Jump to content

பணிப்புறக்கணிப்பு தொடர்பில் சுகாதார தொழிற்சங்கங்களின் தீர்மானம் !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Ravi-Kumudesh.jpg

72 சுகாதார தொழிற்சங்கத்தினர் முன்னெடுத்து வரும் பணிப்புறக்கணிப்பை தொடர்வதா? இல்லையா? என்பது தொடர்பில் இன்று மதியம் தீர்மானிக்கவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் சம்மேளனம் அறிவித்துள்ளது.

இன்று கூடவுள்ள சங்கத்தின் நிறைவேற்றுகுழு கூட்டத்தில் இது தொடர்பான தீர்மானம் எட்டப்படவுள்ளதாக சுகாதார தொழிற்சங்க சம்மேளனத்தின் இணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

வைத்தியர்களுக்கு வழங்கப்படும், 35,000 ரூபா கொடுப்பனவை அனைத்து சுகாதார தொழிற்சங்கத்தினருக்கும் வழங்க வேண்டும் என கோரி, நேற்று முதல் 72 சுகாதார தொழிற்சங்கத்தினர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

https://thinakkural.lk/article/290253

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுகாதார தொழிற்சங்கத்தினரின் பணிப்புறக்கணிப்பு நிறைவுக்கு வருகிறது!

02 FEB, 2024 | 07:39 PM
image

72 சுகாதார தொழிற்சங்கத்தினர் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் நாளை சனிக்கிழமை (3) காலையுடன் நிறைவுசெய்ய தீர்மானித்துள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்கள் தெரிவித்தன.

ஜனாதிபதி, திறைசேரியின் செயலாளர் ஆகியோருடன் எதிர்வரும் 06 ஆம் திகதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சாதகமான தீர்மானத்தை பெற்றுத் தருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரன தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் உறுதியித்ததையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

https://www.virakesari.lk/article/175417

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.