Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
"வேதம் & புராணம்"
 
 
இந்து சமயத்துப் புராணகதைகள் பெரும்பாலனவைகளை படிக்கும் போது கடவுள்மார்கள் மக்களுக்கு ஏற்ற வழிகாட்டிகள் அல்லாதவர்களாக சித்தரிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் செய்யும் விபரீதமான செயல்கள் எல்லாம் மனிதரே செய்ய அஞ்சும் விலக்கப் பட்ட செயல்களாக இருக்கும். இக்கதைகளை பக்தர்கள் கேள்வியே கேட்காது கேட்டு ரசிக்க வேண்டும் என்று எதிர்பார்கிறார்கள். இவைகள் வெறுமனே எழுதப் பட்ட கதைகள் தான் என்றாலும் ஏன் தான் கடவுள்மாரைக் நல்ல கடவுள்தனம் உள்ளவராகச் சித்தரித்து மக்களுக்கு ஒரு இறை பக்தி வரும் படியான சிந்தனைகளை ஏற்படுத்தும் கதைகளை எழுதாமல் விட்டார்கள் என்று கண்டு பிடிக்க முடியாமல் இருக்கிறது.
 
இந்து மதத்தில், வேதம் என்ற சொல் 'வித்' என்ற வட மொழிச் சொல்லை வேராகக் கொண்டது. 'வித்; என்றால் அறிதல் என்று பொருள். இந்து சமயத்துக்கு அடிப் படையானவை நான்கு வேதங்கள் [ரிக் வேதம், யசுர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம்] ஆகும். இது இந்தியாவில், கி.மு. 1500விற்கு முன் உருவாகியிருக்கக் கூடுமெனக் கருதப்படுகின்றது.
.
வேதங்கள் 'இறைவனிடம் நாம் ஏதாவது பெற வேண்டும் என்றால் அவனுக்கு எதையாவது நாம் காணிக்கையாகத் தர வேண்டும். அதாவது பலி வேண்டும் என்கின்றது' கடவுள்களில் பெண்களும் உள்ளனர். முன்பு அது செவி வழியாகக் கேட்ட, வாய் வழியாகச் சொல்லி வரப்பட்ட "எழுதாக்கிளவி"யாகவே இருந்தது.
 
வேத காலத்தில் அறிவு வளர்ச்சி இல்லாத - ஆடு, மாடு மேய்க்கும் இடையர்களாக இருந்த ஆரியர்கள் தாம் எவற்றை கண்டு பயந்தார்களோ, அவற்றை யெல்லாம் வணங்கி இருக்கின்றனர். அவற்றுக் கெல்லாம் தங்கள் உருவத்தைக் கற்பித்து குணங்களையும் கொடுத்து விட்டனர்.
உதாரணமாக உஷஸ்: விடியற் காலைப் பொழுது எனப் பொருள் படும் வேதங்கள் வியந்து பாடும் பெண் கடவுள் . இதற்காக 22 சூக்தங்கள் எழுதப்பட்டுள்ளன. இது மிக அழகுள்ளதாக எழுதப்பட்டுள்ளது. அதனாலேயே அக்னி, சூரியன், பூஷன், அஸ்வினி தேவர்கள் முதலியோர் இதன் மீது மையலுற்றுக் காமுற்று அலைந்தார்கள் என்று கூட எழுதி வைத்துள்ளனர்?
 
சோம ரசம் அல்லது சோம பானம் எனும் மது போதை தரக் கூடியதையும் கடவுளாக்கி விட்டனர். அதாவது "கள்ளே தான் கடவுளடா" என்றே வேதம் கூறுகிறது.
 
மந்திரங்களால் கடவுளை மகிழ்ச்சி கொள்ள செய்து, தங்கள் எண்ணங்களை நிறை வேற்றிக் கொள்ளலாம் என்றும் நினைத்தனர். மேலும், சூத்திரனோ அல்லது நான்கு வருணங்களுக்கு அப்பாற்பட்ட அடிமை மக்களோ வேதத்தைக் கேட்டாலே போதும், அவர்கள் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றச் சொல்கிறது மனு தர்மம். ஆம்! வேதத்தில் அவ்வளவு அசிங்கமும் ஆபாசமும் உள்ளன.
 
அந்த மந்திரங்களின் அர்த்தத்தைக் கேட்டால் நீங்கள் எல்லோரும் பயந்து ஓடி விடுவீர்கள். ஆம்! ஒரு சுப தினத்தின் போது ‘என்னை எதிர்ப்பவர்கள் நாசமாய்ப் போக; அவர்களின் கண்களைத் தோண்டி எடுக்க! புல் பூண்டு இல்லாமல் அவர்கள் வம்சம் அழிந்து போக!’ என்ற ரீதியில் மணிக் கணக்கில் ஒருவர் சாபம் விட்டால், அவ் வார்த்தைகள் அந்தச் சூழலை எவ்வளவு அருவருப்பாக மாற்றும்? வேதம் முழுக்கவும் இம் மாதிரி அருவருப்பான வசைகளே நிறைந்திருக்கின்றன. இடையிடையே கவித்துவம் நிரம்பிய சில அற்புதமான பகுதிகளும் உண்டு.
 
பொதுவாக புராணங்கள் இந்து சமயத்துக்கு அடிப்படையான வேதங்களைப் பின்பற்றியே எழுதப்பட்டது. அதனால் தான் அதுவும் அது போலவே உள்ளது.
 
எதிரிகளும் தங்களுக்கு அடிமையாக மறுப்பவர்களும் அழிய வேண்டும் என்ற ‘ஆரிய ’ கருத்துக்கு அடுத்த படியாக வேதங்களில் தெரியும் மற்றொரு ‘உன்னத’ குணாம்சம்: சுயநலம். நானும் என் இனத்தைச் சார்ந்தவர்களும் மட்டுமே நன்றாக இருக்க வேண்டும் என்ற சுயநலம். இந்த சுய நலத்திற்காக தேவர்களுக்கு வேள்வி வளர்த்து அதில் நெய்யையும் குதிரைகளையும் போட்டு எரித்து, சொர்க்கத்திலிருக்கும் அவர்களை பூலோகத்துக்கு வரவழைத்து, சோம பானம் என்ற லஞ்சத்தைப் படையல் செய்து எதிரிகளை அழித்து விட்டு, எங்களை மட்டும் வாழவை என்று அவர்களை வேண்டுவதே வேதம்! வேத மந்திரங்கள் முழுக்கவும் இத்தகைய சுய நலத்தையும், துவேஷத்தையும் தான் முழங்குகின்றன.
 
ஆனால் தமிழ்ப் பாரம் பரியமோ ‘இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்’ என்கிறது நமக்குத் தீமை புரிந்த ஒருவனைத் தண்டிக்கும் வழி. என்ன வென்றால், அவன் வெட்கப் படும் விதத்தில் அவனுக்கு நன்மை புரிவதே என்கிறது இதுவும் 2000 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது தான். தமிழில் நான்மறை என்பன வேறானவை .இவை அறம், பொருள், இன்பம், வீடு என்பனவாகும்
 
எனவே ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற சீரிய தமிழ் மரபுக்கு ‘இந்திரனே! நான் அளிக்கும் சாராயத்தைக் குடித்து விட்டு என் எதிரியின் கண்களைத் தோண்டு’ என்று உபதேசிக்கும் வேதங்கள் நான்கும் முற்றிலும் மாறுபட்டது. அதன் வழியே புராணங்களும். அதனாலேயே புராணகதைகள் பெரும் பாலனவைகள் எல்லாம் சரியான கீழ்த்தர குணம் இருப்பவர்களாகவும், நமக்கு ஏற்ற வழி காட்டிகள் அல்லாதவர்களாகவும் சித்தரிக்கப் பட்டுள்ளார்கள்.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்] 
13962588_10207148040522149_6893474458513329577_n.jpg?_nc_cat=107&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=cozDUandzmMQ7kNvgHTR18f&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfAFHX_bUyjpjS7v2ZD0U8BmntLn1-zQjLwg7EfcX__2mg&oe=666054DB 14040162_10207148178205591_3878492695841243952_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=110&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=Jx7QXGEnlykQ7kNvgEoujUD&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfAX1YP3FCaZrUOpnNgzW3HWcVMqkGW92bi8Y11SvRLW4A&oe=66608454 14117740_10207148180205641_5058811121320448759_n.jpg?_nc_cat=104&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=95Hwinq2C_sQ7kNvgEcaS6j&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfC9JVzI0MWGwtdW8hiEyN1UsVrVbSaCPvXGL1tXhlJUbw&oe=66605A22 14046053_10207148181685678_3705564598663645449_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=108&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=x8M58QTNOiQQ7kNvgGW57Ab&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfBgOyuaxNjwJWOgGWsmlUjQHVH3lzOY6GVYMcMr-VSbeg&oe=66607016 
 
 
 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.