Jump to content

"குழந்தைகள் மனதில் தன்னம்பிக்கையை விதைப்போம்..!"


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
"குழந்தைகள் மனதில் தன்னம்பிக்கையை விதைப்போம்..!"
 
 
ஒரு நாள் பள்ளியிலிருந்து வந்த தாமஸ் எடிசன் கையில் ஒரு கவரில் உள்ள கடிதத்தை தன் அம்மாவிடம் மட்டுமே கொடுக்க வேண்டும் என தன் ஆசிரியர் கூறியதாக சொல்லி கொடுத்தான்....
 
அந்த கடிதத்தை அந்த தாய் கண்ணீரோடு சத்தமாக தன் மகன் கேட்கும் படி இப்படி படித்தாள்......
 
"உங்கள் மகனின் அறிவுத் திறமைக்கு முன் எங்கள் பள்ளி மிகவும் சிறியது அவனுக்கு கற்பிக்க திறமையான ஆசிரியர்கள் எங்களிடமில்லை அதனால் தயவுசெய்து நீங்களே உங்கள் மகனுக்கு கற்பிப்பது நல்லது" என்று.....
 
பல ஆண்டுகளுக்கு பிறகு எடிசனின் தாயாரும் காலமாகிவிட்டார். எடிசனும் அந்த நூற்றாண்டின் சிறந்த ஆராய்ச்சியாளராக கண்டுபிடிப்பாளராகவும் ஆனார்.....
 
இப்படி இருக்கையில் ஒருநாள் தனது வீட்டின் பழைய சாமான்களை எடுத்துவைத்துக் கொண்டிருந்தபோது அவர் தன் அம்மாவிடம் முன்பொருமுறை பள்ளியிலிருந்து கொண்டுவந்து கொடுத்த கடிதம் எதேச்சையாக கண்ணில் பட அதை எடுத்து படித்துப் பார்த்தார்......
 
அதில் இப்படி எழுதியிருந்தது:
 
"மூளை வளர்ச்சி குன்றிய உங்கள் மகனை இனிமேல் எங்கள் பள்ளிக்கு நீங்கள் அனுப்ப வேண்டாம்"
 
என்று...... இதைப்படித்த எடிசன் கதறி அழுதார் பின் அவரது டைரியில் கீழ்க்கண்டவாறு எழுதினார்....
 
" மூளை வளர்ச்சியற்ற தாமஸ் ஆல்வா எடிசன் தனது தாயாலேயே மாபெரும் கண்டுபிடிப்பாளனானான்"
 
என்று.... தன்பிள்ளைகள் மீதான நேர்மறையான எண்ணங்கள் அவர்களை மிக உயரத்துக்கு கொண்டு செல்லும்
நம்மாளும் எடிசன்களை உருவாக்க முடியும்.....
 
குழந்தைகள் மனதில் தன்னம்பிக்கையை விதைங்க..
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
No photo description available. No photo description available.
  • Like 3
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: VISHNU   14 MAY, 2024 | 09:26 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) விடுதலைப் புலிகளுடனான யுத்தம் முடிவுக்கு கொண்டு வராமலிருந்தால்  தென்னாசியாவில் தமிழீழம் தோற்றம் பெற்றிருக்கும். அது இஸ்ரேல் போல் மாற்றமடைந்திருக்கும், காஸாவின் இன்றைய நிலை எமக்கு ஏற்பட்டிருக்கும். இஸ்ரேலுக்கு ஆயுதத்தை வழங்கி விட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருமாறு அமெரிக்கா முதலை கண்ணீர் வடிக்கிறது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (14) இடம்பெற்ற  பலஸ்தீன விவகாரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற தாக்குதலினால் பலஸ்தீனர்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். பலஸ்தீனர்களின்  இன்றைய நிலை குறித்து நாங்கள் கவலையடைகிறோம். பலஸ்தீனர்கள் இன்று எதிர்கொண்டுள்ள நிலைமைக்கும், இலங்கையின் நிலைமைக்கும் இடையில் பரஸ்பர ஒற்றுமை காணப்படுகிறது. இரண்டாம் உலக மகா யுத்தம் தீவிரமடைந்த போது யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருதற்கு பெரிய பிரித்தானியா யூதர்களுடன் ஒப்பந்தம் செய்தது. யுத்தம் முடிந்தவுடன் தமக்கு ஒரு நாடு அல்லது இராச்சியம் வேண்டும் என யூதர்கள் பெரிய பிரித்தானியாவிடம் வலியுறுத்தினார்கள். இரண்டாம் உலக மகா யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர்  பெரிய பிரித்தானிய பலஸ்தீனர்களுக்கு சொந்தமான பூர்வீக பூமியில் யூதர்களை குடியமர்த்தி பிரச்சினைகளை தோற்றுவித்தது. தமிழர்கள் உலகெங்கிலும் வாழ்கிறார்கள். அவர்கள் தென்னிந்திய திராவிட மொழியை அடிப்படையாகக் கொண்டவர்கள் ஆகவே அவர்களுக்கு இலங்கைக்குள் ஒரு தனித்த நாட்டை உருவாக்கிக் கொடுப்பதாக பெரிய பிரித்தானியா போலியான சுதந்திரத்தை வழங்கி இலங்கையில் வாழ்ந்த தமிழ் தலைவர்களிடம் குறிப்பிட்டது. இதன் பின்னரே 50 :50 அதிகாரம் பற்றி பேசப்பட்டது. 50:50 அதிகாரம் என்பது தோல்வியடைந்த நிலையில் யுத்தம் தோற்றம் பெற்றது. இலங்கை இராணுவம் விடுதலைப் புலிகளை அழித்து யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வராமல் இருந்திருந்தால் தென்னாசியாவில் தமிழ் ஈழம் தோற்றம் பெற்றிருக்கும். அவ்வாறான நிலை தோற்றம் பெற்றால் தென்னாசியாவில் காஸாவை போன்ற நிலைமை எமக்கு ஏற்பட்டிருக்கும். தமிழ் ஈழம் இஸ்ரேல் போல் செயற்பட்டிருக்கும். பலஸ்தீனர்களின்  இன்றைய நிலையை  நாங்கள் எதிர்கொண்டிருப்போம். விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை பாதுகாப்பதற்கு அமெரிக்காவின் மெராய்ன் படையின் கப்பல் இலங்கையின் கடல் பரப்புக்கு அப்பாற்பட்ட சர்வதேச கடல் எல்லைக்கு வருகை தந்திருந்தது. பிரபாகரனை உயிருடன் ஒப்படைக்குமாறு அமெரிக்கா அப்போதைய அரசாங்கத்திடம் வலியுறுத்தியது. ஆனால் அதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இடமளிக்கவில்லை. அதேபோல் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளும் பிரபாகரனை உயிருடன் கோரின. பிரிவினைவாத யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கம் மேற்குலக நாடுகளிடம் இருக்கவில்லை. தமிழ் ஈழத்துக்காகவே உலக நாடுகளும் குரல் கொடுத்தன. இலங்கையில் தமிழ் ஈழத்தை உருவாக்க பெரிய பிரித்தானிய முன்னெடுத்த முயற்சிகள் தோல்வியடைந்தன. ஆனால் பலஸ்தீனத்தில் அவர்களின் நோக்கம் வெற்றிப் பெற்றன. இரண்டாம் உலக யுத்தத்தின் போது உலகில் நாடற்றவர்களாக இருந்த யூதர்களுக்கு பலஸ்தீன நிலத்தை ஆக்கிரமித்து நாடு உருவாக்கிக் கொடுக்கப்பட்டது. காலப் போக்கில் யூதர்களான இஸ்ரேலியர்கள் முழு பலஸ்தீனத்தையும் ஆக்கிரமித்து  பலஸ்தீனர்களின் அடையாளத்தை அழிக்க முயற்சிக்கிறார்கள். தமது உரிமைக்காக பலஸ்தீனியர்கள் போராடுகிறார்கள், ஆகவே பலஸ்தீனர்களின் நிலைமையை எம்மால் உணர்வுபூர்வமாக விளங்கிக் கொள்ள முடிகிறது. இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்கி விட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருமாறு அமெரிக்க முதலை கண்ணீர் வடிக்கிறது. யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர உலக நாடுகள் ஐக்கிய நாடுகள் சபைக்கு பிரேரணை கொண்டு வரும் போது அமெரிக்க தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி  பிரேரணைகளை தோற்கடிக்கிறது. ஆகவே இலங்கைக்கு எதிராக செயற்படுத்தும் போலியான மனித உரிமைகளை  பாதிக்கப்பட்டுள்ள பலஸ்தீனர்களுக்காக உண்மையுடன் செயற்படுத்துமாறு உலக நாடுகளிடம் கேட்டுக் கொள்கிறேன் என்றார். https://www.virakesari.lk/article/183560
    • புலிகள் இருந்தாலும் ஆயிரம் பொன் இல்லா விட்டாலும் ஆயிரம் பொன்.
    • பிளே ஸ்டேஷன், எக்ஸ் பாக்ஸ் தளங்களை முடக்கி கேமிங் உலகை பதறச் செய்த 'ஹேக்கர்' சிக்கியது எப்படி? பட மூலாதாரம்,EUROPOL படக்குறிப்பு,ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற ஜூலியஸ் கிவிமாக்கி கட்டுரை தகவல் எழுதியவர், ஜோ டைடி பதவி, சைபர் நிருபர், பிபிசி உலக சேவை 35 நிமிடங்களுக்கு முன்னர் ஹேக்கிங்கில் கைத்தேர்ந்த பிரபல ஹேக்கர் ஒருவர், 33,000 மனநல சிகிச்சை நோயாளிகளின் தனிப்பட்ட சிகிச்சை குறிப்பை திருடி, அதை வைத்து அவர்களை மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து ஐரோப்பாவின் மிகவும் தேடப்படும் குற்றவாளிகளில் ஒருவராக அவரின் பெயர் அறிவிக்கப்பட்டது. ஜூலியஸ் கிவிமாக்கி பதின் பருவத்தில் இருந்தே ஹேக்கிங் மீது ஆர்வம் கொண்டவர். 13 வயதில் ஒரு டீனேஜ் ஹேக்கிங் கும்பலின் அறிமுகம் கிடைத்தது. அவர்கள் மத்தியில் முக்கியத்துவம் பெற்று பிரபலமடைந்த போது அவரின் ஹேக்கிங் ஆர்வம் மேலும் அதிகரித்தது. தற்போது சிறை தண்டனை கிடைத்திருப்பது ஜூலியஸின் 11 வருட ”அடாவடித்தனமான ஹேக்கிங்” செயல்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. டினா, சனிக்கிழமை இரவு தன் வழக்கமான பணிகளுக்கு பிறகு ஓய்வெடுத்து கொண்டிருந்த போது அலைபேசி ஒலித்தது. அவருக்கு அடையாளம் தெரியாத நபரிடம் இருந்து ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது, அதில் டினாவின் முழுப் பெயர், சமூகப் பாதுகாப்பு எண் மற்றும் பிற தனிப்பட்ட விவரங்கள் இருந்தன. "அந்த மின்னஞ்சல் மிகவும் கண்ணியமான முறையில் எழுதப்பட்டிருந்தது. அதன் இனிமையான தொனியால் நான் ஈர்க்கப்பட்டேன்," என்று டினா நினைவு கூர்கிறார். "அன்புள்ள டினா பரிக்கா" என்று ஆரம்பித்த அந்த மின்னஞ்சலில், ”நீங்கள் மனநல சிகிச்சை பெற்ற உளவியல் சிகிச்சை மையத்திலிருந்து உங்களின் தனிப்பட்ட தகவல்களை பெற்றேன். நோயாளிகளின் தனிப்பட்ட தரவுகள் திருடப்பட்டது என்ற உண்மையை நிறுவனத்திடம் சொன்ன போது அவர்கள் புறக்கணித்து விட்டனர். எனவே உங்களை நேரடியாகத் தொடர்பு கொண்டேன். மன்னிக்கவும்” என்று மின்னஞ்சலில் எழுதப்பட்டிருந்ததாக டினா விவரித்தார். டினா இரண்டு வருடங்களாக மனநல சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சை அமர்வுகளின் போது அவர் தன்னை பற்றிய தனிப்பட்ட தகவல்கள் அனைத்தையும் பகிர்வது வழக்கம். அவை சிகிச்சை மையத்தின் இணைய பதிவேட்டில் பதிவு செய்யப்படும். இவ்வாறு பதிவான டினாவின் தனிப்பட்ட தகவல்களை மர்ம நபர் ஒருவர் ஹேக் செய்து திருடி இருக்கிறார். சிகிச்சை அமர்வுகளின் போது சொன்ன தனிப்பட்ட விஷயங்கள் அனைத்தும் ஒரு பிளாக்மெயிலர் கைகளில் சிக்கி இருப்பதை உணர்ந்த டினா பேரதிர்ச்சி ஆனார். 24 மணி நேரத்திற்குள் கேட்கும் தொகையை தராவிட்டால் அவை அனைத்தும் ஆன்லைனில் வெளியிடப்படும் என்றும் மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டிருந்தது. "அதிர்ச்சியில் நான் மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டேன். எனது தனிப்பட்ட உலகத்தை யாரோ திரை விலக்கி பார்த்துவிட்டனர். எனது வாழ்க்கையின் கருப்பு பக்கங்களை வைத்து யாரோ பணம் சம்பாதிக்க முயற்சிப்பதை உணர்ந்தேன்." என்றார். தான் மட்டும் தனியாக பாதிக்கப்படவில்லை என்பது டினாவுக்கு தெரிய வந்தது. மொத்தம் 33,000 நோயாளிகளின் பதிவுகளும் திருடப்பட்டிருந்தன, ஆயிரக்கணக்கானோருக்கு அச்சுறுத்தும் மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. பின்லாந்து வரலாற்றில், ஒரு கிரிமினல் வழக்கில் 30,000த்துக்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை.   பட மூலாதாரம்,JESSE POSTI, DIGILIEKKI படக்குறிப்பு,டினா பரிக்கா `வாஸ்டாமோ’ (Vastaamo) உளவியல் சிகிச்சை மையத்திலிருந்து திருடப்பட்ட இணைய தரவுத்தளத்தில் குழந்தைகள் உட்பட உளவியல் சிகிச்சை எடுத்த அதிக எண்ணிக்கையிலான நோயாளிகளின் மிகவும் தனிப்பட்ட ரகசியங்கள் உள்ளன. திருமணத்தை தாண்டிய உறவின் குற்றவுணர்ச்சி, குற்றங்களின் ஒப்புதல் வாக்குமூலம் என பல்வேறு உணர்ச்சிகரமான உரையாடல்கள் பேரம் பேசும் விஷயமாக மாறியிருந்தது. இந்த சைபர் தாக்குதலை ஆய்வு செய்த பின்லாந்து இணைய பாதுகாப்பு நிறுவனமான வித் செக்யுரைச் (WithSecure) சேர்ந்த மைக்கோ ஹைப்போனென், இந்த நிகழ்வு நாட்டில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது மற்றும் பல நாட்கள் தலைப்பு செய்திகளாக பதிவு செய்யப்பட்டது என்கிறார். "மிகப்பெரிய அளவிலான இந்த ஹேக்கிங் குற்றச்செயல், பின்லாந்துக்கு ஒரு பேரழிவாகும்" என்று அவர் கூறுகிறார். இது அனைத்தும் 2020 இல் கொரோனா தொற்றுநோயால் உருவான லாக்டவுன் சூழலின் போது நடந்தது. இந்த வழக்கு சைபர்-பாதுகாப்பு உலகத்தை அதிர்ச்சியில் உறைய வைத்தது. மேலும் மின்னஞ்சல்களின் தாக்கம் பேரழிவை ஏற்படுத்தியது. வழக்கறிஞர் ஜென்னி ரைஸ்கியோ, பாதிக்கப்பட்டவர்களில் 2,600 பேர் சார்பில் வாதிட்டவர். நோயாளியின் சிகிச்சை பதிவுகள் இணையத்தில் வெளியிடப்பட்ட பின்னர் பலர் தற்கொலை செய்து கொண்டதாக அவர்களின் உறவினர்கள் ஜென்னியின் நிறுவனத்தை தொடர்பு கொண்டதாக கூறினார். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிமன்றத்தில் சிறிது நேரம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. ”ransom_man” என்று மட்டுமே தன்னை இணையத்தில் அறிமுகப்படுத்தி கொண்ட பிளாக்மெயிலர், பாதிக்கப்பட்டவர்கள் அவருக்கு 24 மணி நேரத்திற்குள் €200 யூரோக்கள் (இந்திய மதிப்பில் ஏறக்குறைய ரூ.18,000 ) செலுத்த வேண்டும். இல்லையெனில் அவர்களின் தகவல்களை வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டல் விடுத்தார். குறிப்பிட்ட நேரத்துக்குள் பணம் செலுத்தவில்லை என்பதால் அந்த தொகையை €500 ஆக உயர்த்தினார். பாதிக்கப்பட்டவர்களில் 20 பேர் பணம் செலுத்தினர். ஆனால் அதற்குள் ransom_man தவறுதலாக முழு தகவல்களையும் டார்க் நெட்டில் (dark net)உள்ள ஒரு தளத்தில் பகிர்ந்து விட்டார். அனைவரின் தனிப்பட்ட சிகிச்சை பதிவுகளும் இணையத்தில் கசிந்தன. தற்போது வரை அந்த தகவல்கள் இணையத்தில் உள்ளன. மிக்கோ மற்றும் அவரது குழுவினர் தகவல்களை கசியவிட்ட நபரை தொடர்ந்து கண்காணித்து, காவல்துறைக்கு உதவ முயன்றனர். மேலும் அந்த ஹேக்கர் பின்லாந்தை சேர்ந்தவராக இருக்கலாம் என்று யூகிக்கப்பட்டது. நாட்டின் கிரிமினல் வழக்கு வரலாற்றின் மிகப்பெரிய விசாரணை சூடுபிடித்தது. சைபர்-கிரைம் உலகில் ஏற்கனவே பிரபலமான ஒரு பின்லாந்து இளைஞர் மீது ஒட்டுமொத்த காவல்துறையின் கவனமும் திரும்பியது. பட மூலாதாரம்,SKY NEWS படக்குறிப்பு,2014 இல் ஸ்கை நியூஸ் நேர்காணலில் கிவிமாக்கி தன்னை ரெயான் என்று அறிமுகப்படுத்தி கொண்டார். குற்றச்செயல்களை விரும்பும் ஜீகில் (Zeekill) கிவிமாக்கி, தன்னை ஜீ-கில் என அடையாளப்படுத்தி கொண்டார். பதின் வயது முதலே ஹேக்கிங் செய்து வரும் ஜீகில், டீன் ஏஜ் ஹேக்கராக தன் அடையாளத்தை வெளிபடுத்தாமல் கவனமாக இருந்ததன் மூலம் அவர் பிரபலமான நபராக மாறவில்லை. ஒரு இளைஞனாக, அவர் ஹேக்கிங், மிரட்டி பணம் பறித்தல் ஆகியவற்றை செய்து வந்தார். ஜீகிலுக்கு தற்பெருமை காட்டுவது பிடிக்கும். ஹேக்கர் அணிகளான லிசார்ட் ஸ்குவாட் மற்றும் ஹேக் தி பிளானட் ஆகியவற்றுடன் இணைந்து, 2010 களின் மிகவும் சுறுசுறுப்பான டீனேஜ் ஹேக்கராக இருந்தார். ஹேக்கிங் செய்து மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துவதில் புளகாங்கிதம் அடைந்தார். கிவிமாக்கி ஒரு முக்கிய ஹேக்கராக உருவெடுத்தார். 17 வயது வரை பல உயர்மட்ட சைபர் தாக்குதல்களை நடத்தினார், 2014 இல் கைது செய்யப்பட்டார், பின்னர் 50,700 ஹேக்கிங் குற்றங்களில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இருப்பினும் அவர் சிறையில் அடைக்கப்படவில்லை. இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இரண்டு வருடங்களுக்கு சிறைத் தண்டனை ஒத்திவைக்கப்பட்டது. இணைய பாதுகாப்பு உலகில் பலரால் விமர்சிக்கப்பட்டது. இதன் மூலம் கிவிமாக்கியும் அவரது நண்பர்களும் பல்வேறு சைபர் குற்றங்களை செய்யக்கூடும் என பலர் அஞ்சினர். இந்த கொந்தளிப்பான சூழலில், காவல்துறை கிவிமாக்கி மீது நடவடிக்கை எடுக்கும் போதும் அவர் பல்வேறு குற்றச் செயல்களை மேற்கொண்டார். கைது செய்யப்பட்டு, தண்டனை விதிக்கப்படும் அந்த இடைக்காலத்தில், கிவிமாக்கி தன் டீனேஜ் ஹேக்கிங் கும்பலுடன் இணைந்து ஒரு துணிச்சலான தாக்குதல் ஒன்றை நடத்தினார்.   படக்குறிப்பு,லிசார்ட் ஸ்குவாட் ஹேக்கர்ஸ் குழுவின் குறியீட்டு படம் கிறிஸ்துமஸ் தினத்தில், கிவிமாக்கி, லிசார்ட் ஸ்குவாட் ஹேக்கிங் குழு உடன் இணைந்து இரண்டு பெரிய கேமிங் தளங்களை செயலிழக்கச் செய்தார். பிளேஸ்டேஷன் நெட்வொர்க் மற்றும் எக்ஸ்பாக்ஸ் லைவ் ஆகிய தளங்களும் செயலிழந்தன. சேவை மறுப்பு தாக்குதல் என்று சொல்லப்படும் `Distributed Denial of Service attack’ என்னும் சக்தி வாய்ந்த செயல்முறையில் சைபர் தாக்குதல் நடத்தினர். இதனால் பல்லாயிரக்கணக்கான கேமர்களால் கேம்களைப் பதிவிறக்கம் செய்ய முடியவில்லை. புதிய கன்சோல்களைப் பதிவு செய்யவோ அல்லது ஆன்லைனில் தங்கள் நண்பர்களுடன் விளையாடவோ முடியவில்லை. உலக ஊடகங்களின் கவனம் தன் மீது திரும்புவதை கிவிமாக்கி ரசித்தார். மேலும் ஸ்கை நியூஸிற்காக என்னுடன் ஒரு தொலைக்காட்சி நேர்காணலுக்கும் ஏற்றுக்கொண்டார், நேர்காணலில் அவர் நிகழ்த்திய சைபர் தாக்குதலுக்கு சிறிதளவும் வருத்தமோ குற்றவுணர்ச்சியோ காட்டவில்லை. ஜீகில்லின், லிசார்ட் ஸ்குவாட் கும்பலைச் சேர்ந்த மற்றொரு ஹேக்கர் ரெயான் பிபிசியிடம் பேசுகையில், ”கிவிமாக்கி பழிவாங்கும் உணர்வுடைய இளைஞர். அவர் இணையத்தில் தன் கேமிங் போட்டியாளர்களை பழிவாங்கவும் ஆன்லைனில் தனது திறமைகளை காட்டவும் விரும்பினார்” என்கிறார். (ரெயான் காவல்துறையில் சிக்கவில்லை என்பதால் அவர் முழுப் பெயரை சொல்ல விரும்பவில்லை ) "அவர் என்ன செய்தாலும் அதனை நேர்த்தியுடன் செய்யும் திறமையானவர். விளைவுகளைப் பற்றி கவலைப்பட மாட்டார். அவர் மீது போலீஸ் கவனம் இருந்த போதிலும், பயமின்றி தன் சொந்த குரலிலேயே வெடிகுண்டு மிரட்டல் விடுவார்.” என்று ரெயான் விவரித்தார். கிவிமாக்கி காவல்துறையிடம் சிக்கி, தண்டனை பெற்ற பிறகு சில சிறிய அளவிலான ஹேக்கிங் குற்றச் செயல்களை மட்டும் செய்து வந்தார். பல ஆண்டுகளாக வெளி உலகிற்கு தெரியாமல் இருந்தவர், வாஸ்டாமோ உளவியல் நோயாளிகள் மீதான சைபர் தாக்குதலுக்கு பிறகு வெளிச்சத்துக்கு வந்தார். பட மூலாதாரம்,POLICE OF FINLAND படக்குறிப்பு,கிவிமாக்கியின் ஆதாரத்தை போலீஸார் சமர்பித்தனர் சிவப்பு அறிக்கை வெளியீடு கிவிமாக்கிக்கு எதிராக இன்டர்போல் சிவப்பு அறிவிப்பு (Red Notice), வழங்குவதற்கான ஆதாரங்களை சேகரிக்க ஃபின்லாந்து காவல்துறைக்கு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆயின. அவர் ஐரோப்பாவின் மிகவும் தேடப்படும் குற்றவாளிகளில் ஒருவரானார். ஆனால் 25 வயதான அவர் எங்கே இருக்கிறார் என்பது யாருக்கும் தெரியவில்லை. கடந்த பிப்ரவரி மாதம் பாரிஸில் உள்ள காவல்துறைக்கு ஒரு குடியிருப்பு பகுதியில் இருந்து பொய்யான தகவல்களுடன் தொலைபேசி அழைப்பு வந்தது. போலீஸ் நேரில் சென்று ஆய்வு செய்த போது, அங்கு கிவிமாக்கி வசிப்பது தெரிய வந்தது. அவர் போலியான பெயரில் போலி அடையாள ஆவணங்களுடன் அங்கு வசித்து வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அவர் பின்லாந்துக்கு நாடு கடத்தப்பட்டார். அங்கு அந்நாட்டு வரலாற்றில் மிக உயர்ந்த எண்ணிக்கையிலான பாதிக்கப்பட்டவர்களை கொண்ட விசாரணையை போலீஸ் தொடங்கியது. சைபர் கிரைம் விசாரணைகளின் துப்பறியும் தலைமை ஆய்வாளர் மார்கோ லெபோனன், மூன்று ஆண்டுகள் நீடித்த இந்த வழக்கை நடத்தினார். இது அவரது வாழ்க்கையில் மிகப்பெரிய வழக்கு என்று கூறுகிறார். " நாங்கள் 200 க்கும் மேற்பட்ட அதிகாரிகளைக் கொண்டிருந்தோம், இவ்வழக்கில் பாதிக்கப்பட்டவர்களின் மிக தீவிரமான வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது" “கிவிமேகியின் விசாரணை நாட்டிற்கு ஒரு முக்கிய செய்தியாக மாறியது. ஒவ்வொரு நாளும் இங்கு நிருபர்கள் மற்றும் சர்வதேச ஊடகங்கள் விசாரணையை பார்வையிட்டு சென்றனர். அவர் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டபோது உடனிருந்தனர். நீதிமன்றத்தில் அவரது வழக்கின் முதல் நாள் நான் அங்கிருந்தேன். அவர் தனது அப்பாவித்தனத்தை வெளிப்படுத்தினார். கனிவாகவும், அவ்வப்போது நகைச்சுவையாகவும் பேசினார். ஆனால் அவருக்கு எதிரான சாட்சியங்கள் மிகப்பெரியவை. அவரின் பேச்சு எடுபடவில்லை.” என்றார். விவரித்த அவர் ``திருடப்பட்ட தரவைப் பதிவிறக்கப் பயன்படுத்திய சர்வருடன் கிவிமேகியின் வங்கிக் கணக்கை இணைப்பது மிகவும் கடினமான செயல் முறையாக இருந்தது. ஆன்லைன் புனைப்பெயரில் அவர் வெளியிட்ட புகைப்படத்திலிருந்து கிவிமாக்கியின் கைரேகையைப் பிரித்தெடுக்க எங்களின் அதிகாரிகள் புதிய தடயவியல் நுட்பங்களையும் பயன்படுத்தினர்.” என்கிறார். "இணையத்தில் ஹேக் செய்யப்பட்ட தரவுகளை பதிவிட்ட மர்ம நபர் கிவிமாக்கி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிக்க மிகவும் சிரமப்பட்டோம். பல்வேறு தொழில்நுட்ப செயல்முறைகளை கையாண்டு அவரை கண்டுபிடித்தோம்" என்று லெபோனன் கூறினார். பின்லாந்து தலைநகரான ஹெல்சிங்கியில் ஏப்ரல் மாத இறுதியில், கிவிமாக்கி மீதான வழக்குகளின் இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது. இறுதியில், நீதிபதிகள், "கிவிமாக்கி குற்றவாளி” என்று தீர்ப்பளித்தனர்.   பட மூலாதாரம்,JOE TIDY படக்குறிப்பு,எல்சிங்கியில் நடைபெற்ற கிவிமாக்கி மீதான விசாரணை அந்நாட்டின் வரலாற்றில் மிகப்பெரிய ஒன்றாகும் நீதிமன்றத்தின் கூற்றுப்படி, கிவிமாக்கி 30,000 க்கும் மேற்பட்ட குற்றச்செயல்களை செய்திருக்கிறார். இவரால் அத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவரது செயல் ஒவ்வொரு தனிப்பட்ட நபரையும் பாதித்துள்ளதால், ஒவ்வொன்றும் தனித்தனி வழக்காகவே கருதப்படுகிறது. தரவு திருடுதல், மோசமான அச்சுறுத்தல் முயற்சி, தனிப்பட்ட வாழ்க்கையை மீறும் தகவல்களை பரப்புதல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அவருக்கு அதிகபட்சம் ஆறு ஆண்டுகள் மற்றும் மூன்று மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் அவர் ஏற்கனவே சிறையில் இருந்தால் பின்லாந்தின் நீதி அமைப்பின் படி தண்டனை காலம் குறைக்கப்படலாம். டினா போன்ற பாதிக்கப்பட்டவர்களுக்கு, இந்த தீர்ப்பு போதுமானதாக இல்லை. "இதனால் 33,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், பலர் தற்கொலை செய்து கொண்டனர் - மேலும் எங்கள் ஆரோக்கியத்தை பாதித்துள்ளது. " என்று அவர் கூறுகிறார். இதற்கிடையில், பாதிக்கப்பட்டவர்கள் இந்த வழக்கில் இருந்து ஏதேனும் இழப்பீடு கிடைக்குமா என்று எதிர்பார்க்கின்றனர். கிவிமாக்கி, பாதிக்கப்பட்ட ஒரு சிலருடன் நீதிமன்றத்திற்கு வெளியே வைத்து பேச்சுவார்த்தை நடத்தி, தீர்வு காண கொள்கையளவில் ஒப்புக்கொண்டார். ஆனால் மற்றவர்கள் அவருக்கு எதிராகவும் வஸ்டாமா சிகிச்சை மையத்திற்கு எதிராகவும் சிவில் வழக்குகள் போட திட்டமிடுகின்றனர். உளவியல் சிகிச்சை நிறுவனம் இப்போது மூடப்பட்டுவிட்டது. நோயாளியின் தரவைப் பாதுகாக்கத் தவறியதற்காக அதன் நிறுவனருக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கிவிமாக்கி தனது பிட்காயினில் எவ்வளவு பணம் வைத்துள்ளார் என்பதை போலிஸாரிடம் தெரிவிக்கவில்லை. அவர் தனது டிஜிட்டல் வாலட் விவரங்களை மறந்து விட்டதாக கூறுகிறார். ரைஸ்கோ என்பவர் கூறுகையில், "அரசு மேலும் நடவடிக்கை எடுக்க முடியும் என்று நம்புகிறேன். ஆனால் ஒவ்வொரு தனிப்பட்ட வழக்கிலும் எவ்வளவு தீங்கு விளைவித்தார் என்பதை மதிப்பிடுவதற்கு பல மாதங்கள் ஆகலாம். எதிர்காலத்தில் இதுபோன்ற வெகுஜன ஹேக் வழக்குகளை சமாளிக்க சட்டத்தில் மாற்றம் கொண்டு வரவேண்டும். இது உண்மையில் பின்லாந்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது” என்று அவர் கூறுகிறார். https://www.bbc.com/tamil/articles/c51nly4deqpo
    • இந்தியாவிலிருந்து நன்மையானது ஏது வரக் கூடுமோ?  😏 எரியுண்ட சடலங்களைப் புசிக்கும் நரமாமிச பட்சணிகளை வணங்கும் நாட்டிலிருந்து எதை எதிர்பார்க்க முடியும்?  😏
    • பு…லி…கள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடித்தது இந்திய அரசு.)அதற்கு கூறும் காரணங்கள் வெறும் நொண்டிச்சாட்டுகள்.இந்த நிலையில் இந்திய அரசுக்கு 23 ஐ நிறைவேற்ற சொல்லி கடிதம் எழுதும் தமிழ் அரசியல் வாதிகளும்.அந்த அரசின் நிகழ்ச்சி நிரலில் செயற்படும் பத்தி எழுத்தாளர்களும் இந்திய அபிமானிகளும் தொடர்ந்து தமிழ்மக்களை இந்திய மாநைக்புள் வைத்திருக்கப் போகிறார்களா?இனியும் இந்தியாவை நம்ப முடியுமா?   புலிகள் இயக்கத்தின் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு இந்திய அரசு நீடித்துள்ளது. இந்திய அரசு தடையை நீடிப்பது ஆச்சரியம் இல்லை. ஆனால் தடைக்காக கூறும் காரணங்கள்தான் ஆச்சரியமாக இருக்கிறது. புலிகள் அமைப்பு இப்பவும் இந்திய மண்ணில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதாக குறிப்பிடுவது ஆச்சரியமாக இருக்கிறது. அதைவிட ஆச்சரியமாக இருப்பது வெளிநாடுகளில் இருக்கும் புலி ஆதரவு அமைப்புகள் இந்திய அரசுக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரம் செய்து வருவதாக கூறுவது.   ஒன்று மட்டும் நன்கு புரிகிறது. காங்கிரஸ் அரசாக இருந்தாலும் சரி பாஜக அரசாக இருந்தாலும் சரி அவர்களது ஈழத் தமிழர் மீதான வெளியுறவுக் கொள்கை என்பது ஒன்றாகவே இருக்கிறது. இனியாவது இந்திய அரசை நம்பும் ஈழத் தமிழ்த் தலைவர்கள் இதனை புரிந்துகொள்ள வேண்டும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.