Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிக நிதி வழங்கிய 'லாட்டரி கிங்' மார்ட்டின் யார்? - விரிவான தகவல்கள்

தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிக நிதி வழங்கிய 'லாட்டரி கிங்' மார்ட்டின் யார்?

பட மூலாதாரம்,MARTINFOUNDATION.COM

படக்குறிப்பு,

சாண்டியாகோ மார்ட்டின்

கட்டுரை தகவல்
  • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 15 மார்ச் 2024, 09:36 GMT
    புதுப்பிக்கப்பட்டது 37 நிமிடங்களுக்கு முன்னர்

தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு அதிக நிதி கொடுத்தது, 'லாட்டரி கிங்' என்று அழைக்கப்படும் சாண்டியாகோ மார்ட்டினின் பியூச்சர் கேமிங் மற்றும் ஹோட்டல் சர்வீசஸ் நிறுவனம் எனத் தெரியவந்துள்ளது.

தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி அளித்த நிறுவனங்கள், நிதியைப் பெற்ற அரசியல் கட்சிகள் குறித்த விவரங்களை வெளியிட வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, பாரத ஸ்டேட் வங்கி இந்த விவரங்களை உச்ச நீதிமன்றத்திற்கு அளித்தது. அவை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டன. அந்தத் தகவல்களை இந்தியத் தேர்தல் ஆணையம் நேற்று (மார்ச் 14-ஆம் தேதி) தனது இணையதளத்தில் வெளியிட்டது.

அதில் இருந்த தரவுகளின்படி, அதிகபட்ச தேர்தல் பத்திரங்களை வாங்கிய நிறுவனம் பியூச்சர் கேமிங் மற்றும் ஹோட்டல் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் எனத் தெரியவந்திருக்கிறது. 2020-ஆம் ஆண்டு அக்டோபர் முதல் 2024-ஆம் ஆண்டு ஜனவரிக்கு இடையில் இந்த நிறுவனம் 1,368 கோடி ரூபாய் மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது.

2021-ஆம் ஆண்டு அக்டோபரில் இந்த நிறுவனம் 195 கோடி ரூபாய் மதிப்பிலான தேர்தல் பத்திரங்களையும் 2022-ஆம் ஆண்டு ஜனவரியில் இரண்டு முறை ரூ.210 கோடி மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களையும் வாங்கியது. இந்த ஆண்டு ஜனவரியில் ரூ.63 கோடி மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களை வாங்கியிருக்கிறது.

பியூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் 1991-ஆம் ஆண்டு டிசம்பர் 30-ஆம் தேதி உருவாக்கப்பட்டது. தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் இதன் பதிவு அலுவலகம் இருக்கிறது.

 
தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிக நிதி வழங்கிய 'லாட்டரி கிங்' மார்ட்டின் யார்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

1980களின் இறுதியில் கோயம்புத்தூரில் மார்ட்டின் லாட்டரி ஏஜென்சீஸ் பிரைவேட் லிமிட்டட் என்ற நிறுவனத்தைத் துவங்கினார் மார்ட்டின்

சாண்டியாகோ மார்ட்டின் ‘லாட்டரி கிங்’ ஆனது எப்படி?

சாண்டியாகோ மார்ட்டினின் ஆரம்ப கால வாழ்க்கை குறித்த தகவல்கள் தெளிவாகக் கிடைக்கவில்லை.

மார்ட்டினின் பெற்றோர் மியான்மரில் வசித்தவர்கள். மியான்மர் நாட்டில் ஒரு சாதாரண தொழிலாளியாக அவரது வாழ்க்கை துவங்கியது. மியான்மரில் இருந்து நாடு திரும்பிய இவரது குடும்பம், கோயம்புத்தூரில் குடியேறியது. 13 வயதில் ஒரு தேநீர் கடையில் லாட்டரி சீட்டுகளை விற்க ஆரம்பித்த மார்ட்டின், விரைவிலேயே தனக்கென தனியாக ஒரு நெட்வர்க்கை உருவாக்கினார்.

1980களின் இறுதியில் கோயம்புத்தூரில் மார்ட்டின் லாட்டரி ஏஜென்சீஸ் பிரைவேட் லிமிட்டட் என்ற நிறுவனத்தைத் துவங்கினார் மார்ட்டின். தமிழ்நாடு மட்டுமல்லாமல், மார்ட்டின் கர்நாடகா என்ற நிறுவனத்தின் மூலம் கர்நாடக மாநிலத்திலும் மார்ட்டின் சிக்கிம் லாட்டரி நிறுவனத்தின் மூலம் மேகாலயா, அருணாச்சலப் பிரதேசம் போன்ற வட கிழக்கு மாநிலங்களிலும் தனது சாம்ராஜ்ஜியத்தை விரிவுபடுத்தினார் மாட்டின். இது தவிர மேற்கு வங்கம், பஞ்சாப், மகாராஷ்டிராவிலும் லாட்டரி விற்பனையில் இவரது நிறுவனமே முன்னணியில் இருக்கிறது.

இந்தக் கட்டத்தில்தான் 'லாட்டரி கிங்' என்ற பெயர் இவருக்கு வந்து சேர்ந்தது. 260-க்கும் மேற்பட்ட ஏஜென்டுகள், 1,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் என ஒரு பிரம்மாண்டமான சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கினார் மார்ட்டின்.

கடந்த 1990-களில் இவரது நிறுவனத்தின் இரு நம்பர் லாட்டரி, கோயம்புத்தூரில் கொடி கட்டிப் பறந்தது. லாட்டரி மோகம் தமிழ்நாடு முழுவதும் மிகப் பெரிய சிக்கலாக உருவெடுத்த நிலையில் ஒரு அவசரச் சட்டத்தின் மூலம் 2003-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் லாட்டரியைத் தடைசெய்தது.

இருந்தாலும் பிற மாநிலங்களில் இவரது நிறுவனத்தின் செயல்பாடுகள் பிரச்சனையின்றி தொடர்ந்தன. ஒரு கட்டத்தில் லாட்டரி மட்டுமல்லாமல், ரியல் எஸ்டேட், கட்டுமானம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பொழுதுபோக்கு, ஜவுளி, மருத்துவம், கல்வி, மென்பொருள், விவசாயம், கட்டுமானப் பொருட்கள் போன்ற துறைகளிலும் கால் பதித்தது இவரது நிறுவனம்.

 
தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிக நிதி வழங்கிய 'லாட்டரி கிங்' மார்ட்டின் யார்
படக்குறிப்பு,

தடைசெய்யப்பட்ட லாட்டரியை விற்றது உட்பட ஒட்டுமொத்தமாக 14 வழக்குகள் அவர் மீது தொடுக்கப்பட்டன. பிறகு குண்டர் சட்டத்தை சென்னை உயர் நீதிமன்றம் ரத்துசெய்தது

மார்ட்டினின் அரசியல் நெருக்கம்

பல மாநிலங்களிலும் பல அரசியல் தலைவர்களுடன் பெரும் நெருக்கம் இவருக்கு இருந்தது.

கடந்த 2007 – 2008-ஆம் ஆண்டில் கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரபூர்வ பத்திரிக்கையான தேசாபிமானிக்கு மார்ட்டின் ரூ.2 கோடி நன்கொடை அளித்த விவகாரம் அம்மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்குப் பிறகு, அந்தப் பணத்தை கட்சி திருப்பி அளித்ததோடு, தேசாபிமானியின் பொது மேலாளர் இ.பி. ஜெயரஞ்சன் தனது பதவியையும் ராஜினாமா செய்தார்.

2011-இல் அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் மு.கருணாநிதி, மாக்ஸிம் கார்க்கியின் தாய் நாவலை அடிப்படையாக வைத்து கதை - வசனம் எழுதிய 'இளைஞன்' படத்தை மார்ட்டினின் மார்ட்டின் புரொடக்ஷன்ஸ் தயாரித்தபோது, அது பற்றியும் சர்ச்சை எழுந்தது.

2011-இல் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, கோயம்புத்தூரில் பதிவுசெய்யப்பட்ட ஒரு நில அபகரிப்பு வழக்கில் மார்ட்டினை கைதுசெய்யப்பட்டார். அடுத்த 15 நாட்களில் அவர் குண்டர் சட்டத்திலும் கைதுசெய்யப்பட்டார். தடைசெய்யப்பட்ட லாட்டரியை விற்றது உட்பட ஒட்டுமொத்தமாக 14 வழக்குகள் அவர் மீது தொடுக்கப்பட்டன. பிறகு குண்டர் சட்டத்தை சென்னை உயர் நீதிமன்றம் ரத்துசெய்தது. சுமார் 7 மாதங்கள் சிறையில் இருந்த மார்ட்டின், எல்லா வழக்குகளிலும் ஜாமீன் பெற்று வெளியில் வந்தார்.

இந்தத் தருணத்தில் கோயம்புத்தூரைச் சேர்ந்த ஆனந்த வடிவேல் என்பவரும் சென்னையைச் சேர்ந்த செல்வம் என்ற ஹல்வா செல்வமும் தங்களிடம் பணம் கேட்டு மிரட்டுவதாகவும் பணம் தராவிட்டால், வேறு மாநிலங்களில் இருந்து லாட்டரியைக் கடத்திவந்து, தமிழ்நாட்டில் மார்ட்டினின் பெயரில் விற்கப்போவதாகக் கூறுவதாகவும் மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ் மார்ட்டின் காவல் துறையில் புகார் அளித்தார்.

 
தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிக நிதி வழங்கிய 'லாட்டரி கிங்' மார்ட்டின் யார்

பட மூலாதாரம்,MARTINFOUNDATION.COM

படக்குறிப்பு,

மார்டினின் மனைவி லீமா ரோஸ் மார்டின்

லீமா ரோஸ் மார்ட்டின் கைது

2013-ஆம் ஆண்டில் கணக்கில் வராத பணத்தை, சட்டபூர்வமாக்குவதற்காக போலித் பத்திரங்களைத் தயார் செய்த குற்றச்சாட்டில் மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ் கைதுசெய்யப்பட்டார். இதற்குப் பிறகு, பாரி வேந்தரின் கட்சியான இந்திய ஜனநாயகக் கட்சியில் இணைந்தார் லீமா ரோஸ். 2014-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோதி கோயம்புத்தூரில் பொதுக்கூட்டம் ஒன்றில் பங்கேற்றபோது, அந்த மேடையில் லீமா ரோஸ் மார்ட்டினும் இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. லீமா ரோஸ் தற்போதுவரை இந்திய ஜனநாயகக் கட்சியில்தான் இருந்து வருகிறார்.

சாண்டியாகோ மார்ட்டின் - லீமா ரோஸ் மார்ட்டின் தம்பதிக்கு டெய்ஸி என்ற மகளும் சார்லஸ் ஜோஸ், டைஸன் ஆகிய மகன்களும் இருக்கின்றனர். 2015ஆம் ஆண்டில் சார்லஸ் ஜோஸ் பா.ஜ.கவில் இணைந்ததாக ஒரு செய்தி புகைப்படங்களுடன் பரவியது. அந்தச் செய்தியை இரு தரப்பும் உறுதிசெய்யவில்லை.

 

மார்ட்டினுக்கு எதிரான காவல்துறை, புலனாய்வு நடவடிக்கைகள்

சாண்டியாகோ மார்ட்டின் பல முறை காவல்துறை நடவடிக்கைகளுக்கும் மத்தியண புலனாய்வு அமைப்புகளின் நடவடிக்கைக்கும் உள்ளாகியிருக்கிறார்.

2015-ஆம் ஆண்டில் வருமான வரித்துறை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்த மார்ட்டினின் இடங்களில் சோதனை நடத்தியது.

2016-இல் பணப் பரிமாற்றத் தடைச்சட்டத்தின் கீழ் மார்ட்டினுக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. சட்டவிரோத லாட்டரி விற்பனை தொடர்பாக 2018-இல் மத்தியப் புலனாய்வுத் துறை மார்ட்டினின் வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்தியது.

2019-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30-ஆம் தேதி மார்ட்டினுக்குச் சொந்தமான இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். அத்துடன் மார்ட்டினின் ஹோமியோபதி கல்லூரியில் காசாளராக பணிபுரிந்து வந்த பழனிச்சாமி என்பரிடம் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தினர். இந்நிலையில் மே 3-ஆம் தேதியன்று வெள்ளியங்காடு அருகே பழனிச்சாமி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். வருமான வரித்துறையினர் சித்ரவதை காரணமாக தன் தந்தை மரணமடைந்ததாக அவரது மகன் குற்றம்சாட்டினார். இந்த விவகாரம் அந்தத் தருணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சிக்கிம் அரசுக்கு சுமார் ரூ.900 கோடி இழப்பு ஏற்படுத்திய குற்றச்சாட்டை விசாரித்த அமலாக்கத் துறை 2023-ஆம் ஆண்டு மே 11 மற்றும் 12-ஆம் தேதிகளில் பணமோசடி தடுப்புச் சட்ட விதிகளின் கீழ், சென்னையிலும் கோவையிலும் உள்ள பியூச்சர் கேமிங் சொல்யூஷன்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்டின் இடங்களில் சோதனை நடத்தியது. இந்தச் சோதனையை அடுத்து சுமார் ரூ. 457 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டன.

கடந்த 2023-ஆம் ஆண்டு செப்டம்பர் 21-ஆம் தேதி கொல்கத்தாவில் உள்ள பணப் பரிமாற்றத் தடைச் சட்டத்திற்கான சிறப்பு நீதிமன்றத்தில் பியூச்சர் கேமிங் மற்றும் ஹோட்டல் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் பிற 15 நிறுவனங்களுக்கு எதிராக அமலாக்கத் துறை ஒரு வழக்கைப் பதிவு செய்தது.

விற்கப்படாத லாட்டரி சீட்டுகளை தக்கவைத்துக்கொண்டு, அவற்றுக்கு பரிசு விழுந்ததாகக் காட்டுவது, விற்கப்படாத லாட்டரிகளை விற்றதாகக் காட்டுவது ஆகிய குற்றச்சாட்டுகள் இந்த நிறுவனத்தின் மீது சுமத்தப்பட்டன.

https://www.bbc.com/tamil/articles/cl4k8zzxg10o

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, ஏராளன் said:

தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிக நிதி வழங்கிய 'லாட்டரி கிங்' மார்ட்டின் யார்? - விரிவான தகவல்கள்

தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிக நிதி வழங்கிய 'லாட்டரி கிங்' மார்ட்டின் யார்?

பட மூலாதாரம்,MARTINFOUNDATION.COM

படக்குறிப்பு,

சாண்டியாகோ மார்ட்டின்

கட்டுரை தகவல்

  • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 15 மார்ச் 2024, 09:36 GMT
    புதுப்பிக்கப்பட்டது 37 நிமிடங்களுக்கு முன்னர்

தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு அதிக நிதி கொடுத்தது, 'லாட்டரி கிங்' என்று அழைக்கப்படும் சாண்டியாகோ மார்ட்டினின் பியூச்சர் கேமிங் மற்றும் ஹோட்டல் சர்வீசஸ் நிறுவனம் எனத் தெரியவந்துள்ளது.

தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி அளித்த நிறுவனங்கள், நிதியைப் பெற்ற அரசியல் கட்சிகள் குறித்த விவரங்களை வெளியிட வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, பாரத ஸ்டேட் வங்கி இந்த விவரங்களை உச்ச நீதிமன்றத்திற்கு அளித்தது. அவை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டன. அந்தத் தகவல்களை இந்தியத் தேர்தல் ஆணையம் நேற்று (மார்ச் 14-ஆம் தேதி) தனது இணையதளத்தில் வெளியிட்டது.

அதில் இருந்த தரவுகளின்படி, அதிகபட்ச தேர்தல் பத்திரங்களை வாங்கிய நிறுவனம் பியூச்சர் கேமிங் மற்றும் ஹோட்டல் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் எனத் தெரியவந்திருக்கிறது. 2020-ஆம் ஆண்டு அக்டோபர் முதல் 2024-ஆம் ஆண்டு ஜனவரிக்கு இடையில் இந்த நிறுவனம் 1,368 கோடி ரூபாய் மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது.

2021-ஆம் ஆண்டு அக்டோபரில் இந்த நிறுவனம் 195 கோடி ரூபாய் மதிப்பிலான தேர்தல் பத்திரங்களையும் 2022-ஆம் ஆண்டு ஜனவரியில் இரண்டு முறை ரூ.210 கோடி மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களையும் வாங்கியது. இந்த ஆண்டு ஜனவரியில் ரூ.63 கோடி மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களை வாங்கியிருக்கிறது.

பியூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் 1991-ஆம் ஆண்டு டிசம்பர் 30-ஆம் தேதி உருவாக்கப்பட்டது. தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் இதன் பதிவு அலுவலகம் இருக்கிறது.

 

தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிக நிதி வழங்கிய 'லாட்டரி கிங்' மார்ட்டின் யார்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

1980களின் இறுதியில் கோயம்புத்தூரில் மார்ட்டின் லாட்டரி ஏஜென்சீஸ் பிரைவேட் லிமிட்டட் என்ற நிறுவனத்தைத் துவங்கினார் மார்ட்டின்

சாண்டியாகோ மார்ட்டின் ‘லாட்டரி கிங்’ ஆனது எப்படி?

சாண்டியாகோ மார்ட்டினின் ஆரம்ப கால வாழ்க்கை குறித்த தகவல்கள் தெளிவாகக் கிடைக்கவில்லை.

மார்ட்டினின் பெற்றோர் மியான்மரில் வசித்தவர்கள். மியான்மர் நாட்டில் ஒரு சாதாரண தொழிலாளியாக அவரது வாழ்க்கை துவங்கியது. மியான்மரில் இருந்து நாடு திரும்பிய இவரது குடும்பம், கோயம்புத்தூரில் குடியேறியது. 13 வயதில் ஒரு தேநீர் கடையில் லாட்டரி சீட்டுகளை விற்க ஆரம்பித்த மார்ட்டின், விரைவிலேயே தனக்கென தனியாக ஒரு நெட்வர்க்கை உருவாக்கினார்.

1980களின் இறுதியில் கோயம்புத்தூரில் மார்ட்டின் லாட்டரி ஏஜென்சீஸ் பிரைவேட் லிமிட்டட் என்ற நிறுவனத்தைத் துவங்கினார் மார்ட்டின். தமிழ்நாடு மட்டுமல்லாமல், மார்ட்டின் கர்நாடகா என்ற நிறுவனத்தின் மூலம் கர்நாடக மாநிலத்திலும் மார்ட்டின் சிக்கிம் லாட்டரி நிறுவனத்தின் மூலம் மேகாலயா, அருணாச்சலப் பிரதேசம் போன்ற வட கிழக்கு மாநிலங்களிலும் தனது சாம்ராஜ்ஜியத்தை விரிவுபடுத்தினார் மாட்டின். இது தவிர மேற்கு வங்கம், பஞ்சாப், மகாராஷ்டிராவிலும் லாட்டரி விற்பனையில் இவரது நிறுவனமே முன்னணியில் இருக்கிறது.

இந்தக் கட்டத்தில்தான் 'லாட்டரி கிங்' என்ற பெயர் இவருக்கு வந்து சேர்ந்தது. 260-க்கும் மேற்பட்ட ஏஜென்டுகள், 1,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் என ஒரு பிரம்மாண்டமான சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கினார் மார்ட்டின்.

கடந்த 1990-களில் இவரது நிறுவனத்தின் இரு நம்பர் லாட்டரி, கோயம்புத்தூரில் கொடி கட்டிப் பறந்தது. லாட்டரி மோகம் தமிழ்நாடு முழுவதும் மிகப் பெரிய சிக்கலாக உருவெடுத்த நிலையில் ஒரு அவசரச் சட்டத்தின் மூலம் 2003-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் லாட்டரியைத் தடைசெய்தது.

இருந்தாலும் பிற மாநிலங்களில் இவரது நிறுவனத்தின் செயல்பாடுகள் பிரச்சனையின்றி தொடர்ந்தன. ஒரு கட்டத்தில் லாட்டரி மட்டுமல்லாமல், ரியல் எஸ்டேட், கட்டுமானம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பொழுதுபோக்கு, ஜவுளி, மருத்துவம், கல்வி, மென்பொருள், விவசாயம், கட்டுமானப் பொருட்கள் போன்ற துறைகளிலும் கால் பதித்தது இவரது நிறுவனம்.

 

தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிக நிதி வழங்கிய 'லாட்டரி கிங்' மார்ட்டின் யார்

படக்குறிப்பு,

தடைசெய்யப்பட்ட லாட்டரியை விற்றது உட்பட ஒட்டுமொத்தமாக 14 வழக்குகள் அவர் மீது தொடுக்கப்பட்டன. பிறகு குண்டர் சட்டத்தை சென்னை உயர் நீதிமன்றம் ரத்துசெய்தது

மார்ட்டினின் அரசியல் நெருக்கம்

பல மாநிலங்களிலும் பல அரசியல் தலைவர்களுடன் பெரும் நெருக்கம் இவருக்கு இருந்தது.

கடந்த 2007 – 2008-ஆம் ஆண்டில் கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரபூர்வ பத்திரிக்கையான தேசாபிமானிக்கு மார்ட்டின் ரூ.2 கோடி நன்கொடை அளித்த விவகாரம் அம்மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்குப் பிறகு, அந்தப் பணத்தை கட்சி திருப்பி அளித்ததோடு, தேசாபிமானியின் பொது மேலாளர் இ.பி. ஜெயரஞ்சன் தனது பதவியையும் ராஜினாமா செய்தார்.

2011-இல் அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் மு.கருணாநிதி, மாக்ஸிம் கார்க்கியின் தாய் நாவலை அடிப்படையாக வைத்து கதை - வசனம் எழுதிய 'இளைஞன்' படத்தை மார்ட்டினின் மார்ட்டின் புரொடக்ஷன்ஸ் தயாரித்தபோது, அது பற்றியும் சர்ச்சை எழுந்தது.

2011-இல் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, கோயம்புத்தூரில் பதிவுசெய்யப்பட்ட ஒரு நில அபகரிப்பு வழக்கில் மார்ட்டினை கைதுசெய்யப்பட்டார். அடுத்த 15 நாட்களில் அவர் குண்டர் சட்டத்திலும் கைதுசெய்யப்பட்டார். தடைசெய்யப்பட்ட லாட்டரியை விற்றது உட்பட ஒட்டுமொத்தமாக 14 வழக்குகள் அவர் மீது தொடுக்கப்பட்டன. பிறகு குண்டர் சட்டத்தை சென்னை உயர் நீதிமன்றம் ரத்துசெய்தது. சுமார் 7 மாதங்கள் சிறையில் இருந்த மார்ட்டின், எல்லா வழக்குகளிலும் ஜாமீன் பெற்று வெளியில் வந்தார்.

இந்தத் தருணத்தில் கோயம்புத்தூரைச் சேர்ந்த ஆனந்த வடிவேல் என்பவரும் சென்னையைச் சேர்ந்த செல்வம் என்ற ஹல்வா செல்வமும் தங்களிடம் பணம் கேட்டு மிரட்டுவதாகவும் பணம் தராவிட்டால், வேறு மாநிலங்களில் இருந்து லாட்டரியைக் கடத்திவந்து, தமிழ்நாட்டில் மார்ட்டினின் பெயரில் விற்கப்போவதாகக் கூறுவதாகவும் மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ் மார்ட்டின் காவல் துறையில் புகார் அளித்தார்.

 

தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிக நிதி வழங்கிய 'லாட்டரி கிங்' மார்ட்டின் யார்

பட மூலாதாரம்,MARTINFOUNDATION.COM

படக்குறிப்பு,

மார்டினின் மனைவி லீமா ரோஸ் மார்டின்

லீமா ரோஸ் மார்ட்டின் கைது

2013-ஆம் ஆண்டில் கணக்கில் வராத பணத்தை, சட்டபூர்வமாக்குவதற்காக போலித் பத்திரங்களைத் தயார் செய்த குற்றச்சாட்டில் மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ் கைதுசெய்யப்பட்டார். இதற்குப் பிறகு, பாரி வேந்தரின் கட்சியான இந்திய ஜனநாயகக் கட்சியில் இணைந்தார் லீமா ரோஸ். 2014-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோதி கோயம்புத்தூரில் பொதுக்கூட்டம் ஒன்றில் பங்கேற்றபோது, அந்த மேடையில் லீமா ரோஸ் மார்ட்டினும் இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. லீமா ரோஸ் தற்போதுவரை இந்திய ஜனநாயகக் கட்சியில்தான் இருந்து வருகிறார்.

சாண்டியாகோ மார்ட்டின் - லீமா ரோஸ் மார்ட்டின் தம்பதிக்கு டெய்ஸி என்ற மகளும் சார்லஸ் ஜோஸ், டைஸன் ஆகிய மகன்களும் இருக்கின்றனர். 2015ஆம் ஆண்டில் சார்லஸ் ஜோஸ் பா.ஜ.கவில் இணைந்ததாக ஒரு செய்தி புகைப்படங்களுடன் பரவியது. அந்தச் செய்தியை இரு தரப்பும் உறுதிசெய்யவில்லை.

 

மார்ட்டினுக்கு எதிரான காவல்துறை, புலனாய்வு நடவடிக்கைகள்

சாண்டியாகோ மார்ட்டின் பல முறை காவல்துறை நடவடிக்கைகளுக்கும் மத்தியண புலனாய்வு அமைப்புகளின் நடவடிக்கைக்கும் உள்ளாகியிருக்கிறார்.

2015-ஆம் ஆண்டில் வருமான வரித்துறை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்த மார்ட்டினின் இடங்களில் சோதனை நடத்தியது.

2016-இல் பணப் பரிமாற்றத் தடைச்சட்டத்தின் கீழ் மார்ட்டினுக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. சட்டவிரோத லாட்டரி விற்பனை தொடர்பாக 2018-இல் மத்தியப் புலனாய்வுத் துறை மார்ட்டினின் வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்தியது.

2019-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30-ஆம் தேதி மார்ட்டினுக்குச் சொந்தமான இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். அத்துடன் மார்ட்டினின் ஹோமியோபதி கல்லூரியில் காசாளராக பணிபுரிந்து வந்த பழனிச்சாமி என்பரிடம் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தினர். இந்நிலையில் மே 3-ஆம் தேதியன்று வெள்ளியங்காடு அருகே பழனிச்சாமி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். வருமான வரித்துறையினர் சித்ரவதை காரணமாக தன் தந்தை மரணமடைந்ததாக அவரது மகன் குற்றம்சாட்டினார். இந்த விவகாரம் அந்தத் தருணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சிக்கிம் அரசுக்கு சுமார் ரூ.900 கோடி இழப்பு ஏற்படுத்திய குற்றச்சாட்டை விசாரித்த அமலாக்கத் துறை 2023-ஆம் ஆண்டு மே 11 மற்றும் 12-ஆம் தேதிகளில் பணமோசடி தடுப்புச் சட்ட விதிகளின் கீழ், சென்னையிலும் கோவையிலும் உள்ள பியூச்சர் கேமிங் சொல்யூஷன்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்டின் இடங்களில் சோதனை நடத்தியது. இந்தச் சோதனையை அடுத்து சுமார் ரூ. 457 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டன.

கடந்த 2023-ஆம் ஆண்டு செப்டம்பர் 21-ஆம் தேதி கொல்கத்தாவில் உள்ள பணப் பரிமாற்றத் தடைச் சட்டத்திற்கான சிறப்பு நீதிமன்றத்தில் பியூச்சர் கேமிங் மற்றும் ஹோட்டல் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் பிற 15 நிறுவனங்களுக்கு எதிராக அமலாக்கத் துறை ஒரு வழக்கைப் பதிவு செய்தது.

விற்கப்படாத லாட்டரி சீட்டுகளை தக்கவைத்துக்கொண்டு, அவற்றுக்கு பரிசு விழுந்ததாகக் காட்டுவது, விற்கப்படாத லாட்டரிகளை விற்றதாகக் காட்டுவது ஆகிய குற்றச்சாட்டுகள் இந்த நிறுவனத்தின் மீது சுமத்தப்பட்டன.

https://www.bbc.com/tamil/articles/cl4k8zzxg10o

லாட்டரி மார்ட்டினின் மருமகன், ஆதவ் அர்ஜூன், தொல். திருமாளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் போன மாதம் இணைந்திருந்தார். அவருக்கு கட்சியில் துணைப் பொதுச் செயலாளார் பதவி வழங்கப்பட்டதாகவும் செய்திகளில் இருந்தது. 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஐந்தே ஆண்டுகளில் அதிவேக வளர்ச்சி - ரூ.966 கோடி கட்சி நிதி அளித்த 'மேகா இன்ஜினியரிங்' நிறுவனத்தின் பின்னணி என்ன?

தேர்தல் பத்திரங்கள், ஹைதராபாத், தெலுங்கு மாநில நிறுவனங்கள்

பட மூலாதாரம்,PPREDDYOFFICIAL/INSTA

படக்குறிப்பு,

பாமிரெட்டி பிச்சிரெட்டி, மேகாவின் நிறுவனர் மற்றும் செயல் தலைவர்.

கட்டுரை தகவல்
  • எழுதியவர், பல்லா சதீஷ்
  • பதவி, பிபிசி செய்தித் தொடர்பாளர்
  • 16 மார்ச் 2024

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்ட தேர்தல் பத்திர விவரங்கள் குறித்து நாடு முழுவதும் விவாதம் நடைபெற்று வருகிறது.

அரசியல் கட்சிகளுக்கு அதிக நன்கொடை அளித்த கட்சிகளின் பட்டியலில், ஹைதராபாத்தில் உள்ள மேகா இன்ஜினியரிங் நிறுவனம் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்நிறுவனம் அரசியல் கட்சிகளுக்கு ரூபாய் 966 கோடி நன்கொடை அளித்துள்ளது.

சிறிய நிறுவனமாக ஹைதராபாத்தில் தொடங்கப்பட்ட மேகா இன்ஜினியரிங் இவ்வளவு பெரிய தொகையை அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக அளிக்கும் பெரிய நிறுவனமாக மாறியது எப்படி? இந்த நிறுவனத்திற்கு தொடர்ந்து அரசு ஒப்பந்தப் பணிகள் கிடைப்பது எப்படி?

மேகா இன்ஜினியரிங் நிறுவனத்தின் பின்னணி என்ன?

ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்ட மேகா இன்ஜினியரிங் மற்றும் உள்கட்டமைப்பு நிறுவனம், சிறு ஒப்பந்ததாரர் என்ற நிலையில் இருந்து படிப்படியாக வளர்ந்து இப்போது அரசு ஒப்பந்தப் பணிகளையே பிரதானமாக செய்து வருகிறது.

தெலுங்கானாவில் உள்ள காலேஸ்வரம் லிப்ட் பாசன திட்டத்தின் பெரும்பாலான பகுதி இந்த நிறுவனத்தால் கட்டப்பட்டது. சுமார் 14,000 கோடி ரூபாய் மதிப்பிலான மகாராஷ்டிராவின் தானே-போரிவலி இரட்டை சுரங்கப்பாதை திட்டமும் இந்த நிறுவனத்தின் கைகளில் உள்ளது.

நீர்ப் பாசனம், போக்குவரத்து, மின்சாரம் என பல துறைகளில் இந்த நிறுவனம் வணிகம் செய்து வருகிறது. சுமார் 15 மாநிலங்களில் தாங்கள் செயல்படுவதாகக் இந்நிறுவனம் கூறுகிறது. ஓலெக்ட்ரா (Olectra) மின்சார பேருந்துகளின் உற்பத்தியாளர்களும் இவர்கள் தான்.

தர வரிசைகளை வெளியிடும் பர்கண்டி பிரைவேட் ஹுருன் இந்தியா (The Burgundy Private Hurun India) என்ற அமைப்பின் அறிக்கையின்படி, இந்தியாவின் முதல் 10 மதிப்புமிக்க (பங்குசந்தையில் பட்டியலிடப்படாத) நிறுவனங்களில் மேகா இன்ஜினியரிங் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. அந்நிய முதலீடு இல்லாத பூட் ஸ்ட்ராப் செய்யப்பட்ட நிறுவனங்களின் பட்டியலில் இது நாட்டிலேயே இரண்டாவது இடத்தில் உள்ளது.

 
தேர்தல் பத்திரங்கள், ஹைதராபாத், தெலுங்கு மாநில நிறுவனங்கள்

பட மூலாதாரம்,MEGHA ENGINEERING AND INFRASTRUCTURES LTD/FACEBOOK

படக்குறிப்பு,

அரசு ஒப்பந்தப் பணிகளையே பிரதானமாக செய்து வருகிறது மேகா இன்ஜினியரிங் நிறுவனம்.

நாடு முழுவதும் செயல்படும் நிறுவனம்

ஆந்திரப் பிரதேசத்தின் கிருஷ்ணா மாவட்டத்தில், விவசாய குடும்பத்தில் இருந்து வந்த பாமிரெட்டி பிச்சி ரெட்டி, 1989இல் இந்த நிறுவனத்தை தொடங்கினார். பிச்சி ரெட்டியின் உறவினர் புரிதிபதி வெங்கட கிருஷ்ணா ரெட்டி, இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்.

பத்துக்கும் குறைவான ஊழியர்களுடன் துவங்கப்பட்ட நிறுவனம், கடந்த ஐந்தாண்டுகளில் அதிவேகமாக வளர்ந்து, கணிசமாக விரிவடைந்துள்ளது. மேகா இன்ஜினியரிங் எண்டர்பிரைசஸ் என ஆரம்பிக்கப்பட்டு, 2006இல் மேகா இன்ஜினியரிங் மற்றும் உள்கட்டமைப்பு நிறுவனமாக மாறியது.

2019இல் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனைகள்

மேகாவின் நிறுவனம் ஹைதராபாத்தில் உள்ள பாலாநகரில் தனது முதல் அலுவலகத்தைத் திறந்தது. தொடக்கத்தில் பைப் லைன் அமைக்கும் பணிகளை அதிகளவில் செய்து வந்தது. 2014க்குப் பிறகு இந்நிறுவனத்தின் போக்கு மாறியது. தெலுங்கானா உருவான பிறகு, பெரிய அளவிலான நீர்ப்பாசனத் திட்டங்கள் இந்த நிறுவனத்திற்கு கிடைத்தன.

மெல்லமெல்ல ஆந்திரா, தெலுங்கானா மட்டுமின்றி வட இந்தியாவிலும் பல திட்டங்களை கையிலெடுத்தது. இப்போது இந்த நிறுவனம் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களைக் கடந்து நாடு முழுவதும் விரிவடைந்துள்ளது.

ஒரு கட்டத்தில் தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் நெருங்கிய நண்பர்களில் ஒருவராக அறியப்பட்டார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கிருஷ்ணா ரெட்டி. இப்போது அவர் பாஜகவுக்கும் மிகவும் நெருக்கமானவராக இருக்கிறார்.

அக்டோபர் 2019இல், மேகா குழும நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது. அமலாக்கத்துறையும் விசாரித்தது. ஹைதராபாத் உட்பட நாடு முழுவதும் உள்ள அந்நிறுவனத்திற்கு சொந்தமான பல்வேறு இடங்களில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது.

நிதியளித்த நிறுவனங்கள் எவை?

தேர்தல் பாத்திரங்கள் மூலமாக மேகா நிறுவனம் எந்த கட்சிக்கு எவ்வளவு தொகை கொடுத்துள்ளது என்ற விவரம் இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை.

மேகா நிறுவனத்திற்கு அடுத்ததாக தெலுங்கு மாநிலங்களைச் சேர்ந்த

  • டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் 80 கோடியும்,
  • என்சிசி நிறுவனம் 60 கோடியும்
  • நாட்கோ பார்மா 57 கோடியும்
  • டிவிஸ் லேப்ஸ் 55 கோடியும்
  • ராம்கோ சிமெண்ட்ஸ் 54 கோடியும் நன்கொடையாக வழங்கியுள்ளன.

இது தவிர, சுமார் 30 தெலுங்கு நிறுவனங்களும், தெலுங்கு மாநிலங்களைச் சேர்ந்த 100,000க்கும் மேற்பட்ட தனிநபர்களும் இந்த தேர்தல் பத்திரங்கள் மூலமாக நிதியளித்துள்ளனர்.

இந்த பட்டியலில் சிமென்ட் நிறுவனங்கள், மருந்து நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் உள்ளன. கோவாக்சின் தடுப்பூசி மருந்துகளை தயாரிக்கும் பாரத் பயோடெக் போன்ற நிறுவனங்களும் இதில் அடக்கம். இவற்றில் பெரும்பாலானவை ஹைதராபாத்தில் உள்ளன.

 
தேர்தல் பத்திரங்கள், ஹைதராபாத், தெலுங்கு மாநில நிறுவனங்கள்

பட மூலாதாரம்,TELANGANACMO

படக்குறிப்பு,

அதிக நிதி பெற்ற கட்சிகளின் பட்டியலில் தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் பாரத் இராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) நான்காவது இடத்தில் உள்ளது.

அதிக நிதி பெற்ற கட்சிகள் எவை?

நாடு முழுவதும் தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிக நன்கொடைகளைப் பெற்ற கட்சியாக பாஜக உள்ளது. மொத்தம் ரூபாய் 6 ஆயிரம் கோடியை பாஜக பெற்றுள்ளது. இது மொத்த தேர்தல் பத்திர நிதியில் கிட்டத்தட்ட பாதியாகும்.

பாஜகவைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் ரூபாய் 1,600 கோடியும், காங்கிரஸ் கட்சி ரூபாய் 1,400 கோடியும் பெற்றுள்ளன. அதிக நிதி பெற்ற கட்சிகளின் பட்டியலில் தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் பாரத் இராட்டிர சமிதி (பிஆர்எஸ்) நாட்டிலேயே நான்காவது இடத்தில் உள்ளது.

பிஆர்எஸ் கட்சிக்குப் பிறகு, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஏழாவது இடத்தில் 337 கோடி நிதியையும், 8வது இடத்தில் உள்ள தெலுங்கு தேசம் 219 கோடி நிதியையும், 15வது இடத்தில் உள்ள ஜன சேனா 21 கோடி நிதியையும் நன்கொடையாகப் பெற்றுள்ளது.

ஆனால், தேர்தல் குழுவிற்கு எஸ்பிஐ வங்கி வழங்கிய தகவல்கள் முழுமையானதாக இல்லை. யார், எந்த நாளில் எவ்வளவு நிதியை டெபாசிட் செய்தார்கள்? யார், எந்த நாளில் எவ்வளவு நிதியைப் பெற்றார்கள்? போன்ற தகவல்கள் இல்லை.

அசல் பட்டியல் கொடுக்கப்பட்டதால், நூற்றுக்கணக்கான பக்கங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பத்திகள் தகவல்கள் உள்ளன. பணம் கொடுப்பவர்கள், பெறுபவர்கள் என இரு பட்டியல்கள். அவர்களை எவ்வாறு இணைக்க வேண்டும் என்ற கேள்வி உள்ளது.

நிறுவனங்கள் நன்கொடைகள் வழங்கிய தேதிகளை வைத்து, தொடர்ந்து அந்த நிறுவனங்கள் பெற்ற லாபம் என்ன அல்லது அதற்கு முன்பாக அந்த நிறுவனங்கள் சந்தித்த வழக்குகள் எவை என்பதை ஒப்பிட்டு சமூக ஊடகங்களில் பரபரப்பான விவாதங்கள் முன்வைக்கப்படுகின்றன.

இந்தத் தரவுகள் துல்லியமாகவும் தெளிவாகவும் ஒருங்கிணைக்கப்படும் வரை, யார் யாருக்கு எவ்வளவு கொடுத்தார்கள் என்பது புதிராகவே இருக்கும்.

இந்த விவகாரத்தில் சிபிஎம் கட்சி மட்டுமே தேர்தல் பத்திரங்களை நிராகரித்தது. நாங்கள் தேர்தல் பத்திரங்களை தீவிரமாக எதிர்க்கிறோம் என்று கூறிய அக்கட்சி, அதன் மூலமாக இதுவரை ஒரு ரூபாயைக் கூட பெறவில்லை.

 
தேர்தல் பத்திரங்கள், ஹைதராபாத், தெலுங்கு மாநில நிறுவனங்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பத்திரங்களின் வரிசை எண் இல்லாததால் சிக்கல்

ஸ்டேட் வங்கி வழங்கிய தகவல்களில் நன்கொடை வழங்குபவரின் பெயரைத் தவிர பத்திரங்களின் வரிசை எண் இல்லை. பத்திரம் வாங்கிய நிறுவனங்களின் பட்டியலில் எந்த நாளில் எவ்வளவு பத்திரங்கள் வாங்கப்பட்டது என்பது உள்ளது.

அதேபோல் இரண்டாவது பட்டியலிலும் பத்திர வரிசை எண் குறிப்பிடப்படவில்லை. இந்த இரண்டு பட்டியலிலும் பத்திர வரிசை எண்கள் கொடுக்கப்பட்டிருந்தால், எந்தெந்த கட்சிக்கு யார் எவ்வளவு நன்கொடை அளித்தார்கள் என்பதை, பத்திர வரிசை எண்களின் அடிப்படையில் தெரிந்து கொள்ள முடிந்திருக்கும்.

பத்திர வரிசை எண்களை பொருத்தும் பணியை முடிக்க நீண்ட காலம் எடுக்கும் என எஸ்பிஐ வங்கி நீதிமன்றத்தில் தெரிவித்தது. அந்த வரிசை எண்களை எஸ்பிஐ வங்கி கொடுத்திருந்தால், ஊடகங்களும், தொண்டு நிறுவனங்களும், ஆர்வமுள்ள தரப்பினரும் அவற்றைப் பொருத்திப் பார்த்து, எந்தக் கட்சி யாரிடம் நன்கொடை பெற்றது என்பதைக் எளிதாகக் கண்டுபிடித்திருக்கலாம்.

https://www.bbc.com/tamil/articles/c4nl0qgn6w8o

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தேர்தல் பத்திரம்: லாட்டரி உரிமையாளர் மார்ட்டினிடம் ரூ.509 கோடி பெற்ற திமுக - என்ன சொல்கிறது?

தேர்தல் பத்திரம்
19 நிமிடங்களுக்கு முன்னர்

தேர்தல் பத்திரம் தொடர்பான மேலும் அதிக விவரங்கள் வெளியாகியுள்ளன. இதில், பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் எவ்வளவு நிதி பெற்றுள்ளன, எந்தெந்த நிறுவனங்களிடமிருந்து நிதி பெற்றன என்ற தகவல்கள் தெரியவந்துள்ளன. பாஜக சமர்ப்பித்துள்ள ஆவணங்களின்படி, அந்தக் கட்சி தேர்தல் பத்திரம் மூலம் ரூ.6,987 கோடி ரூபாய் நிதி பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. மற்ற கட்சிகள் பெற்ற நிதி எவ்வளவு?

தேர்தல் பத்திரம் தொடர்பான விவரங்களை இந்தியத் தேர்தல் ஆணையம் கடந்த மார்ச் 14ஆம் தேதி வெளியிட்டிருந்த நிலையில், இன்று மேலும் கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஏப்ரல் 12, 2019-ல் உச்சநீதிமன்ற இடைக்கால உத்தரவை அடுத்து, அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரம் மூலம் பெறப்பட்ட நிதி தொடர்பான விவரங்களை சீலிட்ட உறையில் வழங்கின. அவை உறை திறக்கப்படாமலே உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. மார்ச் 15ஆம் தேதி தேர்தல் பத்திரம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவை அடுத்து, நீதிமன்ற பதிவுத்துறை அந்த ஆவணங்கள் மற்றும் அதன் டிஜிட்டல் பதிவுகளை எங்களிடம் வழங்கியது. அந்த ஆவணங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன’’ எனக் கூறப்பட்டுள்ளது.

இந்தப் புதிய தரவுகளில் ஒரு கட்சிக்கு எந்த ஸ்டேட் வங்கி கிளையில் இருந்து எந்தத் தேதியில் தேர்தல் பத்திரம் நன்கொடையாக வழங்கப்பட்டது என்பது உள்ளிட்ட விவரங்கள் அடங்கியுள்ளன.

நரேந்திர மோதி

பட மூலாதாரம்,GETTY IMAGES

பாஜக பெற்ற தொகை எவ்வளவு?

பாஜக சமர்ப்பித்துள்ள ஆவணங்களின்படி, அந்தக் கட்சி தேர்தல் பத்திரம் மூலம் ரூ.6,987 கோடி ரூபாய் நிதி பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

இது மார்ச் 3, 2017 முதல் ஜூலை 10, 2023 வரை பெறப்பட்ட தொகையாகும்.

2017 - 18 நிதியாண்டில் ரூ.210 கோடி நிதி பெற்றுள்ள பாஜக, 2023-24 நிதியாண்டில் ரூ. 421 கோடிக்கும் அதிகமாக பெற்றுள்ளது. இது நான்கே மாதங்களில் பெறப்பட்ட தொகை என்பது கவனிக்கத்தக்கது.

அதிகபட்சமாக 2019-2020 நிதியாண்டில் ரூ.2 ஆயிரம் கோடிக்கு அதிகமான தொகையை பாஜக பெற்றுள்ளது.

எனினும், யாரிடம் இருந்து எவ்வளவு நிதி பெற்றோம் என்ற விவரத்தை தேர்தல் ஆணையத்தில் அளித்த ஆவணத்தில் பாஜக நேரடியாக குறிப்பிடவில்லை.

 

காங்கிரஸ் பெற்ற தொகை எவ்வளவு?

ராகுல் காந்தி

பட மூலாதாரம்,GETTY IMAGES

காங்கிரஸ் கட்சி தேர்தல் பத்திரம் மூலமாக ரூ. 1,334 கோடி நிதி பெற்றுள்ளது.

இது மார்ச் 13, 2018 முதல் செப்டம்பர் 30,2023 வரை பெறப்பட்ட தொகை.

அதிகபட்சமாக 2018 - 2019 நிதியாண்டில் ரூ.383 கோடி காங்கிரஸ் நிதி பெற்றுள்ளது.

அதன் பிறகு தேர்தல் பத்திரம் மூலமாக காங்கிரஸுக்கு வந்த நன்கொடை கணிசமாக சரிந்துள்ளது.

யாரிடம் எவ்வளவு நிதி பெற்றோம் என்ற விவரம் காங்கிரஸ் அளித்துள்ள ஆவணத்தில் நேரடியாக குறிப்பிடப்படவில்லை.

 

திமுக எவ்வளவு நிதி பெற்றது?

மு.க.ஸ்டாலின்

பட மூலாதாரம்,GETTY IMAGES

தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியான திமுக தேர்தல் பத்திரம் மூலமாக ரூ. 656.5 கோடி பெற்றுள்ளது.

இதில் பெருந்தொகையை லாட்டரி அதிபர் மார்ட்டினுக்குச் சொந்தமான ஃப்யூச்சர் கேமிங் நிறுவனமே வழங்கியுள்ளது.

2019 முதல் நவம்பர் 14, 2023 வரை பல்வேறு கட்டங்களாக இந்த நிறுவனம் ரூ.509 கோடியை திமுகவிற்கு வழங்கி உள்ளது. உச்சபட்சமாக 2021 - 2022 நிதியாண்டில் ரூ. 249 கோடியை இந்த நிறுவனம் வழங்கி உள்ளது.

அதிமுக எவ்வளவு நிதி பெற்றது?

தமிழ்நாட்டின் எதிர்க்கட்சியான அதிமுக தேர்தல் பத்திரம் மூலம் ரூ.6.05 கோடி நிதி பெற்றுள்ளது.

இது ஏப்ரல் 2, 2019 முதல் நவம்பர் 10, 2023 வரை பெறப்பட்ட தொகை.

இதில் ரூ.5 கோடியை சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அணி நிர்வாகமே வழங்கியுள்ளது.

 

திமுக மீது எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

எடப்பாடி பழனிசாமி

பட மூலாதாரம்,GETTY IMAGES

லாட்டரி அதிபர் மார்ட்டினுக்குச் சொந்தமான ப்யூச்சர் கேமிங் நிறுவனத்திடம் இருந்து ரூ.509 கோடி ரூபாய் நன்கொடை பெற்றதற்காக, திமுக கடும் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது. அந்த வகையில், அதிமுக பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், “நிர்வாகத் திறனற்ற திமுக ஆட்சியில் ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் குறித்து பெயரளவில் மட்டும் நடவடிக்கைகள் எடுப்பதுபோல காட்டிவிட்டு, வலுவில்லாத சட்டத்தை இயற்றி, மறுபுறம் மக்களின் உயிரையே பணயம் வைக்கும் சூதாட்ட நிறுவனத்திடம் பணம் பெற்றிருப்பது வெட்கக்கேடானது” என தெரிவித்துள்ளார்.

ஃப்யூச்சர் கேமிங் நிறுவனத்திடம் நிதி பெற்றது தொடர்பாக எழுந்துள்ள விமர்சனம் குறித்து, திமுக செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் பிபிசி தமிழிடம் பேசுகையில், “ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என போராடியது திமுக. அதற்கென வலுவான சட்டத்திற்காக சட்டப் போராட்டை முன்னெடுத்ததும் திமுக. ஆன்லைன் ரம்மி விளையாட்டை நடத்துபவர்கள் ஆளுநரை சென்று பார்த்தனர். அதற்கு அதிமுக சிறிய கண்டனத்தைக் கூட தெரிவிக்கவில்லை. திமுக மீது அதிமுக வீண் குற்றச்சாட்டு சுமத்துகிறது” என்றார்.

மேலும், அந்நிறுவனத்திடமிருந்து நிதி வாங்கியதை திமுக மறுக்கவில்லை என்றும் எனினும் அந்நிறுவனம் ஆதாயம் பெறும் வகையிலான செயலில் திமுக ஈடுபடவில்லை என்றும் அவர் கூறினார்.

தேர்தல் பத்திரம் தொடர்பாக பாஜக மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள், திமுக மீதான விமர்சனத்தால் நீர்த்துப் போகிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “தேர்தல் பத்திரங்கள் திட்டமிடப்பட்ட கொள்ளை. ரிசர்வ் வங்கி சட்டம் உட்பட பல்வேறு சட்டங்களை மாற்றியமைத்துதான் இதனை பாஜக கொண்டு வந்தது. இது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது.

வருமான வரித்துறையோ அல்லது அமலாக்கத்துறையோ சோதனை நடத்திய பிறகு குறிப்பிட்ட நிறுவனங்கள் பாஜகவுக்கு நிதி அளித்திருக்கின்றன. ஆனால், இந்த விவகாரத்தில் குறிப்பிட்ட நிறுவனம் ஆதாயம் பெறும் வகையில் தமிழக அரசு எதுவும் செய்யவில்லை” என்றார்.

தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

தேர்தல் பத்திர விவகாரம் தேர்தலில் எதிரொலிக்குமா, பாஜக, 'இந்தியா' கூட்டணி இதை எப்படி கையாள்கின்றன என்பது குறித்து பிபிசி தமிழிடம் பேசினார், மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ். பன்னீர்செல்வன்.

“தேர்தல் நிதி ரகசியமாக இருக்க வேண்டும் என்ற விஷயத்திற்குள் பாஜக சென்றது ஏன்? அமலாக்கத்துறை, வருமான வரித்துறை சோதனைகளுக்கும் நிறுவனங்கள் தங்களுக்கு நிதி வழங்கியதையும் பொருத்திப் பார்க்கக் கூடாது என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறலாம். ஆனால், இந்த விவகாரத்தில் தேர்தல் பத்திரத்தைக் கொண்டு வந்த பாஜகவுக்கு பெரும் பொறுப்பு இருக்கிறது” என்றார்.

மேலும், “மற்ற கட்சிகள் பணம் வாங்கவில்லையா என கேட்கலாம். எல்லா கட்சிகளுக்கும் பணம் வேண்டும். தேர்தல் பத்திரம் தான் ஒரே வழி எனும்போது மற்ற கட்சிகள் எந்த வழியில் நிதியை பெறும்? ஒவ்வொரு தன்னாட்சி பெற்ற நிறுவனங்களும் இந்த ஆட்சியில் நீர்த்துப் போய்விட்டன. அப்படி இந்த விஷயத்தில் பாரத ஸ்டேட் பேங்க் நீர்த்துப் போய்விட்டது. தேர்தலில் இது எப்படி எதிரொலிக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்" என்கிறார்.

https://www.bbc.com/tamil/articles/c3glj9zg17ro

  • கருத்துக்கள உறவுகள்
Posted

"ஒவ்வொன்றாக குறிப்பிட்டு கேட்டால்தான் தருவீர்களா?" - தேர்தல் பத்திர வழக்கில் எஸ்.பி.ஐ.க்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

எஸ்.பி.ஐ. வங்கி

பட மூலாதாரம்,GETTY IMAGES

18 மார்ச் 2024

தேர்தல் பத்திர எண்களை பாரத ஸ்டேட் வங்கி மார்ச் 21-ம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மார்ச் 21-ம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் அனைத்துத் தகவல்களையும் அளித்த பிறகு, இந்தத் தகவலை ஆணையத்திடம் சமர்ப்பித்ததாக நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று பாரத ஸ்டேட் வங்கி தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, பி.ஆர். கவாய், ஜே.பி. பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (மார்ச். 18) விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், “தேர்தல் பத்திரங்களில் இருந்து பெறப்படும் பணம் குறித்த முழுமையான தகவல்களை அரசியல் கட்சிகள் அளிக்க வேண்டும் என்று 2024 பிப்ரவரி 15-ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது'' என தெரிவித்தார்.

தேர்தல் பத்திரம்: அடுக்கடுக்காக கேள்வியெழுப்பிய உச்ச நீதிமன்றம் - எஸ்பிஐ அணுகுமுறை குறித்து கூறியது என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

”அனைத்து தகவல்களையும் தர வேண்டும்”

"அந்த உத்தரவின்படி, எஸ்பிஐ இரண்டு பகுதிகளாக தகவல்களை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. ஏப்ரல் 12, 2019 முதல், தேர்தல் பத்திரத்தை வாங்கும் நபரின் பெயர், பத்திரம் வாங்கப்பட்ட தொகை மற்றும் பிற தகவல்கள் உட்பட தேர்தல் பத்திரங்கள் பற்றிய தகவல்களை வழங்கவும் உத்தரவிடப்பட்டது" என தெரிவித்தார்.

"இரண்டாம் பகுதியில், இடைக்கால உத்தரவு வரும் வரை அரசியல் கட்சிகள் எவ்வளவு தேர்தல் பத்திரங்களைப் பெற்றன, எத்தனை பத்திரங்களை பணமாக்கின என்ற விவரங்களை கேட்டிருந்தோம்" என தெரிவித்தார்.

“அந்த உத்தரவை நீங்கள் படித்தால், அதில் வாங்கப்பட்ட தேர்தல் பத்திரங்கள் மற்றும் அவை பணமாக்கப்பட்டது தொடர்பான அனைத்து தகவல்களையும் வழங்க வேண்டும் என்று தெளிவாக எழுதப்பட்டுள்ளது. முழுமையான தகவல்களை எஸ்பிஐ தரவில்லை என்பது தெளிவாகிறது” என்றார்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, “எஸ்பிஐ தன்னிடம் உள்ள அனைத்து தகவல்களையும் தர வேண்டும். தேர்தல் பத்திரங்களின் எண்கள் மற்றும் சீரியல் எண்களையும் தர வேண்டும். தேர்தல் பத்திரம் தொடர்பாக இத்தகைய தகவல் எஸ்பிஐ-யிடம் இருக்கும் பட்சத்தில் அதனை தெரிவிக்க வேண்டும்” என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கூறினார்.

 
தேர்தல் பத்திரம்: அடுக்கடுக்காக கேள்வியெழுப்பிய உச்ச நீதிமன்றம் - எஸ்பிஐ அணுகுமுறை குறித்து கூறியது என்ன?

பட மூலாதாரம்,ANI

சரமாரி கேள்விகள்

எஸ்பிஐ சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ஹரிஷ் சால்வே, எஸ்பிஐ எந்த தகவலையும் மறைக்கவில்லை என்றார்.

"நீதிமன்ற உத்தரவின்படி கடந்த வியாழன் மாலை 5 மணிக்கு முன்னதாக தேர்தல் ஆணையத்திடம் அனைத்து தகவல்களையும் வழங்கியுள்ளோம். எந்த தகவலும் மறைக்கப்படவில்லை" என அவர் கூறினார்.

”நீங்கள் (நீதிமன்றம்) குறிப்பிட்ட தகவலை கேளுங்கள், நாங்கள் தருகிறோம் என்பது போன்று எஸ்பிஐ அணுகுமுறை இருக்கிறது” என்று தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் கூறினார்.

"எஸ்பிஐ தலைவராக, உங்களிடம் உள்ள அனைத்து தகவல்களையும் நீங்களே பகிரங்கப்படுத்த வேண்டும்" என்றார்.

பத்திரத்தில் உள்ள எண் பாதுகாப்பு அம்சமா அல்லது தணிக்கையின் ஒரு பகுதியா என்று தலைமை நீதிபதி கேட்டார்.

இதற்குப் பதிலளித்த சால்வே, பத்திரத்தில் உள்ள எண் ஒரு பாதுகாப்பு அம்சம் என கூறினார்.

இதற்கு, "பத்திரத்தை பணமாக்க கிளைக்கு செல்லும்போது, பத்திரம் போலியா, இல்லையா என்பதை சரிபார்க்க இந்த எண் உள்ளதா?" என கேட்டார்.

”இது ரூபாய் நோட்டு போன்றது” என சால்வே கூறினார்.

இந்த எண்களின் அடிப்படையில் என்ன தகவல் கிடைக்கும் என நீதிமன்றம் கேட்டது.

இதைத்தொடர்ந்து எஸ்பிஐ தேர்தல் பத்திர எண்களை வழங்க வேண்டும் என்றும், அதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் தகவல் கொடுக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தலைமை நீதிபதி கூறினார்.

 

அசோசெம், ஃபிக்கி மனுக்கள் தள்ளுபடி

இதனிடையே, தேர்தல் பத்திரங்களில் உள்ள பிரத்யேக சீரியல் எண்கள் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் பொதுவெளியில் வெளியிடக்கூடாது என ASSOCHAM, FICCI ஆகிய நிறுவனங்களும் மனுத்தாக்கல் செய்திருந்தன. ஆனால் இந்த மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதுவரை என்னென்ன தகவல்கள் வெளியாகியுள்ளன?

நரேந்திர மோதி

பட மூலாதாரம்,GETTY IMAGES

தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தகவல்கள் வியாழக்கிழமை மாலை வெளியிடப்பட்டன.

அந்தத் தகவலின்படி, இந்த காலகட்டத்தில் பாஜக ரூ.6,987 கோடி ரூபாய் மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை பணமாக்கியுள்ளது. இந்த விவகாரத்தில், ரூ. 1,600 கோடிக்கும் அதிகமான தேர்தல் பத்திரங்களை பணமாக்கிய திரிணாமுல் காங்கிரஸ் இரண்டாவது இடத்தில் உள்ளது.

ஃபியூச்சர் கேமிங் மற்றும் ஹோட்டல் சர்வீசஸ் நிறுவனம் அதிக தேர்தல் பத்திரங்களை வாங்கியது. இந்த நிறுவனம் மொத்தம் 1,368 பத்திரங்களை வாங்கியது, அதன் மதிப்பு ரூ.1,360 கோடிக்கும் அதிகமாகும்.

இருப்பினும், எந்த நிறுவனம் எந்த கட்சிக்கு நன்கொடை அளித்தது என்பது இதுவரை தெளிவாகத் தெரியவில்லை.

சில கட்சிகள் நன்கொடையாளர்களின் பெயர்களை வெளியிட்டன

தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக அரசியல் கட்சிகளிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களை இந்திய தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் ஞாயிற்றுக்கிழமை பதிவேற்றம் செய்தது.

தேர்தல் ஆணையம் 2018-ம் ஆண்டு தேர்தல் பத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து செப்டம்பர் 2023 வரை இந்தத் தகவல்களை உச்ச நீதிமன்றத்தில் சீலிடப்பட்ட உறையில் சமர்ப்பித்திருந்தது. தற்போது தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் அத்தகவல்களை பதிவேற்றம் செய்துள்ளது.

சில கட்சியினர் தங்களுக்கு யார், எவ்வளவு மதிப்பிலான பத்திரங்களை வழங்கினர், எப்போது பணமாக்கினோம் என்பது போன்ற முழுமையான தகவல்களை சமர்ப்பித்துள்ள நிலையில், பல கட்சியினர் எந்தெந்த பத்திரத்தில் இருந்து எவ்வளவு பணம் பெற்றனர் என்பதை மட்டும் தெரிவித்துள்ளனர்.

முக்கிய அரசியல் கட்சிகளில், அதிமுக, திமுக, மத சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் தங்களுக்கு யார் நன்கொடை அளித்தனர் என்பது குறித்த தகவல்களை அளித்துள்ளனர்.

சிக்கிம் ஜனநாயக முன்னணி மற்றும் மகாராஷ்டிராவாடி கோமந்தக் கட்சி போன்ற சிறிய கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடைகளை எங்கிருந்து பெற்றன என்பதை வெளிப்படுத்தியுள்ளன.

 
திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி

பாஜக சொல்லும் காரணம் என்ன?

அதேசமயம், ஆம் ஆத்மி, சமாஜ்வாதி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாடு ஆகிய கட்சிகள் 2019-ம் ஆண்டு வரை நன்கொடை அளித்தவர்களின் விவரங்களை மட்டும் அளித்துள்ளன. நவம்பர் 2023-ல் இந்த கட்சிகள் புதுப்பிக்கப்பட்ட தகவல்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்த போது, நன்கொடையாளர்கள் பற்றிய தகவலை தெரிவிக்கவில்லை.

இவைதவிர, பெரும்பாலான கட்சிகள் நன்கொடை அளித்தவர்கள் குறித்து தகவல் தரவில்லை.

இந்தத் திட்டத்தின் மிகப்பெரிய பயனடைந்த கட்சிகளில் முதலிடத்தில் பாஜகவும் இரண்டாவது இடத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் மூன்றாவது இடத்தில் காங்கிரஸ் கட்சியும் உள்ளன. இந்த மூன்று கட்சிகளும் நன்கொடை வழங்கியவர்களின் பெயர்களை வெளியிடுவதில் மௌனம் காத்துவருகின்றனர்.

கடந்த ஆண்டு, தேர்தல் ஆணையத்திடம், பாஜக தாக்கல் செய்த மனுவில், “அரசியல் நிதியில் கணக்கு வைப்பதற்கும், நன்கொடையாளர்களுக்கு எந்த பிரச்னையும் ஏற்படாமல் பார்த்துக் கொள்வதற்காக மட்டுமே தேர்தல் பத்திரங்கள் கொண்டு வரப்பட்டன. அத்தகைய சூழ்நிலையில், அச்சட்டத்தின் கீழ், நன்கொடையாளர்களின் பெயர்களை கட்சி அறியவோ அல்லது அதன் பதிவுகளை வைத்திருக்கவோ தேவையில்லை. நன்கொடையாளர்களின் பெயர்கள் பற்றிய பதிவுகள் எங்களிடம் இல்லை” என தெரிவித்தது.

https://www.bbc.com/tamil/articles/c994d1gdpzvo

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

உச்சநீதிமன்றத்தில் விசாரணை முடிந்த பிறகும் தேர்தல் பத்திரங்களை அச்சடித்த அரசு - நடந்தது என்ன?

தேர்தல் பத்திரங்கள், உச்சநீதிமன்றம்.

பட மூலாதாரம்,ANI

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ராகவேந்திர ராவ்
  • பதவி, பிபிசி செய்தியாளர்
  • 8 மணி நேரங்களுக்கு முன்னர்

கடந்த 2023 அக்டோபரில் உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தேர்தல் பத்திர வழக்கு விசாரணையைத் தொடங்கியது.

அக்டோபர் 31ஆம் தேதி தொடங்கிய இந்த விசாரணை நவம்பர் 1 மற்றும் 2ஆம் தேதி வரை தொடர்ந்தது. அதன் பிறகு உச்சநீதிமன்றம் இந்த வழக்கின் தீர்ப்பை நிறுத்தி வைத்தது.

ஆனால், இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட பிறகும், புதிய தேர்தல் பத்திரங்கள் அச்சடிக்கும் பணியை அரசு தொடர்ந்தது என்பது அதன்பிறகு வெளியான தகவல்களில் இருந்து தெளிவாகியுள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவல்கள், 8,350 தேர்தல் பத்திரங்களின் கடைசி தொகுதி 2024ஆம் ஆண்டில் அச்சிடப்பட்டு வாங்குபவர்களுக்கு கிடைக்கப் பெற்றதாகக் காட்டுகின்றன.

இந்தத் தொகுதி இந்த ஆண்டு பிப்ரவரி 21ஆம் தேதி சப்ளை செய்யப்பட்டது. இந்தத் திட்டம் அரசமைப்புக்கு எதிரானது என்று கூறி உச்சநீதிமன்றம் பிப்ரவரி 15 அன்று அதை ரத்து செய்தது. கூடவே தேர்தல் பத்திரத் திட்டத்தை நடத்தும் பாரத ஸ்டேட் வங்கி, சுமார் 12 கோடி ரூபாயை (ஜிஎஸ்டி உட்பட) அரசிடம் கமிஷனாக கோரியதாகவும், அதில் 8.57 கோடியை அரசு செலுத்தியதாகவும் தெரிய வந்துள்ளது.

மேலும், நாசிக்கில் உள்ள இந்தியா செக்யூரிட்டி பிரஸ்ஸில் பத்திரங்களை அச்சடித்ததற்காக 1.93 கோடி ரூபாய் (ஜிஎஸ்டி உட்பட) அரசுக்கு பில் வந்துள்ளது. அதில் 1.90 ரூபாய் கோடி செலுத்தப்பட்டுள்ளது.

எளிமையான வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால் கோடிக்கணக்கான ரூபாயை ரகசிய நன்கொடையாக வழங்கிய எந்தவொரு நபரிடமிருந்தோ அல்லது நிறுவனத்திடமிருந்தோ எந்த சேவைக் கட்டணத்தையும் வசூலிக்காத திட்டம் இது.

உச்சநீதிமன்றத்தால் அரசமைப்பிற்கு முரணானது என்று அறிவிக்கப்பட்ட திட்டத்தை இயக்க பொதுக் கருவூலத்தில் இருந்து, அதாவது வரி செலுத்துவோரின் பணம் அல்லது எளிய வார்த்தைகளில் சொன்னால் பொதுப் பணத்தில் இருந்து சுமார் 13.98 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இதன் பின்னணி என்ன?

 

என்னென்ன தகவல்கள் வெளியாகியுள்ளன?

தேர்தல் பத்திரங்கள், உச்சநீதிமன்றம்.

பட மூலாதாரம்,ANI

தகவல் அறியும் உரிமை ஆர்வலர் கமடோர் லோகேஷ் பத்ரா வெளிப்படைத்தன்மை தொடர்பான விஷயங்களில் பணியாற்றி வருகிறார்.

தேர்தல் பத்திர விவகாரம் தொடர்பாக, கடந்த சில ஆண்டுகளாக அவர் பல ஆர்டிஐ விண்ணப்பங்களைச் செய்துள்ளார். 2024 மார்ச் 14ஆம் தேதி பாரத ஸ்டேட் வங்கி, ஆர்டிஐக்கு பதிலளிக்கும் விதமாக, எந்த ஆண்டில் எத்தனை தேர்தல் பத்திரங்கள் அச்சடிக்கப்பட்டன என்று கூறியது.

இந்தத் தகவலின்படி, 2018ஆம் ஆண்டில் அதிகபட்சமாக 6 லட்சத்து 4 ஆயிரத்து 250 தேர்தல் பத்திரங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன. இதில் அதிகபட்ச பத்திரங்கள் 1,000 ரூபாய் மற்றும் 10,000 ரூபாய் மதிப்பிலானவை. மிகக் குறைந்த எண்ணிக்கையிலான பத்திரங்களின் மதிப்பு ஒரு கோடி ரூபாயாக இருந்தது.

கடந்த 2019ஆம் ஆண்டில் 60,000 பத்திரங்கள் அச்சிடப்பட்டன. அந்த ஆண்டு 1,000 மற்றும் 10,000க்கான ஒரு பத்திரம்கூட அச்சிடப்படவில்லை. அச்சிடப்பட்ட பத்திரங்களின் அதிகபட்ச மதிப்பு ஒரு லட்சம் ரூபாய். 2022ஆம் ஆண்டில் 10,000 பத்திரங்கள் அச்சிடப்பட்டன. இந்தப் பத்திரங்கள் அனைத்தும் தலா ஒரு கோடி ரூபாய் மதிப்புடையவை. வேறு எந்த மதிப்பின் பத்திரங்களும் அச்சிடப்படவில்லை.

சுமார் 8,350 பத்திரங்களின் மிக சமீபத்திய தொகுதி 2024ஆம் ஆண்டில் அச்சிடப்பட்டது. இந்தப் பத்திரங்கள் அனைத்தும் தலா ஒரு கோடி ரூபாய் மதிப்புடையவை. வேறு எந்த மதிப்பின் பத்திரங்களும் அச்சிடப்படவில்லை. 2020, 2021 மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் தேர்தல் பத்திரங்கள் அச்சிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

8,350 பத்திரங்களின் கடைசி தொகுதி 2023 டிசம்பர் 27க்கு பிறகு அச்சிடப்பட்டது. நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரத் துறை (DEA), இரண்டு ஆர்டிஐகளுக்கு அளித்த பதில்களில் இருந்து இது தெரிய வருகிறது.

அன்றைய தேதி வரை மொத்தம் 6,74,250 தேர்தல் பத்திரங்கள் அச்சிடப்பட்டுள்ளன என்று 2023 டிசம்பர் 27 அன்று டிஇஏ அறிவித்தது.

சரியாக இரண்டு மாதங்களுக்குப் பிறகு மற்றொரு ஆர்டிஐக்கு பதிலளித்த இந்தத் துறை, அதுநாள் வரை மொத்தம் 6 லட்சத்து 82 ஆயிரத்து 600 தேர்தல் பத்திரங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளதாக 2024 பிப்ரவரி 27ஆம் தேதியன்று தெரிவித்துள்ளது.

அதாவது 2023 டிசம்பர் 27 முதல் 2024 பிப்ரவரி 27 வரை 8,350 தேர்தல் பத்திரங்கள் அச்சிடப்பட்டுள்ளன. அதேநேரம் உச்சநீதிமன்றம் இந்த முழு விவகாரம் மீதான தனது தீர்ப்பை நவம்பர் 2ஆம் தேதியே நிறுத்தி வைத்துவிட்டது.

 

'உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் அரசுக்கு நம்பிக்கை இருந்தது'

தேர்தல் பத்திரங்கள், உச்சநீதிமன்றம்.

பட மூலாதாரம்,GETTY IMAGES

"உச்சநீதிமன்ற தீர்ப்பின் மீது அரசு அதிக நம்பிக்கை வைத்திருந்ததால், அது தொடர்ந்து பத்திரங்களை அச்சடித்தது என்பது இந்தத் தகவலின் மூலம் தெளிவாகிறது," என்கிறார் கமடோர் லோகேஷ் பத்ரா.

கடைசி தொகுதியாக 8,350 பத்திரங்கள் அச்சடிப்பதற்கு முன்பே பாரத ஸ்டேட் வங்கியிடம் சுமார் 20,363 கோடி ரூபாய் மதிப்பிலான பத்திரங்கள் விற்பனையாகாமல் இருந்தன. இந்தப் பத்திரங்களில் 17,369 கோடி மதிப்புள்ள பத்திரங்கள் 1 கோடி ரூபாய் மதிப்பிலானவை என்று ஆர்டிஐ மூலம் இந்திய ஸ்டேட் வங்கியில் இருந்து பெறப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

"ஏற்கெனவே பெரும் எண்ணிக்கையில் பத்திரங்கள் இருந்தன. இருந்த போதிலும் அரசு 8,350 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய பத்திரங்களை அச்சிட்டது. 2024 தேர்தலுக்கு முன் பத்திரங்கள் அமோகமாக விற்பனையாகும் என்று அவர்கள் எதிர்பார்த்ததாகத் தெரிகிறது," என்று கமடோர் பத்ரா கூறினார்.

அஞ்சலி பரத்வாஜ், தகவல் அறியும் உரிமை சட்டம், வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் போன்ற விஷயங்களில் பணியாற்றும் சமூக ஆர்வலர்.

"நீதிமன்றம் தனது தீர்ப்பை அறிவிக்கும் வரை அரசு வழக்கம் போல் தனது வேலையைச் செய்து கொண்டிருந்தது. உச்சநீதிமன்றம் இந்தத் திட்டத்தை அரசமைப்பிற்கு விரோதமானது என்று அறிவித்து அதற்கு தடை விதிக்கக்கூடும் என்ற விஷயத்தை அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை என்று தோன்றுகிறது," என்று அவர் கூறினார்.

உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த பின்னரும் அரசு அதிக பத்திரங்களை அச்சிட்டது. எனவே இந்தத் திட்டம் அரசமைப்பிற்கு முரணானது என்று அறிவிக்கப்படும் என்று அரசு நினைக்கவில்லை என்பதை இது காட்டுகிறது என்று அஞ்சலி பரத்வாஜ் குறிப்பிட்டார்.

 

ஆர்டிஐ மூலம் கிடைத்துள்ளன பல சுவாரஸ்யமான தகவல்கள்

தேர்தல் பத்திரங்கள், உச்சநீதிமன்றம்.

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆர்டிஐயில் பெறப்பட்ட தகவல்களில் இருந்து மேலும் சில சுவாரஸ்யமான விஷயங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன:

  • விற்பனை செய்யப்பட்ட பத்திரங்களின் மொத்த மதிப்பு 16,518 கோடி ரூபாய்.
  • விற்கப்பட்ட பத்திரங்களில் சுமார் 95 சதவிகித பத்திரங்களின் மதிப்பு தலா ஒரு கோடி ரூபாய்.
  • முப்பது கட்டங்களாக விற்கப்பட்ட பத்திரங்களில் 25 கோடி ரூபாய் மதிப்புள்ள 219 பத்திரங்கள் மட்டுமே அரசியல் கட்சிகளால் பணமாக்கப்படவில்லை.
  • இந்த 25 கோடி ரூபாய் பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்று பாரத ஸ்டேட் வங்கி தெரிவிக்கிறது.
  • கடந்த 2018 முதல் 2024 வரை மொத்தம் 6,82,600 தேர்தல் பத்திரங்கள் அச்சடிக்கப்பட்ட நிலையில், விற்பனை செய்யப்பட்ட தேர்தல் பத்திரங்களின் எண்ணிக்கை 28,030 மட்டுமே. இது அச்சடிக்கப்பட்ட மொத்த பத்திரங்களில் 4.1 சதவிகிதம் மட்டுமே என்பது அதிர்ச்சியளிக்கும் மற்றொரு விஷயம்.
 

மிக அதிக பத்திரங்கள் எங்கிருந்து விற்கப்பட்டன?

தேர்தல் பத்திரங்கள், உச்சநீதிமன்றம்.

பட மூலாதாரம்,GETTY IMAGES

  • பாரத ஸ்டேட் வங்கியின் மும்பை பிரதான கிளையில் இருந்து அதிகபட்சமாக 4009 கோடி ரூபாய் மதிப்புள்ள பத்திரங்கள் விற்கப்பட்டன.
  • இரண்டாவது இடத்தில் பாரத ஸ்டேட் வங்கியின் ஹைதராபாத் முதன்மைக் கிளை உள்ளது. அங்கு 3554 கோடி ரூபாய் மதிப்பிலான பத்திரங்களை விற்றுள்ளது.
  • கொல்கத்தா முதன்மைக் கிளை 3333 கோடி ரூபாய் மதிப்பிலான பத்திரங்களையும், புது டெல்லி முதன்மைக் கிளை 2324 கோடி ரூபாய் மதிப்பிலான பத்திரங்களையும் விற்றுள்ளன.
  • பாட்னா பிரதான கிளையில் இருந்து குறைந்தபட்சமாக 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பத்திரங்கள் விற்கப்பட்டது.

பெரும்பாலான பத்திரங்கள் எங்கே பணமாக்கப்பட்டன?

பாரத ஸ்டேட் வங்கியின் புது தில்லி பிரதான கிளையிலிருந்து 10,402 கோடி ரூபாய் மதிப்புள்ள அதிகபட்ச பத்திரங்கள் பணமாக்கப்பட்டுள்ளன.

ஹைதராபாத்தின் பிரதான கிளையில் இருந்து 2,252 கோடி ரூபாய் மதிப்புள்ள பத்திரங்களும், கொல்கத்தா மெயின் கிளையில் இருந்து 1,722 கோடி ரூபாய் மதிப்புள்ள பத்திரங்களும் பணமாக்கப்பட்டுள்ளன.

மிகவும் குறைந்த அளவாக 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பத்திரங்கள் ஸ்ரீநகரின் பாதாமி பாக் கிளையிலிருந்து பணமாக்கப்பட்டன.

https://www.bbc.com/tamil/articles/c3geyj231q0o



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் நிழலியண்ண.✍️
    • மிக்க நன்றி ரஞ்சித். யாழில் நீண்ட விளக்கம் கொடுக்க கூடிய மிக அரிதான கருத்தாளர்களில் நீங்களும் வழவனும் அடக்கம்.    உங்களை ஏன் @ பண்ணினேன் என்பதை வழவனுக்கான பதிலில் காண்க🙏. நான் போட்ட ஜெய்ஹிந்தின் அர்த்தம் அநேகமாக அனைவரும்கும் விளங்கி இருக்கும் என நினைக்கிறேன். அதுதான் முழு நேர மேற்கு எதிர்ப்பு பிரச்சாரகர்களின் உண்மையான கபட நோக்கம். ஏனையவர்களின் பிரச்சனை வேற. அவர்கள் நல்லவர்கள். ஆனால் எமக்கு நடந்த பிழைக்கு மேற்கு மட்டுமே தவறு என்பது போல் அவர்களை புல் டைம் காரர் மூளை சலவை செய்கிறார்கள். அதுதான் நீங்கள் சுட்டிய அளவுக்கு கொள்கை பிறழ்வு ஏற்பட காரணம். அதே போல் எப்போதும் ஒரு hero worship இல் இருந்து இவர்களுக்கு பழகிவிட்டது. அதனால்தான் தலைவருக்கு பின், சீமான், புட்டின் என அலைகிறார்கள். உப்பு கல்லும் வைரமும் ஒன்றென கருதி. இவர்களை போலவே முழு புலம்பெயர் சமூகத்தையும் மந்தைகள் ஆக்கி விடலாம் என்பதுதான் புல்டைம் காரர்களின் திட்டம். பார்க்கலாம்…. We are fighting a good fight, keep at it👍 இது எம்போன்றோருக்கு சரி… ஆனால் சம்பளத்து வேலை செய்பவர்கள் சதா அதே விடயத்தை எழுதி கொண்டே இருக்க வேண்டும்… அல்லது டெல்லியில் இருந்து கோல் வரும்🤣
    • போராளிகளின் பகிரப்படாத பக்கம் – 2 மீன் அடிச்ச ஆப்பு !   மணலாறு காட்டுக்குள் அலைந்து திரிந்த அந்த மனிதர்களின் வீரம் பற்றி யாரும் அறிய மாட்டார்கள். குண்டுகளும் துப்பாக்கிகளும் கிளைமோர்களும் தான் அவர்களுக்கு அதிகம் பிடித்தவை. உணவு என்பது அவசியமற்று போகும் போதெல்லாம் எங்கோ ஒரு இலக்கில் எதிரி சிதறப் போகும் யாதார்த்தம் நிமிர்ந்து நிற்கும். இலக்குக்காக அந்த மனிதர்கள் அலைந்த நாட்கள் கொஞ்சமல்ல. ஓய்வு என்பது மரணத்துக்கு பின் என்பது அவர்களது இயல்பாக இருக்கலாம். ஓய்வின்றி தேசியத்தலைவரின் எண்ணங்களுக்கு அந்த மனிதர்கள் வண்ணம் பூசி வெற்றி என்ற பாதையில் பயணித்துக் கொண்டிருந்தார்கள். 1996 முல்லை மண்ணில் முப்படைகளும் குந்தி இருந்து எம் மக்களுக்கு கொடுத்த பெரும் அநீதிகளுக்கு முற்றுப்புள்ளியிட்டனர் விடுதலைப்புலிகளின் சண்டையணிகள். யாழ்ப்பாணத்தை தம் ஆளுகைக்குள் கொண்டு வந்த பின் விடுதலைப்புலிகள் பலமிழந்துவிட்டதாக பரப்புரை செய்து கொண்டிருந்த சிங்களத்துக்கு நெத்தியடி கொடுத்த விடுதலைப்புலிகளின் அணிகளில் இவர்களும் இருந்தார்கள். பெரும் வெற்றியை எமக்குத் தந்துவிட்டு மீண்டும் மணலாறுக் காட்டை வதிவிடமாக கொண்டு எதிரிக்காக அலைந்து கொண்டிருந்தார்கள். இவ்வாறு தான் அவர்களில் இருந்த வேவுப் போராளிகளின் அணி ஒன்று வேவுக்காக சென்று திரும்பிய போது புன்னகையோடு இலக்கை கூறுகிறார்கள். “மரியதாஸ் ( பின்நாட்களில் “ஜெயசிக்குறு” நடவடிக்கையில் கப்டன் மரியதாஸ் வீரச்சாவு) அண்ண 10 பேரண்ண வடிவா குடுக்கலாம்…” ரைபிள் எல்லாத்தையும் நிலத்தில வைச்சிட்டு சென்றிக்கு ஒருத்தன் மட்டும் நிக்கிறான் மற்றவ குளிக்கிறாங்கள் கிளைமோர் ஒன்று செட் பண்ணினால் 10 பேரையும் தூக்கலாம்” எந்த இடத்தில? தளபதி ஆவலோடு வினவுகிறார். அண்ண எங்கட சின்னக் குளத்தில அண்ண. மணலாறு காட்டிடையே விடுதலைக்காக பயணித்துக் கொண்டிருந்த மூத்த போராளியும் அந்த வேவு அணிகளுக்கான அணித்தலைவனாகவும் இருந்த மரியதாஸ்க்கு வேவுத்தகவல் பிரியோசனமானதாகவே தோன்றியது. அந்த இலக்கு அவர்களின் வேவு வலயத்துக்குள் கொண்டுவரப்படுகிறது. அடிச்சால் பத்து சிங்களப் படையைக் கொண்ட எதிரியின் ஒரு அணி உயிரிழக்கும். அந்த குளம் எம்மவர்களின் பார்வை வீச்சில் இருந்து தப்பிக்க முடியாத அளவிற்கு வேவுப் போராளிகள் காத்திருந்தார்கள். தளபதி ஊடாக தலைவரின் அனுமதிக்காக திட்டம் அனுப்பப்படுகிறது. உடனடியாக திட்டம் அனுமதிக்கப்பட மகிழ்வில் பூரித்து போகிறார்கள் அவர்கள். குளத்தின் இந்தக்கரை எம்மவர்களாலும் மறு கரை இராணுவத்தாலும் சூழப்பட்டருந்தது. தினமும் குளிப்பதற்காக குறித்த நேரத்தில் அந்த அணி வந்து போகிறது. இது அந்த காலத்தில் அரியதான ஒரு இலக்கு. தொடர் வேவுகள் இலக்கை உறுதிப்படுத்திக் கொள்ள அன்றைய காலை வேளை அவர்களுக்காக குளத்துக்குள் ஒரு கிளைமோர் தயாராக காத்திருக்கிறது. இரவோடு இரவாக மரியதாஸ் கிளைமோரை குளத்து நீரின் அடியில் புதைத்திருந்தான். காத்திருக்கிறார்கள். அடிச்ச மறு நிமிடம் தங்களை எதிர்த்து தாக்க வேறு அணி வரலாம் அவர்கள் எம் அணிகளை நோக்கி பாரிய தாக்குதல் செய்யலாம் என்ற நியம் மரியதாஸ் தலமையிலான போராளிகளுக்கு தெரியாமல் இல்லை. அவர்கள் அதற்கும் தயாராகவே காத்திருந்தார்கள். அப்போதெல்லாம் எம் வெடிகுண்டு தொழில்நுட்பம் வயிரின் மூலம் மின் கொடுக்கப்பட்டு வெடிக்க வைப்பதே. அதனால் நீண்ட மின் கடத்தக்கூடியதான தொலைபேசி வயரை குளத்து நீரின் அடியால் மிக சிரமத்தோடு தாட்டு கிளைமோரை நிலைப்படுத்துகிறார் மரியதாஸ். நீரிற்கு வெளியிலும் மண்ணுக்குள் வயரை தாட்டு குளக்கரையில் இருந்த பெரும் காட்டுக்குள் கொண்டு வருகிறார். இப்போது எல்லாம் தயார். மின்கலத்தின் மூலம் வெடிக்க வைக்க தயாராக காத்திருக்கிறார்கள் அந்த மனிதர்கள். மரியதாஸ் கண் இமைக்காமல் இராணுவ அணியை அவதானித்த்துக் கொண்டிருக்கிறார். தூர சில உருவங்கள் காட்டை விட்டு வெளி வருவது தெரிகிறது. இராணுவ அணி உடைகளை கழைந்து குளிப்பதற்காக குளத்துக்குள் இறங்குகின்றனர். அவர்களில் சிலர் துப்பாக்கியோடும் சிலர் குளிப்பதற்கான பொருட்களோடுமே வந்திருந்தனர். குளத்துக்குள் இறங்கி சிலர் குளிக்க இரண்டு மூன்று பேர் அருகில் இருந்த கற்களில் உடைகளை தோய்க்கத் தொடங்கி இருந்தனர். இலக்கு கிளைமோரின் வலயத்துக்குள் நெருக்கமாக வந்து விட்டது. மரியதாஸ் மின் இணைப்பை மின்கலத்தின் மூலம் கொடுக்கிறான். “ஏமாற்றம்…” கிளைமோர் வெடிக்காமல் சதி செய்தது மின்கலத்தில் மின் இல்லை என்று நினைத்து வேறு மின்கலத்தின் மூலம் மீண்டும் முயற்சி செய்த போது அதுவும் தோல்வி. மனம் வெறுத்துப் போக குளத்தையே வெறித்து பாக்கிறார்கள். ச்சீ… தப்பீட்டாங்கள்… அனைவரும் மனம் வெறுத்து அந்த குளக்கரையோரம் நீண்டு நிமிர்ந்த மரங்களின் அடியில் படுத்து கிடக்கிறார்கள். இலக்கு தப்பி விட்டது. வந்த அணி திரும்பி விட்டது. தளபதிக்கு விடயம் தெரிவிக்கப்பட்டு இவர்களும் அன்று முழுவதும் அந்த காட்டோரம் படுத்திருந்து தாம் தயாராக்கி வைத்த கிளைமோரை மீட்க குளத்துக்குள் இறங்குகிறார்கள். கிளைமோரை தூக்கி வெளியில் வந்து பார்த்த போது சிரிப்பதா அழுவதா என்று நிலை தெரியாது ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கிறார்கள்.என்னண்ண ஆச்சு? இங்க பார் மீன் என்ன செய்திருக்கு என்று? அட நாசமா போன மீன்கள் இப்பிடி வயர கடிச்சு தின்டிருக்குதகள்? இடையில் அறுபட்டு கிடந்த வயரைப் பார்த்து மீன்களை திட்டத் தொடங்கினான் ஆறுமுகம். விடுடா அதுகளுக்கு தெரிஞ்சு போச்சு போல இவங்கள் ஆமிய மட்டுமல்ல எங்களையும் சேர்த்து சாகடிக்க போறாங்கள் என்று அது தான் அதுகள் எங்களுக்கு எதிரா போர்க்கொடி தூக்கி இருக்குதுகள். என்று இரகசியமாக கூறி சிரித்து விட்டு முகாம் மீண்டார்கள். அதில் ஒருவனுக்கு மட்டும் அந்த இலக்கு தவறியது பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. நீரைத் தவிர வேறு இடத்தில் கிளைமோரை பொருத்தினால் இலக்கு வலயத்துக்குள் அந்த அணி முழுவதும் வராது அதனால் அவர்கள் தப்பிக்க வாய்ப்புண்டு. அதனால் சிந்தனையை கூர்மையாக்கிக் கொண்டான். என்ன செய்யலாம்? என்ன செய்யலாம்? யோசித்து யோசித்து களைத்த அவனுக்கு வயர்லெஸ் ( wireless ) தொழில்நுட்பத்தை பயன்படுத்தினால் என்ன என்ற சிந்தனை கருத்தரித்தது. அதாவது வயர் இணைப்பு இல்லாது வெடிக்க வைக்கும் தொழில் நுட்பம். உதாரணத்துக்கு ரிமோட்கொன்ரோல் (remote control ) தனக்கு தோன்றியதை மரியதாஸ்க்கு தெரியப்படுத்தினான். மரியதாஸுக்கும் அது சரியான ஒன்றாகவே பட்டது. சிந்தனை செயலாக்கம் பெற்றது இரண்டு வோக்கிகள் அதற்காக பயன்படுத்தப்பட்டன. ஒரு வோக்கியின் ஒலிபெருக்கிக்கு செல்லும் வயரில் இருந்து கிடைக்கும் மின்சாரம் கிளைமோரோடு இணைக்கப்படுகிறது. அந்த மின்சாரத் தூண்டல் கிளைமோரை வெடிக்க வைக்க போதுமானதா என்று சரிபார்க்கப்பட்டு அதற்கான மின்சாரத் தூண்டலை அதிகரிக்க செய்யும் ஒரு இலத்திரனியல் பகுதி அதனுடன் இணைக்கப்படுகிறது. அதன் மூலம் கிளைமோருக்கான வெடிப்பிக்குத் தேவையான மின்சாரம் சரி செய்யப்படுகிறது. இப்போது இவர்கள் கையில் இருக்கும் வோக்கியின் PTT அமத்தப்பட்டால் கிளைமோருடன் இணைக்கப்பட்ட வோக்கியில் இருந்து மின்சாரம் பாச்சப்படும் அந்த மின் தூண்டல் வெடிப்பியை வெடிக்க வைத்து கிளைமோர் வெடிக்கும் இலக்கு தவறாது சிதறும். ஆனால் இதில் ஒரு சிக்கலும் இருந்தது. அதாவது இவர்கள் அந்த திட்டத்துக்காக பயன்படுத்திய வோக்கியின் இலக்கம் 328. இதே இலக்கத்தில் எதிரியும் தொடர்பை பேணுவானாக இருந்தால் அல்லது வோக்கியின் அழைப்பு வலயத்துக்குள் இருந்து வேறு எதாவது வோக்கியில் இருந்து அந்த இலக்கத்துக்கு PTT அழுத்தப்பட்டால் கட்டாயமாக கிளைமோர் வெடித்து சிதறும். ஆனாலும் எமது அணிகளுக்கு இந்த இலக்கத்தை பாவிக்க வேணாம் என்ற ஒரு கட்டளையை வழங்கி ஆபத்தை தவிர்க்கலாம். ஆனால் எதிரி…? யோசித்த போது இறுதியாக முயற்சி செய்வோம் நடப்பது நடக்கட்டும் என்ற முடிவுக்கு வந்தவர்களாக நடவடிக்கையில் இறங்கினர் மரியதாஸ் தலமையிலான அணி. அந்த நெருக்கடியான காலமானது தொழில்நுட்ப அறிவியல் வளராத இயக்க வரலாற்றின் பக்கத்தை கொண்டது. ஆனாலும் கிடைக்கும் பொருட்களின் மூலம் உயர் பயன்பாட்டை பெறக்கூடிய விடுதலைப்புலிகளின் போராளிகள் தமது உயர் தொழில்நுட்ப அறிவை தம் சிந்தனைகளுக்கூடாகவே வளர்த்துக் கொண்டார்கள். அதன் ஒரு வெளிப்பாடே இந்த கிளைமோர் தாக்குதல்.சில வாரங்கள் கடந்து போக, மீண்டும் வேவுத் தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டு திட்டம் நிறைவேற்றப்பட்ட அந்த இரவு அவர்களுக்கு மிகவும் பதட்டமாகவே இருந்தது சிலவேளைகளில் இதுவும் தவறினால்? அனைவரின் மனதிலும் இதுவே எழுந்த கேள்வி. வெடிக்காமல் போனால் பரவாயில்லை தவறி இலக்கு வர முன் வெடித்தால்? இலக்கு பிசகி விடும் அதே நேரம் இப்படியான இலகுவாக கிடைக்கும் இலக்குக்காக நீண்ட காலங்கள் காத்திருக்க வேண்டி வரும். அனைவரும் அந்த குளக்கரையை பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள். மரியதாஸ் கையில் வெடிக்க வைக்கும் வோக்கி இருந்தது. இலக்கு கிளைமோரின் வலயத்துக்குள் வருகிறது. இவர்களின் மனப் பதட்டம் அதிகரிக்கிறது. வந்தவர்கள் ஒருவரை ஒருவர் சீண்டிக் கொண்டு தமக்கான ஆபத்து காத்திருப்பதை அறியாது சிரித்து மகிழ்கின்றனர். மரியதாஸின் கையில் இருந்த வோக்கியின் PTT அழுத்தப்படுகிறது. அந்த காலை நேரம் திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லாது கிளைமோர் வெடித்து சிதறிப் போக சிங்களத்து சிப்பாய்கள் 9 பேர் அந்த இடத்திலையே சிதறிப் போனார்கள் காவல் பணியில் இருந்த ஒரு இராணுவம் மட்டும் காயத்தோடு தப்பித்து சென்று விட இலக்கை துவம்சம் செய்த வோக்கிக்கு ஒரு முத்தத்தை கொடுக்கிறான் மரியதாஸ். உடனே பின்தளம் திரும்ப கட்டளையிடுகிறான். அனைவரும் வெற்றி பெற்றுக் கொண்டு தளம் திரும்பினர். மரியதாஸ் தலமையிலான மணலாறு மாவட்ட படையணியின் வேவுப் போராளிகளின் இந்த தாக்குதலானது சிங்களத்துக்கு தடுமாற்றத்தையும் எமக்கு மகிழ்வையும் தந்த போது, அடுத்த இலக்கைத் தேடி அந்த மனிதர்கள் அந்த பெரும் காட்டுக்குள் ஓய்வின்றி அலைந்து கொண்டிருந்தார்கள்… கவிமகன்.இ 22.11.2017
    • சுகாதார விஞ்ஞான கல்வி நிறுவனம்     இது வட தமிழீழத்தின் கிளிநொச்சி அறிவியல்நகரில் அமைந்திருந்தது.             அங்கு பயின்ற மருத்துவர்களும் தாதியரும்   நடுவில் அமர்ந்திருப்பவர் படைய மருத்துவர் லெப். கேணல் சத்தியா அவர்கள்                 பின்னாளில்         திருவுருவப்படத்திற்கு வலது பக்கம் அமர்ந்திருப்பவர் மரு. சத்தியமூர்த்தி ஆவார்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.