Jump to content

மட்டக்களப்பின் இடம்பெற்ற வீதி விபத்தில் பிரபல சிவில் சமூக செயற்பாட்டாளர் பலி!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
22 MAR, 2024 | 07:05 AM
image
 

மட்டக்களப்பில் பிரபல சிவில் சமூக செயற்பாட்டாளரான சிறிபாலு வியாழக்கிழமை (21) செங்கலடி பதுளை வீதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் சிக்கி பலியாகியுள்ளார்.

செங்கலடி, கொம்மாதுறை பகுதியைச் சேர்ந்த சிவில் செயற்பாட்டாளரான தம்பிநாயகம் சிறிபாலு வயது (54) எனும் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

மட்டக்களப்பு,  கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கலடி -  பதுளை வீதியில் புலையவெளி என்ற இடத்தில் இடம்பெற்ற வாகன விபத்திலேயே இவர் பலியாகியுள்ளார் .

இவர் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்களுக்காக நடைபெற்ற போராட்டங்கள் முதல் கொண்டு பல சிவில் சமூக செயற்பாடுகளில் ஈடுபட்டவர் என்பதோடு மட்டக்களப்பு மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களிலும் பணியாற்றி வருகிறார்.

கரடியனாறு பகுதியில் இருந்து பதுளை வீதி வழியாக செங்கலடி நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தபோது வீதி ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கனரக வாகனமொன்றுடன் மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மோதிய போது ஏற்பட்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.நசீர் சடலத்தை பார்வையிட்டு விசாரணை நடாத்தியதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மட்டக்களப்பின் இடம்பெற்ற வீதி விபத்தில் பிரபல சிவில் சமூக செயற்பாட்டாளர் பலி! | Virakesari.lk

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி எத்தனை இழப்புக்கள்...ஆத்மா சாந்தியடைக..

  • Sad 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நானும் வாட்ஸப்பில் இப்போது பார்த்தேன்..  கட்டடத்தை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும் சரவணபவான், அதைத் கேட்ட ஆறு திருமுகன் மேல் சேறு பூச உதயனில் செய்தி போட்டிருக்கின்றார் என்கின்றார்கள். ஊடக அடியாட்களின் வேலையா என்பதைத் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்
    • இல்லை! @புலவர் ஐயாவின் கட்சிக்காரர்கள் வென்றுவிட்டார்கள். மூன்றாவதாகத்தான் கிருஷ்ணி வந்தார்!  
    • ச‌ம்ப‌ந்த‌ர்  த‌மிழ‌ர்க‌ளுக்கு தேவை இல்லா ஆணி................யாழ்ப்பாண‌த்து இள‌ம் யூடுப்ப‌ர்க‌ள் கூட‌ இவ‌ரின் இறுதி ச‌ட‌ங்கை நேர‌டி ஒளிப‌ர‌ப்பு செய்ய‌ வில்லை.................யாரும் இவ‌ருக்காக‌ க‌ண் க‌ல‌ங்க‌ வில்லை சுவை அண்ணா...................ஊர் பேர் தெரியாம‌ இருந்த‌ சும‌த்திர‌ன‌ சூழ்ச்சி முறையில் அர‌சிய‌லுக்கு கொண்டு வ‌ந்து வெல்ல‌ வைச்ச‌ க‌போதி தான் இந்த‌ ச‌ம்ப‌ந்த‌ர்    தானும் த‌ன்ர‌ குடும்ப‌மும் உல்லாச‌மாய் இருக்க‌ ச‌ம்ப‌ந்த‌ர்  எந்த‌ எல்லைக்கும் போய் சிங்க‌ள‌வ‌னுக்கு ந‌ல்லா முட்டு கொடுப்பார்...................ச‌ம்ப‌ந்த‌ர்  முக‌மூடி போடாத‌ லக்சுமன் கதிர்காமர்................அது தான் எம் இன‌த்தை அழித்த‌ ம‌கிந்தா ச‌ம்ம‌ந்த‌னின் இறுதி ச‌ட‌ங்கில் க‌ல‌ந்து கொண்டு இருந்தான்..................இவ‌ருக்கு ஓட்டு போட்ட‌ ம‌க்க‌ள் கூட‌ இவ‌ரின் இழ‌ப்பை நினைசு க‌வ‌லைப் ப‌ட்டு இருக்க‌ மாட்டின‌ம்.................2002ம் ஆண்டு த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் தான் பெரும்பாலான‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு ச‌ம்ம‌ந்த‌னை அறிமுக‌ம் செய்து வைச்ச‌வ‌ர்........................2009 போரால் பாதிக்க‌ ப‌ட்ட‌ ம‌க்க‌ளுக்கு இவ‌ர் ஏதும் ந‌ல்ல‌து செய்த‌வ‌ரா........................   குடும்ப‌த்துட‌ன் உல்லாச‌மாய் வாழ்ந்து குடும்ப‌த்துக்கு சொத்து சேர்த்து வைத்து விட்டு போய் சேர்ந்து விட்டார்........................   இவ‌ர் ஒன்றும் த‌மிழ்செல்வ‌ன் அண்ணா . யோசப் பரராஜசிங்கம் ஜயா கிடையாது................யாரோ ஒருத‌ர் இற‌ந்து போய் விட்டார் என்ர‌ நிலையில் தான் ச‌ம்ப‌ந்த‌ரின் இற‌ப்பு .....................................
    • நாங்கள்... சாந்தன், சம்பந்தனின் செத்த வீட்டுக்கு வந்த சனத்தைப் பற்றிக் கதைக்க, நீங்கள் கில்மிசாவின் களியாட்ட நிகழ்ச்சியை பற்றி கதைக்கின்றீர்கள்.  அப்படி என்றால்... தமன்னாவுக்கு வந்த ஆட்களையும்  ஒப்பிட்டு  பார்க்க வேண்டியதுதானே.
    • கந்ஸ், ஆரம்பம் முதல் இந்த விடயத்திற்கு கருத்தெழுதாமல் தவிர்த்ததற்குக் காரணம் செய்தியில் முழுமையாக விடயங்கள் வெளியிடப்படவில்லை என்று கருதியதால்தான். ஆனால் கண்காணிப்புக் கமரா விடயத்தில் பொருள் இருக்கிறது என்று நம்புகிறேன்.    பிரச்சனையைத் தொடாதது தாங்களும் சுண்டலுமே.  திருமுருகன் அல்லது அங்குள்ள வேலையாட்களோ நிர்வாகிகளோ பிள்ளைகள்நீராடுவதையும் உடை மாற்றுவதையும் பார்த்தார்கள் அல்லது பதிவு செய்தார்கள்  என்று எங்குமே எவருமே குற்றம் சுமத்தவில்லை. நிர்வாகம் உரிய நடைமுறைகளைப் பின்பற்றவில்லை என்பதுதான் பிரச்சனையின் சாராம்சம்.  பெட்டிசன் போட்டது உண்மையாக இருந்தால்  அதைச் செய்தது  சைவர்களே. அங்குள்ள சிறார்களும் சைவர்களே,  விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பித்தது அப்பிரதேசத்திற்குரிய AGA Office. அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுத்தது ஆளுனர்.  இதில் சமயத்திற்கு எங்கே  இடம்?  ஆனால் சைவப் பழங்களுக்கு பெயர் கெட்டுவிடும் என்று விடையத்தை திசைதிருப்பி மூடி மறைக்க முற்படுவது தாங்களும் சுண்டல் போன்ற உசார் மடையர்களுமே. 
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 0 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.