Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கோட்டாவின் புத்தகத்தை படிக்கவில்லை, படிக்கும் ஆர்வமும் இல்லை - பசில்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அண்மையில் வெளியிட்ட சதித்திட்டம் தொடர்பாக வெளியிடப்பட்ட புத்தகத்தை தான் படிக்கவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) நிறுவனர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்று ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் உரையாற்றிய அவர், அப்படியொரு புத்தகம் தன் வீட்டில் இல்லை என்று கூறினார்.
கோத்தபாய தனது புத்தகத்தின் பிரதியைக் கூட என்னிடம் தரவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

கோட்டாபயவின் புத்தகத்தின் டிஜிட்டல் பதிப்பை நீங்கள் படித்தீர்களா என்று தொலைக்காட்சி தொகுப்பாளர் கேட்டதற்கு, அந்த புத்தகத்தின் டிஜிட்டல் பிரதி இதுவரை தனக்கு கிடைக்கவில்லை என்று பசில் ராஜபக்ஷ கூறினார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகப் பிரிவிடமிருந்து புத்தகத்தின் பிரதி எனக்கு கிடைக்கவில்லை என அவர் கூறினார்.
பின்னர், புத்தகத்தையும் படிக்கும் எண்ணம் இல்லை என்றார்.

“இந்தப் புத்தகத்தின் மீது எனக்கு எந்தக் கோபமும் இல்லை. ஆனால், கோட்டாபய ராஜபக்ச ஒரு புத்தகம் எழுதப் போகிறார் என்றும், அதை முழுமைப்படுத்த விவரங்கள் சேகரித்துக் கொண்டிருக்கிறார் என்றும் உத்தியோகப்பூர்வமற்ற முறையில் தெரிந்து கொண்டேன்” என்று அவர் மேலும் கூறினார்.

நாமல் கூட புத்தக கடையில் இருந்து புத்தகத்தை வாங்கியதாக பசில் ராஜபக்ச கூறினார்.

“கோட்டாபய ராஜபக்ஷவிடமிருந்து புத்தகத்தைப் பெறுவேன் என்று நான் நம்பவில்லை. எங்கள் குடும்பங்களில் தவறான புரிதல்கள் இல்லை, புத்தகத்தை எனக்கு வழங்காததில் எந்தப் பிரச்சினையும் இல்லை” என்று தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பசில் ராஜபக்ஷ கூறியுள்ளார்.

https://thinakkural.lk/article/296320

  • கருத்துக்கள உறவுகள்
Posted

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய தனது நூலை மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களுக்கு வழங்கினார்

Published By: DIGITAL DESK 3   23 MAR, 2024 | 04:10 PM

image
 

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ “ஜனாதிபதி பதவியில்‌ இருந்து என்னை வெளியேற்றியதன் சதி” என்ற தனது நூலை நேற்று (22) மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரர்களிடம் வழங்கினார்.

கோட்டாபய ராஜபக்ஷ ஸ்ரீ தலதா மாளிகைக்கு சென்று வழிபாடுகளை நிறைவேற்றிய பின்னர், தலதா மாளிகையின் தியவடன நிலமேவிடம் நூலின் பிரதியொன்றினை வழங்கியிருந்தார். அதனைத் தொடர்ந்து அன்றைய தினமே மல்வத்து விகாரைக்கு சென்று மஹாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரரின் ஆசீர்வாதத்தைப் பெற்றார்.

பின்னர், அஸ்கிரிய மகா விகாரைக்குச் சென்று நூலை வழங்கி  மகாநாயக்கர் வரகாகொட ஸ்ரீ ஞானரதனவின் ஆசீர்வாதங்களைப் பெற்ற கோட்டாபய ராஜபக்ஷ,  மகாநாயக்க தேரர்களுடன் தனிப்பட்ட கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.

https://www.virakesari.lk/article/179511



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.