Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Savukku-Shankar-750x375.jpeg

லைக்கா தொடர்பான அவதூறுகளை வெளியிடக் கூடாது : சவுக்கு சங்கருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

லைக்கா தொடர்பான எந்த ஒரு அவதூறுகளையும் வெளியிடக் கூடாதென சவுக்கு சங்கருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த பங்குனி ( (March)  மாதம் 19 ஆம் திகதி  சென்னை உயர் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட சிவில் வழக்கில் (Civil Suit) இந்த அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டது.

மேலும் இது தொடர்பான அறிவிப்பை You Tube LLC நிறுவனத்திற்கு அறிவித்ததோடு உடனடியாக அதுசம்பந்தமான காணொளிகளை (வீடியோக்களை) நீக்குமாறு உத்தரவிட்டதுடன், இதனூடாக சவுக்கு சங்கர் பெற்றுக்கொண்ட வருமானம் அனைத்தையும்  நீதிமன்றில் வைப்பிலிடுமாறும் உத்தரவிடப்பட்டது.

தனது சவுக்கு மீடியா You Tube  பக்கத்தில்,  லைகா நிறுவனத்தை தொடர்புபடுத்தி சவுக்கு சங்கர் அவதூறாக பேசியுள்ளதாக குற்றம்சாட்டி, அந்நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த மனுவில், தமிழக திரை உலகிலும், உலகளவிலும் நற்பெயரை கொண்டுள்ள லைகா நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கும் விளைவிக்கும் வகையில் சவுக்கு சங்கரின் பேச்சு அமைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

அத்துடன், ஒரு கோடியே ஆயிரம் ரூபாய் மான நஷ்ட ஈடாக வழங்கவும், அந்த காணொளி மூலம் கிடைத்த தொகையை வைப்பிலிட உத்தரவிட வேண்டும் எனவும் கோரப்பட்டது. மேலும், YouTube பக்கத்தில் உள்ள காணொளியை ( வீடியோவை) நீக்க உத்தரவிடவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி என். சதீஷ்குமார், லைகா நிறுவனத்தின்  மீது எந்தவிதமான இழிவான/ அவதூறான குற்றச்சாட்டுகளை நேரடியாகவோ அல்லது வேறு எந்த வகையிலும் சவுக்கு மீடியா வெளியிடக்கூடாது என மார்ச் 19 அன்று இடைக்காலத் தடை விதித்தார்.

மேலும்  இந்த காணொளிகள்  மூலம் கிடைத்த வருமான தொகையை நீதிமன்றத்தில் வைப்பிலிட  YouTube  LLC  நிறுவனத்துக்கு உத்தரவிட்டார்.

இந்த வழக்கு நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்னிலையில் கடந்த ஏப்ரல் 12ஆம் திகதி  மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, லைகாவிற்கு எதிராகச் சவுக்கு சங்கர்  பேசிய காணொளி (வீடியோ) முடக்கப்பட்டதாகத் YouTube  LLC  தரப்பில்,  தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கு தொடர்பாக, ஜூன் 13ஆம் திகதிக்கு முன்  சவுக்கு சங்கர் பதிலளிக்க வேண்டும் எனவும், சவுக்கு சங்கருக்கு எதிரான இடைக்கால உத்தரவை வரை நீட்டித்தும் உத்தரவிடப்பட்டது.

அத்துடன் YouTube  LLC  சார்பில் முன்னியைான சட்டத்தரணியின் வாய்மூல பதில்கள் எழுத்துபூர்வமாக ஜூன் 13ஆம் திகதிக்கு முன்   சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி,   விசாரணையை நீதிபதி சி.வி.  கார்த்திகேயன் ஒத்திவைத்துள்ளார்.

https://athavannews.com/2024/1378369

  • கருத்துக்கள உறவுகள்

ஆதவன் இணையம் லைக்காதானே .

1 hour ago, தமிழ் சிறி said:

லைக்கா தொடர்பான அவதூறுகளை வெளியிடக் கூடாது

கூகிளில் தேடியபோது வேறு இணையம்களில் அந்த செய்தி காணவில்லை என் தேடுதல் பிழையோ .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, பெருமாள் said:

ஆதவன் இணையம் லைக்காதானே .

கூகிளில் தேடியபோது வேறு இணையம்களில் அந்த செய்தி காணவில்லை என் தேடுதல் பிழையோ .

ஆதவன் இணையம் லைக்காவினுடையது என நினைக்கின்றேன்.
நீதிமன்றம் சம்பந்தப் பட்ட செய்தி என்றபடியால் தவறாக இருக்க சந்தர்ப்பம் இல்லை. 
பொய்ச் செய்தி என்றால்… சவுக்கு சங்கரும் ஆதவனை  நார் நாராக கிழித்துப் போட்டு விடுவார். 😂 🤣 
 
  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, தமிழ் சிறி said:

ஆதவன் இணையம் லைக்காவினுடையது என நினைக்கின்றேன்.
நீதிமன்றம் சம்பந்தப் பட்ட செய்தி என்றபடியால் தவறாக இருக்க சந்தர்ப்பம் இல்லை. 
பொய்ச் செய்தி என்றால்… சவுக்கு சங்கரும் ஆதவனை  நார் நாராக கிழித்துப் போட்டு விடுவார். 😂 🤣 
 
சவுக்குக்கு  ஆதவன் இணையம் பற்றி தெரியுமா ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, பெருமாள் said:

சவுக்குக்கு  ஆதவன் இணையம் பற்றி தெரியுமா ?

இனி…. எப்படியும் தெரிய வரும். 🤣

ஆதவனுக்கு ஏழரையா… சவுக்குக்கு ஏழரையா… என்று தெரியவில்லை. 😂

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, தமிழ் சிறி said:

ஆதவன் இணையம் லைக்காவினுடையது என நினைக்கின்றேன்.
நீதிமன்றம் சம்பந்தப் பட்ட செய்தி என்றபடியால் தவறாக இருக்க சந்தர்ப்பம் இல்லை. 
பொய்ச் செய்தி என்றால்… சவுக்கு சங்கரும் ஆதவனை  நார் நாராக கிழித்துப் போட்டு விடுவார். 😂 🤣 
 
கேட்பவர் கேட்டால் கல்லும் கரையுமென்பர்.

தேடும் முறையில் தேடினால் கூகிளும் கொடுக்குமென்பர்🤣.

செய்தி உண்மைதான்.

https://www.thehindu.com/news/national/tamil-nadu/savukku-shankars-video-against-lyca-has-been-blocked-youtube-llc-informs-madras-high-court/article68057307.ece/amp/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

கேட்பவர் கேட்டால் கல்லும் கரையுமென்பர்.

தேடும் முறையில் தேடினால் கூகிளும் கொடுக்குமென்பர்🤣.

செய்தி உண்மைதான்.

https://www.thehindu.com/news/national/tamil-nadu/savukku-shankars-video-against-lyca-has-been-blocked-youtube-llc-informs-madras-high-court/article68057307.ece/amp/

கிட்டத் தட்ட ஒரு மாதத்திற்கு முன் (March 19) வந்த தீர்ப்பை இது வரை எந்தத் தமிழ் ஊடகமும் வெளியிடாமல், ஆதவன் கூட தாமதமாகத்தான் வெளியிட்டு இருப்பதன் மர்மம் புரியவில்லை.
சும்மா செய்திகளுக்கே இந்த யூ ரியூப் காணொளி தயாரிப்பவர்கள் சலங்கை கட்டி ஆடுவார்கள். அவர்களும் இந்த விசயத்தில் அடக்கி வாசிக்கின்றார்கள். 😂

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, goshan_che said:

கேட்பவர் கேட்டால் கல்லும் கரையுமென்பர்.

தேடும் முறையில் தேடினால் கூகிளும் கொடுக்குமென்பர்🤣.

செய்தி உண்மைதான்.

கூகிள் ட்ராஸ்லேட்டையே அதிரவைத்த புள்ளியல்லவா நீங்க .

17 minutes ago, தமிழ் சிறி said:

கிட்டத் தட்ட ஒரு மாதத்திற்கு முன் (March 19) வந்த தீர்ப்பை இது வரை எந்தத் தமிழ் ஊடகமும் வெளியிடாமல், ஆதவன் கூட தாமதமாகத்தான் வெளியிட்டு இருப்பதன் மர்மம் புரியவில்லை.
சும்மா செய்திகளுக்கே இந்த யூ ரியூப் காணொளி தயாரிப்பவர்கள் சலங்கை கட்டி ஆடுவார்கள். அவர்களும் இந்த விசயத்தில் அடக்கி வாசிக்கின்றார்கள். 😂

நான் நினைக்கிறேன் சவுக்குவுக்கு ஏன் இலவச விளம்பரம் கூடவே லைக்காவுக்கும் இலவச விளம்பரம் தேவையில்லை என்று தமிழ் ஊடகங்கள் அமைதியாகி விட்டன போல் உள்ளது .

ஆனால் யுடுப்பர் ஏன் அமைதியாகினங்கள்  என்பது பெரிய கேள்வி குறிதான் .

😀

Edited by பெருமாள்
எழுத்து பிழை அன்றி வேறு ஒன்றும் இல்லை நேற்றிரவு நல்ல கூத்தாம்

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, தமிழ் சிறி said:

கிட்டத் தட்ட ஒரு மாதத்திற்கு முன் (March 19) வந்த தீர்ப்பை இது வரை எந்தத் தமிழ் ஊடகமும் வெளியிடாமல், ஆதவன் கூட தாமதமாகத்தான் வெளியிட்டு இருப்பதன் மர்மம் புரியவில்லை.
சும்மா செய்திகளுக்கே இந்த யூ ரியூப் காணொளி தயாரிப்பவர்கள் சலங்கை கட்டி ஆடுவார்கள். அவர்களும் இந்த விசயத்தில் அடக்கி வாசிக்கின்றார்கள். 😂

அதுதான் எனக்கும் விளங்கவில்லை.

அதுவும் ஆதவன் இதை தூக்கி, தூக்கி அல்லவா அடித்திருக்க வேண்டும்.

சுபாஷ் கவனத்துக்கு - லைக்காவில் நல்ல சம்பளத்தில் PR Director வேலை இருந்தால் - நான் தயார்🤣.

தமிழ் யுடியூப் - அவர்கள் எங்கே சுயமாக செய்தி சேகரிக்கிறார்கள்- ஹைகோர்ட்டுக்கு எப்படி போவது என்பதே தெரிந்திருக்காது. எவனாவது செய்திபோடுவான் - அதை பற்றி ஒரு பத்து நிமிடம் விட்டத்தை பார்த்து யோசித்து விட்டு, பின் வாங்குகிறார்கள், பாண் வாங்குகிறார்கள் என கமெரா முன் வந்து வாயால் வடை மட்டும் சுடுவார்கள்.

முன்பு நிலாந்தன், அரூஸ், ரிசி, திருநாவுகரசர் பேப்பரிலும், ரமேஷ் வவுனியன், நிராஜ் டேவிட் ரேடியோவிலும் சுட்ட அதே வடைதான்.

இப்போ யூடியூப்பில்.

இவர்கள் புலம்பெயர் தமிழர் இயலுமை பற்றி  சுட்ட வடைகளை அவர்கள் நம்ப, அவர்கள் பற்றி இவர்கள் சுட்ட வடையை புலம்பெயர் தமிழர் நம்ப - இப்படி உருவான ஒரு மாய வலை - 2000 பின்னான அழிவுக்கு பெரும் காரணமானது.

அத்தனை அழிவுக்கு பின்னும் இவர்கள் வடை வியாபார மட்டும் நிற்கவே இல்லை.

வடைகளை வாங்க வாடிக்கையாளர் இருக்கும் போது, யூடியூப் காசும் தரும் போது - அவர்கள் ஏன் விடப்போகிறார்கள்.

நான் இப்போ யூடியூப்பில் தமிழ் வீடியோ என்றால் - மீன் வெட்டும் வீடியோத்தான்.

ஒரு சாம்பிள். நான் ஸ்பீட் செல்வம்னா ரசிகன்.

11 minutes ago, பெருமாள் said:

கூகிள் ட்ராஸ்லேட்டையே அதிரவைத்த புள்ளியல்லவா நீங்க .

ஆனாலும் உங்க அளவுக்கு Artificial intelligence   இல்லை Sir.

Edited by goshan_che

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.