Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

"தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?]" / பகுதி : 19 

 

தமிழ், சுமேரிய நாகரிகத்திற்கு இடையில் "இரு தலை பறவையில் [இருதலைப்புள்ளில்]" ஒரு ஒற்றுமை காணக் கூடியதாக உள்ளது. சுமேரியர்கள் இந்த இரு தலை பறவையை போர் கடவுள் "நின்உர்ட"வின் [Ninurta]  குறியீடு / சின்னம் என கருதுகிறார்கள். இதை நின் கிர்சு [Ningirsu] எனவும் அழைப்பார்கள். சங்க நூல்களில் மூன்று பாடல்கள் இந்தப் பறவையைப் பற்றி குறிப்பிடுகின்றன. உதாரணமாக: அகநானுறு 12 , கலித்தொகை 89 & சங்கநூல்களுக்கு சமமான பழமை வாய்ந்த தகடூர் யாத்திரை எனும் நூல் பாடல் ஒன்றிலும் [ஒருகுடர்படுதரஓர்இரைதூற்றும் இருதலைப்புள்ளின்ஓர்உயிர்போல] இந்த இருதலைப்புள் குறிக்கக் காணலாம்.

தாய் தெய்வ வழிபாடு என்பது மிகவும் தொன்மையானது. உலகின் பல பகுதிகளிலும் அது இருந்தது என்று சொல்லும் தொன்மையான அடையாளங்கள் பல இருக்கின்றன. ஆனால் அவற்றின் ஆரம்பம் இந்தியாவிலும், அதிலும் குறிப்பாக தமிழ் மரபிலும் இருந்தன. உதாரணமாக, நாம் இங்கு இணைத்த பிரபலமான காளியின் உருவத்தில் ஒரு கையில் பாசக்கயிறைக் காணலாம். அது சுமேரியரின் ஈனன்ன கையில் உள்ளது போல் இருக்கிறது. மேலும் கைகள் உயரத் தூக்கி வைத்திருப்பதையும் காணலாம். இந்த சுமேரியன் பெண்தெய்வமான ஈனன்ன [Inanna] - காளி ஒப்பீடு இன்னும் ஒரு தொடர்பை எமக்குச் சொல்லுகிறது. 

சுமேரிய மக்கள் செமிட்டிக் இனஞ் சாராதவர்கள் [non-Semitic people]. பொதுவாக பருத்துக் குட்டையானவர்கள் [short and stocky], மேலும் மூக்கு கண் அமைப்புகளும் [high, straight noses and downward sloping eyes] நன்றாகவே தென் இந்திய திராவிட தமிழருடன் ஒத்து போகிறது. சுமேரிய பெண்கள் சேலை போன்று இடது தோலில் இருந்து துணியால் உடம்பை போர்கிறார்கள் [The women draped the garment from the left shoulder (a saree like)]. ஆண்கள் வேட்டி மாதிரி இடுப்பில் கட்டுகிறார்கள். தமது இடுப்புக்கு மேல் பகுதியை வெறுமையாக விட்டு விடுகிறார்கள். இவை எல்லாம் மேலும் [திராவிடருடன்] தமிழருடன் ஒத்து போகிறது.

பண்டைய கடலோடிகள் தாம் நடு கடலில் இருந்த போது கரையை / தரையை கண்டு பிடிக்க பறவைகளை பயன் படுத்தினார்கள். என்றாலும் திசைகாட்டிகள் பயனுக்கு வந்த பின் இம் முறை கைவிடப்பட்டது. இப்படியான மிகவும் சுவாரசியமான பறவைகளைப் பற்றிய குறிப்புகளை சுமேரியன், சிந்து சம வெளி, தமிழ் இலக்கியங்களில் காணக்கூடியதாகவும் உள்ளது. சிந்து சம வெளி முத்திரையில் படகு ஒன்று தனது இரு பறவைகளை இரு முனையிலும் கொண்டுள்ளது. மேலும் வைஷ்ணவ மகான்கள் [ஆழ்வார்கள்] இந்த உவமையை தமது பாடலில் புகுத்தி உள்ளார்கள். முதலாவதாக சுமேரியன் பண்பாட்டை பார்ப்போம்.

மனித இனத்தை அழிக்கவென கடவுள் அனுப்பிய பெருவெள்ளத்தில் இருந்து உயர் தப்பி பிழைத்தவர் 'உத்தனபித்தம்’ [Utnapishtim] என்ற மாமனிதர் ஆகும். மனித இனத்துடன் கோபம் கொண்ட என்லில் [God Enlil] என்ற சுமேரிய கடவுள் அவர்களை முற்றாக பெரும் வெள்ளத்தில் அழிக்க தீர்மானித்ததாக கில்கமேஷ் [Gilgamesh] காவியம் கூறுகிறது. கில்கமேஷை ஒரு படகு கட்டுமாறு உத்தன்பித்தம் கூறினான். வெள்ளம் தணிய அவன் ஒரு புறா, ஒரு தூக்கணாங் குருவி, ஒரு அண்டங் காக்கை [காகம்] ஆகிய பறவைகளை கரையை / தரையை கண்டு பிடிக்க அனுப்பினான் என குறிக்கப்பட்டுள்ளது.

1931 இல் நில அகழ்வில் கண்டு பிடிக்கப்பட்ட சிந்து சம வெளி முத்திரை இரண்டு முனையிலும் கப்பல் தளத்தில் பறவைகள் இருப்பதை காட்டுகிறது. இந்த பறவைகள் கடற்பயணத்திற்கு உதவ பயன் படுத்தப்பட்டது. பறவைகளை விடுவிற்கும் போது, அவை தரையை கண்டால் திரும்பி வராது. இது அவர்களுக்கு தரையை கண்டு பிடிக்க உதவியது.

ஒன்பதாம் நூற்றாண்டை சேர்ந்த குலசேகர ஆழ்வார் விஷ்ணுவிற்கு ஒரு பாட்டு பாடுகிறார். அதில் தரையை கண்டு பிடிக்காத பறவை போல் நானும் மீண்டும் ஆண்டவனின் மலர் பாதத்திற்கு வருகிறேன் என்கிறார். இன்னும் ஒரு புதுமை என்ன வென்றால், அவரும் மற்றவர்களும் [தமிழ் துறவிகளும்] குறிப்பிடுவது காகத்தை மட்டுமே. இது சுமேரியாவில் அண்டங் காகத்தை [காகத்தை] திசையை கண்டு பிடிக்க பயன் படுத்தியதுடன் ஒத்து போகிறது. இதோ அந்த பாடல்:

‘’வெங்கண்திண் களிறு அடர்த்தாய்! வித்துவகோட்டம்மானே
எங்குப் போய் உய்கேன்? உன் இணையடியே அடையல் அல்லால்
எங்கும் போய்க் கரை காணாது எறிகடல்வாய் மீண்டு ஏயும்
வங்கத்தின் கூம்பு ஏறும் மாப் பறவை போன்றேனே’’

(பெருமாள் திருமொழி, குலசேகர ஆழ்வார்/நாலாயிர திவ்ய பிரபந்தம்/691)

பயங்கரமான கண்களையுடைய வலிய (குவலயாபீடமென்னும்) யானையை கொன்றவனே! வித்துவக்கோடு அம்மானே!; உனது தாமரை பாதங்களையே (நான்) சரணமடைவதல்லாமல் வேறு யாரிடத்திற் போய் அடைக்கலம் பெறுவேன்? அலை யெறிகிற கடலினிடையிலே நான்கு திக்கிலும் போய்ப் பார்த்து எங்கும் கரையைக் காணாமல் திரும்பி வந்து (தான் முன்பு) பொருந்திய மாக் கலத்தினுடைய பாய் மரத்தின் மீது சேர்கிற பெரிய தொரு பறவையை போல் ஒத்து நிற்கிறேன் என்கிறது.

'சுமேரு தமிழ்' ஆராய்ச்சியின் முக்கியம் பற்றி இப்ப பல கல்விமான்கள் அறிய தொடங்கி உள்ளார்கள். அப்படியான ஆய்வு மூலம், உலகின் முதலாவது நாகரிகத்தை அமைத்தவர்கள் தமிழர்கள் என்றும் அவர்களே மனித இனத்தின் மூத்த இனம் என்றும் அவர்கள் இனி வரும் காலங்களில் உலகிற்கு சான்றுகளுடன் காட்டுவார்கள் என்பதால், இது எனக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது.

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

பகுதி : 20 தொடரும்

படம் 01: துருக்கியில் கண்டு எடுக்கப்பட்ட கி மு 1400 ஆண்டை சேர்ந்த இருதலைப்புள்

படம் 02: கர்நாடகம் மாநில கேளடி கோயில் சிற்பம்

படம் 03: சுமேரியன் பெண்தெய்வமான ஈனன்ன[Inanna]-காளி ஒப்பீடு]

May be an image of monument No photo description available. No photo description available. 

May be an image of text May be an image of text 

 

 


 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
"தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?]" / பகுதி : 20
 
 
[3] சிந்து வெளி நாகரிகம்
 
 
1920-1922, ஆம் ஆண்டு இந்தியா தொல்லியல் துறையினர் சிந்து மாநிலத்தில் மொகஞ்சதாரோ [Mohenjo Daro] என்னும் இடத்திலிருந்த ஒரு பெரிய மண் மேட்டைத் தோண்டி அகழ்வாராய்ச்சி நிகழ்த்தினர். அதன் வாயிலாக, அங்கு மண்ணுக்கு அடியில், ஓர் அழகிய நகரம் புதைந்து கிடப்பது கண்டு பிடிக்கப் பட்டது. அதே போல, மேற்குப் பஞ்சாப் மாநிலத்தில், ஹரப்பா [Harappa] என்னும் நகரம் புதைந்து கிடப்பதும் கண்டு பிடிக்கப் பட்டது. சிந்து வெளியில் [Indus Valley] அகழ்ந்து எடுக்கப் பட்ட நகரங்களின் வீடுகள் வரிசையாகக் கட்டப்பட்டுள்ளன. மாட மாளிகைகள், மண்டபங்கள், நீராடும் குளம், கழிவு நீர்ப் பாதைகள் ஆகியவையும் காணப்பெறுகின்றன. எளிமையான வீடுகளிலும் தனித் தனியே சமையல் அறை, படுக்கை அறை, குளியல் அறை முதலியன இடம் பெற்றிருந்தன. மேலும் அவர்கள் சுட்ட செங்கல்களை [brick] மிக அதிகமாகப் பயன் படுத்தியிருப்பது தெரிய வந்திருக்கிறது.
மிகவும் பலம்பொருந்திய, உறுதியான மதில்கள் கொண்ட , ஒரு குறிப்பிட்ட இடை வெளியில் அடிக்கடி காவல் மாடங்கள் [watchtowers] கொண்ட, ஒரு கோட்டை நகரமான ஹரப்பா, மொகஞ்ச தாரோவில், ஏகாதிபதியான சமயகுருமார் [autocratic priesthoods or priest-kings] அமைப்பு முறையில் ஒரு மையப்படுத்திய நிர்வாகம் / ஆட்சி அங்கு இருந்ததற்கான சான்றுகள் காணப்படுகின்றன. இது கோயில் சமயகுருமார் மெசொப்பொத்தேமியாவில் உள்ள ஊர் [Ur] என்ற நகரத்தை ஆட்சி செய்தது போல் உள்ளது.
 
அங்கு செய்யப்பட்ட நில அகழ்வால், ஒன்றின் மேல் ஒன்றாக ஒன்பது குடியிருக்கை நிலை இருந்துள்ளது தெரிய வந்துள்ளது. இது ஒரு நீண்ட காலம் அங்கு ஒரு நல்ல வாழ்வு வளம் [prosperity] இருந்ததை குறிக்கிறது. அதன் பின் அது வீழ்ச்சியடைந்துள்ளது. கி மு 1700 அளவில் அது, அந்த நாகரிகம் முற்றாக மறைந்து போயிற்று.
 
அங்கு கண்டு பிடிக்கப்பட்ட பொருட்களில் குறிப்பிடத்தக்கவை முத்திரைகள் [seals and sealings] ஆகும். மேலும் மெசொப்பொத்தேமியாவில் கண்டு பிடிக்கப்பட்ட சிந்து சம வெளி முத்திரைகள் இரண்டு பண்பாடுகளுக்கும் இடையான நெருங்கிய தொடர்புகளை உறுதிபடுத்துவதுடன், சிந்து சம வெளி நாகரிக காலத்தை தீர்மானிக்கவும் துணை புரிந்தது. இதன்படி, சிந்து சம வெளி நாகரிக காலம் கி மு 3000 - 1800 என கணக்கிடப்பட்டது.
தொல்பொருள் ஆய்வியல் அறிஞர்கள் சர். ஜான் மார்ஷல் (Sir John Marshall), சர். மார்டிமர் வீலர் (Sir Mortimer Wheeler), ஹிராஸ் பாதிரியார் (Father Heros), டாக்டர் எச்.ஆர். ஹால் (Dr. H.R. Hall), ஐராவதம் மகாதேவன் [Iravatham Mahadevan], டாக்டர் அஸ்கோ பார்போலா [Asko Parpola] போன்றவர்கள், தங்கள் ஆய்வுகளை வெளியிட்டு உள்ளனர். சிந்துவெளி நாகரிகத்தைத் தமிழர் நாகரிகம் என்று கூறுவதற்கு அங்கு தோண்டி எடுக்கப்பட்ட பொருட்களும், வெளிப்பட்ட கட்டிட அமைப்பும், பயன் படுத்திய நாணயங்களும் சான்றாக அமைந்துள்ளன என்று பல தகுந்த சான்றாதாரங்களுடன் நிறுவப்பட்டுள்ளன. ரொஸெட்டாக் கல் [Rosetta Stone / ரொசெட்டாக் கல்] என்று சொல்லக் கூடிய, இருமொழி கல்வெட்டு [bilingual inscription] என்று சொல்லப்படுகின்ற, ஒரு கல்வெட்டின் துணையைக் கொண்டுதான் சுமேரியா நாகரிகத்தினுடைய எழுத்தைப் படிக்க முடிந்தது. அப்படி ஓர் இரு மொழிக் கல் வெட்டுக் கிடைக்காததால் இதுவரை சிந்துவெளி எழுத்துகளைப் படிக்க முடியவில்லை. அந்தத் தெளிவற்ற நிலைமையில் திராவிடக் கருது கோள் என்பது ஆகக் கூடுதலான சாத்தியங்கள் உள்ள ஒரு கருதுகோளாக நினைக்கப்படுகிறதே தவிர, அது ஒரு முடிந்த முடிவாக நினைக்கப்படவில்லை. தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் என்பவரும், மொகஞ்சதாரோ முத்திரைகளில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துகள் தமிழ் - பிராமி எழுத்துகளை [Tamil - Brahmi script] ஒத்திருக்கின்றன என்று குறிப்பிடுகின்றார். அண்மைக் காலங்களில். டாக்டர் ஆர். மதிவாணன். திரு. பூரணச்சந்திர ஜீவா ஆகியோர் சிந்துவெளி எழுத்துகள் தமிழே என்ற தம் ஆய்வு முடிவைத் தெரிவித்து உள்ளனர். மேலும் ரஷ்ய நிபுணர் யூரி வெலன்டினோவிச் க்நோரோசாவ் [Yuri Valentinovich Knorozov,] தலைமையில்லான உருசியா [Russia / ரஷ்யா] சிந்து வெளி ஆய்வு குழுவும் அங்கு பேசப்பட்டது பழைய திராவிட மொழி [older Dravidian] என ஆலோசனை வழங்கி உள்ளது. இவர் 1995 வரை சிந்துவெளி மொழியை கண்டறிய தனது ஆய்வை தொடர்ந்து நடத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்த சிந்து வெளி நாகரிகம், பண்டைய மெசொப்பொத்தேமியா, பண்டைய எகிப்து போன்ற நாகரிகங்களுடன் சம காலத்தை [contemporary] கொண்டதுடன், இது மிகவும் திட்டமிட்ட நகர அமைப்பிற்கும் சுகாதாரத்திற்கும் பிரபலமானதுடன், உலகின் முதலாவது நகர்ப்புற சுகாதார அல்லது துப்புரவு முறை [urban sanitation systems] ஒன்றை அல்லது அமைப்பை கொண்டிருந்தது. மற்றும் அங்கு கிடைத்த ஆதாரங்கள், சிந்து வெளி சமூக நிலைமைகள் சுமேரியருடன் ஒப்பிடக்கூடியதாக இருந்ததுடன், சம கால நாகரிகங்களான பபிலோனியா, எகிப்து போன்றவற்றை விட மேலாக, உயர்வாக இருந்தன என்பதை எடுத்து காட்டுகிறது. அங்கு 1052 நகரங்களையும் குடியிருப்புகளையும் இதுவரை கண்டு பிடிக்கப்பட்டதுடன் அதிகமானவை ஹரப்பா, மொகஞ்ச தாரோ தவிர சிறு குடியேற்றமாகவே உள்ளன. மிக நீண்ட சிந்து நதி அங்கு விவசாயத்திற்கு நீர் வழங்கியதுடன் இந்த சமவெளியை சுற்றி உயரமான மலைகளும் பாலைவனமும் கடலும் காணப்படுகிறது. மேலும் அந்த காலப் பகுதியில் கிழக்கு பக்கம் அடர்ந்த காடும் இருந்து உள்ளது. மேலும் சிந்து நதியின் நீளம் கிட்டத்தட்ட 3,180 கி மீ(1,980 மைல்) ஆகும்.
 
அது மட்டும் அல்ல, சிந்து வெளி நாகரிகம் பண்டைய எகிப்தியர் போல ஒரு பிரமிட்டையோ [Pyramid] அல்லது பண்டைய சுமேரியர் [மெசொப்பொத்தேமியர்] போல ஒரு சிகுரத்தையோ [Ziggurat], அதாவது தமக்கென ஒரு ஆலயத்தையோ அல்லது கல்லறைகளையோ [tombs] அவர்கள் தடையங்களாக அங்கு விட்டு செல்லவில்லை. மேலும், அங்கு ஒரு பெரிய, சிறந்த அரசனின் அல்லது கடவுளின் உருவச் சிலைகளும் இல்லை. எப்படியாயினும் சிந்து வெளி மக்கள் சின்னஞ்சிறிய மனித, மிருக உருவங்கள் சிலவற்றை விட்டு சென்று உள்ளார்கள். அவை உலோகங்களாலும் களி மண்ணாலும் செய்யப்பட்டவை. அதில் இரண்டு முக்கிய மானவை. ஒன்று தாடியுடனும் அலங்காரமேல் அங்கியுடனும் காட்சி அளிக்கும் மதகுரு - அரசன் [Priest - King]. மற்றது ஒரு நாட்டிய தாரகை ['dancing girl']. இந்த நாட்டிய பெண், வெண்கலத்தால் செய்யப்பட்டு ஆக 11 சதமமீற்றர் (சமீ) உயரத்தை கொண்டு உள்ளது. மிக மிக குறைவாக அணிந்து, அதிகமாக நிர்வாணமாக, அதே நேரத்தில் கையில் நிறைய வளையல்கள் அணிந்தும் காணப்படுகின்றன, இது சிந்து வெளி மக்கள் நாட்டியம் ஆட விருப்பம் உள்ளவர்கள் என்பதையும் எடுத்து காட்டுகிறது. அத்துடன் அவளது முடி பின்னப்பட்டும் [plait] இருக்கிறது.
 
இந்த சிந்து சம வெளி நாகரிகம், சில தீர்க்கப்படாத கேள்விகளையும் எம்மிடம் எழுப்புகிறது. உதாரணமாக: இந்த மதிநுட்பமிக்க நாகரிகம், ஏன் சிந்து சம வெளிக்கு அப்பால் பரவவில்லை?, ஏன் இந்த நாகரிகம், விவசாயத்தை பெரிய அளவில் அபிவிருத்தி செய்யவில்லை?, ஏன் இந்த நாகரிகம், கால்வாய் நீர்பசனமோ [canal irrigation] அல்லது கனரக கலப்பையோ [heavy plough] பாவிக்கவில்லை? மிகவும் விசேஷமாக எந்த சூழ்நிலையில் சிந்து சம வெளி நகரங்கள் வீழ்ச்சி அடைந்தன?
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பகுதி : 21 தொடரும்
453862085_10225728283936622_8734889938569387356_n.jpg?_nc_cat=105&ccb=1-7&_nc_sid=127cfc&_nc_ohc=U3buWlxftkQQ7kNvgHOQ3OW&_nc_ht=scontent-lhr6-2.xx&oh=00_AYD88D4_BcS5oZmLC41VLug2FVtwYPWgqlGdAbbaEq3CKA&oe=66B273DC 453648234_10225728283976623_6728901778512029714_n.jpg?_nc_cat=101&ccb=1-7&_nc_sid=127cfc&_nc_ohc=MC6omOqssI8Q7kNvgFX5Qye&_nc_ht=scontent-lhr8-2.xx&oh=00_AYC5BGtmkSdq3sRwonLo2iUlwT_s-MyK15cAF9BNPhMbDw&oe=66B29433 453845915_10225728283736617_2589851611838670214_n.jpg?_nc_cat=100&ccb=1-7&_nc_sid=127cfc&_nc_ohc=sGa1WJGL6eEQ7kNvgEqx5uu&_nc_ht=scontent-lhr6-2.xx&oh=00_AYA-TiV5vnO1-EyxmrhwimiOdOiGgmsDj1L_8WFlrHwzHw&oe=66B29ADB 453616344_10225728284416634_6924444081141931111_n.jpg?_nc_cat=106&ccb=1-7&_nc_sid=127cfc&_nc_ohc=IXwdhQqiGcoQ7kNvgFHp6g5&_nc_ht=scontent-lhr8-2.xx&oh=00_AYD_OBVdKohIItKHpIza3LO8mo6B95XUGGRddfGlOdQR-A&oe=66B27394 453536797_10225728284696641_4868427244941291450_n.jpg?_nc_cat=111&ccb=1-7&_nc_sid=127cfc&_nc_ohc=0tPLnk70LO8Q7kNvgGUqd0E&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=00_AYA8cL5b59VAkqQLIdY1IGgF65Am0EecmfZGUqTxwCaFuw&oe=66B295B6
 
 
Edited by kandiah Thillaivinayagalingam
  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

"தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?]" / பகுதி : 21

 

சிந்து சமவெளி நாகரிகம் திராவிடர்களுடையது என முதன் முதலில் வரலாற்று ஆய்வாளரான ஹீராஸ் பாதிரியார் தான் கூறினார் (முன்னாள் தமிழக நிதி அமைச்சர் நெடுஞ்செழியனின் ஆசிரியர் இவர்). ஆனால், அவரால் அதை முழுமையாக நிரூபணம் செய்ய முடியவில்லை. எனினும் இது திராவிட நாகரிகத்துடன் அதிகம் பொருந்துவதாக பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

 

ஆரியர்களின் ரிக் வேதத்தில் எதிரி அல்லது ஏவலர் என்ற அர்த்தத்தில் `தசா’ அல்லது `தஸ்யூக்கள்’ [Dasa & Dasyus] எனக் சிலரைக் குறிப்பிட்டு, பல சுலோகம் பாடப் பட்டுள்ளன. உதாரணமாக, 

  

"இந்திரனே! உன்னுடைய பாதுகாப்புடன் எங்களுடைய (ஆரியர்களுடைய) எதிரிகளை முற்றிலுமாக வெற்றி கொள்வதற்கு நாங்கள் கடினமான ஆயுதத்தை கையில் ஏந்துகிறோம்."
[மண்டலம் 1, அதிகாரம் (சூக்தம்) 8, பாடல் (சுலோகம்) 3]

 

"இந்திரா! ஆந்தையைப் போலும், ஆந்தைக் குஞ்சைப் போலும் உள்ள தஸ்யூக்களைக் கொல்லவும். நாயைப் போலும் கழுகைப் போலும் உள்ள தஸ்யூக்களைக் நசுக்கி ஒழிக்கவும்".
[மண்டலம் 7, அதிகாரம் (சூக்தம்) 104, பாடல் (சுலோகம்) 22]

 

‘சோமக்குடியனான இந்திரன், நீண்ட கழுத்தை யுடையவன். அகன்ற மார்பையும் பெற்றவன். அவனும் மஞ்சள். அவன் தாடியும் மஞ்சள். அவன் குடுமியும் மஞ்சள். அவன் இதயம் செம்பு போன்றது. அவன் குடிக்கும் சோமக் கள்ளும் மஞ்சள். அந்த மஞ்சள் நிறக்கள்ளை ஒரே மடக்கில் குடித்து விடுவான். அந்தக்கள்ளோ அவனைப் போதை ஏறிய வெறியனாக்கும். அந்த வெறியோடு குதிரையில் ஏறி, துரிதமாகச் சென்று, அளவற்ற யாகப் பொருளைக் கொண்டு வருவான். குதிரை அந்தப் பாவிகளால் தடைப்படுத்தப்படாமல், மஞ்சள் வண்ணத்தானைப் பாதுகாப்புடன் கொண்டு வரட்டும்’ 
[மண்டலம் 10, அதிகாரம் (சூக்தம்) 96, பாடல் (சுலோகம்) 8]  

 

மேலும் வச்சிராயுதம் [Indra’s thunderbolt] ஏந்திய வேதகால ஆரியக் கடவுளான இந்திரன் மட்பாண்டத்தை உடைப்பது போல எதிரிகளை வென்றான் என்று இந்த வேதங்கள் பாடுகின்றன. 

 

இப்படியாக வேத நூல் பல துதி பாடல்களை கொண்டு இருப்பினும் இவைகளுக்கு தொடர்பான எந்த தொல் பொருள் ஆதாரமும் எமக்கு இது வரை கிடைக்கவில்லை. அதே போல, மறு புறம் சிந்து வெளி நாகரிகம் பல தொல் பொருள் ஆதாரங்களை கொண்டு இருப்பினும் இவைகளைக் எடுத்து கூறும் எந்த இலக்கியமும் இது வரைக் கண்டு பிடிக்கவில்லை.  இதனால், இந்த இரண்டையும் சேர்த்து இணைப்பது இலகுவாக இல்லாமல் இருக்கிறது.

 

பத்மஸ்ரீ விருது பெற்ற, காலம் சென்ற, தமிழக கல்வெட்டு ஆராய்ச்சியாளர், ஐராவதம் மகாதேவன் பல ஆண்டு கால ஆய்வுக்குப் பின், “Dravidian Proof of the Indus Script via The Rig Veda: A Case Study” [சிந்து எழுத்தின் திராவிடச் சான்று ஆய்வு] என்ற ஆய்வு கட்டுரையை சமர்பித்து சென்னை தரமணி ரோஜா முத்தையா ஆய்வு நூலகத்தில் "ரிக் வேதம் மூலம் திராவிடச் சான்றுகள்' குறித்த தனது  நவம்பர்  2014 சொற்பொழிவில், சிந்துவெளி நாகரிகத்தின் மொழி, திராவிட மொழியின் முற்கால வடிவம் ஆகும் எனவும், சிந்துவெளி நாகரிக மக்கள் தென்னகம் நோக்கி இடம் பெயர்ந்ததால், தென்னிந்தியாவில் அவர்களின் குடியேற்றம் நடந்துள்ளது எனவும் ரிக் வேதத்தில் பல்வேறு திராவிடச் சான்றுகள் உள்ளது எனவும் கூறி, பல சான்றுகள் மூலம் அவைகளை எடுத்து விளக்கினார். அத்துடன் ஆப்கானிஸ்தான் வழியாக வட இந்தியா வந்த இந்தோ - ஆரிய (ஐரோப்பிய) இனத்தவர்களின் குடியேற்றங்கள் பற்றிக் குறிப்பிடும் வரலாற்றறிஞர் ரோமிலா தாப்பர், ‘சிறு எண்ணிக்கைகள் கொண்ட பல குழுக்கள், பல்வேறு நுழைவுகளின் வழியாகச் சிந்துச் சம வெளிகளில் குடியேறினர்’ என்கிறார்.

 

பழமையான மரபணு ஆராய்ச்சியின் முடிவானது மக்கள் எங்கிருந்து எங்கு குடிபுகுந்தார்கள் என்ற விவகாரத்தில் புரிதலை வழங்குகிறது. ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மரபணுவியலாளர் டேவிட் ரெய்ச்சின் [David Reich] ஆய்வு முடிவானது 2018 மார்ச்சில் வெளியானது. அவருடன் உலகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த, வரலாறு, தொல்லியல், மானுடவியல், மரபணுவில் என பல்வேறு துறைகளைச் சேர்ந்த 92 அறிஞர்கள் இந்த ஆய்வில் பணியாற்றினார்கள். அந்த ஆய்வானது கடந்த 10 ஆயிரம் ஆண்டுகளில் இரண்டு மிகப்பெரிய குடிப்பெயர்வு நடந்துள்ளது. முதல் குடிப்பெயர்வானது தென்மேற்கு இரான் பகுதியில் உள்ள ஜக்ரோஸிலிருந்து நடந்திருக்கிறது [when agriculturists from the Zagros region of Iran]. அதாவது, அங்கிருந்து இந்தியாவுக்கு விவசாயிகளாகவும், ஆடு மேய்ப்பவர்களாகவும் வந்திருக்கிறார்கள். இந்த குடிபெயர்வானது 7000 மற்றும் 3000 ஆண்டுகளுக்கு (இயேசு பிறப்பதற்கு முன்பு) இடையேயான காலக்கட்டத்தில் நடந்திருக்கிறது. இந்த கால்நடை மேய்ப்பவர்கள், இதற்கு முன்பு இந்திய பகுதிக்கு வந்த அதாவது 65 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, ஆப்பிரிக்காவை விட்டு வெளியேறி வந்த மக்களுடன் கலந்திருக்கிறார்கள். இவர்களே சிந்துவெளி நாகரிகத்தை உருவாக்கியவர்கள். இரண்டாவது குடிபெயர்வு கிறிஸ்து பிறப்பதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்திருக்கிறது. அதாவது ஆரியர்கள் வந்திருக்கிறார்கள். இது இன்றைய கஜகஸ்தான் பகுதியிலிருந்து வந்திருக்கலாம் என அனுமானிக்கிறார்கள். குதிரை செலுத்துவதில் வல்லுநர்களான அவர்கள் சமஸ்கிருதத்தின் முந்தைய மொழி வடிவத்தை கொண்டு வந்திருக்கிறார்கள். பலியிடும் பழக்கத்தையும், வேத பண்பாட்டையும் உருவாக்கியது அவர்களே. 

 

இந்த ஹரப்பான் நாகரிகம் எகிப்து சுமேரிய நாகரிகங்களை விட அளவில் பெரியது. இது ஒரு கல்வி அறிவு பெற்ற, சுமேரியாவுடன் தொடர்பு கொண்ட நாகரிகமாகவும் இருந்தது.

 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]


பகுதி : 22 தொடரும்

460333747_10226245914717068_887000095169450932_n.jpg?_nc_cat=103&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=Nu8IXDZ68XgQ7kNvgFNElHb&_nc_ht=scontent-lhr8-2.xx&_nc_gid=A9dOaInwDxdjOgZ_e4v9eBB&oh=00_AYDV4B31mqOb6IEAzx57PjGB8yFkty__8Ubc2h2-_fCARg&oe=66EE14C8 459895604_10226245914797070_6361297113016211244_n.jpg?stp=dst-jpg_p526x296&_nc_cat=103&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=5Ix0tAxeIOMQ7kNvgEygSyb&_nc_ht=scontent-lhr8-2.xx&_nc_gid=A9dOaInwDxdjOgZ_e4v9eBB&oh=00_AYCQUCqNvYennFgVQVBbvjj8ZPPy-oda6BMSivc-fBdMkw&oe=66EE38DE 460158924_10226245914757069_5417959648639017969_n.jpg?_nc_cat=108&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=1NCxeFVNTDgQ7kNvgHLQfIo&_nc_ht=scontent-lhr8-1.xx&_nc_gid=A9dOaInwDxdjOgZ_e4v9eBB&oh=00_AYCrsbizbwQdXOwqtrzo1RNI5gil29a2PyKs62OSS1NtkA&oe=66EE29AF 459839985_10226245915277082_744811285307943255_n.jpg?_nc_cat=106&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=3a5gwYGlOdUQ7kNvgEvE4iQ&_nc_ht=scontent-lhr8-2.xx&_nc_gid=A9dOaInwDxdjOgZ_e4v9eBB&oh=00_AYCgDRIBk4_fQTtS_51Z7z5ytyBrWR3uanViJiyTIYTNmg&oe=66EE29CD

 


 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒரு சிறிய இடைவெளியின் பின் மீண்டும் உங்களை காண்பதில் மிக்க மகிழ்ச்சி தில்லை ஐயா...........

  • கருத்துக்கள உறவுகள்
Posted

"தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?]" / பகுதி : 22

 

கிறித்துவிற்கு முன் 2,500 ஆண்டளவில் சிறப்புற்று விளங்கிய சிந்து வெளி நாகரிகம், கி.மு.1700-ம் ஆண்டளவிற்குப் பின்னர் வரலாற்றிலிருந்து மறைந்து விடுகிறது. ஒருங்கிணைக்கப்பட்ட சிந்து சமவெளி பண்பாட்டு அமைப்பு நிலை குலைந்தது. அவர்களின் வர்த்தகம், எழுத்து, முத்திரைகள் எல்லாமே அங்கு இருந்து மறைந்து போனது. இவை, இந்த அழிவு மூன்று காரணிகளால் அல்லது அவைகளின் கூட்டால் ஏற்படுத்தப்பட்டிருக்கலாம் என பலர் நம்புகிறார்கள். 

1] ஏறத்தாழ அக்காலப் பகுதியில் அலையலையாக இந்தியாவிற்குள் வந்த நாடோடி மக்களான ஆரியரே சிந்துவெளி நாகரிகததின் அழிவுக்குக் காரணமாயிருந்தனர் என்பது ஆராய்ச்சியாளர்களின் ஒரு முடிவு. ஹரப்பானிடம் கூரிய முனை கொண்ட கல்லு ஆயுதமே இருந்தது. ஆகவே ஆரியர்களின் போர் கடவுளான இந்திரனுக்கும் அமைதி வாய்ந்த ஹரப்பனுக்கும் இடையில் நிகழ்ந்த போரே முக்கிய காரணம் என்கிறார்கள். 

2] இரண்டாவது, இயற்கை அனர்த்தம் என்கிறார்கள். வெள்ளம், வறட்சி, தீவிர புவியியல் மாற்றம், கடலில் இருந்து உப்பு நீர் நகரத்திற்குள் வெள்ளத்துடன் புகுதல் போன்றவையாகும்.

3] மூன்றாவது நகரகப் பகுதி தூய்மை கெடல், மக்கள் பெருக்கம், மெசொப்பொத்தேமியாவுடன் நடைபெற்ற வர்த்தகம் சரிதல், புதிய எண்ணம் / கருத்துகளை தோற்றுவிக்காத பழமை பேணும் பண்பாடு, தங்களை பாது காக்க சூழ்ச்சித்திறம் / கூர்மதி பாவிக்காதது போன்றவைகளாலும் இந்த கோரம் [பயமுறுத்தும் கொடூரம்], சரஸ்வதி - சிந்து ஆற்று சமவெளியில் தழைத்தோங்கிய இந்த நாகரிகத்திற்கு நிகழ்ந்து இருக்கலாம் என நாம் எடுத்துக் கொள்ளலாம். 

சரஸ்வதி நதியையே முக்கிய காரணமாக கூறுபவர்கள், சரஸ்வதி நதியின் மறைவுக்கு ஹரப்பா - மொஹஞ்ஜோதாரோ பகுதியில் வறட்சி ஏற்பட்டு இருக்கலாம் அல்லது வேறு சில காரணங்களால் நீர் திசை மாற்றப்பட்டு, யமுனை நதி இந்த ஆற்றை கவர்ந்து [river capture] இருக்கலாம் அல்லது மணற் புயல் [sandstorms]  ஏற்பட்டு இருக்கலாம் என முன் மொழிகிறார்கள். அத்துடன் ரிக்வேதத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கும், இந்த சரசுவதி ஆற்றை. மாக்ஸ் முல்லர், மைக்கல் டேனினோ, S.R.N.மூர்த்தி [Friedrich Max Müller, Michael Danino and S.R.N. Murthy] போன்ற  பல அறிஞர்கள் காகர்-ஹக்ரா நதி [Ghaggar-Hakra River] என்கிறார்கள்.

இந்திய உப கண்டத்தில் தோன்றிய முதலாவது நாகரிகமான, சிந்துவெளி நாகரிகம் ஆரியருடையது அல்ல என்பதை நாம் மிக இலகுவாக அறியலாம். உதாரணமாக 

1) வழிபாட்டு இடங்கள் [கோயில்] இல்லாமல் இருப்பதும் ஆரியருடைய நெருப்பு பண்பாடு [fire culture] இல்லாமல் இருப்பதும் ஆகும். மொஹெஞ்சதாரோ அல்லது ஹரப்பா பகுதிகளில் அக்கினி மேடை கொண்ட பலிபீடம் [fire altars] ஒன்றையும் தொல் பொருள் அகழ்வாராய்ச்சி, அங்கு அடையாளம் காணவில்லை. நெருப்பை சுற்றி இந்து மதத்தில் நடைபெறும் சடங்குகள் எல்லாம் ஆரியர்களால், அவர்களின் இந்தியா வருகைக்குப் பின் அறிமுகப் படுத்தப்பட்டது என நாம் இதனால் ஊகிக்கலாம்.  

(2) பாகிஸ்தானில் இன்னும் திராவிட மொழி [பராஹவி மொழி / Brahui language], குறிப்பாக பலூச்சிஸ்தான் [Balochistan region] மாகாணத்தில் பெருமளவில் புழங்கி வருவதும். சிந்து சம வெளி வரி வடிவு [script] ஒட்டுநிலை [agglutinative] மொழி போல் இருப்பதும் ஆகும். பராஹவி மொழி, ஆப்கானிஸ்தான் [Afghanistan] உட்பட மொத்தம் 2.2 மில்லியன் மக்கள் பேசுகிறார்கள் என 2005 ஆம் ஆண்டில் கணிக்கப்பட்டு உள்ளது. பொதுவாக பராஹவி, ஒரு காலத்தில் வட இந்தியப் பகுதிகளில் பெரிய அளவில் பரந்து இருந்து, ஆரியக் குடியேற்றம் காரணமாக ஒதுக்கப்பட்டது எனக் கருதப்படும் ஒரு மொழியின் எச்சமாகக் கருதப்படுகிறது. மேலும் மடிந்து போன சிந்துவெளி நாகரிகத்தின் நேர் வழித்தோன்றலாகவும் பராஹவி இருந்து இருக்கலாம் என்றும் ஊகிக்கப்படுகிறது.

[3] சிந்து வெளி வணிகர் பயன்படுத்திய சுடுமண், மாவுக்கல் முத்திரைகளில் ஆடு, மாடு, யானை, காண்டா மிருகம், பன்றி, ஒட்டகம், மயில் போன்ற உயிரினம் சித்தரிக்கப்பட்டதைக் காணலாம். ஆனால் அதில், நூற்றுக்கும் மேற்பட்ட  ரிக் வேத துதி பாடல்களில் குறிக்கப்பட்ட குதிரைகளோ குதிரை வண்டிகளோ இல்லை என்பதும், இதன் மூலம் சிந்து சம வெளி மக்கள் குதிரைகள் வைத்திருக்க வில்லை என்பதும் தெளிவாகிறது. எலும்பியல் [osteological] ஆதாரங்களும் அங்கு குதிரைகள் கி மு 2000 ஆண்டுகளுக்கு முன் இருக்க வில்லை என்பதை உறுதி படுத்துகிறது.

[4] பண்டைய சிந்து சமவெளி நாகரிக மக்கள் [ஆரியர் அல்லாதவர்கள்] பொதுவாக தாந்திர முறை [Tantra] பண்பாட்டையே கொண்டிருந்தார்கள். இது ஆரியர்களின் வேத [Vedic] வழக்கத்தில் இருந்து வேறு பட்டது. மேலும் இந்த தாந்திர முறை ஒருவர் தனது எண்ணங்களையும்  உணர்வுகளையும் ஒன்றின் மேல் ஆதிக்கம் செலுத்த வைக்கும் முறையாகும். ஆகவே ஆரியர்களின் அக நிலை உணர்வுக்குப் புறம்பான, வெளிப்புற சடங்கில் [external ritual] இருந்து மாறுபட்டது. ஒரு சமூகத்தின் பண்பாட்டையும், வரலாற்றையும் அறிய இரண்டு வழி முறைகள் வரலாற்று அறிஞர்களால் கையாளப்படுகிறது. ஒன்று தொல்பொருட்கள் (கல்வெட்டுகள், மனித மிச்சங்கள்) மற்றொன்று இலக்கியம். சிந்து - சரஸ்வதி நாகரிகத்தின் சுவடுகளாக நமக்குக் கிடைக்கும் அகழ்வுத் தடயங்கள் அதிகமாக யோகா அல்லது தந்திர நிலையில் [yogic or Tantric] உள்ளதும் ஆதிமுன்னோர் சார்ந்த தாந்திர முறையில் வளம் / வளப்பத்தை குறிக்கும் [proto-Tantric fertility symbols] இலிங்கம், யோனி அங்கு தடயங்களாக காணப்படுவதும் ஆகும். மேலும் சிந்து சமவெளியில் கண்டெடுக்கப் பட்ட சிலைகளில் இரண்டு முக்கியமானவை. ஒன்று சிவன் தன் ஆண் குறி தெரியுமாறு அமர்ந்திருக்க சுற்றி மிருகங்கள் நிற்பது போல் வரையப்பட்டிருக்கும் சிற்பம். இரண்டாவது யோனி தெரியுமாறு அமர்ந்திருக்கும் மரத்தால் செய்யப் பட்ட ஒரு பெண் சிற்பம். இங்கு இந்த பெண்ணின் யோனி தகன பலிபீடத்தால் / காணிக்கை அல்லது  படையல்களால், புகை படிந்து இருப்பது, இதை மேலும் உறுதிபடுத்துகிறது. இதன் மூலம் யோனி வழிபாடும், லிங்க வழிபாடும் இருந்ததென வரலாற்று ஆசிரியர்களின் கருத்து. தாந்திரம், காமத்தின் வழியாக கடவுளை அடைய முனைபவர்கள் பின்பற்றிய வழிமுறை எனவும் கூறலாம். அது மட்டும் அல்ல, வேதம் - பெண்கள் வேதத்தை படிக்கவோ அல்லது மற்றவர்களுக்கு அதை படிப்பிக்கவோ தகுதி குறைந்தவர்கள் என கட்டளை இடுகிறது. ஆனால் மறு புறத்தில், தாந்திர முறை பெண்களை மிக உயர்வாக மரியாதை கொடுக்கிறது .

[5] விவசாயத்தைப் பற்றி போதுமான அளவு குறிப்புகள் ரிக் வேதத்தில் காணப்படாதது ஆரியர்கள் ஒரு நாட்டுப்புற இடையர்கள் [pastoralists] என்பதை காட்டுகிறது. இதற்கு மாறாக சிந்து வெளி மக்கள் ஒரு விவசாயம் சார்ந்த குடி மக்கள். இதை தொல் பொருள் ஆய்வு உறுதிப் படுத்துகிறது. ஆகவே இவை எல்லாம், இது ஆரியருடைய நாகரிகம் அல்ல என்பதை தெளிவாக எடுத்து கூறுகிறது.

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

பகுதி : 23 தொடரும்

460504095_10226266189143916_3492186191147038370_n.jpg?_nc_cat=107&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=hFaV-LRi5XgQ7kNvgEkoyGR&_nc_ht=scontent-lhr8-1.xx&_nc_gid=AzfMDRujqTujw3KN0TdowDy&oh=00_AYBjt6PVKJCFkYKzqOLOzm_Zn_D8FqqRegZhYVIvNCRr4A&oe=66F06333 460417355_10226266189103915_3436196964270798231_n.jpg?_nc_cat=107&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=-FO9bk4F9bYQ7kNvgF3V-8H&_nc_ht=scontent-lhr8-1.xx&_nc_gid=AzfMDRujqTujw3KN0TdowDy&oh=00_AYCluTIk7zOf4_STyIZvV0XbB52aIzlJcnBviXIHmAGrxg&oe=66F037B2 460418594_10226266189183917_2319564550707926708_n.jpg?_nc_cat=106&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=sOb8o233mXwQ7kNvgER2DWO&_nc_ht=scontent-lhr8-2.xx&_nc_gid=AzfMDRujqTujw3KN0TdowDy&oh=00_AYDctZetxQLhTIx2vTOygC0JErchq0GMgyMKU5aYbl1Ucw&oe=66F0407E 460523852_10226266189703930_7335012540680850687_n.jpg?_nc_cat=100&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=LR34MLcCWR4Q7kNvgEet2zY&_nc_ht=scontent-lhr6-2.xx&_nc_gid=AzfMDRujqTujw3KN0TdowDy&oh=00_AYAgX7xyGjjN8PLiZtp8F2fHs_qQcRkAuEpOZXhODJ8FIw&oe=66F04D1A 460376475_10226266189743931_5942612425196051387_n.jpg?_nc_cat=110&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=ihiM76w5qZwQ7kNvgHz02K7&_nc_ht=scontent-lhr6-1.xx&_nc_gid=AzfMDRujqTujw3KN0TdowDy&oh=00_AYBPbVBjN6Ss4mMmzB9q1hwSiZb27RSfvfSbQbMGp6rlSg&oe=66F04DF3

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

"தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?]" / பகுதி : 23 

அமெரிக்காவின் புகழ் பெற்ற மரபியல் அறிஞரும் மரபியல் மூலம் மனித இடப்பெயர்ச்சி பற்றி அறியும் திட்டத்தின் இயக்குனருமான டாக்டர் ஸ்பென்சர் வெல்ஸ் [Dr Spencer Wells], தனது மனிதனின் பயணம் ஒரு மரபியல் சாகசப் பயணம் (“The Journey of Man A Genetic Odyssey”) என்ற புத்தாகத்திலும் "மரபணு பாவித்து மனித புலம் பெயர்வை பற்றிய ஆய்வில் புதைந்து கிடக்கும் ஒரு இனத்தின் குலமரபு அல்லது மூதாதையர்" [“Deep Ancestry Inside The Genographic Project”] என்ற புத்தாகத்திலும் பல விடயங்கள், உதாரணமாக, ஸ்டெப்பி [steppe / புல்வெளி] பகுதியில் இருந்து வந்த ஆரிய படை யெடுப்பாளர்களினது தனித்துவமான அடையாளம், மூதாதையர் வழி (HAPLOGROUP) R1A1 மரபுகாட்டி M17 (GENETIC MARKER M 17) என விளக்கி உள்ளார்.

மரபனு குறியீடுகள் ஆய்வுகளின்படி, மரபணு அடை யாளம் காட்டி அல்லது குறியீடு M168, கிட்டத்தட்ட 60,000 ஆண்டுகளுக்கு முன்பு ஆஃப்ரிக்காவில் தோன்றியது. பின் கிட்ட தட்ட அதே காலப்பகுதியில் அதிகமாக, தெற்கு ஆசியாவில் M130 (M168-M130) என்ற மரபணு அடையாளம் காட்டியை கொண்ட மனிதன் தோன்றினான். அப்ப தான் இவனின் அண்மைய முன்னோர்கள் முதலாவது ஆஃப்ரிக்காவிற்கு வெளியேயான புலம்பெயர்வு ஆரம்பித்து இருந்தார்கள். அவர்கள் ஆஃப்ரிக்காவின் கடற்கரையோரமாக தென் இந்தியா, இலங்கை, அந்தமான் வழியாக இடம் பெயர்ந்தார்கள். இவர்கள் தான் இந்திய, இலங்கையின் முதலாவது குடியிருப்பாளர்கள் ஆகும். இந்த உலகில் தோன்றிய முதல் மனிதனின் கலப்பற்ற நேரடி வாரிசுவாக, தமிழ் நாடு, உசிலம்பட்டியில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழன் விருமாண்டியே என உலக மரபணு ஆய்வாளர்கள் ஆக்சுபோர்டு பல்கலைக் கழகத்தில் [oxford university] கூடி அறிவித்து உள்ளார்கள். இது இலங்கை வேடர்களிடமும் காணப்பட்டது. இன்று இந்த கடற்கரையோர அடையாளம் காட்டி, இந்தியாவின் குடித்தொகையில் ஆக 5% மட்டுமே. அவையும் தென் இந்தியாவின் கரையோரங்களில் மட்டுமே காணப்படுகின்றது. இவைகளை தொடர்ந்து M89, 45,000 ஆண்டு அளவிலும் பின் ஈரான் சமவெளியில் அல்லது தென் மத்திய ஆசியாவில் M9 ,40,000 ஆண்டு அளவிலும் தோன்றின. அங்கு இருந்த 'இந்து குஷ்' (Hindu Kush), இமயமலை (Himalayas), தியன்-சான் (Tian-Shan) போன்ற பெரிய மலைத்தொடர்கள் இவர்களின் இடம் பெயர்தலுக்கு மிக இடைஞ்சலாக இருந்தன. இதனால் இந்த யூரேசிய மரபுக்குழு [Eurasian Clan M9] இரண்டு தொகுதியாக பிரிவு பட்டு இருக்கலாம்? ஒன்று 'இந்து குஷ்'ஷினது வடக்கு பக்கமாகவும் மற்றது தெற்கு பக்கமாக பாகிஸ்தானுக்கும் இடம் பெயர்ந்து இருக்கலாம். இந்த தெற்கு நோக்கி இடம் பெயர்ந்த பழைய கற் காலத்தின் இறுதி பகுதி [Upper Palaeolithic, Late Stone Age / (40,000-10,000 B.C.)] மக்களின் Y-குரோமோசோம்மில் [chromosome/மரபணுச் சரம்/மரபணுத் தாங்கி] திடீர் மாற்றம் ஏற்பட்டு மரபணு அடையாளம் காட்டி M20 தோன்றியது. இது இந்தியா தவிர வெளியில் கணிசமான அளவு இல்லை - மத்திய கிழக்கு மக்களில் ஒரு வேளை 1-2 சத வீதம் இருக்கலாம் என்றாலும் துணைக்கண்டத்தில், தென் இந்தியாவில் இது கிட்டத் தட்ட 50 சத வீதத்திற்கு அதிகமாக உள்ளது. இந்த M20 (M168-M9-M20) மரபணு அடையாளம் காட்டியை காவும் கூட்டம் கிட்டத் தட்ட 30,000 ஆண்டுகளுக்கு முன் பெரும் அளவில் இந்தியாவிற்குள் இடம் பெயர்ந்து உள்ளது. இப்படி M9 இன் சில உறப்பினர்கள் இந்தியா நோக்கி குடிபெயரும் போது மற்ற உறுப்பினர்கள் வடக்கு நோக்கி மத்திய ஆசிய, ஐரோப்பா பகுதிகளுக்கு இடம் பெயர்ந்தனர். இந்த கூட்டத்தில் இருந்து படிப்படியாக M173 மரபணு அடையாளம் காட்டி தோன்றி, அது முதலாவது பெரிய மனித குடி பெயர்தலாக ஐரோப்பாவிற்குள் நுழைந்தார்கள். எப்படியாயினும் எதிர்பாராத சில காரணங்களால், M173 கூட்டத்தின் சில உறுப்பினர்கள் திரும்பி தெற்கு ஆசிய நோக்கி இடம் பெயர்ந்தார்கள். இது காலநிலைகளால் ஏற்பட்டும் இருக்கலாம்? இந்த திரும்பிய கூட்டத்தில் இருந்தே [M168 > M89 > M9 > M45 > M207 > M173 > M17] M17 என்ற இந்தோ – ஐரோப்பியர் குறியீடு [Indo-European marker] தோன்றியது. இது முதலாவதாக 10,000-15,000 ஆண்டுகளுக்கு முன் உக்ரைன் மற்றும் தெற்கு ரசியாவில் [Ukraine or southern Russia] தோன்றியது. பின் கூர்கன் மக்கள் (Kurgan people) மூலம் யுரேசியா [Eurasia], ஸ்டெப்பி [steppe] பகுதி முழுதும் பரவி, அங்கிருந்து கிழக்கு, மத்திய ஐரோப்பா பகுதிகளுக்கும், ஈரானின் ஊடாக, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் வழியே கி.மு. 1500 ஆண்டுகள் அளவில் வட இந்தியாவிற்கும் பரவியது என கண்டு பிடித்து உள்ளனர். மேலும் தேர் / ரதம் கி மு 3000 ஆண்டளவில் இவர்களால் கண்டு பிடிக்கப்பட்டன. மேலும் இந்த அகன்று பரந்த மரங்கள் அற்ற புல்வெளியான ஸ்டெப்பி பகுதியில் தான், இதற்கு ஒரு 1000 ஆண்டுகளுக்கு முன், குதிரைகள் இவர்களால் பழக்கப்படுத்தப்பட்டன (domesticated). இன்று 35% க்கும் அதிகமான இந்தி (Hindi / ஹிந்தி] மொழி பேசும் இந்தியா ஆண்கள், இந்த மரபணு குறியீட்டை கொண்டுள்ளார்கள். ஆனால் திராவிட மொழி பேசுபவர்களில் இது 10% க்கும் குறைவாகவே உள்ளது. இது 10,000 ஆண்டுகளுக்குள் தான், அதிகமாக 5000 ஆண்டுகளுக்குள், ஸ்டெப்பியில் [புல்வெளி] இருந்து கணிசமான இந்த குழு இந்தியாவிற்குள் வந்ததை காட்டுகிறது. 

ஈலாம் (ஈலம் / Elam) என்பது இன்றைய தென் மேற்கு ஈரானில், சுமேரியாவிற்கு சற்றுக் கிழக்கில் செழித்திருந்த கிட்டத் தட்ட கி மு 2700 ஆண்டை சேர்ந்த ஒரு பண்டைக்கால நாகரிகம் ஆகும். அங்கு பேசப்பட்ட ஈலம் மொழியும் திராவிட, சிந்து வெளி, சுமேரிய மொழிகள் போல் ஒரு ஒட்டுநிலை [agglutinative ] மொழியாகும். ஆகவே ஒரு வித திரா விட மொழியே பண்டைய ஈரானிலும் பேசப்பட்டதாக கருதப்படுகிறது. இதனால் சில அறிஞர்கள் ஈல-திராவிட மொழிக் குடும்பம் [Elamo-Dravidian languages] என்ற ஒரு கருதுகோளை / கருத்தினை முன்மொழிந்தார்கள். இவைகளில் இருந்து நமக்கு தெரிய வருவது, ஆரியர்கள் போலவே திராவிடர்களும் இந்தியாவிற்கு வெளியில் இருந்து அங்கு குடியேறியவர்கள் ஆகும். இவர்கள் மத்திய ஆசியாவில் இருந்து ஈரானிற்கும், பின் இரண்டு குழுக்களாக பிரிந்து, ஒரு குழு மேற்கு நோக்கி மெசொப்பொத்தேமியாவிற்கும் மற்றக் குழு,

அதிகமாக ஒரு பெரிய சனத்தொகை கொண்ட கூட்டம், கிழக்கு பக்கமாக இந்தியாவிற்கும் போயிருக்க வேண்டும். என்றாலும் இதற்கான காரணங்கள் புரியவில்லை. இந்தியாவின் எல்லா குடி மக்களும், அதாவது ஆஸ்திரலோயிட் மக்கள், திராவிடர், மங்கோலிய இனம், ஆரியர் [காக்கேசிய இனத்தவர் / caucasian] போன்றவர்கள் [Austrics, the Dravidian, the Mongolians and the Aryans] எல்லோரும் உண்மையில் சில நேரங்களில், ஆஃப்ரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் பகுதிகளில் இருந்து வெவ்வேறு காலங்களில் குடியேறியவர்கள் ஆகும்.

ரஷ்ய நிபுணர் யூரி வெலன்டினோவிச் க்நோரோ சாவ் [Yuriy Valentinovich Knorozov] சிந்து வெளி மொழி திராவிட மொழியாக இருக்கவே கூடிய சந்தர்ப்பம் இருப்பதாக யோசனை கூறுகிறார். மொகஞ்சதாரோவில் கண்டு அறியப்பட்ட எழுத்துகள் தமிழ் எழுத்துகளே எனவும், அங்கு நிலவிய நாகரிகம் திராவிட நாகரிகமே என்றும் ஹென்றி ஹீராஸ் [Henry Heras / 1888 - 1955] பாதிரியார் காரணகாரியங்களுடன் விளக்கியுள்ளார். சிந்து சம வெளி முத்திரைகளை வாசித்த டாக்டர் ஆர். மதிவாணன் [Dr. R. Mathivanan], இது தமிழ் எழுத்தே என உறுதி படுத்துகிறார். மேலும் சிந்துவெளி நாகரிகம் பற்றி ஆய்வு செய்துள்ள முனைவர் மா. வாவூசி [Dr M Vaavoosi] (இயக்குநர், மனிதநேயம் அய்.ஏ.எஸ் பயிற்சி மய்யம்) எழுதியுள்ள சிந்து வெளியிலும் அதற்கப்பாலும் பழந்தமிழ்ப் பண்பாட்டு ஏகாதிபத்தியம்[ Ancient Thamizh cultural imperialism on Indus and its beyond / 2008] என்ற நூலில் சிந்து - வெளி முத்திரைகளைப் பற்றிய தமிழ் எழுத்துகளின் தோற்றம் பற்றி விரிவாக எழுதியுள்ளார். சிந்துவெளி மொழி திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவை என்பதை வால்டர் ஃபேர் சர்விஸ் [Dr Walter Ashlin Fairservis / அமெரிக்கா] போன்ற அறிஞர்களும் ஒத்துக் கொண்டுள்ளனர். குறிப்பாக இன்றும் தனித்தன்மையோடு இயங்கும் தமிழ் மொழியின் முந்தைய வடிவமே சிந்து நாகரிக எழுத்து வடிவமாகும் என்பதே இவர்களின் ஆய்வின் முடிவாகும்.

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

பகுதி : 24 தொடரும்

460714166_10226304012609479_6041563953297287338_n.jpg?stp=dst-jpg_p240x240&_nc_cat=107&ccb=1-7&_nc_sid=127cfc&_nc_ohc=D08GHMktEskQ7kNvgFQhI_q&_nc_ht=scontent-lhr8-1.xx&_nc_gid=AvxsavyUfHnUetyz84cnoLI&oh=00_AYCrLlRBsE2Gvgo5keTytN5jNVvjK35f8QiFQl0rOP2ucw&oe=66F4D836 May be an image of map and text 


 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
"தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?]" / பகுதி : 24
 
 
டாக்டர் கிள்ய்டே அஹமத் வின்டர்ஸ் [Dr Clyde Winters / Ph.D. Uthman dan Fodio Institute, Chicago, IL 60643] தமது "சிந்து எழுத்தின் மொழி திராவிடம்" ["Dravidian is the language of the Indus writing"], என்ற CURRENT SCIENCE, VOL. 103, NO. 10, 25 நவம்பர் [NOVEMBER] 2012 இல் வெளியிடப்பட்ட கட்டு ரையில், கீழ் கண்டவாறு குறிப்பிட்டு உள்ளார்.
 
 
1] மொகஞ்சதாரோ ஹரப்பா பகுதிகளில் மொத்தம் 3000 கல் வெட்டு முத்திரைகள் தோண்டி எடுக்கப்பட்டு உள்ளன.
 
2] அங்கு காணப்பட்ட எழுத்துக்கள் அவர்கள் ஒரு கல்வி அறிவு பெற்றவர்கள் என்பதையும் திராவிட மொழியை பேசியவர்கள் என்பதையும் எடுத்து காட்டுகிறது. மேலும், சிந்து வெளி எழுத்துக்கள் ஆரிய மொழி எழுத கட்டாயமாக பாவிக்கப்படவில்லை. ஏனென்றால், இவர்கள் கி மு 1600 வரையும் இந்தியா வரவில்லை.
 
3] மனிதன் நல்லதை செய்ய வேண்டும், இரக்கம் உள்ளவனாக வாழ வேண்டும், இப்படி வாழ்வதால் அவன் தனது சரியான நடத்தையால் இந்த உலகிலும் அதற்கு அப்பாலும் புகழ் அடைவான் என ஹரப்பன் மக்கள் நம்பினர். பொதுவாக, ஹரப்பான் முத்திரைகள் நீதியையும் களங்கம் அற்ற தூய உள்ளத்தையும் ஹரப்பான் நாடுவதை சுட்டிக் காட்டுகின்றன என்கிறார்.
 
4] தென் இந்தியாவில் திராவிடன் சிந்து வெளி எழுத்துகளை தொடர்ந்து பாவித்தார்கள். இதை இவர்கள் தமிழ்ப் பிராமி அல்லது தமிழி (தாமிழி / Tamili) என அழைத்தார்கள். இது தெற்கு ஆசியாவில் பயன்பாட்டில் இருந்த பிராமி எழுத்துமுறைகளான அசோகப் பிராமி, தென் பிராமி மற்றும் பட்டிப்புரலு எழுத்து முறைகளிலிருந்து வேறு பட்டது. தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் குகைப் படுக்கைகள், மட்கல ஓடுகள், முதுமக்கள் தாழிகள், நாணயங்கள், முத்திரை அச்சுக்கள்,மோதிரங்கள் போன்றவற்றில் எழுத பாவித் தார்கள். தென் இந்தியத் துணைக் கண்டத்திலுள்ள மாநிலங்களான தமிழ்நாடு, கேரளம், அயலிலுள்ள இலங்கை மற்றும் எகிப்து, தாய்லாந்து போன்ற இடங்களிலும் தமிழ்ப் பிராமி கண்டுபிடிக்கப்பட்டது.
 
5] தமிழி கல்வெட்டுக்கள் பிராமி எழுத்து முறைகளை விட பழையது ஆகும்.
 
 
மேலும் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள மயிலாடுதுறையில் 2007ல் சிந்துவெளி எழுத்துக்கள் பொறித்த கற்கோடரி [hand-held axe] ஒன்று கிடைத்துள்ளது. அதே போல, தமிழ்நாட்டின் காவிரிக் கழிமுகப் பகுதியில் சமீபத்தில் நடத்தப்பட்ட தொல்லியல் துறையின் அகழ்வின் போது பத்துக்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் [burial urns] கண்டு பிடிக்கப் பட்டன. இந்த முதுமக்கள் தாழிகளில் காணப்பட்ட சில குறியீடுகள், ஹரப்பா, மொஹஞ்சதாரோ ஆகிய இடங்களில் கண்டெடுக்கப்பட்ட சிந்து சமவெளி நாகரிகக் குறியீடுகளைப் போன்றே இருக்கிறது. இவைகளில் இருந்து சிந்துவெளி மக்களும் தமிழரும் ஒரே மொழியையோ அல்லது ஒரே தாய்மொழியிலிருந்து பிரிந்த கிளை மொழிகளையோ பேசியதாக நாம் இலகுவாக ஊகிக்கலாம்.
 
அது மட்டும் அல்ல, மிக உயர் நிலையில் இருந்த சிந்து வெளி நாகரிக குடிமக்கள் கட்டாயம் ஏதாவது ஒரு மருத்துவ ஒழுக்கம் கடைப்பிடித்து இருக்க வேண்டும். மேலும் இவர்கள் சுகாதார விழிப்புணர்வு கொண்டவர்கள் என்பதை, அவர்களுடைய அதிநவீன நீர் வடிகால் அமைப்பும் பொது சமுக குளியலும் [sophisticated water drainage system and communal baths] எமக்கு எடுத்து காட்டுகிறது. என்றாலும் இவர்களுடைய மருத்துவ ஒழுக்கம் பற்றி எமக்கு தெரியாது. மறுபுறம், ஆரியர்கள் மிக மத நம்பிக்கை கொண்டவர்கள். அவர்களுடைய மத சின்னங்களும் நடைமுறைகளும் இந்து மதமாக முறைப்படுத்தப்பட்டது. இதில் சிந்து வெளி மக்களின், நாகரிகத்தின் சில நடை முறைகளையும் இணைத்து உள்ளார்கள். உதாரணமாக சுகாதாரம் பற்றிய விழிப்பு [sense of hygiene] ஆகும்.
 
நவீன ஈராக் ஆக இருக்கும் மெசொப்பொத்தேமியாவில் உள்ள டைகரிஸ், யூப்ரடிஸ் [Tigris and Euphrates rivers] என்னும் இரு ஆறுகளுக்கும் இடைப்பட்ட பகுதியில் எப்படி சுமேரு மக்கள் குடியிருப்பை அமைத்தார்களோ, அப்படியே சிந்து வெளி மக்களும் தமது நாகரிகத்தை நவீன பாகிஸ்தான், ஆப்கனிஸ்தான், வட இந்திய பகுதியில் உள்ள சிந்து, ஹக்ரா நதியை [Indus and Hakra rivers] அண்டி அமைத்திருந்தார்கள். இரு முக்கிய நகரங்கள் மொகஞ்சதாரோ, ஹரப்பா ஆகும். சுமேரியனும் ஹரப்பானும் ஒரே மாதிரியான பொருளாதார வளர்ச்சி கண்டதுடன் ஒப்பிடக்கூடிய சமய சமுக அமைப்பையும் கொண்டிருந்தார்கள் என இப்ப நாம் அறியக் கூடியதாக உள்ளது. எப்படியாயினும் திடீர் என அழிந்த சிந்து வெளி இனத்தை விட, மெசொப்பொத்தேமியன் பல நூறு வருடங்கள் வாழ்ந்து இருந்தார்கள். அது மட்டும் அல்ல ஹேமோ சேப்பியன்ஸ் [Homo Sapiens] ஆஃப்ரிக்காவின் கிழக்கு கரையை பல பல ஆயிரம் வருடங்களுக்கு முன் விட்டு விலகி இருந்தால், அவர்கள் மெசொப்பொத்தேமியாவை முதல் கடக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது. எழுத்து மூலமான குறிப்புகள் கி மு 3300 வருடம் முதலே இருந்தாலும், மெசொப்பொத்தேமியா நாகரிகம் கி மு 5000 வருடம் முதல் அடையாளம் கண்டு கொள்ளக்கூடியதாக உள்ளது. இந்த சிறந்த நாகரிகம் கி மு 2000 ஆண்டளவில் வீழ்ச்சி அடைந்தது. அது போலவே சிந்து சம வெளி நாகரிகமும் கி மு 3300 ஆண்ட ளவில் சிறப்புற்று விளங்கி கி மு 1700 ஆண்டளவில் திடீர் என அழிந்து போயிற்று. சில சிந்து வெளி பொருட்கள் பின் மெசொப்பொத்தேமியாவில் கண்டு எடுக்கப்பட்டன, அது மட்டும் அல்ல ஹரப்பாவிலும், மெசொப்பொத்தேமியாவில் உள்ள ஊர் என்ற நகரத்திலும் புதைக்கப்பட்ட தனிப்பட்டவர்களின் பல் எனாமல் [tooth enamel / பல்லின் மிளரி] பற்றிய முதனிலை [பூர்வாங்கமான] ஆய்வு ஹரப்பான் ஒருவனை மெசொப்பொத்தேமியாவில் காண்பது சாத்தியம் என்கிறது. இதை உறுதிப்படுத்துவது போல இணைக்கப்பட்ட மெசொப்பொத்தேமியா 'சு -இலிஷு உருளை' முத்திரை [Shu-ilishu’s cylinder seal] கி மு 2020 இல் வாழ்ந்த 'சு -இலிஷு' என்ற தனிப்பட்ட பண்டைய சிந்து சம வெளி அல்லது மிலேச்ச மொழி [Meluhan language] பெயர்ப்பாளர் ஒருவரை குறிக்கிறது. சிந்து சமவெளியை மிளக்கா என்றும் அங்கு பேசிய மொழியை மிலேச்ச மொழி எனவும் அழைத்தனர் என அறிகிறோம். ‘மிலேச்ச’ என்ற சொல் ‘அந்நியன்’ அல்லது ‘அந்நிய மொழி’ யைப் பேசுவோன் என்ற கருத்தை சுட்டிக் காட்டுகிறது. இங்கு இணைக்கப்பட்ட படத்தில் உள்ள மிலேச்சன், மான் போன்ற ஒன்றை [antelope] கையில் வைத்து இருக்கிறான். மேலும் மெசொப்பொத்தேமியாவில் இருந்து எடுக்கப்பட்ட ஆப்பு வடிவிலான ஆவணம் மூலம் அக்காடியன் [Akkad] காலத்தில் அங்கு குறைந்தது ஒரு மிலேச்சன் குடியேற்ற கிராமம் இருந்துள்ளது எமக்கு தெரியவருகிறது.
 
சுமேரியன் நூல் திரும்ப திரும்ப தாம் வர்த்தகம் செய்த மூன்று முக்கிய இடங்களை [மையத்தை] குறிக்கிறது. அவை மகன் [Magan], டில்முன் [Dilmun], மேலுஹ்ஹா [Meluhha] ஆகும். மேலுஹ்ஹாவை ஹரப்பானுடன் அறிஞர்கள் தொடர்பு படுத்துகிறார்கள். அவைகளுக்கிடையே நடை பெற்ற வர்த்தக தொடர்புகள் இதற்கு சான்றாகிறது. அது மட்டும் அல்ல மேலுஹ்ஹா என்பது சிந்து வெளி நாகரிகத்தின் சுமேரிய பெயர் என பல நிபுணர்கள் பரிந்துரைத்து உள்ளனர். பின்லாந்து நாட்டை சேர்ந்த பேராசிரியர் அஸ்கோ பர்போலா, சிமோ பர்போலா [Asko and Simo Parpola] போன்றவர்கள் மேலுஹ்ஹாவை [Meluhha>Me-lah-ha] திராவிடர்களின் மேல் அகம் [mel akam ] அல்லது மேல நாடு என அடையாளம் கண்டு உள்ளனர். கி மு 2200 வருட முன்னைய நூல், மேலுஹ்ஹா கிழக்கில் இருப்பது போல சுட்டி காட்டி உள்ளது. அது சிந்து வெளியையோ அல்லது இந்தியாவையோ குறித்துச் சொல்லியிருக்கலாம் என கருதுகிறார்கள். ஹரப்பான் கல்வெட்டு ஒரு பழைய தமிழ் என அறிஞர்கள் கூறுகிறார்கள். உதாரணமாக டாக்டர் ஆர்.மதிவாணன், இது தமிழ் எழுத்தே என உறுதியாக கூறுகிறார். தெற்கு ஆற்காடு, வேலூர், தமிழ் நாட்டில் குன்று ஒன்றில் கண்டு பிடித்த படம் மூலமான எழுத்துக்கள் [pictographic writing] சிந்து சம வெளி எழுத்து போல உள்ளதும், கருநூல் [கர்நூல்], ஆந்திரப் பிரதேசத்தில் நில அகழ்வில் கண்டு பிடிக்கப்பட்ட செங்கல்லில், சிந்து சம வெளி எழுத்து இருந்தமையும் ஆணைக் கோட்டை, யாழ்ப்பாணத்தில் தோண்டி எடுக்கப்பட்ட முத்திரையில், சிந்து சம வெளி எழுத்தும் பிராமி [brahmic] எழுத்தும் கண்டு பிடிக்கப்பட்டதும், அவை அனைத்தும் இன்றைய தமிழில் மொழி பெயர்க்கப்பட்டதும், இந்த தமிழ் தொடர்பை உறுதிப்படுத்துகிறது. சிந்து சம வெளியில் இருந்து 'எள் எண்ணெய்' [Sesame oil] அதிகமாக சுமேரியாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டு இருக்கலாம். ஏனென்றால் இந்த எண்ணெய்க்கு சுமேரியன் சொல் இல்லு [illu] ,அக்காடியன்: எள்ளு [ellu]. திராவிட மொழியில் 'எள்' அல்லது 'எள்ளு' ஆகும். அது மட்டும் அல்ல மிக தொகையான ஹரப்பான் முத்திரைகளும் கன வடிவ பார அளவைகளும் [cubical weight measures] மெசொப்பொத்தேமியா நகரங்களில் இருந்தமையும் இதை மேலும் உறுதிப்படுத்துகிறது.
 
[சிந்துவெளி எழுத்துக்கள் பொறித்த மயிலாடுதுறை கற்கோடரி, தமிழ்ப் பிராமி பொறித்த முதுமக்கள் தாழி, சிந்து சம வெளி எழுத்து போல உள்ள ஆற்காடு,வேலூர்,தமிழ் நாட்டில் குன்று ஒன்றில் கண்டு பிடித்த படம் மூலமான எழுத்துக்கள் போன்றவை இணைக்கப் பட்டு உள்ளன]
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பகுதி : 25 தொடரும்
461231083_10226334883021220_3478858299501796744_n.jpg?stp=cp6_dst-jpg_s600x600&_nc_cat=103&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=yFaLAho5LGMQ7kNvgE7HWmk&_nc_ht=scontent-lhr8-2.xx&oh=00_AYDoHnQevTH3shFlpftCd2UXVpJgPBKbUflgczeMSULg-g&oe=66F86500 461169431_10226334882861216_2266264580685635380_n.jpg?_nc_cat=110&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=Wj-lfHhAuIYQ7kNvgFbia2I&_nc_ht=scontent-lhr6-1.xx&oh=00_AYBGuaQYGMauU-tRDB8wHu3B3R8twcbIch-atULSF2fPxw&oe=66F86245 461250779_10226334883261226_3933787795877757867_n.jpg?_nc_cat=111&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=HRXbbJPWjREQ7kNvgFS4pVk&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=00_AYB8t1pejiZdYcO0GhVEtHY5Km_KRmoScXX8Ie0PiUPuaA&oe=66F85A56 
 
461066940_10226334883581234_159694412396875913_n.jpg?_nc_cat=102&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=iKNcEqcdVCYQ7kNvgECpxre&_nc_ht=scontent-lhr6-1.xx&oh=00_AYAh1z9ghdS1fAxlAeuSZXL3XATb-TtNfKJ55xcenboHFw&oe=66F85243  
 
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
"தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?]" / பகுதி : 25
 
 
ஹரப்பான் பல பொருட்களை மெசொப்பொத்தேமியாவிற்கு ஏற்றுமதி செய்ததாக அறிகிறோம். எனினும் அவர்கள் பரிமாற்றம் ஆக என்னத்தை பெற்றார்கள் என்பதற்கு ஒரு ஆதாரமும் எமக்கு இன்னும் கிடைக்கவில்லை. அதிகமாக மெசொப்பொத்தேமியாவின் முக்கிய ஏற்றுமதி பொருளாக, எந்த வித தொல் பொருள் சுவடுகளையும் [archaeological trace] கொடுக்காத கம்பளி துணியாக இருக்கலாம்? மேலும் கம்பளி தருகிற செம்மறி ஆடுகள் கி மு 4000 ஆண்டளவில் மெசொப்பொத்தேமியாவில் வளர்க்கப்பட்டன. இவை விரைவாக ஐரோப்பா வழியாக, அகன்று பரந்த மரங்கள் அற்ற புல்வெளியில் பரவினாலும் இவை கிழக்கிற்கு கி மு 2000 ஆண்டுகளுக்கு முன் பரவியதாக தெரியவில்லை. ஆரம்ப கட்ட விலங்கினங்கள் வளம் பற்றிய ஆய்வுகள் [faunal data], ஹரப்பான்கள் அதிகமாக கம்பளிக்காக எந்த விலங்கு இனங்களையும் வளர்க்கவில்லை என்பதை தெரியப்படுத்துகிறது.
 
 
ஆகவே அவர்கள் கம்பளி தருகிற செம்மறி ஆடுகள் வைத்திருக்கவில்லை என நாம் கூறலாம். எனவே கம்பளி துணி அவர்களின் மிகவும் விரும்பிய இறக்குமதி பொருளாக கட்டாயம் இருந்திருக்க வேண்டும். ஆகவே சுமேரியர்கள் தமது கம்பளி துணி, தானியங்கள் [பயிர்கள்] போன்றவற்றை ஏற்று மதி செய்த அதேவேளையில், ஹரப்பான் மரக்குற்றிகள், செப்பு, தங்கம், தந்தம் [lumber, copper, gold and ivory] போன்றவற்றை வர்த்தகம் செய்தார்கள். இவைகளை பொதுவாக சுமேரிய அரச குடும்பத்தார்கள் வாங்கினார்கள். தமது வியாபார பண்டங்களை இலகுவாக எடுத்து செல்வதற்காக இந்த இரண்டு நாகரிகமும் போக்கு வரத்தில் மிக முன்னேற்றம் கண்டார்கள்.
 
 
சுமேரியர்கள் சக்கரத்தையும் அனேகமாக பாய் படகையும் அபிவிருத்தி செய்தார்கள். அதே வேளையில் ஹரப்பான்கள் தாமும் மாட்டு வண்டி, சிறிய தட்டையான அடியை கொண்ட படகுகள் [flat-bottomed boats] போன்றவற்றை மேம்படுத்தினார்கள். இவைகள் எல்லாம் வணிக ரீதியாக பாவிக்கப்பட்டன. ஒரு வேளை, தமக்கு இடையில் நடை பெற்ற பாரிய வர்த்தகம் அப்படி ஒத்த துறைகளில் அபிவிருத்தி செய்ய அவைகளை தூண்டி இருக்கலாம்? அக்காடிய மன்னன் சார்கோனின் (Sargon:2334–2279 BC) குறிப்பில் மேலுஹ்ஹா, மகன், டில்முன் போன்ற இடங்களை சார்ந்த கப்பல்கள் அக்காடியா [அகாதே] நகரத்திற்கு வந்ததாக "மேலுஹ்ஹாவில் இருந்து கப்பல், மகனில் இருந்து கப்பல், டில்முன்னில் இருந்து கப்பல் வந்தன,அவன் அக்காடியா கப்பல் துறையின் பக்கத்தில் கட்டினான்" ["the ships from Meluhha,the ships from Magan,the ships from Dilmun,He made tie-up alongside quay of Akkad"] இப்படி தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது ஹரப்பான் அக்காடியா நகரத்திற்கு நேரடியாக வந்ததை குறிக்கிறது.
 
 
அது மட்டும் அல்ல, 'சு -இலிஷு உருளை முத்திரையில்' காணப்பட்ட மிலேச்ச மொழி பெயர்ப்பாளர், தங்கள் வர்த்தகம் சம்பந்தமான நடவடிக்கைகளில் இலகுவாக கையாளும் பொருட்டு, அங்கு ஒரு ஹரப்பான் குடியேற்றம் அல்லது காலனிகள் [settlements or colonies] இருக்க வாய்ப்பு இருந்து இருக்கலாம் என்பதை காட்டுகிறது. பல காரணங்களுக்கு மொழி பெயர்ப்பாளர் அங்கு தேவைப்படுகிறது. உதாரணமாக, ஒரு தூதுக்குழு அல்லது முக்கிய பிரமுகர்கள் [delegations or important dignitaries] தமக்கு பழக்கம் இல்லாத மொழியையும் பண்பாட்டையும் கொண்ட ஒரு வெளி நாட்டிற்கு விஜயம் செய்யும் போது, கட்டாயம் ஒரு மொழி பெயர்ப்பாளர் தேவைப்படுகிறார். ஆகவே அங்கு கட்டாயம் ஹரப்பான் குடியேற்றமோ அல்லது ஒரு ஹரப்பான் வியாபாரிகளின் தொகுதிகளோ உண்மையில் மெசொப்பொத்தேமியாவில் இருந்திருக்க வேண்டும். அவர்கள் தங்களுடன் வியாபாரத்திற்கான பண்டங்கள் தவிர, தங்கள் நாட்டின் மட்பாண்டங்கள் மற்றும் பொருட்களை தமது தேவைக்காக அங்கு எடுத்து சென்று இருக்கலாம். ஓமானில் கண்டு பிடிக்கப்பட்ட ஹரப்பான் மட்பாண்டங்கள் இதை உறுதிப்படுத்துகின்றன.
 
 
ஆகவே ஓமானில் மட்பாண்டங்களும் மெசொப்பொத்தேமியாவிலும் ஈரானிலும் வர்த்தக பொருட்களும் முத்திரைகளும் கிடைக்கும் என்றால், கட்டாயம் இந்த ஹரப்பான் குடியேற்றத்திற்கான அல்லது அவர்கள் தற்காலிகமாக தங்கி இருந்த இடத்திற்கான சான்றுகளையும் அறிய சந்தர்ப்பம் உண்டு. அப்படி இவைகளை கண்டு பிடிக்கும் சந்தர்ப்பத்தில், அங்கு இருமொழி கல்வெட்டு [bilingual inscription] ஒன்று கண்டு பிடிக்கவும் சந்தர்ப்பம் உண்டு என நம்புகிறேன். ஆகவே மெசொப்பொத்தேமியா தொல் பொருள் தரவுகளை, ஹரப்பான் தொல் பொருள் ஆய்வாளர்கள் மிக கவனமாக பிரித்து பரிசோதித்து, அங்கு கிடைக்கக் கூடிய ஹரப்பான் பொருள்கள், தரவுகளை பிரித்து எடுக்க வேண்டும். இது காலத்தின் கட்டாயம் ஆகும்.
 
 
இப்ப, தற்காலத்திய ஆய்வுகள் இந்த அறை குறையுமாய் விளங்கிய ஹரப்பா, மொகஞ்சதாரோ வரி வடிவங்கள் அல்லது எழுத்துகள் பண்டைய திராவிட வடிவை சேர்ந்தது என்கிறது. அதாவது சிந்துவெளி நாகரிகத்தை ஆராய்ச்சி செய்த மார்ஷல் [Marshall]. ஹீராஸ் [Heros]. செக் நாட்டு அறிஞர் பேராசிரியர், கமில்சுவலபில் [Czech scholar Professor kamilcuvalap] மற்றும் உருசியா [Russia]. பின்லாந்து. அமெரிக்க அறிஞர்கள் பலர் இது ‘திராவிட நாகரிகம்’ எனக் கூறியுள்ளதுடன், கணிப்பொறி ஆய்வு (Computer analysis) சிந்துவெளி மொழி அமைப்பு திராவிட மொழி அமைப்பே என்பதை உறுதிபடுத்தியுள்ளது என்றும் ஐராவதம் மகாதேவன் கூறுகிறார். மேலும் நாம் முன்பு எடுத்து காட்டியவாறு வேதத்திலும் [இருக்கு வேதம்] சிந்து சம வெளி மக்கள் யார் என்பதற்கான தகவல் காணப்படுகின்றன. இது திராவிடர்கள் தென் இந்தியாவின் நிலத்துக்குரிய தொன்முதற்குடி மக்கள் அல்ல என்றும், அவர்கள் சிந்து சம வெளி நாகரிகம் நிலை குலைந்த பின், ஒரு கால கட்டத்தில் தென் இந்தியா சென்றவர்கள் என முடிவு செய்ய வழி வகுக்கிறது. பல தமிழர்கள் தமது தொன்மையை சிந்து சம வெளியுடன் இணைக்கிறார்கள். எப்படியாயினும் இன்னும் மேலும் பல ஒழுங்கான திட்ட மிட்ட ஆய்வுகள் தேவைப்படுகிறது. இன்னும் சரியாக சிந்து சம வெளி எழுத்துகள் மொழி பெயர்க்கப்படாததால், உறுதியாக சிந்து சம வெளி மக்கள் யார் என்பதும் எங்கிருந்து அவர்கள் தொடங்கினார்கள் என்பதும் உறுதி படுத்துவது கடினமாக உள்ளது.
 
 
பேராசரியர் ரோமிலர் தர்பார் [Romilar Tharpar], "Early India, From the Origins to AD 1300" என்ற தனது ஆரம்ப ஆய்வில் ஆரியர்களின் வழித் தோன்றலான ஹிந்தி பேசும் மக்கள் 'Mlechcha' என்ற சொல்லை, சாதி அமைப்பு முறைக்கு அப்பாற்படவர்களை குறிக்க பயன் படுத்துகிறார்கள் என்கிறார். இது மேலுஹன் [Meluhans ] ஆரியர் அல்ல என்பதை சுட்டி காட்டுகிறது. சுமேரிய நூலில் மேலுஹன் ஒரு கருத்த நாட்டான் அல்லது கருத்தவன் என்கிறது. சாதிக்கும் நிறத்திற்கும் உள்ள நெருங்கிய தொடர்பை அறியா மேலை நாட்டு அறிஞர்கள், மேலுஹனை ஆபிரிக்காவில் தேடினார்கள். உண்மையில் மேலுஹன், சாதிக்கு அப்பாற்பட்டவன். ஆகவே அவன் ஆரியருக்கு கருப்பானவன். அதாவது அவர்கள் திராவிடர்கள் என நாம் ஊக்கிக்கலாம்.
Fr. ஹீராஸ் [Rev. Fr. Heras] ‘Studies in Proto Indo Mediterranean Culture. Vol-I. Indian Historical Research Institute. Bombay. 1953’ எனும் புத்தகத்தில் சிந்துவெளி திராவிட நாகரிகத்திற்கும் சுமேரிய, எகிப்திய நாகரிகங்களுக்கும் இடையேயுள்ள தொடர்புகளை விளக்கிச் செல்கிறார். சிந்துவெளிக்கும் சங்க இலக்கியத் தமிழருக்கும் உள்ள உறவை அவர் எடுத்துக் காட்டியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நூலுக்குப் பின் சிந்துவெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள அறிஞர்கள் பலரும் சிந்துவெளிக்கும் பழந் தமிழருக்கும் உள்ள நெருக்கமான தொடர்புகளைப் பல கோணங்களிலும் எடுத்துக்காட்டி வருகின்றனர்.
 
 
[கி மு 2020 ஆண்டை சேர்ந்த அக்காடியன் ஆப்பு வடிவ முத்திரை இணைக்கப் பட்டு உள்ளது. இதில், தாடி வைத்துள்ள மேலுஹன் ["Meluhan"] தனது துணைவியாருடனும் மொழி பெயர்ப்பாலருடனும் வரைந்து காட்டப்படுகிறது]
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
 
பகுதி : 26 தொடரும்
461551554_10226390559453096_431342120823231428_n.jpg?_nc_cat=107&ccb=1-7&_nc_sid=127cfc&_nc_ohc=DYsFJlVv9i0Q7kNvgE_rUU4&_nc_ht=scontent-lhr8-1.xx&_nc_gid=Am6K-NTUuR8ROjMDb2e8L_c&oh=00_AYAFjDeoAtBdp7TwhfB1BAP-I0cm3nw6qCTdm4b0XOZi-A&oe=66FEC4B0 461686637_10226390559773104_257143996819646698_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=103&ccb=1-7&_nc_sid=127cfc&_nc_ohc=c0a-I7XmfJMQ7kNvgGIs5Xv&_nc_ht=scontent-lhr8-2.xx&_nc_gid=Am6K-NTUuR8ROjMDb2e8L_c&oh=00_AYCuhlNrMbTAyLf-vKvg-nH_wjUgEM1qInsuf5cKy2w8qg&oe=66FED1DB 461522425_10226390559813105_4915656562650445039_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=106&ccb=1-7&_nc_sid=127cfc&_nc_ohc=i5gjWM0mudUQ7kNvgEPA4q5&_nc_ht=scontent-lhr8-2.xx&_nc_gid=Am6K-NTUuR8ROjMDb2e8L_c&oh=00_AYDl5p_d4YBY5vAcap6-zQgy3C4mwIQYbh5wMTW0sOri7w&oe=66FEEFEA 461569902_10226390560413120_2988767729931547197_n.jpg?_nc_cat=109&ccb=1-7&_nc_sid=127cfc&_nc_ohc=uzU34S5IvOUQ7kNvgGDlzqM&_nc_ht=scontent-lhr6-1.xx&_nc_gid=Am6K-NTUuR8ROjMDb2e8L_c&oh=00_AYCF545jGeBYXI9NDeGsjQcvupIFO9jZJaBF5uf8WVnfdw&oe=66FECD4B
 
Edited by kandiah Thillaivinayagalingam
  • கருத்துக்கள உறவுகள்
Posted

"தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?]" / பகுதி : 26


சிந்துவெளி மக்கள் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வந்துள்ளனர் எனும் கருத்து அறிஞர்கள் பலராலும் கூறப்பட்டு வருகின்ற போதிலும், பூம்புகார் குறித்த கிரஹாம் ஹான்காக் [British marine archaeologist, Graham Hancock] என்ற இங்கிலாந்து நாட்டு ஆழ்கடல் ஆய்வாளரால் மேற்கொள்ளப்பட்ட  ஆய்வு - நாகை மாவட்டம் பூம்புகார் அருகே, சுமார் 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, கடலில் மூழ்கிய ஒரு பிராமண்ட நகரம் தான் உலகில் முதன் முதலில் தோன்றிய நவீன நகர நாகரிகமாக இருக்கக்கூடும் என்று காட்டுவதால் - தமிழர்கள் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வரவில்லை.தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் சென்றுள்ளனர் என்பதை எடுத்துக்காட்டுவதாய் அமைந்துள்ளது. மேலும் இங்கு வாழ்ந்த மக்களினம் பற்றியோ, அவர்கள் பேசிய மொழிகள் பற்றியோ ஆய்வாளர்களிடையே கருத்தொற்றுமை கிடையாது. தொல்லியல் ஆய்வுகளில் கண்டு பிடிக்கப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான முத்திரைகளில் காணப்படுகின்ற, அவர்களுடைய மொழியை எழுதப் பயன்படுத்திய குறியீடுகளை எவரும் இன்னும், எல்லோரும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக வாசித்து அறிய முடியவில்லை. எப்படியாயினும் பின்னர் தொடரப்பட்ட ஆய்வுகள் எங்களுக்கு சிந்து வெளி நாகரிகத்தைப் பற்றியும் அங்கு வாழ்ந்த மக்களைப் பற்றியும் தெளிவு படுத்துகின்றன. இவர்கள் அதிகமாக திராவிடர்களாகவும், கி மு 2000 ஆண்டு அளவில் ஆரியர்களின் இந்தியா வருகைக்கு பின்,  அவர்களின்  முன்னேறிய இராணுவ தொழில்நுட்பத்தால் அல்லது காலநிலை மாற்றத்தால் அல்லது வேறு காரணங்களால் அல்லது இவைகளின் கூட்டால், தெற்கிற்கு தள்ளப்பட்டார்கள் எனவும் காட்டுகிறது.

எனினும்  இன்றைய சைவ சமயத்திலே காணப்படும் பெண் தெய்வ வழிபாடு, இலிங்க வழிபாடு, பசுபதி பற்றிய எண்ணக்கரு, பலி பீடங்கள் போன்றவற்றின் அடிப்படைகளுக்கான சான்றுகள் கிடைத்துள்ளன. இவற்றை வைத்து தற்கால சைவ / இந்து சமயத்தின் கூறுகள் பல சிந்துவெளிக் காலத்திலேயே தோற்றம் பெற்றிருக்கக் கூடும் எனக் கருதப்படுகின்றது. அதாவது  இன்றைய சைவ சமயத்திலே காணப்படும் இலிங்க வழிபாடு. சக்தி வழிபாடு, சிவ (பசுபதி) வழிபாடு முதலியன சிந்துவெளி நாகரிகத்தின் முக்கியமான சமயப் பண்புகளாக விளங்கின என்பது பல அறிஞர்களின் துணிவாகும். இன்று சிந்துவெளியைச் சுற்றியுள்ள பகுதிகள் முழுவதிலும் பெரும் பான்மையாகப் பேசப்படுவது இந்தோ - ஐரோப்பிய மொழிகளாகும். எனினும், இம்மொழி பேசுவோர், சிந்துவெளி நாகரிகம் வீழ்ச்சியடைந்த காலப் பகுதியிலேயே இந்தியாவுக்குள் வந்ததாகக் கருதப்படுவதால், இது இந்தோ - ஐரோப்பிய இனத்தைச் சாராத மொழியென்றே பெரும்பாலான ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். சிறப்பாக, இது திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்தது என்ற கருத்துக்குப் பல ஆய்வாளரிடையே ஆதரவு உண்டு. இந்திய - ஐரோப்பிய மொழிகள் (Indo-European languages) சுமார் 300 கோடி மக்களால் பேசப்படும் 150 மொழிகளை உள்ளடக்கியுள்ளது. இவற்றுள் ஐரோப்பா மற்றும் மேற்கு ஆசியாவைச் சேர்ந்த பெரும்பாலான முக்கிய மொழிக் குடும்பங்கள் அடங்கும். இந்தப் பெருமொழிக் குடும்பத்தில் ஹிந்தி, உருது என்பனவும் அடங்குகின்றன. 

அதாவது ஆங்கில அறிஞர் சர் ஜான் மார்ஷல் [Sir John Hubert Marshall of England] முயற்சியால் சிந்து சம வெளி நாகரிகம், அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டு, சிந்து சமவெளி மக்கள் திராவிடர்கள் என்றும், இவர்களது மொழி பழந் தமிழ் எனவும், ஹரப்பா, மொகஞ்சதாரோவில் தோண்டி எடுக்கப்பட்ட புதைப் பொருட்களின் ஆராய்ச்சியில்  5000 ஆண்டுகளுக்கு முன்னரே ஆதிமுன்னோரைச் சார்ந்த ஒரு வித [மூல] "தாய்" [சக்தி], சிவ வழிபாடு இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அத்துடன் லிங்க, யோனி வழிபாடும் அங்கு இருந்ததும் தெரிய வருகிறது. மேலும் அங்கு லிங்கம் யோனி தளத்தின் மேல் வைக்கப்பட்டு உள்ளது. பெண்தெய்வ (சக்தி) வழிபாடு, மூலச்சிவ வழிபாடு போன்றவற்றின் பிணைப்பாகவே இந்த இலிங்க வழிபாடு அங்கு நிலவியது என நாம் கருதலாம். மொஹெஞ்சதாரோவிலும், ஹரப்பாவிலும் கணக்கற்ற, நீண்டு குவிந்த அல்லது முக்கோணக் கற்களும் களிமண் பொருள்களும் கண்டெடுக்கப்பட்டன. மார்ஷல் அவற்றைச் சிவலிங்கங்கள் என எடுத்துக்காட்டினார். இலிங்க வழிபாடானாது உழவுத் தொழிலை மேற்கொண்டிருந்த புராதன நாகரிகங்களிற் காணப்படும் வழிபாட்டு முறையாகும். "நீண்டு குவிந்த கல்வடிவு ஆண்குறியின் அடையாளமாகவும், அக் கல்லைச் சூழ்ந்தவட்டக் கல்வடிவு பெண்குறியின் அடையாளமாகவும் முன்னையோராற் கருதப்பட்டது". ஆண் பெண் குறிச் சேர்க்கையே பண்டைக் காலந்தொட்டு இலிங்க வடிவில் அமைந்தது என்பது பிற்காலச் சைவ சித்தாந்த சாத்திர நூலாலும்  அறியக்கிடக்கின்றது. அத்துடன் அரசமரம் [pipal] புனித மரமாக கருதப் பட்டுள்ளது என்பதும் தெரிய வருகிறது. பிற்காலத்தில் சைவசமய தத்துவ அடிப்படைகளிலே அரசமரம் முக்கியத்துவம் பெறாவிட்டாலும் மரங்களை வழிபடுவதும் சிந்து வெளி நாகரிக சமய முறைகளில் ஒன்றாக இருந்திருக்கிறது. எண்ணற்ற சிந்துவெளி முத்திரைகளில் அரச மரம் இடம்பெற்றுள்ளது. சிந்துவெளியிற் கண்டெடுக்கப்பட்ட ஓர் இலச்சினையில் இரு அரச மரக்கிளைகளுக் கிடையிலே ஆடைகளின்றி பெண் தெய்வமொன்று காணப்படுகின்றது. நீண்ட கூந்தலும் கைகளில் காப்புகளும் காணப்படுகின்றன. மக்கள் உருவங்களும் விலங்குருவங்களும் அவ்வன்னைத் தெய்வத்திற்கு அடிபணிந்து அஞ்சலி செய்து நிற்கின்றன. அரச மரமும் அதனுடன் சேர்ந்த அன்னை வழிபாடும் ஆரியர் காலத்துக்கு முற்பட்டன என்பதற்கு இதனையும் சான்றாகக் கொள்வர் வரலாற்றாசிரியர். ஆனால் அங்கு கோயில் இருந்ததிற்க்கான ஆதாரங்கள் எதுவும் இது வரைக் கிடைக்கவில்லை.

சில சிவ வழிபாட்டுக்குரிய சின்னங்கள் சிந்துவெளி நாகரிகத்திலே காணப்பட்டாலும், சிந்துவெளி நாகரிகத்திலே முதலிடம் பெற்று விளங்கியது பெண் தெய்வ (அன்னை) வழிபாடே என்பது ஆராய்ச்சியாளர் கருத்து. சிந்துவெளி மக்கள் வழிபட்ட தெய்வங்களை அதன் முக்கியத்துவத்தின்படி முறைப்படுத்திய மார்ஷல், முதலில் அன்னைத் தெய்வத்தையும், அதற்கடுத்தபடியாக மும்முகமுடைய கடவுளையும், மூன்றாவதாக இலிங்கம் அல்லது ஆண் குறியையும் எடுத்துக் கூறியுள்ளார். பெண்தெய்வ வழிபாடு தோன்றுவதற்கு அடிப்படைக் காரணம் அது தோன்றிய சமுதாயத்திலே தாய்வழிமுறை [matriarchal] நிலவியதே என்பது ஆராய்ச்சியாளர்கள் காட்டும் உண்மையாகும். அங்கு அன்னைத் தெய்வமே முழு முதற்றெய்வமாக இருப்பதைப் பார்க்கிறோம். பண்டைய திராவிட மக்களிற் பெரும் பகுதியினர் தாய்வழி உரிமையை கடைப்பிடித்தனர். இதன் காரணமாகப் பெண்தெய்வ வழிபாடு திராவிட மக்களிடையே பெரு வழக்காயிருந்தது என்று சமூகவியல் அறிஞர் கொள்வர்.  “தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி” என்று திருவாசகம் போற்றுகின்றது. "சிவனோடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை அவனோடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லை” என்று திருமந்திரம் கூறுகின்றது. எனினும் சைவ சமய வரலாற்றைத் தேடி நாம் பின்னோக்கிச் செல்லும் போது தென்னாட்டை விட்டுச் சிந்து நதிப் பள்ளத்தாக்கில் கிறித்துவிற்கு முன் மூவாமிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டுச் சிறப்புற்று விளங்கிய நகரங்களுக்குச் செல்லவேண்டியிருக்கிறது என்பது இதனால் புலனாகிறது.

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

பகுதி : 27 தொடரும்

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]

461880013_10226428898611551_1575040546305526171_n.jpg?_nc_cat=103&ccb=1-7&_nc_sid=127cfc&_nc_ohc=AcltMvcueNUQ7kNvgFmYW8q&_nc_ht=scontent-lhr8-2.xx&_nc_gid=APH3ezh2K6rlYmNNceWhpEq&oh=00_AYAhpkXOKWfzCAYExPD1bgfCVZJZLfpw1ePhomPJTFfx8g&oe=6703120D 461875370_10226428898851557_699202814355 461753014_10226428899411571_5659974996878110538_n.jpg?_nc_cat=111&ccb=1-7&_nc_sid=127cfc&_nc_ohc=-dazLICQbx4Q7kNvgFskBxH&_nc_ht=scontent-lhr8-1.xx&_nc_gid=APH3ezh2K6rlYmNNceWhpEq&oh=00_AYDl5DF3rvZUdvFGWXuvN1NyUVp0K7Dhj_gdnsbdKa7fJw&oe=6702E7F6 461925443_10226428899571575_3812607278483104627_n.jpg?_nc_cat=104&ccb=1-7&_nc_sid=127cfc&_nc_ohc=f0V5Mb_Oo2gQ7kNvgGWbDIK&_nc_ht=scontent-lhr6-2.xx&_nc_gid=APH3ezh2K6rlYmNNceWhpEq&oh=00_AYAxaI4UeSysccKvxVnEMJ1FeW45UKLyBb3KMW4P2cCyPg&oe=6702E4EE

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

"தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?]" / பகுதி : 27

ஹரப்பாவில் கண்டெடுக்கப்பட்ட பல களிமண் சிற்பங்களில் பெண் தெய்வீக உருவங்கள் உள்ளன. சில விக்கிரகங்களில், பெண் உருவத்தின் வயிற்றிலிருந்து செடி ஒன்று வளர்ந்திருக்கிறது. எல்லாப் படைப்புகளுக்கும் ஆதார சுருதியான பெண் சக்தியாக மக்கள் வணங்கிய தெய்வம். உடை அரைகுறையாகச் சித்தரிக்கப்பட்டிருந்த போதிலும், பல நகைகளும், விசிறி போன்ற தலை அலங்காரமும் அம்மனை அணி செய்கின்றன. ஏராளமான சிலைகளின் மேல் புகை படிந்து இருக்கிறது. சாம்பிராணி போன்ற பூசைப் பொருட்களால் வழிபாடு செய்திருக்கலாம் என்று இந்தப் புகைப்படலம் சொல்கிறது. சிந்துவெளி நாகரிகத்தை வளர்த்த மக்கள் பெண் தெய்வ வழிபாட்டை உடையவர்களாக இருந்தனர்  என்பது விந்தையானதன்று. பண்டைய நாகரிகம் நிலவிய எகிப்து, சுமேரியா முதலிய இடங்களிலும் பெண் தெய்வங்கள் முக்கியமானவையாக விளங்கின என்பது குறிப்படத்தக்கது. எந்த ஒரு சமுதாயத்திலும் தலைமை தெய்வம் பெண்ணாக இருந்தால் அங்கு பெண்கள் கட்டாயம் நாளாந்த வாழ்வில் மதிப்பளிக்கப்படுவார்கள். அத்துடன் சர் ஜான் மார்ஷல் சிந்து வெளி சமயத்தில், பெண் இயல்புகள் ஆண் இயல்புகளை விட, உயர இல்லாவிட்டாலும் குறைந்தது சமமாக இருந்து உள்ளது என குறிப்பிட்டு உள்ளார்.

சிந்து சம வெளி மக்கள் தமது இறந்த உறவினரை, அடக்கம் செய்தல் மூலமாகவோ அல்லது தகனம் செய்தல் மூலமாகவோ [அந்த மாண்டவரை] அப்புறப்படுத்தினார்கள். அது மட்டும் அல்ல அந்த இறந்து போனவரை, வீட்டுப்பயன் பாட்டுப் பொருள்களான மட்பாண்டப் பொருட்கள், அணிகலன்கள் மற்றும் தினம் பாவிக்கப்படும் பண்டங்களுடன் புதைத்தார்கள். மேலும் அவர்கள் தகனம் செய்யும் போதும், அங்கு எடுத்த சாம்பலை  களி மண்ணால் செய்யப்பட்ட தாழியில் பாதுகாத்து வைத்தார்கள். இந்த இரண்டு முறையும் அவர்கள் மறுமையை [afterlife] நம்பினார்கள் என்பதை எடுத்துக் காட்டுகிறது. 

ஒரு புறம் ஆரியர் சமுதாயம் விரிவுபட்ட குடும்பமாகவும் ஆணாதிக்க தந்தை வழி [patriarchal] குடும்பமாகவும் இருப்பதுடன் அங்கு மகன் பிறப்பதை மிகவும் விரும்பியதாகவும் தெரிகிறது. மகன் பின் தமது மந்தைகளை கவனிப்பார்கள், போரில் தமக்கு கௌரவம் கொடுப்பார்கள், கடவுளுக்கு தியாகம் செய்வார்கள், சொத்துக்கு வாரிசுரிமை பெற்று அதை குடும்ப பெயர் வழியில் கடத்துவார்கள் போன்ற பல எண்ணங்களின் பிரதிப்பலிப்பாக இது இருக்கலாம். மேலும் கணவரின் சாவின் பொழுது அங்கு மனைவிவின் சடங்கு ரீதியான தற்கொலை [ritual suicide] எதிர் பார்க்கவும் பட்டது. இதுவே சதி [sati] என்றழைக்கப்படும் உடன் கட்டை ஏறுதல் தோன்ற வழி சமைத்த தாகவும் இருக்கலாம். மறுபுறம் ஹரப்பான் சமுதாயம் ஒரு பெண் ஆதிக்க தாய் வழி [matriarchal] சமுதாயமாக காணப்படுகிறது. அங்கு கண்டு எடுக்கப்பட்ட பல சிறிய பெண் உருவச் சிலைகள், மற்றும் முத்திரைகளில் காணப்படுகின்ற உருவங்கள், அவற்றிலே உருவகப் படுத்தப்பட்டுள்ள காட்சிகள், தாய் தெய்வத்தின் செல்வாக்கு அங்கு நிலவியதை காட்டுகிறது. மேலும் இன்னும் சிந்து வெளி எழுத்துக்கள் சரியாக மொழி பெயர்க்கப்படவில்லை. ஆகவே இந்த பெண் சிலைகளின் அடிப்படையிலேயே இந்த கருத்து வெளியிடப்பட்டு உள்ளது. அது மட்டும் அல்ல, சிந்து வெளியில் காணப்பட்ட சிவலிங்கம், பின்னர் வேதத்தால் இழிவு படுத்தப்பட்டு உள்ளது. மேலும் தொல் பொருள் ஆய்வாளர்களின் கருத்தின் படி, சிந்து வெளி பெண் தெய்வம் எந்த ஒருவரினதும் துணைவி என்ற பதவிக்குள் முடங்காமல், மிகவும் சுதந்திரமானவர் ஆகவும் காணப்பட்டார். என்றாலும் பிற்காலத்தில் அவர்களுக்கு வைதீக இந்து புராண தெய்வங்களில் [orthodox Hindu pantheon] இருந்து துணை கொடுக்கப்பட்டு உள்ளது. அத்துடன் வளப்பத்தை அல்லது செழுமையை குறிக்கும் லிங்கம், யோனி போன்றவற்றை பெரும் அளவில் அங்கு தோண்டி எடுக்கப்பட்டது இதற்கு உதாரணமாகிறது. இந்த மேலோங்கிய பெண் கூறுகள், அங்கு வழிபாடு, பெண் ஆதிக்க தாய் வழி அம்சமான, பெண்ணை நோக்கி இருந்ததை அறிவுறுத்துகிறது.

திராவிட பண்பாட்டில் பெண் தன் கணவனை  தானே தன்பாட்டில் தேர்ந்து எடுக்கும் உரிமை இருந்தது  உதாரணமாக இலங்கை அரசன் இராவணனின் தங்கை, சூர்ப்பனகை தனது காதலை [ஆசையை] காட்டில் கண்ட ஆரியரான இராமனிடம் கூறுகிறாள். ஆனால் இராமனோ அவளை தனது தம்பி,இலட்சுமணனிடம் அனுப்புகிறான். இங்கு தான் நாம் ஆரிய திராவிட மோதலை காணுகிறோம். இலட்சுமணன் அவள் வெட்கம் அற்றவள் எனக் கருதி, அவளின் மார்பகங்களையும், மூக்கையும் வெட்டித் துரத்திவிடுகிறான். இது மேலும் திராவிடர்கள் நேசமானவர்கள்,பரஸ்பரம் அளவளாவக் கூடியவர்கள், வலுச் சண்டைக்குப் போகாதவர்கள் என்பதையும், அங்கு திராவிட பெண் ஆரிய பெண்களை விட மிக அதிகமான சுதந்திரத்துடன் வாழ்ந்தாள் என்பதையும் காட்டுகிறது. இன்னும் ஒரு உதாரணமாக, தனது தங்கைக்கு நேர்ந்த நிலையையிட்டுச் சினம் கொண்ட இராவணன், இராமனைப் பழிவாங்க எண்ணிச் சீதையைக் கவர்ந்து கொண்டு வந்து இலங்கையில், அசோகவனத்தில் சிறை வைத்தான். ஆனால் அவன் எந்த சூழ் நிலையிலும் சிறைப்பிடிக்கப்பட்ட அவளை கட்டாயப்படுத்தவும் இல்லை மானபங்கம் செய்யவும் இல்லை. ஏன், தனக்கு சாபம் இருக்குது என்றால், வேறு யாரையாவது ஏவிக்கூட அப்படி செய்யவில்லை என்பதைக் கவனிக்க. இதை  எல்லா உரைகளும் கூறுகின்றன என்பதும்  குறிப்பிடத் தக்கது.

முன்பு ஒரு காலம் ஆரியரே இந்தியாவிற்கு நாகரிகத்தை கொண்டு வந்தார்கள் எனவும், இந்து சமயத்திற்கு திராவிடர்களின் பங்களிப்பு ஒன்றும் பெரிதாக இல்லை எனவும் கருதப்பட்டது. ஆனால் இந்த தவறான வாதம் இப்ப சர் ஜான் மார்ஷல் அவர்களின் மொஹெஞ்சதாரோ, ஹரப்பா அகழ்வாய்வின் பின், வெளிச்சத்திற்கு வந்து உள்ளது. அவர் முடிந்த முடிவாக இந்து சமயத்தின் பெரும்பாலான அம்சங்கள் ஆரியர் வருகைக்கு முற்பட்டது என நிரூபித்து உள்ளார். உதாரணமாக தாய் தெய்வ வழிபாடு, சிவ [பசுபதி] வழிபாடு, காளை, குரங்கு, யானை போன்ற மிருகங்களுக்கான பெரு மதிப்பு, மர வழிபாடு, லிங்க, யோனி, உருவம் அற்ற கல் வழிபாடு, யோகா போன்றவை ஆகும். உண்மையில் இவை வேத பிராமண சமயத்துக்குள் [அல்லது இந்து சமயத்துக்குள்] பிற்பாடு உள்வாங்கப்படவையாகும்.

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

பகுதி : 28 தொடரும்

462487066_10226478747497742_6048810584020124691_n.jpg?_nc_cat=105&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=Zr56yart0qsQ7kNvgEvsKzv&_nc_ht=scontent-lhr6-2.xx&_nc_gid=AVt4xZYsFIY71SahupnMf5e&oh=00_AYBW085FgUD0JDPnKragqbCcNBR0loalBjNMdp2Io7v0LQ&oe=670AA791 462366195_10226478747537743_5296730385737709391_n.jpg?_nc_cat=107&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=ujYTpk_IFnYQ7kNvgGtm7E6&_nc_ht=scontent-lhr8-1.xx&_nc_gid=AVt4xZYsFIY71SahupnMf5e&oh=00_AYBuqb8syvSNFhpFVQ_NNw7ownMjWAkhvD4Le1e_U-gqiQ&oe=670AA79E 462365894_10226478747577744_7410634241497949315_n.jpg?_nc_cat=104&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=9DQi5phYil4Q7kNvgFuixqP&_nc_ht=scontent-lhr6-2.xx&_nc_gid=AVt4xZYsFIY71SahupnMf5e&oh=00_AYD_9eg4RLRpDUXuqJdva6LdiBRY44AY4KmMgcOYMlaHNA&oe=670AA3C1 462435983_10226478747457741_3369416837330289995_n.jpg?_nc_cat=107&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=A0Caw1tAp6UQ7kNvgFDsCEV&_nc_ht=scontent-lhr8-1.xx&_nc_gid=AVt4xZYsFIY71SahupnMf5e&oh=00_AYDOOQCsSsIDGYv2LKjuaB6eCqhSFtaDAGA-xrepO2S3pQ&oe=670A936D 462287784_10226478748137758_3976422993343238928_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=107&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=3qB5dTCJrG8Q7kNvgGeAj_8&_nc_ht=scontent-lhr8-1.xx&_nc_gid=AVt4xZYsFIY71SahupnMf5e&oh=00_AYDykITd8FRPKymzYU9W2f8S00mnrT8X1mzaxeS_hxO56g&oe=670A9DAA


 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

"தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?]" / பகுதி : 28 


ஆப்கானித்தானில் [Afghanistan] இருந்து கங்கை ஆறு வரை பரவி இருந்த பண்டைய சிந்து சம வெளி நாகரிகம் பெரும்பாலும் ஒரு தாந்திர முறை [தாந்திரீகம் / Tantra] பண்பாட்டையே கொண்டிருந்தார்கள். "ஹரப்பா" [Harappa] என்ற சொல்லை ஹர+அப்பா என நாம் பிரிக்கலாம். இங்கு ஹர என்பது சிவா என்பதையும் அப்பா என்பது தந்தையையும் குறிக்கிறது. ஹரப்பா நகரம் சிவாவிற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இடமாக கருதலாம். இந்த சிவாவை இந்தியாவின் பண்பாட்டின் தந்தை என குறிப்பிடலாம். ஒரு சமூகத்தின் பண்பாட்டையும், வரலாற்றையும் அறிய இரண்டு வழி முறைகள் வரலாற்று அறிஞர்களால் கையாளப்படுகிறது. ஒன்று தொல் பொருட்கள் (கல்வெட்டுகள், மனிதமிச்சங்கள்) மற்றொன்று இலக்கியம். சிந்து - சரஸ்வதி நாகரிகத்தின் சுவடுகளாக நமக்குக் கிடைக்கும் அகழ்வுத் தடயங்களில் ஒன்று முகத்தில் கொம்புகள் கொண்டு, விலங்குகள் சூழ அமர்ந்திருக்கும் பசுபதி வடிவம். இந்த தியானத்திலுள்ள பசுபதி சின்னத்தின் மூலமே சிவவழிபாடு ஆகும். சிவனை வழிபடும் வழக்கம் பழங்காலத்திலும் நம்மிடம் இருந்துள்ளது என்பது இதனால் அறியப்படுகிறது. 

 

ஆரியர் அல்லாதவர்களின் [ஆஸ்ட்ராலாய்ட், மங்கோலியன், திராவிடர் / Austrics, Mongolians, and Dravidians] ஆன்மீக அணுகுமுறை பொதுவாக தாந்திர முறையாகும். இது ஆரியர்களின் வேத வழக்கத்தில் இருந்து வேறுபட்டது. இது ஒருவர் தனது எண்ணங்களையும் உணர்வுகளையும் ஒன்றின் மேல் ஆதிக்கம் செலுத்த வைக்கும் முறை ஆகும். ஆகவே ஆரியர்களின் அகநிலை உணர்வுக்குப் புறம்பான, வெளிப்புற சடங்கில் இருந்து மாறு பட்டது. தாந்திர வழிபாட்டு முறையின் வேர்களை அறிய வேண்டுமெனில், நாம் சிந்து சமவெளியில் இருந்து தொடங்க வேண்டும். சிந்து சமவெளியில் கண்டெடுக்கப்பட்ட சிலைகளில் இரண்டு முக்கிய மானவை. ஒன்று சிவன் தன் ஆண் குறி தெரியுமாறு அமர்ந்து இருக்க, அவரை சுற்றி மிருகங்கள் நிற்பது போல் வரையப்பட்டிருக்கும் சிற்பம். சிந்து வெளி மக்கள் யோகாவை அறிந்து இருந்தார்கள் என்பதற்கும் தாந்திரீக வழிபாட்டு முறைகளை பின்பற்றினார்கள் என்பதற்கும் இந்த முத்திரையை ஒரு சான்றாக எடுத்து காட்டுகிறார்கள். இரண்டாவது யோனி தெரியுமாறு அமர்ந்திருக்கும் ஒரு பெண் சிற்பம். மேலும் இந்த சிற்பம், காணிக்கை, படையல் மூலம் புகை படிந்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் யோனி வழிபாடும், லிங்க வழிபாடும் இருந்தது என வரலாற்று ஆசிரியர்களின் கருத்து. முன்னோர்களின் நினைவாக நடுகல் தமிழகத்தின் பல பகுதிகளில் காணப்படுகின்றன. சைவ மதத்தின் கொள்கைப்படி, இறந்தவர்களின் நினைவாக நடுகல் [memorial stone / Hero Stones] வைக்கும் பழக்கம் இருந்து வருகிறது. ஒரு காலத்தில் தியானத்திலும், யோகத்திலும் வீரத்திலும் சிறந்து விளங்கியவர்களின் நினைவாக லிங்க வழிபாடு இருக்கலாம் என அறிஞர்கள் கூறுகின்றார்கள். லிங்கம் என்பது ஒரு சமஸ்கிருதச் சொல்லாகும். லிங்க வடிவம், ஆண் குறியைக் குறிப்பதாகவும், வளம் என்பதற்கான குறியீடாக இது கொள்ளப்பட்டுப் பழங் காலத்தில் வழிபடப்பட்டு வந்ததாகவும் பொதுவாகக் கருதப்படுகிறது. தாந்திரீகம், காமத்தின் வழியாக கடவுளை அடைய முன்னவர்கள் பின் பற்றிய வழிமுறை எனவும் கூறலாம்.

 

தாந்திர முறை, தியானம், யோகா இவைகளின் ஒன்று சேர்த்தலை விட, மேல் அதிகமானது. யோகா உடலையும் மனதையும்  தனித்தனியே பிரிக்க முற்படுவது. தாந்திர முறையின் படி, போட்டி, போராட்டம் வாழ்வின் சாரம். எல்லா விதமான தடைகளுக்கும் எதிராக போராடி, குறை பாடான, நிறைவுறாததில் இருந்து  பூரணமாக்க, முழு நிறைவாக்க முயலும் முயற்சி, பிரயத்தனமே தாந்திர முறையின் உண்மையான மெய்பொருள் ஆகும்.

 

ஏறத்தாழ 4,500-5,000 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்ததாக கருதப்படும் சிந்து சமவெளி மக்கள் நாகரிகத்தின் உச்சியில் இருந்தார்கள். அவர்கள்  தாந்திர முறையை மனதையும் உடலையும்  ஒருங்கிணைப்பதற்கு அப்போதே பாவித்தார்கள். தாந்திர முறையில் உடம்பு, மனது, உணர்வு மூன்றையும் கட்டுப்படுத்தி அதன் மூலம் கிடைக்கும் சக்தியை, ஆன்மீக பரவச நிலையை அடைய பயன்படுத்துவதாகும். காணாத கடவுளை நினைத்து தவமிருப்பதற்கு [penance] பதிலாக, நம் கண் முன்னே இருக்கும் பிடித்தமான உறுப்புகளை பார்க்கும் பொழுது நமது கவனச்சிதறல் குறைக்கப்படுகிறது. அந்தக் கணங்களில் நம் உள்ளுணர்வு விழிப்பாகவும், கவனம் ஒரு புள்ளியில் குவிக்கப்படுகிறது. இதுதான் தாந்திர முறையின் தொடக்கம். அதாவது மனதும் உடலும் ஒன்றுபட்டு இயங்குவதே தாந்திர முறையின் முக்கிய கூறு. உடலையும் மனதையும் தனித் தனியே பிரிக்க முற்படுவதுதான் மற்ற வழி பாட்டு முறைகள் ஆகும்.

 

ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிந்து சம வெளியில் பிறந்த தாந்திரா முறை பற்றி அல்லது தாந்திரீகம் பற்றி இன்று பலர் தவறான கருத்து கொண்டு உள்ளார்கள். அவர்கள் அது எல்லாம் பாலியல் [sex] பற்றியது என நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் தாய்வழிபாடு சமூக மரபிலிருந்து தொடங்கிய இந்த தாந்திரீகம் மற்றைய சமய வழிகள் போலல்லாது, மனித வாழ்க்கையில் உள்ள அனைத்தையும் இயல்பாக ஏற்றுக்கொண்டு விழிப்புணர்வு அடையும் நிலையினை போதிப்பது. ஆகவே தாந்திரீகத்தில் காமமும் ஒரு பகுதி ஆனால் காமம்தான் தாந்திரீகம் இல்லை. நடை முறையில் சாதாரண பாலுறவைத் தாண்டி அதைவிட கூடுதலாக உள்ளது. நீங்கள் இதை காம சூத்திரத்துடன் குழப்ப வேண்டாம். அது [காமசூத்ரா / Kama Sutra] பாலியல் உறவு நிலைகள் பற்றிய ஒரு வழிகாட்டி மாத்திரமே. தாந்திரா உண்மையில் அதில் ஈடுபடும் மக்களுக்கு எது நல்லதோ அதை செய்கிறது. அதாவது தாந்தி ரீகத்தின் நோக்கம் [குறிக்கோள்], ஆத்மீக விழிப்புணர்வு நிலையினை [spiritual awakening] அல்லது சுய விடுதலையை அடைவதாகும். தாந்திரா மனித உடலில் ஏற்படக்கூடிய அடிப்படை உந்தலை, பாலியல் ஆற்றலை [sexual energy] பாவித்து, ஆன்மீக விழிப்புணர்வு நிலையை மேம்படுத்துதல் ஆகும். தாந்திரா ஒரு மதம் அல்ல. ஆனால் பண்டைய ஆன்மீக நம்பிக்கைகளின் தொகுப்பு ஆகும். ஏனென்றால், தாந்திரா, அதன் இயற்கை தன்மையால், மதங்களை மாதிரி, கொள்கைகளை நம்பிக்கொண்டு நம்பிக்கை அடிப்படையில் கற்பனை செய்யும் ஒன்று அல்ல. மதங்கள் மாதிரி எந்த ஆண்டவன் கட்டளையையும்  அல்லது கடுமையான விதி முறைகள் ஒன்றையும் [commandments or strict rules] தாந்திர பின்பற்ற வில்லை. மேலும் நீங்கள் இங்கு கடினமான வழிபாடு அல்லது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஏதாவது ஒரு பணிகளில் ஈடுபடத்தேவை இல்லை. தாந்திராவில் ஒவ்வொருவரும் தனக்கு சரியெனபடும் ஒரு பாதையை தெரிந்து எடுக்கலாம். தாந்திரா குருவிடம் இருந்து மாணவனுக்கு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு குருவும் தனக்கெனெ ஒரு தனித்தன்மை வாய்ந்த அணுகு முறையை [unique approach] வைத்திருக்கிறார்கள். மேலும் மதங்களுடன் ஒப்பிடும் போது, இதில் முக்கிய வேறுபாடு பாலியலில் ஆகும். மத போதகர்களின் அறிவுறுத்தலின் படி பாலியல் ஒரு புனிதம் அற்ற ஒன்று ஆகும். ஆனால், தாந்திரா, இதற்கு மாறாக இதை புனிதமானது [sacred] என நம்புகிறது. அந்த அடிப்படையில் மனித உடலின் ஒரு அத்தியாவசிய தேவையான உடலுறவு மூலமும் இறைவனை அடையும் வழியினையும் காட்டுகிறது. தாந்திரீகத்தின் படி ஆணும் பெண்ணும் ஒரே வெளிப்பாட்டின் விம்பங்கள் போன்றவர்கள், பிரபஞ்ச ஆற்றலில் ஆண் தன்மையினை சிவம் என்றும் பெண்தன்மையினை சக்தி என்றும் அழைப்பர். இது ஒழுங்கமைக்கப்பட்ட மதங்கள் மாதிரி ஒரு ஒப்புயர்வற்ற ஒன்றை [supreme beings] அல்லது முழுமுதல் கடவுள் ஒருவரை வழிபடுவது அல்ல. மாறாக எம்முள் இருக்கும் இயற்கையான அடிப்படை உந்தலை மதிப்பளித்து, உயர்ந்த நோக்கத்தினை அடைவதற்கு அதை சாதகமாக பயன்படுத்திக்கொள்வது ஆகும். அதனுடன் சண்டை பிடிக்காமல் ஒத்துப்போய் அதனை வைத்தே அதை வெல்லும் சூட்சுமத்தினை சொல்லிக் கொடுக்கிறது. அதாவது, எமது தெய்வீக இயல்பை [divine qualities] எம்மில் வளர்ப்பதற்கு நாம் சிவ, சத்தியை வசதியான சின்னங்களாக இங்கு பாவித்து கொள்கிறோம். பக்குவமற்றவர்களுக்கு [To the crude] இது ஒரு ஆபாசம் [பாலின்பம் / pornographic], ஒருதலைச் சார்பு உடையவர்களுக்கு [to the bias] இது ஒரு கொச்சையான [அநாகரீகமான] முற்காலத்திய மக்களின் பழக்கவழக்கம் [vulgar habits] ஆகும். இந்து [சைவ, சாக்த] ஆலயங்களில் வெறுக்கத்தக்க, அருவருப்பான சிற்பங்களை [objectionable sculptures] கோபுரத்திலும் சுவரிலும் கண்டு நாம்  அடிக்கடி இது ஏன் என அதிசயப் படுகிறோம். இது இந்த தாந்திரீக மரபினால் ஏற்பட்டவையாக இருக்கலாம்? மனிதனின் இயற்கையான ஆற்றலான காமத்தை அறிவதும் அறிவதன் மூலம் கடந்து செல்வதுமே மானுட உண்மையின் உச்ச நிலையை அறிய உதவும் வழி என அவை நினைத்தன. ஆகவே அவை காமத்தை அறிவின் வழியாகக் கண்டன. அதன் பிரதிபலிப்பே இந்த கலவி [Mithuna / Maithuna /‘(male / female) couple’] சிலைகள் போலும்.

 

ஆரியர் வந்த காலத்தில் வட இந்தியாவிற் குடியிருந்தவர் பெரும் பாலும் திரவிடரே. ஆரியர்கள், பழங்குடி மக்களை கீழோர், தம்மை விடத் தாழ்ந்தவர் என் கருதினர். உதாரணமாக இராமாயண கதையில் இவர்களை குரங்கு என்றும் அரக்கன் [demons] என்றும் குறிக்கப்படுகிறது.

 

[Photographed in 1904,... pictures 4 & 5 ... this image of a gigantic lingam, hints at the district’s Shaivite past. Back in the fourth century AD, the area between Baramulla and Waziristan (now in Pakistan) was a heartland of lingam worship. Several ancient lingams still line the Jhelum river.]

 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

 

பகுதி : 29 தொடரும்

463186440_10226548342917584_8126101023225573285_n.jpg?_nc_cat=111&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=Dm6XwdwXJ9wQ7kNvgEER39z&_nc_ht=scontent-lhr8-1.xx&_nc_gid=ANbYVjNjbX0YjWtM2fuqZEs&oh=00_AYDCL8QAPKlOb8ghknWCJss5crTzks7YIOx5_oRWngUxIw&oe=6712B397 463180970_10226548342077563_6501578871648774699_n.jpg?_nc_cat=111&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=ece3DgFVVO8Q7kNvgFTRS0n&_nc_ht=scontent-lhr8-1.xx&_nc_gid=ANbYVjNjbX0YjWtM2fuqZEs&oh=00_AYAMdpi6cYrnRKLVqisWB_42XGAIv5av2gRNNOxOw8wFWA&oe=6712E054 No photo description available. 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
"தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?]" / பகுதி : 29 
 
 
சிந்து சம வெளி இடுபாடுகளுக் கிடையில் கண்டு எடுக்கப்பட்ட சிவலிங்கத்தின் முந்தைய வடிவத்துடன் இன்னும் ஒரு முக்கியமான தெய்வம் பொறிக்கப்பட்ட முத்திரையும் கண்டு எடுத்தார்கள். சொற்குறியிடு "ஆ,மு,வான்". இந்த பழமையான தெய்வத்தை வரையறுகிறது. ஆகவே இந்த தெய்வத்தை "ஆமுவான்" என பரிந்துரைத்தார்கள். சிந்து சம வெளி வில்லையில் இந்த இறைவனுக்கு  நீண்ட மனிதவுரு கொடுக்கப்பட்டுள்ளது. அதன் தலையில் மூன்று கொம்பு உள்ளது. மேலும் இந்த கடவுள், "ஆமுவான் / Ahmuvan"  முருகனை ஒத்த வடிவத்தை கொண்டுள்ளார்.
 
மேலும் 'ஆ; என்ற தமிழ் எழுத்து முன்னைய தமிழ் வட்டெழுத்துவில் இருந்து உருமாற்று பெற்றது. ஆனால் இந்த வட்டெழுத்தோ 'டிராகன் விண்மீன் குழு'வை [Draco constellation] குறிக்கும் சிந்து வெளி எழுத்தில் இருந்து, முதலாம் படத்தில் காட்டியவாறு பிறந்தது என்கிறார்கள் அறிஞர்கள் [படம்:1]. ஆகவே இது தமிழ் -சிந்து வெளி தொடர்பை மீண்டும் எடுத்து கூறுகிறது. மேலும் சிந்து வெளி எழுத்துக்கள் வலது பக்கம் இருந்து இடது பக்கமாக எழுதப்பட்டவை என்பதையும் கவனிக்க.
 
முதலாவது இந்திய எழுத்து கி மு 2600 ஆண்டளவில் சிந்து சம வெளியில் மலர்ச்சியுற்றது, எனினும் இவ் வரிவடிவம் இன்னும் முழுமையாக பொருள் கண்டு பிடிக்கப்படவில்லை. இதற்கு முக்கிய காரணம்:
 
[1] இவ் வரி வடிவங்களைப் பயன் படுத்திய மொழியைப்பற்றி சரியாக இன்னும் தெரியாதது.
 
[2] கிடைத்த முத்திரைகளில் எழுதப்பட்டு இருப்பவை பெரும்பாலும் "5" அல்லது "6" குறியீடுகளைக் கொண்டவையாகவே உள்ளன. நீளமான விவரணங்கள் எதுவும் அங்கு  இல்லை.
 
[3] அறியப்பட்ட வேறு வரிவடிவங்களைக் கொண்ட இருமொழிக் குறிப்பு [bilingual texts like a Rosetta Stone] எதுவும் கிடைக்காததும் ஆகும்.
 
அதனால் எம்மிடம் வாசித்து அறியக்கூடிய அவர்களின் நம்பிக்கை, சரித்திரம், ஆட்சியாளர் அல்லது இலக்கியம் பற்றிய குறிப்புகள் ஒன்றும், இன்னும் சரியாக இல்லை. இது 200 அடிப்படை குறியீடுகளை கொண்டிருந்தாலும், அங்கு சுமார் மொத்தமாக 400 வெவ்வேறான குறியீடுகள் அல்லது அடையாளம் காணப்பட்டு உள்ளன. ஆதிமனிதன் தன்மனதில் தோன்றும் எண்ணங்களை மற்றைய மனிதர்களுடன் சைகையால் பரிமாறிக் கொண்டான். அதனால் சைகைமொழி பிறந்தது. சைகை மொழியும் புரியாதவர்களுக்கு, தனது எண்ணக் கருத்துக்களை விளக்குவதற்கு, உருவங்களைக் கீறியே புரிய வைத்தான். அதனால் உலகிலுள்ள பண்டைய மொழிகளின் எழுத்துக்கள் யாவையுமே உருவங்களால் கீறிய படங்களிலிருந்தே முகிழ்ந்த வையாகும். பண்டைய தமிழரும் தமது எண்ணங்களை உருவங்களாகவே எழுதினர். பழங் கால தமிழகத்தில் ஏற்றுமதியாளர்கள் பண்டப் பொதிகளின் மீது சரக்கின் பெயரையும், அளவையும் படமாக வரைந்தனுப்பிய செய்தி சிலப்பதி காரத்தில்,
 
"வம்ப மாக்கள் தம் பெயர் பொறித்த கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதிக் கடைமுக வாயிலும்" 
[இந்திர விழா ஊர் எடுத்த காதை,வரி.111-113.]
 
என உள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் அல்லது புதியோர் தங்களுடைய பொருள்களை, பல பொதிகளாகக் கொண்டு வந்திருந்தார்கள். அந்தப் பொதிகள் ஒவ்வொன்றிலும் அவர்களுடைய அடையாள எழுத்தினை இலச்சினையாக பதிக்கப்பட்டிருந்தது, பல எண்களும் குறிப்பிடப்பட்டிருந்தன. இந்தப் பொதிகள் அனைத்தும் அந்த ஊர்ப் பண்டசாலையில் குவிந்திருந்தன என்கிறது இந்த வரிகள். இவ்வாறு அடையாளம் காட்டி எழுதப்படுவது கண்ணெழுத்து அல்லது “சித்திர எழுத்துக்கள் / pictorial writing" எனப்படுகிறது. இவ்வாறு ஒரு பொருளை ஓவியமாக பிரதி நிதித்துவம் படுத்தி பல குறியீடுகள், எழுத்து வடிவம் ஆரம்பித்த தொடக்க காலத்தில், உண்டாகின. அவை அந்த மொழியின் சொற்களை வர்ணித்தன. எழுத்து உருவாக்கலில், மூல சொற்களின் அல்லது எண்ணங்களின் ஒத்த சத்தம் உள்ள சொற்களை பண்டைய எழுத்தாளர்கள் பாவித்தார்கள். உதாரணமாக ஆங்கிலத்தில் "leave" என்ற சொல்லை குறிக்க "leaf" இன் படத்தை பாவித்தார்கள். இதை ஓவிய ஒலியெழுத்துப் புதிர் [rebus writing / வரைபட மொழி] என அழைத்தார்கள். அது மட்டும் அல்ல முன்னைய எழுத்து உருவாக்கலில், இது பொது மாதிரியாக இருந்தது. அப்படியே "relief", என்ற ஆங்கில எழுத்தை குறிக்க "leaf" என்ற குறியீட்டுடன் அதன் முன் "re" என்றதன் சத்தத்தை குறிக்கக்கூடிய ஒரு குறியீட்டை பாவித்தார்கள்.
 
மேலும் ஹரப்பான் இலக்கங்கள் / எண்குறிகள் செங்குத்தான கோடுகளால் குறிக்கப்பட்டன. ஆனால் அது 7 வரை மட்டுமே போகிறது. மேலும் 4 குறியீடுகளை இந்த கட்டமைப்புக்குள், எண் குறிகளாக பகுப்பாய்வு வெளிப்படுத்துகிறது. ஆகவே அவை "7" க்கு மேற்பட்ட இலக்கங்களை அதிகமாக குறிக்கலாம் என கருதலாம். "8" என்ற இலக்கத்தை குறிக்க செங்குத்தான கோடுகள் இல்லாததால், ஹரப்பான் இலக்கங்கள் எட்டை [8] அடிப்படையாக கொண்ட இலக்கங்களாக [Octal] இருக்கலாம் என தொல் பொருள் ஆய்வாளார், வால்டர் ஃபேர் சர்விஸ் [Walter Fairservice] மற்றும் பலரும் நம்புகிறார்கள்.  உதாரணமாக நாம் இன்று பாவிக்கும் அராபிக் இலக்கங்கள் [Arabic numerals or Indo-Arabic numerals] அல்லது இந்தோ-அராபிக் இலக்கங்கள், தசம இலக்கங்கள் ஆகும். இது உண்மையில் இந்தியாவில் கி பி 500 ஆண்டளவில் அறிமுகப்படுத்தப்பட்டு இந்து இலக்கம் ["Hindu numerals"] என அழைக்கப்பட்டது. எனினும் இதை பின் இந்தியாவுடனான வர்த்தகம் மூலம் கற்றுக் கொண்ட அரபு வர்த்தகர்கள், இந்த தசம இலக்க முறையை ஐரோப்பியாவிற்கு அறிமுகப்படுத்தியதால், அராபிக் இலக்கம் என பின் ஐரோப்பியர்களால் வழங்கப்பட்டு அது நிரந்தரமாக நிலைத்து விட்டது. இது 0 தொடக்கம் 9 வரையான குறியீடுகளை கொண்டுள்ளது. பத்து [10] என்பதை எழுத நாம் ஒன்றையும் [1] பூச்சியத்தையும் [0] ஒருங்கிணைக்க வேண்டும். அது அராபிக் இலக்கங்கள் பத்தை  [10] அடிப்படையாக கொண்டவை என அடையாளம் காட்டுகிறது. எட்டை அடிப்படையாக கொண்ட எண்கள் உலகில் மிகவும் அரிது. என்றாலும் முன்னைய திராவிடர்கள் எட்டை அடிப்படையாக பாவித்து பின் பத்தை அடிப்படையாக இந்தோ ஐரோப்பியன் செல்வாக்கால் மாற்றினார்கள். உதாரணமாக எட்டை அடியாக கொண்ட இலக்கத்தில், பத்தை அடியாக கொண்ட 75 ஐ எழுதுவது என்றால் அதை நாம் "113" என எழுத வேண்டி வரும். அதாவது 8X8,1X8, 3 [எட்டு எட்டு,ஒன்று எட்டு,அலகு 3] ஆகும். 
 
எது எப்படி ஆயினும், இந்த சிந்து சம வெளி முத்திரையில் பொறிக்கப் பட்ட எழுத்துகளை சரியாக எம்மால் வாசிக்க முடியுமா? என்ற ஒரு கேள்வி எழுவது இயற்கையே.இதை விளக்கு வதற்கு, நாம் பட எழுத்து ஒன்றை [ படம்:7 அல்லது படம்:3:1] இப்படி ஆரம்பிக்கலாம். 
 
பல அறிஞர்கள் [க்நோரோசாவ், பார்போலா, மகாதேவன்/  Knorozov, Parpola, Mahadevan] இந்த குறியீடை "மீன்" என காண்கிறார்கள். மேலும் [விண்] மீன் என்பது நட்சத்திரத்தையும் குறிக்கிறது. மொகெஞ்ச தாரோவில் கண்டு பிடிக்கப் பட்ட பல பண்டங்களில் மீன், நட்சத்திரம் இரண்டும் ஒன்றாக வரையப்பட்டுள்ளன. அது மீன், நட்சத்திரம் இவைகளுக்கு இடையே உள்ள பிணைப்பை உறுதிப்படுத்துகிறது.
 
கிழே உள்ள இன்னும் ஒரு பட எழுத்தில் [படம்:8 அல்லது படம்:3:7] இலக்கம் ஆறு [6] அதாவது ஆறு கோடுகள் மீன் சின்னத்திற்கு முன் அல்லது அருகில் காணப்படுகிறது. இதை ஆறு நட்சத்திரம் அல்லது அறு மீன் என மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. இது கார்த்திகை நட்சத்திரம் / கார்த்திகை மீன் ஆகும். 
 
மீன் வடிவத்தின் தலைமேல் ஒரு கூரை போன்ற தலைகீழ் வடிவத்தைக் கண்டு [படம்:6 அல்லது படம்:3:2] மைமீன் என்று பின்லாந்து நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் அஸ்கோ பர்போலா [Asco Parpola] படித்துக் காட்டுகிறார். கூரை வேய்தலை வேய்தல் என்பார்கள்.அது மேய்தல் என்றும் திரியும். மேய்தல் வெறும் மேய் என நிற்கும். அது மை எனத் திரிந்து கரு நிறத்தைக் குறிக்கும். மை மீன் என்று கரிய மீனாகிய சனிக்கோளைக் குறிக்கும் என்கிறார். 
 
"மைம்மீன் புகையினும் தூமம் தோன்றினும் தென்திசை மருங்கின் வெள்ளி ஓடினும்",
 
-- என புறநானுறு 117 கூறுவதை காண்க. இங்கு மைம்மீன் = சனியைக் குறிக்கிறது. சனிக் கிரகம் புகை போல மங்கிக் காணப்படினும், வால் நட்சத்திரம் (தூம கேது) தோன்றினும், வெள்ளி கிரகம் தென் திசை நோக்கிச் சென்றாலும் என்கிறது. என்றாலும் இந்த மீன் வாசிப்பு எல்லோராலும் ஏற்கப்படவில்லை. ஆகவே ஏற்றுக் கொள்ளப்பட்ட சிந்து சம வெளி சொற்பொருள் தொகுதி / அகராதி என்று ஒன்றும் இன்னும் இல்லை.
             
மேலும் சில சிந்து சம வெளி ஓவிய எழுத்தின் [உரல், ஜாடி, உரலுக்குள் உலக்கை,ஈட்டி [வேல்], மீன், ஒரு கண் மீன், வெட்டிய [சீவிய] மீன், மூடிய மீன், கொம்பு மீன், கொழுத்த நண்டு ]  விளக்கம் படம் 4 இல் தரப்பட்டுள்ளது.
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பகுதி : 30 தொடரும்
May be an image of text May be an image of text May be a graphic of text  
 
May be a black-and-white image of text
 
 
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

"தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?]" / பகுதி : 30

 

சிந்து சமவெளி நாகரீகம் கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்தே, அந்தப் பகுதியில் வாழ்ந்த மக்கள் என்ன மொழியைப் பேசியிருப்பார்கள் என்ற விவாதம் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. அகழாய்வு, மொழி ஆய்வு, மரபணு ஆய்வு, வரலாற்று ஆய்வு ஆகியவற்றின் அடிப்படையில் சிந்துச் சமவெளிப் பகுதியில் பேசிய மொழி எந்த மொழியாக இருக்கலாம் என்ற ஆய்வைச் செய்திருக்கிறார் பெங்களூரைச் சேர்ந்த பஹதா அன்சுமாலி முகோபாத்யாய [Bahata Ansumali Mukhopadhyay]. 

இது தொடர்பாக இவர் எழுதிய Ancestral Dravidian languages in Indus Civilization: ultraconserved Dravidian tooth-word reveals deep linguistic ancestry and supports genetics என்ற ஆய்வுக் கட்டுரை நேச்சர் க்ரூப் ஆய்விதழில் [nature - humanities and social sciences communications] ஆகஸ்ட் 3ஆம் தேதி 2021 [03 August 2021] வெளியாகியுள்ளது.

2019ல் வி.எம். நரசிம்மன் உள்ளிட்டோர் செய்த ஒரு ஆய்வின் முடிவுகளின்படி, சிந்துச் சமவெளியில் வாழ்ந்த மக்களின் தனித்துவமிக்க மரபணு மாதிரி கண்டுபிடிக்கப்பட்டதோடு, தொல் திராவிடர்களின் பரவல் குறித்தும் சில தகவல்களை அளித்தன. அதாவது, பெரும்பான்மை சிந்துச் சமவெளி மக்களிடம் தொல் இரானிய விவசாயிகளின் மரபணுக்களும் பழங்கால தென்னிந்திய மூதாதைகளின் மரபணுக்களும் இருந்ததாக இந்த ஆய்வு கூறியது. 

ஆனால், இந்த ஆய்வுகளை வைத்து சிந்து சமவெளியில் வாழ்ந்த மக்கள் பெரும்பான்மையாக என்ன மொழிகளைப் பேசினார்கள் என்பதைக் கண்டறிய முடியவில்லை. அங்கு வாழ்ந்த மக்களின் மூதாதையர்களும் அதற்குப் பின்வந்தவர்களும் கூட என்ன மொழியைப் பேசினார்கள் என்பதைக் கண்டறிய முடியவில்லை. மேலும், திராவிட மொழிகள் இங்கிருந்து தென்னிந்தியாவுக்குச் சென்றதா அல்லது தென்னிந்தியாவிலிருந்து இங்கு வந்ததா என்பதையும் சொல்ல முடியவில்லை.

ஆகவே, சில சொற்களை எடுத்துக் கொண்டு, அவற்றை ஆய்வுசெய்து சிந்து சமவெளியில் பேசியிருந்திருக்கக் கூடிய மொழி எது என்பதை அறியலாமா என ஆராய முடிவுசெய்தார் பஹதா அன்சுமாலி முகோபாத்யாய. 

சிந்து சமவெளியில் வாழ்ந்தவர்கள் பாரசீக வளைகுடாவுடனும் மெசொப்பொத்தேமியாவுடனும் வர்த்தகத் தொடர்புகளைக் கொண்டிருந்தனர். குறிப்பாக யானைத் தந்தங்கள் சிந்து சமவெளியிலிருந்துதான் மெசொப்பொத்தேமியாவுக்கு ஏற்றுமதியாயின. 

இந்த யானைத் தந்தங்களுடன், தந்தங்களைக் குறிப்பதற்கான சொற்களும் பாரசீக மொழிக்கும் மெசொப்பொத்தேமியாப் பகுதிகளில் வழங்கப்பட்ட மொழிகளுக்கும் ஏற்றுமதியாயின. ஆகவே, இந்த நாடுகளைச் சேர்ந்த அக்கேடியன், எலமைட், ஹுர்ரியன், பழங்கால பாரசீக மொழிகளில் எழுதப்பட்ட இலக்கியங்கள் மற்றும் எழுத்துகளில் சிந்து சமவெளியிலிருந்து வந்திருக்கக்கூடிய சொற்கள், குறிப்பாக யானைகள், தந்தங்களைக் குறிக்கக்கூடிய சொற்கள் கிடைக்குமா என ஆய்வுசெய்தார் பஹதா.

உள்ளூரில் தயாரிக்கப்படாத, கிடைக்காத ஒரு பொருளை, வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யும்போது, அந்தப் பொருளை எந்த வெளிநாட்டிலிருந்து வாங்குகிறோமோ அங்கு வழங்கப்படும் சொல்லாலேயே அழைக்கிறோம். இந்த அடிப்படையை மனதில் கொண்டு தேடியபோது அவருக்கு 'பிரு / பிரி' என்ற சொல்லும் அவற்றின் வேறுவிதமான உச்சரிப்புகளும் கிடைத்ததன. இந்த 'பிரு' என்ற சொல்லுக்கு அக்கேடிய மொழியில் 'யானை' என்றும் பழங்கால பாரசீக மொழியில் 'தந்தம்' என்றும் பொருள் இருந்தது.

பழங்கால எகிப்திலும் தந்தங்களைக் குறிக்கும் சொற்கள் இருந்தன என்றாலும் 'அப்', 'அபு' போன்ற ஒலிக் குறிப்புகளாக இருந்தன. ஆகவே, மெசொப்பொத்தேமியாவில் புழங்கிய 'பிரு / பிரி' என்ற சொல் சிந்துச் சமவெளியில் இருந்தே வந்திருக்க வேண்டுமென முடிவுசெய்தார் பஹதா.

பல திராவிட மொழிகளில், 'பிலு', 'பெல்லா', 'பல்லா', 'பல்லவா', 'பல்' என்ற சொற்கள் இடம்பெற்றிருந்தன. இவற்றில் பல யானைகளையும் குறித்தன. ஆனால், 'பிலு' என்பது எப்படி அக்கேடிய மொழியில் 'பிரு' என்றானது என்பதற்கும் விடை தேடியிருக்கிறார் பஹதா. அதாவது, பழங்கால பாரசீக மொழியில் 'ல' என்ற உச்சரிப்பு இல்லை. அதற்குப் பதிலாக 'ர' என்ற உச்சரிப்பே பயன்படுத்தப்படுகிறது.

யானையின் தந்தம் என்பது அதன் பல் என்பதால், தந்தத்தைக் குறிக்கும் "பல்", "பல்லு", "பில்லு" என்ற சொற்கள், 'பிரு / பரி என மாறியிருக்கின்றன. அதேபோல, Salvadora persica என்ற மரத்தைப் பற்றியும் குறிப்பிடுகிறார் பஹதா. அரபியிலும் வட இந்தியாவிலும் 'மிஸ்வாக்' என இந்த மரம் குறிப்பிடப்படுகிறது. இந்த மரத்தின் பாகங்கள் பற்களுக்கு நன்மை செய்யக்கூடியவை என நம்பப்படுகிறது. தற்போதும் பற்பசைகள்கூட இந்தப் பெயரில் வெளியாகின்றன.

சிந்துச் சமவெளி காலகட்டத்தில் இந்த 'மிஸ்வாக்' மரமும் 'பிலு மரம்' என்றே அழைக்கப்பட்டிருக்கிறது. அந்த காலகட்டத்தில் சிந்துச் சமவெளி பிரதேசத்தில் பல்துலக்க இந்த மரத்தின் குச்சிகள் பரவலாகப் பயன்படுத்தப்பட்டிருக்க்ககூடும் எனக் கருதுகிறார் பஹதா. தற்போதும் பாகிஸ்தான், ராஜஸ்தான், ஹரியானா போன்ற சிந்துச் சமவெளிப் பிரதேசங்களில் இந்த மரங்கள் பரவலாகக் காணப்படுகின்றன.

ஆகவே, தந்தம், யானை, பற்களுக்குப் பயன்படக்கூடிய மிஸ்வாக் மரம் ஆகியவை எல்லாமே 'பல்' என்பதைக் குறிக்கக்கூடிய சொல்லில் இருந்தே உருவாகியிருக்கின்றன. இந்த 'பல்' என்ற வேர்ச்சொல், திராவிட மொழிகளில் அனைத்திலும் பொதுவானதாக இருந்தது. 'பிளிரு' என தெலுங்கிலும் 'பல்ல', 'பிலு' என கன்னடத்திலும் யானையைக் குறிக்கும் சொற்கள் இருக்கின்றன.

சென்னைப் பல்கலைக்கழகம் 1924ல் வெளியிட்ட தமிழ்ப் பேரகராதி 'பிள்ளுவம்' என்ற சொல் யானையைக் குறிப்பதாகச் சொல்கிறது. ஆகவே, தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் 'யானை', 'ஏனுக', 'ஆன' போன்ற சொற்களால் யானைகள் குறிப்பிடப்பட்டாலும், பல்லை அடிப்படையாக வைத்த சொற்களும் யானையைக் குறிப்பிடப் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன.

பல் என்ற சொல்லில் இருந்து 'பல்லு', 'பல்லவா' போன்ற சொற்கள் உருவாகியிருக்க முடியும். ஆனால், 'பல்' என்ற சொல்லில் இருந்து 'பிள் / பில்", 'பிள்ளுவம்' போன்ற சொற்கள் எப்படி உருவாகியிருக்க முடியும்? இந்தக் கேள்விக்கு ஃப்ராங்க்ளின் சவுத்வொர்த்தின் [By Franklin Southworth] Linguistic Archaeology of South Asia புத்தகம் விடையளிக்கிறது. அதாவது, 'பல்' என்பதைக் குறிப்பதற்கான வேர்ச்சொல் 'பிள்' என்பதாகக்கூட இருக்கலாம் என்கிறார் இவர்.

மேலே சொன்ன அடிப்படைகளை வைத்துத்தான் சிந்துச் சமவெளிப் பிரதேசங்களில் தொல் திராவிட மொழிகள் பேசப்பட்டிருக்கலாம் எனக் கருதுகிறார் பஹதா. 

ஒரு மொழியின் மூலத்தைக் கண்டறிவது போன்ற ஆய்வுகளுக்கு இது மாதிரியான அடிப்படைச் சொற்களே ஆதாரமாக அமைகின்றன. தந்தம், பல்துலக்கும் குச்சி ஆகியவற்றுக்கு ஹரப்பாவில் இந்த சொல்லில் இருந்து பிறந்த சொற்களே பயன்படுத்தப்பட்டிருப்பதால், சிந்து சமவெளியில் இருந்தவர்கள் தொல் திராவிட மொழியைப் பயன்படுத்தியிருக்கலாம் என்று நம்மால் சொல்ல முடியும்" எனத் தெரிவித்தார்.

சிந்து சமவெளியில் பேசிய மொழியை ஏன் தொல் திராவிட மொழி எனக் குறிப்பிட வேண்டும்; திராவிட மொழிகளிலேயே பழைய மொழியான தமிழ் என்று அதனைக் குறிப்பிட முடியாதா என பஹதாவிடம் கேட்டபோது, "சிந்துச் சமவெளிப் பகுதியில் பேசியிருக்கக்கூடிய ஒரு மொழியை 'தொல் திராவிட மொழி' என்று குறிப்பிடுகிறோம். தற்போது பேசப்படும் திராவிட மொழிகளில் உள்ள பல தொன்மையான சொற்கள் அந்த மொழியில் இருக்கும். ஆனால், அந்த மொழி, தற்போது பேசப்படும் எந்த ஒரு மொழியாகவும் இருந்திருக்காது. ஆகவேதான் அதனைத் தொல் திராவிட மொழி என்கிறோம்" என்று விளக்கினார்.

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

பகுதி : 31 தொடரும்

464081011_10226661228659657_6531427952048366189_n.jpg?stp=dst-jpg_p180x540&_nc_cat=102&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=vl8yWSxjiakQ7kNvgGplh_t&_nc_zt=23&_nc_ht=scontent-lhr6-1.xx&_nc_gid=AKB3G1SFqGcRRLNWRy8crxQ&oh=00_AYA3VeodApGlw4QNbCSfevlljb-UDKGUPUUQWHpCnTdxgw&oe=671D1C70 464383284_10226661227739634_7673679379748265146_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=103&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=tGdIl8J8aCYQ7kNvgF5P2Jv&_nc_zt=23&_nc_ht=scontent-lhr8-2.xx&_nc_gid=AKB3G1SFqGcRRLNWRy8crxQ&oh=00_AYAnIzBYBNjKe_Ecle4wVeR_OoGgcz8uAQvyVEDdtpuk3Q&oe=671D21DD 

 

464173921_10226661227819636_1317593857101497902_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=102&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=yuR4HFG0pzgQ7kNvgEItYUM&_nc_zt=23&_nc_ht=scontent-lhr6-1.xx&_nc_gid=AKB3G1SFqGcRRLNWRy8crxQ&oh=00_AYDb-bq1zyHILxN5c1XrJh-2U1J5pju23H0TeAN6TV1Kdg&oe=671D3441  464270974_10226661227859637_4874834010978096780_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=104&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=BAgnb5G4BzMQ7kNvgErOv_H&_nc_zt=23&_nc_ht=scontent-lhr6-2.xx&_nc_gid=AKB3G1SFqGcRRLNWRy8crxQ&oh=00_AYCF6kWBh0pPGte1nh8CGQ49-IuKa3KBg-mNg19Zin3xSg&oe=671D35FC

 

May be an image of 1 person and text

 

May be an image of 1 person and text

 

May be an image of 2 people

 

May be an image of 1 person

 

464216979_10226663542317497_3012895110909683605_n.jpg?_nc_cat=100&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=HmR39ZnxML4Q7kNvgHhmiyt&_nc_zt=23&_nc_ht=scontent-lhr6-2.xx&_nc_gid=A3CAHx3I6rfmPw_eP71yRYf&oh=00_AYAATR9nez9JgQXMN-a6A8tIWDmPyARlOmmjFWD4Bl3LdA&oe=671D4448

 

Edited by kandiah Thillaivinayagalingam
  • கருத்துக்கள உறவுகள்
Posted

"தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?]" / பகுதி : 31

[4] ஆஃப்ரிக்கா


உலகிலேயே முதலாவது மனிதன் ஆஃப்ரிக்காவில் தோன்றினான்.உலகில் உள்ள மனித இனங்கள் எல்லாம், ஆஃப்ரிக்காவில் இருந்து பிரிந்து சென்றவை என்பதை முன்பு பார்த்தோம். அது மட்டும் அல்ல தமிழர்களைப் போன்ற தோற்றம் கொண்ட ஆஃப்ரிக்கர்களையும் நாம் காணமுடியும். குறிப்பாக,சோமாலியர்கள், எதியோப்பியர்கள், எரித்திரியர்கள் போன்ற இனங்களில், தமிழர்களின் முகச் சாயலைக் கொண்ட பலரை நாம் காணலாம். ஆகவே ஆஃப்ரிக்காவிற்கும் திராவிடர்களுக்கும் இடையில் ஒரு இணைப்பு உள்ளது என்பதை நாம் முற்றாக புறம் தள்ள முடியாது. உதாரணமாக எதியோபியானை காணும் ஒருவர் அவரை தமிழர் என தவறுதலாக அடையாளம் காணலாம். ஏனென்றால் தமிழர், எதியோப்பியர் இருவரினதும் சாயல் ஒரே மாதிரி இருப்பதே. சில திராவிட குழுக்கள் சில ஆபிரிக்க குழுக்களுடன் நெருங்கிய உறவு இருக்கலாம். இந்த எண்ணம் சரியா பிழையா என்பது மேலும் ஆய்வு செய்ய வேண்டியது. இப்படியான கருத்து ஒரு காலத்தில் செனேகல் [Senegal] அரசியல் வாதிகளால் ஊக்கமளிக்கப் பட்டது. அது மட்டும் அல்ல தமிழ் நாட்டின் ஒரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் க.ப. அறவாணன் அவர்களால் சில புத்தகங்கள் வெளியிடப்பட்டன. அதில் முக்கியமானது "திராவிடரும் ஆஃப்ரிக்கரும் “Dravidians and Africans” என்ற தொகுப்பு. இந்த தொகுப்பு பல படங்களை கொண்டிருப்பதுடன், அவை முருக வழிபாடு கிழக்கு ஆஃப்ரிக்காவில் இருப்பதை தெரியப்படுத்துவதுடன், அங்கு வேல் [ஈட்டி], மயில் போன்றவை தமிழ் நாடு, இலங்கையில் உள்ளவை போன்று ஒத்து போகிறது என்பதையும் வெளிப்படுத்துகிறது.

ஒரு குறிப்பிட்ட இடத்தில் வசித்து, ஒரே ஆரம்ப மொழியை பேசி, ஒருமித்த கலாச்சாரம், கருத்தாக்கம், மரபு, நம் பிக்கை, ஆகியவற்றை பின் பற்றும் ஒரு குழுவை தான் இனம் என்பார்கள். இப்படி ஆரம்பித்த இனம், பிறகு வெவ் வேறூ பாதைகளை தேடி பிரிந்து போனாலும், அவர்கள் ஆரம்பத்தில் ஒரே குடும்பமாக இருந்ததால், கடைசி வரை அவர்கள் அதே இனமே. ஆகவே தான் தமிழர், தெலுங்கர், மலையாளி, துலு, கன்னடக்காரர்,போன்றோர்கள் அவர்களுக் கிடையில் இப்ப உள்ள மேலோட்டமான பிரிவினைகளை தாண்டி, அனைத்து திடராவிடமொழி பேசுபவர்களையும் ஒரே கூட்டம் அல்லது இனம் என்கிறோம். இதற்கு காரணம் இவரகள் எல்லோரும் ஆரம்ப காலத்தில் ஒரே மொழியை பேசி, ஒரே இடத்தில் வசித்து வந்த ஒரே குடும்பத்தவர் என்பதால் ஆகும்.

ஆகவே நான்காவது கருதுகோளான ஆதியில் ஆஃப்ரிக்காவில் இருந்து தென்னிந்தியா வந்தோரின் வழித்தோன்றல்களே தமிழர் என்றால், தமிழருக்கும் ஆஃப்ரியருக்கும் இடையில் பல கோணங்களில், அதாவது மொழி, பண்பாடு, மரபு, நம்பிக்கை, போன்றவற்றிற்கு இடையில் ஒரு அடிப்படை ஒற்றுமை இருக்கவேண்டும். மேலும் அவர்கள் ஆஃப்ரிக்காவில் இருந்து தென் இந்தியா வந்தார்கள் என்பதற்கும் சரித்திர சான்றுகள் வேண்டும். ஏன் என்றால் அவர்கள் குமரிக்கண்டத்தில் இருந்தோ அல்லது மெசொப்பொதாமியா அல்லது சிந்து சம வெளியில் இருந்தோ, மீண்டும் ஆஃப்ரிக்கா போயிருக்கலாம்? 

பெரும் அளவு இவை பற்றி முழுமையாக ஆராயப்படவில்லை என்றாலும், அங்கொன்று இங்கொன்றாக சிலர் தமது கருத்துகளை / சில சான்றுகளை சுட்டிக்காட்டி உள்ளார்கள். உதாரணமாக "The story of India" by Michael Wood ,"Dravidians and Africans" by K.P. Aravanan, கலையரசனின் "நாம் கறுப்பர்! நமது மொழி தமிழ்! நம் தாயகம் ஆப்பிரிக்கா!",மேலும் Runoko Rashidi அவர்களால் எழுதப்பட்ட பல கட்டுரைகள் போன்றவைகள் ஆகும்.

தென் இந்தியாவும் மற்றும் செனெகல் மாலி, சூடான், எதியோபியா, சோமாலியா போன்ற கிழக்கு ஆஃப்ரிக்க நாடுகள் ஒரே நில நேர்க்கோட்டில் [same latitude] இருக்கிறது. அது மட்டும் அல்ல இந்தியா சமுத்திரம் மட்டுமே அவையை பிரிக்கின்றன. மேலும் மிக பண்டைய காலத்தில் இந்தியா உப கண்டம் ஆஃப்ரிக்காவுடன் இணைந்து இருந்தது என புவியியல் வல்லுநர் கூறுகின்றனர்.

அது மட்டும் அல்ல, தமிழ் செவி வழிக்கதை / பழங்கதை அப்படி ஒன்று இருந்ததையும் அங்கு செழித்து ஓங்கிய நகரங்கள் கடலில் மூழ்கியதையும் குறிப்பிடுகிறது. இது, இந்த பெரும் வெள்ளத்தின் தெளிவற்ற நினைவு தான் சங்க பாடலில் ஒரு மேல்விளக்கமாக சிலப்பதிகாரம் போன்றவற்றில் தரப்பட்டுள்ளது என ஊகிக்கலாம்.

இந்தியாவில் இருந்து மலேசியா வரை நீண்டு இருந்த வெப்பமண்டலம் அல்லது உப வெப்பமண்டலத்தில், குறிப்பாக ஆஃப்ரிக்க கண்டத்தில் உயர் விலங்கினமான மனித குரங்கினம் பரிணமித்தது என்பார்கள்.

மொகஞ்சதாரோ ஹரப்பா பகுதிகளில் கி மு 3000-4000 ஆண்டுகளுக்கு முன்பே திராவிடர்கள் அதியுயர் நாகரிகம் அடைந்து இருந்தனர் என்று முன்பு நாம் பார்த்தோம். ஆகவே அவர்கள், இந்தியாவிற்கு வெளியில் இருந்து வந்தவர்கள் என்றால் கட்டாயம் வட - மேற்கு எல்லைப் புறத்தில் இருந்து வந்திருக்கலாம் என்று நாம் ஊகிக்கலாம். இது உண்மையாக இருக்கும் பட்சத்தில், அவர்கள் எந்த  வட - மேற்கு பகுதியில் இருந்து வந்தார்கள் என்ற கேள்வி இயல்பாக எழுகிறது. மேலும் இந்த திராவிடர்களின் எந்த உறவினர், குருதித் தொடர்புடையோர் அங்கு விடுபட்டனர்? அல்லது அவர்கள் வேறு திசை நோக்கி புலம் பெயர்ந்தனரா? மற்ற இனத்தவர்களின் தாக்குதல்களால் இப்ப முற்றாக அழிக்கப்பட்ட  அல்லது இனஅழிவு செய்யப்பட்ட பண்டைய இனங்களான சுமேரியன், காக்கேசியன், எலமைட் மொழி குடும்பம், பாஸ்குவேஸ் (Basques) போன்றவற்றுடன் அல்லது கருநிறமுடைய நீகிரோ-ஆஃப்ரிக்கருடன் இந்த சிந்து சம வெளி மக்கள் தொடர்புடையவர்களா? அப்படியாயின் இவர்களில் எவர்களின் வழித்தோன்றல்கள் இப்ப இந்தியாவில் மட்டும் தப்பி பிழைத்து இருக்கின்றன? இப்படி பல கேள்விகள் எழலாம்.

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

பகுதி : 32 தொடரும்

464268137_10226706611554201_340527030919180326_n.jpg?_nc_cat=100&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=2s-yHRaiQjsQ7kNvgHB6YUR&_nc_zt=23&_nc_ht=scontent-lhr6-2.xx&_nc_gid=AF5-nq-ZeBjYXFombLw3tWA&oh=00_AYDIhuz4rLGayG6ZMopzhlMDstGhbkKlWTTrWi43ATIs0A&oe=67212FA0 464418159_10226706611474199_7634058802339519631_n.jpg?_nc_cat=105&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=_MstE0hec8EQ7kNvgEoVjZ7&_nc_zt=23&_nc_ht=scontent-lhr6-2.xx&_nc_gid=AF5-nq-ZeBjYXFombLw3tWA&oh=00_AYCQj6tdgg7oasVIqv9E9uTc6Uo61GXWc70mCV-gKcjCOw&oe=672110FC 464575400_10226706611514200_6824153953454971550_n.jpg?_nc_cat=102&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=kORkg0YotJwQ7kNvgHgVnII&_nc_zt=23&_nc_ht=scontent-lhr6-1.xx&_nc_gid=AF5-nq-ZeBjYXFombLw3tWA&oh=00_AYBiESeq-Su8ELosLn2eRioREBEWTFZbc8dj4NbOenNIhQ&oe=67211E5D


 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

"தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?]" / பகுதி : 32 

 

எப்படி திராவிடர்களை தென் இந்தியாவின் சுதேசிகள் அல்லவென்றும் அவர்கள் இந்தியாவின் வட-மேற்கு எல்லைப் புறத்தில் இருந்து வந்திருக்கலாம் என்று கருதினார்களோ, அப்படியே கருநிறமுடைய நீகிரோ ஆஃப்ரிக்கரும், ஆஃப்ரிக்காவில் உயர் விலங்கினமான மனித குரங்கினமாக பரிணாமித்து இருந்தாலும், அவர்கள் ஆஃப்ரிக்கா சுதேசிகள் அல்லவென்றும் கருதுகிறார்கள். குறைந்தது எழுபதாயிரம் வருடங்களுக்கு முன்னர், மனித இனம், ஆஃப்ரிக்க கண்டத்தில் இருந்து உலகின் பல பாகங்களுக்கும் பரவிச் சென்று, குடியேறி வாழ்ந்து வந்தது என்றும். மனித இனம், வெள்ளையினம், கருப்பினம், சீன இனம், திராவிட இனம் என்றெல்லாம் வேறுபட்ட உடல் தோற்றங்களைப் பெறுவதற்கு பல்லாயிரம் வருட கால பரிணாம வளர்ச்சி காரணமாக இருந்திருக்கலாம் என்றும்  கூறுகிறார்கள்.

இன்றைய ஈராக்கில் இருந்த பாபிலோனிய நாகரிகம் பற்றி பலர் அறிந்திருக்கிறார்கள். விவிலிய நூலில் அது பற்றிய குறிப்புகள் நிறைய உள்ளதால், அது பிரபலமாக எல்லோருக்கும் தெரிந்திருந்தது. அதே ஈராக்கிய பிரதேசத்தில், பாபிலோனியாவுக்கு முன்பிருந்தது சுமேரிய சாம்ராஜ்யம் ஆகும். சுமேரிய சாம்ராஜ்யத்தின் குடி மக்கள் கறுப்பினத்தவராக இருந்திருக்க வேண்டும். ஆஃப்ரிக்கர்கள், திராவிடர்களாக இனம் மாறிய காலகட்டமும் அதுவாக இருக்கலாம். அரேபிய தீபகற்பத்திலும் அந்த இனம் பரவி வாழ்ந்திருக்கின்றது. அங்கிருந்து மீண்டும் சிலர் ஆஃப்ரிக்காவுக்கு புலம் பெயர்ந்து சென்றது என்கிறார்கள். மத்திய தரை கடல் மக்கள் திரும்பி ஆஃப்ரிக்காவிற்கு வரும் முன்பு, குள்ள இனத்தவர்கள் [Pygmies], காட்டு வாசிகள் [Bushmen] ஆஃப்ரிக்கா முழுவதும் பரவி இருந்ததாகவும் கருதுகிறார்கள். பொதுவாக ஏற்றுக்கொள்ளப் பட்ட கருத்து கி மு 8000-3000 இடைப்பட்ட காலத்தில் மேற்கு ஆசிய பெரும் பகுதியில், நைல், சிந்து ஆற்று வரை Proto-Mediterranean, Mediterranean  and Hamite.போன்ற கருமையான மக்கள் இருந்தார்கள் என்பது ஆகும்.

செமிடிக் மக்களின் அழுத்தம் காரணமாக, ஒட்டுநிலை மொழி ஒன்றை பேசிய முன்னைய குடிகளான சுமேரியர்கள், அங்கிருந்து கலைந்து கிழக்கு பக்கமாக இந்தியா நோக்கியும் மேற்கு பக்கமாக ஆஃப்ரிக்கா நோக்கியும் சென்றனர். இன்றைய திராவிட மொழி பேசுபவர்களும் நீக்ரோ - ஆஃப்ரிக்க மொழி பேசுபவர்களும் இந்த முன்னைய கூட்டத்தை பிரதிநிதிபடுத்துவதுடன் தங்களது புதிய பகுதிகளிலும், அவைகளுக்கு இடையில் நீண்ட தூர இடைவெளி இருப்பினும் பல மூல மொழி அம்சங்களை தொடர்ந்து வைத்திருந்தார்கள். மேலும் கலைந்து போகாமல் அங்கேயே தங்கிய மற்றொரு கூட்டம், காலப்போக்கில் வென்ற கூட்டத்துடன் முற்றிலும் அல்லது Hamite போல் பகுதியாக ஒன்றிப் போயினர், இதனால் தமது மொழியியல் பாரம்பரியத்தை, உரிமையை அவை இழந்தனர் அல்லது காக்கசு[Caucasus] பிரனீசு [Pyrenees ] போன்ற தொலைதூர மலை பகுதிகளில் அடைக்கலம் புகுந்து தமது மொழி அம்சங்களை காக்கேசிய, பாஸ்க் போன்ற மொழிகளில் [Caucasian, Basque] பாதுகாத்தனர். ஆகவே அவர்களின் சந்ததியான திராவிட மொழி பேசுபவர்களுக்கும் நீகிரோ - ஆஃப்ரிக்க மொழி பேசுபவர்களுக்கும் இடையில் கட்டாயம் ஒரு மொழியியல், பண்பாட்டு சிறப்பியல்பு இருக்க வேண்டும். இதை ஆராயும் போது, அவைகள் ஒரே கூட்டத்தில் இருந்து பிரிந்து சென்றாலும், நெடுந்தொலைவில் நெருங்கிய உறவு இல்லாது அவை நீண்ட காலத்திற்கு வளர்ச்சி அடைந்து, இன்றைய நிலை அடைந்ததையும் கவனத்தில் எடுக்க வேண்டும்.

பண்டைய தாய்வழி சமுதாயம் இன்னும் திராவிடர்களிடம், குறிப்பாக கேரளா மக்களிடமும் தெற்கு கரையோர கன்னட மக்களிடமும் இருக்கிறது. அதுபோல கருநிறமுடைய நீகிரோ ஆஃப்ரிக்கரும் தமது வழிவழிச் சொத்தை [மரபு வழி முதியத்தை] பெண் வழி மூலமே கைமாற்றிக் கொடுகிறார்கள். குடியேற்றவாத ஆட்சிக் காலத்தில் யாழ்ப்பாணத்துக்கான மரபுவழிச் சட்டமாக உருவான தேசவழமைச் சட்டத்தின் தொடக்கத்தின் அடிப்படைகள், பிராமணியச் செல்வாக்குக்கு முந்திய திராவிட மரபான தாய்வழி மரபை அடிப்படையாகக் கொண்ட, மலபார் பகுதியின் மருமக்கட்தாயம் [மருமக்கதாயம் அல்லது தாய் வழி வாரிசுரிமை (Matrilineal System of Inheritence) என்பது 19 மற்றும் 20ஆம் நூற்றான்டுகளில் கேரள மாநிலத்தின் நாயர் சமுதாய அமைப்பினர் கடைபிடித்து வந்த வாரிசுரிமை முறையாகும்.] எனப்படும் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டது என ஆய்வாளர்கள் தமது கருத்துக்களை முன்வைத்துள்ளனர். ஆனாலும், பெண்களுடைய வழிவருகின்ற சீதனச் சொத்து தொடர்பில் கணவனின் சம்மதம் இன்றிப் பெண் தீர்மானம் எடுக்கக்கூடிய வழி இல்லாது இருப்பதானது அக்காலத்தியேயே யாழ்ப்பாணச் சமுதாயம் ஆணாதிக்கச் சமுதாயமாக நிலை பெற்றுவிட்டதைக் குறிக்கிறது.

நாக வழிபாடு, தாய் தெய்வ வழிபாடு, போன்றவையில் ஒரு ஒற்றுமை காணப்படுகிறது. நாக வழிபாடு ஒரு முக்கிய சிறப்பியல்பாக இந்தியா, இலங்கை  திராவிடரிடமும்  நீக்ரோ - ஆஃப்ரிக்க போன்ற மக்களிடமும் காணப்படுகிறது. சிந்துவெளி நாகரிகக் கால கண்டுபிடிப்புகளில், முக்காலி மீதுள்ள கிண்ணமும் அருகில் காணப்படும் நாக வடிவமும் நாக வழிபாட்டின் தொன்மைக்குச் சான்றாகும். அத்துடன் தென் இந்தியாவில் பாம்பு வழிபாடு அம்மன் [தாய்] வழிபாட்டுடன் இணைந்து நடைபெறுகிறது. சர்ப்ப காவு எனப்படும் நாக பீடத்தில் அல்லது ஒரு புதரில் அல்லது மரங்களும் புதர்களும் அடர்த்தியாக வளர்ந்த ஒரு பகுதியில் கல்லாலான பாம்பு சிலைகள் வைத்து பொதுவாக அங்கு வழிபடுகின்றனர்.

இந்த திராவிட, நீக்ரோ - ஆஃப்ரிக்க சமுகத்தில் தாய் தெய்வ வழிபாடு ஒரு முக்கியத்துவம் பெற்றிருந்தன. அங்கு பல பெண் தெய்வங்கள் இருந்தன. என்றாலும் பிற்காலத்தில் இந்திய - ஐரோப்பியர் [Indo - European] குடுப்பத்தை சேர்ந்த கிரேக்கரும் ஆரியரும் மனிதவுருவகம் கொடுக்கப்பட்ட இயற்கை சக்திகளை ஆகாயத்தில் வாழும் கடவுளாக கொண்டுவந்தார்கள். இது திராவிடர்களின் பூமியில் வசிக்கும் தாய் தெய்வத்திற்கு முற்றிலும் மாறுபட்டது. இந்த திராவிடர்களின் கோட்பாடுகளில் இருந்தே சக்தி, சிவா என்ற எண்ணம் உருவானது. மேலும் இந்த தாய் தெய்வம் கருத்த கடவுளாகவே இந்தியாவில், இலங்கையில் [காளி] காணப்படுகிறது. இந்தியாவில் தாய் தெய்வத்திற்கும் சிவாவிற்குமான திருமண சடங்கு, பண்டைய சுமேரியாவில் தாய் தெய்வத்திற்கும் சந்திர கடவுளுக்கும் இடையில் நடைபெறும் சில திருமண சடங்குடன் ஒத்து போகின்றன. எப்படியாயினும் பின் காளி, துர்க்கை போன்ற திராவிடர்களின் தெய்வங்கள் எல்லாம் பார்வதியின் அவதாரங்களாக மாற்றப்பட்டன. பார்வதியை சக்தியாக்கி, சிவனின் மனைவியாக்கினார்கள். அதே போல, தாய் தெய்வ வழிபாடு ஆஃப்ரிக்கா முழுவதும் பொதுவாக இருந்தது. என்றாலும் அதன் பெயர் இடத்திற்கு இடம் மாறுபட்டு இருந்தன. கானாவில் (Ghana) அசாந்தி (Ashanti) மக்கள் பெண் தெய்வம் 'Nyame' யையும் ஆக்கான் (Akan) மக்கள் பெண் தெய்வம் 'Ngame'' யையும் வணங்குகிறார்கள்.

தமிழகத்தில், தாய் தெய்வமான கொற்றவையின் மகனாக கருதப்படும் முருகனை வழிபாடு செய்தல் தொன்மையானது. இதனைச் சங்க கால இலக்கியமான திருமுருகாற்றுப்படை, பரிபாடல், என்பன மிகச் சிறப்பாக கூறுகின்றன. ஆஃப்ரிக்காவில் கென்யாவில் [Kenya] வாழும் கிகுயு Kikuyu] இன மக்கள் முருகன் போன்ற ஒன்றை, தெய்வமாக, முழு முதற் கடவுளாக, வழிபடுகின்றனர். ஏறக்குறைய 25 ஆஃப்ரிக்க பழங்குடி இனங்கள் இந்த முழுங்கு [Mulungu] அல்லது முருங்கு [Murungu,] கடவுளை வழிபடுகிறார்கள். சிலர் இதை மலைக்கடவுள் என்று  சொல்லுகிறார்கள், வேறு சிலர் போர்க்கடவுள் என்று  சொல்லுகிறார்கள், முருங்கு கடவுள் பெயர் கூட ஒரே மாதிரி இருக்கிறது.மேலும் தமிழர்களின் முருகன் மலைகளில் குடியிருப்பதுடன் அவரும் ஒரு போர் கடவுள் என்பது குறிப்பிடத்தக்கது. கென்யா மலை [Mount Kenya] கிகுயு மக்களுக்கு [The Kikuyu (also known as Agikuyu) are a central Bantu community. They share common ancestry with the Embu, Kamba, Tharaka, Meru and Mbeere. Traditionally they inhabited the area around Mount Kenya, including the following counties: Murang'a, Nyeri, Kiambuu, Nyandarua, Kirinyaga and Nakuru.] புனிதமானது. இதை இவர்கள் கிரி எங்கை [kirinyaga எங்கை கடவுளின் மலை] என்று அழைக்கின்றனர். தமிழிலும் கிரி என்பது மலையை குறிக்கும். [நீல கிரி - blue mountain ]

தமிழில் அம்மா என்ற சொல் குப்பத்து [கிராம] பெண் தெய்வத்தையும் அவள் கொடுக்கும் அல்லது அவள் அருளால் குணமடையும் அம்மை நோயையும் [small-pox] குறிக்கிறது. இந்த அம்மா தெய்வத்தின் ஒத்த தன்மையை பிரெஞ்சு சூடானில் [மாலி] உள்ள டோகோன் [Dogon] இனத்தவர்களின் உட்குழுவான அம்மா சமய பிரிவினரிடம் [The Amma sect] காணலாம். இவர்கள் அம்மா என்ற பெண் படைப்பு தெய்வத்தை வழிபடுவதுடன் அம்மாவிற்கு தினைப் பொங்கலும் [boiled millet] பலிபீடத்தில் படைக்கிறார்கள் [The celebration is once a year and consists of offering boiled millet on the conical altar of Amma, colouring it white]. அத்துடன் மேற்கு ஆஃப்ரிக்கா நாடுகளில் உள்ள கோயில் அமைப்பு கேரள தமிழ்க் கோயில் அமைப்பை ஒத்திருக்கின்றது. மேலும் ஒரு மத்திய திராவிட மொழியான கோண்டி பேசும் மக்கள் இன்னும் கிழக்கு ஆஃப்ரிக்காவில் அமைந்துள்ள சோமாலிலாந்து [Somaliland,] கல்லாஸ் [கிழக்கு ஆஃப்ரிக்க ஹமிடிக் இனக் குழுவினர்] மக்களைப்போல வீடு கட்டுகிறார்கள் [The Gonds of Central India, a Dravidian tribe, even now erect the houses similar to those erected by the Gallas [The Gallas are a Hamitic people of East Africa] of Somali land.]. 


மேலும் சோமாலிய மொழி - தமிழ் மொழிகளுக் கிடையில் சில ஒற்றுமையும் காணப்படுகிறது.


சோமாலிய மொழி - தமிழ் மொழி


பரஸ் -                       பரி (குதிரை)
ப(B)ரிஸ் -                 அரிசி
ஆப்பா -                    அப்பா
யரான் -                    சிறுவன்
ஹிந்டிஸ் -              சிந்துதல்
அலோல் -               அல்குல் (பெண்குறி)
குன் -                        உண்   


இந்த மொழிகளை இப்படி ஆராய்ந்து கொண்டே போனால், இது போன்ற நிறைய ஒற்றுமைகளை மேலும் கண்டுபிடிக்கலாம்?

மூல கூட்டமான திராவிட - சுமேரியர் கலைந்து வெவ்வேறு திசையில் இந்தியாவை நோக்கியும் ஆஃப்ரிக்கா நோக்கியும் சென்ற பின்பும் அவர்கள் தங்களுக்கிடையில் தொடர்புகளை கடல் வழியாக பேணி பாதுகாத்து இருந்தார்கள் என நாம் ஏற்று கொள்ளலாம். ஆரியர்களின் வருகையால் அல்லது இயற்கையின் சீற்றத்தால் அல்லது இரண்டும் கலந்த ஒரு நிலையால் சிந்து சம வெளி மக்கள் கூட்டம் அழிந்து மேற்கு கரையோரத்தால் தென் இந்தியா வந்தார்கள் எனப்படுகிறது. சிந்து சம வெளி மக்களின் கடலோடு இணைந்த வாழ்க்கை நன்கு அறிந்ததே. அதே மாதிரி தென் இந்தியாவின் திராவிட அரசர்கள் கடல் வழியாக மெசொப்பொத்தேமியா, அரேபியா, எகிப்து மற்றும் கிழக்கு ஆஃப்ரிக்காவுடன் தொடர்புகள் வைத்திருந்தார்கள். எகிப்து வணிகர்கள் இந்தியா கடலில் வியாபாரம் செய்தார்கள். தொல்பொருள் அகழ்வு ஆராச்சி இதை உறுதி படுத்துகின்றன.

நான் இந்த தொகுப்பை எல்லா சிறந்த அறிஞர்களுக்கும் ஒரு வேண்டு கோளுடன் நிறைவு செய்கின்றேன்.அதாவது இந்த உயர் நோக்கமுள்ள ஆய்வில் எல்லோரும் ஒன்று சேர்ந்து தமிழ் மக்களினதும் தமிழ் மொழியினதும் மகிமையை ,பெருஞ்சிறப்பை, புகழை சான்றுகளுடன் ஒருமித்த கருத்துடன் உலகத்திற்கு வெளி கொண்டு வரும்மாறு கேட்டுக்கொள்கிறேன். 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

பகுதி : 33 தொடரும்


[ இணைத்த வரைபடத்தில் உள்ள பாரசீகம் (Persia) என்ற இடத்தில்தான் சுமேரியா, அசீரியா, பாபிலோனியா, பாரசீக நாகரிகங்கள் தோன்றி வளர்ந்தன. பண்டைய மேற்கு தமிழகத்தில் (கேரளா), இன்றைய கொச்சி அருகே, அன்று இருந்த முசிறியும், வரை படத்தில் தொட்டுக் காட்டப்பட்டுள்ளன.]

465023270_10226830924301942_8997449224232233987_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=105&ccb=1-7&_nc_sid=127cfc&_nc_ohc=FE8J13r4r-gQ7kNvgHdyUSh&_nc_zt=23&_nc_ht=scontent-lhr6-2.xx&_nc_gid=AjKeIyDNu3O6BBzDj7lvIe_&oh=00_AYBi-kj5bYkA68GIdfHE7v8oREtP-Uv4q8S5wicfzV2u3g&oe=67293501 465083613_10226830923741928_1453996829252393162_n.jpg?_nc_cat=105&ccb=1-7&_nc_sid=127cfc&_nc_ohc=81ZdRRxvDgYQ7kNvgEypIQN&_nc_zt=23&_nc_ht=scontent-lhr6-2.xx&_nc_gid=AjKeIyDNu3O6BBzDj7lvIe_&oh=00_AYCnJOjapY_N7RCpBJvcB_gN5amhdJ-jE9hasp8xtHhB8Q&oe=67294AA0

  • கருத்துக்கள உறவுகள்
Posted

"தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?]" / பகுதி : 33 


முடிவுரை

திராவிடர்களின் தோற்றுவாய், ஆஃப்பிரிக்காவுடன் அவர்களின் தொடர்பு, ஆரியர்களின் இந்தியா வருகை, தெற்கு இந்தியாவிற்கு அவர்களின் [திராவிடர்களின்] குடிபெயர்வு பற்றி இன்று பல கோட்பாடுகளும் மற்றும் ஆய்வுகளும் விளக்கம் அளிகின்றன. அந்த விளக்கம் மூலம், திராவிடர்கள் சிந்து சம வெளியின் ஆரம்ப நிறுவனர் என்பதையும், இந்தியா உப கண்டத்தின் தொல்குடி மக்கள் இவர்களே என்பதையும், இவர்களின் மூலத்தை மூல-ஈலமைட்டு, சுமேரியா, மூல-சஹாராவில் [Proto-Elamite, the Sumerian, the Proto-Saharan] தேட வேண்டும் என்பதையும், எடுத்து கூறுகிறது. எல்லா கோட்பாடுகளும் ஆய்வுகளும் அவை எந்த விளக்கத்தை கொடுத்தாலும் எல்லாம் திராவிடர் ஒரு கம்பீரமான திறமையான இனம் எனபதில் ஒன்றாய் உள்ளன.

ஆஃப்பிரிக்காவுடனான திராவிடர்களின் தொடர்பு இலகுவில் நிராகரிக்கக் கூடியது அல்ல, அது மட்டும் அல்ல அதில் ஆதாரம் இல்லாமலும் இல்லை. கோட்ப்ரே ஹிக்கின்ஸ், தனது Anaclypsis என்ற முதன்மை ஆக்கத்தில் [a lengthy two - volume treatise written by religious historian Godfrey Higgins, and published after his death in 1833] ஹெரோடோடஸ் [Herodotus] என்ற கிரேக்க வரலாற்று அறிஞரின் கதை ஒன்றை எடுத்து கூறுகிறார். அங்கு கருப்பு இனத்தவர்களின் நாட்டிற்கான ஹெரோடோடஸின் பிரயான அனுபவத்தை கூறும் போது, "ஹெரோடோடஸ் கிரேக்க நாட்டிற்கு திரும்பிய பின் அவரை சூழ்ந்த மக்கள் அவரை பார்த்து எங்களுக்கு எதியோப்பியா என அழைக்கப்படும் கருப்பு இன மக்கள் வாழும் அந்த சிறந்த பெரும் நாட்டைப் பற்றி கூறுங்கள் எனக் கேட்டதற்கு, ஹெரோடோடஸ் பதில் அளிக்கும் போது, அங்கு இரண்டு பெரும் சிறப்பு வாய்ந்த எதியோப்பியா நாடுகள் உண்டு என்றும், ஒன்று இந்தியாவிலும் மற்றது எகிப்திலும் என்றார்" என குறிப்பிட்டு உள்ளார். 

ஆஃப்பிரிக்கா கண்டத்திலும் தென் கிழக்கு ஆசியாவின் பெரும் பகுதியிலும் பரவியிருந்த இந்த கருப்பு மக்களின் சிறப்பு மிகுந்த நாகரிகத்தினை ஒன்றாக பார்க்கும் பயனிகளினதும் வரலாற்றாசிரியர்களினதும் குறிப்புகளில் இது முதலாவதும் அல்ல, இறுதியும் அல்ல. திராவிடர்கள் பொதுவாக கருப்பு நிற உடல் கட்டமைப்பையும் கருத்த முடியையும் கண்ணையும் பெரிய நெற்றியையும் கொண்டு உள்ளார்கள். இப்படி யாக ஆஃப்பிரிக்கருடன் ஒத்த உடல் கட்டமைப்பை, தோற்றத்தை திராவிடர்கள் கொண்டு இருப்பதால், இவர்கள் ஆஃப்பிரிக்காவை தோற்றுவாயாக கொண்டவர்கள் என கருதுகிறார்கள். 

என்றாலும் உடல் பண்பின் ஒற்றுமைகள் எல்லா நேரமும் ஒரு நெருங்கிய தொடர்பை காட்டாது. ஏனென்றால், ஒரு இனத்தின் தோலின் நிறம் சூரிய ஒளியின் பிரகாசமான நிலைமைக்கு ஏற்றவாறு காலப்போக்கில் மாற்றம் அடைகிறது என நவீன மரபியலாளர்கள் [Modern geneticists] பரிந்துரைகிறார்கள். இந்த உலகில் உள்ள மனித இனங்கள் மூன்றாக வகைபடுத்தப்பட்டுள்ளன. ஒன்று காக்கேசியன் [Caucasian] எனும் வெள்ளையினம், இரண்டாவதாக மங்கோலியன் [Mongolian] எனும் மஞ்சள் இனம், மூன்றாவதாக நீக்ராய்ட் [Negroid] என்கிற கருப்பினம். மேற்கண்டவாறு மனித இனப்பாகுபாடு இருப்பினும், தற் காலத்தில் இனக்கலப்பு ஏற்பட்டுள்ளது. இனத்துக்கு இனம் கண், வாய், மூக்கு ஆகியவற்றின் அமைப்பு மாறுபட்டு உள்ளது. தலை அமைப்பும் மயிரிழை அமைப்பும் கூட வேறுபட்டுள்ளன. பொதுவாக நம்மை கருப்பினத்திற்கு கீழ் ஆஸ்ட்ராலாய்ட் [Australoid] என்று துணை இனமாக பிரித்துக்காட்டுகின்றனர். 

உலக மக்கள் அனைவரும் ஆஃப்பிரிக்காவில் இருந்து வந்தவர்களே. காலப்போக்கில் அந்ததந்த காலநிலைக்கு ஏற்ப பல்லாயிரம் வருட கால பரிணாம வளர்ச்சி காரணமாக வேறுபட்ட உடல் தோற்றங்களை, தோல் நிறத்தை தழுவிக் கொண்டது. இதனால் மனித இன மானது வெள்ளையினம், கருப்பினம், சீன இனம், திராவிட இனம் என்றெல்லாம் வேறுபட்டன. திராவிடர்களின் ஆப்பிரிக்கன் ஒத்த தன்மை இரண்டு இடங்களிலும் நிலவிய ஓரளவு ஒரே விதமான கால நிலையின் விளைவாகும். அது மட்டும் அல்ல செனிகல், மாலி, நைகர், சாட், சூடான், எதியோப்பியா, சோமாலியா போன்று தென் இந்தியாவும் அதே அட்சரேகையில் [latitude] இருப்பதும் குறிப்பிடத்தக்கது. 

மேலும் இதை விட ஆஃப்பிரிக்காவின் கிழக்கு கரையையும் தென் இந்தியாவையையும் பிரிப்பது இந்தியப் பெருங்கடல் அல்லது இந்து சமுத்திரம் மட்டுமே. மேலும் இந்தியா உப கண்டம் கிழக்கு ஆஃப்பிரிக்காவுடன் முன்னர் இணைக்கப்பட்டு இருந்ததாக புவியியலாளர்கள் [geologists] முன் மொழிகிறார்கள். கருத்த ஆஃப்பிரிக்கர்களினதும் திராவிடர்களினதும் மொழி ஒற்றுமை பல அறிஞர்களால் அடையாளம் கண்டு கொள்ளப்பட்டுள்ளது. இந்த மொழி ஒற்றுமை நவீன ஆஃப்பிரிக்க மொழியில் மட்டும் இன்றி பண்டைய எகிப்து மொழியிலும் காணப்பட்டுள்ளது. உதாரணமாக, கலாநிதி  க.ப.அறவாணன், கலாநிதி கிள்ய்டே அஹமத் வின்டர்ஸ், கலாநிதி  U. P. .உபத்யாய [Dr Aravaanan, Dr Clyde Winters, Dr. U. P.  Upadhyaya] போன்றோர்கள் ஆஃப்பிரிக்கர்களுக்கும் திராவிடர்களுக்கும் உள்ள தொடர்பை பற்றி விரிவாக எழுதியுள்ளார்கள். என்றாலும் இவர்கள் அனைவரும் 1970 ஆண்டளவில் தான் எழுதி உள்ளதுடன் இவர்கள் எவருமே மரபியலாளர்கள் அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது. 

மேலும் நைகர் - கொங்கோ குடும்பத்தைச் சேர்ந்த ஆஃப்பிரிக்க மொழிகளில் [Niger - Congo family of languages] இருந்து திராவிட மொழி தோன்றியதாக ஆஃப்பிரிக்க - திராவிட கருது கோள் வாதாடுகிறது. ஆகவே திராவிட பண்பாட்டுடன் தொடர்புடைய பெரும்பாலான கலாச்சார மற்றும் தொழில்நுட்பங்கள் ஆஃப்பிரிக்காவை மூலமாக கொண்டவை என்கிறது. இதனால் சில ஆய்வாளர்கள் இந்தியர்களை, இந்தோ - ஆஃப்பிரிக்கன் [Sudroid] இனம் என அழைக்கிறார்கள். செனிகல் ஜனாதிபதி லெப்போல் சேடர் செங்கோர் [Leopold Sedar Sengkor], உலகத் தமிழாராய்ச்சி நிறுவன கருத்தரங்கில் 23ம் திகதி மே மாதம்,1974 விரிவுரை நடத்தும் போது, அவர் தொல்பொருள் ஆய்வாளர்கள் மற்றும் முந்தய வரலாற்று அறிஞர்களை நோக்கி இந்து சமுத்திரம் மனித இனம் தோன்றுவதற்கு முன்பே தோன்றி இருந்தால் ஒழிய மற்றும் படி கிழக்கு ஆஃப்பிரிக்காவிற்கும் தென் இந்தியாவிற்கும் இடைப்பட்ட இந்து மாக்கடலில் கடற்தள ஆராய்ச்சி செய்து அங்கு புதைந்து கிடைக்கும் மர்மத்தை வெளிக்கொண்டு வரவேண்டும் என்று வேண்டு கோள் விடுத்தார். இது அதிகமாக கடற்கோள் மூலம் கடலின் அடியில் மூழ்கிய ஆஸ்திரேலியாவில் தொடங்கி தென்னாஃப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்ட லெமூரியா அல்லது குமரி கண்டம் என  இலக்கியங்களில் கற்பனையாகவோ சாட்சியாகவோ கூறப்படும் ஒரு நீண்ட நிலப்பரப்பை அவர் குறிப்பிட்டு இருக்கலாம் என எண்ணத் தோன்றுகிறது. 

மனித இனத்தின் கதை எமது மரபணுக்களில் குறியீட்டு சொல் [code word] மூலம் எழுதப்பட்டுள்ளது. மரபணு (gene) என்பது ஒரு உயிரினத்தின் பாரம்பரிய இயல்புகளை சந்ததிகளினூடாக கடத்தவல்ல ஒரு மூலக்கூற்று அலகாகும். இனப்பெருக்கத்தின் பொழுது பெற்றோர்களிடமிருந்து சந்ததிகளுக்கு மரபணுக்கள் கடத்தப் படுகின்றன. மரபுப் பண்புகளுக்கு மரபணுதான் காரணம் என்பதும் குறிப்பிடத்தக்கது. மரபணு திடீர்மாற்றம் (Genetic mutation) என்பது மரபணுத்தொடரில் ஏற்படும் சிறிய அல்லது பெரிய அளவிலான மாற்றங்களைக் குறிக்கும். இது மரபணு விகாரம் எனவும் அழைக்கப்படுகின்றது. மற்றும் மரபியல்படி, மரபணுத்தொகை (Genome) என்பது ஒரு உயிரினத்தின் முழுமையான பாரம்பரியத் தகவல்களின் தொகுப்பைக் குறிக்கின்றது. இது உயிரினத்தைப்பற்றிய அனைத்து மரபியல் தகவல்களையும் குறிக்கிறது. இன்று நாம் மரபணுவை வாசிக்கக்கூடியதாக உள்ளது. ஆகவே இதுவரை கிடைக்கப்பெற்ற எல்லா தொல்பொருள் தவல்களையும் மொழியியல் ஆய்வுகளையும் இந்த புதிய  டிஎன்ஏ [DNA] ஆய்வுகளுடன் இணைத்து ஒரு வரலாறு எடுத்துரைத்தால் அதில் ஒரு உண்மை அல்லது அர்த்தம் இருக்கும். 

ஒரு குறிப்பிட்ட இடத்தில் வசித்து, ஒரே ஆரம்ப மொழியை பேசி, ஒருமித்த கலாச்சாரம், கருத்தாக்கம், மரபு, நம்பிக்கை, ஆகியவற்றை பின் பற்றும் ஒரு குழுவை தான் இனம் என்போம். இப்படி ஆரம்பித்த இனம், பிறகு வெவ்வேறூ பாதைகளை தேடி பிரிந்து போனாலும், அவர்கள் ஆரம்பத்தில் ஒரே குடும்பமாக இருந்ததால், கடைசி வரை அவர்கள் சகோதரர்களே / ஒரே இனமே. பொதுவாகக் கரு நிறத் தோல் கொண்டவர்களான திராவிட மொழி பேசுவோர், பரம்பரையியல் அடிப்படையில் தனியான இனம் எனக் கருதினார்கள்.

இவர்கள் 1] கட்டையான மக்களாக பொதுவாக 5 அடி 4 அங்குல [1.626 மீட்டர்] உயரத்தையும், 2] தோல், பழுப்பு நிறத்தில் இருந்து கிட்டத்தட்ட கருப்பு நிறம் வரையும். 3] அதே போல கண் கருப்பில் இருந்து இருண்ட பழுப்பு வரையும், 4]பொதுவாக நீண்ட தலையோட்டையும் , நீண்ட குறுகிய முகத்தையும் அகன்ற நெற்றியையும், 5] கருப்பு அல்லது இருண்ட பழுப்பு முடியையும், 6] நேரான, நீண்ட,குறுகிய மூக்கையும், 7] இரத்த வகைகள் பொதுவாக O (37 சதவீதம்),  A (22 சதவீதம்), B (33 சதவீதம்). and AB (7 சதவீதம்) ஆகவும் திராவிடர்களின் பொதுவான இனப்பாகுபாடுடைய பண்புகள் அமைகின்றன.

தமிழர்கள், ஏறத்தாழ 10,000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வரலாற்றைக் கொண்டுள்ளது என மரபு வழித் தமிழர் வரலாறு கூறுகிறது. கடல் கொந்தளிப்பில் இரு தரம் தமது நாட்டை பறி கொடுத்தார்கள் என்றும், ஒவ்வொரு தடவையும் மன்னன் புது தலை நகரத்தை நிறுவி அடுத்தடுத்து மூன்று சங்கங்களில் - தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச் சங்கம் - தமிழை வளர்த்தான் என மேலும் கூறுகிறது. பண்டைய நாகரிகங்களான சுமேரிய நாகரிகத்துடனும் சிந்து சம வெளி நாகரிகத்துடனும் தமது வரலாற்றை ஒப்பிட்டு பார்க்க அல்லது இணைக்க இந்த செவிவழி கதையே அவர்களை தூண்டியது எனலாம். ஹிராஸ் பாதிரியார் [Father Heras] சிந்து சம வெளி மக்களை திராவிடனுடன் அடையாளம் காட்டுகிறார். 1960 இல் இந்த திராவிட அடையாளத்தை நிருவிப்பதற்காக இஸ்காண்டினேவிய [வட ஐரோப்பாவின் ஒரு பகுதியாகும். டென்மார்க், நார்வே, ஸ்வீடன், ஆகிய நாடுகள் இதில் அடங்கும் / Scandinavian] ஆசிய ஆய்வுகள் நிறுவனம் பல அறிவிப்புக்களை செய்தது. இந்த கோட்பாடை ஜப்பானிய வரலாற்றாசிரியரும், எழுத்தாளரும், தமிழறிஞருமான பேராசிரியர் நொபொரு கராஷிமா [Noboru Karashima ] தீவிரமாக ஆதரிக்கிறார். மேலும் இன்றைய பல நவீன ஆய்வுகள் மொகஞ்சதாரோ ஹரப்பா உட்பட்ட பெரிய நகரங்களை உள்ளடக்கிய பண்டைய சிந்து சம வெளியில் வாழ்ந்த குடி மக்கள் திராவிடர்கள் என ஊகிக்கிறது. பெரும்பாலான தமிழர்கள் தமது தோற்றுவையை கி மு ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட  மொகஞ்சதாரோ, ஹரப்பாவில் தேடுகிறார்கள். எப்படியாயினும் அவர்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்த, இன்றைய டிஎன்ஏ தொழில்நுட்பத்துடன் ஒரு ஒழுங்கு படுத்திய ஆய்வு தேவைபடுகிறது..

5000 ஆண்டுகள் பழமைவாய்ந்த, ஹரப்பா காலத்தை சேர்ந்த நாலு எலும்பு கூடுகள் வடமேற்கு இந்தியாவில், இன்றைய அரியானா மாநிலத்தில், ராகிகர்ஹியில் [Rakhigarhi] உள்ள பண்டைய  இடுகாடு ஒன்றில் 23 ம் திகதி, தை மாதம், 2015 முதல் மேற்கொண்ட அகழ்வு ஆராச்சியில் தோண்டி எடுக்கப்பட்டன. அந்த இறந்தவர் உடலிலிருந்து கொஞ்சம் திசுக்கள், எலும்பு மாதிரிகளை சேகரித்து அதில் இருந்து அவரது டிஎன்ஏ எனப்படும் மரபணுக்களை தடயவியலாளர்கள் [forensic scientists] ஆராய்ந்து பார்த்து, சிந்து வெளி மனித குடியேற்றத்தின் வரலாற்றினதும் தோற்றுவாயினதும் இரகசியத்தை வெளிப் படுத்துவார்கள் என தொல் பொருள் ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். மேலும் ராகிகர்ஹியில் நிலம் மணலாக இருப்பதால் அந்த எலும்பு கூடுகள் நல்ல நிலையில் பாதுகாக்கப்பட்டு இருக்க சந்தர்ப்பம் அதிகமாக உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே விரைவில் விஞ்ஞான பூர்வமான ஹரப்பானின் அடையாளம் வெளிச்சத்திற்கு வரும் என நாம் எதிர் பார்க்கலாம்.

பன்மொழிப்  புலவரும் பேராசிரியருமான இலங்கையை சேர்ந்த மறைந்த ஆறுமுகம் சதாசிவம், மலேசியாவை சேர்ந்த முனைவர் கி.லோகநாதன் [Professor A. Sathasivam from Sri Lanka and Dr. Loganathan Muttarayan from Malaysia.], போன்றோர்கள் சுமேரியனின் அடையாளத்தை திராவிடர்களுடன் திவீரமாக பரிந்துரைக்கின்றனர். அது மட்டும் அல்ல, 1975ல் காலமான பேராசிரியருமான வரலாற்றாளருமான கல்லிடைக்குறிச்சி அய்யா நீலகண்ட சாத்திரி [K.A. Nilakantta Sastri,] சுமேரிய, திராவிட ஆலய வழிப்பாட்டின் ஒற்றுமையை எடுத்துக் காட்டினார். தமிழர்களை அப்படி இல்லாவிட்டால், திராவிடர்களை மத்திய தரைக்கடல் பகுதியுடன் இணைக்கும் கருதுகோளை இன்னும் ஆராய்ச்சியாளர் Dr. N லஹோவரி [Dr. N. Lahovary] போன்ற  குறிப்பிடத்தக்க பல அறிஞர்கள் வாதிடுகிறார்கள். இந்த கோட்பாடை உறுதிப்படுத்த ஒருவர் இரண்டு வழிமுறையில் ஆராய வேண்டி உள்ளது. இந்தியாவில் இருக்கும் ஒத்த மொழி குடும்பங்களுடன் சுமேரிய மொழியை நன்றாக ஆராய்தல் வேண்டும். இரண்ட்டாவதாக  இன்று கிடைக்கக் கூடிய பண்டைய சுமேரியர்களின் எலும்புக்கூடுகளை உடல் பரிசோதனை செய்து சுமேரியருக்கும் திராவிடருக்கும் இடையே உள்ள ஒற்றுமையை கண்டறிய வேண்டும்.

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]


பகுதி : 34 தொடரும்

465468498_10226959350552518_2091277551049599517_n.jpg?_nc_cat=111&ccb=1-7&_nc_sid=127cfc&_nc_ohc=F5LKm06W5jUQ7kNvgHUaYN0&_nc_zt=23&_nc_ht=scontent-lhr8-1.xx&_nc_gid=AopzhCgfrvgWaZ1S_jd3c4l&oh=00_AYCIYxi75WtQflfUSzbo-FmJ-HSXuI4uFGOEYRSdbaQmyQ&oe=67313E79 465271564_10226959350592519_3761254357394455302_n.jpg?_nc_cat=100&ccb=1-7&_nc_sid=127cfc&_nc_ohc=rXSQGMGzEfcQ7kNvgGpQ_zw&_nc_zt=23&_nc_ht=scontent-lhr6-2.xx&_nc_gid=AopzhCgfrvgWaZ1S_jd3c4l&oh=00_AYDy2lOS-O_bK_rlxBs8IyKOfIbXIay0NOt3UsJTwxG3xA&oe=673126D1 465221602_10226959351152533_6154813739421039895_n.jpg?_nc_cat=101&ccb=1-7&_nc_sid=127cfc&_nc_ohc=HBpuutWd9TUQ7kNvgFZ5vPJ&_nc_zt=23&_nc_ht=scontent-lhr8-2.xx&_nc_gid=AopzhCgfrvgWaZ1S_jd3c4l&oh=00_AYBh0CkfS_MLe0kGW-rBxICXwYZMvAODLcEQCX_UfXV62A&oe=67312F50 

 

465223368_10226959351192534_1630670917687042721_n.jpg?_nc_cat=107&ccb=1-7&_nc_sid=127cfc&_nc_ohc=RnmWgFd46wkQ7kNvgH9tFX-&_nc_zt=23&_nc_ht=scontent-lhr8-1.xx&_nc_gid=AopzhCgfrvgWaZ1S_jd3c4l&oh=00_AYDRi39D43c8U3fVs1nfDzeG9aa2OIoUVo_0MP3wScpptA&oe=67313BA4

 

  • மோகன் changed the title to "தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?]" / பகுதி : 33
  • கருத்துக்கள உறவுகள்
Posted

"தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?]" / பகுதி : 34

முடிவுரை [ தொடர்கிறது] 


எங்கிருந்து பண்டைய சுமேரியர்களின் மரபணுக்கள் வந்தன என்பது எமக்குத் தெரியாது. அதே போல இவர்களின் வழித்தோன்றல்கள் யார் என்பதும் சரியாகத் தெரியாது. இன்று வரை இந்த பண்டைய சுமேரியர்களின் டிஎன்ஏ யை பரிசோதனை செய்ய முடியுமா என்ற நம்பிக்கையும் இருக்கவில்லை. என்றாலும் அண்மையில் பண்டைய சுமேரிய நாகரிகத்தின் தலை நகரமான ஊரில் கண்டு எடுக்கப்பட்ட கி மு 4500 ஆண்டை சேர்ந்த ஒரு முழுமையான எலும்புக் கூடு அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாந்தவியல், தொல்லியல் பற்றிய அருங் காட்சியகத்தில் [Penn Museum] 2014 ம் ஆண்டு திரும்ப கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. பொதுவாக தொல் பொருள் ஆய்வாளர்கள் நிலத்தில் தான் அகழ்வின் போது இப்படியான வற்றைக் கண்டு பிடிப்பார்கள். ஆனால் இதுவோ, அருங்காட்சியகத்தின் சேமிப்பு அறையில் கடந்த 85 வருடமாக சவப்பெட்டி போன்ற பெட்டி ஒன்றில் பாதுகாத்து வைத்திருந்த இந்த எலும்புக் கூட்டை கண்டுபிடித்து உள்ளார்கள். இது 1929–30 ஆண்டில் பிரித்தானிய தொல்பொருள் ஆய்வாளர் லியோனாட் வூல்லேயால் [Sir Leonard Woolley] கண்டு பிடிக்கப்பட்டது. இதில் ஆச்சிரியம் தரக்கூடிய விடயம் என்ன வென்றால், இதின் கெடாத பல்லில் டிஎன்ஏ பரிசோதனை செய்ய போதுமான மென்மையான திசு அதிகமாக இருக்கலாம் என்பதே. அப்படி இருந்து பரிசோதனை செய்யும் பட்சத்தில், இந்த முதலாவது நகர நாகரிக குடி மக்கள் எங்கிருந்து வந்தார்கள், அவர்களின் சமகால வழித்தோன்றல்கள் யார் என்பதை விரைவில் வெளிப்படுத்தலாம்? 

சுமேரியர்களின் இடம்பெயர்வு ஒரு மர்மமான சொல்லப்படாத கதையாகவே இருக்கிறது. எனவே டிஎன்ஏ பரிசோதனை ஒரு சிறந்த தீர்வாக இருக்கலாம். மேலும் நான் ஒரு தகவலை உங்களுடன் பகிர ஆசைப்படுகிறேன். நைல் ஆற்றுப் பள்ளத்தாக்கிலும், யூப்ரடிஸ் டைகிரிஸ் ஆறுகளை அண்டியும், இறுதியாக சிந்து நதி கரையிலும் அமைந்த முன்னைய நாகரிகத்தை அமைத்தவர்கள் அனைவருமே கருத்த தோல் மனித அடையாளத்தைக் கொண்டவர்கள். இது  தற்செயலாக அமைந்து இருக்க முடியாது. மேலும் இந்தியாவிற்கு இருதரம் 1288 இலும் 1293 இலும் பயணித்த இத்தாலிய வணிகரான மார்க்கோ போலோ பாண்டிநாட்டிற்கு வந்த போது முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் ஆட்சி தமிழகத்தில் நடந்து கொண்டிருந்தது. இவர் அங்கு வாழ்ந்த தமிழரைப் பற்றி குறிக்கும் போது “மிகவும் மதிப்புடனும், கருப்பு நிறம் அற்ற மற்றவர்களை விட, தான் நன்றாக வாழ்வதாக கருதும் கருத்த மனிதன் இங்கு இருக்கிறான். நான் இந்த உண்மையை கூறவிடுங்கள். இந்த மக்கள் தமது கடவுளை, விக்கிரகங்களை கருப்பாக சித்தரிக்கிறார்கள். பிசாசுகளை பனி போன்ற வெள்ளையில் சித்தரிக்கிறார்கள். அவர்கள் கடவுளும் எல்லா ஞானிளும் கருப்பு என்றும் கெட்ட தேவதைகள் எல்லாம் வெள்ளை என்கிறார்கள். அதனால்த் தான் நான் விவரித்த வாறு வர்ணிகிறார்கள்" என்று குறிப்பிட்டு உள்ளார்.

டிஎன்ஏ விஞ்ஞான ஆய்வின்படி இன்றைய மனித இனம் முதலில் ஆஃப்பிரிக்காவில் தோன்றியது என்ற உண்மை இப்ப எமக்குத் தெரியும். ஆகவே ஆஃப்பிரிக்க மக்களே உலகின் முதல் குடிமக்கள். மற்ற இன்றைய மக்கள் அனைவரும் தமது பரம்பரையின் சுவடுகளை தேட ஆஃப்பிரிக்காவிற்கு திரும்ப வேண்டும். 

முன்னைய ஆஃப்பிரிக்க மக்களின் ஆதி  இடப் பெயர்வு நடைபெறவில்லை என்றால், மனித இனம் உடல் அமைப்பில் நீக்ரோ இனத்தைப் போன்றே இருந்து இருப்பார்கள். அது மட்டும் அல்ல, ஆஃப்பிரிக்காவை தவிர்ந்த மற்ற உலகின் பகுதிகளில் மனித இனம் என்று ஒன்று இருந்து இருக்காது. மனித இனம் பல கட்டங்களாக ஆஃப்பிரிக்காவில் இருந்து இடம் பெயர்ந்ததாக பெரும் பாலான மானுடவியலாளர்கள் நம்புகிறார்கள். ஒரு மில்லியன் சகாப்தத்திற்கு முன் ஹோமோ எரக்டஸ் (Homo erectus) எனப்படும் எழு நிலை தொல்முன்மாந்தன் அல்லது நிமிர்ந்தநிலை மனிதர்கள் என அழைக்கப்படும் மனித இனத்தின் பழமையான மூதாதையர்கள் ஆஃப்பிரிக்காவில் இருந்து வெளியே நடந்து சென்று ஐரோப்பா மத்திய கிழக்கு, ஆசியா போன்ற பகுதிகளில் குடியேறினார்கள் என்பதில் இன்று எல்லோரும் ஏற்றுக் கொள்கிறார்கள். அது மட்டும் அல்ல இந்த காலத்திலேயே அவன் தீ உண்டாக்கக் கற்றுக்கொண்டான் என்பார்கள் அறிஞர்கள். 

இன்றும் உலக மக்களின் பண்பாடுகளோடு பங்குகொள்ளாமல் தனித்து வாழும் சில தொல்குடி மக்கள் சிலர் தீக்கடைக் கோல் எனப்படும் மரக்குச்சியால் உரசியோ தேய்த்தோ, அதை  தீ உண்டாக்க பயன்படுத்துகின்றனர். 2000 ஆண்டுகளுக்கு முற் பட்ட தமிழில் இவற்றை ஞெலிகோல் என்றும் கூறிவந்தனர். அதியமான் நெடுமான் அஞ்சி, வீட்டு இறைப்பில் செருகப் பட்ட, தீக்கடை கோல் போல், தன் ஆற்றல் வெளியே தோன்றாது ஒடுங்கி இருப்பான்; என்று புறநானுறு 315 

"இல்லி றைச் செரீஇய ஞெலிகோல் போலத் தோன்றாது இருக்கவும் வல்லன்;" 

என்று கூறுகிறது. மனிதக் கூர்ப்பில், கொரில்லா மற்றும் லூசி என்று பிரபலமாக அறியப்படும் ஆசுத்திராலோபித்தேக்கசு அஃபெரென்சிசு [Australopitheus Afarensis] க்குப் பிறகே ஹோமோ எரக்டஸ் என்னும் இந்த மாந்த இனத்தின் மூதாதையர் உலகில் மிக நீண்ட காலம் வாழ்ந்தவர்கள். இந்த ஆதிவாசிகளே முதன் முதலாக சமைத்து உண்டவர்கள். இதே சமயத்தில் தான் நம் மூதாதையர்கள் தாங்கள் உடல் உரோமத்தை இழக்க ஆரம்பித்திருக்க வேண்டும். அதன் பின், நமது மூன்றாவது மூதாதையர் நியாண்டர்தால் [Neanderthal] மனிதனை தொடர்ந்து பல நூறு ஆயிரம் ஆண்டுகளுக்கு பின், ஹோமோசேப்பியன்ஸ் [Homo sapiens] என்ற அதிநவீன கருவிகள் பயன்படுத்தும் மனிதன் இரண்டாவது அலையாக ஆஃப்பிரிக்காவை விட்டு இடம் பெயர்ந்தது, ஹோமோ சேப்பியன்ஸ் எனப்படும் தற்போதைய மனிதர்களை விட நியான்டர்தால் மனிதர்கள், புத்திசாலிகளாக இல்லாததால் அழிந்து போயினர் என ஆய்வு ஒன்று கூறுகிறது. 

சேப்பியன் (Sapien) என்பதற்கு அறிவு என்பது பொருள். ஹோமோ என்பதன் பொருள் மனிதன் என்பதாகும். இதனால், மதிமனிதன் அல்லது அறிவு மனிதன் (Homo sapien) என இவனை அழைக்கின்றனர். இவன், அதற்கு முன் இடம் பெயர்ந்த தனது முன்னைய மூதாதையர்களை வெற்றி கொண்டான் என்கின்றனர். இந்த கருதுகோளின் படி, இன்றைய நவீன மனிதன் இந்த ஹோமோ சேப்பியன்ஸின் சந்ததி ஆகும். 

பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரை மனிதன் காட்டில் விலங்குகளை வேட்டையாடி காய் கனிகளை சேகரித்து உண்டு வாழ்ந்தான். இந்நிலையில் இருந்த கற்கால மனிதன் எப்படி பல கிலோ மீட்டர் கடல் பகுதியைத் தாண்டி தீவுகளுக்கும் கண்டங்களுக்கும் வந்திருக்க முடியும் என நீங்கள் ஆச்சிரியப் படலாம்? ஆனால், அந்த பழங்காலத்தில் கண்டங்கள் எல்லாம் இணைந்து இருந்தன, அவை பனியுகம் (Ice age) அல்லது "பனிப்படல யுக (Glacial Age) த்தின் பிறகே பிரிந்தன. 18,000 ஆண்டுகளுக்கு முன்னே இருந்த பூகோளத்தின் தோற்றமும், சூழ்வெளியும் இன்றைய அமைப்பை விட வேறுபட்டிருந்தன. பனித் திரட்டுகள் உண்டாகிக் கடல் மட்டம் தணிந்திருந்தது. அப்போது உலகத்தின் நீர்வளம் சுண்டிச் சுருங்கிக் கடல் மட்டம் தணிந்து, உலகக் கண்டங்களின் விளிம்புகள் நீண்டு, கண்டங்களுக்குப் நிலப்பாலங்கள் [Land Bridges] அமைந்த தென்று கருதப்படுகிறது! ஆகவே அவர்கள் ஒரு பகுதியாக நடந்தும் இன்னும் ஒரு பகுதியாக கட்டு மரம் போன்ற சிறு படகிலும் பயணம் செய்து இருக்கலாம். ஆஃப்பிரிக்காவில் இருந்து பரந்த உலகிற்கான இந்த இடம் பெயர்வு பெரும்பாலும் 60,000-70,000 ஆண்டுகளிற்கு முன்பு நடைபெற்று இருக்கலாம். இந்த முன்னைய கடற்கரையோரங்களில் ஒண்டித் திரிபவர்கள் [beachcombers] விரைவாக இந்தியாவின் கடற்கரையோரமாக பயணித்து தென்கிழக்கு ஆசியாவையும் அவுஸ்ரேலியாவையும் பெரும்பாலும் 50,000 ஆண்டுகளுக்கு முன்பு அடைந்தார்கள். 

அதன் பிறகு, கொஞ்சம் காலம் கடந்து, இரண்டாவது குழு ஆஃப்பிரிக்காவை விட்டு வெளியேறி, மத்திய கிழக்கு, தெற்கு மத்திய ஆசியாவிற்கு இடம் பெயர்ந்தார்கள். உலகின் ஒவ்வொரு மூலையையும் மனித இனம் ஒரு நாள் நிரப்ப இந்த இடம்பெயர்வே வழி வகுத்தது. அந்த தொடக்க துணிகர இடம் பெயர்வு காலத்தில், வேட்டை மற்றும் உணவு சேகரிப்பதுமே அவர்களின் அன்றாட வாழ்க்கையாக இன்னும் இருந்தது. இந்த மனிதர்கள் சில நூறு தனிப்பட்டவர்களை கொண்ட சிறு சமுகமாக, அனேகமாக வாழ்ந்தார்கள். சமூகப் பிணைப்புகள் அங்கு அவர்களுக்கு இடையில் உண்டாகி, அது இந்த சிறிய மக்கள் கூட்டங்கள் தங்களுக்கு இடையில் உணவு வளங்களை பகிரவும் ஒன்றாக இணைந்து வேட்டையாடவும் உதவின. இந்த பிணைப்பு மலர்ந்து, இன்று நாம் அறிந்த சமூகம் மற்றும் கலாச்சாரம் போன்ற ஒன்று அவர்களுக்கு இடையில் தோன்ற மொழி வளர்ச்சி உதவியது.

 
இந்த மனிதன் தன் இனத்தவர்களுக்கு ஒரு செய்தியை வெளிப்படுத்த அவன் எழுப்பிய ஒலிக்குறிப்புகள் உதவின. அதுதான், நாளடைவில் மொழியாக உருமலர்ச்சி பெற்றது எனலாம். கி மு 14,000 - 9500 ஆண்டுகளுக்கு இடையில் ஒரு பெரும் மாற்றம் ஏற்பட்டது. நாடோடிகளாக  வேட்டையாடி உணவு சேர்ப்பதில் இருந்து அவர்கள் வாழ்வு மற்றம் அடைந்தது. இந்த கால கட்டத்தில் மழை வீழ்ச்சி உச்ச நிலையை அடைந்து சஹாரா, வட ஆஃப்பிரிக்கா போன்ற பகுதிகள் பசுமையா மாறின. இந்நிலையில், வேளாண்மை அங்கு பிறந்தது; காட்டுப் பயிர்களாக இருந்த சில தானியங்களை, தன் இருப்பிடத்திற்கு வீட்டுப் பயிர்களாக வளர்க்கத் தெரிந்து கொண்டான். அவன் முதலில் பயிரிட்ட தானியம் கோதுமை என்கின்றனர். நைல் நதி, மற்றும் தென்மேற்கு ஆசியாவைச் சேர்ந்த மெசொப்பொத்தேமியாவின் டைகிரிஸ் யூப்ரதீஸ் நதிகளை உள்ளடக்கிய இளம் பிறை வடிவம் [Fertile Crescent lands] கொண்ட செழுமையான பகுதியில் முதல் விவசாயி பிறந்தான் என நம்பப்படுகிறது. முதலில், உணவு தேடியாக இருந்த அவன் நாளடைவில் உணவு உற்பத்தியாளனாகவும் மாறினான்.

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]


பகுதி : 35 தொடரும்

May be an image of bone


 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

"தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?]" / பகுதி : 35 

முடிவுரை [ தொடர்கிறது] 


60,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆஃப்ரிக்காவில் தொடங்கிய மனித இனம் போன வழியெல்லாம் அவர்களின் ஜெனடிகல் ரேகைகளை விட்டுவிட்டு போயிருக்கிறது. ஆராய்ச்சியாளர்கள், இந்த ப்ரொஜக்டிற்கு ஜெனொகிராபிக் ப்ரொஜெக்ட் (GP) [Genographic Project] என்று பெயரிட்டு இருக்கிறார்கள். மனிதர்களின் Y குரோமோசோம்களை அடிப் படையாக வைத்து இந்த வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது.இந்த வழித்தடங்கள் M என்கிற அடைமொழியோடு பொருத்தமான எண்ணினைக் கொண்டு அடையாளப் படுத்தப்படுகிறது. M என்பது Macro-haplogroup என்பதின் சுருக்கம். ஒவ்வொரு வழித்தடமும், ஆஃப்ரிக்காவிலிருந்து தொடங்கி, வெவ்வேறு கண்டங்களுக்கு பயணிக்கிறது. ஸ்பென்சர் வெல்ஸ் [Spencer Wells] எழுதிய மனிதனின் பயணம் ஒரு மரபியல் சாகசப் பயணம் (“The Journey of Man A Genetic Odyssey”) என்ற நூலில் இருந்து "இந்தியன் மார்க்கர்" [Indian marker] என அழைக்கப்படும் M 20, திராவிடர்களின் மூதாதையர் வழி  L(HAPLOGROUP –L) மரபுக் காட்டி, 30,000 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்து இந்தியாவில் உள்ளது என்பதை அறியமுடிகிறது. இவர்கள் மத்திய கிழக்கு, தென் மேற்கு ஆசியாவில் இருந்து பலுசிஸ்தானின் [Baluchistan] ஊடாக சிந்து சம வெளி வந்து, அங்கு இருந்து இறுதியாக விந்திய மலைத்தொடரின் [Vindhya Range] தெற்கு பகுதிக்கு சென்றார்கள்.இந்த மலைத் தொடர் இந்தியாவைப் புவியியல் அடிப்படையில் வட இந்தியா, தென்னிந்தியா என இரண்டாகப் பிரிக்கின்றது. 

அங்குதான் திராவிடர்கள் வாழும் இன்றைய நாலு தென் மாகாணங்கள் அமைந்துள்ளன, இந்த முன்னைய மூதாதையரை / மனித இனத்தை முதனிலைத் திராவிடர் [proto-dravidian] என அழைக்கலாம். இந்த மரபுக் காட்டி M 20 யைக் கொண்ட ஆதி மனிதக் கூட்டத்தின் இந்த முக்கிய இடம் பெயர்வு, தனக்கு முன்னால், இன்றைக்கு சுமார் 50,000 ஆண்டுகளுக்கு முன்னர் தென்னிந்தியா கரையோரம் இடம் பெயர்ந்த மரபுக் காட்டி M 130 கொண்ட  ஆதி மனிதக் கூட்டத்தினை எதிர்கொண்டது. இந்த முன்னைய கரையோர ஆதி மனிதனை முந்திய திராவிடன் [pre-dravidian] என அழைக்கலாம். இந்த முதனிலைத் திராவிடர் கூட்டம், முந்திய திராவிட கூட்டத்துடன் கலந்தன. இந்த கலப்பில் இருந்தே திராவிட வரலாறு பிறந்தது. மரபுக் காட்டி M 20 கூடுதலாக தெற்கு மக்களிடம் மட்டும் காணப்படுவதுடன் சிலவேளை 50 வீதத்திற்கும் அதிகமாகவும் இருக்கிறது. ஆனால் இந்தியாவிற்கு வெளியில் இங்கும் அங்கும்மாக மட்டுமே காணப்படுகிறது. அதே வேளையில் மரபுக் காட்டி M 130 இந்தியாவில் தெற்கில் மட்டுமே முதன்மையாக காணப்படுவதுடன் அதுவும் 5 வீதம்
அளவிலேயே காணப்படுகிறது.

இது இந்த இரண்டு மரபுக் காட்டிகளின் கலப்பில் கரையோர மக்கள் கூட்டத்தின் ஆண் வழி பங்களிப்பு குறைவாக இருப்பதை சுட்டிக் காட்டுகிறது. ஆகவே தென் இந்தியா புகுந்த மரபுக் காட்டி M 20 கூட்டத்தினர், அங்கு ஏற்கனவே குடியிருந்த மரபுக் காட்டி M 130 கூட்டத்தினரிடம் இருந்து தமக்கு மனைவிமாரை அல்லது ஒரு வாழ்க்கை துணைவியை பெற்றனர் என நாம் இலகுவாக ஊகிக்கலாம். இவர்கள் கரையோர ஆண்களை பெரும்பாலும் துரத்தி, அல்லது கொலைசெய்து, அல்லது அவர்கள் இனப்பெருக்கம் செய்ய வாய்ப்பு கொடுக்காமல் இருந்து இருக்கலாம் என நம்பப்படுகிறது.

மேலும் விந்திய மலைத் தொடரின் தெற்கில் வாழ்ந்த இந்த முந்திய திராவிட குழு, முதனிலைத் திராவிடர் குழுவின் பேச்சை ஏற்றுக் கொண்டு இருக்கலாம். அத்துடன் இமயமலை இந்தியா உபகண்டத்தை வட மத்திய ஆசியாவில் இருந்து பிரிக்கிறது. ஆகவே இது ஆதி தென் இந்தியா மக்களின் வடக்கிற்கான நடமாட்டத்தை கடினமாக்கிறது. அதே போல, சிந்து நதியும் தார் பாலைவனமும் மேற்கிற்கான இயற்கை தடையாக உள்ளது. அரக்கன் மலைத் தொடர்கள் இந்தியா உப கண்டத்திற்கும் தென் கிழக்கு ஆசியாவிற்குமான பயண முட்டுக் கட்டையாக உள்ளது. இதனால் ஏற்பட்ட நீண்ட காலத் தனிமை, நாளடைவில், தனித்துவமான திராவிட இனத்திற்குரிய பண்புகள் தோன்ற வழிவகுத்தது எனலாம். ஒவ்வொரு மனித குழுவினதும் வரலாறு அவர்கள் எங்காவது ஓரிடத்தில் இருந்து ஒரு கால கட்டத்தில் வந்தவர்கள் என்பதைக் காட்டுகிறது. 

அத்துடன் ஒவ்வொரு இனமும் தமக்கே உரித்தான தனித்துவமானஅடையாளங்களை தன்னகத்தே கொண்டுள்ளன. கலை, கலாச்சாரம், பண்பாடு இவை யாவற்றிற்கும் மேலாக மொழி என்பது ஓர் இனத்தின் முக்கிய அடையாளமாகும். ஆனால் சிலவேளை ஒரு இன குழு தாம் சேர்ந்த மற்றும் ஒரு மேலாதிக்க மக்கள் குழு ஒன்றின் மொழியை பேச முயலலாம். அது கால போக்கில் தமது மொழியை மறக்க ஏதுவாகலாம். அப்படி அவர்கள் வேற்று மொழியை பேசினாலும், இன்னும் தாம் ஒரு தனி இனம் என்றே நம்புகிறார்கள். இதனால் இப்ப உலகில் 10,500 இனக்குழுக்கள் இருப்பினும் ஆக 6700 மொழிகள் மாத்திரமே உண்டு. 

ஒவ்வொரு முறையும் ஒரு மனித கூட்டம் இடம் பெயரும் போது, அங்கு முன்னமே வாழ்ந்து கொண்டு இருக்கின்ற குடிமக்களுடன் திருமணம் செய்து கொள்வதும் அதே நேரத்தில் அவைகளுக்கு இடையில் முரண்பாடு நிகழ்வதும் வழமை என வரலாறு காட்டுகிறது. இதனால் வெற்றி கொண்டவர்கள் சண்டையால் மேலாதிக்கம் கொள்வதும் பின் நாளடைவில் பெருபாலான வேளைகளில் ஒற்றுமையாகி ஒன்றாவதும் உண்டு. இதனால் படிப்படியாக பழங்குடியினரும் புது குடியினரும் ஒரு குடியினராக மாறுகின்றனர். இப்படித்தான் மரபுக் காட்டி எம் இருபதும்[M 20] எம் நூற்றி முப்பதும்[M 130] ஒன்றாகி இன்றைய திராவிட இனம் தோன்றியது எனலாம்.

ஆஃப்ரிக்காவில் இருந்து ஆசியாவிற்கும் பின் ஐரோப்பாவிற்குமான இடம் பெயர்வு பல தடவை நடந்தன. மேலும் அவர்கள் ஆஃப்ரிக்காவில் இருந்து வெளியேயும் வெளியே இருந்து ஆஃப்ரிக்காவிற்கும் அலைந்தனர். இப்படி நூற்றாண்டுகளுக்கும், ஆயிரமாண்டுகளுக்கும் மேலாக பலதரப் பட்ட மக்கள் கூட்டம் அங்கும் இங்கும்மாக அலைந்தனர். இன்று ஐரோப்பாவில் வாழும் மக்களும், இன்று ஆஃப்ரிக்காவில் வாழும் மக்களும் ஒரே மாதிரியான மரபணுக்களின் தொகுப்பை வைத்திருக்கமாட்டார்கள். அத்துடன் இருவருமே முந்தைய அல்லது மூல மனிதர்களும் அல்ல. மேலும் இன்று ஆஃப்ரிக்காவில் வாழும் மக்கள் முந்தைய அல்லது மூல மனித குடும்பத்தின் மரபணுக்களின் தொகுப்பை வைத்திருக்க மாட்டார்கள். மக்கள் கூட்டம் மாற்றம் அடைவது போல, மரபணுக்களும் மாற்றம் அடைகின்றன. ஒவ்வொரு தனிப்பட்டவரின் மரபணுக்கள் தனித்துவமானவை. எந்த இரு தனிப்படவர்களின் டிஎன்ஏ வரிசை, அவர்களின் மூதாதையார் உலகின் எந்த ஒரு பகுதியில் இருந்து வந்திருந்தாலும், கிட்டத்தட்ட 99.6 வீதம் ஒரே மாதிரியானவை. இரு தனிப்பட்டவர்களின் தனித்துவமான குறிப்பிட்ட அந்த வித்தியாசங்களில் 10 வீதம் தெரிந்தாலே அவர்கள் எந்த இன க்குழுவை சேர்ந்தவர்கள் என நாம் இன்று கணித்து சொல்ல முடியும்.


திராவிடன் என்றால் என்ன? இது ஒரு பண்பாடா?, மொழியியல் குடும்பமா? அல்லது  ஒரு இனமா? இது எங்கு தோன்றியது? பிறைச் சந்திரன் வடிவில் அமைந்த வளமான நிலத்திலா[Fertile Crescent]? அல்லது தென் இந்தியாவிலா? எப்பொழுது தோன்றியது? 30,000 ஆண்டுகளுக்கு முன்பா, 10,000 ஆண்டுகளுக்கு முன்பா அல்லது 4,000 ஆண்டுகளுக்கு முன்பா?

இன்னும் திராவிடர்களின் தோற்றுவாய் ஒரு குழுப்பமான, சிக்கலான ஒன்றாகவே வரலாற்றாசிரியர்களுக்கு இருக்கிறது. இந்தியாவின் பழமையான குடிகளின் வழித்தோன்றல்களே திராவிடர்கள் என சில அறிஞர்கள் நம்புகிறார்கள். சுமேரியனுக்கும் திராவிடனுக்கும் இடையில் உள்ள ஒற்றுமையின் அடிப்படையில் சில அறிஞர்கள் திராவிடர்கள் மேற்கு ஆசியாவில் இருந்து பலுசிஸ்தானின் ஊடாக இந்தியாவிற்கு வந்தவர்கள் என வாதாடுகின்றனர். பாகிஸ்தானின், பலூச்சிஸ்தான் மாகாணத்தில் இன்று பெருமளவில் புழங்கி வரும் பராஹவி மொழி  (பிரஹுயி / Brahui language ] ஒரு திராவிட மொழி என்பதை கவனத்தில் கொள்க.

மேலும் கிறிஸ்துவுக்கு முன்பே, தென் இந்தியா  திராவிடர்கள் தமக்கு என ஒரு தனித்துவமான பண்பாட்டையும் நாகரிகத்தையும் கொண்டு இருந்ததுடன், அவர்கள் மிகவும் பலம் வாய்ந்த அரசையும் கொண்டிருந்தார்கள். சில திராவிட அரசர்கள் செல்வாக்கு மிக்க வெற்றிகரமான வர்த்தகத்தை முதலில் மேற்கு ஆசியாவுடனும் எகிப்துடனும் பின் கிரேக்கம், ரோமனுடனும் வைத்திருந்தார்கள். இப்படி வர்த்தகம் வைத்திருந்தவர்கள் குறிப்பாக,சேர, சோழ, பாண்டிய என்னும் தமிழ் மூவேந்தர்கள் மற்றும் பல்லவ பேரரசுகள் [கி.பி. 250 முதல் கி.பி. 850 வரை சுமார் அறுநூற்று ஐம்பது ஆண்டுகள் தமிழகத்தில் நிலைத்து ஆட்சி புரிந்தவர்கள்], 

தெலுங்கு பேசும் நாயக்கர் ஆட்சியாளர்கள், கலிங்கர் [கலிங்க நாடு. தற்போதைய ஆந்திராவின் வடபகுதியையும், ஒரிசாவின் தென்பகுதியையும் கொண்ட நாடு.], மகாராஷ்டிரா [மராட்டி, இவர்கள் கருநாடகத்தையும் ஆந்திராவையும் உள்ளடக்கி மகாராட்டிரத்தையும் ஆட்சி செய்தனர்.] ஆகும். தமிழ் மன்னன் பாண்டியர்களுடைய காலம் கி.மு ஆறாம் நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே தொடங்குவதாகச் சொல்லப்படுகின்றது. பாண்டிய நாடு கல்வியிலும், வணிகத்திலும் சிறந்து விளங்கியது. இவர்கள் அக் காலத்தின் பேரரசுகளாகிய கிரேக்க, ரோமப் பேரரசுகளுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர். 

ஆரம்பகால தமிழர் கடல் வணிகம் என்பது இந்தோனேசியத் தீவுகளில் இருந்து தமிழகம் வழியாக பாரசீக வளைகுடா வரையில் கடற்கரை ஓரமாக மட்டுமே நடந்து வந்தது. பின்னரே அது நடுக்கடல் வணிகமாக பரிணமித்தது. அதன் பின்னரே அது மேற்கே எகிப்துக்கும், ரோமுக்கும் கிழக்கே சீனா வரையிலும் பரவியது. இந்தோ ஆரியன் இந்தியாவிற்கு வருவதற்கு முன், திராவிட மொழி  இந்தியா முழுவதும் பரவலாக பேசப்பட்டதுடன் அதன் ஆதிக்கம் தெற்கிலும் வடக்கிலும் அதிகாரம் செலுத்தியது என கருதுவதற்கு நல்ல ஆதாரங்கள் உண்டு.

திராவிட பண்பாடும் முதனிலைத் திராவிட மொழியும் பிறைச் சந்திரன் வடிவில் அமைந்த வளமான நிலத்தின் கிழக்கு பகுதியில் தோன்றியது என்பது எமக்கு கிடைக்கும் சுமேரிய இலக்கியங்கள் அறிவுறுத்துகின்றன. ஆகவே இது திராவிடரின் ஆரம்ப நாடாக இருக்கலாம் எனவும், திராவிட மொழி அங்கு 10,000 ஆண்டுகளுக்கு முன் பேசியிருக்கலாம் எனவும் விவாதிக்கப்படுகிறது .

இந்த கருதுகோள் திராவிடர்கள், ஆரியர்கள் போலவே வெளியில் இருந்து ஆனால் ஆரியர்களுக்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பிரவேசித்தவர்கள் என சுட்டிக் காட்டுவதுடன், தென் இந்தியா திராவிடர்களின் ஆரம்ப இடம்  என்பதை கேள்விக் குறியாக்கிறது. இது சாத்தியமாகும் பட்சத்தில், மத்திய ஆசியாவில் இருந்து பின்னர்  இந்தியா குடியேறியவர்கள் எப்படி திராவிட மொழியை பின்பற்றினார்கள் என்ற கேள்வியும் எழுகிறது. மனிதனின் குடியேற்றம் மிகவும் பழமையானது. அவன் 50,000 ஆண்டுகளுக்கு முன்பே எல்லா கண்டங்களிலும் வாழத் தொடங்கிவிட்டான். மனிதன் வெவ்வேறு இடங்களில் விலகி வெவ்வேறு சூழ் நிலையில் தனிமை படுத்தப்பட்ட நிலையில் தொடர்ந்து நீண்ட காலம் வாழ்ந்தது அவனுக்கு இன அம்சங்களை கொடுத்தது. 

நான் இந்த தொகுப்பை எல்லாம் சிறந்த அறிஞர்களுக்கும் ஒரு வேண்டு கோளுடன் நிறைவு செய்கின்றேன்.அதாவது இந்த உயர் நோக்கமுள்ள ஆய்வில் எல்லோரும் ஒன்று சேர்ந்து தமிழ் மக்களினதும் தமிழ் மொழியினதும் மகிமையை, பெருஞ்சிறப்பை, புகழை சான்றுகளுடன் ஒருமித்த கருத்துடன் உலகத்திற்கு வெளி கொண்டு வரும்மாறு கேட்டுக்கொள்கிறேன்..

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

முற்றிற்று 

466342370_10227216717946542_3070100363867787275_n.jpg?_nc_cat=111&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=M7Rol7LD3fwQ7kNvgG3OvMq&_nc_zt=23&_nc_ht=scontent-lhr8-1.xx&_nc_gid=AdexNdbTNYbjdXfAAL3ENK5&oh=00_AYCVmsewDuNzfnJp-PfcvSeMop76ALUZHBgZMMCU5ZyZYQ&oe=673F5AFD



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.