Jump to content

கோட்டாவின் வீட்டை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டபோது ரணில் விக்கிரமசிங்கவும் கோட்டாவின் வீட்டில் இருந்தார்! - முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
17 MAR, 2024 | 01:10 PM
image

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகல் தவறானது என அவரது முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார தெரிவித்துள்ளார்.

தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் அவர் இதனை கூறியுள்ளார்.

அரச எதிர்ப்புப் போராட்டங்களின்போது புலனாய்வுப் பிரிவினர் தமது கடமைகளை சரியாக செய்யவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இதனால், ஒட்டுமொத்த பாதுகாப்புத்துறையும் வீழ்ச்சியடைந்துள்ளது என்று அவர் வலியுறுத்தினார்.

முன்னாள் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட  மிக நெருக்கமான அதிகாரிகள் பலர் தமது பொறுப்புக்களை புறக்கணித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

2022ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் திகதி மிரிஹானவில் உள்ள கோட்டாபய ராஜபக்ஷவின் வீட்டை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டபோது தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் கோட்டாபய வீட்டில் இருந்தார்.   

இதன்போது அவர்கள் இருவருக்கும் இடையில்  தனிப்பட்ட கலந்துரையாடல் இடம்பெற்றது.

வீட்டினருகே போராட்டம் நடத்த சுமார் 150 பேர் வருவார்கள் என உளவுத்துறையினர் தகவல்  வழங்கியிருந்தனர். ஆனால், அங்கு வந்தவர்களின் எண்ணிக்கை 2,500 பேருக்கு மேல் இருக்கும். பேராட்டக்காரர்களை  கட்டுப்படுத்த கலவரத் தடுப்புப் பிரிவினரை  அழைப்பதிலும் தாமதம் ஏற்பட்டது.

ஆர்ப்பாட்டக்காரர்களை வெளியேற்றுவதற்கு பாதுகாப்புப் படையினர் அரை மணித்தியாலம் தாமதித்திருந்தால் கோட்டாபய ராஜபக்ஷவைக் கொல்ல திட்டமிட்டிருப்பார்கள் என்று அவர் வெளிப்படுத்தினார்.

முஸ்லிம் சமூகத்தினரே இந்த ஆர்ப்பாட்டத்துக்கு  தலைமை தாங்கியதாகவும் கோட்டாபய ராஜபக்ஷவை பதவியில் இருந்து நீக்கியதன் பின்னணியில் கத்தோலிக்க திருச்சபை, முஸ்லிம் சமூகம் மற்றும் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் இருப்பதாகவும், சிங்கள பௌத்த சக்திகள் அவர்களில் இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/178937

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முழுத் இனத்துவேசிகளை தான் கோத்தா அந்தரங்கச் செயலாளராக வைச்சிருந்திருக்கிறார் என்பதற்கு இவர் சாட்சி. 

Link to comment
Share on other sites

1 hour ago, ஏராளன் said:

முஸ்லிம் சமூகத்தினரே இந்த ஆர்ப்பாட்டத்துக்கு  தலைமை தாங்கியதாகவும் கோட்டாபய ராஜபக்ஷவை பதவியில் இருந்து நீக்கியதன் பின்னணியில் கத்தோலிக்க திருச்சபை, முஸ்லிம் சமூகம் மற்றும் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் இருப்பதாகவும், சிங்கள பௌத்த சக்திகள் அவர்களில் இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பெளத்த வாக்குகளை பெற எப்படியெல்லாம் கஸ்டப்பட வேண்டியுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவும்  கோட்டபாயவும் அவரின் கும்பலும் முழுக்க முழுக்க கடும் போக்கு  இனவாதிகளாகவே பதவிக்கு வரமுதல் இருந்தே இருந்துள்ளார்கள் என்பது ஏற்கனவே அனைவருக்கும் தெரிந்த விடயம்தான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் வரவேற்க வேண்டிய பேச்சு. இனத்துவேசத்தின் உச்சம் 

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.