Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

"காதல் கடிதம்"


காதலின் சின்னம் காதல் கடிதம் என்பார்கள். அங்கு தான் ஒருவர் மற்றவர் மேல் உள்ள மோகம் அல்லது அழகு வர்ணனையை தங்கு தடை இன்றி, வெட்கம் இன்றி, வெளிப்படையாக  கூறமுடியும். யாருக்கு தெரியும் என் காதல் தவறான புரிதலுடனும், பிழையான இடத்தில் சேர்ந்த காதல் கடிதத்துடனும் மலர்ந்தது என்று! 


“என் அன்பிற்கினியவளே, அழகின் தேவதையே என் மனதில் நான் உன்னோடு எப்பொழுதும் உரையாடுகிறேன். அதை நீ எப்ப அறிவையோ நான் அறியேன்?  எனக்கு முன்னால் உன்னைப் பார்க்கிறேன், நான்  தலை முதல் கால் வரை உன்னை அன்போடு மெல்ல வருடுகிறேன், உனக்கு முன்னால் முழந்தாளிட்டு உன்னை ரசிக்கிறேன், ‘அன்பே! உண்மையாக உன்னைக் காதலிக்கிறேன்! உன்னுடைய இனிமை நிறைந்த தனித்துவமான இதயத்தை என் இதயத்துடன் சேர்த்து அணைக்கிறேன். அந்த சுகத்தில் நான் மெளனமாக போய்விடுவேன், ஒரு வார்த்தை கூடப் வாயில் வராது. என் உதடுகளினால் உன்னை முத்தமிட முடியாதலால் என்னுடைய நாக்கினுல்தான் உன்னை முத்தமிடுகிறேன், உன்னை வார்த்தைகளால் அலங்கரிக்கிறேன். நான் கவிதை கூட இப்ப எழுதுகிறேன்! நான் என் பல்கலைக்கழக படிப்பை அடுத்த கிழமை பேராதனையில் ஆரம்பிக்கிறேன். இனி உன்னை, பாடசாலைக்கு போகும் பொழுது பார்க்கும் சந்தர்ப்பம் அற்றுப் போகப்போகிறது. அது என்னை வாட்டுகிறது. அது தான் என் உள்ளத்தின் கிளர்ச்சியை, இதுவரை சொல்லாத காதலை,  ஒவ்வொரு அசைவிலும் ஒவ்வொரு பார்வையிலும் என்னுடைய வாழ்க்கையின் மிகவும் சிறந்த, இனிமையான நினைவுகளைத் தூண்டிய அந்த முகத்திடம் எழுதுகிறேன்! பதிலை, என் பெயருடன், முதலாம் ஆண்டு, பொறியியல் பீடத்திற்கு அனுப்பலாம் பிரியமானவளே உனக்காக காத்திருப்பேன்!"


அவள் என் பாடசாலையிலேயே, நாவலர் வீதியில் அமைந்த, முன்றலில் மாமரங்கள் செழித்து அழகு பொழிந்த, யாழ்.கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயத்திலேயே படித்தாள் அவள் உயர்தர வகுப்பு முதலாம் ஆண்டு மாணவி. இம்முறை நான் மட்டுமே பொறியியல் பீடத்துக்கு அங்கிருந்து தெரிவாகி உள்ளேன், மொத்தமாக பத்துக்கு அதிகமான மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகி உள்ளோம். எம்மை கௌரவித்து பாடசாலையில் நடந்த நிகழ்வுக்கு சாதாரண மற்றும் உயர் வகுப்பு மாணவர்களும் கலந்து கொண்டார்கள். அவள் முன் வரிசையில் தன் தங்கையுடன் இருந்தாள். தங்கை சாதாரண வகுப்பு முதல் ஆண்டு மாணவி என்பதை பின்பு தான் அறிந்தேன். 


என் கண்கள் சந்தர்ப்பம் வரும்பொழுது எல்லாம் மேடையில் இருந்து  அவளையே பார்த்தது, இனி எப்ப இவளை பார்ப்பேனென ஏங்கியது!


“மைவடிவக் குழலியர்தம் வதனத்தை
        நிகர்‘ஒவ்வா மதியே! மானே!!
செய்வடிவைச் சிற்றிடையை வேய்தோளைத்
        திருநகையைத் தெய்வ மாக
இவ்வடிவைப் படைத்தவடி வெவ்வடிவோ
        நானறியேன்! உண்மை யாகக்
கைபடியத் திருமகளைப் படைத்திவளைப்
        படைத்தனன் நல்கமலத் தோனே! ”


இங்கே எந்தக் குறையும் இல்லாத சிற்பம் போன்று என் முன் இருக்கும் உயிருள்ள இப்பெண்ணின் வடிவத்தைப் படைத்தவன் யார் என்று எனக்குத் தெரியாது ஆனால் கம்பனின் மகன் அம்பிகாபதியின் பாடல் கட்டாயம் இவளுக்கு பொருந்தும். இவளைப் படைத்தவன் பிரம்மனாய் ஒருவேளை இருந்தால், நிச்சயம் இவளை உருவாக்குவதற்கு முன் ஒரு மாதிரிக்காக திருமகளை உருவாக்கிய பின் தான் அவளிடம் இருக்கும் குறைகளைச் சரிசெய்து விட்டு இவளை உருவாக்கி இருப்பான் என்பது மட்டும் நிச்சியம்! உனக்கு மட்டும் ஏன் இத்தனை அழகு! என்று நான் ஆச்சரியமாக மீண்டும் மீண்டும் அவளை பார்க்கும் பொழுது தான் அவளின் தங்கையும் வந்து அவள் அருகில் இருந்தாள். நீ இருக்கும் இடமெல்லாம் உன் அழகை அள்ளித் தெளித்து விடுகிறாய் போலும், அதனால் தான் உன் தங்கையும் அழகாவே காட்சியளிக்கிறாளே, என்றாலும் அவளின் முகத்தில் இன்னும் சிறுபிள்ளைத்தனமும் அப்பாவித்தனமும் குடிகொண்டு அக்காவில் இருந்து வேறுபடுத்தி காட்டியது.  


சாதாரண வகுப்பு முதல் ஆண்டு மாணவ மாணவிகளின் சார்பாக அவளின் தங்கையே வாழ்த்துமடல் வாசிக்க வந்தார். அப்ப தான் அவளின் பெயரை இழையினி என்று அறிந்தேன். என்னவளின் பெயரோ பூங்குழலி.   


"பொன்காட்டும் நிறம்காட்டிப் பூக்காட்டும் விழிகாட்டிப்
பண்காட்டும் மொழிகாட்டிப் பையவே நடைகாட்டி
மின்காட்டும் இடைகாட்டி நன் பாட்டில் வாழ்த்து கூறினாள்!"


உண்மையில் அந்த அரங்கமே எழுந்து நின்று கைதட்டியது. அவள், மேடையில் இருந்த எங்களுக்கு கை கொடுத்து, தனிப்பட்ட வாழ்த்தும் கூறினாள். நான் பூங்குழலிக்கு எழுதிய கடிதம் இன்னும் என் கால்சட்டை பாக்கெட்டில் இருந்தது, மெல்ல அதை எடுத்து, அவள் எனக்கு கை கொடுக்கும் பொழுது, அதை அவள் கையில் திணித்து, அக்காவிடம் கொடு என்று மெல்லிய குரலில் கூறினேன். அவளுக்கு அது கேட்டு இருக்கும் என்றுதான் அந்தநேரம் நம்பினேன். அவள் மீண்டும் பூங்குழலியின் பக்கத்தில் போய் இருந்தாள். ஆனால் அந்த கடிதத்தை எனோ கொடுக்கவில்லை, அதை மெல்ல தனது பாடசாலை சீருடையின் பாக்கெட்டில் வைப்பதை மட்டும் கண்டேன். ஒருவேளை பின் தனிய பூங்குழலியுடன் வீடு திரும்பும் பொழுது கொடுக்கலாம் என்று நினைத்தேன். அதன் பின் நான் பூங்குழலியை காணவில்லை. நானும் பேராதனை புறப்பட்டு விட்டேன்.


நான் பேராதனை போய் ஒரு மாதம் ஆகிவிட்டது . இன்னும் ஒரு பதிலும் பூங்குழலியில் இருந்து வரவில்லை. என்றாலும் அவள் இன்னும் என் நெஞ்சில் இருந்து மறையவில்லை. பூங்குழலி என்ற பெயருக்கு ஏற்றவாறு அவள் கூந்தலில் ஒரு ரோசா பூ அன்று, நான் பார்த்த அந்த கடைசி நாளில் அழகு பெற்று இருந்தது. நீண்ட கரிய கூந்தல் சுருண்டு சுருண்டு விழுந்து அவளுடைய கடைந் தெடுத்த தோள்களை முத்தமிட்டு கொண்டு இருந்தது. அளவோடு பொன் நகைகள் அவள் அணிந்து கொண்டிருந்தாள். அவை  அவளுடைய மேனியில் பட்டதனாலோ என்னவோ அவையும் அழகு பெற்றிருந்தன. அழகே ஒரு வடிவமாகி வந்தால், அதற்கு எந்த ஆபரணத்தைக் கொண்டு அழகு செய்ய முடியும்? அப்படித்தான் பூங்குழலி அன்று இருந்தாள். அது தான் அவளை இன்னும் மறக்க முடியாமல் தவிக்கிறேன். 'அலைகடலும் ஓய்ந்திருக்க அகக் கடல்தான் பொங்குவதேன் நிலமகளும் துயிலுகையில் நெஞ்சகந்தான் பதைப்பதுமேன்?' எனக்கு அதன் தாக்கத்தை வர்ணிக்க முடியாது. ஆனால் அது அவளின் முடிவானால், நான் ஒன்றும் செய்யமுடியாது.  


நான் அடுத்தநாள், பெப்ரவரி 14 ஆம் திகதி, வகுப்புக்கு போகமுன்பு, ஒரு நற்பாசையில் அன்றும் தபால் ஏதாவது வந்திருக்கா என்று மீண்டும் பார்த்தேன். கொஞ்சம் கனமாக, ஆனால் அனுப்பியவர் விபரம் வெளியே குறிப்பிடாமல் எனக்கு வந்திருந்தது. நண்பர்கள் பலர் அங்கு நின்றதால், அதை உடன் திறந்து பார்க்கவில்லை. மனது எனோ மகிழ்வாக இருந்தது, 'ஹாப்பி வேலன்டைன் டே' என யாரோ யாருக்கோ சொல்லுவது காதில் கேட்டது. என்றாலும் மதிய உணவு இடைவெளியில்  என் அறையில் போய் அவசரம் அவசரமாக திறந்தேன். அனுப்பியவர் பெயரை பார்த்தவுடன் எனக்கு ஆத்திரம் ஆத்திரமாகத் தான் வந்தது . அது உங்கள் செல்ல நண்பி இழையினி என்று இருந்தது. என்றாலும் அந்த மடலை வாசிக்க தொடங்கினேன்


"அன்புள்ள அதிசயமே, என் அன்பே , அன்று நீங்கள் என் கையில் திணித்த அன்புக் கடிதம், அதில் உங்கள் உள்ளங்கை வேர்வையின் நறுமணம் என்னை என்னென்னவோ செய்துவிட்டது. நீங்கள் அப்பொழுது எதோ சொன்னது கூட காதில் விழவில்லை, மன்னிக்கவும்! வரிகள் தொடுத்தல்ல, என் சுவாசம் தொடுத்து, சுவாசம் சுமக்கும் நேசம் தொடுத்து, நேசம் நெய்த உன் பாசம் தொடுத்து, இதழ் வாசம் தேடும் என் காதல் தேசம் தொடுத்து, எத்தனையோ தடவை வாசித்துவிட்டேன்! அன்பு மணாளனே! என் பிரியமான தோழனே !!, உன் கவர்ச்சி இனிமையானது, தேன் போல் இனிமையானது. உன் வசீகரம் இனிமையானது, அமுதம் போல் இனிமையானது. நீ என்னை வயப்படுத்தி விட்டாய்,எனவே எனது சுய விருப்பத்தில் நீ கேட்ட பதிலைத் தருகிறேன். காத்து வைத்ததுக்கு மன்னிக்கவும் என் இதயத்திற்கினிய காதலனே. காதலர் தினத்தில் என் பதில் உன்னை அடைய வேண்டும் என்பதால் அன்பே சுணங்கிவிட்டது. நீ என்னை மயக்கி விட்டாய், எனவே எனது  கட்டற்ற துணிவில் நான் உன்னிடம் வருவேன்! நீயே என் என்  மதிப்புள்ள காதற் கண்மணி, அதில் இனி மாற்றம் இல்லை, - அன்புடன், உங்கள் இழை"


நான் அழுவதா சிரிப்பதா எனக்குப் புரியவே இல்லை. அவள் இவ்வளத்துக்கு என்னை நம்பிவிட்டாள். இல்லை நான் தந்த கடிதம் பூங்குழலிக்கு கொடுக்கவே என்று சொன்னால், அவள் ஒரு மாதமாய் என்னென்னவோ கற்பனையில் மிதந்து காத்திருந்தவள், எப்படி அதை ஏற்பாளோ? எனக்குத் தெரியாது. ஆனால் ஒன்று மட்டும் உண்மை , நான் விரும்பியவளை விட, என்னை விரும்பியவள் எப்பவும் நல்லதே!  இப்ப என் வாழ்க்கையில் குறுக்கிட்டவர்கள் இரண்டு பெண்களாக ஆகிற்று, ஒருத்தி, இழையினி என் தவறான கடிதத்தால், என்னை மிகவும் விரும்புகிறவள். மற்றொருத்தி, பூங்குழலி என்னால் மட்டுமே ஒருமுகமாக விரும்பப்பட்டவள், அவளுக்கு இன்னும் என் காதல் தெரியாது.  இருவருமே நல்ல அழகு, ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல, வித்தியாசம் வயது மட்டுமே. கையில் இருக்கும் பறவையை கண்கள் தேடும் பறவையை நம்பி கைவிடலாமா ? அது தான் இப்ப எனக்குத் தடுமாற்றம்?


"உறங்கிக் கிடந்த மனது ஒன்று
உறக்கம் இன்றி தவிப்பது ஏனோ?
உறவு கேட்ட காதல் கடிதம் 
கை மாறிப் போனது ஏனோ?"


"கண்கள் மூடி கனவு கண்டால்
பூங்குழலி அருகில் வருவது ஏனோ?
கருத்த கூந்தல் காற்றில் ஆட 
இழையினி மடல் வரைந்தது ஏனோ?"


"காற்றில் இதயத்தில் குரல் கேட்க
காத்திருந்து விழித்திருந்து ஏங்குவது எனோ?
காதல் மொழியில் வாழ்த்து அனுப்பி 
காதலர்தினத்தில் தடுமாற்றம் தருவது ஏனோ?" 


"காந்தி மடியில் சரணம் அடைந்தேன்
காரணம் கூறி விடை கேட்டேன்? 
காமம் துறந்த முனிவன் அவன்
தேடி வந்தவளை தேற்று என்றான்!"


நன்றி


[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அடே, இதுவும் நல்ல தொழிலா இருக்கே! சத்தமில்லாமல், எதிர்ப்பில்லாமல், வந்தோமா போனோமா என்று கைநிறைய பணம். எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள், திட்டம் போடுகிறார்கள், கூட்டு சேர்கிறர்கள், இடம் தெரிகிறார்கள், அபாரமாய் உழைக்கிறார்கள், உல்லாசமாய் வாழ்கிறார்கள். திருமண உறவாய்,, தொழில் சிநேகித  இருக்குமோ இருவருக்கும்? 
    • ஆம். எனக்குத் தெரிந்த ஒரு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த  குடும்பத்தை விபு க்களே இந்தியாவிற்கு தங்கள் படகில் கொண்டு சென்று இறக்கியிருந்தனர். சமாதான காலத்தில் அவர்கள் விமானம் மூலம் இலங்கை வந்தடைந்து வவுனியாவில் மீளக் குடியமர்ந்தனர். அவர்கள் தற்போது வட அமெரிக்காவில் இருக்கிறார்கள்.  அக் குடும்ப உறுப்பினர் ஒருவர் மாற்று இயக்கம் ஒன்றின் பெரிய பொறுப்பில் முன்னர் இருந்து பின்னர் பொது வாழ்க்கைக்கு திரும்பியிருந்தார்.  இதே போன்று பல சம்பவங்கள் நடந்துள்ளன. அவைகளை எனக்கு தனிப்பட்ட ரீதியில் தெரியும்.  @விசுகுகுஎ ஏன்  -1 போட்டிருக்கிறீர்கள்? காரணத்தை அறியத்தர முடியுமா?   
    • இவரும் பல தடவைகள் பொதுவெளியில் நான் டொக்டர் என்னுடன் நீ எப்படி இது போல் பேசலாம் என த்ன்னுடைய ஒளிவட்ட பேச்சுகளை பேசியுள்ளார் ... 
    • ஊழல் அற்ற பட்டம் வேணும் ...லஞ்சம் கொடுப்பது வாங்குவது எல்லாம் நம்ம தோழருக்கு பிடிக்காது..😅 மிச்ச மூன்று பேரையும் யாழில் இலகுவாக எடுத்து போடுவேன் என்ட கிறுக்கல்கள் யாழில் ஒரு மாதத்தில் 500 பேருக்கு மேல பார்க்கினம் வெள்ளி விழா,வைர விழா எல்லாம் தாண்டி ஒடுது ...ஆகவே கலாநிதி பட்டத்திற்கு கையொப்பம் எடுப்பது   இலகுவான விடயம் என நினைக்கிறேன்....😅
    • புலிகள் குடும்பங்களை பிடித்து வைத்திருந்தார்கள் என்பதனை  நானும் கேள்விப்பட்டதில்லை, ஆனால் 1995 இறுதிக்காலப்பகுதியில் புலிகளின் 3 போராளிகள் இயக்கத்திலிருந்து விலகியிருந்தார்கள், அவர்களுக்கு 3 மாத தண்டனைக்காலத்தில் தண்டனையாக சமையலறை வேலை இருந்தது, அந்த காலப்பகுதி முடிவடைவதற்கு வெகு சில நாள்கள் மட்டும் இருந்த நிலையில் அவர்கள் இருந்த சமையலறை மேல் புக்கார வீசிய குண்டில் 3 போராளிகளும் உடல் சிதறி பலியாகியிருந்தனர். அதில் ஒரு போராளி சாகவச்சேரியினை சேர்ந்தவர், அந்த குண்டு வீச்சு யாழ் மாவட்டத்திற்குள் நிகழ்ந்தது, இருந்தும் அந்த போராளிகளின் உடல்களை புலிகள் தாமே தகனம் செய்துவிட்டனர், குடும்பத்தினரிடம் ஒப்படைக்கவில்லை, இறந்தவர்களுக்கு போராளிகள் எனும் அந்தஸ்தும் வழங்கப்படவில்லை, 5 பேருக்கும் குறைவானவர்களே அவர்களது இறுதி நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.