Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவை அமைச்சரவையில் இருந்து நீக்குவது தொடர்பில் அரசாங்கத்தின் உயர்மட்டம் கவனம் செலுத்தியுள்ளது என்று தெரியவருகின்றது. முன்னாள் சுகாதார அமைச்சராக இருந்த கெஹலிய ரம்புக்வெல தற்போது சுற்றாடல் அமைச்சராகப் பதவி வகிக்கின்றார். சுகாதார அமைச்சராகக் கடமையாற்றிய காலத்தில் தரமற்ற மருந்துப் பொருள்களை இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பிரகாரம் குற்றப்புலனாய்வு பணிமனை கடந்த 2ஆம் திகதி கெஹலியவைக் கைது செய்திருந்தது.
கடந்த மூன்றாம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட கெஹலிய ரம்புக்வெலவை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
மோசடிச் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் உள்ள ஒருவரைத் தொடர்ந்தும் அமைச்சரவையில் வைத்திருப்பதன் மூலம் நாட்டுக்கு அபகீர்த்தி ஏற்படக்கூடும் என்று பல்வேறு தரப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன. அதையடுத்து அமைச்சர் பதவியில் இருந்து கெஹலிய ரம்புக்வெலவை நீக்குவது தொடர்பில் அரசாங்கத்தின் உயர்மட்டம் தீவிர கவனம் செலுத்தியுள்ளது என்று உயர்மட்ட அரசாங்க வட்டாரங்களில் இருந்து தகவல் கசிந்துள்ளது. (ஏ) 

 

https://newuthayan.com/article/அமைச்சரவையில்_கெஹலிய_அவுட்

  • கருத்துக்கள உறவுகள்

சுற்றாடல்துறை அமைச்சு பொறுப்பிலிருந்து கெஹலிய ரம்புக்வெல்ல இராஜினாமா!

Published By: DIGITAL DESK 3  06 FEB, 2024 | 02:00 PM

image

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சரும் தற்போதைய சுற்றாடல்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிய வருகிறது.

நேற்று திங்கட்கிழமை (05) அவர் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளதாக அரசாங்கத்தின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தரமற்ற  மருந்துகளை  இறக்குமதி செய்த  விவகாரம்  தொடர்பில்  கெஹலிய ரம்புக்வெல்ல கடந்த  2 ஆம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

பின்னர், மூன்றாம் திகதி மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு  எதிர்வரும் 15 ஆம் திகதி  வரை  விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/175711

  • கருத்துக்கள உறவுகள்

கெஹலியவின் இராஜினாமாவை உறுதிப்படுத்தி வர்த்தமானி வெளியிடப்பட்டது!

Published By: DIGITAL DESK 3   06 FEB, 2024 | 04:55 PM

image
 

சுற்றாடல் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் இராஜினாமாவை உறுதிப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

கெஹலிய ரம்புக்வெல்லவின் இராஜினாமா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையிலேயே இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இவரது இராஜினாமா இம்மாதம் 3 ஆம் முதல் அமுலுக்கு வருவதாக குறித்த வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

416253754_1055842152200815_7325526406161

https://www.virakesari.lk/article/175730

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

கெஹலியவின் இராஜினாமாவை உறுதிப்படுத்தி வர்த்தமானி வெளியிடப்பட்டது!

இத்தனை மக்கள் மரணத்துக்கு காரணமான கெகலியவை அமைச்சரவையை விட்டு தூக்கியெறிய துணிவில்லாத ஜனாதிபதி.

குற்றம் செய்யும் தனது அமைச்சரவையை எப்படி கட்டியணைத்துக் கொண்டு இருக்கப் போகிறார்?

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஈழப்பிரியன் said:

இத்தனை மக்கள் மரணத்துக்கு காரணமான கெகலியவை அமைச்சரவையை விட்டு தூக்கியெறிய துணிவில்லாத ஜனாதிபதி.

குற்றம் செய்யும் தனது அமைச்சரவையை எப்படி கட்டியணைத்துக் கொண்டு இருக்கப் போகிறார்?

அவர் அப்படி எல்லாம் தூக்கி ஏறிய முடியாத நிலைமையில்தான் இருக்கிறார். அரசாங்கம் ராஜபக்சேக்களின் கைகளில் இருக்கிறது. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐயா ரணில் வந்து தொங்கிக்கொண்டு இருக்கிறார் , ஆனாலும் மனிசன் பிரித்தாளும் செயலை செவ்வனே செய்து வருகினறார் , மொட்டும் இப்ப மலர மாட்டாமல் முழிக்கின்றது . நாமல் இப்ப கோத்தாவை குற்றம் சொல்லும் நிலைக்கு வந்துவிட்டது மொட்டுவின் செல்வாக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

 

spacer.png

 

spacer.png

 

426271054_781331270698514_87048258656604

 

spacer.png

 

spacer.png

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.