Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது (edited)

இது என்ன மழையோ, இங்கு நான் இருக்கும் பாலை நிலத்தில் இப்படி பெய்து கொண்டேயிருக்கின்றது. இங்கு முன்னர் இப்படியான ஒரு மழையை நான் காணவில்லை. ஊரில் தான் மாரியில் இப்படி பெய்திருக்கின்றது. 

************************** 

ஒரே மழை

----------------
அன்று அங்கே
மாரியில் அடைமழையில்
இடுப்பளவு ஓடும் வெள்ளத்தில் 
குளிப்போம்
 
வெள்ளத்தின் போக்கில் கடல் வரும்
ஓங்கி ஓங்கி கடல் அலை
கரையை அடிக்கும்
என்னூருக்கு ஏதோ ஒரு சாபமிடுவது போல
 
அலையை தொட்டு தொட்டு ஒதுங்குவோம்
 
வெட்ட வெளியை வெள்ளம் மூடும்
பத்து லட்சம் பேத்தைக் குஞ்சுகள் பிறக்கும் 
அன்று வந்து வெள்ளத்தில் 
வால் ஆட்டி ஆட்டி நீந்தும் அவை
 
ஒரு கையில் அள்ளினால்
அதில் நூறு குஞ்சுகள்
 
நிற்கும் வெள்ளத்தில்
ஊதாப்பூ ஒன்று பூக்கும்
கிண்டிப் பார்த்தால்
கிழங்கு இருக்கும் அடியில்
 
தவளை முட்டைகளும்
ஊதாக் கிழங்குகளும்
நாங்களும்
அடை மழைக்கு காத்திருந்தோம்
ஒவ்வொரு மாரியிலும்
 
எல்லா கோவில் குளங்களும் நிரம்பும்
இன்னும் இன்னும் மேலே மேலே ஏறி
தலை கீழாக குதிப்போம்
 
மாரி முடிய முன்
காலில் விரலிடையில்
சிரங்கென்று ஒன்று வந்து நிற்கும்
அதுக்கு மருந்து மண்ணெண்ணெய்
 
அன்றைய சுகாதார அமைச்சர்
இந்த மருந்தை சொல்லவில்லை
இது எங்களின் சுய கண்டுபிடிப்பு
 
மாரி முடிய
மைதானம் மூடி 
இடுப்பளவு புல் நிற்கும்
 
மாடுகளைக் கட்ட 
அந்த புல் போகும்
 
பந்தடிக்க கால் வைத்தால்
அவ்வளவும் முள்
 
அதையும் 
காலைக் கொடுத்து எடுப்போம்
 
காலையும் மாலையும் அங்கேயே உருண்டோம்
 
இப்ப
இங்கேயும் அடைமழை
 
அங்கே பெய்த மழை
நான் இங்கே வந்தவுடன்
ஏழு கடல் ஏழு மலை தாண்டி வந்து
இப்ப இங்கே கொட்டுகின்றது
 
நல்லார் ஒருவர் உளரேல்...........
 
இந்த மழை
கூரையில் விழும் சத்தம்
பட பட என்று கேட்கின்றது
 
இரட்டைக் கண்ணாடி யன்னல்களில்
வெளிக் கண்ணாடிகளில்
வழிந்து ஓடுகின்றது
 
மற்றபடி
இந்த மழைக்கும்
எனக்கும் 
வேறு தொடர்பேதும் இல்லை.
Edited by ரசோதரன்
  • Like 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, ரசோதரன் said:

நல்லார் ஒருவர் உளரேல்...........

மழைக்கும் இதுக்கும் தொடர்பு இல்லைத்தானே?

பழையதை நினைவூட்டியதுக்கு நன்றி ரசோதரன்

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
45 minutes ago, Kavi arunasalam said:

மழைக்கும் இதுக்கும் தொடர்பு இல்லைத்தானே?

பழையதை நினைவூட்டியதுக்கு நன்றி ரசோதரன்

👍....

மழையின் பெயரால், ஒட்டியும் ஒட்டாமலும் வாழும் புலம் பெயர் வாழ்வை சொல்ல முயன்றேன்.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மழையைக் கண்டதும் பூமிக்குப் போட்டு வைத்ததுபோல் உலாவித்திரியும் பட்டுப் பூச்சிகளையும் குபீரென வெடித்துக் கிளம்பும் காளான்களைப் பற்றியும் ரெண்டு வார்த்தை எழுதியிருக்கலாம் என்று தோன்றியது.......!  😁 

  • Like 1

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.