Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
18 FEB, 2024 | 09:13 PM
image
 

இந்திய அரசின் நிதி உதவியுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டலுடன் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஒருங்கிணைப்பின் கீழ் மலையகத்துக்கான 10 ஆயிரம் பாரத் – லங்கா எனும் வீட்டுத் திட்டம் திங்கட்கிழமை (19)  ஆரம்பமாகவுள்ளது. 

முதற்கட்டமாக ஆயிரத்து 300 வீடுகளுக்கு ஒரே தடவையில் நிர்மாணப் பணிகளுக்கான அங்குரார்ப்பணம் இடம்பெறவுள்ளது. இதன் பணிகளை எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் நிறைவு செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

நுவரெலியா, கண்டி, பதுளை, மாத்தளை, கேகாலை, குருணாகல், இரத்தினபுரி, காலி, களுத்துறை மற்றும் மொனராகலை ஆகிய 10 மாவட்டங்களை உள்ளடக்கிய வகையில் 45 தோட்டங்களில் 19.02.2024 அன்று நிர்மாணப் பணிகளுக்கான அங்குரார்ப்பண விழா நடைபெறுகின்றது.

இதன்பிரதான நிகழ்வு 19.02.2024 அன்று காலை 10 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறும். இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமான், இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா ஆகியோரின் பங்கேற்புடன் நிகழ்நிலை மூலம் பிரதான நிகழ்வு இடம்பெறும்.

அதேபோல 45 தோட்டங்களுக்கும் மக்கள் பிரதிநிதிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். நிகழ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் மிகவும் நேர்த்தியான முறையில் அமைச்சர் ஜீவன் தொண்டமானால் நெறிப்படுத்தப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/176698

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாரத் லங்கா 10,000 வீடுகள் திட்டம்; நுவரெலியா ஸ்க்ரப் தோட்டத்தில் 30 வீடுகளுக்கான அடிக்கல் நடப்பட்டது

Published By: DIGITAL DESK 3   19 FEB, 2024 | 01:46 PM

image

பாரத் லங்கா 10,000 வீடுகள் திட்டத்தின் தேசிய வேலைத்திட்டத்துடன் இணைந்து நுவரெலியா ஸ்க்ரப் தோட்டத்தில் 30 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (19) காலை இடம்பெற்றது.

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் நிர்மாணிக்கப்படும் பாரத் லங்கா வீடமைப்புத் திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் பத்தாயிரம் வீடுகளை நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அதன் ஒரு கட்டமாக நுவரெலியா ஸ்க்ரப் தோட்டத்தில் தற்காலிக வீடுகளில் தங்கியுள்ள முப்பது குடும்பங்களுக்கான வீடமைப்புத் திட்டத்தின் அடிக்கல் நாட்டும் நிகழ்வு நுவரெலியா மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர்கள்  நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமான் இணைச் செயலாளர்கள் மற்றும் இணைப்பாளர்களும் ஆன வினோத் ஜி மற்றும் சட்டத்தரணி சிவன் ஜோதி யோகராஜா  ஆகியோரின் தலைமையில் இன்றைய தினம் காலை ஸ்க்ரப் தோட்டத்தில் நடைபெற்றது.

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன், இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் முழு வழிகாட்டுதலின் கீழ், இலங்கைப் பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா வினால் இந்த வீடமைப்புத் திட்டம் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

421605866_384826490915448_50166781500981

422396493_715148270651841_65873858531232

421716046_406836528398451_48497460193767

https://www.virakesari.lk/article/176744

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.