Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
கிரிக்கெட்டில் 3 புதிய விதிகள் அறிமுகம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

38 நிமிடங்களுக்கு முன்னர்

சர்வதேச கிரிக்கெட்டில் 3 புதிய விதிகளை ஐ.சி.சி. அறிவித்துள்ளது. அவற்றில் ஒன்றான ஸ்டாப் கிளாக் என்ற புதிய விதிமுறை பந்துவீசும் அணிக்கும், பவுலர்களுக்கும் புதிய நெருக்கடியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்டாப் கிளாக் விதிமுறை என்ன? அதனால் பந்துவீசும் அணிக்கு என்ன நெருக்கடி? மற்ற இரு விதிகள் என்ன? சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்ற முதல் திருநங்கையான டேனியல் மெக்காஹேவுக்கு என்ன பிரச்னை? இந்த 3 விதிகளும் எப்போது முதல் அமலுக்கு வரும்? விரிவாகப் பார்க்கலாம்.

ஸ்டாப் கிளாக் விதிமுறை

ஐசிசி நிர்வாகிகள் கூட்டம் நவம்பர் 21ஆம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக ஐசிசி அறிவிப்பு வெளியிட்டது. அதில், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் பந்துவீச்சும் அணி ஒரு ஓவருக்கும் அடுத்த ஓவருக்கும் இடையே பந்துவீச மூன்றாவது முறையாக 60 விநாடிகளுக்கு மேல் நேரம் எடுத்துக்கொண்டால் 5 ரன்கள் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

நடப்பாண்டு டிசம்பர் முதல் 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை சோதனை முயற்சியாக இந்த விதிகள் பின்பற்றப்படும் என்று தெரிவித்திருக்கும் ஐசிசி, விளையாட்டின் வேகத்தையும் பார்வையாளர்களின் அனுபவத்தையும் மேம்படுத்துவதற்கான பரந்துபட்ட முயற்சியின் ஒரு பகுதி என்றும் கூறுகிறது.

சர்வதேச ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் ஸ்டாப் கிளாக் விதிமுறை சோதனை அடிப்படையில் புதிய விதியை கொண்டு வர ஐசிசி முடிவு செய்துள்ளது.

 
கிரிக்கெட்டில் 3 புதிய விதிகள் அறிமுகம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ஜெஃப் அல்லார்டிஸ், ஐ.சி.சி. தலைமை நிர்வாகி

சம ஊதியம், திருநங்கைகளுக்கு தடை

அடுத்ததாக, கிரிக்கெட்டில் பாலின சமத்துவத்திற்கான உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில், ஆண் அதிகாரிகளுக்கு இணையாக பெண் அதிகாரிகளும் சம ஊதியம் வழங்கப்படும் என்ற அறிவிப்பையும் ஐசிசி வெளியிட்டிருக்கிறது.

ஆடவர் போட்டியோ, மகளிர் போட்டியோ நடுவர்களுக்கு சம ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ள ஐசிசி, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இந்த அறிவிப்பு செயல்பாட்டுக்கு வரும் என்று கூறியுள்ளது.

இறுதியாக, ஆண்களாக பிறந்து பெண்களாக மாறிய திருநங்கைகள் சர்வதேச பெண்கள் கிரிக்கெட்டில் விளையாட ஐசிசி தடை விதித்துள்ளது. ஆண் எந்த அறுவை சிகிச்சை அல்லது பாலின மறுசீரமைப்பு சிகிச்சையை மேற்கொண்டிருந்தாலும், சர்வதேச பெண்கள் விளையாட்டில் பங்கேற்க தகுதி பெற மாட்டார்கள் என ஐசிசி கூறியிருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்குள் இந்த விதி மறு ஆய்வு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரிவான ஆலோசனைகளுக்கு பிறகு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த ஐ.சி.சி. தலைமை நிர்வாகி ஜெஃப் அல்லார்டிஸ், சர்வதேச பெண்கள் விளையாட்டின் ஒருமைப்பாடு மற்றும் வீரர்களின் பாதுகாப்பைப் பாதுகாப்பதே எங்கள் முன்னுரிமை என கூறியிருக்கிறார்.

 
கிரிக்கெட்டில் 3 புதிய விதிகள் அறிமுகம்

பட மூலாதாரம்,BBC SPORT

படக்குறிப்பு,

டேனியல் மெக்காஹே, சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்ற முதல் திருநங்கை

ஐசிசி விதிகளில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த மாற்றம் காரணமாக சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்ற முதல் திருநங்கையான கனடா அணியின் வீராங்கனை டேனியல் மெக்காஹே இனி மகளிர் கிரிக்கெட்டில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த ஐசிசி டி20 உலகக் கோப்பை தகுதிப் போட்டியில் 6 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள டேனியல் மெக்காஹே 19 புள்ளி 66 சராசரியுடன் 118 ரன்கள் எடுத்திருந்தார்.

புதிய விதி குறித்து பிபிசி ஸ்போர்ட்ஸிடம் பேசிய டேனியல் மெக்காஹே, "இப்போதுதான் புதிய கொள்கைகளை படித்து பார்த்தேன், ஆனால், கடந்த வாரமே இது குறித்து எனக்கு தெரிவிக்கப்பட்டது. தற்போது பேசுவதற்கு என்னிடம் அதிக வார்த்தைகள் இல்லை, ஆனால், இது ஒரு கடினமான முடிவு. உலகெங்கிலும் உள்ள இளம் திருநங்கைகளுக்கு இது ஏற்படுத்தும் தாக்கத்தை கருத்தில் கொள்ளும்போது இது நம்பமுடியாத ஏமாற்றத்தை அளிக்கிறது" என்றார்.

https://www.bbc.com/tamil/articles/ckmpznldkmno

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ஏராளன் said:

ஐசிசி நிர்வாகிகள் கூட்டம் நவம்பர் 21ஆம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக ஐசிசி அறிவிப்பு வெளியிட்டது. அதில், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் பந்துவீச்சும் அணி ஒரு ஓவருக்கும் அடுத்த ஓவருக்கும் இடையே பந்துவீச மூன்றாவது முறையாக 60 விநாடிகளுக்கு மேல் நேரம் எடுத்துக்கொண்டால் 5 ரன்கள் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

ஒரு நிமிடத்தில் வீரர்கள் மூலைக்கு மூலை இடங்கள் மாறி தயாராகி விடுவார்களா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சர்வதேச மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் திருநங்கைகள் பங்கேற்பதற்கு தடை

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய பாலின விதியின் காரணமாக இனிவரும் சர்வதேச மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் திருநங்கைகள் பங்கேற்பது தடை செய்யப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் பேரவையின் நிறைவேற்றுக் குழு கூட்டம் இந்தியாவின், அஹமதாபாத்தில் நேற்று இடம்பெற்றது. இதன்போது, புதிய பாலின தகுதி விதிமுறைமைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஹோமோன் சிகிச்சை அல்லது அறுவை சிகிச்சை மூலம் பெண்ணாக மாறியவர்கள், சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் விளையாட தகுதியற்றவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த விதி, சர்வதேச போட்டிகளுக்கு மட்டுமே பொருந்தும் எனவும், உள்ளுர் போட்டிகளில் அந்தந்த நாடுகளின் பாலின வரையறை சட்டதிட்டங்களுக்கு அமைவாக தீர்மானம் எடுக்க முடியுமெனவும் சர்வதேச கிரிக்கெட் பேரவை தீர்மானித்துள்ளது.

இந்த புதிய விதியின் மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் கலந்து கொண்ட முதல் திருநங்கையான டேனியல் மெக்காஹேவுக்கு இனிவரும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் பிறந்த டேனியல் மெக்காஹே, கனடாவுக்கு குடிபெயர்ந்துள்ள நிலையில், கனடா மகளிர் கிரிக்கெட் அணியில் இந்த ஆண்டில் அறிமுகமாகி, விளையாடி வருகிறார்.

https://thinakkural.lk/article/282074



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கையின் கடல் எல்லைக்குள் வந்து எமது மீன்வளத்தைச் சூறையாடிவிட்டு, நேவி துரத்துகிறது என்று இந்தியக் கடல் எல்லைக்குள் ஓடி ஒளிந்துவிட்டு மீண்டும் நேவி அகன்றவுடன் இலங்கை எல்லைக்குள் வந்து மீண்டும் சூறையாடலில் ஈடுபடுவார்களாம். இவர்கள் பண முதலைகள். அரசியல் செல்வாக்குள்ளவர்கள். இவர்களுக்கும் சாதாரண தமிழ் நாட்டு மீனவர்களுக்கும் தொடர்பில்லை. இதனை தடுப்பதைத்தவிர வேறு வழியில்லை. இவர்களின் கடற்கலங்கள் அழிக்கப்பட்டால் ஒழிய இவர்கள் நிற்கப்போவதில்லை.  இதற்கு இனச்சாயம் பூசத்தேவையில்லை. கடற்கொள்ளை கடற்கொள்ளைதான். 
    • விசுகர்! அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி  எலான் மஸ்க்  என சொல்கிறார்கள்.எதற்கும் அடக்கி வாசியுங்கள். 😂 
    • மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை, ஊழல் ஒழிப்பு, சட்டமா அதிபர் திணைக்களம்: சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதற்கு இம்மூன்றையும் மறுசீரமையுங்கள் - ஜனாதிபதியிடம் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தல்     (நா.தனுஜா) நாட்டில் சீர்குலைவடைந்திருக்கும் சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதை இலக்காகக்கொண்டு மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை செயன்முறையை சீரமைத்தல், ஊழல் மோசடிகளைக் கட்டுப்படுத்தல் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தை மறுசீரமைத்தல் ஆகிய மூன்று பிரதான விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவேண்டும் என ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளது.  இதுகுறித்து ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொள்கை மற்றும் செயற்திட்டப் பணிப்பாளர் பாஸில் பெர்னாண்டோவினால் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: இலங்கையில் சட்டத்தின் ஆட்சியையும், மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்படுவதையும் உறுதிப்படுத்துவதை இலக்காகக்கொண்டு மேற்கொள்ளப்படவேண்டிய மறுசீரமைப்புக்களில் பிரதானமாகக் கருத்திலெடுக்கப்படவேண்டிய மூன்று மறுசீரமைப்புக்களை உங்களது கவனத்துக்குக் கொண்டுவரவிரும்புகிறேன். நாம் கடந்த பல வருடகாலமாக இலங்கையில் சீர்குலைவடைந்திருக்கும் சட்டத்தின் ஆட்சி குறித்து தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வந்திருக்கிறோம். நீண்டகாலமாக நீங்கள் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைகளிலும், கடந்த தேர்தலின்போது தேசிய மக்கள் சக்தியினால் மேற்கொள்ளப்பட்ட நிலைப்பாட்டிலும் இவ்விடயம் உள்வாங்கப்பட்டதுடன், சிறந்த ஆட்சியியல் நிர்வாகக்கட்டமைப்பை நிறுவுதல் எனும் பொது நோக்கத்தின் அடிப்படையில் பலர் ஒன்றிணைந்தனர். எனவே கடந்த 50 வருடங்களில் முதன்முறையாக வரலாற்று ரீதியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துவதை முன்னிறுத்திய அரசியல் தன்முனைப்பு வெளிப்படுத்தப்பட்டிருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம்.  இவ்வாறானதொரு பின்னணியில் முதலாவதாக மிகமோசமான குற்றங்கள் தொடர்பில் தினந்தோறும் மேல்நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்கு விசாரணைகள் முறையான விதத்தில் மறுசீரமைக்கப்படவேண்டும். குறிப்பாக குற்றங்களுக்கு விதிக்கப்படவேண்டிய தண்டனைகள் தொடர்பில் நிச்சயமற்ற தன்மையொன்று நிலவும் பட்சத்தில், நாட்டின் ஒட்டுமொத்த குற்றவியல் சட்ட நடைமுறைகளும் சீர்குலைவடையும். இலங்கையில் தற்போது அவ்வாறானதொரு நிலையே காணப்படுகின்றது. மிகப்பாரதூரமான வழக்குகள் மேல்நீதிமன்றத்தில் தினந்தோறும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவது அவசியமாகும். குற்றவியல் வழக்குகள் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் இடமாற்றம் செய்யப்படுவதானது, அவ்வழக்கு விசாரணைகள் தாமதமடைவதற்கு வழிகோலியுள்ளன. நிர்வாக ரீதியான சிக்கல்கள் காரணமாக வழக்கு விசாரணைக்கான திகதிகள் அடிக்கடி மாற்றியமைக்கப்படுவதனால் வழக்குகள் பல வருடகாலமாக இழுத்தடிக்கப்படுகின்றன. எனவே அரசியல் தன்முனைப்பு மற்றும் தூரநோக்கு சிந்தனை என்பவற்றின் ஊடாக இச்செயன்முறையை ஆக்கபூர்வமான விதத்தில் மறுசீரமைப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும். இரண்டாவதாக ஊழல் மோசடிகள் இடம்பெறுவதைக் கட்டுப்படுத்தக்கூடியவாறான மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்படவேண்டும். அதன்படி இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கான குற்றவியல் விசாரணை அதிகாரிகளை பொலிஸ் சேவையிலிருந்து தெரிவு செய்யும் தற்போதைய நடைமுறையைக் கைவிடவேண்டும். மாறாக குறித்த ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் பொலிஸ் திணைக்களத்துக்கு வெளியிலிருந்து தெரிவு செய்யப்படுவதுடன், அவர்கள் பொலிஸ்மா அதிபர் மற்றும் ஏனைய திணைக்களங்களுடன் தொடர்பற்ற முற்றிலும் சுயாதீனமானவர்களாக இருக்கவேண்டும்.  மூன்றாவதாக சட்டமா அதிபர் திணைக்களம் மறுசீரமைக்கப்படவேண்டும். 1978 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தின் ஊடாக நிறைவேற்றதிகார ஜனாதிபதிக்கு ஏற்புடையதும், தன்னிச்சையான செயற்பாடுகளுக்குப் பெரிதும் இடமளிக்கக்கூடியவகையிலும் ஸ்தாபிக்கப்பட்ட கட்டமைப்பான சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தமுடியாது. எனவே இக்கட்டமைப்பு அவசியமான மறுசீரமைப்புக்களுக்கு உட்படுத்தப்படவேண்டும் என அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.     
    • Dee Dee Simon Sings "And I'm Telling You I'm Not Going" | Auditions | AGT 2024    
    • யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் உயிரிழப்பு!     யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி குணரத்தினம் (வயது 67) என்ற 5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இவர் நான்கு தினங்களாக காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவரை ஞாயிற்றுக்கிழமை (22) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.  அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. https://jaffnazone.com/news/47018#:~:text=யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட,5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.&text=இவர் நான்கு தினங்களாக காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தார்.  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.