Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகத்தில் பாஜக, விஎச்பியினர் நடமாட முடியாத நிலை ஏற்படும்-திமுக கடும் எச்சரிக்கை

Featured Replies

தமிழகத்தில் பாஜக, விஎச்பியினர் நடமாட முடியாத நிலை ஏற்படும்-திமுக கடும் எச்சரிக்கை

சனிக்கிழமை, செப்டம்பர் 22, 2007

சென்னை:

முதல்வர் கருணாநிதியின் தலைமை துண்டிப்பவர்களுக்கு எடைக்கு எடை தங்கம் வழங்கப்படும் என விஎச்பி தலைவர் அறிவித்துள்ளதற்கு திமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பாஜக, விஎச்பியைச் சேர்ந்த தமிழகத்தில் தெருக்களில் நடமாட முடியாத அளவுக்கு மோசமான விளைவுகள் ஏற்படும் என திமுக எச்சரித்துள்ளது.

முன்னாள் எம்பியும் விஸ்வ இந்து பரிஷத் தலைவருமான ராம்விலாஸ் வேதாந்தி, ராமர் பற்றி விமர்சனம் செய்த திமுக தலைவரின் தலையையும், நாக்கையும் துண்டிப்பவர்களுக்கு எடைக்கு எடை தங்கம் பரிசு வழங்கப்படும். அயோத்தியில் உள்ள துறவிகள் இந்த பரிசை வழங்குவார்கள் என்றார்.

இதற்கு பதிலளித்து அமைச்சர் ஆற்காடு வீராசாமி வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:

விஸ்வ இந்து பரிஷத்தைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராம் விலாஸ் வேதாந்தி என்பவர் தலைவர் கலைஞரைத் தாக்கி "பத்வா'' ஒன்றினை அயோத்தியிலிருந்து விடுத்திருப்பதாகவும், அதில் தமிழக முதலவரின் தலையையும், நாக்கையும் யார் துண்டாடினாலும் அவர்களுக்கு அயோத்தியில் உள்ள சாமியார்களால் எடைக்கு எடை தங்கம் வழங்கப்படும் என்றும் பேசியிருப்பதாக செய்தி வந்துள்ளது.

இதே அமைப்பைச் சேர்ந்த ஒரு சிலர் பெங்களூரில் முதல்வரின் மகளின் இல்லத்தில் இரவிலே வந்து தாக்கியிருக்கின்றனர். தமிழக பேருந்தை தீயிட்டுக் கொளுத்தி 2 உயிர்கள் கருகிட காரணமாகவும் இருந்திருக்கிறார்கள்.

இத்தகைய செயல்களை செய்திடும் அமைப்புகள் மீது மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், இந்த வன்முறைகளுக்கு காரணமானவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழகத்தின் அனைத்துக் கட்சித் தலைவர்களும் அறிக்கை விடுத்துள்ளார்கள்.

முதல்வர் கருணாநிதியோ இது அவர் சம்பந் தப்பட்ட பிரச்சனை என்பதாலும், சட்டம்- ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பிலே தான் இருக்கிறோம் என்பதாலும், கழகத்தின் மாவட்டச் செயலாளர்களையும், முன்னணியினரையும் கைகளைக் கட்டிப் போட்டு எந்தவிதமான செயல்களிலும் ஈடுபடக்கூடாது என்று கடுமையாக எச்சரித்து வைத்திருக்கிறார்.

தலைவரின் எச்சரிக்கை காரணமாக அமைதியாக இருக்கும் கழகத்தவர்களை கோழைகள் என்று எண்ணிக் கொண்டு பாஜகவினரும், விஸ்வ இந்து பரிஷசத்தை இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் வாய் நீளம் காட்டினால், அதே பாணியில் திமுகழகத் தோழர்களும் தன்னிச்சையாக செயலில் ஈடுபடுவதைக் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படும்.

கலைஞரின் தலையையும், நாக்கையும் துண்டாடுவோம் என்று சொல்கின்ற அளவிற்கு ஒருவனுக்கு தைரியம் வருகின்றது என்றால், தமிழ்நாட்டுத் தெருக்களில் அந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்களை நடமாட முடியாத நிலைமையை உருவாக்குவோம்.

இது பெரியார் பிறந்த மண். பேரறிஞர் அண்ணா வளர்த்த தம்பிகள் நாங்கள் இன்னும் உயிரோடுதான் இருக்கிறோம்.

பகுத்தறிவு என்றால் என்ன என்றே தெரியாமல், மதத்தைச் சொல்லி, கடவுளைச் சொல்லி, ராமர் பெயரால் கட்சியை நடத்தி மத உணர்வுகளை தூண்டி விட்டுக் கொண்டிருக்கும் காட்டு மிராண்டிக் கும்பலைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினன் ஒருவன் உதிர்த்த வார்த்தைகளை உடனடியாகத் திரும்பப் பெறவில்லை என்றால்,

தலைமையின் அனுமதியினைப் பெற்று இன்னும் ஒரு வார காலத்தில் தமிழ்நாட்டில் உள்ள பாஜக அலுவலகங்கள் முன்பு கழகத் தோழர்களைத் திரட்டி கருப்புக் கொடி காட்டி, மறியல் செய்திட நானே தலைமை தாங்குவேன்.

அமைச்சர் பதவியில் இருந்து கொண்டு இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுவது சரியல்ல என்று யாராவது சொன்னால், அமைச்சர் பதவி எங்களுக்கு பெரிதல்ல. சுயமரியாதை ரத்தம் எங்கள் உடலில் ஓடிக் கொண்டிருக்கிறது. எங்கள் தலைவரைப் பற்றி தவறாகக் கூறிய வேதாந்தி அல்ல. வேறு எவன் சொன்னாலும், அதை தமிழகம் கேட்டுக் கொண்டிருக்காது என்பதை இந்தியாவே புரிந்து கொள்ளச் செய்வோம்.

இந்தியா மதச் சார்பற்ற நாடு. மதத்தைப் பயன்படுத்திக் கொண்டு ஒரு இயக்கம் கட்சி நடத்துவதற்கும், கண்டபடி பேசுவதற்கும் தமிழகம் தக்கவாறு பதிலளிக்க தயாராக இருக்கிறது. இன்று பெரியார் இல்லை தான். ஆனால் அவரால் வளர்க்கப்பட்ட நாங்கள் இருக்கிறோம்.

எங்களுக்கு உயிர் பெரிதல்ல. எங்கள் தலைவனைத் தாக்கிப் பேசிய பிறகும் அதைத் தாங்கிக் கொண்டு மனிதப் பிறவிகள் என்று எங்களைச் சொல்லிக் கொள்ள நாங்கள் தயாராக இல்லை.

தமிழ்நாட்டு மக்களே, திமுகழகத்தினைச் சேர்ந்த நண்பர்களே, வேதாந்தி என்பவனுக்கும், அவனுடைய அமைப்பைச் சேர்ந்தவர் களுக்கும் சரியான வகையில் பதில் கூறத் தயாராவோம். நம் தலைவரின் உயிரைப் பற்றி விலை பேசும் வட நாட்டுத் தருக்கன் ஒருவனுக்கு சரியான புத்தி புகட்டிட வேண்டாமா, இன்றே புறப்படுங்கள்.

இவ்வாறு ஆற்காடு வீராசாமி கூறியுள்ளார்.

http://thatstamil.oneindia.in/news/2007/09...jp-and-vhp.html

முதல்வருக்கு சரத்குமார் சவால்

Saturday, 22 September, 2007 11:48 AM .

சென்னை, செப். 22: ராமரை இழிவாக பேசும் முதலமைச்சர் கருணாநிதி இந்துக்களின் ஓட்டுகளை வேண்டாம் என்று கூறத் தயாரா? என அவருக்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் சவால் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:. சேது சமுத்திர திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்பது தான் எங்கள் கட்சியின் விருப்பம். அதே நேரத்தில் ராமர் பாலத்தை இடிக்காமல் மாற்று பாதை இருக்குமேயானால், அவ்வழியே இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

ராமரை குடிகாரர் என்று நான் கூறவில்லை என்றும், ராமாயணத்தில் வால்மீகி கூறியிருக்கிறார் என்றும், வேண்டுமானால் ஒரே மேடையில் விவாதிக்க தயாரா? என்றும் அத்வானிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

முதலமைச்சர் இன்று ராமர் இல்லை என்று சொல்லுவார்.

நாளை முருகக் கடவுள் யார்? அவர் எப்படி மயில் வாகனத்தில் பறக்க முடியும்? பிள்ளையாருக்கு எலி எப்படி வாகனமாக முடியும்? ஐயப்பன் ஏன் குன்றின் மீது இருக்கிறார்? வெங்கடாசலபதியின் பூர்வீகம் என்ன? என்றெல்லாம் கேட்பார்.

இது தான் அரசியல் ஞானமா?இவ்வாறு முதலமைச்சர் பேசிவருவதால் அமைதியாக இருக்கும் நம் தமிழகம் மத சர்ச்சைகளில் ஈடுபட்டு மதக்கலவரத்தை தூண்டி வன்முறை வெடிக்க வழி வகுக்குமோ என்ற அச்சம் எங்களுக்கு ஏற்படுகிறது. ஒட்டுமொத்த இந்துக்களின் உணர்வுகளை மதிக்காமல் வெளியிட்ட கருத்துக்களை முதலமைச்சர் வாபஸ் பெறுவதோடு, வருத்தம் தெரிவிக்க வேண்டும்.

ராமரை இழிவாக பேசும் முதலமைச்சர் கருணாநிதி இந்துக்களின் ஓட்டுகளை வேண்டாம் என்று கூறத் தயாரா? இவ்வாறு அவர் கூறினார்.

-----------------------------

சேது சமுத்திரத்திட்டத்துக்கு பெட்டி கைமாறி விட்டது விஜயகாந்த்

Saturday, 22 September, 2007 03:11 PM .

சென்னை, செப்.22: சேது சமுத்திரத்திட்டத்துக்கு பெட்டி கைமாறியதால்தான் அதனை நிறைவேற்றுவதில் அவசரமும், ஆர்வமும் காட்டுகிறார்கள் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட தேமுதிக செயலாளர் எஸ்.சேகர் தலைமையில் திமுக, அதிமுக, பாமக, பிஎஸ்பி புரட்சிபாரதம் ஆகிய கட்சிகளை சேர்ந்த ஆண்களும் பெண்களுமாக 3 ஆயிரம் பேர் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தில் இணைந்தனர்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கட்சியில் இணைந்தவர்களை வரவேற்று விஜயகாந்த் பேசியதாவது: திமுக, அதிமுக என்று எந்த கட்சியினராக இருந்தாலும் மக்களுக்கு எதுவும் செய்வதில்லை. தனி மனித வருமானம், வேலை வாய்ப்பு, சுகாதாரம் என்று எதையும் அவர்கள் செய்வதில்லை.

ராமர் என்ஜினியரிங் காலேஜில் படித்தாரா என்ற கேள்வி கேட்டு ஒரு முதலமைச்சர் எந்த மதத்தையும் தாழத்தி பேசக்கூடாது இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசக்கூடாது. மனதைப் புண்படுத்தும்படி பேசக்கூடாது. மதம் என்பது நம்பிக்கை. அண்ணாவின் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கை என்ன ஆயிற்று.

கண்ணகி மதுரையை எரித்ததாக கூறுவதை ஒப்புக்கொள்கிறார்களே? ராமர் பாலத்தை மட்டும் ஏன் கட்டுக்கதை என்கிறீர்கள்?. பட்டினத்தார் யாரு? மகாகவி காளிதாசர் யாரு? என்று கேட்க முடியுமா? முன்னுக்கு பின் முரணாக பேசி மக்களை ஏமாற்றக்கூடாது.

சேது சமுத்திர திட்டம் செயல்படுத்த 2400 கோடி ரூபாய் ஒதுக்கி இருக்கிறார்கள். இதில் பெட்டி போய்விட்டது. எனவே அதை செயல்படுத்த எதை எதையோ பேசுகிறார்கள். நான் பயப்படாமல் இதை சொல்வேன். இதற்காக என்னை ஜெயிலில் போடுவார்கள். போட்டால் ஜாலியாக இருப்பேன்.

இப்போது பெங்களூரில் பெட்ரோல் குண்டு வீசியதற்கு ராமர் குண்டு போட சொன்னாரா என்று கேட்டுள்ளார்.

ஆனால் மதுரையில் பெட்ரோல் குண்டு வீசி 3 பேர் கொல்லப்பட்டது பற்றி ஒன்றுமே கூறாதது ஏன்? அதுவும் உங்கள் கட்சிக்காரர்கள் தானே. தைரியம் ல்லாதவர்கள் கூட்டணி வைத்துக்கொள்வார்கள். எனக்கு தைரியம் இருக்கிறது. கூட்டணி பற்றி மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். நான் மக்களை சந்திப்பேன். நீங்களும் வாருங்கள் வந்து மக்களை சந்தியுங்கள். கூட்டணி பற்றி மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.

Edited by devapriya

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம். கலைஞர் ஒரு முதலமைச்சர் பதவியில் இருந்து கொண்டு இப்படிச் சவால் விடுகின்றது அவருக்குப் பகுத்தறிவில்லை என்பதைத் தான் புலனாக்குது.

தி.மு.க விற்கு பிடித்தது கேடுகாலம். அரசியல் அறிந்த கலைஞர் அவசரமொழியால் அழிந்தார் என்ற நிலை வேண்டுமா? சிந்தனை செய்வீர்.

Edited by vettri-vel

  • தொடங்கியவர்

திராவிட கொள்கையாளர் வலிந்து எதிர்பார்த்த தருணம் இது... சரியாக பயன் படுத்துகிறார்களா இல்லை. பணிந்து போகிறார்களா எண்று பொறுத்து பார்க்கலாம்...

பணிந்து போவதாக இருந்தால் நடைமுறைக்கு சாத்தியம் இல்லாத கொள்கைகளை தூக்கி வச்சு என்ன பயன் எண்டு கேள்வி எல்லாம் நான் கேட்பேன் பதில் சொல்ல தயாராக இருங்கள்...!

ஆட்சியை கலைத்து விட்டு மறு தேர்தல் வைக்கட்டும்.

ஆனால் நான் தொடர்ந்து இந்து மதவிரோதமாக பேசுவேன்.

வீபூதி, குங்குமம் என் குடும்பத்தினர் வைப்பர். ஆனால் வீபூதி, குங்குமம் வைக்கும் தமிழர்களை நான் கேவலப்படுத்தியே பேசுவேன். இதை ஏற்பவர் மட்டும் ஓட்டு போடுங்கள் எனச் சொல்லி மு.க. வரட்டும்.

  • தொடங்கியவர்

நீண்ட காலமாக எனக்கு ஞாபகத்தில் வராத அறிஞர் அண்ணாவில் கொள்கை ஆகிய " ஒண்றே குலம் ஒருவனே தேவன்" எனும் பதத்தை ஞாபகப்படுத்திய விஜயகாந்து நண்றி...

கருணாநிதிக்கு பிஜேபி சவால்

Saturday, 22 September, 2007 03:18 PM

.

சென்னை, செப். 22: திமுகவின் இந்து விரோத நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க தயாரா என்று முதல்வருக்கு பிஜேபி சவால் விடுத்துள்ளது. இது தொடர்பாக அதன் மாநில துணைத் தலைவர் எச்.ராஜா வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் கூறியிருப்பதாவது:

.

ராமர் பாலம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் தொடர்ந்து இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்துகின்ற விதத்தில் ஆணவத்துடன் பேசி வருவது வன்மையாக கண்டிக்க தக்கதாகும்.

வால்மீகி ராமயணத்தில் என்ன கூறப்பட்டுள்ளது என்பது கருணாநிதிக்கு எப்படி தெரியும். இவர் எந்த சமஸ்கிருத பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதம் பயின்றார். மேலும் அத்வானியுடன் இவரால் ஆங்கிலத்திலோ அல்லது இந்தியிலோ விவாதம் நடத்த முடியாது. எனவே இவருடைய வசதிக்காகவும், பார்வையாளர்களின் வசதிக்காகவும் தமிழில் விவாதம் நடத்திட நான் தயாராக இருக்கிறேன். தமிழக முதல்வர் தயாரா?

யாருடைய மத உணர்வுகளை புண்படுத்தும் செயலினை திமுக செய்யாது செய்ததுமில்லை என்று முதல்வர் கூறியதில் உண்மை இல்லை என்பதை அனைவரும் அறிவர். எனவே ராமர் பற்றி மட்டுமன்று ஆரிய திராவிட இனவாதம் மற்றும் திமுகவில் குறிப்பாக முதல்வரின் இந்து விரோத நடவடிக்கைகள் குறித்தும் பிஜேபி சார்பில் விவாதிக்க நான் தயார். முதல்வர் தயாரா? என்பதை தெரிவிக்குமாறு தமிழக முதல்வரை கேட்டுக் கொள்கிறேன்.

கன்னியாகுமரியில் பா.ஜ., கொடிகம்பம் வெட்டிசாய்ப்புநாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் பா.ஜ., கொடிகம்பம் வெட்டிசாய்க்கப்பட்டுள்ளது. முதல்வர் கருணாநிதி ராமர் தொடர்பான கருத்துக்கு பா.ஜ., மற்றும் இந்து முன்னணியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் குமரி மாவட்டத்தில் தக்கலை , மார்த்தாண்டம் பகுதியில் உள்ள பா.ஜ., கொடிக்கம்பம் மர்ம நபர்களால் வெட்டி சாய்க்கப்பட்டுள்ளதுபா. ஜ., ஆபீஸ் மீது தாக்குதல்: அமைச்சர்- மேயர் கைதுசென்னை: விஸ்வ இந்து பரிஷத் மண்டல தலைவர் வேதாந்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் பா. ஜ., ஆபீஸ் மீது தி. மு.க., தொண்டர்கள் தாக்குதல் நடத்திய போது உடன் இருந்த தமிழக அமைச்சர் பரிதி இளம்வழுதி மேயர் சுப்பிரமணியன் மற்றும் தொண்டர்களை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் சென்னையில் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.