Jump to content

மாடியில் இருந்து விழுந்த குழந்தை பத்திரமாக மீட்பு: உயிரை பணயம் வைத்து மீட்ட மக்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
29 APR, 2024 | 10:37 AM
image

தமிழ்நாட்டில் சென்னை ஆவடி அருகே அடுக்குமாடி குடியிருப்பின் 4-வது மாடியில் இருந்து கீழே விழுந்த 6 மாத பெண் குழந்தை, 2-வது மாடியில் மழைக்காக அமைக்கப்பட்டிருந்த தகர கூரையில் விழுந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தது. குடியிருப்புவாசிகள் உயிரை பணயம் வைத்து, அந்த குழந்தையை பத்திரமாக மீட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் திருமலைவாசன் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் இளம் தம்பதியின் 8 மாத பெண் குழந்தை கிரண்மயி. இந்நிலையில், நேற்று காலை குடியிருப்பு வளாகத்தின் 4-வது தளத்தில் இருந்தபடி, குழந்தைக்கு தாய் சோறு ஊட்டிக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக, தாயின் பிடியில் இருந்து தவறிய குழந்தை, பால்கனி வழியாக கீழே விழுந்தது. தாய் அலறித் துடிக்க, அதிர்ஷ்டவசமாக, 2-வது மாடியில் மழைக்காக அமைக்கப்பட்டிருந்த தகர கூரை மீது குழந்தை விழுந்தது.

இந்த நிலையில், சத்தம் கேட்டு, குடியிருப்புவாசிகள் ஓடி வந்தனர். தகர கூரையின் நுனியில் குழந்தை அழுதபடியே தொங்கிக் கொண்டு இருப்பதை பார்த்து பலரும் பதறினர். பிடி நழுவினால் 2-வது மாடியில் இருந்து எந்நேரத்திலும் குழந்தை கீழே விழக்கூடும் என்ற நிலை இருந்ததால், ஒரு பெரிய துணியை கையில் பிடித்தபடி, பலரும் கீழே சூழ்ந்து நின்றனர். பின்னர், ஒரு பெரிய போர்வையை எடுத்து வந்து 10-க்கும் மேற்பட்டவர்கள் சுற்றி நின்று கெட்டியாக பிடித்துக் கொண்டனர்.

எதிர் குடியிருப்பில் இருந்து இதை பார்த்துக் கொண்டிருந்த 2 பெண்கள் உட்பட 3 பேர், “குழந்தையை எப்படியாவது காப்பாற்றுங்கள்” என தொடர்ந்து வேதனையுடன் குரலெழுப்பியபடி இருந்தனர்.

இதற்கிடையே, தகர கூரையில் தொங்கிக்கொண்டு இருக்கும் குழந்தையை பத்திரமாக மீட்பதற்கான முயற்சியில் குடியிருப்புவாசிகள் சிலர் இறங்கினர். உயிரை பணயம் வைத்து, முதல் தளத்தில் உள்ள ஜன்னல் வழியாக ஒன்றன்பின் ஒன்றாக இறங்கினர். ஒருவரை ஒருவர் பத்திரமாக பிடித்து கொள்ள, ஒருவர் துணிச்சலுடன் ஏறி, தகர கூரையின் நுனியில் தவித்துக் கொண்டிருந்த குழந்தையை லாவகமாக மீட்டார்.

குழந்தையை   எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்ட அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர். மீட்கப்பட்ட குழந்தை கிரண்மயிக்கு நெற்றியில் லேசாக காயம்பட்டிருந்தது. உடனடியாக குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

கூரையின் நுனியில் குழந்தை தவிப்பது முதல், பத்திரமாக மீட்கப்பட்டது வரை வீடியோவாக பதிவு செய்த ஒருவர் இதை சமூக வலைதளத்தில் பதிவிட்டார். வலைதளங்களில் இது வைரலானது. குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட அனைவருக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

https://www.virakesari.lk/article/182204

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாடியிலிருந்து தவறி விழுந்த குழந்தை.! பதைபதைப்பு நிறைந்த மீட்பு காட்சிகள்.!

 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அவர்கள் உடைத்து இருக்க வேண்டியது கையை அல்ல!
    • “பாலஸ்தீனத்தை இல்லாதொழிக்கும் இஸ்ரேலின் வெறியாட்டம் வெற்றியளிக்காது; இறுதி வெற்றி ஜனநாயகத்துக்கே!!” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் சபையில் தெரிவிப்பு! ஊடகப்பிரிவு- உள்நாட்டு கடல் வளங்களையே இந்திய மீனவர்களிடமிருந்து பாதுகாக்க முடியாத இலங்கை கடற்படையினரை, மத்திய கடல் பிரதேசத்தை பாதுகாக்கும் பணிக்காக அனுப்பியிருப்பதன் பின்னணி என்ன? என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் கேள்வி எழுப்பியுள்ளார். பாராளுமன்றத்தில் (14) இடம்பெற்ற பாலஸ்தீனின் தற்போதைய நிலை குறித்த விவாதத்தில் உரையாற்றிய போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து தொடர்ந்து உரையாற்றிய அவர்,   “இந்திய மீனவர்களின் ஊடுருவல்களால் நம் நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்படுகிறது. இதைக்கூட கட்டுப்படுத்த அரசாங்கத்துக்கு திராணியில்லை. இந்தக் கடற்படையா மத்திய கிழக்கு கடற்பகுதியின் கப்பற்போக்குவரத்தை பாதுகாக்கப்போகிறது? எனவே, அரசாங்கம் பாலஸ்தீன் விவகாரத்தில் இரட்டைமுகத்துடன் செயற்படுவதாக நான் சந்தேகிக்கின்றேன்.    பாலஸ்தீனர்களை விரட்டியதால் ஏற்பட்ட இஸ்ரேலிய தொழில் வெற்றிடங்களை நிரப்புவதற்கு இலங்கையும் ஆட்களை அனுப்பியுள்ளது. இது ஏன்? இஸ்ரேலின் பொருளாதாரம் மற்றும் இராணுவத்தை பாதுகாக்கும் தேவை அரசாங்கத்துக்கு ஏன் ஏற்பட்டது? வெளிநாட்டமைச்சர் இதற்குப் பதலளிக்க வேண்டும். வெறும் தலையாட்டியாக இருக்காமல், இஸ்ரேலின் வெறித்தனங்களை அரசாங்கம் கண்டிப்பது அவசியம்.   சொந்தமண்ணிலிருந்து பாலஸ்தீனர்கள் வெளியேற்றப்பட்ட "நக்பா" தினத்தில், நான் இந்த வேண்டுகோளை விடுக்கிறேன். சர்வதேச நியதிக்கு உடன்பட்டு பாலஸ்தீனை அங்கீகரியுங்கள். இஸ்ரேலின் இன ஒழிப்புச் செயற்பாடுகளை ஆதரிக்கும் வகையில், இலங்கை செயற்படக்கூடாது. தர்மமின்றி, இனவெறியோடு தலைவிரிகோலமாக தாண்டவமாடும் யூத இராணுவம் முழு பாலஸ்தீனையுமே அழிக்கத் துடிக்கிறது.   பதிலடிப்போரென்ற போர்வையில் பெண்கள், குழந்தைகள், முதியோர்கள், கர்ப்பிணித்தாய்மார்கள் மற்றும் நிரபராதிகள் அனைவரையும் சல்லடைகளால் துளைக்கிறது இஸ்ரேல். வைத்தியசாலைகள், அகதிமுகாம்கள் இன்னும் நிவாரண நிலையங்களும் விமானத்தாக்குதல்களால் தகர்க்கப்படுகின்றன.   அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய அரசுகளின் ஒருதலைப்பட்ச போக்குகள், ஜனநாயகத்துக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது. வீட்டோ அதிகாரத்தால் இஸ்ரேலைப் பாதுகாக்கும் அமெரிக்கா, பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டங்களையோ அல்லது மனிதாபிமானத்தையோ கண்டுகொள்ளவில்லை” எனவும் அவர் குறிப்பிட்டார். https://www.madawalaenews.com/2024/05/i_48.html
    • யார் அந்த பொது தமிழ் ஜனாதிபதி வேற்பாளர் ? இப்போதைக்கு எரிக் கும் வந்து போயிட்டுது ஜப்பானும் வந்து போயிட்டுது அமெரிக்கனும் வந்து போயிட்டுது கடைசியில் தமிழ் தேசியத்துக்கு எதிரான கருத்துரை பரப்புரை கொண்டவர்களும் போறார்கள் வருகிறார்கள் இன்னும் போய் கொண்டும் இருக்கிறார்கள் இந்த செய்தி வந்ததில் இருந்து பலருக்கு இரவு துக்கம் போயிட்டுது . நமக்கு ஏதோ ஒரு தீர்வையாவது இப்படியாகினும் கிடைக்குகட்டும் அங்குள்ள தமிழ் மக்களுக்கு என்ற எண்ணம் மட்டுமே.
    • டொனால்ட் டிரம்ப் அமோக வெற்றிபெறலாம் என ஊகிக்கின்றார்கள். 🤔
    • எல்லா வீடுகளிலையும் மின்விசிறி சுத்தோ சுத்தென்று சுத்திக்கொண்டு உள்ளது.  இலங்கையில் மின்விசிறி விற்பனை, மின்விசிறி உதிரி பாகங்கள், மின்விசிறி திருத்தல் சம்மந்தமான வியாபாரம் நல்லாய் ஓடும் போல. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.