Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

தென் ஆப்ரிக்காவிடம் தோல்வி - ஐ.பி.எல்.லில் சாதித்து சர்வதேச அரங்கில் சறுக்கிய இளம் வீரர்கள்

இந்தியா vs தென் ஆப்ரிக்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

13 டிசம்பர் 2023, 03:12 GMT
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

ஹென்ட்ரிக்ஸ், கேப்டன் மார்க்ரம் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணியை5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது தென் ஆப்பிரிக்க அணி.

இந்திய அணி வெற்றி பெறுவதற்கு பல வாய்ப்புகள் இருந்தபோதிலும் அனுபவமற்ற பந்துவீச்சு, ஆல்ரவுண்டர்கள் அதிகம் இல்லாதது, தொடக்க வீரர்களின் மோசமான பேட்டிங் போன்றவற்றால் இந்திய அணி தோற்றது.

தென் ஆப்ரிக்கா முன்னிலை

முதலில் பேட் செய்த இந்திய அணி 19.3 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் சேர்த்தது. ஆனால், ஆட்டத்தில் மழை குறுக்கிட்டதால் டக்வொர்த் லூயிஸ் விதிப்படி இலக்கு திருத்தப்பட்டு 15 ஓவர்களில் 152 ரன்கள் சேர்க்க தென் ஆப்பிரிக்காவுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

அதிரடியான தொடக்கத்தை அளித்து ஆடிய தென் ஆப்பிரிக்க அணி நடுப்பகுதியில் தடுமாறினாலும் இறுதியில் 7 பந்துகள் மீதமிருக்கையில் 13.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

ஜடேஜாவுக்கு வாய்ப்பு ஏன்?

இதில் என்ன வியப்பு என்றால், தென் ஆப்பிரி்க்க சுழற்பந்துவீச்சாளர் ஷம்ஸிக்கு சுழற்பந்துவீச்சு சிறப்பாக எடுபட்ட ஆடுகளம் இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் ஜடேஜா, குல்தீப் யாதவ் பந்துவீசும்போது பெரிதாக டர்ன் ஆகவில்லை. அதிலும் ஜடேஜாவை இன்னும் எத்தனை நாட்களுக்கு ஆல் ரவுண்டர் என்று கூறிக் கொண்டு அணியில் வைத்திருக்கப் போகிறது இந்திய அணி நிர்வாகம் எனத் தெரியவில்லை.

கடந்த 2009ம் ஆண்டிலிருந்து இந்திய அணியில் டி20 போட்டிகளில் ஆடி வரும் ஜடேஜா இதுவரை சர்வதேச அரங்கில் ஒரு அரைசதம்கூட அடிக்கவில்லை. கடந்த 2009ம் ஆண்டிலிருந்து விளையாடி வரும் ஜடேஜா கடந்த ஆண்டுதான் 9 போட்டிகளில் அதிகபட்சமாக 201 ரன்கள் குவித்துள்ளார்.

இப்படியிருக்கும் போது ஏன் ஜடேஜாவை ஆல்ரவுண்டர் வரிசையில் இன்னும் அணியில் வைத்திருக்கிறார்கள், இவருக்குப் பதிலாக அக்ஸர் படேல், அல்லது ரவி பிஷ்னோய் போன்ற லெக் ஸ்பின்னர்களுடன் களமிறங்கி இருக்கலாம்.

இந்தியா vs தென் ஆப்ரிக்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்திய டி20 வரலாற்றில் 2வது முறை

இந்திய அணியின் தொடக்க பேட்டர்கள் ஜெய்ஸ்வால், சுப்மான் கில் இருவரும் நேற்று டக்அவுட்டில் ஆட்டமிழந்தனர். இந்திய டி20 வரலாற்றில், கடந்த 2016ம் ஆண்டுக்குப்பின் இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் டக்அவுட்டில் ஆட்டமிழந்தது நேற்று 2வது முறையாகும். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் கெய்க்வாட், ஜெய்ஸ்வால் ஜோடி சிறப்பான தொடக்கத்தை ஒவ்வொரு ஆட்டத்திலும் அளித்தனர்.ஜெய்ஸ்வால் அதிரடியான பேட்டிங்கை கையில் எடுத்தபோது கெய்க்வாட் நிதானம் காட்டினார். இருவருமே டி20 போட்டிகளில் குறிப்பிடத்தகுந்த அளவு ரன்கள் குவித்துள்ளனர்.

ஆனால், சுப்மான் கில்லைப் பொறுத்தவரை ஐபிஎல் தொடரில் மட்டுமே கில் பெரிய பேட்டர் என்று கூறிக்கொள்ளலாம். மற்ற வகையில் சர்வதேச அரங்கில் இதுவரை 12க்கும் மேற்பட்ட டி20 போட்டிகளில் ஆடிய கில் ஒரு சதம் அடித்ததைத் தவிர்த்துப் பார்த்தால் பெரிதாக ஸ்கோர் ஏதும் செய்யவில்லை. ஆதலால், அடுத்த ஆட்டத்தில் ஜெய்ஸ்வாலுடன் ஆடுவதற்கு கில்லுக்குப் பதிலாக கெய்க்வாட்டுக்கு வாய்ப்பு வழங்கலாம். அடுத்த ஆண்டு டி20 உலகக் கோப்பையை எதிர்நோக்கி இந்திய அணி தயாராகி வரும் நிலையில், தகுதியான பேட்டர்களுக்கு வாய்ப்பை வழங்கலாம் என்று வர்ணனையாளர்கள் தெரிவித்தனர்.

இந்தியா vs தென் ஆப்ரிக்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

பேட்டிங்கில் சொதப்பல்

இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரை கேப்டன் சூர்யகுமார் யாதவ் (56), ரிங்கு சிங் 68 நாட்அவுட் ஆகியோரின் பங்களிப்பைத் தவிர்த்துப் பார்த்தால் இந்திய அணியின் ஸ்கோர் 80 ரன்களைக் கூட தாண்டாது. தொடக்க பேட்டர்கள் ஏமாற்றியதால், ஒட்டுமொத்த சுமையும் நடுவரிசை பேட்டர்களான சூர்யகுமார், ரிங்கு மீது விழுந்தது.

இதில் திலக் வர்மா சிறிய கேமியோ ஆடி 29 ரன்களில் ஆட்டமிழந்தார். பவர்ப்ளே முடிவதற்குள் இந்திய அணி 55 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதில் 6 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் என்ற மோசமானநிலையில் இருந்துதான் மீண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யகுமார்-ரிங்கு சிங் 4வது விக்கெட்டுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்து 70 ரன்கள் சேர்த்ததுதான் அதிகபட்சமாகும். மற்ற வகையில் ஜிதேஷ் ஷர்மா(1), ரவீந்திர ஜடேஜா(19) பெரிதாக நிலைத்து ஆடவில்லை.

ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளில் கடைசிவரை பேட்டர்களைக் கொண்டிருக்கும் அணியாக இருக்கிறது. ஆனால், இந்திய அணியைப் பொறுத்தவரை 7-வது வரிசைக்குப்பின் பேட்டர்களோ அல்லது ஆல்ரவுண்டர்களோ இல்லாதது பெரிய குறை.

ஆதலால் இந்திய அணியின் பேட்டர்கள் ஒவ்வொருவரும் தங்களின் ஆட்டத்தின் பாணியை மாற்றி அதிரடி ஆட்டத்தை கையாண்டால்தான் கடைசி வரிசை வீரர்கள் மீது சுமை ஏற்றாமல் இருக்க முடியும்.

இந்தியா vs தென் ஆப்ரிக்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

கண்ணாடியை உடைத்த ரிங்கு

ரிங்கு சிங் களத்தில் இருந்தவரை இந்திய அணியின் ரன்ரேட் நிச்சயமாக உயரும் என்ற நம்பிக்கை ரசிகர்களுக்கு இருந்தது. ஆனால், 16 முதல் 18 ஓவர்களுக்கு இடையே 2 பவுண்டர்கள் மட்டுமே சென்றது. இருப்பினும் ரிங்கு அவ்வப்போது தனது அதிரடியான ஷாட்களால் சிக்ஸர் பவுண்டரி அடிக்கத் தவறவில்லை. மார்க்ரம் வீசிய ஓவரில் ரிங்கு சிங் லாங் ஆன் திசையில் அடித்த பந்து, மைதானத்தில் இருந்த பத்திரிகையாளர் அறையின் கண்ணாடியை உடைத்துக்கொண்டு சென்றது.

இந்தியா vs தென் ஆப்ரிக்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

‘கட்டுக்கோப்பில்லாத’ வேகப்பந்துவீச்சு

பந்துவீச்சைப் பொறுத்தவரை குல்தீப் யாதவ் மட்டுமே ஓரளவுக்குக் கட்டுக்கோப்பாகப் பந்துவீசினார். மற்ற வகையில் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான தென் ஆப்பிரிக்க ஆடுகளத்தில்கூட சிராஜ், முகேஷ் குமார், அர்ஷ்தீப் ஆகியோர் லைன் லென்த் தவறித்தான் பந்துவீசினர். அதிலும் முதல் 2 ஓவர்களில் ஹென்ட்ரிக்ஸ், பிரிட்ஸீ அடித்த அடியைப் பார்த்து மிரண்ட சூர்யகுமார் 3வது ஓவரிலேயே ஜடேஜாவுக்கு வழங்கினார்.

அதிலும் முகேஷ் குமார் யார்கர் வீச முயற்சி செய்தாலும் அதில் பெரும்பகுதி “லோ ஃபுல்டாஸாக” மாறிவிட்டதால் பேட்டர்கள் எளிதாக பெரிய ஷாட்களை அடிக்க ஏதுவாக இருந்தது. அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சு ஆஸ்திரேலியத் தொடரிலிருந்து மோசமாக இருந்து வரும்நிலையில் அவரை ஏன் தென் ஆப்பிரிக்கத் தொடருக்கும் தேர்ந்தெடுத்தார்கள் என்பது கேள்வியாக சமூக வலைத்தளத்தில் எழுகிறது. இந்த ஆட்டத்திலும் அர்ஷ்தீப் 2 ஓவர்கள் வீசி31 ரன்களை வாரி வழங்கினார்.

ஒட்டுமொத்தத்தில் பும்ரா, ஷமி இல்லாத நிலையில் இந்திய அணியின் பந்துவீச்சு பலம், பலவீனம் என்ன என்பது தெளிவாகி வருகிறது. இதே நிலையில் தயாராகினால், டி20 உலகக் கோப்பைக்கும், ஷமி, பும்ராவின் உதவியை இந்திய அணி நாடினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

இந்தியா vs தென் ஆப்ரிக்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

அர்ஷ்தீப் சிங்,முகேஷ் குமார் போன்ற வேகப்பந்துவீச்சாளர்கள் ஐபிஎல் போன்ற வேறுபட்ட தளத்தில் பந்துவீச்சை வெளிப்படுத்தினாலும் சர்வதேச தளம் என்று வரும்போது அவர்களின் திறமைக்கு உரைகல்லாக ஒவ்வொரு போட்டியும் மாறிவிடுகிறது.

இந்த ஆட்டத்தில் சிராஜ் வீசிய முதல் ஓவரிலே 2 கேட்ச்களை இந்திய அணிவீரர்கள் தவறவிட்டனர். அதன்பின் 2வது ஸ்லிப் வரை வைத்த போதிலும் சுப்மான் கில் ஒரு கேட்சை தவறவிட்டார். கேட்சுகளை தவறவிடுவது வெற்றியைத் தவறவிடுவது போன்றதாகும். சூர்யகுமார், கில் தவறவிட்ட கேட்சுகளை பிடித்திருந்தால் ஹென்ட்ரிக்ஸ், பிரிட்ஸ்கீ தொடக்கத்திலேயே ஆட்டமிழந்திருப்பார்கள் ஆட்டமும் திசைமாறியிருக்கும்.

கடைசி நேரத்தில் விழிப்பு

இந்திய அணி தனது வெற்றி குறித்து கடைசி நேரத்தில்தான் உணர்ந்தது போல் செயல்பட்டது. அதனால்தான், கடைசி நேரத்தில் பந்துவீச்சில் நெருக்கடி கொடுத்ததால், 12 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை தென் ஆப்பிரிக்க அணி இழந்தது. குல்தீப் யாதவ் தனது கடைசி ஓவரை பவுண்டரியின்றி வீசினார், முகேஷ் குமார், சிராஜ் கட்டுக்கோப்பாக வீசி நெருக்கடியளித்தனர். இந்த நெருக்கடி தரும் பந்துவீச்சை தொடக்கத்திலேயே செய்திருந்தால் ஆட்டம் வேறு திசையில் பயணித்திருக்கும்.

இந்தியா vs தென் ஆப்ரிக்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஹென்ட்ரிக்ஸ் அதிரடி தொடக்கம்

கடந்த டி20 உலகக் கோப்பைக்கு ஹென்ட்ரிக்ஸைத் தேர்வு செய்யாமல் சென்றது தவறு என்பதை இந்த ஆட்டத்தில் ஹென்ட்ரிக்ஸ் நிரூபித்துவிட்டார். இந்தியப் பந்துவீச்சை வெளுத்துவாங்கிய ஹென்ட்ரிக்ஸ் 27 பந்துகளில் 49 ரன்கள் சேர்த்து அரைசதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார். கேப்டன் மார்க்ரம் 17 பந்துகளி்ல் 30 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இவர்கள் இருவரைத் தவிர மற்ற பேட்டர்கள் பெரிதாக பங்களிப்பு செய்யவில்லை என்றாலும், தென் ஆப்பிரிக்கா வென்றுள்ளது என்பதுதான் போட்டியின் சிறப்பாகும். ஒவ்வொரு பேட்டரும் சிறிய அளவு கேமியோ ஆடிவிட்டு சென்றது வெற்றியை விரைவாக எட்ட உதவியது.

குயின்டன் டீ காக் இல்லாத நிலையில் வாய்ப்புப் பெற்ற ஹென்ட்ரிக்ஸ் தனக்குரிய இடத்தைத் தக்கவைக்கும் விதத்திலேயே பேட் செய்தார். முதல் 16 பந்துகளில் ஹென்ட்ரிக்ஸ், பிரிட்கீ இருவரும் 46 ரன்கள் சேர்த்து இந்திய அணியை திணறடித்தனர். அதன்பின் மார்க்கிரத்துடன் சேர்ந்த ஹென்ட்ரிக்ஸ் 5 ஓவர்களில் 54 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினார்.

தென் ஆப்பிரிக்க வெற்றிக்கு கடைசி 6ஓவர்களில் 44 ரன்கள் தேவைப்பட்டது. கிளாசன்(7), மில்லர்(17) என விரைவாக ஆட்டமிழந்தாலும், ஸ்டப்ஸ்(14), பெலுக்வாயோ(10) இருவரும் சேர்த்து அதிரடியாக பேட் செய்து வெற்றிக்கு வித்திட்டனர்.

தென் ஆப்பிரிக்கப் பந்துவீச்சில் யான்சென், ஷம்ஸியின் பந்துவீச்சு நேற்று அற்புதமாக இருந்தது. உலகக் கோப்பைத் தொடரில் கலக்கிய யான்சென் டி20 தொடருக்கும் தன்னை எளிதாக தகவமைத்துக்கொண்டார். ஜெய்ஸ்வால் பலவீனத்தை உணர்ந்து பேக்வேர்ட் பாயின்ட் திசையில் பீல்டரை நிறுத்தி கேட்சுக்கு வழி செய்தார். வில்லியம்ஸ், கோட்ஸி இருவரும் பவர்ப்ளே ஓவருக்குள் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தி இந்திய அணிக்கு பெரிய நெருக்கடி ஏற்படுத்தினர்.

தென் ஆப்பிரிக்க மைதானங்கள் என்றாலே வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாகவும், பவுன்ஸருக்கு ஏதுவாகவும் அமைக்கப்பட்டிருக்கும். அந்த மைதானத்தில் சுழற்பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு 4 ஓவர்கள் வீசி 18 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்திய தப்ரியாஸ் ஷம்ஸி ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இந்தியா vs தென் ஆப்ரிக்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தியாவின் தொடர் வெற்றிக்கு தென் ஆப்ரிக்கா முற்றுப்புள்ளி

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்க அணி முன்னிலை வகிக்கிறது. முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டநிலையில் கடைசி ஆட்டம் நாளை(14ம்தேதி) ஜோகன்னஸ்பர்க் நகரில் நடக்கிறது. இதில் இந்திய அணி வென்றால் டி20 தொடரை 1-1 என்று சமன் செய்ய முடியும். இதன் மூலம் கடைசியாக விளையாடிய 3 தொடர்களையும் வென்று டி20 போட்டிகளில் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணியின் வெற்றிநடைக்கு தென் ஆப்ரிக்கா முற்றுப்புள்ளி வைத்துள்ளது-

சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி உள்நாட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றிய கையோடு தென் ஆப்பிரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டது. இரண்டாவது டி20 போட்டி இந்திய அணியின் பலவீனங்களை அம்பலமாக்கியுள்ளது. முதல்ஆட்டமே அதிர்ச்சியாக அமைந்துள்ளதால், புதிய மைதானம், காலநிலை, உள்ளூர் ரசிகர்கள் ஆகியவற்றுக்கு ஏற்றாற்போல் தங்களை தகவமைத்துக் கொள்ள வேண்டிய நிலையில் உள்ளனர்.

ஐ.பி.எல்.லில் சாதித்த சுப்மன் கில், முகேஷ் குமார் போன்ற வீரர்கள் சர்வதேச அரங்கில் சறுக்கியுள்ளனர். இதனால், மூத்த வீரர்களுக்கு விடை கொடுத்துவிட்டு இளம் வீரர்களைக் கொண்டு டி20 போட்டிகளில் சாதிக்கும் இந்திய அணியின் எதிர்கால திட்டங்களுககு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

https://www.bbc.com/tamil/articles/cx8ve7dnpl9o

  • கருத்துக்கள உறவுகள்
Posted

டி20 தொடரில் 4வது சதம் அடித்து தென் ஆப்பிரிக்காவுக்கு பதிலடி கொடுத்த சூர்யகுமார்

இந்தியா, இந்திய தேசிய கிரிக்கெட் அணி, தென் ஆப்பிரிக்கா, கிரிக்கெட், விளையாட்டு

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், போத்தி ராஜ்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 15 டிசம்பர் 2023, 04:25 GMT
    புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

கேப்டன் சூர்யகுமார் யாதவின் அற்புதமான சதம், பிறந்தநாளில் குல்தீப் யாதவ் எடுத்த 5 விக்கெட் ஆகியவை தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணி மிகப்பெரிய வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது.

ஜோகன்னஸ்பர்க்கில் நேற்று நடந்த இந்த கடைசி டி20 ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் சேர்த்தது. 202 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 13.5 ஓவர்களில் 95 ரன்களில் சுருண்டு, 106 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியிடம் தோற்றது.

இதன் வெற்றி மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை தென் ஆப்பிரிக்கா, இந்தியா அணிகள் தலா ஒரு வெற்றியுடன் 1-1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்தன. முதல் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

மிகப்பெரிய தோல்வி

இந்தியா, இந்திய தேசிய கிரிக்கெட் அணி, தென் ஆப்பிரிக்கா, கிரிக்கெட், விளையாட்டு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

தென்னாப்பிரிக்காவின் ஐடன் மார்க்ராம் விக்கெட்டை வீழ்த்திய ரவீந்திர ஜடேஜா

தென் ஆப்பிரிக்க அணி டி20 வரலாற்றில் சந்திக்கும் 3வது மிகப்பெரிய தோல்வியாகும். அதேநேரம், தென்ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக இந்திய அணி அதிகபட்ச ரன்கள் வித்தியாசத்தில் பெற்ற வெற்றியாக அமைந்தது.

தென் ஆப்பிரிக்க அணி இந்திய அணியிடம் தோற்றது என்பதைவிட சூர்யகுமாரிடம் தோற்றது என்பது கூறுவது தான் சிறந்தது. ஏனென்றால், சூர்யகுமார் யாதவ் சேர்த்த 100 ரன்களைக் கூட தென் ஆப்பிரிக்க அணியால் அடிக்க முடியாமல் 95 ரன்களில் சுருண்டுவிட்டது.

ரோஹித் சாதனையை சமன் செய்த ஸ்கை

இந்தியா, இந்திய தேசிய கிரிக்கெட் அணி, தென் ஆப்பிரிக்கா, கிரிக்கெட், விளையாட்டு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

சூர்யகுமார் யாதவ் மற்றும் ஜெய்ஸ்வால்

கேப்டனுக்குரிய பொறுப்புடன் ஆடிய 360 டிகிரி வீரர் சூர்யகுமார் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி டி20வரலாற்றில் 4-வது சதத்தை நிறைவு செய்தார். இதன் மூலம் டி20 போட்டிகளில் 4 சதங்கள் அடித்த ரோஹித் சர்மா, மேக்ஸ்வெல் சாதனையை சூர்யகுமார் சமன் செய்துள்ளார். மேக்ஸ்வெல், ரோஹித் சர்மா 100 இன்னிங்ஸ்களைக் கடந்து இந்த சாதனையைச் செய்த நிலையில் சூர்யகுமார் 60 இன்னிங்ஸ்களில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.

தொடக்கத்தில் தனது பேட்டிங்கில் நிதானம் காட்டிய சூர்யகுமார் 32 பந்துகளில் அரைசதத்தையும், அடுத்த 50 ரன்களை 23 பந்துகளிலும் எட்டி இந்திய அணி மிகப்பெரிய ஸ்கோரை எட்ட உதவினார். ஆட்டநாயகன், தொடர் நாயகன் விருதையும் சூர்யகுமார் பெற்றார்.

வெற்றிக்குப்பின் சூர்யகுமார் யாதவ் அளித்த பேட்டியில் “நான் நலமாக இருக்கிறேன், என்னால் நடக்க முடிகிறது, காயம் தீவிரமாக இல்லை. என்னுடைய சதம் வெற்றிக்கு காரணமாகியது என்பது பெருமையாக இருக்கிறது. அச்சமில்லாத கிரிக்கெட்டை விளையாடியிருக்கிறோம் என்பது மகிழ்ச்சி. குல்தீப்பின் 5 விக்கெட் அவரின் பிறந்தநாளுக்கு அவரே அளித்துக்கொண்ட பரிசு” எனத் தெரிவித்தார்.

 
இந்தியா, இந்திய தேசிய கிரிக்கெட் அணி, தென் ஆப்பிரிக்கா, கிரிக்கெட், விளையாட்டு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

கடைசி டி20 போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது இந்திய அணி

குல்தீப்பின் ‘சுய பிறந்தநாள் பரிசு’

தனது 29-வது பிறந்தநாளில் விளையாடிய குல்தீப் யாதவ் அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்தி தென்ஆப்பிரி்க்க பேட்டர்களின் சரிவுக்கு காரணமாகினார். 2.5 ஓவர்கள் வீசிய குல்தீப் 17 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில் குல்தீப் வீசிய கடைசி 6 பந்துகளில் மட்டும் ஒரு ரன் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி தென் ஆப்பிரிக்க பேட்டர்களுக்கு சிம்மசொப்னமாகத் திகழ்ந்தார்.

ஃபார்முக்கு வந்த ஜெய்ஸ்வால்

கடந்த ஆட்டத்தில் டக்அவுட்டில் ஆட்டமிழந்த ஜெய்ஸ்வால் தனது இயல்பான ஆட்டத்துக்கு திரும்பி 41 பந்துகளில் 60ர ன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இந்திய அணியில் சூர்யகுமார்(100),ஜெய்ஸ்வால்(60) ஆகியோர் மட்டுமே அதிகபட்ச ரன்கள் சேர்த்தனர். மற்ற எந்த பேட்டரும் எதிர்பார்த்தது போல் ரன் சேர்க்காமல் ஏமாற்றினர்.

ஜெய்ஸ்வால் தனது 14-வது டி20 இன்னிங்ஸில் அடித்த 4-வது அரைசதம் இதுவாகும். தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்பை ஒவ்வொரு போட்டியிலும் ஜெய்ஸ்வால் சரியாக பயன்படுத்தி வருகிறார்.

இந்திய அணி இந்த ஆட்டத்தில் 12 சிக்ஸர்கள் அடித்தநிலையில் அதில் 8 சிக்ஸர்கள் சூர்யகுமார் அடித்ததாகும், பவுண்டரி கணக்கில் 17 பவுண்டரிகள் அடிக்கப்பட்டநிலையில் அதில் 7 பவுண்டரிகள் ஸ்கை அடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வாய்ப்பை வீணடித்த இளம் பேட்டர்கள்

இந்தியா, இந்திய தேசிய கிரிக்கெட் அணி, தென் ஆப்பிரிக்கா, கிரிக்கெட், விளையாட்டு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

திலக் வர்மா

சுப்மான் கில் தனக்கு கிடைத்த 2வது வாய்ப்பையும் தவறவிட்டு 8 ரன்னில் கால்காப்பில் வாங்கி கேசவ் மகராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். திலக் வர்மா 2வது போட்டியிலும் சொதப்பி டக்அவுட்டில் வெளியேறினார், ஜிதேஷ் சர்மா, ஜடேஜா தலா 4 ரன்களில் விக்கெட்டை இழந்தனர். கடந்த ஆட்டத்தில் அதிரடியாக ஆடிய ரிங்கு சிங் 14 ரன்களில் ஆட்டமிழந்தார்.

ஒட்டுமொத்தத்தில் அணியைத் தூக்கி நிறுத்தியது சூர்யகுமார், ஜெய்ஸ்வால் பேட்டிங் மட்டும்தான். இருவரும் 3வது விக்கெட்டுக்கு 112 ரன்கள் சேர்த்து வலுவான பார்ட்னர்ஷிப் அமைத்துப் பிரிந்தனர்.

இந்திய அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரை வலுவாக இருப்பதாக புறத் தோற்றத்தில் தெரிந்தாலும், சூர்யகுமார், ஜெய்ஸ்வால், ரிங்கு சிங் தவிர கடந்த 2 போட்டிகளில் எந்த இளம் வீரரும் சிறப்பாக பேட் செய்யவில்லை என்பதுதான் நிதர்சனம். சூழலுக்கு ஏற்றார்போல் தங்களின் பேட்டிங்கை மாற்றிக்கொள்ளாத கில், திலக் வர்மா, ஜிதேஷ் ஷர்மா, ஜடேஜா ஆகியோருடன் டி20 உலகக் கோப்பையை எதிர்கொள்வது கடினம்தான் என்று விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள்.

மேம்பட்ட பந்துவீச்சு

அதேநேரம், கடந்த போட்டியோடு ஒப்பிடும்போது இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் பந்துவீச்சு மேம்பட்டிருந்தது. கடந்த போட்டியில் செய்த தவறுகளைத் திருத்திக் கொண்டு முதல் ஓவரிலேயே 3 ஸ்லிப்புகளை கேப்டன் சூர்யா நிறுத்தினார். இதனால் சிராஜ் வீசிய முதல் ஓவரிலேயே 3 ஸ்லிப் பீல்டர்கள் நிறுத்தப்பட்டு தென் ஆப்பிரிக்க பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டது.

அதற்கு ஏற்றார்போல் சிராஜ் பந்துவீச்சும் சிறப்பாக இருந்தது, பல பந்துகளை லெக் கட்டராகவும், அவுட் ஸ்விங்கிலும் வீசிய சிராஜ் பந்துவீச்சை, தொட முடியாமல் தென் ஆப்பிரிக்க பேட்டர்கள் பீட்டன் ஆகினர்.

முகேஷ் குமார் பந்துவீச்சில் வேகம் இல்லாவிட்டாலும் இந்த ஆட்டத்தில் சரியான லைன்லென்த்தில் வீசி நெருக்கடிஅளித்தார். தொடக்கத்திலேயே மேத்யூ பிரிட்ஸ்கீ விக்கெட்டை வீழ்த்தி முகேஷ் நெருக்கடி கொடுத்தார். பவர்ப்ளே முடிவதற்கு தென் ஆப்பிரிக்காவின் 3 விக்கெட்டுகளை வீழ்த்திநெருக்கடி அளித்த இந்திய அணி, அடுத்த 8 ஓவர்களில் மீதமிருந்த 7 விக்கெட்டுகளையும் வீழ்த்தி வெற்றி பெற்றது.

 

ஜடேஜாவின் கேப்டன் திறமை

இந்தியா, இந்திய தேசிய கிரிக்கெட் அணி, தென் ஆப்பிரிக்கா, கிரிக்கெட், விளையாட்டு

பட மூலாதாரம்,GETTY IMAGES

சூர்யகுமார் களத்தில் இருந்த சிறிது நேரத்தில் பீல்டிங் செய்தபோது தசைப்பிடிப்பு ஏற்பட்டு டக்அவுட் சென்றுவிட்டார். அதன்பின் கேப்டன் பொறுப்பில் இருந்து அணியை வழிநடத்திச் சென்றது ரவீந்திர ஜடேஜாதான். பவர்ப்ளே முடிந்து அடுத்த ஓவரை வீச வந்தவுடன் முதல் பந்திலேயே மார்க்ரம் விக்கெட்டை ஜடேஜா எடுத்தார்.

தென் ஆப்பிரிக்க தோல்விக்கு காரணங்கள்

தென் ஆப்பிரிக்க அணியைப் பொறுத்தவரை பெரிய ஷாட்களுக்கு ஆசைப் பட்டு பந்தை கணிக்காமல் பல பேட்டர்கள் விக்கெட்டை இழந்தனர். கிளாசன், மார்க்ரம், மில்லர் போன்ற அனுபவம் மிக்க பேட்டர்கள் பந்தை கணிக்காமல் ஆடி தங்களின் விக்கெட்டை தேவையின்றி பறிகொடுத்தனர். 42 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்த தென் ஆப்பிரிக்க அணி அடுத்த, 53ரன்களுக்குள் மீதமிருந்த 7 விக்கெட்டுகளையும் இழந்து தோற்றது.

ஜோகன்ஸ்பர்க் ஆடுகளம் வழக்கத்துக்கு மாறாக, தென் ஆப்பிரிக்க சுழற்பந்துவீச்சாளர்கள் பந்துவீசும்போது போதுமான அளவு ஒத்துழைக்கவில்லை, ஆனால், இந்தியப் பந்துவீச்சாளர்கள் பந்துவீசும் போது பந்துகள் நன்றாக டர்ன் ஆனது.

அதிரடித் தொடக்கம்

இந்தியா, இந்திய தேசிய கிரிக்கெட் அணி, தென் ஆப்பிரிக்கா, கிரிக்கெட், விளையாட்டு

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்திய அணி ஜெய்ஸ்வால் அருமையான தொடக்கத்தை அளித்து ரன்களை வெளுத்து வாங்கினார். இதைப் பார்த்த கேப்டன் மார்க்ரம், 3வது ஓவரிலேயே கேசவ் மகராஜை பந்துவீச அழைத்தார். அதற்கு ஏற்றார்போல், மகராஜ் பந்துவீச வந்தஉடன் சுப்மான் கில் விக்கெட்டை வீழ்த்திக் கொடுத்தார். சுப்மான் கில் ஸ்வீப் ஷாட் அடிக்க முற்பட்டபோது கால்காப்பில் வாங்கினார், டி ரீப்ளேயில் பந்து லெக்சைடு சென்றது தெரிந்தாலும் கில்லுக்கு அவுட் வழங்கப்பட்டது. அடுத்து வந்த திலக் வர்மா வந்தவேகத்தில் விக்கெட்டை இழந்தார்.

விளாசல் கூட்டணி

சூர்யகுமார், ஜெய்ஸ்வால் கூட்டணி தென் ஆப்பிரி்க்கப் பந்துவீச்சை பதம் பார்த்து, வெளுத்து வாங்கியது. பவர்ப்ளே முடியும் போது 2 விக்கெட்டுகள் இழப்புக்கு இந்திய அணி 62 ரன்கள் சேர்த்தது. ஸ்கை, ஜெய்ஸ்வாலின் அதிரடி ஆட்டத்தால், 11.2 ஓவர்களில் இந்திய அணி 100 ரன்களை எட்டியது. விளாசலில் இறங்கிய ஜெய்ஸ்வால் 34 பந்துகளிலும், சூர்யகுமார் 32 பந்துகளிலும் அரைசதத்தை நிறைவு செய்தனர். 3-வது விக்கெட்டுக்கு 112 ரன்கள் சேர்த்தநிலையில் ஜெய்ஸ்வால் 60 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்துவந்த ரிங்கு சிங் (14) ரன்களில் துரதிர்ஷ்டவசமாக ஆட்டமிழக்க இந்திய அணியின் நம்பிக்கை தளர்ந்து. சூர்யகுமாரும் 55 பந்துகளில் சதம் அடித்து வெளியேற இந்திய அணி விக்கெட் சரிவு தொடங்கியது. 188 ரன்கள் வரை 3 விக்கெட்டுகளை இழந்திருந்த இந்திய அணி அடுத்த 13 ரன்களைச் சேர்ப்பதற்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

 

பந்துவீச்சில் நெருக்கடி

இந்தியா, இந்திய தேசிய கிரிக்கெட் அணி, தென் ஆப்பிரிக்கா, கிரிக்கெட், விளையாட்டு

பட மூலாதாரம்,GETTY IMAGES

202 ரன்கள் எனும் இமாலய இலக்கை சேஸிங் செய்யும் முயற்சியோடு தென் ஆப்பிரிக்க அணி களமிறங்கியது. ஆனால், ஹென்ட்ரிக்ஸ், பிரிட்ஸ்கீ ஆகியோருக்கு ஏற்றார்போல் வியூகங்களை அமைத்து, 3 ஸ்லிப் வைத்து இந்தியா பந்துவீசியது. சிராஜ் வீசிய முதல்ஓவரிலேயே தென் ஆப்பிரி்க்க பேட்டர்கள் திணறியது தெரிந்தது, பல பந்துகளை பிரிட்ஸீ, ஹென்ட்ரிக்ஸ் பீட்டன் செய்தனர். ஆனால் முகேஷ் குமார் வீசிய 2வது ஓவரிலேயே இன்சைட் எட்ஜ் மூலம் பிரிட்ஸ்கி 4 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றத்துடன் வெளியேறினார்.

மூத்த வீரர்கள் பொறுப்பின்மை

கடந்த ஆட்டத்தில் பிரிட்ஸ்கி ரன் அவுட் ஆகியநிலையில் இந்த ஆட்டத்தில் ஹென்ட்ரிக்ஸ் ரன் அவுட் ஆகி 8 ரன்னில் விக்கெட்டை இழந்தார். அடுத்துவந்த அனுபவ வீரர் கிளாசன் ஒரு பவுண்டரி மட்டுமே அடித்தநிலையில் அர்ஷ்தீப் பந்துவீச்சில் ஸ்வீப் ஷாட் அடிக்க முற்பட்டு ஸ்லோபாலை தூக்கி அடித்தார். ஆனால், பவுண்டரி பகுதியில் ரிங்கு சிங்கால் கேட்ச் பிடிக்கப்பட்டு கிளாசன் 5 ரன்களில் ஆட்டமிழந்தார்.

விக்கெட்டுகள் சரிந்தாலும் அதிரடியாக பேட் செய்த கேப்டன் மார்க்ரம், தென் ஆப்பிரிக்க பேட்டர்களுக்கு நம்பிக்கையூட்டினார். பவர்ப்ளே முடிந்து 7-வது ஓவரை ஜடேஜா வீசினார். முதல் பந்தை தூக்கி அடிக்க மார்க்ரம் முயன்று அது ஜெய்ஸ்வாலிடம் கேட்சாக 25 ரன்னில் மார்க்ரம் வெளியேறினார். தேவையற்ற நேரத்தில் மார்க்ரம் தேவையற்ற ஷாட் அடித்து அணியை நெருக்கடியில் தள்ளினார்.

டிஆர்எஸ் இல்லாததால் தப்பித்த மில்லர்

அதன்பின் வந்த நடுவரிசை பேட்டர்கள் பெரேரா (12), பெகுல்குவேயோ (0) இருவரும் ஏமாற்றினார். டேவிட் மில்லர் 18 ரன்கள் சேர்த்திருந்தபோது, ஜடேஜா வீசிய பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் ஜிதேஷ் ஷர்மா கேட்ச் பிடித்தார். ஆனால் அந்த நேரத்தில் டிஆர்எஸ் சிஸ்டம் செயல்படாமல் இருந்ததால் மில்லர் தப்பித்தார். இறுதியில் 35 ரன்கள் சேர்த்தநிலையில் குல்தீப் யாதவ் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி மில்லர் ஆட்டமிழந்தார்.

https://www.bbc.com/tamil/articles/c14ylr757lzo

  • nunavilan changed the title to இந்தியா தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் தொடர்
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழ்நாடு வீரர் சாய் சுதர்சன் அசத்தல் அறிமுகம் - தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக என்ன சாதித்தார்?

சாய் சுதர்சன் அறிமுகம் - இந்தியா வெற்றி

பட மூலாதாரம்,GETTY IMAGES

17 டிசம்பர் 2023, 13:01 GMT
புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அசத்தல் வெற்றியை பதிவு செய்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்ரிக்க அணி இந்திய வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வெறும் 116 ரன்களில் ஆட்டமிழந்தனர். அதனை, இந்திய வீரர்கள் எளிதில் ஊதித் தள்ளினர்.

இந்தப் போட்டியின் மூலம் சர்வதேச அரங்கில் கால் பதித்த தமிழ்நாடு வீரர் சாய் சுதர்சன் முதல் போட்டியிலேயே முத்திரை பதித்தார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி ஒரு நாள் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

தென் ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி இருபது ஓவர் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. அதனைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தொடங்கியுள்ளது.

தமிழ்நாடு வீரர் சாய் சுதர்சன் அறிமுகம்

இந்த போட்டியின் மூலம் சர்வதேச போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 22 வயதே நிரம்பிய இளம் வீரரான சாய் சுதர்சன் களம் கண்டார். கேப்டன் லோகேஷ் ராகுல் அவருக்கு இந்திய அணியின் தோப்பியை அளித்தார். மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த தென்னாப்பிரிக்கா இளஞ்சிவப்பு நிற ஜெர்சியை அணிந்து விளையாடியது.

சாய் சுதர்சன் அறிமுகம் - இந்தியா வெற்றி

பட மூலாதாரம்,GETTY IMAGES

தென் ஆப்ரிக்காவுக்கு தொடக்கமே அதிர்ச்சி

நியூ வான்டரர்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்க கேப்டன் எய்டன் மார்க்ரம் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆனால் அது தவறு என்று அடுத்த சிறிது நேரத்திலேயே அவர் உணர்ந்திருப்பார்.

தென் ஆப்ரிக்க அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. அர்ஷ்தீப் சிங் வீசிய பந்தில் தொடக்க வீரர் ரீஸா ஹென்ட்ரிக்ஸ் ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். அவரைத் தொடர்ந்து களம் கண்ட அதிரடி வீரர் ராஸ்ஸி வான்டர் டுஸ்சன் அதே அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் காலியானார்.

3 ரன்களை எடுப்பதற்குள்ளாகவே தென் ஆப்ரிக்க அணி 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தொடக்க வீரர் டோனி ஷோர்சியுடன் இணைந்து அணியை தூக்கி நிறுத்த கேப்டன் மார்க்ரம் முயன்றார். ஆனால், அது நடக்கவில்லை.

சாய் சுதர்சன் அறிமுகம் - இந்தியா வெற்றி

பட மூலாதாரம்,GETTY IMAGES

அர்ஷ்தீப் சிங், ஆவேஷ்கான் மிரட்டல் பந்துவீச்சு

இந்திய அணியின் பந்துவீச்சில் அனல் பறந்தது. குறிப்பாக அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான் ஆகிய இருவருமே துல்லியமாக பந்துவீசி தென் ஆப்ரிக்க பேட்ஸ்மேன்களை மிரட்டினர்.

டோனி ஷோர்சி 28 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த தென் ஆப்ரிக்க விக்கெட் கீப்பரும் அதிரடி ஆட்டக்காரருமான ஹென்றி கிளாஸனும் அந்த அணிக்கு ஏமாற்றம் அளித்தார். அவர் 6 ரன் மட்டுமே எடுத்து அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் ஸ்டம்புகளை பறிகொடுத்தார்.

கேப்டன் மார்க்ரம் 12 ரன்களில் நடையைக் கட்டினார். தென் ஆப்ரிக்க அணியின் ஆபாத்பாந்தவனாக பார்க்கப்படும் அதிரடி வீரர் டேவிட் மில்லர் 2 ரன்களை மட்டுமே எடுத்து ஆவேஷ்கான் பந்துவீச்சில் விக்கெட் கீப்பரான கேப்டன் லோகேஷ் ராகுலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

வியான் முல்டன் 0, இந்திய வம்சாவளி வீரரான கேசவ் மகராஜ் 7 ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். இறுதிக்கட்டத்தில் அன்டிலே மட்டும் நம்பிக்கை அளிக்கும் விதமாக ஆடி 33 ரன்களை எடுத்தார்.

தென் ஆப்ரிக்க அணி 27.3 ஓவர்களிலேயே 116 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்டுகளையும், ஆவேஷ் கான் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் ஒரு விக்கெட்டை எடுத்தார்.

சாய் சுதர்சன் அறிமுகம் - இந்தியா வெற்றி

பட மூலாதாரம்,GETTY IMAGES

முதல் போட்டியிலேயே சாய் சுதர்சன் அசத்தல்

எளிய இலக்கை எதிர்கொண்ட இந்திய அணிக்கு தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட்டும், சாய் சுதர்சனும் களம் புகுந்தனர். ருதுராஜ் கெய்க்வாட் 10 பந்துகளில் 5 ரன் எடுத்த நிலையில் முல்டர் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்தார்.

ஆனால், மறுமுனையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சாய் சுதர்சன் முதல் போட்டி என்ற சாயலே தெரியாத வகையில் முதல் பந்தில் இருந்தே அபாரமாக ஆடினார். எந்தவொரு பதற்றமும் இல்லாமல் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாய் சுதர்சன் ஒரு பந்து கூட வீணடிக்காமல் ரன்களை சேர்த்தார். இதனால் இந்திய அணியின் ரன் ரேட் சிறப்பாக இருந்தது.

அவருடன் கைகோர்த்த ஸ்ரேயாஸ் ஐயரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவருமே அரைசதம் அடித்து அசத்தினர். சாய் சுதர்சன் 39 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

இருவரும் சேர்ந்து இந்திய அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினர். இந்திய அணி வெற்றியின் விளிம்பில் இருந்த போது, அரைசதம் எடுத்திருந்த ஸ்ரேயாஸ் ஐயர் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் வந்த திலக் வர்மா, சாய் சுதர்சனுடம் ஜோடி சேர்ந்தார். இருவரும் இந்திய அணி வெற்றிக்கோட்டை எளிதாக எட்டச் செய்தனர்.

முதல் போட்டியிலேயே அரைசதம் அடித்து அசத்திய சாய் சுதர்சன் 43 பந்துகளில் 55 ரன்கள் சேர்த்தார். இதில் 9 பவுண்டரிகள் அடங்கும்.

சாய் சுதர்சன் அறிமுகம் - இந்தியா வெற்றி

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆட்ட நாயகன் அர்ஷ்தீப் சிங்

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. 37 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி தென் ஆப்ரிக்க அணியின் அஸ்திவாரத்தையே அசைத்த அர்ஷ்தீப் சிங் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

https://www.bbc.com/tamil/articles/cg3vjpl9zwgo

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தென்னாப்பிரிக்க ஆடுகளத்தில் ரன் எடுக்க இந்திய வீரர்கள் திணறியது ஏன்?

இந்தியா - தென்னாப்பிரிக்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், க.போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

நன்றே பர்கரின் துல்லியமான பந்துவீச்சு, டோனி ஜோர்ஜியின் முதல் சதம் ஆகியவற்றால் ஜீபெரா நகரில் நேற்று நடந்த 2வது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென் ஆப்பிரிக்க அணி.

முதலில் பேட் செய்த இந்திய அணி 46.2 ஓவர்களில் 211 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 212 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் எளிய இலக்கை துரத்திச் சென்ற தென் ஆப்பிரிக்க அணி, 45 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் தொடர் சமனில் உள்ளது. அது மட்டுமல்லாமல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தொடர்ந்து 4-வது ஒருநாள் வெற்றியை இந்திய அணி பதிவு செய்யவிடாமல் தென் ஆப்பிரிக்கா தடுத்துவிட்டது.

அடுத்துவரும் கடைசி மற்றும் 3-வது ஒருநாள் போட்டியையும் தென் ஆப்பிரிக்கா வென்றால்தான் ஒருநாள் தொடரைக் கைப்பற்றி தனது பெயரையும் காப்பாற்றிக்கொள்ள முடியும்.

ஏனென்றால், கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து சொந்த மண்ணில் நடந்த எந்த ஒருநாள் தொடரையும் தென் ஆப்பிரிக்க அணியால் கைப்பற்ற முடியவில்லை. ஒருவேளை இந்தியாவிடம் 3வது ஒருநாள் போட்டியில் தோல்வி அடைந்தால், தொடர்ந்து 4-வது ஒருநாள் தொடரை சொந்த மண்ணில் இழந்து தென் ஆப்பிரிக்கா அவப்பெயரைப் பெறும்.

இந்திய அணிக்கு எதிராக தனது 4-வது போட்டியிலேயே சதம் விளாசி வெற்றிக்குத் துணை புரிந்த டோனி ஜோர்ஜி (119) ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடக்க வீரர் ஹென்ட்ரிக்ஸ் (52), டூசென் (36) ஆகியோர் வெற்றிக்கு காரணமாக அமைந்தனர். இதில் தொடக்க விக்கெட்டுக்கு ஹென்ட்ரிக்ஸ், ஜோர்ஜி இருவரும் 130 ரன்கள் சேர்த்து வெற்றியை எளிதாக்கினர்.

 

ஆடுகளத்தின் தன்மை அறியவில்லையா?

இந்தப் போட்டி நடந்த மைதானம், ஜோகன்னஸ்பர்க் ஆடுகளம் போல் அதிக ரன்களை அடிக்கும் விக்கெட் இல்லை. இந்த மைதானத்தில் சர்வதேச ஒருநாள் போட்டி 4 ஆண்டுகளுக்குப்பின் நேற்றுதான் நடந்தது. கடந்த 12 ஆண்டுகளில் இங்கு 8 ஒருநாள் போட்டிகள் நடந்துள்ளன. அதில் ஒரு போட்டியில்கூட எந்த அணியும் 300 ரன்களை எட்டியது இல்லை.

இந்த ஆடுகளம் மெதுவான, பந்துகள் தாழ்வாக வரும் விக்கெட்டைக் கொண்டது. தென் ஆப்பிரிக்காவில் இருக்கும் மைதானங்களில் குறைந்த தரம் கொண்ட மைதானத்தில் முக்கியமானதாகும்.

இத்தகைய விவரங்களைத் தெரிந்திருந்தாலும் இந்திய அணியின் பேட்டர்கள் நேற்றைய ஆட்டத்தில் சிறிதுகூட பொறுமை காட்டவில்லை. இந்திய பேட்டர்கள் பேட் செய்யும் போது பந்து எந்த வேகத்தில் வருகிறது, நின்று வருகிறதா அல்லது ஸ்விங், சீமிங் இருக்கிறதா என்பதை பெரிதாக கவனித்தது போல் தெரியவில்லை.

ஏனென்றால், கெய்க்வாட் ஆட்டமிழந்தவிதம், பந்தின் வேகத்தை சற்றுகூட கவனிக்காமல் கால்காப்பில் வாங்கி பர்கர் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். ஆடுகளத்தின் தன்மையை நன்கு புரிந்துகொண்ட தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர்கள் லிசாட் வில்லியம்ஸ், பர்கர், ஹென்ட்ரிக்ஸ் ஆகிய மூவரும் தொடக்கத்திலிருந்து லைன் லென்த்தை நகற்றாமல் பந்துவீசி நெருக்கடியில் தள்ளினர்.

 
இந்தியா, தென் ஆப்பிரிக்கா, கிரிக்கெட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ஒட்டுமொத்தத்தில் இந்திய அணியின் பேட்டிங் பலவீனம், இதுபோன்ற சவாலான ஆடுகளத்தில் வெளிப்பட்டுவிட்டது.

தாக்குப்பிடிக்காத இந்திய பேட்டர்கள்

தென் ஆப்பிரிக்காவின் பிரதான வேகப்பந்து வீச்சாளர்களான நார்ஜே, ரபாடா, யான்சென் ஆகியோர் இல்லாத நிலையில் 2-வது நிலை பந்துவீச்சாளர்களுக்கே இந்திய அணி பேட்டர்களால் தாக்குப்பிடிக்க முடியவில்லை என்பதுதான் நிதர்சனம்.

இந்த ஆடுகளத்தில் பெரிய ஸ்கோர் அடிப்பது கடினமானது. 250 ரன்கள் சேர்த்துவிட்டாலே சேஸிங் செய்வது கடினம் என்பது தெரியும். அதற்கு ஏற்றாற்போல் விக்கெட்டை நிலைப்படுத்தும் அளவுக்குகூட இந்திய பேட்டர்கள் விளையாடவில்லை. ஆனால், இந்திய பேட்டர்கள் புரிந்து கொண்டதைவிட, தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர்கள் ஆடுகளத்தை நன்கு புரிந்துகொண்டு பந்துவீசினர்.

தென் ஆப்பிரிக்காவுக்கு கிடைத்த இந்த வெற்றி வேகப்பந்து வீச்சாளர்கள் பெற்றுக் கொடுத்த வெற்றியாகும். தொடக்கத்திலேயே இந்திய பேட்டிங்கை நிலைகுலைய வைத்து, பெரிய ரன்ஸ்கோர் செய்யவிடாமல் தடுத்துவிட்டனர்.

3 வேகப்பந்துவீச்சாளர்கள் சேர்ந்து 28 ஓவர்கள் பந்துவீசி 113 ரன்கள் கொடுத்து 6 இந்திய அணியின் 6 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்த 3 பந்துவீச்சாளர்களும் சேர்ந்து வீசிய ஓவரில் மட்டும் 118 டாட் பந்துகள் வீசப்பட்டுள்ளன. அதாவது இவர்கள் வீசிய 28 ஓவர்களில் 20 ஓவர்கள் டாட் பந்துகளாகும். மீதமுள்ள 8ஓவர்களில்தான் இந்திய பேட்டர்கள் 113 ரன்களை அடித்துள்ளது என்பதாகும்.

 
இந்தியா, தென் ஆப்பிரிக்கா, கிரிக்கெட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

3 வேகப்பந்துவீச்சாளர்கள் சேர்ந்து 28 ஓவர்கள் பந்துவீசி 113 ரன்கள் கொடுத்து 6 இந்திய அணியின் 6 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினர்

கோர்ஸியை ஆட்டமிழக்கச் செய்ய 8 பந்துவீச்சாளர்கள்

தென் ஆப்பிரிக்க அணியின் பேட்டர்களும் இந்த விக்கெட்டில் இந்த ஸ்கோர் சேஸிங் செய்யக்கூடியது என்றாலும் எளிதானது அல்ல என்பதைப் புரிந்து பேட் செய்தனர். இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் முகேஷ் குமார், அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான் 3 பேரும் லைன் லென்த்தில் வீசி தொடக்கத்தில் நெருக்கடி அளித்தனர். இதனால் தொடக்கத்தில் தென்ஆப்பிரிக்கா ரன்ரேட் மெதுவாகவே உயர்ந்தது.

ஆனால், இந்திய பந்துவீச்சாளர்கள் தவறான லென்த்தின் பந்துவீசிய போதெல்லாம் டோனி கோர்ஸி, ஹென்ட்ரிக்ஸ் இருவரும் சேர்ந்து பந்துவீச்சை வெளுத்து வாங்கினர். இதில் டோனி கோர்ஸியை ஆட்டமிழக்கச் செய்யவும், முதல் விக்கெட்டை எடுக்கவும் 8 பந்துவீச்சாளர்களை கேப்டன் ராகுல் பயன்படுத்தியும் நீண்ட முயற்சிக்குகப்பின்புதான் பலன் கிடைத்தது.

பேட்டிங் பலவீனம் வெளிப்பட்டதா?

ஒட்டுமொத்தத்தில் இந்திய அணியின் பேட்டிங் பலவீனம், இதுபோன்ற சவாலான ஆடுகளத்தில் வெளிப்பட்டுவிட்டது. இளம் வீரர்களுக்கு பேட்டிங் அனுபவம் இன்னும் தேவை என்பதை வெளிக்காட்டியுளளது.

குறிப்பாக கெய்க்வாட், திலக் வர்மா, சஞ்சு சாம்ஸன், ரிங்கு சிங் ஆகியோர் இந்தியாவில் உள்ள பேட்டிங்கிற்கு சாதகமான, அல்லது எந்த நாட்டிலும் இருக்கும் பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தில்தான் விளையாடுவதற்கு தகுதியுள்ளவர்கள். இதுபோன்ற சவாலான ஆடுகளத்தில் பேட்டிங் செய்ய பொறுமையும் இல்லை, ஷாட்களை தேர்ந்தெடுத்தவிதமும், பந்துகளை கையாண்டவிதமும் மோசமாக இருந்தது.

அதிலும் இந்திய அணிக்கு நடுவரிசை, ஒன்டவுன் வரிசைக்கு நல்ல பேட்டர் தேவை என்பதால், திலக் வர்மாவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து இப்போதுவரை பெரிதாக எந்த ஸ்கோரும் அவர் செய்யவில்லை.

 
இந்தியா, தென் ஆப்பிரிக்கா, கிரிக்கெட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

அனுபவம் வாய்ந்த பேட்டரான சாம்ஸன் 12 ரன்களில் ஹென்ட்ரிக்ஸ் பந்துவீச்சில் போல்டாகினார்

‘மாறாத’ சஞ்சு சாம்ஸன்

நிலைத்தன்மை இல்லாத காரணத்தால்தான் இந்திய அணிக்குள் நிலையாக இடம் பெறமுடியாமல் சஞ்சு சாம்ஸன் தவித்து வந்தார். அதை மீண்டும் இந்த ஆட்டத்தில் நிரூபிதித்துவிட்டார். அனுபவம் வாய்ந்த பேட்டரான சாம்ஸன் 12 ரன்களில் ஹென்ட்ரிக்ஸ் பந்துவீச்சில் போல்டாகினார்.

சாம்ஸனுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற கோரிக்கையைத் தொடர்ந்து தேர்வாளர்கள் அவர் மீது நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பை வழங்கினர், ஆனால், அதிலும் சாம்ஸன் சொதப்பிவிட்டார். இனிவரும் காலங்களில் சாம்ஸனுக்கான வாய்ப்பை மங்கச் செய்திருக்கிறது.

ஆல்ரவுண்டர் அக்ஸர் படேல், இந்த ஆட்டத்திலும் சிறப்பாக பேட் செய்யவில்லை. இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கி வரும் ரிங்கு சிங் தொடர்ந்து 3வது ஆட்டமாக சொதப்பியுள்ளார். கடைசி டி20 போட்டி, முதல் ஒருநாள் ஆட்டத்தைத் தொடர்ந்து இந்த ஆட்டத்திலும் மிகசொற்ப ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இந்திய அணி கடைசி 4 விக்கெட்டுகளை வெறும் 42 ரன்களுக்கு இழந்தது.

நம்பிக்கை நாயகன் சுதர்ஷன்

இந்திய அணிக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய நம்பிக்கை சாய் சுதர்ஷன். தொடர்ந்து 2வது அரைசதத்தை அடித்து இந்திய அணி ஸ்கோர் உயர்வதற்கு முக்கியக் காரணமாக அமைந்தார். தென் ஆப்பிரிக்கப் பந்துவீச்சாளர்கள் வீசும் எந்த தவறான பந்தையும் தண்டிக்க சுதர்ஷன் தவறவில்லை. ரஞ்சிக் கோப்பைத் தொடரில் விளையாடிய அனுபவத்தால் மிகவும் நிதானமான ஆட்டத்தை சுதர்ஷன் கையாண்டார். சுழற்பந்துவீச்சுக்கு எதிராக சிறப்பாக ஆடக்கூடிய சுதர்ஷன், நேற்று கேசவ் மகராஜ் ஓவரில் சிக்ஸர் அடித்து அசத்தினார்.

நிதானமாக ஆடிய சுதர்ஷன் 65 பந்துகளில் தனது 2-வது அரைசதத்தை நிறைவு செய்து 62 ரன்களில் ஆட்டமிழந்தார். ராகுல்-சுதர்ஷன் இருவரும் சேர்ந்து 3-வது விக்கெட்டுக்கு 68 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துக் கொடுத்தனர். இதுதான் இந்திய அணியில் அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பாகும். அதன்பின் கேப்டன் ராகுலுக்கு ஒத்துழைத்து பார்ட்னர்ஷி அமைக்க எந்த வீரர்களும் தயாராக இல்லை என்பதால்தான் ஸ்கோர் குறைவுக்கு காரணமாகும்.

பெரிய ஸ்கோருக்கு ஏன் செல்லவில்லை?

136 ரன்கள் வரை 3 விக்கெட்டுகளை இழந்திருந்த இந்திய அணி, அடுத்த 75 ரன்களுக்குள் மீதமிருந்த 7 விக்கெட்டுகளையும் இழந்தது குறிப்பிடத்தக்கது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சாம்ஸன் (12), ரிங்கு சிங் (17) அக்ஸர் படேல் (7) என சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.

இந்திய அணியில் சாம்ஸன், ரிங்குசிங், அக்ஸர், திலக் வர்மா, கெய்க்வாட் ஆகிய 4 பேட்டர்கள் சாராசரியாக 20 ரன்கள் சேர்த்திருந்தாலே, இந்திய அணியின் ஸ்கோர் 280 ரன்களைத் தொட்டிருக்கும். இந்திய அணியின் ஸ்கோரில் கேப்டன் ராகுல் சேர்த்த 56 ரன்கள், சுதர்ஷன் சேர்த்த 62 ரன்களைத் தவிர்த்துப் பார்த்தால், 90 ரன்கள் கூட மற்ற 8 பேட்டர்களும் சேர்க்கவில்லை என்பது வருத்ததத்குரியது என்று கிரிக்கெட் வர்ணனையாளர்கள் தெரிவித்தனர்.

 
இந்தியா, தென் ஆப்பிரிக்கா, கிரிக்கெட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

தென் ஆப்பிரிக்க பேட்டர்களும் இந்த ஸ்கோர் சேஸிங் செய்யக்கூடியது என்றாலும் எளிதானது அல்ல என்பதைப் புரிந்து பேட் செய்தனர்

தோல்விக்கு என்ன காரணம்?

இதுபோன்ற சவாலான ஆடுகளத்தில் இந்திய அணியின் ஒட்டுமொத்த பேட்டிங் வலிமை என்ன என்பதை இந்த ஆட்டம் வெளிப்படுத்திவிட்டது. சுதர்ஷன், ராகுல் போன்ற நிதானமான ஆட்டத்தைக் கையாளக் கூடிய, பாரம்பரிய ஆட்டத்தை கையாள்பவர்கள்தான் இந்த ஆடுகளத்தில் நிலைக்க முடியும் என்பதை மற்ற பேட்டர்களுக்க உணர்த்திவிட்டனர்.

இந்திய அணி பந்துவீச்சாளர்கள் தொடக்கத்தில் கடும் நெருக்கடி அளித்து, லைன் லென்த்தில் பந்துவீசியதால், ஹென்ட்ரிக்ஸ், ஜோர்ஜி இருவரும் மிகவும் பொறுமையாக ஷாட்களை தேர்ந்தெடுத்து ஆடினர். இதனால், முதல் 35 பந்துகளில் ஹென்ட்ரிக்ஸ் 22 ரன்களும், ஜோர்ஜி முதல் 31 பந்துகளில் 15 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தனர்.

ஆனால், தவறான லைன்லென்த்தில் பந்துவீசப்பட்டபோது ஜோர்ஜி, ஹென்ட்ரிக்ஸ் அதை பவுண்டரிக்கு அனுப்பி தண்டித்தனர். இதனால் அர்ஷ்தீப், முகேஷ் இருவரும் தங்களின் முதல் ஸ்பெல்லில் கட்டுப்பாக பந்துவீசி சராசரியாக 15 ரன்களுக்குள்ளாகவே கொடுத்தனர்.

ஆவேஷ்கான் பந்துவீச்சில் அதிகமான ஷார்ட் பந்துகள் வீசப்பட்டதால், ஹென்ட்ரிக்ஸ், ஜோர்ஜி பவுண்டரிகளாக விளாசி ரன்களைச் சேர்த்தனர். குல்தீப் யாதவ், ஆவேஷ் கான் பந்துவீச்சை குறிவைத்த இருவரும் பவுண்டரி, சிக்ஸர்களா விளாசி வெற்றியை எளிதாக்கினர்.

குல்தீப் யாதவும், ஆவேஷ்கானும் ஓவருக்கு 6 ரன்கள் வீதத்தில் விட்டுக்கொடுத்து தென் ஆப்பிரிக்க பேட்டர்களின் பணியை எளிதாக்கினர். இதுபோன்ற குறைவான ஸ்கோரை டிபெண்ட் செய்யும்போது, பந்துவீச்சாளர்கள் எந்த அளவு சிக்கனமாக ரன்களை விட்டுக்கொடுத்து, கட்டுக் கோப்பாக பந்துவீசுகிறார்களோ அந்த அளவுக்கு போட்டி கடும் இறுக்கமாகச் செல்லும். ஆனால், குல்தீப், ஆவேஷ் கான் பல தவறான பந்துகளை வீசி ரன்களை வாரி வழங்கினர்.

https://www.bbc.com/tamil/articles/c4nyxdrg177o

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உலகக் கோப்பை அணியில் புறக்கணக்கப்பட்ட வீரரின் சதத்தால் தென்னாப்பிரிக்க தொடரை வென்ற இந்தியா

சஞ்சு சாம்சன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், க.போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் புறக்கணிக்கப்பட்ட சஞ்சு சாம்ஸனின் பொறுப்பான ஆட்டத்தால் கிடைத்த சதம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை வெல்ல இந்தியாவுக்கு உதவியிருக்கிறது.

வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங்கின் கட்டுக்கோப்பான பந்துவீச்சும் பாரல் நகரின் போலந்த் பார்க்கில் நேற்று நடந்த 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி வென்று ஒருநாள் தொடரை கைப்பற்றக் காரணமாக அமைந்தன.

முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 296 ரன்கள் சேர்த்து. 297 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி45.5 ஓவர்களில் 218 ரன்களுக்கு ஆட்டமிழந்து, 78 ரன்களில் தோற்றது.

இந்தியா - தென்னாப்பிரிக்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

கணக்குத் தீர்த்தது இந்திய அணி

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. ஒருநாள் போட்டிகளில் நிலைத்தன்மை ஆட்டத்துக்கு தடுமாறி வந்த சஞ்சு சாம்ஸன்(108) நேற்று முதல் சதத்தை பதிவு செய்து இந்திய அணியின் ஸ்கோர் உயர்வுக்கு முக்கியக் காரணமாக இருந்தார். அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. சஞ்சு சாம்ஸனின் முதல் சதம் வீணாகப் போகாமல் இந்திய அணியின் வெற்றிக்கும், தொடர் வெற்றிக்கும் உறுதுணையாக இருந்தது என்றென்றும் அவருக்கு மறக்காத வண்ணங்களைச் சேர்க்கும்.

இந்தத் தொடரில் அற்புதமாக பந்துவீசி முதல் போட்டியில் 5 விக்கெட், இந்த ஆட்டத்தில் 4 விக்கெட் என மொத்தம் 10 விக்கெட்டுகளை சாய்த்த அர்ஷ்தீப் சிங்கிற்கு தொடர்நாயகன் விருது வழங்கப்பட்டது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இதே கே.எல்.ராகுல் கேப்டன்ஷியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்க வந்திருந்தபோது, 3-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரில் ஒயிட்வாஷ் ஆனது. ஆனால், அடுத்த 2 ஆண்டுகளில் அதே கே.எல்.ராகுல் தலைமையில் இளம் அணி புறப்பட்டு வந்து ஒருநாள் தொடரை வென்று, டி20 தொடரை சமன் செய்து, தென் ஆப்பிரி்க்காவுக்கு பதிலடி கொடுத்துள்ளது.

இந்திய அணியின் வெற்றிக்கு பேட்டிங்கில் சாம்ஸன், திலக் வர்மா அமைத்த கூட்டணி முக்கியத் திருப்புமுனையாக அமைந்தது. பந்துவீச்சில் வாஷிங்டன் வீசிய 10 ஓவர்களும், அர்ஷ்தீப் ஓவர்களும் தென் ஆப்பிரிக்க அணியின் ரன்ரேட் குறைவுக்கும், விக்கெட் சரிவுக்கும் காரணம் என்று கூற முடியும்.

 
இந்தியா - தென்னாப்பிரிக்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

சாம்சன் பற்றி கேப்டன் ராகுல் கூறியது என்ன?

வெற்றிக்குப்பின் கேப்டன் ராகுல் கூறுகையில் “உலகக் கோப்பை பைனல் தோல்வி தென் ஆப்பிரிக்க வந்த எனக்கு எங்கள் அணி வீரர்கள் அருமையான வெற்றியை அளித்துள்ளனர். ஐபிஎல் தொடரில் கடந்த சில ஆண்டுகளாக சாம்ஸன் அருமையாக ஆடி வருகிறார். துரதிர்ஷ்டமாக அவருக்கு 3ஆவது இடத்தில் களமிறங்க வாய்ப்பு வழங்க முடியவில்லை. ஏனென்றால் இந்திய அணியில் ஏற்கெனவே 3ஆவது இடத்தை ஜாம்பவான்கள் நிரப்பியுள்ளனர். இனிமேல் 3வது இடத்துக்கான வாய்ப்பு சாம்ஸனுக்கு கிடைக்கும் என்று நம்புகிறேன். அடுத்து டெஸ்ட் தொடரில் கவனம் செலுத்துவோம்” எனத் தெரிவித்தார்.

சுந்தர், அர்ஷ்தீப் நிகழ்த்திய மாயாஜாலம்

வாஷிங்டன் சுந்தர் நீண்டகாலத்துக்கு பின் ஒருநாள் தொடரில் இடம் பெற்று நேற்று தென் ஆப்பிரிக்க பேட்டர்களுக்கு தண்ணிகாட்டினார் என்றுதான் கூற முடியும். 10 ஓவர்கள் வீசிய சுந்தர் 38 ரன்கள் கொடுத்து 2 முக்கிய விக்கெட்டுகளை சாய்த்தார். அதிலும் மார்க்ரம், முல்டர் ஆகிய இரு விக்கெட்டுகளும் இந்திய அணி வெற்றியை நோக்கி பயணிக்க உந்துகோலாக இருந்த விக்கெட்டுகளாகும்.

டி20 தொடரில் சொதப்பலாக பந்துவீசிய அர்ஷ்தீப் சிங் ஒருநாள் தொடரில் பந்துவீச்சுக்கான ரிதத்தை பிடித்துவிட்டார் என்றுதான் கூற முடியும். இந்த ஆட்டத்திலும் தொடக்கத்தில் ரன்களை வழங்கினாலும், லைன் லென்த்தை அடையாளம் கண்டபின் தென் ஆப்பிரிக்க பேட்டர்களுக்கு தனது சீமிங், ஸ்விங் பந்துவீச்சில் சிம்மசொப்னமாகவே அர்ஷ்தீப் இருந்தார். அதிலும் பேட்டிங்கில் நங்கூரமிட்ட சோர்சியை(81) ஸ்விங் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கவைத்து விக்கெட் எடுத்தது பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

 
இந்தியா - தென்னாப்பிரிக்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

நங்கூரமிட்ட பார்ட்னர்ஷிப்

சாம்ஸன்-திலக் வர்மா இந்திய அணியின் ஸ்கோர் உயர்வுக்கு பொறுப்பான பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இருவரும் சேர்ந்து 3வது விக்கெட்டுக்கு 136 பந்துகளில் 116 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். இருவரும் பார்ட்னர்ஷிப் சேர்ந்தபின் ரன் ரேட் மிகவும் மந்தமாக 11 முதல் 30 ஓவர்கள் வரை 73 ரன்கள் மட்டுமே சேர்த்தனர்.

டி20, ஒருநாள் தொடரில் பெரிதாக சோபிக்காத திலக் வர்மா இந்த ஆட்டத்தில் பொறுமையாக பேட் செய்தார். தனது முதல் பவுண்டரியைக்கூட 39 பந்துகளில்தான் அடித்தார். அதிலும் 9 ரன்களில் இருந்து பவுண்டரி அடித்து 13 ரன்களாக திலக் வர்மா உயர்த்தினார். அதன்பின் சாம்ஸனும், திலக் வர்மாவும் களத்தில் நங்கூரமிட்டபின் ரன்கள் குவியத் தொடங்கின. 31 முதல் 40 ஓவர்களில் 73 ரன்களை இருவரும் வேகமாகச் சேர்த்தனர். திலக் வர்மா பொறுமையாக பேட் செய்து 52 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

வெற்றியுடன் முதல் சதம்

சாம்ஸனின் ஒருநாள் போட்டி அதிகபட்சமே 86 ஆகத்தான் இருந்தது. ஆனால், இந்த ஆட்டத்தில் மிகுந்த பொறுமையாக, தனக்கே உரிய ஸ்டைலில் ஷாட்களைத் தேர்ந்தெடுத்து சாம்ஸன் மிகுந்த நிதானத்துடன் பேட் செய்து முதல் சதத்தை 110 பந்துகளில் பதிவு செய்தார். இதில் 2 சிக்ஸர்கள், 6பவுண்டரிகள் அடங்கும். சாம்ஸன் மீது நிலைத்தன்மையற்ற பேட்டர் என்ற விமர்சனம் நீண்டகாலமாக வைக்கப்பட்டு வருகிறது, அதற்கு சிறந்த பதிலடியாகவே தனது சதத்தின் மூலம் சாம்ஸன் வழங்கியுள்ளார் என்றுதான் கூற முடியும்.

 
இந்தியா - தென்னாப்பிரிக்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்திய அணியின் ரன் வேகம்

இந்திய அணிக்கு ஃபினிஷ் டச் கொடுத்தது ரிங்கு சிங்கின் பேட்டிங்தான். அதிரடியாக ஆடிய ரிங்கு சிங் 27 பந்துகளில் 38 ரன்களும், சிறிய கேமியோ ஆடிய சுந்தர் 14 ரன்களும் சேர்த்தனர். இந்தத் தொடர்முழுவதும் அக்ஸர் படேல் பேட்டிங்கில் பெரிதாக ஜொலிக்கவில்லை.

இந்திய அணி முதல் பவர்ப்ளேயில் 59 ரன்கள் சேர்த்தாலும், அடுத்த 20 ஓவர்கள் மந்தமாக ரன் சேர்த்தது. ஆனால் கடைசி 20 ஓவர்களில் மட்டும் 164ரன்கள் சேர்த்தது, கடைசி 10 ஓவர்களில் மட்டும் 93 ரன்கள் சேர்த்தது இந்திய அணி.

இந்திய அணிக்கு மாற்றத்துக்காக ரஜத் பட்டிதார், சுதர்ஷனுடன் சேர்த்து தொடக்க ஆட்டக்காரராக் களமிறக்கப்பட்டார். அதிரடியாக பட்டிதார் தொடங்கினாலும், 22ரன்களில் பர்கர் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி வெளியேறினார். கடந்த இரு போட்டிகளில் அரைசதம் அடித்த சுதர்ஷன் இந்த ஆட்டத்தில்10 ரன்னில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார்.

சிம்மசொப்னமான சுந்தர், அர்ஷ்தீப்

இந்திய அணியின் பந்துவீச்சைப் பொருத்தவரை அர்ஷ்தீப், சுந்தர் இருவரின் பந்துவீச்சும் மாஸ்டர் கிளாஸ் என்றுதான் குறிப்பிட வேண்டும். தென் ஆப்பிரிக்க ஆடுகளங்கள் என்றாலே வேகப்பந்துவீச்சுக்கு உகந்தது என்பதை மாற்றும்வகையில் சுந்தர் நேற்று பந்துவீசினார்.

தனது பந்துவீச்சில் துல்லியத்தன்மையை மாற்றாமல், லைன் லென்த்தில் வீசி தென் ஆப்பிரி்க்க பேட்டர்களை சுந்தர் திணறடித்தார். தனது சீனியர் அக்ஸர் படேலே வீட சுந்தர் அருமையாகப் பந்துவீசினார்.

அதிலும் தனது பந்துவீச்சின் வேகத்தில் வேறுபாடுகளைக் காண்பித்து பேட்டர்களை திணறடித்தார். வாஷிங்டன் சுந்தர் வீசிய பந்து லேகாத்தான் டர்ன் ஆகியது என்றாலும், பேட்டர்கள் பேட்டை வைக்க அச்சப்படும் “கிரே ஏரியா” வில் பந்தை பிட்ச் செய்து திணறடித்தார்.சுந்தர் வீசிய 10 ஓவர்களில் 2 பவுண்டரி மட்டுமே வழங்கினார், 31 டாட் பந்துகளை வீசியுள்ளார். ஏறக்குறைய 5 ஓவர்கள் மெய்டனாகவே எடுத்துக்கொள்ளலாம்.

 
இந்தியா - தென்னாப்பிரிக்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

7 ஓவர்கள் மெய்டன்கள்

அதேபோல அர்ஷ்தீப் சிங்கும் தனது முதல் ஸ்பெல்லில் மட்டுமே ரன்களைக் கொடுத்தார். அதன்பின் லைன்லென்த்தனை கண்டறிந்தபின் அதிலிருந்து நகற்றாமல் பந்துவீசி ரன்களைக் கட்டுப்படுத்தினார். 9 ஓவர்கள் வீசிய அர்ஷ்தீப் ஒரு மெய்டன் கொடுத்து 30 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதில் 39 டாட் பந்துகள் என்றால், ஏறக்குறைய 7.3 ஓவர்களை அர்ஷ்தீப் மெய்டன்களாக வீசி, தனது 10 பந்துகளில் மட்டும்தான் 30 ரன்களை கொடுத்தார் என்று எடுக்கலாம்.

தென் ஆப்பிரிக்காவின் ஆறுதல் இதுதான்

தென் ஆப்பிரிக்க அணியைப் பொருத்தவரை இந்த ஒருநாள் தொடரில் அவர்களுக்கு கிடைத்த ஒரு ஆறுதல், கண்டுபிடிப்பு என்பது டோனி சோர்சி மட்டும்தான். 3போட்டிகளில் ஒரு சதம், இந்த ஆட்டத்தில் 81 ரன்கள் என சோர்சி தேர்ந்த பேட்டர் போன்று பேட் செய்தார். எதிர்கால தென் ஆப்பிரிக்க அணிக்கு நிரந்தரமான இடத்துக்கு அச்சாரமிட்டுள்ளார். இதைத் தவிர இளம் தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் பெரிதாக 3 போட்டிகளிலும் சோபிக்கவில்லை.

தென் ஆப்பிரிக்க அணியின் தோல்விக்கு முக்கியக் காரணம் மார்க்ரமின் ஸ்வீப் ஷாட் குறிதத் மோசமான ஆலோசனைதான் என்று வர்ணனையாளர்கள் தெரிவித்தனர். ஏனென்றால் 3 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் என்று வலுவாக இருந்த தென் ஆப்பிரிக்க அணி, அடுத்த 20 ஓவர்களில் 77 ரன்களுக்கு மீதமிருந்த 7 விக்கெட்டுகளையும் இழந்தது.

 
இந்தியா - தென்னாப்பிரிக்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

வெற்றி தருணம் கிடைக்கவில்லை

தென் ஆப்பிரிக்க கேப்டன் மார்க்ரம் கூறுகையில் “ துரதிர்ஷ்டமாக எங்களால் வெற்றியோடு முடிக்கமுடியவில்லை. அருமையான ஆடுகங்கள், எங்களுக்கு வெற்றிக்கான அந்தத் தருணம் கிடைக்கவில்லை. இந்த ஆடுகளத்தில் 290 ரன்கள் சேஸிங் செய்யக்கூடியதுதான், ஆனால், மொமென்ட்டத்தை தவறவிட்டோம். டாஸ் வெற்றி பெரிதாக பங்காற்றவில்லை. அடுத்துவரும் டெஸ்ட் தொடர் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது, இரு அற்புதமான இடங்களில் நடக்கும் போட்டி சிறப்பாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.

 
இந்தியா - தென்னாப்பிரிக்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

சரிந்த விக்கெட்டுகள்

அதிலும் 17 ரன்களுக்குள் 4 விக்கெட்டிலிருந்து 6-வது விக்கெட்டை இழந்தது தென் ஆப்பிரி்க்கா, அதேபோல, 26 ரன்களுக்குள் கடைசி 4 விக்கெட்டுகளையும் பறிகொடுத்து தோல்வி அடைந்தது.

தென் ஆப்பிரிக்க அணிக்கு சோர்சி, ஹென்ட்ரிக்ஸ் அதிரடியான தொடக்கத்தை அளித்து 8 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 58 ரன்கள் என்று வலுவாகத்தான் இருந்தனர். ஆனால், அர்ஷ்தீப் சிங் தனது பந்துவீச்சில் லைன்லென்த்தை பிடித்தபின் தென் ஆப்பிரிக்கா ரன்ரேட் படுத்துவிட்டது. அர்ஷ்தீப் வீசிய 9-வது ஓவருக்கு திணறிய ஹென்ட்ரிக்ஸ் அதே ஓவரில் ராகுலிடம் கேட்ச் கொடுத்த ஆட்டமிழந்தார்.

அக்ஸர் படேல் பந்துவீச அழைக்கப்பட்டவுடன் முதல் ஓவரிலேயே விக்கெட்டை வீழ்த்தினார். அக்ஸர் ஓவரை எதிர்கொண்டு ஆட திணறிய டூசென், பந்து டர்ன் ஆகாது என்ற நினைப்பில் பேக்ஃபுட் எடுத்து ஆட முற்பட்டு கிளீன் போல்டாகினார்.

கேப்டன் மார்க்ரம், சோர்சியுடன் சேர்ந்து சிறிது நேரம் மட்டுமே பார்ட்னர்ஷிப் அமைத்தார். சுந்தர் பந்துவீச்சை அடிக்க திணறிய மார்க்ரம், அற்புதமான பந்தில் விக்கெட் கீப்பர் ராகுலிடம் கேட்ச் கொடுத்து 36 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒட்டுமொத்தமாக வாஷிங்டன் சுந்தரின் ஆப்ஸ்பின்னை சமாளித்து ஆட தென் ஆப்பிரிக்க பேட்டர்களுக்குத் தெரியவில்லை என்றுதான் கூற முடியும்.

https://www.bbc.com/tamil/articles/cg3x5y1v5q0o

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கே.எல் ராகுல் போராட்டத்தால் தப்பித்த இந்தியா, வாய்ப்பை இழந்த தென் ஆப்பிரிக்கா

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் போட்டியின் முதல் நாள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

ரபாடா தனது துல்லியமான பந்துவீச்சில் நெருக்கடி கொடுத்தபோதிலும், கே.எல்.ராகுலின் தீர்மானமான போராட்டத்தால், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் ஓரளவு கவுரமான ஸ்கோருடன் தப்பித்துள்ளது.

செஞ்சூரியனில் முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. முதல்நாள் ஆட்டத்தில் மழை குறுக்கிட்டதால், 59 ஓவர்களுடன் ஆட்டம் நிறுத்தப்பட்டது. இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 208 ரன்களுடன் ஓரளவுக்கு பாதுகாப்பான நிலையை எட்டியுள்ளது.

இந்திய அணியை சரிவிலிருந்து மீட்ட கே.எல்.ராகுல் 70 ரன்களுடனும், சிராஜும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். கே.எல்.ராகுல் மட்டும் நடுவரிசையில் நிதானமாக பேட் செய்து ரன்களைச் சேர்க்காமல் இருந்திருந்தால், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 150 ரன்களுக்குள் சுருண்டிருக்கும்.

2021ம் ஆண்டில் இதே செஞ்சூரியன் ஆடுகளத்தில் இந்திய அணி 113 ரன்களில் வென்றபோது ராகுல் சதம் அடித்திருந்தார். அதேபோன்ற ஆட்டத்தை நேற்றும் வெளிப்படுத்தினார்.

ஆனால், கே.எல்.ராகுல் களத்தில் வெளிப்படுத்திய தன்னம்பிக்கை, 80 சதவீதம் மிகுந்த கட்டுப்பாடுடன், ஒழுக்கத்துடன் அடிக்கப்பட்ட ஷாட்கள், பாரம்பரிய கிரிக்கெட் முறையை பின்பற்றியவிதம் ஆகியவைதான் அவரை களத்தில் நங்கூரமிடச் செய்தது. முதல் நாள் ஆட்டத்தில் மழை குறுக்கிடாமல் இருந்திருந்தால், இந்தியா 250 ரன்களுக்கு மேல் சேர்த்திருக்க வாய்ப்பு இருந்திருக்கும்.

 

இன்று 2வது நாள் ஆட்டம் நடக்க இருக்கும் நிலையில், ஆடுகளம் காலையில் ஈரப்பதத்துடன் இருக்கும். களத்தில் டெய்லெண்டரான முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா மட்டுமே உள்ளனர். இருவரும் தென் ஆப்பிரிக்காவின் ஸ்விங் பந்துவீச்சையும்,

காலை நேரத்தில் ஈரப்பதத்துடன் இருக்கும் ஆடுகளத்தில் வேகமாக வரும் பந்துகளை எதிர்கொள்வார்களா என்பது சந்தேகம்தான். ஸ்ட்ரைக்கே ராகுல் தொடர்ந்து வைத்துக்கொள்ளும்பட்சத்தில் இந்திய அணி 250 ரன்கள் வரை சேர்க்கலாம். இல்லாவிட்டால் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழக்க நேரிடலாம்.

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் போட்டியின் முதல் நாள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

இந்திய வீரர்கள் ஷர்துல் தாக்கூர் மற்றும் கே.எல்.ராகுல்

வரலாறு படைக்குமா இந்தியா

இந்திய அணி கடந்த 1992 முதல் தென் ஆப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை 8 டெஸ்ட் தொடர்களில் இரு அணிகளும் விளையாடியுள்ளன. ஆனால், இந்திய அணி ஒரு டெஸ்ட் தொடரைக் கூட கைப்பற்றியதில்லை. 2010-11ம் ஆண்டில் நடந்த டெஸ்ட் தொடரை மட்டும் கங்குலி கேப்டன்ஷியில் தொடரை சமன் செய்தது. மற்றவகையில் இதுவரை எந்த தொடரையும வென்றதில்லை.

தென் ஆப்பிரிக்காவில் இதுவரை இந்திய அணி 2006, 2010, 2018, 2021 ஆகிய ஆண்டுகளில் நடந்த 4 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது. அதாவது தென் ஆப்பிரிக்காவில் நடந்த 15 டெஸ்ட்போட்டிகளில் இந்திய அணி 4 ஆட்டங்களில் மட்டுமே வென்றுள்ளது, 17 போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா வென்றுள்ளது, 10 ஆட்டங்கள் டிராவில் முடிந்துள்ளன.

அதிலும் முதல் டெஸ்ட் நடந்துவரும் செஞ்சூரியன் மைதானத்தில் கடந்த 2021ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவை 113 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்று வரலாறு படைத்தது. அந்த நம்பிக்கையில்தான் இந்த ஆட்டத்திலும் இந்திய வீரர்கள் விளையாடுகிறார்கள்.

இந்திய அணி தற்போது தலைமுறை மாற்றத்துக்கு தயாராகி வருகிறது. சீனியர் வீரர்களான விராட் கோலி, ரோஹித் சர்மா, அஸ்வின் போன்றோருக்கு பதிலாக இளம் வீரர்களை உருவாக்கும் கட்டாயத்தில் இருக்கிறது. இதனால்தான் ஒவ்வொரு ஆட்டமும் இந்திய அணிக்கு கத்தியின் மீது நடப்பது போல்இருக்கிறது. சீனியர் வீரர்கள், ஜூனியர் வீரர்கள் கலந்து போட்டியை எதிர்கொண்டு வருகிறார்கள்.

 
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் போட்டியின் முதல் நாள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

தென் ஆப்பிரிக்க அணி

வாய்ப்பை இழந்த தென்ஆப்பிரிக்கா

இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தது. தென்ஆப்பிரிக்கப் பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கிடைத்த பல வாய்ப்புகளை தவறவிட்டனர், கேட்சுகளையும் பீல்டர்கள் கோட்டைவிட்டனர். தென் ஆப்பிரிக்காவில் காகிசோ ரபாடா, யான்செனைத் தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் ஓவருக்கு 3 பந்துகளை தவறான லென்த்தில்தான் பந்துவீசினர்.

தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர்கள் இன்னும் கட்டுக்கோப்புடனும், ஒழுக்கத்துடனும் பந்துவீசியிருந்து, பீல்டர்கள் கேட்சுகளை கோட்டைவிடாமல் இருந்திருந்தால், இந்திய அணியை 150 ரன்களில் சுருட்டியிருக்கலாம். முதல் நாளில் தென் ஆப்பிரிக்கா கை ஓங்கியிருக்கும். அந்த வாய்ப்பை பந்துவீச்சாளர்கள், பீல்டர்கள் தவறவிட்டனர்.

திசைமாறிய ஆட்டம்

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் போட்டியின் முதல் நாள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

விராத் கோலியின் விக்கெட்டை வீழ்த்திய தென் ஆப்பிரிக்க வீரர் ரபாடா

செஞ்சூரியன் ஆடுகளம் கடினமானது, வேகப்பந்துவீச்சாளர்களுக்கே சாதகமானது. இந்த ஆடுகளத்தில் காலை நேரத்தில் நிலவும் ஈரப்பதம், கடினத்தன்மையைப் பயன்படுத்தி, இந்திய அணியின் விக்கெட்டுகளை வீழ்த்தி நெருக்கடி கொடுத்தனர். ஆனால், கோலி, ஸ்ரேயாஸ் அய்யர் இருவருக்கும் 2 கேட்சுகளை கோட்டைவிட்டபோது, ஆட்டம் திசைமாறியது.

ரபாடா கூட தொடக்கத்தில் சிறிது லைன் லென்த்தை கண்டுபிடித்து பந்துவீச சிரமப்பட்டார். ஆனால், சரியான இடத்தைக் கண்டறிந்து அதில் பந்துவீசத் தொடங்கியும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி 14-வது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனையும் படைத்தார்.

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் போட்டியின் முதல் நாள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ஷர்துல் தாக்கூர்

தவறான ஷாட்கள்

இந்திய அணி டெஸ்ட் அனுபவம் குறைந்த ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மாவுடன் களமிறங்கியது. முதல் 11 ஓவர்களில் 17 முறை தவறான ஷாட்களை ஆடி 3 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தனர். வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் பந்து அதிகமாக ஸ்விங் ஆகும் என்பது தெரிந்ததே, அதைத் தெரிந்து கொண்டு பேட்டை நீட்டி விளையாடுவது இதுபோன்ற நிலைக்குத் தள்ளிவிடும்.

அதிலும் ரோஹித் சர்மாவின் பலவீனத்தைத் தெரிந்து கொண்ட ரபாடா ஷார்ட் பந்துவீச, சொல்லிவைத்தார்போல் ஃபைன்லெக் திசையில் கேட்ச் கொடுத்து 5 ரன்னில் வெளியேறினார்.

அனுபவம் குறைந்த ஜெய்ஸ்வால் அவுட்சைட் ஆஃப் ஸ்டெம்ப் சென்ற பந்தை தேவையின்றி தொட்டு 17 ரன்னில் பர்கரிடம் விக்கெட்டை பறிகொடுத்தார். இதுபோன்ற வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் 3 ஸ்லிப் பீல்டர்களை நிறுத்திவைத்து பந்துவீசும்போது, அவுட்சைட் ஆஃப்திசையில் செல்லும் பந்துகளுக்கு மதிப்பளித்து லீவ் செய்ய வேண்டும் இல்லாவிட்டால், இக்கட்டான நேரத்தில் இதுபோன்று விக்கெட்டுகளை இழக்கநேரிடும்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்தே கில் பேட்டிங்கில் ஃபார்ம் இழந்து தவித்து வருகிறார். டெஸ்ட் போட்டியிலும் அவரின் மோசமான ஃபார்ம் தொடர்ந்து வருகிறது. பர்கர் வீசிய அருமையான அவுட் ஸ்விங்கில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து கில் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்த 3 விக்கெட்டுகளுமே தவறான ஷாட்களை ஆடியதால், இழக்க நேர்ந்தது.

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் போட்டியின் முதல் நாள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

வாய்ப்புகளை தவறவிட்ட கோலி, ஸ்ரேயாஸ்

அடுத்துவந்த விராட் கோலி, ஸ்ரேயாஸ் இருவரும் நிதானமாக ஆடி மதிய உணவு இடைவேளை வரை தாக்குப்பிடித்தனர். இருவரும் 4 ரன்கள் சேர்த்திருந்தபோது கேட்சை தென் ஆப்பிரிக்க பீல்டர்கள் கோட்டைவிட்டனர். ஆனால், அந்த வாய்ப்பைக் கூட கோலியும், ஸ்ரேயாஸும் பயன்படுத்தவில்லை. ஏற்கெனவே செய்த தவறுக்குத்தான் 3 விக்கெட்டுகளை இந்திய அணிஇழந்திருந்த நிலையில், கோலிக்கும், ஸ்ரேயாஸுக்கும் கிடைத்த அதிர்ஷ்ட வாய்ப்பை தக்கவைக்க இருவருமே தவறவிட்டனர்.

ரபாடா வீசிய துல்லியமான பந்தை டிபென்ட் செய்து பேக்ஃபுட்டில் ஆட ஸ்ரேயாஸ் முயன்றபோது க்ளீன் போல்டாகியது. 31 ரன்னில் ஸ்ரேயாஸ் வெளியேறினார். இருவரும் 4வது விக்கெட்டுக்கு 68 ரன்கள் சேர்த்துப்பிரிந்தனர்.

அடுத்த சிறிது நேரத்தில் ரபாடாவின் மின்னல் வேக ஸ்விங் பந்துவீச்சுக்கு விராட் கோலி இரையாகினார். ரபாடா 142 கி.மீ வேகத்தில் வீசிய அவுட் ஸ்விங்கில், கோலியின் பேட்டில் பட்டு பந்து உரசிச் சென்று விக்கெட் கீப்பரிடம் தஞ்சமடைந்தது. விராட் கோலி 38 ரன்னில் பரிதாபமாக ஆட்டமிழந்து வெளியேறினார்.

 
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் போட்டியின் முதல் நாள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சரிவிலிருந்து மீட்ட ராகுல்

கே.எல்.ராகுல் களத்தில் இருந்தபோது இந்திய அணி 107 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான நிலையில் இருந்தது. அடுத்துவந்த அஸ்வினும் 8 ரன்னில் வெளியேறினார். 92 ரன்கள் வரை இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்திருந்தநிலையில், அடுத்த 28 ரன்களுக்குள், மேலும் 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

இந்திய அணி இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டபின், தொடர்ந்து நெருக்கடி கொடுக்க தென் ஆப்பிரி்க்கப் பந்துவீச்சாளர்கள் தவறிவிட்டனர். தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர்கள் உணவு இடைவேளைக்குப்பின் லைன் லென்த்தை தவறவிட்டு, தவறான லென்த்தில் பந்துவீசியதால், கே.எல்.ராகுல் ஷாட்களை அடித்து வேகமாக ரன்களைச் சேர்க்கத் தொடங்கினார்.

கே.எல்.ராகுல் தன்னுடைய பேட்டிங்கில் எந்த தவறான ஷாட்களையும் பெரும்பாலும் அடிக்காமல் 80 சதவீத ஷாட்களை கட்டுக்கோப்பாகவே ஆடினார். அதனால்தான் இதுபோன்ற ஆடுகளத்தில் அரைசதம்அடித்தநிலையிலும் களத்தில் நங்கூரமுடிந்தது.

கே.எல்.ராகுல் தான் சந்தித்த ஒவ்வொரு 9 பந்துகளுக்கும் ஒரு பவுண்டரி அடித்தால்தான் உணவு இடைவேளைக்குப்பின் இந்திய அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. ஆடுகளம் பேட்டர்களுக்கு ஒத்துழைக்காமல் முழுக்க டிபென்ஸ் ப்ளே ஆடுவதற்கு ஏதுவாக இல்லை. இருப்பினும், ராகுலின் நேர்த்தியான பேட்டிங், பொறுமை, தவறான பந்துகளை மட்டுமே ஷாட்களாக மாற்றுவது என பாரம்பரிய கிரிக்கெட்டை மறக்காமல் பேட் செய்தார்.

கடந்த 2021ம் ஆண்டு செஞ்சூரியனில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 113 ரன்களில் வென்றது. அந்த ஆட்டத்தில் கே.எல்.ராகுலின் சதம்தான் இந்திய அணி வெல்வதற்கு முக்கியக் காரணமாகஅமைந்தது. அதுபோல் இந்த ஆட்டத்திலும் கே.எல்.ராகுல் சதமும், இந்திய அணியின் வெற்றியும் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது.

https://www.bbc.com/tamil/articles/cjrge27jzeyo

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

28 வயதிலேயே 500 விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்! மிரண்டு போன இந்திய அணி

தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் கசிகோ ரபாடா, சர்வதேச கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். 

ரபாடா மிரட்டல்

செஞ்சுரியனின் Super Sport Park மைதானத்தில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது.

நாணய சுழற்சியில் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் களமிறங்கியது. 

Kagiso RabadaAP

24 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய அணியை விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் மீட்க போராடினர்.

ஆனால், ககிசோ ரபாடா (Kagiso Rabada) தனது மிரட்டலான பந்துவீச்சில் ஷ்ரேயாஸ் (31) மற்றும் கோலி (38) இருவரையும் வெளியேற்றினார். 

Kagiso RabadaTwitter 

சாதனை 

அதனைத் தொடர்ந்து அவரது துல்லியமான பந்துவீச்சில் அஷ்வின் (8), ஷர்துல் தாக்கூர் (24) ஆகியோரும் ஆட்டமிழந்தனர். எனிமும் கே.எல்.ராகுல் பொறுப்புடன் ஆடி அரைசதம் விளாசினார்.

இந்திய அணி முதல் நாள் முடிவில் 8 விக்கெட்டுக்கு 208 ஓட்டங்கள் எடுத்துள்ளது. ரபாடா 5 விக்கெட்டுகளும், பர்கர் 2 விக்கெட்டுகளும், ஜென்சென் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். கே.எல்.ராகுல் 70 ஓட்டங்களுடனும், சிராஜ் ஓட்டங்கள் எடுக்காமலும் களத்தில் உள்ளனர். 

Kagiso RabadaPTI

இந்த நிலையில் காகிசோ ரபாடா சர்வதேச கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை பட்டியலில் இணைந்துள்ளார். இதுவரை 6 தென் ஆப்பிரிக்க வீரர்கள் இந்த மைல்கல்லை எட்டிய நிலையில், 28 வயதாகும் ரபாடா 7வது வீரராக இணைந்துள்ளார்.    

Kagiso Rabada

https://news.lankasri.com/article/rabada-took-500-international-wickets-centurion-1703607001?itm_source=parsely-external

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ராகுலின் சதத்தை விஞ்சியது டீன் எல்கரின் சதம் : 11 ஓட்டங்கள் முன்னிலையில் தென் ஆபிரிக்கா

28 DEC, 2023 | 07:26 AM
image

(நெவில் அன்தனி)

இந்தியாவுக்கும் தென் ஆபிரிக்காவுக்கும் இடையில் செஞ்சூரியன், சுப்பஸ்போர்ட் பார்க் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கே.எல். ராகுலின் சதத்தை டீன் எல்கரின் சதம் விஞ்சியதுடன 2ஆம் நாள் ஆட்டத்தில் தென் ஆபிரிக்காவின் ஆதிக்கம் மேலோங்கி இருந்தது.

இந்தியாவை முதல் இன்னிங்ஸில் 245 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்திய தென் ஆபிரிக்கா 2ஆம் நாள் ஆட்டம் போதிய வெளிச்சம் இன்மை காரணமாக  நிறுத்தப்பட்டபோது அதன் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்களை இழந்து 256 ஓட்டங்களைப் பெற்று 11 ஓட்டங்களால் முன்னிலையில் இருந்தது.

டீன் எல்கர் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 14ஆவது டெஸ்ட் சதத்தைக் குவித்து ஆட்டம் இழக்காதிருந்தார்.

ஆரம்ப வீரர் ஏய்டன் மார்க்ராம் 5 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்த போதிலும் டீன் எல்கரும் டோனி டி ஸோஸியும் 2ஆவது விக்கெட்டில் 93 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கையை 104 ஓட்டங்களாக உயர்த்தினர்.

டி ஸோஸி 28 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க, கீகன் பீட்டர்சன் ஆடுகளம் நுழைந்த சொற்ப நேரத்தில் 2 ஓட்டங்களுடன் வெளியேறினார். (113 - 3 விக்.)

ஆனால், டீன் எல்கர், அறிமுக வீரர் டேவிட் பெடிங்ஹாம் ஆகிய இருவரும் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 4ஆவது விக்கெட்டில் 123 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவின் மொத்த எண்ணிக்கையை அண்மிக்க உதவினர்.

டேவிட் பெடிங்ஹாம் 7 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் உட்பட 56 ஓட்டங்களைப் பெற்றார்.

அவரைத் தொடர்ந்து கய்ல் வெரின் 4 ஓட்டங்களை மாத்திரம் பெற்று ஆட்டம் இழந்தார்.

மறுபக்கத்தில் மிகவும் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய டீன் எல்கர் 211 பந்துகளை எதிர்கொண்டு 23 பவுண்டறிகள் உட்பட 140 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 48 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மொஹமத் சிராஜ் 63 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

முன்னதாக போட்டியின் 2ஆம் நாளன்று தனது துடுப்பாட்டத்தை 8 விக்கெட் இழப்புக்கு 208 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த இந்தியா, சகல விக்கெட்களையும் இழந்து 245 ஒட்டங்களைப் பெற்றது.

இந்திய துடுப்பாட்டத்தில் தனி ஒருவராக பிரகாசித்த கே. எல். ராகுல் 137 பந்துகளில் 14 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 101 ஓட்டங்களைக் குவித்தார். இது அவர் பெற்ற 8ஆவது டெஸ்ட் சதமாகும்.

முதலாம் நாள் ஆட்டத்தில் விராத் கோஹ்லி 38 ஓட்டங்களையும் ஷ்ரேயாஸ் ஐயர் 31 ஓட்டங்களையும் ஷர்துல் தாகூர் 24 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.

பந்துவீச்சில் கெகிசோ ரபாடா 59 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் அறிமுக வீரர் நண்ட்ரே பேர்கர் 50 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

https://www.virakesari.lk/article/172593

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தென்னாப்பிரிக்க பந்துவீச்சில் சரணடைந்த இந்திய வீரர்கள்

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையேயான டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ரபாடா

கட்டுரை தகவல்
  • எழுதியவர், போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 29 டிசம்பர் 2023, 03:39 GMT
    புதுப்பிக்கப்பட்டது 24 நிமிடங்களுக்கு முன்னர்

ஃபார்ஸ்ட் ஃபார்வேர்டு டெஸ்ட் போட்டி போன்று, தென் ஆப்பிரிக்காவும் ஃபார்ஸ்ட் ஃபார்வேர்டில் இந்திய அணியைச் சுருட்டி 3 நாட்களில் முதல் டெஸ்ட்டில் இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்களில் வெற்றியைப் பெற்றுள்ளது.

செஞ்சூரியனில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வென்றது. இன்னும் ஆட்டம் முடிய 2 நாட்கள் முழுமையாக இருக்கும் நிலையில் இந்திய அணி சரண்டராகிவிட்டது.

இந்திய அணி ஒட்டுமொத்தமாக 2வது இன்னிங்ஸில் 34.1 ஓவர்களில் 131 ரன்களுக்கு ஆட்டமிழந்து இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 245 ரன்கள் சேர்த்தது. தென் ஆப்பிரிக்க அணி, 108.4 ஓவர்களில் 408 ரன்களுக்கு ஆட்டமிழந்து 163 ரன்கள் முன்னிலை பெற்றது.

இதையடுத்து, 2வது இன்னிங்ஸை இன்று தேநீர் இடைவேளைக்குப்பின் ஆடத் தொடங்கிய இந்திய அணி, தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சின் முன் தாக்குப்பிடிக்க முடியாமல், 131 ரன்களில் சுருண்டு இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது.

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையேயான டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

13 ஆண்டுகளுக்குப்பின்…

கடந்த 2010ம் ஆண்டு இதே செஞ்சூரியன் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை இன்னிங்ஸ் 25-ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி தோற்கடித்தது. ஏறக்குறைய 13 ஆண்டுகளுக்குப்பின அதேபோன்ற இன்னிங்ஸ் வெற்றியை தென் ஆப்பிரிக்கா மீண்டும் ருசித்துள்ளது.

இதன் மூலம் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா அணி முன்னிலை பெற்றுள்ளது. ஆட்டநாயகன் விருது 185 ரன்கள் குவித்த டீன் எல்கருக்கு வழங்கப்பட்டது.

இந்திய அணியில் 2வது இன்னிங்ஸில் விராட் கோலி(76), சுப்மான் கில்(26) ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்க ரன்கள் சேர்த்தனர். மற்ற அனைத்து பேட்டர்களும் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்து இந்தியாவின் தோல்வியை உறுதி செய்தனர். கேப்டன் ரோஹித் சர்மா டக்அவுட்டில் விக்கெட்டை இழந்தார்.

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையேயான டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ரோஹித் சர்மாவுக்கு தண்ணிகாட்டிய ரபாடா

தென் ஆப்பிரிக்காவில் ரோஹித் சர்மாவின் பேட்டிங் சராசரி என்பது வெறும் 12 ரன்கள்தான். 6 பெரிய அணிகளுக்கு இடையே மிகக்குறைவான சராசரி வைத்துள்ள 2வது பேட்டர் ரோஹித் சர்மாதான். அதிலும் ரபாடா பந்துவீச்சு என்றாலே ரோஹித் சர்மா ஆட்டமிழக்கும் வாய்ப்பு அதிகமாகிவிடுகிறது. அவரின் பந்துவீச்சுக்கு எதிராக ரோஹித் சர்மாவின் சராசரி வெறும் 6 ரன்கள்தான், 6 இன்னிங்ஸில் ரபாடாவின் பந்துவீச்சில் ரோஹித் விக்கெட்டை பறிகொடுத்துள்ளார்.

இரு இன்னிங்ஸ்களிலும் ரபாடா பந்துவீச்சில்தான் ரோஹித் சர்மா விக்கெட்டைப் பறிகொடுத்துள்ளார். அதிலும் 2வது இன்னிங்ஸில் ரோஹித் சர்மா ஆட்டமிழந்தவிதம், கண்இமைக்கும் நேரத்தில் நடந்துவிட்டது. ரபாடா சரியான லென்த்தில் “வாப்லிங் சீம்” என்று சொல்லக்கூடிய வகையில் காற்றிலேயே பந்து திசைமாறக்கூடிய வகையில் வீசினார். ரோஹித் சர்மா டிபென்ஸ் ப்ளே ஆட பிரன்ட்ஃபுட் ஆட முற்பட்டபோது, பந்து அவரை ஏமாற்றி க்ளீன் போல்டாகியது. இதுபோன்ற பந்துவீச்சை நிச்சயமாக ரோஹித் சர்மா தென் ஆப்பிரிக்காவில் மட்டும்தான் பார்த்திரக்கக்கூடும்.

இந்திய அணிக்கு எதிராக ரபாடா 50 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்து புதிய மைல்கல்லை எட்டினார். இதன் மூலம் இந்திய அணிக்கு எதிராக 50 விக்கெட்டுகளுக்கு மேல் குவித்த தென்ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர்கள் வரிசையில் 5-வது வீரராக இணைந்தார்.

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையேயான டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

கே.எல்.ராகுல் விக்கெட்டை வீழ்த்திய பர்கர்

9 பேட்டர்கள் ஒற்றை இலக்க ரன்

இது தவிர இளம் வீரர்கள் ஜெய்ஸ்வால்(5), ஸ்ரேயாஸ் அய்யர்(6), ராகுல்(4), அஸ்வின்(0), ஷர்துல் தாக்கூர்(2) ஆகியோர் தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர்களின் துல்லியமான லைன் லென்த்துக்கு முன் தாக்குப் பிடிக்கமுடியாமல் வரிசையாக பெவிலியன் திரும்பினர். இந்திய அணியில் 9 பேட்டர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர்.

இந்திய அணி கடைசி 35 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது. அதாவது 96 ரன்கள் வரை 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்திருந்த இந்திய அணி, 131 ரன்களில் ஆட்டமிழந்துவிட்டது.

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையேயான டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆறுதல் இது மட்டும்தான்

இந்திய அணிக்கு ஆறுதல் தரக்கூடிய அம்சம் என்னவென்றால் கேஎல். ராகுல் முதல் இன்னிங்ஸில் சதம் அடித்ததும், 2-ஆவது இன்னிங்ஸில் கோலி 76 ரன்கள் சேர்த்து ஃபார்முக்கு வந்திருப்பதுதான். மற்ற வகையில் இந்திய பந்துவீச்சில் பும்ரா தவிர மற்றவர்கள் பந்துவீச்சு படுமோசமாக அமைந்தது.

செஞ்சூரியன் மைதானம் என்றாலே பந்துவீச்சாளர்களுக்கு சொர்க்கபுரிதான். இந்த மைதானத்தின் தன்மையையும், சூழலையும், இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் ஒருவரும் பயன்படுத்தவில்லை. சரியான லைன் லென்த்தில் வீசப்பட்ட பந்துகள் அனைத்துமே இந்திய பேட்டர்களுக்கு சிரமத்தைக் கொடுத்தன, விக்கெட்டையும் இழக்க வைத்தன.

ஆடுகளத்தின் தன்மையை பயன்படுத்திவில்லை

செஞ்சூரியனில் கடந்த 2 நாட்களுக்குப் பின் நேற்று நன்றாக வெயில் அடித்ததால், ஆடுகளத்தில் இருந்த பிளவுகள், கோடுகள் நன்றாக தெரிந்தன. இதைத் தெரிந்து கொண்ட தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர்கள் ஆடுகளத்தின் தன்மையை சரியாகப் பயன்படுத்தி பவுன்ஸரை வீசி எகிறச் செய்தனர். இதே முறையை இந்தியப் பந்துவீச்சாளர்களும் பயன்படுத்தி இருந்தால், தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 408 ரன்கள் சேர்த்திருக்க முடியாது.

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையேயான டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஹோம் ஓர்க் செய்யவில்லை

தோல்விக்குப்பின் ரோஹித் சர்மா அளித்த பேட்டியில் “ முதல் இன்னிங்ஸில் நல்ல ஸ்கோர் செய்திருந்தும் வெல்ல முடியவில்லை. இந்த செயல்பாடு நிச்சயமாகப் போதாது. பந்துவீச்சு, பேட்டிங்கில் 2வது இன்னிங்ஸில் மோசமாகச் செயல்பட்டோம். இந்த சூழலைப் பற்றி நன்கு புரிந்து கொள்ளாமல், ஆடுகளத்தின் தன்மையை அறிந்து கொள்ளாமல் வந்துவிட்டோம். 4 வேகப்பந்துவீச்சாளர்களும் சிறப்பாகவே பந்துவீசினர், கடினமாகவே உழைத்தனர், ஆனால், ஹோம்ஒர்க் செய்யாமல் வந்துவிட்டனர். எங்கு தவறு நடந்தது என்பதைத் தெரிந்து கொண்டோம். தவறுகளைத் திருத்தி இன்னும் வலிமையாக வருவோம்.

பிரசித் கிருஷ்ணா அனுபவம் குறைந்தவர்தான். இந்த ஆட்டத்தின் மூலம் தனது பந்துவீச்சு முறையை இனிவரும் நாட்களில் மாற்றிக்கொள்வார். இந்திய அணியின் பந்துவீச்சாளர்களில் சிலர் இல்லை, சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அப்படியிருக்கும் போது, இருக்கின்ற பந்துவீச்சாளர்களைத் தேர்ந்தெடுத்துதான் வர முடியும். நாங்கள் தேர்ந்தெடுத்து வந்த பந்துவீச்சாளர்கள், இங்குள்ள சூழலுக்கு எதிராக பந்துவீசக்கூடியவர்களாக இருக்கிறார்கள். பந்துவீச்சாளர்கள் குறித்து அதிகம் விமர்சிக்க விரும்பவில்லை” எனத் தெரிவித்தார்

இந்தியத் தரப்பில் சிராஜ், ஷர்துல், பிரசித் கிருஷ்ணா ஆகிய 3 வேகப்பந்துவீச்சாளர்களும் ரிதத்தை இழந்து பந்துவீசினர். இதில் பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாக்கூர், சிராஜ் ஆகிய 3 பந்துவீச்சாளர்களும் சேர்ந்து 285 ரன்களை வாரி வழங்கி, 4 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

செஞ்சூரியனில் நடந்த டெஸ்ட் போட்டியில் இதுபோன்று ரன்களை கொட்டிக் கொடுத்த பந்துவீச்சாளர்கள் இவர்களாகத்தான் இருக்க முடியும். டெஸ்ட் போட்டிகளில் வேகப்பந்துவீச்சாளர்கள் எக்னாமி ரேட் 5 ரன்களை வைத்தனர்.

இதில் விதிவிலக்காக, பும்ரா 26 ஓவர்கள் வீசி 69 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஆடுகளத்தை கணிக்காமல், அதற்கு ஏற்றார்போல் பந்துவீச்சாளர்கள் பந்துவீசாதது, பேட்டர்கள் விரைவாக விக்கெட்டுகளை இழந்தது ஆகியவை தோல்விக்கு முக்கியக் காரணமாகும். இன்னும் முழுமையாக 2 நாட்கள் மீதம் இருக்கும்நிலையில் விரைவாகவே தோல்வியை இந்திய அணி ஒப்புக்கொண்டுவிட்டது.

இந்திய அணியில் அறிமுகமாகிய பிரசித் கிருஷ்ணா இதுவரை முதல் தரப்போட்டிகளில் 12க்கு மேல் ஆடியதே இல்லை, பந்துவீசியதே இல்லை.

செஞ்சூரியன் ‘கிங்’ தென் ஆப்பிரிக்கா

தென் ஆப்பிரிக்க அணியைப் பொறுத்தவரை பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் சொந்த மைதானத்தில் கிங் என்பதை நிரூபித்துவிட்டனர். செஞ்சூரியன் மைதானத்தில் மட்டும் தென் ஆப்பிரிக்காவின் வெற்றி சதவீதம்79.31 சதவீதமாகும். அதாவது29 போட்டிகளில் 23 ஆட்டங்களில் தென் ஆப்பிரிக்கா வென்றுள்ளது.

இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி செஞ்சூரியன் மைதானத்தையும், ஆடுகளத்தையும் எவ்வாறு புரிந்து, தெரிந்து வைத்துள்ளது என்பதை அறியலாம். தென் ஆப்பிரிக்க அணியின் வெற்றிக்கு பேட்டிங்கில் பெரிய பங்களிப்பு செய்தது டீன் எல்கர்தான்.

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையேயான டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ஆட்டநாயகன் விருது வென்ற எல்கர்

பவுண்டரிகளால் சதம் கண்ட எல்கர்

இந்த டெஸ்ட் தொடரோடு எல்கர் டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெற இருக்கும் நிலையில் இந்த வெற்றியும், அவர் சேர்த்த சதமும் மறக்க முடியாத நினைவுகளாக மாறின. தொடக்க வீரராகக் களமிறங்கிய எல்கர் 185 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

இதில் டீன் எல்கர் தனது 14-வது டெஸ்ட் சதத்தை நிறைவு செய்து 287 பந்துகளில் 185 ரன்கள் சேர்த்தார். எல்கர் பவுண்டரி மூலமே 112 ரன்கள் சேர்த்தார், அதாவது 28 பவுண்டரிகளை எல்கர் அடித்துள்ளார். அதிலும் எல்கர் சேர்த்த பெரும்பாலான பவுண்டர்கள் கவர்டிரைவ் மூலமும், ஆஃப் சைடிலும் அடிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

வலுவான பார்ட்னர்ஷிப்

எல்கருக்கு ஒத்துழைத்து ஜோர்சியும்(28), அறிமுக வீரர் பெடிங்காமும்(56) பேட் செய்ததால் 2வது நாளில் முன்னிலை பெற முடிந்தது. ஜோர்சியுடன் சேர்ந்து எல்கர் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், 4-வது விக்கெட்டுக்கு பெடிங்காமுடன் சேர்ந்து 131 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஸ்கோரை உயர்த்தினார்.

3-வது நாளான நேற்று, டீன் எல்கர்(185), மார்கோ யான்சென்(85) ரன்களும் சேர்த்து ஸ்கோர் உயர்வுக்கு காரணமாக அமைந்தனர். யான்சென்-எல்கர் ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 111 ரன்கள் சேர்த்து ஸ்கோரை உயர்த்தினர்.

எல்கரின் உணர்ச்சி பொங்கிய ஆட்டம்

தென் ஆப்பிரிக்கா அணிக்கு கடினமான நேரத்தில் பலமுறை இதுபோன்று ஆடி சதம் அடித்து அணியை தூக்கி நிறுத்தியுள்ளார் எல்கர். கொரோனா காலத்தில் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் எல்கர் 95 ரன்கள் சேர்த்தது, பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து அணியை மீட்டது என பல தருணங்களில் தனது பேட்டிங் திறமையை எல்கர் வெளிப்படுத்தியுள்ளார்.

எல்கர் அளித்த பேட்டியில் கூறுகையில் “ எனது பேட்டிங்கை நிரூபிக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. என்னைப் பொறுத்தவரை அணிக்கு பங்களிப்பு செய்கிறேன். நான் கடைசியாக விடைபெறும் போது டெஸ்ட் போட்டி அல்லது டெஸ்ட் தொடரை வென்று தர வேண்டும். எதையும் இழக்கவிரும்பவில்லை.

இந்தப் போட்டி எனக்கு மிகவும் ஸ்பெஷலானது. இதுவரை செஞ்சூரியனில் சதம் அடித்தது இல்லை. இதுவே என் கிரிக்கெட் வாழ்க்கையில் மைல்கல்லாக இருக்கும். என்னுடைய குடும்பத்தார் என்னுடைய பேட்டிங்கைப் பார்க்க வந்துள்ளனர்” எனத் தெரிவித்தார்.

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையேயான டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

வேகப்பந்துவீச்சாளர் பர்கர்

பர்கரின் அசத்தல் அறிமுகம்

தென் ஆப்பிரிக்கத் தரப்பில் அறிமுக வீரராக களமிறங்கிய இடதுகை வேகப்பந்துவீச்சாளர் பர்கர் மொத்தம் இரு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இந்திய வேப்பந்துவீச்சாளர்கள் லைன் லென்த் கிடைக்காமல் தடுமாறியபோது, அனாசயமாகப் பந்துவீசி 7 விக்கெட்டுகளை பர்கர் அள்ளிச்சென்றார். தென் ஆப்பிரிக்க அணி டெஸ்ட் தொடரில் கண்டறிந்த முக்கிய வீரராக பர்கர் மாறியுள்ளார்.

வெற்றிக்கு முக்கியக் காரணம் என்ன?

தென் ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தவை சரியான லைன், லெங்த் என்பதைக் கண்டறிந்து வேகப்பந்துவீச்சாளர்கள் பந்துவீசியது, இந்திய அணியின் மோசமான பந்துவீச்சும், பேட்டிங் ஆகியவைதான். ஆடுகளத்தின் தன்மையை, ஆடுகளத்தையும் தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர்கள் நன்கு பயன்படுத்தினர். எந்த இடத்தில் பந்தை பிட்ச் செய்தால் பேட்டர்கள் திணறுவார்கள், தடுமாறுவார்கள் என்பதை சரியாக கணித்து பந்துவீசினர்.

https://www.bbc.com/tamil/articles/c9029dwz8j1o

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

11 பந்துகளில் 0 ரன், 6 விக்கெட்: இந்தியாவுக்கு எதிராக தென் ஆப்ரிக்கா அதிசயம் நிகழ்த்தியது எப்படி?

இந்தியா vs தென் ஆப்ரிக்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

3 ஜனவரி 2024, 11:33 GMT
புதுப்பிக்கப்பட்டது 47 நிமிடங்களுக்கு முன்னர்

கேப்டவுனில் தொடங்கியுள்ள இரண்டாவது டெஸ்டின் முதல் நாளிலேயே தென் ஆப்பிரிக்காவின் முதல் இன்னிங்ஸ் 55 ரன்களுக்குள் முடிவுக்கு வந்துள்ளது. அந்த அணியை ஆல் அவுட்டாக்க இந்தியாவுக்கு முதல் நாள் காலையில் வெறும் 23.2 ஓவர்கள் மற்றும் இரண்டு மணி நேரமே தேவைப்பட்டது. இந்திய தரப்பில் முகமது சிராஜ் அதிகபட்சமாக 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இது தவிர பும்ரா மற்றும் முகேஷ் குமார் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

முதல் டெஸ்டில் வெறும் மூன்றே நாட்களில் சரணடைந்த இந்திய அணி இரண்டாவது டெஸ்டை சிறப்பாக தொடங்கியுள்ளது. இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். தென் ஆப்ரிக்க அணி எடுத்த 55 ரன்களே டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக ஒரு அணி எடுத்த மிகக் குறைந்த ஸ்கோராகும்.

முதல் இன்னிங்சில் இந்தியாவுக்கு தென் ஆப்ரிக்காவும் பந்துவீச்சில் பதிலடி கொடுத்தது. சிறப்பாக இன்னிங்சை தொடங்கிய இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 153 ரன் எடுத்திருந்த நிலையில், அதன் பிறகு 11 பந்துகளில் ஒரு ரன் கூட எடுக்காமல் கைவசம் இருந்த 6 விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அதிசயம் நிகழ்ந்தது எப்படி?

இந்திய அணியில் அஸ்வின் நீக்கம்

பாக்சிங் டே டெஸ்டில் தோற்றுவிட்ட இந்திய அணி இரண்டாவது டெஸ்டில் வெல்ல முனைப்பு காட்டுகிறது. இந்திய அணியில் முழு உடல் தகுதியை எட்டிவிட்ட ரவீந்திர ஜடேஜா அணிக்குத் திரும்பியுள்ளார். இதனால், முதல் டெஸ்டில் விளையாடிய தமிழ்நாட்டைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் நீக்கப்பட்டார்.

தென் ஆப்ரிக்க அணியில் அறிமுக வீரராக டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இடம் பெற்றார். லுங்கி நிகிடி அணிக்குத் திரும்பினார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கேஷவ் மகராஜ் தனது 50-வது டெஸ்டை விளையாடுகிறார். தென் ஆப்ரிக்க அணி 4 வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் ஒரு ஸ்பின்னருடன் விளையாடுகிறது.

இந்தியா அசத்தல் தொடக்கம்

கேப்டவுனில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணி சார்பில் பும்ரா, சிராஜ் ஜோடி புதிய பந்தில் கலக்கலாக பந்துவீசி தென் ஆப்ரிக்க வீரர்களை திணறடித்தது.

பும்ரா 142 கி.மீ. வேகத்தில் இன்ஸ்விங்கர்களை வீச, மறுபுறம் முகமது சிராஜ் துல்லியமாக பந்தை பிட்ச் செய்தார். நான்காவது ஓவரில் ஆஃப் ஸ்டம்பிற்குள் பந்தை அவர் ஆங்கிள்-இன் செய்ய மார்க்ராம் விளையாடியே ஆக வேண்டிய கட்டாயம் வருகிறது. அவர் சற்று தாமதமாக ஆட, பந்து வெளிப்புற விளிம்பில் முத்தமிடு பின்னே செல்ல இளம் வீரர் ஜெய்ஸ்வால் அபாரமாக டைவ் அடித்த கேட்ச் செய்தார். எய்டன் மார்க்ரம் 2 ரன்களிலேயே பெவிலியன் திரும்பினார்.

55 ரன்களில் சுருண்ட தென் ஆப்ரிக்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

சிராஜ் பந்துவீச்சில் சரிந்த தென் ஆப்ரிக்கா

மார்க்ரம்மை காலி செய்த பிறகு, சிராஜ், கடந்த டெஸ்டில் சதம் அடித்து இந்தியாவை தோல்விக்கு தள்ளிய டீன் எல்கர் விக்கெட்டிற்கு குறி வைத்தார். எல்கரின் ஸ்டம்புகளையும் உடலையும் நோக்கி சிராஜ் பந்துவீசினார். சிராஜ் வீசிய முதல் ஓவரிலேயே டீன் எல்கருக்கு எட்ஜ் ஆகி பந்து மிட்விக்கெட்டுக்கு மேல் பறந்தது.

இம்முறை, சிராஜ் ஸ்டம்புக்கு வெளியே வீசிய பந்தை டீன் எல்கர் அடித்தாட முற்பட்டார். அவரது பேட்டில் பின்புறம் பட்ட பந்து ஸ்டம்புகளை பதம் பார்த்தது. இதனால், தென் ஆப்ரிக்க அணி 8 ரன்களுக்கு இரண்டாவது விக்கெட்டை இழந்தது.

தொடக்கத்திலேயே அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்த தென் ஆப்ரிக்க அணி, அந்த அதிர்ச்சியில் இருந்து கடைசி வரை மீளவே இல்லை. 8 ரன்னுக்கு 2வது விக்கெட்டை இழந்த தென் ஆப்ரிக்கா, மேலும் 7 ரன்களை எடுப்பதற்குள்ளாக அடுத்த 2 விக்கெட்டுகளை இழந்தது. பும்ரா தன் பங்கிற்கு அறிமுக வீரர் டிரிஸ்டன் ஸ்டப்சை பெவிலியனுக்கு அனுப்ப, ஷோர்ஜியை சிராஜ் அவுட்டாக்கினார்.

55 ரன்களில் சுருண்ட தென் ஆப்ரிக்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

சிராஜ் 6 விக்கெட் வீழ்த்தி அசத்தல்

இதன் பிறகு தென் ஆப்ரிக்க வீரர்கள் வருவதும் போவதுமாகவே இருந்தனர். ஒருவர் கூட களத்தில் நிலைக்கவிலைலை. இதனால் தென் ஆப்ரிக்க அணி 55 ரன்களுக்குள்ளாகவே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துவிட்டது. அந்த அணி தரப்பில் அதிகபட்சமாக கைல் வெர்னான் 15 ரன்கள் எடுத்தார்.

தென்னாப்பிரிக்காவை 55 ரன்களுக்குள் கட்டுப்படுத்த இந்தியாவுக்கு முதல் நாள் காலையில் வெறும் 23.2 ஓவர்களும் இரண்டு மணி நேரமுமே தேவைப்பட்டன. இந்திய தரப்பில் முகமது சிராஜ் அதிகபட்சமாக 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பும்ரா மற்றும் முகேஷ் குமார் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

பும்ராவுக்கு பிறகு 2-வது வீரர் சிராஜ்

2016-ம் ஆண்டுக்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே செஷனில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இந்திய வீரர் முகமது சிராஜ் ஆவார். முன்னதாக, ஜஸ்பிரித் சிங் பும்ரா இதனை சாதித்துள்ளார். சர்வதேச அளவில் டிரென்ட் போல்ட் (2 முறை), வெர்னான் பிலாண்டர், கிறிஸ் வோக்ஸ் ஆகியோருக்குப் பிறகு 5-வது வீரர் சிராஜ் ஆவார்.

55 ரன்களில் சுருண்ட தென் ஆப்ரிக்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தியா அதிரடி தொடக்கம்

தென் ஆப்ரிக்காவை 55 ரன்னுக்கு சுருட்டிய உத்வேகத்தில் இந்திய அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. கேப்டன் ரோகித் சர்மாவும் இளம் வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வாலும் தொடக்க வீரர்களாக களம் கண்டனர். தென் ஆப்ரிக்க அணிக்காக முதல் ஓவரை நிகிடி வீசினார். காயத்தில் இருந்து மீண்டு ஓராண்டுக்குப் பிறகு சர்வதேச போட்டியில் ஆடும் அவர் இரண்டாவது பந்தையே நோபாலாக வீசினார்.

அடுத்த இரு பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டிய ரோகித் சர்மா, அந்த ஓவரின் கடைசிப் பந்திலும் பவுண்டரி அடித்தார். இதனால் முதல் ஓவரில் மட்டும் இந்திய அணி 13 ரன்களை திரட்டியது.

இளம் வீரர் யாஷஷ்வி ஜெய்ஸ்வால் ஏமாற்றம்

இந்திய அணி முதல் இன்னிங்சை உற்சாகமாக தொடங்கிய நிலையில், ரபாடா வீசிய மூன்றாவது ஓவரில் முதல் பந்தில் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ஸ்டம்புகளை பறிகொடுத்தார். 7 பந்துகளை சந்தித்த அவர் ரன் ஏதும் எடுக்கவில்லை.

அடுத்து வந்த ஷூப்மன் கில், கேப்டன் ரோகித்துடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினார். இருவருமே அதிரடி காட்டியதால் இந்திய அணியின் ரன் ரேட் 6-க்கும் அதிகமாகவே தொடர்ந்து இருந்து வந்தது. இதனால், 9.4 ஓவர்களிலேயே தென் ஆப்ரிக்காவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரான 55 ரன்களைக் கடந்து இந்திய அணி முன்னிலை பெற்றது.

இந்தியா vs தென் ஆப்ரிக்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

ரோகித் 39 ரன்களில் அவுட்

அதிரடியாக விளையாடி அசத்திய ரோகித் சர்மா அணியின் ஸ்கோர் 72ஆக இருந்த போது ஆட்டமிழந்தார். பர்கர் வீசிய பந்தில் ஜேன்சனிடம் கேட்ச் கொடுத்து அவர் பெவிலியன் திரும்பினார். 50 பந்துகளை எதிர்கொண்ட அவர் 7 பவுண்டரிகளுடன் 39 ரன்களை எடுத்தார். அடுத்து வந்த நட்சத்திர வீரர் கோலியும் அதிரடியாகவே ஆடினார்.

சுப்மன் கில் - கோலி ஜோடி இந்திய அணியை 100 ரன்களை எளிதாக கடக்கச் செய்தது. 19.5 ஓவர்களிலேயே இந்திய அணி 100 ரன்களை கடந்தது.

இந்தியா vs தென் ஆப்ரிக்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

கில், ஸ்ரேயாஸ் அடுத்தடுத்து அவுட்

கில் - கோலி ஆகிய இருவருமே அபாரமாக ஆடியதால் இந்திய அணி வலுவான முன்னிலை பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில், கில் விக்கெட்டை பர்கர் வீழ்த்தினார். அடுத்து வந்த ஸ்ரேயாசை தனது அடுத்த ஓவரில் பர்கர் சாய்த்தார். ஸ்ரேயாஸ் ரன் ஏதும் எடுக்காமலேயே பெவிலியன் திரும்பினார்.

அதன் பிறகு கே.எல்.ராகுல் களம் புகுந்தார். கோலியுடன் கைகோர்த்த ராகுல் விக்கெட் வீழ்ச்சியை தடுத்து நிறுத்தும் நோக்கில் நிதானமாக ஆடினார். இதனால், அணியின் ரன் ரேட் மந்தமானது.

இந்தியா vs தென் ஆப்ரிக்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

பூஜ்யம் ரன்னுக்கு 6 விக்கெட்

வலுவான முன்னிலையை நோக்கி முன்னேறிய இந்திய அணி ஒரு கட்டத்தில் 4 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்களை எடுத்திருந்தது. அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. 33 பந்துகளில் 8 ரன்களை எடுத்திருந்த கே.எல்.ராகுல் நிகிடி பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் வெர்ரேனிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

அதன் பிறகு என்ன நடந்ததென்றே தெரியவில்லை. ஸ்கோர் போர்டில் ஒரு ரன் கூட ஏறாத நிலையில், விக்கெட் மட்டும் மளமளவென சரிந்தது. ரவீந்திர ஜடேஜா, பும்ரா, சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் ஒரு ரன் கூட எடுக்காமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதற்கு நடுவே கோலி 46 ரன் எடுத்த நிலையில் ரபாடா பந்துவீச்சில் வீழ்ந்தார்.

4 விக்கெட் இழப்பிற்கு 153 ரன் எடுத்திருந்த இந்திய அணி அதன் பிறகு 11 பந்துகளில் ஒரு ரன் கூட எடுக்காமல் கைவசம் இருந்த 6 விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியில் ஜெய்ஸ்வால், ஸ்ரேயாஸ், ஜடேஜா, பும்ரா, சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் டக்அவுட் ஆயினர்.

இந்திய அணி 153 ரன்களில் ஆல்அவுட்டானது. இதன் மூலம் முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்காவை விட இந்திய அணி 98 ரன்கள் முன்னிலை பெற்றது. தென் ஆப்ரிக்கா தரப்பில் ரபாடா, நிகிடி, பர்கர் ஆகிய மூவரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்தியா vs தென் ஆப்ரிக்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தியா சாதனை

தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக முதல் இன்னிங்சில் இந்திய அணி 9.4 ஓவர்களில் முன்னிலை பெற்றது. 2001-ம் ஆண்டுக்குப் பிறகு ஒரு அணி இவ்வளவு விரைவில் முன்னிலை பெறுவது இதுவே முதன் முறையாகும். இதற்கு முன்பாக, 2005-ம் ஆண்டு ஜிம்பாப்வேக்க்கு எதிராகவும், 2013-ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராகவும் 11.2 ஓவர்களில் முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்கா முன்னிலை பெற்றதே சாதனையாக இருந்து வந்தது. அந்த இரு போட்டிகளும் இதே கேப்டவுன் மைதானத்தில் தான் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தென் ஆப்ரிக்க அணியால் மீண்டு வர முடியுமா?

இந்தியா - தென் ஆப்ரிக்கா இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்டை வென்றுள்ள தென் ஆப்ரிக்க அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது. இந்த டெஸ்டில் வென்றால் மட்டுமே இந்திய அணியால் டெஸ்ட் தொடரை சமன் செய்ய முடியும். தென் ஆப்ரிக்க அணியால் முதல் இன்னிங்ஸ் வீழ்ச்சியில் இருந்து மீண்டு வர முடியுமா?

https://www.bbc.com/tamil/articles/cxe45g8nm14o

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இப்ப‌ ந‌ட‌க்கும் விளையாட்டில் இந்திய‌ வெல்ல‌ அதிக‌ வாய்ப்பு இருக்கு.............ஜ‌ந்து நாள் விளையாட்டு மூன்று நாளில் முடிந்து விடும் ஹா ஹா😁.............

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கேப் டவுன் நியூலேண்ட்ஸ்: பேட்ஸ்மேன்களை சித்ரவதை செய்யும் தென்னாப்பிரிக்க ஆடுகளத்தில் அப்படி என்ன இருக்கிறது?

கேப் டவுன் நியூலேண்ட்ஸ் IND vs SA

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ஒரே நாளில் 23 விக்கெட், இந்திய அணி 0 ரன்னுக்கு 6 விக்கெட்டுகள், தென் ஆப்பிரிக்கா 55 ரன்னில் சுருண்டது என தேவையற்ற சாதனைகளை இரு அணிகளும் பெற்றுள்ளன.

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இந்தியா- தென் ஆப்பிரிக்க இடையிலான டெஸ்ட் தொடரில் இரு நாட்டு வீரர்களுடன் சேர்ந்து ‘ஆடுகளங்களும் விளையாடுகின்றன’ என்றால் கேட்பதற்கு சற்று நகைச்சுவையாகத்தானே இருக்கிறது. ஆனால் அது உண்மைதான்.

ஏனென்றால், இரு போட்டிகளிலும் வெற்றியை தீர்மானிப்பது பந்துவீச்சாளர்களோ, பேட்டர்களோ அல்ல ஆடுகளங்கள்தான். இது 2ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளை பார்த்தபோதே புரிந்திருக்கும்.

கேப்டவுனில் நடந்து வரும் இந்தியா- தென் ஆப்பிரிக்கா இடையிலான இரண்டாவது டெஸ்ட்டின் முதல் நாளில் ஒரே நாளில் 23 விக்கெட், இந்திய அணி 0 ரன்னுக்கு 6 விக்கெட்டுகள், தென் ஆப்பிரிக்கா 55 ரன்னில் சுருண்டது என தேவையற்ற சாதனைகளை இரு அணிகளும் பெற்றுள்ளன.

அதிலும் இந்திய அணி 153 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் என்று வலுவாக இருந்த நிலையில், அடுத்த 2 ஓவர்களில் 2 பந்துகளுக்கு ஒரு விக்கெட் வீதம் மீதமிருந்த 6 விக்கெட்டுகளையும் பூஜ்ஜியம் ரன்னுக்கு மோசமாக இழந்திருக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுபோன்ற மோசமான சாதனையை இந்திய அணி மட்டுமே செய்திருக்கிறது.

 
கேப் டவுன் நியூலேண்ட்ஸ் IND vs SA

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

தென் ஆப்பிரிக்க கேப்டன் எல்கர் காலையில் முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்து, மாலையில் 2வது இன்னங்ஸிலும் ஆட்டமிழந்தார்.

தனது கடைசி போட்டியில் மோசமான சாதனையைப் படைத்த எல்கர்

அது மட்டுமல்லாமல் ஒரே நாளில் ஒரு பேட்டர் இரு இன்னிங்ஸிலும் ஆட்டமிழந்ததும் இரண்டாவது முறையாகும். தென் ஆப்பிரிக்க கேப்டன் எல்கர் காலையில் முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்து, மாலையில் 2வது இன்னங்ஸிலும் ஆட்டமிழந்தார். இதற்கு முன் 1890ம் ஆண்டு ஆஸ்திரேலிய பேட்டர் ஜேக் பேரட் மட்டுமே இதுபோல் ஆட்டமிழந்திருந்தார். அதற்கு பின் ஏற்ககுறைய 134 ஆண்டுகளுக்குப்பின் டீன் எல்கர் இந்த மோசமான சாதனையைச் செய்துள்ளார்.

தென் ஆப்பிரிக்க அணியில் விக்கெட் கீப்பர் கெயில் வெரினே தவிர ஒரு பேட்டர் கூட களத்தில் 20 பந்துகளைக் கூட சந்திக்காமல் ஆட்டமிழந்தனர். அந்த அளவுக்கு பந்துவீச்சாளர்களுக்கு ஏற்றாற்போல், பேட்டர்களுக்கு சிறிதும் ஒத்துழைக்காத ஆடுகளமாக கேப்டவுன் மைதானம் மாறிவிட்டது.

 
கேப் டவுன் நியூலேண்ட்ஸ் IND vs SA

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

1889ம் ஆண்டு மார்ச் 25ம் தேதியிலிருந்து நூற்றாண்டு கடந்து கேப்டவுனில் டெஸ்ட் போட்டிநடத்தப்பட்டு வருகிறது

கேப்டவுன் நியூலேண்ட்ஸ் ஆடுகளம் எப்படி?

தென் ஆப்பிரிக்க ஆடுகளம் என்றாலே வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ஒத்துழைக்கும் வகையில்தான் இருக்கும் என்று வரலாறு இருக்கிறது. அதையும் கடந்து இங்கும் சில நல்ல ஆடுகளங்களும் இருக்கின்றன. அந்த வகையில் கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் ஆடுகளமும் ஒன்றாகும்.

ஆனால், நல்ல மைதானங்கள் வரிசையில் இடம் பெற்ற நியூலேண்ட்ஸ் ஆடுகளம் இவ்வளவு மோசமாக பேட்டர்களுக்கு சிறிதும் ஒத்துழைக்காத ஆடுகளமாக எவ்வாறு மாறியது என்பது தென் ஆப்பிரிக்க கேப்டன் டீன் எல்கருக்கே வியப்பாக இருக்கிறது.

1889ம் ஆண்டு மார்ச் 25ம் தேதியிலிருந்து நூற்றாண்டு கடந்து கேப்டவுனில் டெஸ்ட் போட்டிநடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 58 டெஸ்ட் போட்டிகள் நடத்தப்பட்டாலும், பெரும்பாலான ஆட்டங்களில் தென் ஆப்பிரிக்காதான் வென்றுள்ளது. இந்த மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டி இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையில்தான் நடந்தது.

அந்த அளவுக்கு கேப்டவுன் நியூலேண்ட்ஸ் மைதானம் பாரம்பரியம், புகழ்பெற்றது. தென் ஆப்பிரிக்காவில் இருக்கும் அழகான மைதானங்களில், வேகப்பந்துவீச்சாளர்களுக்கு இயற்கையாகவே ஒத்துழைக்கும் வகையில் ஈரக்காற்று அதிகம் வீசும் சூழல் நிறைந்தது.

இதனால் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ஏற்றாற்போல் ஆடுகளம் அமைத்தாலும், இயற்கை சூழலும் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு உதவும் வகையில் குளிர்காலத்திலும், மழைக்காலத்திலும் காற்றில் அதிகமான ஈரப்பதத்துடன் இங்கு வீசுவதால் சீமிங், ஸ்விங் நன்றாக எடுபடும்.

இந்த மைதானத்தில் அதிகபட்சமாக 651 ரன்கள் வரை அடிக்கப்பட்டாலும், இந்த டெஸ்ட் போட்டியில் இரு அணிகளும் தேவையற்ற சாதனைகளை சம்பாதித்துக்கொண்டனர். இந்த மைதானத்தைப் பொறுத்தவரை முதலில் பேட் செய்த அணி 23 போட்டிகளிலும் சேஸிங் செய்த அணி 25 போட்டிகளிலும் வென்றுள்ளது.

 
கேப் டவுன் நியூலேண்ட்ஸ் IND vs SA

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

கேப்டவுன் விக்கெட்டில் பிளவுகளும், புற்களும் அதிகமாக இருக்கும்.

மோசமடையுமா ஆடுகளம்?

இப்போதுள்ள நிலையைவிட கடைசி 2 நாட்களில் ஆடுகளத்தின் நிலைமை இன்னும் மோசமாகலாம். ஆடுகளத்தில் பந்து சமச்சீரற்ற வகையில் பவுன்ஸ் ஆகும், பேட்டர் எதிர்பாரா வகையில் ஸ்விங் ஆகி, பேட்டர் ஏன் களமிறங்கினோம் என்று மனதுக்குள் புலம்பும் வகையில் சித்ரவதை செய்யும் ஆடுகளமாக அடுத்துவரும் நாட்கள் மாறக்கூடும் என்று பிட்ச் ரிப்போர்ட் கூறுகிறது.

டாஸ் வெல்லும் அணி முதலில் பேட் செய்வதுதான் சிறந்த முடிவாக இதற்கு முன்பு வரை இருந்தது என்பதால்தான் தென் ஆப்பிரிக்க கேப்டன் டீன் எல்கரும் பேட் செய்தார்.

ஆனால், தங்களின் பேட்டிங் திறமை வெறும் 24 ஓவர்களுக்குள் பெட்டிப்பாம்பாக அடங்கிவிடும் என்று அவரே நினைக்கவில்லை. இந்த நியூலேண்ட்ஸ் மைதானம் செஞ்சூரியன் மைதானத்தைப் போலவே வேகப்பந்துவீச்சாளர்களுக்கு நன்கு ஒத்துழைக்கும் மைதானமாகும்.

விக்கெட்டில் பிளவுகளும், புற்களும் அதிகமாக இருக்கும். மேலும், விக்கெட்டில் தண்ணீர் ஊற்றி ரோலர் போடாமல், ரோலர் மட்டுமே உருட்டுவதால், ஆடுகளத்தில் வேகப்பந்துவீச்சில் அதிகமாக ஸ்விங் ஆகும், பவுன்ஸரில் பந்து எகிறி பேட்டர்களை சித்ரவதை செய்யும்.

ஆனால், கடைசி இரு நாட்கள் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு ஒத்துழைக்கும் என்று நடுநிலையான பிட்ச் ரிப்போர்ட் தெரிவித்தாலும், இப்போதுள்ளநிலையில் 4வது நாள்வரை போட்டி செல்லுமா என்பது கேள்விக்குறிதான்.

 
கேப் டவுன் நியூலேண்ட்ஸ் IND vs SA

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

கேப்டவுன் நியூலேண்ட்ஸ் ஆடுகளத்தில் பந்துகள் சராமாரியாக பவுன்ஸ் ஆகி எகிறுகிறது

ஐசிசி விதிகளுக்கு உட்பட்டுதான் ஆடுகளம் அமைக்கப்பட்டதா?

ஐசிசி விதிகளில் ஆடுகளம் குறித்து தெரிவிக்கையில் ஒரு ஆடுகளம் பேட்டர்களுக்கும், பந்துவீச்சாளர்களுக்கும் சம வாய்ப்பு அளிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கிறது. ஆனால், தென்ஆப்பிரிக்காவில் செஞ்சூரியன், கேப்டவுன் ஆடுகளங்கள் இரண்டுமே பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாகவே அமைக்கப்பட்டுள்ளது. இந்த இரு ஆடுகளங்களிலும் பேட்டர் ரன் சேர்ப்பதே அரிதாக இருக்கிறது, ஒரு பேட்டர் நீண்டநேரம் களத்தில் நிற்பதே அதிசயமாக இருக்கிறது.

இந்தியாவில் ஆகமதாபாத், சென்னை ஆடுகளங்கள் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு ஏற்றார்போல் மாற்றப்பட்டுள்ளன என்று புகார் எழுந்தபோது ஐசிசி அப்போது அதில் தலையிட்டது. அதுபோன்று நியூலேண்ட்ஸ் மைதானத்தின் தரத்தையும் பார்வையிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது.

ஆசியாவில் இதுபோன்று ஒரு போட்டியில் 23 விக்கெட்டுகள் ஒரு போட்டியில் வீழ்த்தப்பட்டு அது பெரிய சர்ச்சையாகியது, ஆடுகளங்களும் ஐசிசியால் ஆய்வு செய்யப்பட்டன.

ஒரு டெஸ்ட்போட்டி 3 நாட்களில் முடிந்து, ஒரு தரப்புக்கு உதவுமாறு அமைக்கப்பட்டால் ரசிகர்களின் விமர்சனங்கள் மோசமாக இருக்கும். தென்ஆப்பிரிக்காவில் வேகப்பந்துவீச்சுக்கு மட்டும் உதவுமாறு ஆடுகளங்களை அமைக்காதீர்கள் என்று முன்னாள் வீரர் ஷான் போலக்கூட விமர்சித்திருந்தார்.

ஆனால் கேப்டவுன் நியூலேண்ட்ஸ் ஆடுகளத்தில் பந்துகள் சராமாரியாக பவுன்ஸ் ஆகி எகிறுகிறது, பேட்டர்களால் பந்தை பேட்டால்கூட தொட முடியவில்லை, அதிகபட்ச ஸ்விங் ஆகிறது, செஞ்சூரியன் மைதானத்திலும் இதே நிலை இருந்தது. இதை அனைத்தைபும் பார்த்தஐசிசி போட்டி ரெப்ரி இந்த ஆடுகளங்களை நல்ல ஆடுகளங்கள் என்று தரச்சான்று அளித்துள்ளார்.

 
கேப் டவுன் நியூலேண்ட்ஸ் IND vs SA

பட மூலாதாரம்,GETTY IMAGES

உள்நாட்டு அணிக்கே சிக்கலை ஏற்படுத்திய ஆடுகளம்

பொதுவாக உள்நாட்டில் போட்டி நடக்கும்போது, உள்நாட்டு அணியைக் கேட்டுத்தான் ஆடுகளம் வடிவமைப்பாளர் ஆடுகளத்தை தயார் செய்வார். இதுதான் அதிகாரபூர்வமற்ற நடைமுறையாக அனைத்து நாடுகளிலும் இருக்கிறது. ஆனால், செஞ்சூரியன், கேப்டவுன் ஆடுகளம் அமைக்கப்பட்ட விதத்தின் தார்மீகம் குறித்த கேள்வி எழுகிறது. பந்துவீச்சாளர்களுக்கு உதவக்கூடிய வகையில், ஆடுகளத்தை மோசமாக வடிவமைப்பது எந்த விதத்தில் நடுநிலையானது என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்திய அணியின் பலவீனத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் வகையில் ஆடுகளம் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு மட்டும் ஏற்றார்போல் மாற்றப்பட்டது. ஆனால், முதலில் பலியானது என்னமோ 23.2 ஓவர்களில் தென்ஆப்பிரிக்காதான். புதிய பந்திலேயே இவ்வளவு மோசமாக ஆடுகளம் செயல்படுகிறது என்றால், பந்து தேய்ந்து பழசாகிவிட்டால் இன்னும் மோசமாக இருக்கும்.

தன்வினை தன்னைச் சுடும் என்பதுபோல், ஆடுகளத்தை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஏற்றாற்போல் அமைக்க வேண்டும் என்று தென் ஆப்பிரிக்க அணி எடுத்து முடிவு, அந்த அணிக்கே “பேக் பயர்” ஆகிவிட்டது. ஒரே நாளில் 23 விக்கெட்டுகள் சரியும் என்று யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்.

 
கேப் டவுன் நியூலேண்ட்ஸ் IND vs SA

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தியப் பந்துவீச்சு எப்படியிருந்தது?

ஆனால், இந்திய அணியின் பந்துவீச்சாளர்ள் ,செஞ்சூரியன் மைதானத்தில் பந்துவீசியதைவிட, கூடுதல் துல்லியத்தன்மையுடனும், லைன் லென்த்திலும் வீசினர். ஆடுகளத்தில் பேட்டர்களால் பந்தை எதிர்கொண்டு ஆடமுடியவில்லை என்பதை தொடக்கத்திலேயே புரிந்து கொண்டு பவுன்ஸர்களை வீசி பேட்டர்களை மிரட்டினர்.

தென் ஆப்பிரிக்க கேப்டன் டீன் எல்கர் ஆடுகளம் குறித்து அளித்த பேட்டியில் “ இந்த நியூலேண்ட்ஸ் ஆடுகளம் பொதுவாக மெதுவாக இருக்கும், பேட்டர்கள் அதற்கு ஏற்றாற்போல் தங்களை மாற்றிக்கொள்ள முடியும். இந்த ஆடுகளத்தில் 600 ரன்களுக்கு மேல் அடிக்கப்பட்டுள்ளது. ஆனால், இன்று ஆடுகளத்தில் பந்துகள் பவுன்ஸர் ஆகியவிதம், வேகப்பந்துவீச்சுக்கு ஏற்றார்போல் மாறியவிதம் எனக்கு வியப்பாக இருக்கிறது. வெறும் கண்களில் பார்த்தால் ஆடுகளம் மோசமாக இருக்கும், ஆனால், நான் அப்படி மோசமானதாக இருக்கும் என நினைக்கவில்லை. உள்நாட்டுப் போட்டிகள் நல்லவிதமாக முடிந்துள்ளன, பேட்டர்களுக்கு சாதகமாகவும் இருந்துள்ளன. “

“ஆடுகளம், சூழல் ஆகியவற்றை அறிந்து நான்தான் முதலில் பேட் செய்ய வேண்டுமா என்பதை முடிவு செய்திருக்க வேண்டும். இந்திய பந்துவீச்சாளர்கள் சரியான லைன் லென்த்தில் பந்துவீசினர். கோலி, ரோஹித் சர்மா சரியான பந்துகளை தேர்வு செய்து பேட் செய்தனர். அவர்கள் சிரமப்பட்டதற்கு ஏற்றார்போல் ஸ்கோரும் கிடைத்தது. “

 
கேப் டவுன் நியூலேண்ட்ஸ் IND vs SA

பட மூலாதாரம்,GETTY IMAGES

“இந்த ஆடுகளம் மோசமானது என்று என்னால் கூற முடியாது. தனிப்பட்ட ரீதியில் இந்த ஆடுகளத்தில் நல்ல ஸ்கோரை நான் எடுத்திருக்கிறேன். கிரேம் ஸ்மித்துக்கு அடுத்தார்போல் நான் அதிகமான ரன்களை கேப்டவுனில் அடித்துள்ளேன். என்னைப் பொறுத்தவரை ஆடுகளம் பேட்டர்களுக்கும், பந்துவீச்சாளர்களுக்கும் சமவாய்ப்பு அளிக்குமாறு இருக்க வேண்டும், அமைக்க வேண்டும்.

ஆனால் தென் ஆப்பிரிக்காவில் பந்துவீச்சாளர்களுக்கு வசதியாக அமைப்பது தவறானது. பேட்டர்கள் வழக்கமான ஒழுக்கத்தைவிட கூடுதல் ஒழுக்கத்துடன் பேட் செய்ய வேண்டும், தங்களை ஆடுகளத்துக்கு ஏற்றார்போல் மாற்றிக்கொண்டு பேட் செய்ய வேண்டும், மனநிலையை கடுமையாக வைத்திருக்கவேண்டியது இதுபோன்ற ஆடுகளங்களில் அவசியம்” எனத் தெரிவித்தார்.

“இப்படி ஆடுகளத்தை நான் பார்த்து இல்லை”

தென் ஆப்பிரிக்க அணியின் பேட்டிங் பயிற்சியாளர் ஆஸ்வெல் பிரின்ஸ் ஆடுகளம் குறித்துக் கூறுகையில் “ நியூலேண்ட்ஸ் விக்கெட்டை இப்போது பார்த்தது போன்று இதற்குமுன் நான் பார்த்தது இல்லை. விக்கெட்டில் பந்து பட்டதும் வரும்வேகம், சமச்சீரற்ற பவுன்ஸர், சீமிங், ஸ்விங் அனைத்துமே வித்தியாசமாக இருந்தது. ஒருநாளில் ஒரு இன்னிங்ஸும் முடியும் அளவுக்கு நியூலேண்ட்ஸ் விக்கெட்டை இதற்கு முன் நான் பார்த்து இல்லை.

பேட்டர்கள் இந்த ஆடுகளத்தில் பேட் செய்வது கடினமாக இருந்ததைப் பார்த்தேன். ஒரு பந்து தாழ்வாக பவுன்ஸராகிறது, மற்றொரு பந்து மார்புக்கு நேரே வருகிறது. பந்து இந்த அளவுக்கு சீமிங், ஸ்விங் ஆவதற்கு காலநிலையும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று நான் நினைக்கவில்லை. முதலில் நாளில் இப்படி இருக்கலாம் அடுத்துவரும் நாட்களும் இதுபோன்ற நிலை தொடர்ந்தால் அது கவலைப்படக்கூடியதுதான்” எனத் தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/articles/c4nylvjnelxo

  • கருத்துக்கள உறவுகள்
Posted

IND vs SA: கேப் டவுனில் தென் ஆப்பிரிக்காவை திணற வைத்த பும்ரா, சிராஜ் - சமன் செய்த இந்திய அணி

Ind vs SA Test series

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 44 நிமிடங்களுக்கு முன்னர்

கேப்டவுன் நியூலாந்து மைதானத்தில் நடந்த தென் ஆப்பிரிக்குவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று, 2 நாட்களிலேயே ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது.

கடந்த 40 ஆண்டுக்கால வரலாற்றில் இந்த முறையாவது இந்திய அணி டெஸ்ட் தொடரை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஏமாற்றம் இருந்தாலும் ஆறுதலும் கிடைத்துள்ளது.

கேப்டவுன் மைதானத்தில் இதுவரை இந்திய அணி 7 முறை விளையாடியுள்ளது என்றாலும் ஒரு போட்டியில்கூட வென்றது இல்லை. ஆனால், முதல்முறையாக நியூலாந்து மைதானத்தில் வெற்றியை ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி பதிவு செய்தது.

முதலிடத்தில் இந்திய அணி

Ind vs SA Test series

பட மூலாதாரம்,GETTY IMAGES

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இந்திய அணி மீண்டும் முதலிடத்தைப் பிடித்தது. இந்த வெற்றியின் மூலம் 4 போட்டிகளில் 2 வெற்றி, ஒரு தோல்வி, ஒரு டிரா என 26 புள்ளிகளுடன் 54.16 சதவீதத்துடன் முதலிடத்தை இந்திய அணி பெற்றது. தென் ஆப்பிரிக்க அணி 2வது இடத்துக்குச் சரிந்தது.

92 ஆண்டுகளுக்குப் பின்...

ஏறக்குறைய 92 ஆண்டுகளுக்குப்பின் ஒரு டெஸ்ட் போட்டியில் மிகக் குறைவான பந்துகள் வீசப்பட்டு, டெஸ்ட் போட்டி முடிவுக்கு வந்துள்ளது என்றால் இந்த ஆட்டம்தான்.

இதற்கு முன் கடந்த 1932ஆம் ஆண்டு மெல்போர்னில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா இடையே 656 பந்துகள் வீசப்பட்டதுதான் குறைந்த பந்துகள் வீசப்பட்ட டெஸ்ட் போட்டியாக இருந்தது. ஆனால் இந்த டெஸ்ட் போட்டியில் மொத்தம் 106.4 ஓவர்கள், அதாவது 642 பந்துகள் மட்டுமே வீசப்பட்டு 92 ஆண்டுகளுக்குப் பின் குறைந்த பந்துகள் வீசப்பட்ட டெஸ்ட் போட்டியாக மாறியுள்ளது.

முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்க அணி 55 ரன்களும், இந்திய அணி 153 ரன்களும் சேர்த்து, இந்திய அணி 98 ரன்கள் முன்னிலை பெற்றது. இரண்டாவது இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்க அணி 176 ரன்களுக்கு ஆட்டமிழந்து 79 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. இதையடுத்து, 12 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 79 ரன்கள் சேர்த்து இந்திய அணி வென்றது.

பந்துவீச்சாளர்களுக்கு அர்ப்பணம்

Ind vs SA Test series

பட மூலாதாரம்,GETTY IMAGES

வெற்றிக்குப்பின் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில், “சிறந்த அடியை முன்னெடுத்துள்ளோம் என்றாலும் ஏராளமான தவறுகளில் இருந்து பாடம் கற்று இருக்கிறோம்.

பந்துவீச்சாளர்கள் லைன் லென்த்தில் வீசி, வெற்றியைப் பெற்றுக் கொடுத்துள்ளனர். பேட்டர்களும் 100 ரன்கள் வரை முன்னிலை எடுத்துக் கொடுத்தனர். ஆனால், கடைசி 6 விக்கெட்டுகள் சரிந்தது வேதனைதான்.

யாரும் இதுவரை பார்க்காத வகையில் சிராஜ் பந்துவீச்சு இருந்தது. இந்த வெற்றி பந்துவீச்சாளர்களுக்கு அர்ப்பணம். தென் ஆப்பிரிக்கா எப்போதுமே நமக்கு சவலாக இருந்தது, இங்கு வந்து வெற்றியும் பெற்றுள்ளோம்,” எனத் தெரிவித்தார்

ஆட்ட நாயகன், தொடர் நாயகன்

இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்தன.

ஆட்டநாயகன் விருது 7 விக்கெட்டுகளை வீழ்த்திய சிராஜுக்கும், தொடர்நாயகன் விருது ஜஸ்பிரித் பும்ராவுக்கும், எல்கருக்கும் வழங்கப்பட்டது.

இந்த டெஸ்ட் தொடருடன் தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரரும், இந்தப் போட்டிக்கு கேப்டனாக செயல்பட்ட டீன் எல்கர் டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெற்றார்.

பேக்ஃபயராக மாறிய ஆடுகளம்

Ind vs SA Test series

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்திய அணியின் வெற்றிக்கு பந்துவீச்சாளர்களின் பங்களிப்புதான் முக்கியக் காரணம். முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்காவை புரட்டி எடுத்தது சிராஜ்ஜின் பந்துவீச்சும் 6 விக்கெட்டுகளும் என்றால், 2வது இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்க பேட்டர்களை கதிகலங்க வைத்தது ஜஸ்பிரித் பும்ராவின் பந்துவீச்சு.

வேகப்பந்துவீச்சாளர்களின் நலனுக்காக, சாதகமாக ஆடுகளத்தை அமைத்த தென் ஆப்பிரிக்காவுக்கு அந்த ஆடுகளமே “பேக்ஃபயராக” மாறிவிட்டது. தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 53 ரன்களுக்கு சுருண்டதும், 2வது இன்னிங்ஸில் 48 ரன்களுக்குள் முதல் 5 விக்கெட்டுகளை இழந்ததும் தோல்விக்கு முக்கியக் காரணம்.

இந்திய அணியும் இதில் சளைத்தது இல்லை. முதல் இன்னிங்ஸில் 153 ரன்கள் சேர்த்திருந்தபோது, அடுத்து எந்த ரன்னும் சேர்க்காமல் பூஜ்ஜிய ரன்னுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து மோசமான சாதனையைப் படைத்தது. இரு அணிகளும் பந்துவீச்சாளர்களை நம்பி நியூலாந்தில் கால் வைத்தன, இதில் இந்திய அணி முந்திக்கொண்டதால், தென் ஆப்பிரிக்காவின் தோல்வி உறுதியானது.

ஆறுதல் அளித்த மார்க்ரம்

தென் ஆப்பிரிக்க அணிக்கு இந்த டெஸ்டில் ஒரே ஆறுதல் மார்க்ரம் அடித்த சதம்(103) மட்டுமே. டெஸ்ட் வரலாற்றிலேயே முதல்முறையாக, ஒரு அணியில் மற்ற வீரர்கள் 20 ரன்களுக்கு மேல் சேர்காத நிலையில் மார்க்ரம் மட்டும் சதம் அடித்தது இதுதான் முதல்முறை.

பும்ராவிடம் சரண்

Ind vs SA Test series

பட மூலாதாரம்,GETTY IMAGES

இரண்டாவது நாளான நேற்றைய ஆட்ட நேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 3 விக்கெட் இழப்புக்கு 62 ரன்கள் சேர்த்திருந்தது. மார்க்ரம் 36, பெடிங்கம் 7 ரன்களில் இன்றைய ஆட்டத்தைத் தொடர்ந்தனர்.

ஆனால், இன்றைய தொடக்கமே தென் ஆப்பிரிக்காவுக்கு சிறப்பாக அமையவில்லை. பும்ராவின் முதல் ஓவரிலேயே பெடிங்ஹாம் விக்கெட் கீப்பரிடம் விக்கெட்டை பறிகொடுத்தார்.

அடுத்து வந்த வெரினேவும் நிலைக்கவில்லை. பும்ரா பந்துவீச்சில் ஃபுல் ஷாட் அடிக்க முற்பட்டு, சிராஜிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கேசவ் மகராஜ் கல்லி பகுதியில் கேட்ச் பிடிக்கப்பட்டு வெளியேற தென் ஆப்பிரிக்க 7 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் சேர்தித்திருந்தது.

மார்க்ரம் சதம்

விக்கெட்டுகள் ஒருமுனையில் வீழ்ந்தாலும் மற்றொரு முனையில் மார்க்ரம் அதிரடியாக ஆடினார். 68 பந்துகளில் அரைசதம் அடித்த மார்க்ரம், அடுத்த 31 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்து சதம் அடித்தார். ரபாடா, மார்க்ரம் சேர்ந்து 8வது விக்கெட்டுக்கு 51 ரன்கள் சேர்த்தனர்.

மார்க்ரம் 73 ரன்கள் சேர்த்திருந்தபோது, பும்ரா பந்துவீச்சில் கிடைத்த கேட்சை ராகுல் தவறவிட்டதால், அதிர்ஷ்ட வாய்ப்பு பெற்று சதம் அடித்தார். இல்லாவிட்டால் சதம் அடிக்காமலே மார்க்ரம் நடையைக் கட்டியிருப்பார். மார்க்ரம் 106 ரன்களுக்கு ஆட்டமிழந்த சிறிது நேரத்திலேயே தென் ஆப்பிரிக்காவின் 2வது இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.

விக்கெட் சரிவு

Ind vs SA Test series

பட மூலாதாரம்,GETTY IMAGES

இரண்டு முதல் ஐந்து விக்கெட்டுகளை 48 ரன்களுக்கு பறிகொடுத்த தென் ஆப்பிரிக்க அணி கடைசி 3 விக்கெட்டுகளை வெறும் 8 ரன்களுக்குள் இழந்தது. 36.5 ஓவர்களில் தென் ஆப்பிரிக்க அணி 176 ரன்களில் 2வது இன்னிங்ஸில் ஆட்டமிழந்தது.

இந்திய அணி தரப்பில் பும்ரா 13.5 ஓவர்கள் வீசி 61 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளையும், முகேஷ் குமார் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இந்திய அணிக்கு 79 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது தென் ஆப்பிரிக்க அணி. எளிய இலக்கை அதிரடியாக அடைந்தால்தான் வெற்றி கிட்டும் என்பதை உணர்ந்த ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா ஆவேசமாக பேட் செய்தனர். இருவரின் பெரும்பாலான ஷாட்கள் பேட்டின் மத்தியப் பகுதியில் விழவில்லை, இருப்பினும் இருவரின் அதிரடி ஆட்டத்தால் 5.4 ஓவர்களில் இந்திய அணி 44 ரன்களை தொட்டது.

ஜெய்ஸ்வால் 28 ரன்னில் பர்கர் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். சுப்மான் கில் 10 ரன்னில் ரபாடாவின் லோபவுன்ஸரில் போல்டாகி வெளியேறினார். கோலி 12 ரன்னில் யான்சென் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

கேப்டன் ரோஹித் சர்மா 12 ரன்களுடனும், ஸ்ரேயாஸ் 4 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். 12 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 80 ரன்கள் சேர்த்து இந்திய அணி வென்றது.

https://www.bbc.com/tamil/articles/cgr3gqnpjpvo

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இர‌ண்டாவ‌து ஜ‌ந்து நாள் விளையாட்டு 2 நாளில் முடிந்து விட்ட‌து................அதோடு இந்தியா தென் ஆபிரிக்காவை சிம்பிலா வென்று விட்ட‌து..............



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • விசுகர்! அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி  எலான் மஸ்க்  என சொல்கிறார்கள்.எதற்கும் அடக்கி வாசியுங்கள். 😂 
    • மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை, ஊழல் ஒழிப்பு, சட்டமா அதிபர் திணைக்களம்: சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதற்கு இம்மூன்றையும் மறுசீரமையுங்கள் - ஜனாதிபதியிடம் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தல்     (நா.தனுஜா) நாட்டில் சீர்குலைவடைந்திருக்கும் சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதை இலக்காகக்கொண்டு மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை செயன்முறையை சீரமைத்தல், ஊழல் மோசடிகளைக் கட்டுப்படுத்தல் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தை மறுசீரமைத்தல் ஆகிய மூன்று பிரதான விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவேண்டும் என ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளது.  இதுகுறித்து ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொள்கை மற்றும் செயற்திட்டப் பணிப்பாளர் பாஸில் பெர்னாண்டோவினால் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: இலங்கையில் சட்டத்தின் ஆட்சியையும், மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்படுவதையும் உறுதிப்படுத்துவதை இலக்காகக்கொண்டு மேற்கொள்ளப்படவேண்டிய மறுசீரமைப்புக்களில் பிரதானமாகக் கருத்திலெடுக்கப்படவேண்டிய மூன்று மறுசீரமைப்புக்களை உங்களது கவனத்துக்குக் கொண்டுவரவிரும்புகிறேன். நாம் கடந்த பல வருடகாலமாக இலங்கையில் சீர்குலைவடைந்திருக்கும் சட்டத்தின் ஆட்சி குறித்து தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வந்திருக்கிறோம். நீண்டகாலமாக நீங்கள் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைகளிலும், கடந்த தேர்தலின்போது தேசிய மக்கள் சக்தியினால் மேற்கொள்ளப்பட்ட நிலைப்பாட்டிலும் இவ்விடயம் உள்வாங்கப்பட்டதுடன், சிறந்த ஆட்சியியல் நிர்வாகக்கட்டமைப்பை நிறுவுதல் எனும் பொது நோக்கத்தின் அடிப்படையில் பலர் ஒன்றிணைந்தனர். எனவே கடந்த 50 வருடங்களில் முதன்முறையாக வரலாற்று ரீதியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துவதை முன்னிறுத்திய அரசியல் தன்முனைப்பு வெளிப்படுத்தப்பட்டிருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம்.  இவ்வாறானதொரு பின்னணியில் முதலாவதாக மிகமோசமான குற்றங்கள் தொடர்பில் தினந்தோறும் மேல்நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்கு விசாரணைகள் முறையான விதத்தில் மறுசீரமைக்கப்படவேண்டும். குறிப்பாக குற்றங்களுக்கு விதிக்கப்படவேண்டிய தண்டனைகள் தொடர்பில் நிச்சயமற்ற தன்மையொன்று நிலவும் பட்சத்தில், நாட்டின் ஒட்டுமொத்த குற்றவியல் சட்ட நடைமுறைகளும் சீர்குலைவடையும். இலங்கையில் தற்போது அவ்வாறானதொரு நிலையே காணப்படுகின்றது. மிகப்பாரதூரமான வழக்குகள் மேல்நீதிமன்றத்தில் தினந்தோறும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவது அவசியமாகும். குற்றவியல் வழக்குகள் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் இடமாற்றம் செய்யப்படுவதானது, அவ்வழக்கு விசாரணைகள் தாமதமடைவதற்கு வழிகோலியுள்ளன. நிர்வாக ரீதியான சிக்கல்கள் காரணமாக வழக்கு விசாரணைக்கான திகதிகள் அடிக்கடி மாற்றியமைக்கப்படுவதனால் வழக்குகள் பல வருடகாலமாக இழுத்தடிக்கப்படுகின்றன. எனவே அரசியல் தன்முனைப்பு மற்றும் தூரநோக்கு சிந்தனை என்பவற்றின் ஊடாக இச்செயன்முறையை ஆக்கபூர்வமான விதத்தில் மறுசீரமைப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும். இரண்டாவதாக ஊழல் மோசடிகள் இடம்பெறுவதைக் கட்டுப்படுத்தக்கூடியவாறான மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்படவேண்டும். அதன்படி இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கான குற்றவியல் விசாரணை அதிகாரிகளை பொலிஸ் சேவையிலிருந்து தெரிவு செய்யும் தற்போதைய நடைமுறையைக் கைவிடவேண்டும். மாறாக குறித்த ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் பொலிஸ் திணைக்களத்துக்கு வெளியிலிருந்து தெரிவு செய்யப்படுவதுடன், அவர்கள் பொலிஸ்மா அதிபர் மற்றும் ஏனைய திணைக்களங்களுடன் தொடர்பற்ற முற்றிலும் சுயாதீனமானவர்களாக இருக்கவேண்டும்.  மூன்றாவதாக சட்டமா அதிபர் திணைக்களம் மறுசீரமைக்கப்படவேண்டும். 1978 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தின் ஊடாக நிறைவேற்றதிகார ஜனாதிபதிக்கு ஏற்புடையதும், தன்னிச்சையான செயற்பாடுகளுக்குப் பெரிதும் இடமளிக்கக்கூடியவகையிலும் ஸ்தாபிக்கப்பட்ட கட்டமைப்பான சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தமுடியாது. எனவே இக்கட்டமைப்பு அவசியமான மறுசீரமைப்புக்களுக்கு உட்படுத்தப்படவேண்டும் என அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.     
    • Dee Dee Simon Sings "And I'm Telling You I'm Not Going" | Auditions | AGT 2024    
    • யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் உயிரிழப்பு!     யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி குணரத்தினம் (வயது 67) என்ற 5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இவர் நான்கு தினங்களாக காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவரை ஞாயிற்றுக்கிழமை (22) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.  அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. https://jaffnazone.com/news/47018#:~:text=யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட,5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.&text=இவர் நான்கு தினங்களாக காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தார்.  
    • தனங்கிளப்பு பகுதியில் சட்டவிரோதமாக பனை மரங்கள் தறிப்பு!     தனக்கிளப்பு பகுதியில் 25க்கும் மேற்பட்ட அனுமதியற்ற சட்டவிரோத பனை மரங்கள் தொடர்ச்சியாக தறிக்கப்பட்டு வந்த நிலையில் பொதுமக்கள் வழங்கிய முறைப்பாட்டை அடுத்து  பனை அபிவிருத்தி சபையால் சாவகச்சேரி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது . குறித்த சம்பவம் தொடர்பில் பனை அபிவிருத்தி சபையின் தலைவர் சகாதேவன் தெரிவிக்கையில், தனங்கிளப்புப் பகுதியில் தொடர்ச்சியாக சட்டவிரோத பனை மரங்கள் வெட்டப்படுவதாக பனை அபிவிருத்திச் சபைக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றது. முறைப்பாட்டின் அடிப்படையில் எமது உத்தியோத்தர்கள் குறித்த இடத்திற்கு விஜமம் மேற்கொண்ட நிலையில் அங்கு 25க்கும் மேற்பட்ட பனை மரங்கள் தறிக்கப்பட்டமை அவதானிக்கப்பட்டதுடன் கனகர இயந்திரங்கள் குறித்த பகுதியில் கொண்டுவரப்பட்டமையும் நேரடியாக அவதானிக்கப்பட்டது. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் இள வயது பனைகள் பல தறிக்கப்பட்டும் அடிப்பாகங்கள் எயியூட்டப்பட்ட நிலையிலும் காணப்பட்டது. சம்பவம் தொடர்பில் நெல்லியடியைச் சேர்ந்த காணி உரிமையாளர் சாவகச்சேரி பொலிஸ் நிலையம் வரவழைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிசார் வழக்கு தாக்கல் செய்வதாக உறுதியளித்தனர். பனை மரங்களை வெட்டுவதற்காக எடுத்துவரப்பட்ட கனகர இயந்திரங்களை முறைப்பாட்டில் பதிவு செய்யுமாறு எமது உத்தியோகத்தர்கள் வலியுறுத்திய நிலையில் சாவகச்சேரி பொலிசார் ஏற்க மறுத்துள்ளனர். இந்த சட்ட விரோத செயற்பாடுகளுடன் சாவகச்சேரி பொலிசாருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்த நிலையில் அவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாகன இலக்கங்களை முறைப்பாட்டில் பதியாவிட்டால் மேலிடத்தில் முறைப்பாடு செய்ய வேண்டி வரும் எனக் கூறிய நிலையில் முறைப்பாட்டை ஏற்பதாக தெரிவித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.  சட்ட விரோத பனை மரங்கள் தறிக்கப்பட்டால்  0779273042 பண்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தகவல்களை தர முடியும் என பனை அபிவிருத்திச் சபை தலைவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/201922  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.