Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
"விட்டுக்கொடுத்துப் பழகு"
 
 
'விட்டுக்கொடுத்துப் பழகு', கேட்க நல்லாத்தான் இருக்குது. ஆனால் பழகின எனக்குத்தான் தெரியும் அதன் கொடுமை . 'ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறுகன்னத்தையும் திருப்பிக்கொடு' என்று இன்றும் சொல்பவர்கள் உண்டு. அவர்கள் இன்னும் அடி வாங்காதவர்கள் என்றே எண்ணுகிறேன்! காலம் மாற கோலம் மாறும் என்பது உண்மையே! அப்படித்தான் என் மனம் முணுமுணுத்துக் கொண்டு இருந்தது.   
 
நான் என் மனைவியை காதலிக்க ஆரம்பிக்கும் பொழுதே , 'என் மனதுக்கும் உண்மைக்கும் ஒவ்வாத ஒன்றில் நான் என்றும் ஈடுபட  மாட்டேன். என் உணவு சைவம் , உடை , அலங்காரம் பகட்டு இல்லாமல், தேவையின் அடிப்படையில். அது என் தனிப்பட்ட கொள்கை, அதே போல நீ பிடிக்கும் விரதங்களிலோ அல்லது நம்பிக்கைகளிலோ அல்லது உன் உடை, அலங்காரத்திலோ நான் தலையிட மாட்டேன். நீயும் அவ்வாறே விட்டுக்கொடுப்புகளும் புரிந்துணர்வும் இருக்கும் என்றால், தாராளமாக நாம் தொடரலாம் ' என்றேன். 
 
அவள் அழகு, யாரையும் திரும்பி பார்க்க வைக்கும்  உடையும் மிகவும் நேர்த்தியாக, இன்றைய நவீன காலத்துக்கு ஏற்றவாறு அணிவதுடன், முடி அலங்காரம் நாளுக்கு நாள் விதம் விதமாக இருக்கும். இவள் தான் நான் வேலைசெய்யும் நிறுவனத்தில் என் சுருக்கெழுத்து - தட்டெழுத்து உதவியாளர். ஆனால் என்னை அவள்மேல் காதலிக்க தூண்டியது இவையவிட, அவள் அன்பாக மரியாதையாக , கரிசனையுடன் பழகும் பழக்கமும், இனிய சொற்களும் கவரும் புன்சிரிப்புமே தான்!
 
அவள் என்னை அப்படியே விடாமல் கொஞ்ச நேரம் உற்றுப்பார்த்தால். கண்களில் இருந்து சில துளிகள் அவள் மார்பை நனைத்தன. உங்களை காதலிப்பதில் எனக்கு சரியான மகிழ்ச்சி, நீங்க உங்கள் வழியில் இருங்கள், நானும் உங்களுடன் அதே வழியில் இருப்பேன். எனக்கு உங்கள் விருப்பம் எதுவோ, அதுவே இனி என் விருப்பம் என்று தன்னையே எனக்கு விட்டுக்கொடுத்தாள். இதற்க்கு மேல் இனி என்ன வேண்டும்?. என்றாலும் உன் தனிப்பட்ட  சுதந்திரத்தில் நான் என்றும் விட்டுக்கொடுப்புடனே இருப்பேன். ஆகவே அவசரம் தேவையில்லை. இன்று இருப்பது போலவே என்றும் இருக்கலாம் என்றேன்.    
 
"கடலை சுருட்டி கக்கத்தில் வைக்கலாம்
காட்டு புலியை பக்கத்தில் வைக்கலாம்
இடியை கூட பிடித்து விடலாம்
துடியிடை பெண்ணின் மனமறிய முடியாது!"
 
என்பது ஒரு கிராமிய பாடல். எனக்கு அதில் அன்று நம்பிக்கையே இல்லை. அவளை முற்றாக நம்பினேன். நான் அந்த நிறுவனத்தின் பொது முகாமையாளர், அவளின் விட்டுக்கொடுப்பை கண்டு நெகிழ்ந்தே போனேன். என் மனம் தழுதழுத்தது. அவளை அருகே கூப்பிட்டு, எனக்காக நீ எல்லாவற்றையும் விட்டுக்கொடுக்கத் தேவையில்லை. இருவரும் அளவோடு விட்டுக்கொடுத்து மகிழ்வாக வாழலாம் என்றேன். ஆனால் அவள் இல்லை, உங்கள் விருப்பம் தான் என் விருப்பம் என்று பிடிவாதமாக கூறி, யாரும் காணாதபடி முத்தம் திடீரென தந்துவிட்டு தன் வேலையை பார்க்க போய்விட்டாள். 
 
அதன் பின், அவளை முறையாகத் திருமணம் செய்ய, பெற்றோர்களிடம் சம்மதம் பெற்று, அவளினதும் பெற்றோர்களினதும் விருப்பத்திற்கு அமைய சைவ ஆலயம் ஒன்றில் முறையாக நடந்தேறியது. இது என் முதல் விட்டுக்கொடுப்பு. காரணம் எனக்கு பிடித்தது சமயம் அல்ல, மானிடமே! கல்யாணத்தின் பின் அவள் வேலையில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டாள். பெண்மனத்தின் ஆழத்தை காணமுடியாது என்பதெல்லாம் வெற்று பேச்சி ஒருவர்கொருவர் அன்போடு அன்யோன்யமாய் வாழ்ந்தால் கணவன் மனதில் உள்ளதை மனைவியும் மனைவியின் மனதை கணவனும் உள்ளங்கை நெல்லிக்கனி போல அறிந்து கொள்ளலாம் புரிந்தும் கொள்ளலாம் என்பதே என் நிலைப்பாடு. அவளும் அப்படியே தனது மனைவி பங்கை செலுத்தினாள்.
 
ஆனால் நாட்கள் கொஞ்சம் கொஞ்சமாக நகர, அவள் என்னிடம் மெல்ல மெல்லமாக, மிக அன்பாக, சிலவேளை ஊடலாக, என்னை, தான் எதை எதை விட்டுக் கொடுத்ததாக காட்டினாலோ, அந்த பக்கம் இழுக்கத் தொடங்கினாள். சிலவேளை உங்க கொள்கையை குப்பையில் போடுங்கள். நாம் இந்த சமுதாயத்தில் நல்ல ஒரு இடத்துக்கு வரவேண்டும் என்றால், நீங்க வழிடாட்டியும் பரவாயில்ல, சும்மா என்னுடன் அங்கு வாருங்கள், உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்று வேறுபாடு இருந்தால் தான், நாம் உயர்ந்தவராக இருக்கலாம்  ...  இப்படி தன் அழகை, வசீகரத்தை ஆயுதமாக பாவித்து நச்சரிக்க தொடங்கினாள். இதைத்தான் 'தலையணை மந்திரம்' என்றார்களோ? 
 
நானும் குடும்பத்துக்குள் சச்சரவு வரக்கூடாது என்பதாலும், அவள் தரும் அணைப்பிலும் கொஞ்சுதலிலும் கொஞ்சம் தடுமாறியதாலும், ஆரம்பத்தில் இதை பெரிதாக எடுக்கவில்லை. ஆனால் நாள்பட நாள்பட அது என்னை வாட்டிட தொடங்கியது. நான் நானாகவே இருக்கவேண்டும் என என் உள்மனம் என்னுடன் போராடத் தொடங்கியது. எங்கள் திருமணம் கார்த்திகையில் நடந்ததால், ஏறத்தாழ பதினோரு மாதத்தின் பின் தீபாவளி பண்டிகை வந்தது. அவள் தன் நண்பர்கள் எல்லோரையும் அழைத்து அதை பெரிதாக கொண்டாட ஏற்பாடுகள் செய்யத் தொடங்கிவிட்டாள். என்னிடம் ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை. எனது வாங்கி கணக்கு, திருமணத்தின் பின் கூட்டுக் கணக்கில் இருந்ததாலும், நான் என்றுமே அவளை எதற்கு எடுத்தாய் என்று கேட்காததாலும், அவள் என் விட்டுக்கொடுப்பை தனக்கு சாதகமாக பாவித்தால் என்று இப்ப எண்ணுகிறேன். 
 
"அத்தி மலரும் அருங்காக்கை வெண்ணிறமும்
கத்துபுனல் மீன்பதமும் கண்டாலும் - பித்தரே
கான்ஆர் தெரியல் கடவுளும் காண்பரோ
மான்ஆர் விழியார் மனம்"
 
அத்தி மலர்வதை பார்த்தாலும் பார்க்கலாம் வெள்ளை நிறத்தில் காகத்தை கண்டலாமும் காணலாம் கடலுக்கடியில் நீந்தி செல்லும் மீன்களின் கால்தடத்தை கூட கண்டுபிடிக்கலாம். ஆனால் பெண்களின் மனதில் இருப்பதை கடவுளாலும் கண்டறிய இயலாது என்று ஒரு நீதி வெண்பா கூறுகிறது என்று இன்று தான் நான் அறிந்தேன்.
 
அவள் இது எமது தலைத் தீபாவளி, வெடி கொளுத்தி, ராவணனை எரித்து, அந்த கொண்டாட்டத்தை நாங்களே முன்னின்று நடத்தவேண்டும் என்று பிடிவாதமாக இருந்தாள்.  மனைவியை சந்தேகித்த இராமனை இந்த நாடு கடவுள் என்றே போற்றுகிறது. விலை மகள் பின்னால் போய், சொத்தை எல்லாம் அளித்த கோவலனை கோவிக்காமல் ஏற்றுக் கொண்ட கண்ணகியை கற்ப்புக்கு அரசி என்று கொண்டாடுகிறது தமிழ் கூறும் இந்த நல் உலகம் என்று வாதாடுபவன் நான். ஆகவே தான் மனைவியின் போக்கின் மாற்றத்தை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. பாவம் என்னால் இயன்றதை விட்டுக்கொடுத்து, அவளை மகிழ்வாக வைத்திருப்போம் என்றே மனம் நினைத்தது, ஆனால் இந்த தீபாவளி விடயத்தில், என் மனம் ஏற்க மறுத்தது.   
 
தீபாவளி என்ற பெயரில்,உண்மையில் ஒரு இறப்பை கொண்டாடுகிறார்கள். அதுவும் ஒரு தமிழ் [திராவிட] அரசனின் மரணத்தை விழாவாக கொண்டாடுகிறார்கள்! அது ராவணனாக இருக்கலாம், நரகாசுரனாக இருக்கலாம், யாராக இருந்தாலும் ஒரு வெற்றியை கொண்டாடலாம், ஆனால் மரணத்தை கொண்டாடி இழிவு படுத்துவது எந்த மனித தன்மைக்கும் முரணானது. அது தான் என் மனம் அதை ஏற்றுக்கொள்ளவில்லை   
 
இதில் நான் கட்டாயம் விட்டுக்கொடுக்க முடியாது. எவ்வளவோ விட்டுக்கொடுத்துப் பழகிவிட்டேன். ஆனால் அவள் எல்லாமே விட்டுக்கொடுத்து பழக்கப்போறேன் என கல்யாணத்துக்கு முன் மயக்க வார்த்தை கூறியவள், இப்ப அதற்கு எதிர்மாறாக, முக்கியமானதையாவது கொஞ்சம் சரிபண்ணமால் தன்பாட்டில் பிடிவாதமாக மாறிக்கொண்டு போகிறாள். இப்ப அவளுக்கு சமூகத்தில் ஒரு அந்தஸ்து, புகழ், நண்பர்களுக்கிடையில் ஒரு பகட்டு வாழ்வு, இப்படி ஒரு பொய் வாழ்வுக்குள் போய்விட்டாள்.
 
வாழ்வு என்பது இருவரும் சேர்ந்தது என்பதை பொருட்படுத்தாமல் விட்டுவிட்டாள். எதோ நான் கணவன் என்று அவளுக்கு, அவளின் தேவை முழுவதுக்கும் விட்டுக்கொடுத்துப் பழகவேண்டும் என்றே எண்ணுகிறாள். அது தான் என்னை வாட்டும் பிரச்சனை ?  ஆனால் தானும் அந்த விட்டுக்கொடுபில் ஒரு பங்கு என்பதை உணர எனோ மறுக்கிறாள்?  
 
"வெட்ட வரும் கொடுவாளை கட்டி அணைக்கலாம்
சுட்டுவிடும் நெருப்பை கூட தொட்டுவிடலாம்
பட்டுபோன மரம் கூட தளிர்த்து எழலாம்
பொட்டு வைத்த பெண்ணை நம்பி வாழாதே!" 
 
என் சுருக்கெழுத்து - தட்டெழுத்து உதவியாளராக இருந்த பொழுது அவளில் நான் ரசித்த அழகு, கண்களை, செவியை கவரும் பாணி  இன்னும் அப்படியே தான் இருக்கிறது, ஆனால், அன்பாக மரியாதையாக , கரிசனையுடன் பழகும் பழக்கம் மட்டும் எங்கேயோ போய்விட்டது. தன்நலம் என்று வரும்போது ஆண்பெண் இருவருமே ஒரே மாதிரி தான். அதில் ஆண் பெண் என்று வேறுபாடு இல்லை என்பதில் எனக்கு எப்பவும் உடன்பாடு உண்டு. ஆனால், என் வாழ்வின் நிலையில் அது பொதுவாக பெண்களை குறிக்காவிட்டாலும், என் மனைவியை குறிப்பாக குறிப்பதை உணர்கிறேன். 
 
"ஒரு கோப்பையிலே இப்ப என் குடியிருப்பு
ஒரு கோல மயில் தந்த இந்த துணையிருப்பு
மனித பண்பாட்டிலே என் உயிர் துடிப்பு
நான் காண்பதெல்லாம் உண்மையின் சிரிப்பு"  
  
மாதுவுடன் இருக்கவேண்டிய நான், இப்ப ஒரு பொது விடுதி [pub] ஒன்றில் மதுவுடன் இருக்கிறேன். எனக்கு வேறு வழி தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் உண்மை, நான் அந்த தீபாவளி கொண்டாட்டத்தை தவிர்க்க மட்டுமே தற்காலிகமாக பொது விடுதி வந்தேன் , அவ்வளவுதான், கெட்டுப்போக அல்ல ! தீபாவளிக்கு வந்தவர்கள், மனைவியை புகழ்ந்து, பாவம் இந்த குடிகாரனிடம் வாழ்க்கையை பறிகொடுத்து விட்டாளே என்று என்னை ஏசலாம்? அவள் என்ன இருந்தாலும் என் மனைவி. அவளை காட்டிக்கொடுக்க நான் விரும்பவில்லை. நானே எல்லாத்தையும் ஏற்கிறேன்! அவளின் - அந்த கொண்டாட்டத்தில் - அவள் ராமன் , நான் ராவணன்! அவளை தூக்கி ஆடுகிறார்கள், என்னை சொற்களால் திட்டி எரிக்கிறார்கள்!! ஆமாம் இதுவும் ஒரு தீபாவளியே!!
 
"விட்டுக் கொடுப்பவன் கெட்டுப்போகமாட்டான்
கெட்டுப்போகிறவள் விட்டுக்கொடுக்க மாட்டாள்"
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்] 
No photo description available. No photo description available. No photo description available. 
 
 
 
 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.