 1

கடந்த புதனன்று காலையில் கல்முனை, மருதமுனையைச் சுற்றி வளைத்த சிறிலங்கா அதிரடிப்படையினர் அங்கு தஞ்சம் புகுந்திருந்த சுமார் நூறு தமிழர்களை ஜிகாத் அமைப்பினைச் சேர்ந்தவர்களின் உதவியுடன் கைது செய்தனர்.

(உ)

 

*****

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

செய்திகள்

 

  • நாளேடு: ஈழநாதம்
  • திகதி: 08/07/1990
  • பக்கம்: 1

 

தமிழர்‌ மீது ஜிகாத்‌ தாக்கு

(சிலாவத்துறை) 

மன்னார்‌ மாவட்டத்தில்‌ உள்ள சிலாவத்துறைப் பகுதியில்‌ உங்களால்‌ தான் பிரச்சினை எனக்கூறி சில முஸ்லிம்கள்‌ தமிழ்‌ மக்களைத் தாக்குவதாக செய்திகள்‌ தெரிவிக்கின்றன.

இவ்வாறு தாக்குபவர்கள்‌ ஜிகாத் இயக்கத்தைச்‌ சேர்ந்தவர்கள்‌ எனவும்‌ தெரியவருகிறது. அத்தோடு தமிழ்‌ மக்களின்‌ சொத்துக்களும்‌ சூறையாடப்‌படுவகாகத் தெரிகின்றது.

 



 

  • நாளேடு: உதயன்
  • திகதி: 08/07/1990
  • பக்கம்: 1

 

டயர்‌ போட்டு முஸ்லிம்களும்‌ எரிக்கப்பட்டதாகத்‌ தகவல்‌ 

யாழ்ப்பாணம்‌, ஜூலை 8

கடந்த வியாழனன்று திருக்கோணமலை மாவட்டம்‌ கந்‌தளாயில்‌ விடுதலைப்‌ புலிகளின்‌ ஆதரவாளர்களான 12 முஸ்லிம்களையும்‌, 12 தமிழர்‌களையும்‌, முஸ்லிம்‌ ஊர்காவல்‌ படையினரும்‌, இராணுவத்தினரும்‌ சேர்ந்து சுட்டுக்‌ கொலை செய்த பின்னா்‌ டயர்‌ போட்டு எரித்துள்ளனர்‌.

விடுதலைப்‌ புலிகள்‌ வட்‌டாரங்கள்‌ இத்தகவலைத்‌ தெரிவித்தன.

அங்கு வியாழனன்று விடுதலைப்‌ புலிகளுக்கு உதவி செய்ததாகக்‌ கூறி இளம்‌பெண்‌ ஒருவரை இராணுவத்‌தினர்‌ கைது செய்து தமது முகாமுக்குக்‌ கொண்டுசென்‌றதாகவும்‌ --

இதுவரை இவர்பற்றிய தகவல்களை அறிய முடியவில்லை என்றும்‌ தெரிவிக்‌கப்பட்டது.

வெள்ளிக்கிழமையன்று கிண்‌ணியாவில்‌ ஆறு அப்பாவித்‌ தமிழர்களை முஸ்லிம்‌ ஊர்‌காவல்‌ படையினரும்‌ இராணுவத்தினரும்‌ சேர்ந்து உயிருடன்‌ டயர்‌ போட்டு எரித்‌ததாகவும்‌ விடுதலைப்‌புலிகள்‌ வட்டாரங்கள்‌ தெரிவித்தன.

இதேவேளை -- 

ஆலங்கேணிப்‌ பகுதியில்‌ வெளியேறிய தமிழர்களின்‌ வீடுகளில்‌ இருந்த பொருள்‌ அனைத்தையும் கிண்ணியாவிலிருந்து வந்த முஸ்லிம் காடையர்கள் சிலர்‌ கொள்ளையடித்ததாகவும்‌ --

தம்பலகாமம்‌ 96, 98, 99 ஆம்‌ கட்டைகளில்‌ கிராமப்‌ புறங்களில்‌ உள்ள தமிழ்‌ மக்‌கள்‌ கிண்ணியாவில்‌ உள்ள கடைகளுக்கு பொருள்‌ வாங்‌கப்‌ போகவிடாது முஸ்லிம்‌ ஊர்காவல்‌ படையினரால் துன்புறுத்தப்பட்டும் கொலை செய்யப்பட்டும்‌ வருகின்றனர்‌ என்றும்‌ அவ்வட்டாரங்கள்‌ மேலும்‌ தெரிவித்தன.

[உ-9]
 

*****

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

செய்திகள்

 

  • நாளேடு: உதயன்
  • திகதி: 10/07/1990
  • பக்கம்: 1

 

கிழக்கு தமிழரை அழிக்க ஆயுதக் குழுக்கள்! 
நூற்றுக்கணக்கானோரைக் காணவில்லை!

கொழும்பு, ஜூலை 10 

கிழக்கில்‌ மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில்‌ ஆயுதப்‌ படைகளைச்‌ சேராத பலர்‌ குழுக்களாகச்‌ சேர்ந்து கத்தி, பொல்லுகளுடன்‌ திரிவதாக அறியவருகிறது.

கிழக்குத்‌ தமிழரைப்‌ படுகொலை செய்து அவர்களை டயர்‌ போட்டு எரிக்கும்‌ செயல்களில்‌ இக்குழுக்கள்‌ ஈடுபட்டிருப்பதாகவும்‌ கூறப்படுகிறது.

இக்குழுக்களின்‌ கைகளில்‌ சிக்கிய நூற்றுக்கணக்கான தமிழர்‌கள்‌ பற்றி தகவல்‌ ஏதும்‌ இல்லை என்றும்‌ கூறப்படுகிறது.

அரச படைகளின் ஆதரவோடு இயங்கும் இந்தக் குழுக்கள், நியாயம் வழங்கும் உரிமையைத் தம் கைகளில் எடுத்திருக்கின்றன என்று ஏஜென்ஸி செய்திகள் தெரிவித்தன.

படையினர் தாக்குதலுக்கு இலக்காகும் பகுதிகளுக்கு இக்குழுவினர் விரைந்து வருவதாகவும் - 

பின்னர் அப்பகுதியில் காணப்படும் அப்பாவித் தமிழ் மக்களை அவர்கள் கொன்று குவிப்பதாகவும் - 

இதன்மூலம் அப்பகுதி மக்களுக்கு "பாடம் புகட்ட!" அவர்கள் முயல்வதாகவும் ஏஜென்சி செய்திகள் மேலும் தெரிவித்தன. 

இந்தக் குழுக்களில் ஜிகாத் அமைப்பைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர்கள் பலரும் இடம்பெற்றிருப்பதாகவும் கூறப்பட்டது.

 

*****

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

செய்திகள்

 

  • நாளேடுஈழநாதம்
  • திகதி: 12/07/1990
  • பக்கம்: 1

 

கல்முனையில்‌ இராணுவம்‌ - ஜிகாத்‌ காட்டுத் தர்பார்‌; 31 தமிழர் படுகொலை

(கல்முனை) 

கல்முனையில்‌ நேற்று முன்‌னம்‌ மாலை முப்பத்தியாரு தமிழர்களைச்‌ சிறிலங்கா இராணுவத்தினரும்‌ ஜிகாத்‌ இயக்கத்‌தினரும்‌ சேர்ந்து வெட்டிக்‌ கொலை செய்துள்ளனர்‌. பின்னர்‌ கொலை செய்யப்பட்டவர்கள்‌ தீ வைத்துக்‌ கொழுத்தப்பட்‌டுள்ளனர்‌.

இவ்வாறு கொலை செய்‌யப்பட்டவர்‌களில்‌ ஒரு பெண்‌ மானபங்கப்படுத்தப்பட்ட பின்னர் கொலை செய்யப்‌பட்டுள்ளார்‌. இக்‌கொலைகளில்‌ கறுப்புச்‌ சட்டைகளுடன் இருந்த சிறிலங்கா அரசின்‌ மறைமுக கொலைகாரப்‌ படையினர்‌ ஈடுபட்டதாகத்‌ தெரிகிறது.

டாக்டர்‌ சண்முகநாதனும்‌, அவரது மனைவியும்‌  இவ்வாறு கொலை செய்யப்பட்டவர்களில்‌ அடங்குகின்றார்கள்‌.

அதேவேளை கல்‌முனை  வாடிவீட்டிற்கு அருகிலிருந்த வீடுகளுக்குச்‌ சொந்தமான  தமிழர்கள்‌ கொலை செய்யப்‌பட்டு வீடுகள்‌ யாவும்‌ தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. அத்‌தோடு சிறிலங்கா இராணுவத்தினர்‌ அங்கு முகாம்‌ அமைத்துள்ளதாகவும்‌ செய்‌திகள்‌ தெரிவிக்கின்றன.

கல்முனைக்கும்‌ நிலாவரைக்‌கும்‌ இடையில்‌ தமிழர்‌ எவரும்‌ இல்லை என்றும்‌, அவர்‌கள்‌ ஜிகாத்தால்‌ துரத்தப்பட்‌டுள்ளனர்‌ எனவும்‌ செய்திகள்‌ தெரிவிக்கின்றன.

 

*****

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

செய்திகள்

 

  • நாளேடுஉதயன்
  • திகதி: 13/07/1990
  • பக்கம்: 4

 

கல்முனையில் தமிழர்கள் கொலை; ரஞ்சன் ஒப்புக்கொண்டார்

கொழும்பு, ஜூலை 13

கல்முனை நகரத்தில் தமிழர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர் என்பதை பாதுகாப்புத் துணை அமைச்சர் திரு. ரஞ்சன் விஜேரத்தினா ஒப்புக்கொள்கிறார்.

நேற்றுத் தாம் நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டில் வைத்து அந்தச் சம்பவம் நடந்தது உண்மை தான் என்று அவர் கூறினார்.

அமைச்சர் ரஞ்சன் இது குறித்துச் சொன்னதாவது:

கல்முனை நகரில் சில தமிழர்கள் கொல்லப்பட்டதை ஒப்புக்கொள்கிறேன்.

கிழக்குப் பகுதி இராணுவ நடவடிக்கையில் பொதுமக்கள் சிலரும் கொல்லப்பட்டது உண்மை தான்.

போட்டித் தமிழர் குழுக்கள், முஸ்லிம் தீவிரவாதக் குழுக்கள் ஆகியவற்றைச் சேர்ந்தவர்களால் விடுதலைப் புலிகள் என்று அடையாளங் காட்டப்பட்டவர்களை இராணுவத்தினர் கொன்றனர்.

இவ்வறு போட்டிக் குழுக்களால் அடையாளங் காட்டப்படுவோர் மீது நடவடிக்கை எடுக்கும் போது, எதிர்காலத்தில் அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பாடாமல் கவனமாக நடந்து கொள்ளுமாறு இராணுவத்தினருக்கு அறிவுரை கூறப்பட்டுள்ளது.

50 பேர் என்று தகவல்

இதேவேளை --

கல்முனை நகரில் அரச படைகளால் 50 பொதுமக்கள் வரையில் கொல்லப்பட்டுள்ளனர் என்று ரெலோ குற்றஞ்சாட்டி இருப்பதாக ஏஜென்ஸிச் செய்தி ஒன்று தெரிவித்தது.

[அ-எ]

 


 

ரஞ்சனைக் கண்டிக்கிறார் முஸ்லிம் காங்கிரஸ் அஷ்ரப்

கொழும்பு, ஜூலை 13

முஸ்லிம் தீவிரவாதக் குழு ஒன்றுதான் கல்முனை நகரில் பழிவாங்கும் நடவடிக்கையாகத் தமிழரைக் கொன்றதாக அமைச்சர் ரஞ்சன் விஜேரத்தினா கூறியதை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஜனாப் எம்.எச்.எம். அஷ்ரப் கண்டித்தார்.

அமைச்சரின் கூற்று பொறுப்பற்ற தன்மையானது என்றும் - 

ஜிஹாத் என்றொரு இயக்கம் முஸ்லிம்கள் மத்தியில் இல்லை என்றும் - ஜனாப் அஷ்ரப் தெரிவித்தார்.

 

*****

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

செய்திகள்

 

  • நாளேடுஉதயன்
  • திகதி: 19/07/1990

 

  • பக்கம்: 1

திருமலையில் இடம்பெற்ற அத்துமீறல் சம்பவம்

திருகோணமலை மாவட்டத்தில் கடந்த ஒருவார காலத்தில் படையினரால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் அத்துமீறல் சம்பவங்கள் குறித்து விடுதலைப்புலிகள் வட்டாரங்கள் நேற்று தகவல் வெளியிட்டன. விவரம் பின்வருமாறு:

  • கடந்த வியாழனன்று சீனக்குடாவில்‌ வைத்து குருசாமி துரைரத்‌தினம்‌, அழகையா ஆனந்தன்‌, ஷெல்டன்‌, கந்தையா அந்தோனி, சிவராஜா, அ.டக்ளஸ்‌ ஆகிய ஆறு பேரை இராணுவத்தினர் கைது செய்தனர்.
  • கடந்த வெள்ளியன்று, சீனக்குடாவில்‌ சசி என்ற இளம்‌ பெண்ணை சிங்கள ஊர்காவல்‌ படையினர்‌ கடுமையாகத்‌ தாக்கியுள்ளனர்‌.
  • அதே தினம்‌ கப்பற்‌றுறை கடலில்‌ மீன்‌ பிடித்துக்‌கொண்டிருந்த 6 பேரை கடற்‌படையினர்‌ கைது செய்துள்‌ளனர்‌.
  • கடந்த ஞாயிறன்று ஆலங்கேணியில்‌ வைத்து சிதம்பரநாதன்‌ என்பவரை இராணுவத்தினர்‌ சுட்டுக்‌ கொன்றனர்‌.
  • கடந்த திங்களன்று ஆலங்கேணி அகதி முகாமில்‌ வைத்து செல்லையா றேமன்‌, சின்னையா கனகசிங்கம், சிவஞானம்‌, கோணமலை செல்‌லத்தம்பி ஆகிய நான்குபேரை இராணுவத்தினர்‌ கைது செய்‌தனர்‌. 
  • அதே தினத்தில்‌ ஆலங்‌கேணியைச்‌ சேர்ந்த சீனித்‌தம்பி கனகசாமி என்பவரை கிண்ணியாவில்‌ வைத்து இராணுவத்தினர்‌ சுட்டுக்‌ கொலை செய்தனர்‌.
  • கடந்த செவ்வாயன்று தம்பலகாமம்‌ 18ஆம்‌ கட்டையைச்‌ சேர்ந்த பரமு என்பவரை கிண்ணியாவில்‌ வைத்து முஸ்லிம்‌ ஊர்காவல் படையினர்‌ சுட்டுக்‌ கொன்றுள்ளனர்‌.

- இப்படி விடுதலைப்புலிகள் வட்டாரங்களால் தகவல் தெரிவிக்கப்‌பட்டது. 

 


 

  • பக்கம்: 3

3 தமிழர்‌ வெட்டிக்கொலை

யாழ்ப்பாணம்‌, ஜூலை 19

மட்டக்களப்பு மாவட்டத்‌திலுள்ள நாவிதன்வெளி என்ற இடத்தில்‌ 3 தமிழ்ப்‌ பொதுமக்களை ஜிகாத் இயக்கத்தினர் வெட்டிக் கொன்றனர்‌ என்று விடுதலைப்‌புலிகள்‌ வட்டாரங்கள்‌ தெரிவித்‌தன.

வயலுக்கு சென்றுகொண்டிருந்த வேளையில்‌ பின்வருவோர்‌ கொலை செய்யப்பட்‌டனர்‌ என்று அறிவிக்கப்பட்‌டது:--

  1. கறுவல்‌தம்‌பி [சவளக்கடை],
  2. ஆனந்தன்‌ [சவளக்கடை],
  3. புஸ்பராஜா [நாவிதன்வெளி] 

(அ- 9)

 

*****

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

செய்திகள்

 

  • நாளேடுஉதயன்
  • திகதி: 20/07/1990
  • பக்கம்: 4

 

சேனைக்குடியிருப்பில் பல வன்செயல் சம்பவங்கள்

அம்பாறையிலுள்ள சேனைக்‌குடியிருப்புப்‌ பகுதியில்‌ கடந்த 10 ஆம்‌ திகதி முதல்‌ பல வன்‌செயல்‌ சம்பவங்கள்‌ இடம்‌பெற்றதாக விடுதலைப்‌ புலிகள்‌ வட்டாரங்கள்‌ தெரிவித்‌தன.

10 ஆம்‌ திகதியன்று ஜிகாத்‌ அமைப்பைச்‌ சேர்ந்தவர்களும்‌ இராணுவத்தினரும்‌ இணைந்து 25 வீடுகளையும்‌, இரு கடைகளையும்‌ எரித்துள்ளனர்‌. கோவில்‌ ஒன்றும்‌ கொள்ளையிடப்பட்டபின்‌ தீ இட்டு எரிக்கப்பட்டது.

11ம் திகதி அங்கு போர் விமானங்கள்‌ நடத்திய குண்டு வீச்சில்‌ 3 விவசாயிகளுக்குச்‌ சொத்தமான வயல்‌ நிலங்கள்‌ சேதமடைந்தன.

கடத்த ஞாயிற்றுக்கிழமை நான்கு பிள்ளைகளின்‌ தந்‌தையான பொன்னையா பேரின்‌பன்‌ [வயது 35], சிதம்பரம்‌ பாஸ்கரன்‌ [வயது 19] ஆகிய இருவரை படையினர்‌ சுட்டுக்‌கொன்றனர்‌. வேறு மூன்று பேரை உயிருடன்‌ தீயிட்டுக்‌ கொழுத்தினர்‌.

- இப்படி அந்த வட்டாரங்‌கள்‌ மேலும்‌ தெரிவித்தன. (உ - 9)

 

*****

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

செய்திகள்

 

  • நாளேடுஉதயன்
  • திகதி: 21/07/1990
  • பக்கம்: 2

 

சுட்டுக்‌ கொலை! 

யாழ்ப்பாணம்‌, சூலை 21 

கடந்த ஞாயிற்றுக்கிழமை (15/07) கல்முனையைச்‌ சேர்ந்த சண்‌முகம்‌ என்பவர்‌ ஜிகாத்‌ இயக்‌கத்தினரால்‌ சுட்டுக் கொல்லப்‌பட்டதாகத்‌ தெரிவிக்கப்பட்‌டது. 

[உ-9]

 

*****

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

செய்திகள்

 

  • நாளேடுஈழநாதம்
  • திகதி: 26/07/1990
  • பக்கம்: 1

 

விடுதலைப்புலிகளுடன் தொடர்பான முஸ்லிம்கள் ஜிகாத்தால் கொலை

யாழ்ப்பாணம்

திருகோணமலை நகரை அண்டிய பகுதிகளில் ஜிகாத் இயக்கத்தினர் தமிழ் மக்களின் வீடுகளை மட்டுமல்லாது கடந்த காலத்தில் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பொதுக் கூட்டங்களில் உரையாற்றிய பல முஸ்லிம் பெரியவர்களை கத்திகளால் வெட்டிக்கொன்றுள்ளதாக அங்கிருந்து இடம் பெயர்ந்து காடுகளூடாக வட பகுதி வந்து சேர்ந்த ஐ. இப்ராகிம் என்ற வியாபாரி ஒருவர் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் தனக்கு இப்போழுது 45 வயது ஆகிவிட்டது. இருந்தும் அண்மையில் சில தேசபற்று ஊட்டும் கருத்துக்களை எடுத்துக் கூறியதற்காக கடந்த ஏழாம் திகதி ஜிகாத் இயக்கத்தினர் தமது வீட்டை சுற்றி வளைத்து தனது பெயரை சொல்லி அழைத்ததாகவும் அப்பொழுது எதிர் வீட்டில் இருந்த தனது நண்பர் துன்புறுத்தப்படும் சத்தம் கேட்டு தாம் வீட்டை விட்டு தப்பி வந்துவிட்டதாகவும் கூறினார். மேலும் ஜிகாத் குண்டர்கள் தமது வீட்டையும் பெருந்தொகையான வியாபாரப் பொருட்களையும், தீவைத்து எரிந்துவிட்டதாகவும் அவர் கூறினார்.

தொடர்ந்து இந்த ஜிகாத் எனும் பெயரில் இயங்கும் சில கசிப்பு வியாபாரிகளும் கொள்ளையிட சந்தர்ப்பம் பார்த்திருந்த சில காடையர்களும் சிங்கள இராணுவத்தின் பாதுகாப்பில் தமது பகுதிகளில் உள்ள பலரை கத்திகளாலும், வேறு கூரிய ஆயுதங்களாலும் தாக்கி தமது உறவினர்கள் பலரது வீடுகளை கொள்ளையிட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 



 

  • நாளேடுஉதயன்
  • திகதி: 26/07/1990
  • பக்கம்: 3

 

முஸ்லிம்‌ இளைஞர்‌ ராணுவ பயிற்சி

கொழும்பு. ஜூலை 26 

கல்முனை பிரதேசத்தில்‌ இலங்கை இரணுவத்தில்‌ சேர்க்கப்பட்ட முஸ்லிம்‌ இளைஞர்களுக்கான ராணுவப்பயிற்சி கடந்த செவ்‌வாய்க்‌கிழமை முதல்‌ ஆரம்‌பமானது. பயிற்சிக்‌ காலம்‌ முடிந்ததும்‌ இந்த முஸ்லிம்‌ இளைஞ்ர்‌கள் கல்முனைப்‌ பிரதேசத்‌திலேயே இராணுவ சேவையில்‌ ஈடுபடுத்தப்படுவர்‌.

 

*****

 

  • தொகுப்பாளர் குறிப்பு: கல்முனை பிரதேசத்தில் இருந்த சிறிலங்கா இராணுவத்தின் படைமுகாமிற்கே இக்கால கட்டத்தில் அம்பாறையில் கைது செய்யப்பட்ட பெரும்பாலான தமிழர்கள் கொண்டுசெல்லப்பட்டு கொல்லப்பட்டனர் என்பதை நான் வாசித்தறிந்த செய்திகள் மூலம் அறிந்துகொண்டேன்.

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

செய்திகள்

 

  • நாளேடுஉதயன்
  • திகதி: 27/07/1990
  • பக்கம்: 1

 

கிழக்கில் ஊர்காவல் படையினரை பணியில் ஈடுபடுத்தக் கோரிக்கை; முஸ்லிம் காங்கிரஸ் பிரேமாவிடம் விடுத்தது

கிழக்கில் பாதுகாப்புப் படையினருடன் மேலதிகமாக ஊர்காவல் படையினரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்த வேண்டும்.

-- இவ்வாறு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கோரிக்கை விடுத்திருக்கிறது.

நேற்று ஜனாதிபதி திரு. ஆர். பிரேமதாஸாவை முஸ்லிம் காங்கிரஸின் தூதுக்குழு சந்தித்த போது இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்தப் பேச்சுக்களின் போது முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் அதன் தலைவர் எம். எச். எம். அஷ்ரஃவ், பொதுச் செயலாளர் எம். ஜே. ஏ. சஹீத், எம். எல். ஏ. ஹிஸ்புல்லா எம். பி. மற்றும் ஹஹீம் ஆகியோர் கலந்து கொண்டனர்‌.

இந்தச் சந்திப்பின்‌ போது பின்வரும் தம்‌ கோரிக்கைகளை காங்கரஸ்‌ தூதுக்‌குழு விடுத்தது:

  • கிழக்கில்‌ சீரான உணவு விநியோகத்தை உறுதிப்படுத்த வேண்டும்‌. 
  • இடம்பெயர்‌ந்தவர்‌களுக்கு நிவாரணம்‌ வழங்க உடன்‌ நடவடிக்கை எடுக்கப்‌பட வேண்டும்‌. 
  • சம்மாந்துறை, காத்‌தான்குடி, ஏறாவூர்‌, கல்‌முனை ஆகிய பகுதிகளில்‌ பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும்‌. 
  • கிழக்கிலும் முக்கியமாக காத்தான்குடி-ஓட்டமாவடி பகுதியிலும்‌ பாதுகாப்புப்‌ படையினருக்கு மேலதிகமாக ஊர்காவல் படையினரை பாதுகாப்புக்‌ கடமையில்‌ ஈடுபடுத்த வேண்டும்‌. 
  • ஸ்ரீலங்கா முஸ்லிம்‌ காங்கிரஸ்‌ தலைவர்கள்‌ மட்‌டக்களப்பு, அம்பாறை மாவட்‌டங்களுக்கு விஜயம்‌ செய்யக்‌ கூடியதாக பாதுகாப்பு ஏற்‌பாடுகளைச்‌ செய்து கொடுக்க வேண்டும்‌.

- இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. 

விடுதலைப்புலிகளுடனான மோதல்களின்‌ போது பாதுகாப்புப்‌ படையினர்‌ மேற்‌கொண்ட நடவடிக்கைக்கு முஸ்லிம்‌ காங்கிரஸ்‌ பாராட்‌டுத்‌ தெரிவித்தது. 

[உ- 9]

 

*****

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

செய்திகள்

 

  • நாளேடுஉதயன்
  • திகதி: 04/08/1990
  • பக்கம்: 6

 

15 தமிழர் வெட்டிக்கொலை?

யாழ்ப்பாணம், ஆகஸ்ட் 4

பொத்துவில் பகுதியில் உள்ள அகதிகள் முகாம் ஒன்றிலிருந்த 15 தமிழர்களைக் கடந்த திங்களன்று 'ஜிகாத்' அமைப்பைச் சேர்ந்தோர் என்று கருதப்படுபவர்கள் வெட்டிக்கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.

[உ- 9]

 

*****

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

 செய்திகள்

 

  • நாளேடுஉதயன்
  • திகதி: 08/08/1990
  • பக்கம்: 1

 

அம்பாறையில் 40 தமிழர் படுகொலை

அம்பாறை மாவட்டத்தில் உள்ள தமிழர் கிராமம் ஒன்றில் வைத்து 40 தமிழ்ப் பொதுமக்கள் ஆயுதம் தாங்கிய முஸ்லிம் குழு ஒன்றினால் படுகொலை செய்யப்பட்டனர்.

ரெலோ இயக்கப் பிரமுகர் ஒருவர் கொழும்பில் இத் தகவலை வெளியிட்டார்.

கிழக்கிலங்கையில் கடந்த வெள்ளிக்கிழமை  மாலைக்குப் பின்னர் இருநூறுக்கும் அதிகமான முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

அதனையடுத்து அம்பாறையில் தமிழர் படுகொலைசெய்யப்பட்டதாகக் கூறப்பட்டது.

இதனிடையில் - 

விடுதலைப்புலிகள் அல்லாத மற்றையை ஆறு தமிழ் குழுக்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் நேற்று கொழும்பில் முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகளுடன் கிழக்கு நிலைமை பற்றி பேச்சுவார்த்த நடத்தியதாகக் கூறப்பட்டது.

 

*****

  • தொகுப்பாளர் குறிப்பு: இப்படுகொலையின் பெயர் திராய்க்கேணி படுகொலை என்பதாகும். இது தொடர்பில் மேலும் வாசிக்க:

 

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

செய்திகள்

 

  • நாளேடுஉதயன்
  • திகதி: 11/08/1990

 

  • பக்கம்: 1

3 தமிழர்கள் வவுனியாவில் கொலை!

கொழும்பு, ஆக. 11

வவுனியா மாவட்டத்தில் சமன்குளம் என்னுமிடத்தில் முஸ்லிம் கோஸ்டி ஒன்று நடத்தியதாகக் கூறப்படும் தாக்குதலில் 3 தமிழர் கொல்லப்பட்டனர் என்றும் - 

6 வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன என்றும் ஏஜென்ஸி செய்திகள் தெரிவித்தன.

(உ-எ)

 


 

  • பக்கம்: 3

காத்தான்குடிச் சம்பவங்களுக்குப் பழிவாங்கல்: 107 தமிழர் கொலை
யு.என்.ஐ. செய்தி குறித்து இராணுவம் மௌனம்


காத்தான்குடிக்‌ கொலைகளுக்கு பழிவாங்கும்‌ நடவடிக்கையாக கிழக்கு மாகாணத்தில்‌ 107 தமிழர்கள்‌ கொல்லப்பட்டனர்‌ என்று தெரிவிக்கப்படுகிறது.

கல்லாறு பகுதியில்‌ 26 தமிழர்‌ வரிசையாக நிறுத்தப்‌பட்டு சுட்டுக்‌ கொல்லப்பட்‌டனர்‌.

அம்பாறையில்‌ 12 தமிழர்‌ கொல்லப்பட்டனர்‌.

சவளக்‌கடையில்‌ 12 தமிழர்‌ ஊர்காவல்‌ படையினரால்‌ கொல்லப்பட்டனர்‌.

யு. என்‌. ஐ. செய்தியாளருக்கு மட்டக்களப்பில்‌ இருந்து தொலைபேசி மூலம்‌ அளித்த பேட்டி ஒன்றில்‌ விடுதலைப்‌ புலிகள்‌ மட்டக்‌களப்பு மாவட்டத்‌ தலைவர்‌. கரிகாலன்‌ இவ்விவரங்களைத்‌ தெரிவித்தார்‌.

காத்தான்குடி, சம்பவத்துக்‌கும்‌ விடுதலைப்‌ புலிகள்‌ இயக்‌கத்திற்கும்‌ தொடர்பே கிடையாது என்றும்‌ திரு. கரிகாலன்‌ சொன்னார்‌. 

கிழக்கில்‌ தமிழர்‌ கொலைசெய்யப்பட்டனர் என்ற செய்தியை இராணுவத்தினர் உறுதிப்படுத்தவோ மறுக்கவோ இல்லையென்றும் 'யு.என்.ஐ.' தெரிவித்தது.

(இ- எ)

 

*****

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

செய்திகள்

 

  • நாளேடுஉதயன்
  • திகதி: 12/08/1990
  • பக்கம்: 1

 

நேற்றும் 15 தமிழர்கள் அம்பாறையில் படுகொலை!

சென்னை, ஆக. 12

அம்பாறை மாவட்டத்தில் நேற்றுக்காலை பதினைந்து தமிழ்ப் பொதுமக்கள் ஊர்காவல் படையினரால் படுகொலை செய்யப்பட்டனர். 

தமிழ் அமைப்பு ஒன்றின் பிரதிநிதி ஒருவர் இத்தகவல் நேற்றுக் கொழும்பில் வெளியிட்டதாக இந்திய வானொலி நேற்றிரவு அறிவித்தது.

(உ-எ)


*****

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

செய்திகள்

 

  • நாளேடுஉதயன்
  • திகதி: 14/08/1990
  • பக்கம்: 1

 

வீரமுனையில்‌ 100 தமிழர்‌ கொலை

கொழும்பு, ஆக. 14 

சம்மாந்துறைப்‌ பகுதியில்‌ உள்ள வீரமுனைக்‌ கிராமத்‌தில்‌ கோயில்‌ ஒன்றில்‌ தஞ்சம்‌ புகுந்திருந்த தமிழ்‌ அகதிகளில்‌ 21 பேரை முஸ்லிம்கள்‌ சிலர்‌ தாக்கிக்‌ கொலைசெய்தனர்‌.

இதனையடுத்து வீரமுனைக்‌ கிராமத்தில்‌ இருந்த சுமார்‌ 4 ஆயிரம் அகதிகளும் அம்பாறை மாவட்டத்திலுள்ள திருக்கோயிலுக்கு இடம்மாற்றஞ் செய்யப்பட்டு வருவதாகத் தெரிகிறது

இதேசமயம்‌-- 

வீரமுனைக்‌ கிராமத்தில்‌ சுமார்‌ நூறு தமிழர்கள்‌ முஸ்‌லிம்களினால்‌ படுகொலை செய்யப்பட்டிருப்பதாக தமிழ்‌ குழு ஒன்றின்‌ பிரதிநிதி ஒருவா்‌ தகவல்‌ வெளியிட்டதாக ஏஜென்ஸி செய்திகள்‌ தெரிவித்தன.

செங்கலடி அரிசி ஆலை ஒன்றில்‌ இருந்த சுமார்‌ 50 தமிழர்கள்‌ முஸ்லிம்‌ குழு ஒன்‌றினால்‌ கொலை செய்யப்‌பட்டு, பின்னர்‌ அவர்கள்‌ உடல்கள்‌ எரிக்கப்பட்டன என்றும்‌ --

அவர்களில்‌ பெரும்பாலானோர்‌ பெண்கள்‌ என்றும்‌ அந்தப்‌ பிரதிநிதி கூறியதாக அச்செய்திகள்‌ மேலும்‌ தெரிவித்தன.

ஏறாவூரில்‌ முஸ்லிம்‌கள்‌ கொல்லப்பட்டதற்கான பழி வாங்கல்‌ நடவடிக்கையாகவே வீரமுனை சம்பவம் அமைந்ததாக கொழும்பில் பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.

இதனிடையில் ஏறாவூரில் இடம்பெற்ற சம்பவங்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 173 ஆக அதிகரித்தது என்றும் மற்றொரு செய்தி தெரிவித்தது.

வீரமுனையிலும் ஏறாவூரிலும் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருப்பதாகவும் அறிவிக்கப்படுகிறது.

 

*****

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

.

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

செய்திகள்

 

  • நாளேடுஉதயன்
  • திகதி: 15/08/1990
  • பக்கம்: 1

 

80 தமிழர் படுகொலை

நேற்று செங்கலடியில்‌ இடம்‌பெற்ற ஒரு சம்பவத்தில்‌ 80 தமிழர்‌ படுகொலை செய்யப்‌பட்டதாக நேற்று நள்ளிரவு கிடைத்த செய்திகள்‌ தெரிவித்தன.

முஸ்லிம்‌ குழு ஒன்று இவர்‌களை படுகொலை செய்ததாகத்‌ தெரிவிக்கப்பட்டது.

இதுவரை 60 பேரின்‌ சடலங்கள் மீட்கப்பட்டிருப்பதாக கொழும்பில்‌ தமிழ்‌ குழு ஒன்‌றின்‌ பிரதிநிதி ஒருவர்‌ தெரித்தார்‌ என இந்திய வானொலி நேற்று நள்ளிரவு அறிவித்தது.

(௨)

 

*****

 

  • தொகுப்பாளர் குறிப்பு: இது செங்கலடி அரிசி ஆலை படுகொலையுடன் தொடர்புடைய செய்தி. பிந்தைய தகவல்கள் கொண்டது.

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

செய்திகள்

 

  • நாளேடுஈழநாதம்
  • திகதி: 17/08/1990
  • பக்கம்: 1 & 2

 

முஸ்லிம் மக்களுக்கு வேண்டுகோள்

தமிழீழத்தில்‌ இன்று சிங்‌கள அரசு பெருமளவில்‌ இனப்‌படுகொலையை நடத்துகின்‌றது. 

தமிழீழமெங்கும் தொடர்ந்து ஆகாய விமானங்கள்‌ குண்டுகள்‌ வீசுகின்றன.

அகதிகள்‌ முகாம்கள்‌ பாடசாலைகள்‌, வைத்தியசாலைகள்‌, சந்தைகள்‌, மின்சார நிலையங்கள்‌, பொதுமக்களின்‌ வீடுகள்‌ என எங்கும்‌ குண்டுகள்‌ வீசப்படுகின்றன.

எங்கும்‌ உணவு இல்லை, மின்சாரம்‌ இல்லை, எரிபொருள்‌ இல்லை, மருந்துகள்‌ இல்லை,

எந்த மாவட்ட வைத்தியசாலைகளும்‌ இயங்கவில்லை.

கிழக்கு மாகாணத்தில்‌ மட்‌டக்களப்பிலும்‌, வடக்கு மாகாணத்திலும்‌ கிளிநொச்சியிலும்‌ பல மக்கள்‌ பட்டினியால்‌ இறந்துள்ளனர்‌.

தமிழீழமெங்கும்‌ மருத்துவ வசதியின்றி இறந்தவர்‌ பலர்‌.

சிங்கள அரசு திட்டமிட்டு தமிழீழ மக்களை பட்டினிபோட்டு அழிக்க, அடிபணிய வைக்க முயல்கின்றது.

இங்கு வயல்‌ நிலங்கள்‌ எல்லாம்‌ எரிக்கப்பட்டுள்ளன; சொத்துக்கள்‌ எல்லாம்‌ அழிக்‌கப்படுகின்றன. வீடுகளிலிருக்கும்‌ நெல்லு, அரிசி எல்லாம்‌ எரிக்கப்படுகின்றன அல்லது சிங்கள இராணுவம்‌ எடுத்துச்சென்று சிங்கள மக்‌களுக்குத் தருகின்றது.

சர்வதேச அமைப்புக்குழு ஊடாக தமிழீழ மக்களுக்கு உதவுவது போல் அரசு நடிக்கின்றது.

உதாரணமாக யாழ், குடாநாட்டுக்கு  மாதம் ஒன்றிற்கு 20,000 மெற்றிக் தொன் உணவுப்ப் பொருட்கள் தேவை.

யூன் 14ம் திகதியில் இருந்க்டு இன்று வரை குடாநாட்டுக்கு வந்த உணவுப்பொருட்கள் 1173 மெற்றிக் தொன்கள் மட்டுமே.

தமிழீழ மெங்கும்‌ இனப்படுகொலையை நடத்திக்‌ கொண்டு அதை மறைக்க கிழக்கில்‌ தமிழ்‌, முஸ்லிம்‌ கலவரத்தை திட்டமிட்டு அரசு தூண்டிவிடுகின்றது. 

வட மாகாணத்தின்‌ மீது அரசு நடத்தும்‌ தாக்குதலைத்‌ தடுத்து கிழக்கிற்கு மேலும்‌ படைகளை அனுப்பவே முஸ்‌லிம்களை விடுதலைப்‌ புலிகள்‌ கொல்வதாக அரசு கூறுகின்றது.

உண்மைநிலை என்னவெனில்‌ தமிழீழம்‌ எங்கும்‌ நடக்கும்‌ இனப்படுகொலையை மறைக்கவும்‌ விடுதலைப்‌ புலிகளின்‌ பெயரைக்‌ களங்கப்படுத்தவுமே அரசு திட்டமிட்ட முஸ்லிம்‌ மக்கள்‌ - தமிழ் மக்கள்‌ கலவரத்‌தைத்‌ தூண்டி வருகின்றது. 

முஸ்லிம்‌ காங்கிரஸ்‌, ஐ. தே. ௧., சிறிலங்கா சுதந்திரக்‌ கட்சி, ஈ. பி. ஆர்‌. எல்‌. எவ்‌., புளொட்‌, ரெலோ, ஈ. என்‌. டி. எல்‌. எவ்‌. மற்றும்‌ ஊர்‌காவல்படையைச்‌ சேர்ந்த முஸ்லிம்கள்‌ என்று எல்லோரும்‌ இப்போது ஒன்று சேர்ந்து தமிழ் மக்களை அழிக்கும்‌ நடவடிக்கைகளிலும்‌ விடுதலைப்புலிகளைக்‌ காட்டிக்‌ கொடுக்கும்‌ நடவடிக்கைகளிலும்‌ இறங்கியுள்ளனர்‌.

முஸ்லிம்‌ மக்களின்‌ உரிமைகளை, நிலங்களைப்‌ பறிக்‌கச்‌ சிங்கள அரசு தயங்கியதில்லை. பல இடங்களில்‌ முஸ்லிம்‌ மக்களின்‌ தனித்‌துவத்தைப்‌ பறிக்கவும்‌ சிங்கள அரசு தயங்கியதில்லை.

தமிழீழப் பகுதிகளில் குறிப்பாகத் தமிழ் மக்கள் பெரும் எண்ணிக்கையில் வாழும் பிரதேசங்களில் மட்டும் முஸ்லிம்கள் அரசியல் ரீதியாகவோ, கலாசார ரீதியாகப் பாதிக்கப்படாமல் வாழ்ந்து வந்திருக்கின்றார்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகத்தின் கீழ் முஸ்லிம் மக்கள் முழுமையான பாதுகாப்போடு வாழக்கூடியதாக இருந்தது.

ஆனால்‌ இன்று பல முஸ்‌லிம்கன்‌ சிங்கள இராணுவத்‌தோடு சேர்ந்து தமிழ் மக்‌களை அழிக்கவும்‌, தமிழீழப்‌ போராட்டத்தைக்‌ காட்டிக்‌ கொடுக்கும்‌ முயற்சியிலும்‌ இறங்‌கியுள்ளார்கள்‌. 

இந்திய இராணுவமும்‌ அதன்‌ கூலிப்படைகளும்‌ முஸ்‌லிம்களைக்‌ கொலை செய்த போது இவர்கள்‌ யாருமே குரல்‌ எழுப்பியது கிடையாது. சமூக கலவரம்‌ நடந்ததும்‌ கிடையாது. 

இந்திய இராணுவத்துக்கு பயந்து ஐ.தே. கட்சியும்‌, சி.ல.சு. கட்சியும்‌, முஸ்லிம்‌ காங்கரசும்‌ விசுவாசமாக இருந்தும் மெளனம்‌ சாதித்தன. 

இன்று அதே சக்திகள்‌ தமது சுயநலன்களுக்‌காக சமூகக்‌ கலவரத்தைத்‌ தூண்டிவிட்டு முஸ்லிம் மக்கள்‌ கொல்லப்படுகிறொர்கள்‌ என்று முதலைக்‌ கண்ணீர்‌ வடிக்கின்றார்கள். 

முஸ்லிம்‌ மக்கள்‌ சிங்கள இராணுவத்தால்‌, கிழக்கு மாகாணத்தில்‌ மட்டுமல்ல வடக்கு மாகாணத்திலும்‌ கொல்லப்படுகிறார்கள்‌.

முஸ்லிம்கள்‌ தமது பிரதேசமெனக்‌ கூறிக்கொண்டு இப்‌போது தமிழ்‌ மக்களைக்‌ கொன்று வரும்‌ அம்பாறை மாவட்டத்தில்‌ எமது போராட்‌டத்தின்‌ மூலமே சிங்களக்‌ குடியேற்றம்‌ பெரும்‌ அளவில்‌ தடுக்கப்பட்டன. 

அங்கு 50,000 சிங்களக்‌ குடும்பங்‌களை குடியேற்றும்‌ திட்டமொன்று இருந்தது. 

எமது போராட்டத்தின்‌ மூலமே இன்று வழங்கப்பட்டிருக்கும் பல சலுகைகளையும் முஸ்லிம் மக்கள் பெற்றிருக்கிறார்கள். 

தமிழ் மொழி அரசகரும மொழி, இனவிகிதாசார அடிப்படையில் வேலை வாய்ப்பு, பதவி உயர்வு என்பன.

தமிழீழப்‌ போராட்டத்தோடு இணைந்து போராடிக்கொண்டு முஸ்லிம்‌ மக்கள்‌ உரிமைகளைப்‌ பேசுவதை விட்டுவிட்டு, தமிழீழப்‌ போராட்டத்தை காட்டிக்‌ கொடுத்துக்கொண்டு இவ்வாறு சிங்கள அரசோடு கூட்டுச்‌ சேர்வதன்‌ மூலம்‌, தமிழீழப்‌ போராட்டத்திலிருந்து முஸ்‌லிம்‌ மக்கள்‌ தனிமைப்‌படுத்‌தப்படுகின்றார்கள்‌. 

நாளை சிங்கள அரசு உங்களை அழிக்‌கும் போது உங்கள்‌ தலைமைகள் இன்று எவ்வாறு தமிழீழப்‌ போராட்டத்தைக்‌ காட்டிக்கொடுக்‌கின்றனவோ அது போலவே உங்களையும்‌ காட்டிக்‌ கொடுக்கத்‌ தயங்காது. 

இன்று தமிழ்‌ மக்களைக்‌ கொலை செய்ய சிங்கள அரசு தரும்‌ ஆயுதங்கள்‌ நாளை உங்களையே அழிக்கத் தயங்காது. 

இன்று தமிழ்‌ மக்‌களை அழிக்கும்‌ சிங்கள அரசு, தமிழ்‌ அகதி முகாம்களைத்‌ தாக்கும்‌ சிங்கள அரசு, முஸ்லிம்‌ மக்‌களுக்கு தென்‌ இலங்கையில்‌ உணவும்‌ உடையும்‌ வழங்கிப்‌ பாதுகாக்கிறது. இது உங்கள்‌ மீது கொண்ட அன்பினால் அல்ல. இன்று தமிழர்களை அழித்த பின்பு நாளை உங்‌களை அழிப்பது சுலபமானது என்பதாலேயே ஆகும்‌. 

தமிழீழப்‌ போராட்டத்தை அடக்க எனக் கொண்டுவரப்பட்ட சட்டங்‌கள்‌ எல்லாமே இன்று சிங்கள மக்களைக்‌ கொலை செய்து ரயர்‌போட்டு எரிக்கப்‌ பயன்‌படுத்தப்படுகின்றன என்பதை முஸ்லிம்‌ மக்கள்‌ மறந்துவிடக்‌ கூடாது. 

இன்று உலகில்‌ நடுநிலையாக நின்று செய்திகளை வழங்கும்‌ அமைப்புகள் கூட அரசு சார்பான செய்திகளை மட்டுமே வெளியிட்டு வருகின்றன. 

வெளிநாடுகளில் இருந்து உண்மை நிலையைக்‌ கண்டறிவதற்காக வருவோரும் கொழும்போடு திரும்பிச் செல்லும் நிலையே காண்கிறோம்

கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் 14/06/1990 இல் இருந்து 05/08/1990 வரை நடந்த சில தகவல்களை மட்டும் நாம் இங்கே தருகின்றோம். குறிப்பாக அம்பாறை மாவட்ட நிகழ்வுகளைத் தருகின்றோம்.

சிலவற்றை இலங்கையில் வாழும் முஸ்லிம்களினதும், உலகில் வாழும் முஸ்லிம்களினதும் கவனத்துகுக் கொண்டு வருகின்றோம்.

இச்செய்திகளை இலங்கைத் தீவில் வாழும் முஸ்ளிம் மக்களினதும் உலகில் வாழும் முஸ்லிம் மக்களினதும் பார்வைக்கு வைக்கின்றோம்.

தமிழீழத்தில் வாழும் முஸ்லிம் மக்கள் யார் உண்மையான நண்பர்கள் என்பதை விரைவில் உணர்ந்து சரியான முடிவை எடுக்கவேண்டுமென விரும்புகிறோம். 

அவர்களை சமூக விரோதிகளையும் காட்டிக்கொடுக்கும் தலைமைகளையும் கைவிட்டு, எம்முடன் ஒன்றிணைந்து போராட முன்வர வேண்டும்.

அம்பாறை மாவட்டத்தில்‌ 19/06/90இல்‌ இருந்து 5/8/90 வரை 1679 அப்பாவித்‌ தமிழ்‌ மக்கள்‌ கொல்லப்பட்டனர்‌. 4420க்கு மேற்பட்ட வீடுகள்‌ எரிக்கப்பட்டன. 159க்கு மேற்‌பட்ட கடைகள்‌ எரிக்கப்பட்‌ டன. பல பெண்கள்‌ பாலியல்‌ வன்முறைக்கு உள்ளாக்கப்பட்‌டனர்‌.

இதே காலகட்டத்தில்‌ மட்‌டக்களப்பில்‌ 779 தமிழர்கள்‌ கொல்லப்பட்டனர்‌. 1697 வீடுகள் எரிக்கப்பட்டன.

இச்செயல்களை எல்லாம்‌ சிங்கள இராணுவத்தோடு சேர்ந்து எஸ்‌. எல்‌. எப்‌. பி, யூ. என்‌. பி, எம்‌. சி. கட்சிகளைச்‌ சேர்ந்த ஊர்காவல்‌ படையினரான முஸ்லிம்‌களே செய்தார்கள்‌. பல தமிழ்ப்‌ பெண்கள்‌ முஸ்லிம்‌ சமூக விரோதிகளால்‌ பாலியல்‌ வன்‌முறைக்குள்ளாக்கப்பட்‌டார்‌கள்‌.

பொத்துவில்‌

  • 19.6.90: 85 கடைகள்‌ கொள்ளையடிக்கப்பட்டு எரிக்‌கப்பட்டன. 16 பேர் கொல்லப்‌பட்டு எரிக்கப்பட்டனர்‌.
  • 20.6.90 பொத்துவிலில்‌ 1000 வீடுகள்‌ கொள்ளையடிக்‌கப்பட்டு  சேதமாக்கப்பட்‌டன.
  • 28.6.90 லகுகல காட்டில்‌ அகதிகளாக இருந்த 25 இளைஞர்கள்‌ கொல்லப்பட்டு எரிக்‌கப்பட்டனர்‌.
  • 29.6.90 பொத்துவில்‌ காவல்துறை நிலையம்‌ திறக்கப்பட்டது. 30.6.90இல்‌ இருந்து 25.7.90 வரை 75 பேர்‌ வரை கொலை செய்யப்பட்‌டனர்‌.
  • 01.8.90 பொத்துவில்‌ அகதி முகாம்‌ சுற்றிவளைக்கப்பட்டு 200 பேர்‌ கைது செய்யப்பட்டனர்‌. அதில்‌ 100பேர்‌ சுடப்பட்‌டனர்‌.
  • 2.8.90 பொத்துவிலில்‌ மேலும்‌ இரு தமிழர்கள்‌ கொல்‌லப்பட்டனர்‌.

 கோமாரி

  • 28.7.90 கோமாரி அகதிகள்‌ முகாமில்‌ இருந்து 18 தமிழர்‌கள்‌ படுகொலை செய்யப்பட்‌டனர்‌.
  • 20.6.90 கோமாரியில்‌ 15 வீடுகளும்‌ 2 கடைகளும் கொள்ளை அடிக்கப்பட்டன. 4 இளைஞர்‌கள்‌ கொல்லப்பட்டனர்‌.

திருக்கோயில்‌ 

  • 27.6.90 திருக்கோயிலில்‌ 25 இளைஞர்கள்‌ இரகசிமாக கைதுசெய்யப்பட்டு கொல்லப்பட்டனர்‌.
  • 8.7.90 சாகாமப்‌ பகுதியில்‌ 75 வீடுகள்‌ எரிக்கப்பட்‌டன.
  • 9.7.90 கஞ்சிக்குடியாறு, தங்கவேலாயுதபுரத்தில்‌ 150 வீடுகள்‌ கொள்ளையடிக்கப்‌பட்டு எரிக்கப்பட்டன. 10 தமிழர்கள்‌ கொல்லப்பட்டனர்‌. 2000க்கு மேற்பட்ட ஆடுகள்‌, மாடுகள்‌ பிடித்துச்‌ செல்‌லப்பட்டன.
  • 2.8.90: 15 பொதுமக்கள்‌ சுடப்பட்டு இறந்தனர்‌.

அக்கரைப்பற்‌று

  • 24.06.90: 85 பொதுமக்கள்‌ கொல்லப்பட்டனர்‌. 
  • 25.06.90: 76 பொதுமக்கள்‌ கொல்லப்பட்டனர்‌.
  • 26.6.90 ஆலையடிவேம்பில்‌ வைத்து 5 பொதுமக்கள்‌ கொல்லப்பட்டனர்‌. 
  • 28.60.90: 10 தமிழர்கள் கொல்‌லப்‌பட்டனர்‌. 
  • 03.07.90ல்‌ இருந்து 20.7.90 வரை 103 தமிழர்கள்‌ கொல்‌லப்பட்டனர்‌. 
  • 1529 வீடுகள்‌ சேதமாக்கப்‌பட்டன. 129 வீடுகள்‌ முற்றாக எரிக்கப்பட்டன. 20 கடைகளும்‌, 2 அரவை ஆலைகளும் எரிக்கப்பட்டன.

நிந்தவூர்‌ 

  • 8.7.90: 89 தமிழர்கள்‌ நிந்‌தவூர்‌ முருகன்‌ ஆலயத்தில்‌ வைத்து சுடப்பட்டு ஆலயத்‌துள்‌ போட்டு எரிக்கப்பட்டுள்‌ளனர்‌. 
  • 2.8.90 அட்டப்பள்ளத்தில்‌ 40 தமிழர்கள்‌ கைது செய்யப்‌பட்டனர்‌. 5 பேர்‌ சுடப்பட்டு கொல்லப்பட்டனர்‌. வயலில்‌ அரிவு வெட்ட சென்ற 7 பேர்‌ கொல்லப்பட்டனர்‌. 
  • 2.8.90 வரை காரைதீவு கிராமத்தில்‌ 108 தமிழர்கள்‌ கொல்லப்பட்டனர்‌.

கல்‌முனை 

  • 14.6.90 - 20.0.90 வரை மல்வத்தை இராணு முகாமில்‌ இருந்து நடத்தப்பட்ட பீரங்கித் தாக்குதலில்‌ 85 பொதுமக்கள்‌ கொல்லப்பட்டனர்‌. 60 பேர்‌ காயமடைந்தனர்‌. கல்முனை 1ஆம்‌ 2ஆம்‌ குறிச்‌சியில்‌ 65 வீடுகளும்‌ பாண்டிருப்பில்‌ 30 வீடுகளும்‌ 35 அரசாங்கக் கட்டிடங்களும்‌ சேதத்‌திற்குள்ளாகின. 
  • 21.6.90 நீலாவணையில்‌ 25 தமிழர்கள்‌ கொல்லப்பட்‌டனர்‌. 14 கடைகள்‌ கொள்‌ளையடிக்கப்பட்டன. கல்‌முனை நகரில்‌ 40 தமிழர்கள்‌ தீயிட்டுக்‌ கொளுத்தப்பட்டனர்‌. 
  • கல்முனை 1ஆம்‌ 2ஆம்‌ குறிச்சிகளில்‌ 340 வீடுகள்‌, பாண்‌டிருப்பில்‌ 210 வீடுகள்‌, நற்‌பிட்டிமுனையில்‌ 35 வீடுகள்‌, சேனைக்குடியிருப்பில்‌ 20 வீடுகள்‌ கொள்ளையடிக்கப்பட்டு எரிக்கப்பட்டன. 
  • கல்முனைநகரில்‌ 36 பலசரக்‌குக்‌ கடைகளையும்‌ 10 நகைக்‌ கடைகளையும்‌ கொள்ளையிட்டபின்‌ சேதப்படுத்தினர்‌.
  • 21.6.90 பாண்டிருப்பில்‌ 80 தமிழர்கள்‌ சுற்றிவளைக்கப்‌பட்டு கல்முனையில்‌ உள்ள தமிழர்களின்‌ கடைக்குள்‌ போட்டு எரிக்கப்பட்டனர்‌. இவர்களைத்தேடி இராணுவ முகாமுக்குச்‌ சென்ற 60 பெண்‌கள்‌ பாலியல்‌ வன்முறைக்குள்‌ளாக்கப்பட்டு கொல்லப்பட்டனர்‌.
  • பாத்திமா நகர்‌ அகதிமுகாமில்‌ இருந்து கைது செய்யப்‌பட்ட 90 பொதுமக்கள்‌ கல்‌முனை நகரில்‌ எரிக்கப்பட்டனர்‌. 
  • 3. 7. 90 பாண்டிருப்பு மீண்‌டும்‌ சுற்றிவளைக்கப்பட்டு பாண்டியூரன்‌ உட்பட 65 பொதுமக்கள்‌ சுட்டுக்‌ கொல்‌லப்பட்டனர்‌.
  • 28.7.90 மீண்டும்‌ கல்முனையையும்‌, பாண்டிருப்பையும்‌ சுற்றிவளைத்து 35 பொதுமக்களை சுட்டுக்கொன்றனர்‌. இம்‌ 35 பேரும்‌ கல்முனை நகரில்‌ கடை வைத்திருந்த தமிழர்கள்‌ ஆவர்‌.

சம்மாந்துறை 

  • வீரமுனையில்‌ கைதுசெய்‌யப்பட்ட 40 தமிழர்கள்‌ சம்‌மாந்துறை காவல்‌ நிலையத்‌திற்கு அருகில்‌ உள்ள வீதிகளில்‌ எரிக்கப்பட்டனர்‌. 
  • 21.6.90: 20 தமிழர்கள்‌ சுடப்பட்டனர்‌. பின்‌ வீரமுனையில்‌ கைது செய்யப்‌பட்ட 90 தமிழர்கள்‌ சம்மாந்‌துறை சந்தியில்‌ வைத்து எரிக்கப்பட்டனர்‌. 60 வீடுகள் எரிக்கப்பட்டன.
  • 25.6.90 சம்மாந்துறையில்‌ 80 தமிழ்‌ மக்கள்‌ வெட்டியும்‌, சுட்டும்‌ கொல்லப்பட்டனர்‌.
  • 30.6.90 சவளக்கடையில்‌ 6 தமிழர்கள்‌ கொல்லப்பட்‌டனர்‌. 25 வீடுகள்‌ எரிக்கப்‌பட்டன. 
  •  1.7.90 சம்மாந்துறையில்‌ 52 தமிழர்கள்‌ கொல்லப்பட்‌டனர்‌. 40 வீடுகள்‌ எரிக்கப்‌பட்டன. 
  • சொறிக்கல்முனையில்‌ 85 வீடுகள்‌ எரிக்கப்பட்டன. 2 பெண்கள்‌ பாலியல்‌ வன்‌ முறைக்குள்ளாக்கப்பட்டனர்‌ . 
  • 27.6.90 வீரமுனையில்‌ 360 வீடுகள்‌ எரிக்கப்பட்டன. 69 தமிழர்கள்‌ கொல்லப்பட்‌ டனர்‌. 
  • 4ஆம்‌ காலணி என்ற கிராமம்‌ முற்றாக அழிக்கப்பட்டது. 35 தமிழர்கள்‌ சுடப்பட்டனர்‌. 280 வீடுகள்‌ எரிக்கப்படடன. 
  • மல்வத்தை, மல்லிகைத்தீவு, வளத்தாப்பிட்டி போன்ற கிராமங்கள்‌ முற்றாக அழிக்கப்‌பட்டன. மல்வத்தையில்‌ 170 வீடுகளும்‌ மல்லிகைத்தீவில்‌ 35 வீடுகளும்‌ வளத்தாப்பிட்டியில்‌ 115 வீடுகளும்‌ கொள்ளையடிக்கப்பட்டு எரிக்கப்பட்‌டன. 

தலைமைச்‌ செயலகம்‌ 
வி.பு.ம.மு.

 

*****

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

செய்திகள்

 

  • நாளேடுஉதயன்
  • திகதி: 18/08/1990
  • பக்கம்: 1

 

ஏறாவூரில் அமெரிக்கரான கத்தோலிக்க மதகுருவை முஸ்லிம் குழு கடத்தியது

மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர்ப் பகுதியில் இருந்து கத்தோலிக்க மதகுரு ஒருவரை முஸ்லிம் ஆயுதக் குழு ஒன்று கடத்திச் சென்றுவிட்டதாகக் அறிவிக்கப்படுகிறது.

அமெரிக்க நாட்டைக் சேர்ந்தவரான அந்த மதகுருவை முஸ்லிம் குழுவிடமிருந்து மீட்பதற்காக, அரசுப்படையில் தனிப் பிரிவு ஒன்று ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்ததாக ஏஜென்சிச் செய்திகள் தெரிவித்தன.

(அ-எ)

 

*****

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

செய்திகள்

 

  • நாளேடுஉதயன்
  • திகதி: 19/08/1990
  • பக்கம்: 1

 

வீரமுனைப் பகுதியில் 91 தமிழர்கள் சுட்டுக்கொலை!
125 பேர் வரை காயமுற்றனர்

அம்பாறை மவட்டம் வீரமுனையில் நேற்று முந்தினம் அப்பாவித் தமிழர்கள் 91 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். சுமார் 125 பேர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிப் படுகாயமுற்றனர்.

இப்பகுதியில் உள்ள ஊர்காவல் படையினருக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டு சிலமணி நேரத்துக்குள் இச்சம்பவம் இடம்பெற்றிருக்கிறது.

விடுதலைப் புலிகள் வட்டாரங்களிலிருந்து இத்தகவல் தெரியவந்தது.

காயமுற்ற தமிழர்ளை இராணுவத்தினர் அம்பாறைக்கு கொண்டுசென்றதாகவும் தெரிவிக்கப்பட்டது

(உ- 5)

 

*****

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

செய்திகள்

 

  • நாளேடுஈழநாதம்
  • திகதி: 20/08/1990
  • பக்கம்: 1

 

அதிரடிப்படையுடன் முஸ்லிம் குண்டர் தமிழின அழிப்பு!
துறைநீலாவணையில் 60 தமிழர் இரவில் வெட்டியும் சுட்டும் கொலை!

(அம்பாறை)

அம்பாறை மாவட்டத்திலுள்ள துறைநீலாவணையினுள் அதிரடிப்படை சகிதம் கடந்த பன்னிரெண்டாம் திகதி புகுந்த ஆயுதந் தாங்கிய முஸ்லிம் குண்டர்கள் அறுபது தமிழர்களைத் துடிதுடிக்கக் கூரிய ஆயுதங்களினால் வெட்டியும் குத்தியும் துப்பாக்கிகளால் சுட்டும் கொலை செய்தனர் என்ற தகவல் சிறிது தாமதமாகக் கிடைத்துள்ளது. இப்பகுதிகளில் சிங்கள இராணுவம், அதிரடிப்படை, முஸ்லிம் குண்டர்கள் தமிழின அழிப்பில் ஒன்றுபட்டு ஈடுபடுகின்றனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

அம்பாறை மாவட்டத்தில் தமிழர் படுகொலைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சிறிலங்கா இராணுவத்தினரும், சிங்கள ஊர்காவற்படையினரும், இவர்களுடன் முஸ்லிம் ஊர்காவற்படையினரும் சேர்ந்து தமிழர்களைக் கண்ட இடங்களிலெல்லாம் குத்தியும், வெட்டியும், சுட்டும் கொன்று வருகின்றனர். இதனால் தமிழர்களின் பல குடும்பங்களே முற்றாக அழிக்கப்பட்டு வருகின்றன என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 12ம் திகதி மாலை ஐந்து மணிக்கு சேனைக்குடியிருப்பிற்குள் புகுந்த முஸ்லிம் ஊர்காவற்படையினர் பத்துத் தமிழர்களைச் சுட்டுக் கொன்றுள்ளனர்.

அதே தினத்தில் துறைநீலாவணை கிராமத்தில் மாலை 5:30 மணிக்கு துவிச்சக்கர வண்டிகளில் சென்று கொண்டிருந்த ஐந்து தமிழ் இளைஞர்களை சிங்கள இராணுவத்தினர் சுட்டுக்கொன்றுவிட்டு இறந்தவர்களின் உடல்களை டயர் போட்டு எரித்துள்ளனர்.

 



 

  • நாளேடுஉதயன்
  • திகதி: 20/08/1990
  • பக்கம்: 4

வீரமுனைச் சம்பவத்தில் தமிழர் வீடுகளும் தீக்கிரை

யாழ்ப்பாணம்‌, ஆக. 20 

வீரமுனைப்‌ பிள்ளையார்‌ கோவில்‌ பகுதியில்‌ கடந்த வெள்ளியன்று தமிழர்கள்‌ படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் போது தமிழர்களிள்‌ பல வீடுகள்‌ மற்றும்‌ உடைமைகளும்‌ முஸ்லிம்களினால்‌ சூறையாடப்பட்ட பின்னர்‌ தீயிட்டுக்‌ கொழுத்தப்பட்‌டிருக்கின்‌றன.

பத்துக்கும்‌ மேற்பட்ட குழந்‌தைகளைக்‌ கொலையாளிகள்‌ காலில் பிடித்து அடித்‌துக்‌ கொன்றதாகவும்‌--

எட்டு வயதுக்கு உட்பட்ட 22 சிறுவர்கள்‌, 16 வயதுக்கும்‌ 18 வயதுக்கும்‌ உட்பட்ட 9 பெண்கள்‌, திருமணமான பெண்கள்‌ 33பேர்‌, மற்றும்‌ வயோதிபர்கள்‌ உட்பட 19 ஆண்கள்‌ இந்தச்‌ சம்பவத்தில்‌ குத்தியும்‌, வெட்டியும்‌, சுட்‌டும் கொல்லப்பட்டிருப்பதாகவும் - 

விடுதலைப்‌ புலிகள்‌ வட்டாரங்களில்‌ இருந்து தெரியவந்திருக்கிறது.

(உ-5)

 

*****

 

Edited by நன்னிச் சோழன்

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

செய்திகள்

 

  • நாளேடுஈழநாதம்
  • திகதி: 22/08/1990
  • பக்கம்: 3

 

இருநூறு முஸ்லிம்களுக்கு இராணுவப் பயிற்சி

கொழும்பு, ஆகஸ் 22

மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 200 முஸ்லிம் இளைஞர்களுக்கு இரண்டு வார கால இராணுவப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் காத்தான்குடி, ஏறாவூர் பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

 



 

  • நாளேடுஉதயன்
  • திகதி: 22/08/1990
  • பக்கம்: 4

 

4 தமிழர்கள் உயிருடன் எரிப்பு

யாழ்ப்பாணம், ஆக 22

ஏறாவூரில்‌ தளவாய்‌ என்‌னுமிடத்தில்‌ நான்கு தமிழர்கள்‌ உயிருடன்‌ எரித்துக்‌ கொல்லப்பட்டனர்‌.

கடந்த திங்கள்‌ ஊர்காவல்‌ படையினரும்‌ இராணுவத்‌தினருமே இந்த கொலைகளைச்‌ செய்தனர்‌ என்றும்‌ --

பொதுமக்களுக்குச்‌ சொந்தமான 10 வள்ளங்களையும்‌ 8 வீடுகளையும்‌ அவர்கள்‌ எரித்து அழித்தனர்‌ என்றும்‌ கூறப்பட்டது.

 

*****

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

செய்திகள்

 

  • நாளேடுஉதயன்
  • திகதி: 03/09/1990
  • பக்கம்: 4

 

முஸ்லிம் ஊர்காவலரினால் பெண்கள் படுகொலை

யாழ்ப்பாணம், செப்.3 

கிழக்கில் முஸ்லிம் ஊர்காவல் படையினர் தமிழ்ப் பெண்களைப் படுகொலை செய்துவருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

கிழக்கிலங்கைப் பல்கலைக்கழக அகதி முகாமிலிருந்து வெளியேறி வேறு முகாம் ஒன்றுக்குச் சென்ற தமிழ் அகதிப் பெண்கள்மீது முஸ்லிம் ஊர்காவல் படையினர் நடத்திய தாக்குதலில் ஒரு பெண் பலியானார். மற்றொரு பெண் காயமுற்றார். கடந்த வெள்ளியன்று நடந்த இந்தச் சம்பவத்தில் மார்க்கண்டு அருளம்மா (வயது 35) என்ற மூன்று பிள்ளைகளின் தாயாரே உயிரிழந்தவர். 

மட்டக்களப்பு மாவட்டம் ஐயங்கேணியில் நடந்த மற்றொரு சம்பவத்தில் முஸ்லிம் ஊர்காவல் படையினரால் 2 பெண்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஆறு பிள்ளைகளின் தாயாரான செல்லத்துரை தங்கத்துரை [வயது 45] செல்லத்துரை அருளம்மா [வயது 60] ஆகியோரே சுட்டுக்கொல்லப்பட்டனர்.

[உ]

 

*****

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

செய்திகள்

 

  • நாளேடுஉதயன்
  • திகதி: 06/09/1990
  • பக்கம்: 2

 

ஏறாவூரில் சகோதரர்கள் வெட்டிக்கொலை

வட்டுக்கோட்டை, செப்.6 

வட்டுக்கோட்டை சிவன் கோவிலடியைச் சேர்ந்த இரு சகோதரங்கள் ஏறாவூரில் முஸ்லீம் குண்டர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

ஏறாவூரில் மின்சார அத்தியட்சகராக பணிபுரிந்த தர்மலிங்கம் கருணாகரன் என்பவரும் அவரது சகோதரர் நடராசா என்பவருமே இவ்வாறு கொலையுண்டவர்கள் ஆவர்.

ஏறாவூர்ப் பகுதியில் வன் செயல்கள் ஆரம்பமானதைத் தொடர்ந்து மட்டக்களப்புக்கு அகதிகளாகத் தங்கள் குடும்பங்ளுடன் இவர்கள் சென்றிருந்தனர் எனவும்-

இடையில் தாம் இருந்த வீடுகளைப் பார்க்கச் சென்ற போதே கொலை செய்யப்பட்டார்கள் என்று அறிய வந்துள்ளது.

இவர்களின் குடும்பங்கள் இன்னமும் மட்டக்களப்பிலேயே தங்கி உள்ளன.

[அ-161]

 

*****

 

Edited by நன்னிச் சோழன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.