Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய இலங்கை ஒப்பந்தத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு எமது பிரதமர் நரேந்திர மோடி இலங்கையின் தலைவர்களிடத்தில் எடுத்துரைத்துள்ளார் என  இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.

இதேவேளை 13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு நாம், அரசாங்கத்தின் அனைத்துச் சந்திப்புக்களிலும் வலியுறுத்துகின்றோம் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் பதவியை ஏற்றுக்கொண்டதன் பின்னர் முதற்தடவையாக வடக்குக்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள அவர் தனியார் விடுதியில், தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளையும், புத்திஜீவிகளையும் இராப்போசன விருந்துபசாரத்துடன் சந்தித்து உரையாடிய போதே இவ்வாறு தெரிவித்தார்.

தமிழ் மக்கள் மீதான அடக்குமுறை

இந்தச் சந்திப்பின்போது இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிடத்தில், அரசியல் மற்றும் சிவில் சமூகத்தினால் பல்வேறு விடயங்கள் முன்வைக்கப்பட்டன. அது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு அழுத்தம் கொடுக்கும் மோடி அரசு! | Pm Modi Urged To Formalize The India Sl Agreement

தமிழ் மக்களை அடக்குமுறைக்குள் வைத்திருக்கும் இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகள் சம்பந்தமாக முதலில் தெரிவிக்கப்பட்டது.

குறிப்பாக, இந்திய இலங்கை ஒப்பந்தமானது, தமிழ் மக்களையும் அவர்களது பூர்வீகத்தையும் பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்பட்டதாகும். அந்த ஒப்பந்தத்தில் தமிழ் மக்களின் சார்பில் இந்தியாவே கையொப்பமிட்டுள்ளது. எனினும் தற்போது வரையில் அந்த ஒப்பந்தத்தினை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்தவில்லை.

13ஆவது திருத்தச்சட்டம்

அதுமட்டுமன்றி, குறித்த ஒப்பந்தத்தின் பின்னர் அரசியலமைப்பில் உள்ளீர்க்கப்பட்ட 13ஆவது திருத்தச்சட்டத்தினையும் அரசாங்கம் முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு காலத்தை இழுத்தடித்து வருகின்றது.

இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு அழுத்தம் கொடுக்கும் மோடி அரசு! | Pm Modi Urged To Formalize The India Sl Agreement

இதேநேரம், மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்படாது தற்போது அவை இயங்காத நிலைமைக்குள் கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஆகவே இந்தியா இந்த விடயங்களில் அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும்.

இந்தியாவைப் பொறுத்தவரையில் இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு பெருவாரியாக கைகொடுத்து வருகின்ற நிலையில் அவற்றைப் பயன்படுத்தி இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும் என்று குறிப்பிட்டனர்.

நரேந்திரமோடி வலியுறுத்தல்

இதற்குப் பதிலளித்த, இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா,

தமிழ் மக்களின் சுதந்திரம், சமத்துவம், சகவாழ்வு சம்பந்தமாக நாம் ஆழமாக கரிசனைகளைக் கொண்டுள்ளோம். எமது பிரதமர் நரேந்திரமோடி, நேரடியாகவே இந்திய இலங்கை ஒப்பந்தத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு இலங்கையின் தலைவர்களிடத்தில் எடுத்துரைத்துள்ளார்.

இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு அழுத்தம் கொடுக்கும் மோடி அரசு! | Pm Modi Urged To Formalize The India Sl Agreement

அத்துடன், 13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு நாம், அரசாங்கத்தின் அனைத்துச் சந்திப்புக்களிலும் வலியுறுத்துகின்றோம்.

இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அதனை மறுதலிக்கவில்லை. ஆனால், அவர்கள் அதனை நடைமுறைப்படுத்துவதில் ஆர்வம் காண்பிக்கவில்லை. எனினும் நாம் தொடர்ச்சியாக அந்த விடயத்தில் கவனம் செலுத்துவோம்.

போரால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு

இதனையடுத்து, அவர், போரால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களின் மீள் எழுச்சிக்கு தமது அர்ப்பணிப்பான பங்களிப்பு தொடரும் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு அழுத்தம் கொடுக்கும் மோடி அரசு! | Pm Modi Urged To Formalize The India Sl Agreement

விசேடமாக, வடக்கு, கிழக்குக்கும் இந்தியாவுக்கும் நீண்டகாலமான பிணைப்புக்கள் காணப்படுகின்றன. அந்தப் பிணைப்புக்களின் அடிப்படையில், இந்தியா குறித்த பகுதியின் மீள் எழுச்சியில் பாரிய கவனம் செலுத்துவதோடு, தொடர்ச்சியான பங்களிப்புக்களையும் வழங்கி வருகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

குறித்த சந்திப்பில், நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.வி.விக்னேஸ்வரன், த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலாநதன், சி.சிறீதரன், சாள்ஸ் நிர்மலநாதன், எம்.ஏ.சுமந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் மற்றும் வடமாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன், வடமகாண சபையின் முன்னாள் கல்வி அமைச்சர் கலாநிதி.சர்வவேஸ்வரன், யாழ்.பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா, வவுனியா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் த.மங்களேஸ்வரன், யாழ்.மாவட்டச் செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் உட்பட பலர் பங்கேற்றிருந்தனர்.

https://ibctamil.com/article/pm-modi-urged-to-formalize-the-india-sl-agreement-1708223045

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, ஏராளன் said:

இதேவேளை 13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு நாம், அரசாங்கத்தின் அனைத்துச் சந்திப்புக்களிலும் வலியுறுத்துகின்றோம் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

13 இல் ஒன்றுமில்லை என்று எமது அரசியல்வாதிகள் (?) கூறுகிறார்கள். இருந்தாலும் இந்தியாவாலும் அதனை நடை முறை படுத்த முடியவில்லை.

இலங்கை அரசை வலியுறுத்துகிறோம் என்றுதான் இவர் கூறுகிறார். அதட்குமேல் இந்தியா ஒன்றும்  சொல்லப்போவதில்லை.

எனவே, எமக்கு எந்த நாடோ, தமிழ் அரசியல் கட்சிகளோ, போராளி குழுக்களோ பாலும் தேனும் ஓடும் தேசத்தை பெற்று தாரா விடடாலும் குறைந்த பச்ச தீர்வையும் என்றாலும் பெற்று தர போவதில்லை.

சிங்கள அரசுடன் இணைக்க அரசியல் செய்து வாழ்க்கை ஓட்டுவதுதான் கடைசி தீர்வு. 

  • கருத்துக்கள உறவுகள்
On 19/2/2024 at 09:15, Cruso said:

சிங்கள அரசுடன் இணைக்க அரசியல் செய்து வாழ்க்கை ஓட்டுவதுதான் கடைசி தீர்வு. 

நல்வரவு மிஸ்டர் துரோகி அவர்களே 
Welcome to the club

Edited by அக்னியஷ்த்ரா

  • கருத்துக்கள உறவுகள்
On 19/2/2024 at 02:15, Cruso said:

13 இல் ஒன்றுமில்லை என்று எமது அரசியல்வாதிகள் (?) கூறுகிறார்கள். இருந்தாலும் இந்தியாவாலும் அதனை நடை முறை படுத்த முடியவில்லை.

இலங்கை அரசை வலியுறுத்துகிறோம் என்றுதான் இவர் கூறுகிறார். அதட்குமேல் இந்தியா ஒன்றும்  சொல்லப்போவதில்லை.

எனவே, எமக்கு எந்த நாடோ, தமிழ் அரசியல் கட்சிகளோ, போராளி குழுக்களோ பாலும் தேனும் ஓடும் தேசத்தை பெற்று தாரா விடடாலும் குறைந்த பச்ச தீர்வையும் என்றாலும் பெற்று தர போவதில்லை.

சிங்கள அரசுடன் இணைக்க அரசியல் செய்து வாழ்க்கை ஓட்டுவதுதான் கடைசி தீர்வு. 

வணக்கம் சார்

நலமா?

நீங்க ஓட்ட ஏலாது சார் அவன் சிங்களவன் தான் ஓட்டுவான். நானும் அதே கொழும்பில் அதே சிங்களத்துடன் உங்கள் இதே நினைப்புடன் வாழ்ந்தவன் தான். 1983இல் அடிச்சு கச்சையோட கப்பல் ஏற்றிய போது தான் மண்டைக்குள்ள தெறிச்சுது உன்ர இடம் வடக்கு என்று. 

அப்படியே நேரம் இருந்தால் (மாறி மாறி கன பேரின் காலில் விழவே உங்களுக்கு இனி நேரம் போதாது)  வடக்கு கிழக்கு மக்கள் கூட்டமைப்புக்கும் மலையக மக்கள் மலையகத் தமிழ் கட்சிகளுக்கும் இன்றும் ஏன் வாக்களிக்கிறார்கள் என்றும் வாசியுங்கள். நன்றி. டொட். 

Edited by விசுகு
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, அக்னியஷ்த்ரா said:

நல்வரவு மிஸ்டர் துரோகி அவர்களே 
Welcome to the club

உண்மையை எழுதினால் பதில் வராது. துரோகி படடம். இதுக்கு மட்டும் குறைச்சல் இல்லை. வாழ்க தமிழ் ஈழம். 
 
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, விசுகு said:

வணக்கம் சார்

நலமா?

நீங்க ஓட்ட ஏலாது சார் அவன் சிங்களவன் தான் ஓட்டுவான். நானும் அதே கொழும்பில் அதே சிங்களத்துடன் உங்கள் இதே நினைப்புடன் வாழ்ந்தவன் தான். 1983இல் அடிச்சு கச்சையோட கப்பல் ஏற்றிய போது தான் மண்டைக்குள்ள தெறிச்சுது உன்ர இடம் வடக்கு என்று. 

அப்படியே நேரம் இருந்தால் (மாறி மாறி கன பேரின் காலில் விழவே உங்களுக்கு இனி நேரம் போதாது)  வடக்கு கிழக்கு மக்கள் கூட்டமைப்புக்கும் மலையக மக்கள் மலையகத் தமிழ் கட்சிகளுக்கும் இன்றும் ஏன் வாக்களிக்கிறார்கள் என்றும் வாசியுங்கள். நன்றி. டொட். 

அப்பவே ஐயா நல்லா அடி வாங்கி  இருக்கிறார் போல. பாவம், ஐயாவுக்கு இப்போது நல்லா வயதாகியும் இருக்கும். சரி சரி நடக்கிறதைப்பார்ப்பம்.

வடக்கு கிழக்கு மலையக மக்கள் பாலும் தேனும் ஓடும் தேசம்  கிடைக்கும் எண்ட ஒரு நப்பாசையில்தான் ஒட்டு போடுகிறார்கள். பாவம், அவர்கள் எண்ணத்தில் ஏன் மண் அள்ளி போடுவான்.

கட்சிக்குள்ளயேயே பாலும் தேனும் ஓடும்போது மக்களுக்கு கிடைக்காமலா போக போகுது. 

  • கருத்துக்கள உறவுகள்

13 ஐ அமுல்ப் படுத்துமாறு இந்தியா கொடுக்கும் அழுத்தம் இலங்கைக்கு சுகமளிக்கும் மசாஜ் போல் இருப்பதால்  13 ஐ அமுல்ப்படுத்தி அந்த மசாஜ் சுகத்தை இலங்கை இரக்க விரும்பவில்லைப் போலும். 😂

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, அக்னியஷ்த்ரா said:

நல்வரவு மிஸ்டர் துரோகி அவர்களே 
Welcome to the club

நீங்கள் இருப்பது தீயின் தணலில். பெயரிலும்  அக்கினி.  அப்படி என்றால் தீயை வென்ற ஒரு மனிதனாக இருக்க வேண்டும். அது சரி எந்த நாட்டில் இருக்குகிறீர்கள்? வசதியான நாடா?

இன்னும் துரோகி பட்டம் கொடுத்து மணடயில் போடுவதை நிறுத்தவில்லை போல தெரிகின்றது. அது 2009 உடன் முடிந்து விட்ட்து என்பதை மறக்க வேண்டாம். நீங்கள் பணம், நகை நட்டுகளுடன் இங்கிருந்து போய் வெளி நாட்டில் வசதியாக வசிப்பதில் எங்களுக்கு பிரச்சினை இல்லை.

ஆனால் இலங்கை தமிழர்களை துரோகி படடம்  கொடுத்து மண்டையில் போடலாம் எண்டு மட்டும் கனவிலும் நினைக்க வேண்டாம். அப்படியான எண்ணங்கள் இருந்தால் அது உங்கள் சுதந்திரம். இலங்கை பக்கம் வர மாடடீர்கள் என்று நினைக்கிறேன். நன்றி. 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.