Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாடு பட்ஜெட்: கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் உள்பட 10 முக்கிய அம்சங்கள்

தமிழ்நாடு பட்ஜெட்

பட மூலாதாரம்,TN GOVT

கட்டுரை தகவல்
  • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 19 பிப்ரவரி 2024, 09:46 GMT
    புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

தமிழ்நாடு அரசின் 2024-25ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிதிநிலை அறிக்கையின் முக்கிய அம்சங்கள் என்னென்ன?

தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2024-25ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவால் தாக்கல் செய்யப்பட்டது. தி.மு.க. அரசின் இதற்கு முந்தைய 3 நிதி நிலை அறிக்கைகளை பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்திருந்த நிலையில், இந்த நிதிநிலை அறிக்கையை தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த முதல் நிதி நிலை அறிக்கை இது.

இந்த நிதிநிலை அறிக்கையை காலை பத்து மணியளவில் தாக்கல் செய்தார் தங்கம் தென்னரசு. அறிக்கையின் துவக்கப் பகுதியில், இதற்கு முன்பாக இருந்த அரசுகள் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையின் முக்கிய அம்சங்களை நிதியமைச்சர் பட்டியலிட்டார்.

நிதி நெருக்கடி, இயற்கைப் பேரிடர், மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படும் மத்திய அரசு ஆகியவற்றுக்கு நடுவில் இந்த நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதாக நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

சமூக நீதி, கடைக்கோடி தமிழர் நலன், உலகை வெல்லும் இளைய தமிழகம், அறிவுசார் பொருளாதாரம், மகளிர் நலன்காக்கும் சமத்துவப் பாதை, பசுமை வழிப் பயணம், தாய்த்தமிழும் பண்பாடும் ஆகிய ஏழு அம்சங்களை மனதில் வைத்து இந்த நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

தமிழ்நாடு பட்ஜெட்டின் முக்கிய 10 அம்சங்கள்

  • உயர்கல்வியில் பெண்களின் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் புதுமைப்பெண் திட்டம் பெண்களின் உயர்கல்வியில் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளதால் இத்திட்டத்தை விரிவுப்படுத்துவதாக அரசு அறிவித்துள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கையை உயர்த்திட , தமிழ் புதல்வன் என்ற திட்டம் செயல்படுத்தப்படும். ஆறு முதல் 12 வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்கில் நேரடியாக வழங்கப்படும். இதில் 3,00,000 மாணவர்கள் பயனடையாவர்கள். இதற்கு ரூ. 360 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • தமிழ்நாட்டில் வறுமைக்கோட்டிற்கு கீழே வசிப்பவர்களின் விகிதம் 2.2 சதவீதமாக உள்ளது. மிகவும் வறிய நிலையில் உள்ள ஐந்து லட்சம் குடும்பங்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை ஒருங்கிணைந்து வழங்கி, அவர்கள் வறுமையிலிருந்து மீட்டெடுக்கப்படுவார்கள். முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் என இது அழைக்கப்படும்.
  • காலை உணவுத் திட்டம் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1-5ஆம் வகுப்புவரை விரிவுபடுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்திற்காக இந்த ஆண்டு 600 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
  • மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்திற்காக இந்த ஆண்டு 13,720 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். பெண்களின் இலவசப் பயணத் திட்டத்திற்காக இந்த ஆண்டு ரூ. 3,050 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மகளிர் இலவச பேருந்து திட்டம் மலைப்பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.
  • இரட்டைக் காப்பியங்களான சிலப்பதிகாரத்தையும் மணிமேகலையையும் 25 இந்திய, உலக மொழிகளில் மொழிபெயர்க்க 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு. உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட தமிழ்நூல்களை உலகின் சிறந்த பல்கலைக்கழகங்களில் இடம்பெறச் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இதற்கு இரண்டு கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.
 
தமிழ்நாடு பட்ஜெட்

பட மூலாதாரம்,TN GOVT

6. 2030ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் 8 லட்சம் கான்க்ரீட் வீடுகள் கட்டித்தரப்படும். 24-25 ஆண்டில் ஒரு லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும். சொந்த மனைகள் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டுமனை ஒதுக்கீடு செய்யப்படும். கலைஞரின் கனவு இல்லம் என்ற பெயரில் 3,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

7. உயர்கல்வியை தொடர விரும்பும் மூன்றாம் பாலினத்தவரின் கல்விக்கட்டணம் மற்றும் விடுதி கட்டணத்தை அரசே ஏற்கும். வரும் நிதியாண்டில் இந்த திட்டத்துக்கு 2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

8. மதுரையில் 26,500 சதுர அடி பரப்பளவில் தொழில் புத்தாக்க மையம் 24 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும். மதுரை, திருச்சியில் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. தஞ்சாவூர், சேலம், திருப்பூர், தூத்துக்குடி ஆகிய இடங்களில் புதிய தொழிற்பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. கோவை விளாங்குறிச்சியில் 1,100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 20,00,000 சதுர அடியில் தகவல் தொழில்நுட்ப பூங்கா (ஐ.டி. பார்க்) அமைக்கப்படும்.

9. 2024-25ல் கீழடி, வெம்பக்கோட்டை, பொற்பனைக்கோட்டை, திருமலாபுரம், சென்னானூர் உள்ளிடட் எட்டு இடங்களில் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்படும். மஸ்தி, பாலூர், முசிறி உள்ளிட்ட பகுதிகளிலும் அகழாய்வு மேற்கொள்ளப்படும். இந்த அகழாய்வுப் பணிகளுக்கு 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். கீழடி அகழாய்வு பணிகளில் வெளிவந்த செங்கல்கட்டுமானம், கிணறு, பிற கட்டுமானங்களை அனைவரும் பார்க்கும் வகையில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கப்படும். இதற்காக 17 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

10. கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் திட்டங்களைத் தொடங்குவதற்கான விரிவான அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளன. ஒப்புதல் கிடைத்தவுடன் பணிகள் துவங்கப்படும். சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மெட்ரோ ரயிலை நீடிக்க திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்படும். சென்னை பூந்தமல்லி முதல் கோடம்பாக்கம் வரையிலான மெட்ரோ ரயில் வழித்தடம் அடுத்த ஆண்டு டிசம்பரில் செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்படும்.

தமிழ்நாடு பட்ஜெட்

பட மூலாதாரம்,TN GOVT

இவை தவிர இன்று தாக்கல் செய்யப்பட்ட நிதி நிலை அறிக்கையில் தமிழ் மொழி மற்றும் தமிழர் மரபு சார்ந்த முக்கிய அம்சங்கள் :

தமிழின் அரிய நூல்களை மின்நூலாக மாற்றும் பணிக்கு 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். தமிழர்களின் மரபணுத் தொன்மை, வேளாண்மை, இடப்பெயர்வு ஆகியவற்றை ஆய்ந்தறிய காமராசர் பல்கலைக்கழகத்தில் செயல்படும் மரபியல் துறையில் தொல்மரபணுவியல் ஆய்வகத்திற்கு 3 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். சிந்துவெளி நூற்றாண்டு பன்னாட்டு கருத்தரங்கம் சென்னையில் நடத்தப்படும்.

சென்னை நகருக்கான சில புதிய கட்டமைப்பு திட்டங்களும் இந்த நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னை தீவுத்திடலில் நகர்ப்புற பொதுச் சதுக்கம் உருவாக்கப்படும். இங்கே திறந்தவெளி அரங்குகள், கண்காட்சி அரங்குகள் அமைக்கப்படும். கடற்கரையோரப் பகுதிகளை ஒட்டிய சாலைகள் மேம்படுத்தப்படும். சென்னை பூந்தமல்லிக்கு அருகில் அதிநவீன திரைப்பட நகரம் 150 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்படும். 500 கோடி ரூபாய் செலவில் இந்த நகரம் உருவாக்கப்படும். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எதிரில் மரபுசார் வடிவமைப்புடன் பத்து லட்சம் சதுர அடி பரப்பில் புதிய கட்டடம் கட்டப்படும். பிராட்வே பேருந்து நிலையத்தில் பன்முக வசதிகள் கொண்ட புதிய பேருந்து நிலையமும் அலுவலக வளாகமும் உருவாக்கப்படும்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு 20,198 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். புதிய புற்றுநோய் மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படும். அறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனை உயர்நிலை புற்றுநோய் கருவிகள் வழங்கப்பட்டு உயர்திறன் மையமாக தரம் உயர்த்தப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், காவிரி, வைகை, தாமிரபரணி, நொய்யல் ஆகிய நதிகளை ஒட்டிய பகுதிகளைச் சீரமைக்கவும் பூங்காக்கள் அமைக்கவும் நதிகள் சீரமைப்புக்கான திட்ட அறிக்கையைத் தயாரிக்க ஐந்து கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

கல்வியில் தமிழ் புதல்வன் திட்டம் மட்டுமல்லாமல் வேறு சில அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன. புதுமைப் பெண் திட்டத்தால் உயர்கல்வி சேரும் மாணவிகள் எண்ணிக்கை 34 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தத் திட்டம் வரும் கல்வி ஆண்டு முதல் அரசு உதவிபெறும் பள்ளிக்கூடங்களில் தமிழ்வழியில் படிக்கும் மாணவிகளுக்கும் வழங்கப்படும். 370 கோடி ரூபாய் இந்தத் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. கோவையில் முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி பெயரில் மிகப் பெரிய நூலகம் அமைக்கப்படும்.

தமிழ்நாடு பட்ஜெட்

பட மூலாதாரம்,TN GOVT

மேலும் தொழில்துறை சார்ந்து இந்த நிதிநிலை அறிக்கையில் வெளிவந்துள்ள அறிவிப்புகள்:

தஞ்சை மண்டலத்தில் வேலை வாய்ப்புகளை அதிகரிக்க ரூ. 120 கோடி செலவில் 300 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்படும்.

பெண்கள், மாற்றுத் திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவருக்கு 500 பேருக்கு மேல் நேரடி வேலை வாய்ப்பு வழங்கும் புதிய தொழில் நிறுவனங்களுக்கு அவர்களின் ஊதியத்தில் 10 சதவீதத்தை இரண்டு ஆண்டுகளுக்கு அரசு வழங்கும்.

தமிழ்நாட்டில் அமையும் புதிய உலகளாவிய திறன் மேம்பாட்டு மையங்களில் ஒரு லட்ச ரூபாய்க்கு மேற்பட்ட மாத ஊதியத்துடன் உருவாக்கப்படும் உயர்திறன் மிக்க வேலைகளுக்கு முதலாம் ஆண்டு 30 சதவீதமும் இரண்டாம் ஆண்டு 20 சதவீதமும் மூன்றாம் ஆண்டு 10 சதவீதமும் மானியமாக வழங்கப்படும்.

உலகின் முன்னணி புத்தொழில் நிறுவனங்களும் இளம் தொழில் முனைவோரும் கலந்துகொள்ளும் வகையில் Global Startup Summit 2025 ஜனவரியில் சென்னையில் நடத்தப்படும். பெரியார் சமூக நீதி புத்தொழில் மையம் - Periyar Social Justice Venture Lab - உருவாக்கப்படும். விளிம்புநிலையில் வாழும் மக்கள், பட்டியலின, பழங்குடியினரால் தொடங்கி நடத்தப்படும் புத்தொழில் நிறுவனங்களுக்கு இந்த மையம் முன்னுரிமை அளிக்கும்.

விண்வெளி சார்ந்த தொழிற்சாலைகளை ஊக்குவிக்கும் விதமாக 2,000 ஏக்கர் பரப்பளவில் ஒரு புதிய விண்வெளி தொழில் மற்றும் உந்துசக்தி பூங்காவை டிட்கோ அமைக்கும். தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவு குறித்த கொள்கையை வகுக்க தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு இயக்கம் ஏற்படுத்தப்படும்.

இவை மட்டுமல்லாமல், இந்த நிதிநிலை அறிக்கையின் வேறு சில முக்கிய அம்சங்களும் உள்ளன.

2030ஆம் ஆண்டிற்குள் 100 பில்லியன் யூனிட் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை உருவாக்க திட்டம் வகுக்கப்படும்.

லண்டன் க்யூ கார்டன் நிறுவனத்தின் உதவியோடு 345 கோடி ரூபாய் செலவில் செங்கல்பட்டு மாவட்டம் கடம்பூரில் மாபெரும் பல்லுயிர் பூங்கா அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.

இந்த நிதியாண்டில் புதிதாக 3,000 பேருந்துகள் வாங்கப்படும். சிற்றுந்துத் திட்டம் விரிவுபடுத்தப்படும்.

தொல்குடி என்ற புதிய திட்டத்தின் கீழ் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும். பழங்குடியின இளைஞர்களுக்கு தொழில்பயிற்சிகள் அளிக்கப்படும்.

பள்ளிவாசல், தர்காக்களை சீரமைக்க, பழுதுபார்க்க பத்து கோடி ரூபாய் நிதியுதவி செய்யப்படும். பழமையான தேவாலயங்கள் புதுப்பிக்கப்படும்.

ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருக்கோவில்களில் திருப்பணிகள் செய்திட இந்த ஆண்டு 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

தெரு நாய்கள் பெருகியிருப்பதால், அவற்றின் இனப்பெருக்கத்தைத் தடைசெய்யும் மையங்களை உருவாக்க 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

சர்வதேச கண்காட்சிகள், மாநாட்டுக் கூட்டங்கள் நடத்திடும் வகையில், கலைஞர் மாநாட்டு அரங்கம் (Kalaignar Convention Centre) கிழக்கு கடற்கரைச் சாலையில் முட்டுக்காடு பகுதியில் மூன்று லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்படும்.

இலங்கைத் தமிழர்களுக்கு என அறிவிக்கப்பட்ட 3,510 வீடுகளில் 1,591 வீடுகளுக்கான பணிகள் முடிவடைந்துள்ளன.

இந்த அறிவிப்புகள் தவிர, மாநில நிதிநிலை குறித்த சில தகவல்களையும் நிதியமைச்சர் வெளியிட்டார்.

மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிப்பதில் தாமதம் இருப்பதால் முழுச் செலவையும் மாநில அரசே செய்கிறது. இதனால், 9,000 கோடி ரூபாய் கூடுதலாக செலவு ஏற்பட்டுள்ளது. ஜிஎஸ்டி இழப்பீடு நிறுத்தப்பட்டுள்ளதால், 20,000 கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு இரண்டு மிகப் பெரிய இயற்கைப் பேரிடர்களைச் சந்தித்தபோதும் மத்திய அரசு எவ்வித நிவாரண நிதியையும் தரவில்லை.

2023-24ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கை மதிப்பீடு 3,08,056 கோடி ரூபாயாக இருந்தது. திருத்த மதிப்பீட்டில் 3,37,484 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 1,81,182 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்ட மாநிலத்தின் வரி வருவாய் திருத்தப்பட்ட மதிப்பீடுகளில் 1,70,147 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

2023-24 ஆம் ஆண்டிற்காண பட்ஜெட்டில் 37,540 கோடி ரூபாயாக இருந்த வருவாய் பற்றாக்குறை திருத்த மதிப்பீடுகளில் 44,907 கோடி ரூபாயாக அதிகரிக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. நிதி பற்றாக்குறையைப் பொறுத்தவரை 92,075 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டிருந்தது. திருத்தப்பட்ட மதிப்பீடுகளில் நிதிப் பற்றாக்குறை 94,060 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான நிறுவனத்தின் வருவாய் பற்றாக்குறை 36,017 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டது. ஆனால், திருத்தப்பட்ட மதிப்பீட்டில் அது 27,790 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

வரும் நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறை 1,08,690 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.44 சதவீதமாக இருக்கும்.

தமிழ்நாட்டின் வேளாண் நிதி நிலை அறிக்கை பிப்ரவரி 20ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது.

https://www.bbc.com/tamil/articles/ce4epq0v3p5o

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ஏராளன் said:

ஒன்றிய  அரசு தமிழ் நாட்டில் கொள்ளையடித்து தனது ஆட்சியில் உள்ள பிரதேசங்களுக்கு கொடுக்காவிடடாள் தமிழ் நாடு இந்தியாவில் முதல் நிலைக்கு வந்திருக்கும். இருந்தாலும்தமிழ் நாடு அரசின் முயட்சிகளை பாராட்டலாம். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10 ஆயிரம் வேப்பங்கன்றுகளை வளர்க்க ரூ.2 கோடியா? தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் பற்றி விவசாயிகள் கருத்து

தமிழக வேளாண் நிதிநிலை அறிவிப்புகள் போதுமானவையா?

பட மூலாதாரம்,MKSTALIN/X

கட்டுரை தகவல்
  • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
  • பதவி, பிபிசி தமிழ்
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

தமிழ்நாட்டின் வேளாண் நிதிநிலை அறிக்கையில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தாலும் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது என்கிறார்கள் விவசாயிகளும் பொருளாதார நிபுணர்களும்.

தமிழ்நாட்டின் வேளாண் நிதிநிலை அறிக்கை தமிழக சட்டப்பேரவையில் இன்று (பிப். 20) தாக்கல் செய்யப்பட்டது. நிதிநிலை அறிக்கையை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

கடந்த ஆண்டில் ரூ. 38,904 கோடி ரூபாய்க்கு வேளாண் நிதிநிலை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டு, 42,281 கோடி ரூபாய்க்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வேளாண் நிதிநிலை அறிக்கையில், குறிப்பிடத்தக்க திட்டமாக மண் வளத்தைக் காப்பதற்கான "மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்" என்ற புதிய திட்டம் 206 கோடி ரூபாயில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.

அது தவிர, 100 உழவர் அங்காடிகள் அமைப்பதற்கான அறிவிப்பு, எண்ணெய் வித்துகள், துவரம் பருப்பு பயிரிடும் பரப்பை அதிகரிப்பதற்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

மேலும், சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு அளித்த விவசாயிகளுக்கு மத்திய அரசு நிர்ணயித்த ஆதாய விலையைவிட கூடுதலாக ஒரு டன்னுக்கு 215 ரூபாய் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டிருக்கிறது.

டெல்டா மாவட்டங்களில் 2,235 கி.மீ. தூரத்திற்கு சி, டி பிரிவு கால்வாய்கள் தூர்வாரப்படும் என்றும் 5,338 கி.மீ. தூரத்திற்கு ஆறுகள், கால்வாய்கள் தூர்வாரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தமிழக வேளாண் நிதிநிலை அறிவிப்புகள் போதுமானவையா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

'மண்ணுயிர் காத்து, மன்னுயிர் காப்போம்'

இந்த வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட பல திட்டங்கள் முக்கியமானவையாக இருந்தாலும் இன்னும் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது என்கிறார்கள் வேளாண் பொருளாதார நிபுணர்களும் விவசாயிகளும்.

"விவசாயத்திற்கு தனியான நிதிநிலை அறிக்கை என்றவுடன் பலர் இதனை விவசாயத்திற்கு அளிக்கப்பட்ட மரியாதையைப் போல பார்க்கிறார்கள். அப்படியல்ல, விவசாயத்தில் பிரச்னைகள் என்பவை இடம் சார்ந்து இருக்கும். அதைத் தனித்தனியாக விவாதிக்க வேண்டும் என்பதற்காகத்தான் தனி நிதிநிலை அறிக்கை வேண்டும் என்று கோரப்பட்டது. அப்படி விவாதிக்கப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது.

குறிப்பிடத்தக்க அறிவிப்புகள் என்று பார்த்தால், இந்த நிதிநிலை அறிக்கை மண்வளம், பயிர்களின் வளம், அதிக சத்துகள் கிடைப்பது என மூன்றையுமே பேசியிருப்பது முக்கியமானது. இதற்காக 'மண்ணுயிர் காத்து, மன்னுயிர் காப்போம்' என்ற திட்டத்தைக் கொண்டுவந்திருக்கிறார்கள். அது வரவேற்கத்தக்கது.

அதேபோல, ரசாயனமற்ற விவசாயம் குறித்துப் பேசும்போது, அதற்கான இடுபொருள் தேவை என்பது மிக முக்கியமானது. அதை இந்த நிதிநிலை அறிக்கையில் பேசியிருக்கிறார்கள். ஆனால், இன்னும் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது" என்கிறார், வேளாண் பொருளாதார நிபுணரான ஆர். கோபிநாத்.

வேப்பங்கன்று வளர்க்க ரூ.2 கோடி எதற்கு?

தமிழக வேளாண் நிதிநிலை அறிவிப்புகள் போதுமானவையா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயியும் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டியக்கத்தின் திரூவாரூர் மாவட்டச் செயலாளருமான அழகர்ராஜ், கடந்த நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களே முழுமையாக செயல்படுத்தப்படவில்லை என்கிறார்.

"கடந்த நிதிநிலை அறிக்கையில் பருத்தி உற்பத்தியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொன்னார்கள். திருவாரூர் மாவட்டத்தில்தான் அதிகம் பருத்தி விளைகிறது. பெரிதாக எந்த நடவடிக்கையும் இல்லை. இப்போது 10 ஆயிரம் வேப்பங்கன்றுகளை உருவாக்க 2 கோடி ரூபாய் செலவிடப் போவதாகச் சொல்லியிருக்கிறார்கள். வேப்பங்கன்றுகள் சாதாரணமாக வளரக் கூடியவை. அதற்காக 2 கோடி ரூபாய் நிதியைச் செலவழிப்பது தேவையற்றது" என்கிறார்.

அதேபோல, பல அறிவிப்புகளுக்கான நிதி ஒதுக்கீடு போதுமானதாக இல்லை என்கிறார் அவர். "நெல் ஜெயராமன் பெயரில் பாரம்பரிய நெல் ரகங்களைக் காப்பாற்ற 50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். அது சுத்தமாகப் போதாது. ஏதோ பெயருக்குச் செய்ததைப் போல இருக்கிறது. அதேபோல, காவிரி டெல்டா பகுதியில் தூர்வார ஒதுக்கப்பட்டிருக்கும் நிதியும் போதாது" என்கிறார் அவர்.

16,500 கோடி ரூபாய் விவசாயிகளின் கடன்களுக்காக ஒதுக்கியிருந்தாலும் அந்தக் கடன்கள் சிறிய விவசாயிகளுக்குக் கிடைப்பதில் சிக்கல் இருக்கிறது என்கிறார் அவர்.

”10 உலர்த்திகள் போதாது”

தமிழக வேளாண் நிதிநிலை அறிவிப்புகள் போதுமானவையா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

தமிழ்நாட்டில் விவசாய இயந்திரங்கள், ஆய்வகங்களுக்கான தேவை அதிகமாக இருக்கிறது என்றும் அந்தத் தேவையைப் பூர்த்தி செய்ய நிதிநிலை அறிக்கையில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்கிறார் ஆர். கோபிநாத்.

"மண்வளத்தை ஆய்வு செய்வதற்கான ஆய்வகம் ஒன்று மயிலாடுதுறையில் அமைக்கப்படும் எனச் சொல்லியிருக்கிறார்கள். மண் வள ஆய்வகங்களைப் பொருத்தவரை அவை பெரும் எண்ணிக்கையில் தேவைப்படுகின்றன. என்னதான் நடமாடும் ஆய்வகங்கள் இருந்தாலும் அவை போதுமானதாக இல்லை.

இந்த நடமாடும் ஆய்வகங்களில் செய்யப்படும் ஆய்வுகளில் நுண்ணூட்டச் சத்துகள் குறித்து அறிய முடிவதில்லை. விவசாயம் செய்யக்கூடிய பகுதிகளில் ஐம்பது கிலோ மீட்டருக்கு ஒன்று என மண் வள ஆய்வகங்களை அமைக்க வேண்டும்.

மேலும், தமிழ்நாட்டில் 35 சதவீத்திற்கு மேல் நெல்தான் பயிரிடப்படுகிறது. இந்த நெல்லை விவசாயிகள் விற்கும்போது, ஈரப்பதம் குறித்த பிரச்னை வருகிறது. இதை எதிர்கொள்ள 'ட்ரையர்' எனப்படும் உலர்த்திகள் தேவைப்படுகின்றன. எல்லோருமே இதனைக் கேட்கிறார்கள். இப்போது அரசு 10 உலர்த்திகளை வாங்கப்போவதாகச் சொல்கிறது. பத்து உலர்த்திகள் போதாது, நிறைய வாங்க வேண்டும்" என்கிறார் ஆர். கோபிநாத்.

இயற்கைப் பேரிடர்கள் வரும்போது இழப்பீடு வழங்குவது என்பது பெரும் சிக்கலான விஷயமாக இருப்பதால், அதனை பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கொண்டுவர வேண்டும் என்கிறார் அவர்.

"கடந்த ஆண்டு சில மாவட்டங்களில் மழை பெய்து குறுவை சாகுபடி பயிர்கள் சேதமடைந்த போது, அரசு நிவாரணம் அளித்தது. அப்படி அரசு நிவாரணம் அளிக்கும்போது அதில் பல பிரச்னைகள் வருகின்றன. இந்த நிவாரணத்தை பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கொண்டுவருவதன் மூலம், அந்த இழப்பீட்டை காப்பீட்டு நிறுவனமே கொடுத்துவிடும். அதனைச் செய்ய வேண்டும்" என்கிறார் கோபிநாத்.

இந்தியாவில் விளைபொருட்களுக்கான ஆதார விலை என்பது எப்போதுமே சிக்கலான ஒன்றாக இருக்கிறது. நெல், கோதுமை உள்ளிட்ட பல பயிர்களுக்கான ஆதார விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கைகள் இந்தியா முழுவதுமே இருந்து வருகின்றன.

"தமிழ்நாடு அரசின் இந்த நிதிநிலை அறிக்கையில் கரும்புக்கு மத்திய அரசின் ஆதார விலையைவிட ஒரு டன்னுக்கு கூடுதலாக 215 ரூபாய் தருவதாகச் சொல்லியிருக்கிறார்கள். நெல்லுக்கு அப்படி ஏதும் சொல்லவில்லை" என்கிறார் கோபிநாத்.

”கரும்புக்கான ஊக்கத்தொகையை அதிகரிக்க வேண்டும்”

தமிழக வேளாண் நிதிநிலை அறிவிப்புகள் போதுமானவையா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்தாலும் அவற்றுக்கு நிதி ஒதுக்குவதில்லை எனக் குற்றம்சாட்டுகிறார் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன்.

"குறிப்பாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கலைஞர் ஒருங்கிணைந்த வேளாண் கிராம வளர்ச்சி திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு இல்லாமல் முடக்கப்பட்டுள்ளது. திமுக தங்களுடைய தேர்தல் அறிக்கையில் கரும்பு டன் ஒன்றுக்கு 4,000 ரூபாயும் நெல் குவிண்டால் ஒன்றுக்கு 2,500 ரூபாயும் தருவதாகச் சொன்னார்கள். இப்போதுவரை அதைப் பற்றி பேச்சே இல்லை" என்கிறார் பி.ஆர். பாண்டியன்.

இதே விஷயத்தையே சுட்டிக்காட்டுகிறார் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பெ. சண்முகம். "நெல்லுக்கு 2,500 ரூபாயும் கரும்புக்கு 4,000 ரூபாயும் தருவதாகச் சொன்னது திமுகதான். ஆனால், நான்கு பட்ஜெட்டுகள் தாக்கல் செய்த பிறகும் அதைப் பற்றி பேசாதது வருத்தமளிக்கிறது. இப்போது நெல்லுக்கு குவிண்டாலுக்கு 2,085 ரூபாய் அல்லது 2,107 ரூபாய் தரப்படுகிறது.

கேரளாவில் 2,860 ரூபாய் தருகிறார்கள். சத்தீஸ்கரில் 2,750 ரூபாய் தருகிறார்கள். தமிழ்நாடு அரசு ஏன் அதைச் செய்யத் தயங்குகிறது? அதேபோல, கரும்புக்கான ஊக்கத் தொகையாக கடந்த ஆண்டு வரை டன்னுக்கு 195 ரூபாய் தந்தார்கள். இந்த ஆண்டு 215 ரூபாய் தருகிறார்கள். 100 கிலோவுக்கு 20 ரூபாய் அதிகரித்திருக்கிறார்கள். இது எப்படி சரியாக இருக்கும்?" எனக் கேள்வியெழுப்புகிறார் சண்முகம்.

”காப்பீட்டு நிறுவனம் தொடங்க வேண்டும்”

தமிழக வேளாண் நிதிநிலை அறிவிப்புகள் போதுமானவையா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

எல்லா வேளாண் நிதிநிலை அறிக்கைக்கான கருத்துக் கேட்புக் கூட்டத்திலும் இதனை வலியுறுத்தினாலும் எந்த முன்னேற்றமும் இல்லை என்கிறார் அவர்.

பி.ஆர். பாண்டியன் வேறு சில விஷயங்களைச் சுட்டிக்காட்டுகிறார்.

பொது விநியோகத் திட்டத்தில் பாமாயிலுக்குப் பதிலாக தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் போன்றவற்றை விநியோகித்தால் விவசாயிகளுக்குக் கூடுதல் விலை கிடைக்கும். இது குறித்து பல முறை அரசிடம் சொல்லியும் அது பற்றிய அறிவிப்புகள் இல்லை என்கிறார் அவர்.

பயிர் காப்பீட்டைப் பொறுத்தவரை, தமிழ்நாடு அரசே ஒரு காப்பீட்டு நிறுவனத்தைத் துவக்க வேண்டும் என்கிறார் சண்முகம்.

"பயிர் காப்பீட்டு நிறுவனங்கள் பெரும் லாபம் சம்பாதிக்கிறார்கள். தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு காப்பீட்டுத் தொகையாக 2,400 கோடி ரூபாய் கொடுத்தது. ஆனால், காப்பீட்டு நிறுவனங்கள் 1600 கோடி ரூபாய்தான் விவசாயிகளுக்கு அளித்தன. இது அரசுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்துகிறது. ஆகவே தமிழ்நாடு அரசே ஒரு காப்பீட்டு நிறுவனத்தை ஆரம்பிக்க வேண்டும்" என்கிறார் பெ. சண்முகம்.

இயற்கை வேளாண்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பது, பயிர் கடனுக்கு ஒதுக்கப்பட்ட தொகை 16,500 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டிருப்பது கன்னியாகுமரியில் தேனீக்களுக்கான முனையம் அமைப்பது ஆகியவை இந்த நிதிநிலை அறிக்கையில் மிக முக்கியமான அறிவிப்புகள் என்கிறார் அவர்.

https://www.virakesari.lk/article/176806

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.