Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

"நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா?" [சீரழியும் சமுதாயம்]


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
"நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா?" [சீரழியும் சமுதாயம்] / பகுதி: 01
 
 
இன்று பலரால், பல ஊடகங்களால் பேசப்படுவது மனித சமுதாயம் எங்கே போகிறது?
 
இந்த போக்கை அல்லது சீரழிவை நாம் தடுக்க முடியாதா?,
 
அவைகளுக்கான காரணங்கள் தான் என்ன என்ன ?
 
இந்த அழிவை நோக்கிய பயணம் இன்று ஏற்பட்டதா? இல்லை அது என்றோ தொடங்கி ஆனால் இன்று தான் அதன் எதிரொலியை நாம் உணருகிறோமா?
 
ஏன் நாம் இதுவரை மௌனமாக இருந்தோம்?,
 
இப்படி பல பல கேள்விகள் எம்மில் இன்று எழுகின்றன. இவைகளுக்கு எம்மால் இயன்ற பதில்களைத் தேடி அலச முன்பு, நாம் இரண்டு விடயங்களை சரியாக புரிந்து கொள்ள வேண்டும்.
 
ஒன்று சமுதாயம் என்றால் என்ன?,
 
வீழ்ச்சியடைகிறது அல்லது சீரழகிறது என்றால் என்ன?
 
ஒரு சமுதாயம் [Society / குமுகாயம்] என்பது தனிப்பட்ட ஒரு இனங்கள் ஒன்றாக வாழும் ஒழுங்காக உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு எனலாம். உதாரணமாக உறுப்புகள் பல ஒன்று சேர்ந்து உடல் அமைவது போல, ஒரு இனங்கள் பல சேர்ந்து உருவாகுவதே சமுதாயம் ஆகும். எனவே சமுதாய கட்டுக்கோப்பிற்குள் வாழ்க்கை நெறிகள் அல்லது ஒழுக்கங்கள், கட்டுப்பாடுகள், நம்பிக்கைகள், மூடநம்பிக்கைகள், இப்படி பல பல இருக்கும்.
 
அதேவேளை சமூகம் (Community] என்பது ஒரே இடத்தில் வாழும் ஒரு மக்கள் தொகுதியையோ அல்லது பொதுவான சிறப்பியல்புகளை கொண்ட ஒரு மக்கள் கூட்டத்தையோ குறிக்கும். என்றாலும் சமூகம், சமுதாயம் ஆகிய இருசொற்களையும், பெரும் பாலும், ஒரே பொருளைக் குறிக்கப் பயன்படுத்துவதும் வழக்கம். ஆனால் அவை உண்மையில் வேறுபட்டவை. அதாவது சமுதாயம் (Society) என்பது மனித இனத்தின் சமூக - பொருளாதார - அரசியல் ஈடுபாடுகளினால், தொடர்புகளினால் இயங்கிவரும் ஓர் அமைப்பாகும். இவ்வமைப்பு ஒரு குறிப்பிட்ட நாகரிக அமைப்பிற்குள் இயங்கி வருகிறது என்றும் சமூகவியலாளர் கூறுவர்.
 
இன்னும் ஒரு முக்கிய பன்பையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டும், அதாவது உயிர் இனங்களில் மனிதன் மட்டுமே ஒரு மாறிவரும் சமுதாயத்தில் [evolving societies] வாழக்கூடியது. ஏனென்றால் சுற்றுச்சூழல் நிலைமைகளின் மாற்றங்களுக்கு மட்டும் அல்ல, மாறிவரும் பொருளாதார நிலைமைகளுக்கும் [evolving economic conditions] ஏற்றவாறும் தனது சமுதாயத்தின் கட்டமைப்பை சரிபடுத்தக் கூடியது.
 
ஆதி மனித சமுதாயம் ஒரு வேட்டுவ உணவு திரட்டியாக [hunter-gatherer] இருந்தனர். தங்களை சுற்றி இருக்கும் நிலத்தில் கிடைக்கும் உணவிலேயே இவர்கள் தங்கி இருந்தனர். எனவே இவர்கள் அதிகமாக உறவினர்களை கொண்ட சிறிய குழுக்கள் குழுக்களாக [kinship group] இருந்தனர். தொழிலாளர் பிரிவு [Division of labour] இங்குதான் முதலில் ஏற்பட்டதாக நாம் கருதலாம். வேடையாடுதல் ஆண்களாலும், உணவு தயாரித்தல், ஆடை மற்றும் குழந்தை வளர்ப்பு பெண்களாலும் நடைமுறை படுத்தப் பட்டன.
 
விதைகளை நாட்டல் மற்றும் கால்நடை வளர்ப்பு [seed planting and animal husbandry] அறிமுகம் செய்யப்பட்டதும், மனித சமுதாயத்தின் அமைப்பு மாறியது. அவர்கள் இப்ப, பல குடும்பங்கள் ஒன்று சேர்ந்த ஒரு கிராம குடியிருப்புகளில் [village settlements] வாழத் தொடங்கினார்கள். இவைகளுடன் தொடர்புடைய சமூக அமைப்பான விவசாய சமுதாயம் [agricultural society], பல்வேறு வடிவங்களை இம்மாற்றங்களால் ஏற்படுத்திக் கொண்டது. இங்கும் தொழிலாளர் பிரிவு தொடர்ந்தது. உதாரணமாக ஆண்கள் நிலத்தை உழுது பயிர்கள் பயிரிட்டனர், பெண்கள் வீட்டு வேலைகளை கவனித்தனர்.
 
இவைகளை தொடர்ந்து, தொழில்நுட்பத்திற்கும் சமுதாயத்திற்கும் இடையிலான, தொடர்புகளின் தாக்கத்தால் நகர்ப்புற சமுதாயம் [urban society] ஒன்று எழுச்சி பெற்றது. இதனால் மேலும் பல தொழிலாளர் பிரிவு எற்பட்டது. அதுமட்டும் அல்ல மக்கள், முன்பு இருந்ததை விட, அளவு அல்லது தொகை கூடிய சமூகங்களில் /குழுக்களில் வாழ்த் தொடங்கினர். அதாவது பெரிய நகரங்கள் உருவாகின, ஆனால், அதன் உள்கட்டமைப்புகளை தொடர்ந்து பராமரிப்பதற்கு, அந்த பெரிய நகரங்களுக்கு சிறப்பு நிர்வாக திறன்கள் மேலும் தேவைப் பட்டது. இது வர்க்கங்கள் [classes] உள்ளடக்கிய சமூக அடுக்குகளை [பாகுபாடுகளை / படிநிலைகளை /stratification] ஏற்படுத்தியது எனலாம்.
 
அத்துடன் தொழில் நுட்ப கண்டுபிடிப்பு ஒரு வர்த்தக வாய்ப்புகளையும் அவர்களுக்கு வழங்கியது. என்றாலும் பல பல காரணங்களால், வர்த்தக நடவடிக்கைகளில் ஆண்களே பெரும்பாலும் ஈடுபட்டு, செல்வங்களை / பணத்தை வீட்டிற்கு கொண்டு வந்தனர். எனவே நகர்ப்புற சமுதாய வளர்ச்சி, பெண்கள் ஆண்களில் பொருளாதாரத்திற்கு சார்ந்து இருக்கும் ஒரு நிலைமையை [economic dependence] அதிகரித்தது. அடிப்படை சமூக உறவான [Basic social relationship] திருமணம், செல்வத்தையும் பலத்தையும் அடைவதற்கான ஒரு கருவியாகவும் இங்கு பெருபாலும் மாறியது.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பகுதி: 02 தொடரும்
No photo description available. No photo description available.No photo description available.
 
 
 
 
  • Confused 1
Link to comment
Share on other sites

  • நியானி changed the title to "நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா?" [சீரழியும் சமுதாயம்]
  • கருத்துக்கள உறவுகள்
நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா? [சீரழியும் சமுதாயம்] பகுதி: 02
 
 
18 ஆம் நூற்றாண்டின் தொழில்துறை புரட்சி, நகர்ப்புற சமூகத்தில் மேலும் மாற்றத்தை ஏற்படுத்தியது. தொழில் மயமாக்கல் மேலும் மேலும் முன்னேற்றம் அடைய, அதிகமான மக்கள் தமது நிலத்தை விட்டு வெளியேறவும் தொழிற்சாலைகளில் வேலை தேடுவதற்கும் தள்ளப்பட்டார்கள். இதனால் பெண்கள் முழுமையான பொருளாதாரத்திற்கு, தொழிற்சாலையில் வேலை செய்யும் ஆண்களை மேலும் சார்ந்து இருக்க நேரிட்டது. அது மட்டும் அல்ல, தொழிற்துறை செயல்பாடுகளில் பங்கு பெறாத முதியவர்கள் [பழைய தலைமுறை /The older generations] குடும்பத்திற்கு ஒரு சுமையாகி விட்டது, இவர்களை "முதியோர் இல்லங்களுக்கு" அனுப்புதலும் அதிகரிக்கத் தொடங்கின.
 
20 ஆம் நூற்றாண்டில் இந்த நிலைமை மீண்டும் மாறியது. பெண்கள் வேலைக்கு போகத் தொடங்கியதும், மற்றும் நவீன முதலாளித்துவ தொழில்நுட்பத்தின் வளர்ச்சியும் [The development of modern capitalist technology] பெண்களின் சுதந்திரத்திற்கு - ஒரு உண்மையான சாத்தியத்திற்கு - வழிகோலியது. நவீன முதலாளித்துவம், குடும்பங்களை சிறிய சாத்தியமான உறவினர் அலகுகள் மட்டும் கொண்டவையாகவும் [smallest possible kinship units], உதாரணமாக ஒற்றை பெற்றோர் குடும்பங்கள் மற்றும் இரட்டை பெற்றோர் குடும்பங்கள் [single parent or both parents] போன்றவையாகவும், மற்றும் நிதி ரீதியாக சுயாதீன மானவையாகவும் மாறின. எனவே கூட்டு குடும்பம் [Joint family] இல்லாமல் அதிகமாக போய்விட்டது. எனவே அவர்கள் தமது குறைந்தபட்ச நாளாந்த மனவெழுச்சிகளுக்கு ஆதரவாக [emotional support] கைத் தொலை பேசி, கணனி போன்றவைகளை அதிகமாக பாவிக்க தொடங்கினர். இப்படித்தான் சமுதாயம் வளர்ச்சி அடைந்து இன்றைய நிலையை அடைந்தது எனலாம். ஆனால் இந்த சமுதாயம் ஒரு முழுமையடைந்து உள்ளதா என்பது எம் முன் தோன்றும் முக்கிய கேள்வியாக இன்று உள்ளது?
 
ஒரு சமுதாயம் முழுமை பெற வேண்டும் என்றால், அந்த சமுதாயத்தின் தூண்களாக இருக்கும் மனிதர்களாகிய நாம் சில பண்புகளை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். அப்படி என்றால் 'பண்பு' என்றால் என்ன ?, எந்த பண்புகளை நாம் வைத்திருக்க வேண்டும்? போன்ற கேள்விகள் இயல்பாக எழும்.
 
பண்ணுவது , அதாவது ஒழுங்காகச் செய்வது என்கிற பண்படு என்ற சொல்லில் இருந்து பிறந்ததே பண்பாடு ஆகும். அதாவது உலக நடைமுறைக்கு ஏற்ப ஒத்து நடப்பதே பண்பாடு என்றும் வரையறுக்கலாம் என்று எண்ணுகிறேன். இதனால் தான் நம் முன்னோர் 'ஊரோடு ஒத்துப் போ' அல்லது 'ஊரோடு ஒத்து வாழ்' என்கிறார்கள். வேறு விதமாக சொல்வதென்றால், பிறர் நமக்கு என்ன செய்தால் நாம் மகிழ்ந்து இருப்போமோ அதையே பிறருக்குத் திரும்பச் செய்வதும் பழியின்றி வாழ்தலும் பண்பாடு எனலாம். இதை சங்க இலக்கியமான நற்றிணை மிக அழகாக, தெளிவாக சொல்கிறது.
 
"நயனும், நண்பும், நாணு நன்கு உடைமையும்,
பயனும், பண்பும், பாடு அறிந்து ஒழுகலும்,
நும்மினும் அறிகுவென் மன்னே,"
[நற்றிணை 160, அடிகள் 1 - 3]
 
யாவருக்கும் இனிமையாக நடத்தல், அன்புப் பாராட்டி நட்புடன் வாழுதல், பழியைக் கண்டும் தீமையைக் கண்டும் மனங்கூசுதல், மற்றவர்களுக்கு, அதாவது சமுதாயத்திற்கு பயன்பட வாழ்தல், பிற உயிர்கள் படும் துன்பங்களைப் போக்கி வாழுதல் ஆகிய செயல்களே பண்புகள் என 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்த பாடல் எமக்கு அறிவுரை வழங்குகிறது. சுருக்கமாக அன்பு என்பது உயர்ந்த பண்பு என்றும் , அறன் என்பது உயர்ந்த வாழ்வின் சிறந்தப் பயன் என்றும் சொல்லுகிறது.
 
இந்த தனி மனிதர்களை உள்ளடக்கிய சமுதாயம் இன்றைய நிலைக்கு வளர்ச்சி அடைவதற்கு கட்டாயம் அவர்களுக்கு ஏதாவது தூண்டுகோல் இருந்திருக்கும். அவை சமூக நன்மைகளை தரும் தூண்டுகோல்களாகவோ, காரணிகளாகவோ அல்லது தீமைகளைத் தரும் காரணிகளாகவோ கூட இருக்கலாம்.
 
ஒரு விளக்கை சரியாக தூண்டும் போது அது பிரகாசமான ஒளியை தந்து இருளை போக்கும், அதே சமயம் அந்த விளக்கை தவறாக தூண்டினால் அந்த நெருப்பானது பெரும் அழிவைக் கூட ஏற்படுத்தும் வலிமை கொண்டது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
 
நம்மை சுற்றி நடக்கின்ற நிகழ்வுகள்தான், இப்போதெல்லாம் ஒரு தனி மனிதனை தூண்டி வழிநடத்துகிறது என்பதை மறுப்பதற்கு இல்லை. எனவே ஒரு சமுதாயத்தைத் தூண்டி சரியான வள்ர்ச்சி பாதையில் அழைத்து செல்வதில் ஊடகங்கள் பங்கு இணையற்றது. எனவே மக்களுக்கு உற்சாகம், நம்பிக்கை கொடுக்க கூடிய செய்திகளை முன்னிலைப் படுத்தி செய்தி வெளியிடுங்கள். இதனால் மக்கள் மனம் உற்சாகபடும், ஒரு நம்பிக்கை பிறக்கும் சமுதாயம் சரியான பாதையில் கண்டிப்பாக தூண்டபடும் என்பது என் நம்பிக்கையாகும்.
 
அதே வேளையில் மக்களாகிய நாமும் சற்று பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும், இன்று நம் கையிலே எண்ணற்ற தகவல்கள், வாட்ஸ் அப், டுவிட்டர், முகநூல் போன்ற ஊடகங்கள் மூலம் எதிர்மறை எண்ணங்களை தூண்டும் செய்திகளைப் பரப்புகிறது. ஆகவே உங்கள் மனதிற்க்கு ஒப்பாத ஓரு செய்தி அல்லது தகவலை அவற்றின் உண்மை நிலை அறியாமல் பரப்பாதீர்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.
 
“எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கயிலே, அது.... அன்னை வளர்ப்பிலே...” என்றான் ஒரு கவிஞன். ஆகவே மனிதர்களை உள்ளடக்கிய சமுதாயமும் அப்படியே என்பதை நாம் கட்டாயம் உணரவேண்டும். அப்பத்தான் நாம் ஒரு அன்னை போல் இருந்து ஒரு வலிமையான சமுதாயத்தை கட்டமைக்க முடியும். அதன் வீழ்ச்சியில் இருந்து அல்லது சரிவில் இருந்து அதை நிமிர்த்த முடியும். அதுவே எம் முக்கிய இன்றைய கடமை என்று எண்ணுகிறேன்.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பகுதி: 03 தொடரும்
74277088_10215272042297116_5834954895454633984_n.jpg?stp=dst-jpg_s851x315&_nc_cat=100&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=9VikPloOi9kQ7kNvgFhunq7&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfD3SqkLVt4cf4oktGHygt6YhyLMbA0uGzZovSpeTS4Ibw&oe=66571CE0 73280056_10215272045737202_3069543835743813632_n.jpg?_nc_cat=111&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=SMjBUNWQ6dgQ7kNvgFsfy2Q&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfDyyV4hLXArIG9L07-FgN2gsvjbqy5EH9Wu84QckkCxWQ&oe=66572D6A
74242370_10215272049457295_3284199639703617536_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=103&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=6U547RdkRV0Q7kNvgE5GchN&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfAn3z1o0RfWHJlZ4BLhOUqnLFvGVdGhRLBiw9ya3UR-1Q&oe=66573440 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
"நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா?" [சீரழியும் சமுதாயம்] பகுதி: 03
 
 
இன்று சமுதாயத்தை பற்றி பேசும் எவரும், வீழ்ச்சி, சரிவு, சீரழிவு என்ற சொற்களை பெரும்பாலும் பாவிப்பதை காண்கிறோம். வீழ்ச்சியடைதல் என்றால் தாம் இன்று உள்ள நிலையில் இருந்து சரிதல் அல்லது கீழ்நோக்கி போவதாகும். சீரழித்தல் என்றால் இன்று இருக்கும் ஒழுங்கில் இருந்து குலைதல் அல்லது நிலைகெடுதல் ஆகும். உதாரணமாக. நிலைகெடுதல் என்ற அதே கருத்தில், திருவள்ளுவர் தனது குறள் 934 இல் "சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின் வறுமை தருவதொன் றில்" என்று சொல்லுவதை காண்க. அதாவது பல துன்பங்களுக்கு ஆளாக்கி, புகழைக் கெடுத்து, வறுமையில் ஆழ்த்தி ஒருவரை கெடுக்கும் தீமையான சீரழிக்கும் செயல் சூதாட்டம் என்று சொல்லுகிறார்.
 
எனவே சமுதாய சீரழிவு என்றால் எதை குறிக்கிறது என்பதை நாம் உணரக் கூடியதாக உள்ளது. அதாவது நாம் பரம்பரை பரம்பரையாக கட்டி வளர்த்த அந்த சமுதாயம் என்ற உன்னத அமைப்பு ஆட்டம் காண்பதை சுட்டிக் காட்டுகிறது எனலாம். உதாரணமாக விண்ணைத் தொடும் அளவுக்கு ராக்கெட் வேகத்தில் அதிகரிக்கும் குற்றங்கள், விவாகரத்துக்கள், பதின்ம பருவ பாலியல்கள், அதனால் ஏற்படும் பிறப்புக்கள், ஒற்றை பெற்றோர் [single parent], போதைப்பொருள் துஷ்பிரயோகங்கள், போர், தனிப்பட்ட நன்னடத்தையில் ஏற்படும் சரிவு மற்றும் அதி தீவீர மத பக்தி [skyrocketing rates of crime, divorce, teenage sex, teenage births, single parent and drug abuse; war; and a general decline in personal morality and religiosity.] போன்றவையை கூறலாம்.
 
அத்துடன் இனவாதம் மற்றும் இன சமத்துவமின்மை [Racism and racial inequality], இனப் படுகொலைகள் மற்றும் ஏனைய சகல வன்முறைகளும் [genocides and other mayhem], நாம் அடைந்த எல்லா முன்னேற்றத்தையும் கவிழ்த்து விடும். எனவே சமூக சரிவு ஒரு சிக்கலான மனித சமூகத்தின் வீழ்ச்சி என நாம் கருதலாம்.
 
சுமேரியா [மெசொப்பொத்தேமியா], இந்திய, எகிப்திய, ரோம, மாயா போன்ற அதியுயர் கலாச்சார வடிவங்களும், அங்கு காணப்பட்ட வழி முறைகளும், சரிந்து சின்னா பின்னமாகத் தடயங்கள் அற்றுப் போனது போல், தற்போதைய நவீன உலக நாகரீகமும், சகல வழிமுறைகளும் சீரழிவதற்கான சூழல் காணப்படுவதாக இன்று பலர் உணர்கிறார்கள். இதனால் இன்று மக்கள் சில நேரம் 'உடைந்த சமுதாயத்தை' ['broken society'] பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
 
சமூக மாற்றம் மற்றும் கலாச்சார மாற்றத்தின் [social change and cultural change] ஒரு விளைவாக இதை நாம் காணலாம். எங்களுக்கு சமூக மாற்றம் இன்று பல நடைமுறைகளில், செயல்களில் இருந்து நன்றாக தெரிகிறது, சமுதாயம் என்பது ஒரு வார்த்தை மட்டும் தான். ஒவ்வொரு தனி மனிதனும் தனக்குள் ஏற்படுத்திய இணைப்பின் மூலமே அந்த கட்டமைப்பு உருவாகிறது. எனவே தனி மனித மாற்றம் இல்லாமல் சமுதாயம் / சமூகம் மாற முடியாது.
 
நவீன தொழில் நுட்ப வளர்ச்சி கண்ட சமுதாயத்தில் ஒவ்வொரு முக்கியமான தொழில் நுட்ப முன்னேற்றமும் இறுதியாக சமூக உறவுகளில் ஒரு மாற்றத்தை உருவாக்கி விடுகிறது. தமிழ் பாரம்பரியத்தை பொறுத்தளவில் இறுக்கமான குடும்ப பிணைப்பினை கொண்டமைந்த உறவு பிணைப்பு நிலையில் அமைந்த ஒன்றாகவே, சமுதாய அமைப்பின் மிக முக்கிய சிறு கூறாக குடும்ப அமைப்பு பேணப்பட்டு வந்ததுடன் இதுவே பொதுவாக அடிப்படை சமூக அலகாக [fundamental social unit] எல்லா சமூதாதயங்களிலும் இருந்தது. ஆனால் அதற்கு பதிலாக எந்தவித மாற்றிடும் செய்யாமல் அது இன்று சிதைக்கப் படுகிறது.
 
நாம் இன்று நமது நாகரிகத்திற்கு அடிப்படையாகக் கொண்ட மதிப்புகள் / விழுமியங்கள் பலவற்றை கைவிட்டு விட்டதாக தெரிகிறது. நாம் எதை நம்புகிறோம் என்றே எமக்கு இப்ப தெரியாது, நாம் குழம்பி இருக்கிறோம், அந்த குழப்பத்துடனேயே எம் பிள்ளைகளையும் இன்று வளர்க்கிறோம். சமூக நடத்தை விதிகளிலிருந்து விலகல், வன்முறை மற்றும் சமூக விரோத நடத்தை முதலியவற்றை தொலைக்காட்சி மற்றும் பிற ஊடகங்கள் ஒளிபரப்பி மகிழ்வாக கொண்டாடும் ஒரு விசித்திரமான கலாச்சாரத்தை இன்று நாம் உருவாக்கியுள்ளோம்.
 
நாகரிகம் நிச்சயமாக அழிந்து போகும் என்ற இன்றைய யோசனை ஒன்றும் புதியதல்ல. காலத்தின் தொடக்கத்திலிருந்தே, முடிவும் நெருங்க தொடங்கி விட்டது. ஒவ்வொரு நாகரிகமும் எதோ ஒரு கட்டத்தில் வீழ்ச்சி அடையும். அதாவது நாகரிகம் மற்றும் சமூகங்கள் வந்து போகும், அவை என்றும் நிரந்தரம் அல்ல. எனவே எமது இன்றைய கேள்வி எப்பொழுது, ஏன் என்பதே ஆகும். நான் முன்பு ஒருமுறை எழுதிய, கீழே தரப்பட்ட எனது பாடல் ஒன்று இப்ப என் நினைவுக்கு வருகிறது.
 
"பொத்தானை அழுத்தி,மறு கரையில் காதலிப்போம்
ஜன்னளை திறந்து,புதியவானம் காண்போம் கண்ணே?
உலகம் சுருங்குதோ,எண்ணம் அப்படி தோன்றுதோ
தொழில் நுட்பம்,அப்படி மாற்றுதோ கண்ணே?"
 
"நாளாந்த வாழ்வில்,பல பல மாற்றங்கள்
ஒன்றாய் அனுபவிப்போம்,ஆனால் எந்த இழப்பில் கண்ணே?
ஆண்டாண்டு மாசுபடுத்தி,சூழலை கெடுத்து விட்டோம்
நெருக்கடி வந்தபின்பே,மாற்றுவழி தேடுகிறோம் கண்ணே?"
 
"மதிநுட்ப சிந்தனையாளனா,நாம் மரத்துப்போனவனா
இன்றைய நிலையை எப்போது சிந்திப்போம் கண்ணே?
கண்மூடித்தனமாக அழிவை நோக்கி பயணிக்கிறோமா அல்லது
தொழில்நுட்பம் எம்மை அடக்கி ஆள்கிறதோ கண்ணே?"
 
"இன்று என்ன செய்கிறோமோ என்ன பேசுகிறமோ
நாளை விட்டுசெல்ல வேண்டியவற்றை பாதிக்கும் கண்ணே?
அடுத்த தலைமுறைக்கு எங்கள் காதல் வாரிசுக்கு
விட்டுப் போவது பெரும் இன்பமா துன்பமா கண்ணே?"
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்] 
 
பகுதி: 04 தொடரும்
73364109_10215272079418044_1484083613640163328_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=109&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=xbXu20w2l4wQ7kNvgECI2zm&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfCj8uJIbPjcBkTQfsrwh1r1cULAyjyoCJ4kkGpjpgEwlQ&oe=66586E26 76601254_10215272080858080_2220959977109979136_n.jpg?_nc_cat=103&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=4FAMGQwFDD0Q7kNvgHBxpxN&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfA4jN-qLr09SHQRtKVii_jb_GJDjImc27utDWhkPDwc9g&oe=665894D9
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
"நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா?" [சீரழியும் சமுதாயம்] பகுதி: 04
 
 
சமுதாயம் என்பது பலரும் ஒன்றாய் கூடி வாழும் ஓர் அமைப்பு. இது மக்களால் மக்களுக்காக உருவாக்கப் பட்டது. பல்வேறு மலர்கள் ஒன்றிணைந்து ஒரு மாலையாவது போல மதத்தால், இனத்தால், மொழியால் வேறுபட்டவர்கள் ஒன்றிணைந்து வேற்றுமைக்குள் ஒற்றுமை கண்டு ஒரு கூட்டமாய் வாழ்வதே சமுதாயம். அதாவது, தனிமனித நிலையில் இருந்து படிப்படியாக வளர்ச்சி அடைந்து ஆண் பெண் கூட்டு சேர்ந்து தம் சந்ததிகளை உருவாக்கிப், பின்னாளில் கூட்டுக் குடும்பமாக மாற்றமடைந்து, மிகப்பெரிய சமூக அமைப்பிற்கு அது வித்திட்டது எனலாம்.
 
சமூகங்கள் தோன்றுவதும், வாழ்வதும், அழிவதுமான செயல்கள் வரலாற்றில் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. சமூகத்தின் வளர்ச்சிக்கும் தேய்வுக்கும் அதன் உறுப்பினர்களே காரணமாவர்.
 
சங்க கால மக்கள் சமுதாயம் எப்படி இருந்தன என்பதை இலக்கியங்கள் பாடல்கள் மூலம் கூறுகின்றன. உதாரணமாக உயிர்கள் மேல் இரக்கம் கொள்ளுதல் அவர்களின் சமுதாயத்தில் பரிந்துரைக்கப் பட்டுள்ளதை காண்கிறோம்.
 
இன்றைய நவீன உலகில், மனிதநேயம் அருகிவருகிறது. அன்பு ,கருணை, இரக்கம் மக்களிடம் குறைந்து வருகிறது, இவைகளை போதிக்கவென்றே தோன்றிய சமயங்கள் கூட தமக்குள் மதம் கொண்டு மோதுகின்றன, ஏன் கொலை கூட செய்கின்றன?
 
உதாரணமாக 'புத்தம் சரணம் கச்சாமி, தம்மம் சரணம் கச்சாமி, சங்கம் சரணம் கச்சாமி' ,அதாவது, புத்தியால் பகுத்து ஆராய்ந்து, அதன் மூலம் அறியும் அறிவில் சரணடையுங்கள், அதே போல சத்தியத்தில் சரண் புகுங்கள், சங்கத்தின் பண்புகளை உங்களில் வளர்த்து, அந்த பண்புகளில் சரணடையுங்கள் என்கிறது. ஆனால் இலங்கையில் நடப்பது என்ன ? எத்தனை புத்த பிக்குகள் , அல்லது புத்தர் போதனையை பின்பருப்பவர்கள் என்று தம்மை அடையாளப் படுத்துவார்கள் இதை உணர்ந்து உள்ளார்கள் ? இன்றைய மற்றும் கடந்த கால இலங்கை வரலாறு இதற்கு சான்று கூறும்.
 
அதேவேளை தமிழரின் சங்க இலக்கியம் அகநானுறு 4, அடி, 8 - 12 இல், அவன் குதிரை பூட்டிய தேரில் வருகிறான். தேரில் கட்டியிருக்கும் மணியின் நாக்கு ஆடி மணியோசை எழுப்பாதபடி மணியின் நாக்கை இழுத்துக் கட்டியிருக்கிறான், ஏனென்றால் பொங்கர்ப் பூவில் தன் துணையாடு இன்பமாக உறங்கும் தேன் உண்ணும் வண்டுகள் தேர்மணியின் ஒலியைக் கேட்டு அஞ்சி ஓடாமல் இருக்கவாம் என,
 
"குரங்கு உளைப் பொலிந்த கொய் சுவல் புரவி,
நரம்பு ஆர்த்தன்ன வாங்கு வள்பு அரிய,
பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த
தாது உண் பறவை பேதுறல் அஞ்சி,
மணி நா ஆர்த்த மாண் வினைத் தேரன்"
 
என்று மனிதநேயத்தின் உச்ச நிலையாக அஃறிணைக்கும் துன்பப் படாது பாதுகாத்த செயலை காணும் பொழுது, இன்று எப்படி சமுதாயம் வீழ்ச்சி அடைந்து விட்டது என்பதை இலகுவாக காணக்கூடியதாக உள்ளது.
 
சங்க காலத்திலும் அதற்கு அடுத்த பிற்காலத்திலும் கல்வியும், கைத்தொழிலும், வணிகமும் மிகவும் சிறந்த நிலையில் தமிழர்கள் மத்தியில் இருந்ததை காண்கிறோம்.
 
புறநானூறு - 183 இல் “கற்றல் நன்றே.....” என்ற வரியை காண்கிறோம். தமிழர் பண்பாட்டின் ஒரு வெளிப்பாடு தான் ‘திருக்குறள்’ எனும் உலகப் பொது மறையும் , 'யாதும் ஊரே ; யாவரும் கேளிர்' என்ற கணியன் பூங்குன்றனாரின் பாடலும் தமிழ்ப் பண்பாட்டின் ஆழத்தை எடுத்துக்காட்டுகிறது. அது மட்டும் அல்ல வாழ்க்கை நெறிகளால் அன்பிற்கு முக்கியத்துவம் கொடுத்தனர். 'அன்பே சிவம்' என்றனர். பகையை வெல்லும் ஆற்றல், தீயோரை நல்லோராக்கும் வண்மை ஆகியவை அன்பால் இயலும் என்பதை, தங்கள் பண்பாட்டு நெறியாகத் தமிழர் போற்றினர். ஆனால் இன்று நடப்பது என்ன ?
 
ஔவையார் புறநானூறு 187 இல்
 
"நாடா கொன்றோ; காடா கொன்றோ;
அவலா கொன்றோ; மிசையா கொன்றோ;
எவ் வழி நல்லவர் ஆடவர்,
அவ் வழி நல்லை; வாழிய நிலனே!"
 
என்று கூறியது போல, அதாவது, நாடாய் இருந்தால் என்ன? காடாய் இருந்தால் என்ன? பள்ளமாய் இருந்தால் என்ன? மேடாய் இருந்தால் என்ன? எங்கே ஆண்கள் நல்லவர்களாக இருக்கிறார்களோ அந்த நிலம் வாழ்வதற்கு உரிய நல்ல இடம் என்பது போல, மனிதர்களின் கூட்டால் உண்டாக்கிய சமுதாயமும், மனிதர்கள் முறையாக அங்கு இருக்கிறார்களோ அந்த சமுதாயம் வாழ்வதற்கு உரிய நல்ல சமுதாயமாகிறது என்பது எனது திட நம்பிக்கை.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்] 
 
பகுதி: 05 தொடரும்
73178723_10215272098978533_6972694231836000256_n.jpg?_nc_cat=105&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=qsBdXcoKxhcQ7kNvgF854PR&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfC1d9QhBzA9iK-Dh9lnVOikt-jy__99YvTAyvIiJGPwSQ&oe=6659BEA9 75279348_10215272100338567_9076462921013264384_n.jpg?_nc_cat=105&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=BoFlK7NHXEYQ7kNvgGr3L3k&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfCKY8nGqM8fYsJ4Gd9Hli1c39lhnFJ034PFY0FAJSy-yw&oe=66599FBD 73226880_10215272101298591_6656020967342473216_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=105&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=XcBuur9sdn8Q7kNvgFPEi-C&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfCUKoFiDTHMCcDIKbub2vFpNE5xFb59dzvRcM1I1npZHw&oe=6659B712 
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
"நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா?" [சீரழியும் சமுதாயம்] பகுதி: 05] 
 
 
கணியன் பூங்குன்றனார், 2300 ஆண்டுகளுக்கு முன் தன் புறநானூறு பாடல் 192 இல்
 
"நன்மை தீமை அடுத்தவரால் வருவதில்லை, துன்பமும் ஆறுதலும் கூட மற்றவர் தருவதில்லை, சாதல் புதுமை யில்லை; வாழ்தல் இன்பமென்று மகிழ்ந்தது இல்லை. வெறுத்து வாழ்வு துன்பமென ஒதுங்கியது மில்லை, வானம், மின்னல் வெட்டும் மழையாய் குளிர்ந்த துளிகளைப் பெய்ய, கல், மண் ஆகியவற்றைப் புரட்டிக் கொண்டு பெருகி வரும் பேராற்று நீர்வழி ஓடும் தெப்பம் போல நமது வாழ்க்கை என்கிறார்.
 
அப்படித்தான் நமது வாழ்வும், இன்று பலவித கேடுதல்களை, தீமைகளை புரட்டிக் கொண்டு இன்னும் இந்த நவீன, நான்காவது தொழில்துறை புரட்சியாக பெருகி வரும் மின்னணு யுகத்தில் மிதந்து கொண்டு அதன் வழி போகிறோம். ஆனால் எவ்வளவு நாளுக்கு அது தனது பக்க விளைவாக விட்டு செல்லும் சீரழிவிற்கு இடையில் நாம் மிதந்து போக முடியும்? இது தான் இன்றய முதன்மை கேள்வியும் கூட.
 
மனித இனத்தின் வாழ்க்கை ஓயாத மாற்றத்திற்கு உரியது. மாற்றத்திற்கு முக்கிய காரணம் காலத்தின் பரிணாம வளர்ச்சி. மாற்றங்களை பொதுவாக எவரும் விரும்புவர். மாற்றங்கள் வளர்ச்சிக்குத் துணை; அரண். ஆனால் அவை வளர்ச்சி பொருந்திய வாழ்க்கை முறையை தரக் கூடியவையாக இருக்கவேண்டும்.
 
இந்த உலகம் எப்படி இருந்தது என்று வரலாற்று ரீதியாக எவரும் கூறலாம், பெருமை படலாம். ஆனால், இந்த உலகம் எப்படி இருக்கவேண்டும் என்பதே இன்று எமக்கு உள்ள பிரச்சனை.
 
"சென்ற காலத்தின் பழுதிலாத் திறமும் இனி எதிர்காலத்தின் சிறப்பும் இன்று எழுந்தருளப் பெற்ற பேறிதனால் எற்றைக்கும் திருவருளுடையேம்" என்று திருஞானசம்பந்தர் மதுரைக்கு எழுந்தருளியபோது பாண்டிய நாட்டின் அமைச்சராக இருந்த குலச்சிறை நாயனார் திருவாக்காக்க காண்கிறோம்.
 
சென்ற காலத்தில் பழுது இன்றி நின்ற இயல்பும், எதிர்காலத்தில் வரும் சிறப்புடைய திறமும் என்கிறது. அதாவது, சென்ற காலத்தின் சீரிய திறனை சிந்தையில் நிலைநிறுத்துபவர்களால்தான் எதிர்காலத்தை பெருமிதத்துடன் எதிர்கொள்ள இயலும் என்பதை சொல்லாமல் சொல்கிறது.
 
அதே போல பாரதிதாசனும், "புதியதோர் உலகம் செய்வோம்” என்றான். நாமும் அளவு கடந்த அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி பெற்று இன்று வீட்டிலிருந்த படியே உலகம் முழுவதையும் சுற்றி வர இணையத்தளத்தின் மூலமாக வழி சமைத்தோம். இதன் மூலமாக நன்மைகளும் அதே அளவில் சமுதாயத்தை சீரழிக்கும் தீமைகளும் உள்ளன என்பதை அலசி ஆராய்ந்து பார்க்கும் பக்குவமும், மனப்பான்மையும் அனைவரிடமும் ஏற்பட்டுவிடாது. இதனால், முக்கியமாக ஒவ்வொரு நாட்டின் தூண்கள் எனப்படும் இளைஞர்கள் இவற்றின் மூலம் எந்தளவு உயர்ந்திருகின்றனரோ அதே அளவில் சமுதாயத்தில் சீர்கேட்டும் உள்ளனர் என்பதை புள்ளி விபரங்கள் காட்டுகிறது.
 
இலட்சிய பாதையில் செல்லவேண்டிய இளைஞர்கள் வழி தவறி சமுதாய சீர்கேடு என்னும் புதைமணலை தேடி அறியாமல் வாழ்க்கையினை இழக்கின்றனர். இளைஞர்கள் தவறான பாதைக்கு செல்ல பல வாய்ப்புக்கள் இருந்தாலும் அவர்களை எளிதில் அடையக்கூடிய இணையத்தின் மூலமாகவே அதிக அளவில் தவறான பாதையை நாடுகின்றனர். அன்றைய காலங்களில் தொழில்நுட்ப சாதனங்கள் அதிக அளவில் இல்லாத காரணத்தினால் இவர்களை கண்காணிப்பது எளிதாகவே இருந்தது. ஆனால் இவற்றின் அபார வளர்ச்சியினால் அவர்களை கண்காணிப்பது அரிதாகிவிட்டது. எனவே எதிர்காலத்தின் சிறப்பும் பெற்று, புதியதோர் உலகமும் பெற்றதோடு நிற்காமல் பக்க விளைவாக சமுதாயத்தை சீரழிக்கும் தீமைகளையும் பெற்று விட்டோம் என்பதே இன்றைய உண்மையும் பலரின் குமுறலும் ஆகும்.
 
இன்றைய நவீன யுகம் தொழில் நுட்ப வளர்ச்சி என்ற மரத்தின் நுனியில் அதாவது அதன் உச்சாணிக் கொம்பில் இருக்கிறது. ஆனால் ஒழுக்கம் பண்பாடு போன்ற விடயங்களில் மிக மிக பின் தள்ளிக் காணப்படுகிறது. நமது தொழில் நுட்ப வளர்ச்சி நமக்கு ஒழுக்கத்தை பண்பாட்டை கற்றுத் தரவில்லை. மாறாக நமது வளர்ச்சி குறுகிய மனப்பான்மையை, அவசரத் தன்மையை, அதிவேக வளர்ச்சியை, குரோதத்தை, தன் மேல் அதீதமான நம்பிக்கையை வளர்த்திருக்கிறது.
 
இதனால் அதிகமாக, இரக்கத்தன்மை இல்லாதொழிந்து தனக்காக, தன் தேவைக்காக யாரையும் வெறுக்கவும், வேரறுக்கவும் தொடங்கி விட்டது மனித இனம்.
 
வேர்களை வெறுக்கும் விழுதுகளாய்! பெற்றோர்களை மதிக்காத ஒரு தலைமுறை இன்று தலையெடுத்திருக்கிறது. இவர்கள், பெற்றோர்கள் தங்களுக்கு அறிவுரை செய்வதை வெறுக்கிறார்கள். குறிப்பாக மாணவர் சமுதாயம், தான் செய்த தவறுகளுக்காகக் கூட ஆசிரியர்கள் தங்களைக் கண்டிப்பதை விரும்புவதில்லை. தன்னை ஹீரோவாக நிலை நிறுத்திக் கொள்ள எதையும் செய்யத் தயாராக இருக்கிறார்கள். பாடசாலைகளில், வாழ்வியல் பண்புகள் குறித்து சரியாக கற்பிக்கப்படுவதில்லை. சமுதாயத்தில், ஒழுக்கம் நிறைந்தவர்கள் போற்றப்படுவதில்லை. தீய ஒழுக்கம் உள்ளவர்கள் உயர்த்தி பிடிக்கப்படுகின்றனர்.
 
"தெருவோர மதகில் இருந்து,
ஒருவெட்டி வேதாந்தம் பேசி,
உருப்படியாய் ஒன்றும் செய்யா,
கருங்காலி தறுதலை நான்~"
......
"ஊருக்கு கடவுள் நான்,
பாருக்கு வழிகாட்டி நான்,
பேருக்கு புகழ் நான்,
பெருமதிப்பு கொலையாளி நான்!"
......
"குருவிற்கு குரு நான்,
குருடருக்கு கண் நான்,
திருடருக்கு பங்காளி நான்,
கருவிழியார் மன்மதன் நான்!"
 
என ஒரு முறை நான் கவிதை எழுதியது ஞாபகம் வருகிறது. இன்றைய இளைஞர்களுக்கு எதையும் நின்று நிதானித்து யோசிக்க அவகாசமில்லை. சரியான புரிதல்களும் தெளிவான சிந்தனைகளும் காலம் கடந்த பின்னரே கவனத்துக்கு வருகின்றன. நற்சிந்தனை எனும் விதைகளை நட்டால் நல்ல கனிகளை உண்ணலாம். விஷ விதைகளை துாவி வைத்தால், விஷத்தையே நம் அடுத்த தலைமுறைக்கும் விட்டு செல்கிறோம்.
 
விஷமா, அமிர்தமா? எல்லாம் நம் கையில் தான் இருக்கிறது.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்] 
 
பகுதி: 06 தொடரும்
74232771_10215311127674226_3945095257158320128_n.jpg?stp=dst-jpg_p600x600&_nc_cat=100&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=00ZGvynmYqQQ7kNvgGj6XZy&_nc_oc=AdgdC3JVdHbWhxTyGzGJfLwHKWtn0cX2L5LqBs0XmL8YcTpSzeAFfSdi-JgagdpQM3uftvsY2TVyz2iDCpNIJjWE&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfDu34Sj60Z5LjBoDHMMJyx0WuRfR84OPZOZs-tfTx9Q1Q&oe=665A2A0A 74455579_10215311132194339_511304122738147328_n.jpg?_nc_cat=104&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=HF4pnPwE6TYQ7kNvgGMxSyG&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfDrwusHdXuOaB8GsrSN-ENFhXACytfrANJQd1gZZutzYQ&oe=665A357A 72912639_10215311130114287_231497654922641408_n.jpg?_nc_cat=108&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=eLrFZH9UoXQQ7kNvgEBCunh&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfBJvALQIRm2DQX-ycAMomWlsMOLuszcTcwd3FLkXZrzvg&oe=665A3B18 70184895_10215311133914382_7195295772538044416_n.jpg?_nc_cat=105&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=DqkFu6A8i30Q7kNvgEme1ip&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfAqjCnlOqx_UMS22BPvhlfr_OVROzs0GxewjFeIpWK0ng&oe=665A4ACA 
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
"நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா?" [சீரழியும் சமுதாயம்] பகுதி: 06
 
 
சமுதாய சீரழிவு குடும்ப சீரழிவு இவற்றுக்கு மூலகாரணம் ஒரு தனி மனிதன் தன் கட்டுப்பாடற்ற ஒழுக்ககேடான முறையற்ற வழியில் வாழ்வது ஆகும். கம்பராமாயணம்/ பால காண்டம்/ நாட்டுப் படலத்தில் பாடல் 38 இல்
 
"பிலம் சுரக்கும் பெறுதற்கு அரிய தம்குலம் சுரக்கும் ஒழுக்கம் குடிக்கு எலாம்.",
 
அதாவது சுரங்கங்கள் நல்ல இரத்தினங்களைக் கொடுக்கும்; பெறுவதற்கு அரியதாகிய குலம் ஒழுக்கத்தைக் கொடுக்கும் என்கிறார் கம்பர். மேலும் 53 ஆம் பாடலில்
 
"உண்மை இல்லை, பொய் உரை இலாமையால்; வெண்மை இல்லை, பல் கேள்வி மேவலால்",
 
அதாவது பொய் பேசுவோர் இல்லாமையால் உண்மையின் பெருமை தெரிய வழியில்லை; கேள்வி ஞானம் மிகுந்திருப்பதால் அங்கு அறியாமை சிறிதுமில்லை என்று கோசல நாட்டு சமூகத்தை புகழ்கிறார். என்றாலும் அந்த கோசல நாட்டு மன்னர் இராமன் தன், மனைவியை தீக்குளிக்க செய்ததும், மீண்டும் கர்ப்பணி மனைவியை பன்னிரண்டு ஆண்டுகள் வனவாசம் அனுப்பியதும், அதன் பின் மீண்டும் ஒரு முறை தீயில் குளிக்க கட்டாயப் படுத்த அவள் பூமிக்குள் பாய்ந்து தற்கொலை செய்ததும் இந்த கோசல நாட்டில் தான்.
 
இங்கு நாம் ஆணாதிக்கத்தையும் ஒற்றை பெற்றோரையும் கூட காண்கிறோம். இங்கு அமிர்தத்தையும் காண்கிறோம், விஷத்தையும் [நஞ்சையும்] காண்கிறோம். ஒரு சமுதாயத்தில் குற்றங்கள் பொதுவாக குறைய வேண்டும் என்றால், அந்த சமுதாயத்தின் உறுப்பினர்களிடையில் பழிவாங்களை வெறுத்து அல்லது அஞ்சி வாழும் உறுப்பினர்கள் வேண்டும். அதே போல அவர்களை ஆட்சி செய்பவர்களும் இருக்க வேண்டும். உதாரணமாக, புறநானுறு 184,
 
"காய்நெல் அறுத்துக் கவளங் கொளினே
மாநிறைவு இல்லதும் பன்னாட்கு ஆகும்;
நூறுசெறு ஆயினும் தமித்துப்புக்கு உணினே
வாய்புகு வதனினும் கால்பெரிது கெடுக்கும்;
அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே
கோடி யாத்து நாடுபெரிது நந்தும்;
மெல்லியன் கிழவன் ஆகி வைகலும்
வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு
பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின்
யானை புக்க புலம்போலத்
தானும் உண்ணான் உலகமும் கெடுமே."
 
என்று பாடுகிறது. அதாவது, யானைக்கு, வாயளவு கொண்ட உணவாக, நெல்லை அறுத்து கொடுத்தால், ஒரு சிறு நிலத்தில் விளைந்த நெல் கூட பல நாட்களுக்கு உணவாகும். ஆனால், எந்த பெரிய வயல் இருந்தாலும், யானை தானே புகுந்து உண்ண ஆரம்பித்தால், தான் தின்பதை விட அதன் கால் பட்டு அழியும் நெல்லின் அளவு கூடுதலாகும். அது போலவே
 
ஆட்சியாளர், சரியான வரி திரட்டும் முறை தெரிந்து, அதன்படி மக்களிடமிருந்து வரி திரட்டினால் நாடு கோடிக் கணக்கில் பொருள்களைப் பெற்றுத் தழைக்கும். அதைவிட்டு முறையற்று வரியைத் திரட்ட விரும்பினால், யானை புகுந்த நிலம் போலத் தானும் பயனடையாமல், நாடும் [சமுதாயமும்] பயனற்று, சீரழிந்து போகும் என்கிறது.
 
ஆமாம், பல கலாச்சார மற்றும் சமூக மதிப்புகள் அல்லது விழுமியங்கள் காலப்போக்கில் இன்று பெருமளவு சிதைந்துவிட்டன, மேலும் மக்களின் இதயங்களில் இவைகளின் குடியிருப்பும் குறைந்து குறைந்து போகின்றன. நாம் நேர்மையாக சிந்தித்தால் அல்லது பார்த்தால், இதைப் பற்றி நிறைய உண்மைகளை நாம் காணமுடியும். இந்த குமுறல்கள் எம் சொந்த மனதில், நம்மைச் சுற்றியுள்ள மக்களின் மனதில் இன்று பெரிதாக ஒலிக்கிறது. ஆனால் ஒன்று மட்டும் உண்மை, அவைகளில் பல இன்று நேற்று எம்மத்தியில் தோன்றியவை இல்லை. இந்த மின்னணு [electronic] யுகத்திற்கு ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளிற்கு அல்லது அதற்கும் முன்பே ஆரம்பித்து விட்டது.
 
இனி அந்த சீரழிவுகள் அல்லது குமுறல்கள் என்ன என்னவென்று விரிவாக பார்ப்போமா ? அதற்கு முன் நான் முன்பு எழுதிய பாடல் ஒன்றும் ஞாபகம் வருகிறது. அதை கீழே தருகிறேன்:
 
"பூமியில் வந்ததில் இருந்து போகும் வரை,வஞ்சகி
உனக்கு ஏனடி பாசாங்கு,ஏதுக்கடி போலி வாழ்வு?
மனிதனின் உண்மை தேவையை,பாசாங்கு உணராது வஞ்சகி
பொய் நம்பிக்கை விதைத்து இன்பத்தை கெடுக்கும், பெண்ணே!"
 
"அறிவியலா? ஆன்மிகமா? எதில் மனிதன் அதிபதி, வஞ்சகி?
விஞ்ஞானத்தால் விரக்தியை உண்டாக்கவா,பேரழிவை உண்டாக்கவா
மனித நேயமற்ற நீர்க்குமிழி விவகாரங்களை கட்டுப்படுத்தவா,வஞ்சகி?
கட்டாயம் அது நிரந்தர நித்திய ஆன்மாவை அல்ல,பெண்ணே! "
 
"உண்மையில் மனிதன் பெரும் கடலல்ல,ஒரு துளியே, வஞ்சகி ?
கற்றது கையளவு ஆனால் நீயோ உலகளவு தெரியும் என்கிறாய்
உன்செயலே மனிதனின் குறுகிய மனப்பான்மையை காட்டுது,வஞ்சகி?
உன் அறியாமை,நீ உண்மையில் குருடியே என்கிறது, பெண்ணே!"
 
"மனிதனின் இறுதித் தீர்ப்பு,நிலையற்ற இறப்பே,வஞ்சகி ?
நீ நீர்க்குமிழி வாழ்வை விட்டு அங்கையே போகிறாய்
நீ முடிகின்ற ஒன்றில் வல்லுநராகி, எதைசாதிப்பாய், வஞ்சகி ?
உனக்கு மரணம் காத்திருக்கிறது என்பதை அறியாயோ, பெண்ணே!"
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்] 
 
பகுதி: 07 தொடரும்
74480701_10215317610836301_5446657536562298880_n.jpg?_nc_cat=100&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=9N3FDNwI2soQ7kNvgFvAX3d&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfBGd6BvDhAi24eZyFzVWP6AT0H3u5HKobf9W0VQWachmg&oe=665F7E51 75473948_10215317609556269_6979339529790423040_n.jpg?_nc_cat=100&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=qZBSSguU83IQ7kNvgEnNYRk&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfDd_gzLX5Oxqt7MSQoFGLpeOWAKpIRNYsaxYxnG160JtA&oe=665F61C1 74693261_10215317612236336_635938576109928448_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=105&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=YDBxsRvLpRIQ7kNvgG51_oK&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfCENztA9AymAaNTF5UX2rqtYSXXnUgp4AjD2j5j_J9_-g&oe=665F766B
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா? [சீரழியும் சமுதாயம்] பகுதி: 07
 
 
இன்றைய சமுதாயத்தின் சில அம்சங்களில், பெரும்பாலானவை இன்று அதிகமாக சீர்குலைகிறது அல்லது சரிகிறது என்பதை பலர் பொதுவாக ஒப்புக்கொள்கிறார்கள் அல்லது குறைந்தது அவையை கவனத்தில் எடுத்து ஒரு ஆய்வுக்காவது உட்படுத்தப்பட வேண்டும் என்கிறார்கள். எது எப்படியாயினும் விஞ்ஞானத்தை நாம் முழுக்க முழுக்க அறநெறி அல்லது வாழ்க்கைத் தரங்களில் [morality or living standards] இன்று உணரப்படும் சரிவுக்கு பொறுப்பு கூற முடியாது, அதே மாதிரி மக்கள் கூறும் இந்த சரிவுக்கு மதம் பொறுப்பு என்று முற்றிலும் கூறுவதற்கும் இல்லை.
 
இந்த "சரிவு", பொது மக்களிடையே, மதச்சார்பற்ற இடது சாரிகளால் மற்றும் மத சார்பான வலது சாரிகளால் [secular left and the religious right], மிகைப்படுத்தப் படும் பிரசாரம் போலவும் தெரிகிறது. மற்றும் ஊடகங்களின் கவர்ச்சியான கெட்ட செய்திகளால் வசப்படுத்தும் அல்லது வசீகரத்தைச் செய்யும் [media's fascination with bad news] செயலாகும் எனவும் நம்பத் தோன்றுகிறது. இது இன்று ஒரு வருந்தத்தக்க விளைவு ஆகும் என நாம் கட்டாயம் நம்பலாம். அது மட்டும் அல்ல, பெரும்பாலான பொதுமக்களின் ஒட்டு மொத்த அறிவியல் மற்றும் கணித கல்வியறிவின்மையும் [overall scientific and mathematical illiteracy] இதற்கு ஒரு காரணம் ஆகும்.
 
உதாரணமாக சாக்ரடீஸ் [Socrates] அன்று, எழுத்துக்களின் எழுச்சியை விரும்பவில்லை, எதிர்கால தலைமுறையினருக்கு நினைவு கலை இதனால் அழிக்கப்படும் என அவர் வருத்தப் பட்டார். அவரைப் போன்ற கொள்கையுள்ள பலர் இன்றும் உள்ளனர் என்பதும் குறிப்பிடத் தக்கது. நாம் நினைவில் வைத்துக்கொள்ள இந்த எழுத்து என்ற மருந்து கண்டு பிடிக்கப்படவில்லை, என்றும், ஆனால் அவை, எமக்கு நினைவூட்டிடவே கண்டு பிடிக்கப்பட்டுள்ளது [You have not discovered a potion for remembering, but for reminding] என வாதாடினார் சாக்ரடீஸ். மேலும், அவர்கள் தங்கள் நினைவகத்தை பயன்படுத்தி பயிற்சி செய்ய மாட்டார்கள், மாறாக, அவர்கள் எழுத்தில் தங்கள் முழு நம்பிக்கையை வைப்பார்கள் என்றார். அதே மாதிரி, மனப்பான்மை கொண்ட 19 ஆம் நூற்றாண்டின் லுட்யைட்கள் [எந்திர உடைப்புக் கிளர்ச்சியாளர்/ Luddites] ஆரம்ப துணி [ஜவுளி] இயந்திரங்களை அழித்தனர்.
 
19ஆம் நூற்றாண்டின் பின்னர் உலகில் ஏற்பட்ட சமூக, விஞ்ஞான, தொழில் நுட்ப வளர்ச்சியானது நாகரிகமுள்ள மனித வாழ்வின் விழுமியங்களை மாசுபடுத்தியதாக அமைந்துவிட்டது என்று கூறுவதில் சில உண்மைகளும் உண்டு என்பது போல சில நிகழ்வுகளையும் இன்று காண்கிறோம். அவைகள் பலவற்றை வேறு வடிவங்களில் இதிகாசம் புராணம் மற்றும் வரலாற்றிலும் முன்பே கண்டுள்ளோம். உதாரணமாக ஒரு உலகளாவிய வரலாற்று ஆய்வு, ஓரினச்சேர்க்கை [homosexuality] ஒன்றும் புதியது அல்ல என்கிறது. கி மு 385 இல் பிளாட்டோ ஆண்களுக்கு இடையிலான காதல் மிகவும் உயர்ந்த அன்பின் வடிவம் என்றும், பெண்களுடனான பாலியல் தொடர்பு ஒரு காமம் மற்றும் இனப்பெருக்கத்திற்கான வழி மட்டுமே என்றும் வாதாடுகிறார் [Plato argues that love between males is the highest form of love and that sex with women is lustful and only for means of reproduction].
 
கி மு 326 இல் ஓரின / இருபால் இராணுவ தலைவர் அலெக்ஸாண்டர், பெரும் தலைவர் [Gay/bisexual military leader Alexander the Great], மில்லியன் கணக்கான மக்களை ஓரின நட்பு - "ஹெலனிஸ்டிக்" [gay-friendly Hellenistic culture] கலாச்சாரத்திற்கு மாற்றினார். கிரீக்கில் [Greek] ஆரம்பித்த இந்த கலாச்சாரம், ரோமன் ஆட்சியிலும் தொடர்ந்ததை வரலாறு காட்டுகிறது.
 
முக்கிய சமயங்களை நோக்கும் பொழுது, பிராமண இந்து புராணம் [mythology], கிருஷ்ணர் அரவான் என்ற மகாபாரத வீரனை மணந்ததாகவும், மற்றும் அய்யப்பா கடவுள் சிவபெருமான் மற்றும் கிருஷ்ணருக்கு பிறந்தார் என்றும் கூறுகிறது. எனவே இந்து புராணங்களிலும் ஓரினச்சேர்க்கையாளர்கள் மற்றும் திருநங்கைகளையும் [Homosexuals and transgenders] காண்கிறோம்.
 
மேலும், பொது காலத்திற்கு முன் 200 க்கும் பொது காலம் 300 க்கும் இடையில் அதிகமாக எழுதப் பட்ட, பழங்கால சமசுகிருத பிராமண இந்துச் சட்டமான மனு தர்ம சாத்திரம் அல்லது மனுஸ்மிருதியில், அத்தியாயம் 11 இல் செய்யுள் 174 & 175 இல், அயோனி (Non-Vaginal sex) பாலியல் பற்றி கூறப்பட்டுள்ளது.
 
உதாரணமாக ஆணும் ஆணும் கூடினால், அந்தந்த சூழலை பொறுத்து, அதற்கு பரிகாரமாக ஒரு வித தவம் கடைபிடிக்க வேண்டும் அல்லது தனது உடையுடன் குளிக்க வேண்டும் என்கிறது .[If someone ejaculates his semen in a man, he should perform the Santapana penance [174] & If a twice-bom [the condition or rank of a Brahman] has sexual intercourse with a man, in an ox-cart, on water, he should bathe with his clothes on.] அதாவது அது அசுத்தமானது என்று கருதி அதற்கு ஒரு பரிகாரத்தை மட்டும் எடுத்து கூறுகிறது. மற்றும்படி ஓரினச்சேர்க்கை பெரிய விடயமாக அங்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
 
லேவியராகமம், அதிகாரம் 18:22 இல் "பெண்ணோடு சம்யோகம் பண்ணுகிறதுபோல ஆணோடே சம்யோகம் பண்ணவேண்டாம்; அது அருவருப்பானது." என்றும் ஆதியாகமம் 1:27, 28 இல் "ஆணையும் பெண்ணையும் கடவுள் படைத்தார்,பின் அவர்களிடம் 'நீங்கள் பிள்ளைகளைப் பெற்று, ஏராளமாகப் பெருகி, பூமியை நிரப்புங்கள்' என்று சொல்லி ஆசீர்வதித்தார்" என்கிறது பைபிள். எனவே ஓரினச்சேர்க்கையை பைபிள் கண்டனம் செய்கிறது எனலாம்.
 
அவ்வாறே 27:55 இல், “நீங்கள் பெண்களை விட்டு விட்டு, மோகங் கொண்டவர்களாக ஆண்களை நெருங்குகிறீர்களா? நீங்கள் முற்றிலும் அறிவில்லாத மக்களாக இருக்கிறீர்கள்” என்றும் கூறினார் என்கிறது குர்ஆன்.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]  
 
பகுதி: 08 தொடரும்
75258471_10215367622006549_7662846286042759168_n.jpg?_nc_cat=104&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=AsUWHtRaCvYQ7kNvgFNAUoP&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfA2-dfsl6LBcRar3XnXnjvx9_ESWvnj6i0Sh62AW-uVLA&oe=6664441B 76685345_10215367624926622_5275096309169127424_n.jpg?_nc_cat=110&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=FIGn3Ow27GMQ7kNvgHLDnwY&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfAvql9n1d2_-Cmdkun0UfbauHgg7_2-jsJFz70G5MfQpQ&oe=66642BF9 75593830_10215367628486711_918194794486824960_n.jpg?_nc_cat=100&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=jTzWEjeIaqwQ7kNvgHeAMvv&_nc_oc=AdhrT5gq2HFOBC53FTnq81TPgz_SqCl1kkKIdwSvlrRG1zixzarVZsIGOYkznoK-Vk-Td5AtNEBNJfCS7Unls7Kh&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfAnt0GCAXEtn-ol1RKVxHQL_mXgKaX3OVcD9GE_oRShaA&oe=66642402 75349157_10215367630966773_6020733980721020928_n.jpg?stp=dst-jpg_p526x296&_nc_cat=107&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=SoPjX3eFre4Q7kNvgHBUgwl&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfA3WgOKj08z9VMViX3lHUojuhCjmxd-M-VUQTmVLMCgJA&oe=666449B2
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
"நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா?" [சீரழியும் சமுதாயம்] பகுதி: 08
 
 
ஒரு நல்ல சமுதாயம் எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நல்லந்துவனார் எழுதிய கலித்தொகைப் பாடல் 133-ல் 6 முதல் 14 வரைக்குமான ஒன்பது வரிகளில் பல பண்புகளை காண்கிறோம், இது இன்றைய சமுதாயத்திற்கும் பொருந்துவதாகவே காணப்படுகிறது. இந்த பண்புகள் குறைதலும் அல்லது இல்லாமல் போவதும் சீரழிவிற்கு சில காரணங்கள் ஆகலாம் எனவும் கருதத் தோன்றுகிறது.
 
'ஆற்றுதல் என்பது அலந்தார்க்கு உதவுதல்
போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை
பண்பெனப் படுவது பாடறிந் தொழுகுதல்
பண்பெனப் படுவது பேதையார் சொல்நோன்றல்
செரிவேனப் படுவது மறைபிறர் அறியாமை
முறையெனப் படுவது கண்ணோடாது உயிரேவவ்வல்
பொரையெனப் படுவது பொற்றரைப் பொறுத்தல்'
(கலி.133)
 
உதாரணமாக இதில் ‘போற்றுதல் என்பது, புணர்ந்தாரை பிரியாமை' என்ற ஒரு வரியை சற்று விரிவாக்கப் பார்ப்போம். அதாவது தம்மோடு கலநதோரைப் பிரியாமலிருத்தலே உறவைப் போற்றுதல் என்கிறது இந்த வரி. உதாரணமாக காதலிப்பதும் பின் ஏமாறுவதும் இன்றும் எம் சமுதாயத்தில் காண்கிறோம். அப்படி ஒரு சம்பவம் சங்க காலத்தில், கள்ளூர் என்னும் ஊரில் நடைபெற்றுள்ளது. அந்த சம்பவத்தையும், அதை மறுத்து பொய் கூறிய அவனுக்கு ஊரறிய கொடுத்த தண்டனையையும், அதனால் சமூகத்தில் ஏற்படுத்திய விழிப்பையும் அகநானூறு 256 பாடுகிறது.
 
"தொல் புகழ் நிறைந்த பல் பூங் கழனி,
கரும்பு அமல் படப்பை, பெரும் பெயர்க் கள்ளூர்,
திரு நுதற் குறுமகள் அணி நலம் வவ்விய
அறனிலாளன்,''அறியேன்'' என்ற
திறன் இல் வெஞ் சூள் அறி கரி கடாஅய்,
முறி ஆர் பெருங் கிளை செறியப் பற்றி,
நீறு தலைப்பெய்த ஞான்றை,
வீறு சால் அவையத்து ஆர்ப்பினும் பெரிதே."
 
கள்ளூர் என்னும் ஊரில் ஒருவன் ஒரு அழகியை காதலித்து ஏமாற்றித் துரோகம் செய்கிறான், அதை விசாரித்த கள்ளூர் அவை, அவனில் குற்றம் கண்டு, அவனை ஊரார் பார்க்க, மரத்தில் கட்டி, கொதிக்கும் சாம்பலினை தலையில் கொட்டினார் என்கிறது.
 
"கூழுக்குப் பற்பலர் வாடவும் சிற்சிலர் கொள்ளையடிப்பதும் நீதியோ? - புவி வாழ்வதுதான் எந்தத் தேதியோ?" என்றான் பாரதிதாசன். இப்படி பலர் பல காரணிகளை சுட்டிக்காட்டி ஊடக வழியாக தமது கருத்துக்களை அல்லது ஆய்வுகளை இன்று வெளியிடுவதை காண்கிறோம்.
 
எனவே அவைகளில் பெரும்பாலாக காணப்பட்டவையை இயன்றளவு தவிர்த்து, வேறு ஒரு கோணத்தில், இன்றைய நாகரிக உலகிற்கு ஓரளவு ஏற்றவாறு, கீழ் சுட்டிக்காட்டியவாறு அட்டவணைப்படுத்தி, ஒவ்வொன்றாக அதற்கான விளக்கத்தையும் எமது கருத்தையும் இயன்ற அளவு மேற்கோள்களையும் [References], அதனால் ஏதாவது விளைவுகள் பாதிப்புக்கள் ஏற்படும் என்றால் அவைகளையும் எடுத்துக் காட்ட உள்ளோம்.
 
 
1] பாலியல் நோக்குநிலை [sexual orientation]
 
2]குடும்ப முறிவு அல்லது குடும்ப செயலிழப்பு [The Collapse Of The Family]
 
3] இணைய கலாச்சாரம் [internet culture]
 
4 தொழில்நுட்பத்துடன் இணைத்தல் [Fusion With Technology]
 
5] இன்பம் எல்லாவற்றிற்கும் மேல் என கருதும் கலாச்சாரம் [Pleasure Uber Alles Culture].
 
6] பிரபலங்களை வழிபாடும் கலாச்சாரம் [Celebrity Worship Culture]
 
7] வரலாற்று அழிப்பு [Erasure Of History]
 
8] போதைமருந்து துஷ்பிரயோகம் [Drug Abuse]
 
9] இல்லாமை தத்துவம் அல்லது நீலிசம் [Nihilism / Letting Yourself Go Culture]
 
10] அறநெறி சரிவு அல்லது சுயக்கட்டுப்பாடற்ற ஒழுக்ககேடு [decline of morality]
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
   
பகுதி: 09 தொடரும்
75231862_10215375181635535_6811636437159510016_n.jpg?_nc_cat=108&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=BLSkpJgrPgQQ7kNvgH2aVHc&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYBKrR2TAGliL1mpfSUB-CRlkpgt5uSfFtbblxtofOr3_Q&oe=66684278 75636023_10215375174995369_4995022917726109696_n.jpg?_nc_cat=110&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=Okr-fKuk3YkQ7kNvgEkSJGw&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYC6IciMij8EYHiIitxbPIO48lcVwP307Cf9Nuanpof6pw&oe=66684589 76609881_10215375184235600_6217962710064168960_n.jpg?_nc_cat=105&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=zuLL50Bd18UQ7kNvgFKvtDS&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYBeqLDlFEG9rJd-bc7Frc6yjXuJHfNDPGeFN-IF5Eib0w&oe=66685CA1
 
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1. எனது உறவினர் ஒருவர். வீட்டில் இருக்கும் போதே மூளையில் வெடிப்பு ஏற்பட்டு ஆள் அவுட். கொழும்பில் ஒரு பிரபல ஆஸ்பத்திரி மகன் இலண்டனில் இருந்து போகும் மட்டும் வெண்டிலேட்டரில் வைத்து இழுத்தது மட்டும் இல்லாமல், போன பின்னும் முடிக்க மாட்டோம் என அடம்பிடித்தார்கள். பெரிய வாக்குவாதமாகி - நான் இனி ஒரு சதமும் தரமாட்டேன். வைத்திருப்பதானல் வைத்திருங்கள் என கூறிய பின்பே மூடினார்கள். ஏனைய நாடுகளை பற்றி தெரியாது…இந்த வகையில் யூகே சொர்க்கம்தான். முடியும் வரை காப்பாற்ற நினைப்பார்கள். இல்லை என்றால், வயது, தாங்கு திறனை வைத்து clinical reasoning அடிப்படையில் முடிவு எடுப்பார்கள்.  
    • இதற்குள்ளும் பெருமளவு கரந்தடிப்படைக் காலப் படிமங்கள் உள:    
    • கழட்டின  @கிருபன் ஜிக்கே துன்புறுத்தல் எண்டா, பார்த்த சனத்துக்கு?🤣
    • வருடம் 2124, மே மாதம், 15ம் திகதி. இன்றைய தலைப்பு செய்திகள் 1. செவ்வாய் கிரகத்திற்கு உத்யோக பூர்வ விஜம் மேற்கொண்டுள்ள சீன அதிபருக்கு அமோக வரவேற்பு. 2. இங்கிலாந்தின் முடிக்குரிய இளவரசர் அல்பேர்ட்டின் அந்தரங்க புகைப்படங்கள் வெளியாகியது. பக்கிங்ஹம் அரண்மனை அதிர்ச்சி. 3. கியவை பிடித்தே தீருவோம். சூளுரைத்தார் ரஸ்ய அதிபர். 4. விடுதலை புலிகள் மீதான தடையை இந்தியா ஐந்து வருடங்களால் நீடித்தது.    
    • நான் சவுக்கு சங்கருக்கு வக்காலத்து வாங்கவில்லை. மாறாக சவுக்கு சங்கர் மீது குற்றம் சாட்டிய அரசியல்வாதிகளின் ஜோக்கியதை பற்றி கொஞ்சம்.....🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.