Jump to content

உல்ஃப்காங் பௌலி: ஐன்ஸ்டீன் தனது அறிவுசார் வாரிசாக அறிவித்த சிறந்த இயற்பியலாளர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
ஐன்ஸ்டீன் தனது அறிவுசார் வாரிசாக அறிவித்த இயற்பியலாளர் சாதித்தது என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், டாலியா வென்ச்சுரா
  • பதவி, பிபிசி முண்டோ
  • 1 பிப்ரவரி 2024

உல்ஃப்காங் பௌலி 20ஆம் நூற்றாண்டில் இயற்பியல் துறையில் மிகவும் சிறந்து விளங்கிய ஆராய்ச்சியாளர்களில் ஒருவர். இருப்பினும் இயற்பியல் துறையில் அவர் வாழ்ந்த காலகட்டத்தில் இருந்த மற்றவர்களைப் போல் அவர் நன்கு அறியப்படவில்லை.

இயற்கையின் புதிய விதி ஒன்றை அவர் கண்டுபிடித்ததற்காக அவருக்கு 1945இல் நோபல் பரிசு வழங்கப்பட்டது. அவரது சகாக்களின் ஆய்வுகள் மற்றும் கோட்பாடுகள் பற்றிய அவரது கடுமையான விமர்சனங்களைக் கடந்து அவரை சமமாகப் பாராட்டினர். மேலும், அவர்கள் அவரை "இயற்பியலின் மனசாட்சி" என்று அழைத்தனர் என்ற தகவல்கள் தொடர்ந்து அவர் குறித்துப் பேசும்போது மேற்கோள் காட்டப்படுகின்றன.

மேலும், தெளிவற்ற நியூட்ரினோ துகள் இருப்பதை உறுதி செய்வதற்கு பல தசாப்தங்களுக்கு முன்பே அப்படி ஒன்று இருப்பதாக அவர் கணித்திருந்தார். "நான் ஒரு பயங்கரமான உண்மையைக் கண்டறிந்துள்ளேன். நான் யாரும் கண்டுபிடிக்க முடியாத ஒரு துகள் குறித்த தகவல்களை வெளிப்படுத்தியுள்ளேன்," என்று அவர் அப்போது அறிவித்தார்.

இது எப்போதோ ஒருமுறை சாத்தியமானதுதான். ஆனால் 25 ஆண்டுகளுக்குப் பிறகுதான் அது உண்மையில் சாத்தியமாயிற்று. அது போன்ற தெளிவற்ற துகள்கள் இன்னும் பிரபஞ்சத்தில் நம்பமுடியாத அளவிற்கு ஏராளமாக இருந்தாலும், கண்டறியக் கடினமாக இருக்கும் கண்ணுக்குத் தெரியாதவற்றைப் போலவே இருக்கின்றன.

அவரது சகாக்கள் "பௌலி விளைவு" என்று அவரது பெயரை வைத்தே மூடநம்பிக்கையாக ஒரு கருத்துருவை உருவாக்கினர். வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமென்றால், அவர் அருகில் இருந்தபோது, சில அழிவுகள் ஏற்பட்டன என்பதால் அவர் ஒரு துரதிர்ஷ்டசாலி என்பது போன்று அவருடன் இருந்தவர்கள் கருதினர்.

பல ஆண்டுகளாக, அவர் அருகில் இருந்தாலே துரதிர்ஷ்டவசமானது எனக் கருதப்படுவதற்கு என்ன காரணம் என்றால் அவர் இருந்த போதெல்லாம் ஆய்வகத்தில் இருந்த சோதனை உபகரணங்களில் ஏற்பட்ட தோல்விகள் பற்றிய நிகழ்வுகள் பரப்பப்பட்டன என்பதுதான். இது அவரது பெரும்பாலான சக ஊழியர்களுக்கு ஒரு திசை திருப்பலாக இருந்தது. இந்நிலையில், சிலர் அவரைத் தங்கள் ஆய்வகங்களுக்குள் நுழையவே தடை விதித்தனர்.

ஆனால் அது உண்மை என்று அவரும் நம்பினார். மேலும் 1948இல் பிரஸ்ஸல்ஸில் நடந்த ஒரு சர்வதேச மாநாட்டில் அவர் கலந்து கொண்டபோது அவர்கள் அவரைப் பற்றி வெளிப்படையாகப் பேசிய நகைச்சுவைப் பேச்சுக்கள், அவரே அதை மேலும் அழுத்தமாக நம்ப வழிவகுத்தது.

இத்தாலிய இயற்பியலாளர் பெப்போ ஒச்சியாலினி ஒரு நடைமுறையைக் கொண்டு வந்தார். அதனால் பௌலி தனது ஆய்வகத்திற்குள் நுழைந்தபோது கூரையில் இருந்து ஒரு விளக்கு கீழே விழுந்து உடைவதைப் போல் ஓர் அமைப்பை ஏற்படுத்தினார். ஆனால் பௌலி அங்கே இருந்தபோது சாதனங்கள் வழக்கமாக பாதிப்படைந்ததைப் போலவே அந்தச் செய்முறையும் தோல்வியடைந்தது.

அதேநேரம், பௌலி செல்வாக்கு மிக்க சுவிஸ் மனநல மருத்துவர் கார்ல் ஜங்குடன் எதார்த்தத்தின் தன்மையைப் பற்றி நீண்ட ஆய்வு செய்து கொண்டிருந்தார். மேலும் அறிவியலுக்கான ஆதாரமாகத் தொடர்ந்து விஞ்ஞானிகளுடனான கடிதப் பரிமாற்றத்தின் ஏராளமான மரபுகளையும் அவர் விட்டுச் சென்றார்.

 

ஐன்ஸ்டீன் வட்டத்திற்குள் உல்ஃப்காங் பௌலியின் குடும்பம்

வுல்ஃப்காங் பாலி

பட மூலாதாரம்,CERN

படக்குறிப்பு,

பௌலி பிறந்து 20 மாதங்களில் அவரது தாயுடன் இருந்தபோது எடுத்த படம்.

பௌலி வியன்னாவில் 1900ஆம் ஆண்டு பிறந்தார். அந்த ஆஸ்திரிய தலைநகரம் கலாசாரம் மற்றும் அறிவியல் படைப்பாற்றலின் மையமாக இருந்தது.

அவரது பெற்றோர் ஐரோப்பாவில் வளர்ந்து வரும் யூத எதிர்ப்பு காரணமாக கத்தோலிக்க மதத்திற்கு மாறி மதச் சார்பற்ற யூதர்களாக இருந்தனர். இருப்பினும், நாஜிக்களின் நடவடிக்கைகளில் இருந்து தப்பும் நோக்கத்துடன் அவர் குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு இடம் பெயரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

அவரது இயல்பான திறமைகளுக்கும் மேலாக, அவரைச் சுற்றியிருந்த அனைத்தும் அவரது அறிவுக்கு ஊக்கமளித்தன. அவருடைய அப்பா மருத்துவ வேதியியல் துறையில் ஒரு மரியாதைக்குரிய பல்கலைக்கழக பேராசிரியராக இருந்தார். இந்நிலையில், அவரது அம்மா பெர்தா கமிலா ஷூட்ஸ், ஒரு பிரபல எழுத்தாளர், சோசலிஸ்ட் மற்றும் பெண்ணியவாதியாக இருந்தார்.

மேலும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் தத்துவஞானி எர்ன்ஸ்ட் மாக் போன்ற ஆளுமைகளை அவரது சமூக வட்டம் உள்ளடக்கியதாக இருந்தது.

பள்ளியில், பௌலி கணிதம் மற்றும் இயற்பியலில் மிகச் சிறந்த மாணவராக விளங்கினார். மற்ற பாடங்களில் அவர் அதிக ஆர்வம் காட்டவில்லை. மேலும் 18 வயதில் அவர் மியூனிச் பல்கலைக்கழகத்தில் கோட்பாட்டு இயற்பியலாளர் அர்னால்ட் சோமர்ஃபெல்டுடன் படிக்கச் சென்றார். அவர்தான் பௌலிக்கு கனவு வழிகாட்டியாக இருந்தார். அவரது மாணவர்களில் 6 பேர் நோபல் பரிசு பெற்றவர்கள்.

 

ஐன்ஸ்டீன் மறுத்த கட்டுரையை எழுதிய பௌலி

வுல்ஃப்காங் பாலி

பட மூலாதாரம்,CERN

படக்குறிப்பு,

இயற்பியலாளர் உல்ஃப்காங் பௌலிக்கு (1900-1958), ‘விலக்கு கொள்கையை’ கண்டுபிடித்ததற்காக இயற்பியலுக்கான நோபல் பரிசு அளிக்கப்பட்டது.

பௌலியின் கணிதத் திறனால் சோமர்ஃபெல்ட் மிகவும் ஈர்க்கப்பட்டார். மதிப்புமிக்க கணித அறிவியல் கலைக் களஞ்சியத்திற்கு சார்பியல் கோட்பாடு பற்றிய கட்டுரையை எழுதுவதற்கான அழைப்பை ஐன்ஸ்டீன் நிராகரித்தபோது, அதைச் செய்யும்படி அவரிடம் கேட்டார்.

சார்பியல் கோட்பாடு புரட்சிகரமானது மட்டுமல்ல - அது இன்னும் புதியதாக இருந்தது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்; அந்த நேரத்தில் பெரும்பாலான இயற்பியலாளர்களே கூட அதை நன்கு அறிந்திருக்கவில்லை.

இயற்பியலாளர் ஹான்ஸ் வான் பேயர் மெட்டானெக்ஸஸில் வலியுறுத்துவது போல, உயர்நிலைப் பள்ளியில் இருந்து புதிதாக வெளியேறும் மாணவரிடம் விமர்சன மதிப்பாய்வை உருவாக்கும் பணியை ஒப்படைப்பது விவேகமற்றது. ஆனால், சோமர்ஃபெல்டின் பந்தயம் வெற்றிகரமாக முடிந்தது.

பௌலியின் 200 பக்கங்களுக்கு மேல் இருக்கும் விமர்சனம் அக்காலத்தின் சிறந்த கணிதவியலாளர்களால் பாராட்டப்பட்டது.

"கோட்பாட்டின் ஓர் எளிய ஆய்வை எழுதுவதற்கு அப்பால், அவர் சார்பியல் கோட்பாடுகளில் உள்ள வெளிப்படையான பிரச்னைகளைச் சுட்டிக்காட்டினார்," என்று எடின்பர்க் பல்கலைக்கழக அறிவியல் தத்துவ பேராசிரியர் மைக்கேலா மஸ்ஸிமி பிபிசியிடம் கூறினார்.

"இது அனைவரையும் கவர்ந்தது என்பதுடன் சர்வதேச அரங்கில் அவரை உறுதியாக நிலைநிறுத்தியது," என்று அவர் மேலும் கூறினார். அதுமட்டுமின்றி ஐன்ஸ்டீனே அதைப் பாராட்டினார்.

"இந்த முதிர்ந்த மற்றும் பிரமாண்டமாக உருவாக்கப்பட்ட படைப்பைப் படிக்கும் யாரும், அதன் ஆசிரியர் 21 வயதுடையவர் என்று நம்ப மாட்டார்கள்," என்று இந்த சார்பியல் கோட்பாட்டின் ஆசிரியர் கருத்து தெரிவித்தார்.

அந்த மதிப்பாய்வு உடனடி கிளாசிக் ஆனது என்பதுடன் நிலையான படைப்பாக இருந்தது. அவரது துறையில் நிபுணர்களின் பார்வையில், அந்த இளம் மாணவர் நிறைய வாக்குறுதிகளைக் காட்டினார்.

 

24 வயதில் தனித்தன்மை

வுல்ஃப்காங் பாலி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

கடந்த 1940களில் அணு மற்றும் குவாண்டம் இயற்பியலில் முன்னோடி விஞ்ஞானியாக இருந்த அர்னால்ட் சோமர்ஃபெல்டை (1868-1951) பௌலி சந்தித்தபோது எடுத்த படம்.

டாக்டர் பட்டம் பெற்ற பிறகு, பௌலி கோட்டிங்கன் பல்கலைக்கழகத்தில் ஜெர்மன் கணிதவியலாளரும் இயற்பியலாளருமான மேக்ஸ் பார்னின் (நோபல் 1954) உதவியாளராகப் பணியாற்றினார். அடுத்த ஆண்டு, அணுவைப் பற்றிய புரிதலில் புரட்சியை ஏற்படுத்திய டேனிஷ் இயற்பியலாளர் நீல்ஸ் போரை (நோபல் 1922), டென்மார்க்கின் கோபன்ஹேகனில் தன்னுடன் பணியாற்ற அழைத்தார்.

ஆனால் ஹாம்பர்க் பல்கலைக்கழகத்தில் கற்பிக்க ஜெர்மனிக்கு சென்றபோதுதான், அணுவின் கட்டமைப்பில் உள்ள அடிப்படைச் சிக்கல்களைத் தீர்க்கும் இரண்டு தீவிரமான கருத்துருக்களை முன்வைத்தார். அவற்றில் ஒன்று அவருக்கு நிச்சயமாக நோபல் பரிசைப் பெற்றுத் தரும்: அது விலக்கு கொள்கை (Pauli exclusion principle) அல்லது பௌலி கொள்கை என அறியப்பட்டது.

அதை நன்கு புரிந்துகொள்வது சிக்கலானது. ஆனால் இது எதைப் பற்றியது அல்லது அது ஏன் மிகவும் அடிப்படையானது என்பதை பிபிசிக்கு விளக்கிய இயற்பியலாளர் க்ளோஸின் உதவியுடன் அதைப் புரிந்துகொள்ள முயல்வது பயனளிக்கும் விதத்தில் இருக்கும்.

அந்த நேரத்தில், அணுக்களுக்கு நேர்மறை மின்னூட்டம் உள்ளது என்றும், எலக்ட்ரான்கள் ஏணியில் உள்ள படிகளைப் போல பிரிக்கப்பட்ட நீள்வட்ட சுற்றுப்பாதையில் அவற்றைச் சுற்றி வருகின்றன என்றும் அறியப்பட்டிருந்தது.

ஒவ்வொரு கட்டத்திலும், அல்லது குவாண்டம் நிலையிலும், ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான எலக்ட்ரான்கள் இருக்கலாம். மிகக் குறைந்த அளவில், எடுத்துக்காட்டாக இரண்டு எலக்ட்ரான்கள் மட்டுமே இருக்க முடியும்.

மேலும் அவை என்ன என்பதை அந்தக் கருத்துரு வரையறுக்கிறது. ஹைட்ரஜன் அதன் மிகக் குறைந்த அளவில் ஒற்றை எலக்ட்ரானை கொண்டுள்ளது; இரண்டு எலக்ட்ரான்கள் இருந்தால், அது ஹீலியம். அடுத்த உறுப்பு லித்தியம். ஆனால் அதில் மூன்று எலக்ட்ரான்கள் இருப்பதால், அவை அடுத்த கட்டத்தை ஆக்கிரமிக்கின்றன.

வுல்ஃப்காங் பாலி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ஐன்ஸ்டீனும் பௌலியும் ஒருவரையொருவர் போற்றிக் கொண்டனர். (1930களில் எடுக்கப்பட்ட படம்).

குளோஸ் குறிப்பிட்டுள்ள கொள்கை, "அந்த குவாண்டம் நிலைகளில் ஒன்றை ஏற்கெனவே எலக்ட்ரான் ஆக்கிரமித்திருந்தால், அங்கு மற்றொரு எலக்ட்ரானை வைக்க முடியாது: அது விலக்கப்பட்டது," என்று கூறுகிறது.

இதை விளக்குவதற்காக, அவர் ஒரு உதாரணம் கூறினார். "நான் மேசையைத் தட்டினால், என் கையிலிருந்து எலக்ட்ரான்கள் மேசை மீது செல்லாது. ஏனென்றால் என் கைகளில் வெளிப்புற விளிம்பில் உள்ள எலக்ட்ரான்கள், அந்த மர மேசையில் எலக்ட்ரான்கள் ஏற்கெனவே ஆக்கிரமித்துள்ள நிலையை ஆக்கிரமிக்க முயல்கின்றன."

"எலக்ட்ரான்கள் எங்கும் செல்ல முடியாது. அவை ஆக்கிரமித்துள்ள இடங்களில் இருந்து ஏற்கெனவே விலக்கப்பட்டிருப்பதால் அவற்றைத் தனி இடங்களில் வைக்க வேண்டும் என்பது அணுக்களின் வெவ்வேறு ரசாயன இயல்புகளுக்கு வழிவகுக்கிறது."

அதன் விளைவாக, நீங்களும், நானும், பிரபஞ்சம் மற்றும் அனைத்தும் உள்ளன என்று அவர் கூறினார். விதிவிலக்குக் கொள்கை தொடர்பான புதிரில் வெவ்வேறு இடங்களில் எலக்ட்ரான்களை உருவாக்கி கட்டமைப்புகளைக் கட்டமைக்கவில்லை என்றால், அவை மிதந்து கொண்டிருக்கும் என்பதுடன் அணுக்கள், திடப் பொருள்கள் அல்லது படிகங்கள் என எதையும் உருவாக்காது.

"பிரபஞ்சத்தில்கூட, நட்சத்திரங்களின் முடிவு விலக்கு கொள்கையுடன் தொடர்புடையதாகவே இருக்கிறது. நட்சத்திரம் அதன் ஆயுள் முடிந்து வீழ்ச்சியடையும்போது, அதன் கூறுகள் தங்களைத் தாங்களே மேன்மேலும் சுருக்கிக்கொள்ள முயல்கின்றன. ஏனெனில் அவை விலக்கப்படுகின்றன."

 

தலை சுற்ற வைத்த பௌலியின் விலக்கு விதி

வுல்ஃப்காங் பாலி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

பௌலி 1949ஆம் ஆண்டு சர்வதேச அணு இயற்பியல் காங்கிரஸில் அவர் பங்கேற்றபோது எடுத்த படம்.

எல்லோரும் எதிர்பார்க்கிறபடி, இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அறிஞர்கள் அதை விரைவாக அடையாளம் கண்டுகொண்டனர்.

"இந்தச் செய்தி மிக வேகமாகப் பரவியது," என்கிறார் மாசிமி. "பௌலி ‘விலக்கு விதியை’ அறிவித்தார். மேலும் அவர் அதை ஒரு விதி என்றே அழைத்தார். அதை ஒரு கொள்கை என்று அவர் கருதவில்லை,” என ஆல்ஃபிரட் லாண்டே, ஒரு முக்கிய பரிசோதனை இயற்பியலாளருக்கு எழுதிய கடிதத்தில், இறுதியில் 1924 தெரிவித்தார்.

"ஒரு மாதம் கழித்து, நீல்ஸ் போர் (Niels Bohr) கோபன்ஹேகனில் இருந்து அவருக்கு எழுதிய கடிதத்தில், ‘நீங்கள் கண்டுபிடித்த பல அழகான விஷயங்களால் நாங்கள் அனைவரும் மிகவும் உற்சாகமாக இருக்கிறோம். மேலும் நான் எந்த விமர்சனத்தையும் மறைக்க வேண்டியதில்லை. ஏனென்றால் நீங்கள் எல்லாவற்றையும் பைத்தியம் என்று விமர்சித்தீர்கள்’ எனக் குறிப்பிட்டிருந்தார்," என்று மாசிமி கூறினார்.

"எதார்த்தம் என்னவென்றால், விலக்கு விதியைப் புரிந்துகொள்ள முடியாமல் அவர்கள் தலையைச் சொறிந்தனர்.”

"ஆனால் பௌலியின் தொலைநோக்குப் பார்வை 1924இல் அறிமுகப்படுத்தப்பட்டது. உண்மையில் குவாண்டம் இயக்கவியலின் அடித்தளம் அமைக்கப்படுவதற்கு முன்பு, பல தசாப்தங்களாக இயற்பியலாளர்களைப் பாதித்த ஒரு பிரச்னைக்கு இந்த விதி இறுதியாக ஒரு தீர்வை வழங்கியது," என்று அவர் கூறி முடித்தார்.

பின்னர் இந்த விதி ஒரு கொள்கையாக உறுதிப்படுத்தப்பட்டு, இயற்பியலுக்கான நோபல் கமிட்டியின் உறுப்பினர் பேராசிரியர் ஐ. வாலர் கூறியது போல், அதை வழங்கும்போது, இது இயற்கையின் அடிப்படை விதியாக வகைப்படுத்தப்பட்டது.

"எலக்ட்ரான்களுக்காக முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட கொள்கை, புரோட்டான்கள் எனப்படும் ஹைட்ரஜன் கருக்களுக்கும் மற்றும் பல அணுக்கரு வினைகளில் உருவாகும் நியூட்ரான்களுக்கும் செல்லுபடியாகும் என நிரூபிக்கப்பட்டுள்ளது," என்று அவர் கூறினார்.

"இந்த விதியை ஆதரிக்க எலக்ட்ரான்களுக்கு இடையில் எந்த புதிய சக்தியையும், எந்த பொறிமுறையையும், தர்க்கத்தையும்கூட அவர் முன்மொழியவில்லை.”

"இது வெறுமனே ஒரு விதியாக இருந்தது. அதன் இயல்பான தன்மையில் கட்டாயமானது என்பதுடன் நவீன இயற்பியலின் முழு பகுதியிலும் வேறு எதையும் போலல்லாமல் இருந்தது.”

"எலக்ட்ரான்கள் ஒன்றுக்கொன்று தனிப்பட்ட குவாண்டம் எண்களைத் தவிர்க்கின்றன. இது வேறு எந்த காரணத்திற்காகவும் இல்லாமல், பௌலியின் விலக்கு கொள்கையின் காரணமாகவே நடைபெறுகிறது.”

 

 

வுல்ஃப்காங் பாலி

பட மூலாதாரம்,CERN

படக்குறிப்பு,

"ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்ஸ் அவருக்கு 1945இல் இயற்பியலுக்கான நோபல் பரிசை வழங்கியது" என்று தந்தி மூலம் அறிவித்தது. அதைப் பெற அவரால் செல்ல முடியவில்லை. ஆனால் அவர்கள் அதை பிரின்ஸ்டனில் கொண்டாடினர்.

அக்கால அணு இயற்பியலின் சோதனை மற்றும் கோட்பாட்டு அறிவை ஆழமாகப் பகுப்பாய்வு செய்வதன் மூலமும், அவரது அற்புதமான கணிதத் திறன்களைப் பயன்படுத்துவதன் மூலமும் பௌலி தனது அனைத்து கண்டுபிடிப்புகளையும் உருவாக்கினார். அது அவரை மற்றவர்களின் வேலையைக் கடுமையாக விமர்சிக்கவும் செய்தது.

இயற்பியல் சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அல்லது நிராகரிக்கப்படுவதற்கு புதிய யோசனைகள் பற்றிய அவரது கருத்து மிகவும் முக்கியமானது. அவர்கள் அவரை "இயற்பியலின் மனசாட்சி" என்று கருதினர்.

பௌலியின் தலையாட்டுதலைவிட வேறு எந்த வகையான ஒப்புதலும் இயற்பியலாளர்களுக்கு மதிப்புமிக்கதாக இருக்காது," என்று பெல்ஜிய இயற்பியலாளர் லியோன் ரோசன்ஃபெல்ட் குறிப்பிட்டார். அந்த அளவுக்கு அவரை முக்கியமானவராகக் கருதினார்கள்.

அந்த பாத்திரத்திற்காக, அவர் தொடர்ந்து மேற்கோள் காட்டப்படும் சொற்றொடர்களின் பாரம்பரியத்தை விட்டுச் சென்றார். அவற்றில் மிகவும் பிரபலமானது அழிவுகரமானது.

இயற்பியலாளர் ருடால்ப் பீயர்ல்ஸ் பௌலியின் வாழ்க்கை வரலாற்று நினைவுக் குறிப்பில் எழுதியது போல், நண்பர் ஓர் இளம் இயற்பியலாளரின் கட்டுரையை அவருக்குக் காட்டினார்; அவர் மிகவும் மதிப்புமிக்கவர் அல்ல, ஆனால் அவர் பௌலியின் கருத்தை அறிய விரும்பினார்.

"இது போலியானதுகூட இல்லை' என்று பௌலி வருத்தத்துடன் கருத்து தெரிவித்தார்.”

"அது சரியல்ல என்பது மட்டுமல்ல, பொய்யும்கூட இல்லை" என்பதே அவரது பதிலுக்கான பொருள் என்று மற்ற ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் உண்மை என்னவென்றால், தத்துவஞானி கார்ல் பாப்பரின் பொய்யான கொள்கைக்கு அவை தகுதி பெறாத அளவுக்கு ஊகமான வாதங்களை நிராகரிக்க இந்த சொற்றொடர் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ஒரு குறைபாடுள்ள கருதுகோளைச் சோதிப்பதன் மூலம், ஒருவர் செயல்பாட்டில் ஏதாவது கற்றுக்கொள்கிறார். அது அறிவியல் கண்டுபிடிப்புக்குத் தூண்டுகிறது. ஆனால் அது பொய்யாகக்கூட இல்லாவிட்டால், அவர் நேரத்தை வீணடிக்கிறார் என பாப்பர் கூறினார்.

இவ்வாறு, அவரது பல விமர்சனங்கள் நினைவில் நிலைத்திருந்தன. ஏனெனில், கசப்பானவையாக இருந்தாலும், அவை வேடிக்கையாகவும் பொதுவாக வரவேற்கத்தக்கதாகவும் இருந்தன.

இருப்பினும், சிலர் புண்படுத்தப்பட்டனர் என்பதுடன் 1933 முதல் 1944 வரை அவர் சிறந்த விஞ்ஞானிகளால் 20 முறை பரிந்துரைக்கப்பட்ட போதிலும், நோபல் கமிட்டி அவருக்குப் பரிசு வழங்குவதற்கு இவ்வளவு காலம் எடுத்ததற்கு இது காரணமா என்று சந்தேகிப்பவர்களும் உள்ளனர்.

ஆனால் 1945இல், அதாவது அவர் தனது பிரத்தியேகக் கொள்கையை வகுத்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு, அவருக்கு ஏன் இந்த விருது வழங்கப்பட்டது என்பது யாருக்கும் தெரியாது.

அந்த ஆண்டு, அவரைப் பரிந்துரைத்த மூவரில் ஒருவரான ஐன்ஸ்டீன், இரண்டாம் உலகப் போரின்போது ஐரோப்பாவை விட்டு வெளியேறியதில் இருந்து பௌலி பணியாற்றிய பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற புதிய நோபல் பரிசு வென்றவரைக் கொண்டாடிய விழாவில் பங்கேற்றார்.

செர்ன் (CERN) இணையதளம் விவரித்தபடி, பல புகழ்பெற்ற விருந்தினர்கள் பேசிய பிறகு, ஐன்ஸ்டீன் எழுந்து நின்று, பௌலியை அவரது அறிவுசார் வாரிசாகக் குறிப்பிட்டு ஒரு திடீர் உரையை நிகழ்த்தினார்.

இதைக் கேட்டபோது பௌலி மிகவும் உணர்ச்சிவசப்பட்டார். ஐன்ஸ்டீன் இறந்த பத்து ஆண்டுகளுக்குப் பிறகு மேக்ஸ் பர்னுக்கு எழுதிய கடிதத்தில் அவர் அதை நினைவு கூர்ந்தார். மேலும் அந்தப் பேச்சு தன்னிச்சையாக இருந்ததால், அதைப் பற்றிய பதிவு எதுவும் இல்லை என்றும் வருந்தினார்.

அவரது அறிவுசார் வாரிசாகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள அவருக்குப் போதுமான நேரம் இல்லை. பௌலி தனது தொழில் வாழ்க்கையின் பெரும்பகுதியைக் கழித்த சூரிச்சில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு காலமானார்.

https://www.bbc.com/tamil/articles/czvq8r5r882o

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 2020 பொதுத் தேர்தலில், விக்கி ஐயாவின் தலைமையில் ஆனந்தி சசிதரன் நின்று தோற்ற போது வென்ற வாக்குகள் எத்தனை? ஏன் மக்கள் அவரை அந்த நேரம் தம் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கவில்லை? யாருக்காவது தெரியுமா?
    • 🤣எதிர்பார்த்த படியே சொல்லியிருக்கிறீர்கள்: "34 ஆய்வுகள் யாரையோ திருப்தி செய்ய யாரோ செய்த ஆய்வுகள்". இந்த ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் இல்லாமல் (ஆனால் formation இற்கு வாழும் சூழல் முக்கியம் என கருத்தை நீங்களே முதலில் சொல்லி விட்டு) அடுத்த சந்ததியில் சீரழிவு நிகழும் என்கிறீர்கள். இது மூக்குச் சாத்திரம், ஆனால் அதையும் சீரியசான ஆய்வு முடிவு போல உங்களால் நீட்டி முழக்கிச் சொல்ல முடிகிறது😂. சிறு பான்மை, பெரும்பான்மையெல்லாம் ஏன்? இதற்கும் ஓர் பால் தம்பதிகளுக்கு உரிமைகள் கொடுப்பதற்கும் என்ன சம்பந்தம்? "everybody is a minority somewhere, that doesn't mean they should  be deprived of their basic rights" சொன்னது நான் அல்ல, ரோக்கியோ நகரில் "ஒரு பால் தம்பதிகளின் உரிமையை மட்டுப் படுத்த வேண்டும்" என்று நகர மேயர் போட்ட வழக்கை நிராகரித்து ஒரு ஜப்பானிய நீதிபதி சொன்னது.   கட்டாயம் ரக்கர் கால்சன் சொல்வது இந்த ஓர் பாலின விடயங்களில் நம்பிக்கையான தகவலாகத் தான் இருக்கும். கார்ல்சனுக்கு ஆணும் ஆணும் , பெண்ணும் பெண்ணும் பரஸ்பர சம்மதத்தோடு உறவு வைத்திருப்பது கண்ணில காட்டக் கூடாது! ஆனால், கூட வேலை செய்யும் பெண்களிடம் அவர்கள் அனுமதியில்லாமலே கையைக் காலை நீட்டுவது பூரண சம்மதமான விடயமாக இருந்திருக்கிறது😎. அதனால் தான் Fox News  இல் இருந்து வேலை நீக்கப் பட்டார்! 
    • அவுஸ்திரேலியா  எதிர் ஸ்கொட்லாந்து   ஸ்கொட்லாந்து  9 over  முடிவில் 92/2  இங்கிலாந்துக்கு ஆபத்து காத்திருக்கிறது.
    • சிங்கம் இளைச்சா….எலி என்னத்துக்கோ கூப்பிடுமாம்🤣.
    • சற்று விளக்கமாக நான் எழுதியிருக்கலாம் என்று நினைக்கிறேன். சரி, இதுதான் நான் சொல்ல வந்தது. இலங்கையின் ஜனாதிபதியாக தமிழர் ஒருவர் வரவேண்டும் என்று ஒருபோதுமே தமிழர்கள் எண்ணியதுமில்லை, விரும்பியதுமில்லை, அது அவர்களின் அரசியல் அபிலாஷையுமல்ல. இன்னும் ஒரு வழியில் கூறுவதானால், தமிழ் பொதுவேட்பாளர் எனும் எண்ணக்கரு தேர்தல் வெற்றி தோல்விகளுக்கு அப்பாற்பட்டது.   தமிழ்ப் பொதுவேட்பாளர் நிறுத்தப்படுவது இத்தேர்தலில் வெல்வதற்காக அல்ல, மாறாக மக்களின் மனங்களிலிருந்து மிகவும் சூட்சுமமான முறையில் மறக்கடிக்கப்பட்டுவரும் அவர்களது அபிலாஷைகளை, கோரிக்கைகளை இத்தேர்தலின் மூலம் உயிர்ப்பித்து, மீளவும் முன்னிற்குக் கொண்டுவருவது. தமிழ் மக்களின் அபிலாஷைகளை மீளவும் உணர்த்த இத்தேர்தலினைக் களமாகப் பாவிப்பதே உண்மையான நோக்கம். ஆகவேதான் தமிழ்ப் பொதுவேட்பாளர்  தேர்தலில் தோற்கப்போகிறார் என்று அஞ்சுவோர், ஏளனம் செய்வோர் அரசியல்த் தெளிவில்லாமல் இதனைச் செய்கிறார்கள் என்று எழுதினேன்.  உங்களைத் தனிப்பட்ட ரீதியில் இது தாக்கியிருந்தால் அதற்காக எனது வருத்தத்தினை இங்கே தெரிவித்துக்கொள்கிறேன். 
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.