Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
19 MAR, 2024 | 11:21 AM
image
 

வெடுக்குநாறிமலை வழக்கில் கைது செய்யப்பட்ட எட்டுப்பேரும் நீதிமன்றால் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.

வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கடந்த சிவராத்திரி தினத்தன்று  கைதுசெய்யப்பட்ட ஆலயபூசகர் உள்ளிட்ட 8 பேரையும் இன்று செவ்வாய்க்கிழமை  (19) வரை விளக்கமறியலில் வைக்க வவுனியா நீதிமன்று  உத்தரவு பிறப்பித்தது.

இதனையடுத்து அவர்கள் வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் அது தொடர்பான வழக்கு இன்றையதினம் நீதிமன்றில் மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது குறித்த 8 பேரையும் வழக்கிலிருந்து விடுதலை செய்த நீதிபதி வழக்கினையும் தள்ளுபடிசெய்தார். 

குறித்த வழக்கில் ஆலயநிர்வாகம் சார்பாக சிரேஸ்ட சட்டத்தரணிகளான என்.சிறிகாந்தா, அன்ரன் புனிதநாயகம்,  அருள், க.சுகாஸ், தலைமையில் பல சட்டத்தரணிகள் முன்னிலையாகியிருந்தனர்.

IMG_20240319_103401.jpg

 

IMG_20240319_104156.jpg

https://www.virakesari.lk/article/179099

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பா. மன்றின் நடுவில் 8 பேரின் விடுதலை வேண்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெடுக்குநாறிமலை கைது விவகாரம் - பாராளுமன்றத்தில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்

19 MAR, 2024 | 04:52 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

வெடுக்குநாறி ஆதிலிங்கேஷ்வரர் ஆலயத்தின் சிவராத்திரி தினத்தன்று கைது செய்யப்பட்ட 08 பேரை விடுவிக்குமாறு வலியுறுத்தி  வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் பிரதிநிதிகள் சபை நடுவில் வந்து ' வெடுக்குநாறி,மாதவனை, குருந்தூர்  எங்கள் சொத்து' என்று உரத்த குரலில் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச  சபை நடுவில் வந்து 'நாட்டின் மத சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். தமிழ் பிரதிநிதிகளின் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து உடன் விசாரணைகளை முன்னெடுங்கள் ' என்று வலியுறுத்தினார். இந்த கவனயீர்ப்பு போராட்டத்தினால் சபையில் அமளி துமளி  ஏற்பட்டது.

நீதிமன்ற விசாரணைக்கு இடம்பெற்றுள்ள விடயத்துக்கு பாராளுமன்றத்தின் ஊடாக தீர்வு காண முடியாது. 08 பேர் கைது செய்யப்பட்ட விதம் முறையற்றதாயின் அது தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிப்பதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ சபைக்கு உறுதியளித்தார்.

பாராளுமன்ற அமர்வு   செவ்வாய்க்கிழமை பிரதி சபாநாயகர்  அஜித் ராஜபக்ஷ தலைமையில் கூடிய போது  தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன் இராசமாணிக்கம், செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன், வினோநோதராதலிங்கம், எஸ். சிறிதரன் ஆகியோரும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களான  வேலுகுமார், உதயகுமார், இராதாகிருஸ்ணன், நளின் பண்டார ஆகியோர் 'பொலிஸ் அராஜகம் ஒழிக, அமைச்சர்  விதுர விக்கிரமநாயக்க பதவி விலக வேண்டும். வெடுக்குநாறி எங்கள் சொத்து, மாதவனை எங்கள் சொத்து, பொய் வழக்கை வாபஸ் பெறு, அப்பாவிகளை விடுதலை செய், குருந்தூர் மலை எங்கள்  சொத்து என கோசங்களை எழுப்பியவாறு சபை நடுவில் வந்து எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபை நடுவில் வந்து தமிழ் பிரதிநிதிகளுடன் போராட்டத்தில் கலந்துக் கொண்டார். அத்துடன் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களும் இந்த போராட்டத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர். ஆளும் கட்சியின் ஒருசில உறுப்பினர்களும், பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும்  விமல் வீரவன்ச இது இனவாத செயற்பாடு ஆகவே இதற்கு இடமளிக்க வேண்டாம் என இந்த போராட்டத்துக்கு எதிராக  உரையாற்றினார்.

இதன்போது சபைக்கு தலைமை தாங்கிய  பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ 'உங்களின் எதிர்ப்புக்களை வெளிப்படுத்தி விட்டு ஆசனங்களுக்கு செல்லுங்கள்' என்று  குறிப்பிட்டு விட்டு  சபை நடவடிக்கைகளை முன்னெடுத்தார்.

இதன்போது ஒழுங்கு பிரச்சினையை முன்வைத்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ' வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் பிரதிநிகள் பாரதூரமான பிரச்சினைகளை முன்வைத்து சபையில் தமது எதிர்ப்பை வெளிப்படுத்துகிறார்கள். ஆகவே அவர்களின் கருத்துக்களுக்கு செவிசாய்த்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுங்கள் ' என்றார்.

சபைக்கு தலைமை தாங்கிய பிரதி சபாநாயகர் 'சபை நடுவில் எதிர்ப்பு தெரிவித்த வண்ணம் இருந்த தமிழ் பிரதிநிதிகளை நோக்கி உங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தி விட்டு தயவு செய்து ஆசனங்களுக்கு செல்லுங்கள். நீங்கள் முன்வைக்கும் காரணிகள் பொறுப்பான தரப்பினருக்கு அறிவிக்கப்படும்' என்று அறிவித்து விட்டு சபை நடவடிக்கைகளை முன்னெடுத்தார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய எதிர்க்கட்சிகளின்  பிரதம கொறடாவான லக்ஷமன் கிரியெல்ல 'கோயிலில் வணங்கிக் கொண்டிருக்கும் போது சிவில் மக்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இது முற்றிலும் தவறு' என்றார்.

சபைக்கு நடுவில் இருந்து எதிர்ப்பு தெரிவித்த தமிழ் பிரதிநிதிகள் 'தொல்பொருள் அமைச்சர் உடன் பதவி விலக வேண்டும். வெடுக்குநாறி எங்கள் சொத்து, மாதவனை எங்கள் சொத்து, குருந்தூர் எங்கள் சொத்து' என உரத்த குரலில் தமது கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள்.

மீண்டும் எழுந்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் 'மத சுதந்திரம் இந்த நாட்டின் அடிப்படை மனித உரிமைகளில் ஒன்றாகும். கோயிலுக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டவர்களை கைது செய்ய அதிகாரம் இல்லை. ஆகவே உடனடியாக நடவடிக்கை எடுங்கள், மத சுதந்திரம் வடக்குக்கும், தெற்குக்கும் ஒன்றாக காணப்பட வேண்டும் என்றார்.

இதன்போது உரையாற்றிக் கொண்டிருந்த அரசாங்க நிதி தொடர்பான குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா' தயவு செய்து சபையை கட்டுப்படுத்துங்கள்' என்றார்.

சபைக்கு தலைமை தாங்கிய பிரதி சபாநாயகர் 'அவர்கள் ஆசனங்களுக்கு செல்லாவிட்டால் நாங்கள் என்ன செய்வது' என்றார். தமிழ் பிரதிநிதிகள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் பிரதி சபாநாயகர் சபை நடவடிக்கைகளை முன்னெடுத்தார்.

இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபை நடுவில் வந்து தமிழ் பிரதிநிதிகளின் மத்தியில் நின்று 'பிரதி சபாநாயகர் அவர்களே தயவு செய்து இவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளியுங்கள்.மத உரிமை மறுக்கப்பட்டுள்ளதை இவர்கள் வெளிப்படுத்துகிறார்கள். நீங்கள் பதிலளியுங்கள் என்றார்.

சபைக்கு தலைமை தாங்கிய பிரதிசபாநாயகர் ' சபை நடுவில் வந்து போராட்டத்தில் ஈடுபடுவதால் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காது.இவர்கள் முன்வைத்த விடயத்தை உரிய தரப்பினருக்கு அறிவிப்பதாக நான் குறிப்பிட்டேன்.அதனை கருத்திற் கொள்ளாமல் போராட்டத்தில் ஈடுபட்டால் என்ன செய்வது' என்றார்.

பொலிஸ்மா அதிபரை பாராளுமன்றத்துக்கு அழைத்து விசாரணை செய்யுங்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார். இதற்கு பதிலளித்த சபைக்கு தலைமை தாங்கிய  பிரதி சபாநாயகர் நீங்கள் குறிப்பிடுவதை போன்று பொலிஸ்மா அதிபரை அழைக்க முடியாது. நான் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கிறேன் என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய ஆளும் தரப்பின் பிரதம கொறடாவான பிரசன்ன ரணதுங்க 'வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் பிரதிநிதிகளுக்கு பிரச்சினைகளுக்கு காணப்படுமாக இருந்தால் அவர்கள் ஆசனங்கள் இருந்தவாறு அவற்றை குறிப்பிடலாம். எதிர்க்கட்சித் தலைவர் இவர்களுடன் ஒன்றிணைந்து 'சோ' காட்டுகிறார். இவ்வாறான செயற்பாடுகளுக்கு இடமளிக்க வேண்டாம் என்றார்.

சபைக்கு தலைமை தாங்கிய பிரதி சபாநாயகர் 'பெரும்பாலானோர் 'சோ'தான் காட்டுகிறார்கள் என்றார். தமிழ் பிரதிநிதிகள்  சபை நடுவில் இருந்தவாறு  தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருந்தார்கள்.

இதன்போது எழுந்து உரையாற்றிய பிரதமர் தினேஷ' குணவர்தன 'சாணக்கியன் அவர்களே தயவு செய்து ஆசனத்துக்கு செல்லுங்கள். இவர்களின் பிரச்சினைகள் பற்றி பேசுவதற்கு நாங்கள் எதர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆகவே ஆசனங்களுக்கு சென்று பிரச்சினைகளை குறிப்பிடுங்கள். சட்டத்தின் பிரகாரம் உரிய  நடவடிக்கைகளை எடுக்கலாம் என்றார்.

 இதனை தொடர்ந்து சபை நடுவில் போராட்டத்தில்   ஈடுபட்டிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன்  ஆசனத்துக்கு சென்று ஒழுங்கு பிரச்சினையை முன்வைத்து' கடந்த 08 ஆம் திகதி சிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறி மலையில் மத  வழிபாட்டில் ஈடுபட்டவர்கள் தொல்பொருள் சின்னங்களுக்கு சேதம் விழைவித்ததாக பொய் குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்கள்.ஆகவே  08 பேரையும் விடுவிக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கை என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய  நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ '08 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.இந்த விவகாரம் நீதிமன்ற விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.முறையற்ற வகையில் கைதுகள் இடம்பெற்றிருந்தால் அது குறித்து பக்கச்சார்பற்ற வகையில் விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்றத்துக்கு அறிவிக்க முடியும்.அதனை தொடர்ந்து நீதிமன்றம் தீர்மானம் எடுக்கும்.கைது செய்யப்பட்டுள்ளவர்களை பாராளுமன்றத்தால் விடுவிக்க முடியாது.ஆகவே இந்த விவகாரம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்படும் ' என்றார்.

இதன்போது மீண்டும் எழுந்து உரையாற்றிய  தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்லஸ் நிர்மலநாதன் ' நீதியமைச்சரே நான் குறிப்பிடுவதை கேளுங்கள் தொல்பொருள் திணைக்களம் பொய் வழக்கு தாக்கல் செய்துள்ளது.

இதன்போது எழுந்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர்  சஜித் பிரேமதாச' நீதியமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.இந்த நாட்டில் மத சுதந்திரம் உள்ளது.இது அடிப்படை உரிமை.மத தலங்களுக்கு சென்று வழிபட அனைவருக்கும் சுதந்திரம் உண்டு.225 உறுப்பினர்களும் மத சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும்.ஆகவே இந்த சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு நீதியமைச்சரிடம் கேட்டுக் கொள்கிறேன்' என்றார்.

 ஒழுங்கு பிரச்சினையை முன்வைத்த  தமிழ் தேசிய கூட்டமைப்பின்  பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் 'தொல்பொருள் திணைக்களத்தின் அடாவடித்தனத்தால் தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.முறையான விசாரணைக்கு பின்னர்  அவர்களை விடுதலை செய்ய முடியும்  என்று நீதியமைச்சர் குறிப்பிடுகிறார்.ஆனால் குருந்தூர் மலை விவகாரத்தில் ஒருசில பௌத்த பிக்குகளுக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.தமிழர்களுக்கு ஒரு நீதி,சிங்களவர்களுக்கு பிறிதொரு நீதி இதுவே இந்த நாட்டின் அடிப்படை பிரச்சினை என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய  நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, 'தொல்பொருள் கட்டளைச்சட்டம் தொடர்பில் பொதுவான பிரச்சினைகள் காணப்படுகின்றன.மத தலங்கள் உள்ள பெரும்பாலான இடங்கள் தொல்பொருள் பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.அதில் பௌத்த விகாரைகள் பெருமளவில் காணப்படுகின்றன.தொல்பொருள் திணைக்களத்தினால் பௌத்த பிக்குகளும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

தொல்பொருள் சட்டத்தின் ஊடாக கைது செய்யப்பட்டவர்களுக்கு பிணை வழங்கும் அதிகாரம் நீதவான் நீதிமன்றங்களுக்கு கிடையாது.ஆகவே இவ்விடயம் தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம்.தொல்பொருள் சட்டத்தில் உள்ள குறைப்பாடுகளுக்கு தீர்வு காணும் வகையில் திருத்தங்களை முன்வைக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.ஆகவே தொல்பொருள் சட்டத்தின் குறைப்பாடுகளை  ஒரு இனத்துக்கு மாத்திரம் வரையறுக்க வேண்டாம் என்றார்.

இதனை தொடர்ந்து சபைக்கு தலைமை தாங்கிய பிரதி சபாநாயகர் அஜித்  ராஜபக்ஷ ' இந்த சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்று விடயதானத்துக்கு பொறுப்பான அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.பாராளுமன்றத்தின் ஊடாகவும் உரிய கவனம் செலுத்தப்படும் ' என்று சபைக்கு அறிவித்தார்.

https://www.virakesari.lk/article/179098

  • கருத்துக்கள உறவுகள்

ஆயுதத்துக்கு உள்ள மரியாதை வேறு எதற்கும் இல்லை போல. தொல் பொருள் திணைக்களம் எனும் பெயரில் சனங்கள் கண்களுக்குள் விரலை விட்டு இந்த ஆட்டு ஆட்டுறாங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நியாயம் said:

ஆயுதத்துக்கு உள்ள மரியாதை வேறு எதற்கும் இல்லை போல. தொல் பொருள் திணைக்களம் எனும் பெயரில் சனங்கள் கண்களுக்குள் விரலை விட்டு இந்த ஆட்டு ஆட்டுறாங்கள். 

ஆயுதமற்ற‌ கலாச்சாத்தை எமது மக்களுக்கு உபதேசம் பண்ணுவதறகு நாங்கள் பந்தி பந்தியாக எழுதும் பொழுது .....நீங்கள் ஆயுத கலாச்சரத்தை தூண்டும் வகையில் ஒற்றை வரியில் கருத்து எழுதுவதை வன்மையாக கண்டிக்கிறோம்😃

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிவராத்திரி தினத்தில் கைது செய்த தமிழர்கள் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்கத் தவறிய பொலிஸார்

20 MAR, 2024 | 03:26 PM
image

நீதிமன்ற உத்தரவை மீறி, சமய வழிபாடுகளை நடத்தியதாக குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட எட்டு தமிழ் சைவர்கள் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க பொலிஸாரிடம் போதிய ஆதாரம் இன்மையால், நீதிமன்றத்தால் அவர்கள் விடுவிக்கப்பட்டதோடு, வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

பொலிஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யத் தவறியதால், இராசரத்தினம் விநாயகமூர்த்தி (30), சுப்பிரமணியம் தவபாலசிங்கம் (35), துரைராசா தமிழ்ச்செல்வன் (28), மகேந்திரன் நரேந்திரன் (29), சிவம் லக்ஷான் (28), கந்தசாமி கௌரிகாந்தன் (24), திலகநாதன் கிந்துயன் (28) மற்றும் ஆலய பூசாரி தம்பிராசா மதிமுகராசா (45) ஆகியோரை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

சந்தேகநபர்கள் விடுவிக்கப்பட்டாலும் அநீதிக்கு எதிரான தமது போராட்டம் தொடரும் என சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஷ் நேற்று (மார்ச் 19) வவுனியா மாவட்ட நீதிமன்றத்திற்கு முன்பாக ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

“இன்று குற்றப்பத்திரிகையை முன்வைக்க வேண்டிய பொலிசார் முன்வைக்காத காரணத்தினால், நீதிமன்றத்தில் நாங்கள் காரசாரமான வாதங்களை முன்வைத்தோம். ஏற்கனவே சந்தேகநபர்களை கைது செய்து முறைப்பபாட்டை தேடிய பொலிஸார் தற்போது குற்றத்தை தேடிக் கொண்டிருக்கின்றனர். ஆகவே இதுவொரு அடிப்படையற்ற வழக்காக காணப்படுகின்ற காரணத்தினால், அவர்களை வழக்கிலிருந்து விடுவிக்குமாறு கேட்டிருந்தோம்.  எங்கள் கோரிக்கை ஏற்கப்பட்டு வழக்கில் இருந்து சந்தேகநபர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். அநீதிக்கு எதிரான எங்களது போராட்டம் தொடரும்.”

வவுனியா மாவட்டம் நெடுங்கேணி பிரதேசத்தில் உள்ள வெடுக்குநாரிமலையில் அமைந்துள்ள ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தில் கடந்த மார்ச் 8ஆம் திகதி இரவு சிவராத்திரி தின வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த எட்டு தமிழர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் தொல்லியல் சட்டத்திற்கு அமைய, மாலை 6 மணிக்கு மேல் அப்பகுதியில் பூஜை வழிபாடுகளில் ஈடுபட முடியாது எனத் தெரிவித்த பொலிஸார், அவர்கள் அறிவுறுத்தல்களை மதிக்கவில்லை எனக் குற்றம் சாட்டி கைது செய்தனர்.

சிறையில் அடைக்கப்பட்ட எட்டு பேரையும் உடனடியாக விடுவிக்கக் கோரி வடக்கு மற்றும் கிழக்கில் பல இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், எட்டு சைவர்களையும் பொய்க் குற்றச்சாட்டில் கைது செய்த பொலிஸார், நீதிமன்றத்தையும் தவறாக வழிநடத்தியுள்ளதாக குற்றம் சுமத்தியிருந்தனர்.

பூஜை வழிபாடுகளின்போது நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட பலர் தாக்கப்பட்டதைக் காட்டும் காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியிருந்தன.

எட்டு சைவ பக்தர்களையும் விடுவிக்கக் கோரி, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் நேற்று (மார்ச் 19) நாடாளுமன்றத்தில் போராட்டம் ஒன்றை நடத்தியதுடள், எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவும் அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவளித்திருந்தார்.

வெடுக்குநாரிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் என வட மாகாணத்திலுள்ள தமிழ் மக்கள் அழைக்கும் இத்தலம் வட்டமண கல் விகாரை  என அழைக்கப்படுவதாக சிங்கள பௌத்தர்கள் மத்தியில் ஒரு கருத்து நிலவுகிறது.

https://www.virakesari.lk/article/179236

  • கருத்துக்கள உறவுகள்

வெடுக்குநாறிமலை – கைதானவர்களை விடுவித்த நீதிபதிக்கு மிரட்டல்!

adminMarch 21, 2024

வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய சிவராத்திரிதின நிகழ்வு தொடர்பில் காவற்துறையினரால் அராஜகமான முறையில் கைது செய்யப்பட்ட 8 பேரையும் விடுதலை செய்த வவுனியா நீதிமன்ற நீதவானுக்கு சிங்கள முக நூல் (பேஸ்புக்) ஒன்றில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுபிபினர்  எஸ். ஸ்ரீதரன் சபையின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

நாடாளுமன்றத்தில் புதன்கிழமை (20.03.24) இடம்பெற்ற சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான 2 ஆம் நாள் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்விடயத்தை சபையின் கவனத்திற்கு கொண்டு வந்த சிறிதரன்,,

வெட்டுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய சிவராத்திரிதின நிகழ்வு தொடர்பில் காவற்துறையினரால் அராஜகமான முறையில் கைது செய்யப்பட்ட 8 பேரும் வவுனியா நீதிமன்ற நீதியரசரால் விடுதலை செய்யப்பட்ட பின்னர் ”வடக்கு எமது உரிமை ”எனவும் பெயரில் உள்ள சிங்கள முக நூல் பக்கத்தில் இந்த 8 பேரையும் விடுதலை செய்த நீதியரசரின் பெயரைக்குறிப்பிட்டு விரைவில் அவர் குருந்தூர் மலை விவகாரத்தில் தீர்ப்பு வழங்கியவர் நாட்டை விட்டு தப்பியோடியது போன்று தப்பியோடுவார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நீதியாக வழங்கப்படும் தீர்ப்பைக்கூட சிங்கள பேரினவாதத்தால் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது என்பதைத்தான் இந்த சிங்கள முக நூல் செய்தி மிகவும் வெளிப்படையாக குறிப்பிடுகின்றது.

இந்த நாட்டில் அடிக்கடி நல்லிணக்கம் பற்றி பேசுகின்றவர்கள் வெட்டுக்குநாறிமலையில் நடந்த காவற்துறை அராஜகம் பற்றி கருத்தில் கொள்ளுங்கள் .தான் விரும்பும் மதத்தை வணங்கமுடியாத நாட்டில் எப்படி உங்களினால் நல்லிணக்கம்பற்றி வாய் கிழிய கத்த முடியும்?நல்லிணக்கம் என்பது பேச்சளவில் மட்டும் இருப்பதல்ல. ஓர் இன மக்களை அனுசரித்தது நடப்பதில்தான் அது உள்ளது. எனவே வெட்டுக்குநாறி மலையில் இந்து மக்கள் வழிபட எந்த தடையும் இனிமேல் இருக்கக்கூடாது.

இந்தப்பிரச்சினைக்கு முழுமையான காரணம் தொல்பொருள்துறைக்கு அமைச்சராக இருக்கின்ற விதுர விக்கிரமநாயக்கதான்.அவர் ஒரு நேர்மையாக , கள்ளம் கபடமற்று இதயசுத்தியோடு செயற்படுவாரேயானால் , இனங்களை மதித்து செயற்படுவாரேயானால் இந்த நாட்டில் இவ்வளவு பிரச்சினைகள் வந்திருக்க நியாயமில்லை .

வெட்டுக்குநாறிமலையில் தொல்லியல் திணைக்களமும் காவற்துறையினரும் அராஜகமாக நடந்து கொண்ட முறை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இந்தியப்பிரதமர் நரேந்திரமோடிக்கும் தான் எழுதிய கடிதத்தின் பிரதியையும் இந்த சபையில் சமர்ப்பிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

 

https://globaltamilnews.net/2024/201292/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.