Jump to content

ஆசியக் கிண்ண கால்பந்தாட்ட போட்டிகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆசியக் கிண்ண கால்பந்தாட்ட கால் இறுதி போட்டிகளில் ஜப்பான், ஈரான்

02 FEB, 2024 | 11:20 AM
image

(நெவில் அன்தனி)

கத்தாரில் நடைபெற்றுவரும் 2023 ஆசிய கிண்ண கால்பந்தாட்ட கால் இறுதிப் போட்டிகளில் விளையாடுவதற்கு கடைசி இரண்டு அணிகளாக ஜப்பானும் ஈரானும் தகுதிபெற்றன.

japan_vs_bahrain_1.png

கத்தாரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 7ஆவது முன்னோடி கால் இறுதிப் போட்டியில் பஹ்ரெய்னை 3 - 1 என்ற கோல்கள் அடிப்படையில் ஜப்பானும் கடைசி முன்னோடி கால் இறுதிப் போட்டியில் சிரியாவை 5 - 3 என்ற பெனல்டி முறையில் ஈரானும் வெற்றிகொண்டு கால் இறுதிக்கு முன்னேறின.

ஜப்பானுக்கு இலகுவான வெற்றி

அல் துமாமா விளையாட்டரங்கில் நடைபெற்ற போட்டியில் ஆரம்பம் முதல் கடைசி வரை பஹ்ரெய்னை விஞ்சும் வகையில் விளையாடிய ஜப்பான் மிக இலகுவாக வெற்றிபெற்றது.

japan_vs_bahrain_2.png

நான்கு தடவைகள் ஆசிய சம்பியனான ஜப்பான் சார்பாக போட்டியின் 31ஆவது நிமிடத்தில் ரிட்சு டோஆன் முதலாவது கோலை போட்டார்.

சுமார் 35 யார் தூரத்திலிருந்து செய்யா மல்குமா ஓங்கி உதைத்த பந்து பஹ்ரெய்னின் வலது கோல் கம்பத்தில் பட்டு திரும்பிவந்தபோது வேகமாக செயற்பட்ட டோஆன் இடதுகாலால் பந்தை உதைத்து அலாதியாக கோலை போட்டார்.

இடைவேளையின் போது ஜப்பான் 1 - 0 என முன்னிலையில் இருந்தது.

இடைவேளையின் பின்னர் மிகத் திறமையாக விளையாடிய ஜப்பான் 49ஆவது நிமிடத்தில் தனது கோல் எண்ணிக்கையை இரண்டாக உயர்த்தியது.

பஹ்ரெய்ன் வீரர் ஹஸா அலி தவறாக பரிமாறிய பந்தை தனதாக்கிக்கொண்ட டக்கேஃபுசா குபோ மிக இலாவகமாக பந்தை நகர்த்திச் சென்று கோலினுள் புகுத்தினார்.

japan_vs_bahrain_3.png

போட்டியின் 69ஆவது நிமிடத்தில் பஹ்ரெய்ன் வீரர் அயாசே உவேடா 30 யார் தூரத்திலிருந்து ப்றீ கிக் மூலம் உதைத்த பந்தை சய்யத் பாக்வெர் கோலை நோக்கி தலையால் முட்டினார். ஜப்பான் கோல் காப்பாளர் இஸட். சுசிக்கி பந்தைத் தடுக்க முயன்றபோது குறுக்கே பாய்ந்த ஆயாசே உவேடா பந்தை சொந்த கோலினுள் புகுத்தி பஹ்ரெய்னுக்கு இனாம் கோல் ஒன்றைக் கொடுத்தார்.

எவ்வாறாயினும் 3 நிமிடங்கள் கழித்து செய்யா மைக்குமா பரிமாறிய பந்தை ஆயாசே உவேடா கோலாக்கி தனது முன்னைய தவறை நிவர்த்திசெய்தார். இறுதியில் ஜப்பான் 3 - 1 என வெற்றிபெற்று கால் இறுதிக்கு முன்னேறியது.

பெனல்டி முறையில் ஈரான் வெற்றி

ஈரானுக்கும் சிரியாவுக்கும் இடையில் தோஹா, அப்துல்லா பின் கலிபா விளையாட்டரங்கில் நடைபெற்ற கடைசி முன்னோடி கால் இறுதிப் போட்டியில் 5 - 3 என்ற பெனல்டி முறையில் ஈரான் வெற்றிபெற்று கால் இறுதிக்கு முன்னேறியது.

iran_vs_syriya_1.png

இரண்டு அணிகளும் ஒன்றொக்கொன்று சளைக்காமல் விளையாடி அரங்கிலிருந்த பார்வையாளர்களை விறுவிறுப்பின் உச்சத்திற்கு இட்டுச் சென்றன.

போட்டியின் முதலாவது பகுதியின் 34ஆவது நிமிடத்தில் ஈரான் வீரர் மெஹ்மதி தரேமியை சிரியா வீரர் ஆய்ஹாம் ஒளசூ தனது பெனல்டி எல்லைக்குள் வைத்து வீழ்த்தியதால் ஈரானுக்கு பெனல்டி வழங்கப்பட்டது.

அந்த பெனல்டியை மெஹ்தி தரேமி கோலாக்கி ஈரானை 1 - 0 என முன்னிலையில் இட்டார்.

iran_vs_syriya_2.png

இடைவேளையின் பின்னர் 64ஆவது நிமிடத்தில் சிரியா வீரர் பப்லோ சபாக்கை ஈரான் வீரர் அலிரீஸா பெய்ரான்வாந்த் வீழ்த்தியதால் சிரியாவுக்கு பெனல்டி கிடைத்தது.

இந்த பெனல்டியை ஓமர் க்ர்பின் இலக்கு தவறாமல் உதைத்து கோல் நிலையை 1 - 1 என சமப்படுத்தினார்.

அதன் பின்னர் இரண்டு அணிகளும் வெற்றி கோலைப் போடத் தவறியதால் மேலதிக நேரம் வழங்கப்பட்டது.

மேலதிக நேர நிறைவில் இரண்டு அணிகளும் தலா ஒரு கோலை போட்டிருந்ததால் வெற்றி அணியைத் தீர்மானிக்க மத்தியஸ்தர் பெனல்டி முறையை அமுல்படுத்தினார்.

இரான் சார்பாக கரிம் அன்சாரிபார்ட், ரமின் ரீஸாயான், ஓமித் இப்ராஹிம், மெஹ்தி தோராபி, ஈஷான் ஹாஜிசபி ஆகிய ஐவரும் தங்களது பெனல்டிகளை இலக்கு தவறாமல் உதைத்தனர்.

iran_vs_syriya_3.png

சிரியா சார்பாக பெப்லோ சபாக், ஆய்ஹாம் ஒளசூ, அலா அல் தலி ஆகியோர் பெனல்டிகளை கோலாக்கினர்.

சிரியா வீரர் பாஹ்த யூசெவ் உதைத்த இரண்டாவது பெனல்டியை ஈரான் கோல் காப்பாளர் தடுத்து நிறுத்தினார்.

இதன் பிரகாரம், ஈரான் 5 - 3 என்ற பெனல்டி முறையில் வெற்றிபெற்று கால் இறுதியில் விளையாட தகுதிபெற்றது.

https://www.virakesari.lk/article/175366

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தென் கொரியாவை வீழ்த்தி முதல் தடவையாக ஆசிய கிண்ண இறுதிக்கு முன்னேறியது ஜோர்தான்

07 FEB, 2024 | 10:10 AM
image

(நெவில் அன்தனி)

சர்வதேச கால்பந்தாட்டப் போட்டி ஒன்றில் முதல் தடவையாக தென் கொரியாவை வெற்றி கொண்ட ஜோர்தான், ஆசிய கிண்ண கால்பந்தாட்ட இறுதிப் போட்டியில் முதல் தடவையாக விளையாட தகுதிபெற்று வரலாறு படைத்துள்ளது.

0702_jordan_bt_south_korea_the_two_goal_

கத்தார், அல் ரய்யான், அஹ்மத் பில் அலி விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (06) இரவு நடைபெற்ற முதலாவது அரை இறுதிப் போட்டியில் அஸான் அல் நய்மாத்துக்கு ஆரம்ப கோலை போடுவதற்கு வழிசமைத்த மூசா அல் தமாரி 2ஆவது கோலைப் போட, ஜோர்தான் 2 - 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது.

போட்டியின் ஆரம்பம் முதல் கடைசி வரை ஆதிக்கம் செலுத்திய ஜோர்தான் மிக வேகமாகவும் மன உறுதியுடனும் விளையாடிய தென் கொரியாவை திணறச் செய்தது.

ஜோர்தானிடம் அடைந்த தோல்வியினால் 60 வருடங்களின் பின்னர் முதல் தடவையாக ஆசிய சம்பியனாகும் தென் கொரியாவின் எதிர்பார்ப்பு தவிடுபொடியானது.

0702_mouza_al_tamari_jordan_vs_south_kor

போட்டி ஆரம்பித்த சொற்ப நேரத்தில் தென் கொரியாவின் கோல் எல்லையை ஆக்கிரமித்த ஜோர்தான் இரண்டு தடவைகள் கோல் போட எடுத்த முயற்சிகளை தென் கொரிய கோல் காப்பாளர் ஜோ ஹியொன் வூ தடுத்து நிறுத்தினார்.

ஆசியாவின் அதிசிறந்த வீரர் விருதை 9 தடவைகள் வென்ற சொன் ஹியங் மின் 19ஆவது நிமிடத்தில் தென் கொரியா சார்பாக போட்ட கோல் ஓவ்சைட் நிலையிலிருந்து போடப்பட்டதால் அதனை மத்தியஸ்தர் நிராகரித்தார்.

அதனைத் தொடர்ந்து, விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் இரண்டு அணிகளும் மாறிமாறி கோல் போட எடுத்த முயற்சிகள் கைகூடவில்லை.

இடைவேளை நெருங்கிக்கொண்டிருந்தபோது தென்  கொரியா வீரர் சோல் யங் வூ தலையால் முட்டிய பந்து கொலின் குறுக்குக் கம்பத்துக்கு மேலாக சென்றது.

இடைவேளைக்குப் பின்னர் 53ஆவது நிமிடத்தில் தென் கொரிய பின்கள வீரர் ஜுங் சியங் ஹியுன்டோ பந்தை தனது கோல் காப்பாளருக்கு பின்னோக்கி நகர்த்தியபோது வேகமாக செயற்பட்ட மூசா அல் தமாரி அதனைக் கட்டுப்படுத்தி அல் நய்த்துக்கு முதலாவது கோலைப் போட வழிசமைத்தார்.

0702_yazan_al_naimat_jordan_vs_south_kor

அந்த சந்தர்ப்பத்தில் பந்தைத் தடுப்பதற்கு முன்னால் நகர்ந்த தென் கொரிய கோல் காப்பாளருக்கு மேலாக பந்தை செலுத்தி யஸான் அல் நய்மத் முதல் கோலைப் போட்டார். (ஜோர்தான் 1 - 0)

கடந்த 6 போட்டிகளில் ஐந்தாவது தடவையாக ஒரு கோலால் பின்னிலை அடைந்த தென் கொரியா, மாற்று வீரர்களை களம் இறக்கி எதிர்த்தாடலை பலப்படுத்தியது. ஆனால், மாற்று வீரர்களில் ஒருவரான சொ கே சுங் 60ஆவது நிமிடத்தில் கோல் நிலையை சமப்படுத்த எடுத்த முயற்சி நூலிழையில் தவறியது.

அது தென் கோரியாவுக்கு பலத்த ஏமாற்றத்தைக் கொடுக்க, ஆறு நிமிடங்கள் கழித்து அற்புதமாக பந்தை நகர்த்திச் சென்ற மூசா அல் தமாரி தனது அணியின் 2ஆவது கோலை புகுத்தினார்.

0702_mouza_al_tamari_jordan.png

அதன் பின்னர் தென் கொரியா கோல் போடுவதற்கு எடுத்த கடும் முயற்சிகளை ஜொர்தான் தடுத்து இறுதியில் 2 - 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றுக்கொண்டது.

0702_jordan_celebrate.jpg

0702_winning_team_jordan.png

https://www.virakesari.lk/article/175765

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆசிய கிண்ண கால்பந்தாட்ட இறுதிப்போட்டியில் நடப்பு சம்பியன் கத்தார்

09 FEB, 2024 | 10:16 AM
image

(நெவில் அன்தனி)

கத்தாரில் நடைபெற்றுவரும் AFC 2023 ஆசிய கிண்ண கால்பந்தாட்டப் இறுதிப் போட்டியில் விளையாட நடப்பு சம்பியனும் வரவேற்பு நாடுமான கத்தார் தகுதிபெற்றுள்ளது.

அல் ரய்யான், அல் துமாமா விளையாட்டரங்கில் புதன்கிழமை (07) மொத்தமாக 5 கோல்கள் போடப்பட்ட 2ஆவது அரை இறுதிப் போட்டியில் 3 - 2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் ஈரான் இஸ்லாமிய குடியரசை வெற்றிகொண்ட கத்தார் இரண்டாவது தொடர்ச்சியான தடவையாக ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் 2019இல் நடைபெற்ற ஆசிய கிண்ண கால்பந்தாட்டத்தில் ஜப்பானை 3 - 1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிகொண்டு கத்தார் ஆசிய சம்பியனாகி இருந்தது.

2019 ஆசிய கிண்ண கால்பந்தாட்டத்தில் மிகவும் பெறுமதிவாய்ந்த வீரர் விருதை வென்றவரும் அதிக கோல்களைப் போட்டவருமான அல்மோயிஸ் அலி, இரண்டவாது அரை   இறுதிப்   போட்டியின் 82ஆவது நிமிடத்தில் வெற்றிகோலை போட்டார்.

அதன் பின்னர் இந்தப் போட்டி உபாதையீடு நேரம் உட்பட 23 நிமிடங்கள் தொடர்ந்தபோதிலும் ஈரானினால் கோல் நிலையை சமப்படுத்த முடியாமல் போக கத்தார் இறுதியில் வெற்றிபெற்றது.

இந்தப் போட்டி ஆரம்பித்து 4 நிமிடங்கள் ஆன நிலையில் ஈரான் முதலாவது கோலை போட்டது. த்ரோ இன் பந்தை சர்தார் அஸ்மூன் கரணம் அடித்து உதைத்து கோல் போட்டு ஈரானை முன்னிலையில் இட்டார்.

கத்தார் நீண்ட நேரம் பின்னிலையில் இருக்கவில்லை.

போட்டியின் 17ஆவது நிமிடத்தில் அக்ரம் அபிவ் பரிமாறிய பந்தை ஜசெம் கபிர் ஓங்கி உதைக்க, அது செய்யத் ஈஸாட்டோஹாலி மீது பட்டு கோலினுள் புகுந்தது.

இடைவேளை நெருங்கிக்கொண்டிருந்தபோது 43ஆவது நிமிடத்தில் அக்ரம் அஃபிவ் 2ஆவது கோலைப் போட்டு கத்தாரை முன்னிலையில் இட்டார்.

இடைவேளையின் பின்னர் 53ஆவது நிமிடத்தில் கத்தார் பின்கள வீரர் அஹ்மத் பாதியின் கையில் பந்து பட்டமை வீடியோ உதவி மத்தியஸ்தர் மூலம் உறுதி செய்யப்பட்டதை அடுத்து ஈரானுக்கு பெனல்டி வழங்கப்பட்டது.

அந்த பெனல்டியை ஏ. ஜஹான்பக்ஷ் கோலினுள் புகுத்தி கோல நிலையை 2 - 2 என சமப்படுத்தினார்.

அதன் பின்னர் இரண்டு அணிகளும் வெற்றி கோலை போட கடுமையாக பிரயத்தனம் எடுத்தன.

போட்டியின் 82ஆவது நிமிடத்தில் அப்துல்அஸிஸ் ஹாதெம் பரிமாறிய பந்தை அல்மோயிஸ் அலி கோலாக்கி கத்தாரை 3 - 2 என முன்னிலையில் இட்டார்.

அந்த கோலே இறுதியில் கத்தாரை இறுதிப் போட்டிக்கு இட்டுச் செல்லும் வெற்றி கோலாக அமைந்தது.

கத்தாருக்கும் ஜோர்தானுக்கும் இடையிலான ஆசிய கிண்ண இறுதிப் போட்டி லுசெய்ல் விளையாட்டரங்கில் நாளை சனிக்கிழமை (10) நடைபெறவுள்ளது. 

முதலாவது அரை இறுதிப் போட்டியில் தென் கொரியாவை 2 - 1 என்ற கோல்கள் அடிப்படையில் ஜோர்தான் வெற்றிகொண்டிருந்தது. 

qatar_va_iran.png

qatar_vs_iran....jpg

https://www.virakesari.lk/article/175948

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆசிய கிண்ணத்தை சுவீகரித்து வரலாறு படைக்க கத்தார், ஜோர்தான் முயற்சி; நாளை இறுதிப் போட்டி

Published By: VISHNU   09 FEB, 2024 | 10:57 PM

image

(நெவில் அன்தனி)

தோஹா, லுசெய்ல் விளையாட்டரங்கில் சனிக்கிழமை (10) இரவு நடைபெறவுள்ள AFC ஆசிய கிண்ணம் கத்தார் 2023 இறுதிப் போட்டியில் ஒன்றையொன்று சந்திக்கவுள்ள கத்தாரும் ஜோர்தானும் சம்பியன் பட்டத்தை சூடி வரலாறு படைக்க முயற்சிக்கவுள்ளன.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற 2019 ஆசிய கிண்ண கால்பந்தாட்டத்தில் சம்பியனான கத்தார், கிண்ணத்தை தக்கவைக்க முயற்சிக்கவுள்ளது.

மறுபுறத்தில் ஆசிய கிண்ண கால்பந்தாட்ட வரலாற்றில் முதல் தடவையாக இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதிபெற்றுள்ள ஜோர்தான் முதல் முயற்சியிலேயே கிண்ணத்தை வென்ற வரலாறு படைக்க எண்ணியுள்ளது.

இந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான இறுதிப் போட்டியில் வேகத்திற்கும் விறுவிறுப்பிற்றும் பஞ்சம் இருக்காது என நம்பப்படுகிறது.

1_qatar_players_to_watch.png

கத்தார் அணியில் கவனத்தில் கொள்ள வேண்டிய பிரதான வீரர்கள் இடமிருந்து வலமாக: அல்மோயிஸ் அலி, அக்ரம் அலி, ஹசன் அல் ஹைதோஸ்

ஏனெனில் ஆசிய கண்டத்தில் முதலாவது மகுடத்தை ஜோர்தானுக்கு பெற்றுக்கொடுக்க பயிற்றுநர் ஹீசெய்ன் அம்மூடா எதிர்பார்த்துள்ளார்.

அதேவேளை, கத்தார் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் அதன் பயிற்றுநர் மார்க்ஸ் லோப்பெஸ் திகழ்கிறார்.

அத்துடன் ஆசிய கிண்ண கால்பந்தாட்ட வரலாற்றில் அடுத்தடுத்து 2 தடவைகள் சம்பியனான அணிகள் பட்டியலில் ஐந்தாவது நாடாக இணைய கத்தார் முயற்சிக்கவுள்ளது.

2_qatar_team.....png

கத்தார் அணியினர்

ஆசிய கிண்ண கால்பந்தாட்டத்தில் 16 அணிகள் சுற்று என அழைக்கப்படும் முன்னோடி கால் இறுதிப் போட்டியில் பலஸ்தீனத்தை 2 - 1 என்ற கோல்கள் வித்தியாசத்திலும் கால் இறுதியில் உஸ்பெகிஸ்தானை 1 (3) - 1 (2) என்ற பெனல்டி முறையிலும் அரை இறுதியில் ஈரானை 3 - 2 என்ற கோல்கள் வித்தியாசத்திலும்  கத்தார் வெற்றிகொண்டிருந்தது.

முன்னோடி கால் இறுதிப் போட்டியில் ஈராக்கை 3 - 2 என்ற கோல்கள் வித்தியாசத்திலும் கால் இறுதிப் போட்டியில் தஜிகிஸ்தானை 1 - 0 என்ற கோல் வித்தியாசத்திலும் அரை இறுதிப் போட்டியில் 2 - 0 என்ற கோல்கள் வித்தியாசத்திலும் ஜோர்தான் வெற்றிகொண்டிருந்தது.

3_jordan_players_to_watch.png

ஜோர்தான் அணியில் கவனத்தில் கொள்ள வேண்டிய பிரதான வீரர் இடமிருந்து வலமாக யஸான் அல் நய்மாத், மூசா அல் தமாரி, யஸான் அல் அராப்

ஆசிய கிண்ண கால்பந்தாட்டத்திற்கு முன்னர் கத்தாருடன் விளையாடிய சிநேகபூர் போட்டியில் ஜோர்தன் 2 - 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருந்தது.

ஆனால், நடப்பு சம்பியன் கத்தாரை அதன் சொந்த மண்ணில் குறிப்பாக அதன் ஆதரவாளர்கள் முன்னிலையில் வெற்றிகொள்வது இலகுவானதல்ல என ஜோர்தான் பயிற்றுநர் அம்மூட்டா தெரிவித்தார்.

4_jordan_team_...png

ஜோர்தான் அணியினர்

இதேவேளை, இரண்டாவது தொடர்ச்சியான தடவையாக இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றுள்ள கத்தார், சிறந்த நிலையில் இருக்கிறது.

இம் முறை இறுதிப் போட்டியில் தனது அணி அதி சிறந்த ஆற்றலை வெளிப்படுத்தும் என கத்தார் பயிற்றுநர் மார்க்ஸ் லோப்பெஸ் நம்பிக்கை வெளியிட்டார்.

https://www.virakesari.lk/article/176006

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

afc.jpg

ஆசிய கிண்ணத்தை சுவீகரித்து வரலாறு படைத்துள்ளது கத்தார்.

af.jpg

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அவுஸ்திரேலியா  எதிர் ஸ்கொட்லாந்து   ஸ்கொட்லாந்து  9 over  முடிவில் 92/2  இங்கிலாந்துக்கு ஆபத்து காத்திருக்கிறது.
    • சிங்கம் இளைச்சா….எலி என்னத்துக்கோ கூப்பிடுமாம்🤣.
    • சற்று விளக்கமாக நான் எழுதியிருக்கலாம் என்று நினைக்கிறேன். சரி, இதுதான் நான் சொல்ல வந்தது. இலங்கையின் ஜனாதிபதியாக தமிழர் ஒருவர் வரவேண்டும் என்று ஒருபோதுமே தமிழர்கள் எண்ணியதுமில்லை, விரும்பியதுமில்லை, அது அவர்களின் அரசியல் அபிலாஷையுமல்ல. இன்னும் ஒரு வழியில் கூறுவதானால், தமிழ் பொதுவேட்பாளர் எனும் எண்ணக்கரு தேர்தல் வெற்றி தோல்விகளுக்கு அப்பாற்பட்டது.   தமிழ்ப் பொதுவேட்பாளர் நிறுத்தப்படுவது இத்தேர்தலில் வெல்வதற்காக அல்ல, மாறாக மக்களின் மனங்களிலிருந்து மிகவும் சூட்சுமமான முறையில் மறக்கடிக்கப்பட்டுவரும் அவர்களது அபிலாஷைகளை, கோரிக்கைகளை இத்தேர்தலின் மூலம் உயிர்ப்பித்து, மீளவும் முன்னிற்குக் கொண்டுவருவது. தமிழ் மக்களின் அபிலாஷைகளை மீளவும் உணர்த்த இத்தேர்தலினைக் களமாகப் பாவிப்பதே உண்மையான நோக்கம். ஆகவேதான் தமிழ்ப் பொதுவேட்பாளர்  தேர்தலில் தோற்கப்போகிறார் என்று அஞ்சுவோர், ஏளனம் செய்வோர் அரசியல்த் தெளிவில்லாமல் இதனைச் செய்கிறார்கள் என்று எழுதினேன்.  உங்களைத் தனிப்பட்ட ரீதியில் இது தாக்கியிருந்தால் அதற்காக எனது வருத்தத்தினை இங்கே தெரிவித்துக்கொள்கிறேன். 
    • பிரித்தானிய நேரப்படி இன்று ஞாயிறு (16 ஜூன்) இரு போட்டிகள் நடைபெறவுள்ளன.   யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:   35)    முதல் சுற்று குழு B: ஞாயிறு ஜூன் 16: 1:30 AM, செயின்ற் லூஷியா, அவுஸ்திரேலியா  எதிர் ஸ்கொட்லாந்து     AUS  எதிர்  SCOT 22 பேர் அவுஸ்திரேலியா அணி வெல்லும் எனவும் ஒரே ஒருவர் ஸ்கொட்லாந்து அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர்.   ஸ்கொட்லாந்து நுணாவிலான்   இப்போட்டியில் 22 பேருக்குப் புள்ளிகள் கிடைக்குமா அல்லது ஸ்கொட்லாந்து அவுஸ்திரேலியா அணிக்கு அதிர்ச்சி கொடுத்து இங்கிலாந்து அணியை சுப்பர் 8 சுற்றுக்குள் போகவிடாமல் தடுக்குமா?       36)    முதல் சுற்று குழு A: ஞாயிறு ஜூன் 16: 3:30 PM, புளோரிடா, பாகிஸ்தான்   எதிர்   அயர்லாந்து     PAK  எதிர்  IRL 22 பேர்  பாகிஸ்தான் அணி வெல்லும் எனவும் ஒரே ஒருவர் அயர்லாந்து அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர்.   அயர்லாந்து  சுவி   இப்போட்டியில் பாகிஸ்தான் இரண்டு புள்ளிகள் தனது பெருமையை கொஞ்சம் காத்து 22 பேருக்கு தலா இரண்டு புள்ளிகள் வழங்குமா?
    • இரண்டாவது, தமிழர்களின் வாக்குகளை மூட்டையாக அள்ளிக்கொண்டுபோய் ரணிலின் காலடியிலோ, சரத் பொன்சேக்காவின் காலடியிலோ, சஜித்தின் காலடியிலோ, சந்திரிக்காவின் காலடியிலோ கொட்டி இதுவரையில் தமிழரசுக் கட்சியோ, தமிழ்க் கூட்டமைப்போ, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியோ கண்ட பலன் என்ன, தமிழர்களுக்கு இவற்றால் ஆன பயன் என்ன? இன்னும் எத்தனை காலத்திற்கு தமிழர்களின் வாக்குகளை அள்ளிக்கொண்டுபோய் அரசியல் வியாபாரம் செய்வதாக உத்தேசம்?  தமிழ்ப் பொதுவேட்பாளரை ஏன் நிறுத்தவேண்டும் என்பதற்கான எனது நிலைப்பாடு இதுதான். 1. சிங்கள பெளத்த ஜனாதிபதிகளில் தமிழ் மக்கள் முற்றாக‌ நம்பிக்கை இழந்துவிட்டார்கள் என்பதைச் சொல்வதற்கு. 2. சுதந்திரத்திற்குப் பின்னரான காலத்திலிருந்து தமிழினம் பட்டுவரும் அவலங்களும், அவர்கள் மீதான அடக்குமுறைகளும் இன்றும் அப்படியே இருக்கின்றது என்பதைச் சொல்வதற்கு (தேர்தல்ப் பிரச்சாரங்களில் இவை மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டப்பட வேண்டியதும், தேர்தலுக்கான சர்வதேச ஊடகங்களின் செய்திகளில் இச்செய்தியும் சொல்லப்படுவது அவசியம்). 3. 1976 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கமைய தமிழ் மக்கள் தமிழரசுக் கட்சிக்கு வழங்கிய ஆணையினை மீளவும் சிங்கள தேசத்திற்கும், சிங்கள அரசியல்த் தலைமைக்கும் நினைவுபடுத்துவதற்கு    ( யுத்தம் முடிவடைந்துவிட்டதால் தமிழ் மக்களின் பிரச்சினைகளும் முடிவிற்கு வந்துவிட்டன என்று சர்வதேசத்தில் செய்யப்பட்டு வரும் சிங்களத்தின் பிரச்சாரத்தை முறியடிக்கவேண்டியது அவசியம்). 4. 2009 இற்குப் பின்னர் தமிழ் அரசியலில் மிகவும் சூட்சுமமான முறையில் செய்யப்பட்டுவரும் தேசிய நீக்கம் என்பதனை முறியடித்து, தமிழ் மக்கள் இன்னமும் தேசியத்தின்பால் நிற்கிறார்கள் என்பதனை சிங்களத் தலைமைகளுக்கும், சர்வதேசத்திற்கும் காட்டுவதற்கு (தேசிய நீக்கம் என்பதும் புலிநீக்கம் என்பதும் சுமந்திரன் தலைமையில் மிகவும் இலாவகமாக தற்போது செய்யப்பட்டு வருகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் இவரது உள்ளடக்கமே இதனைச் செய்யத்தான் என்பது எனது கணிப்பு). 5. இன்று தமிழர்கள் சார்பாக அரசியலில் ஈடுபடுவோர் தமிழரின் நலன்களில் அக்கறையற்று இருக்கிறார்கள், தமிழரின் வாக்குகள் அவர்களைப்பொறுத்தவரை தமது சொந்த நலன்களை, பாராளுமன்றச் சலுகைகளை அடைந்துகொள்வதற்காக மட்டும்தான், ஆகவே அவர்களில் எமக்கு நம்பிக்கையில்லை, அவர்கள் கைகாட்டும் சிங்கள ஜனாதிபதியொருவருக்கு நாம் வாக்களிக்கப்போவதில்லை என்பதைக் காட்டுவதற்கு. 6. இலங்கையின் ஜனாதிபதியாக வரப்போகும் சிங்களவர் ஒருவரைத் தெரிவுசெய்வதில் தமக்கு எந்தப் பங்கும் இல்லை என்பதை தமிழர்கள் சர்வதேசத்திற்கும், சிங்களத்திற்கும் உரத்துச் சொல்வதற்கு.  1977 ஆம் ஆண்டுத் தேர்தலினை தமிழரசுக் கட்சி எவ்வாறு தனிநாட்டிற்கான தமிழ் மக்களின் ஆணையாகப் பாவித்து அமோக வெற்றியிட்டீயதோ, அதுபோன்றே தமிழ்ப் பொதுவேட்பாளர் ஒருவர் இந்த ஜனாதிபதித் தேர்தலை அதே தமிழ் மக்களின் ஆணையினைப் புதிப்பிக்க, தமிழ் மக்கள் இன்னும் அதே அபிலாஷைகளுடன் தான் இருக்கிறார்கள் என்பதை அழுத்தம் திருத்தமாகத் தெரிவிக்க, சிங்கள தேசத்தின் ஜனாதிபதிகளில் எமக்கு நம்பிக்கையில்லை என்பதைத் தெரிவிக்க, அவர்களுக்கு கூஜா தூக்கும் தமிழ் அரசியல் வியாபாரிகளில் எமக்கு நம்பிக்கையில்லை என்பதைக் காட்டப் பாவிக்க வேண்டும். இதற்காக நாம் செய்யவேண்டியதெல்லாம் சுமந்திரன் வகையறாக்களின் கூச்சல்களை அப்படியே குப்பையில் தூரக் கொட்டிவிட்டு, தமிழ்ப் பொதுவேட்பாளரின் அவசியம் குறித்து தமிழ் மக்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்தத் தொடர்ந்து செயற்படுவதுதான்.  இறுதியாக சுமந்திரனிடம் ஒரு கேள்வி : உங்களைத் தமிழர்களோ, அல்லது அவர்களில் ஒரு பகுதியினரோ துரோகி என்று முத்திரை குத்திவிடுவார்கள் என்பது உங்களுக்குத் தெரியும் என்று என்று கூறியிருந்தீர்கள். நீங்கள் அப்படிக் கூறியதன் காரணம் என்ன? (தமிழரின் நலன்களைக் காத்துக்கொள்ள நீங்கள் செய்யும் தியாகங்களுக்காக அவர்கள் உங்களைத் துரோகியாக்கப்போவதில்லை என்பது  உங்களுக்குத் தெரியாதது அல்லவே). அப்படியானால் எதற்காக இந்தத் துரோகிப் பட்டம் தொடர்பான அச்சம் உங்களுக்கு வருகிறது (இதை நமட்டுச் சிரிப்புடன், "என‌க்கு உதுக்கெல்லாம் பயமில்லை. எத்தினை பாத்தாச்சு" என்று சவடால் விட்டாலும்)? 
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.