Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாரிஸ் 2024 ஒலிம்பிக் பதக்கங்கள் : வியாழனன்று அறிமுகமாகிறது

05 FEB, 2024 | 10:26 AM
image

(ஆர்.சேது­ராமன்)

பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்­டி­க­ளுக்­கான பதக்­கங்கள் எதிர்­வரும் 8 ஆம் திகதி வியா­ழக்­கி­ழமை அறி­மு­கப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளன. இப்­போட்­டி­க­ளுக்­கான மற்­றொரு தொகுதி ரிக்கெற் விற்­ப­னையும் அன்­றைய தினம் ஆரம்­ப­மா­க­வுள்­ளது.

2024 கோடைக்­கால ஒலிம்பிக் விளை­யாட்டு விழா எதிர்­வரும் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11 ஆம் திக­தி ­வரை பிரான்ஸின் பாரிஸ் நகரில் நடை­பெ­ற­வுள்­ளது.

32 வகை­யான விளை­யாட்­டு­களில் 329 போட்டி நிகழ்ச்­சிகள் நடை­பெ­ற­வுள்­ளன. இப்­போட்­டி­களில் வழங்­கப்­ப­ட­வுள்ள பதக்­கங்கள் எதிர்­வரும் 8 ஆம் திகதி அறி­மு­கப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளன.

இப்­போட்­டி­க­ளுக்­கான  ரிக்கெற் விற்­பனை கடந்த வருடம் ஆரம்­ப­மா­கி­யது. ஏற்­கெ­னவே 7 மில்­லி­யன்­க­ளுக்கும் அதி­க­மான ரிக்­கெற்­றுகள் விற்­பனை செய்­யப்­பட்­டுள்­ளன. 

இந்­நி­லையில், மற்­றொரு தொகுதி டிக்கெட் விற்­பனை எதிர்­வரும் 8 ஆம் திகதி ஆரம்­ப­மாகும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

https://tickets.paris2024.org எனும், பாரிஸ் 2024 ஒலிம்பிக் ரிக்கெற் விற்­ப­னைக்­கான உத்­தி­யோ­க­பூர்வ இணை­யத்­த­ளத்தின் ஊடாக ரிக்­கெற்­று­களை கொள்­வ­னவு செய்­யலாம்.

எதிர்­வரும் ஆகஸ்ட் 28 முதல் செப்­டெம்பர் 8 ஆம் திக­தி­வரை நடை­பெ­ற­வுள்ள பரா­ ஒலிம்பிக் போட்­டி­க­ளுக்­கான ரிக்­கெற்­று­களும் மேற்­படி இணை­யத்தில் விற்­பனை செய்­யப்­ப­டு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

பாரிஸ்2024  ஒலிம்பிக் போட்­டி­க­ளுக்­கான 45 சத­வீ­த­மான ரிக்­கெற்­று­களின் விலை தலா 100 யூரோ­வுக்கு குறை­வாக இருக்கும் எனவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

மேற்­படி உத்­தி­யோ­க­பூர்வ இணை­யத்­தளம் தவிர்ந்த வேறு மூலங்கள் ஊடாக ரிக்கெற் கொள்­வ­னவு செய்­ய­முற்­ப­டும்­போது, ரிக்கெற் விநி­யோ­கிக்­கப்­ப­டாமை, அத்­த­கைய ரிக்­கெற்­று­களை வாங்­கி­ய­வர்கள் பாரிஸ் ஒலிம்பிக் ஏற்­பாட்­டா­ளர்­களால் விளை­யாட்டு அரங்­கு­க­ளுக்கு அனு­ம­திக்­கப்­ப­டாமை போன்ற ஆபத்­து­களை எதிர்­கொள்ள நேரி­டலாம் என ஏற்­பாட்­டா­ளர்கள் எச்­ச­ரித்­துள்­ளனர்.

அத்­துடன், உத்­தி­யோ­க­பூர்வ தளங்­க­ளுக்கு வெளியில் ரிக்­கெற்­று­களை வாங்­கு­வதும் மீள் விற்பனை செய்வதும் பிரெஞ்சு சட்டப்படி குற்றமாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரிக்கெற்றுகளை வாங்கியோர் அவற்றை மீள்விற்பனை செய்வதற்கான உத்தியோகபூர்வ தளமொன்று இளவேனிற் காலத்தில் (மார்ச் இறுதியில்) திறக்கப்படும் எனவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/175582

  • Replies 70
  • Views 5.7k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    ஒலிம்பிக் போட்டி மட்டுமா நடக்கிறது!!! ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளின் போது, ஒரே ஒரு  வாரத்தில் மாத்திரம் விளையாட்டு வீரர்கள் தங்கியிருந்த ஒலிம்பிக் கிராமங்களில் சுமாராக

  • இணையவன்
    இணையவன்

    எல்லா நாடுகளிலும் ஒலிம்பிக் விளையாட்டு நடக்கும்போது வெளிநாட்டிலிருந்து வரும் பல்லாயிரக்கணக்கான வீரர்கள் அவர்களுடன் வரும் பயிற்றுனர்கள் சேவையாளர்கள் ஆகியோருக்கு வழங்கப்படும் வரவேற்புப் அன்பளிப்புப் பொத

  • ஏராளன்
    ஏராளன்

    பாரிஸ் ஒலிம்பிக் சுடரை ஏந்திச்செல்லவுள்ள புலம்பெயர் இலங்கையர் தர்ஷன் செல்வராஜா 10 MAY, 2024 | 01:11 PM (நெவில் அன்தனி) பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்ட

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கனும் சீன‌னும் 

நிறைய‌ ப‌த‌க்க‌ங்க‌ளை வெல்வார்க‌ள்............

இந்தியா ஹா ஹா😁...............

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாரிஸ் 2024 ஒலிம்பிக் பதக்கங்கள் அறிமுகம் : ஈபிள் கோபுர உலோகத் துண்டும் உள்ளடக்கம்

09 FEB, 2024 | 10:27 AM
image

(ஆர்.சேதுராமன்)

பாரிஸ் 2024 ஒலிம்பிக் மற்றும் பராலிம்பிக் போட்டிகளில் வழங்கப்படவுள்ள பதக்கங்கள் நேற்று (08) அறிமுகம் செய்யப்பட்டன.

பாரிஸ் நகரின் உலகப் பிரசித்திபெற்ற ஈபிள் கோபுரத்தின் அசல்; துண்டொன்றும்  இப்பதக்கங்களில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

பாரிஸ் 2024 கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள்  எதிர்வரும் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன.  ஆகஸ்ட் 28 முதல் செப்டெம்பர் 8 வரை மாற்றுத் திறனாளிகளுக்கான பராலிம்பிக் போட்டிகள் நடைபெறும்.

இவ்விரு விளையாட்டு விழாக்களிலும் மொத்தமாக 5,084 தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் வழங்கப்படவுள்ளன.  

இப்பதக்கங்களின் மத்தியில் 6 கோண வடிவிலான இரும்புத் துண்டொன்றும் பதிக்கப்பட்டுள்ளது.

ஈபிள் கோபுரத்திலிருந்து அகற்றப்பட்ட அசல் இரும்புத் துண்டுகள் மூலம் ஒலிம்பிக் பதக்கத்தின் அறுகோண வடிவிலான பாகம் தயாரிக்கப்பட்டுள்ளது என பாரிஸ் ஒலிம்பிக் ஏற்பாட்டுக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.  

'பாரிஸ் ஒலிம்பிக், பராலிம்பிக் வெற்றியாளர்களுக்கு  1899 ஆம் ஆண்டின் ஈபிள் கோபுரத்தின் துண்டொன்றையும் வழங்க  நாம் விரும்பினோம்' என பாரிஸ் 2024 ஒலிம்பிக், பராலிம்பிக் ஏற்பாட்டுக்குழுவின் தலைவர் டோனி எஸ்டாங்குவே கூறினார்.

 பாரிஸை தளமாகக் கொண்ட ஆபரண வடிவமைப்பு நிறுவமான சவ்மெட் இப்பதக்கங்களை வடிவமைத்துள்ளது. நாணயங்களைத்  தயாரிக்கும் அரச நிறுவனமான 'மின்னே டி பரிஸ்' இப்பதக்கங்களைத் தயாரித்துள்ளது.

https://www.virakesari.lk/article/175946

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நூற்றாண்டுக்கு முன் பாரிஸ் நகரில் பாவோ நூமி வென்ற 5 தங்கங்கள் பாரிஸில் காட்சிப்படுத்தப்படும்

28 FEB, 2024 | 05:19 PM
image

(நெவில் அன்தனி)

ஒலிம்பிக் விளையாட்டு விழா வரலாற்றில் அதிசிறந்த ஒலிம்பிக் சம்பியன்களில் ஒருவரான பாரோ நுமியினால் ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் பிரெஞ்ச் தலைநகரில் வென்றெடுக்கப்பட்ட ஐந்து தங்கப் பதக்கங்கள் முதல் தடவையாக பாரிஸ் நகருக்கு அடுத்த மாதம் கொண்டு செல்லப்படவுள்ளது.

'பறக்கும் பின்லாந்து வீரர்', 'பின்லாந்து ஆவி', 'பின்லாந்தின் ஆச்சரியத்தக்க ஓட்ட வீரர்' என்று அழைக்கப்பட்டவர் பாவோ நூமி.

Paavo_Nurmi_1924_olympic_race_participat

1924ஆம் ஆண்டு பாரிஸில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் மத்திய மற்றும் நெடுந்தூர ஓட்டப் போட்டிகளில் 5 தங்கப் பதங்களை வென்றதன் மூலம் பாவோ நூமி முழு உலகையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

அவர் வென்ற 5 தங்கப் பதக்கங்களில் 3 பதக்கங்கள் தனிநபர் நிகழ்ச்சிகளிலும் 2 பதக்கங்கள் அணிநிலை நிகழ்ச்சிகளிலும் பெறப்பட்டவையாகும்.

1500 மீட்டர், 3000 மீட்டர், தனிநபர் நகர்வல ஓட்டப் போட்டி ஆகியவற்றில் அவர் தங்கப் பதக்கங்களை சுவீகரித்தார்.

அணி நிலை நகர்வலப் போட்டி மற்றும் 3000 மீட்டர் அணிநிலை போட்டி ஆகியவற்றிலும் அணிக்கான தங்கப் பதக்கங்களை பாவோ நூமி வென்றிருந்தார்.

pn_Pariisi-1924_maastojuoksu.jpg

பாரிஸ் 1924 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் பாவோ நூமி வென்றெடுத்த 5 தங்கப் பதக்கங்கள் இன்றும் ஒரே ஒலிம்பிக் அத்தியாயத்தில் மெய்வல்லுநர் ஒருவரால் வெல்லப்பட்ட அதிக தங்கப் பதக்கங்களாக இருக்கின்றன.

நூமி குடும்பத்தாரின் பரிவான பெருந்தன்மையின் பலனாக 1924இல் நூமியினால் வெல்லப்பட்ட அந்த ஐந்து தங்கப் பதக்கங்களும் பிரெஞ்சு தலைநகர் பாரிஸின் மையத்தில் செய்ன் பகுதியின் இடதுகரையில் உள்ள மொனாய் டி பாரிஸ் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்படும்.

paavo_nurmi_s_5_golds_1924_paris_olympic

ஒலிம்பிக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக ஒலிம்பிக்கில் வென்றெடுக்கப்பட்ட தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் இந்த அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்படும். அதில் நூமியின் பதக்கங்களும் அடங்குகின்றன.

நவீன ஒலிம்பிக்கின் பரிணாம வளர்ச்சியை முன்னிலைப்படுத்தி பல்வேறு வடிவங்களைக் கொண்ட ஒலிம்பிக் பதக்கங்கள் அங்கு காட்சிப்படுத்தப்படவுள்ளது.

இந்தக் கண்காட்சியை ஊடகத்துறையினர் மார்ச் 26ஆம் திகதி பார்வையிட அனுமதிக்கப்படுவர். அதன் பின்னர் மார்ச் 27இலிருந்து செப்டெம்பர் 22 வரை பொதுமக்களுக்கு கண்காட்சி திறக்கப்பட்டிருக்கும்.

pn_1924_kotiinpaluujuhla-Pallokent_ll_.j

https://www.virakesari.lk/article/177520

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒலிம்பிக் விழாவுக்கான பாதுகாப்பு திட்டங்களைக் கொண்ட கணினியும் யூ.எஸ்.பி. திறப்புகளும் திருடப்பட்டுள்ளது

Published By: VISHNU    29 FEB, 2024 | 08:04 PM

image

(நெவில் அன்தனி)

பாரிஸ் நகரில் ஆரம்பமாகவுள்ள 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழாவுக்கான பாதுகாப்புத் திட்டங்களுடன் பாரிஸ் சிட்டி ஹோல் பொறியியலாளர் ஒருவருக்கு சொந்தமான கணினி மற்றும் இரண்டு யூ.எஸ்.பி. திறப்புகளைக் கொண்ட பை திருடப்பட்டுள்ளது. இந்தத் திருட்டு காரணமாக பிரான்ஸ் அதிகாரிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.

pic.jpg

பிரெஞ்சு தலைநகர் பாரிஸில் 2024 ஜூலை 26ஆம் திகதியிலிருந்து முதல் ஆகஸ்ட் 11ஆம் திகதிவரை நடைபெறவுள்ள ஒலிம்பிக் விளையாட்டு விழா தொடர்பான முக்கியமான பாதுகாப்புத் தகவல்கள் இந்த கணினியில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

கெயா டு நோர்ட் என்ற ரயில் நிலையத்தில் வைத்து இந்த கணினியும் இரண்டு யூ.எஸ்.பி. திறப்புகளும் திருடப்பட்டுள்ளது.

க்ரெய்ல் நகருக்கு பயணிப்பதற்காக கெயா டு நோர்ட் ரயில் நிலையத்தில் 18ஆவது மேடையில் நிறுத்தப்பட்டிருந்த ரயிலில் ஏறிய சிறிது நேரத்தில் இந்த திருட்டு இடம்பெற்றுள்ளதாக கணினி உரிமையாளரான பாரிஸ் சிட்டி ஹோல் ஊழியர் முறையிட்டுள்ளார்.

இந்த சம்பவரம் கடந்த திங்கட்கிழமை இரவு 7.00 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸ் வட்டாரம் தெரிவித்தது.

பையின் உரிமையாளர் ரயிலில் தனது ஆசனத்துக்கு மேலாக உள்ள பொதிகள் வைக்கும் பகுதியில் தனது பையை வைத்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்தப் பை காணாமல் போயிருந்ததை அவர் கவனித்ததாக பொலிசாரிடம் அவர் முறைப்பாடு செய்துள்ளார்.

புலனாய்வு பிரிவினருக்கு பொறியியலாளர் அளித்த வாக்குமூலத்தில், தனது பணி கணினி மற்றும் இரண்டு யூ.எஸ்.பி. குற்றிகளில் மாநகர பொலிஸார் தயாரித்த ஒலிம்பிக் விளையாட்டு விழாவுக்கான பாதுகாப்புத் திட்டங்கள் தொடர்பான முக்கியமான தகவல்கள் இருந்ததாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பாரிஸ் சிட்டி ஹால் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.

பிரெஞ்சு தலைநகரில் இடம்பெறும் பல திருட்டுகளில் இதுவும் ஒன்றாக இருக்கலாம் என கருதப்படுகின்றது. எனினும், நவீன யுகத்தின் 33ஆவது ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆரம்பமாவதற்கு ஐந்து மாதங்கள் உள்ள நிலையில் இடம்பெற்றுள்ள இந்த சம்பவம் பாரிஸ் அதிகாரிகளை கவலையடையச் செய்துள்ளது.

இவ் விடயம் விளையாட்டு விழாவின் பாதுகாப்பில் மற்றொரு சிக்கலை உருவாக்கிவிட்டுள்ளது.

ஒலிம்பிக் விளையாட்டு விழா உத்தியோகபூர்வமாக ஜூலை 26ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள போதிலும் கால்பந்தாட்டம் மற்றும் றக்பி ஆகிய விளையாட்டுக்களின் முதலாம் கட்டப் போட்டிகள் ஜூலை 24ஆம் திகதி ஆரம்பமாகும்.

ஒலிம்பிக் விளையாட்டு விழாவின்போது 2,000 மாநகர பொலிஸாரை பணியில் நிறுத்த பாரிஸ் ஏற்பாட்டுக் குழு திட்டமிட்டுள்ளது. அவர்கள் 35,000 பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படையினருடன் இணைந்து 10,000 விளையாட்டு வீர, வீராங்கனைகளுக்கும் இலட்சக்கணக்கான சுற்றுலா பயணிகளுக்கும் பாதுகாப்பு வழங்கவுள்ளனர்.

ஒலிம்பிக் விளையாட்டு விழா பாரிஸிலும் அதனைச் சூழவுள்ள நகரங்களிலும் நடைபெறவுள்ளது.

https://www.virakesari.lk/article/177627

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா புக‌ழும் அமெரிக்க‌னுக்கே😁...............

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாரிஸ் ஒலிம்பிக்கில் இஸ்ரேலுக்கு தடையில்லை: - சர்வதேச ஒலிம்பிக்குழு 

Published By: SETHU    12 MAR, 2024 | 10:03 AM

image

(ஆர்.சேதுராமன்)

காஸா யுத்தம் காரணமாக, பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் இஸ்ரேலுக்கு தடை விதிக்கும் திட்டம் எதுவுமில்லை என சர்வதேச ஒலிம்பிக்குழு  தெரிவித்துள்ளது.

உக்ரேன் யுத்தத்தின் அடிப்படையில் ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாடுகளின் போட்டியாளர்கள் அவ்விரு நாடுகளின் சார்பாக போட்டிகளில் பங்குபற்றுவதற்கு ஐ.சி.சி. தடைவிதித்துள்ளது. அவர்கள் நடுநிலை போட்டியாளர்களாகவே பங்குபற்ற அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காஸா யுத்தம் காரணமாக, இஸ்ரேலுக்கும் ஒலிம்பிக்கில் தடை விதிக்குமாறு பலஸ்தீன செயற்பாட்டாளர்கள் மற்றும் பிரான்ஸின் இடதுசாரி எம்.பிகள் சிலரும் ஐ.ஓ.சி.யை வலியுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில், கடந்தவாரம்  பாரிஸுக்கு விஜயம் மேற்கொண்ட, பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டிகளுக்கான சர்வதேச ஒலிம்பிக் குழுவின் (ஐ.ஓ.சி.) இணைப்புக் குழுத் தலைவர் பியர் ஒலிவியே பெக்கர்ஸ் வியூஜன்ட்டிடம், காஸா யுத்தம் காரணமாக இஸ்ரேலுக்குத் தடை விதிக்கப்படுமா என நேற்றுமுன்தினம் கேட்கப்பட்டது.

அப்போது, அவர் பதிலளிக்கையில், இஸ்ரேலுக்கு தடைவிதிக்கப்படுவதற்கு சாத்தியமில்லை எனத் தெரிவித்தார்.

ஆரம்பத்தில் ரஷ்யாவுக்கும் பின்னர் ரஷ்ய ஒலிம்பிக் குழுவுக்கும் தடை விதிக்கப்பட்டமைக்கான காரணங்கள் தனித்துவமானைவ.  ரஷ்யாவும், ரஷ்ய ஒலிம்பிக் குழுவும் ஒலிம்பிக் சாசனத்தின் அத்தியாவசியமான பகுதிகளை பலவீனப்படுத்தின.

பலஸ்தீன ஒலிம்பிக் குழு அல்லது இஸ்ரேலிய குழு விடயத்தில் இந்நிலைமை இல்லை, அவை அமைதியாக ஒருங்கிருக்கின்றன' என அவர் கூறினார்.

2022 ஆம் ஆண்டு பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் முடைந்து 4 நாட்களின் பின், அதாவது 2022 குளிர்கால பராலிம்பிக் ஆரம்பமாகுவதற்கு 9 நாட்களுக்கு முன் உக்ரேன் மீது ரஷ்யா படையெடுத்தது. இதனால் ஒலிம்பிக் கால போர் நிறுத்தத்தை ரஷ்யா மீறிவிட்டதாக ஐ.ஓ.சி தலைவர் தோமஸ் பாக் கூறியிருந்தார்.

ரஷ்யாவினால் கைப்பற்றப்பட்ட உக்ரேனிய பிராந்தியங்களைச் சேர்ந்த பிராந்திய விளையாட்டு அமைப்புகளையும் தனது அங்கத்தவர்களாக ரஷ்ய ஒலிம்பிக்குழு உள்ளடக்கியதையடுத்து, ரஷ்ய ஒலிம்பிக் குழுவுக்கும் ஐ.ஓ.சி. கடந்த ஒக்டோபர் மாதம்  தடை விதித்தது.

https://www.virakesari.lk/article/178492

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்காக 46 நாடுகளின் படையினரைக் கோரும் பிரான்ஸ்

Published By: SETHU   01 APR, 2024 | 11:45 AM

image
 

(ஆர்.சேது­ராமன்)

பாரிஸ் ஒலிம்பிக் போட்­டி­க­ளுக்­காக ஆயி­ரக்­க­ணக்­கான பாது­காப்பு அதி­கா­ரி­களை அனுப்­பு­மாறு தனது நட்பு நாடு­க­ளிடம் பிரான்ஸ் கோரி­யுள்­ளது. 

ஒலிம்பிக் போட்­டி­க­ளுக்­காக 46 நாடு­க­ளி­ட­மி­ருந்து 2,185 பொலி­ஸாரை அனுப்­பு­மாறு கோரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது என பிரெஞ்சு உள்­துறை அமைச்சு அதி­காரி ஒருவர் தெரி­வித்­துள்ளார். 

கடந்த ஜன­வரி மாதம் இக்­கோ­ரிக்கை விடுக்­கப்­பட்­ட­தா­கவும் 35 நாடுகள் சாத­க­மாக பதி­ல­ளித்­துள்­ள­தா­கவும் பிரெஞ்சு அர­சாங்க வட்­டா­ரங்கள் தெரி­வித்­துள்­ளன.

ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11 வரை நடை­பெறும் பாரிஸ் ஒலிம்பிக் போட்­டிகள் மற்றும் ஆகஸ்ட் 28 முதல் செப்­டெம்பர் 8 வரை நடை­பெறும் பரா­லிம்பிக் போட்­டி­க­ளின்­போது தினந்­தோறும் 45,000 பிரெஞ்சு பொலி­ஸாரை பணியில் அமர்த்த பிரான்ஸ் திட்­ட­மிட்­டுள்­ளது. 20,000 தனியார் பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள், 15,000 படை­யி­னரையும் சேவையில் ஈடு­ப­டுத்த திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது. 

எனினும், முக்­கிய சர்­வ­தேச விளை­யாட்டு விழாக்­களில் வெளி­நாட்டுப் படை­யி­னரை ஈடு­ப­டுத்­து­வது வழக்­க­மா­னது.

2022 உலகக் கிண்ண கால்­பந்­தாட்டப் போட்­டி­க­ளுக்­காக கட்­டா­ருக்கு 200 பொலிஸாரை பிரான்ஸ் அனுப்­பி­யி­ருந்­தது. கடந்த வருட உலகக் கிண்ண றக்பி போட்டிகளின்போது  ஐரோப்பிய நாடுகளிலிருந்து 160 படையினரை பிரான்ஸ் வரவேற்றிருந்தது.

https://www.virakesari.lk/article/180117

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்றால் இனி பரிசுத்தொகை: உலக தடகள அமைப்பு அறிவிப்பு!

உலக தடகள விளையாட்டு அமைப்பு ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வெல்பவர்களுக்கான பரிசுத் தொகையை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் ஒலிம்பிக் போட்டிகளில் பரிசுத்தொகையை வழங்கும் முதல் சர்வதேச கூட்டமைப்பாக உலக தடகள விளையாட்டு மாறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாரிஸில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள கோடைகால ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றி பெறும் விளையாட்டு வீரர்களுக்கு நிதி ரீதியாக வெகுமதி அளிக்கப்பட உள்ளது. பாரிஸில் நடைபெறும் 48 தடகளப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்பவர்களுக்கு $50,000 (46,000 யூரோக்கள்) வழங்கப்படும்.

அதேவேளை லொஸ் ஏஞ்சல்ஸில் 2028 ஒலிம்பிக்கில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றவர்களுக்கும் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று சர்வதேச கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

உலக தடகளத் தலைவர் செபாஸ்டியன் கோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்றவர்களுக்கான பரிசுத் தொகை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உலக தடகளப் போட்டிகளுக்கும் ஒட்டுமொத்த தடகள விளையாட்டுக்கும் ஒரு முக்கிய தருணமாகும், இது விளையாட்டு வீரர்களை மேம்படுத்துவதற்கும் அவர்களின் முக்கிய பங்கை அங்கீகரிப்பதிலும் எங்களின் அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

லொஸ் ஏஞ்சல்ஸில் 2028-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்லும் மூன்று வீரர்களுக்கும் வெகுமதி அளிக்க உறுதியாக இருக்கிறோம். பாரிஸில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கான தங்கப் பதக்க நிகழ்ச்சிகளுக்கு நிதியளிக்கும் நிலையில் நாங்கள் இப்போது இருக்கிறோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

https://thinakkural.lk/article/298777

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

16 APR, 2024 | 12:43 PM
image

(நெவில் அன்தனி)

பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆரம்பமாவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில் கிரேக்கத்தின் பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் பாரம்பரிய முறையில் இன்று செவ்வாய்க்கிழமை (16) ஏற்றப்படவுள்ளது.

இந்த ஒலிம்பிக் சுடர் பிரெஞ்சு தலைநகர் பாரிஸை எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதி சென்றடைவதற்கு முன்னர் அக்ரோபோலியிலிருந்து பிரெஞ்சு பொலினேசியாவுக்கு பயணிக்கவுள்ளது.

கொவிட் - 19 தொற்றுநோய் காரணமாக டோக்கியோ 2020 ஒலிம்பிக், பெய்ஜிங் 2022 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களுக்கான தீபச் சுடர் ஏற்ற நிகழ்வு பார்வையாளர்கள் இன்றி நடத்தப்பட்டது. இம்முறை ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றத்தை பொதுமக்கள் நேரடியாக பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கிரேக்க ஒலிம்பிக் குழுத் தலைவர் கெத்தரினா சக்கெல்லாரோபவ்லூ, சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவர் தோமஸ் பெச் உட்பட சுமார் 600 பிரமுகர்கள் ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றும் வைபவத்தில் கலந்துகொள்வர் என அறிவிக்கப்படுகிறது.

1_FLAME.jpg

பண்டைய பெண் பாதிரியார்களாக   உடையணிந்த நடிகைகள் குழிவுவில்லை கண்ணாடியைக் கொண்டு சூரிய ஒளிக் கதிரினால் இயற்கையாக சுடரை ஏற்றிவைப்பர். கிறிஸ்துவுக்கு முன்னர் 776ஆம் ஆண்டில் பண்டைய ஒலிம்பிக்கின் பிறப்பிடமான ஒலிம்பியாவில் ஆரம்பமான இயற்கையாக தீபச் சுடரை ஏற்றும் இந்த நடைமுறை பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டுவருகிறது.

2_FLAME.jpg

3_FLAME.jpg

2600 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஹேரா கோவிலின் இடிபாடுகள் உள்ள இடத்தில் நடைபெறும் இந்த வைபவத்தில் ஒலிம்பிக் கீதத்தை அமெரிக்க பாடகி ஜொய்ஸ் டிடோனட்டோ பாடுவார்.

4_joyce_didonato...jpg

ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படுவதானது ஒலிம்பிக் விழாவுக்கான நாட்களைக் கணக்கிடுவதாக அமைகிறது.

ஒலிம்பிக் சுடரை முதலாவதாக ஏந்திச் செல்லும் பாக்கியம் கிரேகத்தின் படகோட்ட சம்பியன் ஸ்டெஃபானஸ் டௌஸ்கொஸுக்கு கிடைத்துள்ளது. இவர் டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் படகோட்டப் போட்டியில் பங்குபற்றிய வீரராவார்.

கிரேக்கத்தில் ஒலிம்பிக் சுடரை சுமார் 600 பேர், 11 தினங்களில் 5,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஏந்திச் செல்வர்.

5_laure_manaudou_torch_bearer_france.png

ஏதென்ஸ் 2004 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் நீச்சல் போட்டியில் சம்பியனான பிரெஞ்சு நீச்சல் வீராங்கனை லோரி மனவ்டூ, பிரான்ஸ் தேச ஒலிம்பிக் சுடர் பயணத்தில் முதலாமவராக தீபத்தை ஏந்திச் செல்வார்.

பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஜூலை 26ஆம் திகதி தொடக்க விழாவுடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் 11ஆம் திகதி முடிவு விழாவுடன் நிறைவுபெறும்.

https://www.virakesari.lk/article/181219

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

@கிருபன்

ஒலிம்பிக் போட்டி யாழில் ந‌ட‌த்தும் ஜ‌டியா இருக்கா........................

முன்பு ஒரு முறை யாழில் ந‌ட‌த்தின‌வை......................

அடுத்த‌ ஒலிம்பிக்கில் கிரிக்கேட்டும் சேர்க்க‌ ப‌டும் என்று எங்கையோ வாசித்த‌ ஞாபக‌ம்...................................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தகுதி பெறாவிட்டாலும் பலஸ்தீன போட்டியாளர்கள் பலர் பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்குபற்ற அழைக்கப்படுவர் - சர்வதேச ஒலிம்பிக்குழு தலைவர்

Published By: DIGITAL DESK 7   29 APR, 2024 | 03:29 PM

image

(ஆர்.சேது­ராமன்)

பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்­டி­க­ளுக்கு பலஸ்­தீன போட்­டி­யா­ளர்கள் தகுதி பெறா­விட்­டாலும், அவர்­களில் சில­ருக்கு போட்­டி­களில் பங்­கு­பற்ற வரு­மாறு சர்­வ­தேச ஒலிம்பிக் குழு அழைப்பு விடுக்­க­வுள்­ளது என அதன் தலைவர் தோமஸ் பெச் தெரி­வித்­துள்ளார்.

ஏ.எவ்.பி. செய்திச் சேவைக்கு அளித்த செவ்­வி­யொன்றில் சர்­வ­தேச ஒலிம்பிக் குழு தலைவர் தோமஸ் பெச் இது தொடர்­பாக கூறு­கையில், ஜூலை 26 ஆம் திகதி ஆரம்­ப­மா­க­வுள்ள பாரிஸ் ஒலிம்பிக் போட்­டி­க­ளுக்­காக பல்­வேறு விளை­யாட்­டுக்­களின் தகுதி காண் போட்­டிகள் நடை­பெற்று வரு­கின்­றன எனக் கூறினார்.

“எனினும், பலஸ்­தீன போட்­டி­யா­ளர்கள் எவரும் போட்­டி­களில் பங்­கு­பற்­று­தற்கு தகுதி பெறா­விட்­டாலும் தகு­தி­யான போட்­டி­யா­ளர்கள் இல்­லாத ஏனைய தேசிய ஒலிம்பிக் குழுக்­களைப் போன்று பலஸ்­தீ­னமும் அழைப்­புகள் மூலம் பய­ன­டை­வதில் நாம் தெளி­வாக உறு­தி­பூண்­டுள்ளோம்” என தோமஸ் பெச் கூறினார்.

6 முதல் 8 பலஸ்­தீன போட்­டி­யா­ளர்கள் ஒலிம்­பிக்கில் பங்­கு­பற்­றுவர் என தான் எதிர்­பார்ப்­ப­தா­கவும் அவர் கூறினார்.

காஸா மோதல் ஆரம்­ப­மான முதல் நாளி­லி­ருந்து,  வீர­ வீ­ராங்­க­னைகள் தகு­திகாண் போட்­டி­களில் பங்­கு­பற்­று­வ­தற்கும் பயிற்­சி­களை தொடர்­வ­தற்கும் சர்­வ­தேச ஒலிம்பிக் குழு பல்­வேறு வழி­களில் உத­வி­யுள்­ளது எனவும் அவர் கூறினார்.

ஒலிம்­பிக்கில் உல­க­ளா­விய பங்­கு­பற்­று­தலை ஊக்­கு­விப்­ப­தற்­காக, தகு­தி­யான போட்­டி­யா­ளர்கள் போதி­ய­ளவில் இல்­லாத தேசிய ஒலிம்பிக் சங்­கங்­களைச் சேர்ந்த போட்­டி­யா­ளர்­க­ளுக்கு சர்­வ­தேச ஒலிம்­பிக்­குழு விசேட அழைப்பு விடுப்­பது வழக்கம். சர்­வ­தேச ஒலிம்­பிக்­குழு, தேசிய ஒலிம்பிக் சங்­கங்கள், சர்­வ­தேச விளை­யாட்டுச் சம்­மே­ள­னங்­களின் பிர­தி­நி­திகள் அங்கம் வகிக்கும் 'முத்­த­ரப்பு குழு­வினால்' விசேட அழைப்­புக்­கு­ரிய போட்­டி­யா­ளர்கள் தெரிவு செய்­யப்­ப­டு­கின்­றனர்.

 1976 ஆம் ஆண்டு பலஸ்­தீன தேசிய ஒலிம்பிக் குழு உரு­வாக்­கப்­பட்­டது. 1996 அட்­லாண்டா ஒலிம்­பிக்கில் முதல் தட­வை­யாக பலஸ்­தீனம் சார்பில் போட்­டி­யாளர் ஒருவர் பங்­கு­பற்­றினார். அதி­க­பட்­ச­மாக  ரியோ 2016 ஒலிம்­பிக்கில் 2 பெண்கள் உட்­பட 6 பலஸ்­தீன போட்­டி­யா­ளர்கள் பங்­கு­பற்­றினர். 2021 இல் நடை­பெற்ற டோக்­கியோ 2020 ஒலிம்­பிக்கில் 2 பெண்கள் உட்­பட 5 பலஸ்­தீன போட்­டி­யா­ளர்கள் பங்­கு­பற்­றியமை குறிப்­பி­டத்­தக்­கது.

அதே­வேளை, உக்ரேன் மீதான படை­யெ­டுப்பு தொடர்பில் ரஷ்­யாவை ஒரு­வி­த­மா­கவும், காஸா யுத்தம் தொடர்­பாக இஸ்­ரேலை வேறு­வி­த­மா­கவும் சர்­வ­தேச ஒலிம்­பிக்­குழு கையாள்­கி­றது என்ற கருத்தை தோமஸ் பெச் நிரா­க­ரித்தார்.

https://www.virakesari.lk/article/182243

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த‌ மாத‌ம்

ஒரே விளையாட்டு தான்......................கிரிக்கேட் உல‌க‌ கோப்பை ஒலிம்பிக்...............................................................................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

128 ஆண்டுகள்…பழமையான கப்பலில்…வந்தது ஒலிம்பிக் தீபம்

olicmpic-1.jpg

பிரான்சின் தலைநகராக பாரிசில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவிற்கு 79 நாட்களுக்கு முன்னதாக, பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தெற்கு துறைமுக நகரமான மார்செய்லியில் ஒலிம்பிக் தீபம் வந்தடைந்தது.

கிரீஸிலிருந்து 12 நாள் கடல்ப் பயணத்திற்குப் பின்னர் இந்த ஒலிப்பிக் சுடல் வந்தடைந்தது. 128 ஆண்டுகள் பழமையான மூன்று மாஸ்ட் பாய்மரக் கப்பலான Belem இல் ஒலிம்பிக் சுடர் கொண்டு வரப்பட்டது. 1000 படகுகள் ஒலிம்பிக் சுடர் கொண்டுவரப்பட்ட கப்பலை வரவேற்றன.

ஒலிப்பிக் சுடரை பிரான்சின் 2012 ஒலிம்பிக்கில் ஆண்கள் பிரிவில் 50 மீ ஃப்ரீஸ்டைல் நீச்சல் சாம்பியனான ஃப்ளோரன்ட் மானாடோ தரையிறக்கினார்.

மார்சேயில் பிறந்த பிரெஞ்சு ராப்பர் ஜூல், பாரீஸ் 2024 ஒலிம்பிக் கொப்பரையை ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனை உள்ளடக்கிய 150,000 மக்கள் முன்னிலையில் ஏற்றி வைப்பதற்கு முன்பு, ரியோ 2016 இல் 400 மீட்டர் சாம்பியனான பாராலிம்பிக் தடகள தடகள வீரர் நான்டெனின் கீதாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஒலிம்பிக் சுடர் ரிலே வியாழன் அன்று மத்தியதரைக் கடலோர நகரத்திலிருந்து புறப்பட்டு, ஜூலை 26 ஆம் தேதி தொடக்க விழாவிற்கு பாரிஸ் வருவதற்கு முன்பு பிரான்ஸ் மற்றும் ஆறு வெளிநாட்டுப் பகுதிகளுக்குச் செல்லவுள்ளது.

6,000 சட்ட அமலாக்க அதிகாரிகள், நாய் பிரிவுகள் மற்றும் உயரடுக்கு படை துப்பாக்கி சுடும் வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

https://thinakkural.lk/article/301212

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாரிஸ் ஒலிம்பிக் சுடரை ஏந்திச்செல்லவுள்ள புலம்பெயர் இலங்கையர் தர்ஷன் செல்வராஜா

10 MAY, 2024 | 01:11 PM
image

(நெவில் அன்தனி)

பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழாவுக்கான ஒலிம்பிக் சுடரை ஏந்திச் செல்ல தேர்ந்தெடுக்கப்பட்டது தனது அதிர்ஷ்டம் என்கிறார் பாரிஸில் வாழ்ந்துவரும் பேக்கரி உரிமையாளரும் புலம்பெயர் இலங்கைத் தமிழருமான தர்ஷன் செல்வராஜா.

4.jpg

பிரான்ஸ் தேசத்தின் பல்வேறு பாகங்களுக்கு தொடர் ஓட்டமாக கொண்டு செல்லப்படவுள்ள ஒலிம்பிக் சுடரை ஏந்திச் செல்வதற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ள 11,000 பிரான்ஸ் பிரஜைகளில் தர்ஷன் செல்வராஜாவும் ஒருவராவார்.

ஆயிரக்கணக்கானவர்களில் தானும் ஒருவனாக தேர்ந்தெடுக்கப்ட்டதையிட்டு பெரு மகிழ்ச்சி அடைவதாக ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தர்ஷன் செல்வராஜா தெரிவித்தார்.

3.jpg

'என்னைப் பொறுத்தமட்டில் இது எனக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கிறது. பாரிஸில் ஒலிம்பிக் சுடரை ஏந்திச் செல்லும் முதலாவது இலங்கையராக நான் இருக்கக்கூடும் என எண்ணுகிறேன். ஒலிம்பிக் சுடரை ஏந்திச் செல்வதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயிரக்கணக்கானவர்களில் நானும் ஒருவன் என்பதையிட்டு நான் பெரு மகிழ்ச்சி அடைகின்றேன். இதனை ஒரு பாக்கியமாக நான் கருதுகிறேன். 

7.jpg

என்னைத் தேர்ந்தெடுத்த பிரான்ஸ் விளையாட்டுத்துறை அமைச்சர் (அமேலி ஒளடியா கெஸ்டீரா) உட்பட தெரிவுக் குழுவினருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்' என்றார் தர்ஷன் செல்வராஜா.

'பாரிஸ் 2024 ஒலிம்பிக் சுடரை எப்போது ஏந்திச் செல்வேன் என இன்னும் எனக்கு அறிவிக்கப்படவில்லை. ஆனால், தற்போது பிரான்ஸில் வலம்வரும் ஒலிம்பிக் சுடர் ஜூலை மாதம் பாரிஸுக்கு வருகை தந்த பின்னர் எனக்கு ஒலிம்பிக் சுடரை ஏந்திச் செல்லும் பாக்கியம் கிடைக்கும்' என அவர் மேலும் குறிப்பிட்டார். 

https://www.virakesari.lk/article/183147

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாரிஸ் 2024 ஒலிம்பிக் குத்துச்சண்டையில் பதக்கங்கள் வெல்பவர்களுக்கு பணப்பரிசுகள்; சர்வதேச குத்துச்சண்டை சங்கம் அறிவிப்பு!

01 JUN, 2024 | 11:53 AM
image

(ஆர்.சேதுராமன்)    

எதிர்வரும் பாரிஸ் 2024 ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டிகளில் பதக்கங்கள் வெல்பவர்கள் அனைவருக்கும் பணப்பரிசுகளை வழங்கப்போவதாக சர்வதேச குத்துச்சண்டை சங்கம்  (IBA) அறிவித்துள்ளது.

தங்கம், வெள்ளி, வெண்கலம் ஆகிய 3 பதக்கங்களுக்கும் பணப்பரிசுகள் வழங்கப்படவுள்ளதாக அச்சங்கம் புதன்கிழமை (29) தெரிவித்துள்ளது.

இதன்படி, பாரிஸ் 2024 ஒலிம்பிக் குத்துச்சண்டைப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்பவர்களுக்கு தலா 100,000 அமெரிக்க டொலர்களும் வெள்ளிப் பதக்கத்துக்கு தலா 50,000 டொலர்களும், வெண்கலப் பதக்கத்துக்கு தலா 25,000 டொலர்களும் வழங்கப்படும் என சர்வதேச குத்துச்சண்டை சங்கம் தெரிவித்துள்ளது.

இப்பரிசுத்தொகையை போட்டியாளர், பயிற்றுநர் மற்றும் தேசிய சம்மேளனத்துக்கு பகிர்ந்தளிக்கப்படும்.

இதன்படி, தங்கப்பதக்கத்துக்கு வழங்கப்படும் 100,000 டொலர்களில் போட்டியாளர் 50,000 டொலர்களைப் பெறுவார். அவரின் தேசிய சம்மேளனத்துக்கும் பயிற்றுநருக்கும் தலா 25,000 டொலர்கள் வழங்கப்படும் என சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தின் தலைவர் உமர் கிரேம்லேவ் தெரிவித்துள்ளார்.

ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டிகளை ஏற்பாடு செய்யும் உரிமையை  சர்வதேச குத்துச்சண்டை சங்கத்திடமிருந்து (ஐ.பி.ஏ) சர்வதேச ஒலிம்பிக் குழு (ஐ.ஓ.சி) நீக்கியுள்ள நிலையில் அச்சங்கம் இப்பணப்பரிசு அறிவிப்பை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

1896 ஆம் ஆண்டு முதல் நடைபெறும் நவீன ஒலிம்பிக் போட்டிகளில் ஐ.ஓ.சியினால்  பணப்பரிசுகள் வழங்கப்பட்டதில்லை. எனினும், பாரிஸ் 2024 ஒலிம்பிக் மெய்வன்மைப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வெல்பவர்களுக்கு தலா 50,000 டொலர் வழங்கப்படும் என மெய்வன்மைப் போட்டிகளுக்குப் பொறுப்பான வேர்ல்ட் அத்லெட்டிக்ஸ் (சர்வ.தேச மெய்வல்லுநர் சங்கங்களின் சம்மேளனம்) கடந்த மாதம் அறிவித்தது.

இத்தீர்மானத்துக்கு வேறு பல விளையாட்டுகளின் சர்வதேச சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இந்நிலையில், குத்துசண்டையில் 3 பதக்கங்களுக்கும் பரிசு வழங்குவதாக ஐ.பி.ஏ. அறிவித்துள்ளது. ஐ.பி.ஏ. அறிவிப்பின்படி, மெய்வன்மைப் போட்டிகளில் தங்கம் வெல்பவர்களைவிட குத்துச்சண்டையில் தங்கம் பெறுபவர்களுக்கு இரு மடங்கு பரிசுத்தொகை வழங்கப்படும்.

சர்வதேச குத்துச்சண்டை சங்கம் (ஐ.பி.ஓ) ரஷ்ய எரிவாயு நிறுவனமான கேஸ்புரோமின் ஆதரவுடன் இயங்குகிறது.

ஒலிம்பிக் குத்துச்சண்டைப் போட்டிகளை இச்சங்கமே முன்னர் ஏற்பாடு செய்துவந்தது. எனினும், நிர்வாகம், நிதி, போட்டி மத்தியஸ்தம் முதலியன தொடர்பான சர்ச்சையின் காரணமாக 2019 ஆம் ஆண்டில் ஒலிம்பிக் குத்துச்சண்டை ஏற்பாட்டு உரிமையும் அதனிடமிருந்து பறிக்கப்பட்டது. இதனால், டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டியை ஐ.ஓ.சியே ஏற்பாடு செய்தது. பாரிஸ் 2024 ஒலிம்பிக்கிலும் ஐ.ஓ.சி.யே குத்துச்சண்டை போட்டிகளுக்கு பொறுப்பாக உள்ளது. ஐ.பி.ஏ.வுக்கான தனது  அங்கீகாரத்தை கடந்த வருடம் ஐ.ஓ.சி. நீக்கியிருந்தது. 

https://www.virakesari.lk/article/185032

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெறத் தவறிய ஒலிம்பிக் சம்பியனான கேத் கெம்பல் ஓய்வு

Published By: DIGITAL DESK 7   28 JUN, 2024 | 02:55 PM

image
 

அவுஸ்திரேலியாவின் பிரபல நீச்சல் வீராங்கனை கேத் கெம்பல் 2024 பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற தவறியதால் சர்வதேச நீச்சல் அரங்கிலிருந்து  ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பன் நகரில் நடந்த ஒலிம்பிக் தகுதிகாண் போட்டியில், கேத் கெம்பல் அடைவு மட்டத்தை எட்டவில்லை. இதன் காரணமாக 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில்  போட்டியிடும் தகுதியை அவர் இழந்தார்.

ப்ரீஸ்‍டைல் நீச்சலின் 100 மீற்றர் மற்றும் 50 மீற்றர் போட்டிகளில் அடைவு மட்டத்தை எட்டாததன் காரணமாக, 5 ஆவது தடவையாக ஒலிம்பிக்கில் பங்கேற்கின்ற அரிய வாய்ப்பை 32 வயதான கெத் கெம்பல் இழந்தார். 

2008 பிஜிங் , 2012 லண்டன், 2016 ரியோ மற்றும் 2022 டோக்கியோ ஆகிய நான்கு ஒலிம்பிக் அத்தியாயங்களில் பங்குபற்றிய  கேத் கெம்பல், 4 தங்கம், 1 ‍வெள்ளி, 3 வெண்கலம் அடங்கலாக 8 ஒலிம்பிக் பதக்கங்களை வென்றுள்ளார்.

2008 பீஜிங் ஒலிம்பிக்கின் 50 மீற்றர் ப்ரீஸ்டைல் மற்றும் 2020 டோக்கியோ ஒலிம்பிக்கின் 100 மீற்றர் ப்ரீஸ்டைல் ஆகிய இரண்டு தனிநபர் போட்டி நிகழ்வுகளில் வெண்கலப் பதக்கங்களை  வென்றிருந்தார். ஏனைய 6 பதக்கங்களையும் அணிநிலை போட்டிகளிலேயே வென்றிருந்தார்.  

உலக சம்பியன்ஷிப்பிலும் 4 தங்கம், 5 வெள்ளி, 3 வெண்கலம் என 12 பதக்கங்கள் வென்றுள்ளார் கேத் கெம்பல். 

"பல்வேறு விதமான உணர்ச்சிகள் இருந்தாலும், நான் எதிர்பார்த்த விதத்தில் முடிவு கிடைக்கவில்லை. நான் 5 ஆவது  தடவையாகவும் ஒலிம்பிக்கில் பங்கேற்பதற்காக முழு முயற்சியையும் எடுத்தேன். அதற்காக என்னிடம் இருந்த அனைத்தையும் கொடுத்தேன், சிறப்பான விதத்தில் நான் விடை பெறுகின்றேன்" என்றார்.

அணிநிலை நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்றிருந்த கேத் கெம்பல், தனது இளைய சகோதரியான பிரொன்டேவுடன் இணைந்து ஒலிம்பிக், உலக சம்பியன்ஷிப் , பொதுநலவாய விளையாட்டு உள்ளிட்ட  பல்வேறு சர்வதேச போட்டிகளில் பதக்கங்கள் வென்றுள்ளார்.

"நாங்கள் 3 ஒலிம்பிக், 2  பொதுநலவாய விளையாட்டு மற்றும் மூன்று உலக சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கு ஒன்றாகச் செல்வோம் என்று நாங்கள் கற்பனை செய்து பார்த்ததில்லை” என கேத்தின் இளைய சகோதரி பிரொன்டே கெம்பல் குறிப்பிட்டுள்ளார்.

தகுதிகாண் போட்டியின் முடிவில் ஒலிம்பிக் தகுதியை எட்டாத கேத் கெம்பலை, நீச்சல் தடாகத்தில் சக போட்டியாளர்கள் ஆரத்தழுவி விடைகொடுத்திருந்தமை அனைவரையும் உணர்ச்சிப் பெருக்கில் ஆழ்த்தியது.

https://www.virakesari.lk/article/187173

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

5 தடவைகள் ஒலிம்பிக் சம்பியனான எலைன் தொம்சன் பாரிஸ் 2024 ஒலிம்பிக்கிலிருந்து விலகினார்

29 JUN, 2024 | 11:25 AM
image
 

(ஆர்.சேது­ராமன்)

5 தட­வைகள் ஒலிம்பிக் தங்கப் பதக்­கங்­களை வென்ற, ஜமைக்காவின் குறுந்­தூர ஓட்ட நட்­சத்­தி­ர­மான எலைன் தொம்சன் ஹேரா, காயம் கார­ண­மாக பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்­டி­க­ளி­லி­ருந்து வில­கி­யுள்ளார்.

ஏற்­கெ­னவே 200 மீற்றர் ஓட்­டத்­தி­லி­ருந்து வில­கு­வ­தாக அறி­வித்த அவர், தற்­போது 100 மீற்றர் போட்­டி­யி­லி­ருந்தும் வில­கி­யுள்ளார்.

ரியோ 2016, டோக்­கியோ 2020 ஒலிம்பிக் போட்­டி­களில் பெண்­களுக்­கான 100 மீற்றர் மற்றும் 200 மீற்றர் ஓட்­டத்தில் தங்­கப்பதக்கங்­ களை வென்­றவர் எலைன் தொம் சன் ஹேரா.

அத்­துடன், டோக்­கியோ 2020 ஒலிம்பிக் 4 X100 மீற்றர் தொட­ரோட்டப் போட்­டி­யிலும் அவர்  தங்கம் வென்றார். ரியோ 2016 ஒலிம்­பிக்கில் 4 X100 மீற்றர் தொட­ரோட்டப் போட்­டியில் அவர் வெள்­ளிப்­ப­தக்­கத்தை வென்­றிருந்தார். நேற்று வெள்­ளிக்­கி­ழமை (28) அவர் தனது 32ஆவது பிறந்த தினத்தை கொண்­டா­டினார்.

உலக வர­லாற்றின் மிகச் சிறந்த குறுந்­தூர ஓட்ட வீராங்­க­னை­களில் ஒருவரான அவர், தற்­போது உல­கி­லுள்­ள­வர்­களில் மிக வேக­மான வீராங்­க­னை­யாக விளங்­கு­கிறார்.

பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்­டி­க­ளிலும் 100 மீற்றர் மற்றும் 200 மீற்றர் ஓட்­டங்­களில் அவர் தங்கப்­ ப­தக்கம் வெல்வார் என்ற எதிர்­பார்ப்பு நில­வி­யது.

ஆனால், ஒலிம்பிக் 200 மீற்றர் போட்­டி­யி­லி­ருந்து தான் வில­கு­வ­தாக அவர் இவ்­வார முற்­ப­கு­தியில் அறி­வித்­தி­ருந்தார். எனினும், 100 மீற்றர் போட்­டியில் பங்­கு­பற்ற முடியும் என அவர் நம்­பிக்கை கொண்­டி­ருந்தார்.

ஆனால், நேற்­று­முன்­தினம் (27) ஆரம்­ப­மான ஜமைக்காவின் ஒலிம்பிக் தகு­திகாண் போட்­டிகளில் எலைன் தொம்சன் பங்­கு­பற்­ற­வில்லை. இந்­நி­லையில், பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்­டிக­ளி­லி­ருந்து அவர் வாபஸ் பெற்­றுள்ளார்.

இதனால், 100 மீற்றர் மற்றும் 200 மீற்றர் ஓட்டப் போட்­டி­களில் தொடர்ச்­சி­யாக 3 ஒலிம்பிக் போட்­டிகளில் தங்கப்பதக்­கத்தை வெல்லும் அவ ரின் கனவு கலைந்­துள்­ளது.  

கடந்த 9ஆம் திகதி நடை­பெற்ற அமெ­ரிக்க க்ரோன் ப்றீ 100 மீற்றர் ஓட்­டப்­போட்­டி­யின்­போது எலைன் தொம்சன் காய­ம­டைந்தார். அதனால், 11.48 விநா­டி­களில் ஓடி ­மு­டித்து அவர் 9ஆவது இடத்­தையே பெற்றார்.

2023 ஏப்ரல் மாதத்தின் பின்னர் 200 மீற்றர் ஓட்டப் போட்­டியில் அவர் பங்­கு­பற்­ற­வில்லை.

பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்­டி­க­ளி­லி­ருந்து தான் வாபஸ் பெற்­றுள்ள போதிலும் சக நாட்­ட­வர்­க ளுக்கு, பெரும்­பாலும் அரங்­குக்கு சென்று, உற்­சா­க­ம­ளிப்­ப­தற்கு எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இம்முறை ஒலிம்பிக் போட்டிகளை தவறவிட்டாலும் தனது மெய்வல்லுநர் வாழ்க்கையை தான் தொடரவுள்ளதாகவும் எலைன் தொம்சன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/187238

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேலின் தாக்குதலில் ஒரு காலை இழந்த பெண் ஊடகவியலாளர் ஒலிம்பிக் சுடரை ஏந்தினார் - ஊடகவியலாளர்களை பாதுகாக்கவேண்டும் என்ற செய்தியை தெரிவிக்க விரும்புவதாக கருத்து

Published By: RAJEEBAN   22 JUL, 2024 | 11:22 AM

image
 

இஸ்ரேல் லெபனான் மீது தாக்குதல் மேற்கொண்டவேளை காயமடைந்த பெண் பத்திரிகையாளர் ஒருவர் பிரான்ஸ் தலைநகரில் ஒலிம்பிக் சுடரை ஏந்திச்சென்றுள்ளார்.

ஊடகப்பணியின் போது கொல்லப்பட்ட காயமடைந்த பத்திரிகையாளர்கள் நினைவாக  அவர் ஒலிம்பிக் சுடரை ஏந்திச்சென்றுள்ளார்.

ஒலிம்பிக் போட்டிகள் 26ம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பிப்பதற்கு பிரான்ஸ் முழுவதிலும் பல்வேறு துறைகளை சார்ந்த பத்தாயிரம் பேர் ஒலிம்பிக் சுடரை ஏந்திச்செல்கின்றனர்.

olympic_journalist11.jpg

2023ம் ஆண்டு ஒக்டோபர் 13ம் திகதி லெபனான் மீது  இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் காயமடைந்தவர்களில் ஒருவர் ஏஎவ்பியின் கிறிஸ்டினா அசி.

இஸ்ரேல் லெபனான் எல்லையில் இஸ்ரேலிய படையினருக்கும் ஹெஸ்புல்லா அமைப்பினருக்கும் இடையிலான மோதல் குறித்து செய்தி சேகரித்துக்கொண்டிருந்தவேளை இவர் காயமடைந்தார்.

கடும் காயங்கள் காரணமாக இவரது வலதுகால் துண்டிக்கப்பட்டது.

இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக ரொய்ட்டரின் வீடியோ ஊடகவியலாளர் இசாம் அப்டெல்லா கொல்லப்பட்டார், அல்ஜசீராவின் ஊடகவியலாளர்கள்காயமடைந்தனர்.

நவம்பரில் ஊடகவியலாளர்கள் மீது தென் லெபனானில் இஸ்ரேல் மேற்கொண்ட ஆளில்லா விமான தாக்குதலில் அல்மயாடின் வலையமைப்பை சேர்ந்த இரண்டு ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர்.

 

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை பரிசின் புறநகர் பகுதியான வின்செனெசில் அசி சக்கரநாற்காலியில் ஒலிம்பிக் சுடரை ஏந்திச்சென்றுள்ளார்.

இஸ்ரேலின் தாக்குதலில் காயமடைந்த ஏஎவ்பியின் வீடியோ ஊடகவியலாளர் டைலன் கொலின்சும் அவருடன் இணைந்துகொண்டுள்ளார்.

தாக்குதலில் கொல்லப்பட்ட இசாமும் உயிருடன் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருக்கவேண்டும்,என கண்ணீரை அடக்கமுடியாமல் அசி தெரிவித்துள்ளார்.

ஏனையவர்கள் போல நடந்துகொண்டு சிறந்த உடல்நிலையுடன்ஊடகவியலாளர்களை கௌரவிப்பதற்கான வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கவேண்டும் என கருதுகின்றேன் எனஅவர் தெரிவித்துள்ளார்.

அல்ஜசீரா ஏஎவ்பி ரொய்ட்டர் உட்பட பல சர்வதேச ஊடக நிறுவனங்கள் இஸ்ரேல் ஊடகவியலாளர்களை திட்டமிட்டு இலக்குவைப்பதாக தெரிவித்துள்ளன.

தங்கள் ஊடகவியலாளர்கள் மோதல் இடம்பெறும் பகுதிகளில் இருந்து தொலைவில் நிலைகொண்டிருந்தனர், அவர்களின் வாகனங்களில் அவர்கள் ஊடகவியலாளர்கள் என தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்ததாக  ஊடக நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இஸ்ரேல் திட்டமிட்டே தாக்குதலை மேற்கொண்டது என தெரிவித்துள்ள ரொய்ட்டரும் மனித உரிமை கண்காணிப்பகமும் இது யுத்தகுற்றம் விசாரணைகள் அவசியம் என தெரிவித்துள்ளன.

காசா மீது இஸ்ரேல் தாக்குதலை ஆரம்பித்த பின்னர் இதுவரை 108 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழு தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/189062

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாரிஸில் ஒலிம்பிக் சுடரை ஏந்திச் சென்றார் தர்ஷன் செல்வராஜா!

17 JUL, 2024 | 01:15 PM
image

(ஆர்.சேதுராமன்)  

பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழாவுக்கான ஒலிம்பிக் சுடரை இலங்கையரான தர்ஷன் செல்வராஜா பாரிஸில் நேற்று முன்தினம் ஏந்திச் சென்றார்.   

பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டிக்கான ஒலிம்பிக் சுடரை ஏந்திச் சென்ற முதல் இலங்கையராக தர்ஷன் செல்வராஜா வரலாறு படைத்துள்ளார் என பிரான்ஸிலுள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளதுடன், இது இலங்கைக்கு பெருமையான தருணம் எனவும் தெரிவித்துள்ளது.   

பாரிஸ் 2024 ஒலிம்பிக் சுடரை ஏந்திச் செல்வதற்கு தெரிவுசெய்யப்பட்ட புகழ்பெற்ற பிரெஞ்சு பிரஜைகளில் தர்ஷன் செல்வராஜாவும் ஒருவராவார்.  

இப்போட்டிக்காக, கிறீஸின் நாட்டின் ஒலிம்பியா நகரில் கடந்த ஏப்ரல் 16 ஆம் திகதி பாரம்பரிய முறையில் ஏற்றப்பட்ட ஒலிம்பிக் சுடர் 19 ஆம் நூற்றாண்டின் பாய்மரக் கப்பல் மூலம் கடந்த மே 8 ஆம் திகதி பிரான்ஸை சென்றடைந்தது. அதன்பின் பல்லாயிரக்கணக்கானோரால் தொடர் ஓட்டம் மூலம் பிரான்ஸின் சுமார் 450 நகரங்களுக்கு ஒலிம்பிக் சுடர் கொண்டுசெல்லப்படுகிறது.   

ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ள பாரிஸ் நகரை கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தடவையாக ஒலிம்பிக் சுடர் சென்றடைந்த நிலையில், திங்கட்கிழமை (15) மாலை தர்ஷன் செல்வராஜா ஒலிம்பிக் சுடரை ஏந்திச் சென்றார்.

இலங்கையின்  தேசிய கொடியுனும் பலர் வீதிகளில் திரண்டிருந்து அவரை வரவேற்றனர்.  38 வயதான தர்ஷன் செல்வராஜா, இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த நிலையில் 16 வருடங்களாக பேக்கரி தொழிலில் ஈடுபட்டுள்ளார். 

கடந்த வருடம், பிரான்ஸின் பாரம்பரிய 'பகெட்' எனும் பாண் தயாரிப்புக்கான வருடாந்த  போட்டியில்  126 பேரை தோற்கடித்து தர்ஷன் செல்வராஜா முதலிடம் பெற்றார். அதன் மூலம் ஒரு வருடகாலத்துக்கு பிரெஞ்சு ஜனாதிபதி மாளிகைக்கு பாண் விநியோகிக்கும் உரிமையையும் பெற்றுக்கொண்டிருந்தார். இவ்வெற்றியைத் தொடர்ந்து அவர் ஒலிம்பிக்  சுடரை ஏந்திச் செல்பவர்களில் ஒருவராக தெரிவானார்.   

ஒலிம்பிக் சுடரை ஏந்திச் செல்வதற்காக தன்னையும் தெரிவுசெய்த பிரெஞ்சு விளையாட்டுத்துறை அமைச்சர் அமேலி கஸ்டேரா உட்பட தெரிவுக்குழுவினருக்கு தான் நன்றி தெரிவிப்பதாக ஏற்கெனவே தர்ஷன் செல்வராஜா தெரிவித்திருந்தார்.

Tharshan_Selvarajah_2__1_.jpg

https://www.virakesari.lk/article/188665

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பமானது பாரிஸ் ஒலிம்பிக் போட்டி

பாரிஸ் 2024 ஒலிம்பிகிக் (Olympics 2024 - Paris) குழு நிலை போட்டிகள் ஆரம்பமாகி நடந்து வருகிறது.

ஒகஸ்ட் 11 ஆம் திகதி வரை போட்டிகள் நடைபெற திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இந்தியா சார்பில் 117 வீரர்கள் பல்வேறு பிரிவுகளில் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளனர்.

முதற்கட்டமாக கால்பந்து, கை பந்து, ரக்பி ஆகிய ஆட்டங்கள்  நிறைவு பெற்றுள்ளன.

10,214ற்கும் அதிகமான வீரர்கள்

மொத்தமாக சர்வதேச அளவில் 10,214ற்கும் அதிகமான வீரர்-வீராங்கனைகள் கலந்து கொள்ளும் இந்த ஒலிம்பிக் போட்டியில், 32 விளையாட்டுகளில் 329 பிரிவாக போட்டிகள் நடத்தப்படுகின்றன.

ஆரம்பமானது பாரிஸ் ஒலிம்பிக் போட்டி | Paris Olympics

206 நாடுகள் இந்த போட்டிகளில் பங்கேற்று தங்களின் அணியின் வெற்றிக்காக காத்திருக்கின்றன.

நேற்று நடைபெற்ற கால்பந்து ஆட்டத்தில் குரூப் ஏ பிரிவில் கனடா - நியூசிலாந்து அணிகள் மோதிக்கொண்ட நிலையில், கனடா 2 க்கு 1 என்ற செட் கணக்கில் வெற்றி அடைந்தது.

அதேபோல, குரூப் சி பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் ஸ்பெயின் - ஜப்பான் அணிகள் மோதிக்கொண்ட நிலையில், ஸ்பெயின் 2 கோல் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது.

 

ஒலிம்பிக் போட்டிகள்

குரூப் பி பிரிவில் அமெரிக்கா - சிம்பாவே அணிகள் மோதிக்கொண்ட நிலையில், அமெரிக்கா மூன்று கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது.ஆரம்பமானது பாரிஸ் ஒலிம்பிக் போட்டி | Paris Olympics

குரூப் ஏ பிரிவில் பிரான்ஸ் - கொலம்பியா அணிகள் மோதிக்கொண்ட நிலையில் பிரான்ஸ் அணி மூன்று கோள்கள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது.

ஆரம்பமானது பாரிஸ் ஒலிம்பிக் போட்டி | Paris Olympics

பெண்களுக்கான கை பந்து (Handball) பிரிவில் குரூப் ஏ-வில் ஸ்வீடன் - நோர்வே அணிகள் மோதிக்கொண்ட இந்த ஆட்டத்தில், ஸ்வீடன் அணி 32 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றது.

ரக்பி (Rugby Sevens) ஆட்டத்தில் ஜப்பான் - உருகுவே, சோமா - கென்யா ஆகிய நாடுகள் இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

https://tamilwin.com/article/paris-olympics-1721975294

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒலிம்பிக் போட்டியில் விளையாட தன் விரலை துண்டித்த ஆஸ்திரேலிய ஹாக்கி வீரர் - என்ன நடந்தது?

ஒலிம்பிக் 2024: ஆஸ்திரேலிய ஹாக்கி அணியை சேர்ந்த மாட் டாவ்சன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஆஸ்திரேலிய ஹாக்கி அணியை சேர்ந்த மேட் டாவ்சன் கட்டுரை தகவல்
  • எழுதியவர், டிஃபானி டர்ன்புல்
  • பதவி, பிபிசி செய்தியாளர், சிட்னியிலிருந்து
  • இருந்து
  • 26 ஜூலை 2024

பாரிஸ் நகரில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் விளையாடுவதற்காகத் தன்னுடைய விரலின் ஒரு பாதியை அறுவை சிகிச்சை மூலம் நீக்கியுள்ளார் ஹாக்கி வீரர். அவரது இந்தச் செயல் பெரும் ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இரண்டு வாரங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தின் போது ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஹாக்கி விளையாட்டு வீரரான மேட் டாசன் (Matt Dawson) படுகாயம் அடைந்தார். வலது கை விரல் ஒன்றில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

அறுவை சிகிச்சை மூலம் அதனைச் சரி செய்துவிடலாம் என்றாலும் கூட அந்தக் காயத்தில் இருந்து மீண்டு, விரல் இயல்பாகச் செயல்பட சில மாதங்கள் ஆகலாம் என்று மருத்துவர்கள் அவரை எச்சரித்துள்ளனர்.

மூன்றாவது முறையாக ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இருக்கும் அந்த வீரரின் ஒலிம்பிக் கனவு கலைந்துவிடும் என்ற அச்சத்தில், தன்னுடைய விரலை அறுவை சிகிச்சை மூலம் நீக்கிவிட அவர் முடிவு செய்தது, அவரின் குடும்பத்தினர் மற்றும் சக வீரர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

விரலை இழக்கத் துணிந்த வீரர்

30 வயதான மேட் டாசன், தன்னுடைய ஒரு விரலை இழந்த வெறும் 16 நாட்களில், ஜூலை 27-ஆம் தேதி அன்று அர்ஜெண்டினாவுக்கு எதிராக நடைபெற இருக்கும் போட்டியில் தன்னுடைய கூக்கபுர்ராஸ் (ஆஸ்திரேலிய ஹாக்கி அணியின் பெயர்) அணியுடன் பங்கேற்க உள்ளார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மேட் டாசன் பயிற்சி ஆட்டத்தின் போது தன்னுடைய விரல் உடைந்துவிட்டதாகவும், ஓய்வு அறையில் தன்னுடைய விரலைப் பார்த்து மயக்கம் அடைந்துவிட்டதாகவும் கூறினார். "என்னுடைய ஒலிம்பிக் கனவு முடிவுக்கு வந்துவிட்டது என்று நினைத்தேன்," என்று அவர் கூறினார்.

உடனடியாக ப்ளாஸ்டிக் சர்ஜன் ஒருவரைத் தொடர்பு கொண்டு பேசிய போது, அவர், உடனடியாக விரலைச் சரி செய்தாலும் கூட அந்தக் காயத்தில் இருந்து மீண்டு வர நிறைய காலம் ஆகும் என்றிருக்கிறார்.

மேலும் முழுமையாக அந்த விரல் செயல்படுமா என்பதிலும் சந்தேகம் உள்ளது என்று அவர் தெரிவித்ததாகக் கூறினார். ஆனால், அந்த விரலை நீக்கிவிட்டால், 10 நாட்களில் மீண்டும் விளையாடச் சென்றுவிடலாம் என்று மருத்துவர் கூறியதாக மேட் டாசன் அறிவித்தார்.

அவசரப்பட்டு எந்தச் செயலையும் செய்ய வேண்டாம் என்று அவருடைய மனைவி கூறியிருந்த போதும், மேட் டாசன் தன்னுடைய விரலை நீக்கும் முடிவை அன்று மதியமே எடுத்துவிட்டார்.

ஆஸ்திரேலிய ஆண்கள் ஹாக்கி அணி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,பாரிஸில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தேர்வாகியுள்ள ஆஸ்திரேலிய ஆண்கள் ஹாக்கி அணி

'ஒலிம்பிக்கில் பங்கேற்க நான் கொடுக்கும் விலை இந்த விரல்'

மேட் டாசன், "என்னுடைய கரியர் ஆரம்பமாவதற்கு முன்பே முடிவுக்கு வந்ததைப் போல் ஆகிவிட்டது. யாருக்குத் தெரியும், இது என் இறுதி ஒலிம்பிக் போட்டியாகக் கூட இருக்கலாம். நான் இப்போதும் சிறப்பாக விளையாட வேண்டும் என்று நினைக்கும் பட்சத்தில் அதைத்தான் செய்யப் போகிறேன்," என்று 'பார்லே வூ ஹாக்கி' (Parlez Vous Hockey) என்ற போட்காஸ்டில் குறிப்பிட்டார்.

"ஒலிம்பிக்கில் விளையாட என்னுடைய விரலின் ஒரு பகுதியை இழப்பது தான் நான் தரும் விலை என்றால் அதைத்தான் நான் செய்யப் போகிறேன்," என்றும் அவர் கூறினார்.

அணியின் தலைவர் அரன் ஜாலுஸ்கி, டாவ்சனின் இந்த முடிவு அணியின் உறுப்பினர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் கூட அவர்கள் டாவ்சனுக்கு ஆதரவு தருகின்றனர் என்று குறிப்பிட்டார்.

பாரீஸில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "எங்களுக்கு என்ன யோசிப்பது என்றே தெரியவில்லை. அவர் மருத்துவமனைக்குச் சென்றார். தன்னுடைய விரலை அறுவை சிகிச்சை மூலம் நீக்கிவிட்டார் என்று கேள்விப்பட்டோம். ஆனால் இந்த இடத்திற்கு வருவதற்கு மக்கள் கையையும் காலையும் சில நேரங்களில் விரலின் ஒரு பாதியையும் இழக்கத் தயாராக இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது," என்று கூறினார் அரன்.

"உங்களது ஒரு கனவுக்காக வாழ்நாள் முழுவதும் உழைத்து, பல்வேறு தியாகங்களைச் செய்து இங்கே விளையாட வேண்டும் என்று நினைத்திருப்பீர்கள் எனில், அவரது முடிவு மிக எளிமையான ஒன்று என்று தான் நான் கூறுவேன்," என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த வாரத் துவக்கத்தில் இது தொடர்பாக பேசிய அணியின் பயிற்சியாளர் காலின் பேட்ச், டாசன் தன் அணியினருடன் மீண்டும் பயிற்சிக்கு வந்துவிட்டார் என்று குறிப்பிட்டார்.

"பாரீஸில் விளையாடத் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர் மேட் டாசன். இது போன்ற சூழலில் நான் இப்படி விரலை நீக்கியிருப்பேனா என்று கேட்டால் எனக்குத் தெரியவில்லை. ஆனால் அவர் அதைச் செய்திருக்கிறார்," என்று அவர் ஆஸ்திரேலியாவின் செவன் நியூஸ் நெட்வொர்க் சேனலுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

மேட் டாசனுக்கு அடிபடுவது இது முதல் முறையல்ல. 2018-ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்குச் சில வாரங்களுக்கு முன்பு ஹாக்கி மட்டை பட்டு கிட்டத்தட்ட ஒரு கண்ணையே இழக்கும் நிலைக்கு ஆளானார் அவர்.

ஆனால், அந்தப் போட்டியிலும் அவர் பங்கேற்றார். அவரது அணி தங்கப்பதக்கம் வென்றது. பிறகு டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றது அந்த அணி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் 2024: நீங்கள் கவனிக்க வேண்டிய 11 நட்சத்திர வீரர்கள்

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் 2024: நீங்கள் கவனிக்க வேண்டிய 11 நட்சத்திர வீரர்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், சோனியா ஆக்ஸ்லே
  • பதவி, பிபிசி விளையாட்டு
  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

பாரிஸில் நடைபெறவுள்ள கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் உலகமெங்கிலும் உள்ள சுமார் 10,500 விளையாட்டு வீரர்கள் 32 விதமான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.

இந்தப் போட்டிகளில் பங்கேற்கும் நட்சத்திர வீரர்கள், அவர்களின் கதைகள், முந்தைய சாதனைகள் உலகப் பார்வையுடன் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.

லியோன் மார்ச்சண்ட் (பிரான்ஸ்) - நீச்சல்

லியோன் மார்ச்சண்ட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஐந்து முறை உலக சாம்பியனான இவர், ஒலிம்பிக் போட்டிகளின் முகமாக இருந்துள்ளார். இம்முறை நீச்சல் போட்டிகளில் பல தங்கப் பதக்கங்களை வெல்வதற்கான முயற்சியில் உள்ளார்.

அமெரிக்க பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் படிக்கும் 22 வயதான இவர், படிக்கும் நேரம் போக மற்ற நேரங்களில் வேடிக்கையாகப் பல சாதனைகளை முறியடித்து வந்தார். அதில் மைக்கேல் ஃபெல்ப்ஸ் தம் வசம் 15 ஆண்டுகளாக வைத்திருந்த 400 மீட்டர் தனிநபர் மெட்லி உலக சாதனையை 2023இல் முறியடித்ததும் ஒன்று.

இரு ஒலிம்பிக் நீச்சல் வீரர்களின் மகனான மார்ச்சண்ட், 200 மீட்டர் தனிநபர் மெட்லி (நான்கு வித நீச்சல் போட்டிகளை உள்ளடக்கியது), 400 மீட்டர் தனிநபர் மெட்லி மற்றும் 200 மீட்டர் பட்டர்ஃபிளை போட்டிகளில் உலக சாம்பியன் ஆவார்.

இவர், 200 மீட்டர் பிரெஸ்ட்ஸ்ட்ரோக் மற்றும் 200 மீட்டர் பட்டர்ஃபிளை டபுள் போட்டிகளில் வெல்லும் முதல் நீச்சல் வீரராக முயன்று வருகிறார். அதற்காக, ஒரே நாளில் நடைபெறும் இரு போட்டிகளில் அவர் போட்டியிட வேண்டும்.

மைக்கேல் ஃபெல்ப்ஸின் முன்னாள் பயிற்சியாளர் தான் மார்ச்சண்ட்க்கு பயிற்சி அளித்துள்ளார். நான்கு தனிநபர் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை தங்கள் நாட்டு ரசிகர்கள் முன்பு வெல்வதற்கான வாய்ப்பு மார்ச்சண்ட்க்கு உள்ளது.

சிமோன் பைல்ஸ் (அமெரிக்கா) - ஜிம்னாஸ்டிக்

சிமோன் பைல்ஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தாங்கள் உலகின் சிறந்த ஜிம்னாஸ்டிக் வீரர் ஒலிம்பிக் போட்டிகளில் போட்டியிடுவதைக் கடைசியாக ஒருமுறை பார்த்ததாகப் பலரும் நினைத்திருந்தனர்.

தன்னிடம் உள்ள நான்கு ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களுடன் மேலும் சில பதக்கங்களைச் சேர்ப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜிம்னாஸ்டிக்கில் காற்றில் சுழலும்போது ஏற்படும் மனத்தடை (twisting moves) காரணமாக டோக்கியோ போட்டிகளில் இருந்து விலகினார் சிமோன் பைல்ஸ்.

மீண்டும் உணர்ச்சிபூர்வமாக போட்டிகளுக்குத் திரும்பிய அவர், ஏழாவது ஒலிம்பிக் பதக்கமாக வெண்கல பதக்கத்தை வென்றார். பின்னர் விளையாட்டில் இருந்து விலகியிருந்த அவர், ஜூன் 2023 முதல் மீண்டும் போட்டிகளில் பங்கெடுக்கத் தொடங்கினார்.

அப்போதிருந்து பைல்ஸ் நான்கு தங்கப் பதக்கங்கள் உட்பட ஐந்து உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் பதக்கங்களை வென்றார். அவர் தன்னுடைய சிகிச்சையாளரைத் (therapist) தொடர்ந்து சந்தித்து வருகிறார்.

“மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் நான் மிகவும் நம்பிக்கையுடன் உள்ளேன். இதற்காக மிகவும் உழைத்திருப்பதால், டோக்கியோவில் நடந்தது மீண்டும் நடக்காது” என இந்த ஆண்டின் தொடக்கத்தில் அவர் கூறியிருந்தார்.

நோவக் ஜோகோவிச் (செர்பியா) - டென்னிஸ்

நோவக் ஜோகோவிச்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கிராண்ட் ஸ்லாம் எனும் டென்னிஸ் விளையாட்டின் பெரு வெற்றித் தொடர் போட்டிகளில் 24 முறை வென்றுள்ள ஜோகோவிச்சின் பதக்கங்களில் ஒலிம்பிக் தங்க பதக்கம் மட்டும்தான் இன்னும் சேரவில்லை.

அவருடைய முக்கிய இலக்காக பாரிஸ் 2024 இருக்கிறது என்பதில் எந்த ரகசியமும் இல்லை.

நான்கு முக்கியமான தொடர் போட்டிகளில் வெற்றியுடன், டோக்கியோ 2020 போட்டிகளில் ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை வெல்வதற்கான இலக்குடன் இருந்த ஜோகோவிச், அரையிறுதியில் அலெக்சாண்டர் ஸ்வெரெவிடம் தோற்றார், மேலும் வெண்கல பதக்கத்தையும் அவரால் வெல்ல முடியவில்லை.

கடந்த காலங்களில் தோல்விகளிலிருந்து மீண்டு வெற்றியுடன் திரும்பி வந்த ஜோகோவிச், இப்போதும் பெரும் ஏமாற்றம், தடைகளைக் கடந்து வலுவுடன் திரும்பி வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 37 வயதான அவருக்கு இந்த ஆண்டு சிறப்பான ஆண்டாக அமையல்லை, எந்த வெற்றியையும் அவர் பெறவில்லை, உலக தரவரிசை பட்டியலிலும் முதலிடத்தில் இல்லை.

காலிறுதிச் சுற்றுக்கு முன்னதாகவே முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக, பிரெஞ்சு ஓபன் போட்டியில் அவர் பங்கெடுப்பது முடிவுக்கு வந்தது. பிரேஸ் எனும் முழங்கால் பட்டையை அணிந்துகொண்டு விம்பிள்டன் இறுதிச்சுற்று வரை வந்த ஜோகோவிச், கார்லஸ் அல்கராஸால் தோற்கடிக்கப்பட்டார்.

ஆனால் அவர் உடல் தகுதியுடன் இருந்தால் பெய்ஜிங்கில் 2008இல் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றதைவிட இந்த முறை முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம்.

கேட்டி லெடெக்கி (அமெரிக்கா) - நீச்சல்

கேட்டி லெடெக்கி

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஏழு முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவரை யாராவது நிறுத்த முடியுமா?

நான்காவது முறையாக ஒலிம்பிக் போட்டியில் பங்கெடுக்கும் 27 வயதான லெடெக்கி, தனது நாட்டைச் சேர்ந்த சக போட்டியாளர் ஜென்னி தாம்ப்சனின் சாதனையை முறியடித்து, மிகச் சிறந்த நீச்சல் வீரர் என்ற பெயரைப் பெறுவதற்கு இன்னும் ஒரு பதக்கத்தை வெல்ல வேண்டியுள்ளது.

அவர், 400 மீட்டர் ஃப்ரீஸ்டைல், 800 மீட்டர் ஃப்ரீஸ்டைல், 1500 மீட்டர் ஃப்ரீஸ்டைல் மற்றும் 4*200 மீட்டர் ரிலே ஆகிய நான்கு போட்டிகளில் பங்கெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது

ஜென்னி தாம்ப்சனின் 12 பதக்கங்களை வென்ற அமெரிக்க வீராங்கனை என்ற சாதனையையும் 10 பதக்கங்களைக் கொண்டுள்ள லெடெக்கி முறியடிக்கலாம்.

லெடெக்கி 800 மீட்டர் மற்றும் 1500 மீட்டர் ஃப்ரீஸ்டைல் போட்டிகளில், உலக சாதனையை தன் வசம் வைத்துள்ளார். அவர் மீண்டும் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த பிப்ரவரி மாதம் 800 மீட்டர் ஃப்ரீஸ்டைல் போட்டியில் கனடிய இளம் வீராங்கனை சம்மர் மெக்கின்டோஷிடம் தோற்றதுதான் கடந்த 13 ஆண்டுகளில் லெடெக்கியின் முதல் தோல்வியாக இருக்கும் நிலையில், இதனால் அவருடைய போட்டியாளர்களுக்குச் சிறு நம்பிக்கையும் தென்படுகிறது.

நோவா லைல்ஸ் (அமெரிக்கா) - தடகளம்

நோவா லைல்ஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அமெரிக்க தடகள வீரரான இவர், இம்முறை சில பெரிய இலக்குகளை நிர்ணயித்துள்ளார்.

ஒலிம்பிக் போட்டியில் 100 மீட்டர், 200 மீட்டர், 4*100 மீட்டர் தொடர் ஓட்டம், 4*400 மீட்டர் தொடர் ஓட்டம் என நான்கு தங்க பதக்கங்களை வென்ற ஒரே வீரர் என்ற பெயரைப் பெறுவதற்கு இலக்கு நிர்ணயித்துள்ளார்.

கடந்த ஆண்டு உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் இவற்றில் முதல் மூன்று போட்டிகளில் அவர் தங்கப் பதக்கங்களை வென்றார். உலக தடகள உள்ளரங்கு சாம்பியன்ஷிப் போட்டிகளில் முதன்முறையாகப் பங்கேற்ற இவர், 4*400 மீட்டருக்கான போட்டியில் தனக்கான இடத்தைப் பெற முயன்று வருகிறார்.

இதுவும் போதவில்லையெனில், ஜமைக்காவின் சிறந்த வீரரான உசைன் போல்ட்டின் 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் உலக சாதனைகளை முறியடிக்க விரும்புவதாக அவர் கூறியுள்ளார்.

கடந்த 2020இல் நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெண்கலப் பதக்கம் வென்றார். 2017ஆம் ஆண்டில் உசைன் போல்ட் ஓய்வு பெற்றதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பும் திறமையை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

ஃபெயித் கிபிகோன் - தடகளம்

ஃபெயித் கிபிகோன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இருமுறை 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஒலிம்பிக் சாம்பியன் மற்றும் உலக சாதனையைத் தன்வசம் வைத்துள்ள கிபிகோன், “பிரகாசமான கோடைக்காலத்தை எதிர்நோக்கியுள்ளதாக” ஒலிம்பிக் போட்டிகள் குறித்துக் குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் 1500 மீட்டர் - 5,000 மீட்டருக்கான போட்டிகளில் தான் வென்றதைப் போன்று, இம்முறையும் பாரிஸ் ஒலிம்பிக்கில் இரு தங்கப் பதக்கங்களை வெல்ல 30 வயதான இவர் முயன்று வருகிறார்.

அவர், 5,000 மீட்டருக்கான உலக சாதனையை முன்பு படைத்தார். கடந்த ஆண்டு பாரிஸில் எட்டு ஆண்டுகளில் தனது முதல் போட்டியில் முத்திரையைப் பதித்தார். அதன் பின்னர் இச்சாதனை எத்தியோப்பியாவின் குடாஃப் செகேயால் தோற்கடிக்கப்பட்டது.

தனது தடகள வாழ்க்கையை 16 வயதில் ஆரம்பித்த கிபிகோன், 2011இல் நடைபெற்ற உலக ஜூனியர் நாடு கடந்த சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றுக் காலில் ஓடித் தன்னுடைய முதல் தனிநபர் உலக சாதனையைப் படைத்தார்.

கடந்த 2018ஆம் ஆண்டில் தாயானபோது அது எப்படித் தனது மனநிலையை மாற்றியது என்பது குறித்து அவர் பேசியுள்ளார். நான்கு உலக சாம்பியன்ஷிப் பட்டங்களில் மூன்று பட்டங்களை அவர் தாயானதற்குப் பின்பே பெற்றார்.

 

அன்டோயின் டுபோன்ட் (பிரான்ஸ்) - ரக்பி செவன்ஸ்

அன்டோயின் டுபோன்ட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கடந்த ஆண்டு சொந்த நாட்டு ஒலிம்பிக்கில் போட்டியிடும் தனது கனவைத் தொடர XVகளில் இருந்து செவன்ஸுக்கு மாறுவதாக டுபோன்ட் (Dupont) அறிவித்தபோது, அது தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்தது.

XV-a-சைடில் உலகின் சிறந்த வீரராகப் பலரால் கருதப்படும் பிரான்ஸ் கேப்டன் மற்றும் ஸ்க்ரம்-ஹாஃப் டுபோன்ட் (scrum-half), உலக ரக்பி செவன்ஸ் சர்க்யூட்டில் கவனம் செலுத்துவதற்காக இந்த ஆண்டு சிக்ஸ் நேஷன் போட்டிகளைத் தவிர்த்துவிட்டார்.

கனடாவின் வான்கூவரில் நடந்த தனது தொடக்கப் போட்டியில் அந்த அணிக்கு வெண்கலப் பதக்கத்தை வாங்கிக் கொடுத்தார். அதன் பின்னர், மார்ச் மாதம் லாஸ் ஏஞ்சல்ஸில் ஆண்கள் செவன்ஸ் பட்டத்தை வெல்ல பிரான்ஸ் அணியை ஊக்கப்படுத்தினார். கடந்த 19 ஆண்டுகளில் அவர்கள் பெறும் முதல் பட்டம் இது.

"நாங்கள் மிகவும் லட்சியம் கொண்ட அணி, தங்கப் பதக்கத்தை வெல்ல விரும்புகிறோம். நாங்கள் அனைவரும் அதற்காகப் பாடுபடுகிறோம்" என்று 27 வயதான அவர் கூறினார்.

மற்ற அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகின்றன. 2016ஆம் ஆண்டு விளையாட்டுப் போட்டிகளில் செவன்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, ஃபிஜி (Fiji) இரண்டு ஆண்களுக்கான தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது.

ரியோ 2016இல் நடந்த காலிறுதிப் போட்டியில் பிரான்ஸ் ஜப்பானிடம் தோற்கடிக்கப்பட்டு டோக்கியோ 2020க்கு தகுதி பெறவில்லை.

ஆனால் புதன்கிழமை தொடங்கும் பாரிஸில் நடக்கும் காலிறுதியில் பிரான்ஸ் ஏற்கெனவே தனது இடத்தை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் டுபோன்ட் ஓர் அற்புதமான தனி முயற்சி மூலம் இந்த விளையாட்டுகளின் நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்தார்.

 

நீரஜ் சோப்ரா (இந்தியா) - தடகளம்

நீரஜ் சோப்ரா

பட மூலாதாரம்,GETTY IMAGES

நீரஜ் சோப்ராவுக்கு இந்தியாவில் சூப்பர் ஸ்டார் அந்தஸ்து உள்ளது. இன்ஸ்டாகிராமில் அவரை 90 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள்.

ஒலிம்பிக்கில் `டிராக் மற்றும் ஃபீல்ட்’ தங்கம் வென்ற முதல் இந்திய தடகள வீரரான சோப்ரா, பாரிஸில் தனது ஈட்டி எறிதல் போட்டியின் பட்டத்தைத் தக்கவைக்கும் முயற்சியில் உள்ளார்.

டோக்கியோவில் அபார வெற்றி பெற்று, ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் பிரிவில் தங்கம் வென்ற முதல் ஆசிய தடகள வீரர் என்னும் பெருமையைப் பெற்றார்.

இந்தியாவுக்குப் போட்டியாகக் களமிறங்கும் தலைசிறந்த விளையாட்டு வீரரான பாகிஸ்தானை சேர்ந்த அர்ஷத் நதீம் என்பவர்தான் நீரஜ் சோப்ராவின் வலிமையான எதிரி.

டோக்கியோ 2020இல் ஒலிம்பிக் டிராக் அண்ட் ஃபீல்ட் பைனலுக்கு தகுதி பெற்ற பாகிஸ்தானின் முதல் தடகள வீரர் ஆன பிறகு நதீம் தனது சொந்த நாட்டு வரலாற்றைப் பெருமைப்படுத்தி உள்ளார்.

அவர் கடந்த ஆண்டு உலக சாம்பியன்ஷிப்பில் நீரஜ் சோப்ராவுக்கு அடுத்த இடத்தில், வெள்ளி வென்றார். அதோடு தடகளத்தில் தனது பாகிஸ்தானில் இருந்து ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் நபர் என்ற பெருமையை அர்ஷத் நதீம் பெற்றார்.

 

ஓல்ஹா கர்லன் (யுக்ரேன்) - வாள்வீச்சு

ஓல்ஹா கர்லன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

நான்கு முறை உலக சாம்பியனான ஓல்ஹா கர்லன், ரஷ்ய எதிராளியுடன் கைகுலுக்க மறுத்ததற்காக விதிக்கப்பட்ட தடையின் காரணமாக இம்முறை போட்டிகளை இழக்கும் அபாயம் ஏற்பட்டது.

அன்னா ஸ்மிர்னோவாவுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, கைகுலுக்குவதற்குப் பதிலாகக் கத்திகளை தட்டிக் கொள்ளும் நோக்கத்தில் தன் கத்தியை வழங்கியதால் கடந்த ஆண்டு நடந்த உலக சாம்பியன்ஷிப்பில் இருந்து கர்லன் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

ஆனால் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் தாமஸ் பாக், கர்லானுக்கு ஒரு கடிதம் எழுதினார். அவருடைய "தனித்துவமான சூழ்நிலை" காரணமாக அவர் தகுதிபெற முடியாவிட்டால், அவரது அணி "கூடுதல் இடத்தை ஒதுக்கீடு செய்யும்" என்று அவர் கூறினார்.

நான்கு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்றவர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து நிலவி வரும் போர் சூழல்களுக்கு மத்தியில் யுக்ரேனியர்களுக்கு "நம்பிக்கையை" கொண்டு வருவதாக உறுதியளித்துள்ளார்.

பாரிஸில் நடுநிலை விளையாட்டு வீரர்களாகப் பங்கேற்க எந்த ரஷ்ய அல்லது பெலாரஷ்ய வாள்வீச்சு வீரர்களும் அழைக்கப்படவில்லை, 33 வயதான கார்லன் இதை "வெற்றி" என்று விவரித்தார்.

 

ஸ்டீபன் கறி (அமெரிக்கா) - கூடைப்பந்து

ஸ்டீபன் கறி

பட மூலாதாரம்,GETTY IMAGES

என்பிஏ-வின் தலைசிறந்த வீரரான ஸ்டீபன் கரி பாரிஸில் ஒலிம்பிக்கில் அறிமுகமாகிறார்.

கோல்டன் ஸ்டேட் வாரியர்ஸ் அணியின் `பாயின்ட் கார்டு’ என்று அழைக்கப்படும் ஸ்டீபன் நட்சத்திர ஆட்டக்காரர்கள் நிறைந்த அமெரிக்க ஆண்கள் அணியின் ஒரு பகுதியாக விளையாடுகிறார்.

இந்த அணியினர், கடந்த 2004 முதல் ஒவ்வொரு முறையும் தங்கத்தை வென்றுள்ளனர். அந்த அணியின் 16 ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களுடன் மற்றொரு தங்கத்தையும் சேர்ப்பதை அவர் இலக்காகக் கொண்டுள்ளார்.

இரண்டு முறை `மிகவும் மதிப்புமிக்க வீரர்’ ( MVP ) பட்டம் உட்பட 4 என்பிஏ விருதுகள், இரண்டு உலகக் கோப்பைகள் என வென்று குவித்த கரியின் பதக்க சேகரிப்பில் இல்லாத ஒரே விஷயம் ஒலிம்பிக் பதக்கம் மட்டுமே.

என்பிஏ அணியின் அதிக மதிப்பெண் பெற்றவரான லெப்ரான் ஜேம்ஸ், லண்டன் 2012க்குப் பிறகு முதன்முறையாக விளையாட உள்ளார். மேலும் கெவின் டுரான்ட் கூடைப்பந்தாட்டத்தில் நான்கு தங்கப் பதக்கங்களை வென்ற முதல் ஆண் தடகள வீரர் என்ற சாதனையைப் பெறுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளார்.

 

ஷெல்லி-ஆன் ஃப்ரேசர்-பிரைஸ் (ஜமைக்கா) - தடகளம்

ஷெல்லி-ஆன் ஃப்ரேசர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

வெற்றி தோல்வி என எல்லா சூழலையும் 37 வயதான ஷெல்லி-ஆன் ஃப்ரேசர்-பிரைஸ் சந்தித்திருந்தாலும், அவரது ஐந்தாவது மற்றும் இறுதி ஒலிம்பிக்கில் சிறந்த திறனை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

"எப்போதும் முடிவென்பதே கிடையாது" என்று மூன்று முறை ஒலிம்பிக் சாம்பியனான ஹெல்லி இந்த மாதத் தொடக்கத்தில் கூறினார்.

ஐந்து முறை 100 மீட்டர் உலக சாம்பியனான ஃப்ரேசர்-பிரைஸ் இந்த சீசனில் காயங்களுடன் போராடினார். ஆனால் தனது முதல் தனிநபர் ஒலிம்பிக் தங்கப் பதக்கத்துக்காக விளையாடும் சக வீராங்கனை ஷெரிக்கா ஜாக்சனுடன் இணைந்து பாரிஸில் போட்டியிடுவார்.

அவர்கள் 4x100 மீ தொடர் ஓட்டக் குழுவில் இடம் பிடித்திருப்பதால், ஜமைக்கா தங்கள் பட்டத்தைக் காக்க முயல்கிறது.

கவனிக்க வேண்டிய மற்ற வீரர்கள்

ஜெர்மன் குதிரையேற்ற வீராங்கனையான இசபெல் வெர்த், தான் பங்கேற்ற எந்த ஒலிம்பிக் போட்டியிலும் தங்கப் பதக்கம் வெல்லத் தவறியதில்லை. அவருக்கு இப்போது 55 வயதாகிறது.

தனது ஏழாவது போட்டியில் பங்குபெறும் அவர், தனது ஏழு தங்கம் மற்றும் ஐந்து வெள்ளிப் பதக்கங்களைச் சேர்த்து, ஒலிம்பிக் வரலாற்றில் அதிக பதக்கங்கள் பெறும் வீராங்கனை என்ற சாதனையைத் தக்க வைப்பார் என்று நம்புகிறார்.

ஜார்ஜியாவை சேர்ந்த 55 வயதான பிஸ்டல் ஷூட்டர் நினோ சலுக்வாட்ஸே தனது 10வது ஒலிம்பிக்கில் பங்கேற்று, கனடிய குதிரையேற்ற தடகள வீரர் இயன் மில்லரின் சாதனையைச் சமன் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நிகழ்ந்தால் சலுக்வாட்ஸே இதை முதன்முதலில் சாதித்தவராக இருப்பார்.

கியூபாவின் மிஜைன் லோபஸ், கிரேக்க-ரோமன் மல்யுத்தத்தில் தொடர்ச்சியாக ஐந்து தனிநபர் தங்கம் வென்ற முதல் தடகள வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

ஆஸ்திரேலிய ஜெஸ் ஃபாக்ஸ் கேனோ ஸ்லாலோமில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். மேலும் கயாக் கிராஸின் புதிய ஒழுக்கத்துடன், ஒரே விளையாட்டுப் போட்டிகளில் மூன்று கேனோ தங்கங்களை வென்ற முதல் நபராக இருக்க வாய்ப்புள்ளது.

டேபிள் டென்னிஸில், பிரேசிலின் புருனா அலெக்ஸாண்ட்ரே, ஒலிம்பிக்கில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடாலியா பார்ட்டிகாவுக்கு பிறகு, பாராலிம்பிக்ஸில் போட்டியிடும் இரண்டாவது தடகள வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒலிம்பிக்கில் மற்றுமொரு சம்பவம் – தேசிய கீதத்தை மாற்றி இசைத்ததால் சர்ச்சை!

2024 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் பாரிஸில் நடைபெற்று வருகின்றன. கடந்த 26 ஆம் திகதி ஆரம்பமான குறித்த போட்டிகள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளன. இந்த நிலையில் ஒலிம்பிக் போட்டியின்போது இடம்பெற்ற சம்பவம் ஒன்றுக்காக சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம் மீண்டும் மன்னிப்பு கோரியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

கூடைப்பந்து போட்டியொன்றின்போது தென் சூடான் தேசிய கீதத்திற்குப் பதிலாக சூடான் தேசிய கீதத்தை இசைத்தமைக்காகவே சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம் மன்னிப்பு கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

முன்னதாக ஒலிம்பிக் போட்டிகளின் ஆரம்ப விழாவின்போது தென்கொரிய அணியைத் தவறுதலாக வட கொரியா என அழைத்தமை தொடர்பில் சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம் மன்னிப்பு கோரியிருந்தது. அத்துடன் ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவிற்குப் பிறகு நடைபெற்ற விருந்துபசாரத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்று கத்தோலிக்க மதத்தை அவமதிக்கும் வகையில் இருந்ததாக ஆட்சேபனைகள் தெரிவிக்கப்பட்டன. எனினும் இந்நிகழ்வு கத்தோலிக்க மதத்தை அவமதிக்கும் நோக்கத்தில் செய்யப்படவில்லை எனவும் ஏதேனும் தவறு இருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் ஒரு செய்தி மாநாட்டில் பாரிஸின் ஒலிம்பிக் செய்தித் தொடர்பாளர் ஆன் டெஸ்காம்ப்ஸ் கூறியிருந்தார்.

https://thinakkural.lk/article/306983

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஏராளன் said:

ஒலிம்பிக்கில் மற்றுமொரு சம்பவம் – தேசிய கீதத்தை மாற்றி இசைத்ததால் சர்ச்சை!

2024 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் பாரிஸில் நடைபெற்று வருகின்றன. கடந்த 26 ஆம் திகதி ஆரம்பமான குறித்த போட்டிகள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளன. இந்த நிலையில் ஒலிம்பிக் போட்டியின்போது இடம்பெற்ற சம்பவம் ஒன்றுக்காக சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம் மீண்டும் மன்னிப்பு கோரியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

கூடைப்பந்து போட்டியொன்றின்போது தென் சூடான் தேசிய கீதத்திற்குப் பதிலாக சூடான் தேசிய கீதத்தை இசைத்தமைக்காகவே சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம் மன்னிப்பு கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

முன்னதாக ஒலிம்பிக் போட்டிகளின் ஆரம்ப விழாவின்போது தென்கொரிய அணியைத் தவறுதலாக வட கொரியா என அழைத்தமை தொடர்பில் சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம் மன்னிப்பு கோரியிருந்தது. அத்துடன் ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவிற்குப் பிறகு நடைபெற்ற விருந்துபசாரத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்று கத்தோலிக்க மதத்தை அவமதிக்கும் வகையில் இருந்ததாக ஆட்சேபனைகள் தெரிவிக்கப்பட்டன. எனினும் இந்நிகழ்வு கத்தோலிக்க மதத்தை அவமதிக்கும் நோக்கத்தில் செய்யப்படவில்லை எனவும் ஏதேனும் தவறு இருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் ஒரு செய்தி மாநாட்டில் பாரிஸின் ஒலிம்பிக் செய்தித் தொடர்பாளர் ஆன் டெஸ்காம்ப்ஸ் கூறியிருந்தார்.

https://thinakkural.lk/article/306983

கூடை ப‌ந்து விளையாட்டில் அமெரிக்கா ப‌த‌க்க‌ம் வெல்லும்
ஹ‌ரியின் ஆசையும் இந்த‌ ஒலிம்பிக்கில் நிறைவேறும்.........................ப‌ய‌ற்ச்சி ஆட்ட‌த்திலும் ஒலிம்பிக்கின் முத‌ல் விளையாட்டிலும் அமெரிக்கா கூடை ப‌ந்து அணி தொட‌ர் வெற்றி......................

அமெரிக்காவும் க‌ன‌டாவும் பின‌லில் விளையாடுவின‌ம்..........................க‌ன‌டா அணிய‌ அமெரிக்கா அணி வெல்லும்...................................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.