Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

adb.jpg

பொருளாதார உறுதிப்பாடு மற்றும் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியிலிருந்து கொள்கை அடிப்படையிலான விசேட கடன் வசதிகளை பெற்றுக்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் இருந்து குறித்த வேலைத்திட்டத்திற்காக 200 மில்லியன் அமெரிக்க டொலர் வீதம் கொள்கை அடிப்படையிலான தலா 2 கடன் வசதிகள் பெற்றுக்கொள்ளப்படவுள்ளன.

முதலாவது துணை வேலைத்திட்டத்தின் கீழ், 2 சதவீத வருடாந்த வட்டி வீதத்தில் 5 வருட சலுகைகாலத்துடன், 25 வருட மீள் செலுத்துகை தவணை காலத்துக்கான கடனை பெறும் வகையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.

https://thinakkural.lk/article/274562

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இரண்டாவது கடன் தொகுதியும் கிடைக்க போகுது. இனி என்ன பழையபடி கடன்களை வாங்க தொடங்க வேண்டியதுதானே. இவர்களுக்குக்கடன் வாங்குவதில்   உள்ள சந்தோஷத்தைப்போல வேறு ஒரு சந்தோஷமும் கிடையாது. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கடன் வாக்கிறதுக்கு எப்போதாவது சொறீலங்கா அமைச்சரவை.. நோ சொல்லி இருக்கா. சொறீலங்கா இயங்கிக் கொண்டிருப்பதே கடனில் தானே. இதில அமைச்சரவை அங்கீகாரம் முக்கியம் பாருங்கோ.  🤣



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.