Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
நேரான நீண்ட ஒரு நடைபாதை. நேர் என்றால் அடிமட்டம் வைத்து கோடு போட்ட ஒரு நேர். இரண்டு பக்கங்களிலும் அடுக்கி வைத்தது போல வீடுகள் அடுக்கடுகாக இருக்கின்றன. நான் தினமும் கடந்து நடக்கும் வீட்டு வாசல்கள்.
 
வாசல்கள் அதன் உள்ளிருக்கும் வீடுகளை மறைத்து வைத்திருப்பது போல, முகங்களும் அகங்களை பெரும்பாலும் மறைத்து வைத்து இருக்கின்றனவோ என்று தோன்றும்.
 
அகத்தின் அழகோ அல்லது சிக்கல்களோ முகத்தில் அவ்வளவாக வெளிப்படுவதில்லை. தேடித்தான் கண்டறிய வேண்டியிருக்கின்றது.   
 
*****
 

வாசலும் வீடும்

-----------------------
வாசல்கள் 
அழகானவை 
ஒழுங்கானவை 
நேர்த்தியாக அடுக்கப்பட்டவை
 
வாசல்களின்
உள்ளிருக்கும் வீடுகள் 
உள்ளே 
தலைகீழாக
எவ்வளவு 
புரட்டிப் போடப்பட்டிருந்தாலும்
 
பூந்தொட்டிகள் 
தொங்கும் செடிகள்
கஞ்சல்கள் இல்லாத கால்மிதிகள் 
வாசலில்
 
அவசரத்தில் பார்த்தால் 
அநேக வாசல்களும் அழகே
 
நிதானத்தில் பார்த்தால் 
பல வாசல்களும் ஒன்றே என்றும்
எல்லாமே ஒரு ஒப்பனையோ என்றும் தோன்றும் 
 
வெகுசில வாசல்கள் 
பயத்தை தருகின்றன
 
தனித்தவர்களும் துணிந்தவர்களும்
அதன் 
உள்ளே வாழ்கின்றனர்
 
எப்போதும்
கரப்பான் மருந்துகள் 
வைக்கப்பட்டிருக்கும் வாசல்கள்
 
வேரோடி வெடித்து
கவனம் இன்றி
கைவிடப்பட்ட  
சில வாசல்கள்
 
ஒரு வாசலில் மண்டையோடும் இருந்தது
 
இன்னொன்று 
அகலிகையுடன் கல்லாகி 
இன்று வரை
உயிர் கொடுக்கப் போகும்
ஒருவருக்காக காத்துக் கிடக்கின்றது
 
வாசல் தாண்டி
 
வீடுகளுக்குள் 
மனிதர்கள் வருகின்றனர் போகின்றனர் 
வாழ்கின்றனர் பிரிகின்றனர் 
 
குப்பை ஆகின்றன வீடுகள்.
  • Like 7
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 minutes ago, ஈழப்பிரியன் said:

என்ன ரசோதரன்

வீட்டில கரப்பான் தொல்லை தாங்க முடியலையோ?

🤣🤣.....

 
இப்ப அந்த தொல்லை இல்லை. ஆனால் பழைய கதை ஒன்று இருக்கின்றது. அன்று என்னுடைய துணை வீட்டைக் கொளுத்தாமல்  விட்டது தெய்வாதீனம்  தான்........😀
 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, ரசோதரன் said:

🤣🤣.....

 
இப்ப அந்த தொல்லை இல்லை. ஆனால் பழைய கதை ஒன்று இருக்கின்றது. அன்று என்னுடைய துணை வீட்டைக் கொளுத்தாமல்  விட்டது தெய்வாதீனம்  தான்........😀
 
 

அடுக்கு மாடிகளில் இருந்த போது ரொம்பவும் தொல்லை தந்தது.

கரப்பான் சாப்பிட்டு மிச்சம் தான் நாங்க சாப்பிடலாம் என்ன மாதிரி இருந்தது.

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 வீட்டுக்கு வீடு வாசல் படி என்பது போல இந்த ஜந்து வந்தால் தொலையாது. உணவில்லாமல் ஆறுமாதங்களுக்குக்கூட சீவிக்குமாம். சுத்தம் அவசியம். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கரப்பான் பூச்சித் தொல்லைக்கு பூச்சிப் போளை வாங்கிப் போடுங்கள் இனிமேல் வர மாட்டார்கள்..
ஏன் அதிகம் எலி மற்றும் பூச்சிகள் எல்லாம் வரக் காரணம் என்ன.....? சரி அதை விடுங்கள்...சில வாடகைக் குடியிருப்புக்களில் இவர்களின் தொல்லை அதிகம் தான்...நான் ஒண்டைக் கண்டாலே வீட்டில் ஆங்காங்கே போட்டு விடுவேன்..இப்போ பூச்சி தொல்லை இல்லை..✍️

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 minutes ago, யாயினி said:

கரப்பான் பூச்சித் தொல்லைக்கு பூச்சிப் போளை வாங்கிப் போடுங்கள் இனிமேல் வர மாட்டார்கள்..
ஏன் அதிகம் எலி மற்றும் பூச்சிகள் எல்லாம் வரக் காரணம் என்ன.....? சரி அதை விடுங்கள்...சில வாடகைக் குடியிருப்புக்களில் இவர்களின் தொல்லை அதிகம் தான்...நான் ஒண்டைக் கண்டாலே வீட்டில் ஆங்காங்கே போட்டு விடுவேன்..இப்போ பூச்சி தொல்லை இல்லை..✍️

நான் இருக்கும் தென் கலிபோர்னியா கடற்கரைக்கு அண்மித்த பகுதியில் காலநிலை மிதமானது, கொஞ்சம் வறட்சியானது, குளிர் ஒப்பீட்டளவில் மிகக் குறைவு. இங்கு எல்லா விதமான உயிரினங்களும் வருடம் முழுவதும் எங்களுடன் சேர்ந்து வாழும்.
 
புதிதாக ஏதும் ஒன்று வந்தால், அதற்கு சைனீஸ் என்ற அடைமொழி கிடைக்கும். ஒரு தடவை நுளம்பு வகை ஒன்று புதிதாக இங்கு வந்தது, அதை 'சைனீஸ் நுளம்பு' என்று இங்கு அழைத்தனர். இது தண்ணீர் இல்லாமலேயே வாழும், முட்டைகள் போடும், குஞ்சுகள் பொரிக்கும்!!
 
கோவிட் வைரஸிற்கு சைனீஸ் வைரஸ் என்று பெயர் சூட்டியது போல.
  • Like 1

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.