Jump to content

ஏப்ரலில் முழு சூரிய கிரகணம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
30 MAR, 2024 | 11:30 AM
image
 

முழு சூரிய கிரகணம் ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி தோன்றும் எனவும் இந்த முழு சூரிய கிரகணத்தை வட அமெரிக்காவில் மட்டுமே அவதானிக்க முடியும் எனவும் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது.

சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் கடந்து செல்லும் போது முழு சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இதன்போது சூரியனின் ஒரு பகுதி அல்லது முழுவதுமாக மறைகிறது.

எப்போதாவது அரிதாகத்தான் இந்த முழு சூரிய கிரகணம் தோன்றும்.

வட அமெரிக்கர்கள் இது போன்ற அரிதான முழு சூரிய கிரகணத்தை அவதானிக்கும் வாய்ப்பு எதிர்வரும் 2044 ஆம் ஆண்டில் தான் கிடைக்கும் எனவும் நாசா தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/180011

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முழு சூரியகிரகணம்: நயகராவை சுற்றியுள்ள பகுதியில் அவசர நிலை பிரகடனம்!

ஏப்ரல் மாதம் 8ஆம் திகதி, முழு சூரியகிரகணம் தோன்றவிருக்கும் நிலையில், அது தொடர்பில் கனடாவின் ஒரு பகுதியில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாதம் 8ஆம் திகதி, முழு சூரியகிரகணம் தோன்ற உள்ளது. கனடாவைப் பொருத்தவரை, நயாகரா நீர்வீழ்ச்சி பகுதியில், 1979ஆம் ஆண்டுக்குப் பிறகு இப்போதுதான் முழு சூரியகிரகணம் தோன்ற உள்ளது.

பொதுவாகவே நயாகரா நிர்வீழ்ச்சியைக் காண மக்கள் ஏராளமானோர் கூடும் நிலையில், முழு சூரியகிரகணமும் சேர்ந்துகொள்ள இருப்பதால், அங்கு சுமார் ஒரு மில்லியன் சுற்றுலாப்பயணிகள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சுற்றுலாப்பயணிகளை எதிர்கொள்ளும் வகையில், நயாகரா பகுதியில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 8ஆ திகதி, பாடசாலைகளுக்கு விடுமுறையளிக்கப்பட உள்ளது. எனவே, வேலைக்குச் செல்லும் பெற்றோர், தங்கள் பிள்ளைகளை பகல் நேர காப்பகங்களில் விட முன்கூட்டியே தயாராகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.
ஒன்டாரியோ நகரின் நயாகரா நீர்வீழ்ச்சியின் மேயர் ஜிம் டியோடாட்டி, கிரகணத்திற்கு கனடாவில் “எப்போதும் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய கூட்டம்” என்று கணித்துள்ளார். ஒரு வருடம் முழுவதும் பொதுவாக வருகை தரும் 14 மில்லியனுடன் ஒப்பிடும்போது, ஒரு மில்லியன் மக்கள் அங்கு இருப்பார்கள் என்று டியோடாட்டி மதிப்பிட்டுள்ளார்.
வீதிகளில் பயணம் செய்வோர் சூரியகிரகணத்தைப் பார்ப்பதற்காக வாகனங்களை நிறுத்தி வாகனங்களை விட்டு கீழிறங்கவோ, புகைப்படம் எடுக்கவோ வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.

மேலும், சூரிய கிரகணத்தைப் பார்ப்பவர்கள் ISO 12312-2 தரச்சான்றிதழ் பெற்ற கண்ணாடிகளை அணிந்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

https://thinakkural.lk/article/297719

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சூரிய கிரகணம்: 50,000 அடி உயரத்தில் நிழலைக் கிழித்துச் செல்லும் விமானத்தில் பறந்தபடி இந்த 4 விஞ்ஞானிகள் என்ன செய்யப் போகிறார்கள்?

சூரிய கிரகணம், நாசா, அமெரிக்கா

பட மூலாதாரம்,NASA

படக்குறிப்பு,

சுமார் 50,000 அடி (15 கிமீ) உயரத்தில் பல உபகரணங்களுடன் அவர்கள் கிரகணத்தின் பல்வேறு அம்சங்கள் ஆய்வு செய்யப்படும்

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஜொனாதன் ஓ'கலெகன்
  • பதவி, பிபிசி செய்தியாளர்
  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

அடுத்த வாரம் நிகழவிருக்கும் சூரிய கிரகணத்தை லட்சக்கணக்கான பார்வையாளர்கள் நிலத்தில் இருந்து பார்ப்பார்கள். ஆனால் ஒரு சில அதிர்ஷ்டசாலி நாசா விமானக் குழுவினர் அதை மிக நெருக்கமாகப் பார்க்கும் வாய்ப்பைப் பெறுவார்கள்.

ஏப்ரல் 8 (திங்கட்கிழமை) அன்று வட அமெரிக்கா முழுவதும் முழு சூரிய கிரகணம் நிகழும். சுமார் 3.1 கோடி மக்களால் அதை கண்டுகளிக்க முடியும். அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோவின் பெரும்பகுதியிலும் இதை பார்க்க முடியும். மேலும் இந்த நிகழ்வை கண்டுகளிப்பதற்காக பெரும் எண்ணிக்கையில் மக்கள் அங்கு பயணிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும் இவை அனைத்தும் மோசமான வானிலை காரணமாக நிறைவேறாமல் போகலாம். கடந்த 1999-ஆம் ஆகஸ்ட் மாதம் பிரிட்டனில் நிகழ்ந்த கிரகணத்தை பார்க்கமுடியாமல் மேக கூட்டங்கள் மறைத்துவிட்டன என்பது நினைவுகூரத்தக்கது. எனவே ஒரு குறிப்பிட்ட இடத்தில் சராசரியாக 375 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழும் முழு சூரிய கிரகணத்தை நீங்கள் பார்க்க வேண்டும் என்றால், அதற்கான சிறந்த வழி என்ன?

வானத்தில் மேகங்களுக்கு மேலே பறப்பது.

நான்கு நாசா விமானிகள் இதைத்தான் செய்ய இருக்கின்றனர்.

 
சூரிய கிரகணம், நாசா, அமெரிக்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

கிரகணத்தை ஆய்வு செய்யவிருக்கும் விமானங்கள்

நாசாவின் இரண்டு பிரத்யேக WB-57 விமானங்களில் மெக்சிகோ கடற்கரையில் இருந்து அக்குழுவினர் பறக்க உள்ளனர். தென்மேற்கிலிருந்து வடகிழக்கு வரை கிரகணத்தின் முழுமையான பாதையை அவர்கள் பின்தொடர்வார்கள். சந்திரன் சூரியனைக் கடக்கும்போது ஏழு நிமிடங்கள் அவர்கள் அதன் நிழலில் இருப்பார்கள். அதே நேரத்தில் அவர்கள் தரையில் இருந்தால் அவர்கள் நான்கு நிமிடங்கள் மட்டுமே அதன் நிழலில் இருந்திருக்கமுடியும். சுமார் 50,000 அடி (15 கிமீ) உயரத்தில் பல உபகரணங்களுடன் அவர்கள் கிரகணத்தின் பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்வார்கள்.

“இது மிகுந்த உற்சாகம் தருகிறது" என்று இரண்டு விமானங்களில் ஒன்றின் சென்சார் உபகரண ஆபரேட்டரான நாசா விமானி டோனி கேசி கூறுகிறார். "நான் மிகவும் ஆவலாக இருக்கிறேன். இந்தப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். கிரகணத்தின் நிழல் உங்களுக்கு முன்னே செல்லும் அந்தத் தருணத்தின் அனுபவத்தை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்," என்றார் அவர்.

விமானத்தில் கேசி இயக்கும் ஒரு கேமரா மற்றும் தொலைநோக்கி அமைப்பு, சூரியனை அகச்சிவப்பு மற்றும் கண்ணுக்குப் புலப்படும் ஒளியில் புகைப்படம் எடுக்கும். சூரியன் சந்திரனை சுற்றிச்செல்லும்போது அதன் வளிமண்டலத்தையும் அதன் ஒளிமண்டலத்தையும் ஆராய இது உதவும். சூரியனுக்கு அருகில் உள்ள தூசி வளையம் மற்றும் சிறுகோள்களையும் இது ஆய்வு செய்யும்.

"இரண்டு விமானங்களின் மூக்கிலும் இந்த அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. அது அங்கு ஒரு தொலைநோக்கியை வைக்க உங்களை அனுமதிக்கிறது" என்று கொலராடோவில் உள்ள தென்மேற்கு ஆராய்ச்சி நிறுவனத்தின் சூரிய இயற்பியலாளர் ரிச் காஸ்பி கூறுகிறார். அவர் கேசி இயக்கும் கருவிகள் மூலம் ஆய்வுகளை நடத்துகிறார். கடந்த 2017-ஆம் ஆண்டு அமெரிக்காவின் முழு சூரிய கிரகணம் நடந்தபோதும் இதேபோன்ற சோதனைகள் நடத்தப்பட்டன.

“இந்த விலையுயர்ந்த அறிவியல் கேமரா மற்றும் கருவியை நான் பயன்படுத்துவதற்கு முன்பு முழு கிரகண நிலை வந்துவிட்டதா என்பதை நாங்கள் உறுதிசெய்ய வேண்டும்,” என்கிறார் டோனி கேசி.

 
சூரிய கிரகணம், நாசா, அமெரிக்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

தரையில் இருந்தால் நான்கு நிமிடங்கள் மட்டுமே கிரகண நிழலில் இருக்க முடியும்

740 கி.மீ வேகத்தில் பறக்கும் விமானங்கள்

கிரகணத்திற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு இரண்டு விமானங்களும் டெக்சாஸின் ஹூஸ்டனில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி மையத்திற்கு அருகிலிருந்து புறப்பட்டு மெக்சிகோவை நோக்கிச் செல்லும். ஒவ்வொரு விமானமும் கிரகணத்தின் போது ‘சுமார் ஐந்து அல்லது ஆறு மைல்கள் இடைவெளியில்’ இருக்கும். மேலும் மணிக்கு 740 கி.மீ வேகத்தில் பயணம் செய்யும்,” என்று கேசி கூறுகிறார்.

இது கிரகண நிழலின் வேகத்தினும் குறைவானது. அது மணிக்கு சுமார் 2,500கி.மீ. வேகத்தில் செல்லும். ஆனால் விமானங்கள் நிழலுடன் சேர்ந்து பயணிக்கும்போது, தரையில் இருப்பதைக்காட்டிலும் அதிக நேரம் ‘முழு இருட்டில்’ இருக்க முடியும்.

"கிரகண நிழலின் வேகத்துடன் எங்களால் நிச்சயமாக போட்டிபோட முடியாது," என்கிறார் கேசி. "எனவே நாங்கள் சரியான இடத்தைக் கண்டுபிடித்து அங்கே இருக்க விரும்புகிறோம். அது முற்றிலும் மறைக்கப்பட்டவுடன் நாங்கள் அதே பாதையை பின்பற்றி மீண்டும் அமெரிக்க வான்வெளிக்குள் செல்வோம்,” என்றார் அவர்.

 
சூரிய கிரகணம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆராய்ச்சி செய்கையில் கிரகணத்தைப் பார்க்க நேரம் கிடைக்குமா?

விமானங்கள் வானத்தில் நகரும்போது கிரகணம் அவற்றின் வலதுபுறத்தில் இருக்கும். கேசி கேமராவை இயக்கி, சூரியனின் வெவ்வேறு பகுதிகளில் அதை ஜூம் செய்து தரையில் இருக்கும் குழுவுடன் பேசுவார். காட்சிப் புலம் சூரியனின் மூன்றில் ஒரு பகுதியை மட்டுமே உள்ளடக்கும். எனவே அவர் கிரகணத்தின் போது மொத்தக் காட்சியையும் பதிவுசெய்ய சூரியனின் ஒவ்வொரு பக்கத்திற்கும் இடையே கேமராவை நகர்த்துவார். சூரிய தீச்சுடர் போன்ற முக்கியமான அம்சங்களை அவர் பதிவு செய்வார்.

உபகரணங்களை இயக்குவது மிக முக்கியமானது என்றாலும், கிரகணத்தை தனது சொந்தக் கண்களால் பார்க்க தனக்கு நேரம் கிடைக்கும் என்று கேசி நம்புகிறார். “இந்த மிக விலையுயர்ந்த அறிவியல் கேமரா மற்றும் கருவியை நான் பயன்படுத்துவதற்கு முன்பு முழு கிரகண நிலை வந்துவிட்டதா என்பதை நாங்கள் உறுதிசெய்ய வேண்டும்,” என்று அவர் கூறுகிறார். "அவசரமாக கிரகணத்தைப் பார்க்க நேரம் இருக்குமே தவிர, கருவிகள் சரியாக இயங்குகின்றனவா என்பதை உறுதிப்படுத்த நான் திரையையே பார்க்க வேண்டியிருக்கும்,” என்றார் அவர்.

இவ்வளவு உயரத்தில் இருப்பதால், வளிமண்டலம் மிக மெல்லியதாக இருக்கும். அதனால் தரையில் இருந்து பார்ப்பதைவிட கிரகணத்தை மிக நன்றாகப் பார்க்கமுடியும். "நீங்கள் மேகங்களுக்கு மேலே இருப்பதால் இது மிகவும் தெளிவாகத் தெரியும்," என்கிறார் கேசி.

தரையில் இருந்து ஆய்வுசெய்வதைவிட மிக அதிக அளவு அறிவியல் ரீதியிலான பலன் இதன்மூலம் கிடைக்கும்.

4,000கி.மீ. பயணிக்கும் திறன் இருப்பதால் கிரகணங்களை ஆய்வு செய்ய WB-57 விமானங்கள் மிகவும் பொருத்தமானவை. அவை காற்றில் அதிக நேரம் -- அதாவது சுமார் 6.5 மணி நேரம் - செலவிட முடியும். ஆனால் அவை கிரகணங்களுக்கு மட்டும் பயன்படுத்தப்படுவதில்லை. ராக்கெட் ஏவுதல்களை கவனிப்பது போன்ற பிற ஆராய்ச்சி அல்லது புகைப்படம் எடுக்கும் பணிகளுக்கும் நாசா இந்த விமானங்களை பயன்படுத்துகிறது.

 
சூரிய கிரகணம், நாசா, அமெரிக்கா

பட மூலாதாரம்,NASA

படக்குறிப்பு,

விமானங்கள் வானத்தில் நகரும்போது கிரகணம் அவற்றின் வலதுபுறத்தில் இருக்கும்

மிகவும் சுவாரசியமான வேலை

கடந்த 2022-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கேசி இந்த விமானத்தில் பறந்து நிலவுக்கு நாசா அனுப்பிய ஆர்ட்டெமிஸ்-1 விண்கலத்தின் ஏவுதலை புகைப்படம் எடுத்தார். கடந்த 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஸ்பேஸ்-X இன் மாபெரும் ஸ்டார்ஷிப் ராக்கெட்டின் முதல் ஏவுதலின் படத்தையும் அவர் எடுத்துள்ளார்.

அனைவரும் மிகவும் சுவாரசியமான வேலை என்று கருதும் பணியை கேசி செய்கிறார். ஆனால் அவர் அதுபற்றி அலட்டிக்கொள்வதில்லை. "நான் வடமேற்கு அலபாமாவில் உள்ள ஒரு சிறிய நகரத்தைச் சேர்ந்தவன்," என்று அவர் கூறுகிறார்.

"எப்படியோ நான் இந்த நிலைக்கு வந்துவிட்டேன். நான் இந்த தனித்துவமான விமானத்தில் வளிமண்டலத்தின் விளிம்பில் பறந்து ராக்கெட் ஏவுதல்களை பார்த்தேன். இப்போது கிரகணத்தை பார்க்க இருக்கிறேன். எனக்கு அளிக்கப்பட்ட பொறுப்பை கூடிய அளவு சிறப்பாக நிறைவேற்ற நான் முயற்சிக்கிறேன்," என்கிறார் கேசி.

https://www.bbc.com/tamil/articles/cg697zg3n1po

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கோ தூரத்தில் நடக்கும் கிரகணத்துக்கும் அவசரநிலைப் பிரகடனத்துக்கும் என்ன சம்பந்தம்......அது பாட்டுக்கு வந்துட்டுப் போகப் போகுது.......!  😴

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/4/2024 at 13:42, suvy said:

எங்கோ தூரத்தில் நடக்கும் கிரகணத்துக்கும் அவசரநிலைப் பிரகடனத்துக்கும் என்ன சம்பந்தம்......அது பாட்டுக்கு வந்துட்டுப் போகப் போகுது.......!  😴

அண்ணனை   நான் கனடாவில்  நிற்கிறேன்,...திருமணவிழா ஒன்றில் கலந்து சாப்பிட வந்தேன்  நாளையதினம்  நடைபெறுகிறது   இன்று   Anjappar. இல் சாப்பிட்டேன்   இருந்து சாப்பிடலாம்” நல்ல உணவு  🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

நாசா வெளியிட்டுள்ள முழுச் சூரியகிரகணத்தின் பாதையும், நேரமும்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/4/2024 at 07:42, suvy said:

எங்கோ தூரத்தில் நடக்கும் கிரகணத்துக்கும் அவசரநிலைப் பிரகடனத்துக்கும் என்ன சம்பந்தம்......அது பாட்டுக்கு வந்துட்டுப் போகப் போகுது.......!  😴

இங்கு பாடசாலைகள் மற்றும் சில குடும்ப வைத்தியர்கள் கூட எதிர்வரும் எட்டாம் திகதி இருக்காது-இருக்கா மாட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளை சூரிய கிரகணம்: பகலிலும் எங்கெல்லாம் 4 நிமிடம் இருள் சூழும்? இந்தியாவில் தெரியுமா?

அரிய சூரிய கிரகணம்: 4 நிமிடங்களுக்கு நீடிக்கும் இருள் - உலகளவில் என்னென்ன ஆய்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

கோப்புப்படம்

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

சூரிய குடும்பத்தில் முழு சூரிய கிரகணத்தைக் காணக்கூடிய ஒரே கிரகம் பூமி மட்டுமே.

ஒவ்வொரு 18 மாதங்களுக்கும், பூமியின் ஒரு பகுதியில் சூரிய கிரகணம் ஏற்படுகிறது. ஏப்ரல் 8 ஆம் தேதி சூரிய கிரகணத்தைக் காண உலகெங்கிலும் உள்ள மக்கள் ஆர்வமாக உள்ளனர். வட அமெரிக்காவின் சில பகுதிகளில் இந்த முழு சூரிய கிரகணத்தைக் காண முடியும். இந்த சூரிய கிரகணத்தின் போது, நான்கு நிமிடங்கள் மற்றும் ஒன்பது வினாடிகளுக்கு முழு இருள் இருக்கும்.

இந்த சூரிய கிரகணம் கனடா, அமெரிக்கா முதல் மெக்சிகோ வரை தெரியும்.

முந்தைய சூரிய கிரகணங்களை விட இந்த சூரிய கிரகணம் நீடிக்கும் நேரம் மிக அதிகமாக இருப்பதால், இந்த காலக்கட்டத்தில் பல சோதனைகளை நடத்த நாசா விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.

அரிய முழு சூரிய கிரகணம்

அரிய சூரிய கிரகணம்: 4 நிமிடங்களுக்கு நீடிக்கும் இருள் - உலகளவில் என்னென்ன ஆய்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

கோப்புப்படம்

இந்த நூற்றாண்டில், அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய மூன்று நாடுகளில் மட்டுமே இந்த முழு சூரிய கிரகணத்தைக் காண முடியும் என்பதிலிருந்து இது எவ்வளவு அரிதான நிகழ்வு என்பதை அறியலாம்.

சந்திரன் சூரியனை விட பூமிக்கு 400 மடங்கு நெருக்கமாக உள்ளது, ஆனால் சந்திரன் சூரியனை விட 400 மடங்கு சிறியது. இதன் காரணமாக, சந்திரன் சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நேர்கோட்டு புள்ளியாக வரும்போது, அது சூரியனை மறைப்பதல் நாம் கிரகணத்தைக் காண்கிறோம்.

சூரிய கிரகணத்தைப் பொறுத்தவரை சில நேரங்களில் தெரியும், சில நேரங்களில் தெரியாது. இந்த சூரிய கிரகணம் முக்கியமானது. ஏனெனில், இந்த நிகழ்வை லடசக்கணக்கான மக்கள் காண முடியும். இந்த கிரகணத்தை 31 லட்சம் பேர் பார்க்க முடியும் என ஒரு மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் உள்ள என்.சி. ஸ்டேட் பல்கலைக்கழகம், இந்த கிரகணத்தின் போது வனவிலங்குகளுக்கு ஏற்படும் விளைவு குறித்து ஆய்வு செய்யவுள்ளது. இந்த ஆய்வில், டெக்சாஸ் மாகாண உயிரியல் பூங்காவில் உள்ள 20 விலங்குகளின் நடத்தை ஆய்வு செய்யப்படும்.

நாசாவின் எக்லிப்ஸ் சவுண்ட்ஸ்கேப்ஸ் (Eclipse Soundscapes) திட்டமும் விலங்குகளின் நடத்தையை ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளது.

கிரகணத்தின் காரணமாக ஏற்படும் முழு இருளில் விலங்குகளின் சத்தம் மற்றும் அவற்றுக்கு ஏற்படும் விளைவுகளைப் பதிவு செய்ய மைக்ரோஃபோன் போன்ற சிறிய உபகரணங்களை பொருத்துவதும் இத்திட்டத்தில் அடங்கும்.

 

நாசாவின் திட்டம் என்ன?

அரிய சூரிய கிரகணம்: 4 நிமிடங்களுக்கு நீடிக்கும் இருள் - உலகளவில் என்னென்ன ஆய்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

அமெரிக்காவின் வர்ஜீனியாவில் உள்ள நாசாவின் வாலோப்ஸ் தளத்தில் இருந்து கிரகணப் பகுதியில் இருந்து மூன்று ஆராய்ச்சி ராக்கெட்டுகள் ஏவப்படும்.

எம்ப்ரி ரிடில் ஏரோநாட்டிக்கல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆரோஹ் பர்ஜாத்யா இந்தப் பரிசோதனையை முன்னின்று நடத்துகிறார். சூரிய கிரகணத்தின் போது வளிமண்டலத்தில் ஏற்படும் மாற்றங்களை இந்த ராக்கெட் பதிவு செய்யும்.

மூன்று ராக்கெட்டுகளும் பூமியில் இருந்து 420 கிலோமீட்டர் உயரத்திற்குச் சென்று பின்னர் பூமியில் விழுந்துவிடும். முதல் ராக்கெட் கிரகணத்திற்கு 45 நிமிடங்களுக்கு முன்பும், இரண்டாவது ராக்கெட் கிரகணத்தின் போதும், மூன்றாவது ராக்கெட் கிரகணம் முடிந்த 45 நிமிடங்களுக்குப் பிறகும் ஏவப்படும்.

பூமியின் மேற்பரப்பில் இருந்து 80 கி.மீ. மேலிருந்து தொடங்கும் வளிமண்டலத்தின் அடுக்கு அயனோஸ்ஃபியர் எனப்படும். இந்த அடுக்கில் அயனிகள் மற்றும் எலக்ட்ரான்கள் உள்ளன.

இது விண்வெளி மற்றும் வளிமண்டலத்திற்கு இடையில் பூமியின் ஒரு வகையான பாதுகாப்பு அடுக்கு ஆகும். இது ரேடியோ அலைகளை வெளியிடும் ஓர் அடுக்காகும். ராக்கெட் உதவியுடன், கிரகணத்தின் போது இந்த அடுக்கில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து முக்கியமான ஆய்வு நடத்தப்படும்.

பொதுவாக, அயனி மண்டல ஏற்ற இறக்கங்கள் செயற்கைக்கோள் தகவல்தொடர்புகளைப் பாதிக்கின்றன. சூரிய கிரகணம் இந்த மாற்றத்தை விரிவாக ஆய்வு செய்ய ஓர் அரிய வாய்ப்பை வழங்குகிறது. ஏனெனில், நமது தகவல் தொடர்பு அமைப்பை எந்தெந்த விஷயங்கள் பாதிக்கலாம் என்பதை இந்த ஆய்வு வெளிப்படுத்தும்.

 

செயற்கை நுண்ணறிவு உதவியுடன் புகைப்படங்கள் சேகரிப்பு

அரிய சூரிய கிரகணம்: 4 நிமிடங்களுக்கு நீடிக்கும் இருள் - உலகளவில் என்னென்ன ஆய்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

கோப்புப்படம்

எக்லிப்ஸ் மெகா மூவியில், நாசாவின் உதவியுடன் ஒரு சுவாரஸ்யமான பரிசோதனை செய்யப்படும். இந்த சோதனையின் படி, சூரிய கிரகணத்தைப் பார்க்கும் நபர்கள் அதை புகைப்படம் எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

பல்வேறு இடங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் எடுக்கும் புகைப்படங்கள் செயற்கை நுண்ணறிவு உதவியுடன் ஒருங்கிணைக்கப்பட்டு பகுப்பாய்வு செய்யப்படும்.

இதன் மூலம், சூரிய வட்டத்திற்கு வெளியே வெவ்வேறு வாயுக்களால் ஆன வளிமண்டலத்தின் வெவ்வேறு படங்கள் கிரகணத்தின் போது பெறப்படும்.

சூரியனின் மேற்பரப்பில் உள்ள அதீத ஒளியின் காரணமாக, அதைச் சுற்றியுள்ள உறைகள் கண்ணுக்குத் தெரிவதில்லை. அதைப் பார்க்க சிறப்பு உபகரணங்கள் தேவை.

இந்த கிரகணத்தின் போது சூரியனைச் சுற்றி ஒரு வளையம் தெரியும். சூரியனுக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரங்களும் தெரியும். அவற்றை ஆய்வு செய்யவும் நாசா திட்டமிட்டுள்ளது.

 

சூரிய கிரகணத்தைப் படம் எடுக்கும் நாசா விமானம்

அரிய சூரிய கிரகணம்: 4 நிமிடங்களுக்கு நீடிக்கும் இருள் - உலகளவில் என்னென்ன ஆய்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

நாசாவின் அதிக உயரத்தில் பறக்கும் ஆய்வு விமானம் 50,000 அடி உயரத்தில் இருந்து கிரகணத்தைப் புகைப்படம் எடுக்கும். பல உபகரணங்களும் இந்த விமானங்களில் நிறுவப்பட்டுள்ளன.

மேலும், கிரகணத்தின் போது வளிமண்டல மற்றும் தட்பவெப்ப மாற்றங்களை பதிவு செய்ய எக்லிப்ஸ் பலூன் (Eclipse Balloon) திட்டமும் செயல்படுத்தப்படும்.

சுமார் 600 பலூன்கள் வளிமண்டலத்தில் பறக்க விடப்படும். பூமியின் மேற்பரப்பில் இருந்து 35 கிலோமீட்டர்கள் வரை பறக்கும் திறன் கொண்ட இந்த பலூன்களில் உள்ள பல்வேறு கருவிகள் கிரகணத்தின் விளைவுகளை பதிவு செய்யும்.

இது தவிர, பார்க்கர் சோலார் ப்ரோப் (Parker Solar Probe), ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் மற்றும் நாசாவின் சோலார் ஆர்பிட்டர் மற்றும் சர்வதேச விண்வெளி நிலையம் ஆகியவற்றில் உள்ள விண்வெளி வீரர்களும் இந்த கிரகணத்தின் தாக்கத்தை ஆய்வு செய்வார்கள்.

சூரிய கிரகணத்தைக் காண கனடாவில் உள்ள நயாகரா நீர்வீழ்ச்சி அருகே பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

முழு சூரிய கிரகணத்தின் போது செய்யப்பட்ட முக்கிய கண்டுபிடிப்புகள்

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

கடந்த காலங்களிலும், கிரகணத்தின் போது நடத்தப்பட்ட ஆய்வுகள் வரலாற்றில் சில முக்கிய கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுத்துள்ளன.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் பொது சார்பியல் கோட்பாடு மே 19, 1919 அன்று முழு சூரிய கிரகணத்தின் போதுதான் ஆர்தர் எடிங்டன் எடுத்த புகைப்படத்தில் உறுதிப்படுத்தப்பட்டது.

1866 இல் சூரிய கிரகணத்தைப் பதிவு செய்யும் போது ஹீலியம் கண்டுபிடிக்கப்பட்டது.

சந்திர கிரகணத்தின் போது பூமியில் வளைந்த நிழலைப் பார்த்த பிறகுதான் அரிஸ்டாட்டில் பூமி தட்டையானது அல்ல, வட்டமானது என்பதை நிரூபித்தார்.

நாளைய சூரிய கிரகணம் இந்திய நேரப்படி இரவில் நிகழும் என்பதால், இந்தியாவில் அதனை பார்க்க முடியாது.

https://www.bbc.com/tamil/articles/cjmx9lkj2ndo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று முழுமையான சூரிய கிரகணம்

08 APR, 2024 | 10:14 AM
image
 

முழுமையான சூரிய கிரகணம் இன்று (8) திங்கட்கிழமை தோன்றவுள்ளது.

சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் கடந்து செல்லும் போது முழுமையான சூரிய கிரகணம் ஏற்படுகிறது.

இதன்போது சூரியனின் ஒரு பகுதி அல்லது முழுவதுமாக மறைகிறது. அரிதாகவே இந்த முழுமையான சூரியகிரகணம் தோன்றும்.

இந்த முழு சூரிய கிரகணத்தை கண்டுகளிக்கும் வாய்ப்பு இலங்கையர்களுக்கு இல்லை. 

வட அமெரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் வசிக்கும் மக்கள் இந்த முழு சூரிய கிரகணத்தை கண்டுகளிக்க முடியும்.

இலங்கை நேரப்படி இந்த முழு சூரிய கிரகணமானது இன்று (8) இரவு 9.12 மணி முதல் நாளை செவ்வாய்க்கிழமை (9) பிற்பகல் 2.22 மணி வரை தோன்றும்.

இது போன்ற அரிதான முழு சூரிய கிரகணத்தை அவதானிக்கும் வாய்ப்பு எதிர்வரும் 2044 ஆம் ஆண்டில் தான் கிடைக்கும் என நாசா தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/180668

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சூரிய கிரகண நேரத்தில் சில விலங்குகள் பதற்றமடையும்போது, ஆமைகள் இனச்சேர்க்கையில் ஈடுபடுவது ஏன்?

சூரிய கிரகணம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

சூரிய கிரகணம்

கட்டுரை தகவல்
  • எழுதியவர், பிரான்கி அட்கின்ஸ்
  • பதவி, பிபிசி செய்தியாளர்
  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

சூரிய கிரகணம் எப்போதுமே மனிதர்களுக்கு ஆச்சரியமூட்டும் நிகழ்வாகவே உள்ளது. ஆனால், விலங்குகளின் உலகத்தில் ஒரு பகலின் குறிப்பிட்ட பகுதி இரவாக மாறும் நேரத்தில் அவை என்ன மாதிரியான உணர்வை எதிர்கொள்கின்றன?

இந்த நாளில் சந்திரன் சூரியனை மறைப்பதன் காரணமாக ஒட்டுமொத்த வானமும் இருளால் சூழப்படுகிறது.

சூரிய கிரகணம் ஏற்படும்போது குறிப்பிட்ட நேரமே அது நீடிக்கும் என்றாலும், மனிதர்களிடம் உணர்ச்சிபூர்வமான ஆச்சரிய உணர்வை அது உண்டாக்குகிறது. ஆனால், இதே நிகழ்வு விலங்குகள் மத்தியில் என்ன மாதிரியான உணர்வை ஏற்படுத்துகிறது என்பதை கணிப்பது கடினம்.

தூக்கம், உணவு தேடுதல் மற்றும் வேட்டையாடுதல் என விலங்குகளின் அன்றாட செயல்பாடுகளும் 24 மணிநேர உயிரியல் நேரத்தின்படியே கட்டுப்படுத்தப்படுகின்றன. இந்நிலையில் கிரகணம் ஏற்படும் நேரத்தில் இந்த செயல்பாட்டு முறை எப்படி பாதிக்கப்படுகிறது என்பது குறித்து பெரிய அளவில் எந்த ஆய்வும் செய்யப்பட்டதில்லை.

காரணம் இந்த நிகழ்வுகள் பலநூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை அரிதாக நிகழும் ஒன்று. அதே சமயம் அனைத்து விதமான விலங்குகளும் ஒரே மாதியான எதிர்வினைகளை வெளிப்படுத்துவதில்லை.

 
சூரிய கிரகணம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

100 ஆண்டுகளுக்கு முன்பு நியூ இங்கிலாந்தைச் சேர்ந்த பூச்சியியல் வல்லுநர் ஒருவர் சூரியன் மறைவதை சோதனைக்கு உட்படுத்தினார்.

“ஒளி என்பது தாவரங்கள் முதல் விலங்குகள் வரை அனைத்தின் மீது தாக்கம் செலுத்தும் ஒன்று. உயிரியலாளர்களாக நம்மால் எப்போதும் சூரியனை ஒளி தராமல் நிறுத்த முடியாது, ஆனால் இயற்கை அதுவாகவே அந்த பணியை செய்கிறது” என்கிறார் ஸ்வீடனை சேர்ந்த லண்ட் பல்கலைக்கழக நடத்தை சூழலியல் நிபுணர் சிசிலியன் நில்சன்.

100 ஆண்டுகளுக்கு முன்பு நியூ இங்கிலாந்தைச் சேர்ந்த பூச்சியியல் வல்லுநர் ஒருவர் சூரியன் மறைவதை சோதனைக்கு உட்படுத்தினார்.

1932இல் நடந்த சூரிய கிரகணத்தின் போது விலங்குகளின் நடத்தையில் ஏற்படும் மாற்றங்களை பதிவு செய்வதற்காக வில்லியம் வீலர் உள்ளூர் செய்தித்தாள்களில் விளம்பரம் கொடுத்து பொதுமக்களை பணியமர்த்தினார்.

அதில் அவர் 500க்கும் மேற்பட்ட நிகழ்வுகளை பதிவு செய்தார். அவர்கள் ஆந்தைகள் கூச்சலிடத் தொடங்குவது மற்றும் தேனீக்கள் தங்கள் கூட்டிற்குத் திரும்புவது உள்ளிட்ட பறவைகள், பாலூட்டிகள், பூச்சிகள் மற்றும் தாவரங்களில் ஏற்பட்ட மாற்றங்களை பதிவு செய்தனர்.

 
சூரிய கிரகணம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

கிரகணத்தின் போது வேறு ஏதாவது மர்மமான நிகழ்வுகள் நடக்கிறதா என்று கண்காணிக்க மக்களுக்கும் ஆய்வாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

ஆகஸ்ட் 2017 இல், இரண்டு நிமிடங்கள் மற்றும் 42 வினாடிகளுக்கு சூரியனின் கதிர்களை மறைக்கும் ஒரு கிரகணம் நிகழ்ந்த போது விஞ்ஞானிகள் மீண்டும் இந்த பரிசோதனையை செய்தனர்.

இந்த முறை, மேலும் ஆச்சரியமான முடிவுகள் கிடைத்தன. இருள் நெருங்க நெருங்க, ஒட்டகச் சிவிங்கிகள் பதற்றத்துடன் ஓடின. தெற்கு கரோலினா உயிரியல் பூங்காவில் ஆமைகள் இனச்சேர்க்கை செய்தன. மேலும் ஓரிகான், இடாஹோ மற்றும் மிசோரி மாநிலங்களில் வண்டுத்தேனீக்கள் (Bumble bee) ஒலி எழுப்புவதை நிறுத்திவிட்டன.

இந்நிலையில் அடுத்த சூரிய கிரகணம் திங்கள்கிழமை (ஏப்ரல் 😎 அன்று நிகழவிருக்கும் நிலையில், அது மீண்டும் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது. மெக்ஸிகோவிலிருந்து மெய்னே வரையிலான ஒரு குறுகிய நிலப்பரப்பில், விஞ்ஞானிகள் முழுமையான கிரகணப் பாதையை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.

வேறு ஏதாவது மர்மமான நிகழ்வுகள் நடக்கிறதா என்று கண்காணிக்க மக்களுக்கும் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

சூரிய கிரகணம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

கிரகணத்தின் போது ஒவ்வொரு விலங்குகளும் வெவ்வேறு விதமாக எதிர்வினையாற்றின.

'மிருகக்காட்சிசாலையே அன்று வழக்கத்திற்கு மாறானதாக இருந்தது’

தெற்கு கரோலினாவில் உள்ள ரிவர்பேங்க்ஸ் மிருகக்காட்சிசாலையில் பணிபுரியும் விஞ்ஞானி ஆடம் ஹார்ட்ஸ்டோன்-ரோஸ் கூறுகையில்,“ஆரம்பத்தில் மிருகக்காட்சிசாலையில் இருக்கும் விலங்குகளுக்கு 2017இல் ஏற்பட்ட கிரகணத்தால் தாக்கம் ஏற்படாது என்றே கருதினோம்” என்று கூறினார்.

அன்று கிரகணத்திற்கு முன்பும், பின்பும் 17 உயிரினங்களின் நடவடிக்கைகளை கவனிப்பதற்காக பயிற்சி பெற்ற ஆய்வாளர்களும், மக்களும் அங்கு கூடியிருந்தனர்.

“ஆனால், கிரகணத்தின் போது மிருகங்கங்களின் வழக்கத்திற்கு மாறான நடவடிக்கைகளால் அன்றைய நாள் குறிப்பிடத்தகுந்த ஒன்றாக மாறிவிட்டது. அங்கிருந்த மக்கள் அனைவரும் ஆரவாரமாக இருந்தனர்.”

அங்கிருந்த முக்கால்வாசி விலங்குகள் ஏதோ அற்புதமான மற்றும் வாழ்க்கையையே மாற்றப்போகும் நிகழ்வை எதிர்கொள்வது போன்ற நடவடிக்கைகளை வெளிப்படுத்தின என்று கூறுகிறார் ஹார்ட்ஸ்டோன்-ரோஸ்.

இந்த கலவையான எதிர்வினைகள் நான்கு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டது. அதில் சாதாரணமாக இருந்த விலங்குகள், தங்கள் மாலை நேர நடைமுறைகளைச் வழக்கமாக செய்தவை, கவலை அல்லது புதுமையான நடத்தைகளைக் காட்டியவை என பிரிக்கப்பட்டன.

கிரிஸ்லி கரடிகள் போன்ற சில விலங்குகள் ஒரு அரிய பிரபஞ்ச நிகழ்வை அனுபவிப்பதில் முற்றிலும் ஆர்வமில்லாமல் இருந்தன. "கிரகணம் முழுமையாக நிகழும் போது போது அவை உண்மையில் தூங்கிக்கொண்டும், இயல்பாகவும் இருந்தன," என்கிறார் ஹார்ட்ஸ்டோன்-ரோஸ்.

"ஒட்டுமொத்தத்தில் அவற்றில் ஒன்று தலையை குனிந்துகொண்டு என்ன நடந்தால் எனக்கென்ன கவலை என்பது போல இருந்ததாக," அவர் கூறுகிறார்.

"மறுபுறம் இரவுநேரப் பறவைகள் மிகவும் குழப்பமான மனநிலையில் காணப்பட்டன. தவளைகளின் தோற்றம் அழுகிய மரத்தின் பட்டைகளை போல இருந்தது” என்று கூறினார் ஹார்ட்ஸ்டோன்-ரோஸ்.

இரவு நேரங்களில் உணவுகளை தேடுவதற்காக பறவைகள் தங்களது உடலை மறைத்துக் கொள்வது போல, கிரகணத்தின் உச்சத்திலும் அதையே செய்தன. கிரகணம் முடிந்த பிறகு மரக்கிளையில் தங்களது வழக்கமான இடங்களுக்கு அவை நகர்ந்து விட்டன என்று கூறுகிறார் அவர்.

 
ஒட்டகச் சிவிங்கிகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

"நிதானமான விலங்குகளான ஒட்டகச்சிவிங்கிகள், காடுகளில் வேட்டையாடப்படும் போது ஓடுவது போல் திடுக்கிட்டு ஓட ஆரம்பித்தன."

இனச் சேர்க்கையில் ஈடுபட்ட ஆமைகள்

இதில் சோகம் என்னவெனில், கிரகணத்தின் போது சில விலங்குகள் கவலை மற்றும் துன்பமாக இருப்பது போன்ற அறிகுறிகளைக் காட்டின. "பொதுவாகவே நிதானமான விலங்குகளாக கருதப்படும் ஒட்டகச்சிவிங்கிகள், காடுகளில் வேட்டையாடப்படும் போது ஓடுவது போல் திடுக்கிட்டு ஓட ஆரம்பித்தன. இது டென்னசியில் உள்ள நாஷ்வில்லி மிருகக்காட்சிசாலையில் இருந்த ஒட்டகச்சிவிங்கிகளின் நடவடிக்கையை பிரதிபலித்தது.

ஆனால் இவற்றில் கலாபகோஸ் ராட்சத ஆமைகளே விசித்திரமான நடத்தையைக் கொண்டிருந்தன. "பொதுவாக, ஆமைகள் மிகவும் சாதுவாக அமர்ந்திருக்கும். அவை மிகவும் உற்சாகமாக இருக்கும் விலங்குகள் அல்ல," என்கிறார் ஹார்ட்ஸ்டோன்-ரோஸ்.

இருப்பினும், கிரகணம் உச்சமடையும் வேளையில் அவை வேகமாக ஒன்றுக்கொன்று இனப்பெருக்கத்தில் ஈடுபடத் தொடங்கிவிட்டதாக கூறுகிறார் அவர்.

கிரகணத்தை பார்த்து விலங்குகள் எப்படி எதிர்வினையாற்றுகின்றன என்பதை உற்றுநோக்க மிருகக்காட்சிசாலை ஒரு தனித்துவமான சூழலாக இருந்தபோதிலும், அதில் குறைபாடுகளும் இருந்தன.

"கிரகணம் உற்சாகத்தை தரக்கூடியது என்பதால், அன்று மக்கள் மிகவும் பரபரப்பாகவும் சத்தமிட்டுக்கொண்டும் இருந்தனர்" என்கிறார் ஹார்ட்ஸ்டோன்-ரோஸ்.

 
சூரிய கிரகணம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

கிரகணத்தின் போது சிலந்திகள் தங்களது வலையை அழித்துக் கொண்டன.

விரிவான தரவு சோதனை

அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையிலிருந்து மேற்கு கடற்கரை வரை பரவியுள்ள சுமார் 143 வானிலை நிலையங்களில் கிடைத்த தரவுகளைப் பயன்படுத்துவதே தரவு சார்ந்த அணுகுமுறை.

"எங்களிடம் எப்போதும் வானத்தை கண்காணிக்கும் இந்த நெட்வொர்க் உள்ளது, இது இந்த அரிய நிகழ்வுகளை பெரிய அளவில் ஆராய ஒரு சிறந்த வாய்ப்பாகும்" என்று அந்த ஆய்வுக்கு தலைமை தாங்கிய நில்சன் கூறுகிறார்.

சூரியன் மறையும் போது ஒளியின் மாற்றத்தை தவறாக நினைத்துக் கொண்டு, பறவைகள் மற்றும் பூச்சிகள் வானத்திற்கு திரண்டு வருமா என்று விஞ்ஞானிகள் ஆச்சரியப்பட்டனர். இருப்பினும், கிரகணத்தின் இருளில் பறவைகளைக் கண்டுபிடிப்பது கடினம். எனவே அங்கு தான் வானிலை நிலையங்கள் உதவி செய்கின்றன.

நில்ஸன் கூறுகையில், "தனிப்பட்ட பறவைகளைக் கண்காணிப்பதற்குப் பதிலாக, காற்றில் உள்ள உயிரியல் பொருட்களின் அளவை ஒட்டுமொத்தமாக அளவிடுகிறோம்" என்கிறார்.

ஒரு எளிய ரேடாரின் உதவியோடு பறவைகள் மற்றும் மேகங்கள் ஆகியவற்றை தனித்தனியாக மதிப்பிடுகிறோம்.

சூரியன் மறையும் போது, வானத்தில் செயல்பாடு பொதுவாக உச்சத்தை அடைகிறது. பறவைகள் தங்கள் இரவு நேர இடம்பெயர்வுகளைத் தொடங்குகின்றன. ஆனால் நடுப்பகலில் ஒரு அசாதாரணமான இருள் சுற்றுச்சூழல் மாற்றத்திற்கான அறிகுறியாக செயல்படுமா?

"உண்மையில் வானில் பறவைகளின் எண்ணிக்கை குறைந்து வருவதை நாங்கள் கண்டோம். பெரும்பாலான பறவைகள் கிரகணம் முடியும் வரை தரைக்கு சென்றுவிட்டன அல்லது பறப்பதை நிறுத்தி விட்டன.

இதில் ஒரு கோட்பாடு என்னவென்றால், ஒரு புயல் நெருங்கி வரும் போது அவை என்னை செய்யுமோ, அதையே தான் கிரகணத்தின் போதும் அவை செய்தன" என்று நில்ஸன் கூறுகிறார்.

இரண்டாம் கட்ட விளைவுகள்

பறவைகளின் முக்கியமான கூடு கட்டும் தளமாகவும், புலம்பெயர்ந்த பறவைகளுக்கு ஒரு இடைநிறுத்தப் புள்ளியாகவும் உள்ள நெப்ராஸ்காவின் பிளாட் நதி பள்ளத்தாக்கில், 2017 கிரகணத்தில் ஏற்பட்ட நடத்தை போக்குகளை தனிமைப்படுத்திப் பார்ப்பது எளிதாக இருந்தது.

வனவிலங்குகளைக் கண்காணிக்க விஞ்ஞானிகள் குழு ஒன்று இயற்கை பாதைகளில் டைம்-லேப்ஸ் கேமராக்கள் மற்றும் ஒலிக் கருவிகளை பொருத்தியது.

 
சூரிய கிரகணம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

வெஸ்டர்ன் மெடுலார்க்ஸ் பறவைகள் 95% தெளிவற்ற நிலைக்கு சென்றன அல்லது ஒருகட்டத்தில் மொத்தமாக பறப்பதை நிறுத்திவிட்டன.

இருப்பினும், பறவைகள் பல்வேறு வழிகளில் எதிர்வினையாற்றின என்று கீர்னியில் உள்ள நெப்ராஸ்கா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் எம்மா பிரின்லி பக்லி கூறுகிறார்.

வெஸ்டர்ன் மெடுலார்க்ஸ் பறவைகள் 95% கிரகணத்தின்போது மழுங்கடிக்கப்பட்ட நிலைக்கு சென்றன அல்லது ஒருகட்டத்தில் மொத்தமாக பறப்பதை நிறுத்திவிட்டன. மறுபுறம், அமெரிக்க கோல்ட்ஃபின்ச் மற்றும் சாங் ஸ்பாரோஸ் சிட்டுக்குருவிகள் கிரகண உச்சத்தின்போது சத்தமிடுவதை அதிகரித்தன என்று அவர் கூறுகிறார்.

மனிதர்களைப் போலவே, விலங்குகளும் கிரகணங்களின் போது வெவ்வேறு வழிகளில் எதிர்வினையாற்றுகின்றன. சில ஆய்வுகளில், மீன்கள் அடைக்கலம் தேடி ஓடின, சிலந்திகள் தங்களது வலைகளை அழித்தன.

மிகச் சமீபத்திய பரிசோதனையில், கிரகணத்தின் போது தேனீக்கள் ஒலியெழுப்புவதை நிறுத்தி விடுகின்றன.

ஆனால் அனைத்து மாற்றங்களுக்கும் நாம் ஒளியை காரணமாக கூற முடியாது, முழு கிரகணத்தால் ஏற்படும் இரண்டாம் நிலை விளைவுகளும் இருக்கின்றன என்று கூர்கிறார் பிரின்லி பக்லி.

நெப்ராஸ்காவில், வெப்பநிலை சுமார் 6.7 டிகிரி செல்சியஸ் (12 எஃப்) குறைந்து, ஈரப்பதம் 12% உயர்ந்தது. இது ஒரு குறுகிய காலத்திற்குள்ளான கடுமையான மாற்றமாகும்.

"அங்கு குறைந்த சூரிய ஒளி உள்ளது, இதன் விளைவாக சுற்றுப்புற வெப்பநிலை குறைகிறது, மேலும் இது காற்றில் ஏற்படும் மாற்றங்களால் அதிகரிக்கிறது" என்று அவர் கூறுகிறார். இந்நிலையில், மாற்றத்திற்கான துல்லியமான காரணத்தை கூறுவது கடினம்.

 
சூரிய கிரகணம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

இந்த முறை சூரிய கிரகணத்தின் போது ஏற்படும் மாற்றங்களை கண்காணிக்க அதிக மக்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

மக்களின் பங்கேற்பு

இந்த ஏப்ரல் மாதத்தில், வட கரோலினாவில் உள்ள ரிவர்பேங்க் மிருகக்காட்சிசாலை அதிக பொது மக்களுடன் கிரகணம் குறித்த தங்கள் கண்காணிப்பை விரிவுப்படுத்தியுள்ளது.

"சிலர் இதை மிகவும் அமைதியாக, தனியாக செய்ய விரும்புகிறார்கள். சிலர் தங்கள் நண்பர்களுடன் இதைச் செய்ய விரும்பலாம் அல்லது சிலர் ஏதாவது ஒருவகையில் பங்களிக்க விரும்பலாம்" என்று ஹார்ட்ஸ்டோன்-ரோஸ் கூறுகிறார்.

சூரிய கிரகண சஃபாரி திட்டம் ஆயிரக்கணக்கான மக்களை விலங்குகளின் நடத்தையைக் கவனிக்க ஊக்குவிக்கிறது. இருப்பினும் அவர்கள் உயிரியல் பூங்காக்களையும் தாண்டி, இதில் பண்ணை விலங்குகள் மற்றும் செல்லப்பிராணிகளை இணைக்க விரும்புகிறார்கள்.

அக்டோபர் 2023 வருடாந்திர கிரகணத்திலிருந்து ஆரம்பக்கட்ட தரவுகள் ஏற்கனவே சேகரிக்கப்பட்டுள்ளது. மொத்த சூரிய கிரகணத்தைப் போலல்லாமல், வருடாந்திர கிரகணம் என்பது சந்திரன் சூரியனை ஓரளவு மட்டுமே மறைக்கும். இதையே சிலர் ஒரு ‘நெருப்பு வளையம்’ என்று அழைக்கின்றனர்.

நாசா எக்லிப்ஸ் சவுண்ட்ஸ்கேப்ஸ் திட்டத்தை நடத்தி வருகிறது. இதில் அமெரிக்கா முழுவதிலும் இருந்து கிட்டத்தட்ட 1,000 தரவு சேகரிப்பாளர்கள் பணியாற்றுகின்றனர்.

இந்த பங்கேற்பாளர்கள் ஆடியோமோத்ஸ் எனப்படும் சிறிய தரவு ரெக்கார்டர்களைப் பயன்படுத்தலாம், அவை மூன்று ஏஏ பேட்டரிகளின் அளவு கொண்டவை. இந்த ஆடியோ தரவு ரெக்கார்டர்கள் கிரகணத்தின் போது வனவிலங்குகளிடமிருந்து வரும் ஒலிகளை பதிவு செய்யும்.

"குறிப்பாக ஒலிகள் விலங்குகள் மீது நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துகிறதா என்பதை நாங்கள் கவனித்து வருகிறோம்" என்று கூறுகிறார் ஹென்றி ட்ரே விண்டர். இவர் ஒரு சோலார் இயற்பியலாளர்.

அசாதாரண தூண்டுதல்களுக்கு விலங்குகள் எதிர்வினையாற்றும் விதம், மனிதனால் தூண்டப்படும் இடையூறுகளைப் பற்றிய புரிதலை வழங்கக்கூடும் என்று விண்டர் கூறுகிறார்.

"மரம் வெட்டுதல் அல்லது இரவு முழுவதும் விளக்குகள் ஒளிரும் கட்டுமான தளங்கள் காரணமாக ஒரு பகுதியில் எழும் உரத்த ஒலிகளின் விளைவை நீங்கள் கேட்கலாம்".

2044க்கு முன்பாக அமெரிக்காவில் தெரியும் கடைசி முழு சூரிய கிரகணம் இதுவாகும். எனவே பல மக்கள் விலங்குகள் மீதும் தங்கள் கவனத்தை திருப்பியுள்ளனர்.

https://www.bbc.com/tamil/articles/c3g50d876d8o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - விஞ்ஞானி த.வி. வெங்கடேஸ்வரன் விளக்கம்

முழு சூரிய கிரகணம் 2024

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

கோப்புப்படம்

கட்டுரை தகவல்
  • எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
  • பதவி, பிபிசி தமிழ்
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

வானியல் நிகழ்வுகள் குறித்த ஆர்வம் விஞ்ஞானிகளுக்கு மட்டுமல்ல, சாதாரண பொதுமக்களுக்கும் அதிகம். அதிலும் சூரிய கிரகணம் குறித்த ஆச்சர்யம் எல்லோருக்கும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. அதிலும் மிக அரிதான, நீண்ட நேரம் நீடித்த முழு சூரிய கிரகணத்தை திங்கட்கிழமை இரவு அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் கண்டு களித்தனர். மூன்று நாடுகளின் வாயிலாக இந்த கிரகணம் வட அமெரிக்காவை கடந்து சென்றது.

இந்த சூரிய கிரகணத்தின் போது, நான்கு நிமிடங்கள் மற்றும் ஒன்பது வினாடிகளுக்கு முழு இருள் நீடித்தது. இந்த முழு சூரிய கிரகணம் இந்திய நேரப்படி இரவு 9.12 மணிக்குத் தொடங்கி செவ்வாய்க்கிழமை அதிகாலை 2.22 மணிக்கு நிறைவடைந்தது. எனினும், முழு சூரிய கிரகணம், இந்திய நேரப்படி இரவு சுமார் 10.10 மணிக்குத் தொடங்கியது. இரவு நேரம் என்பதால் இந்தியாவில் இந்த கிரகணத்தைப் பார்க்க முடியவில்லை.

இந்த சூரிய கிரகணம் குறித்து உலகம் முழுவதிலும் செய்யப்பட்ட ஆராய்ச்சிகள் என்ன, இந்தியாவில் எத்தகைய ஆராய்ச்சி செய்யப்பட்டது, சூரிய கிரகணம் குறித்த தவறான கற்பிதங்கள் உள்ளிட்டவை குறித்து, விஞ்ஞான் பிரசார் அமைப்பின் முதுநிலை விஞ்ஞானி த.வி. வெங்கடேஸ்வரன் பிபிசி தமிழிடம் பகிர்ந்துகொண்டார்.

 
விஞ்ஞான் பிரசார் அமைப்பின் முதுநிலை விஞ்ஞானி த.வி. வெங்கடேஸ்வரன்
படக்குறிப்பு,

விஞ்ஞான் பிரசார் அமைப்பின் முதுநிலை விஞ்ஞானி த.வி. வெங்கடேஸ்வரன்

இந்த முழு சூரிய கிரகணத்திற்கு உலகம் முழுவதிலும் ஆர்வம் ஏற்பட்டது எதனால்?

பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் நிலவு செல்லும்போது சூரியனை நிலவு மறைப்பதுதான் சூரிய கிரகணம். சூரிய கிரகணம் ஓராண்டில் இருமுறை தான் நிகழும். ஆனால், இருமுறையும் முழு சூரிய கிரகணமாக இருக்குமா என்பதை சொல்ல முடியாது. எனவே, முழு சூரிய கிரகணம் அரிது.

மேலும், நிலப்பகுதியில் சூரிய கிரகணம் தெரிவதென்பது மேலும் அரிதான ஒன்று. கடல் பகுதியில் கூட சூரிய கிரகணம் தென்படலாம். குறிப்பிட்ட இந்த முழு சூரிய கிரகணம் தென்பட்ட மிகப் பெரும்பான்மையான பகுதி நிலப்பகுதியாக இருந்தது. இது, அமெரிக்கா கனடா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளில் தென்பட்டது. இந்த நாடுகளைப் பொறுத்தவரை பல ஆண்டுகளுக்குப் பிறகு முழு சூரிய கிரகணத்தைப் மக்கள் பார்ப்பதற்கான வாய்ப்பு அம்மக்களுக்குக் கிடைத்தது.

இந்த முழு சூரிய கிரகணம் நீண்ட நேரத்திற்கு நீடித்ததற்கான காரணம் என்ன?

நிலா பூமியை சுற்றி வரும்போது, கோழி முட்டை போன்று நீள்வட்டப் பாதையில் சுற்றும். எனவே, ஒரு சமயத்தில் நிலா பூமிக்கு அருகிலும் மற்றொரு சமயத்தில் பூமியிலிருந்து தொலைவிலும் இருக்கும். ஒரு பொருள் அருகிலிருக்கும் போது பெரிதாகவும் தொலைவிலிருந்தால் சிறியதாகவும் தெரியும் என்பது நமக்குத் தெரியும். அதனால், நிலா பூமியை சுற்றிவரும்போது குறிப்பிட்ட சமயத்தில் நிலா அளவில் பெரிதாகத் தெரியும்.

மற்றொரு சமயத்தில் சிறியதாகத் தோன்றும். சிறியதாக தோன்றும் சமயத்தில் சூரிய கிரகணம் நிகழ்ந்தால் சிறிது நேரத்திற்குத்தான் கிரகணம் நீடிக்கும். ஏனென்றால் அளவில் சிறியதாக தோன்றும் நிலாவால் சூரியனை சிறிது நேரத்திற்குத்தான் மறைக்க முடியும். ஆனால், அதுவே நிலா பெரிதாக இருக்கும்போது சூரிய கிரகணம் ஏற்பட்டால் அது நீண்ட நேரம் நீடிக்கும். இந்த முழு சூரிய கிரகணம், நிலா பெரிதாக இருப்பதற்கு சற்றேறக்குறைய அருகாமையில் இருந்ததால் இவ்வளவு நேரம் நீடித்தது.

சூரிய கிரகணம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தியாவில் இந்த முழு சூரிய கிரகணத்தைப் பார்க்க முடியாததற்கு என்ன காரணம்?

கோள வடிவிலான பூமி தன்னைத்தானே சுற்றுகிறது. அதனால், அமெரிக்காவில் சூரியன் தெரிந்தால் இந்தியாவில் தெரியாது. இந்த முழு சூரிய கிரகணம், அமெரிக்காவுக்கு நேராக நிலவு, அதற்கு நேர்கோட்டில் சூரியன் இருக்கும்போது ஏற்பட்டுள்ளது. அதனால், இந்தியாவில் தெரியவில்லை. சூரிய கிரகணம் அமெரிக்காவில் நிகழ்ந்தபோது ஏற்கனவே இந்தியாவில் இரவுதான். அதனால், அதனை நம்மால் பார்க்க முடியவில்லை.

இந்த சூரிய கிரகணத்தின்போது நாசா ராக்கெட்டுகள், விமானங்கள் மூலம் பல ஆய்வுகள் செய்துள்ளன. இந்தியா சார்பில் ஏதேனும் ஆய்வு செய்யப்பட்டதா?

பள்ளியில் எல்லோரும் இந்த சோதனையை செய்திருப்போம். ஒரு காந்தத்தை காகிதத்தின் அடியில் வைத்துவிட்டு, காகிதத்தின் மேலே இரும்புத் துகள்களை வைத்து காந்தப்புலக் கோடுககளை கண்டறிந்திருப்போம். அம்மாதிரி சூரியனுக்கும் காந்தப்புலம் இருக்கிறது. சூரியனை சுற்றியும் அதேபோன்று காந்தப்புலக் கோடுகள் தோன்றும். ஆனால், சூரியனின் காந்தப்புலக் கோடுகள் ‘இடியாப்பம்' போன்று இருக்கும். ஆனால், பூமியை சுற்றியிருக்கும் காந்தப்புலத்தைப் பார்த்தால், அழகாக வாரிய கூந்தல் போன்றிருக்கும். சூரியனின் காந்தப்புலத்தின் வடிவம் எப்படியிருக்கிறது என்பதைப் பொறுத்து சூரியனிலிருந்து சூரியப்புயல் உண்டாகும்.

எனவே, சூரியனின் காந்தப்புலம் எப்படி இருக்கிறது என்று தெரிந்தால், சூரியப்புயலை நாம் முன்கூட்டியே கணிக்கலாம். சூரியனின் காந்தப்புலங்களை முழு சூரிய கிரகணத்தின் போது மட்டுமே பார்க்க முடியும். ஏற்கனவே நம்மிடம் உள்ள தகவல்களை வைத்து காந்தப்புலம் இப்படி இருக்கும் என, கணினிவழி உருவாக்கி வைத்துள்ளோம். இது சரியா, இல்லையா என்பதை முழு சூரிய கிரகணத்தின்போது தான் பார்க்க முடியும்.

அந்த ஆராய்ச்சியைத்தான் இந்தியா நேற்று செய்தது. நம்முடைய கணிப்பில் ஏதேனும் பிழை இருந்தாலும் அடுத்த சூரிய கிரகணத்தில் தான் அதை சரிசெய்ய முடியும். கொல்கத்தாவில் உள்ள ஐசர் (IISER) நிறுவனத்தின் சூரிய கிரகணம் குறித்த ஆராய்ச்சிக் குழு இந்த ஆய்வில் ஈடுபட்டது. முனைவர் நந்தி என்பவர் இந்த ஆய்வை வழிநடத்தினார். உலகளவில் இந்த சூரிய கிரகணத்தின்போது மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளின் முதன்மை இலக்கு, சூரியனின் காந்தப்புலங்களை ஆராய்வதுதான்.

 
சூரிய கிரகணம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

கோப்புப்படம்

சூரியப்புயல் என்பது என்ன? அதனை நாம் ஏன் முன்கூட்டியே அறிய வேண்டும்?

சூரியப்புயல் பூமியை தாக்கினால், பூமியை சுற்றிவரக்கூடிய செயற்கைக்கோள்களுக்கு பாதிப்பு ஏற்படும். கடலில் ஏற்படும் புயலை முன்கூட்டியே அறிவது எப்படி முக்கியமோ, அதேபோன்று செயற்கைக்கோள்களை காப்பாற்ற சூரியப்புயல்களை கவனிப்பதும் முக்கியம். இந்தியாவுக்கு மட்டும் சுமார் ரூ. 50,000 கோடி மதிப்பிலான சொத்துக்கள் விண்வெளியில் இருக்கிறது. அதற்கு சேதம் ஏற்படாமல் இருக்க சூரியப் புயல்களை கண்காணிக்க வேண்டும்.

சூரிய கிரகணத்தின் போது விலங்குகளின் நடத்தையை ஆராய்வதற்கான தேவை என்ன?

விலங்குகளை பொறுத்தவரைக்கும் ஒரு நாளில் திரும்பி எப்போது தன் கூடடைய வேண்டும் என்று தோன்றும்? உயரப் போகும் ஒளி மங்கும்போதுதான் தோன்றும். அதாவது சூரியன் மறையும்போது தோன்றும். அதற்கு எந்த சைரன் ஒலியும் கிடையாதே. இயற்கை ஒளிதான் அதற்கான சமிக்ஞை. சூரிய கிரகணத்தின் போது ஒளி மங்குவதால், இரவாகிவிட்டது என விலங்குகளெல்லாம் தன் கூடடைகிறது. ஒளியை வைத்துக்கொண்டு விலங்குகள் எப்படி காலத்தைக் கணிக்கின்றன என்பதற்காகத்தான் இத்தகைய ஆராய்ச்சிகள் விலங்குகளின் மீது நடத்தப்படுகிறது.

சூரிய கிரகணம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

நாசா ஏன் விமானங்களில் சூரிய கிரகணத்தைத் துரத்திச் சென்றது? நிலப்பரப்பிலிருந்து அந்த ஆராய்ச்சியை மேற்கொள்ள முடியாது?

சாதாரணமாக நிலப்பரப்பில் இரண்டு அல்லது இரண்டரை நிமிடங்கள் சூரிய கிரகணம் முழுமையாக தெரியும். ஆனால், சூரிய கிரகணத்தின் பாதை தொடங்கும் இடத்தில் நான் விமானத்தில் இருக்கிறேன் என நினைத்துக்கொள்வோம். சூரியன் செல்லும் அதே வேகத்தில், பாதையில் நான் விமானத்தை ஓட்டிச்சென்றால் சுமார் அரை மணிநேரத்திற்கு மேல், சூரியனை முழு கிரகணமாக பார்க்க முடியும். அரை மணிநேரத்தில் காந்தப்புலக் கோடுகள் எப்படி மாறுகின்றன என்பதையும் பார்க்க முடியும். அதற்காகத்தான் விமானத்தில் சென்று ஆய்வு செய்தனர்.

இந்தியாவிலும் 1996-ம் ஆண்டில் ஏற்கனவே விமானத்தில் சென்று முயற்சி செய்தோம். ஆனால், அந்த சமயத்தில் அம்முயற்சியில் வெற்றியடைய முடியவில்லை. அதன்பின், 2004-ம் ஆண்டிலும் முயற்சி செய்தோம். அப்போதும் வெற்றியடையவில்லை. விமானம் சீராக செலுத்தப்பட வேண்டும். அதனால், வானிலை நிகழ்வுகளும் அதன் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் காரணிகளாகும்.

கடந்த காலத்தில் சூரிய கிரகணத்தின் போது மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகள் குறித்தும் த.வி. வெங்கடேஸ்வரன் விளக்கினார்.

 
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடு

“ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடு என்ன சொல்கிறதென்றால், ஒளி நேர்க்கோட்டில் பாய்ந்து வந்துகொண்டிருக்கிறது என எடுத்துக்கொள்வோம். இடையில் அதிக நிறையுள்ள ஒரு பொருள் இருந்தால், அந்த ஒளியின் பாதையை லேசாக மாற்றிவிடும். அந்த பாதை மாற்றத்தால், பூமிக்கு ஒளி வந்து சேரும்போது, அந்த ஒளி ஏற்பட்ட இடம் வேறு இடம் என நினைத்துக்கொள்வோம். அதனால், சூரியனுக்குப் பின்னால் இருக்கக்கூடிய விண்மீனிலிருந்து ஓர் ஒளிக்கதிர் வருகிறதென்றால், எவ்வளவு வளைந்து வரும்? அந்த பார்வைத் தோற்றம் குறிப்பிட்ட விண்மீன் எங்கு இருப்பதாகக் காட்டும் என கணக்கிட்டனர்? சூரியனுக்குப் பின்னால் இருக்கக்கூடிய விண்மீனை நம்மால் பார்க்க முடியாது. ஏனெனில், சூரியனின் வெளிச்சம் அதை மறைத்துவிடும். ஆனால், முழு சூரிய கிரகணத்தின்போது வானம் இருட்டாகிவிடும் என்பதால், அந்த விண்மீன்கள் தெரியும். அதனைப் புகைப்படம் எடுக்க முடியும். அப்படித்தான் ஒளி வளைந்திருக்கிறது என்பதை கண்டுபிடித்து ஐன்ஸ்டீன் சார்பியல் கோட்பாட்டை உறுதிப்படுத்தினார்" என்கிறார் த.வி. வெங்கடேஸ்வரன்.

ஹீலியம் கண்டுபிடிப்பு

சூரிய கிரகணத்தின்போது நிகழ்ந்த மற்றொரு முக்கிய கண்டுபிடிப்பு ஹீலியம். சூரியனுக்கு கிரேக்க மொழியில் ஹீலியோஸ் என்று பெயர். “சூரிய ஒளியை கிரகணத்தின்போது ஆராய்ந்த போதுதான் அதுவரை நாம் பார்க்காத தனிமம் இருக்கிறது என்பதை கண்டுபிடித்தனர். அந்த தனிமத்தை சூரியனில் மட்டும் பார்த்ததால் ஹீலியம் என்று பெயர் வைத்தனர். அதன்பிறகுதான் ஹீலியம் பூமியில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த கண்டுபிடிப்பு 1868 ஆம் ஆண்டு இந்தியாவில் தெரிந்த சூரிய கிரகணத்தின்போதுதான் ஹீலியம் கண்டுபிடிக்கப்பட்டது” என்றார் வெங்கடேஸ்வரன்.

சூரிய கிரகணம் சார்ந்து மதம், கலாசாரம் ரீதியாக கூறப்படும் வழக்கங்கள் குறித்த உண்மையை விளக்கினார் த.வி. வெங்கடேஸ்வரன்.

 
சூரிய கிரகணம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

கோப்புப்படம்

சூரிய கிரகணம் குறித்து மதம், கலாசாரம் சார்ந்து சொல்லப்படுபவை குறித்து…

சூரிய கிரகணத்தின்போது உணவு கெட்டுப்போகும் என்றெல்லாம் கூட சொல்வார்கள். தர்ப்பை புல்லை உணவில் போட்டால் உணவு நன்றாக இருக்கும், இல்லையென்றால் உணவு கெட்டுப்போய்விடும் என இன்றும் சொல்வார்கள். இதுகுறித்தெல்லாம் 1981-ல் இந்தியா ஆராய்ச்சி செய்துள்ளது. கிரகணத்தின்போது உணவில் நுண்ணுயிரிகள் ஏதேனும் வளருகிறதா என்று ஆராய்ச்சி செய்துள்ளனர். ஆனால், அப்படி எதுவும் வளரவில்லை. இவையெல்லாம் கட்டுக்கதை.

கர்ப்பிணிகள் வெளியே வரக்கூடாதா?

அது இந்தியாவில் இருக்கக்கூடிய நம்பிக்கை. அமெரிக்காவில் கர்ப்பிணிகள் நாற்காலியில் அமர்ந்துகொண்டு, கண்ணாடி அணிந்து சூரிய கிரகணத்தைப் பார்க்கின்றனர். அங்கெல்லாம் ஒன்றும் ஆகவில்லை. இந்தியாவில் தோன்றிய ஓர் சூரிய கிரகணத்தின்போது என் மனைவி கர்ப்பமாக இருக்கும்போது பார்த்தோம். என் மனைவிக்கும் ஒன்றும் ஆகவில்லை. என் குழந்தையும் நன்றாகத்தான் இருக்கிறது.

சூரிய கிரகணம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

நியூஜெர்சியில் சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை சூரிய கிரகணத்துடன் ஒப்பிடுகிறார்களே, சூரிய கிரகணத்தின்போது திடீர் வெள்ளம் ஏற்படும் என்ற தகவல்களும் இதையொட்டி டிரெண்டானதே?

இது தேவையற்ற அச்சம் காரணமாக பரப்பப்படும் போலிச் செய்தி. தினமும் உலகளவில் சிறிதும் பெரிதுமாக சுமார் 10 ஆயிரம் நிலநடுக்கங்கள் ஏற்படும். ஆனால், சூரிய கிரகணத்திற்கும் நிலநடுக்கத்திற்கோ, வெள்ளத்திற்கோ எந்த தொடர்பும் இல்லை. ‘இயற்கை நிகழ்வுகளெல்லாம் கடவுளின் சாபம்’ என குழப்புகின்றனர். நாம் பேசிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில்கூட கஜகஸ்தான், ஆப்கானிஸ்தான், நாகசாகி, மஸ்கட், திமூர், ஜம்மு-காஷ்மீர் (அனைத்தும் ரிக்டர் அளவில் 4-க்கும் மேல்) உள்ளிட்ட இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டன.

இந்தியாவில் பண்டைய காலத்திலும் சூரிய கிரகணம் குறித்து இத்தகைய நம்பிக்கைகள் இருந்தனவா?

கிரகணம் குறித்த இத்தகைய நம்பிக்கைகள் பண்டைய இந்தியாவில் இல்லை. இந்தியாவில் 8, 9-ம் நூற்றாண்டுகளில் குறிப்பிட்ட மதம் சார்ந்த அடிப்படைவாதத்தின்போதுதான் அறிவியல் கருத்துக்களுக்கு சவால் ஏற்பட்டது. அதேமாதிரி, ஐரோப்பாவில் 10, 11-ம் நூற்றாண்டுகளிலும் இத்தகைய கண்ணோட்டம் உருவானது.

அரேபிய பகுதிகளிலும் 13, 14-ம் நூற்றாண்டுகளில் இத்தகைய கருத்துக்கள் தோன்றின. எல்லா பகுதிகளிலும் மத அடிப்படைவாதம் எழுந்தபோதுதான் இத்தகைய மூடநம்பிக்கைகளும் அறிவியலுக்கு எதிரான கருத்துக்களும் தோன்றின. அமெரிக்காவிலும் இத்தகைய மூட நம்பிக்கைகளை வளர்க்கும் குழுக்கள் உள்ளன.

https://www.bbc.com/tamil/articles/ceke957d4yvo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகல் நேரத்தை இருளாக்கிய மிகப்பெரிய சூரிய கிரகணம்

Published By: DIGITAL DESK 3    09 APR, 2024 | 10:17 AM

image
 

இந்த ஆண்டுக்கான (2024) முதலாவது சூரிய கிரகணம் நேற்று திங்கட்கிழமை (08) நிகழ்ந்தது.

இந்த முழு சூரிய கிரகணத்தை, அமெரிக்கா, கனடா, மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் பல கோடி மக்கள் நேற்று (இலங்கையில் இரவாக இருந்தபோது) கண்டுகளித்தனர்.

இந்தச் சூரிய கிரகணத்தில், நிலவு சூரியனுக்கும் பூமிக்கும் இடையே வந்து, அதன் ஒளியை முழுவதும் மறைத்தது.

இந்தக் கிரகணத்தின் பாதை, வட அமெரிக்கக் கண்டம் முழுதும் அமைந்தது. மேற்கே மெக்சிகோவின் கடற்கரையிலிருந்து, கிழக்கே நயாகரா நீர்வீழ்ச்சி வரை இந்தக் கிரகணம் கடந்து சென்றது.

இந்த சூரிய கிரகணத்தின் போது, நான்கு நிமிடங்கள் மற்றும் ஒன்பது வினாடிகளுக்கு முழு இருள் நீடித்தது. இந்த முழு சூரிய கிரகணம் இலங்கை நேரப்படி இரவு 9.12 மணிக்கு ஆரம்பித்து செவ்வாய்க்கிழமை அதிகாலை 2.22 மணிக்கு நிறைவடைந்தது. எனினும், முழு சூரிய கிரகணம், இலங்கை நேரப்படி இரவு சுமார் 10.10 மணிக்கு ஆரம்பித்தது. இரவு நேரம் என்பதால் இலங்கையில் இந்த கிரகணத்தைப் பார்க்க முடியவில்லை.

263.JPG

 

6.jpg

1.jpg

8.jpg

7.jpg

10.jpg

11.jpg

https://www.virakesari.lk/article/180786

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சூரிய கிரகணம்: பகல் நேரத்தில் அமெரிக்கா இருளில் மூழ்கிய நிசப்தமான தருணம் - கண்ணைக் கவரும் புகைப்படங்கள்

முழு சூரிய கிரகணம், அமெரிக்கா, கனடா, மெக்சிகோ

பட மூலாதாரம்,JEFF OVERS/BBC

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஹாலி ஹாண்டெரிச்
  • பதவி, பிபிசி செய்தியாளர், வாஷிங்டன்
  • 9 ஏப்ரல் 2024, 02:38 GMT

முழு சூரிய கிரகணத்தை, அமெரிக்கா, கனடா, மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் பல கோடி மக்கள் நேற்று (திங்கள், ஏப்ரல் 8 – இந்தியாவில் இரவாக இருந்தபோது) கண்டுகளித்தனர்.

இந்தச் சூரிய கிரகணத்தில், நிலவு சூரியனுக்கும் பூமிக்கும் இடையே வந்து, அதன் ஒளியை முழுவதும் மறைத்தது.

இந்தக் கிரகணத்தின் பாதை, வட அமெரிக்கக் கண்டம் முழுதும் அமைந்தது. மேற்கே மெக்சிகோவின் கடற்கரையிலிருந்து, கிழக்கே நயாகரா நீர்வீழ்ச்சி வரை இந்தக் கிரகணம் கடந்து சென்றது.

முழு சூரிய கிரகணம், அமெரிக்கா, கனடா, மெக்சிகோ

பட மூலாதாரம்,HECTOR VIVAS/GETTY IMAGES

படக்குறிப்பு,

மெக்சிகோவின் மசாட்லான் கடற்கரையில் சூரிய கிரகணத்தைக் காணும் குழந்தைகள்

இது முதன்முதலில் மெக்சிகோவின் மசாட்லான் நகரத்துக்கு அருகில், இந்திய நேரப்படி இரவு சுமார் 11:40 மணிக்குத் தென்பட்டது. வட அமெரிக்க கண்டத்தை தென்மேற்கிலிருந்து வடகிழக்கு வரை கடந்த முழு கிரகணம், இறுதியாகத் தென்பட்டது கனடாவின் கிழக்குக் கடற்கரையான நியூஃபவுண்ட்லேண்டின் ஃபோகோ தீவில்.

முழு சூரிய கிரகணம், அமெரிக்கா, கனடா, மெக்சிகோ

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

மெக்சிகோவில் முழு சூரிய கிரகணத்தின் போது சூழ்ந்த இருள்

கிரகணம் தென்பட்ட மூன்று நாடுகளிலும் பல மக்கள் பொது வெளிகளில் கூடி, ஆரவாரத்துடன் அதனைக் கண்டுகளித்தனர்.

 
முழு சூரிய கிரகணம், அமெரிக்கா, கனடா, மெக்சிகோ

பட மூலாதாரம்,HENRY ROMERO/REUTERS

படக்குறிப்பு,

இந்த நிகழ்வைக் காண மக்கள் விசேஷ பாதுகாப்புக் கண்ணாடிகளைப் பயன்படுத்தினர்

‘எங்கும் இருள் சூழ்ந்தது’

முதலில் நிலாவின் விளிம்பு சூரியனைத் தொடுவதுபோலத் தோன்றியது. தொடர்ந்து நிலா சூரியனை முழுவதுமாக மறைத்தது. கிரகணத்தின் உச்சத்தில், முழுவதும் இருள் சூழ்ந்தது. நிலாவின் விளிம்பைச் சுற்றியும் சூரியனின் ஒளிவட்டம் மட்டுமே தென்பட்டது.

முழு சூரிய கிரகணம், அமெரிக்கா, கனடா, மெக்சிகோ

பட மூலாதாரம்,ANGELA WEISS/GETTY IMAGES

படக்குறிப்பு,

முழு கிரகணத்தின் போது நயாகரா நீர்வீழ்ச்சியின் மேல் வானம் இருண்டது

கிரகணத்தின்போது வெப்பநிலை திடீரெனச் சரிந்தது. எங்கும் நிசப்தம் சூழ்ந்தது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் டல்லாஸ் நகரத்தில் தனது தந்தையுடன் கிரகணத்தைக் கண்ட மாணவியான ஏடி, கிரகணத்தின்போது எங்கும் கும்மிருட்டு சூழ்ந்ததாகக் கூறினார். “மீண்டும் வெளிச்சம் வந்தபோதுதான் வெட்டுக்கிளிகள், பறவைகள் ஆகியவை சத்தம்போடத் துவங்கின,” என்றார் அவர்.

முழு சூரிய கிரகணம், அமெரிக்கா, கனடா, மெக்சிகோ

பட மூலாதாரம்,ANGELA WEISS/GETTY IMAGES

படக்குறிப்பு,

நயாகரா நீர்வீழ்ச்சியின் மேல் தெரிந்த சூரிய கிரகணம்

வானியல் ஆர்வலரான டார்சி ஹோவர்ட், கிரகணத்தைக் காண்பதற்காக மத்திய ஆர்கன்சாஸில் உள்ள தனது வீட்டிலிருந்து மிசௌரி நகரத்திற்கு வந்திருந்தார். மோசமான வானிலை காரணமாக தான் கிரகணத்தைப் பார்ப்பது தடைபடக்கூடாது என்பதற்காக அவர் இந்தப் பயணத்தை மேற்கொண்டார்.

மிசௌரொயின் உள்ளூர் நேரப்படி மதியம் சுமார் 2 மணிக்கு முழு கிரகணம் நிகழ்ந்தது. அப்போது ஒரு ‘வினோதமான இருள்’ சூழ்ந்ததாக ஹோவர்ட் கூறினார். "வேறு ஏதோ உலகில் இருப்பதுபோன்ற உணர்வு எழுந்தது," என்று அவர் கூறினார்.

முழு சூரிய கிரகணம், அமெரிக்கா, கனடா, மெக்சிகோ

பட மூலாதாரம்,HENRY ROMERO/REUTERS

படக்குறிப்பு,

முதலில், நிலவின் விளிம்பு சூருயனைத் தீண்டுவதுபோலத் தெரிந்தது

அமெரிக்காவில் பலரும் இந்தக் கிரகணத்தைத் தங்கள் வாழ்க்கையின் முக்கியமான நாளாக மாற்றிக்கொள்ள விரும்பினர். முழு கிரகணம் நிகழும்போது திருமணம் செய்துகொண்டனர். அர்கான்ஸாஸ் மாகாணத்தில் அமெரிக்கா முழுதும் இருந்து வந்திருந்த 300 ஜோடிகள் முழு கிரகணம் நிகழ்ந்த தருணத்தில் திருமணம் செய்து கொண்டனர்.

 
முழு சூரிய கிரகணம், அமெரிக்கா, கனடா, மெக்சிகோ

பட மூலாதாரம்,MARIO TAMA/GETTY IMAGES

படக்குறிப்பு,

கிரகணத்தின்போது அர்கான்ஸாஸ் மாகாணத்தில் திருமணம் செய்துகொண்ட ஜோடிகள்

கிரகணத்தின்போது பட்டப்பகலில் நட்சத்திரங்கள் தென்பட்டன. மக்கள் அவற்றை ஆரவாரத்துடன் வரவேற்றனர்.

ஆனால் பல அமெரிக்க நகரங்களில் முழு சூரிய கிரகணம் தென்படவில்லை. இருந்தும் இந்த வானியல் நிகழ்வு ஆச்சரியமூட்டுவதாக அமைந்தது.

முழு சூரிய கிரகணம், அமெரிக்கா, கனடா, மெக்சிகோ

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

நியூயார்க் நகரத்தில் கிரகணத்தைக் காணக் கூடிய மக்கள்

உதாரணமாக நியூயார்க் நகரத்தின் மன்ஹாட்டனில் உள்ள ஒரு உயரமான கட்டிடத்தின் மாடியில் நூற்றுக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். அவர்களுக்குப் பிறைபோன்ற பகுதி சூரிய கிரகணம் தென்பட்டது.

சூரிய கிரகணம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கனடாவில் முடிவடைந்த கிரகணம்

நயாகரா நீர்விழ்ச்சி இருக்கும் அமெரிக்க-கனடா எல்லையின் இருபுறமும் மக்கள் கிரகணத்தைக் காணக் குவிந்திருந்தனர். இப்பகுதியில் வானிலை மோசமாக இருந்தாலும், முழு கிரகணத்தின் வேளையில் மேகமூட்டம் விலகி, வானியல் நிகழ்வைக் காணமுடிந்தது.

கனடாவின் மோன்ரியால் நகரத்தில் உள்ள மெக்-கில் பல்கலைகழகத்தில் 20,000 பேர் கூடியிருந்தனர்.

முழு கிரகணம், கனடாவின் கிழக்குக் கடற்கரையான நியூஃபவுண்ட்லேண்டின் ஃபோகோ தீவில் இறுதியாகத் தென்பட்டது.

https://www.bbc.com/tamil/articles/ckk7gg51r0vo

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.