Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 3  27 DEC, 2023 | 11:12 AM

image

ஜப்பானிய நிதி அமைச்சர் சுனிச்சி சுசுகி, ஜனவரி மாதம் 09 ஆம் திகதி முதல் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை மற்றும் கம்போடியாவிற்கு வருகைதரவுள்ளார்.

சுனிச்சி சுசுகி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கடன் மறுசீரமைப்பு பற்றி கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

"கடன் மறுசீரமைப்பு செயல்முறைக்கு நிலையான முன்னேற்றம் மிகவும் முக்கியமானது" என சுசுகி ஒரு ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/172530

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜப்பான் நிதியமைச்சர் சுசுகி இலங்கை வருகிறார்

image_006a9a1157.jpg

ஜப்பான் நிதியமைச்சர் சுசுகி ஷுனிச்சி ஜனவரி 11 முதல் 12 வரை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது ஜப்பானிய நிதியமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோருடன் உத்தியோகபூர்வ கலந்துரையாடல்களை நடத்த உள்ளார்.

ஜப்பான் நிதி அமைச்சர் மற்றும் அவரது குழுவினர் இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில் பாராளுமன்றம், ஜயவர்தன மையம், ஸ்ரீ ஜயவர்தனபுர மருத்துவமனை, கொழும்பு கப்பல்துறை மற்றும் லங்கா நிப்பென் பிஸ்டெக் நிறுவனம் ஆகிய இடங்களுக்குச் செல்லவுள்ளனர்.

https://thinakkural.lk/article/287443

  • கருத்துக்கள உறவுகள்

தாம் இலங்கையர் என பெருமையாக கூறுபவர்கள் அவமானப்படும் வகையில், இலங்கை ஒரு சிறுபான்மையினரினை அடக்குவதற்காக கடன் வாங்கி; இப்போது அதனை செலுத்த முடியாமல் திணறுகின்றது.

இலங்கையில் இன்னமும் பயங்கரவாத சட்டத்தின் பின்னே மறைந்து கொண்டே அரசுகள் இயங்கும் கேவலமான நிலையிலேயே இலங்கை உள்ளது, இதனை பற்றி படித்த, பாமர மக்கள் கூட கவலைப்படுவதில்லை, காரணம் அந்தளவிற்கு இனவாதம் கண்ணை மூடியுள்ளது, அந்த அவமானகரமான நிலையினை கூட உணரமுடியாதவாறு எருமை மாட்டின் மேல் மழை பெய்வது போல இருக்கும் இலங்கை குடிமக்களுக்கு, அவர்கள் அரசு கொடுக்கும் பரிசு என்ன என்பதனை காலம் தீர்மானிக்கும்.

இலங்கை எவ்வாறான கடன் மீழ்சீரமைப்பிற்கு தயாராகிறது என்பதனை இதுவரை தெரிவிக்கவில்லை, 87 பில்லியன் கடனினை எவ்வாறு தீர்க்கவுள்ளது?

debt swap 1:1 அல்லது 1:2 என்பது கூட தெரிவிக்கபடவில்லை.

நாடுகளின் கடன் மறுசீரமைப்பு தெரியவில்லை, ஆனால் நிறுவனங்கள் தமது கடன் மறு சீரமைப்பிற்கு 1:1 என்றால் $100 கடனிற்கு $100 செலுத்துவது 1:2 என்றால் $100 கடனிற்கு $200 செலுத்துவது.

ஏற்கனவே 87 பில்லியன் கடன் நாட்டின் மொத்த தேசிய வருமானத்தில் 131% இந்த 87 பில்லியனை 1:2 என செலுத்துவதாயின் 174 பில்லியன் கடனாகிவிடும், அது தற்போதய கடனினை விட இரட்டிப்பானது.

இந்த கடன் சுமைகள் அனைத்தும் மக்கள் மேலேயே சுமத்தப்படும், ஆரம்பத்தில் 10 வருட பணமுறியினை பயன்படுத்தி கடன் மீழழிப்பு செய்யப்படும் என கூறப்பட்டது, இலங்கையின் கிரடிட் தரம் தாழ்வாக உள்ள நிலையில் முதலீட்டாளர்கள் எவ்வாறு ஆர்வம் காட்டுவார்கள்? இலங்கை பணமுறியில் முதலிட? அல்லது அதிக வட்டி செலுத்த வேண்டும் (ஆபத்தான முதலீடு).

வட்டி அதிகம் செலுத்தினால் ஒரு கட்டத்தில் மீண்டும் இலங்கை கடன் செலுத்த முடியா முறிவு நிலைக்குள்ளாகும் (குறைந்த கால முதிர்ச்சி கடன்), உதாரணமாக 30 வருட வீட்டுக்கடனை 10 வருடத்திற்குள் செலுத்துவதென்றால் மீள செலுத்தும் மாதாந்த கட்டணம் அதிகரிக்கும் அதனை போல ஒரு நிலைதான்.

இலங்கை தொடர்ந்தும் கடன் வாங்கி கடன் செலுத்தி ஒரு ஐந்தாறு வருடங்களின் பின்னர் மீண்டும் தற்போதுள்ளதனை விட அதிக கடனுக்கு வட்டி கூட செலுத்தமுடியாமல் தற்போதுள்ள நிலையினை விட இன்னும் மோசமானநிலையில் முறிவடையலாம்.

இதற்கு காரணம் அரசுகள் மட்டுமல்ல அங்குள்ள மக்களின் மனங்களும்தான் காரணம்.

பொதுவாக பார்க்கும் போது இலங்கை இந்த நச்சுவட்டத்திற்குள்ளே தொடர்ந்திருக்க வாய்ப்புள்ளது அல்லது ஏதாவது புரட்சிகரமான மாற்ற்ம் நிகழ வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 27/12/2023 at 08:08, ஏராளன் said:

"கடன் மறுசீரமைப்பு செயல்முறைக்கு நிலையான முன்னேற்றம் மிகவும் முக்கியமானது" என சுசுகி ஒரு ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடன் வாங்கி வயிறு முட்ட சாப்பிட்டாலும் இனவாதத்திற்கு குறைவில்லாத நாடு என்றால் அது சிங்களச் சிறிலங்காதான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் சவாலான சீர்திருத்தங்கள் சர்வதேசத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன - ஜப்பானிய நிதியமைச்சர் 

Published By: VISHNU  12 JAN, 2024 | 03:20 PM

image
 

இலங்கையின் சவாலான சீர்திருத்தங்கள் சர்வதேச சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும், ஜப்பானிய நிதியமைச்சர் Suzuki Shunichi தெரிவித்தார். 

414693262_1113738246658050_8481840203086

இலங்கையின்  பொருளாதாரம்  கணிசமாக முன்னேற்றம் கண்டிருப்பதாகவும் இதற்கு ஜனாதிபதி வழங்கிய சிறந்த தலைமைத்துவத்தை பாராட்டுவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை வியாழக்கிழமை  (11) சந்தித்த ஜப்பான் நிதி அமைச்சர்  Suzuki Shunichi தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தின் முதலாவது மீளாய்வை இலங்கை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதாகவும், இலங்கையின் சவாலான சீர்திருத்தங்கள் சர்வதேச சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும், ஜப்பானிய நிதியமைச்சர் Suzuki Shunichi தெரிவித்தார். 

419231201_335620439429628_38802273699898

இலங்கையின் பொருளாதார நிலைமையில் இந்த சாதகமான முன்னேற்றம் நம்பிக்கைக்குரியது என்றும், இது இலங்கை மீதான உத்தியோகபூர்வ மற்றும் தனியார் கடன் வழங்குநர்களின் சர்வதேச நம்பிக்கையை மேம்படுத்த சாதகமாக இருப்பதாகவும் ஜப்பான் நிதியமைச்சர் குறிப்பிட்டார்.

https://www.virakesari.lk/article/173788

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இடைநிறுத்தப்பட்ட லைட் ரயில்வே திட்டத்திற்கு இலங்கை பணம் செலுத்த வேண்டும் – ஜப்பான்

1.5 பில்லியன் டொலர்கள் ஜப்பானின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படும் லைட் ரயில்வே திட்டத்தை நிறுத்துவது தொடர்பான செலவுகளை ஈடுசெய்யுமாறு இலங்கையிடம் ஜப்பான் கோரிக்கை விடுத்துள்ளது.

ஜப்பான் நிதியமைச்சர் சுசுகி ஷுனிச்சி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி தூதுக்குழுவினரிடம், நிறுத்தப்பட்ட திட்டங்களை மீண்டும் தொடங்குவதற்கு செலவுகளைத் தீர்ப்பது அவசியம் என வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா ஜப்பானிய நிதி அமைச்சரின் செய்தியை எடுத்துரைத்தார், இலங்கை கடன் மறுசீரமைப்பு, IMF திட்டத்தை நிலைநிறுத்துதல் மற்றும் நிறுத்தப்பட்ட முயற்சிகளை மீண்டும் தொடங்குவதற்கு வசதியாக இரத்து செய்யப்பட்ட LRT திட்டத்துடன் இணைக்கப்பட்ட நிலுவைகளை திருப்பிச் செலுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.

https://thinakkural.lk/article/288086

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலகு ரயில் திட்டம் எமது ஆட்சியில் நிச்சயம் ஆரம்பிக்கப்படும் - ஜப்பான் நிதி அமைச்சரிடம் எதிர்க்கட்சி தலைவர் உறுதி

Published By: DIGITAL DESK 3  13 JAN, 2024 | 09:29 PM

image

(எம்.மனோசித்ரா)

ராஜபக்ஷ அரசாங்கத்தில் எவ்வித அடிப்படை காரணிகளும் இன்றி இடைநிறுத்தப்பட்ட இலகு ரயில் திட்டத்தை தமது ஆட்சியில் மீண்டும் ஆரம்பிக்கப்படும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, ஜப்பான் நிதி அமைச்சரிடம் உறுதியளித்துள்ளார்.

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜப்பானிய நிதியமைச்சர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கிடையிலான சந்திப்பின் போதே இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது.

ஜப்பான் தனது பொருளாதாரத்தின் விரைவான தொழில்மயமாக்கல் மூலம் அதன் ஏற்றுமதித் துறையை எவ்வாறு மேம்படுத்த முடிந்தது என்பது உட்பட இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலப்பகுதியில் ஜப்பானின் புனரமைப்பு அனுபவத்திலிருந்து இலங்கை பாடங்களைக் கற்றுக்கொள்வதன் முக்கியத்துவம் பற்றியும் சஜித் பிரேமதாச இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இலகு ரயில் திட்டத்தை திடீரென இரத்துச் செய்வதற்கு முன்னைய ராஜபக்ச அரசாங்கம் எடுத்த தொலைநோக்குப் பார்வையற்ற தீர்மானத்திற்கு தனது வருத்தத்தைத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தமது கட்சியின் கீழ் அமைக்கப்படும் அரசாங்கத்தில் இத்திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என ஜப்பான் நிதியமைச்சரிடம் உறுதியளித்தார்.

ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் அல்லது ஜைக்கா நிறுவனத்திடம் இருந்து பல வருடங்களாக பெற்ற ஒத்துழைப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர் ஜப்பான் நிதி அமைச்சருக்கு நன்றி தெரிவித்தார். ஜப்பானின் வட பகுதியில் ஏற்பட்ட சுனாமியால் பாதிக்கப்பட்ட ஜப்பானிய மக்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/173888

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.