Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான பாடங்களின் எண்ணிக்கையை ஏழாகக் குறைக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார்.

எஞ்சிய மூன்று பாடங்களுக்கு உள்நாட்டில் மாணவர்களுக்கு வழங்கக்கூடிய தொழில் மற்றும் சுற்றுச்சூழல் அறிவை மதிப்பீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

எந்தவொரு மாணவரும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடையவும், க.பொ.த உயர்தரப் பரீட்சையில் தமக்கு விருப்பமான மற்றும் திறமையான பாடப் பிரிவுகளில் தொழில்சார் பயிற்சிகளை பெற்றுக் கொள்வதற்கும் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இந்த வருடம் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய 3,370,000 மாணவர்களில் 50,000 மாணவர்களுக்கு ஆங்கிலம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் வழிகாட்டல் பயிற்சிகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேலும் தெரிவித்துள்ளார்.

நாளை (மார்ச் 05) முதல் நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள 300 நிலையங்களில் இந்த பயிற்சி நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/294280

  • கருத்துக்கள உறவுகள்
Posted

7 என்றாங்க.. பிறகு 3 பாடங்களில் மதிப்பீடு என்றாங்க.. அப்ப மொத்தம் 10 ஆச்சே. இப்ப இருப்பதே 9 தானே...????!

கல்வி அமைச்சருக்கு விளக்கம் கொடுக்கத் தெரியல்லையோ.. இல்லை இதுதான் விளக்கமோ..???!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, nedukkalapoovan said:

7 என்றாங்க.. பிறகு 3 பாடங்களில் மதிப்பீடு என்றாங்க.. அப்ப மொத்தம் 10 ஆச்சே. இப்ப இருப்பதே 9 தானே...????!

கல்வி அமைச்சருக்கு விளக்கம் கொடுக்கத் தெரியல்லையோ.. இல்லை இதுதான் விளக்கமோ..???!

அவரு எழுந்தபாட்டில நியமனம் செய்யப்பட்ட அமைச்சர்தானே..

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

உண்மையில் சமயபாடத்தை 9 வகுப்போடு நிறுத்தலாம். அதை ஓ எல் வரைக்கும் இழுப்பதில் ஒரு பிரயோசனமும் இல்லை.

மொழி

கணிதம்

விஞ்ஞானம்

சமூகக் கல்வி

வர்த்தகமும் கணக்கியலும்.

ஆங்கிலம்.

இந்த 6ம் போதும்.. பரீட்சைக்கும். நீண்ட மதிப்பீட்டுக்கு

2 போதும்.

1. அழகியல்  (சித்திரம்.. சங்கீதம்.. பரதநாட்டியம்.. கண்டிய நடனம்.. இஸ்லாமிய நடனம்.. மீண்டும் தெரிவை மாணவர் கையில் விடுங்கள்)

2. தொழில்கல்வி (விவசாயம்/கைத்தொழில்/மின்சாரவியல்/கணனிப்பொறியில்/மின்னணுவியல். (தெரிவை மாணவர் கையில் விடுங்கள்.)

மொத்தம் 8 க்குள் தேவையானது எல்லாத்தையும் அடக்கலாம். அதிலும் கடைசி 2 பாடங்களிலும் சித்தி போதும்.. ஏ எல் போக என்றாகனும். குறிப்பாக மதிப்பீட்டு பரீட்சையில்.. பாஸ் அல்லது பெயில் மட்டும் தான் அன்றாகனும்.ஏ பி சி எஸ் வழங்கப்படக் கூடாது. அப்படி வழங்குவது..  ஆசிரியர்களின் பாகுபாட்டுச் செயற்பாட்டை அதிகரிக்கச் செய்யும்.

அதைவிடுத்து பரீட்சை பாடங்களை 7 ஆக்கி மதிபீட்டு பாடங்களை 3 ஆக்கி.. (மதிப்பீட்டு பாடம் என்றால்.. ரீச்சருக்கு ஜால்ரா போற்ற பார்ட்டிகளுக்கு உயர்புள்ளி.. மேற்கு நாடுகளிலேயே இந்தக் கூத்து.. சொறீலங்கா சொல்லிவேல்லையில்ல..) மொத்தம் 10 பாடங்களின் சுமையை ஓ எல் வரை காவுவது.. அநாவசியமானது.

வாழ்க்கையில் சமயத்தில் படிச்ச.. ஒரு தேவாரத்தை தவிர மிச்சம் ஒன்றும் உருப்படியாக ஞாபகமில்லை. அதுக்குக் கூட பண் கிண் எதுவும் ஞாபகமில்லை. அது உனக்குத் தேவையா..??! சொறீலங்கா. எந்த பெளத்த மாணவர் பிரித் ஓதுறான். புத்த பிக்குதானே ஓதுறான். வேணுன்னா அவனைப் படிக்கச் சொல்லுறது... சமயத்தை. 

Edited by nedukkalapoovan
  • Like 1


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------   நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவரும் இறந்தகால வரலாறு தொடர்பான சிக்கல்களுக்கு எதிர்கால தமிழீழ தலைமுறைகளும் முகங்கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் தமது வரலாற்றை அறிய அ கற்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயன்றி எந்நாட்டின் இறையாண்மைக்கும் குந்தகமோ பங்கமோ விளைவிப்பதற்காகவோ அல்லது பயங்கரவாத செயல்கள் என்று வரையறுக்கப்பட்ட செயல்களை அந்நாட்டில் தூண்டிவிடுவதற்காகவோ அன்று; குறிப்பாக பதிவிடுபவர் வாழும் நாடு சார்ந்து. இதை வாசிப்பதால் யாரேனும் அவ்வாறு தொழிற்படுவாராயின் அன்னாரிற்கும் பதிவுகள் மற்றும் பதிவிடுபவரிற்கும் எத்தொடர்பும் இல்லை என்பதை இதனால் உறுதியளிக்கிறேன்.    எழுதருகை: ஈழத்தமிழ் வலைத்தளங்களுக்கே உரித்தான படிமங்கள் மேல் தம் பெயரை எழுதும் மலத்திலும் கீழான செயலை செய்துவிடாதீர்கள், மலத்திலும் கீழானவர்களே. இவை உங்கள் வீட்டுச் சொத்தல்ல, தமிழீழத்தின் சொத்துக்களே!   என்னிடம் இருக்கின்ற விடுதலைப்புலிகளின் மருத்துவப்பிரிவின் நிழற்படங்கள் (Photos) & படிமங்கள் (Images) & திரைப்பிடிப்புகள் (screenshots) அத்துணையையும் இங்கே இணைத்துவிடுகிறேன். விரும்பியவர்கள் பயன்படுத்துங்கள்; சேமித்துக்கொள்ளுங்கள்.     "பதிவிடப்பட்டிருக்கும் தகவலில் சரி தவறுகள் வரவேற்கப்படுகின்றன"       இது தமிழீழ சுகாதார சேவைகளின் தியாக தீபம் திலீபன் மருத்துவ சேவையின் இலச்சினையாகும். இதிலுள்ள "தியாக தீபம் திலீபன் மருத்துவ சேவை" என்ற சொற்றொடரை நீக்குமின் இதுவே விடுதலைப் புலிகள் மருத்துவ பிரிவின் இலச்சினையாகும்        இதே போன்று இன்னும் பல ஆவணங்களைக் காண கீழே சொடுக்கவும்:  
    • அந்த நாட்டில் தீவில் எல்லாமே இறக்குமதிதான் அதிலும் கடைசி திகதிகள் முடிந்த காலாவதியான உணவுகள் இதைத்தான் புலம்பெயர் தேடி போகினமா ? கொஞ்சமாவது சிந்திந்தியுங்க ? முதலில் உண்மையான தமிழனுடன் அரசியலை பேசி முடியுங்க அதுக்காக சிங்களம் உருவாக்கி வைத்து இருக்கும் குரங்கு சுமத்திரன் போன்ற நாய்களை கதைக்க வேண்டி அனுப்ப வேண்டாம் நாடு இனி உருப்பட வேணுமா வேண்டாமா ? 
    • உப்பிடித்தான் முன்பிருந்த பலரும் கூறி, தாம் மாத்திரம் வசந்தத்தை அனுபவித்து சென்றனர்.  இலை அசைவதை வைத்து வசந்தம் என்று கூறிவிட முடியாது. அது சூறாவளியாகவும் மாறலாம், எதுவுமே வீசாமல் புழுக்கமாகவும் இருக்கலாம். அதை அனுபவித்தபின் மக்களே கூறவேண்டும்.  கூறுவார்கள். முதலில் நிதி கிடைக்கிற வழியை பாருங்கள்.   
    • பெரும்பான்மை மக்களின் மதிப்பை பெற்ற கட்சிக்கு அசௌகரியம் ஏற்படுத்தாமல் தான் (சபாநாயகர்)பதவி விலகுவதாக அறிவித்துள்ளதாக ஒரு செய்தி வந்துள்ளது. இருக்க, கலாநிதிப்பட்டம் பெற்றவர்கள்  எதை சாதித்தார்கள் கடந்த ஆட்சிகாலங்களில்? அவர்களின் தகுதியை யாராவது ஆராய்ந்தார்களா? கேள்விதான் கேட்டார்களா? முன்னாள் ஜனாதிபதி கோத்த ஜனாதிபதி பதவிக்கு தகுதியானவரா? எந்த தகுதியில் மக்கள் தெரிந்தெடுத்தார்கள்? அவர் வெளிநாட்டு குடியுரிமையை துறந்ததை உறுதிப்படுத்தாமலேயே தேர்தலில் நின்றார். அப்போ இந்த மஹிந்த தேசப்பிரிய அதை உறுதிசெய்யவில்லை சரி பாக்கவுமில்லை. நாடு எப்படி இருந்தது என்பதற்கு இன்றைய சபாநாயகரின் செயற்பாடுமொன்று. ஆனால் அவர் தான் பதவி விலகுவதாக அறிவித்து விட்டார், ஜனாதிபதியும் நடவடிக்கை எடுக்கப்படுமென கூறியுள்ளார். கூட்டம் கலைந்து செல்வதாக!
    • யாழ்ப்பாணம் 18 மணி நேரம் முன் சிறப்பாக இடம்பெற்ற நல்லூர் ஆலய கார்த்திகை குமாராலயதீப நிகழ்வு!   இந்துக்களின் விசேட பண்டிகையான கார்த்திகை விளக்கீடு தினமாகிய இன்றையதினம் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் முருக பெருமானுக்கு விசேட பூஜை வழிபாடுகள் இடம் பெற்றது. பின்னர் சொக்கப்பானை என அழைக்கப்படும் கார்த்திகை தீப நிகழ்வு நல்லூர் ஆலய முன்வளாகத்தில் இடம்பெற்றது. மாலை 4:30 மணியளவில் முருகப் பெருமானுக்கு வசந்தங மண்டப பூஜை இடம் பெற்று முருகப்பெருமான் உள் வீதி வலம் வந்து கோயில் முன்வாயிலில் சொக்கப்பானை எனப்படும் கார்த்திகை தீபம் பனை ஓலைகளால் விசேடமாக வடிவமைக்கப்பட்ட இடத்தினை எரியூட்டும் நிகழ்வு  இடம்பெற்றது. சொக்கப்பானை நிகழ்வு இடம்பெற்ற பின்னர் நல்லூர் முருக பெருமான் கைலாய வாகனத்தில் வெளிவீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார் இன்றைய சொக்கபானை நிகழ்வில் பெருமளவு முருகன் அடியவர்கள் கலந்து கொண்டனர். https://newuthayan.com/article/சிறப்பாக_இடம்பெற்ற_நல்லூர்_ஆலய_கார்த்திகை குமாராலயதீப_நிகழ்வு!
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.