Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக நானை  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

ஆழ கடலில்


Recommended Posts

பதியப்பட்டது

'கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு' என்பது எல்லாருக்கும் பொருந்தும் இல்லையா? முக்கியமாக விஞ்ஞானிகளுக்கு. கடலுக்கு அடியில் என்ன நடக்கிறது என்பது நமக்கும் விஞ்ஞானிகளுக்கும் பெரும் புதிரே. அதுவும் ஆழ்கடலில் வாழும் உயிரினங்களைப்பற்றி அதிகம் தெரியாது. இந்நிலையில் கலிஃபோர்னியாவிற்கு அருகில் பசிபிக் சமுத்திரத்தில் ஆழ்கடலில் உயிரினங்கள் இனப்பெருக்கம் செய்யும் இடம் ஒன்றை விஞ்ஞானிகள் எதிர்பாராத முறையில் கண்டுபிடித்திருக்கின்றனர்.

கலிஃபோர்னியா கடலோரத்தில் இருந்து ஏறக்குறைய நூறு மைல் தொலைவில் ஒரு மைல் ஆழத்தில் அதாவது ஏறக்குறைய ஆயிரத்து அறுநூறு மீட்டர் ஆழத்தில் இந்த வருங்கால சந்ததியினரை உருவாக்கும் இடம் கண்டு பிடிக்கப்பட்டு இருக்கிறது. இந்த இடத்தில் மீன்களும் ஏனைய கடல்வாழ் உயிரங்களான ஆக்டோபஸ் ஆகியன ஏராளமாக முட்டைகளிட்டு, அவற்றிற்கு காவலிருக்கின்றன. இதில் என்ன ஆச்சரியம் என்றால், இந்த இடத்தைச் சுற்றி அவ்வளவு கடல்வாழ் உயிரினங்கள் இல்லை என்பதே. நமக்குப்புரியும்படி சொல்லவேண்டும் என்றால் பொட்டல்காட்டில் அந்த மீன்களும் ஏனைய உயிரினங்களும் முட்டைகளை இட்டுவிட்டு, காவலுக்கு இருக்கின்றன.

ரிமோட் வழியே இயங்கும் ரோபோட்டைக் கீழே அனுப்பி இந்த உயிரினங்களையும் முட்டைகளையும் புகைப்படம் எடுத்திருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இளம் ஊதா நிறத்தில் ஏராளமான முட்டைகள் சிறிய பாறைகளில் இருக்க, அருகில் இரண்டடி நீளமுள்ள blob sculpin, Psychrolutes phrictus என்னும் மீன் ஓய்வெடுக்கிறது. இந்த மாதிரி மீன்களுக்கு இடையே ஆங்காங்கே ஆக்டோபஸ்களும் முட்டையிட்டு பத்திரமாகப் பேணி வருகின்றன. இங்கு நண்டு, நட்சத்திரமீன் ஆகிய இன்னோரன்ன உயிரங்களும் சீவிக்கின்றன.

ஆழ்கடல் மீன்கள் தங்கள் உயிரினங்களைப்பாதுகாப்பதை இப்போதுதான் கண்டுபிடித்திருக்கிறார்கள். இதுபோல பலவிதமான உயிரினங்களும் ஒன்று கூடி தங்களின் குஞ்சு குளுமான்களை வளர்ப்பதும் இதுவரை ஆராய்ச்சியாளர்கள் கண்டிராத ஒன்று என்று, Monterey Bay Aquarium Research Institute (MBARI) in Californiaவைச் சேர்ந்த Jeffrey Drazen கூறுகிறார்.

பொதுவாக ஹாட் ஸ்பிரிங்க்ஸ் இருக்கும் இடங்களிலும், சேறாக இருக்கும் தரைப்பகுதியிலும்(கடலின்) கடல் உயிரினங்கள் இருக்குமாம். இந்த இடங்களில் காணப்படும் மினரல்களே இவை இங்கு அதிக எண்ணிக்கையில் இருக்கக் காரணமாம். அதேபோல அதிக அளவில் மீன்களும் மற்ற உயிரினங்களும் காணப்படும் இடம், கடலில் மூழ்கியிருக்கும் மலைப்பகுதிகள். அலைகளினால் அடித்து வரப்படும் 'பிளாங்க்டனை' உண்ணுவதற்காக கடல் உயிரினங்கள் இங்கு சேருமாம். ஆனால், முதலில் கூறிய 'Gorda Escarpment'இல் வேறெங்கும் காணாத அளவு உயிரினங்கள் இருக்கின்றனவாம். அதுவும் இவ்வுயிரினக்கள் எல்லாம் இங்கு குழுமியிருக்கும் காரணமும் விசேடமானது. இனப்பெருக்கம். மீனவர்களிடம் இருந்தும் மற்றவர்களிடம் இருந்தும் இந்த இடத்தைக் காப்பாற்ற முயற்சி எடுத்துவருகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

நன்றி: நாஷனல் ஜியாகிரபிக்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நன்றி நுணாவில் :wub:

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.