Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+

"தோற்றிடேல், மீறித்

தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!"

-நன்னிச் சோழன்

 

  • எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…!

 


 

பாகம் - 01

 

தமிழீழ விடுதலைப் போராட்டக் காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களாக இருந்து வீரச்சாவடைந்த போராளிகளின் சடலங்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் எவ்வாறு அடக்கம் செய்யப்பட்டன என்பது குறித்து இக்கட்டுரையில் அலசப்பட்டுள்ளது.

இந்த அடக்கம் தொடர்பாக பார்பதற்கு முன்னர் இவற்றைக் குறிக்க புலிகளால் பாவிக்கப்பட்ட சில விதப்பான சொல்லாடல்கள் பற்றி முதற்கண் பார்ப்போம்.

 

  • பிடாரச்சொற்கள் (Newly coined terms)

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களானோர் சிறிலங்காப் படைத்துறையுடனோ அல்லது இந்தியப் படைத்துறையுடனோ அல்லது தமிழ் தேசவெறுப்புக் கும்பல்களுடனோ மிண்டி ஏற்படும் அடிபாடுகளால் மரணமடையும் போது அச்சாவானது "வீரச்சாவு" என்று புலிகளாலும் தமிழ் மக்களாலும் சுட்டப்பட்டது.  

இவ்வீரச்சாவானது களத்திடை நிகழும் போது "களச்சாவு" என்றும் களத்தில் விழுப்புண்ணேந்தி மருத்துவமனையில் பண்டுவம் பெற்றுவரும் போது அஃது பலனளிக்காது சாவடைய நேரிட்டால் "காயச்சாவு" என்றும் சுட்டப்பட்டது. எவ்வாறெயினும் வேறுபாடில்லாமல் பொத்தாம் பொதுவாக "வீரச்சாவு" என்ற சொல்லே பாரிய பெரும்பான்மையாக பாவிக்கப்பட்டுள்ளது. "களச்சாவு" என்ற சொல் ஆங்காங்கே இலக்கியத்திலும் இயக்கப்பாடல்களிலும் பாவிக்கப்பட்டுள்ளது. "காயச்சாவு" என்ற சொல்லின் பாவனையோ புலிகள் கால எழுத்துலகில் என்னால் காணமுடியவில்லை! 

வீரச்சாவடைந்த புலிவீரர் "மாவீரர்" (மா+வீரர்) என்று விளிக்கப்பட்டார். பல்பொருளுடைய இந்த மா என்ற ஓரெழுத்துச் சொல்லானது ஒருவரின் நல்ல, கெட்ட குணங்களை மிகுதிப்படுத்தும் பெயரடையாகும். அத்துடன் இக்கூட்டுச்சொல்லானது மிகப் பெரிய பெருமையும் வலிமையும் உடைய வீரர் என்று வீரச்சாவடைந்த அவ்வீரரை குறிக்கிறது. இது ஆகக்குறைந்தது 1989ம் ஆண்டு நவம்பர் மாதம் மாவீரர் வாரத்திலிருந்து பாவிக்கப்பட்டு வருகிறது. ஆயினும் இச்சொல்லை சரியாக எப்போதிலிருந்து பாவிக்கத் தொடங்கினர் என்பது தெரியவில்லை.

இம்மாவீரரின் சடலமானது "வித்துடல்" (வித்து + உடல்) என்று சுட்டப்பட்டது. இவ்வித்துடல் "துயிலும் இல்லத்தில்" புதைக்கப்படும் செயலானது "விதைத்தல்" என்று அழைக்கப்பட்டது. இச்சொல்லினை, ஒரு தாவரத்தின் வித்து (உவமை) நாட்டப்படும் போது பெரும்பாலும் முளைக்கிறது என்ற நியதியின்படி தமிழ் விடுதலை வீரர்களின் சடலங்களான (உவமேயம்) வித்துடல்கள் விதைக்கப்படும் போது அதனைக்காணும் தமிழர்களும் புதிதாய் இயக்கத்தில் சேர்வார்கள் என்று பொருள்படும் படியான உவமைச் சொல்லாக உண்டாக்கியிருந்தனர்.

"வீரவணக்கம்" என்ற சொல்லானது 1986ம் ஆண்டு வெளியான விடுதலைப்புலிகள் இதழில் முதன் முதலில் பாவிக்கப்பட்டுள்ளது. இது வீரச்சாவடைந்த ஒருவருக்கு செய்யும் வீரமான வணக்கம் என்ற பொருளில் பாவிக்கப்படுகிறது. ஒருவரின் வீரச்சாவு அறிவித்தல் வெளிவரும் போதோ அல்லது அவரது நினைவு நாள் அறிவித்தலின் போதோ இச்சொல்லானது பாவிக்கப்படுகிறது.

இந்தியப் படைக்குப் பின்னான காலகட்டத்தில் மாவீரர் கல்லறைகளின் தலைப் பகுதியின் மேற்பகுதியிலும் மற்றும் நினைவுக்கற்களின் மேற்பகுதியிலும் 'வீரம் நிறைந்த புலி' என்ற பொருள்படத் தக்கதான சொல்லான "வீரவேங்கை" என்ற சொல் எழுதப்பட்டிருப்பதைக் காணலாம். இச்சொல் தான் தவிபுஇன் அடிப்படைத் தரநிலையும் கூட. இச்சொல்லானது துயிலுமில்லங்களில் பாவிக்கப்பட முன்னர் பொதுமக்களால் பாவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வரலாற்று ஆதரங்களும் உள்ளன.

ஈழநாதம்-Eelanatham-1990.12.20.jpg

இம்மாவீரரின் தரநிலையுடனான இயக்கப்பெயருக்கு மேலே "வீரவேங்கை" என்ற சொல் பாவிக்கப்பட்டுள்ளதைக் காண்க. படிமப்புரவு (Image Courtesy): ஈழநாதம் 1990.12.20 | பக்கம் 2

ஆகக்குறைந்தது 20/12/1990 அன்று தொடக்கமாவது "வீரவேங்கை" என்ற சொல் பாவிக்கப்பட்டிருப்பதை அற்றை நாளில் வெளியான ஈழநாதம் நாளேடு மூலமாக அறியக்கூடியவாறு உள்ளது. அற்றை நாளேட்டில் 'லெப். சுஜி' என்ற மாவீரரின் 45ம் நாள் நினைவஞ்சலி பதிவில் அவரது தரநிலைக்கு மேலே வீரவேங்கை என்ற இச்சொல் எழுதப்பட்டுள்ளது. அதாவது கல்லறை மற்றும் நினைவுக்கற்களின் மேல் எழுதப்பட்டிருப்பதைப் போன்றே - அதிலும் அவை தோற்றம் பெற முன்னரே - இச்சொல் பாவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இச்சொற்கள் யாவும் புலிகளால் உருவாக்கப்பட்டு மக்கள் நடுவணில் பரவலறியாகி புழக்கத்திற்கு வந்தன. இன்றளவும் புழக்கத்தில் உள்ளன.

 

  • புழக்கச் சொற்களின் பாவனை

அப்படியானால் இச்சொற்களிற்கு முன்னர் எத்தகைய சொற்கள் பாவனையில் இருந்தன என்று உங்கள் மனதில் கேள்விகள் எழலாம். 

இதற்கு முன்னரான காலத்தில் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு என்று மேற்கூறப்பட்டவை போன்ற தனியான பிடாரச் சொற்கள் (newly coined terms) இருந்ததில்லை. பொதுவாக மக்கள் நடுவணில் புழக்கத்திலிருந்த சொற்களே புலிகளாலும் கையாளப்பட்டன; வீரமரணம், Body (த.உ.: பொடி) அ புகழுடல், தகனம் அ புதைத்தல், கண்ணீர் அஞ்சலிகள் ஆகியனவே அவையாகும்.

எடுத்துக்காட்டாக, 1984ம் ஆண்டு நவம்பர் மாதம் 26 திகதியில் வெளியான புலிகளின் அலுவல்சார் நாளேடான "விடுதலைப்புலிகள்" இதழில் தமிழீழ விடுதலை போரின் முதல் மாவீரரான லெப். சங்கரின் வீரச்சாவின் இரண்டாம் ஆண்டு நினைவையொட்டி ஓர் சுவரொட்டி வெளியாகியிருந்தது.

Lt. Shankar 2nd year poster - 1984 dec.png

படிமப்புரவு: விடுதலைப்புலிகள் மாத இதழ், 1984 திசம்பர்

இச்சுவரொட்டியில் அன்னாரின் தரநிலையுடன் இயக்கப்பெயருக்குப் பகரமாக முதலெழுத்துடனான இயற்பெயரே வழங்கப்பட்டுள்ளது. இயக்கப்பெயரானது மாற்றுப்பெயராக தரநிலையுடன் கீழே வழங்கப்பட்டுள்ளதைக் காண்க. இம்முறைமையானது, "லெப்டினன்ட்" வரையான தரநிலை உடையோருக்கு மட்டுமே 1987ம் ஆண்டு வரை கடைப்பிடிக்கப்பட்டுள்ளது என்பதை வெளிவந்த அனைத்து "விடுதலைப்புலிகள்" இதழ்கள் மூலமாக அறியக்கூடியவாறு உள்ளது. 

எனினும், கப்டன் முதல் லெப். கேணல் ஈறான தரநிலைகளிற்கு பிற்காலத்தில் அவர்களால் கைக்கொள்ளப்பட்டு இறுதிவரை கடைப்பிடிக்கப்பட்ட 'தரநிலையுடனான இயக்கப்பெயர்' என்ற முறைமை செயற்படுத்தப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, 1984ம் ஆண்டு சூலை மாதத்தில் வெளியான விடுதலைப்புலிகள் இதழில் "கப்டன் ரஞ்சன் லாலா" என்று ஒரு போராளியின் (அடிக்கற்களில் ஒருவர்) வீரச்சாவு குறிக்கப்பட்டுள்ளது. இதே போன்று தான் பிற அடிக்கற்களில் சிலரான லெப். கேணல் விக்ரர், மேஜர் கணேஸ் உள்ளிட்டோரின் விரிப்புகளும் விடுதலைப்புலிகள் இதழில் வெளியாகியுள்ளன. 

மேலும், அச்சுவரொட்டியில் வீரச்சாவு என்ற சொற்பதத்துக்குப் பகரமாக "வீரமரணம்" என்ற சொற்பதத்தையே தொடக்கத்தில் பாவித்துள்ளனர். இச்சொல்லானது 1992 நடுப்பகுதி வரை பாவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னரிருந்து "வீரச்சாவு" என்ற சொல் பாவானைக்கு வந்துள்ளது. இருப்பினும் ஆங்காங்கே வீரமரணம் என்ற சொல்லும் சமாந்தரமாக கையாளப்பட்டுள்ளது. இதே காலப்பகுதியிலும் இதற்குப் பின்னான காலப்பகுதியிலும் "களப்பலி" (களச்சாவு என்ற சொல்லுக்கு ஈடான சொல்) பாவிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் போரின் தொடக்க காலத்திலிருந்து 1991 இன் ஒரு குறித்த (சரியான காலம் தெரியவில்லை) காலம் வரை போராளிகளின் வித்துடல்கள் "பொடி/Body" என்றுதான் பேச்சு வழக்கில் விளிக்கப்பட்டுவந்தது. அக்கால புலிகளின் படைத்துறை ஆவணங்களில் வித்துடல்களைக் குறிக்க 'உடல்' என்ற சொல் பாவிக்கப்பட்டிருப்பதை "விடியலை நோக்கி முடியாத போராட்டங்கள்" என்ற கேணல் கிட்டுவால் 1988இல் எழுதப்பட்ட தொடர் மூலம் அறியக்கூடியவாறு உள்ளது.

எவ்வாறெயினும் ஆகக்குறைந்தது 1991ஆம் ஆண்டின் கார்த்திகை மாதத்திலிருந்து "புகழுடல்" என்ற சொல்லானது போராளிகளின் வித்துடல்களைக் குறிக்க பாவிக்கப்பட்டது என்ற தகவலை 1991ஆம் ஆண்டின் ஐப்பசி – கார்த்திகை விடுதலைப்புலிகள் ஏட்டிலிருந்து அறியமுடிகிறது. பிடாரச்சொல்லான "வித்துடல்" என்ற சொல் புலிகள் அமைப்பில் பாவனைக்கு வந்த காலத்தை அறியமுடியவில்லை.

இதே போன்று பிற்காலத்தில், 1986இலிருந்து, பாவிக்கப்பட்ட "வீரவணக்கம்" என்ற சொல்லுக்கு ஈடாக சாதாரணமாக ஒரு பொதுமகன் இறப்பாராயின் அவரை நினைவுகொள்ள பாவிக்கப்படும் "கண்ணீர் அஞ்சலிகள்" என்ற சொல்லையே புலிகளும் அவர்களின் ஆரம்ப காலத்தில் பாவித்துள்ளனர் என்பதை அவர்கள் லெப். சீலன் மற்றும் வீரவேங்கை ஆனந்த் ஆகியோருக்கு 19/05/1983 அன்று ஒட்டிய சுவரொட்டிக்கள் மூலம் அறியக்கூடியவாறு உள்ளது. 

தொடக்க காலத்தில் போராளிகளின் வித்துடல்கள் சுடுகாடுகளில் தகனப்பட்டன அ இடுகாடுகளில் புதைக்கப்பட்டன. அதனைச் சுட்ட தகனம் அல்லது எரியூட்டல் மற்றும் புதைத்தல் போன்ற வழக்கமான சொற்கள் பாவிக்கப்பட்டன.

புலிகள் அமைப்பில் வித்துடல்களை விதைக்கும் பழக்கம் ஏற்பட்ட 1991ஆம் ஆண்டிலும் "புதைப்பு" என்ற சொல்லே இச்செயலைச் சுட்டப் பாவிக்கப்பட்டுள்ளது. விதைத்தல் தொடர்பில் புலிகளால் வெளியிடப்பட்ட முதலாவது அலுவல்சார் கட்டுரை வெளிவந்த ஐப்பசி – கார்த்திகை விடுதலைப்புலிகள் ஏட்டில் கூட "புதைப்பு" என்ற சொல்லே பாவிக்கப்பட்டுள்ளது! எவ்வாறெயினும் "விதைப்பு" என்ற சொல்லின் பாவனை தொடங்கப்பட்ட காலத்தையும் அறியமுடியவில்லை.

 

(தொடரும்)

 

ஆக்கம் & வெளியீடு:
நன்னிச் சோழன்

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

பாகம் - 02

 

அடுத்து கட்டுரையின் நோக்கப் பகுதியைப் பார்ப்போம். 

 

  • அடிக்கற்கள் சிலரின் உடல்களிற்கு நடந்தவை

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பல்வேறு கால சூழ்நிலைகளுக்கு ஏற்ப போராளிகளின் உடல்கள் (வித்துடல் என்ற சொல்லின் பாவனையானது 1991இற்குப் பின்னரே வந்தது) அடக்கம் (அனைத்துக் காலத்திற்கும் ஏற்ற பொதுச்சொல்லாக இதனைக் கையாண்டுள்ளேன்) செய்யப்பட்டன. 

"அடிக்கற்கள்" சிலரும் வேறு சில போராளிகளும் தொடக்க காலத்தில் வீரமரணமடைந்த போது அவர்களின் உடல்கள் பல்வேறு காரணங்களுக்காக பெற்றாரிடம் ஒப்படைக்கப்படவில்லை.. லெப். சங்கர் எ சுரேஸ், லெப். சீலன் எ ஆசீர், லெப். சந்திரன் எ செல்லக்கிளி எ அம்மான், வீரவேங்கை ஆனந்த் எ ஆனந்தன், வீரவேங்கை புத்தூர் மாமா மற்றும் வீரவேங்கை புறோக்கர் ஆகியோரின் உடல்களுக்கு இவ்வாறு நிகழ்ந்தது.

 

"தமிழீழத்தின் முதல் மாவீரர்" லெப். சங்கர் எ சுரேஸ்:

சிறிலங்காக் காவல்துறையினரின் சூட்டில் வயிற்றின் பளுப் பகுதியில் காயமடைந்த லெப். சங்கர் அவர்கட்கு யாழ் பல்கலைக் கழகத்திற்கு எதிரே இருந்த குமாரசாமி வீதியில் இருந்த வீடொன்றில் வைத்து யாழ் பல்கலைக் கழகத்தின் மாணவர்கள் சிலரால் முதலுதவிப் பண்டுவம் அளிக்கப்பட்டது (மாவீரர் நாள் மரபாகி வந்த கதை).

பின்னர் மேலதிக மருத்துவத்திற்காக, நான்கு நாட்களின் பின்னர், நவம்பர் 24, 1982 அன்று, மூத்த உறுப்பினர் திரு. அன்ரன் மாஸ்டர் அவர்களின் துணையுடன் தமிழ்நாட்டிற்கு கடலேற்றப்பட்டார். தமிழ்நாட்டில் கோடியக்கரையில் கொண்டுவந்து இறக்கப்பட்டார். பின்னர் தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்திலுள்ள வைத்தியசாலை ஒன்றில் பண்டுவம் பலனின்றி உடல் உறுப்புகள் செயலிழந்த நிலையில் கேணல் கிட்டுவின் மடியில் நவம்பர் 27 மாலை 6:05 மணிக்கு காயச்சாவடைந்தார்.

'விடுதலைத் தீப்பொறி' என்ற நிகழ்பட ஆவணத்தின் படி, இவரது உடலை மருத்துவமனையிலிருந்து புலிகளின் முதலாவது தாக்குதல் கட்டளையாளரான லெப். சீலனே பொறுப்பெடுத்தார். பின்னர் அங்கே ஆதரவாளர் ஒருவரின் துணையோடு அவரின் குடும்ப அங்கத்தவர் போன்று பதிந்துவிட்டு அன்றிரவே செத்தவீடு செய்தனர்.

முதல் மாவீரன் sangar.jpg

' "தமிழீழத்தின் முதல் மாவீரர்" லெப். சங்கரின் உடல்'

பிறகு ஊரடங்கிய சாமம் போல், கேணல் கிட்டு, லெப். கேணல் பொன்னம்மான், இளங்குமரன் எ பேபி சுப்பிரமணியம் (மாவீரர்), போன்ற மூத்த தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினர்களோடு பழ. நெடுமாறன் ஐயா அவர்களது கட்சி தொண்டர்கள் என சொற்பமானவர்களுடன் அன்னாரது உடலை மதுரையில் உள்ள கீரைத்துரை சுடலையிற்கு எடுத்துச் சென்றனர். அங்கே அனைவரினது முன்னிலையிலும் லெப். கேணல் அப்பையாவால் உரிய மரியாதையுடன் முறைப்படி தகனம் செய்யப்பட்டது (மாவீரர் நாள் மரபாகி வந்த கதை). பின்னர், லெப். சீலனின் சாம்பலை மட்டும் ஒரு செம்பில் எடுத்துவந்து பாதுகாத்துவந்தனர்.

அவரது மைத்துனரான தாடியிடமிருந்து மிகுந்த சமாளிப்புகளுக்குப் பின்னர் அவருடைய புகைப்படத்தை பின்னாளில் புலிகள் பெற்றுக்கொண்டனர். பேந்து, ஓராண்டிற்குப் பின்னர் அவருடைய புகைப்படத்துடன் சேர்த்து அன்னாரின் சாம்பலையும் அவரின் வீட்டிற்கு கொடுத்தனுப்பினர், புலிகள். அவ்வேளையில் தமிழீழத்தின் சில இடங்களில் இருந்த சுவர்களில் அவரின் வீரமரண செய்தியும் புலிகளால் எழுதப்பட்டது, பொதுமக்கள் அறிந்துகொள்வதற்காக.

large_Lt.Shankarstomb.jpg.be609cd08dfce2bec202b1867578139c.jpg

லெப். சங்கர் அவர்களின் நினைவாய் உதயபீடம் படைமுகாம் துயிலுமில்லத்தில் எழுப்பப்பட்ட கல்லறை

13680727_993369757462884_450471314383292983_n.jpg

உதயபீடம் படைமுகாம் துயிலுமில்லத்தில் முதன்மைக் கல்லறையாய் லெப். சங்கரின் கல்லறை கட்டமைக்கப்பட்டுள்ளதைக் காண்க

பின்னாளில் மணலாற்றுக் கோட்டத்திலிருந்த உதயபீடம் படைமுகாம் துயிலுமில்லத்தில் லெப். சங்கர் அவர்களின் நினைவாய் கல்லறை ஒன்று எழுப்பப்பட்டது. அன்னாரின் கல்லறையை பிற மாவீரர்களின் கல்லறைகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்காக இதை முதன்மைக் கல்லறை போன்று கட்டி அதன் மேல் ஓர் வளைவையும் நிரந்தரமாக கட்டியுள்ளனர். அதன் மூலம் இதை முதன்மைக் கல்லறை போன்று தோற்றப்படுத்தியுள்ளனர்.

 

லெப். சீலன் எ ஆசீர் மற்றும் வீரவேங்கை ஆனந்த் எ ஆனந்தன்:

தமிழீழத்தின் முதல் தாக்குதல் கட்டளையாளர் லெப். சீலன் எ ஆசீர் (இவருக்கு 'பாலன்' என்ற இன்னொரு புனைபெயரும் இருந்தது என்று ஈழநாடு நாளேடு மூலம் அறியக்கூடியவாறு உள்ளது) மற்றும் வீரவேங்கை ஆனந்தன் ஆகியோர் மீசாலை தொடர்வண்டி நிலையத்திற்கு அருகில் காட்டிக்கொடுப்பால் மாலை ஐந்தரை மணியளவில் வீரமரணமடைந்தனர்(ஈழநாடு 16/05/1983). அன்னவர்களுடைய உடல்களானவை சிங்களப் படைத்துறையால் கைப்பற்றப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையின் பிணவறையில் வைக்கப்பட்டிருந்தன (ஈழநாடு 16/05/1983). 

அவற்றில் லெப். சீலனின் உடல் தான் முதலில் அடையாளம் காணப்பட்டது. அவருடைய தாயாரான திருமதி மரியசெபமாலை 17/05/1983 அன்று தமது மூத்த மகனுடன் வந்து சிறிலங்கா காவல்துறையினர் முன்னிலையில் தமது ஐந்தாவது மகனான லெப். சீலனை அடையாளம் காட்டினர் (ஈழநாடு 18/05/1983). தனது சமயப்படியான இறுதிச் செய்கைகளுக்காக தலைநகர் திருமலைக்கு கொண்டு செல்ல சிங்களவரிடம் அனுமதி வேண்டினார். ஆயினும் அவர்கள் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு அறிவித்துவிட்டதாகவும் மறுமொழி கிடைத்ததும் தெரிவிப்பதாகக் கூறி உடலை ஒப்படைக்க மறுதலித்துவிட்டனர். அதே நாளில் மற்றைய உடல் அடையாளம் காணப்படவில்லை. அதுவோ ஊதிப் பொருமி காணப்பட்டது.

Lt. Seelan, First commander of the Tamil Tigers, corpse.jpg

'முதற் கட்டளையாளர் லெப். சீலனின் உடலின் திருமுகம்'

அடுத்த நாள், 18/05/1983 அன்று, புலிகள் யாழ்ப்பாணம் மற்றும் சாவகச்சேரி ஆகிய இடங்களில் நினைவஞ்சலி சுவரொட்டிகளை ஒட்டியிருந்தனர். சிவப்பு மையினால் எழுதப்பட்டிருந்த அதில்,

 "தமிழ் ஈழ வேங்கைகளான 'சீலன்', 'ஆனந்தன்' ஆகியோருக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள்." 

என்றும் கீழே,

 "தமிழ் ஈழ விடுதலைப்புலிகள்" 

என்றும் எழுதப்பட்டிருந்தது (ஈழநாடு 19/05/1983). அதே நேரம்  கச்சேரி, முத்திரைச்சந்தி, சங்கிலியன் சிலையடி, அரசடி, கந்தர்மடம், சாவகச்சேரி ஆகிய இடங்களில் மற்றொரு சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது. அதில்,

 "தமிழ் ஈழ வேங்கைகள் சீலன், ஆனந்தனைக் காட்டிக்கொடுத்த துரோகிகளைப் பழிக்குப்பழி வாங்காமல் விடமாட்டோம்." 

என்றும் கீழே,

 "தமிழீழ விடுதலைப்புலிகள்" 

என்றும் எழுதப்பட்டிருந்தது (ஈழநாடு 19/05/1983). 

அடுத்தடுத்த நாள், 19/05/1983 அன்று, வீரவேங்கை ஆனந்தனின் உடலும் அடையாளம் காணப்பட்டது. அவருடைய பெற்றார் நீர்கொழும்பில் வசித்து வருவதும் அன்னார் அவருடைய மைத்துனர் நாகமணி வடிவேஸ்வரனுடன் தங்கியிருந்ததும் தெரியவந்தது (ஈழநாடு 20/05/1983). 

இருவரினதும் உடல்களைப் பார்க்க குடும்பத்தினர் அனுமதிக்கப்பட்டனர். ஆயினும் அவைகளை இறுதிச் செய்கைகளுக்காக எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படவில்லை; ஏனெனில், தமிழர்களின் கிளர்ச்சியை ஒடுக்க அப்பொழுது நடைமுறைப்பட்டிருந்த அவசரகால சட்டத்தின் சிறப்புப் பிரிவின் கீழ் சிங்களப் படைத்துறையால் சுட்டுக்கொல்லப்படும் எவரிற்கும் பிணச் சோதனையோ அல்லது மரண உசாவலோ நடத்தப்படமாட்டாது என்பதோடு சடலங்களும் அரச செலவிலேயே அடக்கம் செய்யப்படும் என்பது சட்டமாகும்.

அற்றை நாளே, இருவரினதும் உடல்கள் பாயில் சுற்றப்பட்டு படையப் பாரவூர்தியில் ஏற்றப்பட்டன. கடைசியாகப் பார்க்க குடும்பத்தினர் அனுமதிக்கப்படவில்லை. பின்னர் இருவரினது பொடிகளும் சிங்களக் காவல்துறை மற்றும் படையினரின் பாதுகாப்புடன் ஊர்காவற்றுறைக்கு எடுத்துச்செல்லப்பட்டு ஒதுக்குப்புறமான இடமொன்றில் எரியூட்டப்பட்டதாக தெரியவருகிறது என்று ஈழநாடு செய்தி வெளியிட்டுள்ளது (ஈழநாடு 20/05/1983). 

 

லெப். சந்திரன் எ செல்லக்கிளி எ அம்மான்:

புலிகளின் இரண்டாவது தாக்குதற் கட்டளையாளரான லெப். செல்லக்கிளி அவர்கள் 23/07/1983 அன்று இரவு மேற்கொள்ளப்பட்ட வரலாற்றுப் புகழ்பூத்த திருநெல்வேலிக் கண்ணிவெடித் தாக்குதலில் வீரமரணமடைந்த ஒரே புலிவீரர் ஆவார். அன்னாரின் உடலிற்கு என்ன நடந்தது என்பது தொடர்பாக கேணல் கிட்டு அவர்களால் தேவி வார இதழிற்கு 1988ம் ஆண்டு எழுதப்பட்டு வெளியான ''விடியலை நோக்கி முடியாத போராட்டங்கள்'' என்ற தொடர் கட்டுரையின் பாகங்களான 5, மற்றும் 18 ஆகியவற்றில் எழுதப்பட்டுள்ளது.

இத்தாக்குதலின் பின்னர் லெப். செல்லக்கிளி அம்மானின் உடல் போராளிகளால் மீட்கப்பட்டது. அம்மான் வீரமரணமடைந்த இடமான கடையின் மேலிருந்து அவரின் உடல் இறக்கப்பட்டு கேணல் கிட்டு கொண்டுவந்த வானினுள் (தமிழில் வையம் என்றும் சொல்லலாம்) ஏற்றப்பட்டது. அதோடு அங்கே கைப்பற்றப்பட்ட படைக்கலன்களும் வானினுள் ஏற்றப்பட்டன. பின்னர் வான் புறப்பட்டுச் செல்லும் போது திடிரேன கீழிறங்கி ஓடிய லெப். கேணல் விக்ரர் தனது கையில் இருந்த கைக்குண்டுகளை சிறிலங்காப் படையினர் வந்த படையப் பாரவூர்தியினுள் போட்டுவிட்டு வந்து ஏறினார். அவை வெடித்துச் சிதறின. 

இவர்கள் திரும்பிய போது இடிமின்னலோடு மழையும் தூறிலிட்டது.

பின்னர், அந்த வான் வலிகாமத்தின் நீர்வேலிப் பரப்பில் அமைந்திருந்த இவர்களின் முகாமான வீடொன்றிற்குச் சென்றது. அபோது நள்ளிரவென்பதால் வெகு சில மக்களின் நடமாட்டமே அத்தெருவில் தென்பட்டது. வானை இவர்கள் மனைக்குள் கொண்டுசென்றனர்.

அன்னாரின் உடலை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தால் அவர்களுக்கு தேவையில்லாத சிக்கல்கள் ஏற்படுமென்பதால் இவர்களே உடலை புதைக்க முடிவெடுத்தனர். வானை நீர்வேலி கண்ணாடித் தொழிற்சாலைக்குப் பின்னால் உள்ள தரவை வெளிக்குக் கொண்டு சென்றனர். அப்போது முதலில் பாதைக்காலும் பின்னர் தரவை வெளிக்குள்ளாலும் செலுத்தினார் கேணல் கிட்டு. தரவையில் செலுத்தும் போது மிகக் கடினப்பட்டே செலுத்தினர். சிறிது நேரத்திற்குப் பின்ன்னர் மேலும் செலுத்தமுடியாமல் போக சற்றுத் துரத்தில் இருந்த தாழம் புதருக்கு அருகில் ஓரிடத்தில் கிடங்கு வெட்டினர். களிமண் தரையாக இருந்ததால் மிகவும் கடினப்பட்டே வெட்டினர். பின்னர் எல்லோருமாக சேர்ந்த்து - அனைவரும் அவரது உடலைத் இறுதியாகத் தொட்டனர் - அவரது உடலை கிடங்கினுள் இறக்கினர். லெப். செல்லக்கிளியிற்கு மிக நெருக்கமான கேணல் கிட்டு மட்டும் அழுதுகொண்டே கிடங்கினுள் இறங்கி செல்லக்கிளி அவர்களுக்கு முத்தமிட்டுவிட்டு வந்தார். பின்னர் அவரது குழியினை மூடிவிட்டு அனைவரும் அங்கிருந்து சென்றனர். 

சில காலம் கழித்து அன்னாரின் குடும்பத்தினருக்கு அவரின் வீரமரணம் தொடர்பில் தகவல் தெரிவித்தனர், புலிகள்.

 

வெலிக்கடை சிறைக் கோரம்:

அடுத்து, 83 கறுப்பு சூலை இனப்படுகொலையின் போது வெலிக்கடைச் சிறையில் சிங்களக் காடையர்களின் தாக்குதலில் மாவீரர்களாகியோரின் நிலைமையோ இவற்றைவிட மோசமான கோரமாகயிருந்தது. இவர்களில் பெரும்பாலானோரின் உடல்கள் சிங்களக் காடையர்களால் துண்டு துண்டாக்கப்பட்டு சிறைக்குள்ளிருந்த புத்தரின் சிலைக்குப் படைக்கப்பட்டது. புலி வீரர்கள் இருவரினதும் (வீரவேங்கை புத்தூர் மாமா மற்றும் வீரவேங்கை புறோக்கர்) தனிக்குழுவினர் ஏழு பேரினதும் உடல்கள் உள்ளிட்ட 53 பேரின் சடலங்கள் கூட குடும்பத்தில் உள்ள எவருக்கும் தெரியாமலேயே புதைக்கப்பட்டது அல்லது தகனப்பட்டது. அன்னவர்களைக் கடைசியாகப் பார்க்கும் வாய்ப்புக் கூட அந்த ஏழைத் தமிழர்களுக்கு வழங்கப்படவில்லை. இவ்வளவு ஏன், அவர்கள் கொல்லப்பட்ட செய்தியே, அவர்களின் குடும்பத்தினருக்கு வானொலி மூலம் மட்டுமே தெரியவந்தது என்பது மிகவும் கொடுமையானது (Welikada_Massacre, sangam.org).

 

(தொடரும்)

 

ஆக்கம் & வெளியீடு:
நன்னிச் சோழன்

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

பாகம் - 03

 

அடுத்து இந்தியப்படை ஈழ மண்ணில் கால்வைக்கும் வரை நடந்தவை தொடர்பில் காண்போம்.

 

  • 1984 தொட்டு, இந்தியப் படையின் காலம் வரை

இதன் பின்னான காலகட்டத்தில், 1984 தொட்டு, இந்தியப் படையின் காலம் வரை போராளி ஒருவரின் சடலம் கிடைக்கும் போது அதற்கு சீருடை இந்திய படைத்துறையை ஒத்த சீருடை அணிவித்து ஒரு உடலிற்கான முழு செய்கைகளும் செய்யப்படும் (இன்போர்ம் மட்டும் செய்யப்பட மாட்டாது, வசதியற்ற காரணங்களால்.). பின்னர் அந்தந்த மாவட்ட கட்டளையாளர், மற்றும் அரசியல்துறைப் போராளிகள் எல்லோருமாக சேர்ந்து வீரமரணமடைந்த போராளியின் பெற்றோரிடம் அவரின் உடலை இறுதி செய்கைக்காக ஒப்படைப்பர். பெற்றோர் தங்கள் சமயப்படி வீட்டில் தேவையான நாட்கள் வைத்து இறுதிச் செய்கைகளை முடிப்பர். அப்போது உடலானது குறித்த போராளியின் வீட்டில் வைக்கப்பட்டிருக்கும். அதன் போது மக்கள் திரண்டு வந்து தமது இறுதிவணக்கத்தை தெரிவித்துவிட்டுச் செல்வர். பின்னர் உடல்களை ஊர்வலமாக சுடுகாடு அ இடுகாட்டிற்கு புலிகளின் படைத்துறை அணிவகுப்புடன் எடுத்துச் சென்று எரிப்பர் அ புதைப்பர், முறையே.

இதிலும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பரப்புகள் மற்றும் கட்டுப்பாடல்லாத பரப்புகள் என்று வேறுபாடிருந்தது.

எடுத்துக்காட்டிற்கு, 17/01/1986 அன்று மன்னார் நாயாற்றுவெளியில் சிறிலங்கா படையினருடனான நேரடிச் சமரில் வீரமரணமந்த வீரவேங்கை றோஸ்மனின் இறுதி செய்கையைக் காண்போம். இவர்தான் இந்தியப்படைக்கு முன்னரான காலத்தில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முதன்முறையாக மிகக் குறைந்த வயதில் (17இல்) வீரமரணமடைந்த போராளியாவார். 

rosman - 17-1-86.png

வீரவேங்கை றோஸ்மனின் உடல் புதைவிடம் நோக்கி படைய மரியாதையுடன் எடுத்துச்செல்லப்படுகிறது. படிமப்புரவு: விடுதலைப்புலிகள் மாத இதழ், 1986

இக்கால கட்டத்தில் இவரது செத்தவீடு (அக்காலத்தில் வீரச்சாவுவீடு என்ற சொல் பாவனையில் இருக்கவில்லை) நடந்த பரப்பு புலிகளின் கட்டுப்பாட்டுப் பரப்பாகும். மேலும், இக்காலகட்டத்தில் அவரரவர் சமயப்படி இறுதி செய்கைகள் செய்ய புலிகள் அனுமதித்தனர். இவர் கிறிஸ்தவ சமயத்தை சார்ந்தவர் என்பதால் வேதப்படி வீட்டில் இறுதி செய்கைகள் முடிந்து, இறுதிவணக்கமும் முடிந்து, மன்னாரில் உள்ள ஆட்காட்டிவெளி புதைவிடம் (அப்போது "துயிலுமில்லம்" என்ற சொல் பாவனைக்கு வரவில்லை.) நோக்கி எடுத்துச்செல்லப்படுவதை படிமம் காட்டுகிறது. இதில், சவப்பெட்டியைத் (அக்காலத்தில் "சந்தனப் பேழை" என்ற சொல் பாவனையில் இருக்கவில்லை) தாங்கி வரும் மக்களுக்கு முன்னால் தெருவின் இரு மருங்கிலும் புலிவீரர்கள் குடிமை உடையில் (அக்காலத்தில் வரிச் சீருடை வரவில்லை) அணிவகுக்கின்றனர். புலிவீரர்களின் நடுவில் வேதச் சமயச் சின்னமான 'சிலுவை' எடுத்துச்செல்லப்படுவதைக் காண்க. கொண்டு செல்லும் போது ஊர்தியிலோ அல்லது நடந்தோ தத்தம் வசதிக்கு ஏற்ப கொண்டுசெல்வர். இதுவே அக்காலத்திய புதைவிடம் நோக்கிச் செல்லும் போது கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறையாகும். 

இதுவே சைவ சமயத்தைச் சேர்ந்த போராளியின் உடலாக இருந்திருப்பின், சைவ சமய முறைப்படி வீட்டில் இறுதி செய்கைகள் முடித்து, இறுதிவணக்கமும் முடிந்து, தத்தம் வசதிக்கு ஏற்ப சவப்பெட்டியில் வைத்து சுடுகாட்டிற்கு கொண்டுசெல்வர், புலிகளின் அணிவகுப்புடன். பின்னர் சுடுகாட்டில் எரியூட்டுவர். இதே நடைமுறை தான் முஸ்லிம் இனப் போராளிகளுக்கும் நடந்தது.

இவ்வாறு சுடுகாட்டிற்கோ இல்லை இடுகாட்டிற்கோ கொண்டு செல்லப்படுபவர்களுக்கு அங்கு வைத்து புனித படைய மரியாதை வழங்கப்படும். அப்போது 27 வெற்றுச் சன்னங்களை போராளிகள் ஒவ்வொருவராக தீர்ப்பர். இது எப்பொழுதிலிருந்து நடைமுறைக்கு வரப்பட்டது என்பது குறித்துத் தெரியவில்லை.

இவ்வாறாக இருந்துவந்த நடைமுறையில் சில மாற்றங்கள் ஆகக்கூடியது 1986 ஒக்டோபருக்குப் பின்னர் கொண்டுவரப்பட்டன. உடலை புதைவிடம்/ சுடுகாடு நோக்கி கொண்டு செல்லும் போது சமய அடையாளங்களை மக்கள் கொண்டு செல்வதை புலிகள் தவிர்த்தனர். மேலும் புலிகளின் செலவிலேயே அலங்கார ஊர்திகள் கொணரப்பட்டு அதில் சவப்பெட்டிகள் வைக்கப்பட்டு எடுத்துச்செல்லப்பட்டன. இச்சவப்பட்டிகளானவை சந்தன மரத்தால் செய்யப்பட்டவை அல்ல. அவை சாதாரண மரங்களாலாஅன சவப்பெட்டிகள் தாம்.

மேலும், பொதுமக்களுக்கும் வீரமரணமடைந்த போராளிக்கும் இடையிலான உறவும் வீரமரண நிகழ்வுகளின் போது ஒரு வகையான தாக்கத்தை செலுத்திருந்தது எனலாம்.

புலிகள் இயக்கத்தில் வீரமரணத்தின் பின்னர் லெப். கேணல் தரநிலையை முதன்முதலில் பெற்றவரான லெப். கேணல் விக்ரரின் (இவர் அப்போதைய மகளிர் பிரிவின் கப்டன் தரநிலை போராளியான அனோஜாவின் மடியில் தான் மாவீரரானார் என்றும் அன்னாரிற்கான புனித படைய மரியாதையின் போது முதல் வேட்டினையும் அனோஜாவே தீர்த்ததாகவும் நேரில் கண்ட இன்னொரு விடுதலைப் போராட்ட வீரர் என்னிடம் தெரிவித்தார். அனோஜா புலிகளின் மூத்த பெண் போராளியும் தலைவரின் குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவரும் ஆவார். மகளிர் பிரிவு தொடங்கப்பட முன்னரிருந்து பகுதி நேரப் போராளியாகக் கடமையாற்றியவர் ஆவார்.)

இவரது சாவுவீட்டு நிகழ்வானது புலிகளால் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. 

வீரமரணமடைந்த பின்னர், அவரின் உடலானது முறைப்படி கழுவப்பட்டு புதுச் சீருடை அணிவிக்கப்பட்டது. பின்னர் சவப்பெட்டியில் வைக்கப்பட்டு அன்னாரின் வீட்டிற்குக் கொண்டுவரப்பட்டு அவரது பெற்றாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அன்னாரின் உடல் அவரின் வீட்டிற்குள்ளேயே சமய முறைப்படியான செய்கைகளுக்காக வைக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து அது அருகில் உள்ள பாடசாலை ஒன்றில் மக்களின் இறுதிவணக்கத்திற்காக வைக்கப்பட்டது. இறுதிவணக்கம் முடிந்த பின்னர், அவரின் சவப்பெட்டி பிற போராளிகளால் (ஆண்கள்) தூக்கி செல்லப்பட்டு புலிகளின் அலங்கார ஊர்தியில் (பிக்-ப்) ஏற்றப்பட்டு ஆட்காட்டிவெளி புதைவிடம் நோக்கி ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. கொண்டு செல்லும் போது மக்கள் திரளாக இறுதிவணக்கம் செலுத்தினர். அங்கே புதைவிடத்திற்கு கொஞ்சம் தொலைவில் அலங்காரவூர்தி நிறுத்தப்பட்டு அதிலிருந்து சவப்பெட்டி போராளிகளால் தூக்கி வரப்பட்டது. பின்னர் புதைகுழியினுள் புதைக்கப்பட்டது. அதன் பின்னர் மக்கள் வரிசையாக வந்து மண் தூவிசென்றனர். பின்னர், புதைகுழியினை சுற்றி 27 பெண்போராளிகள் நின்று 27 தடவை வேட்டுகளைத் தீர்த்தனர் (இத்தகவல் மட்டும் போராளி ஒருவர் எனக்கு வழங்கிய வாக்குமூலம்).

இந்நடைமுறையே பின்னாளில் மாவீரர் துயிலுமில்லங்கள் கட்டப்பட்ட பின்னர் சில மாற்றங்கள் மற்றும் புதிய புகுத்தல்களுடன் இயக்க மரபாக கைக்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Lt. Col. victor.jpg

அன்னாரின் உடலின் தலைமாட்டில் சமய செய்கைக்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதைக் காண்க

 

adwqwq.png

உடலிற்கு புத்தம் புதிய சீருடை அணிவிக்கப்பட்டுள்ளதைக் காண்க

 

afw.png

உடல் மக்கள் திரளிற்கு நடுவணில் ஆட்காட்டிவெளி புதைவிடம் நோக்கி எடுத்துச் செல்லப்படுவதைக் காண்க

 

afwfw.png

ஆட்காட்டிவெளி புதைவிடத்தில் பிக்கப்பிலிருந்து அன்னாரின் சவப்பெட்டி இறக்கிக்கொண்டு புதைகுழி நோக்கி கொண்டு செல்லப்படுவதைக் காண்க

 

adwwq.png

புதைகுழியினுள் மக்கள் மண்தூவுவதைக் காண்க

 

dw.png

27 மகளிர் போராளிகள் 27 சன்னங்கள் தீர்ப்பதைக் காண்க

இவ்வாறான இறுதிவணக்க நிகழ்வுகள் படைத்துறைக் கட்டுப்பாட்டில் இருந்த குடும்பத்திற்கு மாறுபட்டன. உடல் குடும்பத்தினரின் கைகளில் கிடைத்திருப்பின், புலிகளின் படைய அணிவகுப்பின்றி உடல்கள் பொதுமக்களால் எடுத்துச்செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டன என்பதுவே அதுவாகும்.

 

(தொடரும்)

 

ஆக்கம் & வெளியீடு:
நன்னிச் சோழன்

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

பாகம் - 04

 

அடுத்து இந்தியப் படைக் காலத்தில் போராளிகளின் உடல்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றிக் காண்போம்.

 

  • இந்தியப்படைக் காலம்:

குலை நடுங்கும் கொடூரங்கள் நிரம்பியது இந்தியப்படைக் காலமாகும். இக்காலத்தில் தமிழ்ப் பெண்களில் கற்புகள் எல்லாம் இந்தியப் படையினரால் சூறையாடப்பட்டுக்கொண்டிருந்தன. சிங்களப் படையினர் செய்ய மறந்த கொடுமைகளை எல்லாம் இந்தியப் படையினர் செய்துகொண்டிருந்தனர். போதாக்குறைக்கு தமிழ் தேச வெறுப்புக் கும்பல்களான ஈ.பி.டி.பி., ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எஃவ்., ஈ.என்.டி.எல்.எஃவ், தமிழ் தேசிய ராணுவம் போன்ற இந்தியக் கூலிப்படைகளும் தம் பங்கிற்கு தமிழ் மக்களை அழித்துக்கொண்டிருந்தன. 

இந்தியப்படைக் காலத்தில் இயக்கக் கட்டமைப்புகள் எல்லாம் சிதைவடைந்து புலிகள் மீளவும் கரந்தடிப் போராட்டத்தை தொடங்கியிருந்தனர். இதனால், சில போராளிகள் காடுகளுக்குச் சென்றனர். சில போராளிகள் ஊர்வழிய நின்றனர். தமிழ் மக்களும் விடுதலைக்காக போராடிக்கொண்டிருந்த புலிவீரர்களுக்கு தம்மால் ஆன ஒத்துழைப்புகளை வழங்கினர். எனினும் ஆங்காங்கே காட்டிக்கொடுப்புகளும் நடந்துகொண்டிருந்தது.

இந்தியப் படையினருடனான அடிபாடுகளின் போது அடவி/காடுகளில் வீரமரணமடையும் போராளிகளின் உடல்களை பெற்றோரிடம் ஒப்படைக்க முடியாத சூழ்நிலை இருந்தது; காட்டைச் சுற்றிவர இந்தியப் படையினர் காவலிருந்தனர். அதனால் புலிகளே அவற்றை காடுகளிற்குள்ளேயே புதைத்தனர். இஃது ஏனெனில், காட்டில் உடல்களை எரித்தால் எழும் புகை மூலம் புலிகளின் இருப்பிடத்தை இந்தியப்படையினர் கண்டு பிடித்து விடுவார்கள் என்பதால் தான் வழமையான எரித்தல் முறைமை இங்கு கடைப்பிடிக்கப்படவில்லை.

இதற்கு மற்றொரு காரணம், 1991 ஐப்பசி-கார்த்திகை விடுதலைப்புலிகள் இதழின்படி, இந்தியப் படைகளுடனான சமரின் போது புலிகள் பெற்ற வெற்றிகளுக்கு உறுதுணையாக இருந்தது மணலாற்றுக் காடாகும். ஆகவே இங்கிருந்து சமராடிய புலிவீரர்கள் தாம் வீரமரணமடையும் போது இக்காட்டினிலேயே புதைக்கப்பட வேண்டும் (அப்போது "விதைத்தல்" என்ற சொல் பாவனைக்கு வரவில்லை) என்று விரும்பினர். அவர்களின் ஆசையும் அவ்வாறே நிறைவேற்றப்பட்டது. மேலும், மணலாற்றில் நின்று சமராடிய போராளிகள் பலர் தாம் வேறிடங்களிற்குச் சென்று வீரமரணமடைந்தாலும் தமது உடலானது தம் வாழ்வோடு ஒன்றறக் கலந்துவிட்ட மணலாற்றிலேயே தான் புதைக்கப்பட வேண்டும் என்று வாய்மூலமும் எழுத்துமூலமும் தேசியத் தலைவரிடம் கோரிக்கை விடுத்தனர். அக்கோரிக்கையும் நிறைவேற்றப்பட்டது.

எடுத்துக்காட்டிற்கு மணலாற்றுக் காட்டில் நடைபெற்ற ஒரு போராளியின் உடல் புதைப்பு நிகழ்வினைக் காண்போம். இப்புதைப்பு நடைபெற்ற காலம் தெரியவில்லை. இது ஏப்ரல் 1999 அன்று வெளியான ஒளிவீச்சிலிருந்து எடுக்கப்பட்டது ஆகும்.

manalaru.png

மாவீரரின் வித்துடலிற்கு போராளிகள் அகவணக்கம் செலுத்துகின்றனர். படிமப்புரவு: ஒளிவீச்சு 04/1999

 

wfw.png

தலைவர் புதைகுழியினுள் மண் தூவுகின்றார். படிமப்புரவு: ஒளிவீச்சு 04/1999

இந்நிகழ்படத்தின் படி, முதலில் கதிரைகள் வைத்து ஏற்படுத்தப்பட்ட மேசையின் மேல் இரு உடல்கள் வைக்கப்பட்டுள்ளன. அதனைச் சுற்றிவர போராளிகள் நின்று அகவணக்கம் செலுத்துகின்றனர்.

பின்னர் வேறொரு இடத்தில் 6 அடி புதைகுழியினுள் இரு உடல்கள் விதைக்கப்படுகின்றன. அப்போது தலைவர் தொடங்கி வைக்க ஒவ்வொரு போராளியாக வந்து புதைகுழியினுள் மண் தூவிவிட்டுச் செல்கின்றனர். பின்னர் சில நாட்கள் கழித்து அவ்விடத்தில் கற்கள் மூலமாக ஆக்கப்பட்ட ஒரு கல்லறை உருவாக்கப்பட்டிருந்ததைக் காணக்கூடியதாக உள்ளது.

10991161_963605463650784_7255410484016308238_n.jpg

இடம் மணலாற்றுக் காடு. காலம்: 1988. படிமப்புரவு: த.வி.பு.

இதே போன்று மற்றொரு படிமத்தினையும் நோக்குக. இப்படிமத்தில் இரு மாவீரர்களின் உடலை ஏனைய போராளிகள் இறுதிவணக்கத்திற்கு தயார் செய்வதையும் சுற்றிவர பெண் போராளிகள் வீரவணக்கம் செலுத்துவதையும் காணலாம். இவ்விரு மாவீரர்களின் உடல்களும் இரு உருள்கலன்கள் மேல் வைக்கப்பட்டுள்ளதையும் நான்மூலைகளிலும் மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டுள்ளதையும் காண்க.

those times in manalaaru.jpg

மாணலாற்றுக் காட்டினுள் கற்கள் மூலமாக ஆக்கப்பட்ட பல கல்லறைகள். படிமப்புரவு: எரிமலை

ஆயுதவழி விடுதலைப் போராட்ட வீரர் ஒருவர் எனக்களித்த நேரடி வாக்குமூலத்தின் படி, பின்னாளில் கோடாலிக்கல் மாவீரர் துயிலுமில்லமென அழைக்கப்பட்ட இடத்திலிருந்த கல்லறைகள் யாவும் 1988 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியிலேயே மேலுள்ள படத்திலுள்ளவாறு உருவாக்கப்பட்டு விட்டதென்று தெரிவித்தார். இவர் இந்தியப் படையின் காலத்தில் இம்முகாமினுள் கடமையில் ஈடுபட்டிருந்தவர் ஆவார்.

இதே காலத்தில் மணலாறு மற்றும் வவுனியாக் காடுகள் தவிர்ந்த பகுதிகளில் வீரமரணமடைந்த போராளிகள் அந்தந்த சூழ்நிலைகளுக்கு ஏற்ப விடுபட்டன அ அரிதாக போராளிகளால் எடுக்கப்பட்டு உரியவர் பெற்றாரிடம் கமுக்கமான முறையில் ஒப்படைக்கப்பட்டன.

விடுபட்டவை இந்தியப்படைகளால் கைப்பற்றப்பட்டு உசாவலின் பின்னர் சில வேளைகளில் பெற்றாரிடம் ஒப்படைக்கப்பட்டன. அவர்கள் வழக்கமான சமய முறைப்படி உடல்களை சுடுகாடு அ இடுகாடுகளில் அடக்கம் செய்தனர், சைவம், வேதம், இஸ்லாம் என்ற பேதமின்றி.

பெரும்பாலான வேளைகளில் இந்தியப்படையினர் புலிவீரர்களின் உடல்களை அவ்விடத்திலையே விட்டுவிட்டுச் சென்றுவிடுவர். அவற்றை அவ்வூர் பொதுமக்கள் எடுத்து சுடுகாடுகளில் எரித்துவிடுவர்.

அடுத்து சிங்களப் படைகளுக்கும் புலிகளுக்குமான இணக்க காலத்தின் இறுதிப் பகுதியில், 1990இற்கு மேல், நடைபெற்ற ஒரு வீரமரண நிகழ்வினைக் காண்போம்.

எடுத்துக்காட்டிற்கு, மேஜர் சோதியாவின் வீரமரண நிகழ்வினைக் காணலாம். இவர் 11.01.1990 அன்று சுகவீனம் காரணமாக புலிகளின் முகாமொன்றில் சாவடைந்தார். இவரது உடலானது முதலில் புலிகளின் முகாமில் கட்டளையாளர்கள் உள்ளிட்டவர்களால் வீரவணக்கம் செலுத்தப்பட்டு முடிய வீட்டிற்கு அனுப்பப்பட்டது.

49756917_2255487451405679_7991222103762272256_n.jpg

புலிகளின் முகாமில் வீரவணக்கம் நடைபெறுகிறது
 

268434_395098863897753_695158488_n.jpg

சவப்பெட்டி முகாமிலிருந்து வெளியில் கொண்டுவரப்படுகிறது

பின்னர் உடல் யாழ்ப்பணத்தில் உள்ள இவரது வீட்டிற்கு போராளிகளாலையே கொண்டுவரப்பட்டது, அவர்கள் மூன்று விதமான சீருடை அணிந்திருந்தனர். இதுவே வரலாற்றில் முதன் முறையாக புலிவீரர்கள் வரிப்புலியில் மக்கள் முன்றலில் தோன்றிய நிகழ்வாக இருக்கக்கூடும். ஆனால் அனைவரும் அன்று வரிச் சீருடையில் வரவில்லை. சிலர் இந்திய சீருடையை ஒத்து புலிகளால் வடிவமைக்கப்பட்டிருந்த சீருடையிலும் வந்திருந்தனர்.

Maj Sothiya's viththudal.png

அன்னாரின் தாயர் விழிமூடிய மகளின் திருமுகம் கண்டு விம்முகிறார்
 

271563185_718076092510226_6398681052794617356_n.jpg

பெற்றோர் இருமருங்கிலும் அமர்ந்திருக்க இந்தியப் படைகளின் சீருடையை ஒத்த சீருடை அணிந்த புலிவீரிகள் சூழ்ந்து நிற்கின்றனர். படிமப்புரவு: தமிழீழ விடுதலைப்புலிகள்

 

138472043_109795061060848_2035099476049853156_n.jpg

அலங்காரவூர்தியில் ஊர்வலத்திற்காக ஏற்றப்பட அணியமான நிலையில் உடல் கொண்ட சந்தனப் பேழை உள்ளது. அதன் தலைமாட்டிற்கு நேரே வரிப்புலி அணிந்த புலிவீரனொருவன் நிற்பதைக் காண்க. படிமப்புரவு: தமிழீழ விடுதலைப்புலிகள்

மேற்கூறப்பட்ட அனைத்து சமயச் செய்கைகளும் அன்னாரின் வீட்டில் நடந்து முடிவடைந்தது. அங்கு நடந்த இறுதிவணக்கத்தின் போது படைக்கலன் பூண்ட புலிவீரர்களும் நின்றிருந்தனர். பின்னர் மக்கள் வெள்ளத்தில் அன்னாரின் சவப்பெட்டி தாங்கிய அலங்காரவூர்தி இடுகாடு நோக்கி கொண்டு செல்லப்பட்டது. அப்போது வழியெங்கிலும் நின்று பொதுமக்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். 

271681511_485632963077801_18844128284776742_n.jpg

மக்கள் வெள்ளத்தில் அலங்காரவூர்தியில் ஊர்வலத்தின் போது உடல் கொண்ட சந்தனப் பேழை. படிமப்புரவு: தமிழீழ விடுதலைப்புலிகள்

138158184_109795017727519_5928037494193229717_n.jpg

வழியெங்கிலும் மலர்தூவி அஞ்சலிக்க ஆயத்தமாய் தமிழீழ மக்கள் நிற்கின்றனர். படிமப்புரவு: தமிழீழ விடுதலைப்புலிகள்

இறுதியாக இடுகாடு ஒன்றில் அன்னாரது உடல் புதைக்கப்பட்டது. அப்போது புனித படைய மரியாதை வழங்கப்பட்டதா என்பது குறித்துத் தெரியவில்லை. பின்னர் அவ்விடத்தில் அவருக்கு ஒரு நினைவுச்சின்னம் எழுப்பப்பட்டது.

138182486_109795054394182_4099025993341405827_n.jpg

மேஜர் சோதியாவின் சமயப்படியான கல்லறை. படிமப்புரவு: தமிழீழ விடுதலைப்புலிகள்

 

 

  • இந்தியப்படைக் காலத்திலிருந்து முதல் வித்துடல் விதைப்பு வரை:

இந்தியப் படையின் காலத்திற்கு பின்னரிருந்து உடல் விதைக்கும் இயக்க மரபு நடைமுறைப்படுத்தப்படும் வரை, இந்தியப்படை வருவதற்கு முன்னர் என்ன நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டதோ அதுதான் தொடர்ந்தும் கடைப்பிடிக்கப்பட்டது.

 

(தொடரும்)

 

ஆக்கம் & வெளியீடு:
நன்னிச் சோழன்

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

பாகம் - 05

 

இந்தியாவில் புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கப்படும் வரை தமிழீழத்தில் சிறிலங்காப் படையினருக்கு எதிராக பல்வேறு காலகட்டத்தில் நடந்த மோதல்களில் காயமடைந்த தமிழீழ விடுதலைப்புலிப் போராளிகள் மேலதிகப் பண்டுவத்திற்காக தமிழ்நாட்டிற்குக் கொண்டு செல்லப்படுவதுண்டு. 

அங்கு கொண்டு செல்லப்பட்டவர்களில் சிலர் பண்டுவம் பலனளிக்காத நிலையில் அங்கேயே வீரமரணமடைந்துள்ளனர். ஆகக்குறைந்தது ஒருவராவது பண்டுவம் பெற்று வரும் போது அவர்களை இந்திய உளவுத்துறையினர் கைதுசெய்ய முற்படுகையில் குப்பி கடித்து வீரமரணமடைந்தனர். 

இவ்வாறாக தமிழ்நாட்டில் வீரமரணமடைந்தோரின் உடல்கள் கால சூழ்நிலைக்கேற்ப தமிழ்நாட்டிலேயே தகனப்பட்டும் புதைக்கப்பட்டும் வந்தன. இப்பகுதியில் இது தொடர்பில் விரிவாகக் காணலாம்.

 

லெப். சங்கர் எ சுரேஸ்

முதல் மாவீரர் லெப். சங்கர் எ சுரேஸின் உடல் எவ்வாறு மதுரையில் உள்ள கீரைத்துரை சுடலையில் தகனப்பட்டது என்று அறியப்பட்ட தகவல்கள் மூலம் பாகம் - 1 இல் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.  

 

கொளத்தூரில் தகனப்பட்ட 9 புலிவீரர்கள்

தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் வட்டத்தில் உள்ள சிற்றூர்களில் ஒன்று உக்கம்பருத்திக்காடு ஆகும். இது கொளத்தூர் பேரூராட்சியை ஒட்டியுள்ளது. இங்கு தான் திரு. கொளத்தூர் மணி அவர்களில் வீடு அமைந்துள்ளது. இவ்வூர் அமைந்துள்ள மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்புப் பரப்பில் தான் 9 பேர்களின் உடல்கள் தகனப்பட்டன (வல்வை குமரன், தமிழீழ விடுதலைப்புலிகளின் அத்திவாரங்கள்!).

திரு. கொளத்தூர் மணி அவர்களின் வீட்டிற்கு அருகில் திரு. செல்லமுத்து என்ற கமக்காரர் வசித்து வந்துள்ளார். இவர் எப்பொழுதும் காட்டிற்குள் கமம் செய்பவர் ஆவார். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஊடகவியலாளரான திரு. சிவசுப்பிரமணியம் அவர்களிடத்தில் திரு. செல்லமுத்து வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் கீழ்க்கண்ட தகவல் பதிவாக்கப்படுகிறது.

Sivasubramaniyam.jpg

திரு. சிவசுப்பிரமணியம்

எப்போதாவது தடுதாளியாக திரு. கொளத்தூர் மணி அவர்களின் "புல்லட்" உந்துருளியும் அதன் பின்னே வெள்ளை நிற வான் (தமிழில் "வையம்") ஒன்றும் வந்துவிட்டதென்றால் இவர் கமத்தை நிறுத்திவிட்டு தன் மாட்டுவண்டியில் விறகுகளை ஏற்றிக்கொண்டு குறிப்பிட்ட இடம் நோக்கி செல்லத் தொடங்குவராம். இவரைப் போலவே காட்டில் வேலை செய்யும் அத்தனை பேரும் தம் வேலைகளை அப்படியே நிறுத்திவிட்டு குறிப்பிட்ட இடம் நோக்கிச் செல்லத் தொடங்குவராம். குறித்த இடத்தில் எப்படியும் ஒரு மூப்பது பேர் வரை கூடிவிடுவர். அவர்கள் அனைவருமாக சேர்ந்து உடலை வானிலிருந்து இறக்கி ஒரு இடத்தில் வைத்து தகனம் செய்வராம்.

தகனம் செய்வதை மேற்பார்வையிட புலிகளின் பொறுப்பாளர் ஒருவரும் அங்கு வருவாராம். அவர் தகனப்படுத்தலில் கலந்துகொண்டோரின் எண்ணிகை, அவர்களின் பெயர் விரிப்புகள், தீமூட்டியவரின் பெயர், தகனப்பட்ட நேரம், தகனப்படுத்தலின் புகைப்பட ஆதாரங்கள் மற்றும் இன்னபிற வேண்டிய தகவல்களை அங்கிருந்து பெற்றுக்கொள்வராம். பின்னர் அவற்றை அறிக்கையாக்கி மேலதிகாரிகளுக்கு அனுப்புவாராம். இங்கே நடைபெற்ற அத்தனை தகனப்படுத்தல்களும் புலிகளால் பதிவுசெய்யப்பட்டனவாம்.

 

லெப். போசன்

இவர் தமிழீழத்தை வன்வளைத்து நின்ற இந்தியப் படையினருக்கு எதிரான சமரொன்றில் 1989 ஆண்டு விழுப்புண்ணடைந்தார். பின்னர் பண்டுவத்திற்காக தமிழ்நாட்டிற்கு படகு மூலம் கொணரப்பட்டார். 

தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் தங்கியிருந்து பண்டுவம் பெற்றார். அப்போது இவரின் இருப்பிடத்தை இந்திய உளவுத்துறை கண்டுபிடித்து இவரைக் கைது செய்ய முயன்றது. இதை அறிந்த லெப். போசன் பகைவரின் கையில் தான் சிக்கக் கூடாது என்பதற்காக 27/06/1989 அன்று குப்பி கடித்து வீரமரணமடைந்தார்.

அன்னாரின் உடல் தஞ்சாவூரில் உள்ள வடக்கு வாசல் என்ற இடத்திலிருந்த இடுகாட்டில் புதைக்கப்பட்டது. இவருக்கு நடந்த இறுதிச் சடங்குகள் தொடர்பிலோ இவரின் உடல் புதைக்கப்பட்ட நிகழ்வுகள் தொடர்பிலோ தகவல் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. இவர் புதைக்கப்பட்ட இடத்தில் இவரின் நினைவாய் கல்லறை ஒன்றும் எழுப்பப்பட்டது. அக்கல்லறையின் கல்வெட்டை திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் திரு கி. வீரமணி அவர்கள் அறியில்லாத் திகதியொன்றில் திறந்து வைத்தார் என்பதை அக்கல்வெட்டில் இடம்பெற்றுள்ள செய்தி மூலம் அறியக்கூடியதாக உள்ளது. 

unnamed (2).jpg

லெப். போசனின் கல்லறையில் உள்ள நினைவுக்கல்வெட்டு. 

இக்கல்லறையில் உள்ள கல்வெட்டில் கீழ்க்கண்டவாறு எழுதப்பட்டுள்ளது:

"தமிழீழ விடுதலைப் புலி
போசன் நினைவுக்கல்வெட்டு
மறைவு - 27-06-1989 
திறப்பாளர் : 
தமிழினக் காவலர் 
மானமிகு கி.வீரமணி 
எம்.ஏ.பி.எல் (திராவிடர் கழகப் பொதுச் செயலாளர்) 
நகர திராவிடர் கழகம். தஞ்சாவூர்"

பின்னாளில் பராமரிப்பின்றி கைவிடப்பட்ட நிலையிலிருந்த இக்கல்லறையானது இனந்தெரியாதோரால் 2018ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

லெப் . போசன்.jpg

பராமரிப்பின்றி சிதிலமடைந்த நிலையில் கல்லறை கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் மு. களஞ்சியம் அவர்கள் பார்வையிடுகிறார். 

அதே ஆண்டில், இது புனரமைக்கப்பட்டு அதற்கு தமிழர் நலப்பேரியக்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் இயக்குநரும் அரசியல் கருத்தாளருமான திரு. மு. களஞ்சியம் மற்றும் அவரது ஆதரவாளர்களால் தமிழ்நாட்டுக் காவல்துறையின் தடையினையும் மீறி விளக்கேற்றப்பட்டு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. 

லெப் . போசன் (2).jpg

புனரமைக்கப்பட்டு வீரவணக்கம் செலுத்தப்பட்ட பின்னர். 

பின்னர், அதே ஆண்டிலேயே இந்திய உளவுத்துறையினரால் உடைத்தெறியப்பட்டது. இது நடந்தேறிய காலகட்டத்தில் தமிழ்நாட்டு அரசாங்கமாக தி.மு.க. வும் இந்திய நடுவண் அரசாங்கமாக பா.ஜ.க.உம் இருந்தன.

 

லெப். கேணல் நவம்

தமிழீழத்தில் இந்தியப் படையினர் தங்கியிருந்த நெடுங்கேணிப் பாடசாலை முகாம் மீது வெற்றிகரமாக தாக்குதல் நடத்தின் விட்டு தெருவில் நின்றிருந்த போது வந்து வீழ்ந்த கணையெக்கி எறிகணையில் கடுங்காயப்பட்டார் (இன்னுமொரு நாடு என்ற ஆவணத் திரைப்படத்தின்படி). மருத்துவத்திற்காக தமிழ்நாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பண்டுவம் பெற்று வரும் வேளையில் காயச்சாவைத் தழுவிக்கொண்டார் (வல்வை குமரன், தமிழீழ விடுதலைப்புலிகளின் அத்திவாரங்கள்!). 

லெப். கேணல் நவத்தின் உடலை மருத்துவமனையில் இருந்து திரு. கொளத்தூர் மணி அவர்கள் எடுத்துச் சென்றார். பின்னர் அவருடைய உடலைக் குளிப்பாட்டி புலிச்சீருடை அணிவித்து இறுதிச் சடங்கு செய்தனர், திராவிட கழக உறுப்பினர்கள் மற்றும் தமிழ்நாட்டில் தங்கியிருந்த புலி உறுப்பினர்கள். . பின்னர் இவர்கள் அனைவரும் அணிவகுத்துச் செல்ல அவரது உடல் சுடலை ஒன்றை நோக்கி எடுத்துச் செல்லப்பட்டது. அங்கே நவம் அவர்களது உடலுக்குத் தீ மூட்டப்பட்டது. அவரது அஸ்தியை சேகரித்து வைத்து 31ஆம் நாள் அஞ்சலி நிகழ்வையும் செய்து முடித்தார், திரு. கொளத்தூர் மணி அவர்கள். பின்னர் ஓர் நாள் அந்த அஸ்தியை தமிழீழத்திற்கு அனுப்பி வைத்தார் திரு. கொளத்தூர் மணி (வல்வை குமரன், தமிழீழ விடுதலைப்புலிகளின் அத்திவாரங்கள்!).

 

கப்டன் றோய்

ஒக்டோபர் 14, 1990 அன்று பலாலி படைத்தளத்திலிருந்து வெளியேறிய சிங்களப் படையினருக்கெதிரான மறிப்புச் சமரில் அன்னார் விழுப்புண்ணடைந்தார். அவரை யாழ். மானிப்பாய் மருத்துவமனையில் பண்டுவத்திற்காக புலிகள் சேர்த்திருந்தனர். பண்டுவம் பலனளிக்காதிருந்ததால் அவரை யாழ் போதனா வைத்தியசாலைக்கு புலிகள் மாற்றினர். அங்கு இவருக்கு பண்டுவம் அளித்து வருகையில் ஒரு கட்டத்தில் இவருக்கு படுக்கைப்புண் வந்தது. அத்தோடு இவருடைய காயமும் ஆறாததால் இவரை மேலதிக பண்டுவத்திற்காக தமிழ்நாட்டிற்கு ஏற்றினர் (சாந்தி நேசக்கரம், கப்டன் றோய் வரலாறு) 

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஊடகவியலாளரான திரு. சிவசுப்பிரமணியம் அவர்களின் கருத்துப்படி,

அக்காலகட்டத்தில் தமிழ்நாட்டின் அரசாங்கமாக இருந்த தி.மு.க. இன் ஆட்சி கலைக்கப்படுவதற்கான வேலைகள் நடந்துகொண்டிருந்தன. இவர் திமுகவின் ஆட்சி கலைக்கப்படுவதற்கு சில நாட்களிற்கு முன்னர் தான் ஈரோடு மாவட்டத்திலுள்ள சூரன்பட்டியிலுள்ள L.K.M. மருத்துவமனையில் மேலதிக பண்டுவத்திற்காக சேர்க்கப்பட்டார். 

கப்டன் றோயுடன் சேர்த்து அம்மருத்துவமனையில் 6 மகளிர் போராளிகள் மற்றும் 5 மகனார் போராளிகள் என மொத்தம் 11 புலிவீரர்கள் பண்டுவம் பெற்று வந்தனர். மகனார் போராளிகளில் நால்வர் தன்னினைவு இழந்த நிலையில்தான் மருத்துவமனையில் இருந்தனர். 

இந்நிலையில் கொங்குமண்டலத்தின் அமைச்சராக இருந்த ஒருவர் திராவிடக் கழகத்தின் மாவட்டச் செயலாளராக இருந்த திரு. ரத்னசாமி அவர்கட்கு அழைப்பெடுத்து புலிகள் அமைப்பைச் சேர்ந்த ஆட்கள் யாரேனும் இருந்தால் அவர்களை உடனே வேறிடத்திற்கு அனுப்ப ஏற்பாடு செய்யுமாறு பணிக்கிறார், போராளிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு. 

அதே வேளை திரு. கொளத்தூர் மணி அவர்களும் திரு. ரத்னசாமி அவர்கட்கு அழைப்பெடுத்து போராளிகளை உடனடியாக இடம்மாற்றுமாறும் அதற்கு உதவ ஊர்திகள் உங்களிடம் இருக்கிறது என்றும் கேட்டார். அதற்கு திரு. ரத்னசாமி அவட்கள் தன்னிடம் இரு மாருதி சுசுகி நிறுவனத் தயாரிப்பான ஓம்னி வித வான் (தமிழில் "வையம்"/ எங்கட வழக்கு: கயெஸ் வான்) வகையச் சேர்ந்த ஊர்திகள் இரண்டு இருப்பதாகக் கூறினார். உடனே திரு. கொளத்தூர் மணி அவர்கள் இருக்கிற ஊர்திகளில் காயம்பட்டவர்களை இடம்மாற்றுமாறும் ஏனையோருக்கான ஊர்திகளை காலையில் அனுப்புவதாகவும் கூறினார்.

அவர் சொன்னதின் படியே திரு. ரத்னசாமி அவர்களும் ஒழுகினார். ஓம்னி வான்களின் இருக்கைகளை கழற்றி அகற்றிவிட்டு அதற்குப் பகரமாக இவ்விரு மெத்தைகளை உள்ளே வைத்து அவற்றில் நினைவின்றியிருந்த நான்கு புலிவீரர்களையும் ஏற்றினர். 

இந்நான்கு புலிவீரர்களில் ஒருவர் தான் கப்டன் றோய் ஆவார். அவர் கிட்டத்தட்ட ஏழடி உயர மனிதர் ஆவார். எனவே அவரை அவ்வளவு இலகுவில் வானில் வைத்து கதவை சாத்திவிட முடியவில்லை. எனவே அவரை சத்தார்பாட்டிற்குக் கிடத்தி பின்னர் அவருடைய காலை மடக்கி உள்ளே வைத்துத்தான் கதவை சாத்தினர். இவர்களை எங்கே கொண்டு செல்கின்றனர் என்ற தகவல் திரு ரத்னசாமி அவர்கட்கு தெரியாது. அது திரு. கொளத்தூர் மணி அவர்கட்கு மட்டுமே தெரிந்திருந்தது. ஏனைய ஏழு பேரையும் அடுத்தநாள் காலையில் சென்னையில் உள்ள மருத்தவமனை ஒன்றில் சேர்ப்பதற்காகக் கொண்டு செல்கையில் இராணிப்பேட்டையிற்கு அருகில் வைத்து தமிழ்நாட்டுக் காவல்துறையினர் பிடித்துவிடுகின்றனர் (அப்போது திமுக ஆட்சி கலைக்கப்பட்டு விட்டது). அதன் பின்னர் அவர்கட்கு என்ன நடந்தது என்பது பற்றி அறிந்துகொள்ள முடியவில்லை.

முன்னிரவு கொண்டு செல்லப்பட்டவர்களில் ஆக்குறைந்தது ஒருவராவது - கப்டன் றோய் - கர்நாடக மாநிலத்திலுள்ள வெண்கலூர்/பெங்களூர் என்ற நகரத்திலுள்ள Peoples Hospital என்ற மருத்துவமனை ஒன்றிற்குக் கொண்டு செல்லப்பட்டார் (வல்வை குமரன், தமிழீழ விடுதலைப்புலிகளின் அத்திவாரங்கள்!). அங்கு கொஞ்ச நாளும் பின்னர் அங்குள்ள புலிகளின் ஆதரவாளர் வீடொன்றில் கொஞ்ச நாளும் பண்டுவம் பெற்று வருகையில் - பண்டுவம் பலனின்றி 1990ம் ஆண்டு திசம்பர் மாதம் 31ம் திகதி காயச்சாவடைந்தார். 

அன்னாரின் உடல் ஒரு நாள் இரவு தமிழ்நாட்டிற்குக் கொண்டுவரப்பட்டது. கொண்டுவரப்பட்ட உடலை திரு. கொளத்தூர் மணி பொறுப்பேற்று எடுத்துவந்தார். பின்னர் உடலிற்குக் குளிப்பாட்டி புதிய சீருடை அணிவித்து செத்தவீடு செய்தனர். பின்னர் பச்சபாலமலையின் அடிவாரத்தில் புலிகளின் பயிற்சிமுகாம் இருந்த இடத்தில் திரு. கொளத்தூர் மணி அவர்களின் தலைமையில் அவர்தம் திராவிடக் கழக உறுப்பினர்கள் சூழ மரியதையுடன் புதைக்கப்பட்டது (வல்வை குமரன், தமிழீழ விடுதலைப்புலிகளின் அத்திவாரங்கள்!).

roi-6.jpg

தமிழ்நாட்டில் கப்டன் றோயின் வீரவணக்க நிகழ்வின் போது அவரின் உடலிற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு ஆகக்குறைந்தது இரு சிறிய புலிக்கொடிகளாவது போர்த்தப்பட்டுள்ளன

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஊடகவியலாளரான திரு. சிவசுப்பிரமணியம் அவர்களின் கருத்துப்படி,

பின்னாளில் 2004/2005ம் ஆண்டளவில் தமிழ்நாடு வனத்துறையினர் திரு. கொளத்தூர் மணி அவர்களின் காணியிலிருந்து 15 ஏக்கர் நிலத்தை எடுத்துக்கொள்வதற்காக கேட்டபோது அவரும் கொடுக்க இசைந்தார். இதன் போது புலிகளின் பயிற்சி முகாமிருந்த வளவுகள் எல்லாம் அப்படியே வனத்துறையிடம் சென்றது. 

பின்னாளில், 2014 ஓக்ஸ்ட் மாதம் வன ஊழியர்கள் பள்ளம் தோண்டிய போது வெடிபொருட்கள் மீட்கப்பட்டதை அடுத்து அங்கு விரைந்த தமிழ்நாட்டு காவல்துறையினரும் உளவுத்துறையினரும் தொடர் தேடுதல் நடத்தினர். அதன் போது ஓரிடத்தில் குழி தோண்டினர். அதில் 1990ம் ஆண்டு புதைக்கப்பட்ட கப்டன் றோய் அவர்களின் எலும்புகளின் எச்சங்களும் புலிச் சீருடையின் சிதிலமடைந்த துண்டுகளும் மீட்கப்பட்டன. அதனை அவர்களிடத்திலிருந்து பெற்ற 'திராவிடட விடுதலைக் கழக'த்தின் உறுப்பினர்கள் மேட்டூர் வட்டத்தில் அப்பயிற்சி முகாமிற்கு அருகில் இடம் வாங்கி அங்கேயே கப்டன் றோய் அவர்களின் எச்சங்களை புதைத்தனர். பின்னர் அதற்கு அடிப்படையான கல்லறை ஒன்றை அமைத்து ஆண்டாண்டாய் வீரவணக்கம் செலுத்திவருகின்றனர், ஒவ்வொரு மாவீரர் நாளிலும்.

கொளத்தூர் அருகில் புலியூர் காட்டுப்பகுதியில் (மேட்டூர் பகுதி).jpg

புதிய இடத்தில் றோய் அவர்களின் எச்சங்கள் புதைக்கப்பட்ட பின்னர் எழுப்பப்பட்டுள்ள அடிப்படையான கல்லறை

இதே சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் வட்டத்தின் கொளத்தூர் பேரூராட்சியை ஒட்டி அமைந்துள்ள சிற்றூர்களில் ஒன்று கும்பாரப்பட்டி ஆகும். இவ்வூரின் பச்சபாலமலையின் அடிவாரத்தில்தான் புலிகளின் பயிற்சி முகாம்கள் அமைந்திருந்தன. இங்குதான் புலிகளின் போராளிகள் மூன்று பாட்டங்களாக (batch) - மூன்றாம், ஆறாம் மற்றும் பத்தாம் பயிற்சி முகாம்களில் இருந்து - பயிற்சி முடித்து வெளியேறினர். இவை 1984 முதல் 1986 வரையான காலகட்டங்களில் நடைபெற்றன (கட்டுரை: 'புலிகள் பயிற்சி எடுத்த புலியூர் நோக்கிய பயணம்'). 

இவர்கள் பயிற்சி முடித்து வெளியேறிய பின்னர் இச்சிற்றூர் மக்களானோர் தம் ஊரில் தங்கியிருந்து தம் இன்ப துன்பங்களில் பங்கெடுத்து பாசப்பிணைப்பேற்படுத்திய பின்னர் விடுதலை போராட்டத்திற்குச் சென்ற தமிழீழ விடுதலை வீரர்களான புலிவீரர்களின் நினைவாய் தம் ஊரின் பெயரை "புலியூர்" என்று மாற்றிக்கொண்டனர். இன்றுவரை அவ்வூரின் பெயர் புலியூராகவே திகழ்ந்துவருகிறது என்ற தகவல் குறிப்பிடத்தக்கதாகும் (கட்டுரை: 'புலிகள் பயிற்சி எடுத்த புலியூர் நோக்கிய பயணம்'). 

 

(தொடரும்)

 

ஆக்கம் & வெளியீடு:
நன்னிச் சோழன்

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

பாகம் - 06

 

இப்பாகத்தில் விடுதலைப் புலிகளால் கடைப்பிடிக்கப்பட்ட செந்தரப்படுத்தப்பட்ட வித்துடல் விதைப்பு முறைமை தொடர்பாகக் காணலாம்.

 

  • முதன் முதலில் புகழுடல் புதைப்பு:

வயிரவமான இந்தியப்படையின் காலத்திற்குப் பின்னரும் கடைப்பிடிக்கப்பட்டு வந்த சமயப்படியான உடல்களின் தகனம்/புதைப்பு என்பது கப்டன் சோலையின் புகழுடல் புதைக்கப்பட்டதோடு முடிவுறத் தொடங்கியது எனலாம் (மாவீரர் நாள் கட்டுரை, நேரு குணரத்தினம், 2005). 

1991ம் ஆண்டு சூலை மாதம் 14ம் திகதி மகளிர் மாவீரர் கப்டன் சோலையின் புகழுடல் கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் புதைக்கப்பட்டது. இம்மாவீரரின் புகழுடலே முதன் முதலாக எந்தவொரு சமய முறைப்படியான சடங்குகளும் இல்லாமல் புதைக்கப்பட்ட புகழுடலாகும்.

இவரது உடல் புதைக்கப்பட்ட காலத்தில் வீரமரணமடைந்த போராளியின் உடலைக் குறிக்க "உடல்" என்ற சொல்லின் பாவனை நிறுத்தப்பட்டு "புகழுடல்" என்ற சொல் பாவிக்கப்பட்டது (ஐப்பசி – கார்த்திகை, விடுதலைப்புலிகள்). "வித்துடல்" என்ற சொல் இக்காலத்தில் உருவாக்கப்படவில்லை.

எனினும் இவரிற்குப் பிறகும் வீரமரணமடைந்த போராளிகளினது புகழுடல்களில் சில எரியூட்டப்பட்டன அ புதைக்கப்பட்டன. எடுத்துக்காட்டிற்கு, ஆனையிறவு மீதான ஆ.க.வெ. நடவடிக்கையின் போது தடைமுகாம் மீதான 2வது வலிதாக்குதலில் 27.07.1991 அன்று வீரமரணமடைந்த எனது தூரத்து உறவினரான 2ம் லெப். மதனாவின் உடனாது எரியூட்டப்பட்டது. எனது உறவுக்காரர்களின் (அக்காலத்திய விடுதலைப் போராட்ட வீரர்கள்) நினைவின் படி, இவரே இறுதியாக, ஆகக்குறைந்தது யாழ்ப்பாணத்தில், எரியூட்டப்பட்ட மாவீரர் ஆவார். இவரிற்குப் பின்னர் வேறெங்கேனும் யாரெவரினதும் புகழுடகள் எரியூட்டவோ இல்லை கிறிஸ்தவ சமயப்படி புதைக்கப்பட்டார்களோ என்பது குறித்து எனக்குத் தெரியவில்லை.

இவ்விடத்தில் நான் இன்னொரு விடயத்தையும் பதிவு செய்ய விரும்புகிறேன். 2ம் லெப். மதனாவின் தாயின் பெற்றோர், அறியப்பட்ட காலத்திலிருந்து, தலைமுறை தலைமுறையாக சைவ சமயத்தவர்களாவர். ஆயினும் மதனாவின் தாய் தன் கணவனின் இறப்பிற்குப் பின்னர் கிறிஸ்தவ மதத்தின் "எக்காளத்தொனி" என்னும் பிரிவிற்கு மதம் மாறினார். 2ம் லெப். மதனா வீரச்சாவடைந்த போது அன்னாரின் புகழுடலை எரிக்க புலிகள் முடிவெடுத்தனர். அப்போது தாயார் தன் தற்போதைய சமயத்தின் படி பிள்ளையின் புகழுடல் புதைக்க வேண்டும் என்று கடும் போர்க்கொடி தூக்கினார். எனினும் அறியப்பட முடியா காரணத்தால் 2ம் லெப். மதனாவின் புகழுடல் எரிக்கப்பட்டது. 

 

  • நடைமுறைப்படுத்தப்பட்ட செந்தரப்பட்ட மரபு:

கப்டன் சோலையின் புகழுடல் புதைப்போடு மாவீரர்களின் புகழுடல்கள் சமய முறைப்படியின்றி பண்டைய தமிழர்களின் உடல் புதைப்பு முறைமைப்படி புதைக்கப்படத் தொடங்கின. 

தமிழீழத்தின் தேசிய நினைவுச் சின்னங்களாக போற்றப்பட்டு நெடிய காலத்திற்கும் எமது போராட்ட வரலாற்றை சொல்லிக்கொண்டிருக்கத் தக்கனயாகவே இம்மாவீரர்களிற்கான கல்லறைகளும் நினைவுக்கற்களும் எழுப்பப்பட்டன (ஐப்பசி-கார்த்திகை 1991, விடுதலைப்புலிகள்). மேலும் இவர்களின் நினைவு வரும் போதெல்லாம் இவர்களின் உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் மாவீரர் பீடங்களுக்குச் சென்று மலர்வணக்கம் செய்து அழலாம். வீரவணக்கம் செலுத்தலாம். அதற்காகத் தான் இவர்கள் புதைக்கப்பட்டனர், அதற்காகத்தான் இவர்களிற்கு நினைவுக்கற்கள் நாட்டப்பட்டன!

இக்காலகட்டத்தில் "வீரச்சாவு, வித்துடல், விதைகுழி, விதைப்பு, தூண்டி/தியாகசீலம்" ஆகிய சொற்கள் புலிகளால் உருவாக்கப்பட்டு மக்களிடையே புழக்கத்திற்கு விடப்பட்டன. இவை உருவாக்கப்பட்டு முதன் முதலில் பாவனைக்கு வந்த காலம் தெரியவில்லை என்றாலும் இவை மாவீரரின் வித்துடலொன்றின் முதல் விதைப்பிற்குப் பின்னர் தான் எழுந்தது எனலாம். 

மேற்குறிப்பிட்ட சொற்களின் உருவாக்கத்தால் புதைத்தல், உடல், புகழுடல், பொடி போன்ற சொற்கள் பின்னாளில் கைவிடப்பட்டு மாவீரர் சார் இச்சொற்களே மாவீரர் வீரவணக்க நிகழ்வுகளிலும் அவை தொடர்பான நிகழ்வுகளிலும் பாவிக்கப்பட்டன. பேச்சு வழக்கிலும் 2009 முடிவுறும் வரை மக்கள் நடுவணில் பரவலறியாக பாவனையில் இருந்தன. இன்றளவும் சிலரின் வாய்ப்பேச்சில் இவை உச்சரிக்கப்படுகின்றன.

இன்றுவரை கூட சில பொதுமக்களிடத்தில் மாவீரரின் வித்துடலை "பொடி/BODY" என்ற சொல்லால் குறிப்பிடுவது ஒரு இழுக்கான செயலாகவே பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்க விடையமாகும்.

புலிகளின் இந்த மாவீரர் வித்துடல் விதைப்பு என்பது பின்னாளில் ஒரு செந்தரப்படுத்தப்பட்ட மரபாக தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. இதற்கு மக்கள் நடுவணில் எந்தவொரு எதிர்ப்பும் உருவாகவில்லை. மக்களின் முழு மனச் சம்மதத்துடனே தான் இது புலிகளால் மரபாக பரிணமிக்கப்பட்டது.

 

  • தூண்டி முதல் துயிலுமில்லம் வரை:

தூண்டியில் நடப்பவை:

ஒரு போராளி களத்தில் வீரச்சாவடைந்து விட்டாலோ அல்லது விழுப்புண்ணேந்தி மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு அங்கு காயச்சாவடைந்துவிட்டாலோ அம்மாவீரரின் வித்துடலானது முதன் முதலில் கொண்டு செல்லப்படுவது "தூண்டி" என்றழைக்கப்பட்ட புலிகளின் பாசறை ஒன்றிற்குத்தான். பின்னாளில் இது "தியாகசீலம்" என்றழைக்கப்பட்டது (தியாகசீலம், வி.இ.கவிமகன்). 

இந்தத் தியாகசீலம் என்ற சொல்லானது மறைமுகக்கரும்புலிகள் உள்ளிட்ட புலனாய்வுத்துறைப் போராளிகளின் அடைமொழி என்பதுகூட நினைவூட்டத்தக்கது ஆகும். 

இவ்விடத்திற்குக் கொண்டுவரப்படும் மாவீரரின் வித்துடலில் அம்மாவீரருக்கென்று வழங்கப்பட்ட மூன்று தகடுகளில் (கழுத்துத் தகடு, இடுப்புத் தகடு, மணிக்கட்டுத் தகடு) ஏதேனும் ஒன்று வித்துடலில் இருந்தாலும் அதில் உள்ள தகட்டெண்ணை அடிப்படையாகக் கொண்டு தலைமைச்செயலகத்தால் வித்துடலிற்கு உரியவர் இன்னார் தானென்று உறுதிசெய்யப்பட்டு தூண்டி/தியாகசீலத்திலுள்ள தொடர்பாளருக்கு அறிவிக்கப்படும். அதனைக் கொண்டு ஏனைய ஒழுங்குமுறைகளை தூண்டிக்காரர் செய்வர் (தியாகசீலம், வி.இ.கவிமகன்). 

சில வேளைகளில் மாவீரர்களின் வித்துடல்கள் சிங்களப் படையினரால் கைப்பற்றப்படுவதுண்டு. அவ்வாறான வேளைகளில் அவை சிங்களப் படையினரால் சிதைக்கப்பட்ட பின்னரே செஞ்சிலுவைச் சங்கத்தினர் ஊடாக புலிகளிடம் ஒப்படைக்கப்படும்; ஆண்குறிகள், பெண்குறிகள், முலைகள் போன்ற பாலியல் உறுப்புகள் சிதைக்கப்பட்டிருக்கும், உடல்களின் சில பாகங்கள் கொத்தப்பட்டிருக்கும், முகமெல்லாம் சிதைக்கப்பட்டிருக்கும். இது போன்ற ஈனச்செயல்கள் புலிகள் மீதான ஒரு உளவியல் செயற்பாடாக சிங்களவரால் செய்யப்பட்டது (விடுதலைப் போராட்ட வீரர் ஒருவரின் தகவலின் படி). எனினும் நாளடைவில் புலிகள் இதற்கு இசைவாக்கமடைந்துவிட்டனர். 

அத்துடன், சிங்களப் படையினரால் கைப்பற்றப்படும் வித்துடல்களிலுள்ள குப்பி மற்றும் தகடுகள் என்பன அவர்தம் புலனாய்வு நடவடிக்கைகளுக்காக கழற்றியெடுக்கப்பட்டிருக்கும். 

மேலும், சில வேளைகளில் களமுனையில் சிதறிய/ சிதைந்து போன வித்துடல்களும் புலிகளால் மீட்கப்படும். 

இவ்விதமான சிதைந்த வித்துடல்களை அடையாளம் காண்பது மிகுந்த சிரமமான பணியாகும். 

இவற்றை அடையாளங்காண அற்றைய சமரில் காணாமல் போன போராளிகளின் பெயர்களைக்கொண்டும் களமுனையில் அன்னவர்களுடன் நின்றவர்கள் மூலமுமாகவும் கிடைத்த தகவல்களைக்கொண்டு வித்துடல்களை அடையாளம் காண முயல்வர். இதில் தோல்வி அடைந்தால், தலைமைச் செயலகத்தின் ஆளணி அறிக்கைப் பகுதியிடமுள்ள கடைசியாக எடுக்கப்பட்டிருந்த தனியாள் அறிக்கையிலுள்ள காய விரிப்புகளையும் அன்னவர்கள் ஏற்கனவே வழங்கியிருந்த அங்க அடையாளங்கள் மூலமும் அடையாளம் காண முயல்வர் (தியாகசீலம், வி.இ.கவிமகன்).

இம்முயற்சிகள் அனைத்திலும் தோல்வியேற்படும் பொழுது அவ்வித்துடல்களிற்கு பொதுப்பெயராக “தியாகசீலம்” என்ற மதிப்புமிக்க பெயரை வழங்கி மாவீரர் துயிலுமில்லத்தில் முழுப் படைய மரியாதையுடன் புனித விதைகுழியில் விதைப்பர். அவை தமிழீழம் விடுதலை அடைகின்ற காலத்தில் மரபணு சோதனை மூலம் குடும்பத்தவரை அடையாளம் காணலாம் என்ற நம்பிக்கைகொண்டு புலிகளால் விதைக்கப்பட்டன (தியாகசீலம், வி.இ.கவிமகன்). இவர்களிற்கு எழுப்பப்படும் உடையவர் கல்லறைகளில் உரியவரின் குறிப்புகள் எதுவும் இடம்பெறாது. 

முழுமையாக புலிகளால் மீட்கப்பட்ட ஒரு வித்துடலோ இல்லை சிங்களப் படையினரால் ஒப்படைக்கப்பட்டவற்றில் நன்னிலையில் உள்ள வித்துடலோ அடையாளங் காணப்பட்டால் அதை பெற்றாரிடத்தில் ஒப்படைப்பதற்கு முன்னர் புலிகளால் சில ஒழுங்குமுறைகள் பின்பற்றப்படும்.

முதலில் வித்துடல் புனிதப்படுத்தப்படும்; தூய்மைப்படுத்தப்பட்டு/ குளிப்பாட்டப்பட்டு தேவையான வாசனைத் திரவியங்கள் பூசப்படும். பின்னர் தொற்றுநோய் தடுப்பு மருந்துகள் செலுத்தப்பட்டு ஓரிரு நாட்கள் வைத்துக்கொள்ளுவதற்கேற்ப பதனிடப்படும். 

அடுத்து அன்னாரின் படைத்துறை கிளையிற்கேற்ப புதிய வரிச்சீருடை அணிவிக்கப்படும். கால்களிற்கு வெள்ளை நிற காலுறையிடப்படும். சப்பாத்து அணிவிக்கார். 

அடுத்து ஒரு விதத் தோரணியான வெள்ளைத் துணி விரிக்கப்பட்ட சந்தனப் பேழையினுள் வித்துடல் வளர்த்தப்படும். பேந்து, அன்னாரிற்கு படையத் தரநிலை வழங்கப்படும். இச்சந்தனப் பேழையின் கால்மாட்டுப் பக்கத்தில் குறித்த மாவீரர் தொடர்பான தகவல்கள் ("வீரவணக்கம்", புலிகளின் இலச்சினை ஆகியவற்றுடன் மாவீரரின் வீரச்சாவுத் திகதி, தரநிலையுடனான இயக்கப்பெயர், முழுப்பெயர் , வதிவிட முகவரி மற்றும் வீரச்சாவின் காரணம் ஆகியன முறையே நிரப்பப்பட்டிருக்கும்.) கொண்ட படிவம் போன்ற சிறு துண்டொன்று ஒட்டப்படும். அது வித்துடல் விதைக்கும் போது சந்தனப் பெட்டியுடனேயே விதைகுழியினுள் செல்லும். 

afsa.jpg

இதுதான் அந்த படிவம். மேலுள்ள படிவமானது மேஜர் புகழ்மாறனின் சந்தனப் பேழையில் குத்தப்பட்டிருந்தது ஆகும். படிமப்புரவு: த.வி.பு.

வீரச்சாவு செய்தி அறிவிக்குகை:

அடுத்து, அன்னாரின் குடும்பத்தாரிற்கு அவரின் வீரச்சாவு தொடர்பான தகவலானது குறித்த மாவீரரின் முகவரிக்கான கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் ஊடாக பெற்றாரிற்கு/ மனைவிக்கு/ கணவனிற்கு அரசியல்துறைப் போராளிகளால் நேரில் சென்று அறிவிக்கப்படும் (வித்துடல் விதைப்பு எப்படி நடைபெறும், ஈழநாதம் செய்தியாளர் சுரேன் கார்த்திகேசு). அவர்களும் இடிவிழுந்த சோகத்துடன் தமக்குரியவரின் “வீரச்சாவு வீடு” செய்வதற்கான ஒழுங்குகளை செய்யத் தொடங்குவர். 

இதுவே மாவீரரின் உரியவர்கள் சிங்களப்படையின் கட்டுப்பாட்டுப் பரப்பிற்குள் வாழ்ந்தால் அவர்களுக்கு கமுக்கமான முறையில் தகவல் அனுப்பிவைக்கப்படும். அவரின் உறவினர் யாரேனும் வித்துடல் உள்ள புலிகளின் கட்டுப்பாட்டுப் பரப்பிற்குள் வாழ்ந்தால் அவரிடம் ஒப்படைக்கப்படும். அவர்கள் வீரச்சாவு வீடு நடத்துவர். ஒருவேளை யாரும் இல்லையெனில் மாவீரரின் வித்துடலிற்கு புலிகள் தாமே ஆளிட்டு அனைத்து மரபுவழிச் செய்கைகளையும் முடித்துவிட்டு முழுப் படைய மரியாதையுடன் புனித விதைகுழியினுள் விதைப்பர்.

தேசியத் தலைவரின் வீரவணக்கம்:

கட்டளையாளர்கள் (கேணல் மற்றும் பிரிகேடியர் தரநிலையுடையோர்) மற்றும் பெரிய வெற்றித்தாக்குதல்களில் வீரச்சாவடைந்த தரைக்கரும்புலிகள் (பலாலி படைத்தளக் கரும்புலிகள், எல்லாளன் கரும்புலிகள் மற்றும் ஜோசெப் கூட்டுப்படைத்தளக் கரும்புலிகள்) போன்றோரின் வீரச்சாவின் பின் தலைவர் தானே நேரில் அவர்கட்கு வீரவணக்கம் செலுத்துவார். அப்போது அவருடன் கட்டளையாளர்களும் கூட நின்று மலர்வணக்கம் செய்வர். பிறகு, அனைவரும் ஒரே நேரத்தில் படைய மரியாதை செய்வர். பின்னர் அம்மாவீரர்களின் சந்தனப் பேழைகள் வீட்டாரிடம் அனுப்பி வைக்கப்பட்டன.

22_05_08_03.jpg

விடுதலைப் புலிகளின் மூத்த மற்றும்  சிறப்புக் கட்டளையாளர் பிரிகேடியர் பால்ராஜின் வித்துடலிற்கு மே 2008இல் தேசியத் தலைவர் மலர் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்துகிறார். படிமப்புரவு: த.வி.பு.

கரும்புலிகளிற்கு கரும்புலிகளின் வீரவணக்கம்: 

வீரச்சாவடைந்த கரும்புலிகளிற்கு (அனைத்துப் பிரிவினருக்கும்) அவர்தம் திருவுருவப்படத்திற்கு முதலில் ஏனைய கரும்புலிகள் வீரவணக்கம் செலுத்திய பின்னரே அவர்தம் வீடுகளிற்கு திருவுருவப்படங்கள் அனுப்பிவைக்கப்படும். பாதுகாப்புக் காரணங்களால் ஏனைய கரும்புலிகள் பொதுவெளியில் தோன்றமுடியாததால் இவ்வாறு செய்யப்படுவதுண்டு. 

image (7).png

ஜோசப் படைத்தளத்தின் கதூவீ மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவடைந்த 10 தரைக்கரும்புலிகளின் வித்துடல்களிற்குமான வீரவணக்க நிகழ்வின் போது கரும்புலிகளுடன் சேர்ந்து தலைவரும் வீரவணக்கம் செலுத்துகிறார். முன்னுக்கு பச்சை வரிப்புலியில் நிற்பவர் பிரிகேடியர் யாழினி எ துர்க்கா அவர்களாவர். படிமப்புரவு: த.வி.பு.

சில வேளைகளில் தேசியத் தலைவர் வீரவணக்கம் செய்ய வந்தாரெனில் அவருடன் இணைந்து கூட்டாக வீரவணக்கம் செலுத்துவார்கள்.

வீரச்சாவு வீடு:

அரசியல்துறை போராளிகள் வந்து தகவல் சொல்லி விட்டுச் சென்ற பின்னர், ஒரு பிக்கப் (தமிழில்: சாகாடு) ஊர்தியில் மாவீரரானவருடன் இறுதியாக களமுனையில் நின்ற போராளிகள் வித்துடலை உரியவரின் வீட்டிற்குக் கொண்டு வருவர் (வித்துடல் விதைப்பு எப்படி நடைபெறும், ஈழநாதம் செய்தியாளர் சுரேன் கார்த்திகேசு).  

உரியவரின் வீடு வந்ததும் அவரது வீட்டு வாசலிற்கு முன்னர் பிக்கப் நிப்பாட்டப்பட்டு அதிலிருந்து மாவீரரின் வித்துடல் இறக்கப்படும்.

adaw.png

ஆண் மாவீரர் ஒருவரின் சந்தனப் பேழையானது ஊர்தியிலிருந்து இறக்கப்படுகிறது. அம்மா நலமா திரைப்படத்திலிருந்து எடுக்கப்பட்ட சித்தரிக்கப்பட்ட காட்சி. படிமப்புரவு: த.வி.பு.

பின்னர் அப்போராளிகளால் மனித வலுக்கொண்டு தூக்கிச் செல்லப்பட்டு அவரது வீட்டில் வீரச்சாவு செய்யவென அமைக்கப்பட்டுள்ள பந்தலிற்குள் வைக்கப்பட்டு பொதுமக்கள் வணக்கம் நடைபெறும். ஆண் போராளியெனில் ஆண் போராளிகளும் பெண் போராளியெனில் பெண் போராளியும் தூக்கி வருவர். அச்சந்தனப் பேழையின் மேல் தேசியக்கொடி போர்த்தப்பட்டிருக்கும் (அம்மா நலமா திரைப்படம்).

adas.png

மாவீரர் பந்தலினுள் மாவீரரின் சந்தனப் பேழை போராளிகளால் வைக்கப்படுகிறது. அம்மா நலமா திரைப்படத்திலிருந்து எடுக்கப்பட்ட சித்தரிக்கப்பட்ட காட்சி. படிமப்புரவு: த.வி.பு.

அரிதிலும் அரிதாக, ஒரு பிள்ளையின் வீரச்சாவு வீடு நடந்துகொண்டிருக்க இன்னொரு பிள்ளையின் வீரச்சாவு செய்தி அவரின் பெற்றாரிற்கு தெரிவிக்கப்பட்ட நெஞ்சாங்குலை வெடிக்கும் நிகழ்வுகளும் நடந்தேறியுள்ளன (அம்மா நலமா திரைப்படம்). 

முற்றாக சிதைந்த வித்துடலொன்று அடையாளங் காணப்பட்டால் அதற்கு புலிகளின் வழமையான வித்துடல் ஒப்படைப்பிற்கான ஒழுங்குமுறைகள் (மேற்கூறப்பட்டவை) முடிக்கப்பட்டு, அதன் பின்னர் உரிய மரியாதைகளுடன் சந்தனப் பேழையிற்கு சோடினை செய்யப்பட்டு, திறக்க முடியாதபடியாக முத்திரையிட்டு, மூடப்பட்ட சந்தனப் பேழையில் தான் உரியவரின் பெற்றாரிடத்தில் வழங்கப்படும். தொற்று நோய் மற்றும் சிதைந்த உடலைக் காண்பதால் ஏற்படும் ஏந்தின்மைகள் போன்றவற்றை தடுக்கும் நன்னோக்கில் அதனை திறக்க பெற்றாரைப் புலிகள் அனுமதிப்பதில்லை. ஆனால் பாசத்தால் உந்தப்படும் பெற்றார் தம் பிள்ளையை இறுதியாகக் காண்பதற்காக கதறியழுவர். சில வேளைகளில் அன்னாரின் உற்றாரிற்கும் அவ்வித்துடலுடன் வரும் அரசியல்துறை போராளிகளுக்கும் பூசல்கள் கூட ஏற்பட்டதுண்டு. இவை தவிர்க்க முடியாதவையாகவும் கடந்து செல்வதற்கு மனக் கடினமாகவும் இருக்கும். மாவீரர் துயிலுமில்லத்தில் விதைக்கப்படும் வரை அச்சந்தனப் பேழை மூடப்பட்டேயிருக்கும். மேலும் இது போன்ற வித்துடல்களை ஒரே நாளிலேயே விதைத்துவிடுவர்.  

வீரச்சாவு வீட்டில் எழுச்சிக்கொடி கட்டப்பட்டிருக்கும், இது அவ்வீட்டில் வீரச்சாவு நடந்துள்ளதென்பதை அயலவரிற்கு தெரியப்படுத்தும். அயல்களில் அற்றைநாளில் மங்கள நிகழ்வுகள் செய்வதை கூடியவரை தவிர்த்துக்கொள்வர். வித்துடல் வைக்கப்பட்டுள்ள பந்தலில் - வித்துடல் ஒரு சிவப்பு அல்லது மஞ்சள் துணி விரிக்கப்பட்ட மேசையின் மேல் வைக்கப்படும்.  அதன் தலைமாட்டிற்குப் பின்னால் புலிக்கொடி கட்டப்பட்டிருக்கும். வித்துடலின் மருங்கில் ஒன்று அல்லது இரண்டு போராளிகள் துமுக்கிகள் ஏந்தியபடி நிற்பர். அருகில் குத்துவிளக்கு  ஏற்றிவைத்திருப்பர்.

afcwad.png

மாவீரர் பந்தலினுள் மாவீரரின் சந்தனப் பேழை திறந்து வைக்கப்பட்டுள்ளது. அருகில் ஒரு போராளி படைக்கலன் ஏந்தியபடி நிற்கிறார். மெய்யான நிகழ்வுகளிலும் இதுபோலவே தான் நடக்கும். அம்மா நலமா திரைப்படத்திலிருந்து எடுக்கப்பட்ட சித்தரிக்கப்பட்ட காட்சி. படிமப்புரவு: த.வி.பு.

வழங்கப்பட்ட சந்தனப்பேழையிற்கு வீரச்சாவு வீடு நடத்தப்படும். இதில் அவரின் உற்றார், உறவினர், நண்பர்கள் என்போர் கலந்துகொள்வர். அப்போது சந்தனப் பேழையின் மூடி திறக்கப்பட்டிருக்கும். ஒரு பொதுமகன்/ பொதுமகள் வேப்பங்குழையுடன் தலைமாட்டில் நின்று நின்று இலையான் துரத்துவார். பல மாவீரர்களின் வித்துடல்கள் இருந்தால் சந்தனப் பேழையிற்கு ஒருவர்படி நின்று விசுக்குவர்.

தொலைவில் உள்ள அவரது உறவினர்கள் அல்லது நண்பர்கள் வந்து கலந்து கொள்ளவோ அல்லது தேவைக்கேற்பவோ ஓரிரு நாட்கள் வித்துடல் ஓரிரு நாட்கள் உறவினர்களிடத்திலிருக்கும்.

இவ்வாறு வீட்டில் நடைபெறும் "வீட்டு வணக்கத்தின்" போது சமயச் சார்பான எதுவும் செய்யப்பட மாட்டாது. இது புலிகளால் தடைசெய்யப்பட்டிருந்தது. புலிகள் இயக்கம் சமயச் சார்பானதில்லை என்பதால் அது மாவீரரின் வித்துடலிற்கும் பொருந்தும்.

வீட்டு வணக்கம் முடிந்த பின்னர் வித்துடல் கொண்ட சந்தனப்பேழையின் மூடியை போராளிகள் கையால் மூடுவர். அப்போது உற்றார், உறவினர், நண்பர்கள் சந்தனப் பேழையிற்கு அருகில் வந்து வீரிட்டுக் கதறி அழுவர். இடமே சோகமாக காட்சி தரும்.

acwe2.png

மாவீரரின் சந்தனப் பேழை மூடியால் மூடப்படுகிறது. அம்மா நலமா திரைப்படத்திலிருந்து எடுக்கப்பட்ட சித்தரிக்கப்பட்ட காட்சி. படிமப்புரவு: த.வி.பு.

மாவீரர் ஊர்தி:

பின்னர் அச்சந்தனப் பேழை போராளிகளால் தூக்கிச்செல்லப்பட்டு அலங்கரிக்கப்பட்ட மாவீரர் ஊர்தியில் (கன்டர் அல்லது பிக்கப் வகை ஊர்திகள்) ஏற்றப்பட்டு அருகில் உள்ள மாவீரர் மண்டபம் நோக்கிக் கொண்டுசெல்லப்படும். இம்மாவீரர் ஊர்தியை அக்கோட்ட அரசியல்துறையினரே வழங்குவர்.

இந்த வித்துடல் ஊர்தியானது நன்கு அலங்கரிக்கப்பட்டிருக்கும். மாவீரர் ஊர்தியை அலங்கரிக்கும் மரபு ஆகக்குறைந்தது லெப். கேணல் விக்ரர் அவர்களின் வீரச்சாநடைபெற்ற காலத்திலிருந்து தொடங்குகிறது என்பதை கிடைக்கப்பெற்ற நிகழ்படங்கள் மற்றும் படிமங்கள் மூலம் அறியக்கூடியதாக உள்ளது (வித்துடல் அவர்களின் மாவீரர் ஊர்தியின் படிமம் மேலே கொடுக்கப்பட்டுள்ளது). ஆயினும் அவரின் மாவீரர் ஊர்தியில் தமிழரின் பண்பாடுகளில் ஒன்றான வாழைமரத்தால் ஊர்தியை அலங்கரிப்பது மற்றும் சிவப்பு மஞ்சள் நிறங்களால் அலங்கரித்தல் என்பன காணப்படவில்லை. அது தொடக்க காலம் என்பதாலும் வீரச்சாவு சடங்கு நடத்துதலிற்கென்ற, பிறகாலத்தையப் போன்ற, மரபு நடைமுறைக்கு வரவில்லை என்பதாலும் இவ்வாறான பண்பாடுகள் அன்றில்லை. மேலும் அன்றைய காலகட்டத்தில் வீரச்சாவு வீடுகளிலிருந்த சமயத் தாக்கமும் இதற்கொரு காரணம் எனலாம்.

மாவீரர் ஊர்திக்கான அலங்காரத்தில் கட்டளையாளர்களின் மாவீரர் ஊர்திக்கும் சாதாரண போராளிகளின் மாவீரர் ஊர்திக்கும் இடையில் வேறுபாடு காட்டப்பட்டிருக்கும். இவ்வேறுபாடானது மக்களுக்கும் அக்குறித்த கட்டளையாளர் போராளிக்குமான உறவின் வெளிப்பாடாகும். அவர் நீண்ட காலம் புலிகள் அமைப்பில் இருந்ததினால் பெரும்பாலான பொது மக்களுக்கு நன்கு அறிமுகமான ஒருவராக இருப்பார். இதனால் அவரின் ஊர்தி வழமைக்கு மாறாக மேலதிக சோடினைகள் (அவரின் பெயர், படங்கள் தாங்கிய பதாகை) மூலம் அலங்கரிக்கப்பட்டிருக்கும். இவ்வாறு நடைபெறுவது கேணல் மற்றும் பிரிகேடியர் தரநிலை கொண்ட போராளிகளுக்காகும்.  

சாதாரண போராளியின் ஊர்தியின் முகப்பில் தமிழீழத் தேசியக் கொடியான புலிக்கொடி கட்டப்பட்டிருக்கும். ஓட்டுநர் அறையிற்கு வெளியே பெரும்பாலும் நான்கு வாழை மரங்கள் நான்மூலைகளுக்குமென கட்டப்பட்டிருக்கும் (பட விளக்கத்திற்கு இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள கடற்கரும்புலி லெப். கேணல் சஞ்சனாவின் மாவீரர் ஊர்தியைக் காண்க). காற்றுத்தட்டியில் எழுச்சிக்கொடி கட்டப்பட்டிருக்கும். கண்டர்/பிக்கப்பின் பின்புறத்தில் சிவப்பு மற்றும் மஞ்சள் துணி விரிக்கப்பட்டு அதன் மேல் அம்மாவீரரின் சந்தனப் பேழை கிடத்தப்பட்டிருக்கும். இப்பின்புறத்தின் நான்மூலைகளிலும் துமுக்கிகள் (வகை56இன் விதங்கள். ஆயினும் பெரும்பாலும் வகை56 தான்) ஏந்திய பச்சை/நீல கிடைமட்ட வரி அல்லது பச்சை நீட்டு வரி (இ.பா.ப./ரா.வா.ப.) அணிந்த நான்கு போராளிகள் அமர்ந்திருப்பர், படைய மதிப்பாக. இவர்கள் அன்றி சில வேளைகளில் கூடுதல் போராளிகளும் ஏறி அமர்ந்திருப்பதுண்டு. ஆயினும் பெரும்பாலான வேளைகளில் நால்வரே அமர்ந்திருப்பர்.

இவ்வலங்காரமானது பெரிய கப்பல்களைத் தகர்த்த கடற்கரும்புலிகளிற்கு வேறுபாடாகயிருந்தது. அவர்களின் மாவீரர் ஊர்தியானது அக்கரும்புலிகளால் தகர்க்கப்பட்ட கப்பலைப் போன்று சோடிக்கப்பட்டிருக்கும்.

சந்தனப் பேழை: 

இவ்வாறாக சோடிக்கப்பட்ட ஊர்தியில் தான் மாவீரரின் சந்தனப் பேழை வைக்கப்பட்டிருக்கும். அச்சந்தனப் பேழை கூட புலிப்பண்பாட்டின் அடிப்படையில் சோடிக்கப்பட்டிருக்கும். அதாவது சந்தன மரத்தால் ஆன இப்பேழையின் மேற்பகுதியில் சிவப்பு நிறத்திலும் கீழ்ப்பகுதியில் மஞ்சள் நிறத்திலுமான நாடாக்கள் கட்டப்பட்டிருக்கும் (வெற்றிக்கொடியில் எவ்வாறு நிறங்கள் உள்ளதோ அதே அடுக்கமைவில்தான் இங்கும் அவை கட்டப்பட்டிருக்கும்). இந்நாடாக்களிற்கு நடுவில் தமிழீழ தேசியக் கொடி சந்தனப் பேழையைச் சுற்றிப் போர்த்தப்பட்டிருக்கும். இச்சந்தனப் பேழையானது கபிலம், கடுங்கபிலம் நிறத்திலும் (வண்ணம் பூசப்படாத சந்தனப்பேழை), பச்சை நிறத்திலும் காணப்பட்டது (வண்ணம் பூசப்பட்ட சந்தனப்பேழை). நானறிந்த வரை பிரிகேடியர் பால்ராஜ்,  பிரிகேடியர் தமிழ்ச்செல்வன், கேணல் அருள்வேந்தன் எ சாள்ஸ் ஆகியோரின் வித்துடல்கள் கொண்ட சந்தனப் பேழையின் மூடியானது ஆடியால் (glass) செய்யப்பட்டிருந்தது, வித்துடலை மூடியிருப்பினும் திருவுடலை மக்கள் இறுதியாகக் காண வசதியாக.

மாவீரர் மண்டபம்:

மாவீரர் மண்டபமென்பது மாவீரராகிய போராளியின் சந்தனப் பேழையை வைத்து வீரவணக்கக் கூட்டம் செய்வதற்கென்று சிறப்பாக கட்டப்பட்ட ஒரு மண்டபமாகும். இங்கு தான் அக்குறித்த கோட்டத்தில் வீரச்சாவடையும் அனைத்து மாவீரர்களின் வித்துடலும் வைக்கப்பட்டிருக்கும். மாவீரர் மண்டபம் இல்லாத இடங்களில்/ காலங்களில் அருகில் உள்ள ஏதேனும் ஒரு பொது மண்டபத்தில் அல்லது பாடசாலையில் வைத்து வீரவணக்கக் கூட்டம் நடைபெற்றது.

m .,i.jpg

எழுத்தப்பட்டுள்ள வாசகம்: இவர்கள் சிந்திய குருதி, தமிழீழம் மீட்பது உறுதி. படிமப்புரவு: Journeyman.tv

கோவில்களின் கருவறைக்கு வெளியே துவாரபாலகர்களின் சிலைகள் வைக்கப்பட்டுள்ளதைப் போன்று - கட்டடத்தின் வாசலின் இரு பக்கத்திலும் ஒரு ஆண் போராளியும் ஒரு பெண் போராளியும் துமுக்கிகளை கீழ்நோக்கி பிடித்து ஒருவரையொருவர் பார்த்தபடி அகவணக்கம் செலுத்துவது போன்ற இரு ஓவியங்கள் வரையப்பட்டுளதைக் நோக்குக.

guy7.jpg

வன்னியில் இருந்த மாவீரர் மண்டபங்களில் ஒன்று. படிமப்புரவு: Journeyman.tv

மாவீரர் மண்டபமானது எழுச்சிக்கொடிகளால் (சிவப்பு மஞ்சள் நிற முக்கோண வடிவக் கொடி) சோடிக்கப்பட்டிருக்கும். 

நான்காம் ஈழப்போரில் வீரச்சாவடைந்த பிரிகேடியர் பால்ராஜ், பிரிகேடியர் தமிழ்ச்செல்வன், கேணல் சாள்ஸ் எ அருள்வேந்தன் போன்றோரின் சந்தனப் பேழைகள் பெருமளவு மக்கள் கூடுவதற்கு வசதியாக கிளிநொச்சி பண்பாடு மண்டபத்தில் வைக்கப்பட்டு வீரவணக்கக் கூட்டம் நடாத்தப்பட்டது. சில வேளைகளில் பெருமளவு மக்கள் கூடுவதற்கு வசதியான இடங்கள் இல்லையெனில் சந்தனப் பேழை பாடசாலைகளில் வைக்கப்படுவதுண்டு.

மாவீரர் மண்டபத்தில் வீரவணக்கக் கூட்டம்:

மாவீரர் ஊர்தியானது மாவீரர் மண்டபத்தின் வாசலில் கொண்டுவந்து நிறுத்தப்படும். அதிலிருந்து சந்தனப் பேழையை போராளிகள் மனித வலுக்கொண்டு தூக்கி வந்து மண்டபத்தின் முதன்மை வாயினுள்ளால் தான். மேடையில் வைப்பர். வித்துடலைக் கொண்டுவந்த பின்னர் தான் பொதுமக்கள் மண்டபத்தினுள் நுழைவர்.

Lt. Col. Thavam and Major Pukazhmaaran (3).jpg

லெப். கேணல் தவாவின் வித்துடல் மண்ட வளாகத்தினுள் கொண்டுவரப்படுகிறது. படிமப்புரவு: த.வி.பு.

Lt. Col. Thavam and Major Pukazhmaaran (4).jpg

லெப். கேணல் தவாவின் வித்துடல் இனந்தெரியாத மண்டபத்தினுள் (இது மாவீரர் மண்டபம் இல்லை) கொண்டுவரப்படுகிறது. படிமப்புரவு: த.வி.பு.

மேடையில் வைத்த பின்னர் அவருடன் ஊர்தியில் வந்த துமுக்கி ஏந்திய நான்கு போராளிகளும் சந்தனப்பேழையின் நான்மூலைகளிலும் கொஞ்சம் இடைவெளிவிட்டு துமுக்கிகளோடு "கவனநிலை" இல் நிற்பர்.

22_05_08_Balraj_02.jpg

கிளிநொச்சி பண்பாட்டு மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள பிரிகேடியர் பால்ராஜ்-ன் சந்தனப் பேழையின் நான்மூலைகளிலும் துமுக்கி ஏந்திய போராளிகள் கவனநிலையில் நிற்கின்றனர். படிமப்புரவு: த.வி.பு.

பின்னர் மூடி திறக்கப்பட்டு வித்துடலின் நெஞ்சு மற்றும் வயிற்றுப் பகுதி கவராகும் விதமாக புலிகள் கால தமிழீழத் தேசியக்கொடி போர்த்தப்படும். சில வேளைகளில் திறந்த பின்னர் வெண்ணிற வலை போன்ற ஒன்று முழுவுடலும் கவராகும் விதமாக போர்த்தப்படும். இது பாவிக்கப்படும் காரணம் எனக்கு தெரியவில்லை. அதன் மேல் தான் பூக்கள் போடப்படும்.

Major Pukazhmaaran and Lt. Col. Thava

பெப்ரவரி 17, 2008 அன்று வீரச்சாவடைந்த நிதர்சனத்தின் முன்னணிக் களப்படப்பிடிப்பாளரும் கலைஞருமான லெப். கேணல் தவம் எ தவா மற்றும் மேஜர் புகழ்மாறன் ஆகியோரின் வித்துடல்கள் ஒரு மண்டபத்தினுள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் லெப். கேணல் தவாவின் வித்துடலின் மேல் வெண்ணிற வலை போர்த்தப்பட்டுளதைக் காண்க. படிமப்புரவு: த.வி.பு.

Karadiyanaru in Batticaloa, Sri Lanka, July 15 2006.jpeg

15/06/2006 அன்று மட்டு. கரடியனாற்றில் நடைபெற்ற வீரவணக்க நிகழ்வின் போது மாவீரர் ஒருவரின் தாயார் தன் மகனின் வித்துடலைக் கண்டு கதறி அழும் காட்சி. 

சிதைந்திருப்பினும் அடையாளம் காணப்பட்ட வித்துடல்கள் கொண்ட சந்தனப் பேழைகள் மாவீரர் மண்டபத்திற்குக் கொண்டுவரப்பட்டாலும் அவை திறக்கப்படுவதில்லை. மூடப்பட்டே காணப்படும். அதன் பின்னர் வீரவணக்க நிகழ்வுகள் தொடங்கும். 

வீரவணக்க நிகழ்வின் தொடக்கத்தில் மாவீரரின் சந்தனப் பேழையின் தலைமாட்டில் உள்ள பெரிய குத்துவிளக்கை பெற்றாரோ அல்லது பெற்றார் இல்லாதவிடத்தில் உறவினரோ ஏற்றுவர். பின்னர் மேடைக்கு கீழே உள்ள மற்றொரு பெரிய குத்துவிளக்கை ஒரு பொறுப்பாளர்/கட்டளையாளர் (கள்) ஏற்றுவர். 

Lt. Col. Thavam alias Thava and Pukazhmaaran (2).jpg

லெப். கேணல் தவம் மற்றும் மேஜர் புகழ்மாறன் ஆகியோரின் வீரவணக்க நிகழ்வின் போது தலைமாட்டில் உள்ள குத்துவிளக்கை இரு மாவீரர்களில் ஒருவரின் தாயார் ஏற்றுகிறார். கீழே உள்ள குத்துவிளக்கை கேணல் வேலவன் ஏற்றுகிறார். படிமப்புரவு: த.வி.பு.

அதனைத் தொடர்ந்து வித்துடலிற்கு மக்கள் முன்னிலையில் மலர்மாலை அணிவிக்கப்படும். அதில் பெற்றர்/ கணவன்/மனைவிக்கு முன்னுரிமை அளிக்கப்படும். எத்தனை வித்துடல்கள் உள்ளனவோ அத்தனை வித்துடல்களின் உற்றார்களும் (வித்துடலிற்கு ஒருவர்) குத்துவிளக்கில் சுடர்களேற்ற அனுமதிக்கப்படுவர்.

தொடர்ந்து பொதுமக்கள் மேடைக்கு வரிசையில் வந்து அங்குள்ள சந்தனப் பேழைகளின் கால்மாட்டில் மலர்வணக்கம் செய்வர். அப்போது "சூரிய தேவனின் வேருகளே" என்ற பாடல் ஒலிக்கவிடப்படும். பொதுமக்கள் மேடையில் ஏற முன்னர் ஒருவர் (போராளி/ பொதுமகன்) பொதுமக்களின் கையில் மலர்களை வழங்குவார். மாலைகள் எனில் அருகிலுள்ள போராளிகளின் உதவியுடன் மலர் மாலைகளை வித்துடல் மேல் அணிவிப்பர். சிலர் மலர்வளையம் கூட கொண்டுவந்து வைத்துவிட்டுச் செல்வர். 

மலர் வணக்கத்தின் போது சிலர் தாங்கொணாப் பிரிவுத்துயரால் சந்தனப்பேழையின் மேல் விம்மிவெடித்து அழுவர். அப்போது அவர்களைத் தாங்குவதெற்கென்று சில போராளிகள் அருகிலிருந்து அவர்களைத் தாங்குவர். 

பின்னர் அகவணக்கம் இடம்பெறும். அப்போது மண்டபத்திலுள்ள அனைவரும் எழுந்துநின்று அகவணக்கம் செலுத்துவர்.

Lt. Col. Thavam and Major Pukazhmaaran (2).jpg

லெப். கேணல் தவா மற்றும் மேஜர் புகழ்மாறன் ஆகியோரின் வித்துடல்களிற்கு அகவணக்கம் நடைபெறுகிறது. படிமப்புரவு: த.வி.பு.

இறுதியாக அம்மாவீரரின் பொறுப்பாளர் மற்றும் கூடநின்ற போராளிகள் ஒவ்வொருவராக அருகில் உள்ள ஒலிவாங்கி மேடைக்கு வந்து நினைவுரையாற்றுவர். அவ்வுரையில் அம்மாவீரரின் அருமை பெருமைகளை விளக்கிச் சொல்வர். மாவீரரானவர் கட்டளையாளரெனில் ஏனைய கட்டளையாளர்களும் எல்லாம் வந்து நினைவுரையாற்றுவர். 

85201594_535031437360954_7316099531693621248_n.jpg

தேசத்துரோகி கருணாவின் கைக்கூலிகளால் படுகொலைசெய்யப்பட்ட லெப். கேணல் கௌசல்யன் உள்ளிட்ட மாவீரர்களுக்கு மட்டுவில் நடந்த வீரவணக்க கூட்டத்தில் முஸ்லிம் இனக்குழுவைச் சேந்த பெரியவர் ஒருவர் நினைவுரையாற்றுகிறார். படிமப்புரவு: த.வி.பு.

 

Colonel Charles last (15).jpg

கிளிநொச்சியில் நடந்த கேணல் சாள்ஸ் எ அருள்வேந்தனின் வீரவணக்க கூட்டத்தில் மாதவன் மாஸ்டர் (மாவீரர்) நினைவுரையாற்றுகிறார்.

அனைத்து நிகழ்வுகளும் முடிந்த பின்னர் சந்தனப்பேழை மூடப்பட்டு, நடாக்கள் கட்டப்பட்டு, அங்கிருந்து போராளிகளால் தாங்கிச்செல்லப்பட்டு மாவீரர் ஊர்தியில் ஏற்றப்படும்.

மாவீரர் ஊர்தியின் ஊர்வலம்: 

ஊர்தியில் ஏற்றப்பட்ட சந்தனப் பேழையானது மாவீரர் துயிலுமில்லம் நோக்கி ஊர்வலமாக எடுத்துச்செல்லப்படும்.

 

Tamil Tiger fighters carry the remains of Arumugam Anandakumar and Sangeethan for burial in Kilinochchi..jpg

கிளிநொச்சிக்கு கிட்டவாக நடந்த அமுக்கவெடித் தாக்குதலில் வீரச்சாவடைந்த லெப். கேணல் சங்கீதன் என்ற மாவீரரதும் ஆறுமுகம் ஆனந்தகுமார் என்ற இயற்பெயர் கொண்ட மாவீரரதும் வித்துடல்கள் கொண்ட சந்தனப்பேழைகள் 11-07-2007 அன்று மாவீரர் ஊர்தியில் ஏற்றப்படுகின்றன. படிமப்புரவு: Associated Press

ஊர்வலமாக எடுத்துச் செல்கையில் கட்டளையாளர்களுக்கு மட்டும் ஒரு வழக்கம் கூடுதலாக கடைப்பிடிக்கப்பட்டது. அவர்களின் மாவீரர் ஊர்தியிற்கு முன்னால் படைய அணிவகுப்பு புலிகளால் செய்யப்பட்டது, ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு வீரவணக்கத்திற்காக வித்துடலை இடம்மாற்றுகையில். சில வேளைகளில் சில கட்டளையாளர்களும் கூடவே நடந்து செல்வார்கள். 

படைய அணிவகுப்பிற்கு முன்னால் பாடசாலை மாணவர்களின் வாய்த்திய அணியிசை அணிவகுத்துச் செல்லும். இடம் மாறமாற பாடசாலை மாணவர்களின் வாய்த்திய அணியிசை அணியினரும் மாற்றப்படுவர்.

படைய அணிவகுப்பும் வாய்த்திய அணியிசை வகுப்பும் சாதாரண போராளிகளெனில் துயிலுமில்லத்தின் ஒலிமுகத்திற்கு சற்று முன்னரிருந்துதான் தொடங்கப்படும்.

சில கட்டளையாளர்களின் சந்தனப் பேழை வன்னியில் பல இடங்களுக்கு ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டது (பிரிகேடியர் பால்ராஜ்). சிலரின் வித்துடல் வட தமிழீழம் முழுவதும் எடுத்துச் செல்லப்பட்டது ("தியாகதீபம்" லெப். கேணல் திலீபன்). தென் தமிழீழத்தில் கரந்தடிப்போர் தொடர்ந்தமையால் இது போன்ற நிகழ்வுகள் செய்வதற்கான காலம் அமையவில்லை. எனினும் சமாதான காலத்தில் போர்நிறுத்த விதிமுறை மீறப்பட்டு சிங்களத்தின் குறிசூட்டுத் தாக்குதலில் வீரச்சாவடைந்த கேணல் றமணன் அவர்களின் வித்துடல் மட்டு மாவட்டத்தின் சில இடங்களுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. 

Brigadier Balraj ().jpg

ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு வீரவணக்கத்திற்காக எடுத்துச்செல்லப்படும் பிரிகேடியர் பால்ராஜின் மாவீரர் ஊர்தியின் அலங்காரத்தைக் காண்க. படிமப்புரவு: த.வி.பு. 

23_05_08_balraj_funeral_03.jpg

ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு வீரவணக்கத்திற்காக எடுத்துச்செல்லப்படும் பிரிகேடியர் பால்ராஜின் மாவீரர் ஊர்திக்கு முன்னால் அணிவகுப்புகள் செல்கின்றன. படிமப்புரவு: த.வி.பு.

மாவீரர் ஊர்தியின் மேல் ஒலிபெருக்கி கட்டப்பட்டு அதில் சோக இசை ஒலிக்கவிடப்படும். இவ்வூர்தியின் பின்னால் உற்றார், உறவினர், நண்பர்களின் ஊர்திகள் இரு சக்கர ஊர்திகள் செல்லும்.

மாவீரர் ஊர்தியிற்கு முன்னால் மற்றொரு ஊர்தியில் அம்மாவீரரின் வீரச்சாவு அறிவித்தலை அறிவித்தப்படி செல்வர் (நான் கண்டதுகளில் பெரும்பாலும் முச்சக்கர வண்டி தான் அறிவித்தலிற்குப் பாவிக்கப்பட்டது). சில வேளைகளில் வித்துடல் தாங்கிய ஊர்தியிலேயே ஒலிபெருக்கி பூட்டி அறிவிப்பும் செய்தபடி செல்வர்.

இவ்வறிவித்தலை செவிமடுக்கும் பொதுமக்களில், விருப்பமுள்ளோர், வீதியிற்கு வந்து மாவீரர் ஊர்தியிற்கு மலர்வணக்கம் செய்வர். சிலர் ஊர்தியிற்கு முன்னால் குடத்தில் நீர்கொண்டுவந்து ஊற்றுவர். சிலர் தம் வீட்டு வாசலில் குத்துவிளக்கு ஏற்றி மரியாதை செய்வர். இவையெல்லாம் தமிழீழ நாட்டுப்பற்றின் நிமித்தமாக பொதுமக்கள் செய்தனர், யாரும் கட்டாயப்படுத்தியன்று! 

July 11,2007 Funeral - A 'Viththudal' of a Tiger cadre is being carried to Thuyilumillam according to the tradition of Tamil Tigers.jpg

கிளிநொச்சிக்கு கிட்டவாக நடந்த அமுக்கவெடித் தாக்குதலில் வீரச்சாவடைந்த லெப். கேணல் சங்கீதன் என்ற மாவீரரதும் ஆறுமுகம் ஆனந்தகுமார் என்ற இயற்பெயர் கொண்ட மாவீரரதும் வித்துடல்கள் கொண்ட சந்தனப்பேழைகள் 11-07-2007 அன்று கனகபுரம் துயிலுமில்லத்தை நோக்கிக் கொண்டுசெல்லப்படுகின்றன. படிமப்புரவு: த.வி.பு.

 

maaveera.png

இரண்டாம் ஈழப்போர் காலத்தில் யாழ்ப்பணத்தில் மாவீரர் ஊர்திக்கு முன்னால் தமிழீழக் குடிமகள் ஒருத்தின் குடத்து நீரை ஊற்றுகிறார். படிமப்புரவு: த.வி.பு.

அத்துடன் மாவீரர் ஊர்தி சாலையில் வரும் போது ஏனைய ஊர்திகள் அவற்றிற்கு வழிவிட்டுத் தரும்.

இவ்வாறாக செல்லும் ஊர்திகள் இரண்டும் மாவீரர் துயிலுமில்லம் வரை சோக இசையையும் அறிவித்தலையும் ஒலிபெருக்கியபடி செல்வர். துயிலுமில்லத்தை நெருங்கியதும் ஒலிகள் நிப்பாட்டப்படும். பொதுவாகவே துயிலுமில்லத்திற்கு முன்னால் ஊர்திகள் வேகம் தணித்து மெள்ளமாக செல்வதோடு வட்டொலியும் எழுப்பார். துயிலுமில்ல வளாகத்திற்கு முன்னால் உள்ள சாலை எப்பொழுதும் அமைதியாகவே காணப்படும்.  

மேலும் வித்துடல் கொண்டுவரப்படும் நாட்களில் மாவீரர் துயிலுமில்லத்தினுள் தமிழீழத் தேசியக்கொடியான புலிக்கொடி அரைக்கம்பத்தில் தான் பறக்கவிடப்படும். வெற்றிக்கொடி முழுக்கம்பத்தில் பறக்கும். தேவையான இடங்களில் எழுச்சிக்கொடி கட்டப்பட்டிருக்கும்.

துயிலுமில்லத்தினுள்ளே சந்தனப் பேழை:

துயிலுமில்லத்தை அண்டியதும் போராளிகள் மாவீரர் ஊர்தியின் பின்னே அணிவகுப்பில் செல்வர். மாவீரர் ஊர்தியுடன் வந்த பொதுமக்களும் (உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள்) தம் ஊர்தியை நிறுத்திவிட்டு நடந்து வருவர். அப்போது மாவீரர் ஊர்தி மெள்ளமாக நகரும்.

துயிலுமில்ல ஒலிமுகத்திற்கு சில மீட்டர்கள் முன்னுக்கு மாவீரர் ஊர்தி நிறுத்தப்பட்டு அதிலிருந்து சந்தனப்பேழை இறக்கப்படும். பின்னர் அது ஒலிமுகத்திலுள்ள முதன்மை வாசலிற்குள்ளால் போராளிகளால் தோளில் காவிச்செல்லப்படும். 

கேணல் மற்றும் பிரிகேடியர் தரநிலை கொண்ட கட்டளையாளர்களின் வித்துடல் துயிலுமில்லத்திற்கு முன்னால் கொண்டுவரப்படுகையில் தமிழீழத்தின் முழுப் படைய மரியாதையும் வழங்கப்படும். பெரும் விழா போன்று அன்றிருக்கும்.

k8.jpg

மட்டு. கண்டலடி மா. து.இ. ஒலிமுக வாசலில் மாவீரர் ஊர்தி நிறுத்தப்பட்டு அதிலிருந்து வித்துடல் இறக்கப்படப்போவதைக் காணலாம். படிமப்புரவு: த.வி.பு.

சந்தனப் பேழை காவிச்செல்லுவோரிற்கு முன்னால் படைய அணிவகுப்பில் போராளிகள் செல்வர். இவர்களிற்கு முன்னே வாய்த்திய அணியிசை வகுப்பு முன்செல்லும். இந்த வாய்த்திய அணியிசை வகுப்பானது நேர வசதிக்கும் கிடைக்கக்கூடிய வாய்ப்புகளைப் பொறுத்து அமையும். குறிப்பாக தென் தமிழீழத்தில் இது சில வேளைகளில் நடைபெறுவதில்லை, அங்கு பெரும்பாலான காலங்களில் கரந்தடிப்படையாகப் புலிகள் இருந்தமையால். 

பின்னர் சந்தனப் பேழையானது துயிலுமில்லத்தினுள் இறுதிவணக்கத்திற்காக வைக்கப்படும். அதாவது ஒலிமுகத்தினுள் நுழைந்த பின்னர் சில மீட்டர்கள நடந்து வந்து அங்கு ஏற்கனவே தயார் செய்து வைக்கப்பட்டுள்ள மேசையின் மேல் சந்தனப்பேழை வைக்கப்படும். 

LTTE coffins, julai 11 2007.jpg

கிளிநொச்சிக்கு கிட்டவாக நடந்த அமுக்கவெடித் தாக்குதலில் வீரச்சாவடைந்த லெப். கேணல் சங்கீதன் என்ற மாவீரரதும் ஆறுமுகம் ஆனந்தகுமார் என்ற இயற்பெயர் கொண்ட மாவீரரதும் வித்துடல்கள் கொண்ட சந்தனப்பேழைகள் 11-07-2007 அன்று மாவீரர் துயிலுமில்லத்தினுள் எடுத்துச் செல்லப்படுகின்றன. படிமப்புரவு: த.வி.பு.

ba_27_01_05_02.jpg

27/01/2006 அன்று மேஜர் கபிலனின் சந்தனப் பேழை போராளிகளால் மட்டக்களப்பு தரவை துயிலுமில்லத்திற்குள் சுமந்துசெல்லப்படுகிறது. இரும்புத் தண்டுகளில் சந்தனப் பேழையைத் தாங்கிச் செல்லும் நிகழ்வு மிகவும் அரியது. இவ்வாறு தரவை துயிலுமில்லத்தில் மட்டுமே நடைபெற்றதாக என்னால் அறிய முடிகிறது, அதுவும் நான்காம் ஈழப்போரில் மட்டுமே. படிமப்புரவு: த.வி.பு.

பின்னர் இறுதிவணக்கம் நடத்தப்படும். அப்போது மலர் வணக்கம் நடக்கும். இதில் வீரச்சாவு வீட்டிற்கோ வீரவணக்கக் கூட்டத்திற்கோ வர முடியாதவர்கள் வந்து இறுதிவணக்கம் செலுத்துவர்.

zdsa.jpg

ஒரு இறுதிவணக்கத்தின் போது மலர்வணக்கம் நடைபெறுகிறது. படிமப்புரவு: த.வி.பு.

 

lt. col. arjunan.jpg

லெப். கேணல் அர்ச்சுணன் அவர்களின் வித்துடலிற்கு போராளி ஒருவர் மலர்மாலை அணிவிக்கிறார். பின்னால் பிரிகேடியர் கடாபி, கேணல் வேலவன், லெப். கேணல் ராஜேஸ் எனப் பலர் வரிசையில் காத்திருக்கின்றனர். தமிழீழக் காவல்துறைப் படையணிப் போராளி உட்பட பலர் சூழ்ந்து நிற்கின்றனர். படிமப்புரவு: Associated Press

இறுதிவணக்கத்தின் போது ஒலிபரப்பப்படும் சோக இசையைத் தொடர்ந்து "சூரிய தேவனின் வேருகளே" என்ற இயக்கப்பாடல் ஒலிக்கவிடப்படும். இப்பாடலானது ஆகக்குறைந்தது மூன்றாம் ஈழப்போரின் தொடக்கத்திலிருந்து பாவிக்கப்படுகிறது. அதற்கு முன்னரான காலத்தில் எத்தகைய பாடல் பாவிக்கப்பட்டது என்பது குறித்துத் தெரியவில்லை. 

******

முழுப்பாடல்:

பாடலாசிரியர்: புதுவை இரத்தினதுரை
பாடியவர்கள்: எஸ்.ஜி.சாந்தன், தியாகராஜா, மணிமொழி 

பல்லவி:

சூரியதேவனின் வேருகளே, ஆயிரம் பூக்களைச் சூடுகிறோம்
போரினில் ஆடிய வேருகளே - விட்டுப் போகின்ற நேரத்தில் பாடுகிறோம்

சரணம்:

மடியில் வளர்ந்த மகளே - எங்கள் குடியில் மலர்ந்த மகனே!
விடியும் பொழுதின் கதிரே - புலிக்கொடியில் உலவும் உயிரே!

கண்களில் நீர்வழிந்து ஓடிட ஓடிட கைகளினால் மலர் சூடுகின்றோம்!
காலெடுத்தாடிய தாயக பூமியைக் காதலித்தீர் உம்மைப் பாடுகின்றோம்!

மண்மடி மீதிலே தூங்கிடும் போதிலே மாலையிட்டோம் உங்கள் தோள்களிலே!
மாதவம் செய்த நம் பிள்ளைகளே - நாங்கள் மண்டியிட்டோம் உங்கள் கால்களிலே!

செங்கனி வாய்திறந்து ஓர்மொழி பேசியே சின்னச் சிரிப்பொன்றைச் சிந்துங்களே!
தேச விடுதலையைத் தோளில் சுமந்த எங்கள் செல்வங்களே ஏதும் சொல்லுங்களே!

வந்து நின்றாடிய சிங்களச் சேனையை வாசல்வரை சென்று வென்றவரே!
வாழும் வரையும் உங்கள் பாதையிலே செல்லும் வல்லமை தாருங்கள் கன்றுகளே!

******

அதன் பின்னர் அங்குள்ள வித்துடல் மேடை நோக்கி சந்தனப் பேழை தூக்கிச் செல்லப்பட்டு அதன்மேல் வைக்கப்பட்டுள்ள மஞ்சள்-சிவப்பு நிறத் துணி விரிக்கப்பட்ட மேசையில் வைக்கப்படும். அம்மேசையானது பொதுச்சுடர் பீடத்திற்கு முன்னால் இருக்கும். இது நடைபெறுவதற்குள் "சூரிய தேவனின் வேருகளே" என்ற பாடல் ஒலித்து முடிவடைந்திருக்கும். அம்மேசையின் பின்னே புலிகளின் இலச்சினைப் பதாகை வைக்கப்பட்டிருக்கும். மேசையின் இருபக்கத்திலும் இரு போராளிகள் கவனநிலையில் நிற்பர். பின்னர் அருகில் மற்றொரு சின்ன மேசையில் குத்துவிளக்கு ஏற்றி சாம்பிராணியும் பற்ற வைப்பர். 

 

Lt. Col Arjunan.jpg

லெப். கேணல் அர்ச்சுணனின் வித்துடலானது வித்துடல் மேடையை நோக்கி படிக்கட்டில் தூக்கிச் செல்லப்படுகிறது. வித்துடல் மேடை தமிழீழத் தமிழரின் பண்பாட்டிற்கு ஏற்ப அலங்கரிக்கப்பட்டுள்ளது. படிமப்புரவு: Assosiated Press

 

sa.jpg

வேறொரு மாவீரரின் வித்துடல் வைக்கப்பட்டுள்ளது. படிமப்புரவு: த.வி.பு.

சில வேளைகளில் ஒரே நேரத்தில் பல சந்தனப் பேழைகள் பொதுச்சுடர் பீடத்தை சுற்றி வைக்கப்பட்டிருக்கும். அப்போதும் போராளிகள் இருமருங்கில் கவனநிலையில் நிற்பர். சின்ன மேசையில் குத்துவிளக்கு ஏற்றி சாம்பிராணியும் பற்ற வைப்பர். இதையே தான் நினைவுக்கல்லிற்கும் செய்வர்.

maaveerar thuyilum illam (4).jpg

ஜெயசிக்குறு எதிர்ச்சமர் ஒன்றின் போது வீரச்சாவடைந்த பல மாவீரர்களின் அழகுற தேசியங்களால் சோடிக்கப்பட்ட சந்தனப் பேழைகள் ஓர் துயிலுமில்லத்தில் ஒரே நேரத்தில் பொதுச்சுடரைச் சுற்றி வைக்கப்பட்டுள்ளன. படிமப்புரவு: த.வி.பு.

asd.jpg

ஒரு பெண் போராளியின் வித்துடல் பொதுச்சுடரிற்கு முன்னால் வைக்கப்பட்டுள்ளது. அதன் இரு பக்கத்திலும் துமுக்கி ஏந்திய இரு மகளிர் போராளிகள் கவனநிலையில் நிற்கின்றனர். படிமப்புரவு: த.வி.பு.

பிறகு வித்துடல் மேடையில் வைக்கப்பட்டுள்ள 'ஒலிவாங்கி மேடை'யில் நின்றபடி பொறுப்பாளர் ஒருவர் மாவீரருக்காக உறுதியுரை வாசிப்பார். அதை அங்கு கூடியுள்ள பொதுமக்களும் போராளிகளும் செவிமடுக்கும் அதே நேரம், தலைகளைக் குனிந்து அகவணக்கம் செலுத்துவர். துமுக்கியுடன் கவனநிலையில் நின்ற போராளிகள் தலை குனிந்து தம் துமுக்கியை வலது கால் பாதத்தின் முன் பகுதியில் தலை கீழாக குத்திநிறுத்தி, சொண்டு பாதத்தை தொடுமாறு நிப்பாட்டி, அகவணக்கம் செலுத்துவர்.

இந்த உறுதியுரையை தேசியக் கவி புதுவை இரத்தினதுரை அவர்கள் யாழ் குடாநாட்டை புலிகள் தம் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த இரண்டாம் ஈழப்போர்க் காலத்தில் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும் (மாவீரர் நாள் மரபாகி வந்த கதை).

large.Uruthimozhireading.jpg.a42ba6efea2e5712e9f79802e86d1da7.jpg

இரவு நேரத்தில் நடைபெறும் இரு வித்துடல் விதைப்பு நிகழ்வின் போது 'ஒலிவாங்கி மேடை'யில் நின்றபடி பொறுப்பாளர் ஒருவர் உறுதியுரையாற்றும் போது வித்துடல்களின் பின்னால் துமுக்கி ஏந்திய இரு போராளிகள் அகவணக்கம் செலுத்துகின்றனர். அருகில் குத்துவிளக்கொன்று சுடர்விட்டு எரிவதைக் காணவும். படிமப்புரவு: த.வி.பு.

******

வித்துடல் விதைப்பின் போது வாசிக்கப்படும் உறுதியுரை:

(ன்/ள் பால் வேறுபாடுகள் வாசிப்பில் காட்டப்படும்)

"{(முழுத் திகதி) அன்று [(காரணம்) (சமர்க்களத்தில் எனில் "வீரச்சாவு" அ நோயெனில் "சாவு")] தழுவிக்கொண்ட - கட்டளையாளர் எனில் மட்டும் பதவிநிலை கூறப்படும். தொடர்ந்து தரநிலையுடனான இயக்கப்பெயரோடு அன்னாரது முழுப்பெயர், நிரந்தர வதிவிடம், தற்காலிக வதிவிடம் என்பன முறையே வாசிக்கப்படும்.}

"இம்மாவீரருக்காக எமது தலைகளைக் குனிந்து வீரவணக்கம் செலுத்தும் இவ்வேளை, எங்கள் உயிரோடும் உதிரத்தோடும் ஒன்றாகக் கலந்துவிட்ட இறுதி இலட்சியமாம் தமிழீழத் தாயகத்தை மீட்டெடுக்கும் புனிதப்போரிலே வீரச்சாவடைந்த ஆயிரமாயிரம் வேங்கைகள் வரிசையிலே இங்கே மீளாத்துயில்கொள்ளும் (தரநிலையுடன் இயக்கப்பெயர்)-உம் சேர்ந்துகொண்டான்.

"சாவு இவனது பேச்சையும் மூச்சையும் நிறுத்தியதே தவிர இலட்சியத்தை இன்னும் வீச்சாக்கியுள்ளது.

"இவன் ஆணிவேர் அறுபடாத ஆலமரம். மீண்டும் வேர்விடுவான், விழுதெறிவான். புதிதாகப் பிறக்கும் புலிகளுக்குள்ளே இவன் புகுந்துகொள்வான்.

"நெஞ்சு கனக்கும் தாயக விடுதலைக் கனவோடு எமைப்பிரிந்து செல்லும் இவனின் கனவை நாங்கள் நனவாக்குவோமென்று இவனது விதைகுழியில் உறுதியெடுத்துக்கொள்வோம்.

"தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையையும் வழிகாட்டலையும் ஏற்று நின்றும் துணிந்து சென்றும் களமாடி வீரச்சாவடைந்த இந்த வீரனுக்கு நாங்கள் வீரவணக்கத்தைச் செலுத்தும் இவ்வேளையிலே எங்கள் தாயகப் போருக்கு மீண்டும் எங்களை தயார்படுத்திக்கொள்கின்றோம்.

"ஒரு கண நேரம் இந்த வீரனுக்காக குனிந்துகொண்ட தலைகளை மீண்டும் நிமிர்த்திக்கொண்டு புனிதப் போருக்குப் புறப்படுகின்றோம்."

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

கிட்டிப்பு: கேணல் ராஜு வீரவணக்க கூட்ட நிகழ்படத்திலிருந்து 

******

NFLSA.png

துமுக்கி ஏந்திய ஒரு போராளி அகவணக்கம் செலுத்துகிறார்.  படிமப்புரவு: த.வி.பு.

அகவணக்கம் முடிந்த அடுத்த கணமே வித்துடலைச் சுற்றி நான்கு மூலைகளில் நின்றிருக்கிற துமுக்கி ஏந்திய போராளிகள் நால்வர், மும்முறை வெற்று வேட்டுகளைத் தீர்ப்பர். 

அடுத்து துயிலுமில்லப் பாடலான ‘தாயகக் கனவுடன்’ ஒலிபரப்பப்படும் (இப்பாடலானது மாவீரர் நாள்களில் உறுதிமொழியுடன் சேர்த்து ஒலிக்கவிடப்படும்.) அப்போது அனைவரும் படைய மரியாதை செலுத்துவர்.

பின்னர், வித்தாகிய மாவீரரின் வித்துடல் கொண்ட சந்தனப் பேழையானது புனித விதைகுழியின் மேல் இரு தண்டுகள் போடப்பட்டு அதன் மேல் வைக்கப்படும். அடுத்து சந்தனப் பேழையின் மேல் போர்த்தப்பட்டுள்ள தமிழீழத் தேசியக் கொடி அதிலிருந்து எடுக்கப்படும்.

பிறகு கயிறுகள் மூலம் புனித விதைகுழியினுள் இறக்கப்படும், அவரை நன்கறிந்த போராளிகளால். துயிலுமில்லத்தில் வித்துடல்கள் விதைக்கப்படும் போது வித்துடலின் கால் துயிலுமில்ல ஒலிமுகத்தை நோக்கியதாக இருக்கும்படியாகவே விதைப்பர்.

AP070711012271.jpg

லெப். கேணல் சங்கீதன் என்ற மாவீரரதும் ஆறுமுகம் ஆனந்தகுமார் என்ற இயற்பெயர் கொண்ட மாவீரரதும் வித்துடல்கள் கொண்ட சந்தனப்பேழைகளில் ஒன்று புனித விதைகுழிக்கு மேல் வைக்கப்படுகிறது. சம நேரத்தில் ஒரு போராளி சந்தனப் பேழையின் மேல் போர்த்தியுள்ள கொடியை எடுக்கிறார். படிமப்புரவு: Associated Press

 

f7.jpg

லெப். கேணல் தவாவுடன் வீரச்சாவடைந்த மேஜர் புகழ்மாறனின் வித்துடல் புனித விதைகுழியினுள் கயிறுகள் மூலம் இறக்கப்பட்டு விதைக்கப்படுகிறது. படிமப்புரவு: த.வி.பு.

 

few3.png

பெரும்பாலான இடங்களில் புனித விதைகுழியின் இருபக்கமும் இவ்வாறாக புலிவீரர் அகவணக்கமாக நிற்பர். படிமப்புரவு: த.வி.பு.

 

cytyt.jpg

போராளிகள் இவ்வாறுதான் வரிசையாக வந்து புனித விதைகுழிக்குள் மண்தூவிச் செல்வர். படிமப்புரவு: த.வி.பு.

 

4as4.jpg

பொதுமக்கள் இவ்வாறுதான் வரிசையாக வந்து புனித விதைகுழிக்குள் மண்தூவிச் செல்வர். அவர்களது அரத்த உறவினர் யாரேனும் மண்தூவ வரும் போது அவர்களை பெண்/ ஆண் போராளிகள் தாங்கிப்பிடித்திருப்பர். ஏனெனில், அவர்கள் பிரிதுயரால் மயங்கி உள்ளே விழுந்துவிடாமல் இருப்பதற்கு. படிமப்புரவு: த.வி.பு.

விதைக்கப்பட்ட பின்னர் பொதுமக்களும் போராளிகளும் இறுதியாக வந்து இருகைகளாலும் மண்ணை அள்ளி விதைகுழியினுள் தூவிவிட்டுச் செல்வர். சில வேளைகளில் வெள்ளை மணல் கிடைக்குமாயின் வெள்ளை மணலே தூவப்படுவதுண்டு.

ஆட்கள் மண் போட்டுச் சென்றபின் எஞ்சியிருக்கும் மண்ணை இன்னும் நிரம்பிடாத குழியினுள் மண்வெட்டியின் துணையுடன் இட்டு நிரப்புவர்.

மாவீரர் துயிலுமில்லத்தில் நடைபெறும் இவ்வித்துடல் விதைப்பில் பால் மற்றும் வயது வேறுபாடின்றி அனைவரும் (ஆண், பெண், சிறுவர்) கலந்துகொள்வர், ஒரு பிடி மண்ணும் தூவிச் செல்வர். 

பின்னர் அவரின் சந்தனப் பேழையின் மேல் போர்த்தியிருந்த தமிழீழ தேசியக் கொடி அன்னவரின் பெற்றோரிடத்தில் மடித்து ஒப்படைக்கப்படும்.

நினைவுக்கல்லிற்கு வீரவணக்கம் செலுத்தப்படும் முறை:

இதுவே வித்துடல் கிடைக்கப்பெறவில்லையெனில், குறித்த மாவீரரின் வீட்டாரிற்கு சந்தனப் பேழையிற்குப் பகரமாக அம்மாவீரர் வரிப்புலி அணிந்துள்ள சட்டம்போட்ட திருவுருவப்படம் மேற்கூறியுள்ள ஒழுங்குமுறைகளின் படி கொண்டுவந்து வழங்கப்படும். 

அதற்கும் ஒரு சந்தனப்பேழையிற்கு நடைபெறுவது போன்றே வீரச்சாவு வீடு செய்யப்பட்டு வீரவணக்கக் கூட்டம் நடத்தப்பட்டு துயிலுமில்லத்திற்குள் கொண்டுசெல்லப்படும்.

திருவுருவப்படத்தினை காவடி போன்ற ஒன்றின் மேல் வைத்து தூக்கிச் செல்வர் (இதன் பெயர் எனக்குத் தெரியவில்லை). காவடியை (36 வகையான காவடிகள் உண்டு என்பது நினைவூட்டத்தக்கது) ஒருவர் தூக்கிச் செல்வர் , ஆனால் தற்காலத்திற்கு ஏற்பவும் படைத்துறைக்கு ஏற்பவும் வடிவமைக்கப்பட்ட இதை இருவர் தூக்கிச் செல்வர். இதன் முன்பகுதியில் தான் திருவுருவப்படம் வைக்கப்பட்டிருக்கும்.

32599520967_6f4bec5732_o.jpg

11/05/2006 அன்று தாழையடி கடற்சமரில் வீரச்சாவடைந்த கடற்கரும்புலி லெப். கேணல் சஞ்சனா எ புவிச்செல்வியின் திருவுருவப்படம் 14/05/2006 அன்று முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லம் நோக்கி எடுத்துச்செல்லப்படுவதைக் காண்க. படிமப்புரவு: த.வி.பு.

 

thalaiyadi_15_05_06_01.jpg

அதே சமரில் வீரச்சாவடைந்த கடற்கரும்புலி லெப் கேணல் கவியழகியின் திருவுருவப்படம் துயிலுமில்லத்தினுள் எடுத்துவரப்படுகிறது. படிமப்புரவு: த.வி.பு.

 

Sea Tiger Sanchana's remains take to Mulliyawalai Martyrs Resting Home..jpg

முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லத்தினுள் கடற்கரும்புலி லெப் கேணல் சஞ்சனாவின் திருவுருவப்படம் எடுத்துச் செல்லப்படுகிறது. படிமப்புரவு: த.வி.பு.

 

Unveiled plaque of Sea Tiger Kaviyalaki's tomb..jpg

கடற்கரும்புலி லெப் கேணல் கவியழகியின் நினைவுக்கல். படிமப்புரவு: த.வி.பு.

 

thalaiyadi_15_05_06_02 LTTE political wing deputy head Mr. S. Thangan paying last respects..jpg

தேராவில் மாவீரர் துயிலுமில்லத்தில் கடற்கரும்புலி லெப் கேணல் கவியழகியின் நினைவுக்கல்லை திறந்து வைக்கிகிறார், அவரது தாயார். படிமப்புரவு: த.வி.பு.

 

thalaiyadi_15_05_06_03 LTTE political wing deputy head Mr. S. Thangan paying last respects..jpg

தேராவில் மாவீரர் துயிலுமில்லத்தில் சோ. தங்கன் அவர்கள் கடற்கரும்புலி லெப் கேணல் கவியழகியின் நினைவுக்கல்லில் இறுதிவணக்கம் செலுத்துகிறார். படிமப்புரவு: த.வி.பு.

துயிலுமில்லத்தில் அவரிற்கென்று ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள நினைவுக்கல்லிற்கு அருகிலுள்ள சிறு மேசை மேல் கொண்டுசென்று வைப்பர்.

அம்மேசையின் பின்புறத்தில் தமிழீழ தேசிய நிறங்களாலான பதாகை ஒன்று நிறுத்தப்பட்டிருக்கும்; நீள்சதுர வடிவில் மஞ்சள் நிறப் பின்னணி கொண்ட சிவப்பு நிற எல்லை கொண்ட சிவப்பு எழுத்துக்களால் எழுதப்பட்ட ஒரு பதாகை இதுவாகும். இதில் எழுதப்பட்டுள்ள வாசகங்களானவை:

????? 
தமிழீழத்தை நேசித்து தேகத்தை 
வித்தாக்கிய இம் மாவீரருக்கு
எமது (தமிழீழ தேச வரைபடம் பின்னணியிலும் உறுதியின் உறைவிடம் முன்னணியிலும் இருக்கத்தக்கதான படம்) வீரவணக்கம்
புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்

பிறகு உறுதியுரை வாசிக்கப்படும். அதனைத் தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்படும். பின்னர் நான்மூலைகளிலிருந்தும் மும்முறை வேட்டுக்கள் தீர்க்கப்படும்.

பின்னர் திரையால் மறைக்கப்பட்டுள்ள நினைவுக்கல்லின் கல்வெட்டிற்கு உரியவரின் பெற்றாரில் ஒருவர்/ கணவன்/ மனைவி என்போரில் ஒருவர் திரைநீக்கம் செய்வார். பிறகு, அதற்கு மலர்வணக்கம் செய்யப்படும். முதலில் மாவீரரின் உற்றாரிற்கு மலர் மாலை அணிவித்தலில் முன்னுரிமை வழங்கப்படும். பின்னர் கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் மற்றும் அம்மாவீரரின் பொறுப்பாளர் என்போர் மலர் மாலை அணிவிப்பர். அடுத்து மக்கள் மலர் வணக்கம் செய்வர். 

தொடர்ந்து நினைவுரை ஆற்றப்படும். இறுதியாக ஊர்வலமாக கொண்டுவந்த அன்னாரின் திருவுருவப்படும் அவரிற்கு உடையவர்களிடம் கையளிக்கப்படும். 

 

  • துயிலுமில்லத்திலிருந்து அகலுதல்:

அனைத்தும் முடிந்த பின்னர் எல்லோரும் அவ்விடம் விட்டு நீங்கிச் செல்வர். சிலர் பிரிவுத்துயர் தாங்கேலாமல் அங்கிருந்து கொஞ்ச நேரம் அழுதுவிட்டுச் செல்வர்.

 

  • இறுதியில்:

சமநேரத்தில், வீரச்சாவு வீட்டிலிருந்து சந்தனப் பேழை/திருவுருவப்படம்  எடுத்துச் செல்லப்பட்ட பின்னர், ஒரு சடலம் இழவு வீட்டில் இருந்து சென்ற பின்னர் என்னென்ன சடங்குகள் செய்ய வேண்டுமோ அதெல்லாம் செய்யப்படும், உரியவரின் வீட்டாரால். 

ஒரு மாவீரரின் வீரச்சாவிற்குப் பின்னரும் அவருடைய குடும்பத்தினருக்கு "போராளிகள் குடும்ப நலன் காப்பகம்" கொடுப்பனவு வழங்கி பராமரிக்கும். அவர்களுக்கென்று ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள அட்டை மூலம் இது தொடரும். 

large.F_oL42NbYAA3EX3.jpeg.cdeb2c7692682large.FEOLEhAXEAQiT2W.jpeg.eb8532e748e5c

முன் பக்கம் - பின் பக்கம்

 

large.FEOLEzDXwAAJxRc.jpeg.a51229df291ef

நடுப்பக்கம்

 

 

(தொடரும்)

 


உசாத்துணை:

எனது சில நேரடி அனுபவத்தோடு

  • கேணல் ராஜு வீரவணக்க நிகழ்படம்
  • பிரிகேடியர் பால்ராஜ் வீரவணக்க நிகழ்படம்
  • 'அம்மா நலமா' திரைப்படம்
  • கிடைக்கப்பெற்ற மாவீரர் படிமங்கள் 
  • வித்துடல் விதைப்பு எப்படி நடைபெறும் - ஈழநாதம் செய்தியாளர் சுரேன் கார்த்திகேசு
  • தியாகசீலம் - வி.இ.கவிமகன்
  • மாவீரர் நாள் கட்டுரை - நேரு குணரத்தினம், 2005
  • சேரன் ஈரூடக தாக்குதலணியைச் சேர்ந்த மாவீரர் ஒருவரின் வாழ்க்கை வரலாறு
  •  

ஆக்கம் & வெளியீடு:
நன்னிச் சோழன்

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

பாகம் - 07

 

இப்பாகத்தில் 2009 சனவரிக்குப் பின்னர் நடைபெற்ற வித்துடல் விதைப்பு தொடர்பான தகவல்களைக் காணலாம். 

வித்துடல் விதைப்பின் போது புலிகளால் கைக்கொள்ளப்பட்ட மரபின் கூறுகள் கொடும் போர்ச் சூழலால் இக்கால கட்டத்தில் ஒவ்வொன்றாக கைவிடப்பட்டன. ஒவ்வோரு கூறுகளும் எப்போதிலிருந்து கைவிடப்பட்டன என்ற வரையறுக்கப்பட்ட கால அளவு என்னிடம் இல்லை. 

மேலும் என்னென்ன கூறுகள் கைவிடப்பட்டன என்பது குறித்தும் எனக்குத் தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும் நானறிந்த அத்தனை தகவலையும் இங்கே எழுதிவைக்கிறேன். எதிர்காலத்தில் மேலும் தகவல்கள் கிடைக்கும் பொழுதில் இப்பகுதியை இற்றைப்படுத்துவேன் என்பதை இத்தால் தெரியப்படுத்த விழைகிறேன்.  

 

  • 2009இற்குப் பிந்தைய வித்துடல் விதைப்பு முறைமை:

நான்காம் ஈழப்போரின் இறுதிக்கட்டம் 2009 ஆம் ஆண்டில் நடைபெற்றது. இப்போரின் தொடக்கத்திலிருந்தே தமிழீழ நடைமுறையரசின் ஆட்புலங்கள் மெள்ள மெள்ளமாக சுருங்கிவரத் தொடங்கி இறுதிக்கட்டத்தில், 2009ம் ஆண்டில், நிரம்பவே சுருங்கியிருந்தது. இக்கட்டத்தில் வீரச்சாவு நிகழ்வுகளும் அதன் பொலிவுகளை மெள்ள மெள்ளமாக இழக்கத்தொடங்கியது எனலாம். 

அதிலும் குறிப்பாக சனவரியை முதன்மையான கூறுகள் கைவிடப்படத் தொடங்கிய காலத்தின் தொடக்கமெனலாம்.  

இக்காலகட்டத்தில் வீரச்சாவு வீடுகளில் செய்யப்படும் அலங்காரங்கள் படிப்படியாக நிப்பாட்டப்பட்டன. 

மாவீரர் ஊர்திக்கான அலங்காரம் (அதிலும் குறிப்பாக வாழை மரத்தால் சோடிப்பதெல்லாம் தொடக்கத்திலேயே கைவிடப்பட்டன), ஊர்தியில் அறிவித்தல் செய்தல், சோக இசை ஒலிக்கவிடுதல் என்பன படிப்படியாக நிப்பாட்டப்பட்டன.

மாவீரர் ஊர்திகள் ஆரவாரமாக ஊர்வலமாக செல்வதெல்லாம் இல்லாமல் போயின. பொதுமக்களும் போராளிகளும் ஊர்வலமாக செல்வதெல்லாம் மெள்ள மெள்ளமாக குறைந்தன. 

மாவீரர் மண்டபங்கள் இல்லாமல் போக, பொது மண்டபங்களில் வீரவணக்கக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. இறுதியாக முள்ளிவாய்க்கால் பொதுச்சந்தை இருந்த கட்டடம் மாவீரர் மண்டபமாக விளங்கியது.

வித்துடல்கள் கூட ஒரே நாளிலேயே,  ஏன் சில வேளைகளில் உடனுக்குடனேயே கூட விதைக்கப்பட்டன. கட்டளையாளர்களின் வித்துடல்கள் கூட ஒரே நாளில் விதைக்கப்பட்டன.

மாவீரரானவரின் உறவினர்கள் எங்கு இடம்பெயர்ந்துள்ளார்கள் என்றறிய முடியாத கட்டங்களில் அவை வீரவணக்கத்திற்குப் பின்னர் நேரடியாக துயிலுமில்லங்களாக விளங்கிய இடங்களில் விதைக்கப்பட்டன.

கொஞ்சக் காலத்தில் இருப்பிலிருந்த சந்தனப் பேழைகளும் தீர்ந்து போக சாதாரண மரப்பெட்டிகளில் போராளிகளின் வித்துடல்கள் கொண்டு செல்லப்பட்டு துயிலுமில்லங்களாக விளங்கிய பகுதிகளில் விதைக்கப்பட்டன. அவை கூட ஒரு கட்டத்தில் இல்லாமல் போயின. 

மே 13,14,15  ஆகிய திகதிகளில் அந்ததந்த சூழ்நிலைக்கு ஏற்றாற் போல வித்துடல்கள் விதைக்கப்பட்டன (விடுதலைப் போராட்ட வீரர் ஒருவரால் வழங்கப்பட்ட தகவல்). 

மே 16,17,18 ஆகிய திகதிகள் வித்துடல்கள் எல்லாம் கைவிடப்பட்டன. அவற்றை சிங்களவர் தான் எடுத்து எங்கெங்கோ எறிந்தனர்/ என்புகூட மிஞ்சாமல் எரியூட்டினர் (விடுதலைப் போராட்ட வீரர் ஒருவரால் வழங்கப்பட்ட தகவல்). 

 

(தொடரும்)

 

ஆக்கம் & வெளியீடு:
நன்னிச் சோழன்

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

பாகம் - 08

 

இப்பாகத்தில் பல்வேறு சூழ்நிலைக்கேற்ப நடைபெற்ற வித்துடல் விதைப்பு குறித்து காணலாம்.

 

சிங்களக் கட்டுப்பாட்டுப் பரப்பிற்குள் கனபேர் ஊடுருவிச் செல்கையில் சிங்களப் படையினருடன் எதிர்பாராத முகமாக முட்டுப்பட்டு வெடிக்கும் மோதலில் யாரேனும் வீரச்சாவடைய நேர்ந்தால் அன்னவரின் வித்துடலை ஏலுமெனில் மீட்டெடுத்துக்கொண்டு (இல்லையென்றால் அவ்விடத்திலேயே விட்டுச்செல்வர்) பாதுகாப்பான இடத்திற்குச் செல்வர். சென்ற பின்னர் தம் இருப்பில் உள்ள கருவிகள் மூலம் கிடங்கு தோண்டுவர். பின்னர் தம்மிடம் புலிக்கொடி இருப்பின் அதை மாவீரரின் நெஞ்சு மற்றும் வயிற்றுப்பகுதி கவராகும் விதமாக போர்த்திய பின்னர் வீரவணக்க நிகழ்வு நடத்துவர். அப்போது உறுதியுரை தெரிந்தோர் அதைக் மொழிவர். இல்லையெனில் அகவணக்கத்தின் போது சொல்வதை மொழிவர். வேட்டுகளை தீர்க்க பாதுகாப்பெனில் ஒருவர் மும்முறை வேட்டுகளை தீர்ப்பார். பிறகு வித்துடலை அப்படியே விதைகுழியினுள் விதைக்கப்படும். பேந்து, கட்டளை மையத்திற்கு தகவல் அறிவிக்கப்படும். அதன் பின்னர் இவரது வீட்டில் வீரச்சாவு வீடு நடத்தப்படும். இவருக்கான நினைவுக்கல்லொன்றும் இவரது ஊரில் உள்ள மாவீரர் துயிலுமில்லத்தில் நாட்டப்படும்.

வேவு நடவடிக்கையில் வீரச்சாவடையும் போராளியின் வித்துடல் மீட்கப்பட ஏலுமானால் மீட்கப்பட்டு மேற்கூறியபடி விதைக்கப்படும். மீட்கப்பட முடியாவிட்டால் வீரச்சாவடைந்த இடத்திலேயே கைவிட்டுவிட்டு பின்வாங்குவர். பின்னர் சிங்களம் கைப்பற்றி பிணச்சோதனை முடித்த பின்னர் எரியூட்டும்.

வீரகாவியமாகும் மறைமுகக் கரும்புலிகள் மற்றும் தமிழீழ புலனாய்வுத்துறையின் முகவர்கள்/ உளவாளிகளின் வித்துடல்களை சிங்களவரே எடுத்து பிணச்சோதனை முடித்து, ஏலுமெனில் ஆள் அடையாளம் கண்டுபிடித்த பின்னர், எரியூட்டுவர். அவற்றை ஒப்படைக்கும் படியாக புலிகள் ஒருகாலும் கோரார். அன்னவர்களின் பெற்றாரிற்கு அவரின் வீரச்சாவு செய்தியை புலிகள் வீட்டிற்கு வந்து அறிவித்துவிட்டுச் செல்வர். பெற்றாரால் வீரச்சாவு வீட்டைக்கூட செய்ய ஏலாது. தம் சோகத்தை வெளியில் கூட சொல்ல முடியாதவர்களாய் தமக்குள்ளேயே குமுறி அழுது வேதனைகளை தீர்த்துக்கொள்வர். இன்னும் கொடுமையான வேதனை என்னவெனில் எமது தேசத்தின் நலன் கருதி இவற்களிற்கு ஒரு கல்லறையோ இல்லை நினைவுக்கல்லோ வைக்கப்படுவதில்லை! துயிலுமில்லத்தில் நினைவுச்சுடர் கூட ஏற்றார்கள் இவர்கள்! 

தரைக்கரும்புலிகளின் வித்துடல்கள் புலிகளால் மீட்கப்பட்டாலன்றி (தரைக்கரும்புலி லெப். கேணல் போர்க்கின் வித்துடல் மீட்கப்பட்டது) பெரும்பாலான வேளைகளில் சிங்களம் ஒப்படைப்பதில்லை. அவற்றை சிங்களம் கைப்பற்றி பிணச்சோதனை செய்த பின்னர் அடக்கம் செய்யும். சில வேளைகளில் தம் தோல்வியின் வெறி அடங்கும் வரை வித்துடல்களை களங்கப்படுத்திய பின்னரே அடக்கம் செய்வர். எடுத்துக்காட்டிற்கு, அனுராதபுரம் வான்படைத்தளம் மீதான "எல்லாளன்" நடவடிக்கையில் வீரகாவியமான 21 தரைக்கரும்புலிகளில் நன்னிலையில் கைப்பற்றபட்ட வித்துடல்களை நிர்வாணப்படுத்தி உழுபொறியின் பெட்டிக்குள் போட்டு அனுராதபுரத்து சிங்கள மக்கள் முன்னால் ஊர்வலமாக கொண்டு சென்றனர், சிங்களப் படையினர். அதையும் சிங்கள மக்கள் போட்டி போட்டுக்கொண்டு பார்த்து மகிழ்ந்தனர்!

அரிதாக ஒப்படைத்த நிகழ்வொன்று 2008ம் ஆண்டு நடைபெற்றது. அதே ஆண்டு செப்ரெம்பர் மாதம் 12ம் திகதி புலிகளால் மேற்கொள்ளப்பட்ட வவுனியா ஜோசெப் படைத்தளம் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவடைந்த 10 கரும்புலிகளின் வித்துடல்களும் சிங்களவரால் புலிகளிடத்தில் ஒப்படைக்கப்பட்டன. புலிகள் அவற்றிற்கு வீரவணக்கம் செலுத்தி முழுப்படைய மரியாதையுடன் புனித விதைகுழியினுள் விதைத்தனர்.

தரைகள் இலக்கை அழித்துத் திரும்பினார்களெனில் தம்முடன் கூட வந்தவர்கள் யாரேனும் வீரச்சாவடைந்து அன்னவர்களின் வித்துடல் அவர்களால் கண்டெடுக்கப்படக்கூடியதாக இருப்பினும் வித்துடலைத் தளத்திற்குக் கொண்டுவரார். மாறாக அவ்விடத்திலேயே சக்கை வைத்து முற்றாகச் சிதறடித்துவிடுவர். எடுத்துக்காட்டிற்கு, இயக்கச்சி 'ஆட்டிவத்தை' சேணேவித் தளத்தை (Artillery Base) தரைகள் அழித்த போது நெஞ்சில் ஏவுண்ணி வீரகாவியமான தரைக்கரும்புலி மேஜர் சுதாஜினியின் வித்துடல் இவ்வாறுதான் தகர்க்கப்பட்டது.

 

 

"தமிழீழம் தமிழர் தாகம்"

 

(முற்றும்)

 

ஆக்கம் & வெளியீடு:
நன்னிச் சோழன்

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

பிடாரச்சொற்கள்

 

மாவீரர் தொடர்பான தமிழீழ நடைமுறையரசு கால பிடாரச்சொற்கள்

 

 

  1. களச்சாவு - களத்தில் பகையோடு பொருதுகையில் மரித்தல்
  2. காயச்சாவு - களத்தில் பகையோடு பொருதி விழுப்புண் ஏந்தி பண்டுவம் பெறுகையில் பலனளிக்காத போது மரித்தல்.
  3. வீரச்சாவு - பொதுவாக மரித்த ஒரு புலிவீரனை ஒருங்கே குறிக்கும் பொதுச்சொல்
  4. மாவீரர் - தமிழீழ விடுதலைக்காக களமாடி வீழ்ந்து விதையான தவிபு & ஈரோஸ் இயக்கம் மற்றும் 10 தனிக்குழுப் போராளிகளை மட்டும் குறிக்கும் சொல்.
  5. வீரவேங்கை - இது ஒவ்வொரு கல்லறையின் தற்குறிப்பின் உச்சியில் எழுதப்பட்டிருக்கும் சொல்லாகும். இது குறிக்கோள் விலகிச்சென்று தேசவஞ்சகராகி ஒட்டுக்குழுவாகிய குழுக்களின் உறுப்பினர்களிலிருந்து விடுதலைப்புலிப் போராளிகளை வேறுபடுத்திக் காட்டுவதற்காக உருவாக்கப்பட்ட சொல்லாகும். இதுவே தமிழீழ படைத்துறையின் அடிப்படை தரநிலையும்கூட.
  6. தியாகசீலம் - மறைமுகக்கரும்புலிகள் உள்ளிட்ட புலனாய்வுத்துறைப் போராளிகள் மற்றும் இனங்காணப்படமுடியா வித்துடல்களைக் குறிக்கப் பாவிக்கப்பட்ட அடைமொழி 
  7. துயிலுமில்லம் - மாவீரர்களது வித்துடல் விதைக்கப்பட்டு செப்பனிட்டு பேணிக் காக்கப்பட்ட இடுகாடு
    1. இச்சொல்லானது 'துயிலும் இல்லம்' என்று பிரித்தும் எழுதப்படுவதுண்டு. ஆனால் துயிலுமில்ல ஒலிமுகத்தில் 'துயிலும் இல்லம்' என்று தான் எழுதப்பட்டிருக்கும்!
    2. முகையவிழ்த்தல் - துயிலுமில்லம் ஒன்றை வித்திட்டு புதிதாய் தோற்றுவித்தலைக் குறிப்பதற்காக பாவிக்கப்படும் பண்டைய தமிழ்ச் சொல்
    3. விடுதலை வயல்கள் - 2008 இறுதியில் எஸ் ஜி சாந்தன் அவர்களால் பாடப்பட்ட ஒரு போரிலக்கியப்பாடல் மூலம் துயிலுமில்லங்களைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட சொல். 
  8. நினைவொலி - நவம்பர் 27 அன்று சரியாக மாலை 6.05 மணிக்கு மாவீரர்களுக்காக எழுப்பப்படும் ஆலய மணியோசை.
  9. மாவீரர் மண்டபம் - மாவீரரான போராளியின் வித்துடல் கொண்ட சந்தனப் பேழை முதலில் வீட்டில் வைக்கப்பட்டு உரித்துடையோரின் வீரவணக்கத்திற்குப் பின்னர், பொதுமக்களின் வீரவணக்கத்திற்காக இவ்வாறான "மாவீரர் மண்டபங்க"ளினுள் வைக்கப்பட்டிருக்கும்.
  10. மாவீரர் நினைவு மண்டபம் - மாவீரர்களின் திருவுருவப்படங்களிற்கான பொதுமக்களின் மலர்வணக்கத்திற்கென்று சிறப்பாக கட்டப்பட்ட மண்டபம்
  11. மாவீரர் நினைவாலயம் - மாவீரர் வாரத்தில் மாவீரர்களின் திருவுருவப்படங்கள் வைக்கப்பட்டிருக்கும் கொட்டகை. இது வீதியோரங்களில் அமைக்கப்பட்டிருக்கும்.
  12. வீரவணக்க நினைவாலயம்: குறித்த சில மாவீரர்களுக்காக வீரவணக்கம் செலுத்த நிரந்தரமாகக் கட்டப்பட்டிருக்கும் நினைவாலயம். இங்கே அக்குறித்த மாவீரர்களின் திருவுருவப்படங்கள் வைக்கப்பட்டு வீரவணக்கம் செலுத்தப்படும். 
  13. வளைவுகள் - மாவீரர் வாரத்தில் மாவீரர்களின் படங்கள்/ சமர்க்களப் படங்கள் தாங்கிய அலங்கார வளைவுகள்
  14. அகவணக்கம் - வீரச்சாவடைந்த புலிவீரனிற்கு தலைகுனிந்து செலுத்தப்படும் வணக்கத்திற்கான பெயர்
  15. சுடர்வணக்கம் - மாவீரரிற்காக சுடரேற்றி (பொதுக் குத்துவிளக்கு) செலுத்தப்படும் வணக்கம்
  16. மலர்வணக்கம் - மாவீரருக்கு மலர்தூவி செலுத்தப்படும் வணக்கம்
  17. வீரவணக்கம் - வீரச்சாவடைந்த புலிவீரனிற்கான இறுதி அஞ்சலியில் செலுத்தப்படும் வணக்கத்தினைக் குறிக்கும் சொல். 
  18. வீரவணக்கக் கூட்டம் - மாவீரனிற்காக மண்டபம் ஒன்றினுள் நடைபெறும் கூட்டத்தை குறித்த சொல். இன்று இச்சொல் தமிழ்நாட்டில் பரவலாக கையாளப்படுகிறது
  19. சந்தனப்பேழை - வித்துடல் வைக்கப்பட்டிருக்கும் அழகுற வடிவமைக்கப்பட்ட சந்தன மரத்தாலான பேழை. இது பச்சை மற்றும் கடுஞ்சிவப்பு நிறங்களில் இருந்தது. கடுஞ்சிவப்பு நிறமே பெரும்பாலும் பயன்படுத்தப்படுவதுண்டு. தொடக்க காலத்தில் தேக்கு மரங்கள் பயன்படுத்தப்பட்டன
  20. வித்துடல் - மாவீரனது பூதவுடல்/ சடலம்
  21. வித்துடல் மேடை - ஒரு மாவீரரின் சந்தனப்பேழை மாவீரர் துயிலுமில்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்குவைத்து அகவணக்கம் செய்யப் பயன்படுத்தப்படும் மேடை. அங்கு ஒரு சத்தார் பாட்டில் மக்களை நோக்கி வைக்கப்பட்டுள்ள மேசைமேல் வித்துடல் பேழை வைக்கப்படும்.
  22. வித்து - விதைக்கப்படும் அ விதைக்கப்பட்ட வித்துடல்
  23. விதைத்தல் - வித்துடலை புதைத்தல்
  24. விதைகுழி - துயிலுமில்லத்தில் வித்துடல் விதைக்கப்படும் 6*6 அடி குழி
  25. நினைவுக்கல் - முகவரி அறிந்த மாவீரனது வித்துடல் இல்லா அ கிடைக்காவிடத்து உரியவர் குறிப்புகளோடு நினைவாய் எழுப்பப்படும் கல்.
    1. அதே சமயத்தில் வித்துடல் ஒரு துயிலுமில்லத்திலும், அவருக்கான நினைவுக்கல் இன்னுமோர் துயிலுமில்லத்திலும், வைப்பது புலிகளின் இன்னுமொரு வழமையாகும். தென்தமிழீழ மாவீரர் பலரின் வித்துடல்கள் தேராவில் மாவீரர் துயிலுமில்லத்திலும், முள்ளியவளை துயிலுமில்லத்திலும், விதைக்கப்பட்டிருந்தன
  26. கல்லறை - 6 அடி நீளத்தில் இருக்கும் முகவரி அறிந்த மாவீரனது வித்துடல் கொண்ட கல்லால் கட்டப்பட்டு அழகுற வடிவமைக்கப்பட்டு உரியவர் குறிப்புகள் தாங்கிய உடையவர் உறைவிடம்
  27. மாவீரர் பீடம் - நினைவுக்கற்கள் மற்றும் கல்லறைகளை ஒருங்கே குறிக்கும் சொல்
  28. முதன்மைச் சுடர்ப் பீடம் - இது பொதுச்சுடர் ஏற்றும் பீடத்தைக் குறிக்கும் சொல்
  29. பொதுச்சுடர் - கட்டளையாளர்களாலும் தவிபு தலைவராலும் ஏற்றப்படுவது
  30. ஈகைச்சுடர் - பொதுமக்களால் ஏற்றப்படுவது
  31. நினைவுச்சுடர் - வீரச்சாவடைந்த மாவீரரின் கல்லறைக்கும் நினைவுக்கல்லிற்கும் உறவினர்களால் செல்ல முடியாதபக்கத்தில் தமக்கு அருகில் இருக்கும் மாவீரர் துயிலுமில்லத்தில் ஒரு தீப்பந்தம் ஏற்றி வீரவணக்கம் செலுத்த இடவசதி செய்து கொடுக்கப்பட்டிருக்கும். அந்த தீப்பந்தத்தின் பெயரே நினைவுச்சுடர் ஆகும். கடலிலே வீரச்சாவடைந்தோருக்கு கடலில் ஏற்றப்படும் சுடரினையும் 'நினைவுச்சுடர்' என்றே கடற்கரையோர மக்கள் அழைப்பதுண்டு.

 

 

 2021 சூலையில் என்னால் எழுதப்பட்ட இவ் ஆவணத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டது:

 

ஆக்கம் & வெளியீடு:
நன்னிச் சோழன்

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

முடிவுரை

 

நவீன ஈழத் தமிழரின் காலத்தில் உருவெடுத்த மரபான மாவீரர்களின் வித்துடல் விதைப்பு என்பது புலிகளின் காலத்தில் பெரும் சோகமய விழாவாக செய்யப்பட்டதொன்றாகும். மக்களின் முழு மனநிறைவான ஆதரவுடன் புலிகளால் பரிணமிக்கப்பட்டு சோகம் கலந்திருப்பினும் சீரும் சிறப்புமாக செய்யப்பட்டது.  

இம்மரபானது திடீரென ஒரே நாளில் புலிகளால் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டதன்று. இது லெப். கேணல் விக்ரர் அவர்களின் வீரச்சாவுக் காலத்திலிருந்து மெள்ள மெள்ள உருவாகி பல சேர்க்கைகள் மற்றும் கழித்தல்களுக்குப் பின்னரே ஒரு செந்தரப்பட்ட மரபாகி நடைமுறையாக கடைப்பிடிக்கப்பட்டது. 

இவ்வாறு செய்யப்படும் இவ்வீரச்சாவு நிகழ்வுகள் புலிகளால் தேவைக்கேற்ப படம்பிடிக்கப்பட்டன. நிகழ்படங்கள் எல்லாம் எடுக்கப்பட்டு புலிகளால் ஆவணப்படுத்தப்பட்டன. ஆவணப்படுத்தபட்ட நிகழ்படங்கள் பின்னாளில் அவர்களின் பரப்புரைக்கும் வீரச்சாவை நேரடியாகக் காண முடியா மக்கள் கண்டிடவும் பாவிக்கப்பட்டன; வெளிநாடுகளிற்கு அனுப்பப்பட்டன. 

இவ்வாறொரு நவீன கால மரபாக போற்றப்பட்டு வந்த இம்மரபு இறுதிப்போரில் விடுதலைப் புலிகள் இயக்கம் ஆயுதங்களை மௌனிக்க முன்னரே இல்லாமல்போனது. இன்னும் சொல்லப்போனால் தமிழரின் படைத்துறை அழிக்கப்படும் முன்னரே படைத்துறையோடு தொடர்புடைய இம்மரபு அழிந்துபோயிற்று!

 

"கோபுர தீபம் நீங்கள்,
கோயிலில் தெய்வம் நீங்கள்,
வாழ்வினில் எம்மைக் காத்த மாவீரரே!

சாவுதான் முடிவும் இல்லை,
சாதிக்க வழியா இல்லை?
வல்லமை தந்ததெங்கள் மாவீரரே!

வாழ்வான வாழ்வு தந்து காற்றாகிப் போனீர் இங்கு
நீங்கா உங்கள் நினைவு நெஞ்சில் தீயாய் மூளுதே!"

--> தமிழீழத்தின் இறுதி இறுவெட்டான 'வேர்விடும் வீரம்' எ 'வல்லமை தரும் மாவீரம்' இன் கோபுர தீபம் என்ற பாடலிலிருந்து

 

 

🙏நன்றி🙏

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.