Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

SCAN_.jpg

 

பெண்கள் வேலைக்குச் செல்வதாலும் தாமதத் திருமணங்களாலும் கடந்த பத்தாண்டுகளாகக் கர்ப்பத்துக்குப் பின்னால் மட்டுமல்ல கர்ப்பம் தரிக்கும் முன்னும் செக்கப் செய்துகொள்வது என்பது வழக்கமாகி இருக்கிறது. கர்ப்பம் ஆகுமுன்னே வந்து மருத்துவரை அணுகி தங்களுக்கு உடல் கோளாறு ஏதும் இல்லை என செக்கப் செய்து கொள்வது தாய்க்கும் சேய்க்கும் நலம் பயக்கும்.

இதயத்தில் மர்மர் சத்தம்., தைராய்ட்., இரத்த அழுத்தம். , ஹீமோக்ளோபின்., ஃபைப்ராயிட் கட்டிகள் இருக்கா என எல்லாம் செக் செய்து கொள்ள வேண்டும். அதற்குத் தகுந்த மருந்துகள் எடுத்துக் கொள்ள வேண்டும். உடல்நலத்தில் கோளாறு இல்லாமலிருக்கிறதா, நீரிழிவு நோய் இருக்கிறதா மேலும் எல்லாத் தடுப்பு ஊசிகளும் ( ஜெர்மன் மீசில்ஸ்) போடப்பட்டிருக்கா என செக்கப் செய்து கொள்வது ப்ரி கன்சப்ஷன் செக்கப் எனப்படுகிறது  PRE CONCEPTION CHECK UP ஐ PRE CONCEPTION CLINIC சென்று செய்து கொள்வது அவசியம். அதன் பின் கருத்தரிப்பது நல்லது.

கர்ப்பம் தரிப்பது தாமதப்பட்டால் ஃபோலிக் ஆசிட் குறைபாடு இருந்தால் ஃபோலிக் ஆசிட் எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. அது குழந்தையின் நரம்பு மண்டல வளர்ச்சிக்கும் மூளை வளர்ச்சிக்கும் முக்கியமானது. ஃபோலிக் ஆசிட் குறைபாட்டால் கருச்சிதைவுகளும் ஏற்படலாம்.

கரு உருவான பின் ஓரிரு நாட்களிலேயே அதன் உயிரணுக்களின் எண்ணிக்கை விரைவாகவும் இரட்டிப்பு அடைந்தும் அதிகரிக்கும். ஐந்து நாட்களில் இந்த இளம்கருவளர் பருவம் ப்ளாஸ்டோசிஸ்ட் என அழைக்கப்படுகின்றது. இது மூன்று படலங்களைக் கொண்டிருக்கும். புறப்படலம் தோல், நரம்புத் தொகுதியையும், இடைப்படலம் தசை, எலும்புத் தொகுதியையும் அகப்படலம் ஜீரண மண்டலம், சுவாசத் தொகுதியையும் உருவாக்க வல்லவை.

கரு எம்பிரியோ என்றும் அதன் தொப்புள் கொடி அம்பிளிகல் கார்ட் என்றும் அழைக்கப்படுகின்றது. கருப்பையில் தாயிடமிருந்து சேய்க்கு ஆக்ஸிஜனையும் உணவையும் வழங்குவதோடு கழிவுப் பொருட்களை அகற்றுவதும் இந்தத் தொப்புள்கொடியின் பங்கு. கருவைச் சுற்றி இருக்கும் திரவம் பனிக்குடம் எனப்படுகின்றது. தொடர் வளர்ச்சியில் கண், விரல்கள், வாய், காதுபோன்ற உடல் உறுப்புகள் 8 வாரங்களில் முழுமை பெற்றுவிடும். அப்போது இது முதிர்கரு (ஃபோயட்டஸ்) என்று அழைக்கப்படும். மூன்றாவது மாதத்தில்தான் கருவின் பால் உறுப்புக்கள் வெளித் தெரிய ஆரம்பிக்கும்.

கரு உருவாகி இருப்பதை மாதவிடாய் தள்ளிப் போவதன் மூலமும் பரிசோதனைகள் மூலமும் அறிந்து கொள்ளலாம். உடல் மென்மையாதல், மார்பகங்கள் தளர்தல் எனத் தாயின் உடற்கூறியியலும் மாற்றங்கள் ஏற்படும். குழந்தைப் பேறுக் காலங்களை 14 வாரங்கள் எனக் கணக்கில் கொண்டு மூன்று பதிநான்கு வாரங்களாக ( 42 வாரங்கள் ) முப்பருவங்களாகப் பிரிக்கின்றார்கள் மருத்துவர்கள்.

கரு உருவாகி முப்பருவத்தின் முதல் 14 வாரத்தில் எலுமிச்சை அளவில் கரு வளர்ந்து இருக்கும்போது தலைசுற்றல், வாந்தி, மசக்கை எனக் கருத்தரிப்பின் அறிகுறிகளும் சங்கடங்களும் அதிகமாக இருக்கும். அப்போது இரட்டைக் குழந்தையா., குழந்தையின் இதயத் துடிப்பு  சரியா இருக்கா., கர்ப்பம் உள்ளே இருக்கா., அல்லது வெளியே இருக்கா ., குழந்தையின் உறுப்புக்களில் பிரச்சனை இருக்கா., தாய்க்கு ஃபைப்ராயிட் ., ஓவரி கட்டிகள் இருக்கான்னு ஸ்கேன் செய்து கொள்வது நல்லது.

SCAN__0001.jpg

 

இன்னொரு ஸ்கான் 11 முதல் 13 வாரத்தில் செய்ய வேண்டும். டவுன் சிண்ட்ரோம் பேபியா., உறுப்புகள் சரியான வளர்ச்சி உள்ளதா ., என பார்க்க முடியும். அதற்கு அறிகுறிகள் இருந்தால் ப்ளட் டெஸ்ட் செய்து ஸ்கான் செய்வதால் தெரியவரும். முடிந்தவரை  கர்ப்பகாலத்தில்  எக்ஸ்ரேக்கள் எடுக்காமல் இருப்பது நல்லது. அதன் கதிர்கள் கர்ப்பத்தில் இருக்கும் சிசுவைப் பாதிக்கலாம். மேலும் காய்ச்சல், தலைவலி, சளி போன்றவற்றிற்குக் கூட டாக்டரிடம் ஆலோசனை பெற்றபின்பே மருந்துண்ண வேண்டும். பல் தொடர்பான பிரச்சனைகள், பல் எடுத்தல் போன்றவற்றை டாக்டரிடம் கேட்டுவிட்டே செய்யவேண்டும்.

முதல் மூன்று மாதங்களில் குழந்தை கொஞ்சம் கொஞ்சமாக வளர ஆரம்பிக்கும் போது ப்ளட் டெஸ்ட்., ஹீமோக்ளோபின்.( HAEMOGLOBIN) , ரத்த குரூப்.,(BLOOD GROUP) ஹெச் ஐ வி ( HIV) இருக்கா., ஹெப்பாட்டைட்டிஸ் பி ( HEPAPATITIES B) , இவை எல்லாம் செக் செய்து கொள்ள வேண்டும். இது கட்டாயம்.

இரண்டாவது முப்பருவத்தில் குழந்தையின் எடை லேசாக அதிகரிக்கத் தொடங்கும். கருப்பை எப்போதும் இருப்பதை விட 20 மடங்கு அதிகரிக்கும். கருப்பையில் குழந்தையின் அசைவு தெரிய ஆரம்பிக்கும்.

இரண்டாவது 3 மாதத்தில் இரும்புச்சத்து மாத்திரை., கால்சியம் மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டும். 20 வாரத்தில் சிசுவுக்கு ஏதாவது பெரிய குறைபாடு  இருக்கா., உறுப்பு வளர்ச்சி இருக்கா என்று ஸ்கான் மூலம் அறியலாம்.

டெட்டனஸ்., டிப்தீரியாவுக்கு இன்ஜெக்‌ஷன் 4 முதல் 6 வாரத்தில் ஒரு டோஸ் கொடுக்க வேண்டும் . இரண்டாவது டோஸ் ., 30 அல்லது 36 வாரத்தில் கொடுக்க வேண்டும். உணவு இரண்டாவது 3 மாதத்தில் கொஞ்சம் கொஞ்சமாக அடிக்கடி சாப்பிடலாம். இயற்கையாய் தயாரிக்கும் சத்துமாவுக் கஞ்சி எடு்த்துக் கொள்ளலாம். பருப்பு, பயறு போன்ற ப்ரோட்டீன் நிறைந்த ஆகாரம் முக்கியம். காய்கறி., கீரை., பயிறு வகைகள்., பழம் அதிகம் சேர்க்கலாம். முட்டை, பால், காரட், பழவகைகள் அனைத்தும் எடுத்துக்கலாம். அவ்வப்போது டையபடீஸுக்கும் ஹீமோக்ளோபினுக்கும் செக்கப் செய்து கொள்வது அவசியம்.

முப்பருவத்தின் மூன்றாவது பகுதியிலேயே குழந்தையின் எடை விரைவாக அதிகரிப்பதாலும் குழந்தையின் தலைப்பகுதி இடுப்பின் கீழ்நோக்கித் திரும்புவதாலும் தாயின் வயிறு மிகப்பெரிதாகக் காணப்படும். இந்த அழுத்தத்தினால் சிறுநீர்ப்பை அடிக்கடி நிரம்பியது போன்று உணர்வார்கள். உப்பு ஹீமோக்ளோபின்., சர்க்கரை., இரத்த அழுத்தம், எடை  ஆகியவை அடிக்கடி சோதனை செய்து கொள்ளலாம். கர்ப்ப ஸ்த்ரி  10 லிருந்து 13 கிலோ எடை ஏறவேண்டும். முதலில் எடை ஏறாது மூன்றாம் மாதத்தில் இருந்து சுமாரா இரண்டு கிலோ எடை ஏறணும்.

கர்ப்பகாலத்தில் தாயின் உடல்நலமும் உள்ள நலமும் பேணிப்பாதுகாக்கப்படவேண்டும். நெஞ்செரிச்சல், அமிலச் சுரப்பு, வாயில் கசப்பு அல்லது புளிப்பு, தூக்கமின்மை, உட்கார்வதில், படுப்பதில் சிரமம், உணர்வுப்பூர்வமாக ஏற்படும் ஏற்ற இறக்கம், சிலசமயம் அரிப்பு, உடல் சூடாக உணர்தல், தலைமுடி தோலில் மாற்றம் போன்றவை நிகழும். குமட்டல் வாந்தி இருந்தால் இஞ்சி உபயோகிக்கலாம் எனக் கூறப்படுகின்றது. மேலும் சரியான இடைவெளிகளில் உணவு உண்ணுதலும், அமரும்போதும் படுக்கும் போதும் சரியான நிலையைப் பேணுதலும் அறிவுறுத்தப்படுகின்றது.

மலச்சிக்கல், மூலநோய் போன்றவை இருந்தால் கீரை போன்ற நார்ப்பொருள் கொண்ட உணவுகளை அதிகமாக உண்ணும்படிப் பரிந்துரைக்கிறார்கள். குழந்தை எடை கூடுவதால் அதன் அழுத்தம் தாளாமல் காலில் ஏற்படும் வெரிகோஸ் வெயின் எனப்படும் சிரைகள் வீங்கி நீலநிறமாகக் காணப்பட்டால் காலில் பாண்டேஜ் போன்றவை பயன்படுத்தும்படிக் கூறுகிறார்கள். சிலருக்கு துர்நாற்றம், அரிப்பு, புண் இவற்றோடான யோனி வெளியேற்றமோ அல்லது மாதவிடாய் ரத்தப் போக்கோ ஏற்படலாம். பரிசோதனை செய்து தொற்று ஏதும் இல்லை என உறுதி செய்து கொண்டு அதற்குத் தக்க மருத்துவம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

முதுகுவலி, இடுப்பு செயல் பிறழ்ச்சி, இடுப்பெலும்பு, தொடை மற்றும் அடிவயிற்று வலி, நடப்பதில் சிரமம் போன்றவை ஏற்பட்டால் சரியான உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும். வெந்நீர்க் குளியல் மசாஜ் போன்றவை எடுத்துக் கொள்ள வேண்டும். காலில் வீக்கம் ஏற்பட்டால் உணவில் உப்பைக் குறைத்து உண்ணுதல் வேண்டும். பொதுவாகவே காரம், இனிப்பு, உப்பைக் குறைக்க வேண்டும். ஒன்பது மாதங்களில் பிரசவம் எளிதாகச் செய்யக்கூடிய உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, மூச்சுப் பயிற்சி, பிரணாயாமம் இவற்றைச் செய்யலாம்.

http://honeylaksh.blogspot.com/2024/03/15.html

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.