Jump to content

இந்து சமுத்திர மாநாட்டில் "நிரந்தரமான மற்றும் நிலையான இந்து சமுத்திரத்தை நோக்கி" என்ற தொனிப்பொருளில் உரையாற்றவுள்ள ஜனாதிபதி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

7ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் பங்கேற்க அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் செய்துள்ள "நிரந்தரமான மற்றும் நிலையான இந்து சமுத்திரத்தை நோக்கி" என்ற தொனிப்பொருளில் நடைபெறும் இந்த ஆண்டு மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதான உரை நிகழ்த்த உள்ளார்.

அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் நடைபெறும் 7ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று வியாழக்கிழமை (08) அதிகாலை அவுஸ்திரேலியா பயணமானார்.

இந்தியா மன்றம் மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இந்த மாநாட்டில்  பங்கேற்பதற்காக ஜனாதிபதி சென்றுள்ளதோடு, ஏழாவது இந்து சமுத்திர  மாநாடு பெப்ரவரி  மாதம் 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் நடைபெறுகிறது.

இந்து சமுத்திரத்தை அண்மித்த நாடுகள் மற்றும் இந்து சமுத்திரத்தை அதிகமாகப் பயன்படுத்தும்  ஏனைய நாடுகளைப் பாதிக்கும் பொதுவான அபிலாஷைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில்  ஆராய்வதற்காக இந்து சமுத்திர மாநாடு 2016 இல்  ஆரம்பிக்கப்பட்டது.

"நிரந்தரமான மற்றும் நிலையான இந்து சமுத்திரத்தை நோக்கி" என்ற தொனிப்பொருளில் நடைபெறும் இந்த ஆண்டு மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதான உரை நிகழ்த்த உள்ளார்.

இம்முறை மாநாட்டில் இந்து சமுத்திர பிராந்தியத்தில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் 40 நாடுகளைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் பங்கேற்புடன்  வரைபடம் ஒன்றும்  தயாரிக்கப்படும். மாநாட்டுடன் இணைந்ததாக இலங்கையில் புதிய முதலீட்டு வாய்ப்புகள் குறித்து கவனம் செலுத்தும் பல உயர்மட்ட கலந்துரையாடல்களிலும் ஜனாதிபதி பங்கேற்க உள்ளார்.

ஜனாதிபதியின் இந்த விஜயத்தில் வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியும் இணைந்து கொள்ளவுள்ளதோடு, “எங்கள் நீல எதிர்காலம் : இந்து சமுத்திர வளங்களின் இருப்பைப் பாதுகாப்பதற்கு பிராந்திய தீவு நாடுகளுடன் இணைந்து செயற்படுவதெப்படி?” என்ற தலைப்பில் வெளிவிவகார அமைச்சர் உரையாற்றவுள்ளார்.

7 ஆவது இந்து சமுத்திர மாநாட்டை இந்திய வெளியுறவு அமைச்சு மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கத்துடன் இணைந்து இந்திய மன்றம் ஏற்பாடு செய்துள்ளது. சிங்கப்பூர்  எஸ்.ராஜரத்தினம் சர்வதேச கல்வி நிலையம் மற்றும் அவுஸ்திரேலியாவின் பெர்த்-அமெரிக்கா ஆசியா மையம் ஆகியவை இதற்கு பங்களிக்கின்றன.

2ஆவது இந்து சமுத்திர மாநாடு 2017ஆம் ஆண்டு அப்போதைய பிரதமரும், ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இலங்கையில் நடைபெற்றது நினைவூட்டத்தக்கது.

 

https://www.virakesari.lk/article/175864

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • T20 WorldCup : சொந்த மண்ணில் அமெரிக்கா சாதனை வெற்றி! Jun 02, 2024 10:40AM IST டி20 உலகக்கோப்பையின் முதல் போட்டியில் கனடா அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் அமெரிக்கா அணி வீழ்த்தி சாதனை படைத்துள்ளது. ஐசிசி 9வது டி20 உலகக்கோப்பை தொடர் இன்று (ஜூன் 2) தேதி தொடங்கி வருகிற ஜூன்-29ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியாக ஏ-பிரிவில் இடம்பெற்றுள்ள அணிகளான கனடா அணியும், போட்டியை நடத்தும் அமெரிக்கா அணியும் மோதின. அமெரிக்காவில் உள்ள டல்லாஸ்  கிராண்ட் ப்ரேரி மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று காலை 6 மணிக்கு போட்டி தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற அமெரிக்கா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய கனடா அணி அதிரடியாக விளையாடி, 5 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக  தொடக்க வீரர் நவ்நீத் தலிவால் 61 ரன்கள் குவித்தார். மற்றொரு வீரர் நிக்கோலஸ் கிர்டோன் 51 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அமெரிக்கா அணியில் அலிகான், ஹர்மீத் சிங் மற்றும் ஆண்டர்சன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை எடுத்தனர். தொடர்ந்து 195 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது அமெரிக்கா அணி. தொடக்க வீரர்கள் ஸ்டீவன் டெய்லர்(0) மற்றும் மோனங்க் பட்டேல்(16) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். எனினும் அடுத்த இணைந்த ஆண்ட்ரிஸ் கௌஸ் மற்றும் ஆரோன் ஜோன்ஸ் ஜோடி ஆக்ரோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் அரைசதம் அடித்த நிலையில், அதிரடியாக விளையாடி வந்த ஆண்ட்ரிஸ் கௌஸ் 65 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். மறுபக்கம் கனடா பவுலர்களை துவம்சம் செய்த ஆரோன் ஜோன்ஸ் சிக்சர் அடித்து அமெரிக்க அணியை வெற்றி பெற செய்தார். இதன்மூலம் அமெரிக்கா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் 40 பந்துகளில் 94 ரன்கள் ஆரோன் ஜோன்ஸ்  ஆட்டநாயகன் விருதை பெற்றார். இந்த வெற்றியின் மூலம் டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்ற தனது முதல் போட்டியிலேயே  அமெரிக்கா அணி வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. https://minnambalam.com/sports/t20-worldcup-americas-record-win-at-home/
    • இது மாதிரி  தமிழர்களின் பிரபல்யமான நடிகர்கள் சமந்தா, திருசா என்ற இருவரும் இலங்கையில்  கடைசியாக தமிழர்களுக்கு பேரழிவு நடந்த போது  குரல் கொடுக்கவில்லையாம்.  ஆனால் இப்போது பலஸ்தீனர்களுக்காக பொங்கி எழுந்துள்ளனராம். வட்சப் குழுவில் வந்த தகவல்.
    • ப‌க‌ல் க‌ன‌வு காண்ப‌தில் த‌ப்பில்லை அண்ணா ஹா ஹா😁............................................. எங்க‌ளுக்கு நேர‌ வித்தியாச‌ம் அதிக‌ம்  ஆன‌ ப‌டியால் என்னால் விளையாட்டு பார்க்க‌ முடிய‌ வில்லை   அமெரிக்கா 5ஓவ‌ர் விளையாடிட்டு இருந்த‌ போது கைபேசியில் இருந்து இஸ்கோர‌ பார்க்க‌ இவ‌ங்க‌ள் ஆப்ப‌டிக்க‌ போகின‌ம் என்று மீண்டும் தூங்கி விட்டேன்    காலையில் எழும்பி பார்க்க‌ ச‌ந்தோஷ‌மாய் இருந்திச்சு🙏🥰.....................................
    • அமெரிக்காவால் முதல் 8 வருக்கு 48 ஓட்டங்கள்தான் அடிக்க முடிந்தது. ஒரு கட்டத்தில் TV யை நிப்பாட்டிட்டு படுப்போம் என்று பார்த்தேன். ஆனால் அதன்பின் ஆரோன் ஜான்ஸின் சரவெட்டியாட்டம் அமெரிக்காவை வெல்ல வைத்தது. 
    • வர்த்தக பிரிவில் முதலிடம் யாழ்.இந்து மகளிர் மாணவி (மாதவன்) 2023 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியின் மாணவியான கீர்த்திகா பத்மலோஜன் வர்த்தக பிரிவில் பரீட்சைக்கு தோற்றி, 3ஏ சித்திகளை பெற்று மாவட்ட ரீதியாக முதலிடத்தையும், அகில இலங்கை ரீதியாக 44வது இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார். மாணவி கருத்து தெரிவிக்கையில், எனது பாடசாலையிலும், தனியார் கல்வி நிலையங்களிலும் சிறப்பான கல்வி புகட்டப்பட்டது நானும் வீட்டில் சிறப்பாக கல்வி கற்றேன். ஆகையால் எனது இலக்கினை அடைய முடிந்தது. மேலும், எனது இந்த வெற்றிக்கு ஊக்கமளித்த அம்மா, அப்பா, பாடசாலை சமூகத்தினர், தனியார் கல்வி நிலையத்தினர், நண்பர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். எதிர்காலத்தில் ஒரு சிறந்த சட்டத்தரணியாகி, வறுமைப்பட்ட எங்கள் மக்களுக்கு என்னால் இயன்ற சட்ட உதவிகளை வழங்குவேன் என்றார். இந்த வெற்றி குறித்து மாணவியின் தந்தை கருத்து தெரிவிக்கையில், தங்களது மகள் வணிகத்துறையில் கல்வி கற்பதற்கு விரும்பினார். அவரது விருப்பத்துக்கு ஏற்ப நாங்களும் ஒத்துழைத்தோம். ஆகையால் அவர் சாதனை புரிந்துள்ளார். ஏனைய பெற்றோர்களும், உங்களது பிள்ளைகள் எந்த துறைக்குள் சாதிக்க விரும்புகின்றதோ அந்தத் துறைக்குள் அவர்களை செல்ல விடுங்கள். அவர்களுக்கு உறுதுணையாக இருங்கள். அப்படி இருந்தால் அவர்களும் நிச்சயம் வெற்றி பெறுவார்கள் என்றார்.(க)     https://newuthayan.com/article/மாவட்ட_ரீதியாக_முதலிடம்_யாழ்.இந்து_மகளிர்_மாணவி
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.