Jump to content

சோசலிசமும் - பார்ப்பினியத்தின் பொய்யுரைகளும்!


Recommended Posts

ஸ்டாலின் ஆட்சியின் தவறுகள் குறித்து நமக்கு பல்வேறு விமர்சனங்கள் இருப்பதையும், அதிலிருந்து நாம் பாடம் கற்றுக் கொள்கிறோம் என்பதையும் குறிப்பிடுகின்ற அதே வேளையில். இது குறித்து பல்வேறு இடங்களில், பின்னூட்டங்ளில், பதிவுகளில் எழுதியுள்ளோம் என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன். ஏனேனில் ஏதோ ஸ்டாலின் குறித்து இதுதான் முதல் முறையாக நாம் பேசுவதாக இவர்கள் சொல்லும் அபாயம் உள்ளது. ஸ்டாலின் மீதான எமது விமர்சனங்கள் ஏகாதிபத்தியவாதிகளோ அல்லது பிற்போக்குவாதிகளோ குறிப்பிடும் அம்சங்களில் அல்ல எனபதனை தெளிவாக குறிப்பிட்டு விடுகிறேன். இந்த விசயத்தையும் பல இடங்களில் குறிப்பிட்டும் உள்ளேன். இன்னும் சொன்னால் ஏகாதிபத்தியங்களின் அடிவருடிகள் ஜல்லியடிக்க துவங்கும் முன்பே கூட கம்யுனிஸ்டு கட்சியின் விமர்சனம் சுய விமர்சன முறைப்படி ஸ்டாலினை லெனின் விமர்சித்துள்ளார். ஸ்டாலினை மாவோகூட விமர்சித்துள்ளார். ஆனால் அவை விமர்சனம் செய்வது என்ற அம்சத்திலும் தவறுகளை திருத்த வேண்டும் என்ற அம்சத்திலுமே செய்யப்பட்டன. மாறாக பொய்களை கட்டியமைப்பதற்க்கான அடிப்படையாக அந்த விமர்சனங்கள் செய்யப்படவில்லை.

புரட்சி என்பது பாட்டாளி வர்க்கம் ஆட்சிக்கு வந்தவுடன் முடிவடைந்து விடுகிறது என்ற பொதுக் கருத்துதான் அரசு அதிகாரத்தில் இருக்கும் போது பாட்டாளி வர்க்கம் தனது எதிரி வர்க்கத்தின் மீது செலுத்தும் தவிர்க்க இயலா வன்முறையை தவறாக பார்க்கும் அடிப்படையை உருவாக்குகிறது. உண்மையில் எதிரி வர்க்கம் இருக்கும் வரை புரட்சி நடந்து கொண்டேதான் இருக்கிறது. ஏனேனில் சில கற்பனாவாதிகள் நினைப்பது போல இந்த சமூகத்தின் அனைத்து உறுப்பினரும் ஒரே விதமாக அன்பே உருவானவர்களாக இருப்பதில்லை. ஒவ்வொருவரின் அன்பும் அவர்களுக்கேயுரிய வர்க்க சார்புடன்தான் உள்ளது. பாருங்களேன் காந்தியாவாதி மா சிவகுமாருக்கு, இந்திய போலி ஜனநாயகத்தில் செத்துப் போகும் லட்சக்கணக்கான விவசாயிகளை விட பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தில் செத்துப் போகும் ஆயிரக்கணக்கான ஆதிக்க வர்க்கத்தினரின் சாவு மிகப் பெரிதாகவும், ஜனநாயக மறுப்பாகவும் தோன்றுகிறது. அவரது அஹிம்சைக்கும் வர்க்க சார்பு உண்டு எனபதை அவர் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை.

ஆக, பாட்டாளி வர்க்கத்தின் ஆட்சியை சீர்குலைத்து நிர்மூலமாக்குவதற்க்காக ஆக மேலான முயற்சிகளை அதிகாரத்தை இழந்த வர்க்கங்கள் உலக மேலாதிக்க ஏகாதிபத்தியங்களின் உதவியுடன் செய்யும். உண்மையில் பாட்டாளி வர்க்கம் ஆட்சிக்கு வந்த பிற்ப்பாடு புரட்சி என்பது இன்னொமொரு உயர்ந்த வடிவத்தில் நடந்து கொண்டேதான் இருக்கிறது. கம்யுனிசத்தை அடையும் வரை இது தொடரும். இங்கு இதை நிறுத்திக் கொள்வோம்.

இப்பொழுது நீலகண்டன் எழுதியுள்ள கட்டுரைக்கு செல்வோம். அதற்க்கு முன்பு சில விசயங்கள். நீலகண்டன் மற்றும் பிற RSS ஆட்களிடம் இந்துத்துவத்தின் அடிப்படை குறித்து கேள்விகள் கேட்டிருந்தோம். அதற்க்கு பதில் கொடுக்க வழியின்றியே மார்க்ஸியம் குறித்து விவாதத்தை திசை திருப்புகிறார்கள் என்பதை கூறிக் கொள்கிறேன். ஏனேனில் எமது சித்தாந்தமான மார்க்ஸியம் குறித்து முயற்சி செய்து கட்டுரை இடும் நீலகண்டன். இந்துத்துவம் குறித்தும் அதன் சித்தாந்தம் குறித்தும் அடிப்படையாக கேட்டுள்ள எமது கேள்விகளுக்கு மிக சுலபமாகவே பதில் சொல்லலாம். அதாவது இந்துத்துவம் குறித்து அவருக்கு போதிய அறிவிருந்தால். இதுவரை அவர்கள் பதில் சொல்லாதது, இந்துத்துவம் குறித்து அடிசுவடு கூட தெரியாமல் அதன் மற்றைய இலக்கிய மேல் தட்டுகளிலேயே அவர்கள் சஞ்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை காட்டுவதாக உள்ளது. அல்லது அவர்களின் சொந்த வர்க்க நலன்களின் தேவைக்கேற்ற அரசியலாக பார்ப்பனிய பயங்கரவாத அரசியல் உள்ளதாலேயே அதனை பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் கருதலாம்.

உண்மையில் இது பரிதாபகரமானது என்பதை நான் குறிப்பிட்டே தீர வேண்டும். மார்க்ஸியம் குறித்து தாக்குதல் தொடுத்துள்ள நீலகண்டன் அது குறித்தும் கூட தமக்கு அறிவு படு பாதளம்தான் என்பதை நிறுவுகிறார். இதற்க்கு நீயுட்டானிய பொருள்முதல்வாதம் என்ற ஒன்று குறித்து பேசுகிறாரே அதுவும், மாவோ செடிகளிடையே வர்க்க பேதம் பார்த்தார் என்பது குறித்த படு முட்டாள்தனமான ஒரு பொய்யும் உதாரணம். மார்க்ஸியம் ஒரு வளரும் தத்துவம். ஏனேனில் அது தனது அடிப்படையாக இயக்கவியல் பொருள்முதல்வாதத்தை கொண்டுள்ளது. மாறாக, RSS ஆட்கள் முன் வைக்கும் வறட்டு மக்கள் விரோத சித்தாந்தமோ கற்பனவாதமாக இருக்கிறது. இரண்டாயிரம் வருடமாக அது வர்ணாஸ்ரமத்தை தாண்டி வேறு எங்கும் செல்லவில்லை. இதோ மாவோ இயக்கவியலை அடுத்தக் கட்டத்திற்க்கு வளர்த்துச் சென்றார். லெனின் ஏகாதிபத்திய காலகட்டத்திற்க்கான வியாக்கியானங்களை சேர்த்தார். மாறாக, பார்ப்ப்னியத்தில் அதிகபட்சம் சிலரின் நம்பிக்கை என்ற அளவைத் தாண்டி அதில் ஒன்றும் கிடையாது என்பதுதான் அவர்களை இந்த அம்சத்தில் விவாதத்தை முன்னெடுத்துச் செல்ல தயங்க வைக்கிறது.

//மார்க்சீய வட்டாரங்களில் பொதுவாக கூறப்படுவது என்னவென்றால் லெனினுக்கு பின் ஸ்டாலினுக்கு பதிலாக ட்ராஸ்கி அதிகாரத்தை கைப்பற்றியிருந்தால் அறிவியல், கலை, மானுட உயிர் மற்றும் மானுட உரிமைகள் பெரும் அழிவுகளை சந்திக்க நேர்ந்திருக்காது என்பதாகும். //

இந்த வரிகளைப் பொறுத்தவரை ஒரே விசயம்தான். மார்க்ஸீய வட்டாரம் என்று நீலகண்டன் குறிப்பிடுவது யாரை? அவர் குறிப்பிடும் வட்டாரம் என்பது மேற்கத்திய சூழலின் பிழைப்புவாதம் உருவாக்கிய கோஸ்டிகள்தானேயன்றி வேறல்ல. இது போல பல பத்து கருத்துக் கொண்டவர்களை குறிப்பிடலாம். ட்ராஸ்கியை பின்பற்றுபவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவே அதிலும் ஒரு பெரும் பகுதி அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சம்பளத்தில் அரசியல் செய்து கொண்டிருப்பவர்கள். இன்று மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்காக களத்தில் போராடிக் கொண்டிருப்பவர்களில் எத்தனை பேர் அவரது மேற் சொன்ன கருத்தை ஆதரிக்கிறார்கள். பூஜ்யம் என்று சொல்லலாம்.

மற்றபடி கலைஞர்களை கைது செய்ததாக - நீலகண்டன், மலர்மன்னன் போன்ற மக்கள் விரோதிகளை கைது செய்வதைத்தான் நீலகண்டன் குறிப்பிடுகிறார். இந்த இடத்தில் கம்யுனிசத்தின் கலை இலக்கிய பங்களிப்பு குறித்து சொல்லியே தீர வேண்டும். சோவியத் ரஸ்யாவின் பொற்காலகட்டத்தில் அங்கு நிகழ்ந்த கலை இலக்கிய நிகழ்வுகள் குறித்தும் அதன் மொழிபெயர்ப்புகள் இங்கு தமிழகம் முதல் பல இடங்களில் உருவாக்கிய விளைவுகள் குறித்தும் அறிந்தவர்கள் நீலகண்டனின் இந்த அரை உண்மை, அரைப் பொய் பிரச்சாரத்தில் விஞ்சி நிற்க்கும் முழு புரளியை புரிந்து கொள்வார்கள். குழந்தைகள் இலக்கியத்தைப் பொறுத்த வரை இன்று வரை ரஸ்யாவின் இடத்தை இட்டு நிரப்ப ஒரு நாடு இல்லை. நல்ல தடித்த அட்டைகளுடன் நல்ல தரமான புத்தகத்தை மிகக் குறைந்த விலைக்கு உலகம் முழுவதும் எல்லா மொழிகளிலும் மொழி பெயரத்து அனுப்பிய சோசலிச ரஸ்யாவின் வலிமை என்பது ஸ்டாலின் கட்டியமைத்த சோசலிசத்தின் சாதனைக்கு ஒரு சான்று. ரஸ்யாவின் சீரழிவோடு நம்மை விட்டுப் போன விசயம் குழந்தைகளுக்கான ஆக்கப் பூர்வமான இலக்கியமும் என்ற உண்மை எனது இந்த கருத்துக்கு வலு சேர்க்கும்.

லெனின் மாக்ஸிம் கார்க்கியை குற்றம் சாட்டினார் என்று எழுதியுள்ளார் நீலகண்டன். சொற்களை சரியாக தேர்வு செய்வதன் மூலம் ஒரே சம்பவத்தை வர்ணிப்பதில் தமக்கு சாதகமான வெவ்வேறு கருத்து நிலைப்பாடுகளை உருவாக்குவதில் பார்ப்பனிய பயங்கரவாதிகள் திறமையானவர்கள் என்பதற்க்கு இது ஒரு நிரூபணம். கம்யுனிசத்தில் சுயவிமர்சனம், விமர்சனம் என்பது மிக முக்கியமானது. தனது நடவடிக்கைகளை குறித்து சுயவிமர்சனம் செய்து கொள்வதுடன், தமது தோழர்களின் மீதும் விமர்சனம் வைத்து தவறுகளை திருத்திக் கொள்வது கம்யுனிச பண்பாடு. அதைத்தான் லெனின் செய்கிறார். மாக்ஸிம் கார்க்கி கடவுள் நம்பிக்கையை வலியுறுத்தி எழுதிய போதுகூட அதனை விமர்சனம் செய்து கண்டித்தவர்தான் லெனின். ஆனால் இவை எதையும் அவர்கள் திரை மறைவுக்குள் மக்களுக்கு தெரியாமல் செய்யவில்லை (கிசு கிசு: சிலர் பிரிண்டிங் பிரஸில் தமது சபலத்தை தீர்த்து மாட்டிக் கொண்டு வெளியில் யோக்கியனாக வலம் வருவது போல அல்ல). அப்படி செய்பவர்கள் யார் என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை. இந்த பண்பாடுதான் சாம்பலிலிருந்து பீனிக்ஸ் பறவையாக ரஸ்யாவையும், சீனாவையும் அதி வேகத்தில் வளர்ச்சியுறச் செய்தது.

ரஸ்யாவின் விஞ்ஞான சாதனைகளுக்கு அதன் பிரபஞ்ச ஆராய்ச்சி சாதனைகளே பதில் சொல்லும். ஆனால் விஞ்ஞானத்தில் அதுவும் குறிப்பாக இயற்பியலில் நீலகண்டனைவிட ஒப்பிட இயலாத அளவு அறிவு பெற்ற ஐன்ஸ்டீன் ரஸ்ய சோசலிசம் குறித்து என்ன சொல்கிறார் என்று பார்த்தால் அது நீலகண்டன் சொல்வது போல இல்லை. ஐன்ஸ்டீனும் கூட ரஸ்யாவை விமர்சனப் பூர்வமாகவே அனுகுகிறார். ஆனால் அது நீலகண்டன் செய்யும் பொய்யுரை திரிப்பு வேலைகளாக இல்லை. ஐன்ஸ்டீனின் விமர்சனங்களை நாம் ஏற்றுக் கொள்கிறோம் என்பதை இங்கு குறிப்பிடுகிறேன்.

மார்க்ஸியம் குறித்து ஒன்றுமே தெரியாமல் வியாக்கியானம் செய்தால் அது ஜெயமோகனின் பின் தொடரும் நிழல் போல புரளி பேசும் மனப் பொக்கரிப்பாகவே இருக்கும். இங்கும் நீலகண்டனும் வெகு சுலபமாக தனக்கு தெரிந்த ஒன்றை மார்க்ஸியம் என்று சொல்கிறார். அதனையே உடைத்தும் பேசுகிறார். இது அவர்களின் பாரம்பரியம். பரபக்க வாதம் என்ற உரைநடை முறையின் அடிப்படையில் பார்ப்பினியத்தின் பழைய நூல்களில் பண்டைய பொருள்முதல்வாதமாகிய சாருவாகத்தை உடைத்து பேசும் போது கூட அதனை திரித்துக் கூறியே உடைக்கிறார்கள்.

அப்புறம் லெனின், ஸ்டாலின் சிலை தகர்ப்பு குறித்து படங்கள் போட்டு தமக்கு சாதகமான ஒரு உணர்வை ஏற்ப்படுத்த முயன்றுள்ளார். அவருக்கு ஒரே பதில், பெரியார் சிலை உடைப்பு எப்படி பெரியாரை உண்மையில்லை என்று சொல்லிவிடாதோ அதே போலத்தான் லெனின், ஸ்டாலின் சிலை உடைப்புகளும். ஆனால் தற்பொழுது லெனின், ஸ்டாலின் மீதான ரஸ்ய மக்களின் காதல் அதிகரித்து வருவது குறித்து நீலகண்டன் பதில் சொல்ல வாய்ப்பிருக்காது. அதுவும் குறிப்பாக ஸ்டாலின் பொற்காலம் குறித்த காதல் ரஸ்ய மக்களிடம் அதிகரித்து வருவது பிற்போக்கு சக்திகளுக்கு கிலி மூட்டக் கூடியது. உண்மையில் அதுதான் இவர்களை கதறியடித்துக் கொண்டு கூகிளில் வரும் முதல் இருபது தளங்களில் 90% இவர்களின் தளங்களாக இருக்கும் படி மாற்றி வைத்திருக்கிறது. சும்மாவா சொன்னார் மாவோ இவர்களை "காகித புலி' என்று.

மாக்ஸிம் கார்க்கியும், லெனினும்:

மாக்ஸிம் கார்க்கியுடனான லெனினுடைய உறவு ஏதோ சம்பிரதாயப் பூர்வமானது என்ற புரிதலில் படிப்பவர்கள் மாக்ஸிம் கார்க்கி மீதான லெனினின் விமர்சனத்தை திரித்து புரிந்து கொள்ளவே வழிவகுக்கும். மாறாக 1905-ல் மே நாள் பிரசூரம் எழுதச் சொல்லி மாக்ஸிம் கார்க்கியை கேட்டுக் கொண்டதிலிருந்து, மாக்ஸிம் கார்க்கி எப்பொழுதெல்லாம் தனது கலை மனதுக்கு மயங்கி நிலை தடுமாறுகிறாரோ அப்பொழுதெல்லாம் கடுமையாக விமர்சனம் செய்தது, ரஸ்ய பஞ்சத்திற்க்கு வெளிநாடுகளிடம் உதவி கோரி கார்க்கியை தூதனுப்புவது வரை அவர்களின் உறவு பலப்பட்டே வந்துள்ளது.

மாக்ஸிம் கார்க்கியை சிகிச்சை எடுத்துக் கொள்ளச் சொல்லி நிர்பந்தித்து வேறு நாடுகளுக்கு செல்ல அறிவுறுத்தி லெனின் பல கடிதங்கள் எழுதுகிறார். இதனைத்தான் திரித்து நீலகண்டன் வகையாறாக்கள், லெனின் கார்க்கியை மிரட்டி நாட்டை விட்டு துரத்தினார் என்று எழுதுகிறார்கள். அவற்றில் சில இங்கே: #1, #2

முதலாளித்துவ அறிஞர்களின் போலி மனிதாபிமானத்தையும், அதன் பின்னே ஒளிந்துள்ள ஏகாதிபத்திய அடிவருடித்தனத்தையும் உணராமல் குரல் கொடுத்த கார்க்கியை கண்டித்து லெனின் எழுதுகிற கடிதம் - #3.

இதே கடிதத்தில் கடைசி வரியை மட்டும் "You will die" என்று மாற்றி அதையே ஆதராமாக கொண்டு கார்க்கியை, லெனின் மிரட்டியதாக வெளியிடும் நீலகண்டனின் தரத்தை/நேர்மையின்மையை புரிந்து கொள்ளுங்கள்.

இத்துடன் சேர்ந்து மாக்ஸிம் கர்க்கி லெனினின் மரணத்தை ஒட்டி லெனின் குறித்து எழுதிய சிறு புத்தகத்தை படித்தால் அவர்களிடையே இருந்த உறவு தெரிய வரும். அப்படியில்லாமல் வெறும் வார்த்தைகளை பிய்த்துப் போட்டு விரும்பிய அர்த்தம் கொடுப்பதில் நேர்மையின்மை தவிர்த்து வேறு ஒன்றும் புலப்படவில்லை.

லெனின் குறித்து 1920களில் மாக்ஸிம் கார்க்கி எழுதியதை கீழே கொடுக்கிறேன்.

A Frenchman once asked me:

"Don't you think that Lenin is a guillotine, endowed with a mind?"

"No, I would compare the work of his mind with the blows of a hammer, which possesses the power of sight, and which crushes only that which should have been destroyed long ago."

லெனின் தனது சுத்தியலால் அடித்து நொறுக்கிய பழைய உலகத்தின் பிற்போக்கு மக்கள் விரோதிகளைத்தான் நீல்ஸ் முதலான இன்றைய பிற்போக்குவாதிகள் தூக்கி வைத்துக் கொண்டு அவதூறு கிளப்புகிறார்கள்.

ஸ்டாலின் காலத்தில்தான் கார்க்கி கலை இலக்கிய துறையின் தலைவராக இருந்தார் என்பதே அவர்களிடயே இருந்த உறவை புரிந்து கொள்ள போதுமானது.

லெனின் காலத்தில் அறிவு ஜீவிகளுக்கான, அறிஞர்களுக்கான ரேசன் ஓதுக்கீடு குறித்தான் விசயங்களை கார்க்கிதான் பார்த்துக் கொண்டார் என்பதை நான் இங்கு குறிப்பிட்டே தீர வேண்டும். ஏனேனில் புரட்சியின் நிறைவில் முதல் உலகப் போரின் அழிவால் பஞ்சத்தில் தவித்துக் கொண்டிருந்த ஒரு நாட்டில் அறிவியல் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து அதற்க்கான ரேசன் ஒதுக்கீட்டை கார்க்கி கேட்ட போதெல்லாம் தருவித்தார் லெனின். இதைத்தான் நீலகண்டன் அறிவியலை முடக்கிய மார்க்ஸியம் என்கிறாரா? ஆனால் இதனால்தான் ரஸ்யா பல சாதனைகளை சாதிக்க முடிந்தது.

மாக்ஸிம் கார்க்கி ஏதோ ரஸ்ய போல்ஸ்விக் புரட்சியை விரும்பவில்லை போலும், அதனை ரஸ்யர்கள் மீது லேனின் ஏவும் கொடூரமான பரிசோதனை என்றும் கூறுவதாக கூகிளில் வரும் முதல் பத்து பக்கங்கள் எல்லாம் புரளி கிளப்புகின்றன. ஆனால் இவர்கள் கார்க்கியை லெனின் மிரட்டியதாக குறிப்பிட்ட அடுத்த ஆண்டில் அதாவது 1920-ல் அவர் எழுதிய லெனின் எனும் கட்டுரை இவர்கள் சொல்லுவதை எதையும் உறுதிப்படுத்தும் வகையில் இல்லை. மாறாக ரஸ்ய புரட்சியின் மீதான அவரது காதலை வெளிப்படுத்துகிறது. லெனின் மீதான அவதூறுகளுக்கு கார்க்கி பதில் சொல்லுகிறார். அவதூறு பேசுபவர்களை கேவலப்படுத்துகிறார். முதலாளித்துவ ஜனநாயகத்தின் கிரிமினல் முகத்தை கிழிக்கிறார்.

கார்க்கி எழுதுகிறார்:

"எங்கோ ஒரு மூலையில் ஒழிந்திருக்கும் தூரத்து இந்திய கிராமத்திலிருந்து, காடுகளும், மலைகளுமாக பல நூறு மைல்களை கடந்து, தமது உயிரை தொடர்ந்து ஆபத்துக்குள்ளாக்கி, ஆங்கிலேய அதிகாரிகளின் ஆண்டாண்டு கால அடக்குமுறைக்குள்ளான இந்துக்கள் தமது ரஸ்ய லட்சியத்துக்காக காபுலுக்கு வந்து கேட்டனர் "யார் இந்த லெனின்?' என்று"

இதை விட விமரிசையாக லெனினை பாராட்ட முடியாது. இவர்தான் லெனினை பிடிக்காமல் நாட்டை விட்டு வெளியேறினாராம். கேக்குறவன் கேனைப்பயல் என்றால்.....

மேலும் இன்னும் ஒரு படி மேலே சென்று புரட்சிகர வன்முறை குறித்தான தனது கருத்துக்களை முன் வைக்கிறார் கார்க்கி:

"At times one can see in this harsh political leader flashes of almost feminine gentleness and kindness to others, and I am sure that the terror costs him many sufferings, which he succeeds in concealing skillfully. It is impossible and inconceivable that men, destined by history to perform the great contradiction of killing some for the freedom of others, should not feel the pains and the sufferings which nearly exhaust the soul. I know several pairs of eyes in which this burning pain has become fixed forever, for their whole life. All killing is organically revolting for me; but these men are martyrs, and my conscience would never permit me to condemn them"

"இந்த கடுமையான அரசியல் தலைவர்(லெனின்) அடுத்தவர் மீது பெண்மையின் அன்பையையும், பண்பையும் காட்டுபவராக இருப்பதை யாரும் கவனிக்கலாம், மேலும் இந்த பயங்கரங்கள்(புரட்சிக்கு பிந்தைய பாட்டாளி வர்க்கம், எதிரிகள் மீது ஏவிவிட்ட வன்முறைகளை குறிக்கிறார் கார்க்கி) அவருக்கு அதிகப்படியான கஸ்டங்களை ஏற்படுத்தியுள்ளது என்பதை உறுதியாக கூறுவேன், அவற்றை வெகு திறமையாக அவர் மற்றவர்கள் பார்வையிலிருந்து மறைக்கிறார். ஒருவரது ஆன்மாவை உறைய செய்யும் வகையில் மற்றவர்களின் சுதந்திரத்துக்காக சிலரை கொன்று விடும் கடமை வரலாற்றால் தம்மீது சுமத்தப்பட்ட ஒருவர் அந்த வலியையும், கஸ்டங்களையும் உணர மாட்டார் என்பது ஏற்றுக் கொள்ளமுடியாததும், சாத்தியமில்லாததும் ஆகும். சுட்டெரிக்கும் இந்த வலியை நிரந்தரமாக தமது வாழ்நாள் முழுவதும் ஏந்தி நிற்க்கும் பல ஜோடி கண்களை நான் பார்க்கிறேன். எல்லாவிதமான படுகொலைகளூம் என்னை வெகு இயல்பாக கிளர்ந்தெழச் செய்கிறது. ஆனால், இவர்கள்(ரஸ்ய கம்யுனிஸ்டுகள்) தியாகிகள், இவர்களை கண்டனம் செய்வதற்க்கு எனது மனசாட்சி எந்த காலத்திலும் இடம் கொடுக்காது".

உண்மையில் இவர்கள் குறிப்பிடும் அடிப்படையில் கார்க்கி எதுவும் சொல்லவில்லை. கார்க்கி இது போல பல இடங்களில் தனது அழகியல் மயக்கத்தையும், அதனால் தவறான நிலைப்பாடு எடுப்பதையும் குறிப்பிடுகிறார். மேலும், லெனின் குறித்து சொல்லும் போது "அவர் ஒவ்வொரு மனிதரைப் பற்றியும் மிகச் சரியாக அவர்களின் நடவடிக்கைகள் மூலம் விளக்குகிறார். அவரது கருத்து இது வரை தவறாக போனதில்லை என்றே சொல்ல வேண்டும்" என்று கார்க்கி குறிப்பிடுகிறார். இவையெல்லாம் கார்க்கியின் தவறுகளை விமர்சித்து லெனின் எழுதியதை மனதில் வைத்தே சொல்கிறார். ஏனேனில் கார்க்கி ஆதரித்த சிலரை பிறகு தவறானவர்கள் என்று கார்க்கியே புரிந்து கொள்கிறார்.

இதோ கார்க்கி தனது ஊசாலட்டத்தை பின்வருமாறு குறிப்பிடுகிறார்:

"This fearlessness has been counted by many sheer madness. I was one who began his career of promoting revolution by singing the glory of the madly brave. Yet there was a moment when my natural pity for the people of Russia made me consider this madness as almost a crime. But now I see that this people can suffer patiently much better than it can work conscientiously and honestly. So again I sing the glory of the sacred madness of the brave. And of them, Vladimir Lenin is the first and the maddest."

இதில் கடைசியாக வரும் வரிகள் லெனினை கிறுக்கன் என்று கூறி உரிமையுடன் வஞ்ச புகழ்ச்சி அணிந்துரை செய்கிறது. பார்ப்ப்னிய பயங்கரவாதிகள் இந்த ஒரு வரியை மட்டும் பிய்த்து போட்டு ஏதேனும் கட்டுரையோ புத்தகமோ எழுதும் அபாயம் உள்ளது. இதெல்லாம் கார்க்கிக்கு தெரியாமல் போனது வரலாற்றின் குற்றம்தான்.

ஆக, இப்படி இருக்கிறது லெனின் கார்க்கி உறவு. நீலகண்டனோ கேட்க யாரும் இல்லாத தைரியத்தில் திண்ணையில் எழுதி குவித்த புரளியை இங்கும் கடை பரப்புகிறார். படிக்கும் சாதரண வாசகன் கார்க்கி லெனின் கடிதப் போக்குவரத்துக்கள், பிற உறவுகள் குறித்து ஆய்வு செய்து கொண்டா இருப்பான்?

அறிவியலும் மார்க்ஸியமும்:

அறிவியலைப் பொறுத்தவரை இவர்களுக்கு கிடைத்தவர் லைசென்கோ என்பவர்.

லைசென்கோ சரியானவரா? இல்லையா என்பதை இங்கு பேசப் போவதில்லை. மாறாக, ரஷ்யாவில் நடந்த அறிவியலுக்கான போராட்டத்தின் நிகழ்வுகளை நீலகண்டன் போன்றவர்கள் எப்படி தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதனை அம்பலப்படுத்தும் அளவிலேயே இந்த பகுதியை அனுகவும். ஏனேனில் அறிவியல் குறித்து எனக்கு அறிமுகம் போதாது.

//இன்று எப்படி கத்தோலிக்க சபை பூமி சூரியனை சுற்றுவதை ஏற்றுக்கொள்கிறதோ அது போல இன்று மார்க்சிஸ்ட்கள் (எல்லோரும் அல்ல: அண்மையில் நான் சந்தித்த ஒரு முதுபெரும் தோழர் வர்க்க போராட்ட சுபாவம் பாட்டாளிகளுக்கு மரபு மரபாக கடத்தப்படுவதாக கூறினார்,) ஜீன்களின் இருப்பை ஏற்றுக்கொள்கிறார்கள்.//

லைசென்கோ ஏதோ சுத்தமாக மரபணு விஞ்ஞானத்தையே ஏற்றுக் கொள்ளவில்லை என்று மிகப் பெரிய பொய்யை கடை பரப்புகிறார் நீலகண்டன். புரியாத வார்த்தைகளாக நியுட்டானிய பொருள்முதல்வாதம் போன்றவற்றை உபயோகப்படுத்தி குழப்பவது உள்ளிட்ட இவர்களின் உத்திகளில் இவையும் ஒன்று. அதாவது படிப்பவனுக்கு பிரமிப்பை உருவாக்கும் வார்த்தைகளை போட்டு வைத்து தம்மீது நம்பிக்கையை உருவாக்குவது அதனடிப்படையிலேயே பொய்களை கடை பரப்புவது. லைசென்கோ என்ன சொன்னார் என்று நீலகண்டனுடைய இந்த கட்டுரையை படிக்கும் யாரும் பார்க்கப் போவதில்லை என்ற தைரியமே இப்படி அவரை பொய் சொல்ல வைக்கிறது. கீழே லைசென்கோ மார்கன் மரபு கடத்தல் கோட்பாடை மறுதலிக்கும் அம்சத்தை தருகிறேன். பிறகு படிப்பவர்களே நீலகண்டனுடைய நம்பகத்தன்மையை எடை போட்டுக் கொள்ளுங்கள்.

""Following Weismann, the Mendelist-Morganists contend that the chromosomes contain a special "hereditary substance" which resides in the body of the organism as if in a case and is transmitted to coming generations irrespective of the qualitative features of the body and its conditions of life. The conclusion drawn from this conception is that new tendencies and characteristics acquired by the organism under the influence of the conditions of its lift and development are not inherited and can have no evolutionary significance.""

மேண்டலின்-மார்க்ன் பிரிவைச் சேர்ந்தவர்களின் கூற்றுப் படி, குரொமோசோமில் இருக்கும் ஒரு சிறப்பு பொருள் குறிப்பிட்ட உயிரினத்தின் சுற்றுச் சூழலினால் பாதிக்கப்படாமலேயே ஒரே தகவலை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்கிறது. உண்மை என்னவெனில், சுற்றுச் சூழல் உள்ளிட்ட பல விசயங்களின் பாதிப்பினால் உருவாகும் தகவல்களும் சேர்ந்தே ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுகிறது என்பதை நவீன விஞ்ஞானம் ஏற்றுக் கொள்கிறது.

இதைத்தான் லைசென்கொ மறுக்கிறார். மேலேயுள்ள கருத்து தவறுதானே? இது பரினாமத்துவத்தை மறுப்பதுதானே? அதை லைசென்கோ மறுப்பதில் என்ன தவறுள்ளது?

""In other words, whether qualitative variations of the nature of vegetable and animal organisms depend on the conditions of life which act upon the living body, upon the organism.

The Michurin teaching, which is in essence materialist and dialectical, proves by facts that such dependence does exist.

The Mendel-Morgan teaching, which in essence is metaphysical and idealist, denies the existence of such dependence, though it can cite no evidence to prove its point.""

""Naturally, what has been said above does not imply that we deny the biological role and significance of chromosomes in the development of the cells and of the organism. But it is not at all the role which the Morganists attribute to the chromosomes.""

இங்கு லைசென்கோ, மரபணுவில் நடைமுறை வாழ்க்கை ஏற்படுத்தும் பாதிப்புக்குள்ள தொடர்பு குறித்து சொல்கிறார். நீலகண்டன் சொல்லுவது போல குரோமோசோம் உள்ளிட்டவற்றின் பங்களிப்பை அவர் மறுக்கவில்லை(இதனை இரண்டாவது மேற்கோள் குறிப்பிடுகிறது). மாறாக அவற்றுக்கு மட்டுமே அவர்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தைத்தான் மறுக்கிறார்.

ஆக, நடைமுறை வாழ்க்கை மரபணுவில் பதிய வைக்கும் செய்திகளை மறுக்கும் மாண்டலிய-மார்கன் குழுவினரின் சில கருத்துக்களைத்தான் லைசென்கோ மறுக்கிறார். இப்படிப்பட்ட கருத்துக்கள் யாருக்கு தேவைப்படுகிறது? வேறு யாருக்கு கருத்து முதல் வாதிகளான மத வெறியர்களுக்குத்தான் தேவைப்படுகிறது. ஏனேனில் சுற்றுச்சூழல் அல்லாத வேறு எதோ விசயம் உயிரணங்களின் பண்பை தீர்மானிப்பதாக நிறுவ முடியும் எனில் அந்த இடைவெளியில் கடவுளை கொண்டு வந்து உட்கார வைப்பது வெகு சுல்பமல்லவா?(அறிவியலை திரிக்கும் இந்த வேலையை பார்ப்ப்னிய, கிறுத்துவ வெறியர்கள் உலகெங்கும் வெகு விமரிசையாக செய்து வருகிறார்கள்)

ஸ்டீபன் ஹாக்கின்ஸ்சினுடையை பேரண்ட வெடிப்பை கிறுத்துவ மத வெறியர்கள் தமக்கு சாதகமாக பயன்படுத்த விளைந்தனர். 'There is no place for Super inteligent in Big bang'(சரியான வார்த்தை ஞாபகம் இல்லை) என்று ஸ்டிபன் ஹாக்கின்ஸ் மத வெறியர்களுக்கு மறுப்பு தெரிவிக்க வேண்டியிருந்தது. அதே போலத்தான் தமது வர்ணாஸ்ரம தர்மம் குண அடிப்படையில் உருவாகிறது என்பதற்க்கான அறிவியல் அடிப்படையை என்றும் மாறாத 'குரோமோசோமின் ஒரு தகவல் சேமிப்புப் பொருள்' கருத்தாக்கத்தில் காண்கிறார் நீலகண்டன்(இதோ பார்ப்பனியத்தின் சாயலுடன் எழுதும் Bad News India கூட இந்த அம்சத்தில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார் - நான் இங்கு BNIயை பார்ப்ப்னியவாதி என்று குறிப்பிடவில்லை). குணத்தின் அடிப்படையில் வர்ணம் பிரிக்கிறோம் என்று நீலகண்டன் சொல்லி நாம் அதற்க்கான அறிவியல் அடிப்படையை கேட்டால், குரோமோசோமில் உள்ள 'என்றும் மாறா தகவல் சேமிப்பு உட்பொருள்'தான் அவர் நமக்கு பதில் சொல்வதில் உதவ முடியும். இதனாலேயே ஏதையாவது செய்து மரபணு குறித்த இந்த பிற்போக்கு தத்துவத்தை உறுதிப் படுத்தும் அதே நேரத்தில் மார்க்ஸியத்தின் மீது அடிப்படையற்ற பொய்களை சொல்கிறார். இந்த அடிப்படையில்தான் அன்றைய ரஸ்ய மார்க்ஸியர்கள் மாண்டெலிய-மார்கன் குழுவினரின் கருத்து முதல் வாத தன்மையை அம்பலப்படுத்தியுள்ளனர் என்று கருத வேண்டியுள்ளது.

மாண்டெல் ஜீன்கள் குறித்த கருத்துக்களை டார்வின் பாரிணாமத்துவத்தை வந்தடைந்த அதே காலகட்டத்தில்தான் வெளியிடுகிறார். ஜீன்கள் குறித்த மாண்டெலினின் பங்களிப்பு, அவர் மரபணு துறையின் தந்தை என்பதெல்லாம் மறுக்கவியலாதவை. லைசென்கோ சாலவும் சிறந்த விஞ்ஞானி என்பதை நிறுவுவதும் எனது நோக்கம் அல்ல. உண்மையைச் சொன்னால் அந்தளவுக்கு மரபணு குறித்தோ, அறிவியல் குறித்தோ எனக்கு அறிவில்லை.மாறாக அன்றைய சோவியத்தில் நிகழ்ந்த விஞ்ஞானத்திற்க்கான போராட்டத்தை கொச்சைப் படுத்தி அவதூறு கிளப்பும் நீலகண்டனை அம்பலப்படுத்துவதே இங்கு நோக்கம். இந்த வரம்பிற்குட்ப்பட்டே நான் இங்கு கொடுத்துள்ள விசயங்களை புரிந்து கொள்ள வேண்டும். இன்றும் கூட பிரபஞ்ச ஆராய்ச்சியில் பொருள்முதல்வாத துறைக்கு ஆதரவான ஆராய்ச்சிகளை செய்ய கிருத்துவ அடிப்படைவாதிகளின் ஆதிக்கத்தில் உள்ள அமெரிக்க அரசு நிதி ஓதுக்கீடுகள் தராமால் புறக்கணிப்பதை எதிர்த்து பல விவாதங்கள் லாவணிகள் நடந்து வருகின்றன என்ற கொசுறு தகவலை இங்கு கொடுப்பது பொருந்தும் என்று கருதுகிறேன். ஏன் பண்டைய இந்தியாவிலும், கலிலியோவும் கூட சித்தாந்த போராட்டத்தின் விளைவுகளை சந்தித்துள்ளனர். விஞ்ஞானத்தில் சித்தாந்த போராட்டம் என்பது எல்லா காலத்திலும் நிகழ்ந்து வரும் ஒரு விசயம்தான். வர்க்க சமுதாயம் இருக்கும் வரை இது தவிர்க்க இயலாதது.

மேலும் நீலகண்டன் குறிப்பிடுகிறார், லெனினியத்தை விட நடைமுறை பலனில் நம்பிக்கைக் கொண்ட ஸ்டாலினிசத்தால் இயற்பியல் துறை தப்பித்தது. என்று. ஆனால் ரஸ்ய வரலாறு வேறாக உள்ளது. மரபணு துறையில் மாண்டேலிய-லாமார்க்கம் இரண்டிற்க்கும் முக்கியத்துவம் கொடுத்தே விவாத சூழல் நிலவி வந்துள்ளது. ஏன், ஹேல்டேன், முல்லர் முதல் பலரும் லைசென்கோவை மறுத்து அவர்தான் இயக்கவியலுக்கு முரனானவர் என்று வாதிடுகிறார்கள். ஆக, இந்த விசயம் சோவியத்தில் நிலவிய ஆரோக்கியமான விவாத சூழலையே காட்டுகிறது. நீலகண்டனின் கூற்றை மறுப்பதாகவே உள்ளது. நீலகண்டன் குறிப்பிட்ட விஞ்ஞானிகள் யாருமே லைசென்கோவைத்தான் குற்றம் சாட்டினரே ஒழிய சோசலிசத்தையோ அல்லது மார்க்ஸியத்தையோ அல்ல. மேலும் சொன்னால் இவர்கள் லைசென்கோவை குற்றம் சொன்ன அடிப்படை என்பதே லைசென்கோ மார்க்ஸியத்தை சிதைக்கிறார் என்பதாக இருப்பது, நீலகண்டன் தனது கட்டுரையில் நிறுவ விரும்பும் கருத்துக்கு முரனாக உள்ளது. அதாவது மார்க்ஸியம் அறிவியலுக்கு முரனானது என்ற அவரது அவதூறுக்கு எதிராக இவை உள்ளன.

அறிவியல் அறிஞர்கள் ரஸ்யாவிலிருந்து வெளியேறியது என்பது உள்ளிருந்தே சிதைக்கப்பட்ட ரஸ்ய சோசலிச போராட்டத்தின் ஒரு அங்கமாகவே வருகிறது. இதனாலேயே இந்த அறிஞர்கள் யாரும் சோசலிசத்தை இன்று வரை குறை சொல்லவில்லை.

"In public, he bent over backwards to put a brave face on it. To charges of fellow scientists that Soviet science was overladen by fraud and propaganda and that Soviet genetics was being destroyed by the attempt to apply dialectical materialism to science, Haldane tried to shift the focus by throwing back at them the situation at home. Conditions for research in genetics were better in the Soviet Union than in the British Empire, where scientific research was dependent on patronage from wealthy individuals, he argued, and pointed out that the only department of genetics in the University of London was about to fold. In any case, he went on, "hard words break no bones" (!) and remarked that the attacks on genetics had not led to the curtailment of Vavilov's work. He expressed confidence that, as a scientific question, it would be resolved in a scientific fashion. Going even further, he expressed the view that, so long as it did not lead to the suppression of research, such controversies were a sign of healthy scientific thought. "'

"For 1938, it was entirely too sanguine. In 1939, Haldane wrote to Vavilov, a longtime friend and the source of his invitation to the Soviet Union in 1928, asking him to write an article for Modern Quarterly. Vavilov agreed. However, in 1940 Vavilov was arrested. Yet in 1941, the year of Vavilov's trial,

Haldane wrote:

The controversy among Soviet geneticists has been largely one between the academic scientist, represented by Vavilov and interested primarily in the collection of facts, and the man who wants results, represented by Lysenko. It has been conducted not with venom, but in a friendly spirit. Lysenko said (in the October discussions of 1939): "The important thing is not to dispute; let us work in a friendly manner on a plan elaborated scientifically. Let us take up definite problems, receive assignments from the People's Commissariat of Agriculture of the USSR and fulfil them scientifically. "Soviet genetics, as a whole, is a successful attempt at synthesis of these two contrasted points of view.""

இந்த மேற் சொன்ன ஹால்டேனின் வரிகள், நீலகண்டனின் பொய்களை கிழிக்கும் முகமாக உள்ளன.

ஹால்டேன் மேலும் சொல்கிறார்.

"In delivering the Haldane Memorial Lecture (in memory of his father) at Birkbeck College, London, in 1938, Haldane himself shed light on his own intellectual development in the sphere of philosophy of science. Until going to the Soviet Union, he said, he had been unaware of the existence of Marxism as a philosophy of science, but it had made a deep impression on him, both in virtue of its prevalence and of its connection to concrete scientific research, especially to biological research. Until then, he had no idea that an astronomer, chemist, or biologist might find Marxist principles to be an aid to research. Thereupon, he read Engels's Anti-Duhring and Ludwig Feuerbach and thought Engels far ahead of his time:

Had these books been known to my contemporaries, it was clear that we should have found it easier to accept relativity and quantum theory, that tautomerism would have seemed an obvious hypothesis to organic chemists, and that biologists would have seen that the dilemma of mechanism and vitalism was a false dilemma."

அறிவாளிகள் யாரும் மார்க்ஸிஸ்டுகளாக இருகக் முடியாது என்ற பார்ப்பன கருத்தை பதிய வைத்த அன்பர் இதனையும் எதிர்த்து வாதிட வேண்டும். வாதிட வர மாட்டார் அந்த அன்பர். ஏனேனில் இதற்க்கு முன்பு அவரை வாதிட கூப்பிட்ட இடத்திலெல்லாம் ஓடி ஒளிந்து கொண்டவர் அவர்.

இப்படி ஹால்டேனை சோவியத் ரஸ்யாவுக்கு ஆதரவாக கொண்டு வந்து விடுவார்கள் என்று தெரிந்துதான் அவர் மீதும் ஒரு கறையை விட்டுச் சென்றுள்ளார் நீலகண்டன். ஆனால் அவரது கூற்றுக்கு மாறாக உள்ளது உண்மை. லைசென்கோவின் ஆதிக்கம் தலைத் தோங்கி இருந்ததாக இவர்கள் சொல்லும் காலக்கட்டம் முழுவதும் ஹேல்டென் ஐரோப்பாவில்தான் இருக்கிறார். சூயஸ் யுத்தத்திற்க்கு எதிராகத்தான் இந்தியாவுக்கு ஹேல்டேன் வந்ததாக விக்கிபீடியா சொல்கிறது. அதுவும் 1956யை ஒட்டி. அதாவது ஸ்டாலினின் மறைவுக்கு பிற்பாடு. அதாவது சோச்லிச முகாமை முதலாளித்துவ பிற்போக்குவாதிகள் கைப்பற்றிய பிறகு நடந்தது. 1941-ல் சதி குற்றச்சாட்டின் பேரில் கொல்லபப்ட்ட வவிலோவை 1939-ல் கூட கட்டுரைகள் எழுதச் சொல்லி கேட்டிருக்கிறார்கள் ரஸ்யாவில். இது அங்கு நிலவிய விவாத சூழலையே காட்டுகிறது. ஹேல்டெனை சோவியத்துக்கு அழைத்தவரே வவிலோவ்தான். வவிலோவ் அவரது விஞ்ஞானத்திற்க்காக கொல்லப்படவில்லை, அவர் சதி செய்ததாகவே விசாரனை செய்து பிறகு கொல்லப்பட்டார்.

லைசென்கோவின் சொந்த வார்த்தைகள் மரபணூவை அவர் மறுதலிக்கும் அம்சத்தை நமக்கு வெளிச்சம் போட்டு காட்டுகிறது. இதனை ஆதரித்த ஹெல்டெனோ மார்க்ஸியத்தை வெறுத்து கடைசி வரை எதுவும் சொன்னதாக எனக்கு தெரியவில்லை. அவர் இந்து மதத்தின் மீதிருந்த பற்றினால்தான் இந்தியா வந்தார் என்றும் எங்கும் எழுதப்படவில்லை. மாறாக இங்கிலாந்து சூயஸ் மீது தொடுத்த யுத்தத்தை எதிர்த்தே இந்தியா வந்தார். இங்கு வந்த பிற்பாடு இந்து மத தத்துவங்களால் ஈர்க்கப்பட்டார். இப்படி நீலகண்டன் கட்டியமைத்த பொய்யுரைகள் எதுவுமே நிற்க இடமின்றி அந்தரத்தில் தத்தளிக்கின்றன. ஹேல்டேனே சொல்லுவது போல அன்று மரபணூ துறையில் ரஸ்யாவில் நிகழ்ந்தவையெல்லாம், நடைமுறை பலனை கொடுத்த லைசென்கோவிற்க்கும், அறிவியல் ரீதியாக சரியாக இருந்த வவிலோவுக்கும் நடந்த போராட்டமே.

ஆனால் வவிலோவ் சதி செய்தார் என்று குற்றம் சாட்டி கொல்லப்பட்டது இந்த ஆராய்ச்சி துறை போராட்டங்களுக்கு சம்பந்தமில்லா ஒன்றாகவே நிகழ்ந்துள்ளது. இதனை ஆராய்ச்சி துறையுடன் சம்பந்தப்படுத்தி அவதூறு கிளப்ப முயற்சித்துள்ளார் நீலகண்டன். இங்கு லைசென்கோவின் அதிகார துஸ்பிரயோகம் நிகழ்த்திய பாதிப்புகளை ஸ்டாலினுக்கும், அதை லெனினுக்கும், பிறகு கம்யுனிசத்துக்கும் விரிவு படுத்தி பேசுகிறார் நீலகண்டன். ஆனால் பாதிக்கப்பட்ட தலைசிறந்த விஞ்ஞானிகளோ தனிமனித தவறுகளை கண்டிதத்தார்கள் ஆனால் சோசலிசத்தையோ இயக்கவியல் பொருள்முதல்வாதத்தையோ குறை சொல்லவில்லை இன்று வரை.

அன்றைய அறிவுஜீவி வர்க்கம் மட்டுமல்ல, எல்லா துறைகளிலும் ஏகாதிபத்திய ஆட்களின் ஊடுருவல் மிகக் கடுமையாக இருந்தது. முதல் உலகப் போர், உள்நாட்டுப் போர், பஞ்சம், எல்லையில் யுத்த அபாயம், உள்நாட்டு சதி, இரண்டாம் உலகப் போர் இப்படி தொடர்ந்து கடும் நெருக்கடியிலேயே தன்னை வளர்த்து எந்த நாட்டையும் சுரண்டாமல் வல்லரசாகிய ரஸ்யாவின் இந்த கொடுமையான பாதையில் சில சறுக்கல்கள் நிகழ்ந்தன. ஏன், ஸ்டாலினுடைய மெய்காவலரையே கைது செய்து தண்டிக்கும் அளவுக்கு போனார்கள் கட்சிக்குள் ஊடுருவிய ஏகாதிபத்திய ஆதரவாளர்கள். ஆனால் இந்த நெருக்கடியான காலகட்டத்தில் எல்லா இடங்களிலும் ஊடுருவியிருந்த தேச துரோகிகளை தண்டித்ததைத்தான் நீலகண்டன் இங்கு பிரதானப்படுத்துகிறார். ஆனால் இதே காரணத்திற்க்காகத்தான், அதாவது இந்த தவறுகளையும் மீறி சோசலிசத்தை எல்லா சதிகளையும் முறியடித்து நடைமுறைப்படுத்தியதற்காகத்த

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பார்ப்பனவாதிகள் சுரண்டலின் உச்சத்தில் இருப்பவர்கள்.. சோசலிசவாதிகள் சுரண்டலை அகற்றப் பாடுபடுபவர்கள்.. இந்த அடிப்படையில் உள்ள கட்டுரையை வாசித்து அதன் கருத்துக்கள் மீது விமர்சனம் வைத்தல் நல்லது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலாளித்துவம் ஊரைச் சுரண்டுகின்றது. சோசலிசம் தம் மக்களையே சுரண்டுகின்றது. இது தான் வித்தியாசம். ஆனால் முதலாளித்துவம் தம்மக்களை மனிதனாக மதிக்கின்றது. சோசலிசம் கண்டு கொள்வதில்லை. இவர்கள் சொல்வது போல யாருமே சோசலிசக் கொள்கையை ஒழுங்காகச் செயற்படுத்தவில்லை என்றால், அது வானத்தைப் பார்த்துக் கனவு காண மட்டுமே பொருத்தமாக இருக்கும்.

***

தணிக்கை செய்யப்பட்டுள்ளது.-யாழ்பிரியா

- கருத்துக்கள நிர்வாகம் மீதான விமர்சனங்களை அவற்றுக்குரிய பிரிவுகளில் எழுதுங்கள்.

Link to comment
Share on other sites

பயங்கரவாதம் என்றால் என்ன? ஆளும் வர்க்கம் தனக்கு எதிரான எல்லாவற்றையும் பயங்கரவாதம் என்ற ஒற்றை வாதத்தில் அடக்கி ஒடுக்கும் தந்திரத்தை செயல்படுத்தி வருகிறது. இன்னொரு பக்கம் பார்ப்பனிய பயங்கரவாதம் ஆளும் வர்க்கமாக இருந்து கொண்டே தனது இருப்பை நியாயப்படுத்தும் தேவைக்காக தனது வர்க்க நலன்களுக்கு நேரெதிரானவர்களையும், மத சிறுபான்மையினரையும் பயங்கராவாதிகள் என்று முத்திரை குத்தி பீதி கிளப்புவதன் மூலமே தனது மக்கள் விரோத பயங்கரவாத நடவடிக்கைகளை மக்களின் பார்வையிலிருந்து பாதுகாத்து வருகிறது.

இன்றைய மறுகாலனியாதிக்கச் சூழல் உருவாக்கும் சமூக பொருளாதார அழுத்தம் என்பது அதன் உண்மையான வடிவங்களில் வெளி வருவது என்பது ஆளும் வர்க்கங்களுக்கு என்றுமே ஆபத்தானதுதான். அப்படியே எங்கேனும் வந்தால் கூட அவற்றையும் பயங்கரவாத முத்திரை குத்தி வெகு சன அரங்கில் தனிமைப்படுத்தி முறியடிக்கும் தேவை தரகு வர்க்கத்துக்கு உள்ளது(Nandigram, etc).

வரைமுறையின்றி இந்தியாவின் வளங்களை கூட்டிக் கொடுக்கும் தரகு வர்க்க அரசியல்வாதிகளும், அதற்க்கு தரகு வேலை செய்யும் பார்ப்ப்னிய பயங்கரவாதிகளும் தமது இருப்பை நியாயப்படுத்திக் கொள்ள தொடர்ந்து ஒரு போலியான எதிரியை உருவாக்கும் தேவை உள்ளது.

பார்ப்பனியத்தின் நலனும், ஏகாதிபத்தியத்தின் நலனும் ஒரு சில சொற்பமான விசயங்களைத் தவிர்த்து வேறு எங்கும் முரன்படவில்லை. ஆனால் இவர்கள் இருவரின் நலனும் ஒன்றிணையும் புள்ளிகள் பல உள்ளன. தொடர்ந்து பயங்கரவாத பீதியூட்டுவதன் மூலம் தமது பாசிச செயல்பாடுகளையே நியாயமானது என்ற பொதுக்கருத்தை வலுப்பெறச் செய்யும் தேவை இருவருக்கும் உள்ளது.

ஏகாதிபத்தியத்தின் தேவைக்குட்பட்டு பார்ப்பனியம் இங்கு இருக்கும் அதே வேளையில் உபரியாக பார்ப்ப்னியத்தின் ஆளுமையை கேள்விக்குள்ளாக்குபவர்களுக

Link to comment
Share on other sites

கேரளம்: தொழிநுட்பத்தின் அரசியல்

தொழிநுட்பம் எப்போதும் வெறும் தொழிநுட்பம் அல்ல. அது அரசியல்.

கேரள மாநில அரசு கோக் பெப்சியை அடுத்து மைக்ரோசொப்டின் மடியில் கைவைத்திருப்பதை இங்கே பலரால் செரித்துக்கொள்ள முடியவில்லை. மாணவர்களின் எதிர்காலம் பற்றியும், இந்தியாவின் தொழிநுட்பவளர்ச்சி பற்றியுமான கவலைப்பாடுகள் உச்சஸ்தாயியில் ஒலிக்கத்தொடங்கிவிட்டன.

நவீன "கிழக்கிந்திய கம்பனிகளின்" நாடுபிடிக்கும் கனவுகளுக்கு எதிராக இருக்கும் இவ்வாறான முடிவுகள் நாடு பிடிப்பவர்களுக்கு சார்பாக நிற்கும் எட்டப்பர் கூட்டத்திற்கு தாங்க முடியாத செய்திகள் தான். இந்த சுயநலவாதிகளின் பிரச்சாரத்துக்கும் பகட்டுக்கும் அடிமையாகிப்போய் அறிவை அடகு வைத்துவிட்ட இன்னொருகூட்டம் திடீரென நாட்டுப்பற்று நாடகத்தை நடத்தத்தொடங்கிவிட்டது.

இவ்வளவுக்கும் கேரள மாநிலத்தில் ஓட்டுப்பொறுக்கும் இடதுசாரி கட்சி ஒன்று அதிகாரத்தில் இருக்கிறது. வெறும் கொடியில் சிவப்பு இருந்தாலேகூட பலருக்கு குலை நடுக்கம் பிடிக்கிறது. என்னசெய்ய?

கேரள அரசு கோக் பெப்சியை அடித்துவிரட்டியதிலும் சரி தற்போது மைக்ரோசொப்டுக்கு அடி கொடுத்ததிலும் சரி மிதமான அணுகுமுறையையே கையாள்கிறது. வர்க்கசார்பான கொள்கைகளையோ, காலனியாதிக்க எதிர்ப்பையோ பற்றி பேசாமல் மிதமான காரணங்களைச்சொல்லி பெரு நிறுவனங்களோடு மோதப்பார்க்கிறது. கோக் பெப்சி நச்சுப்பொருட்களைக்கொண்டுள்

Link to comment
Share on other sites

எந்த ஒரு தத்துவமும், போராட்டமும் அதற்கான வரலாற்றுத் தேவையில்லாமல் எழமுடியாது.

அப்படி எழுந்தாலும், நிலைபெற்று நிற்கமுடியாது.

சுரண்டலுக்கு எதிராக எழுந்தது தான் சோசலிசம்.

சுரண்டலற்ற சமுதாயம் தான் அதன் அடித்தளம்.

சோசலிசம் தம் மக்களையே சுரண்டுகிறது என்பது :)

Link to comment
Share on other sites

சோசலிசம் மக்களிற்கு சோறே (றொட்டி. மா. உருளை கிழங்கு இப்பிடி ஏதாவது மலிந்த உணவு)போடவில்லை பிறகு இருந்தால் தானே சுரண்டிறதுக்கு

சட்டியில் சோறு இருந்தது சோசலிசம் பேசினோம்

சோசலிசம் வந்தது சட்டியில் சோறில்லை

எங்கேயோ படிச்சது சில நெரம் நான் தான் மப்பிலை எங்கையாவது எழுதினதோ தெரியாது :):(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு தத்துவ வசனம் சாத்திரி.

சோசலிசம் பேசுகின்ற நம்மவர்கள் எவரும் சோசலிச நாடுகளில் வசிக்கவில்லை. வசிக்க முடியவில்லை. ஏன் என்றால் அது வெறுமனே கனவு காண்பதற்கு மட்டுமே பொருத்தமாக இருக்கும்.

Link to comment
Share on other sites

சட்டியில் சோறு இருந்தது சோசலிசம் பேசினோம்

சோசலிசம் வந்தது சட்டியில் சோறில்லை

தமிழீழப் போராட்டத்தைக்கூட இப்படியாகச் சொல்லலாம். :lol:

சோசலிசம் பேசுகின்ற நம்மவர்கள் எவரும் சோசலிச நாடுகளில் வசிக்கவில்லை. வசிக்க முடியவில்லை. ஏன் என்றால் அது வெறுமனே கனவு காண்பதற்கு மட்டுமே பொருத்தமாக இருக்கும்.

அதுசரி. சோசலிசம் சுரண்டுகிறது என்று சொல்லப்பட்டது. எந்த வகையில் என்று கேட்கப்பட்டதுக்கு பதில் இல்லை. அதைத்தான்டி "சோசலிசம் கனவு காண்பதற்கு மட்டுமே பொருத்தமாக இருக்கும்" என்று அடுத்த தாண்டல்.

எப்போதும் ஒன்றைப் பற்றி சொல்லும்போது அதுபற்றித் தெரிந்துவிட்டு சொல்லவேண்டும். அடிப்படை விடயங்களையே அறிந்துகொள்ளாமல், *சுயதணிக்கை* என்கிற பாவனை கருத்தாடலுக்கு உதவாது. எங்காவது, யாராவது, எதையாவது சொல்வதை மட்டும் வைத்து ஒன்றைப் பற்றிய முடிவுக்கு வருவதும் ஆரோக்கியமானது அல்ல. சுய தேடலும், சுய சிந்தனையும் தான் ஆக்கபூர்வமான கருத்துருவாக்கத் தளத்துக்கு அழைத்துச் செல்லும்.

இப்பொழுது சொல்லுங்கள், "சோசலிசம் வெறுமனே கனவு காண்பதற்கு மட்டுமே பொருத்தமாக இருக்கும்" என்று எதன் அடிப்படையில் சொல்கிறீர்கள்? :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகளைப் பிடிக்காத பிற நாட்டவர்கள் (முக்கியமாக வளர்ந்துவரும் நாடுகளைச் சேர்ந்தோர்) அமெரிக்காவில் குடியேறி வசதியாக வாழ விரும்புவார்கள். அதுபோலத்தான் நம்மவர்களும்.. தாயகத்தில் பிடிப்பு இருந்தாலும், புலம் பெயர்ந்த முதலாளித்துவ நாடுகளில் வாழ எத்தனித்த பின்னர் இங்குள்ள வசதிகளையும், பிறரையும், அரசையும் சுரண்டி வாழவும் அல்லது சமூகக் கொடுப்பனவில் வேலை செய்யாமல் வாழவும் கற்றுக்கொண்ட பின்னர் சோசலிசம் மீது எப்படி விருப்பத்தைக் காட்டமுடியும்? எல்லாம் கதைக்குச் சரி.. வாழ்வுக்கு சரிப்படுமா?

தெரியாத விடயங்களைப் பற்றி தெரிந்தமாதிரி கதைப்பதில் நம்மவர்களை யாரும் அடிக்கமுடியாது..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.