Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக நானை  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

Published By: RAJEEBAN  08 JAN, 2024 | 12:06 PM

image
 

பங்களாதேஷில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய பொதுத்தேர்தலில் பிரதமர் ஷேக் ஹசீனா நான்காவது தடவையாக வெற்றி பெற்றுள்ளார்.

300 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தலில்  223 ஆசனங்களை ஷேக்  ஹசீனாவின் அவாமி லீக் கட்சி வெற்றிபெற்றுள்ளது.

முக்கிய எதிர்கட்சியான பங்களாதேஷ் தேசிய கட்சி தேர்தலை பகிஷ்கரித்தமை குறிப்பிடத்தக்கது.

தேர்தல் ஒரு மோசடி ஏமாற்று நாடகம் என எதிர்க்கட்சி விமர்சித்துள்ளது.

40 வீதமான வாக்காளர்களே வாக்களித்தனர் என உத்தியோகபூர்வ  தகவல்கள் தெரிவிக்கின்ற போதிலும் வாக்களித்தவர்களின் எண்ணிக்கை இதனை விட குறைவு என கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

2018 பொதுத்தேர்தலில் 80 வீதமானவர்கள் வாக்களித்திருந்தனர்.

https://www.virakesari.lk/article/173396

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வங்காளதேசம்: : 5 ஆவது முறையாக பிரதமராகிறார் ஷேக் ஹசீனா

வங்காளதேச நாட்டில் பாராளுமன்ற தேர்தல் நேற்று நடைபெற்றது. எதிர்க்கட்சிகள் தேர்தலை புறக்கணித்த நிலையில் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்றது.

தேர்தல் முடிந்ததும் உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருந்த போதே ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி 50 சதவீத இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

இதனால் ஷேக் ஹசீனா ஐந்தாவது முறையாக வங்காளதேச நாட்டின் பிரதமராக பொறுப்பேற்க இருக்கிறார்.

300 இடங்களில் 264 இடங்களுக்கான முடிவு அறிவிக்கப்பட்டபோது ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி 204 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. அதன் கூட்டணி கட்சியான ஜதியா கட்சி 9 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது.

Capture-4.jpg

இந்தியாவின் அண்டை நாடான வங்காளதேசத்தில் மொத்தம் 350 தொகுதிகள் உள்ளன. இதில் 50 தொகுதிகளுக்கு அரசாங்கத்தால் பெண் எம்.பி.க்கள் நியமிக்கப்படுவர். எனவே 300 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறும். ஆனால் ஒரு வேட்பாளர் மரணம் அடைந்ததால் மீதமுள்ள 299 தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தேர்தலை நியாயமான முறையில் நடத்த ஒரு நடுநிலை அரசாங்கத்தை நிறுவ வேண்டும். அதன் தலைமையில் தேர்தலை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. ஆளும் அவாமி லீ கட்சி தலைமையிலான அரசாங்கம் அதனை ஏற்கவில்லை.

இதனால் பிரதான எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசியவாத கட்சி நாடு தழுவிய போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தது. மேலும் இந்த தேர்தலை புறக்கணிப்பதாகவும் அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முன்னாள் பிரதமரும், பங்களாதேஷ் தேசியவாத கட்சி தலைவருமான கலீதா ஜியா (வயது 78) வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் நாடு முழுவதும் வன்முறையில் ஈடுபட்டனர். இந்த வன்முறையில் வாக்குச்சாவடி மையங்களாக அமைக்கப்பட்ட 5 பள்ளிக்கூடங்களுக்கு தீ வைக்கப்பட்டது. மேலும் பல்வேறு இடங்களில் கலவரம் வெடித்தது.

இந்த பதற்றத்துக்கு மத்தியில் நேற்று பொதுத்தேர்தல் நடைபெற்றது. எனவே தேர்தலை அமைதியான முறையில் நடத்த நாடு முழுவதும் பொலிஸார், இராணுவத்தினர் என சுமார் 7½ இலட்சம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

https://thinakkural.lk/article/287355

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிரபல கிரிக்கெட் வீரர் சாகிப் அல் கசன் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டிள்ளார். 

இவர் வாக்களிப்புக்கு முன்னர் தனது ரசிகர் ஒருவருக்கு அடித்துபோட்டாராம் என்று ஒரு செய்தி/காணொளி பரபரப்பாக ஓடி திரிகின்றது. 

கிரிக்கெட் துறையில் பிரகாசித்தது போல் அரசியலிலும் உலக அளவில் பிரகாசிப்பாரோ சாகிப்?



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.