Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

Published By: RAJEEBAN

25 SEP, 2023 | 09:53 AM
image
 

சீனாவின் ஆராய்ச்சிக்கப்பல் இலங்கைக்கு வருவது குறித்து அமெரிக்கா கரிசனை வெளியிட்டுள்ளது.

இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரியை சந்தித்தவேளை விக்டோரியா நூலண்ட் இது குறித்த அமெரிக்காவின் கரிசனையை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து பதிலளித்துள்ள வெளிவிவகார அமைச்சர் நடுநிலை நாடு என்ற வகையில் வெளிநாட்டு கப்பல்கள் விமானங்கள் இலங்கைக்குள் தங்களது நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அனுமதிப்பது தொடர்பில் நிலையான செயற்பாட்டு முறையொன்றை உருவாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தில் அனைத்து நாடுகளுடனும் ஒரேமாதிரியான அணுகுமுறையையே இலங்கை பின்பற்றுகின்றது என தெரிவித்துள்ள வெளிவிவகார இவ்வாறான நடைமுறையிலிருந்து சீனாவை மாத்திரம் விலக்கிவைக்கமுடியாது எனவும்தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் கூட்டத்தொடரிற்காக அமெரிக்கா சென்றுள்ள அலி சப்ரி அங்கு விக்டோரியா நுலண்டை சந்தித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/165365

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கருசணையின் உச்சமாக அமெரிக்கா அந்தக் கப்பலுக்கு சாயம் பூசி விடும். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சீன இன்னும் இலங்கைக்கான கடன் பொறியை தாமதப்படுத்தும் திட்ட்துக்கு அனுமதிகொடுக்கவில்லை. அடுத்த மாதம் சீனாவுக்கு ரணில் விஜயம் மேட்கொள்ள இருக்கிறார். எனவே சீனாவை தாஜா பண்ணியே ஆக வேண்டும். ரணில் இப்போது மேட்குலக நாடுகளை தாக்குவது போல தாக்குகிறார். சீன ஒரு முடிவு எடுக்கும் வரைக்கும் இலங்கையின் பாடு பெரும்பாடுதான். 



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.