Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உத்தராகண்ட்: சுரங்கத்தில் 41 தொழிலாளர்கள் பிழைத்திருக்க உதவிய தமிழ்நாடு மீட்புக் குழு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
உத்தராகண்ட்: சுரங்கத்தில் 41 தொழிலாளர்கள் பிழைத்திருக்க உதவிய தமிழ்நாடு மீட்புக் குழு

பட மூலாதாரம்,RAVIKUMAR

படக்குறிப்பு,

கடந்த 13 நாட்களாக மீட்புப்பணி நடைபெற்று வருகிறது. இந்த மீட்புப் பணியின்போது தொழிலாளர்களின் உயிரைக் காப்பாற்றியதில் நாமக்கல் நிறுவனத்தின் பங்கு மிக முக்கியமானது.

கட்டுரை தகவல்
  • எழுதியவர், சுபாஷ் சந்திர போஸ்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 38 நிமிடங்களுக்கு முன்னர்

உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசி சில்க்யாரா - தண்டல்கான் சுரங்கப்பாதையில் ஏற்பட்ட விபத்தால் சுரங்கத்தின் உள்ளே சிக்கிக்கொண்ட 41 தொழிலாளர்களின் உயிரைக் காப்பாற்றுவதற்கான முயற்சியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தனியார் நிறுவனம் முக்கியப் பங்காற்றியுள்ளது.

கடந்த 13 நாட்களுக்கும் மேலாக அங்கு சிக்கியுள்ள தொழிலாளர்களுக்கு உணவு மற்றும் ஆக்சிஜன் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை அனுப்புவதற்காக 6 இன்ச் பைப் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாகத்தான் கேமரா அனுப்பப்பட்டு தொடர்ந்து அவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

வெளிநாட்டு சேர்ந்த இயந்திரங்கள் மற்றும் குழுக்கள் முயற்சி செய்தும் துளைக்க முடியாமல் இருந்த இடிபாடுகளுக்குள் தங்களது அதிநவீன இயந்திரங்களின் உதவியோடு துளையிட்டு 41 தொழிலாளர்களின் உயிர்களைக் காப்பாற்றப் பேருதவி செய்துள்ளது தமிழ்நாட்டைச் சேர்ந்த அந்நிறுவனம்.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் நேரடியாக களத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்ட அதன் ஊழியர் பிபிசி தமிழுடன் பகிர்ந்து கொண்டுள்ள தகவல்களைப் பார்க்கலாம்.

 

உத்தரகாசி சுரங்க விபத்து

உத்தரகாசி சுரங்க விபத்து

பட மூலாதாரம்,RAVI KUMAR

படக்குறிப்பு,

சுரங்கத்தில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களுக்கு பைப் வழியாக உணவு வழங்கப்படுகிறது.

நவம்பர் 12ஆம் தேதி அதிகாலை 5 மணியளவில் உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசி சில்க்யாரா - தண்டல்கான் சுரங்கப்பாதையில் ஏற்பட்ட விபத்தால் 41 சுரங்கத் தொழிலாளர்கள் உள்ளேயே சிக்கி கொண்டனர்.

‘ஆல் வெதர்’ சாலை திட்டத்தின் கீழ் தேசிய நெடுஞ்சாலை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தின் மேற்பார்வையில் நவயுகா இன்ஜினியரிங் நிறுவனம் உத்தரகாசி சில்க்யாரா - தண்டல்கான் ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் சுரங்கப்பாதையைக் கட்டி வருகிறது.

இதில்தான் தற்போது சில்க்யாரா முகப்புப் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு சுரங்கத்தை மூடிக் கிடக்கும் இடிபாடுகளுக்குள் 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டுள்ளனர்.

 

மீட்புக்குழுவின் பணிகள்

உத்தரகாசி சுரங்க விபத்து

பட மூலாதாரம்,RAVI KUMAR

படக்குறிப்பு,

சில்க்யாரா முகப்புப் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதால் விபத்து நிகழ்ந்துள்ளது.

நவம்பர் 12ஆம் தேதி முதலே மீட்புக்குழு வேகமான மீட்புப் பணிகளைச் செய்து வருகிறது. இருப்பினும் மலைப் பாறைகள் மற்றும் இடிபாடுகளின் தன்மை காரணமாகத் தொடர்ந்து தொய்வு ஏற்பட்டு வந்தது. முதலில் அமெரிக்காவை சேர்ந்த ட்ரில்லிங் இயந்திரம் ஒன்று இடிபாடுகளுக்குள் துளையிட பயன்படுத்தப்பட்டது.

ஆனால் அந்த முயற்சி தோல்வியில் முடியவே அதற்காக முதல்நாளே வரவைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு அணியான தரணி ஜியோடெக் இன்ஜினியரிங் நிறுவனம் தனது பணியைத் தொடங்கியுள்ளது.

நாமக்கல் திருச்செங்கோட்டைச் சேர்ந்த இந்த நிறுவனம்தான், அதே பகுதியில் உள்ள பிஆர்டி ரிங்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ள PRD GD 5 RIG என்ற இயந்திரத்தின் மூலம் 6 இன்ச் அளவுள்ள முதல் குழாயை 54 மீட்டருக்கு வெற்றிகரமாகப் பொறுத்தியுள்ளது.

இந்த 6 மீட்டர் பைப் வழியாகவே உள்ளே சிக்கிக்கொண்டிருக்கும் தொழிலாளர்களுக்கு உணவு மற்றும் தேவையான அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த உயிர்காக்கும் குழாயை எப்படி உள்ளே பொறுத்தினார்கள்? எப்படி வெளிநாட்டு இயந்திரங்களால் சாதிக்க முடியாததை இந்திய தயாரிப்பு நிறுவனம் சாதித்தது?

 

முதல்நாளே களமிறங்கிய தமிழ்நாடு டீம்

உத்தரகாசி சுரங்க விபத்து

பட மூலாதாரம்,RAVIKUMAR

படக்குறிப்பு,

இரண்டு முயற்சியில் தோல்வியடைந்த தமிழ்நாடு மீட்புக்குழு மூன்றாவது முயற்சியில் வெற்றி பெற்றது.

விபத்து நடந்த நவம்பர் 12ஆம் தேதியே தரணி ஜியோடெக் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு நவயுகா இன்ஜினியரிங் நிறுவனத்தின் மூலம் மீட்பணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த 24 மணிநேரத்திற்குள் சாரங்பூரில் நிறுத்தி வைத்திருந்த தங்களது இயந்திரத்தை திங்கள் காலையே சம்பவ இடத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர். மேலும், திருச்செங்கோட்டில் இருந்தும் தேவையான உதிரிபாகங்களை விமானம் மற்றும் சாலை மார்க்கமாக வர வைத்துள்ளனர்.

சுரங்கத்தில் முதலில் அமெரிக்க இயந்திரம் மூலம் வேலை செய்தும் அது தோல்வியில் முடிந்துள்ளது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய தரணி ஜியோடெக் குழுவினர் முதல் இரண்டு முயற்சியில் தோல்வி அடைந்துள்ளனர்.

இடிபாடுகளில் சிக்கியுள்ள கடுமையான பாறை, இரும்பு போன்ற பொருட்களால் தொடர்ந்து இயந்திரம் சேதம் அடைந்ததால் இரண்டு துளைகள் போடும்போதே தோல்வியில் முடிந்துள்ளது.

ஆனால், “நல்ல வேளையாக ஒன்றுக்கும் அதிகமான இயந்திர பாகங்களைக் கொண்டு வந்து நிறுத்தியிருந்ததால் தங்கள் முயற்சியில் எந்தத் தொய்வும் ஏற்படவில்லை,” என்று கூறுகிறார் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த தரணி ஜியோடெக் நிறுவன பொறியாளர் ரவி.

 
உத்தரகாசி சுரங்க விபத்து

துளையிடுவதில் ஏற்பட்ட சிக்கல்கள்

வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த ஜியோடெக் நிறுவனங்களின் இயந்திரங்கள் மற்றும் மீட்புக்குழு உத்தரகாசி பகுதிக்கு வரவழைக்கப்பட்டுள்ளது.

இதில் முதலில் முயற்சி செய்த அமெரிக்க இயந்திரம் தோல்வியுறவே, இரண்டாவதாக தாங்கள் தொடங்கியதாக கூறுகிறார் அவர்.

“நாங்கள் துளையிடத் தொடங்கி இடிபாடுகளின் கடுமை முதலில் தாமதம் ஏற்பட்டது. இதனால், மீண்டும் அமெரிக்க நிறுவனத்தின் இயந்திரமே பயன்படுத்தப்பட்டது. அவர்கள் மூன்று நாட்கள் எடுத்துக் கொண்டதால் நாங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது.

அதற்குப் பின் மீண்டும் எங்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. அதில் இரண்டு முறை துளையிடும்போது குறுக்கீடு செய்த இரும்பு மற்றும் பாறைகளால் இயந்திரக் கோளாறு ஏற்பட்டுத் தோல்வியடைந்தோம். அதன் பிறகு மூன்றாவது முயற்சியில்தான் முன்னெச்சரிக்கை அளவீடுகளை எடுத்துத் துளையிட்டு 8ஆம் நாள்வாக்கில் 54 மீட்டர் துளையை வெற்றிகரமாகப் போட்டு முடித்தோம்,” என்று கூறியுள்ளார் ரவி.

 

PRD GD 5 RIG இயந்திரம்

உத்தரகாசி சுரங்க விபத்து

பட மூலாதாரம்,PRD RIGS ENGINEERING

படக்குறிப்பு,

இந்தியாவிலேயே திருச்செங்கோட்டில் மட்டுமே இது போன்ற இயந்திரம் இருக்கிறது.

சம்பவ இடத்திற்குப் பல இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டும்கூட எப்படி பிஆர்டி நிறுவனம் மட்டும் இதைச் செய்ய முடிந்தது என்ற கேள்விக்கு, “தங்களிடம் மேம்படுத்தப்பட்ட டெக்னாலஜி இருப்பதுதான் காரணம்,” என்று கூறியுள்ளார் அவர்.

அந்த இயந்திரம் குறித்துப் பேசிய பிஆர்டி ரிக்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டி.டி.பரந்தாமன், “PRD GD 5 RIG இயந்திரம் என்பது ஒரு பரப்பின் மீது கிடைமட்டமாக அல்லது செங்குத்தாகத் துளைகளைப் போடக்கூடிய அதிநவீன ராட்சத இயந்திரம். மற்ற இயந்திரங்களில் இருக்கும் ட்ரில்லர் மூலம் ஒரு பரப்பின் மீது துளையைப் போட்ட பின்பு அதை வெளியே எடுத்துவிட்டுத்தான் அதற்குள் குழாய் போன்ற பொருட்களைச் செலுத்த முடியும்.

ஆனால், இந்த PRD GD 5 RIG இயந்திரம் தன்னுடைய டிரில்லருடன் சேர்த்தே ஒரு குழாயைக் கொண்டிருக்கும். இதனால், இது எத்தனை மீட்டருக்கு துளையிடுகிறதோ அத்தனை மீட்டருக்கு தேவையான குழாயைத் துளையிட்டு முடித்த பின்பு அந்தத் துளைக்குள்ளேயே விட்டுவிட்டு வந்து விடும். இப்படித்தான், உத்திரகாசி சில்க்யாரா சுரங்கத்திலும் 54 மீட்டர் வரை துளையிட்டுத் தற்போது கேமரா, உணவு உள்ளிட்டவை சென்று வரும் பைப்லைன் போடப்பட்டது,” என்று விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் “இந்தியாவிலேயே தங்களிடம் மட்டுமே இதுபோன்ற இயந்திரம் இருக்கிறது. இதைத் தாண்டி அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் தான் இது கிடைக்கும்,” என்று கூறியுள்ளார் அவர்.

இதில் முக்கியமே 25% வெளிநாட்டு உதிரிபாகங்களை இறக்குமதி செய்தும், இதர 75% உள்நாட்டு உதிரிபாகங்களைக் கொண்டும் இந்திய தயாரிப்பாக இந்த இயந்திரங்கள் இந்நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

 

ஒரேநாளில் மீட்புக்குழுவை ஒருங்கிணைத்த நிறுவனம்

உத்தரகாசி சுரங்க விபத்து

பட மூலாதாரம்,JAYAVEL KALIANNAN

படக்குறிப்பு,

ஒரே நாளில் மீட்புக்குழுவை ஒருங்கிணைத்த தரணி ஜியோடெக்

இந்தியா முழுவதும் சுரங்கம் உள்ளிட்ட கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வரும் நிறுவனமான தரணி ஜியோடெக் நிறுவனம் இந்தச் சம்பவம் நடந்த அன்றே மீட்பு பணிக்கு அழைக்கப்பட்டுள்ளது.

இந்த அழைப்பு வந்த அடுத்த நாள் காலையே பல்வேறு மாநிலங்களில் இருந்த தங்களது பணியாளர் குழுவை உத்தரகாசி பகுதியில் ஒருங்கிணைத்து விட்டதாகக் கூறுகிறார் அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜெயவேல் காளியண்ணன்.

“முதலில் துளையிடும் பணியில் சில பின்னடைவுகள் ஏற்பட்டாலும் முன்னெச்சரிக்கையாக நாங்கள் அதிகமான இயந்திர பாகங்கள் மற்றும் மனிதவளத்தைக் கொண்டு வந்திருந்ததால் தொடர்ந்து பணியாற்றி அந்த 6 இன்ச் குழாயை எங்களால் பதிக்க முடிந்தது.

அதன் மூலமாகவே 41 தொழிலாளர்களுக்குத் தேவையான ஆக்சிஜன் , உணவு என எல்லா அடிப்படைத் தேவைகளும் வழங்கப்பட்டது. அவர்களின் உயிரைக் காப்பாற்ற முடிந்தது. நாங்கள் பெரிய நிறுவனம் இல்லை என்றாலும் இந்தக் காரணத்திற்காகவே பெரிய அளவிலான மனிதவளம் ஒருங்கிணைப்பு மற்றும் லாஜிஸ்டிக்ஸ் பணிகளைச் செய்துள்ளோம்,” என்று கூறுகிறார் அவர்.

 

அடுத்த கட்டம் என்ன?

உத்தரகாசி சுரங்க விபத்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

இன்று இரவு அல்லது நாளை காலைக்குள் 41 தொழிலாளர்களும் மீட்கப்படலாம்.

ரவி மற்றும் ஜெயவேல் காளியண்ணன் கூற்றுப்படி, “8வது நாளே 6 இன்ச் குழாய் பொறுத்தப்பட்டு தொழிலாளர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. அடுத்தகட்டமாக அமெரிக்க இயந்திரம் மூலம் ஆள் உள்நுழையும் அளவிற்கான பைப்பை பொறுத்துவதற்கான துளையிடும் பணி மூன்று நாட்களாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் துளையிடும் இயந்திரத்தின் முன்பகுதி மீண்டும் உள்ளே உடைந்துள்ளது. அதேபோல் அது பொறுத்தப்பட்டுள்ள அமைவும் சேதமடைந்துள்ளது.

தொழிலாளர்களை அடைய வெறும் 10-13 மீட்டர்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. உள்ளே சேதமடைந்த பகுதியை வெட்டி எடுத்து மீண்டும் துளையிடல் தொடங்கி இன்று இரவு அல்லது நாளை காலைக்குள் 41 தொழிலாளர்களும் மீட்கப்படலாம்,” என்று கூறியுள்ளனர்.

மீட்புக்குப் பின் என்ன நடக்கும்?

ஏற்கெனவே மருத்துவக் குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. 41 தொழிலாளர்களுக்குத் தேவையான ஆம்புலன்ஸ் வசதி, தற்காலிக மருத்துவமனை மற்றும் இதர அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொழிலாளர்களாக மீட்கப்பட்டு உடனடி மருத்துவ சேவை வழங்கப்படும் என்று மீட்புக் குழு தெரிவித்துள்ளது.

https://www.bbc.com/tamil/articles/c8v8y931n23o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உத்தராகண்ட் சுரங்கப் பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்களின் மனநலன் எப்படி? - மருத்துவர்கள் விளக்கம்

24 NOV, 2023 | 04:09 PM
image

டேராடூன்: உத்தராகண்ட் சுரங்கத்துக்குள் சிக்கியிருக்கும் 41 தொழிலாளர்களின் மன அழுத்தங்களைப் போக்குவதற்காக மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மருத்துவர்கள் விவரித்துள்ளனர்.

உத்தராகண்ட் மாநிலம் சார்தாம் நெடுஞ்சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக சில்க்யாரா - பர்கோட் இடையே 4.5 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்பட்டு வரும் சுரங்கப் பாதையில் கடந்த 12-ம் தேதி மண் சரிந்தது விழுந்தது. இதன் காரணமாக சுரங்கப் பாதைக்குள் 41 தொழிலாளர்கள் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்கும் பணிகள் கடந்த 12 நாட்களாக பல சிக்கல்களுக்கு நடுவில் மிகவும் தீவிரமாக நடந்து வருகிறது.பல்வேறு தடைகளால் மீட்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டு வரும் நிலையில், உள்ளே இருக்கும் தொழிலாளர்களின் மன அழுத்தத்தைப் போக்குவதற்காக பலகை விளையாட்டு மற்றும் சீட்டுக்கட்டுகளை அனுப்ப மீட்புக்குழுவினர் முடிவு செய்தனர்.

இது குறித்து மீட்புப் பணிகள் நடைபெறும் இடத்தில் இருக்கும் மனநல மருத்துவர்களில் ஒருவரான டாக்டர் ரோகித் கோண்ட்வால் கூறுகையில், “மீட்புப் பணிகள் தாமதமாகி வரும் நிலையில், உள்ளே இருக்கும் தொழிலாளர்களின் மன அழுத்தத்தை போக்க நாங்கள் அவர்களுக்கு லுடோ, செஸ் மற்றும் சீட்டுக் கட்டுகளை வழங்க முடிவு செய்தோம். பல்வேறு காரணங்களால் மீட்புப் பணிகள் தாமதமாகி வருகின்றன. உள்ளே இருப்பவர்களை மீட்க இன்னும் அதிக நேரம் எடுக்கலாம். உள்ள சிக்கியிருக்கும் 41 பேரும் நலமாக இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் ஆரோக்கியமாகவும், நல்ல மனோதிடத்தோடும் இருப்பது அவசியம். உள்ளே இருப்பவர்கள் தங்களின் மன அழுத்தத்தைப் போக்க திருடன் - போலீஸ் விளையாட்டு விளையாடுவதாகவும், யோகா செய்வதாகவும் எங்களிடம் கூறினர்" என்று தெரிவித்தார்.

 

சுரங்கத்துக்குள் சிக்கியுள்ள தொழிலாளர்களின் மனநிலை குறித்து பேசிய மற்றொரு மருத்துவ நிபுணர், "உள்ளே சிக்கி இருப்பவர்களின் மனோதிடம் அதிமாகவும் உறுதியாகவும் இருக்க வேண்டும். அதற்காக, அவர்களுடன் மருத்துவக் குழு ஒன்று தினமும் பேசி, அவர்களின் மனேதிடம் மற்றும் ஆரோக்கியம் பற்றி கேட்டறிகிறது" என்றார்.

சில்க்யாரா சுரங்கத்துக்குள் சிக்கியிருக்கும் தொழிலாளர்களை மீட்கும் பணிகள் கடந்த 12 நாட்களாக பல்வேறு சிக்கல்களுக்கு நடுவில் மிகவும் தீவிரமாக நடந்து வருகிறது. நேற்று தொழிலாளர்களைத் தொட்டு விடும் தூரத்தில் மீட்பு குழுவினர் 46.8 மீட்டர் தூரம் துளையிட்டிருந்த நேரத்தில் ஆஜர் துளையிடும் இயந்திரத்தில் பழுது ஏற்பட்டது. இதனால் வியாழக்கிழமை இரவு மீட்பு பணிகள் நிறுத்தப்பட்டன.

இதனிடையே, சுரங்கத்துக்குள் சிக்கியிருக்கும் தொழிலாளர்களுடன் தொடர்பு கொள்வதற்காக மினி ட்ரோன்கள் மற்றும் ரோபோக்களை பயன்படுத்த டிஆர்டிஓ முயற்சி செய்தது. இந்த நிலையில், துளையிடும் பணிகளுக்கு மத்தியில் ஆஜர் இயந்திரம் வியாழக்கிழமை பழுதடைந்ததால் மீட்புப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பழுது சரிசெய்த பின்னர் பணிகள் வெள்ளிக்கிழமை மீண்டும் தொடரும் என்று சர்வதேச சுரங்க நிபுணர் அர்னால்ட் டிக்ஸ் தெரிவித்தார். இதனால், சில்க்யாரா சுரங்கத்துக்குள் சிக்கியிருக்கும் தொழிலாளர்களை மீட்கும் பணி வெள்ளிக்கிழமை 13-ம் நாளை எட்டியுள்ளது. தற்போது இயந்திரத்தின் பழுது சரி செய்யப்பட்டு துளையிடும் பணிகள் தொடங்கி இருக்கிறது.

அதேவேளையில், இடிபாடுகளுக்குள் 800 மிமீ விட்டம் கொண்ட குழாய் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு, அதன்வழியாக உள்ளே சிக்கி இருப்பவர்களை வெளியே அழைத்து வருவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தக் குழாய் வழியாக அவர்களே தவழ்ந்து வருவார்கள் என கூறப்பட்ட நிலையில், தற்போது சக்கரங்கள் பொறுத்தப்பட்ட ஸ்ட்ரெச்சர்கள் மூலம் அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கான ஒத்திகையை NDRF வெள்ளிக்கிழமை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/170173

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உத்தராகண்ட்: 41 தொழிலாளர்களை மீட்பதில் புதிய சிக்கல் - ஒரு வாரம் முதல் ஒரு மாதம் வரை ஆக வாய்ப்பு

உத்தராகண்ட் சுரங்கப்பாதை விபத்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

16 நவம்பர் 2023
புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசியில் சுரங்கப் பாதைக்குள் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணி 14ஆவது நாளாக இன்றும் தொடர்கிறது. இரண்டு தினங்களுக்கு முன்பே மீட்புப் பணி இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டதாகவும், சற்று நேரத்தில் அவர்கள் மீட்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்ட நிலையில், இன்னும் ஏன் தாமதமாகிறது? மீட்பு பணியில் ஏற்பட்டுள்ள தடங்கல் என்ன? விரிவாக பார்க்கலாம்..

வெளியே இருந்து சுரங்கப்பாதைக்குள் தொழிலாளர்கள் சிக்கியுள்ள இடம் வரையிலும் 53மீ நீளம் கொண்ட 6 இன்ச் குழாய் கடந்த 20ஆம் தேதியன்று வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. இரவு பகலாக 9 நாட்கள் நடந்த மீட்புப் பணியில் இது மிகப்பெரிய முன்னேற்றமாக பார்க்கப்பட்டது. இந்த குழாய் ஊடாகவே உணவு, ஆக்சிஜன், குடிநீர் உள்ளிட்டவை தற்போது அனுப்பப்படுகின்றன.

இத்தகைய சூழலில் கடந்த 23ஆம் தேதி மீட்புப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டின. 60 மீட்டர் இடிபாடுகளுக்கு ஊடாக இன்னும் ஒரு சில மீட்டர்களே துளையிட வேண்டி இருந்த நிலையில், எதிர்பாராத விதமாக துளையிடும் இயந்திரத்தில் (Auger) தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.

இதையடுத்து, குழாய்களுக்கு ஊடாக பொருத்தப்பட்டிருந்த துளையிடும் இயந்திரத்தை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட வேண்டி இருந்ததால் மீட்பு பணியில் தடங்கல் ஏற்பட்டது.

கட்டுமானம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

உத்தராகண்ட் சுரங்கப்பாதை விபத்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

மீட்புப் பணி முடிய ஒரு வாரம் முதல் ஒரு மாதம் வரை ஆக வாய்ப்பு

துளையிடும் இயந்திரத்திற்கு பதிலாக வேறு முறையில் துளையிடுவது குறித்து தற்போது சிந்தித்து வருவதாக சுரங்கப்பாதை நிபுணர் அர்னால்ட் டிக்ஸ் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

முன்னதாக, மனிதர்களைக் கொண்டு துளையிட திட்டமிட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்த நிலையில், தற்போது செங்குத்தாக துளையிடும் யோசனை பரிசீலனையில் இருப்பதாகவும் ஏ.என்.ஐ. செய்தி முகமை தெரிவித்துள்ளது. இதற்காக 12 பேர் கொண்ட குழு தயார் நிலையில் இருப்பதாகவும் ஏ.என்.ஐ. கூறுகிறது.

செங்குத்தான துளை என்பது சுரங்கத்தின் மேற்பகுதியில் இருந்து 85 முதல் 90 மீட்டர்களுக்கு துளை இடப்படும். இதற்கு 5 முதல் 6 நாட்கள் வரை காலம் எடுக்கலாம் என அதிகாரிகள் கூறியதாக ஏ.என்.ஐ. செய்தி முகமை தெரிவிகிறது.

அதே நேரம், ஊடகங்களிடம் பேசிய சுரங்கப்பாதை நிபுணர் அர்னால்ட் டிக்ஸ், கிறிஸ்துமஸுக்குள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்படுவார்கள் என தெரிவித்தார். அதற்கு இன்னும் நீண்ட நாட்கள் உள்ளதே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, அவசரம் காட்டினால் அது வேறு பிரச்னைக்கு வழிவகுக்கும் எனக் குறிப்பிட்டார்.

உத்தராகண்ட் சுரங்கப்பாதை விபத்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

அர்னால்ட் டிக்ஸ், மீட்புப் பணியில் உள்ள சர்வதேச நிபுணர்

தொழிலாளர்களை பத்திரமாக மீட்க அனைத்து வழிகளிலும் மீட்புக் குழுவினர் முயற்சித்து வருவதாக உத்தராகண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்தார். தொழிலாளர்கள் சிக்கியிருக்கும் பகுதிக்கு மிக அருகில் சென்றபோது ஆகர் எந்திரம் சேதமடைந்துவிட்டது. அதற்கு மாற்றாக ஐதராபாத்தில் இருந்து ப்ளாஸ்மா கட்டர் எந்திரம் வரவழைக்கப்பட்டுள்ளது என புஷ்கர் சிங் தாமி செய்தியாளர்களிடம் கூறினார். ப்ளாஸ்மா கட்டர் எந்திரம் ஒரு மணி நேரத்திற்கு 4 மீட்டர் வரை துளையிடும் திறன் கொண்டது என கூறப்படுகிறது.

தொழிலாளர்களின் முதல் வீடியோ

உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசி சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட குழுவினர், ஆறு இன்ச் குழாயை நிறுவுவதில் வெற்றி கண்டுள்ளதாகக் கூறியிருந்தனர்.

அந்தக் குழுாயின் மூலம் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்களுக்கு உணவுப் பொருட்கள், மருந்துகள் வழங்க முடியும் என்றும், உள்ளே சிக்கியுள்ள தொழிலாளர்களிடம் பேச்சு வார்த்தையும் நடத்த முடியும் என்றும் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தின் இயக்குநர் அன்ஷு ம் கல்கோ இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

பிடிஐ செய்தி நிறுவனத்தின் செய்தியின்படி, “சுரங்கப்பாதையில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பல்வேறு முயற்சிகளில் நாங்கள் முதல் வெற்றியை அடைந்துள்ளோம். இதற்காக நாங்கள் கடந்த ஒன்பது நாட்களாக பணியாற்றி வருகிறோம். இதுவே அவர்களை மீட்கும் முயற்சியின் முதல்படி, இதுவே எங்கள் முன்னுரிமை,” என அவர் கூறியுள்ளார்.

சிக்கியுள்ளவர்களை பாதுகாப்பாக மீட்பதற்கு தேவையான அனைத்து உபகரணங்களும் சேகரிக்கப்பட்டு விட்டதாகவும், இன்னும் இரண்டு நாட்களில் அனைத்தும் அங்கு வந்து சேரும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில் புதிதாக நிறுவப்பட்ட குழாய் வழியாக கேமராவைச் செலுத்தி சிக்கியிருப்பவர்களை படம்பிடித்திருக்கிறார்கள். அந்த வீடியோவை பிடிஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

உத்தரகாண்ட் சுரங்கப் பாதை

பட மூலாதாரம்,PTI

இந்த குழாய் மூலமாக உணவுப் பொருள்களைப் பெற்று உண்பதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இதன் மூலம் தொழிலாளர்களைக் காப்பாற்ற முடியும் என்பதில் புதிய நம்பிக்கை பிறந்தது.

"பிஆர்ஓ நிறுவனம் உத்தரகாசி பக்கத்திலிருந்தும் மற்றும் பர்கோட் தளத்தில் இருந்தும் சாலை அமைக்கிறது. இயந்திரங்கள் மிகவும் கனமாக உள்ளதால், அவற்றை விமானத்தில் கொண்டு வர முடியாது. அவற்றை சாலை வழியாக மட்டுமே கொண்டு வர வேண்டும். இப்போது நாங்கள் இயந்திரங்களுக்காக காத்திருக்கிறோம்,” என்றார் அன்ஷு ம் கல்கோ.

இதைத் தவிர, டிஆர்டிஓ சார்பில் 20 கிலோ மற்றும் 50 கிலோ எடையுள்ள இரண்டு ரோபோக்களை சம்பவ இடத்திற்கு அனுப்பியுள்ளதாக கல்கோ தெரிவித்தார்.

"இந்த ரோபோ நிலத்தின் மேற்பரப்பில் நடந்து முன்னோக்கி நகர்கிறது, ஆனால் சுரங்கப்பாதையில் உள்ள தரையில் மணல் இருப்பதால், ரோபோ அங்கு செல்ல முடியுமா இல்லையா என்பதில் சந்தேகம் உள்ளது" எனக்கூறினார்.

 
உத்தராகண்ட் சுரங்கப்பாதை விபத்து
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உத்தராகண்ட் சுரங்க விபத்து: ‘எலிவளைச் சுரங்க முறை’ மூலம் மீட்கப்படும் தொழிலாளர்கள்

உத்தராகண்ட் சுரங்க விபத்து, உத்தரகாசி

பட மூலாதாரம்,ASIF ALI

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஆசிஃப் அலி
  • பதவி, பிபிசி இந்திக்காக, உத்தரகாசியிலிருந்து
  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

உத்தராகண்ட் மாநிலம் உத்தர்காசி மாவட்டத்தில் கட்டப்பட்டு வந்த சுரங்கப்பாதையில் கடந்த நவம்பர் 12-ஆம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டு, அதனுள் 41 கட்டுமானத் தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர்.

அவர்களை மீட்கும் பணி கடந்த 16 நாட்களாக நடைபெற்று வருகிறது.

மீட்புப் பணியின் 16-வது நாளான நேற்றிலிருந்து (நவம்பர் 27) இயந்திரம் மூலம் இடிபாடுகளைத் துளையிடும் பணி நிறுத்தப்பட்டு, தொழிலாளர்களைக் கொண்டு துளையிடும் பணி நடந்து வருகிறது.

இந்தப் பணி, 24 மணிநேரம் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 24 தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் ‘எலிவளைச் சுரங்க முறை’ பயன்படுத்தி இடிபாடுகளுக்குள் துளையிடுகிறார்கள்.

 
உத்தராகண்ட் சுரங்க விபத்து, உத்தரகாசி
படக்குறிப்பு,

மீட்புப் பணிகள் குறித்து செய்தியாளர் சந்திப்பு நடத்தும் மூத்த அதிகாரிகள்

எலிவளைச் சுரங்க முறை என்றால் என்ன?

இதில் ஈடுபட்டிருக்கும் பணியாளர்கள் கைக்கருவிகளைப் பயன்படுத்தி இடிபாடுகளை அகற்றிச் சுரங்கப்பாதையை உருவாக்குவார்கள்.

வழியில் இரும்புக் கம்பிகள் போன்ற தடைகள் இருந்தால் லேசர் இயந்திரம் அல்லது பிளாஸ்மா இயந்திரங்களக் கொண்டு அவற்றை வெட்டி அவற்றை அகற்றுவார்கள்.

அவர்கள் இரண்டு மீட்டர் வரை மண்ணை அகற்றியதும் பின்னால் இருந்து ஆகர் இயந்திரம் மூலம் ஒரு குழாய் உள்ளே தள்ளப்படும்.

எலிவளைச் சுரங்க முறை நிலக்கரிச் சுரங்கங்களில் பயன்படுத்தப் படுகிறது. இதில் பணிபுரியும் தொழிலாளர்கள் மண்வெட்டிகளை உபயோகப்படுத்தி கரியை வெட்டி, கூடைகளில் அதைச் சேகரிப்பர்.

இதன்மூலம் ஒரு நபர் மட்டுமே ஊர்ந்து செல்லக்கூடிய அளவுக்கான ஒரு துளையை உருவாக்குவார்கள்.

இது தொழிழ்நுட்பப் பூர்வமான முறையல்ல, பாதுகாப்பானதும் அல்ல, ஆனால் இந்த இடத்தில் அது உதவக்கூடும் என்று ஒரு அதிகாரி ‘தி இந்து’ நாளிதழிடம் தெரிவித்தார்.

 
உத்தராகண்ட் சுரங்க விபத்து, உத்தரகாசி

பட மூலாதாரம்,ASIF ALI

படக்குறிப்பு,

800மிமீ விட்டம் கொண்ட குழாயை தள்ளுவதில் தடை ஏற்பட்டால், 700மிமீ விட்டம் கொண்ட குழாயை தள்ள முயற்சி மேற்கொள்ளப்படும்

அவர்கள் 10 மீட்டர் தூரத்தில்தான் உள்ளனர்

பணியாளர்களைக் கொண்டு கையால் துளையிடுவது குறித்து தகவல்களை அளித்த நிவாரணப் பணியின் நோடல் அதிகாரி நீரஜ் கைர்வால், "எலிவளைச் சுரங்க முறையுடன் தொடர்புடைய குழு சில்க்யாரா சுரங்கப்பாதையை அடைந்துள்ளது. இவர்கள் கைகளால் சுரங்கத்தைத் தோண்டுவார்கள். மேலும் கால்வாய்களில் பணிபுரியும் தொழிலாளர்களும் தில்லியில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளனர்,” என்றார்.

“இவர்கள் குறுகிய இடங்களிலும், பாதகமான சூழ்நிலைகளிலும் பணிபுரிந்து பழகியவர்கள்,” என்றார்.

“எலிவளைச் சுரங்கத் தொழிலாளர்கள் கைகளால் தோண்டி ஒரு பாதையை உருவாக்குவார்கள். பின்னால் இருந்து, 800மிமீ விட்டம் கொண்ட குழாய்கள் ஒரு ஆகர் இயந்திரம் மூலம் உள்ளே தள்ளப்படும்,” என்றார்.

அவர் மேலும் கூறுகையில், குழாய் தற்போது அடைந்திருக்கும் இடத்திலிருந்து சிக்கியிருக்கும் பணியாளர்கள் 10மீ முதல் 12மீ தூரத்தில்தான் உள்ளனர், என்றார்.

மேலும், இந்தப் பணி எளிதாக நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், உள்ளே இரும்புக் கம்பிகள் போன்ற தடைகள் இருந்தால், சுரங்கத் தொழிலாளர்கள் பிளாஸ்மா கட்டர் அல்லது லேசர் கட்டர் மூலம் இந்த தடைகளை வெட்டி முன்னோக்கிச் செல்வார்கள், என்றும் கூறினார்.

சில காரணங்களால் 800மிமீ விட்டம் கொண்ட குழாயை தள்ளுவதில் தடை ஏற்பட்டால், 700மிமீ விட்டம் கொண்ட குழாயை தள்ள முயற்சி மேற்கொள்ளப்படும், என்றும் கூறினார்.

மேலும், "சுரங்கப்பாதையின் பிரதான நுழைவாயிலில் (சில்க்யாரா பக்கத்தில்) இருந்து தொழிலாளர்களை வெளியேற்ற எஃகு குழாய்களை உள்ளே தள்ளி சுமார் 49 மீட்டர் நீளமுள்ள வெளியேறும் சுரங்கப்பாதை தயார் செய்யப்பட்டுள்ளது. 7 மீட்டர் முதல் 10மீட்டர் தூரம் வரை பணி பாக்கி உள்ளது,” என்றார்.

 
உத்தராகண்ட் சுரங்க விபத்து, உத்தரகாசி

பட மூலாதாரம்,ASIF ALI

படக்குறிப்பு,

முதலில் இடிபாடுகளுக்குள் எஃகு குழாய்களைச் செருகி, அதன்மூலம் சிக்கியிருப்பவர்களை மீட்கும் திட்டம் மேற்கொள்ளப்பட்டது

ஏன் கையால் துளையிடப்படுகிறது?

சில்க்யாரா சுரங்கப்பாதையை அமைத்த தேசிய நெடுஞ்சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தின் (என்.எச்.ஐ.டி.சி.எல்) நிர்வாக இயக்குநர் மஹ்மூத் அகமது, சுரங்கத்தின் சில்க்யாரா பகுதியில் உள்ள தடைகளை நீக்கி, இடிபாடுகளுக்குள் எஃகு குழாய்களைச் செருகி, அதன்மூலம் சிக்கியிருப்பவர்களை மீட்கும் திட்டம் மேற்கொள்ளப்பட்டது என்று கூறினார்.

இப்போது, கையால் இடிபாடுகளைத் தோண்டும் பணி தொடங்கியுள்ளது.

இது குறித்துப் பேசிய அவர், "இதுவரை இயந்திரம் மூலம் துளையிடும் பணி நடைபெற்று வந்தது. ஆனால் இப்போது கையால் துளையிட்டு மட்டுமே சிக்கியிருப்பவர்களை மீட்க முடியும்," என்றார்.

மேலும் திங்கட்கிழமை (நவம்பர் 27) இதுகுறித்துப் பேசிய அவர், “வெள்ளிக்கிழமை இரவு, இயந்திரத்தின் ஒரு பெரும்பகுதி இடிபாடுகளுக்குள் பொதிந்திருந்த இரும்புக் கம்பத்தில் சிக்கியது. அதனால் மீட்புப் பணிகள் நிறுத்தப்பட்டன. இப்போது சிக்கிய இயந்திரம் வெட்டி நீக்கப்பட்டுள்ளது. கையால் துளையிடுவதன் மூலம் 800மி.மீ குழாஉ 0.9மீ உள்ளே தள்ளப்பட்டுள்ளது,” என்றார்.

செங்குத்தாகவும் துளையிடும் பணி

செங்குத்தாகவும் கிடைமட்டமாகவும் துளையிடும் பணி கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 26) முதல் மேற்கொள்ளப்படுகிறது. சுரங்கப்பாதைக்கு மேலிருந்து கீழே துளையிடும் பணி நவம்பர் 21 துவங்கப்பட்டது. சட்லஜ் ஜல் வித்யுத் இப்பணியைச் செய்கிறது.

மஹ்மூத் அகமது மேலும் கூறுகையில், “திங்கள்கிழமை (நவம்பர் 27) இரவு 7.30 மணி வரை 36மீ துளையிடும் பணி நடைபெற்றது. சிக்கியுள்ளவர்களை அடைய மொத்தம் 86மீ முதல் 88மீ துளையிட வேண்டும். இதற்கு நான்கு நாட்கள் ஆகலாம்,” என்றார்.

சுரங்கப்பாதையில் ஆகர் இயந்திரம் சிக்கியதால் சனிக்கிழமை மாலை வரை மீட்புப் பணிகள் நிச்சயமற்ற நிலையில் இருந்தன. ஞாயிற்றுக்கிழமை காலை அதிகாரிகள் நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி, செங்குத்தாகத் துளையிடுவது குறித்து முடிவு செய்தனர்.

மஹ்மூத் அகமது மேலும் கூறுகையில், "பொதுவாக இந்த அளவு துளையிடுவதற்கு 60 முதல் 70 மணிநேரம் ஆகும். ஆனால் ஒரு டிரில்லிங் இயந்திரத்தின் மூலம் மட்டுமே முழுமையாகத் துளையிடுவது சாத்தியமில்லை. மற்ற டிரில்லர்களும் பயன்படுத்தப்படும்,” என்றார்.

 

சுரங்கத்தின் மறுமுனையிலும் துளையிடும் பணி துவக்கம்

மஹ்மூத் அகமது, சுரங்கப்பாதையின் இன்னொரு நுழைவாயிலான பர்கோட் முனையிலிருந்து சுரங்கப்பாதை உருவாக்கத் துளையிடும் பணியும் நடைபெற்று வருகிறது என்றார். பார்கோட் முனையிலிருந்து ஒரு மைக்ரோ சுரங்கப்பாதை உருவாக்கும் பணி நடைபெறுகிறது.

இதில் 300மீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்ட ஒரு மைக்ரோ டன்னல் அமைக்கப்படவுள்ளது.

மேலும், வெடிவைத்து, உடைந்த கற்களை வெடி வைத்து சுத்தம் செய்து வருகின்றனர் என்றும், இதுவரை 12மீ சுரங்கப்பாதை கட்டப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

ஆனால் இந்த முனையிலிருந்து தொழிலாளர்களை சென்றடைய 25 நாட்களுக்கு மேல் ஆகும், என்றார்.

 
உத்தராகண்ட் சுரங்க விபத்து, உத்தரகாசி

பட மூலாதாரம்,ASIF ALI

படக்குறிப்பு,

அதிகாரிகள் நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி, செங்குத்தாகத் துளையிடுவது குறித்து முடிவு செய்தனர்

சிக்கியுள்ளவர்களுக்கு மருத்துவ உதவிகள்

இந்த மீட்புப் பணியில் மருத்துவர்களுக்கும் பெரும் பங்கு உண்டு.

சுரங்கத்திற்குள் சிக்கியிருக்கும் தொழிலாளர்களிடம் மருத்துவர்கள் தொடர்ந்து பேசுகின்றனர்.

அவர்களின் உடல்நிலையில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து மருத்துவர்கள் தொடர்ந்து கலந்துரையாடி வருகின்றனர்.

உத்தரகாசி மாவட்டத்தின் தலைமை மருத்துவ அதிகாரி மருத்துவர் ஆர்.சி.எஸ். பன்வார், ஆரம்பத்தில் உள்ளே சிக்கியிருக்கும் தொழிலாளர்கள் பதட்டம் மற்றும் அமைதியின்மை போன்ற சில பிரச்சனைகளை எதிர்கொண்டதாகவும், ஆனால் மருத்துவரிடம் பேசிய பிறகு, அவர்கள் திருப்தி அடைந்தனர், என்றும் தெரிவித்தார்.

அவர் கூறுகையில், “அவர்களுக்கு பதட்டம் மற்றும் அமைதியின்மை ஆகியவற்றைச் சமாளிக்க மருந்துகள் தரபட்டன. சளி, வயிற்றுப் பிரச்சனைகள் தொடர்பான மருந்துகளும் தரப்பட்டுள்ளன,” என்றார்.

சுரங்கப்பாதைக்கு வெளியே 20 மருத்துவர்கள் கொண்ட குழு நிறுத்தப்பட்டுள்ளது. அதில் 15 பேர் மருத்துவர்கள் மற்றும் 5 பேர் மருத்துவ ஊழியர்கள். தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் எதுவாக இருந்தாலும், நிபுணர்களுடன் கலந்தாலோசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பன்வார் மேலும் கூறுகையில், "கடந்த பல நாட்களாக சுரங்கப்பாதையில் பணிபுரியும் தொழிலாளர்கள் சூரிய ஒளி படாமல் உள்ளனர். எனவே அவர்களுக்கு வைட்டமின் டி அனுப்பப்பட்டுள்ளது. அவர்களுக்குப் புரதம் மற்றும் கால்சியமும் வழங்கப்பட்டுள்ளது,” என்றார்.

https://www.bbc.com/tamil/articles/c6pxdnz91q3o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உத்தராகண்ட் மீட்புப் பணி நேரலை: 41 தொழிலாளர்களும் எந்நேரமும் மீட்கப்பட வாய்ப்பு

உத்தராகண்ட் சுரங்கப்பாதை விபத்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

28 நவம்பர் 2023, 09:15 GMT
புதுப்பிக்கப்பட்டது 30 நிமிடங்களுக்கு முன்னர்

உத்தராகண்ட் சுரங்கப்பாதை விபத்தில் உள்ளே சிக்கியுள்ள 41 தொழிலாளர்களையும் மீட்கும் பணி இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. செங்குத்தாக துளையிடும் பணி முடிவடைந்ததும், தொழிலாளர்களை பத்திரமாக மீட்டு வர வசதியாக நீண்ட குழாயும் பதிக்கப்பட்டுவிட்டது. இதனால், 16 நாட்களாக இரவு பகலாக நீண்ட மீட்புப் பணிகள் நிறைவடையும் நேரம் வந்துவிட்டதாக மீட்புக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

உத்தராகண்ட் மாநிலம் உத்தர்காசி மாவட்டத்தில் கட்டப்பட்டு வந்த சுரங்கப்பாதையில் கடந்த நவம்பர் 12-ஆம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டு, அதனுள் 41 கட்டுமானத் தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர். மீட்புப் பணியின் 16-வது நாளான நேற்றிலிருந்து (நவம்பர் 27) இயந்திரம் மூலம் இடிபாடுகளைத் துளையிடும் பணி நிறுத்தப்பட்டு, தொழிலாளர்களைக் கொண்டு துளையிடும் பணி நடைபெற்றது. அந்தப் பணிகள் முடிவடைந்து, தொழிலாளர்கள் சிக்கியுள்ள இடம் வரை நீண்ட குழாய் பதிக்கும் பணியும் முடிவுக்கு வந்துவிட்டதாக உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.

விபத்து நேரிட்ட சுரங்கப்பாதைக்கு நேரடியாக சென்று மீட்புப் பணிகளை அவர் பார்வையிட்டு வருகிறார். மீட்புப் பணிகள் குறித்த தகவல்களை அவர் சமூக வலைதளமான எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

உத்தராகண்ட் சுரங்கப்பாதை விபத்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

"பாபா பௌக் நாக் கருணையாலும், கோடிக்கணக்கான மக்களின் பிரார்த்தனையாலும், மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து மீட்புக் குழுவினரின் அயராத உழைப்பாலும் உள்ளே சிக்கியுள்ள தொழிலாளர்களை பத்திரமாக மீட்டு வருவதற்காக சுரங்கப்பாதையில் குழாய்கள் பதிக்கும் பணி முடிவுக்கு வந்துள்ளது. அனைத்து தொழிலாளர் சகோதரர்களும் விரைவில் பத்திரமாக வெளியேற்றப்படுவார்கள்" என்று முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.

சுரங்கப்பாதைக்கு வெளியே ஆம்புலன்ஸ்கள், ஸ்ட்ரெச்சர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுளளன. மருத்துவர்களும் தயாராக இருக்கின்றனர். சுரங்கப்பாதைக்குள் சிக்கிக் கொண்டுள்ள 41 தொழிலாளர்களையும் பத்திரமாக வெளியே மீட்டு வந்ததும், முதல் கட்டமாக அவர்களை மருத்துவர்கள் பரிசோதனை செய்வார்கள். பின்னர்கள் அவர்கள் முழு உடல் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.

https://www.bbc.com/tamil/articles/cv2zk8j7067o

  • கருத்துக்கள உறவுகள்

Rescuers successfully drill through to trapped men in Himalayan tunnel in breakthrough for perilous operation.

National Disaster Response Force (NDRF) personnel along with other rescue operatives gather near the face of the collapsed under construction Silkyara tunnel in the Uttarkashi district of India's Uttarakhand state, on November 28, 2023. Indian rescue teams digging by hand are on the verge of breaking through to reach 41 men trapped in a collapsed road tunnel, officials said Tuesday, raising hopes the end of the marathon 17-day operation is in sight. (Photo by Sajjad HUSSAIN / AFP) (Photo by SAJJAD HUSSAIN/AFP via Getty Images)
National Disaster Response Force (NDRF) personnel along with other rescue operatives gather near the face of the collapsed under construction Silkyara tunnel in the Uttarkashi district of India's Uttarakhand state, on November 28, 2023. Indian rescue teams digging by hand are on the verge of breaking through to reach 41 men trapped in a collapsed road tunnel, officials said Tuesday, raising hopes the end of the marathon 17-day operation is in sight. (Photo by Sajjad HUSSAIN / AFP) (Photo by SAJJAD HUSSAIN/AFP via Getty Images)

Sajjad Hussain/AFP/Getty Images

New Delhi, IndiaCNN — 

Rescuers on Tuesday successfully drilled through to 41 men trapped inside a collapsed Himalayan tunnel, as a weekslong evacuation effort fraught with uncertainty enters its final stretch.

The men have been trapped since November 12 when the part of tunnel they were helping to construct in India’s northern Uttarakhand state gave way, blocking their only exit with more than 60 meters (200 feet) of broken rock, concrete and twisted metal.

The breakthrough follows a series of agonizing setbacks, during which rescue efforts were halted when the heavy machinery used to drill through the debris broke down, forcing workers to partially dig by hand and adopt other riskier methods to bring them to safety.

 

Engineers had previously attempted to excavate the debris in the exit shaft using heavy machinery, but were forced to abandon efforts late on Friday after the powerful US-made drill they were using broke down just meters from the trapped men.

Uttarakhand government’s executive engineer Avinash Kumar Saini told CNN that drilling had finally been completed after 17 days.

Rescuers were also simultaneously drilling downward through the unstable mountain terrain as a back up way to reach the trapped men. But in the end the initial plan proved successful.

With the drilling completed, rescuers then pushed a large pipe through the last part of the exit shaft for the men to be brought to safety.

“The work of laying pipes in the tunnel to take out the workers has been completed. Soon all the labor brothers will be taken out,” Pushkar Singh Dhami, Chief Minister Uttarakhand, wrote on X.

State district information officer Kirti Panwar a struck an optimistic tone that the workers would soon be reunited with their families.

 

Ambulances wait in line to enter a tunnel where rescue operations are underway to rescue trapped workers, after the tunnel collapsed, in Uttarkashi in the northern state of Uttarakhand, India, November 28, 2023. REUTERS/Francis Mascarenhas

Ambulances wait in line to enter a tunnel where rescue operations are underway to rescue trapped workers in Uttarakhand, India, November 28, 2023.

Francis Mascarenhas/Reuters

“We are at the end of it all,” he said.

Mahi Shah, the brother-in-law of a laborer trapped inside, who is at the tunnel entrance, said rescuers have gone inside the tunnel.

“41 ambulances are ready here for people to come out. We have been told in about an hour they will all be out,” he told CNN.

Indrajeet Kumar, whose brothers Subodh and Biswajit were among those trapped said families were standing and waiting for their loved ones to walk out.

“They are not out yet, but we have been told to be ready to accompany them for medical aid soon,” he said.

Video broadcast on local television showed jubilant scenes outside the tunnel, with workers smiling and breaking into song after the drilling stopped. An ambulance could be seen driving into the tunnel.

The laborers – all migrant workers from some of India’s poorest states – have been receiving food, water and oxygen through a 53-meter (173 foot) pipe that has been inserted through the debris and authorities say they remain in good health.

Doctors on site have kept in regular contact with the men inside, giving them tips on how to remain positive and calm. Their families have been gathering at the tunnel exit each day to pray for their safe return.

The tunnel is part of Indian Prime Minister Narendra Modi’s Char Dham Highway route, a controversial multimillion dollar project to upgrade. the country’s transport network and improve connectivity to important Hindu pilgrimage sites in the region.

https://www.cnn.com/2023/11/28/india/india-tunnel-rescue-vertical-drilling-intl-hnk/index.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் உத்திரகாண்ட் சுரங்க விபத்து – முதற்கட்டமாக 15பேரை மீட்டது தேசிய பேரிடர் மீட்பு படை

28 NOV, 2023 | 08:45 PM
image

இந்தியாவின் உத்திரகாண்ட் சுரங்க விபத்தில் சிக்கிய தொழிலாளர்களில் முதற்கட்டமாக 15பேரை தேசிய பேரிடர் மீட்பு படை  மீட்டுள்ளது.

உத்தரகாண்டின் உத்தரகாசி மாவட்டத்தின் சில்க்யாரா பகுதியில் கட்டப்பட்டு வந்த சுரங்கப் பாதை கடந்த 12-ம் தேதி ஏற்பட்ட திடீர் நிலச்சரிவைத் தொடர்ந்து இடிந்தது.  இதனால் சுரங்கப் பாதைக்குள் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர்.

tunnel.jpeg

இதையடுத்து 60 மீட்டர் தொலைவுக்கு 80 செ.மீ. விட்டம் கொண்ட குழாயைச் செலுத்தி தொழிலாளர்களை மீட்பதற்கான பணிகள் தொடங்கி நடந்து வந்தன. குழாயைச் செலுத்துவதற்கு துளையிடப்பட்ட பாதையில் இரும்புக் கம்பிகள் குறுக்கிட்டதால் மீட்புப் பணிகள் அவ்வப்போது நிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்கப்பட்டன.  துளையிடும் 25 டன் எடைக் கொண்ட ஆகர் இயந்திரம் நிறுவப்பட்டுள்ள கான்கிரீட் தளத்தில் விரிசல் ஏற்பட்டதால்,  மீட்புப் பணிகள் தொடர்வதில் சிக்கல் நிலவியது.

பின்னர் விரிசல் சீர் செய்யப்பட்டு கடந்த வெள்ளிக்கிழமை மாலை மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டன.  தொடங்கிய ஒரு மணி நேரத்தில் ஆகர் இயந்திரத்தின் பிளேடுகள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டது. இதனால் கிடைமட்டமாக குழாய் செலுத்தும் மீட்புப் பணிகள் முழுவதுமாக முடங்கியது.

மீதமுள்ள 10-12 மீட்டர் தொலைவுக்கு பணியாளர்களே நேரடியாக குழாயைச் செலுத்துவதற்கு இயந்திரத்தின் பிளேடை அகற்றுவது அவசியமாகிறது.  இந்தப் பணியை மேற்கொள்ள இந்திய ராணுவத்தின் மெட்ராஸ் கட்டுமானப் படைப்பிரிவைச் சேர்ந்த பொறியாளர்கள் குழு வீரர்கள் ஞாயிற்றுக்கிழமை ஹைதராபாத்தில் இருந்து சம்பவ இடத்துக்கு சென்றடைந்தனர்.

ராணுவ வீரர்களால் பணிகள் தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது.  ஆகர் இயந்திரம் பிளாஸ்மா கட்டர் மூலம் முழுமையாக வெட்டப்பட்டுள்ளது.  ஆகர் இயந்திரத்தின் முன் பகுதி பைப்லைனில் சிக்கியுள்ளதால் இயந்திரத்தின் முன்பகுதி மற்றும் குப்பைகளை அகற்றும் பணி நடந்து வருவதாகவும்,  குழாயின் கடைசிப் பகுதியின் 2 மீட்டர் பகுதியும் (அதாவது 48 முதல் 50 மீட்டர் வரை) முறுக்கப்பட்டுள்ளதாகவும்,  குழாயின் 2 மீட்டர் பகுதியை வெட்டி அகற்றுவதும் பெரும் சவாலாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

tunnel2.jpeg

இதைத் தொடர்ந்து சுரங்கப் பாதை மணல் குவியலில் பக்கவாட்டில் தொடர்ந்து துளையிட டெல்லியில் இருந்து 24 சிறப்பு தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டனர். மெலிந்த தேகம்,  உயரம் குறைவான இவர்கள் சமதளம்,  மலைப்பகுதியில் எலிவளை போல குடைந்து சிறிய அளவிலான சுரங்கம் தோண்டுவதில் கைதேர்ந்தவர்கள். இதன்காரணமாக ‘எலி வளை’ தொழிலாளர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.

இதற்கிடையில் சுரங்கப் பாதையின் மேல் பகுதியில் இருந்து 86 மீட்டருக்கு செங்குத்தாக துளையிடும் பணியில் 36 மீட்டர் ஆழத்துக்கு இதுவரை துளையிடப்பட்டு உள்ளது. இந்த நிலையில் சுரங்கப் பாதையில் மேற்கொள்ளப்பட்டு வந்த பணிகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 17 நாட்களாக நடைபெற்று வந்த பணிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.

துளையிடப்பட்ட பகுதியின் வழியாக தேசிய பாதுகாப்பு படையினர் சென்று தொழிலாளர்களை மீட்டு வருகின்றனர். முதற்கட்டமாக 15பேரை மீட்டுள்ளது தேசிய பேரிடர் மீட்பு படை. இதனைத் தொடர்ந்து அவர்களை மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டது.

https://www.virakesari.lk/article/170493

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உத்தராகண்ட் விபத்து: 41 தொழிலாளர்களும் ஒருவர் பின் ஒருவராக மீட்கப்பட்டது எப்படி?

உத்தராகண்ட் சுரங்க மீட்பு

பட மூலாதாரம்,AMITSHAHOFFICIAL

28 நவம்பர் 2023
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

17 நாட்களாக நடைபெற்றுவந்த மரணப்போராட்டம் முடிவுக்கு வந்திருக்கிறது. உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசியில் சுரங்கப் பாதைக்குள் சிக்கிய 41 தொழிலாளர்களும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். மீட்கப்பட்ட அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

17 நாள் போராட்டம் வெற்றிகரமாக முடிந்தது எப்படி?

செங்குத்தாக துளையிடும் பணி முடிவடைந்ததும், தொழிலாளர்களை பத்திரமாக மீட்டு வர வசதியாக நீண்ட குழாயும் பதிக்கப்பட்டுவிட்டது. இதனால், 17 நாட்களாக இரவு பகலாக நீண்ட மீட்புப் பணிகள் நிறைவுக்கட்டத்தை எட்டியது.

ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தின் செய்திப்படி, நேற்றிவு 8 மணியளவில் தொழிலாளர்களை வெளியே மீட்டு வரும் பணி தொடங்கியது. முதலில் ஒருவர் பத்திரமாக மீட்டு வெளியே அழைத்து வரப்பட்டார். அடுத்த சிறிது நேரத்திலேயே ஒருவர் பின் ஒருவராக 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

சுரங்கத்தில் இருந்து மீட்கப்பட்டு வெளியே வந்த தொழிலாளர்களை மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி மாலையிட்டு வரவேற்று, அவர்களிடம் நலம் விசாரித்தார்.

உத்தராகண்ட் சுரங்கப்பாதை விபத்து
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

17 நாட்கள் சுரங்கத்தில் சிக்கித்தவித்த 41 உயிர்களை மீட்ட நாயகன் அர்னால்ட் டிக்ஸ் யார் ?

Published By: DIGITAL DESK 3    29 NOV, 2023 | 11:00 AM

image

இந்தியாவில் உத்தராகண்ட் மாநிலத்தின் சில்க்யாரா சுரங்கத்தில் சிக்கியிருந்த 41 தொழிலாளர்களும் செவ்வாய்க்கிழமை (28) மீட்கப்பட்டனர். இந்த அபார மீட்புப் பணியில் உள்நாடு மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த ஏராளமான மீட்புக் குழுவினர் ஈடுப்பட்டிருந்தனர். 

 

48.jpg

அதில் ஒருவர்தான் சர்வதேச சுரங்க நிபுணர் அர்னால்ட் டிக்ஸ்,

பேராசிரியர் அர்னால்ட் டிக்ஸ் சுவிட்சர்லாந்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சர்வதேச சுரங்கப்பாதை மற்றும் நிலத்தடி கூட்டமைப்பின் தலைவராவார். கட்டுமான ஆபத்துகள், பாதுகாப்பு செயல்திறன் தொடர்பான தொழில்நுட்ப சிக்கல்கள் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவர். 

மேலும், நிலத்தடி கட்டுமானங்கள் தொடர்பான அபாயங்கள் பற்றிய ஆலோசனைகளை வழங்கி வரும் டிக்ஸ், உலகின் முன்னணி நிலத்தடி சுரங்கப்பாதை நிபுணராக அறியப்படுகிறார். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பொறியியல், புவியியல், இடர் மேலாண்மை ஆகிய துறைகளில் டிக்ஸ் கவனம் செலுத்தி வருகிறார்.

அண்டர்கிரவுண்ட் ஒர்க்ஸ் சேம்பர்ஸ் அமைப்பின் உறுப்பினராகவும் டிக்ஸ் இருந்து வருகிறார். இந்த அமைப்பு நிலத்தடி பணிகள், வடிவமைப்பு மற்றும் கட்டுமானம் ஆகியவற்றில் ஏற்படும் சிக்கலான அபாயங்களை கண்டறிந்து தீர்க்கும் சர்வதேச நிபுணர்களைக் கொண்ட குழுவாகும்.

சில்க்யாரா சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்பதற்கு உதவ, அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த அர்னால்ட் டிக்ஸ் கடந்த நவம்பர் 20ஆம் திகதி அழைக்கப்பட்டார். நேற்று ஊடகவியலாளர்களிடம் பேசிய டிக்ஸ், “ஆரம்பத்தில், இது விரைவாக நடக்கும் என்று நான் ஒருபோதும் உறுதியளிக்கவில்லை, இது எளிதாக இருக்கும் என்று நான் ஒருபோதும் உறுதியளிக்கவில்லை, அது நாளை நடக்கும் என்று நான் ஒருபோதும் கூறவில்லை. இன்றிரவு என்று கூறவில்லை. அவர்கள் கிறிஸ்துமஸ்க்கு வீட்டில் இருப்பார்கள், பாதுகாப்பாக இருப்பார்கள் என்று நான் சொன்னேன்” என்றார்.

அவர் சொன்னது போலவே,நேற்று செவ்வாய்க்கிழமை  41 தொழிலாளர்களும் எந்தவித ஆபத்தும் இன்றி பத்திரமாக மீட்கப்பட்டனர். மீட்புப் பணியின்போது சுரங்கத்துக்கு வெளியே இருந்த சிறிய கோவிலில் டிக்ஸ் மிகவும் அமைதியான முறையில் அமர்ந்து பிரார்த்தனை செய்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. 

GABFJ8zaMAAS6gB__1_.jpg

"இந்திய அதிகாரிகளின் அற்புதமான சாதனை. அவுஸ்திரேலிய பேராசிரியர் அர்னால்ட் டிக்ஸ் மீட்பு பணியில் பங்கு வகித்தமைக்கு பெருமைப்படுகிறேன்" என அவுஸ்திரேலிய பிரதமர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வாழ்த்தியுள்ளார்

சுரங்க தொழிலாளர்கள் மீட்கப்பட்டது குறித்து, இந்தியாவுக்கான அவுஸ்திரேலியாவின் உயர்ஸ்தானிகர் பிலிப் கிரீன் அர்னால்ட் டிக்ஸை தனது எக்ஸ் தள பக்கத்தில் வாழ்த்தியுள்ளார்.

https://www.virakesari.lk/article/170506

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மகிழ்ச்சியில் இந்தியா; 17 நாட்களுக்கு பின் 'உலகை பார்த்த' 41 Indian Workers | Tunnel Rescue

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.