Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் சுதந்திரதினம் தமிழர்களுக்குக் கறுப்புநாள்!

1137048455.jpg

பேரணிக்கு அழைக்கின்றது யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம்

(ஆதவன்)

இலங்கையின் சுதந்திரதின நாளை கறுப்பு நாளாகப் பிரகடனப்படுத்துவதுடன், அன்று பேரணி ஒன்று முன்னெடுக்கப்படும் என்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 4ஆம் திகதி கிளிநொச்சி, இரணைமடுச் சந்தியில் இருந்து டிப்போச் சந்தி வரையில் நடத்தப்படவுள்ள பேரணியில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது. மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
இலங்கையின் சுதந்திரத்துக்கு முன்னர் இருந்தே தமிழர் தேசம் மீதான ஆக்கிரமிப்புகள் ஆரம்பமாகியிருந்தன. இந்த இனவழிப்புச் செயன்முறை 2009ஆம் ஆண்டு ஈழப்போர் மௌனிக்கப்பட்ட பின்னர் தமிழர் தாயகத்தைச் சூறையாடுவதில் தீவிரநிலை கொண்டுள்ளது. இந்தப் பின்னணியில் இலங்கையின் சுதந்திர தினத்தை கறுப்பு நாளாகப் பிரகடனப்படுத்தி, பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்து பேரணி ஒன்றை முன்னெடுக்கவுள்ளோம்.
வடக்கு - கிழக்கு தமிழர் தாயகம் என் பதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதோடு, தமிழர் தாயகத்தின் மீதான திட்டமிட்ட சிங்கள - பௌத்த குடியேற்றங்கள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகள் உடனடியாக நிறுத்தப்பட்டு தமிழர் தாயகத்தின் நில ஒருமைப்பாடு பாதுகாக்கப்படவேண்டும். ஈழத்தமிழர்கள் தங்களைத் தாங்களே ஆள்வதற்கும் வழிநடத்துவதற்கும் சுய நிர்ணய உரிமை உடையவர்களாவர் என்பதை ஏற்று ஈழத்தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும்.
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பான முயற்சிகள் யாவும் திம்புக் கோட்பாட்டை அடியொற்றியே முன்னெடுக்கப்பட வேண்டும். சிறிலங்கா ஒற்றையாட்சி அரசமைப்புக்குட்பட்ட 13ஆம் திருத்தத்தை முற்றாக நிராகரிக்கின்றோம்.
திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள், இராணுவப் பிரசன்னம், சிங்கள பௌத்தமயமாக்கல், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதி, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை போன்றவற்றுக்கான தீர்வுகள் தாமதமேதுமின்றி வழங்கப்பட வேண்டும் - என்றுள்ளது.
 

https://newuthayan.com/article/இலங்கையின்_சுதந்திரதினம்_தமிழர்களுக்குக்_கறுப்புநாள்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுதந்திர தினத்தை கரிநாளாகப் பிரகடனப்படுத்தி போராட்டத்திற்கு அழைப்பு!

kugenFebruary 3, 2024
 
vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv.jpg

 

இலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி 4ம் திகதியை கரிநாளாகப் பிரகடனப்படுத்தி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் கிளிநொச்சியில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள எதிர்ப்புப் போராட்டத்துக்கு வலுச்சேர்க்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

ஈழத்தமிழர்களின் போராட்ட வரலாற்றில், தியாகச் சாவைத் தழுவிக்கொண்ட முதல் மனிதன் என்னும் மரியாதைக்குரிய திருமலை நடராஜன் அவர்கள், 1957.02.04 ஆம் திகதியன்று நடைபெற்ற இலங்கையின் சுதந்திர தினத்துக்கு எதிர்ப்பைத் தெரிவித்து, திருமலையில் ஏற்றப்பட்டிருந்த சிங்கக்கொடியை அகற்றி கறுப்புக்கொடியை ஏற்றியமைக்காக சிங்களப் பொலிசாரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டு 67 வருடங்கள் கடந்தும், இந்த நாட்டில் தமிழர்களின் இறைமை இன்றளவும் அங்கீகரிக்கப்படவில்லை.

தமது பூர்வீக மண்ணில் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டுவரும் தமிழ்த்தேசிய இனத்தின் இருப்பை நிலைநிறுத்த, அரசுக்கும் அரச கட்டமைப்புகளுக்கும் எதிராக எல்லாவழிகளிலும் போராடவேண்டிய நிர்ப்பந்தத்திலுள்ள எமது மக்களது அக உணர்வுகளின் பிரதிபலிப்பாகவும், எமது மக்களின் குரலாகவுமே யாழ்.பல்கலைக்கழக மாணவர்களால் இந்த எதிர்ப்புப் போராட்டம் ஒழுங்கமைக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் அபிலாசைகள் நிறைவேற்றப்படாதவரை, ஈழத்தமிழர்களை இறைமையுள்ள தேசிய இனமாக இலங்கைத் தேசம் அங்கீகரிக்காதவரை, இந்த நாட்டின் சுதந்திர தினம் தமிழ் மக்களின் கரிநாளே என்பதை மீள வலியுறுத்தும் இந்தப் போராட்டத்தில், அரசியற் கட்சி மற்றும் கொள்கை வேறுபாடுகள் எவையுமற்று எமது இனத்தின் உரிமைக்கான ஏகோபித்த குரலாக எல்லோரும் இணைந்து, இதனை ஒரு மக்கள் திரட்சி மிக்க போராட்ட வடிமாக எழுச்சிபெறச் செய்ய வேண்டுமெனக் கேட்டுநிற்கிறேன். என்றுள்ளது.

https://www.battinews.com/2024/02/blog-post_28.html

  • கருத்துக்கள உறவுகள்
On 1/2/2024 at 12:02, கிருபன் said:

சிறிலங்கா ஒற்றையாட்சி அரசமைப்புக்குட்பட்ட 13ஆம் திருத்தத்தை முற்றாக நிராகரிக்கின்றோம்.
திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள், இராணுவப் பிரசன்னம், சிங்கள பௌத்தமயமாக்கல், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதி, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை போன்றவற்றுக்கான தீர்வுகள் தாமதமேதுமின்றி வழங்கப்பட வேண்டும் - என்றுள்ளது.
 

https://newuthayan.com/article/இலங்கையின்_சுதந்திரதினம்_தமிழர்களுக்குக்_கறுப்புநாள்!

ஸ்ரீதரன் இவர்களது போராட்டத்துக்கு வலு சேர்க்குமாறு கூறுகிறார். ஆனால் மாணவர்களின் கோரிக்கையாக 13 வது திருத்தத்தை ஏற்கமுடியாது என்று கூறி உள்ளனர். ஆனால் ஸ்ரீதரன் மற்ற தமிழ் தலைவர்களுடன் (??) இணைந்து 13 வது திருத்தத்தை அமுல் படுத்துமாறு இந்திய தூதரை அன்மையில் கேட்டு கொண்டுள்ளார் .

 இது அவரது இரட்டை நிலைப்பாடு இல்லையா? மாணவர்களை ஏமாற்ற ஒன்று, மக்களை ஏமாற்ற இன்னொன்று. நல்ல இருக்குது. 

  • கருத்துக்கள உறவுகள்

அம்பாறையில் கறுப்பு தின போராட்டம் 

04 FEB, 2024 | 12:06 PM
image

இலங்கையின் 76வது குடியரசு தினம் இன்றைய தினம் (04) அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அம்பாறையில் கறுப்பு தின போராட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது.  

இன்றைய நாளை கறுப்பு தினமாக அனுஷ்டிக்குமாறு கோரி வடக்கு, கிழக்கு பல்கலைக்கழக மாணவர் சமூகத்தினர், சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் அழைப்பு விடுத்தன. அதன் அடிப்படையிலேயே இந்த கறுப்பு தின போராட்டம் இடம்பெறுகிறது.

இந்த போராட்டத்தில் சிவில் சமூக அமைப்பினர், காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகள், பொதுமக்கள், தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகள் என்பன இணைந்து பதாகைகளை ஏந்தி, கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

https://www.virakesari.lk/article/175510

  • கருத்துக்கள உறவுகள்

kilinochi-protest.png?resize=750,375&ssl

கிளிநொச்சியில் பொதுமக்களின் பேரணி மீது நீர்த்தாரை பிரயோகம்!

இலங்கையின் 76ஆவது சுதந்திரதினத்தை தமிழர்களின் கரிநாளாக பிரகடனப்படுத்தி கிளிநொச்சியில் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த, கரிநாள் பேரணியில் பொதுமக்கள் மீது பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மோற்கொண்டதால் பதற்றமான சூழ்நிலை நிலவியதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி பொது முடக்கத்துக்கும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் அழைப்பு விடுத்திருந்தனர்.

இந்த நிலையில், இன்று கொழும்பில் இடம்பெற்ற சுதந்திரதின நிகழ்வுகளுக்கு எதிராக கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்டு அடக்க முற்பட்டனர்.

தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தமித்தேசிய அரசியல் ஆதரவாளர்களும் போராட்டத்தில் பங்குபற்றினர். அத்துடன் பொது மக்கள் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுதந்திர தினத்திற்கு எதிராக வடக்கு கிழக்கில் தமிழர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர். பேரணிகளை தடுப்பதற்காக கலகம் அடக்கும் பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.

நீர்த்தாரை, கண்ணீர் புகை குண்டுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தசாப்த்தங்களாக தொடரும் இன பிரச்சினை தீர்க்கப்படாத நிலையில் இலங்கையில் 76ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இலங்கை தீவில் வாழும் தமிழர்கள் தங்களுக்கு மறுக்கப்பட்ட உரிமைகளை மீட்டெடுக்கும் வகையில் இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தியுள்ளனர்.

தமிழர் பிரதேசங்களில் பல இடங்களில் சுதந்திர தின நிகழ்வுக்கு எதிராக பேரணிகள் இடம்பெறுகின்றன.

கொழும்பில் காலி முகத்திடலில் நடைபெற்ற எதிர்கட்சி உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்துக்கொள்ளவில்லை. பொருளாதார நெருக்கடியின்போது இவ்வாறான நிகழ்வுகள் அவசியமற்றவை என எதிர்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன.

தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் இந்நிகழ்வை முற்றாக புறக்கணித்துள்ளன. மலையக தமிழ் கட்சிகள், முஸ்லிம் கட்சிகள் ஆகியவற்றின் சில பிரதிநிதிகள் இந்நிகழ்வில் பற்குபற்றியுள்ளனர்.

இதேவேளை யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் இடம்பெறவிருந்த சுதந்திர தின எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துக்கொள்ளும் 5 பேருக்கு எதிராக பொலிஸாரினால் தடை உத்தரவு பெறப்பட்டது.

இதற்கமைய, யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் செயற்பாட்டாளர்களான லீலாதேவி, கலாரஞ்சினி, கோகிலவாணி மற்றும் சிவில் செயற்பாட்டாளர் ஒருவர் அடங்கலாக ஐவருக்கு எதிராகவே தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது.

https://athavannews.com/2024/1368362

  • கருத்துக்கள உறவுகள்
On 1/2/2024 at 07:32, கிருபன் said:

இலங்கையின் சுதந்திரதினம் தமிழர்களுக்குக் கறுப்புநாள்!

IMG-5759.jpg

  • கருத்துக்கள உறவுகள்

கரி நாள் போராட்டம் - கிளிநொச்சியில் பல்கலைக்கழக மாணவர்கள் நால்வர் கைது

04 FEB, 2024 | 01:08 PM
image

இலங்கையின் சுதந்திரதினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி கிளிநொச்சியில் பல்கலைகழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துவரும் அதேவேளை நான்கு மாணவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாரின் கடும் பாதுகாப்பிற்கு மத்தியில் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்ட மாணவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி இரணைமடு சந்தியிலிருந்து யாழ்பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் போராட்டம் இன்று ஆரம்பமானது.

https://www.virakesari.lk/article/175512

  • கருத்துக்கள உறவுகள்

பல்கலைக்கழக மாணவர்களை காப்பாற்ற சென்றவேளை என் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது : பெண் பொலிஸார் இல்லாமல் பெண்கள் இழுத்துச் செல்லப்பட்டனர் - சிறீதரன்

Published By: RAJEEBAN   04 FEB, 2024 | 05:49 PM

image

பல்கலைகழக மாணவர்களை பொலிஸார் தாக்கியவேளை நான் அவர்களை மீட்கச்சென்றவேளை பொலிஸார் ஒருவர் என்மீது தாக்குதல் நடத்தியிருந்தார் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

இன்றைய நாள் பொலிஸார் தாங்கள் நடந்துகொண்ட விதத்தின் மூலம் இலங்கை அரசாங்கத்தின் அராஜகத்தை கோரமுகத்தை சர்வதேச சமூகத்தின் கண்களிற்கு கொண்டுவந்திருக்கின்றார்கள் எனவும் அவர்  குறிப்பிட்டுள்ளார்.

பல்கலைகழக மாணவர்கள் மீதும் பொதுமக்கள் மீதும் பொலிஸார் மிகவும் காட்டுமிராண்டித்தனமான முறையில் நடந்துகொண்டனர் பல மாணவர்கள் காவித்தூக்கிச் செல்லப்பட்டனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெண் பொலிஸார் இல்லாமல் பெண்கள் இழுத்துச் செல்லப்பட்டார்கள் தூக்கி வானிலே வீசப்பட்டார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்று கிளிநொச்சியில் ஊர்வலம் வருகின்றபோது தண்ணீர்தாரை வாகனத்துடன் கண்ணீர்புகை குண்டுகளை வீசிய பொலிஸார் மிகவும் மிலேச்சத்தனமாக அடாவடியாக நடந்துகொண்டார்கள்.

மிகவும் ஜனநாயக அடிப்படையில் தனக்கிருக்கின்ற மனித உரிமைகளின் அடிப்படையில் போராட்டத்தை முன்னெடுத்த பல்கலைகழக மாணவர்கள் பொதுமக்கள் மீது மிகவும் மோசமாகவும் காட்டுமிராண்டித்தனமாகவும் பொலிஸார் நடந்துகொண்டமை வரலாற்றில் மீண்டும் ஒருமுறை இலங்கையில் பொலிஸாரின் அடாவடித்தனத்தை அடையாளப்படுத்தியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பலமாணவர்கள் அடித்து துன்புறுத்தப்பட்டார்கள் இதுவெல்லாம் நடைபெற்ற பின்னர் ஐந்து மாணவர்கள் கைதுசெய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்ட விடயத்திலே அந்த மக்கள் 3-30 மணிவரை காத்திருந்தார்கள் அவர்களை விடுதலை செய்யும்வரை வெளிக்கிடமாட்டோம் என காத்திருந்தார்கள் நண்பர் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதனும் பல்கலைகழக மாணவர்களும் பொலிஸ் நிலையம் சென்று அவர்களை விடுவித்துக்கொண்ட வந்த பின்னர்தான் இந்த போராட்டம் முடிவிற்கு வந்திருக்கின்றது எனவும் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

பல்கலைகழக மாணவர்களை பொலிஸார் தாக்கியவேளை நான் அவர்களை மீட்கச்சென்றவேளை பொலிஸார் ஒருவர் என்மீது தாக்குதல் நடத்தியிருந்தார் அதற்குரிய வீடியோ ஆதாரங்கள் உள்ளன நான் அதனை உரிய நேரத்தில் வெளியிடுவேன் எனவும் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/175555

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.