Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
May be an image of 1 person, tree and text
 
 
மேஜர் சோதியா!
மேஜர் சோதியா என்றவுடன் நெடிதுயர்ந்த தோற்றம்,வெள்ளை
நிறம், சிரித்த முகம் இவைதாம் எம்
நினைவுக்கு வரும்.நான் முதன் முதலில்
சோதியாவை மணலாற்றுக் காட்டில்
புனிதபூமியிற்தான் பார்த்தேன்.நான்
தலைவரோடு வாழ்ந்த அந்த மறக்க
முடியாத நாட்களின் போதுதான்
அடிக்கடி அவரைப் பார்க்க முடிந்தது.
"பெண் விடுதலை இல்லையேல்
மண் விடுதலை இல்லை".
பெண்கள் விடுதலை பெறாமல்
தேசவிடுதலை முழுமை பெறாது
என்பதனால்தான் மகளிர் படையணியை
உருவாக்கினார் தேசியத் தலைவர்
அவர்கள்.
"பெண்கள் சம உரிமை பெற்று
ஆண்களுடன் கௌரவமாக வாழக்கூடிய
புரட்சிகர சமுதாயமாக தமிழீழம் அமைய
வேண்டும் என்பது எனது ஆசை" என்றார்
தேசியத் தலைவர் அவர்கள்.
அந்த சிந்தனையின் வெளிப்பாடாகவே
1985 ஆம் ஆண்டு பெண் போராளி
களுக்கான பயிற்சிப் பாசறை
தமிழ்நாட்டிலே ஆரம்பிக்கப் பட்டது.
தமிழ்நாடு திண்டுக்கல் சிறுமலைப்
பகுதியில் 1985 ஆகஸ்ட் மாதம்
18 ஆம் திகதி பெண் போராளிகளுக்கான பயிற்சிப் பாசறை
ஆரம்பித்து வைக்கப்பட்டது.அந்த முகாம்
மகளிர்க்கான முதலாவது முகாம்.
ஆனால் அது தமிழ்நாட்டிலே
நடைபெற்ற புலிகளின் ஏழாவது பயிற்சி
முகாம் ஆகும்.
யாழ் மாவட்டம் வடமராட்சி
நெல்லியடியை பிறப்பிடமாகக் கொண்ட
மைக்கேல் வசந்தி அந்தப் பயிற்சி
முகாமிலேயே சோதியாவாக மாற்றம்
பெற்றார்.83 ஆம் ஆண்டின் கறுப்பு
ஜூலையே இளைஞர்களை மட்டுமின்றி
இளம் பெண்களையும் விடுதலைப்
போராட்டம் பற்றி சிந்திக்க வைத்தது.
விடுதலை இயக்கங்களோடு தங்களை
இணைத்துக் கொண்டு போராட
முன்வந்தவர்களில் ஒருவரே
மைக்கல் வசந்தி.இவரது சகோதரரும்
இவரும் ரெலோ இயக்கத்தில் இணைந்து
தமிழ்நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.
ரெலோ இயக்கத்தினர் ஏனோ
தெரியவில்லை, பெண்களுக்கு பயிற்சி
கொடுக்க முன்வராது அவர்களை
கைவிட்டிருந்தனர்.தமிழ்நாட்டில்
கைவிடப்பட்டிருந்த நிலையில் இருந்த
பெண்கள் பற்றி தேசியத்தலைவர்
அறிந்து கொண்டார்.அவர்களையும்
விடுதலைப் புலிகள் அமைப்பில்
இணைத்துக் கொள்ள எண்ணி
கேணல் சங்கரையும்,ரகுவப்பாவையும்
அனுப்பி எங்கள் அமைப்பில் இணைந்து
கொள்ள விரும்பியவர்களை அழைத்து
வரும்படி ஏற்பாடு செய்தார்.அப்படி
அழைத்து வரப்பட்டவர்களில் ஒருவர்தான் மைக்கேல் வசந்தி.
இயக்கத்தில் இணைந்து
கொள்வதற்காக வந்திருந்த பெண்களுக்காக சென்னை
திருவான்மியூர் பகுதியில் வீடொன்றில்
வாடகைக்கு எடுத்து தங்க வைக்கப்
பட்டிருந்தார்கள்.தேசியத்தலைவர்
அவர்களினதும், திருமதி அடேல்
பாலசிங்கம் அவர்களினதும் கண்காணிப்பில் இவர்கள் பராமரிக்கப்
பட்டார்கள்.பயிற்சிப் பாசறைக்குச்
செல்வதற்கு முன் அரசியல் வகுப்புக்கள்,
கராத்தே பயிற்சி என்பன நடத்தப்
பட்டன.
1985 ஆகஸ்ட் மாதம் 18 ஆம் நாளில்
ஆரம்பிக்கப்பட்ட மகளிர்க்கான முதலாவது பயிற்சிப் பாசறை தான்
சோதியாவை புடம் போட்டு எடுத்தது.
தாதியர் பயிற்சியில் ஈடுபாடு
கொண்டிருந்த சோதியா அந்த பயிற்சி
முகாமில் ஒரு போராளியாக மட்டுமன்றி
மருத்துவதாதியாகவும் பணி
புரிந்தவர்.
ஓட்டத்தில் தொடங்கி,கயிறு ஏறுதல்,
மலை ஏறுதல் என்றெல்லாம் கடுமையான பயிற்சிகளை முடித்துக்
களைத்துப் போய் வந்தவர்களுக்கெல்லாம்
அக்காவாக,தாயாக,மருத்தவச்சியாக
செயற்பட்டவர் சோதியா.
காய்ச்சல்,வயிற்றுவலி,கைகால் வலி
என்று வேதனைப் பட்டவர்க்கெல்லாம்
தனது களைப்பும் பாராது ஓடி ஓடி சேவை
செய்தவர் சோதியா.சாப்பிடுவதற்குக்கூட
நேரமின்றி சக போராளிகளுக்கு
மருந்துகள் கொடுப்பதிலும் அவர்களைப்
பராமரிப்பிலும் முகம் சுளிக்காது
செயற்பட்டவர் அவர்.அந்த முகாமிலேயே
பயிற்சியாளர்களினதும்,தேசியத்
தலைவர் அவர்களினதும் பாராட்டைப்
பெற்றவர் சோதியா.
சோதியாவின் பரிவும் இரக்கமும், சக
போராளிகளின் மீதான கவனிப்பும்
அவரது மருத்துவப் பணியும் அவரை
ஒரு தாயாக,நவீன தாதியியல்
முறையை உருவாக்கிய இங்கிலாந்துத்
தாதி புளோரன்ஸ் நைட்டிங்கேல் உடன்
சோதியாவை உருவகப்படுத்தும் அளவுக்கு அவரது பணிகள் இடம்
பெற்றிருந்தன.
தமிழ்நாட்டில் பயிற்சியை முடித்துக்
கொண்டு ஈழத்துக்குத் திரும்பிய
சோதியா சிங்கள,இந்திய இராணுவங்
களுக்கு எதிரானபோர் நடவடிக்கைகளில்
பங்கேற்றார்.89 களின் போது மணலாற்றுக் காட்டிற்குச் சென்று சேர்ந்த
சோதியா அங்கு விடியல் முகாம் அமைத்தல் உட்பட பல பணிகளிலும்
பங்கேற்றார்.திசையறி கருவியின்
உதவியோடு காட்டினுள் நகர்தல்,
கம்பாலா மூலம் சுமைகளைத் தூக்குதல்
என அனைத்து விதமான பணிகளிலும்
தானும் ஒருவராக பங்கேற்று, அவர்கள்
களைப்புற்ற வேளைகளில் அவர்களோடு
உட்கார்ந்து அவர்களுக்கு நம்பிக்கை
ஊட்டியவர்.ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் அனைத்துக் கடமைகளையும் பொறுப்பேற்றுச்
செய்தமை,புதிய போராளிகளை
உருவாக்குதல்,அவரது மருத்துவப்
பணிகள்,அவரது தலைமைத்துவப் பண்பு
என்பனவற்றையும் அவதானித்த
தேசியத் தலைவர் அவர்கள் சோதியாவை மகளிர் படையணியின்
முதற் தளபதியாக நியமனம் செய்தார்.
ஆரம்பத்தில் மருத்துவம்,தொலைத்
தொடர்பு சேவைகள் என செயற்பட்ட
சோதியாவுக்கு தளபதியாக நியமிக்கப்
பட்ட பின்பு பொறுப்புக்கள் அதிகரித்தன.
பெண் போராளிகளின் சகல விதமான
பிரச்சனைகளையும் உடனுக்குடன்
தேசியத் தலைவரின் கவனத்திற்கு
கொண்டு சென்று அனைத்து குற்றம்
குறைகளையும் நிவர்த்தி செய்தார்.
போராளிகள் நோய்வாய்ப்படும்போது
அவர்களுக்கு மருந்து மாத்திரைகள்
கொடுப்பதோடு மாத்திரம் நின்று விடாது
அவர்களுக்கு தைரியம் ஊட்டி அவர்களை எழுந்து நடமாடச் செய்வார்.
மற்றையவர்களுக்கு மருத்துவராக
சேவையாற்றி அவர்களது நோய் அறிந்து
மருத்துவம் பார்த்த சோதியா தனது
உடலில் ஏற்பட்ட நோயைக் கண்டறிய
முடியாமற் போனமை பெரும் துயரமான
சம்பவமே.சாதாரண காய்ச்சல் என்று
எண்ணி மாத்திரைகளோடு வாழ்ந்த
அவரை நோயின் தாக்கம் அதிகரித்த
போது தேசியத்தலைவரின் பணிப்பிற்கு
அமைய சக போராளிகள் வல்வை ஊறணி மருத்துவ மனைக்கு அழைத்துச்
சென்றார்கள்.அங்கு மேற்கொள்ளப்பட்ட
சிகிச்சைகள் பலனளிக்காது அவர்
மரணத்தைத் தழுவிக் கொண்டார்.
சக போராளிகளோடு நடந்து சென்றவரை
உயிரற்ற உடலாக சவப்பெட்டியில்
சக போராளிகள் தோளில் சுமந்து வந்த
போது தேசியத் தலைவர் உட்பட
புனிதபூமியில் வாழ்ந்த நாம் அனைவருமே ஆற்ற முடியாத துயரில்
மூழ்கிப் போனோம்.
இறுதிக் கணங்களில் சக போராளி
களிடம் தனது உடல் புனிதபூமியிலே
விதைக்கப்பட வேண்டும் என தனது
இறுதி விருப்பத்தைத் தெரிவித்திருந்
தார்.
அதற்காக புனிதபூமியில் குழியும்
தயார் செய்யப்பட்டிருந்தது.சோதியாவின்
உடலோடு புனிதபூமிக்கு வந்த
சோதியாவின் உறவினர் ஒருவர்
தேசியத்தலைவரிடம் ஒரு வேண்டுகோளை முன்வைத்தார்.
சோதியாவின் பெற்றோர்,உறவினர்கள், ஊரவர்கள்
சோதியாவின் உடலுக்கு அஞ்சலி
செலுத்த வேண்டும்.அவர்களது குடும்பசேமக்காலையில் நல்லடக்கம்
செய்யப்பட வேண்டும்.அதற்கான
சந்தர்ப்பத்தைத் தாருங்கள் என்று
கேட்டுக்கொண்ட போது எதுவித மறுப்பும்
இன்றி சம்மதம் தெரிவித்ததோடு
அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளு
மாறும் போராளிகளிடம் பணித்தார்
தலைவர்.
புனிதபூமியில் சோதியாவின் வித்துடலுக்கு இறுதி மரியாதை
செய்த பின், தேசியத்தலைவர் அவர்கள்
பூனிதபூமியில் இருந்து ஒரு பிடி மண்ணை எடுத்து பெட்டியினுள் இட்டு
சோதியாவை வழியனுப்பி வைத்தார்.
சோதியாவின் வித்துடல் சக பெண்
போராளிகளால் எடுத்துச் செல்லப்பட்டு
வடமராட்சியின் சில பகுதிகளுக்கு
ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட பின்
கரவெட்டி புனித அந்தோனியார்
ஆலயத்தில் மத நிகழ்வுகள் இடம்பெற்ற
பின்,சோதியா குடும்பத்தினர்களுக்கான
சேமக்காலையில் அவரது வித்துடல்
நல்லடக்கம் செய்யப்பட்டது.
சோதியாவுக்கு நினைவுக் கல்
வடமராட்சி எள்ளங்குளம் துயிலும்
இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
மேஜர் சோதியாவின் நினைவாக
14.07.96 இல் சோதியா படையணி
உருவாக்கப்பட்டது.

 
  • கருத்துக்கள உறவுகள்

 வீரவணக்கங்கள். . .

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.