Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, island said:

அப்படியே ஒரு வேளை துவாரகா உயிருடன் இருந்தாலும் (?) அவரின் தனிப்பட்ட வாழ்வை அமைதியாக வாழ விடுவதே முறை. குழந்தைப்பருவத்தை யுத்தத்தின் அகோரத்தால் இழந்த அவர் தனது இளமைப் பருவத்தையாவது அமைதியாக மகிழ்வாக வாழட்டும். அவரை அரசியலுக்குள் இழுப்பது, அவரை வைத்து அரசியல் செய்து தமது சொந்த வாழ்வை வளப்படுத்தும் புலம் பெயர் மாபியாக்கள் இதை உணரவேண்டும். 

மிகவும் நன்றாக சொன்னீர்கள் 👍

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, satan said:

போராடபோனவர்கள் போராடினார்கள், மாண்டார்கள், சிலர் அமைதியாகிவிட்டார்கள், இவர்களோ அதை வைத்து பிழைக்கிறார்கள்

அதே தான்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 29/9/2023 at 16:08, satan said:

நீதிபதியே நாட்டில் இருக்க முடியாமல் தப்பி ஓடுகிறார், இவர் நகைச்சுவை அடிக்கிறார். போராடபோனவர்கள் போராடினார்கள், மாண்டார்கள், சிலர் அமைதியாகிவிட்டார்கள், இவர்களோ அதை வைத்து பிழைக்கிறார்கள். இராணுவத்தை நிரந்தரமாக தமிழர் பிரதேசங்களில் நிலைநிறுத்துவதற்கு  இவரின் இந்த காணொளி போதும். இவர் பேச்சு ஒரு போராளியின் பொறுப்பான  பேச்சாக தெரியவில்லை.      

அப்படியே . ஒரு வேளை துவாரகா உயிரோடு இருப்பாரானால், அவரையும் நிம்மதியாக இருக்க விட மாடடார்கள் , இங்குள்ள தமிழர்களையும் நிம்மதியாக இருக்க விட மாடடார்கள். தங்கள் சுய னால வியாபாரத்துக்காக எதையும் செய்யும் ஒரு கூடடம். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
36 minutes ago, Cruso said:

அப்படியே . ஒரு வேளை துவாரகா உயிரோடு இருப்பாரானால், அவரையும் நிம்மதியாக இருக்க விட மாடடார்கள் , இங்குள்ள தமிழர்களையும் நிம்மதியாக இருக்க விட மாடடார்கள். தங்கள் சுய னால வியாபாரத்துக்காக எதையும் செய்யும் ஒரு கூடடம். 

அதில்லை....... துவாரகா, இளவரசியாம், இலங்கையில் பல முன்னெடுப்புகளை செய்ய இருக்கிறாராம் ஆனால் அந்தக்குரலொலியில், தான் பேசவில்லையென யாரோ ஒருவருக்கு தன்னை விளங்க வைக்க முனைகிறார். இது நம்பும்படியாகவா இருக்கிறது? உண்மையான போராளிகள் இன்னும் சிறைகளிலே இளமையை தொலைத்துவிட்டு காத்திருக்கிறார்கள். இவர்கள் இவ்வளவு சுதந்திரமாக அறிக்கைவிடுகிறார்கள். சாதாரண மக்களின் உணர்வுகளையும் எதிர்பார்ப்பையும் நம்பிக்கையையும் வைத்து பணம் பறிக்கும் கூட்டம். அவர்களுக்கு இனத்தை பற்றி கவலையில்லை, மக்களைப்பற்றி அக்கறையில்லை, கவனமெல்லாம் சந்தர்ப்பத்தை உருவாக்கி அதை பயன்படுத்தி பணம் பறிப்பதே. அவரது உடல்மொழி, பேச்சு, ஆத்திரம் அதையே உணர்த்துகிறது. 

  • Like 1


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.